அனைத்து இஸ்லாம் நூலகம்

60 - நபிமார்கள்

1

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களிமண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘‘நீங்கள் சென்று அந்த வானவர் களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். அது தான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததி களின் முகமனும் ஆகும்” என்று சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி பொழியட்டும்)” என்று கூறினார்கள். அதற்கு வான வர்கள், ‘‘உங்கள்மீதும் சாந்தியும் இறைக் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். யிஇறைவனின் கருணையும் (உங்கள்மீது பொழியட்டும்)› எனும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) கூடுதலாகச் சொன்னார்கள். ஆகவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும், அழகிலும்) குறைந்துகொண்டே வருகின்றன. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழையும் முதல் அணி ‘னர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத் தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும்மாட்டார் கள்; எச்சில் துப்பவும்மாட்டார்கள்; மூக்குச் சிந்தவும்மாட்டார்கள். அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய துணைவியர் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்கவாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டி ருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத் தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 அத்தியாயம் :

3

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளிப்பு கடமையாகுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம். அவள் (மதன) நீரைப் பார்த்தால் (அவள்மீது குளிப்பு கடமையாகும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தேன். ‘‘பெண் ணுக்குக்கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பின் குழந்தை, (தோற்றத் தில்) அவளை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.3 அத்தியாயம் :

4

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘தங்களிடம் நான் மூன்று விஷயங் களைப் பற்றிக் கேட்கப்போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘1. இறுதி நாளின் அடையாளங் களில் முதலாவது அடையாளம் எது?2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்? அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சற்று முன்புதான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், ‘‘வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக்கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனது நீர்(விந்து உயிரணு) முந்திக்கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், ‘‘தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என நான் உறுதிகூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித்திளைத்த சமுதாயத்தார் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வீட்டினுள் புகுந்து (மறைந்து)கொண் டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), ‘‘உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தைகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அவர் எங்களில் (மார்க்க) ஞானம் மிக்கவரும், எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித் தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரெனில் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்று வானாக!” என்று சொன்னார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக்கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.” என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், ‘‘இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள். அத்தியாயம் :

5

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித் திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4 அத்தியாயம் :

6

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களை நல்ல விதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்துவிடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.5 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

7

உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படு கிறீர்கள். பிறகு அவ்வாறே (நாற்பது நாட்களில்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறிவிடுகிறது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாட்களில் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனி டம் ஒரு வானவரை நான்கு கட்டளை களைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை நற்பேறற்றதா, நற்பேறுள்ளதா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால்தான், மனிதன் நரகவாசி களின் செயலைச் செய்தவண்ண மிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக்கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்துவிடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்கு மிடையே ஒரு முழம்தான் இருக்கும். அப்போது, (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக்கொள்ள அவன் நரக வாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்துவிடுவான். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :

8

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக, அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர், ‘‘இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! இது, பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு” என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும்போது, ‘‘இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா? நற்பாக்கியம் பெற்றதா? துர் பாக்கியம் உடையதா? (இதன்) வாழ் வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7 அத்தியாயம் :

9

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை தரப்படுபவரிடம், ‘‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத்தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனை’லிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘‘ஆம்” என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், ‘‘நீ ஆதமின் முதுகுத்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை, எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக்கொள்ளவில்லை” என்று கூறுவான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

10

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டுவந்தவர்.8 இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

11

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

12

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்த பிறகு தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள்.11 அப்போது, ‘‘நான் உங்களை அவனைக் குறித்து எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத் தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் அவர்கள் தம் சமூகத்தாருக்கு (அவனைக் குறித்து) எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், நான் அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தன் சமூகத்தாருக்குக் கூறாத ஒரு அடை யாளத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

13

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப்போகிறேன்; வேறெந்த இறைத்தூதரும் அதைத் தம் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம், நரகம் போன்ற வற்றைக் கொண்டுவருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகின்றானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

14

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தாரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ் (அலை) அவர்களை நோக்கி), ‘‘(எனது செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்துவிட்டீர்களா?” என்று கேட்பான். அதற்கு நூஹ் அவர்கள், ‘‘ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)” என்று பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ் நூஹ் அவர்களுடைய சமுதாயத்தாரிடம், ‘‘இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்துவிட்டாரா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை” என்று பதில் கூறுவார்கள். அப்போது அல்லாஹ் நூஹ் அவர்களிடம், ‘‘உங்களுக்காகச் சாட்சியம் சொல்பவர் யார்?” என்று கேட்பான். நூஹ் அவர்கள், ‘‘முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களுடைய சமுதாயத்தாரும் (எனக்காகச் சாட்சியம் சொல்வார்கள்)” என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே நாம் நூஹ் அவர்கள் (இறைச் செய்தியைத் தம் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம். ‘‘அவ்வாறே உங்களை மக்களுக்குச் சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்” (2:143) எனும் புகழோங்கிய இறைவனின் வசனம் இதைத் தான் குறிக்கின்றது. யிநடுநிலையா” (வசத்) எனும் சொல் லின் கருத்து ‘நீதியா” என்பதாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

15

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன், ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்ப மானதாக இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதைத் தம்) பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு கூறினார்கள்: ‘‘நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியுறுவார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), ‘‘நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்)பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள். மக்கள் சிலர், ‘‘உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)” என்று கூறுவார்கள். ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம்பணிந் தார்கள். உங்களைச் சொர்க்கத்தில் குடி யமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனி டம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்க ளுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையை யும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘‘(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என்மீது (கடும்) கோபம் கொண்டான். அதற்குமுன் அதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. அதற்குப் பிறகும் அதைப்போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங் கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங் கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள். உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பட்ட) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ், யிநன்றி செலுத்தும் அடியார்’ என்று குறிப்பிட்டுள்ளான்.12 நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள (இந்தத் துன்ப) நிலையை நீங்கள் காணவில்லையா? எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘என் இறைவன் இன்று என்மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப்போல் கோபம் கொள்ளமாட்டான். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார். மக்கள் என்னிடம் வருவார்கள். நான் இறை அரியணைக்குக் கீழே சஜ்தா செய்வேன். அப்போது ‘‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந் துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்” என்று (இறை வனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் (ரஹ்) அவர்கள், ‘‘இந்த ஹதீஸ் முழுமையாக எனக்கு நினைவில்லை” என்று கூறுகிறார்கள்.13 அத்தியாயம் :

16

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிஃபஹல் மின்(ம்) முத்தகிர் (அறிவுரை பெறுபவர் எவராவது இருக்கின்றாரா?) எனும் (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள) இறைவசனத்தைப் பொதுவாக மக்கள் ஓதும் பிரபலமான முறைப்படி யிஃப ஹல்மின்(ம்) முத்தகிர்’ என்றே ஓதினார்கள். (வெகுசிலர் ஓதுவதைப்போல் யிமுஸ்தகிர்’ என்று பிரித்தோ, வேறொரு முறைப்படி யிமுஸ்ஸக்கிர்’ என்றோ ஓதவில்லை)14 அத்தியாயம் :

17

அபூதர் (ரலி) அவர்கள் அறி வித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிரிக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந் தார்கள். பிறகு அதை, ‘ஸம்ஸம்’ தண்ணீ ரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறி வாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சில் அதை ஊற்றி (நிரப்பி) னார்கள். பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வானத் திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத் திற்கு வந்தபோது வானத்தின் காவலரி டம், ‘‘திறங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘யார் அது?” என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், ‘‘இதோ ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘‘உங்களுடன் வேறெவரேனும் இருக்கிறரா?” என்று கேட்டார். அவர்கள், ‘‘என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘‘(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (ஆள்) அனுப்பப் பட்டதா?” என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், ‘‘ஆம், திறங்கள்” என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவு திறக்கப் பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர்; இடப் பக்கத் திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) ‘‘நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார். நான் ‘‘ஜிப்ரீலே! இவர் யார்?” என்று கேட்டேன். அவர், ‘‘இவர் ஆதம் (அலை) அவர்கள்; அவர்களுடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களுடைய சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர்கள் வலப் பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களைப் பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கி றார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப் பட்டு) அழுகிறார்கள்” என்று பதிலளித் தார்கள். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். பிறகு இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், ‘‘திறங்கள்” என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போலவே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின் வாயிலைத்) திறந்தார். அனஸ் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள், வானங்களில் இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாகக் கூறினார்களே தவிர அவர் களுடைய இருப்பிடங்கள் எங்கிருந்தன என்று அவர்கள் எனக்குக் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்” என்று அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்: ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்ற போது, ‘‘நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இவர் இத்ரீஸ்” என்று கூறினார்கள். பிறகு மூசா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், ‘‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், ‘‘இவர் மூசா” என்று கூறினார்கள். பிறகு நான், ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், ‘‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘‘(இவர்) ஈசா” என்று பதிலளித் தார்கள். பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர் களைக் கடந்து சென்றேன். அவர்கள், ‘‘நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, ‘‘இவர் இப்ராஹீம்” என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அபூஹய்யா அல்அன்சாரி (ரலி) அவர்கள் ஆகிய இருவரும் அறிவித்ததாக இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்தபோது அங்கு நான் (வானவர்கள் விதிகளை எழுதிக்கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன். இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது அல்லாஹ் என்மீது (என் சமுதாயத்தாருக்காக) ஐம்பது தொழுகை களைக் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது மூசா அவர்கள், ‘‘உங்கள் சமுதாயத்தார் மீது என்ன கடமையாக்கப்பட்டது?” என்று கேட்டார்கள். நான், ‘‘அவர்கள்மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ள”’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘‘அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று (சற்று குறைத்துக் கடமையாக்கும்படி) கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறை வேற்ற முடியாது” என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி) கேட்டேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா அவர்களிடம் திரும்பிச் சென்றபோது, ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறி முன்புபோல் (‘‘உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது”) என்று கூறினார்கள். (நான் அவ்வாறே திரும்ப இறைவனிடம் சென்று இன்னும் குறைக்கும்படி கோர) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூசா அவர்களிடம் மீண்டும் சென்று கூறிய போது, ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பச் சென்று இன்னும் குறைத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் அதற்குச் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூற, நான் திரும்பிச் சென்று, என் இறைவனிடம் (இன்னும் சற்று குறைக்கும்படி) கேட்டேன். அதற்கு அவன், ‘‘அவை ஐந்து (வேளைத் தொழுகைகள்) ஆகும். அவையே (பிரதிபலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். (ஒருமுறை சொல்லப் பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை” என்று கூறினான். உடனே, நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகின்றேன்” என்று பதிலளித்தேன். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலகின் எல்லையான) யிசித்ரத்துல் முன்தஹா’வுக்குச் சென்றார்கள். அப்போது நான் அறிய முடியாதபடி பல வண்ணங்கள் அதைச் சூழ்ந்து மூடியிருந்தன. பிறகு நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கே முத்தாலான கூடாரங்களைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் வீசும்) கஸ்தூரியாக இருந்தது.17 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

18

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (அகழ்ப் போரின்போது) கீழைக் காற்றால் (‘ஸபா’) வெற்றியளிக்கப்பட்டேன். யிஆத்’ சமுதாயத்தார் மேலைக் காற்றால் (யிதபூர்’) அழிக்கப்பட்டனர் இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.19 அத்தியாயம் :

19

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அலீ (ரலி) அவர்கள் (யமனிலிருந்து) நபி (ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ (ரலி), உயைனா பின் பத்ர் அல் ஃபஸாரீ (ரலி), பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவ ரான ஸைத் அத்தாயீ (ரலி), பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல்ஆமிரி (ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷியரும் அன்சாரிகளும் கோபமடைந்து, ‘‘நஜ்த்வாசிகளின் தலைவர் களுக்குக் கொடுக்கிறார்; நம்மை விட்டு விடுகிறாரே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் கள் (இப்போதுதான் இஸ்லாத்தைத் தழுவி யிருப்பதால்) அவர்களுடைய உள்ளங் களை (முழுமையாக) இணக்கமாக்கு வதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்)தான் கொடுத்தேன்” என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பியிருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன்வந்து, ‘யிமுஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘‘நானே (அல்லாஹ்வுக்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அல்லாஹ் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது வேறொரு மனிதர் இப்படி (குறை) சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்ட அவர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் தான் என்று நினைக்கின்றேன்லி அவரை நபி (ஸல்) அவர்கள், (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்துவிட்டார்கள். (குறை சொன்ன) அந்த ஆள் திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து லிஅல்லது இவரின் பின்னேலி ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களு டைய தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடு வதைப்போல் மார்க்கத்திலிருந்து வெளி யேறிவிடுவார்கள்; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவழிபாடு புரிபவர் களை விட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் யிஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்.” என்று கூறினார்கள்.20 அத்தியாயம் :

20

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிஃப ஹல் மின்(ம்) முத்த(க்)கிர்’ (அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?) எனும் (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள) இறைவசனத்தை ஓதுவதை நான் செவியுற்றேன்.21 அத்தியாயம் :

21

நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, ‘‘அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது” என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்; தீமை பெருகிவிட்டால்...” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

22

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவரிலிருந்து அல்லாஹ் இதைப்போல் (சிறிது) திறந்துவிட்டான்” என்று கூறி தமது கையால் (அரபி எண் வடிவில்) 90 என்று மடித்துக்காட்டினார்கள். அத்தியாயம் :

23

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உயர்ந்தோன் அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம் (அலை) அவர்களை நோக்கி, ‘‘ஆதமே!” என்பான். அதற்கு அவர்கள், ‘‘இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்” என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், ‘‘நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்” என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள், ‘‘நரகவாசிகளில் எத்தனை பேரை?” என்று கேட்பார்கள். அதற்கு அவன், ‘‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத்தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டுவாருங்கள்)” என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுவான்; கர்ப்பமுள்ள பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை (பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதை யுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.” (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நற்செய்தி பெறுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளி யேறாமல் அதனுள்) இருப்பார்கள்.23 பிறகு, என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) ‘‘அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். உடனே அவர்கள், ‘‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) ‘‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அவர்கள், ‘‘சொர்க்கவாசி களில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), ‘‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அப்போது அவர்கள், ‘‘நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போலத்தான் இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போலத்தான் (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்” என்று கூறினார்கள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

24

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாண மானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித் தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, ‘‘நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம்மீது (பொறுப்பாகிவிட்ட நமது) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின் றோம்” (21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக் கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவார். என் தோழர்களில் சிலர் இடப் பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘‘இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்” என்று (அவர் களை விட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, ‘‘தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தைவிட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்” என்று கூறப்படும். அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈசா (அலை) அவர்கள்) கூறியதைப் போல், ‘‘நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்ப வனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்குத் தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்” (5:117லி118) எனும் இறைவசனங்களை (பதிலாக)க் கூறுவேன். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

25

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நான் உங்களிடம், எனக்கு மாறுசெய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, ‘‘இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்தமாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையைவிட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது?” என்று கேட்பார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களிடம், ‘‘நான் சொர்க்கத்தை இறைமறுப்பாளர்களுக்குத் தடை செய்துவிட்டேன் (ஹராமாக்கிவிட்டேன்)” என்று பதிலளிப்பான். பிறகு ‘‘இப்ராஹீமே! உம்முடைய கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பார்ப்பீராக!” என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.25 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

26

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களின் உருவப் படத்தையும் மரியம் (அலை) அவர்களின் உருவப் படத்தையும் கண்டார்கள். அப்போது, இந்தக் குறைஷியரோ உருவம் உள்ள வீட்டில் (இறை கருணை யைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்டி ருக்கிறார்களே! இது இப்ராஹீமின் உருவம். (இதில், அவர் தம் கையில் இருக்கும் அம்புகளால்) குறி சொல்பவராக நிற்கிறாரே அவருக்கென்ன? (அவருக்கும் குறி சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?)” என்று கூறினார்கள். அத்தியாயம் :

