அனைத்து இஸ்லாம் நூலகம்

67 - திருமணம்

1

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.2 அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டதுபோல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), ‘‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?” என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘‘(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன்” என்றார். இன்னொருவர், ‘‘நான் ஒருநாள்கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ‘‘நான் பெண்களைவிட்டு ஒதுங்கி யிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக்கொள்ளமாட்டேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தானே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

2

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணமுடித்துக்கொள்ளலாம். ஆனால், (அவர்களிடையே) நீதியோடு நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக்கொண்ட பெண்ணையே மனைவியாக்கிக்கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே ஏற்றதாகும்” எனும் (4:3ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்: என் சகோதரியின் (அஸ்மாவின்) புதல்வரே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண் தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவளது செல்வத்தின் மீதும், அழகின் மீதும் ஆசைப்பட்டு அவளை (காப்பாளரான) அவர், அவளுக்கு மற்றவர்கள் வழங்குவதைப் போன்ற (மணக் கொடையான) மஹ்ரைவிடக் குறைவானதை வழங்கி அவளை மணமுடித்துக்கொள்ள விரும்புகிறார் (எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்). இவ்விதம் காப்பாளர்கள் (தம் பொறுப்பிலிருக்கும்) அநாதைப் பெண்களுக்கு நிறைவான மணக்கொடையை அளித்து அந்தப் பெண்களுக்கு நீதி செய்யாமல் அவர்களை மணமுடித்துக்கொள்ள (இந்த வசனத்தின் மூலம்) அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற (மனதுக்குப் பிடித்த) பெண்களை மணமுடித்துக்கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது (என்று பதிலளித்தார்கள்).3 அத்தியாயம் :

3

அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந் தேன். அப்போது ‘மினா’வில் அன்னாரை உஸ்மான் (ரலி) அவர்கள் சந்தித்து, ‘‘அபூஅப்திர் ரஹ்மானே! (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அங்கே உஸ்மான் (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம்) ‘‘அபூஅப்திர் ரஹ்மானே! உங்களது இளமைக் காலத்தை நினைவுபடுத்துகின்ற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?” என்று கேட்டார்கள். திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி ‘அல்கமாவே!’ என்று அழைத்தார்கள். நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள், நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறியுள்ளார்கள்: ‘‘இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று தெரிவித்தார்கள்.4 அத்தியாயம் :

4

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர் களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் ‘‘இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

5

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அன்னை) மைமூனா (ரலி) அவர்களின் ஜனாஸாவில் (இறுதித் தொழுகையில்) நாங்கள் ‘சரிஃப்’ எனும் இடத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் கலந்துகொண்டோம்.6 அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆவார்.இவரது (உடல் வைக்கப்பட்டுள்ள) கட்டிலைத் தூக்கும்போது குலுக்கவோ அசைக்கவோ செய்யாதீர்கள்; மென்மையுடன் (எடுத்துச்) செல்லுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். எட்டுப் பேருக்கு இரவைப் பங்கிட்டுவந்தார்கள். ஒரேயொருவருக்கு மட்டும் பங்கிட்டுத் தரவில்லை.7 அத்தியாயம் :

6

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்துவிடுவார்கள். (அப்போது) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந் தனர்.8 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

7

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘மணமுடித்தீரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை” என்றேன். அவர்கள் ‘‘மணமுடித்துக்கொள்ளுங்கள்! ஏனெனில், இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவர் (ஆகிய முஹம்மத் (ஸல்) அவர்கள்) அதிகமான பெண்களை மணமுடித்தவர் ஆவார்” என்று சொன் னார்கள். அத்தியாயம் :

8

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எண்ணத்தைப் பொறுத்தே செயல் அமைகின்றது; ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் (புலம் பெயர்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும். இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9 அத்தியாயம் :

9

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்துகொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)கொள்ளலாமா?” எனறு கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களைத் தடுத்தார்கள்.11 அத்தியாயம் :

10

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (புலம்பெயர்ந்து மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவருக்கும் சஅத் பின் ரபீஉ அல்அன்சாரீ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். இந்த சஅத் பின் ரபீஉ அல்அன்சாரீ (ரலி) அவர்களுக்கு இரு துணைவியர் இருந்தனர். ஆகவே சஅத் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிலும் தம் செல்வத்திலும் சரிபாதியை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்குப் பங்கிட்டுத் தருவதாகக் கூறினார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களுக்கு, உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் வளத்தை அருள்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று சொன்னார்கள். பிறகு கடைவீதிக்கு வந்து (வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் சிறிது நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள். சில நாட்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள்மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு, ‘‘என்ன இது அப்துர் ரஹ்மானே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், ‘‘நான் அன்சாரிப் பெண் ஒருவரை மணந்து கொண்டேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவளுக்கு (மணக்கொடையாக) என்ன கொடுத்தாய்?” என்று கேட்க, ‘‘ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஓர் ஆட்டை யாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) கொடுப்பீராக!” என்று சொன்னார்கள்.13 அத்தியாயம் :

11

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதி யளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். அத்தியாயம் :

12

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அப்படி) துறவறம் மேற்கொள்ள அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக்கொண்டிருப்போம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

13

கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்துகொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. ஆகவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘(ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக்கொள்ளலாமா?” என்று கேட்டோம். அவ்வாறு செய்ய வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்குப் பதிலாகப் பெண்களை மணமுடித்துக்கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்: இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக்கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் எல்லைமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லை மீறுவோரை நேசிப்பதில்லை. (5:87)14 அத்தியாயம் :

14

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒருமுறை) ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஓர் இளைஞன்; பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தேவையான பொருள் ஏதும் என்னிடம் இல்லை. (இந்நிலையில்) நான் தவறான வழிக்குச் சென்றுவிடுவேனோ என என்னைப் பற்றி நானே அஞ்சுகிறேன். (நான் காயடித்துக்கொள்ளலாமா?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) மௌனமாக இருந்தார்கள். மீண்டும் நான் முன்போலவே கேட்டேன். அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். பிறகும் நான் முன்போலவே கேட்டேன். அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். பிறகு (நான்காவது முறையாக) முன்போலவே நான் கேட்டபோது, ‘‘அபூஹுரைரா! நீங்கள் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கின்ற அனைத்தையும் (ஏற்கெனவே எழுதியாயிற்று. அவற்றை) எழுதிய எழுதுகோலும்கூட காய்ந்துவிட்டது. எனவே, நீங்கள் காயடித்துக்கொள்ளுங்கள்; அல்லது சும்மா இருங்கள். (எல்லாம் ஒன்றுதான்)” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

15

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கு கிறீர்கள். அதில் (கால்நடைகளால்) உண்ணப்பட்டுப் போன ஒரு மரத்தையும் உண்ணப்படாத ஒரு மரத்தையும் காண்கின்றீர்கள். இந்த இரண்டில் எந்த மரத்தில் தங்கள் ஒட்டகத்தை மேயவிடுவீர்கள்? கூறுங்கள்!” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘எதில் ஏற்கெனவே மேயவிடப்படவில்லையோ அதில்தான் (நான் என் ஒட்டகத்தை மேய்ப்பேன்)” என்று பதிலளித்தார்கள். தம்மைத் தவிர வேறு எந்த கன்னிப் பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணக்கவில்லை என்ற கருத்தில்தான் ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். அத்தியாயம் :

16

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு தடவை உன்னை நான் கனவில் கண்டேன். ஒரு மனிதர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் ‘‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி” என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) ‘‘இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்” என்று சொல்óக் கொண்டேன். அத்தியாயம் :

17

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (தபூக்) போரிலிருந்து நபி (ஸல்) அவர்களுடன் திரும்பிக்கொண்டி ருந்தோம். அப்போது நான் மெதுவாகச் செல்லக்கூடிய எனது ஒட்டகத்தின் மீது இருந்துகொண்டு அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனம் ஒன்றில் வந்து சேர்ந்து தம்மிடமிருந்த கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்தினார். உடனே எனது ஒட்டகம் நீ காணுகின்ற ஒட்டகங்களிலேயே மிக உயர் ரகமானது போன்று ஓடலாயிற்று. (உடனே நான் திரும்பிப் பார்த்தேன்.) அங்கு நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்), ‘‘என்ன அவசரம் உனக்கு?” என்று கேட்டார்கள். ‘‘நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘கன்னிப் பெண்ணையா? அல்லது கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?” என்று கேட்டார்கள். நான் ‘‘கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்று சொன்னேன். ‘‘கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே!” என்று கேட்டார் கள். பிறகு நாங்கள் (மதீனா வந்துசேர்ந்து ஊருக்குள்) நுழையப்போனபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘(நீங்கள் ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவு -இஷா- நேரம் வரும்வரை சற்றுப் பொறுத்திருங்கள்! தலைவிரிகோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.17 அத்தியாயம் :

18

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் திருமணம் செய்துகொண்டேன். (சில நாட்களுக்குப்பின்) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘யாரை மணமுடித்தாய்?” என்று கேட்டார்கள். நான் ‘‘கன்னி கழிந்த ஒரு பெண்ணை மணமுடித்தேன்” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘‘உனக்கென்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?” என்று கேட்டார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியுற்றேன் என்று கூறினார்கள்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக் கலாமே!” என்று கேட்டார்கள். அத்தியாயம் :

19

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘‘நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்குச் சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தான்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

20

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிகுல பெண்களாவர். அவர்கள் குழந்தைகள்மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல் வத்தை அதிகமாகப் பேணிக் காப்ப வர்கள்.18 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

21

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதரிடம் அடிமை(பணி)ப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்பித்து, அதையும் நன்கு கற்பித்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதையும் அழகுற (நளினமாகக்) கற்பித்து, பிறகு அவளை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலையும் செய்து, திருமணமும் செய்துகொண்டால் அவருக்கு (விடுதலை செய்தது மற்றும் மணந்துகொண்டதற்காக) இரு நற்பலன்கள் கிடைக்கும். வேதக்காரர்களில் உள்ள ஒரு மனிதர் தம்முடைய (சமூகத்திற்கு நியமிக்கப் பட்டிருந்த) இறைத்தூதரையும் நம்பிக்கை கொண்டு என்னையும் (இறைத்தூதரென) நம்பிக்கை கொள்வாராயின் அவருக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை தன் உரிமையாள ருக்குச் செய்ய வேண்டிய கடமையையும் தன் இறைவனின் கடமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவாராயின் அவருக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சாலிஹ் பின் சாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) (இந்த நபிமொழியை எனக்கு அறிவித்த) ‘அபீ (ரஹ்) அவர்கள், ‘‘பிரதிபலன் ஏதுமின்றி (உங்களுக்கு நான் அறிவித்த) இவற்றைப் பெற்றுக்கொள் ளுங்கள். இதைவிடச் சிறிய விஷயங்களை அறிந்துகொள்வதற்காகவெல்லாம் சிலர் மதீனாவரை பயணம் சென்றதுண்டு” என்றார்கள். மற்றோர் அறிவிப்பில் (அடிமைப் பெண்ணின் எசமான் குறித்து), ‘‘அவளை அவர் விடுதலை செய்து, பின்னர் அவளுக்கு மணக்கொடையும் கொடுத்(து மணமுடித்)தால் (...இரு நற்பலன்கள் உண்டு)” என்று காணப்படுகிறது.19 அத்தியாயம் :

22

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று முறையே உண்மைக்குப் புறம்பாகப் பேசினார்கள். தம்முடன் (துணைவியார்) ‘சாரா’ இருக்க, இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு சர்வாதிகார அரசனைக் கடந்து சென்றார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, இந்த ஹதீஸை முழுமையாக அறிவித்தார்கள். அதில், ‘‘ஹாஜர் அவர்களை, சாரா அவர்களுக்கு (பணியாளாகக்) கொடுத்தான்” என்றும், ‘‘அல்லாஹ் அந்த இறைமறுப்பாள(னான அரச)னின் கரத்தைத் தடுத்து, ஆஜரை எனக்குப் பணியாளராகக் கொடுத்தான்” என சாரா கூறினார்கள் என்றும் காணப் படுகிறது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறி னார்கள்: வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜர்)தான் உங்கள் அன்னை.20 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

23

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள ‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில் ‘ஸஃபிய்யா பின்த் ஹுயை’ அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் மணவிருந்துக்கு (வலீமா) முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தோல் விரிப்பைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டு (அவ்வாறே அது விரிக்கப்பட்டபோது) அதில் பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் ஆகியவற்றை இட்டார்கள் (‘ஹைஸ்’ எனும் எளிய உணவு துரிதமாகத் தயாரானது). இதுவே நபி (ஸல்) அவர்களின் மணவிருந்தாக (வலீமா) அமைந்தது. அப்போது முஸ்லிம்கள், ‘‘ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இறைநம்பிக்கையாளர் களின் அன்னை (நபியவர்களின் துணைவி)யரில் ஒருவரா? அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?” என்று பேசிக்கொண்டனர். அப்போது ‘‘ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஹிஜாப்’ -திரையிட்(டுக் கொள்ளும்படி கட்டளை’)ட்டால், அவர் இறைநம்பிக்கை யாளர்களின் அன்னையரில் (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில்) ஒருவர்; அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்” என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கை யமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்தபிறகு) ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கும் மக்களுக்குமிடையே திரையிட்டு இழுத்து (மூடி)விட்டார்கள்.21 அத்தியாயம் :

24

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. (கைபர் போர்க் கைதியான) ஸஃபிய்யாவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடுதலை செய்தார்கள். மேலும், அவர்களை விடுதலை செய்ததையே மணக்கொடையாக ஆக்கி (தாமே அவர்களை மணந்து)கொண்டார்கள்.22 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

25

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள) வந்துள்ளேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கி தம் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள். பிறகு தமது தலையைத் தொங்கவிட்டுக்கொண்டார்கள். தமது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்து வையுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) ‘‘(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்று பதில் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடைய குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!” என்றார்கள். அவர் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘இரும்பாலான ஒரு மோதிரமாவது (கிடைக்குமா எனப்)பார்!” என்றார்கள். அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணை யாக! (ஒன்றும்) கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம்கூடக் கிடைக்கவில்லை; ஆனால், இதோ இந்த எனது கீழங்கிதான் உள்ளது” என்றார். -அறிவிப்பாளர் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல் துண்டுகூட இல்லை; அதனால்தான் தமது கீழங்கியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.- அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமது கீழங்கியை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? அந்த கீழங்கியை நீ உடுத்திக்கொண்டால் அவள் மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக்கொண்டால் உன்மீது அதில் ஏதும் இருக்காது. (உமது கீழங்கியைக் கொடுத்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்?)” என்று கேட்டார்கள். பிறகு அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது அவரை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர் அழைத்துவரப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், ‘‘(குர்ஆனில்) இன்ன இன்ன அத்தியாயங்கள் என்னுடன் உள்ளன” என்று எண்ணி எண்ணிச் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘அவற்றை நீ மனப்பாடமாக ஓதுவாயா?” என்று கேட்டார்கள். ‘‘ஆம் (ஓதுவேன்)” என்று அவர் பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!” என்று சொன்னார்கள்.23 அத்தியாயம் :

26

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்கள், (பாரசீகரான மஅகில் என்பாரின் புதல்வர்) சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்கள். மேலும், அவருக்குத் தம் சகோதரர் வலீத் பின் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர்.25 நபி (ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டதுபோல் (சாலிமை அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண் டார்கள்.) மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும், அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது. ஆகவே, ‘‘நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களுடைய (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள்” எனும் (33:5ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளும்வரையில் (இந்த வழக்கம் நீடித்தது). பின்னர், வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களுடைய சொந்தத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதரராகவும் ஆனார். பிறகு, அபூஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்களுடைய துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சாலிமை (எங்களுடைய) பிள்ளையாகவே கருதிக் கொண்டிருந்தோம். (வளர்ப்பு மகனான) அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (33:5ஆவது) வசனத்தை அருளிவிட்டான்” என்று தொடங்கும் ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல் யமான் பின் ஹகம் (ரஹ்) அவர்கள் முழுமையாகக்) கூறினார்கள்.26 அத்தியாயம் :

