அனைத்து இஸ்லாம் நூலகம்

62 - நபித்தோழர்கள்

1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் அறப்போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார்மீது படை யெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், “உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?” என்று கேட்பார்கள். “ஆம் (இருக்கிறார்கள்)” என்று அவர்கள் பதில் சொல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் அறப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), “உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றார் களா?” என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், “ஆம், இருக்கிறார்கள்” என்று சொல்வார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “ஆம், இருக்கின்றார்கள்” என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 அத்தியாயம் :

2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர்.3 பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம் சாட்சியம் கோரப் படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; (மக்களின்) நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி ஏற்படும்) நிலை தோன்றும்.4 (இதை அறிவிக்கும் நபித்தோழர்) இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுறைக்குப் பிறகு இரண்டு தலைமுறைகளைக் கூறினார்களா, அல்லது மூன்று தலைமுறைகளைக் கூறினார்களா என்பது எனக்குத் தெரியாது.5 அத்தியாயம் :

3

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.6 இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் விவரமில்லாத சிறுவர்களாயிருந்தபோது, “அஷ்ஹது பில்லாஹ்” (அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் சாட்சியம் கூறுகிறேன்) என்றோ, “அலய்ய அஹ்துல்லாஹ்” (அல்லாஹ்வுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி) என்றோ சொன்னால் பெரியவர்கள் எங்களை(க் கண்டித்து) அடிப்பார்கள்.7 அத்தியாயம் :

4

பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தந்தை) ஆஸிப் (ரலி) அவர்களிட மிருந்து பதின்மூன்று திர்ஹங்கள் கொடுத்து ஓர் ஒட்டகச் சேணத்தை வாங்கினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தந்தை) ஆஸிபி டம், “(உங்கள் மகன்) “பராஉ'வுக்குக் கட்டளையிடுங்கள். என் சேணத்தை என்னிடம் அவர் சுமந்து வரட்டும்” என்று கூறினார்கள். அதற்கு ஆஸிப் (ரலி) அவர்கள், “இணைவைப்போர் உங்களைத் தேடிக்கொண்டிருக்க, நீங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்காவைவிட்டு வெளியேறியபோது எப்படி செயல்பட்டீர்கள் என்று எனக்கு நீங்கள் அறிவிக்காத வரை நான் (“பராஉ'வுக்குச் சேணம் கொண்டுவரும்படி) கட்டளையிடமாட்டேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், பின்வருமாறு பதிலளித்தார்கள்: நாங்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு இரவு பகலாகக் கண்விழித்துப் பயணித்தோம்- அல்லது எங்கள் இரவிலும் பகலிலும் நாங்கள் நடந்தோம்- இறுதியில், நண்பகல் நேரத்தை அடைந்தோம். உச்சிப் பொழுதின் கடும் வெயில் அடிக்கலாயிற்று. ஒதுங்குவதற்கு நிழல் ஏதும் தென்படுகிறதா என்று நான் நோட்டமிட்டேன். அப்போது பாறையொன்று தென்பட்டது. அங்கு நான் சென்றேன். அப்போது அங்கிருந்த நிழலைக் கண்டு அந்த இடத்தைச் சமப்படுத்தினேன். பிறகு நபி (ஸல்) அவர்களுக்காக அந்த நிழலில் (ஒரு தோலை) விரித்தேன். பிறகு அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! படுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் படுத்துக்கொண்டார்கள். பிறகு நான் யாரேனும் எங்களைத் தேடி வந்திருக்கிறார் களா என்று என்னைச் சுற்றிலும் நோட்டமிட்டபடி நடந்தேன். அப்போது ஆடு மேய்ப்பவன் ஒருவன் தன் ஆட்டை (நாங்கள் தங்கியிருந்த) பாறையை நோக்கி ஓட்டிவருவதைக் கண்டேன். நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியதைப் போன்று அவனும் (ஓய்வெடுக்க) நாடி வந்துகொண்டிருந்தான். நான் அவனிடம், “நீ யாருடைய பணியாள்? இளைஞனே!” என்று கேட்டேன். அவன், “குறைஷியரில் ஒருவரின் பணியாள்” என்று கூறி அவரது பெயரைக் குறிப்பிட்டான். நான் அவர் இன்னாரெனப் புரிந்துகொண்டேன். ஆகவே, “உன் ஆடுகளில் சிறிது பால் இருக்குமா?” என்று கேட்டேன். அவன், “ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தான். நான், “நீ எங்களுக்காகப் பால் கறந்து தருவாயா?” என்று கேட்டேன். அவன், “ஆம் (கறந்து தருகிறேன்)” என்று பதிலளித்தான். நான் அவனது ஆட்டு மந்தையிலிருந்து ஓர் ஆட்டைப் பிடிக்கும் படி உத்தரவிட அவ்வாறே அவன் பிடித்தான். பிறகு நான் அதன் மடியைப் புழுதி போக உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். பிறகு அவனது இரு கைகளையும் உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். - “இப்படி' என்று பராஉ (ரலி) அவர்கள் தம் இரு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது தட்டினார்கள் - என அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அவன் எனக்குச் சிறிது பாலைக் கறந்துதந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக தோல் குவளை ஒன்றை நான் வைத்திருந்தேன். அதன் வாய் ஒரு துண்டுத் துணியால் மூடப்பட்டி ருந்தது. நான் (அதிலிருந்த) நீரை அந்தப் பால் (குவளை)மீது, அதன் அடிப்பகுதி குளிர்ந்துவிடும்வரை ஊற்றினேன். பிறகு அதை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அப்போது அவர்களும் விழித்தெழுந்து விட்டிருந்தார் கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அருந்துங்கள்” என்று சொன்னேன். நான் திருப்தியடையும்வரை அருந்தினார்கள். பிறகு “புறப்படும் நேரம் வந்துவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் சொல்ல அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். மக்கள் எங்களை (வலைவீசித்) தேடிக்கொண்டிருக்க, நாங்கள் புறப்பட்டோம். (அதுவரை இஸ்லாத்தை ஏற்றிராத) சுராக்கா பின் மாலிக் பின் ஜுஃஷும் என்பவர் தமது குதிரை மீதமர்ந்தபடி எங்களைக் கண்டுவிட்டதைத் தவிர எதிரிகளில் வேறுயாரும் எங்களைக் காணவில்லை. (எதிரிகள் எங்களைத் தேடி வந்தபோது) நான், “இதோ நம்மைத் தேடி வந்தவர்கள் நம்மை வந்தடைந்துவிட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “கவலைப்படாதீர்கள், அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று சொன்னார்கள்.12 (16:6 ஆவது வசனத்தில் இடம்பெறும்) “துரீஹƒன' எனும் சொல்லுக்கு “மாலையில் ஓட்டிச்செல்வது' என்பது பொருள். “தஸ்ரஹƒன' என்பதற்கு “காலையில் ஓட்டிச்செல்வது' என்பது பொருள். (ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹிஜ்ரத் தொடர்பான ஹதீஸில் இச்சொற்கள் இடம்பெறுகின்றன.) அத்தியாயம் :

5

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், “(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக்கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “தம்முடன் மூன்றாமவனாக அல்லாஹ்வே இருக்கும் (நம்) இருவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூபக்ரே!” என்று கேட்டார்கள்.13 அத்தியாயம் :

6

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்குமுன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில், “அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது -இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்” என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கி விட்டதை உணர்ந்து) அழுதார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விருப்ப உரிமை அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?' என்று நாங்கள் வியப்படைந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் விருப்ப உரிமை அளிக்கப்பட்ட அந்த அடியார். (நபி (ஸல்) அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் விளங்கிக் கொண்டார்கள். ஏனெனில்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தமது நட்பிலும் தமது செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத்தான் செய்கின்றன. (எனது இந்தப்) பள்ளிவாசலில் அபூபக்ர் அவர்களின் வாயிலைத் தவிர வேறெந்த வாயிலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.15 அத்தியாயம் :

7

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூபக்ர் (ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களையும், பிறகு உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களையும் சிறந்தவர் களாக மதிப்பிட்டுவந்தோம். அத்தியாயம் :

8

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால், அபூபக்ர் அவர்களையே ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்பத்திலும் துன்பத்திலும்) என் தோழரும் ஆவார். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

9

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உற்ற நண்பராக எவரையேனும் ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அவரையே (அபூபக்ர் அவர்களையே) ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமே சிறந்ததாகும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

10

அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கூஃபாவாசிகள்17 இப்னு ஸுபைர் (ரலி) அவர்களிடம் பாட்டனாரின் வாரிசுப் பங்கு குறித்து எழுதிக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், “நான் இந்தச் சமுதாயத்தாரிலிருந்து யாரையேனும் உற்ற தோழராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அவரையே ஆக்கிக்கொண்டிருப் பேன்' என்று யாரைக் குறித்துச் சொன்னார்களோ அவர்கள், பாட்டனாரைத் தந்தையின் இடத்தில் வைத்தார்கள்” என்று அபூபக்ர் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு பதில் சொன்னார்கள்.18 அத்தியாயம் :

11

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடு வதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, “நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்...?” என்று -நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் (என்ன செய்வது?) என்பதுபோல்- கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ என்னைக் காண வில்லையென்றால் அபூபக்ரிடம் செல்” என்று பதில் சொன்னார்கள்.19 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

12

ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண் களில்) அபூபக்ர் (ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்” என அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.20 அத்தியாயம் :

13

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முழங்கால் வெளியே தெரியுமளவுக்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். ஆகவே உங்களிடம் வந்தேன்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, “அங்கே அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்க வீட்டார், “இல்லை” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான்தான் (வாக்குவாதத்தை தொடங்கியதால் உமரைவிட) அதிகம் அநீதியிழைத்த வனாகிவிட்டேன்” என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். “பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, “நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறைமார்க்கத்தை நிலைநிறுத்தும் பணியில்) தம்மையும் தமது செல்வத்தை யும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்துகொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா?” என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக்கு உள்ளாக்கப்படவில்லை. அத்தியாயம் :

14

அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “தாத்துஸ் ஸலாஸில்' எனும் போருக்கான21 படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷா” என்று பதிலளித்தார்கள். நான், “ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)” என்று பதிலளித்தார்கள். “பிறகு யார் (பிரியமானவர்)?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “பிறகு உமர் பின் அல்கத்தாப்தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)” என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :

15

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(இஸ்ரவேலர்களில்) ஓர் ஆட்டிடையர் தம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஓநாய் ஒன்று அவற்றின்மீது பாய்ந்து ஓர் ஆட்டைக் கவ்விக்கொண்டு சென்றது. ஆடு மேய்ப்பவர் அதைத் துரத்திச் சென்றார். ஓநாய் அவரைத் திரும்பிப் பார்த்து, “கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக இறுதி) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார்? அந்த நாளில் என்னைத் தவிர இதற்குப் பொறுப்பாளன் எவனுமில்லையே” என்று கூறியது. (இவ்வாறே) ஒரு மனிதர் ஒரு மாட்டின் மீது சுமைகளை ஏற்றிவிட்டு அதை ஓட்டிக்கொண்டு சென்றுகொண்டி ருந்தபோது, அது அவரைத் திரும்பிப் பார்த்துப் பேசியது. “நான் இதற்காக (சுமை சுமப்பதற்காக)ப் படைக்கப்பட வில்லை. மாறாக, நான் (நிலத்தை) உழுவதற்காகத்தான் படைக்கப்பட்டுள் ளேன்” என்று அது கூறிற்று என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே மக்கள், “அல்லாஹ் தூயவன்” என்று (வியந்து) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும் உமர் பின் அல்கத்தாபும் இதை (இந்த நிகழ்ச்சிகளை) நம்புகிறோம்” என்று சொன்னார்கள்.22 “அபூபக்ர், உமர் இருவரைக் குறித்தும் அல்லாஹ் திருப்தியடைவானாக!” (என்று அறிவிப்பாளர் பிரார்த்திக்கிறார்.) அத்தியாயம் :

16

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவுக்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூகுஹாஃபாவின் மைந்தர் (அபூபக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை- அல்லது இரண்டு வாளிகள் நீரை- இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அவருடைய சோர்வை அல்லாஹ் மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தாபின் மகன் உமர் எடுத்துக் கொண் டார். உமர் இறைத்ததைப் போன்று இறைக்கின்ற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு (அவர் நீர் இறைத்தார்.)23 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

17

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “எவன் தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக்கொண்டு செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் கவனமாக இல்லாவிட்டால் எனது ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கிவிடுகின்றது” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் மூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சாலிம் (ரஹ்) அவர்களிடம், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “எவன் தன் கீழங்கியை (இஸார்) இழுத்துக் கொண்டு செல்கிறானோ' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவா சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “(எவன்) தன் ஆடையை' (ஸவ்ப்) என்று அறிவித்ததைத்தான் நான் கேட்டேன்” எனப் பதிலளித்தார்கள். அத்தியாயம் :

18

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தின் வாயில்களில் (ஒவ்வொன்றில்) இருந்து “அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்த தாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)' என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழு கைக்குரிய வாயிலிலிருந்து அழைக்கப் படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாயிலிலிருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாயிலிலிருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாயிலிலிருந்தும், “அர்ரய்யான்' என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாயிலிலிருந்தும் அழைக்கப்படுவார்' என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “இந்த வாயில்களிலிருந்து அழைக்கப்படு பவருக்குத் துயரம் எதுவும் இருக்காது. (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்)” என்று கூறிவிட்டு, “அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், “நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன், அபூபக்ரே!” என்று சொன்னார்கள்.24 அத்தியாயம் :