27

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் உருவப்படங்களைப் பார்த்த போது அவற்றை அழிக்கும்படி உத்தர விட்டு. அவ்வாறே அவை அழிக்கப்பட்ட பின்புதான் அதனுள் நுழைந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களையும் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் அவர்கள் தம் கையில் குறிசொல்லும் அம்புகளைப் பிடித்தபடி இருக்கும் நிலையில் (உருவங்களாகப்) பார்த்தார்கள். அப்போது, ‘‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷியரை) அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இருவரும் ஒருபோதும் அம்புகளின் மூலம் குறி பார்த்ததில்லை” என்று கூறினார்கள்.26 அத்தியாயம் :

28

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களிடம்) ‘‘அல்லாஹ் வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத் திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்” என்று பதிலளித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ் வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் யூசுஃப் அவர்கள்தான்!” என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், ‘‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியர் பரம்பரைகள்) குறித்தா கேட்கிறீர் கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர் களாயிருந்தவர்கள்தான் இஸ்லாத்திலும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

29

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் இன்றிரவு (கனவில்) இரு வானவர்கள் (ஜிப்ரீலும் மீக்காயிலும்) வந்தார்கள். பிறகு நாங்கள் உயரமான ஒரு மனிதரிடம் சென்றோம். நீளத்தின் காரணத்தால் அவரது தலையை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள்தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார். இதை சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.27 அத்தியாயம் :

30

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இருக்கும்போது மக்கள், ‘‘தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையே யிகாஃபிர்’ (நிராகரிப்ப வன்) என்றோ யிகாஃப், ஃபா, ரா’ என்றோ எழுதப்பட்டிருக்கும். (என்பது உண் மையா?)” என்று பேசிக்கொண்டார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் இப்படிச் செவியுறவில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்ராஹீம் (அலை) அவர்கள் (எத்தகைய தோற்றமுடையவர்களாக இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்) என்றால் உங்கள் தோழரை (என்னை)ப் பாருங்கள். மூசா (அலை) அவர்களோ சுருள்முடி உடைய வர்களாகவும், மாநிறம் கொண்டவர்களாக வும் இருந்தார்கள். ஈச்ச மர நாரினாலான கடிவாளம் இடப்பட்ட சிவப்பு நிற ஒட்டகத்தின் மீது பயணம் செய்வார்கள். அவர்கள் (ஹஜ்ஜின்போது ‘அல்அஸ்ரக்’ எனும்) பள்ளத்தாக்கில் இறங்குவதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்று உள்ளது” என்று கூறினார்கள்.28 அத்தியாயம் :

31

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள், தமது எண்பதாவது வயதில் யிகத்தூம்’ (எனும் யிவாய்ச்சி’யின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்.29 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

32

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

33

நபி (ஸல்) அவர்கள் சொன்ன தாக) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) ‘‘நான் நோயுற்றிருக்கின்றேன்” என்று (அதில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியது.30 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டி விட்டு மக்கள், ‘‘இப்படிச் செய்தது யார்?” என்று கேட்டபோது,) ‘‘ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலைதான் இதைச் செய்தது” என்று கூறியது.31 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒருநாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள்.32 அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) ‘‘இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார்: அவருடன் மனிதர்களிலேயே மிக அழகான பெண்ணும் இருக்கிறாள்” என்று கூறப்பட்டது. உடனே இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச்சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பி னான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, ‘‘இவர் யார்?” என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘என் சகோதரி” என்று பதிலளித் தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று, ‘‘சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறைநம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டுவிட்டான். நான், ‘நீ என் சகோதரி’ என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டேன். ஆகவே, நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கிவிடாதே” என்று கூறினார்கள் அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் தழுவ முயன்றான். உடனே அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப் பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்,) ‘‘அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்யமாட்டேன்” என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதைவிடக் கடுமையாகத் தண்டிக்கப் பட்டான். அப்போதும், ‘‘எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்யமாட்டேன்” என்று சொன் னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, ‘‘நீங்கள் என்னிடம், ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டுவந்துள்ளீர்கள்” என்று சொன்னான். பிறகு ஹாஜர் அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, யிஎன்ன நடந்தது?› என்று கேட்டார்கள். அவர், ‘‘அல்லாஹ் நிராகரிப்பாளனின் லிஅல்லது தீயவனின்லி சூழ்ச்சியை முறியடித்து அவன் மீதே திருப்பிவிட்டான். ஹாஜரைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்.33 (அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜர்)தான் உங்கள் தாயார்.34 அத்தியாயம் :

34

உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார் கள். மேலும் அவர்கள், ‘‘அது இப்ராஹீம் (அலைலி அவர்கள் தீக் குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக் கெதிராக ஊதிவிட்டுக்கொண்டிருந்தது” என்றும் சொன்னார்கள். அத்தியாயம் :

35

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘எவர் இறைநம்பிக்கை கொண்டு, பிறகு தம் இறைநம்பிக்கையில் அநீதியைக் கலக்காது இருக்கிறார்களோ அவர்களுக்கே நிம்மதி உண்டு. அவர்களே நல்வழி பெற்றவர்களாவர்” (6:82) எனும் இறை வசனம் அருளப்பட்டபோது, நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தமக்கு அநீதியிழைத்துக்கொள்ளாதவர் எவர்தான் இருக்கிறார்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘(அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. யிதங்கள் இறை நம்பிக்கையில் இணைவைப்பு எனும் அநீதியைக் கலந்துவிடாதவர்கள் என்றுதான் அதற்குப் பொருள். (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் மகனுக்கு, யிஎன் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும்’ என்று சொன்ன(தாக குர்ஆனில் 31:13ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறுவ)தை நீங்கள் கேட்கவில்லையா?” என்று பதிலளித்தார்கள்.35 அத்தியாயம் :

36

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் (விருந்தின்போது) நபி (ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டுவரப் பட்டது. அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் மறுமை நாளில் முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான். அழைப்பவனின் குரலை அவர்கள் கேட்பார்கள்; அனை வரின் பார்வைக்கும் அவர்கள் தென்படு வார்கள்; சூரியன் அவர்களுக்கு அருகில் வரும்” என்று கூறிவிட்டு ‘ஷஃபாஅத்’ எனும் பரிந்துரை தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள். பிறகு அவர்கள் (மக்கள்) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வருவார்கள். ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரும் பூமியில் அவனது நண்பருமாவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரையுங்கள்” என்று கூறுவார்கள். அவர்கள், தாம் சொன்ன பொய்களை நினைவுகூர்ந்து, (இன்று) என்னைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன். நீங்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று பதிலளிப்பார்கள்.36 நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதே போன்று அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

37

38

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பெண்கள் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ஹாஜர் (அலை) அவர்களின் தரப்பிலிருந்துதான். சாரா (அலை) அவர்களுக்குத் தம்மால் ஏற்பட்ட பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்துகொண் டார்கள்.38 பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக்கொண்டிருக்கும் கால கட்டத்தில் இருவரையும் கொண்டுவந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்குமேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்க வில்லை. அங்கு தண்ணீர்கூடக் கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டுவிட்டு தமது நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து, ‘‘இப்ராஹீமே! மனிதரோ வேறெந்தப் பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே, அவர்களிடம் ஹாஜர் (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ்தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க, அவர்கள், யிஆம்’ என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், ‘‘அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக்குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது, தமது முகத்தை இறையில்லம் கஅபாவின் பக்கம் திருப்பி, தம் இரு கரங்களையும் உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்: ‘‘எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்). எனவே, இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர் களாய் இருப்பார்கள்” என்று இறைஞ்சி னார்கள். (அல்குர்ஆன் 14:37) இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீ லுக்குப் பாலூட்டவும் அந்தத் தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங் கினார்கள். தண்ணீர்பையில் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டபோது அவரும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தால்) புரண்டு புரண்டு அழுவதை லிஅல்லது தரையில் காலை அடித்துக்கொண்டு அழுவதைலி அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்றுகொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்தபோது தமது மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக்கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப்போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார் கள். பிறகு மர்வா மலைக் குன்றுக்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட் டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறைகள் செய்தார்கள். லிஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற யிசஃயு’ (தொங்கோட்டம்) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்லி பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்றுகொண்டபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, ‘‘சும்மாயிரு” என்று தமக்கே கூறிக்கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக்கொண்டு கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, ‘‘(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)” என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம்முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். லிஅல்லது ‘‘தமது இறக்கையால் தோண்டினார்கள்” என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்லி அதன் விளைவாகத் தண்ணீர் வெளிப்பட்டது. உடனே ஹாஜர் (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம்போல் (கையில்) அமைக்க லானார்கள்; அதைத் தம் கையால் இப்படி (‘‘ஓடிவிடாதே! நில்” என்று சைகை செய்து) சொன்னார்கள். அந்தத் தண்ணீரை அள்ளித் தமது தண்ணீர்பையில் ஊற்றலானார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது. ‘‘நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக் குக் கருணைபுரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால் லிஅல்லது அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால்லி ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் ஓர் ஊற்றாக மாறிவிட்டி ருக்கும்’ என்று சொன்னார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித் தார்கள். பிறகு, அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம், ‘‘நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்துபோய் விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித் துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிடமாட்டான்” என்று சொன்னார். இறையில்லமான கஅபா, மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப் பக்கமாகவும் இடப் பக்கமாக வும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் (தண்ணீர் குடித்துக்கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள். இந்நிலையில் (யமன் நாட்டைச் சேர்ந்த) ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் லிஅல்லது ஜுர்ஹும் குலத்தாரில் ஒரு வீட்டார்லி அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் யிகதா’ எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர். அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒரு வகைப் பறவையைக் கண்டு, ‘‘இந்தப் பறவை தண்ணீரின் மீதுதான் வட்டமடித்துக்கொண்டிருக்க வேண்டும்; நாம் இந்தப் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கிறோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே” என்று (வியப்புடன்) பேசிக்கொண்டார்கள். பிறகு அவர்கள் ஒரு தூதுவரை அல்லது இரு தூதுவர்களை செய்தி அறிந்து வர அனுப்பினார்கள். அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அங்கே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார், இஸ்மாயீ லின் அன்னை தண்ணீரருகே இருக்க முன்னே சென்று, ‘‘நாங்கள் உங்களிடம் தங்கிக்கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா?” என்று கேட்க, அவர்கள், ‘‘ஆம் (அனுமதியளிக்கிறேன்); ஆனால், தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது” என்று சொன்னார்கள். அவர்கள், ‘‘சரி” என்று சம்மதித்தனர். லி”(ஜுர்ஹும் குலத்தார் தங்கிக் கொள்ள அனுமதிகேட்ட) அந்தச் சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு, அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார் கள்...” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்லி ஆகவே, அவர்கள் அங்கே தங்கினார் கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப, அவர்களும் (வந்து) அவர்களுடன் தங்கினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சேர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அவர் அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். அவர் வாலிபரானபோது அவர்களுக்குப் பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விருப்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்தபோது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்துவைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துகொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச்சென்ற (தம் மனைவி, மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துகொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீலின் மனைவியிடம் இஸ்மாயீலைக் குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர், ‘‘எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலை பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர், ‘‘நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்” என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரைத்து அவரது நிலைப்படியை மாற்றிவிடும்படி சொல்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பதுபோல் உணர்ந்தார்கள். ஆகவே, ‘‘எவரேனும் உங்களிடம் வந்தார்களா?” என்று கேட்டார்கள். அவ ருடைய மனைவி, ‘‘ஆம்; இப்படிப்பட்ட (அடையாளங்கள்கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார்; எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம், யிஉங்கள் வாழ்க்கை நிலை எப்படியுள்ளது?› என்று கேட்டார். நான் அவரிடம், யிநாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம்’ என்று சொன்னேன்” என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா?” என்று கேட்க, அதற்கு அவர், ‘‘ஆம்; உங்களுக்குத் தமது சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, யிஉன் நிலைப்படியை மாற்றிவிடு’ என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார்” என்று பதிலளித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அவர் என் தந்தைதான். உன்னைவிட்டுப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார். ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய்ச் சேர்ந்துகொள்” என்று சொல்லிவிட்டு, உடனே அவரை மணவிலக்குச் செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவன் நாடிய காலம்வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ் மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர், ‘‘எங்களுக்காக வரு மானம் தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா)?” என்று கேட்டார்கள் மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீ லின் துணைவியார், ‘‘நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உங்கள் உணவு என்ன?” என்று கேட்க அவர், ‘‘இறைச்சி” என்று பதிலளித்தார். அவர்கள், ‘‘உங்கள் பானம் எது?” என்று கேட்க, ‘‘தண்ணீர்” என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் வளம் வழங்கும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள். ஆகவேதான், மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாகப் பயன்படுத்திவருபவர்களுக்கு அவை ஒத்துக்கொள்வதேயில்லை” என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் சொல். அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்தபோது, ‘‘உங்களிடம் யாரேனும் வந்தார்களா?” என்று கேட்க, அவருடைய மனைவி, ‘‘ஆம்; எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்” என்று (சொல்லிவிட்டு) அவரைப் புகழ்ந் தார். (பிறகு தொடர்ந்து) ‘‘என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படியுள்ளது என்று கேட்டார். நான், யிநாங்கள் நலமுடன் இருக் கிறோம்’ என்று தெரிவித்தேன்” என்று பதில் சொன்னார். ‘‘அவர், உனக்கு அறிவுரை ஏதும் சொன்னாரா?” என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம்; உங்களுக்கு சலாம் உரைக்கிறார்; உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக்கொள்ளும் படி உங்களுக்குக் கட்டளையிடுகிறார்” என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அவர் என் தந்தை; நீதான் அந்த நிலைப்படி. உன்னை (மணவிலக்குச் செய்யாமல்) அப்படியே (மனைவியாக) வைத்துக்கொள்ளும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம்வரை அவர் களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு, (ஒருநாள்) இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்குக் கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக்கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள், அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடு நாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும்போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படி நடந்துகொண்டார்கள். (பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்.) பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்தர விட்டுள்ளான்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உங்கள் இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்” என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்ற உதவுவாயா?” என்று கேட்க, இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உங்களுக்கு நான் உதவுகிறேன்” என்று பதிலளித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘அப்படி யென்றால், நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்துக்) கட்ட வேண்டுமென்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்” என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களைவிட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சுட்டிக் காட்டினார்கள். அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்தபோது இஸ்மாயீல் (அலை) அவர்கள், (மகாமு இப்ராஹீம் என்று அழைக் கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன்மீது (ஏறி) நின்று கஅபாவைக் கட்டலானார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தரலா னார்கள். அப்போது இருவருமே, ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தத் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக!. நிச்சயம் நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி, ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயம் நீயே நன்கு செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய்” (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவைப் புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