27

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘நீ ஹஜ் செய்ய விரும்பு கிறாய் போலும்!” என்றார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘‘நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக ‘இஹ்ராம்’ கட்டி, இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று சொல்லிவிடு எனக் கூறினார்கள். ளுபாஆ (ரலி) அவர்கள் மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஆவார்.27 அத்தியாயம் :

28

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத் திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

29

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘‘இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார் கள். தோழர்கள், ‘‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்” என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?”என்று கேட்டார்கள். தோழர்கள், ‘‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும்விட) இந்த ஏழையே மேலானவர்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :

30

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால்...” எனும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண் தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்ந்துவருகின்ற அநாதைப் பெண் ஆவாள். அப்பால் அவளது அழகையும் செல்வத்தையும் கண்டு ஆசைப்பட்டு (காப்பாளரான) அவர் (அவளை மணமுடித்துக்கொள்ள) விரும்புகிறார். (ஆனால்) அவளுக்குரிய (தகுதியான) மணக்கொடையை (மஹ்ரை)க் குறைத்துவிட விரும்புகிறார். இத்தகைய பெண்களுக்கு உரிய மஹ்ரை நிறைவாகச் செலுத்தும் விஷயத்தில் நீதி தவறாது நடந்துகொண்டால் தவிர, அவர்களை மணந்துகொள்ளக் கூடாது என்று (காப்பாளர்களுக்கு இவ்வசனத்தின் மூலம்) தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்தப் பெண்கள் அல்லாத (மனதுக்குப் பிடித்த) இதரப் பெண்களை மணமுடித்துக்கொள்ளும்படியும் கட்டளையிடப்பட்டது. இதற்குப் பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் அப்போது, ‘‘பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி (நபியே!) உங்களிடம் கோருகின்றனர்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான். அதாவது ‘‘ஓர் அநாதைப் பெண் அழகும் செல்வமும் உள்ளவளாக இருந்தால் நிறைவான மஹ்ரை (மணக்கொடையை) அளித்து அவளை மணந்துகொள்ளவும் அவளுடன் உறவுமுறையை ஏற்படுத்திக்கொள்ளவும் காப்பாளர்கள் விரும்புகின்றனர். (அதே சமயம்) அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருப்பதால் விரும்பத் தகாதவளாக இருப்பின், அவளை விட்டுவிட்டு வேறு பெண்களைப் பிடித்துக்கொள்கின்றனர்’ என்று அல்லாஹ் அவர்களுக்கு அருளினான். ‘‘அவர்கள் அப்பெண்ணை விரும்பாத நேரம் (மணந்துகொள்ளாமல்) விட்டு விடுவதுபோல், அவளை விரும்பும் நேரம் மஹ்ர் விஷயத்தில் அவளது உரிமையை நிறைவாக வழங்கி, அவளிடம் நீதியுடன் நடந்துகொண்டாலே ஒழிய அவளை மணந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லை” என்று இவ் வசனத்தின் மூலம் இறைவன் தெரிவித் தான்.28 அத்தியாயம் :

31

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில்தான் (இருக்க முடியும்). இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.29 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

32

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் மக்கள் அபசகுனம் குறித்துப் பேசினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அப சகுனம் எதிலேனும் இருக்குமானால், வீட்டிலும் பெண்ணிலும் குதிரையிலும்தான் இருக்கும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

33

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அபசகுனம் எனும்) அது எதிலாவது இருக்குமானால் குதிரையிலும் பெண்ணி லும் குடியிருப்பிலும்தான். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

34

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பெண்களைத் திருப்திப்படுத்துவ தற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களைவிட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச்செல்லவில்லை. இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

35

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமையாயிருந்து விடுதலைபெற்ற) பரீராவினால் மூன்று வழிமுறைகள் (நமக்கு) கிட்டின: 1. அவர் விடுதலை அடைந்தபோது (தம் அடிமைக் கணவருடனான உறவைத் தொடரவும் முறித்துக்கொள்ளவும்) அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.30 2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘விடுதலை செய்தவருக்கே அடிமையின் வாரிசுரிமை கிட்டும்” என்றார்கள். 3. நெருப்பின் மேல் பாத்திரம் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் ரொட்டியும் வீட்டிóருந்த குழம்பும் வைக்கப்பட்டது. உடனே அவர்கள், ‘‘நான் (நெருப்பின்மேல்) பாத்திரத்தைக் கண்டேனே (அது என்னவாயிற்று?)” என்று கேட்டார்கள். அதற்கு, ‘‘அது பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி. தர்மப் பொருளைத் தாங்கள் உண்ணமாட்டீர்களே?” என்று சொல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அது பரீராவிற்குத்தான் தர்மம். நமக்கு அது அன்பளிப்பு!” எனறு சொன்னார்கள்.31 அத்தியாயம் :

36

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஓர் அநாதைப் பெண் ஒரு மனிதரிடம் (அவரது பொறுப்பில்) இருப்பாள். அவரே அவளுடைய காப்பாளர் ஆவார். அவளை அவர் அவளது செல்வத்திற்காக மணந்து கொண்டு அவளுடன் மோசமான முறையில் உறவாடுவார்; அவளது செல்வம் தொடர்பான விஷயத்தில் நீதிசெலுத்தமாட்டார். இத்தகைய பெண்ணைக் குறித்தே இந்த (4:3ஆவது) வசனம் பேசுகிறது. அந்தக் காப்பாளர், (இவளை விட்டு விட்டு) இவளல்லாத அவரது மனதுக்குப் பிடித்த வேறு பெண்களை இரண்டிரண்டாக, அல்லது மும்மூன்றாக, அல்லது நான்கு நான்காக மணமுடித்துக்கொள்ளட்டும் (என்று இவ்வசனத்தில் இறைவன் கூறுகின்றான்)33 அத்தியாயம் :

37

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒரு மனிதர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைக் கேட்டேன். அப்போது நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ உங்கள் (துணைவியார் ஹஃப்ஸாவின்) வீட்டுக்குள் செல்ல ஒருவர் அனுமதி கேட்கிறார்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் இன்னார் என நான் கருதுகிறேன்.” என்று ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துச் சொன்னார்கள். நான் ‘‘இன்னார் உயிருடன் இருந்தால் அவர் என்னைத் திரையின்றி சந்தித்திருக்க முடியும்தானே!” என்று என்னுடைய பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆம்! (முடியும்.) பிறப்பு (இரத்த உறவு) எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு களாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால்குடியும் நெருங்கியவையாக ஆக்கிவிடும்” என்று சொன்னார்கள்.34 அத்தியாயம் :

38

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ‘‘தாங்கள் ஹம்ஸா (ரலி) அவர்களுடைய புதல்வியை மணமுடித்துக்கொள்ளக் கூடாதா?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்.) அவர்கள், ‘‘அவள் பால்குடி உறவு முறையால் எனக்குச் சகோதரர் மகள் ஆவாள்” என்று கூறினார்கள்.35 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

39

உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் கணவர்) நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரியான அபூசுஃப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘இதை நீயே விரும்புகிறாயா?” என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், ‘‘ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அவர்கள், ‘‘எனக்கு அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று” என்றார்கள். நான் ‘‘தாங்கள் அபூசலமாவின் புதல்வியை மணக்க விரும்புவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டதே!” என்று கேட்டேன். ‘‘(அதாவது என் துணைவியார்) உம்முசலமாவிற்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?” என நபியவர்கள் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் (உம்முசலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் புதல்வி ஆவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூசலமாவுக்கும் ஸுவைபா பாலூட்டி னார். ஆகவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணமுடித்துக்கொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.36 அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், ‘‘(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?” என்று அவர் கேட்டார். ‘‘உங்களைவிட்டுப் பிரிந்தபின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது” என்று கூறினார். அத்தியாயம் :

40

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறிவிட்டதுபோல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், ‘‘இவர் என் (பால்குடி) சகோதரர்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியால் (பிள்ளைப் பால் அருந்தியிருந்தால்)தான்” என்று சொன்னார்கள்.37 அத்தியாயம் :

41

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபுல்குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார். ‘ஹிஜாப்’ (பர்தா) சட்டம் அருளப்பட்டபின் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் அவருக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான் செய்தது குறித்து அவர்களிடம் தெரிவித்தேன். நான் அவருக்கு அனுமதியளிக்க வேண்டும் என அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.39 அத்தியாயம் :

42

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (உம்மு யஹ்யா பின்த் அபீ இஹாப் எனும்) ஒரு பெண்ணை மணந்து கொண்டேன். பின்னர் ஒரு கறுப்பு நிற (அடிமைப்) பெண் எங்களிடம் வந்து நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும் உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டினேன். (இந்த வகையில் நீங்கள் இருவரும் சகோதரத்துவ உறவுடையவர்கள்)” என்று கூறினாள். ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து மதீனாவிற்கு) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘நான், இன்னவர் மகள் இன்னவளை மணந்து கொண்டேன். அப்பால் ஒரு கறுப்பு நிறப் பெண் எங்களிடம் வந்து என்னை நோக்கி ‘நான் உங்கள் இருவருக்கும் பாலூட்டியிருக்கிறேன்’ என்று பொய் சொல்கிறாள்” என்று சொன்னேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் (முகம் திருப்பிக்கொண்டு) என்னைப் புறக்கணித்தார்கள். மீண்டும் நான் நபியவர்களின் முகத்துக்கு நேராக வந்து ‘‘அவள் பொய்தான் சொல்கிறாள்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டியதாக சொல்லிவிட்ட நிலையில் அந்தப் பெண்ணுடன் நீ எப்படி (இல்லறம் நடத்த முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்து விட்டுவிடு!” என்று (யோசனை) சொன்னார்கள்.40 அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இதை அறிவித்த) இஸ்மாயீல் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் (நபி (ஸல்) அவர்கள் ‘விட்டுவிடு’ என்று கூறி சைகை செய்ததை) அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் எடுத்துரைத்தபடி தமது சுட்டுவிரல் மற்றும் நடுவிரலால் சைகை செய்து காட்டினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த அறிவிப்பை நான் (சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய) உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்றுவிட்டேன். ஆயினும், நான் உபைத் பின் அபீமர்யம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பையே நன்கு நினைவில் நிறுத்தியுள்ளேன். அத்தியாயம் :

43

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘இரத்த உறவால் ஏழு பேரும், திருமண உறவால் ஏழு பேரும் மணமுடிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளனர்”41 என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ‘‘(பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள்...” எனும் (4:23ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு ‘‘அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களுடைய புதல்வியையும், அலீ (ரலி) (அவர்களுக்குப் பின்) அவர்களுடைய மனைவியையும் ஒரே நேரத்தில் மணந்துகொண்டார்கள்” என்றும் கூறினார்கள்.42 ‘‘ஒருவர், ஒரு பெண்ணையும் அவளுடைய கணவரின் (இன்னொரு மனைவிக்குப் பிறந்த) மகளையும் ஒரே நேரத்தில் மணமுடிப்பது குற்றமன்று” என இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இது வெறுக்கப்பட்ட செயலாகும் என முதலில் கூறிவந்த ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள், பின்னர் (தமது கருத்தை மாற்றிக்கொண்டு) இதனால் குற்றமில்லை என்று கூறினார்கள். (அலீ (ரலி) அவர்களுடைய பேரரான) ஹசன் பின் ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் இரு சகோதரர் களின் புதல்வியரை ஒரே இரவில் மணந்துகொண்டார்கள்.43 இதனால் (சக்களத்தி சண்டை ஏற்பட்டு) உறவு முறிய வாய்ப்பு உண்டு என்பதால் இத்திருமணத்தை ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் வெறுத்தார்கள். ஆனால், (இத்திருமணம்) தடை செய்யப்பட்டதன்று. ஏனெனில், அல்லாஹ் (மணமுடிக்கத் தகாத பெண்களின் பட்டியலைச் சொல்லிவிட்டு) ‘‘இவர்களைத் தவிர மற்றப் பெண்களை (மஹ்ர் கொடுத்து) அடைந்துகொள்வது உங்களுக்கு அனு மதிக்கப்பட்டுள்ளது” (4:24) என்று கூறுகின்றான். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒருவன் தன் மனைவியின் சகோதரியை விபசாரம் செய்வதால், அவனுடைய மனைவி அவனுக்கு விலக்கப்பட்டவளாக (ஹராமாக) ஆகிவிடமாட்டாள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.44 ஒருவன் ஒரு சிறுவனுடன் ஓரினச் சேர்க்கை செய்துவிட்டால், அச்சிறுவனுடைய தாயை மணமுடிப்பது செல்லாது என ‘அபீ (ரஹ்) அவர்களும், அபூஜஅஃபர் (ரஹ்) அவர்களும் கூறியதாக யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இந்த யஹ்யா நேர்மையானவரா என்பது அறியப்படவில்லை. இந்த அறிவிப்புக்கு பக்கபலமாக அமையும் மற்ற அறிவிப்புகளும் கிடையாது. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘ஒருவன் தன் மனைவியின் தாயுடன் விபசாரம் புரிந்துவிட்டால், மனைவி அவனுக்கு விலக்கப்பட்டவளாக ஆகமாட்டாள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆனால், ‘விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அபூநஸ்ர் (ரஹ்) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபூநஸ்ர், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றாரா என்பது அறியப்படவில்லை. ‘விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்’ என்பதே இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), ஜாபிர் பின் ஸைத் (ரஹ்), ஹசன் அல்பளி (ரஹ்) மற்றும் இராக் அறிஞர் களில் சிலர் ஆகியோரது கருத்தாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறி னார்கள்: ஒரு பெண்ணை உடலுறவு கொண்டால் மட்டுமே அவளுடைய மகள் இவனுக்கு விலக்கப்பட்டவள் ஆவாள். (வெறுமனே தொடுவதற்கும், கட்டி அணைப்பதற்கும் இச்சட்டம் பொருந்தாது.) ‘‘(இந்நிலையில் அப்பெண்ணின்) மகளை மணமுடிப்பது செல்லும்” என இப்னுல் முஸய்யப், உர்வா, ஸுஹ்ரீ (ரஹ்) ஆகியோர் கூறினர். ‘அவளை மணமுடிப்பது விலக்கப்படவில்லை’ என அலீ (ரலி) அவர்கள் சொன்னதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இது, இடையே அறிவிப்பாளர் விடுபட்ட ‘முன்கத்திஉ’ வகை தகவல் ஆகும். அத்தியாயம் :

44

நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒருமுறை) ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரியான) அபூ சுஃப்யானின் மகள் விஷயத்தில் தங்களுக்கு விருப்பம் உண்டா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். நான், ‘‘(அவளை) நீங்கள் மணந்துகொள்ள வேண்டும்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீயே விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘(ஆம்!) மனைவியென்று உங்களுக்கு நான் ஒருத்தி மட்டுமில்லையே! தங்களை அடைந்துகொள்ளும் பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் எனக்கு (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் இல்லையே!” என்று கூறினார்கள். நான், ‘‘தாங்கள் பெண் கேட்டதாக எனக்குச் செய்தி எட்டியதே!” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(என் துணைவியார்) உம்மு சலமாவின் மகளையா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் என் மடியில் வளர்ந்த வளர்ப்பு மகளாக (இருக்கிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவள் எனக்கு (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் அல்லள். (ஏனெனில்,) எனக்கும் அவளுடைய தந்தை (‘அபூசலமாவு’)க்கும் ஸுவைபா அவர்களே பாலூட்டினார்கள். ஆகவே, உங்களுடைய பெண்மக்களையோ சகோதரிகளையோ (மணமுடித்துக் கொள்ளுமாறு) என்னிடம் பரிந்துரைக்காதீர் கள்” என்றார்கள்.49 லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அறிவிப்பாளர்) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள், உம்மு சலமா (ரலி) அவர்களுடைய மகளின் பெயர் ‘துர்ரா பின்த் அபீசலமா’ என்றே எமக்கு அறிவித் தார்கள். அத்தியாயம் :