19

20

21

முஹம்மத் பின் ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:30 நான் என் தந்தை (அலீ (ரலி) அவர்கள்) இடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் யார் சிறந்தவர்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அபூபக்ர் (ரலி) அவர்கள்” எனப் பதிலளித்தார்கள். நான், “(அவர்களுக்குப்) பிறகு யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பிறகு உமர் (ரலி) அவர்கள்(தான் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். “பிறகு (மக்களில் சிறந்தவர்) உஸ்மான் (ரலி) அவர்கள்தான்” என்று (என் தந்தை) சொல்லிவிடுவார்களோ என நான் அஞ்சியவனாக, “பிறகு (மக்களில் சிறந்த வர்) நீங்கள்தானே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “நான் முஸ்லிம்களில் ஒருவன்; அவ்வளவுதான்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

22

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பயணங்களில் ஒன்றில் அவர்களுடன் புறப்பட்டோம்.31 நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) “பைதா' எனுமிடத்தை -அல்லது “தாத்துல் ஜைஷ்' எனுமிடத்தை- அடைந்தபோது, எனது கழுத்து மாலை ஒன்று (எங்கோ) அவிழ்ந்து விழுந்துவிட்டது. ஆகவே, அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓரிடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள். மக்களும் அவர்களுடன் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. எனவே, மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “(உங்கள் மகள்) ஆயிஷா என்ன செய்தார் என்று நீங்கள் கவனிக்கமாட்டீர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று முறையிட்டனர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடியில் தலை வைத்துத் தூங்கி விட்டிருந்த நிலையில் வருகை தந்தார்கள். “நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை. மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, என்னைத் தமது கரத்தால் என் இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடியில் படுத்துக்கொண்டிருந்ததுதான் என்னை அசைய விடாமல் (அடிவாங்கிக்கொண்டி ருக்கும்படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கி, அதிகாலையில் விழித்தெழுந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது, அல்லாஹ் “தயம்மும்' உடைய (4:43) வசனத்தை அருளினான். (இது குறித்து) உசைத் பின் அல்ஹுளைர் (ரலி) அவர்கள் “அபூபக்ரின் குடும்பத்தாரே! (“தயம்மும்' என்ற சலுகையான) இது, உங்களால் (சமுதாயத்திற்குக் கிடைத்த) முதல் வளம் (பரக்கத்) அல்ல. (இதற்கு முன்பும் பல நன்மைகள் உங்கள் மூலம் கிடைத்துள்ளன)” என்று சொன்னார்கள். பிறகு, நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தை (அது அமர்ந்திருந்த இடத்திலிருந்து) நாங்கள் எழுப்பியபோது, அதற்குக் கீழே (நான் தொலைத்துவிட்ட) கழுத்து மாலையை நாங்கள் கண்டோம்.32 அத்தியாயம் :

23

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக்குவியல், அல்லது அதில் பாதியளவைக்கூட (அவரது) அந்தத் தர்மம் எட்ட முடியாது.33 இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

24

அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் வீட்டில் அங்கத் தூய்மை செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே எனது இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்” என்று சொல்லிக்கொண்டேன். நான் பள்ளிவாசலுக்கு வந்து நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், “நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்” என்று கூறினர். நான் (நபி (ஸல்) அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (இயற்கைக்) கடனை நிறைவேற்றி விட்டு அங்கத் தூய்மை செய்தார்கள். உடனே நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்துகொண்டேன். நான் (எனக்குள்), “இன்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வாயிற் காவலனாக இருப்பேன்” என்று சொல்லிக்கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து கதவைத் தள்ளினார்கள். நான், “யார் அது?” என்று கேட்டேன். அவர்கள், “(நான்தான்) அபூபக்ர் (வந்துள்ளேன்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இதோ அபூபக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் அபூபக்ர் அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம், “உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவிக்கிறார்கள்” என்று சொன்னேன். உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் (கிணற்றின்) சுற்றுச்சுவரில் அமர்ந்துகொண்டு நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்துக் கொண்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்துகொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை அங்கத் தூய்மை செய்துகொண்டு என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி, விட்டுவிட்டு வந்திருந்தேன். ஆகவே (எனக்குள்), “அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச் செய்வான்” என்று சொல்லிக்கொண்டேன். - “இன்னார்' என்று அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியது. தம் சகோதரரைக் கருத்தில் கொண்டுதான்” என்று அறிவிப்பாளர் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- அப்போது ஒரு மனிதர் கதவை அசைத்தார். நான், “யார் அது?” என்று கேட்டேன். வந்தவர், “(நான்தான்) உமர் பின் அல்கத்தாப் (வந்துள்ளேன்)” என்று சொன்னார். நான், “கொஞ்சம் பொறுங்கள்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, “இதோ, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் சென்று, “உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்” என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச்சுவரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கம் அமர்ந்து கொண்டு தம் இரு கால்களையும் கிணற் றுக்குள் தொங்கவிட்டுக்கொண்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்துகொண்டேன். “அல்லாஹ் இன்னாருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான்” என்று (முன் போலவே எனக்குள்) கூறிக்கொண்டேன். அப்போது ஒரு மனிதர் வந்து கதவை ஆட்டினார். நான், “யார் அது?” என்று கேட்டேன். அவர், “(நான்தான்) உஸ்மான் பின் அஃப்பான் (வந்திருக்கிறேன்)” என்று பதிலளித்தார். உடனே, “கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி கொடுங்கள். அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள்.34 அவ்வாறே நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று அவரிடம், “உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி சொன்னார்கள்” என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்தபோது) சுற்றுச்சுவர் (ஒரு பக்கம்) நிரம்பிவிட்டிருப்பதைக் கண்டார்கள். ஆகவே, மற்றொரு பக்கம் நபி (ஸல்) அவர்களுக்கு எதிரே அமர்ந்துகொண்டார்கள். அறிவிப்பாளர் ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், “நான் (நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் அவர்களுக்கு எதிரே உஸ்மான் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த நிலையும் (தற்போது) அவர்களுடைய கப்றுகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்” என்று சொன்னார்கள்.35 அத்தியாயம் :

25

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகி யோரும் உஹுத் மலைமீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன்மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும் (வாய்மையாளரும்), இரு உயிர்த் தியாகிகளும் (ஷஹீத்களும்) உள்ளனர்” என்று சொன்னார்கள்.36 அத்தியாயம் :

26

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (கனவில்) ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கும்போது என்னிடம் அபூபக்ரும் உமரும் வந்தார்கள். அபூபக்ர் அவர்கள் (நான் நீர் இறைத்து முடித்தபின்) வாளியை எடுத்து ஒரு வாளி நீரை- அல்லது இரு வாளிகள் நீரை- இறைத்தார்கள். அவர் இறைத்த போது (சற்று) சோர்வு தென்பட்டது. அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப் பானாக! பிறகு அபூபக்ர் அவர்களின் கரத்திலிருந்து உமர் அவர்கள் அதை எடுத்துக்கொள்ள அது அவரது கையில் பெரியதொரு வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) மக்களில் அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடியபுத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு அவர் நீர் இறைத்தார்.37 அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள், “இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள “அத்தன்' என்னும் சொல், “ஒட்டகம் தாகம் தீர நீரருந்தி, மண்டியிட்டுப் படுத்து ஓய்வெடுக்கும் இடம்' எனப் பொருள்படும்” என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :

27

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் சில மக்களிடையே நின்றுகொண்டிருக்க, அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்காக துஆ செய்தார்கள். -அப்போது உமர் (ரலி) அவர்கள் (இறந்து) கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தார்கள்- அப்போது என் பின்னாலிருந்து ஒரு மனிதர் தன் முழங்கையை என் தோளின் மீது வைத்து (உமர் (ரலி) அவர்களை நோக்கி), “அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அல்லாஹ் (உங்கள் உடல் அடக்கம் செய்யப்படும்போது) உங்களை உங்களுடைய இரு தோழர் க(ளான நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்க)ளுடன் (அவர் களின் மண்ணறைகளுக்கு அருகே) இருக்கச்செய்ய வேண்டும் என்று நான் விரும்பிக்கொண்டிருந்தேன். ஏனெனில், பெரும்பாலான நேரங் களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூபக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்' என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். ஆகவே, உங்களை அல்லாஹ் அவ்விரு வருடன் (அவர்களின் மண்ணறைகளுக்கு அருகே) இருக்குமாறு செய்திட வேண்டு மென்று நான் விரும்புகிறேன்” என்று சொன்னார். நான் திரும்பிப் பார்த்தேன். இப்படிச் சொன்ன அந்த மனிதர் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்தான். அத்தியாயம் :

28

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது?” என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “(ஒருமுறை மக்காவில்) உக்பா பின் அபீமுஐத் என்பவன், நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது வந்து தன் போர்வையை அவர்களின் கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, நபி (ஸல்) அவர்களைவிட்டு உக்பாவை (தமது கையால்) தள்ளினார்கள். அப்போது, “என் இறைவன் அல்லாஹ் தான்' என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முனை) கிறீர்கள்? அவரோ தம் இறைவனிட மிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்திருக்கிறார் (40:28)”38 என்று சொன்னார்கள். அத்தியாயம் :

29

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “நான் (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூதல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன்.40 அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற் றேன். உடனே, “யார் அது?' என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), “இவர் பிலால்' என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், “இது யாருடையது?' என்று கேட்டேன். அவர், (வானவர்), “இது உமருடையது' என்று சொன்னார். ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்” என்று கேட்டார்கள். அத்தியாயம் :

30

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் அங்கத் தூய்மை செய்து கொண்டிருந்தாள். நான் (ஜிப்ரீலிடம்), “இந்த அரண்மனை யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், “உமர் அவர்களுக்குரியது' என்று பதிலளித்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்” என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, “தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.41 அத்தியாயம் :

31

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில் என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அந்தப்) பாலை நான் (தாகம் தீருமளவு) அருந்தினேன். இறுதியில், என் நகக்கண்- அல்லது, நகக்கண்கள்- ஊடே (பால்) பொங்கி வருவதைக் கண்டேன். பிறகு (நான் அருந்தியதுபோக இருந்த மிச்சத்தை) உமர் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மக்கள், “இதற்கு (இந்தப் பாலுக்கு) நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, அதற்கு அவர்கள், “அறிவு' என்று பதிலளித்தார்கள்.42 அத்தியாயம் :

32

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி- அல்லது இரு வாளிகள்- தண்ணீரை (சற்று) சோர்வான நிலையில் இறைத்தார்கள். அவரை அல்லாஹ் மன்னிப்பானாக! பிறகு உமர் பின் அல்கத்தாப் அவர்கள் வந்தார்கள். உடனே அந்த வாளி மிகப்பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப்போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு (அவர் நீர் இறைத்தார்).43 அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், “இந்த ஹதீஸி(ன் மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள “அப்கரிய்யு' எனும் சொல், “உயர் தரமான விரிப்பு' என (அகராதியில்) பொருள்படும்” என்று கூறுகிறார்கள். மற்றோர் அறிவிப்பாளரான யஹ்யா பின் ஸியாத் (ரஹ்) அவர்கள், “மென்மையான குஞ்சம் வைத்த விரிப்பு' என்று (பொருள்) கூறுகிறார். “ஸராபிய்யு மப்ஸƒஸா' (88:16) என்ப தற்கு “விரிக்கப்பட்ட அதிகமான கம்பளங் கள்' என்பது பொருள். அத்தியாயம் :

33

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அப்போது (நபியவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக்கொண்டும் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி கேட்டுக்கொண்டும் இருந்தனர். அவர்களின் குரல்கள் நபி (ஸல்) அவர்களின் குரலைவிட உயர்ந்திருந்தன. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டவுடன் அப்பெண்கள் எழுந்து அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். (தம் வீட்டுப் பெண்கள் உமர் அவர்களுக்கு அஞ்சு வதைக் கண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக்கொண்டிருக்க, உமர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்தார் கள். “அல்லாஹ் உங்களை ஆயுள் முழுவதும் சிரித்தபடி (மகிழ்ச்சியுடன்) வாழவைப்பானாக! அல்லாஹ்வின் தூதரே!” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னிடமிருந்த இந்தப் பெண் களைக் குறித்து நான் வியப்படைகிறேன். உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்டார் களே” என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இந்தப் பெண்கள் அஞ்சுவதற்கு நீங்களே மிகவும் தகுதியுடையவர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அப்பெண்களை நோக்கி), “தமக்குத்தாமே பகைவர்களாயிருப்பவர் களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அஞ்சாமல் எனக்கு நீங்கள் அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட கடுமை காட்டுபவரும் கடின சித்தமுடையவரும் ஆவீர்கள்” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சரி! விடுங்கள், கத்தாபின் புதல்வரே! என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு தெருவில் நீங்கள் (நடந்து) செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவை விட்டுவிட்டு வேறொரு தெருவில்தான் செல்வான்” என்று சொன் னார்கள்.44 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

34

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நேரத்திலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம். இதை கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

35

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டு பிரார்த்திக்கலாயினர். அவரது ஜனாஸா (சடலம்) எடுக்கப்படு வதற்கு முன்பாக அவருக்காக இறுதித் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மனிதர்தான் என்னை திடுக்கிடச்செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்தபோது) அது அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்தான். அவர்கள், “உமர் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, “(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள்தான் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்)கள் இருவருடனும்தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில்தான்) இருக்கச்செய்வான் என்று எண்ணியிருந் தேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்' என்றும் “நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே சென்றோம்' என்றும் “நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்” என்றும் சொல்வதை நான் அதிகமாகச் செவியுற் றுள்ளேன் என்றார்கள்.45 அத்தியாயம் :