39

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய மனைவி (சாரா லிஅலை) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது39 இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை யும் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாரையும் அழைத்துக்கொண்டு (மக்காவை நோக்கிச்) சென்றார்கள். அப்போது அவர்களுடன் தண்ணீருள்ள தோல்பை ஒன்று இருந்தது. இஸ்மாயீலின் தாயார் அதிலிருந்து தண்ணீர் குடிக்கத் தொடங்கினார். அவர்களுடைய குழந்தை இஸ்மாயீலுக்காகப் பால் சுரக்கலாயிற்று. பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா வந்துசேர்ந்தார்கள். அங்கே ஒரு பெரிய மரத்திற்குக் கீழே ஹாஜரை விட்டுவிட்டு தம் குடும்பத்தாரிடம் (சாராவிடம்) இப்ராஹீம் திரும்பினார். அவரைப் பின்தொடர்ந்து வந்த இஸ்மாயீலின் அன்னை (ஹாஜர்), யிகதாஉ’ என்னும் இடத்தை அடைந்தவுடன் ‘‘இப்ராஹீமே! எங்களை யாரிடம் விட்டுச் செல்கிறீர்கள்?” என்று பின்னாலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டார். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்விடம்...” என்றார். ‘‘அப்படியானால், அல்லாஹ்வின் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு” என்றார் ஹாஜர். பின்னர் திரும்பி வந்து தோல்பையி லிருந்து நீர் அருந்தினார். அவருடைய குழந்தைக்காகப் பால் சுரந்தது. பின்னர் தண்ணீர் தீர்ந்தவுடன் அவர் (தமக்குள்), ‘‘நான் போய் (மலைமீதேறி) நோட்ட மிட்டால் எவராவது எனக்குத் தென்பட லாம்” என்று கூறிக்கொண்டார்; பிறகு, ஸஃபா மலைக் குன்றுக்குச் சென்று ஏறிக்கொண்டார். அவர் (அங்கிருந்து) நோட்டமிட்டார்; எவராவது தமக்குத் தென்படுகின்றாரா என்று பார்த்தார். ஆனால், எவரும் அவருக்குத் தென்பட வில்லை. ஆகவே, பள்ளத்தாக்கிற்குச் சென்றார். அங்கு சென்றுசேர்ந்ததும் ஓடிச்சென்று யிமர்வா’வை அடைந்தார். அப்படிப் பல சுற்றுகள் ஓடினார். பிறகு, ‘‘நான் போய் குழந்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் (நன்றாயிருக்குமே)” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். ஆகவே, (மலைக்குச்) சென்று நோட்ட மிட்டார். ஆனாலும், குழந்தை இஸ்மாயீல் அதே நிலையில்தான் (அழுதபடி) இறப்பதற்குமுன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக்கொண்டிருந்தார். அவருடைய (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. ஆகவே, அவர் (தமக்குள்) ‘‘நான் போய் நோட்டமிட்டால் எவராவது தென்படக்கூடும்” என்று கூறிக்கொண்டு (மீண்டும்) சென்று ஸஃபா மலைக் குன்றின் மீதேறிப் பார்த்தார்; பார்த்தார்; (பார்த்துக்கொண்டேயிருந்தார்.) எவரும் அவருக்குத் தென்படவில்லை. இவ்வாறே ஏழு சுற்றுகளை நிறைவுசெய்து விட்டார். பிறகு, ‘‘குழந்தை என்ன செய்கிறது என்று நான் போய் பார்த்து வந்தால் (நன்றாயிருக்குமே)” என்று (தமக்குள்) கூறிக்கொண்டார். அந்த நேரத்தில் குரல் ஒன்று வந்தது. (அதைக் கேட்டு) அவர், ‘‘உங்களால் நன்மை செய்ய முடியுமாயின் நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார். அங்கே (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். தம் குதிகாலால் இப்படி சைகை செய்து பூமியில் தம் குதிகாலை (பள்ளம் விழும்படி) அழுத்தினார்கள். தண்ணீர் பீறிட்டு வந்தது. இஸ்மாயீலின் தாயார் பதறிப்போய் (அதை அணைகட்டி வைக்கப்) பள்ளம் தோண்டலானார். அபுல்காசிம் (ஸல்) அவர்கள், ‘‘அவர் அப்படியே விட்டிருந்தால் தண்ணீர் வெளியே ஓடக்கூடியதாக இருந்திருக்கும்” என்று சொன்னார்கள். உடனே அவர் அந்தத் தண்ணீரைக் குடிக்கலானார். அவரது பால் அவரது குழந்தைக்காகச் சுரந்த வண்ணமிருந்தது. அப்போது ஜுர்ஹும் குலத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தபோது பறவையொன்றைக் கண்டார்கள். அதை அவர்கள் (இதுவரை அப்பகுதியில் இல்லாத) புதுமையான ஒன்றாகக் கருதினார்கள். ஆகவே, ‘‘பறவை நீர் நிலையின் அருகில்தானே இருக்கும்” என்று பேசிக்கொண்டார்கள். தங்கள் தூதுவரை அவர்கள் அனுப்பி வைக்க, அவர் சென்று பார்த்தபோது அவர்கள் (இஸ்மாயீல், அவருடைய தாயார்) இருவரும் நீர் நிலை அருகே இருக்கக் கண்டார். உடனே தம் குலத்தாரிடம் வந்து அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்தார். அவர்கள் (அன்னை) ஹாஜர் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘இஸ்மாயீலின் அன்னையே! நாங்கள் உங்களுடன் இருக்க லிஅல்லது உங்களுடன் வசிக்கலி எங்களுக்கு அனுமதியளிப்பீர்களா?” என்று கேட்டார்கள். (அவர்கள் அனுமதி யளிக்கவே அங்கேயே வசிக்கலானார்கள்.) ஹாஜருடைய மகன் (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) பருவ வயதையடைந்தார். ஜுர்ஹும் குலத்தாரிலேயே ஒரு பெண்ணை மணந்துகொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (ஒருநாள் தம் மனைவியையும் மகனையும் ‘அவர்கள் என்ன ஆனார்கள்’ என்று பார்த்துவிட்டு வரலாமென)த் தோன்றியது. ஆகவே, தம் வீட்டாரிடம் (முதல் மனைவி சாராவிடம்) நான் (மக்காவில்) விட்டுவந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்துவரப் போகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டு (மக்கா) சென்று (இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவி யிடம்) சலாம் சொல்லி, ‘‘இஸ்மாயீல் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவி, அவர் ‘‘வேட்டையாடச் சென்றுவிட்டார்” என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘அவர் வந்தால், யிஉன் நிலைப்படியை மாற்றிவிடு’ என்று (நான் கட்டளையிட்டதாக) சொல்லிவிடு” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் வந்த போது அவருடைய மனைவி அதை அவருக்குத் தெரிவித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘நீதான் நிலைப்படி. ஆகவே, நீ உன் வீட்டாரிடம் சென்று விடு” என்று சொன்னார்கள். மீண்டும் (சிறிது காலத்திற்குப் பிறகு) இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (மக்காவில் உள்ள மனைவி, மகனைப் பார்த்துவிட்டு வரலாமென்று) தோன்றவே தம் வீட்டாரிடம், ‘‘நான் (மக்காவில்) விட்டுவந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்துவரப் போகிறேன்” என்று சொன்னார்கள். பிறகு (மக்காவிற்குச்) சென்று, ‘‘இஸ்மாயீல் எங்கே?” என்று (அவருடைய மனைவியிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘வேட்டையாடச் சென்றிருக்கிறார்” என்று பதிலளித்தார். பிறகு ‘‘நீங்கள் (எங்களிடம்) தங்கி உண்ணவும் பருகவும்மாட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உங்கள் உணவும் உங்கள் பானமும் எவை?” என்று வினவ அவர், ‘‘எங்கள் உணவு இறைச்சியாகும். எங்கள் பானம் தண்ணீராகும்” என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! இவர்களுக்கு இவர்களின் உணவிலும் பானத்திலும் வளத்தை அளிப்பாயாக!” என்று வேண்டினார்கள். அபுல்காசிம் (ஸல்) அவர்கள், ‘‘(மக்கா வின் உணவிலும் பானத்திலும்) இப்ராஹீம் (அலை) அவர்களது பிரார்த்தனையின் காரணத்தால்தான் வளம் அளிக்கப்பட் டுள்ளது” என்று சொன்னார்கள். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (மீண்டும் ஒருமுறை இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பார்த்து வர வேண்டும்போல்) தோன்றியது. உடனே அவர்கள் (மக்கா) செல்ல, அங்கு இஸ் மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற் றுக்குப் பின்பக்கத்தில் தமது அம்பைச் சீர் செய்துகொண்டிருக்கக் கண்டார்கள். ‘‘இஸ் மாயீலே! உன் இறைவன் தனக்கு ஓர் இல்லத்தை நான் (புதுப்பித்துக்) கட்ட வேண்டுமேன்று எனக்குக் கட்டளை யிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் உங்கள் இறைவனுக்குக் கீழ்ப் படியுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘(அதைக் கட்டுவதற்கு) நீ எனக்கு உதவ வேண்டு மென்றும் அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அப்படியாயின் நான் (உதவி) செய்கிறேன்” என்று சொன்னார்கள். உடனே இருவரும் தயாராகி, இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டத் தொடங்க, இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து தரலானார் கள். இருவரும் (அப்போது), ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய் (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள். இறுதி யில் கட்டடம் எழும்பியது. பெரியவ(ர் இப்ராஹீம் அன்னா)ருக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே, (யிமகாமு இப்ராஹீம்’ என்றழைக்கப்படும்) இந்தக் கல்மீது நின்று கொண்டார்கள். அவர்களுக்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தரலானார்கள். இருவரும் ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்பாயாக! நிச்சயமாக, நீயே செவியுறு பவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (2:127) என்று பிரார்த்தித்துக்கொண்டி ருந்தார்கள். அத்தியாயம் :

40

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) இறை யில்லம்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘(ஜெரூஸலத்தில் உள்ள) அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப் பட்டது).40 பிறகு, ‘‘நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில்தான் சிறப்பு உள்ளது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

41

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஒரு போரிலிருந்து திரும்பி வரும்போது) உஹுத் மலை தென்பட்டது. அப்போது ‘‘இந்த மலை நம்மை நேசிக் கின்றது; நாம் இதை நேசிக்கின்றோம். இறைவா! இப்ராஹீம் அவர்கள் மக்கா நகரைப் புனிதமானது என்று அறிவித் தார்கள். நான் மதீனாவின் இரு மலைகளுக் கிடையே உள்ளவற்றைப் புனிதமானவை என்று அறிவிக்கிறேன்” என்று சொன் னார்கள்.41 அத்தியாயம் :

42

நபி (ஸல்) அவர்களின் துணைவி யாராகிய ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை (புதுப்பித்துக்) கட்டியபொழுது இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிடச் சுருக்கி (சற்று உள்ளடக்கி) கட்டியிருப்பதை நீ பார்க்கவில்லையா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இல்லாதிருந்தால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்)” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கக் கேட்ட) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ‘‘ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும்) வளைந்த பகுதியை அடுத்துள்ள (கஅபா வின்) இரு மூலைகளையும் தொட்டு முத்த மிடாததற்குக் காரணம் இறையில்லமான கஅபா, இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (கொஞ்சம் விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும் என்றே நான் கருதுகிறேன்” எனக் கூறினார்கள்.42 அத்தியாயம் :

43

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்கள்மீது நாங்கள் எப்படி ‘ஸலவாத்’ சொல்வது?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரிய்யத்திஹி கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்” (பொருள்: இறைவா! இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார்மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல் அவர்கள்மீதும் அவர்களுடைய துணைவியர் மற்றும் அவர்களுடைய சந்ததிகள்மீதும் கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தார்மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் அவர்களுடைய துணைவியர் மற்றும் அவர்களுடைய சந்ததிகள்மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயம், நீயே புகழுக் குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய்) என்று சொல்லுங்கள்” எனப் பதிலளித்தார்கள். அத்தியாயம் :

44

அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து, ‘‘நபி (ஸல்) அவர் களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட் டுமா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம், அதை எனக்கு வழங்குங்கள்” என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், ‘‘நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், யிதங்கள்மீதும் தங்கள் குடும்பத்தார்மீதும் ஸலவாத் சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.) ஏனெனில், தங்க ளுக்கு நாங்கள் சலாம் சொல்வது எப்படி என்பதை அல்லாஹ் எங்களுக்கு (அத்தஹிய்யாத்தில்) கற்றுக்கொடுத்திருக் கின்றான்” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹும்ம! ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம் இன்ன(க்)க ஹமீதும் மஜீத்; அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதும் மஜீத்” என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள். (பொருள்: ‘‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள்மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார்மீதும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் முஹம்மதின் குடும்பத்தார்மீதும் கருணை புரிந்திடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள்மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார்மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் முஹம்மதின் குடும்பத்தார்மீதும் உன் அருள்வளத்தைப் பொழிந்திடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

45

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஹசன் (ரலி) மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். ‘‘அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வ மின் குல்லி ஐனின் லாம்மத்தின்” (பொருள்: ‘‘அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” எனும் இந்தச் சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரிவந்தார்கள் என்று கூறுவார்கள். அத்தியாயம் :

46

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறந்தவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. குர்ஆனின்படி,) இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! இறந்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காட்டு” என்று கேட்டபோது அல்லாஹ், ‘‘நீர் நம்பவில்லையா?” என்று கேட்டான். அவர்கள், ‘‘ஆம்; (நம்பிக்கை கொண் டுள்ளேன்.) ஆனாலும், என் உள்ளம் நிம்மதியடைவதற்காக இப்படிக் கேட்டேன்” என்று பதிலளித்தார்கள். லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள்.43 யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவுக்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால் (விடுதலை யளிக்க) அழைத்தவரிடம் (அவரது அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) ஒப்புக்கொண்டிருப்பேன்.44 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

47

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அம்பெறியும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த, பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்களும்) அம்பெய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள்.45 நீங்கள் அம்பெறியுங்கள். நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று சொன்னார்கள். அப்போது அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த இரு சாராரில் ஒரு சாரார் தம் கைகளை (அம்பெய்யாமல்) தடுத்து நிறுத்திக்கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் அம் பெய்யாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட் டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் அம்பெய்வோமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (மீண்டும்) ‘‘நீங்கள் அம்பெய்யுங்கள். நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.46 அத்தியாயம் :

48

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களிடம்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர்” என்று பதிலளித் தார்கள். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய மகனான அல்லாஹ் வின் தூதர் யூசுஃப் அவர்கள்தான்!” என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், ‘‘நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியர் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக் கொண்டால்” என்று பதிலளித்தார்கள்.50 அத்தியாயம் :

49

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லூத் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! அவர்கள் பலமான ஓர் ஆதரவாளனிடமே புகலிடம் தேடுபவர் களாயிருந்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51 அத்தியாயம் :

50

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?” எனும் (54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற் றுள்ள) இறைவசனத்தை ஓதினார்கள்.52 அத்தியாயம் :

51

அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுத்துவத்திற்குச் சான்றாக வந்த) ஒட்டகத்தை (அதன் கால் நரம்புகளை) வெட்டிக் கொன்றவனை நினைவு கூர்ந்தபடி நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸாலிஹ் உடைய சமுதாயத்தில் அபூஸம்ஆவைப் போல் மதிப்பும் வலிமையும் வாய்ந்த ஒரு மனிதன் அதைக் கொல்ல ஒப்புக்கொண்டு முன் வந்தான்” என்று சொன்னார்கள்.54 அத்தியாயம் :

52

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரின்போது (ஸமூத் குலத்தார் வாழ்ந்த) யிஹிஜ்ர்’ என்னும் இடத்தில் தங்கிய சமயம் அதன் கிணற்றிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாம் என்றும் அதிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும் தம் தோழர்களுக்கு உத்தர விட்டார்கள். தோழர்கள், ‘‘நாங்கள் அதிலிருந்து (எடுத்த தண்ணீரால் ஏற்கெனவே) மாவு பிசைந்துவிட்டோமே! (என்ன செய்வது?)” என்று கேட்டனர். அதற்கு அவர்கள் அந்த மாவை (சாப்பிடாமல்) வீசியெறிந்துவிடுமாறும் அந்தத் தண் ணீரைக் கொட்டிவிடுமாறும் உத்தரவிட்டார்கள். (ஸமூத் குலத்தாரின் கிணற்றிலிருந்து எடுத்த தண்ணீரால் தயாரித்த) உணவை எறிந்துவிடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்” என்று சப்ரா பின் மஅபத் (ரஹ்) அவர்களும் அபுஷ் ஷமூஸ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். ‘‘அதன் தண்ணீரால் மாவு தயாரித்தவர் அதை எறிந்துவிடட்டும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

53

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் (தபூக் போரின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான யிஹிஜ்ர்’ என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடுமாறும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டுவிடுமாறும் கட்டளை யிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் (அலை) அவர் களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) வந்துகொண்டிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுமாறும் உத்தர விட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

54

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பகுதியைக் கடந்து சென்றபோது, ‘‘அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள்” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தமது போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள். அத்தியாயம் :

55

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்ததைப் போன்ற தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே தவிர நுழை யாதீர்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.55 அத்தியாயம் :

56

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன்தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