45

உம்மு ஹபீபா பின்த் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் கணவர் நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரியான அபூசுஃப்யானின் மகளைத் தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘இதை நீயே விரும்புகிறாயா?” என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், ‘‘ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்ட தன்று” என்று சொன்னார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அபூசலமாவின் மகள் துர்ராவை மணக்க விரும்புவதாக எங்களிடையே பேச்சு நடைபெறுகிறதே!” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(என் துணைவி யார்) உம்மு சலமாவிற்கு (மூத்த கணவன் மூலம்) பிறந்த மகளையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘ஆம்” என்று பதிலளித்தேன். நபியவர்கள், ‘‘அவள் எனது மடியில் (வளர்ப்பு மகளாக இருந்துவருகிறாள். அப்படி) இல்லா விட்டாலும்கூட, எனக்கு அவள் (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் அல்லள். (ஏனெனில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் மகளாவாள். எனக்கும் (அவளின் தந்தை) அபூசலமாவுக்கும் ஸுவைபா அவர்களே பாலூட்டினார்கள். ஆகவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணமுடித்துக்கொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.51 அத்தியாயம் :

46

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.52 இதே ஹதீஸ் அபூஹ’ரைரா (ரலி) அவர்களிடமிருந்து இரு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

47

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளு டைய தந்தையின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ள லாகாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

48

49

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஷிஃகார்’ முறைத் திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஒருவர் மற்றொருவரிடம் ‘‘நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்” என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே ‘ஷிஃகார்’ எனப்படும். இதில் இரு பெண்களுக்கும் ‘மஹ்ர்’ (மணக்கொடை) இராது. அத்தியாயம் :

50

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன்வந்த பெண் களில் கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்களும் ஒருவராவார். (இது குறித்து) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஒரு பெண் தம்மைத்தாமே ஓர் ஆணுக்கு கொடையாக வழங்க வெட்கப்படமாட்டாளா? பின்னர் ‘‘(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம்” எனும் (33:51ஆவது) வசனம் இறங்கியபோது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களது விருப்பத்தைத் தங்களுடைய இறைவன் விரைவாக பூர்த்திசெய்வதையே நான் காண்கிறேன்” என்று (நபியவர்களிடம்) கூறினேன்.55 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் சற்று கூடுதல் குறைவுடன் வந்துள்ளது. அத்தியாயம் :

51

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் (மைமூனா (ரலி) அவர் களை) மணமுடித்துக்கொண்டார்கள்.56 அத்தியாயம் :

52

முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அலீ (ரஹ்) அவர்களும் கூறியதாவது: (எம் தந்தை) அலீ (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,” ‘அல்முத்ஆ’ (தவணைமுறைத்) திருமணத் திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக் கும் கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று சொன்னார்கள்.58 அத்தியாயம் :

53

அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அல்முத்ஆ’ (தவணைமுறைத்) திருமணம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள், ‘அதற்கு அனுமதி உண்டு’ என்றார்கள். அப்போது அவர்களுடைய முன்னாள் அடிமை ஒருவர் ‘‘(பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை, பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில்தான் இத்திருமணத்திற்கு அனுமதியுண்டாமே?” என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘ஆம்!” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

54

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களும் கூறியதாவது: நாங்கள் ஒரு போர் படையில் இருந்தோம்.59 அப்போது எங்களிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தூதுவர் ஒருவர் வந்து, ‘அல்முத்ஆ’ (தவணை முறைத்) திருமணம் உங்களுக்கு (தாற்காலிமாக) அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ‘அல்முத்ஆ’ திருமணம் செய்து கொள்ளலாம்” என்று அறிவிப்புச் செய்தார். அத்தியாயம் :

55

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணைமுறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்தபட்சம்) மூன்று நாட்களாவது இல்லறம் நடத்திட வேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள்ள அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக்கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்து விடலாம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த(த் தவணைமுறை)த் திருமணம் (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டும் (நெருக்கடி நிலையில்) அனுமதிக்கப்பட்டதா? அல்லது மக்கள் அனைவருக்கும் உள்ள பொது அனுமதியா என்பது எனக்குத் தெரியவில்லை.60 அபூஅப்தில்லாஹ் புகாரீ கூறுகிறேன்: இத்திருமணத்திற்கான அனுமதி விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அத்தியாயம் :

56

ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்கள் அருகில் இருந்தேன். அன்னாருடன் அவர்களுடைய புதல்வியார் ஒருவரும் இருந்தார். (அப்போது) அனஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தன்னை மணந்துகொள்ளுமாறு கோரியபடி ஒரு பெண் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (மணமுடித்துக்கொள்ள) நான் தங்களுக்கு அவசியமா?” எனக் கேட்டார் என்று கூறினார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்களு டைய புதல்வி, ‘‘என்ன வெட்கங்கெட்டத் தனம்! என்ன அநாகரிகம்! என்ன அநாகரிகம்!!” என்று சொன்னார். அனஸ் (ரலி) அவர்கள், ‘‘அந்தப் பெண்மணி உன்னைவிடச் சிறந்தவர்; அந்தப் பெண் நபியவர்களை (மணந்துகொள்ள) ஆசைப் பட்டார். ஆகவே, தன்னை மணந்து கொள்ளுமாறு கோரினார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

57

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களி டம் தன்னை மணந்துகொள்ளுமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், ‘‘இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இவருக்கு மஹ்ர் கொடுக்க) உம்மிடம் என்ன உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், ‘‘என்னிடம் ஒன்றுமில்லை” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் சென்று, இரும்பினாலான ஒரு மோதிரத்தையாவது தேடு!” என்று சொன்னார்கள். அவர் போய் (தேடிப்பார்த்து)விட்டுத் திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை; இரும்பாலான மோதிரம்கூட கிடைக்க வில்லை. ஆனால், இதோ எனது இந்த கீழங்கி உண்டு. இதில் பாதி அவளுக்கு (மஹ்ர்)” என்றார். - அவரிடம் ஒரு மேல்துண்டுகூட இல்லை. (அதனால்தான், கீழங்கியில் பாதியைத் தருவதாகச் சொன்னார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது கீழங்கியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்? அதை நீர் உடுத்திக் கொண்டால் அவள்மீது (அதில்) ஏதும் இருக்காது; அதை அவள் உடுத்திக் கொண்டால் அதில் உம்மீது ஏதும் இருக்காது. (உமது கீழங்கியைக் கொடுத்து விட்டு என்ன செய்யப்போகிறாய்?)” என்று சொன்னார்கள். பிறகு அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டு எழுந்தார். அவர் செல்வதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘அவரை அழைத்தார்கள்’. அல்லது ‘அவர் அழைக்கப்பட்டார்’. (அவர் வந்தவுடன்) அவரிடம், ‘‘உம்முடன் குர்ஆனில் என்ன உள்ளது?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் நபியவர்களிடம், ‘‘(குர்ஆனில்) இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் (மனப்பாடமாக) உள்ளது” என்று சில அத்தியாயங்களை எண்ணி எண்ணிச் சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உமக்கு மனப்பாடமாகத் தெரிந்துள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன்” என்று சொன்னார்கள்.61 அத்தியாயம் :

58

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்துவைக்க எண்ணினார்கள்.) -குனைஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவராவார். மேலும், அவர் மதீனாவில் இறந்தார்.- உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: எனவே, நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், ‘‘(தங்கள் மகளை நான் மணமுடித்துக்கொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டி யுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)” என்று சொன்னார்கள். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது” என்று கூறினார்கள். ஆகவே, நான் அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) ‘‘நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்” என்று கூறினேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்தப் பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான் (ரலி) அவர்களைவிட அபூபக்ர் (ரலி) அவர்கள்மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்துவைத்தேன். பிறகு (ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்குப் பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என்மீது மனவருத்தம் இருக்கக்கூடும்” என்று கூறினார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். (அதற்கு) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்துகொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்குப் பதிலேதும் கூறவில்லை). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக்கொண்டிருப்பேன்” என்று கூறினார்கள்.62 அத்தியாயம் :

59

ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அன்னை) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அபூசலமாவின் மகள் ‘துர்ரா’வைத் தாங்கள் மணக்கப்போவதாக செய்தியறிந்தோம். (இது உண்மையா?)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(என் துணைவியார்) உம்முசலமா இருக்கவா (அவர் மகளை நான் மணப்பேன்?)” என்று கேட்டுவிட்டு, ‘‘உம்மு சலமாவை நான் மணமுடித்திருக்காவிட்டாலும் (அவருடைய மகள்) துர்ரா எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவளல்லள். ஏனெனில், அவளுடைய தந்தை (அபூசலமா) என் பால்குடி சகோதரர் ஆவார்” என்று கூறினார்கள்.63 அத்தியாயம் :

60

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(‘இத்தா’வில் இருக்கும்) பெண்களிடம் திருமணப் பேச்சை மறைமுகமாக எடுத்துரைப்பதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை” எனும் (2:235ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘ஒருவர், (‘இத்தா’விலிருக்கும் ஒரு பெண்ணிடம்) ‘நான் மணமுடித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்றோ ‘ஒரு நல்ல பெண் எனக்கு விரைவில் கிடைப்பாள் என நம்புகிறேன்’ என்றோ (சாடையாகக்) கூறுவதாகும்.” என்று சொன்னார்கள். காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நீ என்னிடம் மதிப்புக் குரியவள்; நான் உன்னை விரும்புகிறேன்; அல்லாஹ் உனக்கு நன்மை புரிவான் என்பன போன்ற வார்த்தைகளைக் கூறுவதாகும். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இத்தாவில் இருக்கும் பெண்ணிடம் தம் திருமண விருப்பத்தை) ஒருவர் மறைமுகமாகச் சொல்ல வேண்டும்; வெளிப்படையாகச் சொல்லக் கூடாது. (உதாரணமாக) ‘எனக்கு ஒரு தேவை உள்ளது’ என்றோ, அல்லது ‘ஒரு மகிழ்ச்சியான செய்தி உனக்கு (காத்திருக்கிறது)’ என்றோ, ‘அல்லாஹ்வின் அருளால் நீ கடைத்தேறிவிடுவாய்’ என்றோ கூறுவார். அதற்கு (பதிலாக) அவள், ‘நீங்கள் சொல்வதை நான் செவியுற்றேன்’ என்று மட்டும் சொல்வாள். அவனுக்கு எந்த வாக்குறுதியையும் அவள் அளிக்கக் கூடாது. (இதைப் போன்றே) அவளுடைய காப்பாளரும் அவளுக்குத் தெரியாமல் (யாருக்கும்) வாக்குக் கொடுக்கக் கூடாது. ‘இத்தா’ காலத்தில் வைத்தே ஒரு பெண் ஒரு மனிதருக்கு (மணமுடிக்க) வாக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு (வாக்குக் கொடுத்தபடி) இருவரும் மணந்துகொண்டால் இருவருக்கு மத்தியில் மணமுறிவு ஏற்படுத்தப்படாது. ‘‘(2:235ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அஸ்ஸிர்ரு’ (இரகசியம்) எனும் சொல்லுக்கு ‘விபசாரம்’ என்பது பொருள்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ஹத்தா யப்லுஃகல் கிதாபு அஜலஹு (குறித்த தவணை முடிகின்றவரை) என்பது ‘இத்தா’ முடிவதைக் குறிக்கும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :

61

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், ‘‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி” என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) ‘‘இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதை அல்லாஹ் நனவாக்கு வான்” என்று சொல்óக்கொண்டேன்.65 அத்தியாயம் :

62

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ள) வந்துள்ளேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு அதைத் தாழ்த்திக்கொண்டார்கள். பிறகு தமது தலையைத் தொங்கவிட்டுக்கொண் டார்கள். தமது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அப் பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துவையுங்கள்!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), ‘‘(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்று பதில் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!” என்றார்கள். அவர் போய் பார்த்துவிட்டுப் பிறகு திரும்பி வந்து, ‘‘இல்லை. அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஏதும் கிடைக்கவில்லை)” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும்பாலான ஒரு மோதிரமாவது (கிடைக்குமா எனப்) பார்!” என்றார்கள். அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒன்றும்) கிடைக்கவில்லை. அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம்கூட கிடைக்கவில்லை; ஆனால், இதோ இந்த எனது கீழங்கி உள்ளது” என்றார். -அறிவிப்பாளர் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல்துண்டுகூட இல்லை; அதனால்தான் தமது கீழங்கியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.- அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமது (இந்த ஒரு) கீழங்கியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்? அந்தக் கீழங்கியை நீர் உடுத்திக்கொண் டால், அவள்மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக்கொண்டால் உம்மீது அதில் ஏதும் இருக்காது. (உமது கீழங்கியைக் கொடுத்துவிட்டு என்ன செய்யப்போகிறாய்?)” என்று கேட்டார்கள். அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந் திருந்துவிட்டுப் பிறகு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதைக் கண்ட அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து வருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அழைத்துவரப் பட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்மு டன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘(குர்ஆனில்) இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன” என்று அவற்றை அவர் எண்ணி எண்ணிச் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?” என்று கேட்டார்கள். ‘‘ஆம் (ஓதுவேன்)” என்று அவர் பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!” என்று சொன் னார்கள்.66 அத்தியாயம் :

63

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன: முதல் வகை: இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹ்ர்’ (மணக் கொடை) கொடுத்து மணந்துகொள்வார். இரண்டாம் வகைத் திருமணம்: ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த வுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக்கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள்!’ என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்றவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஉ’ (விரும்பிப்பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர். மூன்றாம் வகைத் திருமணம்: பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகி சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச்சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம், ‘‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது” என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) ‘‘இவன் உங்கள் மகன், இன்னாரே!” என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதை மறுக்க முடியாது. நான்காம் வகைத் திருமணம் : நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள். இந்தப் பெண்கள் விலைமாதர்கள் ஆவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே, அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை- பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்துவருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டுவந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது. சத்திய(மார்க்க)த்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பிவைக்கப்பட்ட போது, இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

64

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அந்த அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை நீங்கள் வழங்காமலேயே, அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்” எனும் (4:127ஆவது) இறைவசனம், ஒரு மனிதரின் பாதுகாப்பில் இருக்கும் அநாதைப் பெண்ணைக் குறிக்கிறது. அவள் அவரது செல்வத்தில் பங்காளியாக இருக்கலாம். அவரே (மற்றவர்களைவிட) அவளுக்கு(க் காப்பாளராக இருக்க)த் தகுந்தவராகவும் இருக்கலாம். எனவே, அவளது சொத்தில் வேறு யாரும் தம்முடன் பங்காளியாவதை விரும்பாமல் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ள விரும்பி வேறு யாருக்கும் அவளை மணமுடித்துக் கொடுக்காமல் தம்மிடமே அவளை முடக்கிவைத்துக் கொண்டிருப்பார்.68 அத்தியாயம் :

65

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது, (அவரை வேறொருவருக்கு மணமுடித்து வைக்க எண்ணினார்கள்.) -குனைஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவரும், பத்ர் போரில் கலந்துகொண்டவரும் ஆவார்கள். மேலும், அன்னார் மதீனாவில் இறந்தார்கள்.- உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: எனவே, நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து (என் மகள் ஹஃப்ஸா குறித்து) எடுத்துரைத்து, ‘‘நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவைத் தங்களுக்கு மணமுடித்து வைக்கிறேன்” என்று சொன்னேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், ‘‘(தங்கள் மகளை நான் மணமுடித்துக்கொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)” என்று சொன்னார்கள். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்று கூறினார்கள். ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) ‘‘நீங்கள் விரும்பினால், (என் மகள்) ஹஃப்ஸாவைத் தங்களுக்கு திருமணம் முடித்து வைக்கிறேன்” என்று கூறினேன்.69 அத்தியாயம் :