36

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் தம்முட னிருக்க, நபி (ஸல்) அவர்கள் உஹுத் மலைமீது ஏறினார்கள். அப்போது அது அவர்களுடன் நடுங்கியது. உடனே நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது காலால் உதைத்து, “ “உஹுதே! அசையாமல் இரு! உன்மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரு உயிர்த் தியாகிகளும்தான் உள்ளனர்” என்று சொன்னார்கள்.46 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

37

அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:47 இப்னு உமர் (ரலி) அவர்கள் என்னிடம் உமர் (ரலி) அவர்களின் பண்புகள் சிலவற்றைப் பற்றிக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு அவற்றைத் தெரிவித்தேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த நேரத்திலிருந்து உமர் (ரலி) அவர்களைவிட அதிகம் உழைக்கக் கூடியவர்களாகவும் அதிகம் வாரி வழங்குபவர்களாகவும் வேறெவரையும் நான் காணவில்லை. அவர்கள் தமது வாழ்நாளின் இறுதிவரை அவ்வாறே இருந்தார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

38

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, “மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். அம்மனிதர், “எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர” என்று பதிலளித்தார்.48 அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) நீ இருப்பாய்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் இருப்பேன் என்று நான் நம்புகிறேன்; அவர்களுடைய நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!49 அத்தியாயம் :

39

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங் களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாயத்தாரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருப்பார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.50 மற்றோர் அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்பிருந்த இஸ்ரவேலர் களில் இறைத்தூதர்களாக இல்லாமலேயே (வானவர்களால்) அறிவிப்புச் செய்யப் பட்டவர்கள் இருந்துள்ளனர். அத்தகை யவர்களில் எவரேனும் என் சமுதாயத்தில் இருந்தால் அது உமராகத்தான் இருப்பார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (குர்ஆனின் 22:52ஆவது வசனத்தில்) “வலா முஹத்தஸின்' (முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவரானாலும்) என்று (சேர்த்து) வாசித்துள்ளார்கள். அத்தியாயம் :

40

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (இஸ்ரவேலர்களில்) ஓர் ஆட்டிடையர் தம் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக்கொண்டு ஓடலாயிற்று. ஆட்டை மேய்த்துக்கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, “மன் லஹா யவ்மஸ் ஸபுஇ? (கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் உலக முடிவு நாளில் இதைப் பாதுகாக்கக்கூடியவர் யார்?) அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்கமாட்டானே' என்று கூறியது. (இதைக் கேட்டு வியந்தவர்களாக) “சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என மக்கள் கூறினர். அப்போது நானும், அபூபக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபியவர்கள் இதைக் கூறிய சமயம்) அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கு இருக்கவில்லை.51 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

41

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை), “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டக்கூடியவையும் இருந்தன. அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டாதவை யும் இருந்தன. உமர் அவர்கள், (தரையில்) இழுத்துக்கொண்டே செல்லும் அளவுக்கு (நீளமான) சட்டையொன்றை அணிந்தவராக எனக்குக் காட்டப்பட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மக்கள், “இதற்கு நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அந்தச் சட்டைகள்) அவர் களது மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும்” என்று (விளக்கம் காண்பதாக) பதில் சொன்னார் கள்.52 அத்தியாயம் :

42

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டபோது அவர்கள் வேதனையடையலானார்கள்.53 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறுவதைப் போல, “நம்பிக்கையாளர்களின் தலைவரே! இதைப் பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள்; நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டு அத்தோழமையில் நல்லவிதமாக நடந்துகொண்டீர்கள். பிறகு, அவர்கள் உங்களைக் குறித்துத் திருப்தியடைந்திருந்த நிலையிலேயே (அவர்கள் இறந்துவிட,) அவர்களைப் பிரிந்தீர்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுடன் தோழமை கொண்டு அந்தத் தோழமையிலும் நல்ல விதமாக நடந்துகொண்டீர்கள். பிறகு உங்கள்மீது அவர்கள் திருப்தியடைந்திருந்த நிலையிலேயே (அவர்கள் இறந்துவிட,) அவர்களைப் பிரிந்தீர்கள். பிறகு அவர் களுடைய மற்ற தோழர்களுடன் தோழமை கொண்டு அந்தத் தோழமையிலும் நல்ல விதமாக நடந்துகொண்டீர்கள். அவர்களை நீங்கள் பிரிவதாயிருந்தால் நிச்சயம் அவர்கள் உங்களைக் குறித்துத் திருப்தி யடைந்திருக்கும் நிலையிலேயே பிரிவீர்கள்” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “(இப்னு அப்பாஸே!) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்ன தோழமை, அவர்கள் என்மீது கொண்டிருந்த அன்பு ஆகியவையெல்லாம் அல்லாஹ் என்மீது பொழிந்த அருட்கொடையாகும். மேலும், அபூபக்ர் (ரலி) அவர்களுடன் நான் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்ன தோழமை, அவர்கள் என்மீது கொண்டி ருந்த அன்பு ஆகியனவும் உயர்ந்தோன் அல்லாஹ் என்மீது பொழிந்த அருட் கொடையாகும். என்னிடம் நீங்கள் காண்கின்ற பதற்றமோ (பிற்காலத்தில் குழப்பங்களில் சிக்கவிருக்கும்) உங்களுக்காகவும் உங்கள் தோழர்களுக்காவும்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு பூமி நிரம்பத் தங்கம் இருந்தால்கூட, வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதனையை நான் காண்பதற்கு முன்பாகவே அதற்குப் பகரமாக அந்தத் தங்கத்தைப் பிணைத்தொகையாகத் தந்து விடுவேன்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன்...” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :

43

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து (வாயிற் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அவருக்காகத் திறவுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் அவருக்காக (வாயிற் கதவைத்) திறந்தேன். அவர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன நற்செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒரு மனிதர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், “அவருக்குத் திறந்து விடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அவருக்கு நான் கதவைத் திறந்துவிட்டேன். அம்மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் நான் நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒரு மனிதர் கதவைத் திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், “அவருக்கும் திறந்துவிடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கும் என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நானும் சென்று கதவைத் திறக்க) அம்மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, “(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின்போது) அல்லாஹ்வே (பொறுமையைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்” என்று சொன்னார்கள்.54 அத்தியாயம் :

44

அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண் டிருக்க, நாங்கள் நபி (ஸல்) அவர் களுடன் இருந்தோம்...55 அத்தியாயம் :

45

அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத் தினுள் நுழைந்தார்கள். தோட்டத்தின் வாயிற்கதவைக் காவல் புரியும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் நபி (ஸல்) அவர்களிடம் அவருக்காக அனுமதி கேட்க) அவர்கள், “அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நான் அவரிடம் சொல்லச் சென்றபோது) அம்மனிதர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார்கள். பிறகு மற்றொருவர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் அனுமதி கேட்க), “அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நான் அவ்வாறே சொல்லச் சென்றபோது) அந்த மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார்கள். பிறகு இன்னொரு மனிதர் வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் கதவைத் திறக்க அனுமதி கேட்டபோது) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டுப் பிறகு, “அவருக்கு அனுமதி கொடுங்கள்; (வருங்காலத்தில்) அவருக்கு நேரவிருக்கும் துன்பத்தையடுத்து அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நான் சென்று கதவைத் திறந்தபோது) அவர் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களாக இருந்தார்கள்.58 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஆஸிம் பின் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் தம்மிரு முழங்கால்களும்- அல்லது தமது முழங்கால்- தெரிய தண்ணீர் உள்ள இடத்திற்கருகே அமர்ந்திருந்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்தபோது தமது முழங்காலை மூடிக்கொண்டார்கள்” எனக் கூடுதலாக அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :

46

உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:59 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம், “உஸ்மான் (ரலி) அவர்களிடம் நீங்கள் அவர்களுடைய (தாய்வழிச்) சகோதரர் வலீத் (பின் உக்பா) பற்றிப் பேசாமலிருப்பது ஏன்? மக்கள் வலீத் விஷயத்தில் மிக அதிகமாகக் குறை கூறுகிறார்களே!” என்று கேட்டார்கள்.60 ஆகவே, நான் உஸ்மான் (ரலி) அவர்கள் தொழுகைக்காகப் புறப்பட்ட நேரத்தில் அவர்களைத் தேடிச் சென்றேன். அவர்களிடம், எனக்கு உங்களிடம் சற்று(ப் பேச வேண்டிய) தேவை உள்ளது. அது உங்களுக்கு (நான் கூற விரும்பும்) அறிவுரை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “ஏ மனிதரே! உம்மிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னார்கள். உடனே, நான் திரும்பி அவ்விருவரிடமும் வந்தேன். அப்போது உஸ்மான் (ரலி) அவர்களுடைய தூதுவர் (என்னைத் தேடி) வர, நான் அவர்களிடம் (மீண்டும்) சென்றேன். உஸ்மான் (ரலி) அவர்கள், “உங்கள் அறிவுரை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி அவர்கள்மீது (தன்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்குப் பதிலளித்தவர்களில் நீங்களும் ஒருவராயிருந்தீர்கள். ஆகவே, (மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்கும், அதன்பின் மதீனாவுக்குமாக) இரண்டு ஹிஜ்ரத்கள் மேற்கொண்டீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதருடன் தோழமை கொண்டு அவர்களுடைய வழிமுறையைப் பார்த்திருக்கிறீர்கள். மக்களோ வலீத் பின் உக்பாவைப் பற்றி நிறையக் குறைபேசுகிறார்கள் (நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்க நான், “இல்லை. ஆனால், திரைக்கப்பால் இருக்கும் கன்னிப் பெண்களிடம்(கூட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கல்வி சென்றடைந்துகொண்டிருக்கும்(போது, அந்த) அளவு (கல்வி) என்னிடமும் வந்து சேர்ந்துள்ளது (குறித்து வியப் பில்லை.)” என்று பதில் சொன்னேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “இறைவாழ்த்துக்குப்பின் கூறுகிறேன்: அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தான். அப்போது, அல்லாஹ்வின் அழைப்புக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அழைப்புக்கும் பதிலளித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். மேலும், அவர்கள் எ(ந்த வேதத்)தைக் கொடுத்தனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக்கொண்டேன். நான் இரு ஹிஜ்ரத்துகளை மேற் கொண்டேன். - நீங்கள் சொன்னதைப் போல்- நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டேன்; அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை மரணிக்கச் செய்யும்வரை நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் அதைப் போலவே (நடந்துகொண்டேன்.) பிறகு உமர் அவர்களிடமும் அதைப் போலவே (நடந்துகொண்டேன்.) பிறகு நான் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டேன். ஆகவே, அவர்களுக்கிருந்தது போன்ற அதே உரிமை எனக்கில்லையா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (உங்களுக்கும் அதே போன்ற உரிமை இருக்கிறது)” என்று சொன்னேன். அவர்கள், “அப்படியென்றால் உங்களைக் குறித்து எனக்கு எட்டுகின்ற (என்னைக் குறைகூறும்) இந்தப் பேச்சுகளெல்லாம் என்ன? நீங்கள் வலீத் பின் உக்பா விஷயமாகச் சொன்னவற்றில் விரைவில் இறைவன் நாடினால் சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்று சொன்னார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களை அழைத்து வலீத் பின் உக்பாவுக்கு (எதிராகச் சாட்சிகள் கிடைத்ததால் அவருக்கு) கசையடிகள் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்களும் வலீதுக்கு எண்பது கசையடிகள் கொடுத்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

47

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் தம்முடனிருக்க, நபி (ஸல்) அவர்கள் உஹுத் மலைமீது ஏறினார்கள். அது (அவர்களுடன்) நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன்மீது ஓர் இறைத்தூதரும் ஒரு “சித்தீக்'கும் இரு உயிர்த்தியாகிகளும் உள்ளனர்” என்று சொன்னார்கள். (இதைக் கூறியபோது) நபியவர்கள் தமது காலால் மலையை (ஓங்கி) அடித்தார்கள் என எண்ணுகிறேன்.61 அத்தியாயம் :

48

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக எவரையும் கருதுவதில்லை. பிறகு உமர் (ரலி) அவர்களையும் அவர்களுக்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்களையும் (சிறந்தவர்களாகக் கருதிவந்தோம்.) பிறகு (மீதமுள்ள) நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாமல் விட்டுவிட்டோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