57

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘மனிதர்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘மனிதர்களில் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தான்” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘‘இதைப் பற்றி உங்களிடம் நாங்கள் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால் மக்களிலேயே மிகவும் கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் யூசுஃப் (அலை) அவர்கள்தான்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘நாங்கள் இதைப் பற்றியும் உங்களிடம் கேட்கவில்லை” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியரின் பரம்பரை) பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? மக்கள் மூலகங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும்போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள்.58 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

58

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட் களில்) என்னிடம், ‘‘அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கும்படி சொல்” என்று சொன்னார்கள். நான், ‘‘அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள். நீங்கள் தொழுகைக் காக நிற்குமிடத்தில் அவர்கள் நிற்க நேரும்போது மனம் நெகிழ்ந்துபோய் (அழுது)விடுவார்கள்” என்று சொன்னேன். அவர்கள் முன்பு சொன்னதைப் போன்றே மீண்டும் சொன்னார்கள். நானும் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னேன். அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது முறையில் லிஅல்லது நான்காவது முறையில்லி ‘‘(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ருக்குச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.59 அத்தியாயம் :

59

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அப்போது, ‘‘அபூபக்ரிடம் மக்களுக்குத் தொழுவிக்கும்படி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அபூபக்ர் (ரலி) அவர்கள் இத்தகைய (இளகிய மனமுடைய)வராயிற்றே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்பு போலவே (மீண்டும்) சொல்ல, ஆயிஷாவும் அதையே சொன்னார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூபக்ருக் குச் சொல்லுங்கள். அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும். (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழி கள் போன்(று உள்நோக்கத்துடன் பேசு கின்)றவர்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளிலேயே அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத்) தொழுவித் தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுசைன் பின் அலீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுவதாவது: ஸாயிதா பின் குதாமா (ரஹ்) அவர்கள், (‘அபூபக்ர் (ரலி) அவர்கள் இத்தகைய மனிதராயிற்றே’ என்னும் ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லுக்குப் பதிலாக,) யிஇளகிய மனமுடைய மனிதராயிற்றே’ என்று சொன்னதாக அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

60

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவா! அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்று. இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் பின் அல்வலீதைப் காப்பாற்று. இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்று. இறைவா! யிமுளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் அவர்களுடைய சமுதாயத்தாருக்குக் கொடுத்த (கடும் பஞ்சம் நிறைந்த) ஆண்டு களைப் போன்று முளருக்கும் (கடும் வறட்சி நிறைந்த) சில ஆண்டுகளைக் கொடுப்பாயாக!” என்று பிரார்த்தித்தார் கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.60 அத்தியாயம் :

61

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், லூத் (அலை) அவர்களுக் குக் கருணை புரிவானாக! அவர்கள் பலம் வாய்ந்த ஓர் உதவியாளனிடமே தஞ்சம் புகுந்தவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் (அடைபட் டுக்) கிடந்த காலம் நான் சிறையில் (அடைபட்டுக்) கிடக்க நேர்ந்து, பிறகு (அவரிடம் வந்ததைப்போல்) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். (ஆனால், அவர் அவ்வளவு நெடுங்காலம் சிறையில் அடைபட்டுக் கிடந்தும், ‘‘தமது குற்றமற்ற தன்மையை ஏற்று அறிவிக்காத வரை சிறை’லிருந்து வெளியேற மாட்டேன்” என்று கூறிவிட்டார்.)61 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

62

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது (நடந்தவை பற்றி அவர்களின் தாயாரான) உம்மு ரூமான் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்:62 நான் ஆயிஷாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், ‘‘இன்னாரை (மிஸ்தஹ் பின் உஸாஸா (ரலி) அவர்களை) அல்லாஹ் நிந்திக்கட்டும்” என்று கூறியபடி வந்தாள். நான், ‘‘ஏன் (இப்படிச் சொல்கிறாய்?)” என்று கேட்டேன். அதற்கு அவள், ‘‘(அவதூறுச்) செய்தியை அவர் (அறியாமையால்) பரப்பிவருகிறார்” என்று பதிலளித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘எந்த (அவ தூறுச்) செய்தியை?” என்று கேட்டார். அவள் அந்த அவதூறுச் செய்தியைத் தெரிவித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இதை (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களும் (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செவியுற்றார்களா?” என்று கேட்டார். நான், ‘‘ஆம் (செவியுற்றார்கள்)” என்று பதில் சொன்னேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார்கள். பிறகு குளிர் காய்ச்சலுடன்தான் மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, ‘‘இவளுக் கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், ‘‘தன்னைப் பற்றிப் பேசப்பட்ட அவதூறுச் செய்தியைக் கேள்விப்பட்ட காரணத்தால் அவருக்குச் காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது” என்று பதிலளித்தேன். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்து கொண்டு, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். நான் (நடந்ததை எடுத்துச் சொல்லி) சமாதானப்படுத்தினாலும் நீங்கள் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் உவமை யஅகூப் (அலை) அவர்களுடையவும் அவர்களின் பிள்ளைகளுடையவும் நிலையாகும். (யஅகூப் (அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே நீங்கள் புனைந்துரைக்கும் விஷயத்தில்) அல்லாஹ்தான் உதவி கோரத் தகுதியானவன் ஆவான்” என்று சொன்னார்கள்.63 உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அதைத் தொடர்ந்து அல்லாஹ், தான் அருளிய (ஆயிஷா (ரலி) அவர்கள் நிரபராதி என்று அறிவிக்கும்) வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் அதை ஆயிஷாவுக்குத் தெரிவித்தார்கள். அதைச் செவியுற்றவுடன் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘(இதற்காக) அல்லாஹ்வுக்கு (மட்டுமே) நான் நன்றி செலுத்துகிறேன். வேறெவருக்கும் நன்றி செலுத்தமாட்டேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

63

உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இறுதியில், இறைத்தூதர்கள் (மக்கள்மீது) நம்பிக்கை இழந்து, அவர்க(ளின் ஆதரவாளர்க)ளும் தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தொடங்கியபோது, அவர்களுக்கு நமது உதவி வந்தது” (12:110) என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த வசனத்தின் மூலத்தில், (யிதங்களி டம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ’ என்பதைக் குறிப்பதற்கான சொல்லை) யிகுஃத்திபூ’ (இறைத்தூதர்கள் பொய்யர்கள் என மக்களால் கருதப்பட்டார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது யிகுஃதிபூ’ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என இறைத்தூதர்களின் ஆதரவாளர்கள் எண்ணினர்) என்று வாசிக்க வேண்டுமா?” என்று நான் கேட்டேன்.64 ‘‘ யிகுத்திபூ’ (தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோமோ என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள் என்றுதான் ஓத வேண்டும்)” என ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அதாவது இறைத் தூதர்களை அவர்களின் சமுதாயத்தார் ஏற்க மறுத்தனர். உடனே, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களுடைய சமுதாயத்தார் தங்களைப் பொய்ப்பிக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள்? (ஆனால் யிழன்னூ’ லி நபிமார்கள் சந்தேகித்தார்கள் என்றுதானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகின்றவாறு எப்படிப் பொருள் கொள்ள முடியும்?)” என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அன்பு (மகனே) உர்வா! அதை அவர்கள் உறுதியாக நம்பத்தான் செய்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், யிழன்னூ’ என்பதற்கு யிநபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்’ என்றே பொருள் கொள்ள வேண்டும்; சந்தேகித்தார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது)” என்று பதில் கூறினார்கள்.65 அப்போது யிகத் குதிபூ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்று நபி மார்கள் கருதலானார்கள்)› என்று இருக்க லாமோ...? என நான் கேட்டேன்.66 அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் காப்பாற்றட்டும். நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை.67 இந்த வசனத்தின் பொருளாவது: இறைத்தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தார், தங்கள் இறைவனை நம்பி, இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்று, அதன் பிறகு (தாம் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டேபோய், இறை உதவியும் வரத் தாமதமாகிக் கொண்டிருந்த அந்த நிலையில்தான், அந்த இறைத் தூதர்கள் தம் சமுதாயத்தாரில் தமது செய்தியைப் பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டனர். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள்கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும் துன்ப துயரங்கள் நீண்டுகொண்டே போனதாலும்) நமது செய்தியைப் பொய் யென்று கருதுகின்றார்கள் என்றும் அவர்கள் எண்ணலானார்கள். அப்போதுதான் நமது உதவி அவர்களை வந்தடைந் தது.68 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் (தம் சகோதரரான) அவர் (யூசுஃப்) விஷயத்தில் நம்பிக்கை இழந்தபோது (இஸ்தைஅசூ) தனிமையில் ஆலோசனை கலந்தனர் (12:80). யியஇச’ (நம்பிக்கை இழத்தல்) என்பதன் யிஇஸ்தஃப்அல’ வாய் பாடே யிஇஸ்தைஅச’ என்பதாகும். அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கை இழந்துவிடாதீர்கள் (என யஅகூப் கூறினார்). (12:87) அதாவது நம்பிக்கை, எதிர்பார்ப்பைக் கைவிட்டுவிடாதீர்கள். அத்தியாயம் :

64

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன்தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

65

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அய்யூப் (அலை) அவர்கள் தமது ஆடை முழுவதையும் களைந்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளி ஒன்றின் கால் வந்து விழுந்தது. உடனே அவர்கள் அதைத் தமது துணியில் எடுக்கலானார்கள். அப்போது அவர்களின் இறைவன் (அவர்களை) அழைத்து, ‘‘அய்யூபே! நீங்கள் பார்க்கின்ற இந்தச் செல்வத்தைவிட்டு உம்மை நான் தன்னிறைவு பெற்றவராக ஆக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; (உண்மைதான்.) என் இறைவா! ஆயினும், உன் அருள்வளத்திலிருந்து நான் தேவையற்றவன் அல்லவே!” என்று பதிலளித்தார்கள்.70 அத்தியாயம் :

66

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (முதன் முதலாக தமக்கு வேத அறிவிப்பு அருளப்பட்ட பின்பு) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம், தமது மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தம் ஒன்றுவிட்ட சகோதரரும் வேதம் கற்றவருமான) வரகா பின் நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறித்தவராக மாறிவிட்டிருந்த ஒரு மனிதராயி ருந்தார். அவர், (நபி ஈசா (அலை) அவர்களுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதிவந்தார். வரகா, நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் விவரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, ‘‘இவர்தான் (இறைத்தூதர்) மூசாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த (வேத அறிவிப்பைக் கொண்டுவரும்) யிநாமூஸ்’ (வானவர்) ஆவார். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப்போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்து கொண்டால், உங்களுக்கு வலிமையுடன் கூடிய உதவியை நான் புரிவேன்” என்று கூறினார்.72 யிநாமூஸ்’ என்பவர், பிறருக்கு அறிவிக் காமல் மறைக்கின்ற விஷயங்களை (இறைக் கட்டளைப்படி) இறைத்தூதருக்கு அறிவிக்கும் வானவர் ஆவார். அத்தியாயம் :

67

மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட (மிஃராஜ்) இரவைப் பற்றி(ய செய்திகளை) எங்களுக்கு அறிவித் தார்கள்: நான் ஐந்தாவது வானத்திற்குச் சென்றபோது, அங்கே ஹாரூன் அவர்கள் இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இவர்கள்தான் ஹாரூன் அவர்கள். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் என் சலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு, ‘‘நல்ல சகோதரரே வருக! நல்ல நபியே வருக!” என்று சொன்னார்கள்.73 இதே நபிமொழி அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

68

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள், ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணெய் தடவிப்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள் நடுத்தர வயதுடைய சிவப்பான மனிதராகவும் (அப்போதுதான்) குளியலறை’லிருந்து வெளியே வந்த வரைப் போன்றும் இருந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததி களிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நான்தான். பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது; மற்றொன்றில் மது இருந்தது. (வானவர்) ஜிப்ரீல் அவர்கள், ‘‘இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர் களோ அதை அருந்துங்கள்” என்று கூறி னார்கள். நான் பாலை எடுத்து அருந்தி னேன். ‘‘நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக்கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும்” என்று சொன் னார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

69

70

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் லி அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10ஆவது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்றுவந்ததை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்லி யூதர்கள், ‘‘இது மாபெரும் நாள். மூசா (அலை) அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அவர்களைவிட மூசா அவர்களுக்கு மிக நெருக்கமானவன்” என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (கூடுதலான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.76 அத்தியாயம் :

71

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்துவிடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூசா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியணையின் கால்களில் ஒரு காலைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா, அல்லது யிதூர்’ சீனா மலையில் (இறைவனைச் சந்தித்தபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டார்களா என்பது எனக்குத் தெரியாது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.77 அத்தியாயம் :

72

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்கள் மட்டும் இருந்திரா விட்டால் இறைச்சி துர்நாற்றமெடுக்காது. ஹவ்வா (ஏவாள்) அவர்கள் மட்டும் இருந்திராவிட்டால் பெண், தன் கணவனை எக்காலத்திலும் (ஆசையூட்டி) ஏமாற்ற மாட்டாள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.78 அத்தியாயம் :

73

உபைதுல்லாஹ் பின் அப்தில் லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹுர்ரு பின் கைஸ் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களுடன் மூசா (அலை) அவர்களு டைய தோழர் யார் என்பது தொடர்பாக (கருத்து வேறுபாடு கொண்டு) தர்க்கித்தார் கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவர் களிர் (அலை) அவர்கள்தான்” என்று கூறினார்கள். அவர்கள் இருவரை யும் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களை அழைத்து, ‘‘நானும் என்னுடைய இந்தத் தோழரும், தாம் சந்திக்கவிருப்பவரிடம் செல்ல வேண்டிய பாதையை விசாரித்த மூசா (அலை) அவர்களின் (சந்திப்புக்குரிய) தோழரைக் குறித்து (அவர் யார் என்பதில் கருத்து பேதம் கொண்டு) தர்க்கித்துக் கொண்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரைப் பற்றிக் கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று வினவினார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், ‘‘ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டேன்” என்றார்கள்: இஸ்ரவேலர்களின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து, மூசா (அலை) அவர்களிடம், ‘‘உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘‘(அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, ‘‘அப்படியல்ல; நம் அடியார் யிகளிர்’ உங்களைவிட அறிந்தவராயிருக்கிறார்” என்று கூறினான். எனவே, மூசா (அலை) அவர்கள் அவரைச் சென்றடைவதற்கான பாதையை விசாரித்தார்கள். ஆகவே, (களிர் (அலை) அவர்களைச் சந்திக்கும் இடம் வந்துவிட்டது என்பதை) மூசா (அலை) அவர்கள் புரிந்துகொள்ள மீன் அடையாளமாக ஆக்கப்பட்டது. மேலும் அவர்களிடம், ‘‘மீனை நீங்கள் தவறவிட்டுவிட்டால் உடனே (வந்த வழியே) திரும்பி வாருங்கள். அப்போது அவரை நீங்கள் சந்திப்பீர்கள்” என்று சொல்லப்பட்டது. அதன்படி, அவர்கள் கடலில் மீனைப் பின்தொடர்ந்து (சென்று)கொண்டிருந்தார் கள். அப்போது மூசா (அலை) அவர்களி டம் அவர்களின் (உதவியாளரான) இளைஞர், ‘‘நான் அந்தப் பாறையின் பக்கம் ஒதுங்கி ஓய்வெடுத்தபோது மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன். அதை நினைவில் வைத்திருக்க விடாமல் ஷைத்தான்தான் அதை எனக்கு மறக் கடித்துவிட்டான்” என்று சொன்னார். உடனே, மூசா (அலை) அவர்கள், ‘‘(அது நம்மைவிட்டு நழுவிச் செல்லும்) அந்தச் சந்தர்ப்பத்தைத்தான் நாம் எதிர்பார்த்திருந்தோம்” என்று சொன்னார் கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே நடந்து திரும்பிச் சென்றனர். (வழியில்) களிர் (அலை) அவர்களைச் சந்தித்தனர். பிறகு அல்லாஹ் தன் வேதத்தில் எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.80 அத்தியாயம் :