66

மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறியதாவது: அந்த (2:232ஆவது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது: என்னுடைய ஒரு சகோதரியை ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் மணவிலக்குச் செய்துவிட்டார். அவளுடைய ‘இத்தா’ காலத் தவணை முடிந்தபோது, அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம், ‘‘நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச்செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால், அவளை நீங்கள் மணவிலக்குச் செய்துவிட்டு, இப்போது (மீண்டும்) அவளைப் பெண் கேட்டு வந்துள்ளீர்கள். இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் அவள் உங்களிடம் திரும்பமாட்டாள்” என்று சொன்னேன். அவர் நல்ல மனிதராகத்தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போது தான் அல்லாஹ், ‘‘...அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்” எனும் இந்த (2:232ஆவது) வசனத்தை அருளினான். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்துவைத்தேன்.70 அத்தியாயம் :

67

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்குமாறு உம்மிடம் அவர்கள் கோருகின்றார்கள். நீர் கூறுவீராக: அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் (இவ்வாறு) தீர்ப்பளிக்கின்றான்...” எனும் (4:127ஆவது) இறைவசனம், ஓர் அநாதைப் பெண்ணைக் குறிக்கிறது. அவள் ஒரு மனிதரின் பாதுகாப்பில், அவரது சொத்தில் பங்காளியாக இருந்துவருவாள். இந்நிலையில், அவளைத் (தாமே மணந்துகொள்ள விரும்பினாலும், அவளுடன் அவர் முறையாக இல்லறம் நடத்தமாட்டார். அல்லது) தாமும் மணந்துகொள்வதை விரும்பமாட்டார். பிறருக்கு அவளை மணமுடித்துக் கொடுத்து தமது சொத்தில் அவர் தலையிடுவதையும் விரும்பமாட்டார். (இவ்வாறு) தம்மிடம் அவளை முடக்கி வைத்துக்கொள்வார். ஆனால், அல்லாஹ் இதற்குத் தடை விதித்தான்.73 அத்தியாயம் :

68

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண்மணி அவர்களிடம் வந்து தம்மை மணந்துகொள்ளுமாறு கோரினார். அவளைவிட்டுத் தமது பார்வையைத் தாழ்த்திக்கொண்ட நபி (ஸல்) அவர்கள், பிறகு பார்வையை உயர்த்தினார்கள். ஆனால், அந்தப் பெண்ணை நபி (ஸல்) அவர்கள் (மணந்துகொள்ள) விரும்ப வில்லை. அப்போது, நபியவர்களின் தோழர் களில் ஒருவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பெண்ணை எனக்கு மண முடித்து வையுங்கள்!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மஹ்ராகச் செலுத்த) உன்னிடம் (பொருள்) ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘என்னிடம் ஏதும் இல்லை” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும்பால் ஆன மோதிரம்கூட இல்லையா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘(இரும்பு) மோதிரம் கூட இல்லை. ஆயினும், (நான் கீழாடை யாக உடுத்திக்கொள்ளும்) என்னுடைய இந்தப் போர்வையை இரண்டாகக் கிழித்து அவளுக்குப் பாதியைக் கொடுத்துவிட்டு மீதிப் பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை! குர்ஆனில் ஏதேனும் (உமக்கு மனனம்) உண்டா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘ஆம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அப்படியானால்) நீர் செல்லலாம்! உம்மிடம் (மனப்பாடமாக) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துவைத்தேன்” என்றார்கள்.74 அத்தியாயம் :

69

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர் களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவி யாக) வாழ்ந்தேன்.76 அத்தியாயம் :

70

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது, என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது, என்னுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒன்பது வருடங்கள் வாழ்ந்தார்கள் என்று எனக்குச் செய்தி எட்டியது. அத்தியாயம் :

71

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்” என்று கூறிவிட்டு, நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘தங்களுக்கு இவள் அவசியமில்லையானால், இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவளுக்கு மஹ்ராகக் கொடுக்க உன்னிடம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘எனது கீழங்கியைத் தவிர என்னிடம் வேறொன்றுமில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவளுக்கு நீர் இதைக் கொடுத்துவிட்டால், கீழங்கியில்லாமல் நீர் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். ஆகவே, (இவளுக்கு மஹ்ர் செலுத்த) ஏதேனும் தேடுக!” என்றார்கள். ‘‘அவர் (தேடிவிட்டு வந்து) ‘‘ஒன்றும் கிடைக்கவில்லை” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும் பாலான ஒரு மோதிரத்தையாவது தேடுக” என்று சொன்னார்கள். அப்போதும் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம்” எனச் சில அத்தியாயங்களின் பெயரைக் குறிப்பிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத்தந்தேன்” என்று கூறினார்கள்.78 அத்தியாயம் :

72

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிகழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று சொன்னார்கள்.79 அத்தியாயம் :

73

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! கன்னிப் பெண் வெட்கப்படுவாளே?” என்று கேட்டேன். அதற்கு, ‘‘அவளது மௌனமே சம்மதம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

74

கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்ப மிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

75

காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்களும், முஜம்மிஉ பின் யஸீத் (ரஹ்) அவர்களும், ‘‘கிதாம் என்றழைக்கப்படும் ஒருவர் தம்முடைய புதல்வி ஒருவரை மணமுடித்து வைத்தார்” என்று ஆரம்பித்து மேற்கண்ட ஹதீஸைப் போலவே அறிவித்தனர். அத்தியாயம் :

76

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘என் அருமைத் தாயார் அவர்களே! (என விளித்து,) ‘அநாதை(ப் பெண்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக்கொள் ளுங்கள்.’ என்று தொடங்கும் (4:3ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனம் குறிப்பிடும்) அநாதைப் பெண் ஒரு காப்பாளரின் பொறுப்பில் இருந்துவருவாள். அவரோ, இவளது அழகிலும் செல்வத்திலும் ஆசை(ப்பட்டு இவளைத் திருமணம் செய்ய விருப்பம்)கொள்வார். ஆனால், அவளுக்குரிய மஹ்ரைக் குறைத்திட நினைப்பார். அப்போதுதான் ‘நிறைவான மஹ்ரைத் தந்து அவர்களுடன் நீதியாக நடந்துகொள்ளாமல், அவர்களை நீங்கள் மணக்கக் கூடாது’ என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. (அநாதையல்லாத) மற்றப் பெண்களை மணந்துகொள்ளுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதற்குப் பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தீர்ப்புக் கேட்டனர். அப்போது அல்லாஹ் ‘‘(நபியே!) பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி உம்மிடம் அவர்கள் கோருகின்றனர்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான். இந்த வசனத்தில் அல்லாஹ் கூறியிருப்பதன் கருத்தாவது: ஓர் அநாதைப் பெண்ணிடம் செல்வமும் அழகுமிருந்தால் அவளை மணந்துகொள்ளவும் அவளுடன் உறவு முறையை ஏற்படுத்திக்கொள்ளவும் ‘மஹ்ர்’ (மணக்கொடை) கொடுக்கவும் மக்கள் முன்வந்தனர். அதே சமயம், அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாய் இருந்தால் அவளை விட்டுவிட்டு வேறு பெண்களை மணந்துகொண்டனர். அவளை விரும்பாதபோது (மணந்து கொள்ளாமல்) விட்டுவிடுவதைப் போன்று அவளை அவர்கள் விரும்பும்போது மஹ்ர் விஷயத்தில் அவளது உரிமையை நிறைவாக வழங்கி, அவளிடம் நீதியுடன் நடந்துகொண்டால் ஒழிய அவளை மணந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லை.81 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

77

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்துகொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை’ எனக் கூறினார்கள். அப்போது ஒருமனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், ‘‘என்னிடம் எதுவுமில்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!” என்று சொன்னார்கள். அவர், ‘‘என்னிடம் ஏதுமில்லை” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங் களுக்காக இவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன்” என்று சொன் னார்கள்.82 அத்தியாயம் :

78

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ஒருவர் தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண்பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு (தமக்காக அவளைப்) பெண் பேசலாகாது. தமக்குமுன் பெண்கேட்டவர் அதைக் கைவிடும்வரை; அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும்வரை (இவர் பொறுத்திருக்க வேண்டும்) என்றும் சொன்னார்கள். அத்தியாயம் :

79

80

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன் குனைஸ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் இறந்துவிட்டதால் மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்துவைக்க எண்ணினார்கள்.) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து, ‘‘நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்கு திருமணம் முடித்துவைக்கிறேன்” என்று கூறினேன். (அவர்கள் பதிலேதும் கூறவில்லை.) எனவே, சில நாட்கள் காத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண்கேட்டார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்துவைத்தேன்.) பிறகு (ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘நீங்கள் (என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச்) சொன்னபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்துகொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை (எனவே தான், உங்களுக்குப் பதிலேதும் கூறவில்லை). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவரை நான் (மனைவியாக) ஏற்றுக்கொண்டிருப்பேன்” என்று சொன்னார்கள்.83 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

81

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து (எங்களிடையே சொற்பொலிவும் கருத்துச் செறிவும் மிக்கதோர்) சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிச்சய மாகப் பேச்சில் கவர்ச்சி உள்ளது” என்று சொன்னார்கள்.84 அத்தியாயம் :

82

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் (காலித் பின் ஃதக்வான் (ரஹ்) அவர்களிடம்) கூறியதாவது: எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில (முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ர் போரில் கொல்லப் பட்ட எம்முன்னோரைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருசிறுமி, ‘‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்ப தையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘(இப்படிச் சொல்லாதே!) இதை விட்டுவிட்டு முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டு மானால்) சொல்!” என்று கூறினார்கள்.85 அத்தியாயம் :

83

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு (அன்சாரிப்) பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள். (அவரது முகத்தில்) திருமணத்தின் மகிழ்ச்சி(யின் ரேகை)யைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரிடம் அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக்கொண்டேன்” என்று பதிலளித்தார்கள். அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள தகவலில், ‘‘அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக்கொண்டார்கள்” என்று காணப்படுகிறது. அத்தியாயம் :

84

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த மக்களிடையே இருந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண்மணி (வந்து) நின்று, ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக (மஹ்ரின்றி மணமுடித்துக்கொள்வதற்காக) வழங்கி விட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதிலேதும் சொல்லவில்லை. பிறகு மீண்டும் எழுந்து நின்று, ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்!” என்று சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்குப் பதிலேதும் சொல்லவில்லை. மூன்றாவது முறையாக அப்பெண்மணி எழுந்து ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்” என்றார். அப்போது ஒரு மனிதர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(இவருக்கு மஹ்ராகக் கொடுக்க) உம்மிடம் ஏதேனும் பொருள் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் சென்று, (இவருக்கு மஹ்ராகச் செலுத்த) இரும்பாலான ஒரு மோதிரத்தையாவது தேடுக” என்று சொன்னார்கள். அவர் போய்த் தேடிவிட்டு பிறகு (திரும்பி) வந்து, ‘‘ஏதும் கிடைக்க வில்லை. இரும்பாலான மோதிரம்கூட கிடைக்கவில்லை” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் (மனப் பாடமாக) உள்ளது” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங் களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன், நீர் செல்லலாம்!” என்று கூறினார்கள்.87 அத்தியாயம் :

85

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘‘இரும்பாலான மோதிரத்தையாவது கொடுத்து மணமுடித்துக்கொள்வீராக!” என்று சொன்னார்கள்.88 அத்தியாயம் :

86

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந் தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் (அவர்களுக்குத்) தரும் மஹ்ர் (மணக்கொடை)தான். இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.91 அத்தியாயம் :

87

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண், மற்றொரு பெண்ணின் பாத்திரத்தை (வாழ்வாதாரத்தை)க் காலிசெய்(துவிட்டு அதைத் தனதாக்கிக்கொள்) வதற்காக அவளை மணவிலக்குச் செய்துவிடுமாறு (தம் மணாளரிடம்) கோர அனுமதியில்லை. ஏனெனில், அவளுக் கென விதிக்கப்பட்டது நிச்சயம் அவளுக்கே கிடைக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

88

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தம்மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளம் இருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது (அது குறித்து) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வினவியபோது, தாம் ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டதாக அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மஹ்ர் (மணக்கொடை) செலுத்தினீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை” என்று பதிலளித் தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளிப்பீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :

89

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டபோது முஸ்லிம்களுக்கு நல்ல விசாலமான மணவிருந்து கொடுத்தார்கள். வழக்கம்போல் மணமுடித்த கையோடு (தம் துணைவியரான) இறைநம்பிக்கை யாளர்களுடைய அன்னையரின் இல்லங் களுக்குச் சென்று அவர்களுக்கு (சலாம் கூறி) பிரார்த்தித்தார்கள். அன்னையரும் நபியவர்களுக்காகப் பிரார்த்தித்தனர். பிறகு (புது மணப்பெண் ஸைனப் இருந்த இல்லத்திற்கு) திரும்பி வந்தார்கள். அப்போது இருவர் (எழுந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டு) இருப்பதைக் கண்டார்கள். ஆகவே, (இல்லத்தினுள் நுழையாமல்) திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டது குறித்து நபியவர்களுக்கு நான் தெரிவித்தேனா, அல்லது (பிறர் மூலம்) தெரிவிக்கப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.93 அத்தியாயம் :

90

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடையின்) மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத் தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன?” என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து, ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களுக்கு வளம் வழங்குவானாக!” (பாரக்கல்லாஹ’ ல(க்)க) என்று பிரார்த்தித்து விட்டு, ‘‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளியுங்கள்!” என்று சொன்னார்கள்.94 அத்தியாயம் :

91

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது) என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டார்கள். பின்னர் (ஒன்பது வயதில் தாம்பத்திய உறவைத் தொடங்கிய போது) என் தாயார் (உம்மு ரூமான்) என்னிடம் வந்து, என்னை வீட்டினுள் அனுப்பிவைத்தார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தனர். அவர்கள் ‘‘நன்மையுடனும் வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்!” என்று (வாழ்த்துக்) கூறினர்.95 அத்தியாயம் :

92

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்களில் (‘யூஷஉ பின் நூன்’ எனும்) ஒருவர் அறப்போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், ‘‘ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்ற ஒருவர், அவளுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பி (இதுவரை) தாம்பத்திய உறவு கொள்ளாதிருப்பின் அவர் என்னைப் பின்பற்றி (போருக்கு) வரவேண்டாம்” என்று கூறினார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.96 அத்தியாயம் :

93

உர்வா பின் அஸ்ஸ’பைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்களை, அவர் ஆறு வயதுடையவராய் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் மணந்தார்கள்; அவருக்கு ஒன்பது வயதானபோது, அவருடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தார்கள்.97 அத்தியாயம் :

94

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில் ‘ஸஃபிய்யா பின்த் ஹுயை’ அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது நபியவர் களின் மணவிருந்துக்காக (வலீமா) முஸ்óம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் (பிலால் (ரலி) அவர்களிடம்) தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, (அவ்வாறே அது கொண்டுவந்து விரிக்கப்பட்டது.) அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவை இடப்பட்டன. இதுவே அன்னாரின் மணவிருந்தாக (வலீமா) அமைந்தது. அப்போது முஸ்லிம்கள், ‘‘ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இறைநம்பிக்கையாளர் களின் அன்னை (நபியவர்களின் துணைவி)யரில் ஒருவரா? அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?” என்று பேசிக்கொண்டனர். அப்போது ‘‘ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் திரையிட்(டுக் கொள்ளும்படி கட்டளையிட்)டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (நபியவர்களின் துணைவியரில்) ஒருவர்; அப்படி அவருக்குத் திரை(யிட்டுக்கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்” என்று (சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்தபிறகு) அவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் திரையிட்டு இழுத்து மூடிவிட்டார்கள்.98 அத்தியாயம் :

95

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னை (ஆறு வயதில்) மணந்துகொண்டார்கள். பின்னர் (ஒன்பது வயதில் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது) என் தாயார் (உம்மு ரூமான்) என்னிடம் வந்து என்னை வீட்டுக்குள் அனுப்பிவைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்திலேயே என்னிடம் வந்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.100 அத்தியாயம் :