49

உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எகிப்துவாசியான ஒரு மனிதர் வந்து, (கஅபா) இறையில்லத்தில் ஹஜ் செய்தார். அப்போது ஒரு கூட்டம் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, “இந்தக் கூட்டத்தார் யார்?” என்று கேட்டார். மக்கள், “இவர்கள் குறைஷியர்” என்று கூறினர். அவர், “இவர்களில் முதிர்ந்த அறிஞர் யார்?” என்று கேட்டார். மக்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்” என்று பதிலளித்தனர். உடனே அவர், (அங்கிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் களை நோக்கி) “இப்னு உமர் அவர்களே! நான் உங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப் பற்றி (பதில்) சொல்லுங்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் உஹுத் போரின்போது (போர்க்களத்திலிருந்து) வெருண் டோடியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (அறிவேன்)” என்று பதிலளித்தார்கள். அவர், “உஸ்மான் அவர்கள், பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “அவர் ஹுதைபியாவில் நடந்த “பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாணத்திலும் கலந்துகொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?”62 என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு) அந்த மனிதர், (உஸ்மான் (ரலி) அவர்கள், தாம் நினைத்திருந்ததைப் போன்றே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள்தான் என்று தொனிக்கும் படி) “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னார். இப்னு உமர் (ரலி) அவர்கள், “வா! (இவற்றிலெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏன் பங்கு பெறவில்லை யென்று) உமக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹுத் போரின்போது வெருண்டோடிய சம்பவம் சம்பந்தமாக அல்லாஹ் அவரது பிழையைப் பொறுத்து அவருக்கு மன்னிப்பளித்து விட்டான் என்று நானே சாட்சியம் கூறுகின்றேன்.63 பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் (ருகய்யா-ரலி) உஸ்மான் அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ர்' போரில் கலந்துகொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரது பங்கும் உங்களுக்குக் கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைக் கவனியுங்கள்)' என்று சொன்னார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.) “பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களைவிடக் கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் (ரலி) அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷியரிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை;) எனவேதான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும், இந்தச் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கையைச் சுட்டிக்காட்டி, “இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டி னார்கள். பிறகு “(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார்கள்' என (இப்னு உமர் (ரலி) அவர்கள்) கூறிவிட்டு, (உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணிவைத்திருந்த) அந்த மனிதரிடம், “நான் சொன்ன இந்தப் பதில்களை எடுத்துக்கொண்டு இப்போது நீர் போகலாம்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

50

அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கொலை செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்குமுன் மதீனாவில் அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுக்கும், உஸ்மான் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களுக்கும் அருகில் நின்றுகொண்டு (அவர்கள் இருவரையும் நோக்கி, “(சவாதுல் இராக் விஷயத்தில்) நீங்கள் எப்படிச் செயல்பட்டீர்கள்?64 அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச்சுமையை சுமத்திவிட்டதாக நீங்கள் அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், “அந்த நிலத்திற்கு அதன் (உரிமையாளர்களின்) சக்திக்கேற்பவே (வரி) விதித்தோம். அதில் மிக அதிகமாக ஒன்றுமில்லை” என்றனர். அதற்கு உமர் (ரலி) அவர்கள்,”அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச் சுமையை சுமத்தி விட்டீர்களா? என்று (நன்கு) யோசித்துப் பாருங்கள்” என்றார்கள். அந்த இருவரும், “இல்லை. (அதன் சக்திக்கேற்பவே வரி விதித்தோம்)” என்று பதிலளித்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக்வாசி களின் விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்தத் தேவையில்லாத நிலையில்தான் விட்டுச் செல்வேன்” என்று கூறினார்கள். இப்படி அவர்கள் சொல்லி நான்கு நாட்கள்கூட சென்றிருக்காது. அதற்குள் (கத்தியால்) உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்டு விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்ட நாளன்று அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்றுகொண்டிருக்கிறேன். எனக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தொழுவிப்பதற்குமுன்) இரு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் (மக்களை நோக்கி), “சீராக நில்லுங்கள்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்கிடையே இடைவெளியை காணாதபோதுதான் முன்சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் “யூசுஃப்' அத்தியாயம் (12) அல்லது “அந்நஹ்ல்' அத்தியாயம் (16) அல்லது அது போன்ற(வேறோர் அத்தியாயத்)தை, மக்கள் தொழுகைக்காக வந்து சேரும்வரையில் முதல் ரகஅத்தில் ஓதுவார்கள். (சம்பவ தினத்தன்று) அப்போதுதான் தக்பீர் கூறியிருப்பார்கள். “என்னை நாய் கொன்றுவிட்டது- அல்லது தின்றுவிட்டது-” என்று கூறினார்கள் (அப்போது “அபூலுஃலுஆ ஃபைரோஸ்' என்பவன் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந் தான்).65 உடனே அந்த “இல்ஜ்' (அரபியல்லாத அந்நிய மொழி பேசும் இறைமறுப்பாளன்) தனது கத்தியை எடுத்துக்கொண்டு தனது வலப் பக்கம், இடப் பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக்கொண்டே விரைந்தோடலானான். முடிவாக, பதிமூன்று ஆண்களை அவன் குத்திவிட்டிருந்தான். அதில் ஏழுபேர் இறந்துவிட்டனர். இதைக்கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தமது நீண்ட தொப்பியை (கழற்றி) அவன்மீது வீசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறைமறுப்பாளன், தான் பிடிபட்டுவிடுவோம் என்று எண்ணிய போது தன்னைத்தானே அறுத்துக்(கொண்டு தற்கொலை செய்து)கொண்டான். மேலும், (தொழுவித்துக்கொண்டிருந்த) உமர் (ரலி) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் கரத்தைப் பிடித்து (மக்களுக்குத் தொழுவிப்ப தற்காகத் தம்மிடத்தில்) முன்நிறுத்தினார்கள். நான் பார்த்த (இந்தச் சம்பவத்)தை உமர் (ரலி) அவர்களுக்கருகே இருந்தவர்களும் பார்த்தனர். ஆனால், பள்ளிவாசலின் மூலைகளில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களுக்கு இது தெரியவில்லை. ஆயினும், (தொழுவித்துக்கொண்டிருந்த) உமர் (ரலி) அவர்களின் சப்தம் நின்றுவிட்டபோது அவர்கள் “சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன், அல்லாஹ் தூயவன்) என்று கூறிக்கொண்டி ருந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (சிறிய அத்தியாயங்களை ஓதி) சுருக்கமாகத் தொழுவித்தார்கள். மக்கள் (தொழுது முடித்து) திரும்பியபோது உமர் (ரலி) அவர்கள், “இப்னு அப்பாஸ் அவர்களே! என்னைக் கொன்றவன் யார் என்று பாருங்கள்” என்று கூறினார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து, “முஃகீராவின் அடிமைதான் (உங்களைக் குத்தியவன்)” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “அந்தத் திறமையான தொழிற் கலைஞனா?” என்று கேட்டார்கள். “ஆம்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். “ அவனை அல்லாஹ் கொல்லட்டும்! அவன் விஷயத்தில் நல்லதைத்தானே நான் உத்தரவிட்டேன்! (ஆனால், என்னையே அவன் கொன்றுவிட்டானே!) தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரது கரத்தால் எனக்கு மரணம் நேரும்படிச் செய்துவிடாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (மதீனா நகரத்தின் சில பணிகளுக்கு அரபியர் அல்லாத அந்நியர்கள் அவசியம் எனக் கூறி) அரபியர் அல்லாத அந்நிய(த் தொழிற் கலைஞ)ர்கள் மதீனாவில் அதிகம் இருக்க வேண்டுமென (இப்னு அப்பாஸ் அவர்களே!) நீங்களும் உங்கள் தந்தையார் (அப்பாஸ்) அவர்களுமே விரும்பக்கூடியவர்களாக இருந்தீர்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அவர்களிடையே அப்பாஸ் (ரலி) அவர்களே நிறைய அடிமைகள் உடையவராக இருந்தார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களை நோக்கி), “நீங்கள் விரும்பினால் (மதீனாவிலுள்ள அரபியரல்லாத தொழிற் கலைஞர்கள் அனைவரையும்) கொன்றுவிடுகிறோம்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் (சொல்வது தவறு. உங்களது மொழியில் அவர்கள் பேசிய பின்பும், உங்களது கிப்லாவை நோக்கித் தொழுத பின்பும், உங்களைப் போன்றே “ஹஜ்' செய்த பின்புமா? (முஸ்லிம்களான அவர்களைக் கொலை செய்யப் போகிறீர்கள்?)”என்று கேட்டார்கள். பிறகு (குற்றுயிராயிருந்த) உமர் (ரலி) அவர்கள் தமது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களுடன் நாங்களும் சென்றோம். அன்றைய நாளுக்கு முன்னால் எந்தத் துன்பமும் நிகழ்ந்திராததைப் போன்று மக்கள் (கடுந்துயரத்துடன்) காணப்பட்டனர். ஒருவர், “அவருக்கு ஒன்றும் ஆகிவிடாது” என்கிறார். மற்றொருவர், “அவருக்கு (மரணம் சம்பவித்துவிடும் என்று) நான் அஞ்சுகிறேன்” என்று கூறுகிறார். அப்போது, (காயத்தின் ஆழத்தைக் கண்டறிவதற்காக) பேரீச்சம் பழச்சாறு கொண்டுவரப்பட்டது. அதை உமர் (ரலி) அவர்கள் அருந்தினார்கள். உடனே, அது அவர்களின் வயிற்றின் (காயத்தின்) வழியாக வெளியேறியது. (வெளியில் வந்தது பேரீச்சம் பழச் சாறா அல்லது உமரின் இரத்தமா என்று பாகுபடுத்த முடியாத விதத்தில் இரண்டும் ஒரே நிறத்தில் இருந்ததால்) பிறகு, பால் கொண்டுவரப்பட்டது. அதை அவர்கள் அருந்தினார்கள். அதுவும் காயத்தின் வழியாக (வெள்ளை நிறத்தில்) வெளியேறிவிட்டது. அப்போது அவர்கள் இறக்கும் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று மக்கள் அறிந்துகொண்டனர். அவர்களின் அருகே நாங்கள் சென்றோம். மக்கள் வந்து உமர் (ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்கள். ஓர் (அன்சாரி) இளைஞரும் வந்தார். அவர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடனான (உங்களுடைய) தோழமை, இஸ்லாத்தில் (உங்களுக்கிருக்கும்) நீங்களே அறிந்துள்ள சிறப்பு, பிறகு நீங்கள் (ஆட்சித் தலைவராகப்) பதவியேற்று (குடிமக்களிடையே) நீதியாக நடந்துகொண்டது, பிறகு (இப்போது) உயிர்த் தியாகம் (செய்யவிருப்பது) ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள நற்செய்தி கொண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள்” என்று கூறினார். (இதைக் கேட்ட) உமர் (ரலி) அவர்கள் “இவையெல்லாம் எனக்கு (சாதகமாக இல்லாவிட்டாலும் பாதகமாக இல்லாமலிருந்தாலே போதும். எனவே, இவை எனக்குச்) சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம். சரிக்குச் சமமாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று கூறினார்கள். அந்த இளைஞர் திரும்பிச் சென்றபோது அவரது கீழங்கி பூமியைத் தொட்டுக்கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், “அந்த இளைஞரை என்னிடத்தில் திரும்ப அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்தபோது), “எனது சகோதரரின் மகனே! உமது ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டுவீராக! இது உமது ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உம்முடைய இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும்” என்று கூறினார்கள். (பிறகு தம் மகனை நோக்கி), “உமரின் மகன் அப்துல்லாஹ்வே! என்மீது எவ்வளவு கடன் (பாக்கி) உள்ளது என்று பார்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் கணக்கிட்டுப் பார்த்தனர். எண்பத்தாறாயிரம் (திர்ஹம்/தீனார்) அல்லது அது போன்றது இருப்பதைக் கண்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “இந்தக் கடன்களை அடைப்பதற்கு உமரின் செல்வம் போதுமென்றால் அதிலிருந்து கொடுத்துவிடு. அவ்வாறு போதுமானதாக இல்லாவிட்டால் (நம் கூட்டத்தாரான) அதீ பின் கஅப் மக்களிடம் கேட்டு (வாங்கிக்)கொள். அவர்களது செல்வமும் போதுமானதாக இல்லாவிட்டால் (நமது குலமான) குறைஷிக் குலத்தாரிடம் கேட்டு (வாங்கிக்)கொள். இவர்களையும் தாண்டி வேறு யாரிடமும் செல்லாதே. (இவர்களிடம் கேட்டு வாங்கிய)பின், என் சார்பாக இந்தக் கடன்களை நீயே அடைத்துவிடு!. (பிறகு) இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நீ சென்று, “உமர் உங்களுக்கு சலாம் கூறுகிறார்' என்று கூறு. “இறைநம்பிக்கையாளர் களின் தலைவர்' (அமீருல் முஃமினீன்) என்று (என்னைப் பற்றிக்) கூறாதே. ஏனெனில், நான் இன்று (முதல்) இறைநம்பிக்கையாளர்களுக்கு (ஆட்சித்) தலைவன் அல்லன். மேலும், (அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம்) “உமர் தம்முடைய இரு தோழர்கள் (நபி (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) அடக்கம் செய்யப்பட்டுள்ள உங்களது அறையில் அவர்கள்) உடன் தம்மையும் அடக்கம் செய்வதற்கு (உங்களிடத்தில்) அனுமதி கோருகிறார்' என்று சொல்” எனக் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் உமர் (ரலி) அவர்களின் புதல்வர் சென்று சலாம் கூறி, (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்ட பிறகு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்ட செய்தி யறிந்து) அழுதுகொண்டு அமர்ந் திருப்பதைக் கண்டார். அப்போது, அவர் அவர்களைப் பார்த்து, “(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) தங்களுக்கு சலாம் கூறுகிறார். தம்முடைய இரு தோழர்களுடன் தம்மையும் அடக்கம் செய்வதற்குத் தங்களிடம் அனுமதி கேட்கிறார்” என்று கூறினார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “எனக்காக அ(ந்த இடத்)தை (ஒதுக்கிக் கொள்ள) நான் நினைத்திருந்தேன். (இப்போது அங்கு அடக்கம் செய்யப்படுவதற்கு) என்னைவிட அவருக்கே முதலிடம் கொடுத்துவிட்டேன். (அவரையே அந்த இடத்தில் அடக்கிக்கொள்ளுங்கள்)” என்று கூறினார்கள். பிறகு அவர் (உமர் (ரலி) அவர்களிடம்) திரும்பி வந்தபோது, “இதோ, உமர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் வந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. (ஒருக்களித்துப் படுத்திருந்த) உமர் (ரலி) அவர்கள், “என்னைத் தூக்கி உட்கார வையுங்கள்” என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) ஒருவர் தம்மோடு அவர்களை அணைத்துக்கொண்டு சாய்த்து அமர்த்தினார். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தம் மகனை நோக்கி), “உன்னிடம் என்ன (பதில்) உள்ளது?” என்று கேட்டார்கள். “நீங்கள் விரும்பியதுதான், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (ஆயிஷா (ரலி) அவர்கள்) அனுமதித்துவிட்டார்கள்” என்று அப்துல்லாஹ் கூறினார்கள். (அப்போது) “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இதுதான் எனக்குக் கவலையளித்துக்கொண்டிருந்தது. (இப்போது என் ஆசை நிறைவேறிவிட்டது.) நான் இறந்துவிட்டால் என்னைச் சுமந்து (என்னை அடக்கம் செய்யும் அந்த அறைக்குக்) கொண்டுசெல்லுங்கள். பிறகு ஆயிஷா அவர்களுக்கு நீ சலாம் சொல்லி, (அவர்களிடத்தில்) உமர் பின் அல் கத்தாப் (ரலி) (தம்முடைய இரு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்வதற்குத் தங்களிடத்தில்) அனுமதி கேட்கிறார்' என்று (மீண்டும் ஒருமுறை) சொல். அவர்கள் அனுமதித்தால், என்னை (அந்த அறைக்கு) உள்ளே கொண்டு செல்லுங்கள். அவர்கள் (அனுமதி தர) மறுத்தால் என்னை (மற்ற) முஸ்லிம்களின் (அடக்கத்தலங்கள் அமைந்திருக்கும் பொது) அடக்கத்தலத்திற்குத் திருப்பிக் கொண்டு சென்றுவிடுங்கள்” என்று கூறினார்கள். (உமர் (ரலி) அவர்கள் இருந்த அந்த இடத்திற்கு அவர்களின் மகள்) இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்களுடன் பல பெண்களும் வந்தனர். அவர்களை நாங்கள் கண்டபோது எழுந்துவிட்டோம். உமர் (ரலி) அவர்களிடத்தில் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வந்து, சிறிது நேரம் அவர்களுக்கு அருகில் அழுது கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்கள் (சிலர்) உமர் (ரலி) அவர்களிடத்தில் வர அனுமதி கோரினர். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் உடனே அவர்களுக்குள்ள நுழைவிடம் ஒன்றில் நுழைந்துகொண்டார்கள். உள்ளேயிருந்து அவர்கள் அழுகின்ற சப்தத்தை அப்போது நாங்கள் கேட்டோம். (அங்கிருந்த ஆண்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி), “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! தங்களுக்கு ஒரு பிரதிநிதியை அறிவித்து, இறுதி விருப்பம் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அந்தச் சிலர்தான் -அல்லது அந்தக் குழுவினர்தான்- இந்த (ஆட்சித் தலைமை) விஷயத்தில் (முடிவு செய்ய) வேறெவரைவிடவும் மிகத் தகுதி படைத்தவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்” என்று கூறிவிட்டு, அலீ (ரலி), உஸ்மான் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), தல்ஹா (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகி யோரின் பெயர்களையும் அப்போது குறிப்பிட்டார்கள். மேலும் உமர் (ரலி) அவர்கள், “உமரின் மகன் அப்துல்லாஹ்வும் உங்களுடன் இருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தப் பங்குமில்லை - இதை மகன் அப்துல்லாஹ்வுக்கு ஆறுதல் போலக் கூறினார்கள்.- தலைமைப் பதவி சஅத் (ரலி) அவர்களுக்குக் கிடைத்தால் அதற்கு அவர் அருகதையானவர்தான். அவ்வாறு அவருக்குக் கிடைக்கவில்லை யாயின், உங்களில் எவர் ஆட்சித் தலைவராக ஆக்கப்படுகிறாரோ அவர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் (ஆலோசனை) உதவி பெற்றுக்கொள்ளட் டும். ஏனெனில், நான் சஅத் (ரலி) அவர் களை, அவர் இயலாதவர் என்பதாலோ அல்லது மோசடி செய்துவிட்டார் என்பதாலோ (கூஃபா நகரின் ஆளுநர் பதவியிலிருந்து) பதவி நீக்கம் செய்யவில்லை. மேலும், “(இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து, அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று எனக்குப் பின்னர் (வரவிருக்கும்) ஆட்சித் தலைவருக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும், (நபி (ஸல்) மற்றும் நபித்தோழர்கள் ஆகிய) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தமது இருப்பிடமாகக் கொண்டு, இறைநம்பிக்கையை (உறுதியாக)ப் பற்றிக்கொண்ட அன்சாரிகளுக்கு நன்மையை(ப் புரியும்படி)யும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன். அவர்களில் நன்மை புரிபவரிடமிருந்து (அவரது நன்மை) ஏற்கப்பட்டு, அவர்களில் தவறிழைப்பவர் மன்னிக்கப்பட வேண்டும். (இதே போல) நகர்ப்புற மக்களுக்கும் நன்மையை(ச் செய்யும்படி)யும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்கள் இஸ்லாத்திற்கு உறுதுணை ஆவர்; நிதி திரட்டித் தருபவர்களாகவும், எதிரிகளை (தங்களது வீரத்தாலும் பெரும் எண்ணிக்கையாலும்) ஆத்திரமடையச் செய்பவர்களாகவும் உள்ளனர். அவர்களிடமிருந்து அவர்களின் (தேவை களுக்குப் போக) எஞ்சியதை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். அதையும் அவர் களின் சம்மதத்துடன்தான் எடுக்க வேண்டும். மேலும், கிராமப்புற அரபுகளுக்கும் நன்மையே புரியும்படியும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்களே பூர்வீக அரபியரும், இஸ்லாத் தின் அடிப்படையும் ஆவார்கள். அவர் களுடைய செல்வத்தில் மலிவானவை மட்டுமே பெறப்பட்டு அவர்களிடையே யுள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதரின் பொறுப்பிலும் இருப்பவர்க(ளான முஸ்லிமல்லாதவர்க)ளுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் (அவர்களுடைய எதிரிகள் அவர்களைத் தாக்க வரும்போது) அவர்களுக்குப் பின்னாலிருந்து அவர்களுக்காகப் போர் புரிய வேண்டுமெனவும், (காப்பு வரி விதிக்கும்போது) அவர்களது சக்திக்கேற்பவே தவிர அவர்கள் சிரமத்திற் குள்ளாக்கப்படக் கூடாது எனவும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.66 (கத்திக்குத்துக்கு உள்ளாகி மூன்று நாள்களுக்குப் பிறகு) உமர் (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு அவர்களைத் தூக்கிக்கொண்டு (அவர்களது இல்லத்திலிருந்து) நாங்கள் புறப்பட்டோம். (ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்கு) வந்து சேர்ந்தோம். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களுக்கு) சலாம் சொன்னார்கள். பிறகு, “(உங்களுக்குரிய அறையில் தம் இரு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்ய என் தந்தை) உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள் (உங்களிடம்) அனுமதி கோருகிறார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “அவர்களை உள்ளே கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் (உடைய உடல்) உள்ளே கொண்டுசெல்லப்பட்டு அந்த இடத்தில் அவர்களுடைய இரு தோழர்களுக்கு அருகில் வைக்கப்பட்டது. அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறுபேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களது உரிமையை உங்களில் மூன்று பேரிடம் ஒப்படையுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஸுபைர் (ரலி) அவர்கள், “எனது அதிகாரத்தை அலீ (ரலி) அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்” என்று கூறினார்கள். பிறகு தல்ஹா (ரலி) அவர்கள், “எனது அதிகாரத்தை நான் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்” என்று கூறினார்கள். பிறகு சஅத் (ரலி) அவர்கள், “எனது அதிகாரத்தை நான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்” என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அலீ (ரலி) அவர்களையும் உஸ்மான் (ரலி) அவர்களையும் நோக்கி), “உங்கள் இருவரில் யார் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக்கொள்(ள முன்வரு)கிறாரோ அவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம். அல்லாஹ்வும் இஸ்லாமும் அவர்மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள். அப்போது இரு மூத்தவர்(களான உஸ்மான் (ரலி) அவர்களும், அலீ (ரலி) அவர்)களும் மௌனமாக இருந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லையென்பதை அல்லாஹ் கண்காணித்துக்கொண்டேயிருக்கிறான்” என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் “ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)” என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவருடைய (அலீ (ரலி) அவர்களுடைய) கையை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் பிடித்துக்கொண்டு “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டே யிருக்கின்றான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்துகொள்வீர்கள். உஸ்மான் (ரலி) அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்” என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) தனியே வந்து அலீ (ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) கூறினார்கள். (இரு மூத்தவர்களிடமும்) வாக்குறுதி வாங்கியபின், “உஸ்மான் அவர்களே! தங்களது கையைத் தாருங்கள்” என்று கூறி (உஸ்மான் (ரலி) அவர்களது கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்துகொடுத்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனாவாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்துகொடுத்தார்கள். அத்தியாயம் :