74

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நவ்ஃப் அல்பிக்காலீ என்பவர், யிகளிர்’ (அலை) அவர்களின் தோழரான மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசா (அலை) அவர்கள் அல்லர்; அவர் வேறொரு மூசாதான் என்று கருதுகிறார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பகைவன் பொய் சொல்லிவிட்டான். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நமக்கு அறிவித்து உள்ளார்கள்: (ஒருமுறை) மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடையே எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்களிடம், ‘‘மக்களிடையே மிகவும் அறிந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நான்தான்” என்று பதிலளித்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ்வே அறிந்தவன்” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ், மூசா (அலை) அவர்களிடம், ‘‘இல்லை. இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உங்களைவிட அதிகமாக அறிந்தவர்” என்று சொன்னான். மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! அவரை நான் சந்திப்பதற்கு யார் (வழி காட்டுவார்?)” என்று கேட்டார். லிஅறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், யிஇறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?› என்று மூசா (அலை) அவர்கள் கேட்டதாகவும் சொல்லியிருக்கலாம்லி அதற்கு அல்லாஹ், ‘‘நீங்கள் ஒரு மீனை எடுத்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக்கொள்ளுங்கள். (அப்படியே கடற்கரையோரமாக நடந்து செல்லுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார்” என்று சொன்னான். அதன்படியே மூசா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளர் யூஷஉ பின் நூன் அவர்களும் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு நடந்தார்கள். அவர்கள் ஒரு பாறையருகே சென்று சேர்ந்தபோது அங்கே படுத்து ஓய்வெடுத்தார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் தூங்கிவிட்டார்கள். மீன் குதித்து வெளி யேறிக் கடலில் விழுந்தது. அது கடலில் (சுரங்கம்போல்) வழியமைத்துக்கொண்டு (செல்லத் தொடங்கி)விட்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட (மீனைச் சுற்றி) ஒரு வளையம்போல் தண்ணீர் ஆகி விட்டது. மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்றுகொண்டே யிருந்தார்கள். இறுதியில், அடுத்த நாள் வந்தபோது தம் உதவியாளரை நோக்கி, ‘‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா! நாம் நமது இந்தப் பயணத்தால் மிகவும் களைப் படைந்துவிட்டோம்” என்று மூசா (அலை) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட இடத்தை மூசா (அலை) அவர்கள் தாண்டிச் செல்லும்வரை அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. அவர்களின் உதவியாளர் அவர்களிடம், ‘‘நாம் அந்தப் பாறையில் ஓய்வெடுக்க தங்கினோமே, பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன். (அதை நினைவில் வைத்திருக்காதபடி) ஷைத்தான்தான் எனக்கு அதை மறக் கடித்துவிட்டான். அது வியப்பான முறையில் கடலில் வழியமைத்துக்கொண்டு (சென்று)விட்டது” என்று சொன்னார். மீனுக்கு அது (தப்பிக்க) வழியாகவும், அவ்விருவருக்கும் அது வியப்பாகவும் அமைந்தது. மூசா (அலை) அவர்கள் அந்த உதவியாளரிடம், ‘‘அதுதான் நாம் தேடிக்கொண்டிருந்த இடம்” என்று சொன்னார்கள். உடனே அவர்கள் இருவரும் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில், அந்தப் பாறையை அடைந்தார்கள். அங்கே ஒரு மனிதர் தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தியவராக (அமர்ந்து) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் கூற, அம்மனிதர் அவர்களுக்குப் பதில் சலாம் சொன்னார். பிறகு, ‘‘உங்களுடைய (இந்தப்) பகுதி யில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எப்படி (வந்தது? நீங்கள் யார்?)” என்று களிர் வினவினார். மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசாவா” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘‘ஆம். உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக நான் உங்களிடம் வந்திருக்கின்றேன்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், ‘‘மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னி டம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர் கள்; அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஒருவகை அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்” என்று சொன்னார். மூசா (அலை) அவர்கள், ‘‘நான் உங்க ளைத் தொடர்ந்து வரட்டுமா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது. நீங்கள் அறியாத விஷயத்தை எப்படிச் சகித்துக்கொண்டிருப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நீங்கள் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்கள். எந்த விவகாரத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்” என்று சொன்னார்கள். பிறகு இருவரும் கடற்கரையோரத்தில் நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அதன் உரிமையாளர்(களான ஏழைத் தொழிலாளர்)களிடம் தங்களை ஏற்றிச்செல்லும்படி பேசினார்கள். அவர்கள் களிர் (அலை) அவர்களை அடையாளம் கண்டு அவர்களை வாடகை கேட்காமல் ஏற்றிச்சென்றார்கள். அவர்கள் இருவரும் மரக்கலம் ஏறியபோது சிட்டுக்குருவி ஒன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்தது. பிறகு அது கடலில் (அலகால்) ஒரு முறை அல்லது இருமுறை கொத்தி (நீர் அருந்தி)யது. உடனே மூசா (அலை) அவர்களிடம் களிர் (அலை), ‘‘மூசாவே! இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் (கொத்தி நீரருந்தியதால்) இந்தக் கடலிலிருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவுதான் என் அறிவும் உங்கள் அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறி னார்கள். அப்போது கிள்ர் ஒரு கோடரியை எடுத்து மரக்கலத்தின் (அடித்தளப்) பலகை ஒன்றைக் கழற்றிவிட்டார்கள். களிர் (அலை) அவர்கள் வாய்ச்சியின் உதவி யால் (மரக்கலத்தின்) பலகையைக் கழற்றிய பின்புதான் மூசா (அலை) அவர்களுக்குத் தெரியவந்தது. உடனே மூசா (அலை) அவர்கள், ‘‘என்ன காரியம் செய்துவிட்டீர் கள்? வாடகை இல்லாமலே நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டு மென்றே ஓட்டையாக்கிவிட்டீர்களே! அதில் சவாரி செய்பவர்களை மூழ்கடிக் கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் மிகப்பெரும் (கொடுஞ்)செயலைச் செய்து விட்டீர்கள்” என்று சொன்னார்கள். களிர் (அலை) அவர்கள், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையோடு இருக்க முடியாது என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்றார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘நான் மறந்துவிட்டதை வைத்து என்னைத் தண்டித்து (போகச் சொல்லி)விடாதீர்கள். என் விஷயத்தில் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். ஆக, மூசா (அலை) அவர்கள் முதல் தடவையாகப் பொறுமை யிழந்தது அவர்கள் மறந்து போனதால்தான். (பிறகு) கடலிலிருந்து அவர்கள் வெளியேறியபோது சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கடந்து சென்றார்கள். களிர் (அலை) அவர்கள் அச்சிறுவனின் தலையைப் பிடித்து, தமது கையால் இப்படிப் பிடுங்கி (தனியே எடுத்து)விட்டார்கள். லிஇந்த இடத்தில் அறிவிப்பாளர் கஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், தம் விரல்நுனிகளை எதையோ பறிப்பதைப்போல் காட்டி சைகை செய்தார்கள்லி அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம், ‘‘ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரை யல்லவா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்க வில்லையே? நீங்கள் மிகவும் தீய செயலைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறி னார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது” என்று நான் (முன்பே) சொல்ல வில்லையா?” என்று சொன்னார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உங்களுடன் வைத்தி ருக்காதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது” என்றார்கள். மீண்டும் இருவரும் நடந்தார்கள். இறுதியில், ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார் கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழலாமா என யோசித்துக்கொண்டிருந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள். (இதைக் கண்ட) உடனே களிர் (அலை) அவர்கள் (இந்தச் சுவரை நிலை நிறுத்துவோம் என்பதற்கு அடையாளமாக) தம் கையால் இப்படிச் சைகை செய்தார்கள். லிஅறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மேலே ஏதோ ஒரு பொருளைத் தடவுவது போல் சைகை காட்டினார்கள்லி லிமேலும், அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள், ‘‘சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் யிசாய்ந்தபடி’ என்னும் வார்த்தையை ஒரேயொரு முறைதான் சொல்லக் கேட்டேன்” என்று கூறுகிறார்.லி மூசா (அலை) அவர்கள், ‘‘இந்த சமுதாயத்தாரிடம் நாம் வந்து (உணவுகேட்டு)ம் அவர்கள் நமக்கு உணவளிக்கவும் இல்லை; விருந்துபசாரம் செய்யவு மில்லை (அவ்வாறிருந்தும்) வேண்டுமென்றே நீங்கள் அவர்களுடைய சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பியிருந்தால் அதற்குக் கூலி வாங்கியிருக்கலாம்” என்றார்கள். களிர் (அலை) அவர்கள், ‘‘இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண் டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக் கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறி வித்துவிடுகிறேன்” என்று கூறினார்கள். லிநபி (ஸல்) அவர்கள், யிமூசா (அலை) அவர்கள் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம். அவ்வாறிருந்தால், அல்லாஹ் அவ்விரு வரின் நிகழ்ச்சிகள் பற்றி (இன்னும் நிறைய) எடுத்துரைத்திருப்பான்’ என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: ‘‘மூசா பொறுமையாக இருந்திருப்பாரே யானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகள்) நமக்கு அறிவிக்கப்பட்டிருக் கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் ஒவ்வொரு பழுதில்லாத ஒழுங்கான மரக்கலத்தையும் நிர்பந்தமாக அபகரித்துக்கொண்டிருந்தான். மேலும், அந்தச் சிறுவனுடைய விஷயம் என்னவெனில், அவன் இறைமறுப்பாள னாக இருந்தான் (கான காஃபிரன்). அவனுடைய தாய் தந்தையர் இறைநம்பிக்கை யாளர்களாக இருந்தனர்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: பிறகு சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் என்னிடம், ‘‘அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் இப்படி ஓதுவதை இரண்டு முறை கேட்டு நான் அதை அவர்களிடமிருந்து ம”ம் செய்திருக்கிறேன். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘‘இதை அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்து நீங்கள் ம”ம் செய்தீர்களா? அல்லது அம்ர் பின் தீனாரிடமிருந்து கேட்பதற்கு முன்பு வெறெந்த மனிதரிடமிருந்தாவது அதை ம”ம் செய்தீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘வேறெவரிட மிருந்து இதை நான் ம”ம் செய்வேன்? அம்ர் பின் தீனாரிடமிருந்து அதை என்னைத் தவிர வேறெவராவது அறிவித் திருக்கிறார்களா? அவரிடமிருந்து இரண்டு அல்லது மூன்று முறை நான் செவியுற்று அதை ம”ம் செய்திருக்கிறேன்” என்று சொன்னார்கள். 81 அத்தியாயம் :

75

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: களிர் (அலை) அவர்கள் ஒரு காய்ந்த பொட்டல் பூமியின் மீது அமர்ந்தார்கள். உடனே அவர்களுக்குப் பின்னே அது பசுமையான (கதிர்களுடைய)தாக (உயிர் பெற்று) அசையலாயிற்று. அதனால்தான் அவர்களுக்கு யிகளிர்’ (பசுமையானவர்) என்று பெயரிடப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர் களது அறிவிப்பில் முழு ஹதீஸும் இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :

76

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களுக்கு, ‘‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் வாசலில், சிரம் தாழ்த்தியவாறும் யிஹித்தத்துன்’ (யிபாவமன்னிப்புக் கோருகிறோம்’) என்று சொல்லியவாறும் நுழையுங்கள்” என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (யிஹித்தத்துன்’ என்னும் சொல்லை யிஹின்தத்துன்’லிகோதுமை என்று) மாற்றி விட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்தபடி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், தீட்டப்படாத ஒரு கோதுமைக்குள் ஒரு தானிய வித்து என்று சொன்னார் கள்.82 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

77

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக்கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மேனியிலிருந்து சிறிதளவுகூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால்தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக்கொண்டார்கள். அப்போது, இஸ்ரவேலர்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘‘இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால்தான் இந்த அளவுக்கு இவர் (தமது மேனியை) மறைத்துக்கொள்கிறார். (இவருக்குக்) தொழுநோய் இருக்க வேண்டும்; அல்லது விரை வீக்கம் இருக்க வேண்டும்; அல்லது வேறு ஏதேனும் குறைபாடு இருக்க வேண்டும்” என்று கூறினார்கள். மூசா (அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். ஆகவே, (இறைவனின் திட்டப்படி) ஒருநாள் மூசா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத் திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றி)க் கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக்கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களுடைய துணியுடன் ஓடலாயிற்று. மூசா (அலை) அவர்கள், தம் தடியை எடுத்துக்கொண்டு கல்லை விரட்டிப் பிடிக்க முனைந்தார்கள். ‘‘கல்லே என் துணி! கல்லே என் துணி!” என்று குரல் எழுப்பலானார்கள். (அதை விரட்டிச் சென்றபடி) இறுதியில் இஸ்ர வேலர்களின் பிரமுகர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது இஸ்ரவேலர்கள், மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே மிக அழகானவர்களாக இருப்பதை, அவர்களை ஆடையில்லா கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் சொன்ன குறைபாட்டிலிருந்து மூசா (அலை) அவர்களை அல்லாஹ் தூய்மை யாளராக ஆக்கினான். கல் (ஓடாமல்) நின்றுவிட்டது. உடனே மூசா (அலை) அவர்கள், தமது துணியை எடுத்துக்கொண்டு (கோபத்தில்) தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்க லானார்கள். (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து வடுக்கள் ஏற் பட்டன. இந்த நிகழ்ச்சியைத்தான், ‘‘இறைநம்பிக்கையாளர்களே! மூசாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக்கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்” (33:69) எனும் இறைவசனம் குறிக்கின்றது.83 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

78

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட் டார்கள். அப்போது ஒருமனிதர், ‘‘நிச்சயம் இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். (அதைக் கேட்டு) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் கோப(த்தின் அடையாள)த்தை நான் அவர்களின் முகத்தில் கண்டேன். பிறகு, ‘‘மூசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதை விட மிக அதிகமாக அவர் புண்படுத்தப் பட்டார்; இருப்பினும் அவர் (பொறுமை யுடன்) சகித்துக்கொண்டார்” என்று சொன் னார்கள்.84 அத்தியாயம் :

79

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (யிமர்ருழ் ழஹ்ரான்’ எனுமி டத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக்கொண்டு இருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதில் கறுப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற் றில் மிகவும் நல்லது” என்று சொன் னார்கள். மக்கள், ‘‘நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் யாரேனும் உண்டா?” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

80

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: யிமலக்குல் மவ்த்’ (உயிரை எடுத்துச் செல்ல வரும் வானவர்) மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்தபோது மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்துவிட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும் பிச் சென்று, ‘‘மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட் டாய்” என்று கூறினார். இறைவன், ‘‘நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவுக்கு) அவரது கரம் மூடுகின்றதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.)” எனக் கூறினான். (அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூசா (அலை) அவர்களிடம் கூறியபோது) அவர், ‘‘இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்?” என்று கேட்டார்கள். இறைவன், ‘‘மரணம்தான்” என்று பதிலளித்தான். மூசா (அலை) அவர்கள், ‘‘அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக்கொள்” என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அங்கிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத்தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். (இதை எடுத்துரைத்தபோது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாகச் செம்மணற்குன்றின் கீழே அவரது மண்ணறை இருப்பதை உங்களுக்குக் காட்டியிருப்பேன்” என்று கூறினார்கள்.85 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

81

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்களில் ஒருவரும் யூதர்களில் ஒருவரும் சச்சரவிட்டுக்கொண்டார்கள். அந்த முஸ்லிம், ‘‘அகிலத்தார் அனை வரைவிடவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (சிறந்தவராக்கி)த் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீதாணையாக!” என்று அவர் செய்த ஒரு சத்தியத்தின்போது கூறினார். அந்த யூதர், ‘‘அகிலத்தார் அனைவரைவிடவும் மூசா (அலை) அவர்களை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!” என்று கூறினார். (யூதரின்) இந்தச் சொல்லைக் கேட்டதும் அந்த முஸ்லிம் தமது கையை உயர்த்தி யூதரை அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்த, தனது விவகாரத்தையும் அந்த முஸ்லிமின் விவகாரத்தையும் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மூசாவைவிடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்துவிடுவார்கள். அப்போது, நான் தான் மயக்கம் தெளி(ந்து எழு)பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூசா, இறை அரியணையின் ஓர் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப் பார்கள். மூர்ச்சையுற்று விழுந்தவர்களில் அவரும் ஒருவராயிருந்தாரா; அவர் எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து எழுந்து விட்டாரா; அல்லது மூர்ச்சை யடைந்து விழுவதிலிருந்து அல்லாஹ் விலக்களித்தவர்களில் ஒருவராய் அவர் இருந்தாரா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.86 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