96

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (எனக்குத் திருமணமானபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மென்பட்டு விரிப்புகளை அமைத்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். நான், ‘‘எங்களிடம் எவ்வாறு மென்பட்டு விரிப்புகள் இருக்கும்?” என்றேன். அதற்கு அவர்கள், ‘‘விரைவில் (உங்களிடம்) மென்பட்டு விரிப்புகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள்.101 அத்தியாயம் :

97

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே!” என்றார்கள்.102 அத்தியாயம் :

98

அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவிலுள்ள) பனூ ரிஃபாஆ பள்ளிவாசலில் (நாங்கள் இருந்துகொண்டி ருந்தபோது) அனஸ் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் இருக்கும் பகுதியைக் கடந்து சென்றால் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுவது வழக்கம். நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒன்றை நாம் அன்பளிப்பாக வழங்கினால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னார்கள். அதற்கு நான், ‘‘(அவ்வாறே) செய்யுங்கள்!” என்று அவர்களிடம் கூறினேன். ஆகவே, அவர்கள் பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றை எடுத்து ‘ஹைஸ்’ எனும் ஒருவகைப் பண்டத்தை ஒரு பாத்திரத்தில் தயாரித்தார்கள். அதை என்னிடம் கொடுத்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். அதை நான் எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி நடந்(து சென்று கொடுத்)தேன். அப்போது அவர்கள் என்னிடம், ‘‘அதைக் கீழே வைக்குமாறு கூறிவிட்டு, சிலரது பெயரைக் குறிப்பிட்டு, அவர்களைத் தம(து மணவிருந்து)க்காக அழைத்து வருமாறும், நான் சந்திக்கின்றவர்களையும் தமக்காக அழைத்து வருமாறும் என்னைப் பணித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்ட பணியைச் செய்து(முடித்து)விட்டு, நான் திரும்பி வந்தேன். அப்போது (நபியவர்களின்) அந்த இல்லம் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் அந்தப் பண்டத்தின் மீது வைத்து அல்லாஹ் நாடிய (பிரார்த்தனைச் சொற்கள் முதலிய)வற்றை மொழியக் கண்டேன். பிறகு அதனை உண்பதற்காக அங்கிருந்த மக்களைப் பத்துப் பத்துப் பேராக அழைக்கலானார்கள். அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் அவரவர் (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் அனைவரும் அதைச் சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றனர். அவர்களில் வெளியே சென்றுவிட்டவர்கள் போக ஒருசிலர் மட்டும் (அங்கேயே) பேசிக்கொண்டு இருந்துவிட்டனர். (அவர்கள் எழுந்து செல்லாமல் இருப்பது குறித்து) நான் வருந்தலானேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (வழக்கம்போல் தம் துணைவியரின்) அறைகளை நோக்கி (அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற் காக)ப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் போனேன். ‘‘(எழுந்து செல்லாமல் பேசிக் கொண்டிருக்கும்) அவர்கள் போய்விட்டி ருப்பார்கள்” என்று நான் கூறினேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து (ஸைனப் (ரலி) அவர்களது) அந்த இல்லத்திற்குள் சென்று திரையைத் தொங்கவிட்டார்கள். நான் அந்த அறையிலேயே இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) பின்வரும் (33:53ஆவது) வசனத்தை ஓதினார்கள்: இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.103 அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (சிறு வயதில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்தேன். அத்தியாயம் :

99

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் சகோதரி) அஸ்மாவிடம் நான் கழுத்தணி ஒன்றை இரவல் வாங்கினேன். அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) காணாமல் போய்விட்டது. ஆகவே, அதைத் தேடுவதற்காகத் தம் தோழர்களில் சிலரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத் தார்கள். (அவர்கள் அதைத் தேடச்சென்ற னர்.) அப்போது (வழியில்) அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. அந்த நேரம் (அங்கத்தூய்மை செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காததால்) அங்கத்தூய்மை செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது (அங்கத்தூய்மை செய்யாமல் தொழுதது குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அப்போதுதான் ‘தயம்மும்’ தொடர்பான (5:6ஆவது) இறைவசனம் இறங்கிற்று. எனவே, (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், ‘‘தங்களுக்கு அல்லாஹ் நற்பலன் வழங்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் (இக்கட்டான) சம்பவம் நேரும்போதெல்லாம் அதிலிருந்து விடுபடுவதற்கான முகாந்திரத்தைத் தங்களுக்கும், அதில் ஒரு வளத்தை முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை” என்று கூறினார்கள்.104 அத்தியாயம் :

100

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளும்போது ‘பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன் னிப்னிஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா’ (அல்லாஹ் வின் திருப்பெயரால்! இறைவா! என்னை விட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எனக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தை விட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!’) என்று பிரார்த்தித்து அதன்பின் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.105 அத்தியாயம் :

101

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவிற்கு வந்தபோது நான் பத்து வயதுடைய (சிறு)வனாய் இருந்தேன். என் அன்னையர் (என் அன்னையும் அன்னையின் சகோதரிகளும்) என்னை நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்யுமாறு வற்புறுத்திக்கொண்டே யிருந்தனர். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டு காலம் பணிவிடைகள் செய்தேன். நான் இருபது வயதுடையவனாய் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். ‘பர்தா’ தொடர்பான வசனம் அருளப் பெற்றது குறித்து மக்களில் நானே மிகவும் அறிந்தவனாயிருந்தேன். (அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து தாம்பத்திய உறவைத் தொடங்கியபோதுதான் ஆரம்பமாக அந்த வசனம் அருளப்பெற்றது. நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணந்தபோது (மணவிருந்திற்காக) மக்களை அழைத்தார்கள். மக்கள் வந்து உணவருந்திவிட்டு (நபியவர்களின் வீட்டிலிருந்து) வெளியேறிச் சென்றனர். ஆனால், அவர்களில் ஒரு குழுவினர் (மட்டும் எழுந்து செல்லாமல்) அங்கேயே நீண்ட நேரம் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்கள் வெளியேறட்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்து வெளியே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் வெளியேறிவிட்டேன். (பிறகு நேராக) ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் நிலைப்படிக்கு வந்தார்கள். நானும் அவர்களுடன் நடந்தேன். பிறகு (வீட்டில் அமர்ந்திருந்த) அக்குழுவினர் வெளியேறியிருப்பார்கள் என்று எண்ணியவாறு (வீட்டிற்குத்) திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். (தம் துணைவியார்) ஸைனப் (ரலி) அவர்களின் அறைக்கு அவர்கள் வந்தபோது அப்போதும் அந்தக் குழுவினர் எழுந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்தவண்ணம் (பேசிக்கொண்டு) இருந்தனர். உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பிவிட்டார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். மீண்டும் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் நிலைப்படிக்கு வந்துவிட்டு அந்த மூவரும் வெளியேறி யிருப்பார்கள் என்று எண்ணி (ஸைனபின் அறைக்குத்) திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் (மூவரும் எழுந்து) வெளியே சென்றுவிட்டிருந்தார்கள். அப்போது எனக்கும் (தம் துணைவியாரான) ஸைனப் (ரலி) அவர்களுக்கும் இடையே நபியவர்கள் திரையிட்டார்கள். இவ்வேளையில்தான் ‘பர்தா’ தொடர்பான (33:53ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.107 அத்தியாயம் :

102

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணந்துகொண்டபோது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘அவளுக்கு எவ்வளவு மஹ்ர் (மணக்கொடை) கொடுத்தீர்?” என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சங்கொட்டை எடை அளவுத் தங்கத்தை” என்று கூறினார்கள். ஹுமைத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் அனஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக இடம்பெற்றுள்ளது: (மக்கா முஸ்லிம்களான) முஹாஜிர்கள் (மக்காவைத் துறந்து) மதீனா வந்தபோது அவர்கள் அன்சாரிகளிடம் தங்கினார்கள். அதன்படி அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் சஅத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் தங்கி னார்கள். அப்போது (அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம்) சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்கள், ‘‘நான் தங்களுக்கு என் சொத்தை (சரிபாதியாக)ப் பங்கிட்டுத் தருகிறேன். என் இரு மனைவியரில் ஒருவரை மணவிலக்குச் செய்து உங்களுக்கு அவரை மணமுடித்து வைக்கிறேன்” என்று சொன்னார்கள். (அதை மறுத்துவிட்ட) அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் ‘‘அல்லாஹ் உங்கள் குடும்பத்திலும் செல்வத்திலும் வளம் வழங்குவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, கடைத்தெருவை நோக்கிச் சென்று வியாபாரத்தில் ஈடுபடலானார்கள். (முதன் முதலில்) சிறிது பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (இலாபமாக) அடைந்தார்கள். பின்னர் (அன்சாரிப் பெண்மணியை) மணந்துகொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளியுங்கள்” என்று சொன்னார்கள்.108 அத்தியாயம் :

103

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது அளித்த (வலீமா) மணவிருந்தைப் போன்று தம் மனைவியரில் வேறெவரை மணந்தபோதும் அளிக்கவில்லை; ஸைனப் (ரலி) அவர்களை மணந்தபோது நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை (அறுத்து) மண விருந்தளித்தார்கள். அத்தியாயம் :

104

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போரில் கைது செய்யப்பட்ட) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும்கொண்டார்கள்; (ஸஃபிய்யா (ரலி)) அவர்களது விடுதலையையே அவர்களுக்குரிய மஹ்ராகவும் (மணக் கொடையாகவும்) ஆக்கினார்கள். அ(வர்களை மணந்த)தற்காக (விதை நீக்கப்பட்ட பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும்) ‘ஹைஸ்’ எனும் பண்டத்தை வலீமா (மணவிருந்தில்) அளித்தார்கள்.109 அத்தியாயம் :

105

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தம் (புதிய) மனைவி ஒருவருடன் நபி (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது (வலீமா விருந்திற்காக மக்களை அழைக்க) என்னை அனுப்பி வைத்தார்கள். நான் (தயாராயிருந்த) அந்த விருந்துக்காகச் சிலரை அழைத்தேன். அத்தியாயம் :

106

ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் திருமணம் குறித்துஅனஸ் (ரலி) அவர்கள் முன்னிலையில் பேசப்பட்டது. அப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், ஸைனப் (ரலி) அவர்களுக்காக (அன்னாரை மணந்தபின்) மணவிருந்து (வலீமா) அளித்த அளவுக்கு வேறு எவரை மணந்தபோதும் அவர்கள் மணவிருந்தளிக்க நான் கண்டதில்லை; நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களை மணந்ததற்காக) ஓர் ஆட்டை (அறுத்து) வலீமா விருந்தளித்தார்கள். அத்தியாயம் :

107

ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலருக்காக (அவர்களை மணந்ததன்பின்) தொலி நீக்கப்படாத கோதுமையில் இரு ‘முத்’ அளவில் வலீமா விருந்தளித் தார்கள்.110 அத்தியாயம் :

108

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வலீமா (மண) விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதை ஏற்றுச் செல்லட்டும்! இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

109

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; (மணவிருந்து வலீமா முதலியவற்றுக்காக) அழைத்தவருக்கு (அவரது அழைப்பை ஏற்று) பதிலளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்” என்று கூறினார்கள்.111 அத்தியாயம் :

110

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை(க் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள். நோயாளியிடம் நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லுமாறும், தும்மியவ(ர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ் விற்கே) என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக எனப்) பதில் சொல்லுமாறும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவு மாறும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுமாறும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்புமாறும், விருந்து அழைப்பை ஏற்குமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும் (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்றும் ‘மீஸரா’ எனும் பட்டுமெத்தை, பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு, (கலப்படமில்லாத) சுத்தப்பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.112 அத்தியாயம் :

111

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள், தமது திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்டார்கள்.) மணப் பெண்ணா யிருந்த அபூஉசைதுடைய துணைவியார் (உம்மு உசைத் சலாமா பின்த் வஹ்ப்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மணப்பெண் (உம்மு உசைத்) பருகுவதற்கு என்ன தந்தார் தெரியுமா? அவர் நபி (ஸல்) அவர்களுக்கென்றே இரவில் பேரீச்சம் பழங்களைத் தண்ணீரில் ஊறப்போட்டு வைத்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் (வலீமா-மணவிருந்தை) சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச் சாற்றை அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார். அத்தியாயம் :

112

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவர் ஆவார்.113 அத்தியாயம் :

113

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஆட்டுக் காலின் கீழ்ப்பகுதி(யை விருந்தாக்கி, அந்த விருந்து)க்கு நான் அழைக்கப்பட்டாலும் நிச்சயம் நான் (அந்த அழைப்பை) ஏற்றுக்கொள்வேன். ஆட்டுக் காலின் கீழ்ப் பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் அதைப் பெற்றுக்கொள்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.114 அத்தியாயம் :

114

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த (மண)விருந்திற்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (‘நஃபில்’ எனும் கூடுதல்) நோன்பு நோற்றிருந்த நிலையில்கூட மணவிருந்து உள்ளிட்ட அழைப்புகளை ஏற்றுச் சென்று வந்தார்கள். அத்தியாயம் :

115

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: திருமண விருந்தொன்றுக்குச் சென்று விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த (அன்சாரி) பெண்களையும் சிறுவர்களையும் நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே (அவர்களை நோக்கி) மகிழ்ச்சியுடன் எழுந்து சென்று, ‘‘இறைவா! (நீயே சாட்சி’ என்று கூறிவிட்டு, அவர்களைப் பார்த்து,) மக்களிலேயே நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள்.115 அத்தியாயம் :

116

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப்படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள்; உள்ளே வரவில்லை. அவர்களது முகத்தில் அதிருப்தியி(ன் அறிகுறியி)னை நான் அறிந்துகொண்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ் விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன திண்டு?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘தாங்கள் இதில் அமர்ந்து கொள்வதற் காகவும், தலை சாய்த்துக்கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவப் படங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள்’ என (இறைவன் தரப்பிலிருந்து இடித்து)க் கூறப்படும்” என்று சொல்லிவிட்டு, ‘‘உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறைவனின் கருணை யைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லை” என்று சொன்னார் கள்.117 அத்தியாயம் :

117

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் (தமது) மணவிருந்தின்போது நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூஉசைத் (ரலி) அவர்களுடைய துணைவியார் (மணப்பெண்) உம்மு உசைத் (ரலி) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள். உம்மு உசைத் (ரலி) அவர்கள் (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந் தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்த வுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரலி) அவர்கள் அந்தப் பேரீச்சங் கனிகளை(த் தமது கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக பருகத் தந்தார்கள். அத்தியாயம் :

118

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள், தமது திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்டார்கள்.) மணப்பெண்ணாயிருந்த அபூஉசைதுடைய துணைவியார் (உம்மு உசைத்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்(குப் பருகக் கொடுப்பதற்)காக மணப்பெண் (உம்மு உசைத்) என்ன ஊறவைத்தார் தெரியுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கென்றே (தண்ணீரில்) பேரீச்சம் பழங்களை (முந்தைய) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் ஊறப்போட்டு வைத்திருந்தார். (நபி (ஸல்) அவர்கள் மணவிருந்தைச் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச் சாற்றை அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்).118 அத்தியாயம் :

119

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தேவிடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.119 அத்தியாயம் :

120

121

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் எங்கள் பெண்களுடன் (அதிகமாகப்) பேசுவதையும் இயல்பாகப் பழகுவதையும் தவிர்த்துவந்தோம். (அவ்வாறு பழகி, தவறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால்) எங்கள் தொடர்பாக (குர்ஆன் வசனம்) ஏதேனும் இறங்கி (தடை விதிக்கப்பட்டு)விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம். நபி (ஸல்) அவர்கள் இறந்தபிறகு (பெண்களுடன் தாராளமாகப்) பேசினோம்; இயல்பாகப் பழகினோம். அத்தியாயம் :

122

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி, மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் (தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான். அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.121 அத்தியாயம் :

123

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்துகொண்டு ஒவ்வொருவரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர். முதலாவது பெண் கூறினார்: என் கணவர், (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அந்த மலைப் பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியு மில்லை.122 இரண்டாவது பெண் கூறினார்: நான் என கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப்போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்றுகூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரது வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங்குறைகளைத்தான் கூறவேண்டியதிருக்கும். மூன்றாவது பெண் கூறினார்: என் கணவர் மிகவும் உயரமான மனிதர். அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரது காதுக்கு எட்டி)னால் நான் விவாகரத்துச் செய்யப்பட்டுவிடுவேன்; (அதே நேரத்தில் அவரிடம் எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடி வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.) நான்காவது பெண் கூறினார்: என் கணவர் (மக்கா உள்ளிட்ட) ‘திஹாமா’ பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற (இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை; கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை; (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை. ஐந்தாவது பெண் கூறினார்: என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தைபோல் நுழைவார். வெளியே போனால் சிங்கம் போலிருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார்.123 ஆறாவது பெண் கூறினார்: என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டுவிடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமல் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக்கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை.124 ஏழாவது பெண் கூறினார்: என் கணவர் ‘விவரமில்லாதவர்’ அல்லது ‘ஆண்மையில்லாதவர்’; சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் உன்னை ஏசுவார். கேலி செய்தால்) உன் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) உன் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார். எட்டாவது பெண் கூறினார்: என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்; முகர்வதற்கு மரிக்கொழுந்துபோல் மணக்கக்கூடியவர். ஒன்பதாவது பெண் கூறினார்: என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்குச் சமைத்துப்போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிறைத்துவைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக்கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்துக்கொண்டவர். பத்தாவது பெண் கூறினார்: என் கணவர் செல்வர். எத்துணை பெரும் செல்வர் தெரியுமா? எல்லா செல்வர்களையும்விட மேலான செல்வர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வராத சில நாட்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முன்னிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதி செய்துகொள்ளும். பதினொன்றாவது பெண் கூறினார்: என் கணவர் (பெயர்) அபூஸர்உ. அபூஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது ‘ஷிக்’ எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்து கொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரது பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப் பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல்வரை தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெரு மிதப்படும் அளவுக்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன். (என் கணவரின் தாயார்) உம்மு அபீஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரது வீட்டுக் களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும். அவரது வீடு விசாலமானதாகவே இருக்கும். (என் கணவரின் புதல்வர்) இப்னு அபீஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரது படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று சிறியதாக) இருக்கும். (அந்த அளவுக்குக் கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் ஒரு சப்பை (இறைச்சி) அவரது பசியைத் தணித்துவிடும். (அந்த அளவுக்குக் குறைவாக உண்ணுபவர்.) (என் கணவரின் புதல்வி) பின்த் அபீஸர்உ எத்தகையவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவரது ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள். (என் கணவர்) அபூஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (இரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பை கூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்புமிக்கவள்; தூய்மை விரும்பி.) (ஒருநாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூஸர்உ வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரு குழந்தைகள் இருந் தனர். அந்தக் குழந்தைகள் அவளது இடைக்குக் கீழே இரு மாதுளங் கனிகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஆகவே, (அவளது கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை மணவிலக்குக் செய்துவிட்டு, அவளை மணமுடித்துக் கொண்டார். அவருக்குப்பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாக்கப்பட்டேன். அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) ‘கத்’ எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்துக்கொண்டார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டுவந்தார். மேலும், எனக்கு ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு ஜோடியை வழங்கி, ‘‘உம்மு ஸர்உவே! (நன்றாக) நீயும் சாப்பிடு! உன் (தாய்) வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு” என்றார். (ஆனாலும்,) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாய்க் குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தைக்கூட அவை நிரப்ப முடியாது (என்று கூறி முடித்தார்). ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்: (என்னருமைக் கணவரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘‘(ஆயிஷாவே!) உம்மு ஸர்உவிற்கு அபூஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்” என்றார்கள்.125 அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சிலவற்றில் (‘பெருமிதப்படுதல்’) என்பதைக் குறிக்க ‘அத்தகன்னஹு’ என்பதற்குப் பதிலாக ‘அத்தகம்மஹ” எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இதுவே சரியான தாகும். அத்தியாயம் :

124

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபிசீனியர்கள் தம் ஈட்டிகளால் (வீர விளையாட்டு) விளையாடிக்கொண்டி ருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மறைத்தபடி (வீட்டு வாசலில் நின்றுகொண்டு) இருக்க, நான் (அவர்களின் விளையாட்டைப்) பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக (ரசித்து முடித்து, சலிப்புற்று) திரும்பிச் செல்லும்வரை நான் (அதைப்) பார்த்துக்கொண்டேயிருந்தேன். வயது குறைந்த இளம் பெண் எவ்வளவு நேரம் கேளிக்கை (விளையாட்டு)களைக் கேட்டுக்கொண்டு(ம் பார்த்துக் கொண்டும்) இருப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.126 அத்தியாயம் :

125

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நீண்ட நாட்களாக நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில் இருவரைப் பற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தேன். (ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான்) உயர்ந்தோன் அல்லாஹ் (குர்ஆனில்), ‘‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப் புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்.) ஏனெனில், உங்கள் உள்ளங்கள் (நேரிய வழியிலிருந்து சற்றே) பிறழ்ந்துவிட்டிருக்கின்றன” (66:4) என்று கூறியிருந்தான். (ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். நானும் (அந்த ஆண்டு) அவர்களுடன் ஹஜ் செய்தேன். (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) உமர் (ரலி) அவர்கள் (தமது இயற்கைக்கடனை நிறைவேற்றுவதற்காக) ஒதுங்கினார்கள். அவர்களுடன் நானும் தண்ணீர்க் குவளையுடன் சென்றேன். அவர்கள் இயற்கைக்கடனை முடித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் (குவளையிலிருந்த) தண்ணீரை ஊற்றினேன். (அதில்) அவர்கள் அங்கத்தூய்மை செய்தார்கள். அப்போது நான் அன்னாரிடம், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்). ஏனெனில், உங்கள் உள்ளங்கள் (நேரிய வழியிலிருந்து சற்றே) பிறழ்ந்துவிட்டிருக்கின்றன’ என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (உங்களுக்குமா இது தெரியாமற்போயிற்று!) ஆயிஷா (ரலி) அவர்களும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும்தான் அந்த இருவர்” என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது: நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாருடன் வசித்துவந்தேன். இவர்கள் மதீனாவின் மேடான பகுதிகளில் ஒன்றில் குடியிருப்பவர்களாவர். நாங்கள் இருவரும் முறை வைத்துக் கொண்டு (அங்கிருந்து) இறங்கிவந்து நபி (ஸல்) அவர்களுடன் இருப்போம். அவர் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பார். நான் ஒருநாள் நபியவர்களுடன் இருப்பேன். நான் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் அன்றைய நாளின் வேத அறிவிப்புகள் (நபியவர்களின் சொல், செயல்) முதலானவற்றை நான் அவரிடம் வந்து தெரிவிப்பேன். அவர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தால் இதைப் போன்றே அவரும் செய்வார். குறைஷி குலத்தாராகிய நாங்கள் (மக்காவிலிருந்தபோது) பெண்களை மிஞ்சிவிடுபவர்களாக இருந்துவந்தோம். (பெண்களை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.) நாங்கள் (மக்காவைத் துறந்து) அன்சாரிகளிடம் (மதீனா நகருக்கு) வந்தபோது பெண்கள் ஆண்களை மிஞ்சிவிடக்கூடியவர்களாக இருந்தனர். (பெண்கள் ஆண்களைக் கட்டுப்படுத்து பவர்களாக, தம்முடைய மனத்திற்குப் பிடிக்காதவற்றைக் கூறும்போது ஆண்களை எதிர்த்துப் பேசக்கூடியவர்களாக இருந்தனர்.) (இதைக் கண்ட) எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைக் கையாளத் தொடங்கினர். (ஒருநாள்) நான் என் மனைவி (ஸைனப் பின்த் மழ்ஊன்) இடம் (கோபத்துடன்) இரைந்து பேசினேன். உடனே என் மனைவியும் என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னை எதிர்த்துப் பேசிய(து எனக்குப் பிடிக்கவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அதற்கு அவர், ‘‘நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை நீங்கள் ஏன் ஆட்சேபிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர்கூட (அன்னாரின் பேச்சுக்கு) மறுபேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் பகலில் இருந்து இரவுவரை பேசுவதில்லை” என்று கூறினார். இது என்னை அதிர்ச்சி அடையச் செய்யவே, ‘‘அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகி விட்டார்” என்று என் மனைவியிடம் கூறினேன். பிறகு உடை அணிந்துகொண்டு (அங்கிருந்து) இறங்கி, (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவராயிருந்த என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். ‘‘ஹஃப்ஸாவே! உங்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பகலில் இருந்து இரவுவரை கோபமாக இருக்கிறார்களா?” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, ‘‘ஆம்” என்று பதிலளித்தார். நான், ‘‘அப்படியானால், நீ நஷ்டப்பட்டு விட்டாய்; இழப்புக்குள்ளாகிவிட்டாய். இறைத் தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் கோபமடைந்து நீ அழிந்துபோய்விடுவாய் எனும் அச்சம் உனக்கில்லையா? நபி (ஸல்) அவர்களிடம் அதிகமாக(த் தேவைகளை)க் கேட்காதே. எதற்காகவும் அவர்களை எதிர்த்துப் பேசாதே. அவர்களிடம் பேசாமல் இருக்காதே. உனக்கு (அவசியத் தேவையென்று) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் -ஆயிஷா- உன்னைவிட அழகு மிக்கவராகவும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக்கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைப் பார்த்து) நீ ஏமாந்துபோய் (அவரைப்போல் நடந்து கொண்டு)விடாதே” என்று நான் (என் மகளுக்குப் புத்திமதி) கூறினேன். அந்தக் காலகட்டத்தில், (ஷாம் நாட்டில் வாழும்) ‘ஃகஸ்ஸான்’ குலத்தார் எங்கள்மீது போர் தொடுப்பதற்காக, (தங்கள்) குதிரைகளுக்கு லாடம் அடித்து(த் தயாராகி)க்கொண்டிருக்கின்றனர் என்று நாங்கள் ஒரு (வதந்தியான) செய்தியைப் பேசிக் கொண்டிருந்தோம். (இவ்வாறிருக்க ஒருநாள்) என் அன்சாரித் தோழர் தமது முறைக்குரிய நாளில் (எங்கள் பகுதியிலிருந்து) இறங்கி நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு, இஷா நேரத்தில் திரும்பி வந்தார். என் வீட்டுக் கதவை மிக பலமாகத் தட்டினார். (கதவைத் திறக்க நான் சற்று தாமதித்தபோது) ‘‘அவர் (உமர்) இங்கே இருக்கிறாரா(?அல்லது வெளியில் சென்றுவிட்டாரா)?” என்று கேட்டார். (வழக்கத்திற்கு மாறாக அவர் கதவைத் தட்டியதால்) நான் கலக்கமுற்று அவரைப் பார்க்க வெளியே வந்தேன். அவர், ‘‘இன்று மிகப் பெரிய சம்பவ மொன்று நடந்துவிட்டது” என்று கூறினார். நான், ‘‘என்ன அது? ஃகஸ்ஸான் குலத்தார் (படையெடுத்து) வந்துவிட்டனரா?” என்று கேட்டேன். ‘‘இல்லை. அதைவிடப் பெரிய, அதைவிட அதிர்ச்சியான சம்பவம் நடந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டார்கள்!” என்று கூறினார். நான், ‘‘(என் மகள்) ஹஃப்ஸா நஷ்டமடைந்து இழப்புக்குள்ளாகிவிட்டார். நான் இப்படி (கூடிய விரைவில்) நடக்கத் தான் போகிறது என்று எண்ணியிருந்தேன்” எனக் கூறிவிட்டு, உடை அணிந்து கொண்டு புறப்பட்டேன். நபி (ஸல்) அவர் களுடன் ஃபஜ்ர் தொழுகை தொழுதேன். (தொழுகை முடிந்த) உடனே நபி (ஸல்) அவர்கள் தமக்குரிய மாடியறைக்குச் சென்று அங்கே தனியே இருந்தார்கள். நான் ஹஃப்ஸாவிடம் சென்றேன். அப்போது அவர் அழுதுகொண்டிருந்தார். நான், ‘‘ஏன் அழுகிறாய்? இது குறித்து உன்னை நான் எச்சரித்திருக்கவில்லையா? நபி (ஸல்) அவர்கள் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘எனக்கு (ஒன்றும்) தெரியாது. அதோ அவர்கள் அந்த மாடி அறையில் தனியாக இருக்கிறார்கள்” என்று கூறினார். உடனே நான் (அங்கிருந்து) புறப்பட்டு சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகில் சென்றேன். அதைச் சுற்றி ஒரு கூட்டத்தார் இருந்தனர். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுதுகொண்டிருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு நான் துக்கம் தாளாமல் நபியவர்கள் இருந்த மாடி அறைக்கு அருகே வந்தேன். (அங்கிருந்த) நபி (ஸல்) அவர்களுடைய கறுப்பு அடிமை (ரபாஹ் அவர்கள்) இடம், ‘‘உமருக்காக (நபியவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்” என்று சொன் னேன். அந்த அடிமை அறைக்கு உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம் பேசி விட்டுப் பிறகு வெளியே வந்து, ‘‘நபி (ஸல்) அவர்களிடம் பேசினேன். உங்களைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார். ஆகவே, நான் திரும்பி வந்து மிம்பருக்கு அருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்துகொண்டேன். பின்னர், அங்கு நிலவிய (துக்ககரமான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் (மீண்டும்) அந்த அடிமையிடம் சென்று, ‘‘உமருக்காக அனுமதி கேள்” என்று கூறினேன். அவர் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்து, ‘‘உங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (பதிலேதும் சொல்லாமல்) மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று (முன் போலவே) சொன்னார். நான் (மறுபடியும்) திரும்பிவந்து மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்துகொண்டேன். மறுபடி அங்கு நான் கண்ட (கவலையான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் (மூன்றாம் முறையாக) அந்த அடிமையிடம் சென்று, ‘‘உமருக்காக அனுமதி கேள்!” என்று சொன்னேன். அவர் உள்ளே சென்றுவிட்டு என்னிடம் திரும்பி வந்து, ‘‘நான் உங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (பதிலேதும் சொல்லாமல்) மௌனமாக இருந்துவிட்டார்கள்”என்று கூறினார். நான் திரும்பிச் செல்ல இருந்தபோது அந்த அடிமை என்னை அழைத்து, ‘‘உங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துவிட்டார்கள்” என்று கூறினார். உடனே நான் நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அங்கு அவர்கள் ஓர் ஈச்சம் பாயில், ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்தபடி படுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் (அவர்கள் படுத்திருந்த) அந்தப் பாய்க்குமிடையே விரிப்பு ஏதும் இருக்கவில்லை. ஆகவே, அவர்களது விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். பிறகு நான் நின்றுகொண்டே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரைத் தாங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். நபியவர்கள் தமது பார்வையை என்னை நோக்கி உயர்த்தி, ‘‘இல்லை (மணவிலக்குச் செய்யவில்லை)” என்று கூறினார்கள். உடனே நான் ‘‘அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னேன். (அவர்களது கோபத்தைக் குறைத்து) அவர்களைச் சாந்தப்படுத்த விரும்பி, நின்றபடியே (பின்வருமாறு) சொல்லத் தொடங்கினேன்: அல்லாஹ்வின் தூதரே! நான் சொல்வதைச் சற்று கேளுங்கள்! குறைஷி குலத்தாராகிய நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந்தோம். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது பெண்கள் ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரைக் கண்டோம். (எங்கள் பெண்களும் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு எங்களிடம் எதிர்த்துப் பேசத் தொடங்கிவிட்டனர்)” என்று சொன்னேன். (அதைக்கேட்ட) நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் கூறுவதைச் சற்று கேளுங்கள்! நான் ஹஃப்ஸாவிடம் சென்று, ‘உன் அண்டை வீட்டுக்காரர் -ஆயிஷா- உன்னைவிட அழகானவராகவும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைக் கண்டு) நீ ஏமாந்துபோய் (அவரைப்போல நடந்து கொண்டு)விடாதே’ என்று கூறியதைச் சொன்னேன். (இதை நான் சொல்லக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் இன்னொரு முறை புன்னகைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்ததைக் கண்ட நான் (அங்கு) அமர்ந்துகொண்டேன். பிறகு, நான் எனது பார்வையை உயர்த்தி அவர்களின் அறையை நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகின்ற பொருள் எதையும் நான் அவர்களின் அறையில் காணவில்லை; மூன்றே மூன்று தோல்களைத் தவிர. அப்போது நான், ‘‘தங்கள் சமுதாயத்தாருக்கு (உலகச் செல்வங்களை) தாராளமாக வழங்கும்படி தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் (கிழக்கு) ரோமர்களுக்கும் -அவர்கள் (ஏக இறைவன்) அல்லாஹ்வை வழிபடாதவர் களாக இருந்தும்- உலகச் செல்வங்கள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே” என்று கூறினேன். (தலையணையில்) சாய்ந்து அமர்ந்திருந்த நபி (ஸல்) அவர்கள் (இதைக் கேட்டவுடன்) நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, ‘‘கத்தாபின் புதல்வரே! நீங்கள் இன்னும் இந்த எண்ணத்தில்தான் இருக்கிறீர்களா? அவர்களின் (நற்செயல்களுக்கான) பிரதிபலன்கள் அனைத்தும் இந்த உலக வாழ்விலேயே (மறுமை வாழ்வுக்கு) முன்னதாக அவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன” என்று கூறினார்கள். உடனே நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (அவசரப்பட்டு இப்படிக் கேட்ட) எனக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களின் அந்த இரகசியத்தை ஹஃப்ஸா, ஆயிஷா அவர்களிடம் கூறி வெளிப்படுத்திவிட்டபோது, அதன் காரணத்தால்தான் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகி, இருபத்தொன்பது நாட்கள் தனிமையில் இருக்கத் தொடங்கினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் (66:1ஆவது வசனத்தின் மூலம்) கண்டித்தபோது தம் துணைவியர்மீது ஏற்பட்ட கடும் வருத்தத்தின் காரணத்தால் ‘‘(என் துணைவியரான) அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு நான் செல்லமாட்டேன்” என்றும் கூறியிருந்தார்கள். இருபத்தொன்பது நாட்கள் கழிந்து விட்டபோது, நபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அதற்குப்பின் மற்றத் துணைவியரிடம் சென்றார்கள்.) அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப் போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே! நீங்கள் இருபத்தொன்பது இரவுகளைத்தானே கழித்திருக்கின்றீர்கள்! (ஒருநாள் முன்னதாக வந்துவிட்டீர்களே!) அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வருகின்றேனே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மாதம் என்பது (குறைந்தபட்சம்) இருபத்தொன்பது நாட்களும்தான்” என்று பதில் கூறினார்கள். அந்த மாதமும் இருபத்தொன்பது நாட்களாகவே இருந்தது. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பிறகு (நபி (ஸல்) அவர்களுடைய துணைவியருக்கு, அவர்கள் விரும்பினால் நபியுடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடும் (33:28 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுமாறு) தம் துணைவியரில் முதலாவதாக என்னிடமே (கூறத்) தொடங்கினார்கள். நான் நபி (ஸல்) அவர்களை(ச் சேர்ந்து வாழும் வாழ்க்கையை)யே தேர்ந்தெடுத் தேன். பிறகு தம் துணைவியர் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் இதே உரிமையை வழங்கினார்கள். துணைவியர் அனைவரும் நான் சொன்னதைப் போன்றே சொல்லிவிட்டார்கள்.127 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

126

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரது அனுமதி இல்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்கக் கூடாது.128 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

127

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம்முடைய மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்துவிட்டால், அவளைப் பொழுது விடியும்வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.129 அத்தியாயம் :

128

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன் கணவருடன் படுக்கை யை(ப் பகிர்ந்துகொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும்வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

129

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன் கணவர் உள்ளூரில் இருக்க, அவரது அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக் கப்பட்டதன்று. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கலாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரது பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி கணவருக்கும் கிடைக்கும்.130 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸிலுள்ள (கூடுதல்) நோன்பு பற்றிய தகவல் (மட்டும்) மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. அத்தியாயம் :

130

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர் களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப் பட்டோர் ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர். இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

131

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கிரகணத் தொழுகை) தொழுதார்கள். அவர்களுடன் (சேர்ந்து) மக்களும் தொழுதார்கள். அத்தொழுகையில் ‘அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயம் ஓதுமளவுக்கு வெகுநேரம் நின்றார்கள். பின்பு நீண்ட நேரம் (குனிந்து) ‘ருகூஉ’ செய்தார்கள். பின்பு (‘ருகூஉ’விலிருந்து) நிமிர்ந்து (நிலைக்கு வந்து) நீண்ட நேரம் நின்றார்கள். இ(ந்த நிலையான)து, முதலாவது நிலையைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ‘ருகூஉ’ செய்தார்கள். இ(ந்த இரண்டாம் ருகூஉவான)து, முதலாம் ‘ருகூஉ’வைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு (‘ருகூஉ’விலிருந்து) நிமிர்ந்தார்கள். பிறகு ‘சஜ்தா’ (சிரவணக்கம்) செய்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து) எழுந்து (நிலையில்) நீண்ட நேரம் நின்றார்கள். இ(ந்த நிலையான)து, முந்தைய நிலையைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ‘ருகூஉ’ செய்தார்கள். இ(ந்த ‘ருகூஉ’வான)து, முந்தைய ‘ருகூஉ’வைவிடக் குறைவானதாக இருந்தது. பின்னர் (‘ருகூஉ’விலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முந்தைய நிலையைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ‘ருகூஉ’ செய்தார்கள். இ(ந்த ‘ருகூஉ’வான)து முந்தைய ‘ருகூஉ’வைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு (‘ருகூஉ’விலிருந்து) நிமிர்ந்தார்கள். பின்னர் ‘சஜ்தா’ செய்தார்கள். பிறகு, (கிரகணம் விலகி) சூரியன் பிரகாசித்துவிட்டிருந்த நிலையில் தொழுது முடித்தார்கள். பிறகு, ‘‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவரது இறப்பிற்காகவோ பிறப்பிற்காகவோ அவற்றுக்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, இ(த்தகைய கிரகணத்)தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுதுகொண்டி ருக்கையில்) இதோ இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின்வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (தொழுதுகொண்டிருக்கையில்) ‘சொர்க்கத் தைக் கண்டேன்’ அல்லது ‘சொர்க்கம் எனக்குக் காட்டப்பட்டது’. அதிலிருந்து (பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்(த பழத்திலிருந்)து புசித்திருப்பீர்கள். மேலும், நான் (தொழுதுகொண்டி ருக்கையில்) நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போன்று (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகளில் அதிகமாகப் பெண்களையே கண்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘ஏன் (அது?) அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பெண்களின் நிராகரிப்பே காரணம்” என்றார்கள். அப்போது ‘‘பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கி றார்கள்?” என வினவப்பட்டது. அதற்கு ‘‘கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க் கிறார்கள். (கணவன் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் ‘உன்னிடமிருந்து எந்த நலனையும் நான் கண்டதேயில்லை’ என்று சொல்லிவிடுவாள்” எனப் பதிலளித்தார்கள்.132 அத்தியாயம் :

132

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (‘மிஅராஜ்’ விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.133 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

133

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்துல்லாஹ்வே! நீ பகல் எல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வழிபடுவதாகக் கேள்விப்பட்டேனே! (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (உண்மைதான்) அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு செய்யாதே! (சிலநாள்) நோன்பு நோற்றுக்கொள். (சிலநாள்) நோன்பை விட்டுவிடு! (இரவில் சிறிது நேரம்) நின்று வழிபடு! (சிறிது நேரம்) உறங்கு! உன் உடலுக்கென (நீ செய்ய வேண்டிய) கடமைகள் உனக்கு உண்டு. உன்னுடைய கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு. உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு” என்று சொன்னார்கள்.135 அத்தியாயம் :

134

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப் பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.136 அத்தியாயம் :

135

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியரிடம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டுத் தமது மாடி அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டார்கள். இருபத்தொன்பதாம் நாள் (அங்கிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது, ‘‘ஒரு மாதம் (துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தீர்களே, அல்லாஹ்வின் தூதரே! (இன்னும் ஒருநாள் மீதி இருக்கிறதே அதற்குள் வந்துவிட்டீர்களே?)” என்று வினவப்பட்டது. அதற்கு, ‘‘இந்த மாதம் இருபத்தொன்பது நாட்கள்தான்” என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்.137 அத்தியாயம் :

136

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் ஒருமாதம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். இருபத் தொன்பதாம் நாள் ‘காலையில்’ அல்லது ‘மாலையில்’ துணைவியரிடம் சென்றார்கள். அப்போது அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களிடம் ஒரு மாதம் செல்ல மாட்டேன் எனச் சத்தியம் செய்(திருந்)தீர் களே?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம்” என்று பதிலளித்தார்கள்.139 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

137

அபூயஅஃபூர் அப்துர் ரஹ்மான் பின் உபைத் அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபுள்ளுஹா (ரஹ்) அவர்களிடம் (ஒரு மாதத்திற்கு எத்தனை நாள் என்பது குறித்து) விவாதித்துக்கொண்டி ருந்தோம். அப்போது அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வரும் ஹதீஸை)க் கூறினார்கள்: ஒருநாள் காலை நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அழுதுகொண்டி ருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர் குடும்பத்தாரும் இருந்தனர். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றேன். பள்ளிவாசல் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வந்து, நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த மாடியறைக்கு ஏறிச் சென்றார்கள். (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் (முகமன்) சொன்னார்கள். ஆனால், யாரும் உமருக்குப் பதில் சலாம் சொல்லவில்லை. மீண்டும் ‘சலாம்’ சொன்னார்கள். அப்போதும் அவர்களுக்கு யாரும் பதில் ‘சலாம்’ சொல்லவில்லை. பிறகும் (மூன்றாம் முறையாக) ‘சலாம்’ சொன்னார்கள். அப்போதும் யாரும் (உமர் (ரலி) அவர்களுக்கு) பதில் சலாம் சொல்லவில்லை. அப்போது உமர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘தங்கள் துணைவி யரை (தாங்கள்) ‘மணவிலக்குச் செய்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை. ஆனால், ஒரு மாத காலம் (அவர்களை) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் (ஈலாஉ) செய்து விட்டேன்” என்று பதிலளித்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம் துணைவியரிடம் சென்றார்கள். அத்தியாயம் :

138

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பதுபோல அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுட னேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள். இதை அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.140 அத்தியாயம் :

139

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவருடைய மகளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்துத் தெரிவித்துவிட்டு, ‘‘தம் மகளின் கணவர், அவளது தலையில் ஒட்டுமுடி வைத்துவிடுமாறு என்னைப் பணிக்கிறார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்! (ஒட்டுமுடி வைத்துவிடாதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

140

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் ஒருவருடைய மனைவியாக இருந்துவருகிறாள். (அவளது முதுமை, நோய் போன்ற காரணத்தால்) அவளை அவருக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது; அவளை மணவிலக்குச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணமுடிக்கவும் அவர் விரும்புகிறார். (இந்நிலையில்) அவள் ‘‘என்னை (மனைவியாக) இருக்கவிடுங்கள்; என்னை மணவிலக்குச் செய்துவிடாதீர்கள். பின்னர் (வேண்டுமானால்) மற்றொரு பெண்ணை மணந்துகொள்ளுங்கள். எனக்காகச் செலவழிப்பதிலிருந்தும் இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும் நீங்கள் விலகிக்கொள்ளலாம்” என்று தம் கணவரிடம் கூறுகிறாள். இதையே இவ்வசனம் கூறுகின்றது: ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ளமாட்டான் என்றோ புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன்- மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை. (4:128)141 அத்தியாயம் :

141

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்துவந்தோம். அத்தியாயம் :

142

143

அபூசயீத் அல்குத்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில (அரபு) போர்க் கைதிகளைப் பெற்றோம். (அவர்களிடையே இருந்த பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்ளவும்) ‘அஸ்ல்’ செய்துகொள்ளவும் விரும்பினோம். (அதுகுறித்து) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போது அவர்கள் ‘‘(இந்த அஸ்லை) நீங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, ‘‘மறுமை நாள்வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று கூறினார்கள்.143 அத்தியாயம் :

144

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவி யரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) எனது பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒருநாள்) ஹஃப்ஸா (என்னிடம்), ‘‘இந்த இரவு நீங்கள் எனது ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களது ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்” என்று சொன்னார்கள். நான், ‘‘சரி” என்று (சம்மதம்) கூறினேன். ஆகவே, (நாங்களிருவரும் ஒருவர் மற்றவரது ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறி வந்த) எனது ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ (முகமன்) சொன்னார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். (பயணத்தினிடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை(க் காணாததால் அவர்களை) நான் தேடினேன். அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் எனது இரு கால்களையும் ‘இத்கிர்’ புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, ‘‘இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என்மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்” என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்துகொள்ளத்தான் முடிந்ததே தவிர,) நபி (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அத்தியாயம் :

145

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள்) தம்மிடம் தங்கும் நாளை எனக்கு அன்பளிப்பாக (விட்டு)க் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னுடைய நாளையும் ‘சவ்தா’ அவர்களின் நாளையும் எனக்கே ஒதுக்கிவந்தார்கள்.144 அத்தியாயம் :

146

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால் அவளிடம் ஏழு நாட்கள் தங்குவார். கன்னி கழிந்த பெண்ணை ஒருவர் மணந்திருந்தால் அவளிடம் மூன்று நாட்கள் தங்குவார். இதுவே நபிவழியாகும். அறிவிப்பாளர்களில் ஒருவர் (காலித், அல்லது அபூகிலாபா) கூறுகிறார்: இதை நபி (ஸல்) அவர்களே கூறினார்கள் என்று நான் சொன்னால் அது தவறாகாது; எனினும், அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதன்படி ‘நபிவழி’ என்று கூறி யுள்ளேன். அத்தியாயம் :

147

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் கன்னிகழிந்த பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னிப் பெண்ணை மணந்துகொண்டால் முதலில் கன்னிப் பெண்ணிடம் ஏழு நாட்கள் தங்குவார். பிறகு (மற்ற மனைவிக்கு இரவை) ஒதுக்குவார். ஒருவர் கன்னிப் பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னிகழிந்த பெண்ணை மணந்தால் (முதலில்) கன்னிகழிந்த பெண்ணிடம் மூன்று நாட்கள் தங்கிவிட்டு பிறகுதான் (மற்ற மனைவிக்கு இரவை) ஒதுக்குவார். இதுவே நபிவழியாகும். அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: நான் நினைத்தால், இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று சொல்ல முடியும். (அது தவறாகாது. ஆயினும், முறைப்படி அனஸ் அவர்கள் கூறிய பிரகாரமே அறிவித்துள்ளேன்.) மற்றோர் அறிவிப்பில், காலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நினைத்தால் இதை நபி (ஸல்) அவர்களே கூறினார்கள் என்று சொல்ல முடியும். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

148

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் எல்லா துணைவியரிடமும் சென்றுவிட்டு வந்துவிடுவார்கள். அப்போது அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர்.147 அத்தியாயம் :

149

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் தம் துணைவியரிடம் செல்வார்கள். அப்போது அவர்களில் சிலருடன் நெருக்கமாக இருப்பார்கள். அவ்வாறே (ஒருநாள்) தம் துணைவியாரான ஹஃப்ஸாவிடம் சென்று வழக்கமாகத் தங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தங்கினார்கள். அத்தியாயம் :

150

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘‘நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?” என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கிக்கொள்ளலாம் என அவர்களுக்கு அனுமதியளித்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை எனது வீட்டிலேயே தங்கியிருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கிவந்தார்களோ அந்த நாளில்தான் என் வீட்டில் வைத்து இறந்தார்கள். எனது நெஞ்சுக்கும் நுரையீரலுள்ள பகுதிக்கும் இடையே அவர்களது தலை இருந்தபோது, (மிஸ்வாக் குச்சியை என் வாயால் கடித்து மென்மைப்படுத்திக் கொடுத்திருந்ததால்) அவர்களின் உமிழ்நீர் என் உமிழ்நீருடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக்கொண்டான்.148 அத்தியாயம் :

151

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் அண்டை வீட்டு அன்சாரீ நண்பர், நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டதாகத் தந்த தவறான தகவலையடுத்து நான் என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, என்னருமை மகளே! தம் அழகும், தம்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுள்ள அன்பும் யாரைக் குதூகலப்படுத்தியுள்ளதோ அவர் -ஆயிஷா- (நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக்கொள்வது) கண்டு நீ ஏமாந்துவிடாதே!” என்று கூறினேன். பிறகு இந்தச் சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் எடுத்துரைத்தபோது அவர்கள் புன்னகைத்தார்கள்.149 அத்தியாயம் :

152

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக்கொண்டால், அது குற்றமாகுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்கிறவர், போலியான இரு ஆடைகளை (அதாவது இரவல் மற்றும் அமானித ஆடைகளை, அல்லது போலியான மேல் மற்றும் கீழ் ஆடைகளை) அணிந்துகொண்டவர் போலாவார்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

153

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைவிட அதிக ரோஷ முள்ளவர் யாருமில்லை. அதனால்தான் மானக்கேடான செயல்கள் அனைத்திற்கும் அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.150 அத்தியாயம் :

154

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் சமுதாயமே! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.151 அத்தியாயம் :

155

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை. இதை அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

156

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயம் அல்லாஹ் ரோஷம்கொள் கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடை விதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

157

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருக்கும்போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்க வில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டிசுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டிசுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து நானே பேரீச்சங் கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது.152 (ஒருநாள்) நான் என் தலைமீது பேரீச்சங் கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, (அவர்தம் தோழர்களான) அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக ‘‘இஃக், இஃக்” என்று சொல்லித் தமது ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும், நான் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களையும், அவரது ரோஷத்தையும் நினைத்துப் பார்த் தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக் காரராக இருந்தார். நான் வெட்கப்படு வதைப் புரிந்துகொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள். நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து ‘‘(வழியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக்கொள்வதற்காக(த் தமது ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்” என்று கூறினேன். அதற்கு என் கணவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்ததுதான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது” என்று கூறினார். (இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நானே மேற்கொண்டு வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்ததுபோல் இருந்தது. அத்தியாயம் :

158

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(து கொண்டிருந்)தார்கள். இறைநம்பிக்கை யாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவி யா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள்.153 (அப்போது) நபி (ஸல்) அவர்கள் யாரது வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளின் கையைத் தட்டி விட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது. உடனே (ஆத்திரப் படாமல்) நபி (ஸல்) அவர்கள் உடைந்த அந்தத் தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்க லானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர் களை நோக்கி), ‘‘உங்கள் தாயார் ரோஷப் பட்டுவிட்டார்” என்று சொன்னார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார (துணைவியா)ரிடமிருந்து மற்றொரு தட்டைக் கொண்டுவரச்செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள்.154 அத்தியாயம் :

159

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், ‘‘(கனவில்) ‘நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன்’ அல்லது ‘சொர்க்கத்திற்குச் சென்றேன்’. அங்கு ஒரு மாளிகையைக் கண்டேன். நான், ‘‘இது யாருடையது?” என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), ‘‘இது உமர் பின் அல்கத்தாப் அவர் களுடையது” எனப் பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உமது ரோஷம் குறித்து நான் அறிந்திருந்தது என்னை (உள்ளே செல்லவிடாமல்) தடுத்துவிட்டது” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பண மாகட்டும்! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள்.155 அத்தியாயம் :

160

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘‘நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) மாளிகை ஒன்றின் அருகில் ஒரு பெண் (உலகில் தான் இறைவணக்கம் புரிபவளாய் இருந்துவந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொலிவையும் மெருகேற்றிக்கொள்ளவும்) அங்கத்தூய்மை செய்துகொண்டிருந்தாள். அப்போது நான், ‘‘இந்த மாளிகை யாருக்குரியது?” என்று கேட்டேன். (வானவர்) ஒருவர், ‘‘இது உமருக்குரியது” எனப் பதிலளித்தார். (அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன்.) உமர் அவர்களின் ரோஷம் என் நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருந்து திரும்பி வந்துவிட்டேன்” என்று கூறினார்கள். அங்கு அவையிலிருந்த உமர் (ரலி) அவர்கள் (இதைக் கேட்டு) அழுதார்கள். பிறகு, ‘‘தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள்.156 அத்தியாயம் :

161

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என்மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘‘எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘இல்லை; முஹம்மதுடைய அதிபதிமீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என்மீது கோபமாய் இருந்தால், ‘இல்லை; இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதிமீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று சொன்னார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக்கொள்வேன். (தங்கள்மீதன்று)” என்று கூறினேன். அத்தியாயம் :

162

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (இதர) துணைவியர் எவர்மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கதீஜாவை அதிகமாக நினைவுகூர்ந்து, அவரை (அடிக்கடி) புகழ்ந்து பேசி வந்தார்கள். கதீஜா அவர்களுக்கென சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று கொடுக்கப்படும் என்று அவருக்கு நற்செய்தி கூறும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘வஹீ’ மூலம் உத்தரவிடப்பட்டது.158 அத்தியாயம் :

163

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, ‘‘ஹிஷாம் பின் முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்கமாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்கமாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்கமாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) மணவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினால் தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்க மாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்” என்று சொன்னார்கள்.159 அத்தியாயம் :

164

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் அல்லாத வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கல்வி அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், விபசாரம் அதிகரித்துவிடுவதும், மது அருந்துதல் அதிகரித்துவிடுவதும், ஐம்பது பெண்களுக்கு -அவர்களை நிர்வகிக்க- ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்.161 அத்தியாயம் :

165

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.162 அத்தியாயம் :

166

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே ஒருவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்ன இன்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில்) நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(போருக்குச் செல்வதிலிருந்து பெயரை) திரும்பப் பெற்றுக்கொண்டு, நீர் உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!” என்று கூறினார்கள்.163 அத்தியாயம் :

167

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருடன் தனியாக (எங்கள் காதில் விழாத விதத்தில்) நபியவர்கள் பேசிக்கொண்டி ருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அந்தப் பெண்மணியிடம், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளாகிய) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

168

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள் என் கணவர்) நபி (ஸல்) அவர்கள் என் அருகில் இருந்துகொண்டி ருந்தார்கள். அங்கு எங்கள் வீட்டில் (பெண்களைப்போல் நடந்துகொள்ளும்) ‘அரவானி’ ஒருவனும் இருந்துகொண்டி ருந்தான். அந்த ‘அரவானி’ என் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவிடம், ‘‘நாளை தாயிஃப் நகர்மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால், ஃகைலானுடைய164 மகளை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். (அவளை நீ மணந்துகொள்.) ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று (அவளது மேனி அழகை வர்ணித்துக்) கூறினான். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘இவன் உங்களிடம் ஒருபோதும் வரக் கூடாது” என்று சொன்னார்கள்.165 அத்தியாயம் :

169

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல்துண்டால் மறைத்துக்கொண்டிருக்க பள்ளிவாசல் வளாகத்தில் (ஈட்டியெறிந்து) விளையாடிக்கொண்டிருந்த அபிசீனியர் களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக்கொண்டிருந்தேன். நானாகச் சடைந்துவிடும்வரை பார்த்துக்கொண்டி ருந்தேன். விளையாட்டுகள்மீது பேராவல் கொண்ட இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.166 அத்தியாயம் :

170

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் (பர்தா அணிவது சட்டமாக்கப் பட்டபின் ஒருநாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள். அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அவர்கள் அடையாளம் புரிந்துகொண்டு, ‘‘சவ்தாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை” என்று சொன்னார்கள். உடனே சவ்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, அது குறித்து அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எனது அறையில் உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அந்தச் சமயத்தில் அவர்களுக்கு (வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம்போல் அதனால் ஏற்படும் சிரமநிலை) அகற்றவும் பட்டது. அப்போது அவர்கள், ‘‘(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதியளித்துவிட்டான்” என்றார்கள்.167 அத்தியாயம் :

171

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.168 அத்தியாயம் :

172

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) என் பால்குடித் தந்தை (அபுல் குஐஸ்) அவர்களுடைய சகோதரர் (அஃப்லஹ் என்பார்) வந்து என் வீட்டுக்குள்ளே வர அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்காமல் அவருக்கு அனுமதியளிப்ப தில்லை என்று நான் இருந்துவிட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நான் அது குறித்துக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர்தானே! அவருக்கு உள்ளே வர அனுமதி கொடு!” என்று சொன்னார்கள். உடனே நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பெண்தானே எனக்குப் பாலூட்டினார். இந்த ஆண் எனக்குப் பாலூட்டவில்லையே! (பாலூட்டிய தாயின் கணவரும் அவருடைய சகோதரரும் எனக்கு எந்த வகையில் உறவினர் ஆவார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர் உன்னுடைய (பால்குடித்) தந்தையின் சகோதரர்தான். எனவே, அவர் உன்னிடம் (உன் வீட்டுக்குள்) வரலாம்” என்று சொன்னார்கள். -இது எங்களுக்கு ‘பர்தா’ அணியும் சட்டம் விதியாக்கப்பட்ட பின்னால் நடந்தது.- (மேலும்,) இரத்த உறவின் காரணத்தால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படுவதைப் போன்றே பால்குடியாலும் நெருங்கிய உறவு ஏற்படும்.169 அத்தியாயம் :

173

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம், அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

174

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்றுமேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம், அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.170 அத்தியாயம் :

175

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுடைய புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், ‘‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவி யரிடமும் சென்று வருவேன். அப்பெண் களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்), ‘‘இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்” என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறவில்லை; மறந்துவிட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் ‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்று கூறியிருந்தால் அவர் தமது சத்தியத்தை முறித்திருக்கமாட்டார். (சபதத்தை நிறைவேற்றியிருப்பார்.) மேலும், அது (‘இன்ஷா அல்லாஹ்’ என்பது) அவரது தேவை நிறைவேற உதவியிருக்கும்.171 அத்தியாயம் :

176

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (வெளியிலிருந்து) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் வருவதை நபி (ஸல்) அவர்கள் வெறுக்கக்கூடியவர்களாயிருந்தார்கள். அத்தியாயம் :

177

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் நீண்ட நாட்கள் கழித்து ஊர் திரும்பினால் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம்.172 இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

178

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு போரில் (தபூக்கில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக் கொண்டிருந்தபோது, மெதுவாகச் செல்லக்கூடிய ஒட்டகத்தின்மீது இருந்த வாறு நான் அவசரப்பட்டுக்கொண்டிருந் தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனமொன்றில் வந்து சேர்ந்தார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்,) ‘‘உமக்கு என்ன அவசரம்?” என்று கேட்டார்கள். ‘‘நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணந்தாயா. அல்லது கன்னிகழிந்த பெண்ணை மணந்தாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை. கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணமுடித்துக்கொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலாவி மகிழ்ந்திருக்கலாமே!” என்றார்கள். பிறகு நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இஷா நேரம்வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக் கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.174 அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம், ‘‘புத்திசாலித்தனமாக நடந்து கொள்” என்றார்கள். அதாவது ‘‘குழந்தை யைத் தேடிக்கொள்” என்றார்கள் என நம்பத் தகுந்த (அறிவிப்பாளர்) ஒருவர் என்னிடம் கூறினார். அத்தியாயம் :

179

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ இரவில் (மதீனாவுக்குள்) நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே! (வெளியூர் சென்ற கணவரைப்) பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தன்னை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளும்வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலை வாரிக்கொள்ளும்வரை (பொறுமையாயிரு!)” என்று கூறிவிட்டு, ‘‘புத்திசாலித்தனமாக நடந்து (குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

180

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் எனும்) ஒரு போரில் இருந்தோம். (போர் முடிந்து) திரும்பிவந்த நாங்கள் மதீனாவை நெருங்கிக்கொண்டிருந்தோம். அப்போது நான் மெதுவாகச் செல்லும் என் ஒட்டகத்தில் இருந்தவாறு அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த நேரம் எனக்குப் பின்னால் இருந்து வாகனத்தில் ஒருவர் என்னை வந்தடைந்து தம்மிடமிருந்த கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்தினார். உடனே எனது ஒட்டகம் நீ கண்ட ஒட்டகங்களிலேயே அதிவிரைவாக ஓடக்கூடியது போல ஓடியது. நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இருந்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணம் ஆனவன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘திருமணம் செய்துகொண்டுவிட்டாயா?” என்று கேட்க, நான், ‘‘ஆம்” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப்பெண்ணையா, கன்னிகழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை. கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப்பெண்ணை மணந்து, அவளோடு நீயும், உன்னோடு அவளுமாய்க் கூடிக்குலாவி மகிழ்ந்திருக்கலாமே!” என்றார்கள். பிறகு நாங்கள் (மதீனாவுக்கு) வந்து (ஊருக்குள்) நுழைய முற்பட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களை சென்றடைய) இஷா நேரம்வரைப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும்” என்றார்கள்.175 அத்தியாயம் :

181

அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் நாளில் (காயமுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காயத்திற்கு என்ன மருந்திடப்பட்டது என்பது தொடர்பாக மக்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதி (ரலி) அவர்களிடம் (சென்று அது பற்றிக்) கேட்டார்கள். -சஹ்ல் (ரலி) அவர்கள் மதீனாவில் கடைசியாக எஞ்சியிருந்த நபித்தோழர்களில் ஒருவராய் இருந்தார்கள்.-அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: மக்களிலேயே இது குறித்து என்னைவிட நன்கறிந்தவர் எவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. (உஹுத் போரில் காயமடைந்த) நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து (அவர்களுடைய புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களே இரத்தத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டுவந்துகொண்டிருந்தார்கள். பின்பு ஒரு பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. பிறகு (கரிக்கப்பட்ட பாயின்) சாம்பலை நபியவர் களின் காயத்தில் வைத்து அழுத்தப் பட்டது.176 அத்தியாயம் :

182

அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘தாங்கள் (பெருநாட்களான) ஈதுல் அள்ஹாவிலோ ஈதுல் ஃபித்ரிலோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கின்றீர்களா?” என்று கேட்டார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘ஆம் (இருந்திருக்கிறேன்). (உறவின் காரணத்தால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் (பெருநாள் தொழுகையில்) அவர்களுடன் கலந்துகொண்டு (பெண்கள் பகுதிவரை சென்று) இருக்க முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று (மக்களுடன் பெருநாள்) தொழுகையை நிறைவேற்றினார்கள். பிறகு உரை நிகழ்த்தினார்கள். -இந்த இடத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (அத்தொழுகைக்குமுன்) பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதாகக் கூறவில்லை.- பிறகு நபி (ஸல்) அவர்கள் பெண்கள் இருந்த பகுதிக்கு வந்து (மார்க்க விஷயங்களையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். மேலும், (ஏழை எளியோருக்கு) தர்மம் செய்யுமாறும் அவர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். உடனே அப்பெண்கள், தங்களின் காதுகளுக்கும் கழுத்துகளுக்கும் தங்களின் கைகளைக் கொண்டுசென்று (அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி) பிலால் (ரலி) அவர்களிடம் கொடுப்பதை நான் கண்டேன். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.177 அத்தியாயம் :

183

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள் என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைக் கண்டித்தார்கள். என் இடுப்பில் தமது கரத்தால் குத்தலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது மடியில் தலைவைத்துப் படுத்திருந்ததுதான் என்னை அசைய விடாமல் (அடிவாங்கிக்கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது.179 அத்தியாயம் :