அனைத்து இஸ்லாம் நூலகம்

73 - குர்பானி

1

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானி பிராணிகளை அறுப்போம். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே யார் (குர்பானி பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன் கூட்டியே தயார் செய்த (சாதாரண)இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று சொôன்னார்கள். உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்துவிட்டிருந்த) அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) என்னிடம் (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது” என்று சொன்னார்கள்.3 மற்றோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் யார் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு நிறைவாகிவிடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார்” என்று சொன்னார்கள். இதையும் பராஉ (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.4 அத்தியாயம் :

2

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘‘யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம(து சொந்தத் தேவை)க்காகவே அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கின் றாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும்; மேலும், அவர் முஸ்லிம் களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

3

உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் களிடையே குர்பானி பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு (எனது பங்காக ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது. நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடுதான் எனக்குக் கிடைத்தது” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘அதையே நீங்கள் குர்பானி கொடுங்கள்” என்று சொன்னார்கள்.5 அத்தியாயம் :

4

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக் குச் சென்றிருந்தபோது) நான் மக்காவினுள் நுழையும்முன் ‘சரிஃப்’ எனுமிடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்கென்ன ஆயிற்று? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘இ(ந்த மாத விடாயான)து, பெண்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட விதியாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் வழிபாடுகள் அனைத்தையும் நீயும் நிறைவேற்று. இறை இல்லத்தை (புனித கஅபாவை)ச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர” என்று சொன்னார்கள். நாங்கள் மினாவில் இருந்தபோது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டுவரப் பட்டது. நான், ‘‘இது என்ன?” என்று கேட்டேன். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்து குர்பானி கொடுத்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.7 அத்தியாயம் :

5

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஈதுல் அள்ஹா’ பெருநாளன்று நபி (ஸல்) அவர்கள் ‘‘யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்” என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் (அபூபுர்தா) எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்” என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டை வீட்டார் (உடைய தேவை) பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். மேலும், தம்மிடம் (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு இருப்பதாகவும், அது இறைச்சி ஆடுகள் இரண்டைவிடச் சிறந்தது என்றும் (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா என்றும்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். இந்த அனுமதி அவரல்லாதவருக்கும் பொருந்துமா? அல்லது பொருந்தாதா? என்பது எனக்குத் தெரியாது. பிறகு நபி (ஸல்) அவர்கள் இரு செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று அவ்விரண்டையும் அறுத்தார்கள். மக்கள் ஒரு சிறு ஆட்டு மந்தைக்குச் சென்று (அதிலிருந்த) ஆடுகளைத் தமக்குள் பிரித்துக்கொண்ட(பின் குர்பானி கொடுத்த)னர்.8 அத்தியாயம் :

6

அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாம் நாள் மக்காவில் ஆற்றிய உரையில்), ‘‘வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதா (அல்ஆகிரா)வுக்கும் ‘அபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ‘முளர்’ குலத்தாரின் ரஜப் மாதமாகும்” என்று கூறிவிட்டு, ‘‘இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். நாங்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று பதிலளித்தோம். அம்மாதத்திற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, ‘‘இது துல்ஹிஜ்ஜா மாதம் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள், ‘‘ஆம்” என்று சொன்னோம். ‘‘இது எந்த நகரம்?” என்றும் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று சொன்னோம். அப்போதும் அவர்கள் இந்நகரத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு ‘‘இது (புனித) நகரமல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள், ‘‘ஆம்” என்றோம். அடுத்து ‘‘இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அப்போதும் அந்த நாளுக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணும் அளவுக்கு அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு, ‘‘இது ‘குர்பானி கொடுக்கும்’ (நஹ்ருடைய) நாளல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்றோம். (பின்னர் பின்வருமாறு) கூறினார்கள்: உங்களின் இந்த(ப் புனித) மாதத்தில், உங்களின் இந்த(ப் புனித) நகரத்தில், உங்களின் இந்த நாள் புனிதம் பெற்றிருப்பதைப் போன்றே உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியனவும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் வினைகள் குறித்து விசாரிப்பான். அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்கின்ற வழிதவறியவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள். இதோ இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை)த் தெரிவித்து விடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தியை (நேரடியாக)க் கேட்டவரைவிட அவர் யாரிடம் தெரிவிக்கிறாரோ அவர்களில் சிலர் இதை நன்கு காப்பவராயிருக்கலாம். -(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, ‘‘நபி (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள்” என்று கூறுவார்கள்.- பிறகு ‘‘நான் தெரிவித்துவிட்டேனா? நான் தெரிவித்துவிட்டேனா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.10 அத்தியாயம் :

7

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அந்த அறுக்குமிடத்திலேயே, அதாவது நபி (ஸல்) அவர்கள் அறுத்த இடத்திலேயே தமது குர்பானி பிராணி களை அறுத்துவந்தார்கள். அத்தியாயம் :

8

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானி பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள். அத்தியாயம் :

9

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில்) இரு செம்மறியாட்டுக் கடாக்களை குர்பானி கொடுத்துவந்தார்கள். நானும் இரு செம்மறியாட்டுக் கடாக் களை குர்பானி கொடுத்துவந்தேன். அத்தியாயம் :

10

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.11 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

11

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களி டையே குர்பானி பிராணிகளாகப் பங்கிடும்படி ஓர் ஆட்டு மந்தையை என்னிடம் அளித்தார்கள். (அவ்வாறே நானும் பங்கிட்டேன். இறுதியில்) வெள்ளாட்டுக் குட்டி ஒன்று மீதி இருந்தது. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், ‘‘நீங்கள் அதை குர்பானி கொடுத்துவிடுங்கள்” என்று சொன்னார்கள்.12 அத்தியாயம் :

12

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபுர்தா என்றழைக்கப்பட்டுவந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உம்முடைய ஆடு இறைச்சி ஆடுதான். (குர்பானி ஆடன்று)” என்று சொன்னார்கள். அபூபுர்தா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் வீட்டில் வளர்க்கப்பட்ட (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)” என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்றவருக்குப் பொருந்தாது” என்று சொல்லிவிட்டு, ‘‘தொழுகைக்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுப்பவர், தமக் காகவே (அதை) அறுக்கிறார். தொழுகைக் குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்துவிட்டது. அவர் முஸ்óம்களின் வழிமுறையைப் பின்பற்றி விட்டார்” என்று கூறினார்கள்.13 இந்த ஹதீஸ் பத்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில் ‘அபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘என்னிடம் (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி உள்ளது” என அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

13

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபுர்தா (ரலி) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டார்கள். ஆகவே, அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘அதற்குப் பதிலாக வேறொன்றை அறுப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு அபூபுர்தா (ரலி) அவர்கள், ‘‘என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு ஒன்றைத் தவிர வேறொன்றுமில்லை; (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)” என்று வினவினார்கள். அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்தது” என்று அபூபுர்தா (ரலி) அவர்கள் சொன்னதாக (எனக்கு அறிவிக்கப்பட்டது என்று) நான் எண்ணுகிறேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதையே அதற்குப் பதிலாக அறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது” என்று சொன்னார்கள். இது பற்றிய அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பில், ‘‘என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட பெட்டை வெள்ளாட்டைத் தவிர வேறொன்றுமில்லை” என்று அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாக உள்ளது. அத்தியாயம் :

14

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களை குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி, அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (தக்பீர்) சொல்லி அவற்றைத் தமது கையால் அறுத்ததை நான் பார்த்தேன்.15 அத்தியாயம் :

15

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) ‘சரிஃப்’ எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அப்போது அழுதுகொண்டிருந்தேன். அவர்கள், ‘‘உனக்கென்ன ஆயிற்று? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்றேன். அவர்கள், இ(ந்த மாதவிடாயான)து, பெண்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட விதியாகும். ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் வழிபாடுகள் அனைத்தையும் நீயும் நிறைவேற்று. ஆனால், இறையில்லத்தை (புனித கஅபாவை)ச் சுற்றி (தவாஃப்) வராதே” என்று சொன்னார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்து குர்பானி கொடுத் தார்கள்.16 அத்தியாயம் :

16

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது உரையில்) ‘‘நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுத் திரும்பிச்சென்று குர்பானி பிராணிகளை அறுப்பதாகவே இருக்க வேண்டும். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பிராணியை) அறுக்கிறாரோ அவர் தமது குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாடு எதிலும் சேராது” என்று சொன்னார்கள். அப்போது அபூபுர்தா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுவ தற்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயது பூர்த்தியான ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயதுக்குட்பட்ட (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘முதலில் அறுத்ததற்குப் பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் ‘அது செல்லாது’ அல்லது ‘நிறைவேறாது’ என்று பதிலளித்தார்கள்.17 அத்தியாயம் :

17

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.: (ஈதுல் அள்ஹா பெருநாளன்று) நபி (ஸல்) அவர்கள், ‘‘(பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்” என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘இது, இறைச்சி விரும்பி உண்ணப் படும் நாள்” என்று சொல்லிவிட்டு, தம் (வீட்டார் மற்றும்) அண்டை வீட்டாரின் தேவை பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். நபி (ஸல்) அவர்கள் அவர் சொன்ன காரணத்தை ஏற்றுக்கொண்டதைப்போல் இருந்தது. அந்த மனிதர், ‘‘என்னிடம் இரண்டு (இறைச்சி) ஆடுகளைவிடச் சிறந்த ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா?)” என்று கேட்க, நபி (ஸல்) அவர்களும் அவருக்கு அனுமதி யளித்தார்கள். அந்த அனுமதி மற்றவர்களுக்கும் பொருந்துமா; அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது. பிறகு நபி (ஸல்) அவர்கள் இரு செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று அவற்றை அறுத்தார்கள். பிறகு மக்கள் ஒரு சிறு ஆட்டு மந்தைக்குச் சென்று அவற்றை அறுத்தார்கள்.18 அத்தியாயம் :

18

ஜுன்தப் பின் சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று இருந்தேன். அப்போது அவர்கள், ‘‘(பெருநாள்) தொழுவதற்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டவர் அதனிடத்தில் (அதற்குப் பதிலாக) வேறொன்றை (தொழுகைக்குப்பின்) அறுக்கட்டும். அறுக்காமல் இருப்பவர் (தொழுகை முடிந்தவுடன்) அறுக்கட்டும்” என்று சொன்னார்கள்.19 அத்தியாயம் :

19

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (ஈதுல் அள்ஹா பெரு)நாளன்று தொழுதுவிட்டு, ‘‘நமது தொழுகையைத் தொழுது (அதில்) நம்முடைய (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கியவர் எவரும் (தொழுகை முடிந்து) திரும்பும் வரை (குர்பானி பிராணியை) அறுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். உடனே அபூபுர்தா (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் (தொழுகைக்கு முன்பே அறுத்து) அதைச் செய்துவிட்டேனே?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘அது நீங்கள் அவசரப்பட்டு (அறுத்து)விட்ட பொருளாகும்” என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான இரு ஆடுகளைவிடச் சிறந்த ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று உள்ளது. நான் அதை அறுக்கலாமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி (நீங்கள் அறுக்கலாம்). பிறகு உங்களைத் தவிர வேறெவருக்கும் அது செல்லாது” என்று சொன்னார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘அதுவே (அவர் தொழுகைக்கு முன்பும், தொழுகைக்குப் பின்பும் கொடுத்த) அவருடைய இரு குர்பானிகளில் சிறந்ததாகும்” எனக் கூறுகிறார்கள். அத்தியாயம் :

20

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்து வந்தார் கள். அப்போது தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு தமது கரத்தால் அவற்றை அறுப்பார்கள்.20 அத்தியாயம் :

21

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள்.21 அத்தியாயம் :

22

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! ஒருவர் தமது குர்பானி பிராணியை கஅபாவிற்கு (வேறொருவர் மூலம்) அனுப்பிவிட்டு (தமது) ஊரில் உட்கார்ந்துகொள்கிறார். தம்முடைய அந்த ஒட்டகத்திற்கு (அது குர்பானி பிராணி என்பதைக் காட்டும் அடையாள மாக) கழுத்தில் மாலை கட்டித் தொங்கவிடப்பட வேண்டுமென்றும் சொல்லி அனுப்புகிறார். அந்த நாளிலிருந்து மக்கள் (ஹாஜிகள்) இஹ்ராமிலிருந்து விடுபடும் நாள்வரை தாமும் இஹ்ராம் கட்டியவராகவே நடந்துகொள்கிறார் (என்றால் அவருக்கான சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (ஆச்சரியப்பட்டு) திரைக்குப் பின்னாலிருந்து கை தட்டுவதை நான் கேட்டேன். (தொடர்ந்து) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிகளுடைய கழுத்து மாலைகளைக் கோத்துவந்தேன். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய (இந்தக்) குர்பானி பிராணிகளை (ஹஜ் பருவத்தில்) கஅபாவிற்கு அனுப்புவார்கள். எனினும், அவர்களுடைய குடும்பத்திலிருந்த மற்ற ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் எதுவுமே மக்கள் (ஹஜ்ஜிலிருந்து) திரும்பும்வரை அவர்களுக்குத் தடை செய்யப்பட்டதாக இருக்கவில்லை” என்று சொன்னார்கள்.23 அத்தியாயம் :

23

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்பானி பிராணிகளின் இறைச்சியை (குர்பானி கறியை) மதீனாவுக்குச் செல்லும்போது பயண உணவாக எடுத்துச் செல்வோம்.25 (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள், (தம் அறிவிப்பு களில் ‘குர்பானி பிராணிகளின் இறைச்சி’ என்பதைக் குறிக்க மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘லுஹூமுல் அளாஹீ’ எனும் சொல்லுக்குப் பதிலாக) ‘லுஹூமுல் ஹத்யி’ எனும் சொல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் கையாண்டுள்ளார்கள். அத்தியாயம் :

24

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு பயணத்தில் இருந்ததால் அப்போது நான்) ஊரில் இருக்கவில்லை. பிறகு (பயணத்திலிருந்து திரும்பி) வந்தேன். (சாப்பிடும்போது) என் முன்னே இறைச்சி வைக்கப்பட்டது. அதை வைத்தவர், ‘‘இது எங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சி” என்று சொன்னார். நான், ‘‘இதை எடுத்துவிடுங்கள். நான் இதை உண்ணமாட்டேன்” என்று சொன்னேன். பிறகு எழுந்து புறப்பட்டு என் சகோதரர் அபூகத்தாதா (ரலி)அவர்களிடம் சென்றேன். -அபூகத்தாதா (ரலி) அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரராகவும் பத்ர் போரில் கலந்துகொண்டவராகவும் இருந்தார்கள்.- நான் நடந்ததை அவர்களிடம் கூற, அவர்கள் ‘‘நீங்கள் பயணம் சென்றபின் மறுஉத்தரவு பிறந்தது” என்று சொன்னார் கள்.26 அத்தியாயம் :

25

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் யார் குர்பானி பிராணியை அறுக்கிறாரோ அவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாட்களுக்குப்பின் (அதிலிருந்து எதுவும் அவரது வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்” என்று சொன்னார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக்கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று நான் விரும்பி னேன்” எனப் பதிலளித்தார்கள். அத்தியாயம் :

26

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் குர்பானி இறைச்சிக்கு உப்புத் தடவி அதை எடுத்துக்கொண்டு மதீனாவில் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் ‘‘மூன்று நாட்களுக்குமேல் (குர்பானி இறைச்சியை) உண்ணாதீர்கள்” என்று சொன்னார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது அதை உண்ணக் கூடாது எனக் கட்டாயப்படுத்து வதற்கல்ல; மாறாக, அவர்கள் (அவ்வாண்டு பஞ்சத்தில் பீடிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு வசதியுள்ளவர்கள்), அதிலிருந்து உணவளிக்க வேண்டுமென்று விரும்பி னார்கள். (அவர்களின் எண்ணத்தை) அல்லாஹ்வே மிக அறிந்தவன்.27 அத்தியாயம் :

27

அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஈதுல் அள்ஹா பெருநாள் தொழுகையில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன்பே தொழுதுவிட்டுப் பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது ‘‘மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இரு பெருநாட்களிலும் நோன்பு நோற்கக் கூடாது என உங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள். இவ்விரண்டில் ஒன்று, ‘உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள்’ ஆகும். மற்றொன்றோ, ‘நீங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை உண்ணும் (ஈதுல் அள்ஹா) பெருநாள்’ ஆகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

28

அபூஉபைத் (ரஹ்) அவர்கள் (தொடர்ந்து) கூறியதாவது: பின்னர் நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடன் ஒரு பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தது. அவர்கள் உரை நிகழ்த்தும் முன்பே தொழுதுவிட்டுப் பிறகு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். அப்போது, ‘‘மக்களே! இது எத்தகைய நாளென்றால், இதில் உங்களுக்கு (ஈதுல் அள்ஹா, வெள்ளிக்கிழமை ஆகிய) இரு பெருநாட்கள் ஒன்றுசேர்ந்து (கிடைத்து) உள்ளன. ஆகவே, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் எவர் ஜுமுஆவை (வெள்ளிக்கிழமைத் தொழுகையை) எதிர்பார்த்துக் காத்திருக்க விரும்புகின் றாரோ அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கட்டும். (அவர்களில்) எவர் தமது இல்லத்துக் குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருக்கு (அவ்வாறே திரும்பிச் சென்றுவிட) நான் அனுமதியளித்துவிட்டேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

29

அபூஉபைத் (ரஹ்) அவர்கள் (தொடர்ந்து) கூறியதாவது: பிறகு நான் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் உரை (குத்பா) நிகழ்த்தும் முன்பே தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேலாக உங்கள் குர்பானி இறைச்சிகளை நீங்கள் உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று சொன்னார்கள்.28 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

30

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்பானி இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு (மட்டும்) உண்ணுங்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இந்த ஹதீஸின்படி செயல்படும் வகையில்) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மினாவிலிருந்து புறப்படும்போது குர்பானி பிராணிகளின் இறைச்சி(யைத் தவிர்ப்பதற்)காக (ரொட்டியை) எண்ணெய் தொட்டு உண்டுவந்தார்கள். அத்தியாயம் :