82

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்டார்கள். ஆதமிடம் மூசா (அலை), ‘‘உங்கள் தவறு உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள்தானோ?” என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் (அலை) மூசா (அலை) அவர்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மூசா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என்மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னை நீங்கள் பழிக்கிறீர்களே!” என்று கேட்டார்கள். ‘‘இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஆக, ஆதம் (அலை) அவர்கள் விவாதத்தில் மூசா (அலை) அவர்களை வென்றுவிட்டார்கள்’ என்று இருமுறை சொன்னார்கள்” என இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள். அத்தியாயம் :

83

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்து, ‘‘(மிஅராஜு டைய இரவில்) பல சமுதாயங்கள் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அடி வானத்தை அடைத்தபடி ஏராளமான மக்களை நான் கண்டேன். அப்போது, ‘‘தம் சமுதாயத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருக்கும் காட்சிதான் இது” என்று (எனக்குக்) கூறப்பட்டது.87 அத்தியாயம் :

84

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆண்களில் பலர் முழுமைபெற்றிருக் கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமைபெறவில்லை. மற்றப் பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளைவிடவும் ‘ஸரீத்’89 உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்” இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அத்தியாயம் :

85

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் யூனுஸ் (அலை) அவர்களைவிடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) உங்களில் எவரும் சொல்ல வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முசத்தத் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், ‘‘யூனுஸ் பின் மத்தா அவர்களைவிட” எனும் வாசகத்தை அதிகமாகக் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :

86

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘நான் யூனுஸ் பின் மத்தாவைவிடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (யியூனுஸ் பின் மத்தா’லிமத்தாவின் மகன் யூனுஸ் என்று) யூனுஸ் (அலை) அவர்களை அவர்களுடைய தந்தையுடன் இணைத்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :

87

88

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த அடியாரும் (என்னைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

89

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தாவூத் (அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை) ஓதுவது எளிதாக்கப்பட்டிருந்தது. தமது (குதிரை) வாகனத்தை (சவாரிக்காக)த் தயார் செய்யும் படி உத்தரவிடுவார்கள். உடனே அதற்குச் சேணம் பூட்டப்படும். வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறை வேதத்தை ஓதிவிடுவார். தமது கையால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்துதான் அவர் உண்பார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

90

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வழிபடுவேன்” என்று நான் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள்தான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வழிபடுவேன்’ என்று கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். ‘‘நான் அப்படிச் சொல்லத்தான் செய்தேன்” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களால் அது முடியாது. ஆகவே, (சிலசமயம்) நோன்பு வையுங்கள். (சிலசமயம்) நோன்பை விடுங்கள். (இரவில்) நின்று வழிபடுங்கள்; தூங்கவும் செய்யுங்கள். மாதத்தில் மூன்று நாட்கள் நோன்புவையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம் முழுவதும் நோன்பு வைத்ததாகும்” என்று கூறினார்கள். நான், ‘‘இதைவிட அதிக நாள் நோன்பு நோற்பதற்கு எனக்குச் சக்தி உண்டு அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘அப்படியென்றால் ஒருநாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘அதைவிட அதிகத்திற்கு எனக்குச் சக்தியுண்டு, அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன் னேன். அதற்கு அவர்கள், ‘‘அப்படி யென்றால், ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டுவிடுங்கள். அது தான் (நபி) தாவூதின் நோன்பாகும்; அதுதான் நடுநிலையானதாகும்” என்று கூறினார்கள். நான், ‘‘அதைவிடச் சிறந்ததற்கு எனக்குச் சக்தி உண்டு, அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘அதைவிடச் சிறந்ததே இல்லை” என்று கூறினார்கள்.96 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

91

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள் இரவில் நின்று வழிபடுவதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (உண்மைதான்!)” என்றேன். அவர்கள், ‘‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்துவிடும்; மனம் களைப்படைந்து விடும். ஆகவே, ஒவ்வொரு மாதத்திலிருந் தும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்; அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்ற தைப் போன்றதாகும்” என்று சொன்னார் கள். நான், ‘‘எனக்கு (இதைவிட அதிகமாக நோற்பதற்குச்) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால், தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நீர் நோற்பீராக! அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்று ஒருநாள் விட்டுவிடுவார்கள். (போர்க் காலத்தில் பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்” என்று கூறி னார்கள்.97 அத்தியாயம் :

92

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்று, ஒருநாள் விட்டுவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்கு வார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வழிபடுவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்” என்று கூறினார்கள்.100 அத்தியாயம் :

93

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், ‘ஸாத்’ (எனும் 38ஆவது) அத்தி யாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வீர் களா? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள், ‘‘மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், மூசா, ஹாரூன் ஆகியோருக்கும் நல்வழி காட்டினோம். இவ்வாறு... (நபியே!) அவர்கள்தான் அல்லாஹ்வால் நல்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியை (நீரும்) பின்பற்றுவீராக!” எனும் (6:84லி90) குர்ஆன் வசனங்களை ஓதினார்கள். பிறகு, ‘‘உங்கள் நபி (ஸல்) அவர்களும் கூட முந்தைய நபிமார்களைப் பின்பற்றும் படி கட்டளையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.101 அத்தியாயம் :

94

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஸாத்’ (எனும் 38ஆவது) அத்தியாயத்தில் உள்ள இறைவசனத்திற்கு சஜ்தா (சிரவணக்கம்) செய்வது, கட்டாயம் செய்யப்பட வேண்டிய(வை என்று கட்டளை யிடப்பட்டுள்ள) சஜ்தாக்களில் ஒன்றல்ல. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் (38:24) சஜ்தா செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அத்தியாயம் :

95

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையைக் கெடுக்க திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித்தந்தான். நான் அதைப் பிடித்துக்கொண்டேன். நீங்கள் ஒவ்வொரு வரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த, ‘‘என் இறைவா! எனக்குப்பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு வழங்குவாயாக!” (38:35) எனும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.103 இங்கு யிமுரட்டு ஜின்’ என்பதைக் குறிக்க யிஇஃப்ரீத்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இது மனிதர்களில் அல்லது ஜின்களில் முரடர்களைக் குறிக்கும். வானவர்களில் நரகத்தின் பொறுப்பாளர் களுக்கு ‘ஸபானியா’ என்று சொல்லப் படும். அத்தியாயம் :

96

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தாவூத் (அலை) அவர்களுடைய மகன் சுலைமான் (அலை) அவர்கள், ‘‘இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவருடைய தோழர் ஒருவர், ‘‘அல்லாஹ் நாடினால்... என்று சொல்லுங்கள்” என்று கூறினார். சுலைமான் (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ் நாடினால்...” என்று (மறந்து போய்) சொல்லாமலிருந்துவிட்டார்கள். (அவர்கள் அவ்வாறே சென்றும்கூட) தன் இரு புஜங்களில் ஒன்று கீழே விழுந்த ஒரேயொரு குழந்தையைத் தவிர வேறெதையும் அவர்கள் கருத்தரிக்க வில்லை. யிஇன்ஷா அல்லாஹ்... (இறைவன் நாடினால்)› என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியிருந்தால் அவர்கள் (எழுபது பேரும் பிறந்து) அல்லாஹ்வின் பாதையில் போராடியிருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஷுஐப் (ரஹ்) அவர்களும் இப்னு அபிஸ்ஸினாத் (ரஹ்) அவர்களும் தங்கள் அறிவிப்பில் ‘‘தொண்ணூறு மனைவிமார்களிடம் செல்வேன்” என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் அறிவிப்புதான் சரியானது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.104 அத்தியாயம் :

97

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)” என்று பதிலளித்தார் கள். நான், ‘‘பிறகு எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பிறகு ‘அல்மஸ்ஜிதுல் அக்ஸா’ (ஜெரூசலம் நகரிலுள்ள ‘அல் அக்ஸா’ பள்ளிவாசல்)” என்று பதிலளித்தார் கள். நான், ‘‘அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது” என்று கூறினார்கள். பிறகு, ‘‘உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுதுகொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு சிரவணக்கம் செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்” என்று சொன் னார்கள்.105 அத்தியாயம் :

98

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீயை மூட்டிவிட, விட்டில் பூச்சிகளும் இதரப் பூச்சிகளும் அந்த நெருப்பில் விழுகின்றன.106 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

99

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிஎவர் இறைநம்பிக்கை கொண்டு, தம் இறைநம்பிக்கையில் அநீதியைக் கலந்திட வில்லையோ’ எனும் (6:82) இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், ‘‘நம்மில் எவர்தான் தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லை?” என்று கேட்டார்கள். அப்போது ‘‘(என் அருமை மகனே!) அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே. இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்” (என்று லுக்மான் கூறினார்) (31:13) எனும் வசனம் அருளப்பட்டது. அத்தியாயம் :

100

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிஎவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ’ என்னும் (6:82) வசனம் அருளப்பட்டபோது, அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமான தாகத் தென்பட்டது. ஆகவே, அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தமக் குத்தாமே அநீதியிழைத்துக்கொள்ளாதவர் யார்?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல. அது இணைவைப்பையே குறிக்கிறது. யிஎன் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே. நிச்சயமாக, இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்’ என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (குர்ஆன் எடுத்துரைக்கின்றதே, (31:13) அதை) நீங்கள் கேட்கவில்லையா?” என்று சொன்னார்கள்.110 அத்தியாயம் :

101

மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் அவர்கள் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்கள்: ...பிறகு (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் ஏறிச் சென்று இரண்டாம் வானத்தை அடைந்தார். அதன் வாயிலைத் திறக்கச் சொன்னார். ‘‘யார் அது?” என்ற கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘‘உங்களுடன் இருப்பவர் யார்” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘‘அவரை அழைத்து வர ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘ஆம்” என்று பதில் சொன்னார். நான் அங்கு சென்று சேர்ந்தபோது அங்கு யஹ்யா (அலை) மற்றும் ஈசா (அலை) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். (ஒருவருக்கொருவர் சின்னம்மா பெரியம்மா மகன்கள்.) ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இது யஹ்யாவும் ஈசாவும் ஆவர். இருவருக்கும் சலாம் சொல்லுங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நான் சலாம் சொன்னேன். அவர்கள் இருவரும் சலாமுக்குப் பதிலுரைத்தார்கள். பிறகு, ‘‘நல்ல சகோதரரே! நல்ல நபியே! வருக!” என்று கூறி (வாழ்த்தி)னார்கள்.113 அத்தியாயம் :

102

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமை யும் அவருடைய மகனையும் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். பிறகு, ‘‘நான் இக்குழந்தையையும் அதன் வழித்தோன்றலையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு உன்னிடம் கோருகிறேன்” (என்று மர்யம் வேண்டினார்) எனும் இறைவசனத்தை (3:36) ஓதுவார்கள்.115 அத்தியாயம் :

103

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இம்ரானின் மகள் மர்யம்தான் (அப்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் ஆவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார். இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

104

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மற்றப் பெண்களைவிட ஆயிஷாவுக் கான சிறப்பு, மற்ற எல்லா உணவுகளையும் விட ‘ஸரீதுஞீக்குள்ள சிறப்பைப் போன்ற தாகும். ஆண்களில் நிறையப் பேர் முழுமை பெற்றிருக்கின்றனர். ஆனால், பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116 அத்தியாயம் :

105

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகத்தில் பயணிக்கும் பெண்களி லேயே (அரபுப் பெண்களிலேயே) சிறந்த வர்கள் குறைஷிப் பெண்கள்தான். (தம்) குழந்தைகள்மீது அதிகப் பரிவுடையவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக்கூடியவர்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, ‘‘இம்ரானின் மகள் மர்யம், ஒட்டகம் எதிலும் பயணம் செய்த தேயில்லை” என்று கூறினார்கள்.117 ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :

106

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன் அவனுக்கு இணை கிடையாது’ என்றும் யிமுஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும் யிஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும், ‘அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (யிஆகுக!› என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)› என்றும், ‘அவனிடமிருந்து உருவான ஓர் உயிர்’ என்றும், யிசொர்க்கம் (இருப்பது) உண்மை தான்’ என்றும், யிநரகம் (இருப்பது) உண்மை தான்’ என்றும், எவர் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான். இதை உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு ஜாபிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அவரை அல்லாஹ், சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் விரும்பிய வாசல் வழியாக அனுமதிப்பான்” எனறு கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

107

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மூன்று பேரைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும்போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) இஸ்ரவேலர்களால் யிஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டுவந்த (நல்ல) மனிதர் ஒருவர். (ஒருமுறை) அவர் தொழுதுகொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) ‘‘அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?” என்று கூறிக்கொண்டார். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ‘‘இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச்செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!” என்று கூறிவிட்டார். (ஒருமுறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத் தாள். பிறகு யிஇது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கிவரச்செய்து அவரை ஏசினார்கள். உடனே ஜுரைஜ் அங்கத் தூய்மை செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, ‘‘குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அக்குழந்தை, ‘‘(இன்ன) இடையன்” என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை உணர்ந்துகொண்ட) அந்த மக்கள், ‘‘தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும்” என்று கூறிவிட்டார். (மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் ஏறிச் சென்றுகொண்டிருந்தான். உடனே அவள், ‘‘இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்குவாயாக!” என்று துஆ செய்தாள். உடனே அந்தக் குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, ‘‘இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கிவிடாதே” என்று கூறியது. பிறகு அவளது மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. லிஇந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தம் விரலை உறிஞ்சுவது போல் தெரிந்ததுலி பிறகு அக் குழந்தை ஓர் அடிமைப் பெண்ணுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், ‘‘இறைவா! என் மகனை இவளைப்போல் ஆக்கிவிடாதே” என்று கூறினாள். உடனே அக்குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு, ‘‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்குவாயாக!” என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ‘‘ஏன் இப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டதற்கு அக்குழந்தை, ‘‘வாகனத்தில் ஏறிச் சென்றவன் கொடுங் கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) ‘நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்து விட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை” என்று பதிலளித்தது.119 அத்தியாயம் :

108

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (விண்) பயணத் திற்காகத் தாம் கொண்டுசெல்லப்பட்ட இரவில் நடந்தவற்றை விவரித்துக் கூறிய படி, ‘‘நான் மூசா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு, அவர் (களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள். (அப்போது சொன்னார் கள்:) மூசா (அலை) அவர்கள் (யமன் நாட்டைச் சேர்ந்த) ‘ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரைப் போல ஒல்லியான (சதை குறைந்த)வராக, தலைமுடி தொங்கலாக (வாரி)விட்டிருப்பவராக இருந்தார்கள். (தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள்) ‘‘நான் ஈசா (அலை) அவர்களைச் சந்தித் தேன்” என்று கூறிவிட்டு, அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள்: சிவப்பு நிறமுடையவர்களாக, நடுத்தர உயரம் உடையவர்களாக, (அப்போதுதான்) குளியலறை’லிருந்து வெளியே வந்தவர்களைப்போல் அவர்கள் இருந்தார்கள். மேலும், நான் இப்ராஹீம் (அலை) அவர்களையும் பார்த்தேன். நான்தான் அவர்களுடைய வழித் தோன்றல்களிலேயே (தோற்றத்தில்) அவர்களுக்கு மிகவும் ஒப்பானவனாக இருக்கிறேன். என்னிடம் இரு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் ஒன்றில் பாலும் மற்றொன்றில் மதுவும் இருந்தது. ‘‘நீங்கள் விரும்பியதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் பாலை எடுத்து அதைப் பருகினேன். அப்போது, ‘‘நீங்கள் இயற்கையான வழியில் செலுத்தப்பட்டுவிட்டீர்கள். அல்லது நீங்கள் இயற்கையைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று என்னிடம் சொல்லப் பட்டது. ‘‘நீங்கள் மதுவை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும்” என்றும் சொல்லப் பட்டது.120 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

