61 - நபி மற்றும் தோழர்களின் சிறப்புகள்
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஓர் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்' (49:13) எனும் இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள “ஷுஊப்' (சமூகங்கள்) என்னும் சொல் பெரிய இனங்களையும் “கபாயில்' (குலங்கள்) எனும் சொல், அந்த இனங் களில் உள்ள உட்பிரிவுகளையும் குறிக் கும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.2 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சமுடையவரே” என்று பதிலளித் தார்கள். மக்கள், “நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை” என்றனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அப்படி யென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் (அலை) அவர்கள்தான் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்)” என்று சொன்னார்கள்.3 அத்தியாயம் :
குலைப் பின் வாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களிடம் நான், “நபி (ஸல்) அவர்கள் “முளர்' குலத்தைச் சேர்ந்தவர்களா என்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்ட தற்கு, “முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் நள்ர் பின் கினானாவின் சந்ததி களில் ஒருவர் ஆவார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
குலைப் பின் வாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள்- அவர்கள் ஸைனப் (ரலி) அவர்கள் என்று எண்ணுகிறேன்- எனக்கு அறிவித் தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவையையும், மண்சாடியையும், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்களையும், தார் பூசப் பட்ட பாத்திரங்களையும் (பயன்படுத்த வேண்டாமென்று) தடை விதித்தார்கள். நான் அவரிடம், “நபி (ஸல்) அவர்கள் எந்தக் கோத்திரத்தவர்களாயிருந்தார்கள் என்று எனக்குத் தெரிவியுங்கள்; அவர்கள் முளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகத் தானே இருந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் நள்ர் பின் கினானாவின் சந்ததிகளில் ஒருவர் ஆவார்கள்” என்று சொன்னார்கள்.4 அத்தியாயம் :
தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்த ஊதியத்தையும் நான் கேட்கவில்லை. ஆயினும், உறவுமுறையை நீங்கள் பேணி நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” எனும் (42:23) இறைவசனம் குறித்து (இதன் கருத்து என்ன என்று) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது (அங்கிருந்த) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், “இதன் பொருள், “ஆயினும் என் உறவினர்களிடம் நீங்கள் அன்பு பாராட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்பதாகும்” என்று பதிலளித்தார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “குறைஷியரின் எந்தக் கிளைக் குலத்திற்கும் நபி (ஸல்) அவர்களுடன் உறவுமுறை இல்லாமல் இருந்ததில்லை. ஆகவே, “(குறைந்தபட்சம்) எனக்கும் உங்களுக்கும் இடையிலான அந்த உறவு முறையையாவது பேணி நடக்கும்படி உங்களைக் கேட்கிறேன்” என்னும் பொருளில்தான் இந்த இறைவசனம் அருளப்பெற்றது” என்று பதிலளித் தார்கள்.8 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இங்கிருந்துதான்-கிழக்கு திசையிலிருந்துதான்-குழப்பங்கள் தோன்றும். ஒட்டகங்கள் மற்றும் மாடுகளின் வால்களைப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருக்கும் (தங்கள் உலக வேலைகளில் மூழ்கியுள்ள) “ரபீஆ' மற்றும் “முளர்' ஆகிய குலங்களைச் சேர்ந்த கிராமவாசிகளான நாடோடிகளிடையேதான் கல்மனமும் கடின சித்தமும் காணப்படும்.9 இதை அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெருமையும் கர்வமும் கிராமவாசிகளான நாடோடிகளிடையே காணப்படும். ஆடு மேய்ப்பவர்களிடையே அமைதியும் பணிவும் காணப்படும். இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். மதி நுட்பமும் யமன் நாட்டைச் சேர்ந்த தாகும்.10 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: “யமன்' நாடு கஅபாவுக்கு வலப் பக்கம் அமைந்திருப்பதால்தான் அதற்கு “யமன்' என்று பெயரிடப்பட்டது. “ஷாம்' (சிரியா) நாடு கஅபாவின் இடப் பக்கம் அமைந் துள்ளது. “மஷ்அமா' என்பதற்கு “மய்ஸரா' (இடது) என்பது பொருள். இடக் கரத்திற்கு “ஷுஃமா' என்பர். இடப் பக்கத்திற்கு “அல்அஷ்அம்' என்பர்.11 அத்தியாயம் :
முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்களிடம் குறைஷியரின் ஒரு தூதுக் குழுவில் ஒருவராக நான் வருகை தந்திருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், “கஹ்த்தான் குலத்திலிருந்து மன்னர் ஒருவர் தோன்றுவார்” என்று அறிவிப்பதாகச் செய்தி வந்தது.13 அப்போது முஆவியா (ரலி) அவர்கள் கோபமடைந்து எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டு பின்னர், “இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகிறேன்: உங்களில் சிலர், அல்லாஹ் வின் வேதத்தில் இல்லாத, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக் கப்படாத செய்திகளைப் பேசுவதாக எனக் குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறியாதவர்கள் ஆவர். தீய வழியில் செலுத்துகின்ற வெற்று நம்பிக்கைகளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடம்தான் இருக்கும். அவர்களுடன் (அது தொடர்பாகப்) பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டிவரும்வரை இந்நிலை நீடிக்கும்' என்று கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று சொன்னார்கள்.14 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும்வரை. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் நடந்து (நபி (ஸல்) அவர்களிடம் நீதி பெறச்) சென்றோம். உஸ்மான் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! முத்தலிபின் மக்களுக்கு நீங்கள் கொடுத்தீர்கள். எங்களை விட்டுவிட்டீர்களே! நாங்களும் அவர்களும் உங்களுக்கு ஒரே விதமான (உறவு) நிலையில்தானே இருக்கின்றோம்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “பனூ ஹாஷிமும் (ஹாஷிம் கிளையாரும்) பனுல் முத்தலிபும்(முத்தலிப் கிளையாரும்) ஒருவர்தான் (வெவ்வேறானவர்கள் அல்லர்)” என்று பதிலளித்தார்கள்.15 அத்தியாயம் :
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த சிலருடன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், பனூ ஸுஹ்ரா கிளையினருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த உறவு முறையின் காரணத்தால் அவர்களிடம் மிகவும் மென்மையாக நடந்துகொள்வார்கள்.16 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குறைஷிகளும் அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை.17 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களுக்கு, நபி (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோருக்கு அடுத்தபடியாக, (தம் சகோதரி அஸ்மாவின் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) மீது எல்லா மனிதர்களைவிடவும் அதிகமான பிரியம் இருந்தது. மக்களிலேயே அதிகமாக ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நன்மை புரியக்கூடியவராக அப்துல்லாஹ் (ரலி) இருந்தார். ஆயிஷா (ரலி) அவர்கள், தம்மிடம் வருகின்ற அல்லாஹ்வின் கொடை எதையும் தம்மிடமே வைத்துக் கொள்ளாமல் தர்மம் செய்துவிடுவது வழக்கம். ஆகவே, அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்களின் கரத்தை (தர்மம் செய்ய விடாமல்) பிடித்துக்கொள்வது அவசியம்” என்று கூறினார்கள்.18 அதனால் அவர்கள் (கோபமுற்று), “(தர்மம் செய்ய விடாமல்) என் கையைப் பிடித்துக்கொள்வதா? (நான் இனி அப்துல்லாஹ்வுடன் பேச மாட்டேன்.) அவருடன் (என் சபதத்தை மீறி) நான் பேசினால் (சத்தியத்தை முறித்த குற்றத்திற்காக) நான் பரிகாரம் செய்ய நேரிடும்” என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், (ஆயிஷா (ரலி) அவர்களின் கோபத்தைத் தணித்து அவர்களைத் தம்முடன் பேசச் செய்வதற்காக) (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் தமக்காகப் பரிந்துரை செய்யும்படி குறைஷியர் சிலரையும் குறிப்பாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தாய்மாமன்மார்களையும் கேட்டுக்கொண்டார்கள். (அவர்கள் பரிந்துரை செய்தும்) ஆயிஷா (ரலி) அவர்கள் பேச மறுத்துவிட்டார்கள். ஆகவே, அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்து யகூஸ் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா உள்ளிட்ட நபி (ஸல்) அவர்களின் தாய் மாமன்களான பனூ ஸுஹ்ரா கிளையினர் அப்துல்லாஹ்விடம், “நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டுக்கொண்டி ருக்கும்போதே நீங்கள் திரையைக் கடந்து (அனுமதி பெறாமலே) சென்றுவிடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் செய்தார் கள். பிறகு (ஆயிஷா (ரலி) அவர்களும் ஒப்புக்கொண்டு பேசிவிட்டார்கள். அவர் களின் சத்தியம் முறிந்துபோனதற்குப் பரிகாரமாக) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பத்து அடிமைகளை (விடுதலை செய்வதற்காக) அனுப்பிவைத்தார்கள். அவர்களை ஆயிஷா (ரலி) அவர்கள் விடுதலை செய்துவிட்டார்கள். பிறகு (இது போதுமான பரிகாரம் ஆகாதோ என்ற எண்ணத்தில்) தொடர்ந்து நாற்பது எண்ணிக்கையை அடையும்வரை அடிமைகளை விடுதலை செய்துகொண்டேயிருந்தார்கள். இறுதியில், நான் (அப்துல்லாஹ்வுடன் பேசமாட்டேன் என்று) சத்தியம் செய்தபோதே, “என் சத்தியம் முறிந்துபோனால் அதற்குக் குறிப்பிட்ட பரிகாரத்தைச் செய்வேன்' என்று முடிவு செய்துவிட்டிருந்தால் அதை மட்டும் செய்து பொறுப்பிóருந்து விடுபட்டிருப்பேன். (“இன்ன பரிகாரம் என்று குறிப்பிட்டு முடிவு செய்யாததால் இவ்வளவு செய்தும் இந்த அளவு பரிகாரம் நிவர்த்தியானதோ இல்லையோ என்ற சந்தேகம் இன்னும் என்னை வாட்டுகிறது”) என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை ஹஃப்ஸாவிடமிருந்து குர்ஆன் பதிவுகளை வாங்கிவரச் செய்து) ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), சயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரை அழைத்து, (அவற்றைப் பிரதியெடுக்கப் பணித்தார்கள்.) அவர்கள் ஏடுகளில் அவற்றைப் பிரதியெடுத் தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்சாரி யான ஸைத் பின் ஸாபித் (ரலி) தவிர உள்ள) குஹைஷியரின் மூன்று பேர் கொண்ட அந்தக் குழுவிடம், “நீங்கள் மூவரும் ஸைத் பின் ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஒரு (எழுத்து இலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் மொழி வழக்கி லேயே அதை எழுதுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்கில் தான் அருளப்பெற்றது” என்று சொன்னார் கள். அக்குழுவினரும் அவ்வாறே செய்தார்கள். அத்தியாயம் :
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அஸ்லம் கூட்டத்தார் கடைவீதியில் அம்பெய்து (விளையாடிக்)கொண்டிருக்கை யில் (அவ்வழியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டு வந்தார்கள். அதைக் கண்டதும், “இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங் கள். ஏனெனில், உங்கள் தந்தை(யான இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்ப வராக (வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவராக) இருந்தார்கள். “நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று இரு தரப்பாரில் ஒரு தரப்பாரைக் குறிப்பிட்டுக் கூறினார்கள். உடனே மற்றொரு தரப்பார் (விளையாட்டைத் தொடராமல்) நிறுத்திவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவர்களுக்கென்ன நேர்ந்தது?” என்று கேட்க, அவர்கள், “நீங்கள் இன்ன குலத்தாரோடு இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(தொடர்ந்து) அம்பெய்யுங்கள். நான் உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.20 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம் தந்தை அல்லாத (ஒரு)வரை (அவர் தம் தந்தையல்ல என்று) விவரம் அறிந்துகொண்டே “அவர்தான் என் தந்தை” என்று கூறும் ஒரு மனிதர் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவராகி விடுகிறார். தமக்கு வமிசாவளித் தொடர்பு இல்லாத ஒரு குலத்தைக் குறித்து, தாம், அந்தக் குலத்தைச் சேர்ந்தவன்தான் என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்பவர், தம் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதர் தம்மைத் தம் தந்தையல்லாத வருடன் இணைத்து (நான் அவருடைய மகன் என்று) கூறுவதும், தம் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்ததாகக் கூறுவதும், அல்லாஹ்வின் தூதர் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாகச் சொல்வதும் ஆகும்.21 இதை வாஸிலா பின் அல்அஸ்கஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது. அக்குழுவினர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ரபீஆ குலத்தாரின் இந்தக் குடும்பத்தார் ஆவோம். உங்களைச் சந்திக்க விடாமல் “முளர்' குலத்து இறைமறுப்பாளர்கள் எங்களைத் தடை செய்கிறார்கள். ஆகவே, (போர் நிறுத்தம் செய்யப்படுகின்ற) ஒவ்வொரு புனித மாதத்திலும்தான் நாங்கள் உங்களிடம் வந்து சேர முடிகிறது. எனவே, (இப்போது) நீங்கள் எங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை உங்களிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்வோம். எங்களுக்கு அப்பாóருப்ப வர்களிடம் அதை எடுத்துரைப்போம்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான்கு விஷயங்களைச் செய்யும்படி கட்டளையிட்டு, நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டாமென்று தடுக்கின்றேன். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை' என்று உறுதிகூறுவது, தொழுகையை நிலைநிறுத்துவது, ஸகாத் கொடுப்பது, உங்களுக்குப் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து ஐந்தில் ஒரு பங்கை அல்லாஹ்வுக்குச் செலுத்திவிடுவது ஆகியவைதான் நான் கட்டளையிடும் அந்த நான்கு விஷயங்கள். மேலும், (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவை, மண்சாடி, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்கள் மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றை (உபயோகிக்க வேண்டாமென்று) உங்களுக்குத் தடை செய்கிறேன்” என்று சொன்னார்கள்.22 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீதிருந்தபடி, “தெரிந்துகொள்ளுங்கள்: குழப்பம், இங்கே ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்துதான் தோன்றும்” என்று கிழக்குத் திசையை நோக்கிச் சைகை செய்தபடி கூறினார்.23 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குறைஷிகளும், அன்சாரிகளும், ஜுஹைனா குலத்தாரும், முஸைனா குலத்தாரும், அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், அஷ்ஜஉ குலத்தாரும் (இஸ்லாத்தை முதலில் தழுவிய காரணத்தால்) என் பிரத்யேகமான உதவியாளர்கள் ஆவர். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் அன்றி பொறுப்பாளர்கள் வேறெவரும் இலர்.25 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி,” “ஃகிஃபார்' குலத்தை அல்லாஹ் மன்னிப் பானாக! “அஸ்லம்' குலத்தை அல்லாஹ் (போரை விரும்பாத) அமைதி விரும்பியாக ஆக்குவானாக! “உஸய்யா' குலம் அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டது” என்று சொன்னார்கள்.26 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஸ்லம் குலத்தை அல்லாஹ் அமைதி விரும்பியாக ஆக்குவானாக! ஃகிஃபார் குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலத்தார் பனூ தமீம், பனூ அஸத், பனூ அப்தில்லாஹ் பின் ஃகத்ஃபான் மற்றும் பனூ ஆமிர் பின் ஸஅஸஆ ஆகிய குலங்களைவிடச் சிறந்தவையாக உள்ளனவா என்று எனக் குத் தெரிவியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் (அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள்), “அவர்கள் நஷ்டமடைந்தார்கள்; இழப்புக்குள்ளானார்கள்” என்று சொன் னார். நபி (ஸல்) அவர்கள், “(இல்லை;) அவர்கள் (ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலங்கள் இஸ்லாத்தை முதலில் தழுவிய காரணத் தால்), பனூ தமீம், பனூ அசத், பனூ அப்தில்லாஹ் பின் ஃகத்ஃபான் மற்றும் பனூ ஆமிர் பின் ஸஅஸஆ ஆகியவர் களைவிடச் சிறந்தவர்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “தங்களிடம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக) உறுதிமொழி கொடுத்தவர்கள் எல்லாம் ஹஜ் செய்ய வருபவர்களிடம் திருடியவர் களான அஸ்லம், ஃகிஃபார் மற்றும் முஸைனா குலங்களைச் சேர்ந்தவர்கள் தான்” என்று கூறினார்கள். -றமற்றும் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்தவர்களும்' என்றும் (நபியவர்கள் கூறியதாக) அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா அறிவித்தார் என்று மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் பின் அபீயஅகூப் சந்தேகத் துடன் கூறுகிறார்- நபி (ஸல்) அவர்கள், “பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அசத், மற்றும் பனூ ஃகத்ஃபான் ஆகிய குலங்களைவிட அஸ்லம், ஃகிஃபார், மற்றும் முஸைனா குலத்தார் சிறந்தவர்கள் அல்லவா? அவர்கள் நஷ்டமும் இழப்பும் அடைந்து விட்டார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (அஸ்லம், ஃகிஃபார், முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலத்தாரான) இவர்கள் (பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அசத் மற்றும் பனூ ஃகத்ஃபான் ஆகிய) அவர்களைவிடச் சிறந்தவர்களே” என்று சொன்னார்கள். -(அஸ்லம், ஃகிஃபார், முஸைனா குலத்தாருடன்) ஜுஹைனா குலத்தாரையும் சேர்த்துக் குறிப்பிட்டதாக நினைக்கிறேன் என அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீயஅகூப் (ரஹ்) கூறுகிறார்-27 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலங்களும் முஸைனா, ஜுஹைனா ஆகிய குலங் களில் சிலரும்- அல்லது ஜுஹைனா அல்லது முஸைனா ஆகிய குலங்களில் சிலரும்28 அல்லாஹ்விடத்தில்- அல்லது மறுமை நாளில்-29 அசத், தமீம், ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் ஆகிய குலங்களை விடச் சிறந்தவர்கள்.30 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கஹ்த்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் தோன்றி, தமது கைத்தடியால் மக்களை வழிநடத்தாத வரை யுக முடிவு நாள் வராது.32 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (பனுல் முஸ்த்தலிக்) அறப்போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்கள் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக் காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார்.34 ஆகவே, அந்த அன்சாரி கடுங்கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, “அன்சாரிகளே!” என்றழைத்தார். முஹாஜிர், “முஹாஜிர் களே!” என்றழைத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, “அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?” என்று கேட்டு விட்டு, “அவ்விருவரின் விவகாரம் என்ன?” என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த அறியாமைக் கால அழைப்பைக் கை விடுங்கள். இது அருவருப்பானது” என்று சொன்னார்கள். (நயவஞ்சகர்களின் தலைவரான) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல், “நமக்கெதிராக (இந்த அகதி களான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா? நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றிவிடுவார் கள்” என்று (விஷமமாகச்) சொன்னார். உடனே உமர் (ரலி) அவர்கள், “இந்தத் தீயவரை நாம் கொன்றுவிட வேண்டாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று அப்துல்லாஹ் பின் உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவரைக்) கொல்ல வேண்டாம். மக்கள், “முஹம்மத் தம் தோழர்களைக்கூட கொல் கிறார்' என்று பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (துக்கத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக் கால அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அம்ர் பின் லுஹை பின் கம்ஆ பின் கின்திஃப் என்பார்தான் குஸாஆ குலத்தாரின் தந்தையாவார்.36 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அல்பஹீரா' என்பது (ஒட்டகங்களில்) எதனுடைய பாலை(க் கறக்கலாகாது என்று) ஷைத்தான்களுக்காகத் தடை செய்யப்பட்டு விடுமோ அந்த ஒட்டக(த்தின் நாம)மாகும். அதன் பாலை மக்களில் எவருமே கறக்க மாட்டார்கள். “சாயிபா' என்பது அரபியர் தங்கள் கடவுள்களுக்காக (நேர்ச்சை செய்து) மேயவிட்ட ஒட்டகமாகும். ஆகவே, அதன்மீது சுமை எதுவும் ஏற்றப்படாது. மேலும், நபி (ஸல்) அவர்கள், “குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் ஆமிர் பின் லுஹை என்பவர், நரகத்தில் தமது குடலை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்தான் முதன்முதலில் “சாயிபா' ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்துகொண்டிருக்கும்படி) விட்டவர்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அத்தியாயம் :
அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்க, நாங்கள், “சரி (அறிவியுங் கள்)” என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அபூதர் (ரலி) அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்: நான் ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது “ஒரு மனிதர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், “நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரது செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டுவா” என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், “உன்னிடம் என்ன செய்தி உண்டு?' என்று கேட்டேன். “நன்மை புரியும்படி கட்டளை யிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கின்ற ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன்” என்றார். நான் அவரிடம், “போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை' என்று கூறினேன். பிறகு தோலால் ஆன (தண்ணீர்) பையையும் கைத் தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன். அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக்கொள்ளாமலிருக்கத் தொடங்கி னேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாத தால்) ஸம்ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ (ரலி) அவர்கள் (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார்கள். (என்னைக் கண்டதும்), “ஆள் (ஊருக்குப்) புதியவர் போலத் தெரிகிறதே” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்றேன். உடனே அவர்கள், “அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)” என்று சொன்னார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். “மனிதர் (தாம் தங்க வேண்டிய) தமது வீட்டை அடையாளம் தெரிந்துகொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?” என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். உடனே அலீ (ரலி) அவர்கள், “என்னுடன் நடங்கள்” என்று சொல்லிவிட்டு, “உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்ப தாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “அவ்வாறே செய்கிறேன்” என்று சொன்னார்கள். நான் அப்போது “இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரரை அவரிடம் பேசும்படி அனுப்பி னேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டுவரவில்லை. ஆகவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பி னேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். ஆகவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகின்ற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்வதைப் போல் சுவரோரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க்கொண்டிருங்கள்” என்று சொன்னார்கள். இறுதியில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம், “எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்” என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அபூதர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்துவைப்பீராக. உமது ஊருக்குத் திரும்பிச் செல்வீராக. நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உமக்கு எட்டும் போது எங்களை நோக்கி வருவீராக” என்று சொன்னார்கள். அதற்கு நான், “உங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக் கிடையே உரக்கச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷியர் அங்கே இருந்தனர். நான், “குறைஷி குலத்தாரே! “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை' என்று நான் உறுதி கூறுகின்றேன். “முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் நான் உறுதி கூறுகின் றேன்” என்று சொன்னேன். உடனே அவர்கள், “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று சொன்னார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை அடையாளம் புரிந்துகொண்டு என்மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்)கொண்டார்கள். பிறகு குறைஷியரை நோக்கி, “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் ஃகிஃபார் குலத்தார் வசிக்கு மிடத்தையொட்டித்தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)”38 என்று கேட்டார்கள். உடனே அவர்கள் என்னைவிட்டு விலகிவிட்டார்கள். மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போலவே சொன்னேன். அவர்கள், “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று சொன்னார்கள். நேற்று என்னிடம் நடந்துகொண்டதைப் போலவே நடந்துகொண்டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னைப் புரிந்துகொண்டு என்மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்)கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போலவே (இன்றும்) சொன்னார்கள். (இதை அறிவித்தபிறகு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூதர்ருக்கு கருணை காட்டுவானாக!” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத் தாரும், முஸைனா மற்றும் ஜுஹைனா குலத்தாரில் சிலரும் அசத், தமீம், ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் ஆகிய குலத்தாரைவிட அல்லாஹ்விடம்- அல்லது மறுமை நாளில்- சிறந்தவர்கள் ஆவர். -இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “முஸைனா மற்றும் ஜுஹைனா குலத்தாரில் சிலரும்” என்றும் கூறியிருக்கலாம்; (அதற்குப் பதிலாக) “ஜுஹைனா குலத்தாரில் சிலரும்” என்று மட்டுமோ “முஸைனா குலத்தாரில் சிலரும்” என்று மட்டுமோ கூறியிருக்கலாம் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.40 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அரபுகளின் அறியாமையை அறிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமென்றால் “அல்அன்ஆம்' (எனும் 6ஆவது) அத்தியாயத்தில் நூற்று முப்பதாவது வசனத்திற்குமேல் ஓதுங்கள். அந்த வசனம் இதுதான்: எவர் அறியாமையாலும் மூடத்தனத்தாலும் தம் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, அல்லாஹ்வின் மீது பழி சுமத்தித் தங்களுக்கு வழங்கியிருந்த வற்றைத் தாமாகவே தடை செய்து கொண்டார்களோ, அவர்கள் நிச்சயமாகப் பேரிழப்புக்கு ஆளாகிவிட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வழிதவறிப் போய் விட்டார்கள். அவர்கள் நல்வழி பெற்றவர் களாய் இல்லை. (6:140)41 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) உங்கள் நெருங்கிய உற வினர்களை எச்சரிப்பீராக!” (26:214) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள், “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷி யரின் கிளைக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள்.44 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) உங்கள் நெருங்கிய உற வினர்களை எச்சரிப்பீராக!” (26:214) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் குலங்கள் குலங்களாக (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்.45 அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய அத்தையான ஸுபைர் பின் அல்அவ்வாமின் தாயாரே!46 முஹம்மதின் மகளான ஃபாத்திமாவே! நீங்கள் இருவரும் உங்களை அல்லாஹ் விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் உங்கள் இருவருக்கும் அல்லாஹ்விடமிருந்து எதையும் வாங்கித் தர முடியாது. என் செல்வத்திலிருந்து இருவரும் நீங்கள் விரும்பியதைக் கேளுங் கள். (நான் உங்களுக்குத் தருகிறேன்.)47 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: (ஏதோ பேசுவதற்காக ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை(த் தனியாக) அழைத்தார்கள். (அவர்கள் வந்த) பின்னர், “உங்களிடையே எவரேனும் உங்கள் (கூட்டத்தார்) அல்லாதவர் (இங்கே வந்து) இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், “எங்கள் சகோதரி ஒருத்தியின் மகனை (நுஅமான் பின் முக்ரினை)த் தவிர வேறெவருமில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு சமுதாயத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவரே” என்று சொன் னார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பாளர்கள் வசைக்கவி பாடியபோது) இணைவைப்பாளர்களுக்கெதிராக வசைகவி பாடுவதற்கு நபி (ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களு டன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது) எப்படி?” என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், “குழைத்த மாவிலிருந்து முடியை உருவி யெடுப்பதுபோல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி)விடுவேன்” என்று சொன்னார்கள். உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசிக்கொண்டே ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன்.51 அவர்கள், “அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் “முஹம்மத்' (புகழப்பட்டவர்) ஆவேன். நான் “அஹ்மத்' (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் “மாஹீ' (அழிப்பவர்) ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் “ஹாஷிர்' (ஒன்று திரட்டுபவர்) ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்றுதிரட்டப்படுவார்கள்.54 நான் “ஆகிப்' (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன். இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குறைஷி (இறைமறுப்பாளர்)களின் ஏச்சையும், அவர்களின் சாபத்தையும் என்னைவிட்டு அல்லாஹ் எப்படித் திருப்பிவிடுகிறான் என்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? (என்னை) “முதம்மம்' (இகழப்படுவர்)' என்று (சொல்லி) ஏசுகிறார்கள்; “முதம்மம்' என்று (சொல்óயே) சபிக்கிறார்கள். ஆனால், நானோ “முஹம்மத்' (புகழப்படுபவர்) ஆவேன்.55 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் (மற்ற) இறைத்தூதர் களது நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் அதை, ஒரு செங்கல் அளவுக்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமை யாகவும் அழகாகவும் கட்டி முடித்திருந்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டு விட்டு) வியப்படைந்து, “இந்தச் செங்கல் லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந் தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்று கூறலானார்கள்.57 இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங் கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவுக்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான்தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதி யானவன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். “சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் இதே போன்ற ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள்” என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சந்தையில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர், “அபுல்காசிமே!” என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்து, “என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள்.59 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்.60 இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபுல்காசிம் (ஸல்) அவர்கள், “என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஜுஐத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர் களாக, (அந்த வயதிலும்) திடகாத்திர மானவர்களாக (கூன் விழாமல்) முதுகு நிமிர்ந்தவர்களாக நான் கண்டேன். அவர்கள், “எனக்குக் கேள்விப் புலன் மற்றும் பார்வைப் புலனின் நலம் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை யால்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிந்திருக்கிறேன். என் தாயின் சகோதரி என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச்சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரியின் மகன் நோயுற்றிருக்கிறார். இவருக்காக அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்” என்று சொன்னார்கள்.61 அத்தியாயம் :
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என் தாயின் சகோதரி அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்” என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (இரக்கத் துடன்) என் தலையை வருடிக் கொடுத்து, என் வளத்திற்காகப் பிராத்தித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார் கள். அவர்கள் உளூ செய்த தண்ணீரை நான் சிறிது குடித்தேன். பிறகு நான் அவர்களுடைய முதுகுக்குப் பின்னே நின்று, அவர்களுடைய இரு தோள்களுக் கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். (நபித்துவ முத்திரை எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது அறிவிப்பாளர்) முஹம்மத் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள், “குதிரையின் இரு கண்களுக்கு மத்தியிலுள்ள வெண்மை போன்றிருந்தது” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்ராஹீம் பின் ஹம்ஸா (ரஹ்) அவர்கள், “மணவறைத் திரையில் பொருத்தப்படுகின்ற பித்தானைப் போன்றிருந்தது” என்று கூறியுள்ளார்கள்.63 அத்தியாயம் :
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலிலிருந்து) நடந்தபடி புறப்பட்டார்கள். அப்போது ஹசன் (ரலி) அவர்களைக் குழந்தைகளுடன் விளை யாடிக்கொண்டிருக்கக் கண்டார்கள். உடனே அவர்களைத் தம் தோளின் மீது ஏற்றிக்கொண்டு, “என் தந்தை உனக்கு அர்ப்பணமாகட்டும்! நீ (தோற்றத்தில் உன் பாட்டனார்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கின்றாய்; (உன் தந்தை) அலீ அவர்களைப் போன்று இல்லை” என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களின் இந்தக் கூற்றைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.64 அத்தியாயம் :
அபூஜுஹைஃபா (ரலி அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த் திருக்கிறேன். ஹசன் (ரலி) அவர்கள், (தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கிறார்கள். அத்தியாயம் :
இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அலீ (ரலி) அவர்களின் மகன் ஹசன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தோற்றத்தில்) ஒத்திருந்தார்கள்” என்று அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் சொன்னார்கள். நான் அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பை எனக்குக் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் பொன்னிறமுடையவர்களாக, வெண்மை கலந்த கருநிறம் கொண்ட தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். எங்களுக்குப் பதின்மூன்று பெண் ஒட்டகங்கள் தரும்படி உத்தரவிட்டார்கள். அதை நாங்கள் கைவசம் பெற்றுக் கொள்வதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.” என்று கூறினார்கள்.65 அத்தியாயம் :
அபூஜுஹைஃபா அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக் கிறேன். அவர்களுடைய கீழுதட்டின் அடியிலுள்ள (தாடைக்கு மேலுள்ள) குறுந்தாடியில் நான் வெண்மையைக் கண்டேன். அத்தியாயம் :
ஹரீஸ் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(நான் அவர்களைப் பார்த்தபோது) அவர்களுடைய கீழுதட்டின் அடியில் (தாடைக்கு மேலே) உள்ள குறுந்தாடியில் வெள்ளை முடிகள் இருந்தன” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் உருவ அமைப்பை விவரிக்கக் கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள்; நெட்டையானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. பொன்னிறமுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை. மாநிறமுடையவர்களாகவும் இல்லை. கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை. முழுக்கவே படிந்த முடியுடையவர் களாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வகை முடியை உடையவர் களாக இருந்தார்கள். அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருந்தபோது அவர்களுக்கு குர்ஆன் அருளப்பட லாயிற்று. குர்ஆன் அருளப்படும் நிலையிலேயே மக்கா நகரில் பத்து ஆண்டுகள் தங்கி வசித்துவந்தார்கள்.66 மதீனா நகரிலும் பத்து ஆண்டுகள் வசித்துவந்தார்கள். அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள்கூட இல்லாத நிலையிலேயே இறந்துவிட்டார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களின் முடிகளில் ஒன்றை (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு) பார்த்தேன். அது சிவப்பாக இருந்தது. நான் (அது குறித்து, நபியவர்கள் மருதாணி பூசி இருந்தார்களா என்று) கேட்டேன். அதற்கு, “(நபியவர்கள் பூசிக்கொண்ட) நறுமணப் பொருளின் காரணத்தால் அது சிவப்பாகிவிட்டது” என்று பதிலளிக்கப்பட்டது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு அதிக உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறம் உடையவர்களாகவும் இல்லை; மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை; கடும் சுருள் முடியுடையவர் களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. நாற்பது வயதின் தொடக்கத்தில் அவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பினான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் பத்து ஆண்டுகளும் மதீனா நகரில் பத்து ஆண்டுகளும் தங்கி யிருந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள்கூட இல்லாத நிலையில் அவர்களை அல்லாஹ் இறக்கச்செய்தான். அத்தியாயம் :
பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர் களாகவும் அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அள வுக்கு உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. அத்தியாயம் :
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் மருதாணி பூசியிருந்தார்களா?” என்று கேட்டேன் அதற்கு அவர்கள், “இல்லை; அவர்களின் நெற்றிப்பொட்டு முடியில் சிறிதளவு நரை இருந்தது; அவ்வளவுதான்” என்று பதிலளித்தார்கள்.67 அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நடுத்தர உயர முடையவர்களாகவும் அகன்ற மார்புடைய வர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களுடைய காதுகளின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். (அந்த ஆடையில்) நபி (ஸல்) அவர்களைவிட அழகான எவரையும் எப்போதும் நான் கண்டதேயில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒரு தொடரில் அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நபி (ஸல்) அவர்களின் தலைமுடி) அவர்களின் இரு தோள்கள்வரை இருந்தது. அத்தியாயம் :
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்களுடைய முகம் வாளைப் போன்று (நீளமாக) இருந்ததா?” என்று பராஉ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இல்லை; ஆயினும், அவர்களின் முகம் சந்திரனைப் போன்று (வட்டமாக) இருந்தது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது ஒருநாள்) நண்பகல் நேரத்தில் கடும் வெயிலில் “பத்ஹா'வை68 நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் “உளூ' செய்துவிட்டு லுஹ்ர் இரண்டு ரக்அத்கள் தொழுது அஸ்ர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் சிறு ஈட்டி ஒன்று (நடப்பட்டு) இருந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் அவ்ன் (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்துள்ள தாவது: (என் தந்தை) அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அந்த ஈட்டிக்கு அப்பால் பெண்கள்69 நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். மக்கள் அப்போது எழுந்து நபி (ஸல்) அவர்களின் இரு கரங்களையும் பிடித்து அவற்றால் தங்கள் முகங்களை வருடிக்கொள்ள லாயினர். நான் நபி (ஸல்) அவர்களின் கரத்தை எடுத்து என் முகத்தின் மீது வைத்துக்கொண்டேன். அது பனிக்கட்டியைவிட குளிர்ச்சியானதாகவும் கஸ்தூரியை விட நறுமணம் மிக்கதாகவும் இருந்தது.70 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாகக் கொடை வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் அவர்கள் இன்னும் அதிக மாக வாரி வழங்குபவர்களாக மாறிவிடு வார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக்கொண்டி ருந்தார்கள். அப்போது (அதுவரை அருளப்பட்ட) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட அதிகமாகச் செல்வங்களை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.71 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் (பரவசத்தால்) அவர்களுடைய முகத்தின் (நெற்றி) ரேகைகள் மின்ன வருகை தந்தார்கள். அப்போது அவர்கள், “(இருவரின் சாயலை வைத்து உறவுமுறையைக் கணிக்கும்) முத்லிஜீ என்பவர், ஸைதைப் பற்றியும் அவருடைய மகன் உசாமா பற்றியும் என்ன சொன்னார் என்று நீ கேள்விப்பட வில்லையா? (போர்வையின் கீழிருந்து வெளிப்பட்ட) அவ்விருவரின் கால்களையும் அவர் பார்த்துவிட்டு. “இந்தக் கால்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து தோன்றியவை' என்று சொன்னார்” என்று கூறினார்கள்.72 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள், தபூக் போரில் கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிட்ட சமயத்தை (நினைவு கூர்ந்து) பேசியபடி, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன் னேன். அவர்களின் (பொன்னிற) முகம் மகிழ்ச்சியால் மின்னிக்கொண்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியடைந்தால் அவர்களுடைய முகம் சந்திரனின் ஒரு துண்டைப்போல் பிரகாசமாகிவிடும். நாங்கள் அதை வைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதைத் தெரிந்துகொள்வோம்” என்று கூறினார்கள்.73 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மக்களில் (மனிதர்களில்) தலைமுறை தலைமுறையாக நான் சிறந்த தலைமுறை வழியே (மரபணுக்களில் பாதுகாக்கப்பட்டு வந்து இப்போது) நான் தோன்றியிருக்கும் (இந்தச்) சிறந்த தலை முறையில் தோன்றி இறைத்தூதராக்கப்பட்டுள்ளேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (முன்தலை முடியை தமது நெற்றி யின் மீது) தொங்கவிட்டுவந்தார்கள்.74 இணைவைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழவிடாமல் இரு பக்கமும் தொங்கவிட்டு)வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை(முடிகளை (நெற்றியின் மீது) தொங்கவிட்டுவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு (இறைக்)கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப்போக விரும்பிவந்தார்கள்.75 பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலை(முடி)யை (இரு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்து)க்கொண்டார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. “உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே” என்று அவர்கள் கூறுவார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில்- எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கிய தில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் தவிர. (அப்போது மட்டும் பழிவாங்குவார்கள்.) அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நபி (ஸல்) அவர்களின் (உடல்) மணத்தைவிட - அல்லது வியர்வையைவிட - சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு தொடர்களில் ஷ‚அபா (ரஹ்) அவர்கள் இதைப் போன்றே அறிவித்துவிட்டு, “நபியவர்களுக்கு ஏதேனும் ஒன்று பிடிக்கவில்லையானால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்” என்று (கூடுதலாக) அறிவித்துள்ளார்கள், அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் அதை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டுவிடுவார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மாலிக் இப்னு புஹைனா அல்அஸ்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சிரவணக்கம் செய்யும்போது தம் இரு கைகளுக்குமிடையே (அதிக) இடைவெளி விடுவார்கள். எந்த அளவுக்கென்றால் நாங்கள் அவர்களுடைய இரண்டு அக்குள்களையும் பார்ப்போம். இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் யஹ்யா பின் புகைர் (ரஹ்) அவர்கள், (அவர்களுடைய இரண்டு அக்குள்களைப் பார்ப்போம் என்பதற்குப் பதிலாக) “அவர்களின் இரு அக்குள் வெண்மையைப் பார்ப்போம்” என்று அறிவித்துள்ளார்கள்.76 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனை எதிலும் தம் கைகளை (மிக உயரமாகத்) தூக்குவதில்லை; மழை வேண்டிப் பிரார்த்திக்கையில் தவிர. ஏனெனில், அதில் அவர்கள் தம் இரு கைகளையும் தம் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவுக்கு உயர்த்து வது வழக்கம்.77 அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்யும்போது தம் இரு கைகளையும் உயர்த்தினார்கள்.78 அத்தியாயம் :
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜில்) நண்பகல் நேரத்தில் (கடும் வெயிலின்போது) நபி (ஸல்) அவர்கள் “அப்தஹ்' எனுமிடத்தில் கூடாரத்தில் இருக்க, நான் அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். பிலால் (ரலி) அவர்கள் வெளியே புறப்பட்டுவந்து தொழுகைக்காக அழைப்பு விடுத்தார்கள்; பிறகு உள்ளே சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்த தண்ணீரின் மிச்சத்தை வெளியே கொண்டுவந்தார்கள். அந்த நீரில் சிறிதளவு பெறுவதற்காக மக்கள் பிலால் (ரலி) அவர்களிடம் முண்டியடித்துக்கொண்டிருந்தனர். பிறகு பிலால் (ரலி) அவர்கள் உள்ளே சென்று ஈட்டியை வெளியே எடுத்துவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள் -(இப்போதும்) நான் நபி (ஸல்) அவர்களுடைய கால்களின் பிரகாசத்தைப் பார்ப்பதைப் போன்றுள்ளது- பின்னர் ஈட்டியை நட்டு, லுஹ்ர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகவும் அஸ்ர் தொழுகையை இரண்டு ரக்அத் களாகவும் தொழுதார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் கழுதையும் பெண்ணும் நடந்து சென்றுகொண்டிருந் தார்கள்.79 அத்தியாயம் :
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ரமளானி லும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்களுக்குமேல் தொழுத தில்லை. (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் நீர் கேட்க வேண்டிய தில்லை. பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் நீர் கேட்க வேண்டிய தில்லை. பிறகு மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “என் கண்தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை' என்று பதிலளித்தார்கள்” என்று கூறினார்கள்.81 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கஅபா வின் பள்ளிவாசலிலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு (மீண்டும்) வேத அறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக்கொண்டிருந்தபோது (வானவர் களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார் கள். அவர்களில் முதலாமவர், “இவர்களில் அவர் யார்?” என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர், “இவர்களில் சிறந்தவர்” என்று பதிலளித்தார்.82 அவர்களில் இறுதியானவர், “இவர் களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்று சொன்னார். அன்றிரவு இது மட்டும்தான் நடந்தது. அடுத்த இரவில் நபி (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில் (உறக்க நிலையில்) அம்மூவரும் வந்தபோதுதான் அவர்களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும்தான் உறங்கும்; அவர்களுடைய உள்ளம் உறங்காது. இறைத்தூதர்கள் இப்படித்தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களுடைய உள்ளங்கள் உறங்கா. ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர் களைத் தம்முடன் அழைத்துக்கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.83 அத்தியாயம் :
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் (கைபரிலிருந்து திரும்பி வந்துகொண்டு)இருந்தோம். இரவின் ஆரம்பத்தில் நாங்கள் சென்று கொண்டி ருந்தோம். அதிகாலை நேரத்தின் முகப்பை (இரவின் கடைசிப் பகுதியை) நாங்கள் அடைந்தபொழுது ஓய்வெடுப்பதற்காக (ஓரிடத்தில்) தங்கினோம். சூரியன் உச்சிக்கு வரும்வரை நாங்கள் எங்களையும் மீறிக் கண்ணயர்ந்துவிட்டோம். உறக்கத்திலிருந்து கண்விழித்தவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்களே முதலாமவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாமாகக் கண்விழிக்காத வரை அவர்களை உறக்கத்திலிருந்து எவரும் எழுப்புவதில்லை. அடுத்து உமர் (ரலி) அவர்களும் கண்விழித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தலைமாட்டில் அமர்ந்துகொண்டு குரலை உயர்த்தி “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறலானார்கள்.85 உடனே நபி (ஸல்) அவர்கள் கண் விழித்து (சிறிது தொலைவு சென்றதன்)பின் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி எங்களுக்கு அதிகாலைத் தொழுகையைத் தொழுவித்தார்கள். அப்போது ஒரு மனிதர் எங்களுடன் தொழாமல் கூட்டத்தாரை விட்டுத் தனியே விலகியிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பியவுடன், “இன்னாரே! எங்களுடன் நீ ஏன் தொழவில்லை?” என்று கேட்டார் கள். அவர், “எனக்குப் “பெருந்துடக்கு' ஏற்பட்டுவிட்டது” என்று சொன்னார். உடனே, நபி (ஸல்) அவர்கள் மண்ணில் “தயம்மும்' செய்யும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு அவர் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வாகனத்தில் தமக்கு முன்னால் அமர்த்தினார்கள். எங்களுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. நாங்கள் பயணம் சென்றுகொண்டிருக்கும்போது (ஒட்டகத்தின் மீது) தோலால் ஆன தண்ணீர் பைகள் இரண்டிற்கிடையே தன் இரு கால்களையும் தொங்கவிட்டிருந்த பெண்ணொருத்தியை நாங்கள் கண்டோம். அவளிடம் நாங்கள், “தண்ணீர் எங்கே (உள்ளது)?” என்று கேட்டோம். அதற்கு அவள், “தண்ணீர் (இங்கு) இல்லை” என்று சொன்னாள். நாங்கள், “உன் வீட்டாரு(ள்ள இந்தப் பகுதி)க்கும் தண்ணீ(ருள்ள இடத்து)க்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?” என்று கேட்டோம். அவள், “ஒரு பகலும் ஓர் இரவும் (பயணம் செய்யும் தூரம்)” என்று சொன்னாள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீ நட” என்று சொன்னோம். அவள், “அல்லாஹ்வின் தூதர் என்றால் யார்?” என்று கேட்டாள். அவளை (தண்ணீர் தரச்) சம்மதிக்க வைக்க எங்களால் முடிய வில்லை. இறுதியில் அவளை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவள் நபி (ஸல்) அவர்களிடமும் எங்களிடம் பேசியதைப் போன்றே பேசினாள். தான் அநாதைக் குழந்தைகளின் தாய் என்று நபி (ஸல்) அவர்களிடம் சொன்னதைத் தவிர. உடனே, நபி (ஸல்) அவர்கள் அவளுடைய தண்ணீர் பைகள் இரண்டையும் கொண்டுவரச் சொல்லிக் கட்டளையிட்டு அவற்றின் வாய்கள் இரண்டிலும் (தம் கரத்தால்) தடவினார்கள். தாகமுடனிருந்த நாங்கள் நாற்பது பேரும் தாகம் தீரும்வரை (அவற்றிலிருந்து) தண்ணீர் பருகினோம். எங்களுடன் இருந்த ஒவ்வொரு தோல் பையையும் ஒவ்வொரு தோல் பாத்திரத்தையும் நாங்கள் நிரப்பிக்கொண்டோம். (எங்கள்) ஒட்டகம் ஒன்றுக்கு மட்டும் (அதனால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதால்) தண்ணீர் புகட்டவில்லை. அந்தத் தோல் பை (தண்ணீர்) நிரம்பி வழிந்த காரணத்தால் (அதன்) வாய் பிளந்துபோக இருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள், “உங்களிடம் இருக்கும் (உணவுப்) பொருள்களைக் கொண்டுவாருங்கள்” என்று (தம் தோழர்களுக்கு) உத்தரவிட்டார்கள். (தோழர்களும் கொண்டு வந்து தர), நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் ஒன்று திரட்டி (அவளுக்கு வழங்கி) னார்கள். இறுதியில், அவள் தன் வீட்டாரிடம் சென்று, “நான் மக்களிலேயே மிக வசீகரமான ஒருவரை, அல்லது அவர்கள் (முஸ்லிம்கள்) நம்புவதைப் போல் ஓர் இறைத்தூதரைச் சந்தித்தேன்” என்று சொன்னாள். அல்லாஹ் (அவளது) அந்தக் குலத்தாருக்கு அப்பெண்ணின் வாயிலாக நல்வழி காட்டினான். ஆகவே, அவளும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாள்; அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.86 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள், (மதீனாவிலுள்ள) “ஸவ்ரா' என்னுமிடத்தில் இருந்தபோது அவர்களிடம் (தண்ணீர் இருந்த) ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் தமது கரத்தைப் பாத்திரத்தினுள் போட, அவர்களுடைய கை விரல்களுக்கிடையே யிருந்து தண்ணீர் (ஊற்று போல்) பொங்கி வரலாயிற்று. மக்கள் அனைவரும் (அந்தத் தண்ணீரில்) அங்கத் தூய்மை செய்தார் கள். அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் (மொத்தம்) எத்தனை பேர் இருந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முன்னூறு பேர்” என்றோ, “முன்னூறு பேர் அளவுக்கு” என்றோ சொன்னார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். அப்போது அஸ்ர் தொழுகையின் நேரம் வந்துவிட்டிருந்தது. அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரைத் தேடியும் அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அங்கத் தூய்மை செய்யும் தண்ணீர் (சிறிது) கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தப் பாத்திரத்தில் தமது கரத்தை வைத்தார்கள்; பிறகு அதிலிருந்து அங்கத் தூய்மை செய்யும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய விரல்களுக்குக் கீழேயிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துப் பொங்கிவருவதை நான் கண்டேன். மக்கள் (அதிலிருந்து) அங்கத் தூய்மை செய்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களில் கடைசி நபர்வரை (அதிலேயே) அங்கத் தூய்மை செய்து முடித்தார்கள்.87 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தமது பயணம் ஒன்றுக்காகப் புறப்பட்டார்கள். அப்போது அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தார்கள். அவர்கள் பயணம் சென்றுகொண்டிருந்தபோது தொழுகை நேரம் வந்துவிட்டது. அவர்களுக்கு அங்கத் தூய்மை செய்வதற்கான தண்ணீர் கிடைக்கவில்லை. பயணக் கூட்டத்திலிருந்து ஒரு மனிதர் சென்று சிறிதளவு தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் அதை எடுத்து அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு தம் கை விரல்களில் நான்கைப் பாத்திரத்தின் மீது நீட்டி, “எழுந்து அங்கத் தூய்மை செய்யுங்கள்” என்று உத்தரவிட் டார்கள். மக்கள் அனைவரும் அங்கத் தூய்மை செய்தனர். அவர்கள் விரும்பிய அளவுக்கு அங்கத் தூய்மை செய்வதற் குள்ள தண்ணீரைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் எழுபது அல்லது (கிட்டத்தட்ட) அந்த அளவு எண்ணிக்கையினராக இருந்தனர். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (ஒருமுறை) தொழுகை நேரம் வந்தது. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் வீடு அமைந்திருந்தவர்களெல்லாரும் அங்கத் தூய்மை செய்ய எழுந்தனர். (பள்ளிவாசல் அருகில் வீடில்லாத) ஒரு கூட்டத்தார் (அங்கத் தூய்மை செய்ய வழியறியாமல்) எஞ்சியிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் தண்ணீருள்ள கல்லால் ஆன ஏனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அதில்) தமது கையை வைத்(துப் பார்த்)தார்கள். அதில் அவர்கள் தமது கரத்தை விரித்து வைக்கும் அளவுக்கு அந்தக் கல் ஏனம் பெரிதாக இருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் தம் விரல்களை இணைத்து கல் ஏனத்தில் வைத்தார்கள். மக்கள் அனை வரும் (அதிலிருந்து) அங்கத் தூய்மை செய்தனர். அறிவிப்பாளர் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான், “அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “எண்பது பேர்' என்று பதிலளித்தார்கள்.88 அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா உடன்படிக்கையின்போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கென்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். மக்கள், “தங்கள் முன்னாலுள்ள தண்ணீரைத் தவிர நாங்கள் அங்கத் தூய்மை செய்வதற்கும் குடிப்பதற்கும் வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை” என்று பதிலளித்தனர். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கையைத் தோல் குவளையினுள் இட்டார்கள். உடனே, அவர்களுடைய விரல்களுக்கிடையேயிருந்து ஊற்றுகளைப் போன்று தண்ணீர் பொங்கி வரத்தொடங்கியது. நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) அருந்தி னோம்; மேலும், அங்கத் தூய்மை செய்தோம். அறிவிப்பாளர் சாலிம் பின் அபில் ஜஅத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள், “நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும்கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர்தான் இருந்தோம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா நிகழ்ச்சியின்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந் தோம்.89 ஹுதைபியா என்பது (மக்காவிó ருந்து மதீனா செல்லும் பாதையில் இருந்த) ஒரு கிணறாகும். நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) இறைத்தோம். எந்த அளவுக் கென்றால் அதில் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட நாங்கள் விட்டுவைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் கிணற்றின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டார்கள். பிறகு சிறிது தண்ணீரை வரவழைத்து வாய் கொப்புளித்தார்கள். பிறகு (தம் வாயிலிருந்த நீரை) கிணற்றுக்குள் உமிழ்ந்தார்கள். நாங்கள் சிறிது நேரம் பொறுத்திருந்தோம். பிறகு நாங்கள் தாகம் தீரும்வரையிலும், எங்கள் வாகனங்கள் தாகம் தீரும் வரையிலும் - அல்லது எங்கள் வாகனங்கள் (தாகம் தீர்ந்து) திரும்பும் வரையிலும் - நாங்கள் (அக்கிணற்றிலிருந்து தண்ணீர்) இறைத்தோம். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் மனைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களி டம், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக் கிருக்கும்) பசியைப் புரிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “ஆம், இருக்கி றது” என்று கூறிவிட்டு தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தமது முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் அதைச் சுருட்டி என் கை (அக்குளு)க்குக் கீழே அதை மறைத்து வைத்து அதன் ஒரு பகுதியால் என் கையைக் கட்டிவிட்டார்கள்.90 பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டுசென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்கள் இருந்தனர். நான் அவர்களுக்குமுன் நின்றேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்றேன். “உணவுடனா அனுப்பியுள்ளார்?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், “எழுந்திருங்கள்' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில், அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் வந்து (நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் வந்துகொண்டிருக்கும்) விவரத்தைத் தெரிவித்தேன். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), “உம்மு சுலைமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு உணவளிக்க எதுவுமில்லையே” என்று சொன்னார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “அல்லாஹ் வும் அவனுடைய தூதருமே அறிந்தவர் கள்” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (தாமே நபி (ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காக) நடந்து சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா தம்முடனிருக்க, உம்மு சுலைம் அவர்களை நோக்கிச் சென்று, “உம்மு சுலைமே! உங்களிடமிருப்பதைக் கொண்டுவாருங் கள்!” என்று சொன்னார்கள். உடனே, அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி உத்தரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடியவற்றை (பிஸ்மில்லாஹ்வையும் மற்ற பிரார்த்தனைகளையும்) சொன்னார்கள். பிறகு, “பத்து பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று (அபூதல்ஹாவிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினர். பிறகு, “பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, “பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினர். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும்வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் ஆவர். அத்தியாயம் :
அல்கமா (ரஹ்) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளை அருள்வளம் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். நீங்களோ அவற்றை அச்சுறுத்தல் என்று எண்ணு கிறீர்கள்.91 நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தோம். அப்போது தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “மீதமான தண்ணீர் ஏதும் இருக்கிறதா என்று தேடுங்கள்” என உத்தரவிட்டார்கள். மக்கள் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பாத்திரத்தைக் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தைப் பாத்திரத்தில் நுழைத்து, “அருள் வளமிக்க, தூய்மை செய்யும் தண்ணீரின் பக்கம் வாருங்கள். அருள்வளம் என்பது அல்லாஹ்விடமிருந்து கிடைப்பதாகும்” என்று சொன்னார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விரல்களுக் கிடையேயிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துப் பொங்குவதைக் கண்டேன். (நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில்) உணவு உண்ணப்பட்டுக்கொண்டிருக்கும்போது அது இறைவனைத் துதிப்பதை -தஸ்பீஹ் செய்வதை- நாங்கள் கேட்டிருக்கிறோம். அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: என் தந்தை, தம்மீது கடனிருக்கும் நிலையில் இறந்துவிட்டார். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “என் தந்தை, தம்மீதிருந்த கடனை (அடைக் காமல்) அப்படியே விட்டுச் சென்றுவிட்டார். என்னிடம் அவருடைய பேரீச்ச மரங் களின் விளைச்சலைத் தவிர வேறெதுவும் இல்லை. அந்தப் பேரீச்ச மரங்களின் பல ஆண்டுகளின் விளைச்சல்கூட அவர் மீதுள்ள கடனை அடைக்கும் அளவுக்கு எட்டாது. ஆகவே, கடன்காரர்கள் என்னைக் கடும் சொற்களைப் பயன்படுத்திஏசாமலிருப்பதற்காக நீங்கள் என்னுடன் வாருங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் (என்னுடன் வந்து) பேரீச்சம் பழங்களைச் சேமித்துக் காய வைக்கும் களங்களில் ஒன்றைச் சுற்றி நடந்து (அருள்வளம் வேண்டி) பிரார்த் தனை செய்தார்கள். பிறகு மற்றொரு களத்தையும் சுற்றி நடந்தார்கள். (பிறகு அருள்வளம் வேண்டி பிரார்த்தனை செய்தார்கள்) பிறகு அதன் அருகில் அமர்ந்துகொண்டு, “அதை வெளியே எடுங்கள்” என்று சொன்னார்கள். கடன்காரர்களுக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடுத்தார்கள். அவர்களுக்குக் கொடுத்த அதே அளவுக்கு அது மீதமாகிவிட்டது.92 3581 அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: திண்ணைத் தோழர்கள்93 ஏழைகளாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை, “எவரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ, அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை (தம்முடன்) அழைத்துச் செல்லட்டும். எவரிடம் நான்கு பேருக்கான உணவு இருக்கின்றதோ அவர் தம்முடன் ஐந்தாமவரையும் ஆறாமவரை யும் அழைத்துச் செல்லட்டும்” என்று கூறினார்கள். அல்லது இதைப் போன்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மூன்று பேரை அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்துப் பேருடன் நடந்தார்கள். (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் மூன்று பேரை அழைத்து வர, அப்போது வீட்டில் நானும் (அப்துர் ரஹ்மான்), என் தந்தையும் (அபூபக்ர்), என் தாயும் (உம்மு ரூமான்), எங்கள் வீட்டிற்கும், (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்துவந்த பணிப்பெண்ணும்தான் இருந்தோம். “என் மனைவியும்...' என்று அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்களா என்பது எனக்குத் தெரியாது (சந்தேகமாக இருக்கிறது)- என அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு) நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு (நபியவர்களுடன்) இஷா தொழுகை தொழும்வரை அவர்களிடம் தங்கினார்கள். பிறகு (தொழுகையிலிருந்து) திரும்பிவந்து நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு அருந்தும்வரை (அங்கேயே) தங்கியிருந் தார்கள். (இவ்வாறு) இரவிலிருந்து அல்லாஹ் நாடிய ஒரு பகுதி கழிந்தபிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம் வீட்டிற்கு) வந்தார்கள். அவர்களுடைய மனைவி அவர்களி டம் உங்கள் விருந்தாளிகளை- அல்லது உங்கள் விருந்தாளியை- உபசரிக்க வராமல் தாமதமானதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “விருந்தினருக்கு நீ இரவு உணவை அளித்தாயா?” என்று கேட்டார் கள். அதற்கு அவர்கள், “நீங்கள் வரும் வரை உண்ண முடியாதென்று அவர்கள் மறுத்துவிட்டார்கள்; (நம் வீட்டார்) அவர்களுக்குமுன் உணவை வைத்து உண்ணும்படி கூறியும் அவர்கள் (உண்ண மறுத்து) அவர்களைச் சும்மாயிருக்கச் செய்துவிட்டனர்” என்று பதிலளித்தார்கள். (என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் விருந்தாளிகளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று என்னைக் கண்டிப்பார்கள் என்றஞ்சி) நான் சென்று ஒளிந்துகொண்டேன். அவர்கள், “தடியா!!” (என்று கோபத்துடன்) அழைத்து, “உன் மூக்கறுந்துபோக!' என்று திட்டினார்கள். (தோழர்களை நோக்கி,) “நீங்கள் உண்ணுங் கள்” என்று கூறிவிட்டு (தம் வீட்டாரை நோக்கி, “என்னை எதிர்பார்த்துத்தானே இவ்வளவு தாமதம் செய்தீர்கள்!) நான் ஒருபோதும் இதை உண்ணமாட்டேன்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் ஒரு கவளத்தை எடுக்கும்போதெல்லாம் அதன் கீழ்ப் பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகிப் பெருகிக்கொண்டே வந்தது. இறுதியில் அவர்கள் வ”ôர உண்டனர். அப்போது அந்த உணவு முன்பிருந்ததை விட அதிகமாகிவிட்டிருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள் அதைப் பார்த்தார்கள். அப்போது அது முன்பிருந்த அளவு, அல்லது அதைவிட அதிகமாகத் தென்பட்டது. உடனே அவர்கள் தம் துணைவியாரிடம் “பனூ ஃபிராஸ் குலத்தாரின் சகோதரியே! (என்ன இது?)” என்று கேட்க அவர்கள், “என் கண் குளிர்ச்சியின் மீதாணையாக! இந்த உணவு மூன்று மடங்கு அதிகமாகி விட்டிருக்கிறது” என்று சொன்னார்கள். அதிலிருந்து அபூபக்ர் (ரலி) அவர்களும் உண்டார்கள். மேலும், “(நான் ஒருபோதும் உண்ண மாட்டேன் என்று என்னைச் சத்தியம் செய்யவைத்தது) ஷைத்தான்தான்” என்று சொன்னார்கள். பிறகு அதிலிருந்து (மேலும்) ஒரு கவளம் உண்டார்கள். பிறகு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றார்கள். பிறகு, அது அவர்களிடம் இருக்கலாயிற்று. எங்களுக்கும் ஒரு சமுதாயத்தாருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் இருந்துவந்தது. ஒப்பந்தக் காலம் முடிவடைந்துவிட்டது. (இனி அவர்கள் போருக்கு வந்தால், அவர்களை எதிர்கொள்வதற்காக,) நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பன்னிரண்டு பேராகப் பிரித்து ஒவ்வொருவரிடமும் சில படை வீரர்களை ஒப்படைத்தார்கள். ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். எனினும், நபி (ஸல்) அவர்கள் படையினருடன் (அந்த உணவிலிருந்து) அவர்களுடைய பங்கு (உணவு)தனையும் கொடுத்தனுப்பி னார்கள். அவர்கள் அனைவரும் (அதிலிருந்து) உண்டார்கள்.94 ஸஹீஹ‚ல் புகாரீயின் மற்றொரு பிரதியில், (“எங்களைப் பன்னிரண்டு பேராகப் பிரித்து” என்பதற்குப் பதிலாக,) “எங்களில் பன்னிரண்டு பேரைத் தளபதிகளாக்கி” என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் மதீனாவாசிகளைப் பஞ்சம் பீடித்தது. (அந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜுமுஆ நாளில் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்த போது ஒரு (நாட்டுப்புற) மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் அழிந்துவிட்டன; ஆடுகளும் அழிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் நமக்கு மழை பொழிவிக்கட்டும்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், தமது கையை உயர்த்திப் பிரார்த்தனை செய்தார்கள். அப்போது, வானம் (மேகங்கள் இல்லா மல்) கண்ணாடியைப் போன்றிருந்தது. (நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தவுடன்) காற்று ஒன்று வேகமாக வீசி மேகக் கூட்டத்தைத் தோற்றுவித்தது. பிறகு, அந்த மேகக் கூட்டம் ஒன்றுதிரண்டது. பிறகு, வானம் மழையைப் பொழிந்தது. நாங்கள் தண்ணீரில் மூழ்கியபடி (பள்ளிவாசலிலிருந்து) வெளியே வந்து எங்கள் இல்லங் களை அடைந்தோம். அடுத்த ஜுமுஆ (நாள்)வரை எங்களுக்கு மழை பொழிந்து கொண்டேயிருந்தது. ஆகவே, (மழை பெய்விக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்கச் சொன்ன) அந்த மனிதர்- அல்லது வேறொரு மனிதர்- நபி (ஸல்) அவர்கள் முன்னால் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! (அடை மழையின் காரணத்தால்) வீடுகள் இடிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் மழையை நிறுத்தி விடட்டும்” என்று சொன்னார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் புன்னகை புரிந்தவாறு, “(இறைவா!) எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழிவிப்பாயாக! எங்கள்மீது (எங்களுக்குக் கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே!” என்று பிரார்த்தித்தார்கள். பின்னர் நான் மேகத்தை நோக்கினேன். அது (பல துண்டு களாகப்) பிரிந்து மதீனாவைச் சுற்றிலும் ஒரு கிரீடத்தைப் போல் வளையமிட்டி ருந்தது. இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.95 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்துக் கொண்ட பின்னால் அதற்கு மாறிவிட்டார் கள். ஆகவே, (நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப் பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே நபி (ஸல்) அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன்மீது தமது கையை வைத்து (பரிவுடன்) வருடிக்கொடுத்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு மரம்- அல்லது பேரீச்சமரத்தின்- (அடிப்பாகத்தின்) மீது சாய்ந்தபடி (உரையாற்றிய வண்ணம்) நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது ஓர் அன்சாரி பெண்மணி- அல்லது ஓர் அன்சாரி தோழர்- “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஒரு சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்து தரலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)” என்று பதிலளித் தார்கள். அவ்வாறே அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் சொற்பொழிவு மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள். ஜுமுஆ நாள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்திட) சொற்பொழிவு மேடைக்குச் சென்றார்கள். உடனே, அந்தப் பேரீச்ச மரக்கட்டை குழந்தையைப் போல் அழலாயிற்று. பிறகு நபி (ஸல்) அவர்கள் இறங்கிச் சென்று அதைத் தம்மோடு சேர்த்து அணைத்துக்கொண் டார்கள். அது அமைதிப்படுத்தப்படும் குழந்தையைப்போல் தேம்பிய(படி அமைதியாகிவிட்ட)து. நபி (ஸல்) அவர்கள், “தன்மீது (இருந்தபடி உரை நிகழ்த்தும் போது) அது கேட்டுக்கொண்டிருந்த நல்லுபதேசத்தை நினைத்து (“இப்போது நம்மீது அப்படி உபதேச உரைகள் நிகழ்த் தப்படுவதில்லையே' என்று ஏங்கித்தான்) இது அழுதுகொண்டிருந்தது” என்று சொன்னார்கள்.96 அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின்) பள்ளி வாசலுக்குப் பேரீச்ச மரத்தின் அடித்தண்டு களை (தூண் கழிகளாகப்) பயன்படுத்திக் கூரை அமைக்கப்பட்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியபோது அவற்றில் ஒன்றின் மீது சாய்ந்துகொண்டு நிற்பது வழக்கம். அவர்களுக்காக ஒரு சொற்பொழிவு மேடை (மிம்பர்) தயாரிக்கப்பட்டபோது அதன் மீது அவர்கள் (உரை நிகழ்த்திட) நின்றுகொண்டார்கள். அப்போது அது, (பத்து மாத) சினை ஒட்டகத்தைப் போன்று முனகுவதை நாங்கள் செவியுற்றோம். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் (இறங்கி) வந்து தமது கரத்தை அதன்மீது (அமைதிப்படுத்துவதற்காக) வைத்தார்கள். உடனே அது அமைதியடைந்தது.97 அத்தியாயம் :
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “உங்களில் எவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இனி தலை தூக்க விருக்கும் ஃபித்னா) குழப்பத்தைப் பற்றிச் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “அதைக் கூறுங்கள், நீங்கள்தான் (நபி (ஸல்) அவர்களிடம்) துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக்கூடியவர் களாய்) இருந்தீர்கள்” என்று சொன் னார்கள். நான், “ஒரு மனிதன் தன் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்கள்மீது அளவுகடந்து நேசம் வைப்பதன் மூலமும்), தனது செல்வம் விஷயத்தில் (அது இறைவழிபாட்டிலிருந்து கவனத்தைத் திருப்புவதன் மூலமும்), தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறை வைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, தர்மம், நன்மை புரியும்படி கட்டளையிட்டு, தீமையிலிருந்து தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” எனப் பதில் கூறினேன். உமர் (ரலி) அவர்கள், “நான் (“சோதனை' என்னும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதைப் பற்றிக் கேட்கவில்லை. கடல் அலையைப் போல அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட குழப்பம் என்னும் பொருள் கொண்ட ஃபித்னா)வைப் பற்றியே கேட்கிறேன்” என்று சொன்னார்கள். நான், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. (உங்கள் காலத்தில் அவற்றில் எதுவும் தலைதூக்கப் போவதில்லை.) உங்களுக்கும் அவற்றுக்குமிடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது” எனக் கூறினேன். உடனே உமர் (ரலி) அவர்கள், “அந்தக் கதவு திறக்கப்படுமா! அல்லது உடைக்கப் படுமா?” என்று கேட்டார்கள். நான், “அது உடைக்கப்படும்” என்று பதில் சொன்னேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அது (உடைக்கப்பட்டுவிட்டால்) பின்னர் (மறுமை நாள்வரை) மூடப்படாமலிருக் கவே அதிகம் வாய்ப்பு உண்டு” என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:) நாங்கள் (ஹுதைஃபா (ரலி) அவர்களிடம்,) “உமர் (ரலி) அவர்கள் அந்தக் கதவு எதுவென்று அறிந்திருந்தார்களா?” என்று கேட்டோம். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “ஆம், பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதுபோல் உமர் (ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்தேன்” என்று பதிலளித்தார்கள். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே, மஸ்ரூக் என்பாரை அவரிடம் கேட்கச் சொன்னோம். அவர் கேட்டதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், “(அந்தக் கதவு) உமர் (ரலி) அவர்கள் தான்” என்று பதில் சொன்னார்கள்.98 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது, அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது. நீங்கள் (அரபியரல்லா) அந்நியர்களில் “கூஸ்'வாசிகளுடனும் “கிர்மான்'வாசிகளு டனும் போரிடாத வரை உலக முடிவுநாள் வராது. அவர்கள் சிவந்த முகங்களும் சப்பையான மூக்குகளும் சிறிய கண்களும் உடையவர்கள். அவர்களுடைய முகங்கள் தோலால் மூடப்பட்ட (அகன்ற) கேடயங் களைப் போன்றிருக்கும். அவர்கள் முடியாலான காலணிகளை அணிந்திருப் பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர் யஹ்யா (ரஹ்) அவர்களைப் போன்றே மற்றவர்களும் இதே நபிமொழியை அப்துர் ரஸ்ஸாக் பின் ஹம்மாம் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.102 அத்தியாயம் :
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்றோம். அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மூன்றாண்டுகள் (மிக நெருக்கமான) தோழமை கொண்டிருந்தேன்.103 என் வாழ்நாளிலேயே அந்த மூன்றாண்டுகளில் ஆசைப்பட்டதைவிட அதிகமாக நபிமொழிகளை நினைவில் வைக்க நான் வேறெப்போதும் ஆசைப்பட்டதில்லை” என்று சொல்லிவிட்டு, தம் கையால் இப்படிச் சைகை செய்து, “நபி (ஸல்) அவர்கள், “உலக இறுதிநாள் வருவதற்கு முன்னால் நீங்கள் முடியாலான காலணி அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தாரோடு போரிடுவீர்கள். அவர்கள் வெட்ட வெளியில் தோன்றி உங்களுடன் போராடு வார்கள்' என்று கூற நான் கேட்டேன்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், “அவர்கள் பாலை வெளியில் வசிப்பவர்கள்” என்று ஒருமுறை கூறினார்கள்.104 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறுதித் தீர்ப்பு நாளுக்கு முன்பாக நீங்கள் முடியாலான காலணிகளை அணியும் ஒரு சமுதாயத்தாருடன் போர் புரிவீர்கள். மேலும், தோலால் மூடிய (அகன்ற) கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் போர் புரிவீர்கள். இதை அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.105 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்கள் உங்களுடன் போர் புரிவார் கள். அவர்கள்மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப் படும். எந்த அளவுக்கென்றால், கல் (பாறை)கூட, “முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்துகொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு” என்று கூறும்.106 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் போருக்குச் செல்கின்ற காலம் ஒன்று வரும். அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர் எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று வினவப்படும். அவர்கள், “ஆம்” என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப் படும். பிறகு அவர்கள் அறப்போர் புரிவார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதருடன் தோழமை கொண்டவர்களுடன் தோழமை கொண்ட வர்கள் எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அவர்கள், “ஆம், இருக்கிறார்கள்” என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.107 இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தமது) வறுமை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ “அல்ஹீரா' வைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார் கள்.108 “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப் பட்டிருக்கிறது” என்று பதிலளித்தேன். அவர்கள், “நீர் நீண்ட நாள் வாழ்ந்தால், நிச்சயம் பார்ப்பீர். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவைச் சுற்றுவதற்காகப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அஞ்சமாட்டாள்” என்று சொன்னார்கள். -நான் என் மனத்திற்குள், “அப்படி யென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட “தய்யி' குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்றுவிட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன்.-109 நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), “நீர் நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பீர்” என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப்படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ்தான் (தோற்கடிக்கப்படுவார்)” என்று பதிலளித் தார்கள். (மேலும் சொன்னார்கள்:) உமக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தமது கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக்கொண்டு அதைப் பெற்றுக்கொள்பவரைத் தேடியலைவார். ஆனால், அ(ந்தத் தர்மத்)தை ஏற்கும் எவரையும் அவர் காணமாட்டார். இதையும் நீர் பார்ப்பீர். உங்களில் ஒருவர் அல்லாஹ் வைச் சந்திக்கும் (மறுமை) நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழி பெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், “நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே, அவர் உனக்கு (என் செய்தியை) எடுத்துரைக்க வில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம், (எடுத்துரைத்தார்)” என்று பதிலளிப்பார். பிறகு அல்லாஹ், “உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப்படுத்தவில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம் (உண்மைதான்)” என்பார். பிறகு அவர் தம் வலப் பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். தம் இடப் பக்கம் பார்ப்பார்; நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து (உங்களைக்) காத்துக்கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டுகூட இல்லையோ அவர் இன்சொல் ஒன்றைக் கொண்டாவது (நரகத்திóருந்து தம்மைக் காத்துக்கொள்ளட்டும்)” என்று சொல்லக் கேட்டேன். மேலும், “ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி “அல்ஹீரா'விலிருந்து கஅபாவைச் சுற்றுவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்.110 (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.111 நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் “ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கை நிறைய அள்ளிக்கொண்டு அதைத் தர்மமாக ஏற்றுக்கொள்பவரைத் தேடியலை வதை நீர் பார்ப்பீர்” என்று அபுல்காசிம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் (நடைமுறையில்) காண் பீர்கள்.112 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் “நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தேன்” என்று ஹதீஸ் தொடங்கு கிறது.113 அத்தியாயம் :
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (இறுதித் தொழுகை) தொழுவிப்பதைப் போன்று உஹுத் போர் உயிர்த் தியாகிகளுக்காக (இறுதித் தொழுகை) தொழுவித்தார்கள்.114 பிறகு, சொற்பொழிவு மேடைக்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடு களைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே (ஹவ்ளுல் கவ்ஸர் எனும் சொர்க்கத் தடாகத்திற்குச்) செல்கின்றேன். நான் (அப்போது) உங்களுக்குச் சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத் தைக் காண்கிறேன். மேலும், எனக்குப் பூமியின் கருவூலங்களின் திறவு கோல்கள் வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும், நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டிபோடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.115 அத்தியாயம் :
உசாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மதீனாவின்) கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி) கூறினார்கள்: “நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? உங்கள் வீடுகள் நெடுகிலும் மழைத்துளிகள் விழுமிடங்களில் குழப்பங்கள் விளையப்போவதை நான் பார்க்கின்றேன்” என்று சொன்னார்கள்.116 அத்தியாயம் :
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுங்கியபடி வந்து, “அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத் தால் அரபியருக்குப் பேரழிவு நேரவிருக் கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிóருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, தம் பெருவிரலாலும் அதற்கு அடுத்துள்ள விரலாலும் வளையமிட்டுக் காட்டினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடையே நல்லவர்கள் (வாழ்ந்துகொண்டு) இருக்க (இறை தண்டனை இறங்கி) நாங்கள் அழிந்து போவோமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! பாவங்கள் அதிகரித்து விட்டால் (தீயவர்களுடன் நல்லவர்களும் சேர்ந்தே அழிக்கப்படுவார்கள்)” என்று பதில் கூறினார்கள்.117 அத்தியாயம் :
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் (தூக்கத்திலிருந்து) விழித்தெழுந்து, “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்!) எவ்வளவு பெரும் கருவூலங்களெல்லாம் (வானிலிருந்து பூமிக்கு) இறக்கியருளப்பட்டிருக்கின்றன! எவ்வளவு பெரிய குழப்பங்கள் எல்லாம் (பூமிக்கு) அனுப்பப்பட்டிருக்கின்றன!” என்று சொன் னார்கள்.118 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீ ஸஅஸஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், “நான் உங்களை ஆடுகளை விரும்பக்கூடியவராகவும் அதை வைத்துப் பராமரிப்பவராகவும் பார்க்கிறேன். ஆகவே, அவற்றைச் சரிவரப் பராமரித்துச் சீராக வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை மேய்ப்பவர்களையும் சரிவரப் பராமரியுங் கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கள்மீது ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமின் செல்வத்திலேயே சிறந்ததாக ஆடுகள்தான் இருக்கும். குழப்பங்கள் விளையும் நேரங்களில் அவற்றிலிருந்து தமது மார்க்கத்தைப் பாதுகாத்துக்கொள்ள வெருண்டோடியபடி அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு அவர் மழை பொழியும் இடங்களில் ஒன்றான மலையுச்சிக்குச் சென்றுவிடுவார்' என்று சொன்னதை நான் கேட்டேன்” என்று கூறினார்கள்.119 அத்தியாயம் :
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை,) “விரைவில் (அன்சாரிகளான) உங்களைவிடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில் அல்லது வெற்றி கொள்ளப்படும் நாட்டின் நிதிகளைப் பங்கிடுவதில்) முன்னுரிமை வழங்கப்படும். மேலும் நீங்கள் வெறுக்கின்ற சில காரியங்கள் நடக்கும்.” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடு கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள்மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக் குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தக் குறைஷி குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்” என்று கூறினார்கள். மக்கள், “(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார் கள். நபி (ஸல்) அவர்கள், “அவர்களிட மிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.122 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
சயீத் அல்உமவி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம் அவர்களுடனும் அபூஹுரைரா (ரலி) அவர்களுடனும் இருந்தேன். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், உண்மையாளரும் உண்மையே உரைக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள் “குறைஷியரில் சில இளைஞர்க(ளான ஆட்சியாளர்க)ளின் கைகளால்தான் எனது (இன்றைய) சமுதாயத்தின் அழிவு உண்டு” எனக் கூறக் கேட்டேன் என்றார்கள். உடனே மர்வான், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “இளைஞர்களா?” என்று கேட்க, அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் நான் அவர்களை, “இன்னாரின் மக்கள், இன்னாரின் மக்கள்' என்று தனித்தனியே பெயர் குறிப்பிட்டுச் சொல்வேன்” என்று பதிலளித்தார்கள்.123 அத்தியாயம் :
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால்தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தார்கள்.124 நான், “இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்” என்று பதிலளித்தார்கள்.125 நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு சமுதாயத்தார் எனது நல்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழிகாட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள்.126 நான், “அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களுடைய அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.127 நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். “நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களுடைய தலைவரையும் (இறுகப்) பற்றிக்கொள்” என்று பதில் சொன்னார்கள். அதற்கு நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்... (என்ன செய்வது)?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கிவிடு; ஒரு மரத்தின் வேரைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக்கொண்டாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தோழர்கள் (நன்மை தரும் செயல் களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி (ஸல்) அவர்களிடமிருந்து) நன்மையைக் கற்றுக்கொண்டார்கள். நான் (தவிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரே வாதத்தை முன்வைக்கின்ற இரு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாத வரை யுகமுடிவு நாள் வராது.128 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாத வரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக் களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான “தஜ்ஜால்கள்' ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை யுகமுடிவு நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.129 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருந்த போது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது “பனூ தமீம்' குலத்தைச் சேர்ந்த “துல்குவைஸிரா' என்னும் மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான்! நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லை யென்றால் வேறு யார்தான் நீதியுடன் நடந்துகொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்துவிடு வாய்” என்று பதிலளித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள்.130 அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவரை விட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களுடைய நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப்பார்த்து உங்களின் தொழுகையையும் உங்களின் நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவுக்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாண் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்பின் இறகு பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன்மீது படாதவாறு) முந்திக் கொண்டிருக்கும்.131 அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவருடைய இரு கொடுங்கைகளில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்- அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக் கும்- அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்” என்று சொன்னார்கள். நான் இந்த நபிமொழியை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று சாட்சியம் அளிக்கின்றேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ (ரலி) அவர்கள் போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்கள் அடையாளமாகக் கூறிய) அந்த மனிதரைக் கொண்டுவரும்படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டுவரப்பட்டார். நபி (ஸல்) அவர்களின் வர்ணனையின்படியே அவர் இருப்பதை நான் பார்த்தேன்.132 அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக் கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது, நபி அவர்கள்மீது புனைந்து சொல்வதைவிட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்).133 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச்சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர் களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.134 அத்தியாயம் :
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்துகொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக் கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, இரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலைமீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது சதையையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்துவிடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும்கூட அவரை அவரது மார்க்கத் திóருந்து பிறழச்செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத் தப்படும். எந்த அளவுக்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆ'விலிருந்து “ஹளரமவ்த்'வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள்தான் (கொடுமை தாளாமல் பொறுமை இழந்து) அவசரப்படுகிறீர்கள்” என்று சொன் னார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள்.135 அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவரைப் பற்றிய செய்தியை அறிந்துகொண்டு தங்களிடம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்றார். ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தம் வீட்டில் தலையை (கவலையுடன்) கவிழ்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டார். “உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவர், “(பெரும்) தீங்கு ஒன்று நேர்ந்துவிட்டது. நான் நபி (ஸல்) அவர்களின் குரலைவிட எனது குரலை உயர்த்தி(ப் பேசி)வந்தேன். ஆகவே, என் நற்செயல்கள் வீணாகிவிட்டன. நான் நரகவாசிகளில் ஒருவனாகிவிட்டேன்” என்று பதிலளித்தார். உடனே, அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் இப்படியெல்லாம் சொன்னார் என்று தெரிவித்தார். அறிவிப்பாளர் மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் (தம் தந்தை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிக் கிறார்கள்: அடுத்த முறை அந்த மனிதர் (பின்வரும்) மாபெரும் நற்செய்தியுடன் திரும்பிச் சென்றார். (அதாவது அம்மனிதரி டம்) நபி (ஸல்) அவர்கள் “நீ ஸாபித் பின் கைஸிடம் சென்று, “நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்லர்; மாறாக, சொர்க்கவாசிகளில் ஒருவரே' என்று சொல்” எனக் கூறி னார்கள்.136 அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள்) தமது வீட்டில் ஊர்திப் பிராணி (குதிரை) இருக்க, (திருக்குர்ஆனின்) “அல்கஹ்ஃப்' (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து)விட்டார். உடனே மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும்நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்கள்மீது) இறங்கிய அமைதி(யின் சின்னம்) ஆகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் என் தந்தை (ஆஸிப் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள்) இடம் அவர்களது வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஓர் ஒட்டகச் சேணத்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் என் தந்தை ஆஸிப் (ரலி) அவர்களிடம், “இதை என்னுடன் சுமந்துவர உங்கள் மகனை அனுப்புங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். ஆகவே, நான் அவர்களுடன் அதைச் சுமந்து சென்றேன். என் தந்தையார் அதன் விலையைப் பெற்றுக்கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, “அபூபக்ரே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து) சென்றபோது இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆம்! நாங்கள் (மூன்று நாள் குகையில் தங்கியிருந்துவிட்டு அங்கிருந்து வெளியேறி) எங்களுடைய (அந்த) இரவும் அடுத்த நாளின் சிறிது நேரமும் பயணம் சென்றோம். இறுதியில் நண்பகல் நேரம் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி அது காலியாகிவிட்டது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. ஆகவே, நாங்கள் அங்கு தங்கினோம். நான் நபி (ஸல்) அவர்களுக்கு என் கையால் ஓரிடத்தை, அதன்மீது அவர்கள் உறங்குவதற்காகச் சமன்படுத்தித் தந்தேன். மேலும், அதன் மீது ஒரு தோலை விரித்தேன். அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்து வருகிறேன்; நீங்கள் (கவலையில்லாமல்) உறங்குங்கள்” என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலு முள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் (நாங்கள் தங்கியுள்ள அந்தப்) பாறையை நோக்கி நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியதைப் போன்றே அவனும் (ஓய்வெடுக்க) விரும்பியவனாக வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது “நீ யாருடைய பணியாள்? இளைஞனே!” என்று கேட்டேன். அவன், “மதீனாவாசிகளில் ஒரு மனிதரின் (பணியாள்)” என்று- அல்லது மக்காவாசி களில் ஒருவருடைய (பணியாள்) என்று- பதிலளித்தான். நான், “உன் ஆடுகளிடம் பால் ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். அவன், “ஆம் (இருக்கின்றது)” என்று சொன்னான். நான், “நீ (எங்களுக்காகப்) பால் கறப்பாயா?” என்று கேட்டேன். அவன், “சரி (கறந்து தருகிறேன்)” என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், “(ஆட்டின்) மடியை (அதில் படிந்துள்ள) மண்ணையும் முடியையும் தூசுகளையும் நீக்கி உதறிக்கொள்” என்று சொன்னேன். -அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தம் இரு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக் காட்டுபவர்களாக பராஉ (ரலி) அவர்களை நான் கண்டேன்.- அவன், உட்புறம் கடையப்பட்ட ஒரு மரப் பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் தண்ணீருள்ள ஒரு தோல் பாத்திரம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து நீரருந்தி, தாகம் தணித்துக்கொண்டு, அங்கத் தூய்மை செய்துகொள்வதற்காக நான் அதை அவர்களுடன் சுமந்து வந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்) அவர்களிடம் நான் சென்ற நேரமும் அவர்கள் (தூக்கத்திலிருந்து) எழுந்த நேரமும் ஒன்றாக அமைந்து விட்டது. நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப்பாத்திரத்திலிருந்த) பாலில் ஊற்றினேன். அதன் அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை இவ்வாறு ஊற்றினேன். பிறகு நான், “பருகுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அவர்கள் நான் திருப்தியடையும்வரை பருகி னார்கள்.137 பிறகு, “(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (வந்துவிட்டது)” என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்தபிறகு நாங்கள் பயணமானோம். எங்களை சுராக்கா பின் மாலிக் பின்தொடர்ந்து வந்தார். (அப்போது அவர் இஸ்லாத்தைத் தழுவியிருக்கவில்லை.) நான், “(எதிரிகள்) நம்மிடம் வந்துவிட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் சுராக்காவுக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே சுராக்காவுடன் அவரது குதிரை தன் வயிறுவரை பூமியில் புதைந்துவிட்டது. அறிவிப்பாளர் ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்: “பூமியின் ஓர் இறுகிய பகுதியில்” என்று (அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாக) நான் கருதுகிறேன். உடனே சுராக்கா, “நீங்கள் இருவரும் எனக்கு எதிராகப் பிரார்த்தித்திருப்பதாக நான் கருதுகிறேன். ஆகவே, எனக்காக (இந்த வேதனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நான் உங்களைத் தேடி வருபவர்களை உங்களைவிட்டுத் திசை திருப்பிவிடுவேன்” என்று சொன்னார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் சுராக் காவுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அவர் (அந்த வேதனையிலிருந்து) தப்பித்தார். அப்போதிருந்து அவர் தம்மைச் சந்திப்பவர் எவராயினும் அவரி டம், “உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை” என்று கூறலானார். மேலும் (எங்களைத் தேடி வந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித் தாலும் திருப்பியனுப்பிக்கொண்டேயிருந் தார். அவர் எங்களுக்குத் தந்த வாக்குறு தியை நிறைவேற்றிவிட்டார். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால், “கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்” என்று கூறுவார்கள். (தமது அந்த வழக்கப்படியே) நபி (ஸல்) அவர்கள் அக்கிராமவாசியிடம், “கவலை வேண்டாம். இறைவன் நாடினால் (இது) உங்களைத் தூய்மைப்படுத்தும்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) அந்தக் கிராமவாசி, “நான் தூய்மை பெற்றுவிடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகிக் கொதிக்கின்ற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் ஆம். (அப்படித்தான் நடக்கும்.)” என்று கூறினார்கள்.138 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஒரு மனிதர் கிறித்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். “அல்பகரா' மற்றும் “ஆலு இம்ரான்' ஆகிய அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத அறிவிப்பை) எழுதிவந்தார். அவர் (மீண்டும்) கிறித்தவ ராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) “முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்ததைத் தவிர வேறெதுவும் தெரியாது” என்று சொல்லிவந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தை அளித்தான். அவரை மக்கள் புதைத்துவிட்டனர். ஆனால் (மறுநாள்) அவரை பூமி துப்பிவிட்டிருந்தது. உடனே (கிறித்தவர்கள்), “இது முஹம்மத் மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களைவிட்டு ஓடிவந்துவிட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள்” என்று கூறினர். ஆகவே, அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு புதைகுழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பிவிட்டிருந்தது. அப்போதும், “இது முஹம்மத் மற்றும் அவருடைய தோழர்களின் வேலைதான். நம் தோழர் அவர்களைவிட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்” என்று கூறினர். மீண்டும் அவர்களால் முடிந்த அளவுக்கு மிக ஆழமான குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பிவிட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல (இறைவனின் தண்டனைதான்) என்று புரிந்துகொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டு விட்டனர். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தற்போதுள்ள பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா (குஸ்ரூ) அழிந்துவிட்டால் அவருக் குப்பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். (தற்போதுள்ள கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அவருக்குப்பின் வேறொரு சீசர் வர மாட்டார். முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (கிஸ்ரா, சீசர்) இருவருடைய கருவூலங்களையும் இறைவழியில் நீங்கள் செலவழிப்பீர்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.139 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தற்போதுள்ள) கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப்பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார் -அறிவிப்பாளர் (முந்தைய ஹதீஸைப் போலவே) கூறிவிட்டு(த் தொடர்ந்து) சொன்னார்- அவ்விருவரின் (கிஸ்ரா மற்றும் சீசரின்) கருவூலங்களையும் நீங்கள் இறைவழியில் செலவழிப்பீர்கள். இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.140 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவிóருந்து புலம் பெயர்ந்து பேரீச்சந் தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி “யமாமா' அல்லது “ஹஜர்' ஆகத்தான் இருக்கும் என்று நான் எண்ணினேன்.145 ஆனால், அது யஸ்ரிப்-மதீனாவாகி விட்டது. மேலும், இந்த எனது கனவில் நான் (எனது) வாள் ஒன்றை அசைக்க, அதன் முனை உடைந்துவிடுவதாகக் கண்டேன். அது உஹுத் போரின்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்தபடியே மீண்டும் (ஒட்டிக் கொண்டு) அழகாகிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுத் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில காளை மாடுகளைப் பார்த்தேன். (உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் அளித்த தகுதி (அவர்கள் இந்த உலகில் இருந்த நிலையைவிட அவர்களுக்குச்) சிறந்ததாகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுத் போரின்போது கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பவை யாகும். நன்மை என்பது அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ர் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நமது வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எப்போதும் என்னைத் தம் அருகிலேயே வைத்திருப்பார்கள். ஆகவே, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எங்களுக்கு அவரைப் போன்ற மகன்கள் (பலர்) இருக்கிறார்களே (அவர்களையெல்லாம் நீங்கள் உங்கள் அருகில் வைத்துக் கொள்வதில்லையே ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அது உங்களுக்குத் தெரிகின்ற (அவர் ஒரு கல்வியாளர் என்ற) காரணத்தால்தான்” என்று பதிலளித்தார்கள். பிறகு என்னிடம், “அல்லாஹ்வின் உதவியும் (அவன் தரும்) வெற்றியும் வந்துவிடும்போது' என்று தொடங்கும் (110:1-வது) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், “அது “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாள் முடியப்போகிறது' என்று அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்த வசனமாகும்” என்று பதிலளித்தேன். உடனே உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் அறிவதையே அதிலிருந்து நானும் அறிகிறேன்” என்று சொன்னார்கள்.147 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்கள் ஒரு போர்வை யுடன் வெளியே வந்தார்கள். அப்போது தமது தலையில் கறுப்புக் கட்டு ஒன்றைப் போட்டிருந்தார்கள். சொற்பொழிவு மேடை மீதமர்ந்து அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து பிறகு, “இறை வாழ்த்துக்குப்பின் கூறுகிறேன்: (இஸ்லாத்தில் இணையும்) மக்கள், (எண்ணிக்கையில்) அதிக மாவார்கள். (ஆனால், இறைமார்க்கத்திற்கு) உதவி புரிபவர்கள் (அன்சார்) குறைந்து போய்விடுவார்கள். எந்த அளவுக்கென்றால் உணவில் உப்பிருக்கும் அளவில்தான் (உதவி செய்பவர்கள்) மக்களிடையே இருப்பார்கள். உங்களில் ஒருவர் சிலருக்குத் தீங்கையும் மற்றவர்களுக்கு நன்மையும் விளைவிக்கக்கூடிய ஓர் அதிகாரம் எதையும் பெற்றால் நன்மை செய்பவரிடமிருந்து அதை ஏற்றுக் கொண்டு தீமை செய்பவரை மன்னித்து விடட்டும்” என்று சொன்னார்கள். அது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்த கடைசி அவையாக இருந்தது.148 அத்தியாயம் :
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் (தம் பேரப்பிள்ளை) ஹசன் (ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்து வந்து அவருடனேயே சொற்பொழிவு மேடையில் ஏறினார்கள். பிறகு, “இந்த என் மகன், தலைவர் ஆவார். அல்லாஹ் இவர் வாயிலாக முஸ்óம் களின் இரு குழுவினரிடையே சமாதானம் செய்துவைக்கக்கூடும்” என்று சொன்னார்கள்.149 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஜஅஃபர் (ரலி) அவர்களும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் (மூத்தா போர்க்களத்தில்) கொல்லப்பட்டுவிட்ட செய்தி (மதீனாவுக்கு) வருவதற்கு முன்பே அதை நபி (ஸல்) அவர்கள் (இறை அறிவிப்பின் வாயிலாக அறிந்து மக்க ளுக்கு) அறிவித்தார்கள். அப்போது அவர் களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.150 அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: “(எனக்குத் திருமணமானபோது) உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கின்றனவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், “எங்களிடம் எப்படி அந்த விரிப்புகள் இருக்கும்?” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள். (பின்னர் ஒரு நாளில்) நான் (என் மனைவியான) அவரிடம், “எங்களை விட்டு உன் விரிப்புகளை அப்புறப்படுத்து” என்று கூறுவேன். அவள், “நபி (ஸல்) அவர்கள், “விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்' என்று கூறவில்லையா?” என்று கேட்பாள். “அப்படியானால் அவற்றை (அவ்வாறே) விட்டுவிடுகிறேன்” (என்று நான் கூறுவேன். அத்தியாயம் :)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் உம்ரா செய்யச் சென்றார்கள். (மக்காவில் இணைவைப்போரின் தலைவர்களில் ஒருவனான) உமய்யா பின் கலஃப் அபூஸஃப்வானிடம் தங்கினார்கள். உமய்யா (வியாபாரத்திற்காக) ஷாம் (சிரியா) நாட்டிற்கு மதீனா வழியாகச் செல்லும்போது சஅத் (ரலி) அவர்களிடம் தங்கு(ம் பழக்கம் உடையவன் ஆ)வான். உமய்யா, “நண்பகல் நேரம் வரும்வரை சற்றுக் காத்திருந்து, மக்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் (அந்த) நேரத்தில் நீங்கள் சென்று (கஅபாவை) சுற்றலாமே” என்று கேட்டான். அவ்வாறே, சஅத் (ரலி) அவர்கள் சுற்றிக்கொண்டிருந்தபோது அபூஜஹ்ல் வந்து, “கஅபாவைச் சுற்றுவது யார்?” என்று கேட்டான். சஅத் (ரலி) அவர்கள், “நான்தான் சஅத்” என்று கூறினார்கள். அதற்கு அபூஜஹ்ல், “(மதீனாவாசி களான) நீங்கள் முஹம்மதுக்கும் அவருடைய தோழர்களுக்கும் (மதீனாவில்) புகலிடம் கொடுத்திருக்க, இங்கே கஅபாவை நீ அச்சமின்றி சுற்றிக் கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டான். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “ஆம் (அதற்கென்ன?)” என்று கேட்டார்கள். அவ்விருவருக்குமிடையே (அதையொட்டி) சச்சரவும் வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனே உமய்யா, சஅத் (ரலி) அவர்களிடம், “அபுல்ஹகமைவிடக் குரலை உயர்த்தாதீர். ஏனெனில், அவர் இந்த (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்” என்று சொன்னான்.151 பிறகு சஅத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தைச் சுற்ற விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் (சிரியா) நாட்டிற்குச் செல்லும் வணிக வழியை நான் துண்டித்துவிடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது உமய்யா, சஅத் (ரலி) அவர்களிடம், “உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்” என்று சொல்லத் தொடங்கினான்- அவர்களைப் பேச விடாமல் தடுக்கலானான். ஆகவே, சஅத் (ரலி) அவர்கள் கோபமுற்று, “உமது வேலையைப் பாரும். (அபூஜஹ்லுக்கு வக்காலத்து வாங்காதீர்.) ஏனெனில், முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னைக் கொல்லவிருப்பதாகச் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்” என்று உமய்யாவிடம் சொன்னார்கள். அதற்கு அவன், “என்னையா (கொல்ல விருப்பதாகச் சொன்னார்)?” என்று கேட்டான். சஅத் (ரலி) அவர்கள், “ஆம் (உன்னைத்தான்)” என்று பதிலளித்தார்கள். அவன், “அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் பேசினால் பொய் பேசுவ தில்லை” என்று சொல்லிவிட்டு தம் மனைவியிடம் சென்று, “என்னிடம் என் யஸ்ரிப் (மதீனா) நகர தோழர் என்ன சொன்னார் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்க, அவள், “என்ன சொன்னார்?” என்று வினவினாள். “முஹம்மத் என்னைக் கொல்லவிருப்பதாகச் சொன்னதாக அவர் கூறினார்” என்று அவன் பதிலளித்தான். அவள், “அப்படியென்றால் (அது உண்மையாகத்தானிருக்கும்.) அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் பொய் சொல்வதில்லை” என்று சொன்னாள். மக்காவாசிகள் பத்ர் போருக்குப் புறப்பட்டுச் செல்ல, போருக்கு அழைப்பவர் வந்(து மக்களை அழைத்)தபோது உமய்யாவிடம் அவனுடைய மனைவி, “உம்முடைய யஸ்ரிப் நகரத் தோழர் சொன்னது உமக்கு நினைவில்லையா?” என்று கேட்டாள். ஆகவே, (பயத்தின் காரணத்தால்) அவன் போருக்குப் புறப்பட விரும்பவில்லை. அபூஜஹ்ல் அவனிடம், “நீ (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்களில் ஒருவன். ஆகவே (நீயே போரில் கலந்துகொள்ளாமல் போய்விட்டால் நன்றாக இருக்காது.) ஒரு நாளைக்கு அல்லது இரண்டு நாட்களுக்காவது போ(ய்க் கலந்துகொள்)” என்று சொன்னான். அவ்வாறே அவனும் (இரண்டு நாட்களுக்காகச்) சென்றான். (அப்படியே அவன் போர்க்களம்வரை சென்றுவிட, அங்கே) அவனை அல்லாஹ் கொன்றுவிட்டான். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (கனவில்) மக்களெல்லாரும் ஒரு திடóல் ஒன்றுதிரண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூபக்ர் எழுந்து (ஒரு கிணற்றிலிருந்து) ஒரு வாளி- அல்லது இரண்டு வாளிகள்- இறைத்தார். சிறிது நேரம் அவர் இறைத்தவுடன் சோர்வு தெரிந்தது.152 அவரை அல்லாஹ் மன்னிப் பானாக! பிறகு அதை உமர் எடுத்துக்கொள்ள, அது அவரின் கையில் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.)153 அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடிய புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தாகம்தீரத் தாங்களும் அருந்தி, தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர்நிலைய ருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைத்தனர். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அபூபக்ர், இரு வாளிகளை இறைத்தார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய தாக (ஒன்றா, இரண்டா என்ற சந்தேகமின்றி) அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். அத்தியாயம் :
அபூஉஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தபோது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் பேசத் தொடங்கிவிட்டார்கள். பிறகு எழுந்து (போய்)விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களி டம், “இவர் யார்?” என்று கேட்க, அவர்கள், “இது திஹ்யா (என்ற நபித்தோழர்)” என்று பதிலளித்தார்கள். (அப்போது அது ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான்” என்பது உம்மு சலமா (ரலி) அவர்களுக்குத் தெரியாது.) (பின்னர்) உம்மு சலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான், நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னதாகத் தமது உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும்வரை, வந்தவர் திஹ்யா அல்கல்பீ அவர்கள்தான் என்றே நினைத்திருந்தேன் (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்பது எனக்குத் தெரியவந்தது)” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் சுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களிடம், “யாரிடமிருந்து இதை நீங்கள் செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து (உங்கள் வேதமான) “தவ்ராத்'தில் என்ன காண்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் களை நாங்கள் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள். உடனே (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களைச் சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் “விபசாரிகளுக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்பட வேண்டும்' என்று கூறும் வசனத்தின் மீது தமது கையை வைத்து மறைத்துக்கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடு” என்று சொல்ல, அவர் தமது கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், “அப்துல்லாஹ் பின் சலாம் உண்மை சொன்னார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது” என்று சொன்னார்கள். உடனே, அவ்விருவரையும் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காகத் தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவள்மீது கவிழ்ந்து (மறைத்துக்)கொள்வதை நான் பார்த்தேன். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் (அற்புதச்) சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.154 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளிவீசிச் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்ற போது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும்வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றைவிட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.155 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) தம்மிடம் வரும்வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப் பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர் களாகவே இருப்பார்கள். இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடையூறு செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும். இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்க, அவர்களிடம் மாலிக் பின் யுகாமிர் (ரஹ்) அவர்கள், “(அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தும்) அவர்கள் ஷாம் தேசத்திலிருப்பார்கள்' என முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று சொன்னார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “இந்த மாலிக், “ஷாம் தேசத்தில் அவர்கள் இருப்பார்கள்' என முஆத் (ரலி) அவர்கள் சொல்ல தாம் கேட்டதாகக் கருதுகிறார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக்கப்பட்டிருக் கிறது. இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.157 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரைகளின் நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டுள்ளது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.158 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவு களைத் தருவதாகும்.) ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பளிக்கக்கூடிய தாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற் காக, அதனைப் பசுமையான ஒரு வெட்ட வெளியில்- அல்லது ஒரு தோட்டத்தில்- ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கின்ற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவுக்குப் பசும்புல் வெளியில் -அல்லது தோட்டத்தில்- மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கயிறு அறுந்து, அது ஓரிரண்டு முறை குதித்து (அல்லது ஓரிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதன் (குளம்பின்) சுவடுகளின் அளவுக்கும் அதன் கெட்டிச் சாணத்தின் அளவுக்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமல் இருந்தாலும் அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். இன்னொருவர் தம் தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளவும் அதைக் கட்டி வை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதன் பிடரியின் (அதன் விற்பனையின் வருமானத்திற்கான ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு (அவருடைய) இந்தக் குதிரை (வறுமையி óருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்து பராமரி)க்கின்றவன் ஆவான். அதன் காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக ஆகிவிடுகிறது. நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவற்றைக் குறித்து எந்த இறை கட்டளையும் எனக்கு அருளப்படவில்லை; “யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டு கொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்' (99:7,8) என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த குர்ஆன் வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள்.159 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போருக்காக) அதிகாலை நேரத்தில் கைபருக்கு வந்துசேர்ந்தார்கள். அப்போது (யூதர்களான) கைபர்வாசிகள் (வயல் வெளிகளை நோக்கி) மண்வெட்டிகளை எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும் அவர்கள், “முஹம்மதும் ஐந்து (பிரிவுகள் கொண்ட அவரது) படையினரும் வருகின்றனர்” என்று சொன்னார்கள்.160 உடனே கோட்டையை நோக்கி விரைந்தோடிச் சென்றார்கள். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தி, “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்). கைபர்(வாசிகளின் நிலை) நாசமாகிவிடும். “நாம் ஒரு சமுதாயத் தாரின் முற்றத்தில் இறங்கிவிடுவோ மாயின் எச்சரிக்கை செய்யப்பட்டுவந்த அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலை நேரமாகிவிடும்' என்று (37:177ஆவது இறைவசனத்தின் கருத்தைச்) சொன் னார்கள்.161 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடமிருந்து நிறைய செய்திகளைச் செவியுற்றிருக்கிறேன். ஆனால், அவற்றை நான் மறந்துவிடுகிறேன்” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “உன் மேல் துண்டை விரி” என்று சொல்ல, நானும் அதை விரித்தேன். பிறகு அவர்கள் தம் இரு கைகளால் (எதையோ அள்ளுவதைப் போன்று சைகை செய்து) அதில் அள்ளி(க் கொட்டி)னார்கள். பிறகு “இதைச் சேர்த்து (நெஞ்சோடு) அணைத்துக்கொள்” என்று சொன்னார்கள். நானும் அவ்வாறே அதை (என் நெஞ்சோடு) சேர்த்து அணைத் துக்கொண்டேன். அதன் பிறகு எந்த ஹதீஸையும் நான் மறக்கவில்லை.162 அத்தியாயம் :