51

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போரின்போது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் அளிக்கப்போகிறேன். அவருடைய கரங்களில் அல்லாஹ் வெற்றியை அளிப்பான்” என்று சொன்னார்கள். ஆகவே, மக்கள் தம்மில் யாரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கி யிருந்தனர். காலையில் மக்களில் ஒவ்வொருவரும் தம்மிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றனர். நபி (ஸல்) அவர்கள், “அலீ பின் அபீதாலிப் எங்கே?” என்று கேட்டார்கள். மக்கள், “அவருக்குக் கண்வலி அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் வந்தவுடன் அவர்களுடைய இரு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்குமுன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந் தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும்வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவர்களின் களத்தில் இறங்கும்வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். இஸ்லாத்தில் அவர்கள் மீது கடமையாகின்ற அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நல்வழியை அளிப்பது (அரபியரின் அருஞ்செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை)விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.70 அத்தியாயம் :

52

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேனே” என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள் புறப்பட்டு (வந்து) நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். எந்த நாளின் காலைப் பொழுதில் கைபரை அல்லாஹ் வெற்றி கொள்ளச் செய்தானோ அதற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற- அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற- ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப்போகிறேன்- அல்லது அத்தகைய ஒரு மனிதர் இக்கொடியைப் பிடித்திருப்பார்- என்று சொல்லிவிட்டு, “அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், “இதோ, அலீ அவர்கள்!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.71 அத்தியாயம் :

53

அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் சஹ்ல் பின் சஅத் (ரó) அவர்களிடம் வந்து, “இன்னவர் - அதாவது மதீனாவின் ஆளுநர் (மர்வான் பின் அல்ஹகம்) அலீ (ரலி) அவர்களைச் சொற்பொழிவு மேடைக்கருகில் (விரும்பத் தகாத பெயரால்) அழைக்கிறார்” என்று சொன்னார். சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள், “அவர் (அப்படி) என்ன சொன்னார்?” என்று கேட்க அம்மனிதர், “அபூதுராப் (மண்ணின் தந்தை) என்று அழைக்கிறார்” என்று பதிலளித்தார். இதைக் கேட்டு சஹ்ல் (ரலி) அவர்கள் சிரித்துவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள்தான் அலீ (ரலி) அவர்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அலீ (ரலி) அவர்களுக்கு அதைவிடப் பிரியமான ஒரு பெயர் எதுவும் இருந்ததில்லை” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸை முழுமையாகச் சொல்லும்படி நான் சஹ்ல் (ரலி) அவர்களிடம் கேட்டுக்கொண்டு, “அபுல் அப்பாஸ் (சஹ்ல் பின் சஅத்) அவர்களே! அது எப்படி?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: (ஒருமுறை) அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். பிறகு (அலீ - ஃபாத்திமா இடையே மனஸ்தாபம் ஏற்படவே) வெளியே வந்து பள்ளிவாசலில் படுத்துக்கொண்டார்கள். (அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்த) நபி (ஸல்) அவர்கள், உன் (தந்தையுடைய) பெரிய தந்தை மகன் (அலீ) எங்கே” என்று கேட்க அவர்கள், “பள்ளிவாசலில் இருக்கிறார்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களின் மேல்துண்டு அவர்களுடைய முதுகிலிருந்து (தரையில்) விழுந்துவிட்டிருப்பதையும் (தரையிலுள்ள) மண் அவர்களுடைய முதுகில் ஒட்டிக்கொண்டிருப்பதையும் கண்டு அவர்களுடைய முதுகிலிருந்து மண்ணைத் துடைக்கலானார்கள். அப்போது, “(எழுந்து) அமருங்கள், அபூதுராப் (மண்ணின் தந்தை) அவர்களே!” என்று (நபி (ஸல்) அவர்கள்) இருமுறை சொன்னார்கள்.72 அத்தியாயம் :

54

சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றிக் கேட்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களின் நற்செயல்களை எடுத்துரைத்தார்கள். (பிறகு) அந்த மனிதரிடம், “நான் சொன்னவை உமக்கு எரிச்சலூட்டியிருக்குமே!” என்று சொன்னார்கள். (ஏனெனில் அந்த மனிதர் குறை காணும் நோக்கத்துடன் வந்திருந்தார்.) அதற்கு அந்த மனிதர், “ஆம்” என்று பதிலளித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ் உன் மூக்கில் மண்படியச் செய்யட்டும்” என்று சொன்னார்கள். பிறகு அந்த மனிதர் அலீ (ரலி) அவர்களைப் பற்றிக் கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் நற்செயல்களைத் எடுத்துரைத்துவிட்டு, “அவர்கள் அவ்வாறுதான்; அவர்களது இல்லம் நபி (ஸல்) அவர்களுடைய (குடும்பத்தாரின்) வீடுகளுக்கு நடுவில் இருந்தது” என்று கூறினார்கள். பிறகு, “நான் சொன்னது உமக்கு எரிச்சலூட்டியிருக்குமே!” என்று கேட்டார் கள். அதற்கு அம்மனிதர், “ஆம்” என்று பதிலளித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ் உன் மூக்கில் மண்படியச் செய்யட்டும். போ! போய் (நான் இப்படி உண்மையைச் சொன்னதற்காக என்னை நீ தண்டிக்க விரும்பினால்) எனக்கெதிராக உன்னால் ஆனதைச் செய்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

55

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா முறையிட்டார். (இந்நிலையில்) நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டுவரப்பட்டனர். அப்போது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வீட்டு வேலைக்காகக் கைதி எவரையாவது கேட்டு வாங்கிவரச்) சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை; ஆயிஷா (ரலி) அவர்களைத்தான் அங்கே கண்டார். ஆகவே, (தாம் வந்த நோக்கத்தை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்ததைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அதற்குள் நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். (நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்து நிற்கப் போனேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (இருவரும்) உங்கள் இடத்திலேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு எங்களுக்கிடையே (வந்து) அமர்ந்துகொண்டார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களுடைய கால்களின் குளிர்ச்சியை நான் என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். பிறகு, “நீங்கள் இருவரும் என்னிடம் கோரிய (உதவி)தனைவிடச் சிறந்த ஒன்றை உங்கள் இருவருக்கும் நான் கற்றுத்தரட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்கையில் முப்பத்து நான்கு முறை “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை “சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை “அல்ஹம்து லில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொல்லுங்கள். அது ஒரு பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.73 அத்தியாயம் :

56

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “(நபி) ஹாரூன் அவர்களுக்கு (அவர்களின் சகோதரர்-நபி) மூசா அவர்களிடம் எந்த இடம் இருந்ததோ அதே இடத்தில் நீங்கள் என்னிடம் இருப்பதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்.74 அத்தியாயம் :

57

அபீதா பின் அம்ர் அஸ்ஸல் மானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் (இராக் வந்திருந்தபோது இராக் அறிஞர்களிடம் “உம்முல் வலதை' விற்கலாம் என்று கருத்துத் தெரிவிக்க, அதை நான் விரும்பாதபோது), பின்வருமாறு கூறினார்கள்: நீங்கள் முன்பு (உமர் (ரலி) அவர் களின் கருத்துப்படி உம்முல் வலதை விற்கக் கூடாது என்று) தீர்ப்பளித்துவந்ததைப் போன்றே இனிமேலும் தீர்ப்பளித்துவாருங்கள். ஏனெனில், (மக்களிடையே சச்சரவுகளுக்குக் காரணமாய் அமையும் வகையில் அறிஞர்களுக்கிடையிலான) கருத்து வேறுபாடுகளை (பகிரங்கமாக்குவதை) நான் விரும்பவில்லை.75 மக்கள் அனைவரும் (ஒத்த கருத்துடைய) ஒரே குழுவினராய் ஆகும்வரை, அல்லது என் தோழர்கள் இறந்துவிட்டதைப் போல் நானும் இறந்துவிடும்வரை நான் இவ்வாறே (கருத்து வேறுபாடுகளைப் பகிரங்கப்படுத்த விரும்பாதவனாக) இருப்பேன். “அலீ (ரலி) அவர்களிடமிருந்து (வந்த தாக ஷியாக்கள் மூலம்) அறிவிக்கப்படு கின்றவற்றில் பெரும்பாலானவை பொய்கள்தான்” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள்.76 அத்தியாயம் :

58

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபிமொழிகளை) அதிகமாக அபூஹுரைரா அறிவிக்கிறாரே” என்று மக்கள் (என்னைப் பற்றிக் குறை) கூறிக் கொண்டிருந்தார்கள். நான் என் பசி அடங்கினால் போதும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். புளித்து உப்பிய (உயர்தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; கோடுபோட்ட அழகிய (உயர்ந்த) துணியை நான் அணிவதுமில்லை. இன்னின்னவர் எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை. பசியின் காரணத்தால் நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக்கொண்டிருந்தேன். என்னை ஒரு மனிதர் (தமது இல்லத் திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு அவர் உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக (“எனக்கு விருந்தளி யுங்கள்' என்ற பொருள் கொண்ட “அக்ரினீ' என்னும் சொல்லை சற்று மாற்றி)” அக்ரிஃனீ' (எனக்கு ஓர் இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்) என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும்.79 —அஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஏழைகளுக்கு மிகவும் உதவி செய்பவர்களாயிருந்தார். அவர் எங்களை அழைத்துச் சென்று தம் வீட்டில் இருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவுக்கென்றால் அவர் எதுவுமில்லாத (காலியான) நெய்ப் பையை எங்களிடம் கொண்டுவந்து அதைப் பிளந்துவிடுவார். நாங்கள் அதில் (ஒட்டிக்கொண்டு) இருப்பதை நக்கி உண்போம். அத்தியாயம் :

59

ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், ஜஅஃபர் (ரலி) அவர்களின் மகனா(ர் அப்துல்லாஹ் பின் ஜஅஃப)ருக்கு சலாம் சொன்னால், “இரு சிறகுகள் உடைய வரின் மகனே! உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்' என்று சொல்வார்கள்.80 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: “இரு சிறகுகள்' என்பது “இரு பக்க (பல)ங் களைக்' குறிக்கும். அத்தியாயம் :

60

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களை (அல்லாஹ் விடம்) மழைகோரிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள். (அத்தகைய சந்தர்ப்பங்களில்) உமர் (ரலி) அவர்கள், “இறைவா! நாங்கள் எங்கள் நபி (ஸல்) அவர்கள் (உயிருடன் இருந்தபோது அவர்கள் உன்னிடம் பிரார்த்தித்ததன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரிவந்தோம். அப்போது (அதை ஏற்று) நீயும் எங்களுக்கு மழை பொழியச் செய்துவந்தாய். இப்போது எங்கள் நபியின் தந்தையின் சகோதரர் (அப்பாஸ் (ரலி) அவர்கள் உன்னிடம் பிரார்த்திப்பதன்) வாயிலாக உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகின்றோம். எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக!” என்று கேட்பார்கள். அதன்படியே மக்களுக்கு மழை பொழிந்துவந்தது.82 அத்தியாயம் :

61

62

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்துவாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.) இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

63

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவர் ஆவார். இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.88 அத்தியாயம் :

64

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, தம் மகள் ஃபாத்திமாவை அழைத்து அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார் கள். (நபி (ஸல்) அவர்கள் சொன்னதைக் கேட்டு) ஃபாத்திமா அழுதார். மீண்டும் ஃபாத்திமாவை நபி (ஸல்) அவர்கள் அழைத்து எதையோ இரகசியமாகக் கூறினார்கள். (அதைக் கேட்டவுடன்) ஃபாத்திமா சிரித்தார். நான் அதைப் பற்றி (நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னது என்ன என்று) அவரிடம் கேட்டேன்.89 அத்தியாயம் :

65

மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது: “சில்லு மூக்கு' நோய் (பரவலாக ஏற்பட்ட) ஆண்டில்93 உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுக்கும் மூக்கில் கடுமையாகக் குருதி கொட்டும் நோய் ஏற்பட்டது. எந்த அளவுக்கென்றால் அது அவர்களை ஹஜ் செய்ய விடாமல் தடுத்துவிட்டது. அவர்கள் தம் இறுதி விருப்பத்தையும் தெரிவித்து (மரண சாசனம் செய்து)விட்டார்கள். அப்போது குறைஷியரில் ஒரு மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்து, “(உங்களுக்குப்பின்) பிரதிநிதி ஒருவரை நியமியுங்கள்” என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், “மக்கள் (இப்படி நியமிக்கச்) சொன்னார்களா?” என்று கேட்க அம்மனிதர், “ஆம்” என்றார். “யாரை நியமிப்பது?” என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்க, அவர் (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்தார். அப்போது இன்னொரு மனிதர் வந்தார். -அவர் (என் சகோதரர்) ஹாரிஸ் (பின் ஹகம்) என்று நான் நினைக்கிறேன் -அவரும், “(உஸ்மான் (ரலி) அவர்களே! உங்களுக்குப்பின்) ஒரு கலீஃபாவை (பிரதிநிதியை) நியமியுங்கள்” என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், “மக்கள் (இப்படிச்) சொன்னார்களா?” என்று கேட்க அவர், “ஆம்” என்று பதிலளித்தார். உஸ்மான் (ரலி) அவர்கள், “யாரை நியமிப்பது?” என்று கேட்க. அந்த மனிதர் (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்துவிட்டார். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள், “அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை (கலீஃபாவாக நியமிக்கச்) சொல்லியிருக்கலாம்” என்று சொல்ல, அந்த மனிதர், “ஆம்” என்று பதிலளித்தார். உஸ்மான் (ரலி) அவர்கள், “என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! நான் அறிந்தவரை ஸுபைர் (ரலி) அவர்களே மக்களில் சிறந்தவர். (யாரை கலீஃபாவாக நியமிக்கலாம் என்று மக்கள் ஆலோசனை சொன்னார்களோ) அவர்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான வராக அவர் இருந்தார்” என்று சொன் னார்கள். அத்தியாயம் :

66

மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்தபோது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, “(உங்களுக்குப்பின் ஆட்சி செய்ய) ஒரு பிரதிநிதியை நியமியுங்கள்” என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், “அவ்வாறு (மக்களால்) கூறப்பட்டதா?” என்று கேட்க அம்மனிதர், “ஆம்; ஸுபைர் (ரலி) அவர்களைத்தான் (கலீஃபாவாக ஆக்கும்படி மக்கள் சொல்கிறார்கள்)” என்று பதில் சொன்னார். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவரே உங்களில் சிறந்தவர் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள்” என்று மூன்று முறை கூறினார்கள்.94 அத்தியாயம் :

67

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு பிரத்யேக உதவியாளர் (ஹவாரிய்யு) உண்டு. என் பிரத்யேக உதவியாளர் ஸுபைர் பின் அல்அவ்வாம் ஆவார்.95 இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.96 அத்தியாயம் :

68

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது நானும் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் (நபி (ஸல்) அவர்களின் வீட்டுப்) பெண்களி டையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப் பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்கள் தமது குதிரையில் ஏறி (யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு- அல்லது மூன்று- முறை போய் வந்துகொண்டி ருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, “என் தந்தையே! தாங்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருந் ததை நான் பார்த்தேன்” என்று சொன்னேன். அவர்கள், “என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!” என்று கேட்டார்கள். நான், “ஆம் (பார்த்தேன்)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களுடைய செய்தியைக் கொண்டு வருபவர் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்துகொண்டு) திரும்பி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையர் இருவரை யும் சேர்த்து, “என் தந்தையும் என் தாயும் உமக்கு அர்ப்பணமாகட்டும்' எனக் கூறினார்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

69

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் யர்மூக் போரின் போது,97 “நீங்கள் (கிழக்கு ரோமானிய இணைவைப்போர்மீது) தாக்குதல் நடத்த மாட்டீர்களா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவோமே” என்று கேட்டார்கள். ஆகவே, ஸுபைர் (ரலி) அவர்கள், இணைவைப்போர்மீது தாக்குதல் தொடுத்தார்கள். இணைவைப்பாளர்கள் ஸுபைர் (ரலி) அவர்களுடைய தோளின் மீது இரண்டு முறை வெட்டினார்கள். அவ்விரண்டுக்கும் இடையே பத்ர் போரில் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னொரு காயம் இருந்தது. நான் சிறுவனாயிருந்தபோது அந்த காயங்(களால் ஏற்பட்ட துளை போன்ற வடுக்)களுக்கிடையே என் விரல்களை நுழைத்து விளையாடிவந்தேன். அத்தியாயம் :

70

தல்ஹா (ரலி) அவர்களும் சஅத் (ரலி) அவர்களும் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் (இணைவைப் பாளர்களுடன்) போரிட்ட அந்த (உஹுத் போரின்) நாட்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை.100 இதை, அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் தல்ஹா (ரலி) மற்றும் சஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

71

கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (உஹுத் போரின்போது) நபி (ஸல்) அவர்களை (நோக்கி வந்த அம்புகள் மற்றும் ஈட்டிகளிலிருந்து அவர்களைக் கேடயம் போன்று நின்று) காத்த தல்ஹா (ரலி) அவர்களின் கையை (துளைகளும் வடுக்களும் நிறைந்து) ஊனமுற்றதாக நான் பார்த்தேன். அத்தியாயம் :

72

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(எனது வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (“என் தந்தையும் என் தாயும் உமக்கு அர்ப்பணமாகட்டும்'என)ச் சொன்னார்கள்” என்று சஅத் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். அத்தியாயம் :

73

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக என்னை நான் கண்டேன்.102 அத்தியாயம் :

74

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளில் (தான் மற்றவர்களும் இஸ்லாத்தைத் தழுவினர். அந்நாளில்) தவிர (அதற்கு முன்பு) வேறெவரும் இஸ்லாத்தைத் தழுவிடவில்லை.103 நான் இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக ஏழு நாட்கள் (வரை) இருந்தேன்”104 என்று சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

75

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் பாதையில் அம் பெய்த அரபியரில் நானே முதலாமவன் ஆவேன்.105 எங்களுக்கு மரத்தின் இலைகளைத் தவிர வேறு உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து அறப்போர் புரிந்துவந்தோம். எனவே, நாங்கள் ஒட்டகங்களும் ஆடுகளும் கெட்டிச் சாணியிடுவதைப் போன்று ஒன்றோ டொன்று ஒட்டாமல் மலம் கழித்துவந்தோம். பிறகு (கூஃபாவாசிகளான) “பனூ அசத்' குலத்தார் (நான் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று என்னுடைய) இஸ்லாம் விஷயத்தில் என்னைக் குறை கூறலானார்கள். (அப்படியானால், இது வரை) நான் செய்துவந்த வழிபாடு வீணாகி, நான் இழப்புக்குள்ளாகிவிட்டேன் (போலும் என்று வருந்தினேன்). அதைக் குறித்து அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் புகார் செய்திருந்தார்கள், “இவர் முறையாகத் தொழுவிப்பதில்லை” என்று (உமர் (ரலி) அவர்களிடம்) அவர்கள் சொன்னார்கள்.106 அத்தியாயம் :

76

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள், (ஃபாத்திமா இருக்கவே,) அபூஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண்பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள் களுக்காக (அவர்கள் மனத் துன்பத்திற்கு ஆளாக்கப்படும்போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்” என்று சொன் னார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்ற) எழுந்தார் கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “இறைவாழ்த்துக்குப்பின்! அபுல்ஆஸ் பின் அர்ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தம் மனைவியைத் திருப்பி அனுப்பிவிடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்துகொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்றுசேர முடியாது” என்று சொன்னார்கள்.109 எனவே, அலீ (ரலி) அவர்கள் (அபூஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டுவிட்டார்கள். மற்றோர் அறிவிப்பில், மிஸ்வர் (ரலி) அவர்கள் கூடுதலாகக் கூறியிருப்பதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் உரையைச் செவியுற்றேன். அவர்கள் பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம்முடைய மருமகன் ஒருவரை (அபுல் ஆஸை) நினைவுகூர்ந்து அவர் (அவருடைய மாமனாரான) தம்முடன் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைப் பாராட்டிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது அவர்கள், “அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்துகொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார், அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்” என்று சொன் னார்கள். அத்தியாயம் :

77

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உசாமா (ரலி) அவர்களின் தலைமையைக் குறைகூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறைகூறுகிறீர்கள் என்றால்- (இது ஒன்றும் புதிதல்ல). இதற்குமுன் (மூத்தா போரின்போது) இவருடைய தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறைகூறிக் கொண்டிருந்தீர்கள்.112 அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவருடைய மகனான) இவர் (உசாமா)தான் அவருக்குப்பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

78

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, என்னிடம் (இருவரின் சாயலை வைத்து) உறவு முறையை கணிப்பவர் ஒருவர் வந்தார். உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களும், ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் அப்போது ஒருக்களித் துப் படுத்திருந்தார்கள். அந்த மனிதர் (இருவரின் கால்களையும் பார்த்து), “இந்தக் கால்கள் (ஒன்றுக்கொன்று உறவுள்ளவை;) ஒன்று மற்றொன்றிருந்து தோன்றியவை” என்று சொன்னார். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைந்து அவரை வியந்தார்கள்; அதை எனக்குத் தெரிவித்தார்கள்.113 அத்தியாயம் :

79

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (திருட்டுக் குற்றத்தின் காரணமாக கை வெட்டும் தண்டனைக்கு உள்ளாக விருந்த) மக்ஸூமீ குலத்துப் பெண்ணொருத்தியின் விஷயம் குறைஷியரைக் கவலையில் ஆழ்த்தியது. அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப்பிள்ளையான உசாமா (ரலி) அவர்களைத் தவிர வேறெவர் அவர்களிடம் துணிச்சலுடன் (தண்டனையைத் தளர்த்துவது குறித்துப்) பேச முடியும்” என்று (தமக்குள்) பேசிக்கொண்டார்கள்.115 அத்தியாயம் :

80

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருடிவிட்டாள். மக்கள், “அவள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களிடம் (தண்டனையைத் தளர்த்தும்படி பரிந்து) பேசுவது யார்?” என்று (தமக்குள்) விசாரித்துக்கொண் டனர். எவரும் நபி (ஸல்) அவர்களிடம் பேசத் துணியவில்லை. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவாகளிடம் (அது குறித்துப் பரிந்து) பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இஸ்ரவேலர்கள் தம்மிடையேயுள்ள வலியவர் (உயர் குலத்தவர்) எவரேனும் திருடிவிட்டால் அவரைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார்கள்; தம்மிடையேயுள்ள பலவீனர் எவரேனும் திருடிவிட்டால் அவரது கையைத் துண்டித்து விடுவார்கள். திருடியவர் (என் மகள்) ஃபாத்திமாவாகவே இருந்தாலும்கூட அவரது கையை நான் துண்டித் திருப்பேன்” என்று சொன்னார்கள்.116 அத்தியாயம் :

81

அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் பள்ளிவாசலில் இருந்தபொழுது பள்ளிவாசலின் ஒரு மூலையில் தமது ஆடையை (மண்ணில் புரளும்படி) இழுத்துக்கொண்டே சென்றுகொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தார்கள். உடனே, “இவர் யார் என்று பார். இவர் எனக்கு அருகில் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே? (நான் இவருக் குப் புத்திமதி சொல்லியிருப்பேனே)” என்று சொன்னார்கள். அவர்களிடம் ஒரு மனிதர், “அபூஅப்திர் ரஹ்மான் (இப்னு உமர்) அவர்களே! இவரை உங்களுக்குத் தெரியாதா? இவர்தான் உசாமா (ரலி) அவர்களின் மகன் முஹம்மத்” என்று சொன்னார். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது தலையைத் தாழ்த்திக் கொண்டு தம் கையால் தரையில் (கொத்துவது போல்) தட்டியபிறகு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவரைப் பார்த்தால் இவரை நேசிப் பார்கள்” என்று சொன்னார்கள்.117 அத்தியாயம் :

82

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சிறுவர்களா யிருந்த) என்னையும் ஹசன் (ரலி) அவர்களையும் கையிலெடுத்து, “இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!” என்று பிரார்த்திப் பார்கள். அத்தியாயம் :

83

உசாமா பின் ஸைத் (ரலி) அவர் களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உம்மு அய்மனின் மகனான அய்மனின் மகன் ஹஜ்ஜாஜ் என்பவர் (பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தபோது) தம் ருகூவையும் சுஜூதையும் முழுமையாகச் செய்யாமலிருப்பதைக் கண்டு இப்னு உமர் (ரலி) அவர்கள், “மீண்டும் தொழுங்கள்” என்று சொன்னார்கள். உம்மு அய்மனின் மகனான அய்மன், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரராய் இருந்தார்; மேலும் அன்சாரிகளில் ஒருவராகவும் இருந்தார். அத்தியாயம் :

84

உசாமா பின் ஸைத் (ரலி) அவர் களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஹஜ்ஜாஜ் பின் அய்மன் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்(து தொழு)தார். அப்போது அவர் தமது ருகூவையும் முழுமையாக நிறைவேற்றவில்லை; தன் சுஜூதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜை நோக்கி), “திரும்பத் தொழுங்கள்” என்று சொன்னார்கள். அவர் திரும்பிச் சென்றபோது என்னிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள், “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான், “உம்மு அய்மனின் மகன் அய்மனுடைய மகன் ஹஜ்ஜாஜ்தான் இவர்” என்று சொன்னேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “இவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்திருந்தால் நேசித்திருப்பார்கள்” என்று சொன்னார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள், (உசாமா (ரலி) அவர்களின் மீது) கொண்டிருந்த நேசத்தையும் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் பெற்றெடுத்த (மற்ற) பிள்ளைகளின் மீது கொண்டிருந்த நேசத்தையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். அறிவிப்பாளர் சுலைமான் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உம்மு அய்மன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாயாக இருந்தார்கள். அத்தியாயம் :

85

86

ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு நல்ல மனிதர்” என்று சொன்னார்கள். இதைத் தம் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

87

அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். (அங்கு பள்ளிவாசலுக்குச் சென்று) இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு, “இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரைக் கொடு” என்று பிரார்த் தித்தேன். பிறகு ஒரு கூட்டத்தாரிடம் சென்று அவர்களிடம் அமர்ந்தேன். அப்போது முதியவர் ஒருவர் வந்து என் பக்கத்தில் அமர்ந்தார். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். மக்கள், “(இவர்தான் நபித்தோழர்) அபுத்தர்தா” என்று பதிலளித்தார்கள். நான், அபுத்தர்தா (ரலி) அவர்களை நோக்கி, “எனக்கு ஒரு நல்ல நண்பரை அறிவிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். ஆகவே, அவன் உங்களை எனக்குக் கொடுத்திருக்கிறான்” என்று சொன்னேன். அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், “நீங்கள் எந்த ஊர்க்காரர்?” என்று கேட்டார்கள். நான், “கூஃபாவாசி” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “நபியவர்களின் காலணிகளையும் தலையணையையும் தண்ணீர்க் குவளையையும் சுமந்து வந்த உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்) உங்க ளிடையே இல்லையா? தன் நபியின் வாயால் எவரை அல்லாஹ் ஷைத்தானிட மிருந்து காப்பாற்றினானோ அவர் (அம்மார்-ரலி) உங்களிடையே இல்லையா? மேலும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங் களை அறிந்தவர் (ஹுதைஃபா-ரலி) உங்களிடையே இல்லையா?” என்று கேட்டுவிட்டு, பிறகு, “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், “வல்லய்லி இதா யஃக்ஷா' என்று தொடங்கும் (திருக்குர்ஆனின் 92ஆம் அத்தியாயம் அல்லைலின்) இறைவசனங்களை எப்படி ஓதுகின்றார்” என்று கேட்டார்கள். நான், “அவர்களுக்கு, “வல்லய்லி இதா யஃக்ஷா வந்நஹாரி இதா தஜல்லா வத்தகரி வல்உன்ஸா' (இப்படித்தான் ஓதுவார்கள்) என்று ஓதிக்காட்டினேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அதை எனக்கு நபி (ஸல்) அவர்கள் தமது வாயால் (இவ்வாறே) ஓதிக்காட்டினார்கள்” என்றார்கள்.121 அத்தியாயம் :

88

அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரு ரக்அத்கள் தொழு)ததும் “இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தித் தேன். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள் “நீங்கள் எந்த ஊர்க்காரர்?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “கூஃபாவாசி' என்றேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “(நபி (ஸல்) அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங் களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?” என்று ஹுதைஃபா (ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், “ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், “தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?” என்று கேட்டார். - அம்மார் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள்- நான், “ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் (பல் துலக்கும்) “மிஸ்வாக்' குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்- அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்- (இப்னு மஸ்ஊத் -ரலி) அவர்கள் உங்களிடம் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) அவர்கள் “வல்லய்லி இதா யஃக்ஷா வந்நஹாரி இதா தஜல்லா' என்னும் (அத்தியாயம் அல்லைலின்) வசனங்களை எப்படி ஓதினார்கள்?” என்று கேட்க, “வத்தகரி வல்உன்ஸா” என்று (“வமா கலக்க' என்னும் சொல் இல்லாமல் தான் ஓதுவார்கள் என) நான் பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “(ஷாம் நாட்டினரான) இவர்கள், நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஒரு விஷயத்தை (ஓதும் முறையை) விட்டுக்கொடுத்துவிடும்படி என்னை எச்சரிக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.122 இதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

89

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நமது நம்பிக்கைக் குரியவர் அபூஉபைதா பின் அல்—ர்ராஹ் அவர்கள்தான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

90

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான்வாசிகளிடம், “நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்” என்று சொன் னார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த “அமீன்' என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள்.124 அத்தியாயம் :

91

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது (உரையாற்றியபடி) இருக்க ஹசன் (ரலி) அவர்கள், நபி (ஸல்)அவர்களின் பக்கவாட்டில் அமர்ந்திருந் தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களையும் மறுமுறை ஹசன் (ரலி) அவர்களையும் நோக்கியபடி, “இந்த என் (மகளின்) மகன் மக்களின் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்த விருக்கிறான்” என்று சொல்ல நான் கேட்டேன்.128 அத்தியாயம் :

92

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சிறுவர்களாயிருந்த) என்னையும் ஹசன் (ரலி) அவர்களையும் (கையில்) எடுத்து, “இறைவா! நான் இவ்விருவரையும் நேசிக்கிறேன். நீயும் இவ்விருவரையும் நேசிப்பாயாக” என்று கூறினார்கள்.129 அத்தியாயம் :

93

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களுடைய மகன் ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டபின்) அவர்களின் தலை, உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் கொண்டுவரப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டது. உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ஒரு கைக் குச்சியால் அதன் மூக்கிலும் கண்ணிலும்) குத்தத் தொடங்கினான். மேலும் ஹுசைன் (ரலி) அவர்களின் அழகைக் குறித்து ஏதோ சொன்னான்.130 அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிலேயே ஹுசைன் (ரலி) அவர்கள்தான் தோற்றத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிக ஒப்பானவர்களாய் இருந்தார்கள். “வஸ்மா' என்னும் ஒரு வகை மூலிகையால் தமது (தாடிக்கும் முடிக்கும்) சாயமிட்டிருந்தார்கள். அத்தியாயம் :

94

பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அலீ (ரலி) அவர்களின் மகன் ஹசன் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோள்மீது அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!” என்று பிரார்த்திக்கக் கண்டேன். அத்தியாயம் :

95

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களைச் சுமந்தபடி, “என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் (உங்கள் பாட்டனார்) நபி (ஸல்) அவர்களைத்தான் (உருவ அமைப்பில்) ஒத்திருக்கிறீர்கள். (உங்கள் தந்தையான) அலீ அவர்களை ஒத்திருக்கவில்லை” என்று சொல்லக் கண்டேன். அப்போது அலீ (ரலி) அவர்கள் (அதைக் கேட்டு) சிரித்துக்கொண்டிருந்தார்கள்.131 அத்தியாயம் :

96

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்துவாருங்கள்; அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்) என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.132 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

97

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹசன் பின் அலீ (ரலி) அவர்களை விட நபி (ஸல்) அவர்களை (உருவ அமைப்பில்) ஒத்தவர்களாக வேறெவரும் இருக்கவில்லை.133 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

98

அப்துர் ரஹ்மான் பின் அபீ நுஅம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (இராக்வாசி) ஒருவர் இஹ்ராம் கட்டியவரைக் குறித்து வினவினார். -அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், “இஹ்ராம் கட்டியவர் ஈயைக் கொல்வது (அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது) குறித்துக் கேட்டார் என எண்ணுகிறேன்” என்று கூறுகிறார்- அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இராக்வாசிகள் ஈயைக் (கொல்ல அனுமதியுண்டா இல்லையா என்பது) குறித்துக் கேட்கிறார்கள். அவர்களோ ஏற்கெனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளின் மகனை (ஹுசைனை)க் கொன்றுவிட்டார்கள். (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் இருவரும் (ஹசன் (ரலி) அவர்களும் ஹுசைன் (ரலி) அவர்களும்) உலகின் இரு துளசி மலர்கள் ஆவர்” என்று (அவர்களைக் குறித்து) சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.134 அத்தியாயம் :

99

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள், “அபூபக்ர் எங்கள் தலைவராவார். அவர்கள், எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள்” என்று சொல்வார்கள். அத்தியாயம் :

100

கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் உங்களுக் காக (அடிமையான) என்னை விலைக்கு வாங்கியிருந்தால் என்னை (மதீனா விலேயே) வைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக என்னை நீங்கள் வாங்கியிருந்தால் என்னை அல்லாஹ் வுக்காக செயலாற்ற விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள்.137 அத்தியாயம் :

101

102

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை நபி (ஸல்) அவர்கள் தம் நெஞ்சோடணைத்து, “இறைவா! இவருக்கு ஞானத்தைக் கற்றுத்தருவாயாக!” எனப் பிராத்தித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “இறைவா! இவருக்கு (உன்) வேதத்தைக் கற்றுத்தருவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள் என வந்துள்ளது.139 மேலும், “ஞானம்' (ஹிக்மத்) என்பதற்கு, “நபித்துவம்' அல்லாத விஷயங்களில் சரியான கருத்தை அறிந்துகொள்வது என்று பொருள். அத்தியாயம் :

103

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஸைத் (பின் ஹாரிஸா-ரலி) அவர்களும் ஜஅஃபர் (பின் அபீதாலிப்-ரலி) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) உயிர்நீத்துவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்துசேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப்பெற்று மக்களுக்கு) நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். “(முதலில்) இஸ்லாமியச் சேனையின் கொடியை ஸைத் (தமது கையில்) எடுத்தார்; அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஅஃபர் (தமது கையில்) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு இப்னு ரவாஹா (தம் கையில் கொடியை) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன. இறுதியில் அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் பின் அல்வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரது கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்துவிட்டான்” என்று (போர்க்கள நிகழ்ச்சிகளை விவரித்துச்) சொன்னார்கள்.141 அத்தியாயம் :

104

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றியப் பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “அவர் எத்தகைய மனிதரென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், அபூஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை பின் கஅப், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்லி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா, முஆத் (ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா (இவர்களிரு வரில் யாரை முதலில் குறிப்பிட்டார்) என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :

105

106

அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குள் சென்று (பள்ளிவாசலில்) இரண்டு ரக்அத்கள் தொழுதேன். அப்போது, “இறைவா! எனக்கு ஒரு நண்பரை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித் தேன். அப்போது முதியவர் ஒருவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவர் அருகே வந்ததும், “அல்லாஹ் என் பிரார்த்தனைக்குப் பதிலளித்து விட்டதாக நம்புகிறேன்” என்று சொன்னேன். அந்த முதியவர், “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். “நான் கூஃபாவாசி” என்று பதிலளித்தேன். அவர், “நபி (ஸல்) அவர்களின் காலணிகளையும் தலையணையையும் தண்ணீர்க் குவளையையும் (சுமந்து பணிவிடை புரிந்து)கொண்டிருந்தவர் (இப்னு மஸ்ஊத் -ரலி) உங்களிடையே இல்லையா? ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப்பட்டவர் (அம்மார்-ரலி) உங்களிடையே இல்லையா? நபி (ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைஃபா -ரலி) உங்களிடையே இல்லையா?” என்று கேட்டார். “உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலி) “வல்லய்லி' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் அத்தியாயம் 92ன்) இறைவசனங்களை எப்படி ஓதினார்கள்?” என்று மேலும் கேட்டார்கள். நான், “வல்லய்லி இதா யஃக்ஷா வந்நஹாரி இதா தஜல்லா வத்தகரி வல்உன்ஸா' என்று (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதுவதைப் போன்று) ஓதிக்காட்டினேன். அம்முதியவர், “நபி (ஸல்) அவர்கள் தமது வாயால் (இவ்வாறே) எனக்கு அதை ஓதிக்கொடுத்தார்கள். ஆனால், (ஷாம் வாசிகளான) இவர்கள் (அதை விட்டு விட்டுப் புதிய முறையில் ஓதும்படி) என்னைத் திருப்ப முனைந்துகொண்டே யிருந்தனர்” என்று சொன்னார்கள்.145 அத்தியாயம் :

107

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அழகிய தோற்றத்திலும் நடைமுறை யிலும் நபி (ஸல்) அவர்களை ஏறக் குறைய ஒத்திருக்கும் ஒரு மனிதரை நாங்கள் பின்பற்றி நடப்பதற்காக (எங்களுக்குக் காட்டும்படி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்டோம். அவர்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு அழகிய தோற் றத்திலும், போக்கிலும், நடத்தையிலும் கிட்டத்தட்ட ஒத்தவராக உம்மு அப்தின் மகனை (இப்னு மஸ்ஊதை-ரலி) அவர்களைவிட வேறெவரையும் நான் அறியமாட்டேன்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

108

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம்.146 அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம். அத்தியாயம் :

109

இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள், தம்மிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப்பின் ஒரு ரக்அத் வித்ர் தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றார். (முஆவியா (ரலி) அவர்கள் ஒரு ரக்அத் வித்ர் தொழுத விஷயத்தைச் சொன்னார்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அவரை (அப்படியே தொழ) விட்டுவிடு. ஏனெனில், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

110

இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் நம்பிக்கையாளர்களின் தலைவர் முஆவியா (ரலி) அவர்கள் விஷயமாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? ஏனெனில், அவர் வித்ரை ஒரேயொரு ரக்அத்தாகத் தான் தொழுகிறார்” என்று கூறப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “முஆவியா (மார்க்கச்) சட்டநிபுணர் ஆவார்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

111

ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டி ருந்த நாங்கள், நபியவர்கள் தொழக் கண்டிராத ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்களையும்-அஸ்ர் தொழுகைக்குப்பின் (உங்களில் சிலர் தொழுகின்ற) இரு ரக்அத்களையும்- தொழ வேண்டாமென்று தடை விதித் துள்ளார்கள்” என்று கூறினார்கள்.148 அத்தியாயம் :

112

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திமா என்னில் ஒரு பகுதி யாவார். எனவே, அவருக்குக் கோப மூட்டியவர் எனக்குக் கோபமூட்டிய வராவார். இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.151 அத்தியாயம் :

113

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள், “ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்” என்று சொன்னார்கள். நான், சலாமுக்குப் பதில் கூறும் முகமாக “வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு' (அவர்மீதும் சாந்தி பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள்வளங்களும் பொழியட்டும்) என்று பதில் முகமன் சொல்லிவிட்டு, “நான் பார்க்க முடியாத வற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன்.153 அத்தியாயம் :

114

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆண்களில் அதிகமானோர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண் களில் இம்ரானின் மகள் மர்யமையும், ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. (உலகின் மற்ற) பெண்களைவிட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) எல்லா உணவுகளைக் காட்டிலும் “ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.154 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

115

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு, (மற்ற) உணவுகளைக் காட்டிலும் “ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

116

காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் நோயுற் றார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நலம் விசாரிக்க) வந்து, “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! வாய்மையில் முந்தியவர்களான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் காத்திருக்கும் இடத்திற்கு (சொர்க்கத்திற்கு) நீங்கள் செல்லவிருக்கிறீர்கள்” என்று (ஆறுதல்) சொன்னார்கள். அத்தியாயம் :

117

அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) அலீ (ரலி) அவர்கள் (தமக்கு ஆதரவாக “ஜமல்' போரில் கலந்துகொள்ளும்படி) மக்களை அழைப்பதற்காக அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களையும், (தம் புதல்வர்) ஹசன் (ரலி) அவர்களையும் “கூஃபா' நகருக்கு அனுப்பிவைத்தபோது (மக்களுக்கு) அம்மார் (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது (தமது உரையில்), “நபி (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த உலகிலும் மறுமையிலும் மனைவியாவார்கள் என்பதை நான் உறுதியாக அறிவேன். எனினும், “நீங்கள் (கலீஃபாவின் உத்தரவுக்கு இணங்கி நடப்பதன் மூலம்) அல்லாஹ்வி(ன் கட்டளைத)னைப் பின்பற்றுவதா? அல்லது ஆயிஷாவி(ன் யோசனைத)னைப் பின்பற்றுவதா?' என (முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு) உங்களை (ஆளாக்கி) அல்லாஹ் சோதனையில் ஆழ்த்திவிட்டான்” என்று கூறினார்கள்.155 அத்தியாயம் :

118

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரி) அஸ்மா (ரலி) அவர்களிட மிருந்து (கழுத்து) மாலையொன்றை இரவல் வாங்கினார்கள். அது (பனுல் முஸ்தலிக் போரின் பயணத்தில் எப்படியோ) தொலைந்து போய்விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களில் சிலரை அதைத் தேடுவதற்காக அனுப்பினார்கள். அப்போது அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. (தண்ணீர் கிடைக்காததால்) அவர்கள் அங்கத் தூய்மையின்றித் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் (திரும்பிச்) சென்றபோது தண்ணீர் கிடைக்காததால் தமக்கேற்பட்ட நெருக் கடியான நிலையை முறையிட்டார்கள். அப்போதுதான் “தயம்மும்' உடைய சட்டத்தைக் கூறும் இறைவசனம் இறங்கியது. ஆகவே, (இந்தச் சலுகை கிடைக்கக் காரணமாய் அமைந்த ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஒரு துன்பம் நேரும் போதெல்லாம் அதிலிருந்து விடுபடுகின்ற வழியொன்றை அல்லாஹ் உங்களுக்குத் தராமலிருந்ததில்லை; மேலும், அதில் முஸ்லிம்களுக்கு அருள்வளம் ஒன்றைத் தராமலும் இருந்ததில்லை” என்று சொன்னார்கள்.156 அத்தியாயம் :

119

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்தபோது தம் துணைவியரிடையே (நிச்சயித்த முறைப்படி ஒரு நாளைக்கு ஒருவரது வீடு என்று) செல்லத் தொடங்கினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்னும் ஆவல் அதிகமாயிருந்த காரணத்தால் “நாளை நான் எங்கேயிருப்பேன்? நாளை நான் எங்கேயிருப்பேன்?”157 என்று கேட்கத் தொடங்கினார்கள். “என் (முறைக்குரிய) நாள் வந்தபோது தான் அமைதியடைந்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :

120

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்: (நபியவர்களின் துணைவியரான) என் தோழிகள் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் ஒன்றுகூடி, “உம்மு சலமாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபிகளார் ஆயிஷாவிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆயிஷா, நபி (ஸல்) அவர்களுக்கு நலம் நாடுவதைப் போன்றே நாமும் அவர்களுக்கு நலம் நாடுகின்றோம். ஆகவே, தமக்கு (தர விரும்பும்) அன்பளிப்புகளை தாம் இருக்குமிடத்தில்- அல்லது செல்லுமிடத் தில்- (அது எவருடைய வீடாக இருந்தாலும் அங்கு) அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று மக்களுக்குக் கட்டளையிடும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர். (உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:) நான் நபி (ஸல்) அவர்களிடம் இதைச் சொல்ல, நபி (ஸல்) அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் திரும்பிவந்த போது நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அப்போதும் அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. மூன்றாம் முறை வந்தபோதும் நான் அவர்களிடம் இதே கோரிக்கையைச் சொன்னேன். அப்போது அவர்கள், “உம்மு சலமாவே! ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும்போதும் எனக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பட்டதில்லை” என்று பதிலளித்தார்கள்.158 அத்தியாயம் :