109

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (மிஅராஜ் இரவில்) நான் ஈசா (அலை), மூசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைப் பார்த்தேன். ஈசா (அலை) அவர்கள் சிவப்பு நிறமுடையவர் களாகவும் சுருள்முடி உடையவர்களாகவும் அகன்ற மார்புடையவர்களாகவும் இருந் தார்கள். மூசா (அலை) அவர்களோ மாநிற முடையவர்களாகவும் உயரமானவர்களாகவும், படிந்த, தொங்கலான முடியுடையவர் களாகவும் சூடானிய இனத்தவர்களில் ஒருவரைப் போன்று (நீண்டு மெலிந்தவர் களாகவு)ம் இருந்தார்கள். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

110

111

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஈசா (அலை) அவர்களைக் குறித்து ‘‘அவர்கள் சிவப்பு நிறமுடையவர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக (இப்படித்தான்) கூறினார்கள்: நான் தூங்கிக்கொண்டிருக்கையில் (கனவில்) கஅபாவைச் சுற்றுக்கொண்டி ருந்தேன். அப்போது மாநிறமுடைய தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒரு மனிதர் தமது தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க... அல்லது யிவழிந்துகொண்டிருக்க’ இரு மனிதர்களி டையே தொங்கிக்கொண்டு (கஅபாவைச் சுற்றிக்கொண்டு) இருந்தார். நான், ‘‘இவர் யார்?” என்று கேட்டேன். ‘‘மர்யமின் குமாரர்” என்று பதிலளித்தார்கள். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென் றேன். அங்கு சிவப்பான, தடிமனான, சுருட்டைத் தலைமுடியுள்ள, வலக்கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றி ருந்தது. நான், ‘‘யார் இது?” என்று கேட் டேன், யிதஜ்ஜால்’ என்று பதிலளித்தார்கள் (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் யிஇப்னு கத்தன்’தான். இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு கத்தன் யிகுஸாஆ’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர். அறியாமைக் காலத்திலேயே அவர் இறந்துபோனார். அத்தியாயம் :

112

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன்; இறைத் தூதர்கள் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர்; எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

113

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன். இறைத்தூதர்கள் ஒரே தந்தை யின் பிள்ளைகள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலர் ஆவர். அவர்களுடைய மார்க்கம் ஒன்றே. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

114

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள், ஒரு மனிதர் திருடிக்கொண்டிருப் பதைக் கண்டார்கள். அவரிடம், ‘‘நீ திருடினாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘இல்லை; எவனைத் தவிர வேறு இறைவனில்லையோ அவன் மீதாணை யாக!” என்று பதிலளித்தார். உடனே ஈசா (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்; என் கண்ணை நம்ப மறுத்துவிட்டேன்” என்று சொன்னார்கள்.123 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

115

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘நபி (ஸல்) அவர்கள், ‘கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர் களை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்திவிடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான்தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர்’ என்றும் சொல்லுங் கள்’ என்று கூறினார்கள்” என சொற் பொழிவு மேடை மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கி றேன்.124 அத்தியாயம் :

116

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் அடிமைப் பெண் ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மை யான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அளித்து அவளை (தாமே) மணமும் முடித்துக்கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும். ஒருவர் ஈசா (அலை) அவர்களின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என்மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும். ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானர் களுக்குக் கீழ்ப்படிந்தும் நடப்பானாயின் அவனுக்கும் இரு நற்பலன்கள் கிடைக் கும். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

117

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப் பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர் களாகவும் விருத்த சேதனம் செய்யப் படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்” என்று கூறினார்கள். பிறகு ‘‘எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படு வதைப்போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும். அதை நாம் நிறைவேற்றியே தீருவோம்” (21:104) எனும் இறைவசனத்தை ஓதினார்கள். முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப் பக்கமும், (சிலர் நரகத்திற்காக) இடப் பக்கமும் கொண்டுசெல்லப்படுவார்கள். நான், ‘‘இவர்கள் என் தோழர்கள்” என்று கூறுவேன். ‘‘இவர்களைவிட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்றுகொண்டிருந்தார்கள்” என்று சொல்லப்படும். அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, ‘‘(இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்துவந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிக்கொண்டபோது நீயே இவர்களைக் கண்காணிப்பவனாகி விட்டாய். ஒவ்வொரு விஷயத்தையும் நீ பார்த்துக்கொண்டிருக்கின்றாய். நீ அவர் களைத் தண்டித்தாலும் அவர்கள் உன் அடியார்களே! (அதற்கும் உனக்கு முழு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்து விட்டால் (அது உன் கருணையாகும். ஏனெனில்,) நீ வல்லமை மிக்கவனும் ஞானம் நிறைந்தவனும் ஆவாய்” (5:117,118) என்று சொல்வேன். கபீஸா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தம் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றவர்கள் யாரெனில், அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில் மதம் மாறியவர்கள்தான்! அபூபக்ர் (ரலி) அவர்கள் (போராடி) அவர்களை வீழ்த்திவிட்டார்கள். அத்தியாயம் :

118

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்குமுன்) மர்யமின் மைந்தர் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) வாங்கிக்கொள்வதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (சிரவணக்கம்) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும். இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (ஈசாவின்)மீது நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிரான சாட்சியாக அவர் இருப்பார்’ (4:159) எனும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.125 அத்தியாயம் :

119

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்க ளுக்கு(த் தொழுவிக்கும்) இமாமாக இருக்க மர்யமின் மைந்தர் உங்களிடையே இறங்கு வாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்? இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

120

121

ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கியபோது, தமது முகத்தின் மீது கறுப்புக் கம்பளி துணி ஒன்றைப் போட்டுக்கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும்போது அதைத் தமது முகத்திலிருந்து அகற்றிவிடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, ‘‘யூதர்களின் மீதும் கிறித்த வர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத் தூதர்களின் அடக்கத் தலங்களை அவர்கள் வழிபாட் டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.128 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

122

அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு) அமர்ந்திருந்தேன். (ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘‘இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும்போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப்பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப்பின்) கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘‘அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் உத்திர விடுகிறீர்கள்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘அவர்களில் முதலாவ தாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருப வரிடம் (அந்தக் கடமையை நிறை வேற்றுங்கள்). அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் அல்லாஹ் கேட்கவிருக் கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :

123

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்.129 எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஓர் உடும் பின் பொந்துக்குள் புகுந்திருந்தால்கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வேறு யாரை?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :

124

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தொழுகை நேரம் வந்துவிட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என்று மக்கள் கருதியபோது) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களைப் போல்) தீ மூட்ட லாம் என்றும், மணியடித்து கூப்பிடலாம் என்றும் சொன்னார்கள். (இவையெல்லாம்) யூதர்கள், கிறித்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) என்று (சிலர் மறுத்துக்) கூறினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு ‘அதான்’ எனும் தொழுகை அறிவிப்புக் குரிய வாசகங்களை (கற்றுத்தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் (எனும் கூட்டுத் தொழுகைக்காக நிற்கும்போது சொல்லும்) வாசகங்களை ஒருமுறை மட்டும் சொல்லும்படியும் உத்தரவிடப்பட்டது.130 அத்தியாயம் :

125

மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தொழுபவர் தமது கையைத் தமது பக்கவாட்டில் (இடுப்புக்குமேல்) வைத்திருப் பதை ஆயிஷா (ரலி) அவர்கள் வெறுத்து வந்தார்கள். ‘‘யூதர்கள்தான் அப்படிச் செய்வார்கள்” என்று சொல்வார்கள்.131 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

126

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இதற்குமுன் சென்ற சமுதாயங்களின் (ஆயுட்)காலத் தவணைகளிடையே உங்கள் ஆயுள் தவணை, அஸ்ருக்கும் சூரியன் மறைவதற்கும் இடையேயுள்ள (குறைந்த) கால அளவாகும். உங்கள் நிலையும் யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் நிலையும் தொழிலாளர்கள் சிலரை வேலைக்கு அமர்த்திய ஒரு மனிதரைப் போன்றதாகும். அவர் (தொழிலாளர்களிடம்), ‘‘எனக்காக நடுப்பகல் நேரம்வரை ஒவ்வொரு யிகீராத்’ (ஊதியத்)திற்கு வேலை செய்பவர் யார்?” என்று கேட்டார். யூதர்கள் ஒவ்வொரு யிகீராத்’துக்காக நடுப்பகல்வரை வேலை செய்தார்கள். பிறகு அவர், ‘‘நடுப்பகல் நேரத்திலிருந்து அஸ்ர் தொழுகைவரை ஒவ்வொரு யிகீராத்’ (ஊதியத்)திற்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று கேட்டார். கிறித்த வர்கள் நடுப்பகல் நேரத்திலிருந்து அஸ்ர் தொழுகைவரை ஒவ்வொரு யிகீராத்’துக்காக வேலை செய்தார்கள். பிறகு அவர், ‘‘அஸ்ர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும்வரை இரண்டி ரண்டு யிகீராத்’துகளுக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று கேட்டார். தெரிந்துகொள்ளுங்கள்: அஸ்ர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டிரண்டு யிகீராத்’துகளுக்காக வேலை செய்தவர்கள் (முஸ்லிம்களாகிய) நீங்கள்தான். தெரிந்துகொள்ளுங்கள்: உங்களுக்குத்தான் இருமுறை ஊதியம் கிடைத்துள்ளது. இதைக் கண்ட யூதர்களும் கிறித்தவர்களும் கோபமடைந்து, ‘‘நாங்கள் அதிகமாக வேலை செய்திருக்க, கூலி (எங்களுக்குக்) குறைவாகக் கிடைப்பதா?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ், ‘‘நான் உங்கள் உரிமையிலிருந்து எதையாவது குறைத்(து அநீதியிழைத்)திருக்கிறேனா?” என்று கேட்டான். அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ், ‘‘அ(ப்படிச் சிலருக்கு மட்டும் அதிகமாகக் கொடுப்ப)து என் அருளாகும். அதை நான் விரும்பியவர்களுக்குக் கொடுக்கிறேன்” என்று சொன்னான்.132 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

127

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (ஒருவர் மதுவை விற்பதாக அறிந்த போது) ‘‘அல்லாஹ் இன்னாரை அழிப் பானாக! நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் வின் சாபம் யூதர்கள்மீது உண்டாகட்டும்! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப் பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அதை உருக்கி விற்றார்கள்’ என்று கூறியுள்ளார்கள் என்பதை அவர் அறியமாட்டாரா?” என்று உமர் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன். இதையே நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஜாபிர் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.133 அத்தியாயம் :

128

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். இஸ்ரவேலர் களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளை யும் அறிவியுங்கள். அதனால் குற்ற மில்லை. யார் என்மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

129

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறித்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (அவற்றுக்குக் கறுப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

130

ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் (இந்த நபிமொழியை பஸ்ரா விலுள்ள) இந்தப் பள்ளிவாசலில் எமக்கு அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்ததிலிருந்து நாம் மறக்கவில்லை. ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது (அவர்கள் சொல்லா தைச் சொன்னதாக) பொய்யுரைத்திருப் பார்கள் என்று நாம் அஞ்சவில்லை. (ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவித்த தாவது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே ஒரு மனிதர் வாழ்ந்துவந்தார். (ஒருமுறை) அவர் காயமடைந்தார். அவரால் வலி பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தமது கையைத் துண்டித்துக்கொண்டார். அவர் இறக்கும்வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக்கொண்டேயிருந்தது. அல்லாஹ், ‘‘என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப்பட்டு) என்னை முந்திக்கொண்டான். அவன்மீது நான் சொர்க்கத்தைத் தடுத்துவிட்டேன்” என்று கூறினான்.134 அத்தியாயம் :

131

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் மூன்று பேர் இருந் தனர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவ ராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலை யராகவும் (இன்னொருவர்) கண்பார்வை யற்றராகவும் இருந்தனர். அவர்களை அல்லாஹ் சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, ‘‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், ‘‘நல்ல நிறம், நல்ல தோல்(தான் எனக்கு மிகவும் விருப்ப மானவை). மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவரு(ப்பாகப் பார்)க்கிறார்கள்” என்று சொன்னார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், ‘‘எந்தச் செல்வம் உனக்கு மிகவும் விருப்பமானது?” என்று கேட்க அவர், ‘‘ஒட்டகம்தான் லிஅல்லது மாடுதான்லி (எனக்கு மிகவும் விருப்பமான தாகும்)” என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வானவர், ‘‘இதில் உனக்கு வளம் (வளர்ச்சி) வழங்கப்படும்” என்று சொன் னார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். ‘‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், ‘‘அழகான முடி வேண்டும்; இந்த வழுக்கை என்னைவிட்டுப் போக வேண்டும்; மக்கள் அருவருப்படைந்து என்னை (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்” என்று சொன்னார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவிக்கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், ‘‘எந்தச் செல்வம் உனக்கு விருப்பமானது?” என்று கேட்டார். அவர், ‘‘மாடுதான் எனக்கு மிக விருப்பமான செல்வம்” என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு சூல் கொண்ட மாடு ஒன்றைக் கொடுத்து, ‘‘இதில் உனக்கு வளம் வழங்கப்படும்” என்று சொன்னார். பிறகு அவ்வானவர் குருடரிடம் சென்று, ‘‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், ‘‘அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும்தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவினார். அவருக்கு அல்லாஹ் அவரது பார்வை யைத் திருப்பித்தந்தான். அவ்வானவர், ‘‘உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது?” என்று கேட்க அவர், ‘‘ஆடுதான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதில் அளித்தார். உடனே அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்) நிறைய குட்டிகள் ஈன்றிடப் பெற்றனர். இவர் (ஆடு வழங்கப்பட்டவர்) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெரு மளவில்) கிடைத்தன. பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் அவரது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, ‘‘நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்துபோய்விட்டது.) இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உம்மையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை)வனின் பெயரால் உம்மிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத் தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்” என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர், ‘‘(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)” என்றார். உடனே அவ்வானவர், ‘‘உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழுநோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்க வில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர், ‘‘(இல்லையே; நான் இந்த அழகான நிறத் தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழை யாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்” என்று பதிலளித்தார். உடனே அவ்வானவர், ‘‘நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றிவிடட்டும்” என்று சொன்னார். பிறகு வழுக்கைத் தலையரிடம் அவரது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழுநோயாளியிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவரும் முதலாமவர் அவருக்குப் பதிலளித்ததைப் போன்றே பதிலளித்தார். வானவரும், ‘‘நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றிவிடட்டும்” என்று சொன்னார். பிறகு (இறுதியாக), குருடரிடம் அவரது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, ‘‘நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக் கான பணம்) தீர்ந்துபோய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத் தில் என் தேவையை நிறைவேற்றிக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும் படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன்” என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், ‘‘நான் குருடனாகத்தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித்தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக்கினான். ஆகவே, நீர் விரும்புவதை எடுத்துக்கொள்வீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீர் எடுக்கின்ற எந்தப் பொருளை யும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற் காகச் சிரமப்படுத்தமாட்டேன்” என்று சொன்னார். உடனே அவ்வானவர், ‘‘உன் செல்வத்தை நீயே வைத்துக்கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத்தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந் தான். உன் இரு தோழர்கள் (தொழுநோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்)மீது கோபம் கொண்டான்” என்று சொன்னார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

132

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்றுகொண்டிருந்த போது, (திடீரென) மழை பிடித்துக்கொண்டது. ஆகவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்துக் கொண்டது. அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நம்மை (நமது) வாய்மையான செயல்தான் காப்பாற்ற முடியும். ஆகவே, நம்மில் ஒவ்வொருவரும், தாம் எந்த விஷயத்தில் வாய்மையாக நடந்துகொண்டதாக நம்புகிறாரோ அதைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்” என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். ஆகவே, அவர்களில் ஒருவர் பின்வருமாறு பிரார்த்தித்தார்: ‘‘இறைவா! என்னிடம் ஒரு கூலியாள் எனக்காக ஒரு யிஃபரக்’ (அளவு) நெல்(லை) கூலிக்கு(ப் பேசி) வேலை செய்தார். பிறகு கூலியை (வாங்கிக்கொள்ளாமல்) விட்டு விட்டுச் சென்றுவிட்டார். நான் அந்த யிஃபரக்’ அளவு நெல்லை எடுத்து வேளாண்மை செய்தேன். அதன் வருவாயிலிருந்து பல மாடுகளை வாங்கினேன். பிறகு (ஒருநாள்) அவர் என்னிடம் தமது கூலியைக் கேட்டு வந்தார். நான் அவரிடம், ‘‘அங்கு சென்று, அந்த மாடுகளை ஓட்டிச்செல்” என்றேன். அதற்கு அவர், ‘‘உங்களிடம் எனக்குரியது ஒரு யிஃபரக்’ அளவு நெல்தானே!” என்று கேட்டார். நான் அவரிடம், ‘‘அந்த மாடுகளை எடுத்துக்கொள். ஏனெனில் அவை (நீ விட்டுச்சென்ற) அந்த ஒரு யிஃபரக்’ நெல்லிலிருந்து கிடைத்தவைதான்” என்று சொன்னேன். அவர் அவற்றை ஓட்டிச் சென்றார். (அதை நீ அறிவாய்.) நான் அதை உன் அச்சத்தின் காரணமாகவே செய்ததாக நீ அறிந்திருந்தால் எங்களை விட்டு (இந்தப் பாறையை) நீக்குவாயாக!” அந்தப் பாறை அவர்களைவிட்டு சற்றே விலகியது. மற்றொருவர் பின்வருமாறு பிரார்த் தித்தார்: ‘‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த தாய் தந்தையர் இருந்தனர். நான் ஒவ்வோர் இரவிலும் அவர்களுக்கு என் ஆடு ஒன்றின் பாலைக் கொண்டு செல்வேன். ஓர் இரவு அவர்களிடம் செல்லத் தாமதமாகிவிட்டது. அவர்கள் தூங்கிய பின்பு சென்றேன். என் மனைவி யும் என் குழந்தைகளும் பசியால் கூக்குரலெழுப்பி அரற்றிக்கொண்டிருந்தனர். என் தாய் தந்தையர் பருகுகின்ற வரை அவர்களுக்குப் புகட்ட மனமில்லாதவனாக நான் இருந்தேன். அதே வேளையில், அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிடவும் நான் விரும்பவில்லை. நான் அவர்களை (பால் தராமல்) விட்டுவிட, அவர்கள் (எழுந்தவுடன்) அதைக் குடிப்பதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பதை நான் விரும்பவுமில்லை. ஆகவே, அதிகாலை நேரம் உதயமாகும்வரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். (இதை நீ அறிவாய்.) இதை நான் உன் அச்சத்தின் காரணத்தால்தான் செய்தேன் என்று நீ கருதினால் எங்களைவிட்டு (இந்த அடைப்பை இன்னும் சற்று) நீக்குவாயாக!” அவ்வாறே, அந்தப் பாறை அவர்கள் வானத்தைப் பார்க்கும் அளவுக்கு (இன்னும் சற்று) விலகியது. மற்றொருவர் இப்படிப் பிரார்த்தித்தார்: ‘‘இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் ஒருத்தி எனக்கு இருந்தாள். அவள் மக்களிலேயே எனக்கு அதிகப் பிரியமான வளாக இருந்தாள். நான் அவளை எனக்கு யிஇணங்குமாறு’ அழைத்தேன். நான் அவளிடம் நூறு தீனார்களைக் கொண்டுவந்தால் தவிர எனக்கு இணங்க முடியாதென்று மறுத்துவிட்டாள். நான் அதனைத் தேடி அடைந்தபின் அவளிடம் எடுத்துக்கொண்டு சென்று அதைக் கொடுத்தேன். அவள் தன்னை என் வசம் ஒப்படைத்தாள். நான் அவளிடம் (உடலுறவுக்காக) அமர்ந்தபொழுது அவள், ‘‘அல்லாஹ்வை அஞ்சு. முத்திரையை அதற்குரிய (சட்டப் பூர்வமான) உரிமையின்றி (திருமணம் முடிக்காமல்) திறக்காதே” என்று சொன் னாள். உடனே நான் (உடலுறவு கொள் ளாமல்) எழுந்துவிட்டேன். நூறு தீனார் களை (அவளிடமே) விட்டுவிட்டேன். நான் இதை உன் அச்சத்தின் காரணத்தால் செய்ததாக நீ கருதினால் (மீதமிருக்கும் அடைப்பையும்) எங்களைவிட்டு நீக்கு வாயாக!” எனவே, அவர்களைவிட்டு அல்லாஹ் (முழுமையாக) நீக்கிவிட்டான். அவர்களும் அதிலிருந்து வெளியேறினார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.136 அத்தியாயம் :

133

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) பெண்ணொருத்தி தன் மகனுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தாள். அவள் அவனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் சென்ற ஒருவன் அவளைக் கடந்துசென்றான். அப்பெண், ‘‘இறைவா! இவனைப் போல் என் மகன் ஆகும்வரை அவனுக்கு நீ மரணத்தைத் தராதே” என்று பிரார்த்தித்தாள். உடனே அந்தக் குழந்தை, ‘‘இறைவா! என்னை இவனைப் போல் ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தித்தது. பிறகு திரும்பச் சென்று (அவளது) மார்பில் பால் அருந்தலாயிற்று. பிறகு (தரையில்) இழுபட்டுக்கொண்டே வந்த ஒரு பெண் அவளைக் கடந்துசென்றாள். அவளைப் பிறர் கேலி செய்து விளையாட் டுப் பொருளாக நடத்திக்கொண்டிருந்தனர். (தன் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்த) அந்தப் பெண், ‘‘இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தித்தாள். உடனே அக் குழந்தை, ‘‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு” என்று பிரார்த்தித்தது. பிறகு அது, ‘‘வாகனத்தில் சென்றவன் இறைமறுப்பாளன் ஆவான். இந்தப் பெண்ணோ, இவளைப் பற்றி மக்கள் யிஇவள் விபசாரம் செய்கிறாள்’ என்று (அபாண்டமாகக்) கூறுகிறார்கள். ஆனால், இவள், யிஎனக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறுகிறாள். அவர்கள், யிஇவள் திருடுகிறாள்’ என்று (அவதூறாகக்) கூறுகிறார்கள். இவள், யிஎனக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறுகிறாள்” என (அக்குழந்தை) சொல்லிற்று. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.137 அத்தியாயம் :

134

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது, இஸ்ரவேலர் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக் குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

135

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக்கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக்கொண்டு), ‘‘மதீனாவாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?” என்று கேட்டுவிட்டு, ‘‘நபி (ஸல்) அவர்கள் இது போன்றதி லிருந்து (மக்களைத்) தடுப்பதையும், இஸ்ரவேலர்கள் அழிந்துபோனதெல்லாம் இதை அவர்களுடைய பெண்கள் பயன் படுத்தியபோதுதான்’ என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்” என்று சொல்லக் கேட்டேன். அத்தியாயம் :

136

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களுக்குமுன் வாழ்ந்த சமுதாயங் களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவரேனும் எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின், அது உமர் பின் அல்கத்தாப் அவர்கள்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

137

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இருந் தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர் களைக் கொன்றுவிட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்த படி, ‘‘(எனக்குப்) பாவமன்னிப்புக் கிடைக் குமா?” என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், ‘‘கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், ‘‘(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவி யது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக்கொண்(டே இறந்துவிட்)டார். அப்போது இறையருளைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக்கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, ‘‘நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்தரவிட்டான். இதை நோக்கி, ‘‘நீ தூரப் போ!” என்று (அவர் வசித்துவந்த ஊருக்கு) உத்தரவிட்டான். பிறகு, ‘‘அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்தபோது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்துவந்த ஊரைவிட ஒரே) ஒரு சாண் அளவுக்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

138

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, ‘‘(இஸ்ரவேலர்களில்) ஒரு மனிதர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்றுகொண்டிருக்கையில் அதில் ஏறி னார். பிறகு அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, ‘‘நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தை) உழுவதற்காகத்தான்” என்று கூறியது எனச் சொன்னார்கள். மக்கள், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?” என்று (வியந்துபோய்க்) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு மனிதர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக்கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள்) புகுந்து ஆட்டை(த் தாக்கிக் கவ்வி)க்கொண்டு சென்றுவிட்டது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றிவிட்டார். அப்போது அந்த ஓநாய் அவரைப் பார்த்து, யிஏய்! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றிவிட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே’ என்று கூறியது” எனச் சொன்னார்கள். அப்போதும் மக்கள், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) ஓநாய் பேசுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்க வில்லை.138 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

139

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருடைய அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கி னார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தமது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை” என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘‘நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத்தான் உரியது)” என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், ‘‘உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?” என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ‘‘எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்” என்று சொன்னார். மற்றொருவர், ‘‘எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்” என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், ‘‘அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்துவையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழி யுங்கள்; தானதர்மமும் செய்யுங்கள்” என்று தீர்ப்பளித்தார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

140

ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக் கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உசாமா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிகொள்ளை நோய் என்பது இஸ்ரவேலர் களின் ஒரு கூட்டத்தார்மீது லிஅல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீதுலி (அவர்களுடைய அட்டூழியங்கள் அதி கரித்தபோது) அனுப்பப்பட்ட ஒரு (வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று சொன்னார்கள் எனப் பதிலளித்தார்கள். அபுந்நஸ்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதிலிருந்து தப்பியோடும் நோக்கம் மட்டுமே கொண்டு நீங்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது. (வேறு ஏதாவது காரணத்திற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் அதற்கு அனுமதியுண்டு.) அத்தியாயம் :

141

நபி (ஸல்) அவர்களின் துணை வியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், ‘‘அது, தான் நாடியவர்கள்மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்குக் கருணையாக ஆக்கியுள்ளான்” என்று தெரிவித்தார்கள். மேலும், ‘‘கொள்ளைநோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவரேனும் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும், அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தமது ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

142

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றியின்போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல்அஸ்வத்) திருடிவிட்டார். அவர் விஷயமாக குறைஷியர் மிகவும் கவலைக்குள்ளாயினர். ‘‘அவர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யார் பேசுவார்கள்?” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். அவர்களில் சிலர், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய செல்லப் பிள்ளையான உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?” என்று கூறினர். (உசாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக்கொள்ள, அவ்வாறே) உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவர் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்?” என்று (கோபத்து டன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரை யில்), ‘‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டுவந்தார்கள்; அவர்களில் பலவீனமானவன் திருடி விட்டால் அவனுக்குத் தண்டனையளித்து வந்தார்கள் என்பதால்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

143

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் குர்ஆனின் ஒரு வசனத்தை ஓத நான் கேட்டேன். அவர் ஓதிய முறைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். ஆகவே, அவரை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தேன். அப்போது அவர்களின் முகத்தில் அதிருப்தி(யின் சாயல்) படிந்திருப்பதை உணர்ந்தேன். அவர்கள், ‘‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள். (எல்லா விஷயங்களிலும்) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் (ஒவ்வொரு விஷயத்திலும்) கருத்து வேறுபாடு கொண்டு அதனால்தான் அழிந்துபோனார்கள்” என்று சொன்னார்கள்.139 அத்தியாயம் :

144

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத் துரைத்துக்கொண்டிருப்பதை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. ‘‘அந்த இறைத்தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத் தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தமது முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, யிஇறைவா! என் சமுதாயத் தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

145

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களுக்குமுன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கியபோது தம் மகன்களிடம், ‘‘உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தை யாக இருந்தேன்?” என்று கேட்டார். அவர்கள், ‘‘சிறந்த தந்தையாக இருந்தீர்கள்” என்று பதில் கூறினர். அதற்கு அவர், ‘‘நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. ஆகவே, நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப்பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள்” என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை (அவரது உடல் அணுக்களை) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ஒன்றுதிரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) ‘‘இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?” என்று கேட்டான். அவர், ‘‘உன்(மீது எனக்குள்ள) அச்சம்தான் (இப்படி உத்தரவிட என்னைத் தூண்டியது)” என்று சொன்னார். உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான். இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

146

ரிப்யீ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதை எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டிருக்கிறேன்: ‘‘(மண்ணறையைத் தோண்டி கஃபன் துணியைத் திருடி விற்றுவந்த) ஒரு மனிதருக்கு மரண (நேர)ம் வந்தது. அவர் இனி வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்தபோது தம் குடும்பத்தாரிடம் தமது இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார். யிநான் இறந்துவிட்டால் எனக்கு நிறைய விறகுகளைச் சேகரித்து (சிதைக்குத்) தீ மூட்டிவிடுங்கள். அந்த நெருப்பு என் இறைச்சியைத் தின்று முடித்து என் எலும்பைச் சென்றடைந்துவிட்டால், எரிந்து கருகிய எலும்புகளை எடுத்து அவற்றைப் பொடியாக்கி ஒரு வெப்பமான நாளில் லிஅல்லது காற்று அதிகம் வீசும் ஒரு நாளில்லி என்னைக் கடலில் தூவிவிடுங்கள்” என்று சொன்னார். (அவ்வாறே அவர்கள் செய்ய) அல்லாஹ் அவரை (அவரது அணுக்களை) ஒன்றுதிரட்டி, (முழு உருவையளித்து), ‘‘ஏன் (இவ்வாறு) செய்தாய்?” என்று கேட்டான். அவர், ‘‘உன் அச்சத்தால்தான்” என்று சொன்னார். எனவே, அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளித்தான்.140 வேறொரு அறிவிப்பில், உக்பா (ரலி) அவர்கள், ‘‘ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்...” என்று சொன்னார்கள். அதில் ‘‘காற்று அதிகமாக வீசும் ஒரு நாளில்” என்னும் வாசகம் (மட்டுமே) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

147

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக் குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தம் (அலுவலரான) வாலிபரிடம், ‘‘(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரை) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் நம்மை மன்னித்து விடக்கூடும்” என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட் டான்.141 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

148

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதர், எல்லை மீறி (தீய செயல் புரிந்து)வந்தார். அவருக்கு மரணம் வந்தபோது தம் மகன்களை அழைத்து, ‘‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி பின்னர் காற்றில் தூவிவிடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வளவும் செய்த பிறகும்) அல்லாஹ் என்னை உயிராக்க முடிந்தால் எவரையும் வேதனைப்படுத்தாத அளவுக்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் அளிப்பான்” என்று கூறினார். அவர் இறந்தபோது அவ்வாறே அவரைச் செய்துவிட்டார்கள். உடனே உயர்ந்தோன் அல்லாஹ், பூமியை நோக்கி, ‘‘அவரி(ன் உடல் அணுக்களி)லிருந்து உன்னில் இருப்பவற்றை ஒன்றுசேர்” என்று கட்டளையிட்டான். அவ்வாறே பூமி செய்தது. அவர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு உருப்பெற்று) நின்ற போது அல்லாஹ், ‘‘நீ இப்படிச் செய்யும் படி உன்னைத் தூண்டியது எது?” என்று கேட்டான். அவர், ‘‘என் இறைவா! உன் அச்சம்தான் இப்படிச் செய்யும்படி என் னைத் தூண்டியது” என்று பதிலளித்தார். ஆகவே, அவருக்கு அல்லாஹ் மன்னிப் பளித்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

149

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பூனையை, அது சாகும்வரை (பட்டினி போட்டு) கட்டிவைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழுபூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து)விடவுமில்லை. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.142 அத்தியாயம் :

150

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து பெற்ற (அறிவுரைகளில்) ஒன்றுதான், ‘‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும். இதை அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

151

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மக்கள் இறைத்தூதர்களின் சொற்களிலிருந்து பெற்ற (அறிவுரைகளில்) ஒன்றுதான், ‘‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும்.143 இதை அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

152

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கணுக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத் துக்கொண்டே நடந்தபொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

153

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (உலகில்) இறுதிச் சமுதாயமான நாம்தான் மறுமையில் (தகுதியிலும் சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும்.144 ஆகவே, நாளை (சனிக்கிழமை) யூதர் களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக் குரியதும் ஆகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

154

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு இறுதியாக வருகை தந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றியபடி முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘‘இதை (போலி முடி வைத்துக்கொள்ளும் செயலை) யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள் இதை யிபொய்யானது’ என்று சொன்னார்கள். தலைமுடியில் (சவுரி முடியை) ஒட்டவைப்பதைத்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :