அனைத்து இஸ்லாம் நூலகம்

65 - குர்ஆன் விளக்கம்

1

அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்தபின்), “அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுதுகொண்டிருந்தேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “உங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வழிக்கு இறைத் தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள்” என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா? என்று கேட்டார்கள்.7 பிறகு என்னிடம், “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீர் பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உமக்குக் கற்றுத்தருகிறேன்” என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முற்பட்டபோது நான் அவர்களிடம், “நீங்கள் “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உமக்குக் கற்றுத் தருகிறேன்' என்று சொல்லவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அது “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' (என்று தொடங்கும் “அல்ஃபாத்திஹா' அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்.8 எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆனும் ஆகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில்) இமாம், “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள்ளால்லீன்” என்று ஓதியவுடன் நீங்கள், “ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)” என்று சொல்லுங் கள். ஏனெனில், எவர் “ஆமீன்' கூறு(ம் நேரமா)வது வானவர்கள் “ஆமீன்' கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு, அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10 அத்தியாயம் :

3

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர் கள் ஒன்றுகூடி, “(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றா யிருக்கும்!)” என்று (தங்களிடையே) பேசிக்கொள்வார்கள். பிறகு, அவர்கள் (ஆதிமனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, “நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத்தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திóருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந் துரை செய்யுங்கள்” என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை” என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப்பார்த்து வெட்கப்படுவார்கள்.3 “நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர், (எனக்குப்பின்) பூமியிலுள்ளவர் களுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவர் ஆவார்” என்று சொல்வார்கள். உடனே இறைநம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், “(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை” என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள்.4 பிறகு, “நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம் (அலை) அவர்களிடம்) செல்லுங்கள்” என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கை யாளர்கள் (இப்ராஹீம் -அலை) அவர்களி டம் செல்வார்கள். அப்போது அவர்களும், “(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத் (வேதத்)தையும் அளித்த அடி யாரான (நபி) மூசாவிடம் நீங்கள் செல்லுங்கள்” என்று சொல்வார்கள். உடனே அவர்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், “(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை” என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்குமுன் வெட்கப்படுவார்கள்.5 பிறகு, “நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், “(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள். உடனே அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், “என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பிய வரையில் (அப்படியே) என்னை அவன் விட்டுவிடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) “உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான் எனது தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போலவே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், “குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை” என்று சொல்வேன்.6 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: உயர்ந்தோனான அல்லாஹ் (திருக்குர் ஆனில் யாரைக் குறித்து), “நரகத்தில் இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்' என்று குறிப்பிட்டுள்ளானோ அவர்களையே “குர்ஆன் தடுத்துவிட்டவர்கள்' எனும் சொற்றொடர் குறிக்கிறது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

4

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்” என்று சொல்லிவிட்டு, “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீர் கொல்வது” என்று சொன்னார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது” என்று சொன்னார்கள்.10 அத்தியாயம் :

5

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சமையல் காளான் (தானாக வளர்வதில்) “மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.12 இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

6

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல்களுக்கு, “(ஊருக்குள் நுழையும்போது) அதன் தலைவாயிலில் பணிவாக நுழையுங்கள். “மன்னிப்பாயாக!' (ஹித்தத்துன்) என்று கூறுங்கள்” (2:58) எனக் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் புட்டங்களால் தவழ்ந்து சென்றபடி (நகருக்குள்) நுழைந்தார்கள். (கட்டளையிடப்பட்டதை) அவர்கள் மாற்றி, “ஹித்தத்துன்; ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின் (இறைவா! மன்னிப்பாயாக! தொலி நீக்கப்படாத ஒரு கோதுமைக்குள் ஒரு தானிய வித்து)” எஎன்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.13 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

7

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக்கொண்டிருந்த சமயம் எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப்போகிறேன். அவற்றை ஓர் இறைத் தூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்கள். பிறகு, “1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “சற்று முன்புதான் ஜிப்ரீல் (அலை) எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “ஜிப்ரீலா (தங்களுக்குத் தெரிவித்தார்!)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்' என்று பதிலளிக்க, “வானவர்களிலேயே ஜிப்ரீல்தான் யூதர் களுக்குப் பகைவராயிற்றே!” என்று அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(நபியே!) நீர் கூறுவீராக: எவர் ஜிப்ரீலுக்குப் பகைவரோ (அவர் அல்லாஹ்வுக்கும் பகைவரே). ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உமது இதயத்தில் இறக்கிவைத்தார்” எனும் இந்த (2:97ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள். பிறகு, “அறிக! இறுதி நாளின் அடை யாளங்களில் முதலாவது அடையாளம், ஒரு நெருப்பாகும். அது கிழக்கிலிருந்து மக்களை(த் துரத்திக்கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். அறிக! சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும். (குழந்தை தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் அமையக் காரணம், ஓர் ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது) ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (கருமுட்டை உயிரணுவை) முந்திவிட்டால் குழந்தை அவனது சாயலைப் பெறுகிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக்கொண்டால் குழந்தை அவளது சாயலைப் பெறுகிறது” என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதிமொழிகிறேன். தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்றும் நான் உறுதிமொழிகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தார் ஆவர். தாங்கள் (என்னைப் பற்றி) அவர்களிடம் விசாரித்து (அறிந்து)கொள்வதற்கு முன்பாக, நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் வந்தனர். (உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அறைக்குள் சென்று மறைந்துகொண்டார்கள்.) பிறகு, நபி (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), “உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் புதல்வருமாவார்; எங்கள் தலைவரும், எங்கள் தலைவரின் புதல்வருமாவார்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் சலாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், “அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று சொன்னார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்” என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனுமாவார்” என்று அப்துல்லாஹ் பின் சலாமைக் குறித்துக் குறைகூறினர். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “இதைத்தான் நான் அஞ்சிக்கொண்டி ருந்தேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள்.16 அத்தியாயம் :

8

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை பின் கஅப் (ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ (ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற எதையும் கைவிடமாட்டேன்” என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, “நாம் ஒரு வசனத்தை மாற்றினால், அல்லது மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்கு நிகரானதையோ கொண்டுவருவோம் என்று கூறியுள்ளான்.18 இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

9

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் நம்ப மறுத்தது, “அவனை நான் முன்பிருந்தது போன்றே மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப என்னால் முடியாது' என்று அவன் எண்ணியதேயாகும். அவன் என்னை ஏசியது, “எனக்குக் குழந்தை உண்டு' என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக்கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன்” என்று அல்லாஹ் கூறினான்.20 இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

10

உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: “மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்' அல்லது “என் இறைவன் மூன்று விஷயங்களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான்'. நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும்போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளலாமே!” என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.) மேலும் நான், (அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லா வகை மனிதர்களும்) வருகின்றனர். ஆகவே, (தங்கள் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி தாங்கள் கட்டளையிடலாமே!” என்று கேட்டேன். அவ்வாறே, அல்லாஹ் பர்தா (சட்டம்) குறித்த வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர்மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. ஆகவே, அவர்களிடம் நான் சென்று, “நீங்கள் (நபி (ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதை) நிறுத்திக்கொள்ள வேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர் களை (உங்களுக்கு)ப் பதிலாகத் தருவான்” என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களுடைய துணைவியரில் ஒருவரிடம் நான் சென்றபோது, “உமரே! தம்முடைய துணைவியருக்கு அறிவுரை கூற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக் குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும்!” என்று கேட்டார். அப்போது அல்லாஹ், “இறைத்தூதர் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்குப் பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்க லாம்” எனும் (66:5ஆவது) வசனத்தை அருளினான்.22 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

11

நபி (ஸல்) அவர்களின் துணைவி யாராகிய ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்)கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிடச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)விட்டதை நீ காணவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக் கூடாதா?” எனக் கேட்டேன். “உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயில்லாவிட்டால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்)” என்றார்கள். (இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற்சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் கஅபாவின் வளைந்த) பகுதியை அடுத்துள்ள (கஅபாவின்) இரு மூலைகளையும் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம், இறையில்லம் (கஅபா) இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும்.23 அத்தியாயம் :

12

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரூ (எபிரேயு) மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்துவந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து அருளப்பெற்றவற்றையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்” (2:136) என்று கூறினார்கள்.24 அத்தியாயம் :

13

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கி “பதினாறு மாதங்கள்' அல்லது “பதினேழு மாதங்கள்' தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறை யில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (ஆகவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும்படி ஆணையிட்டு அல்லாஹ் 2:144ஆவது வசனத்தை அருளி னான்.) உடனே அவர்கள் அஸ்ர் தொழுகையை (கஅபாவை முன்னோக்கி)த் தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர்களுடன் தொழுதிருந்தவர்களில் ஒரு மனிதர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் “ருகூஉ' செய்துகொண்டிருந்தனர். அவர், “அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கின்றேன். நான், நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்” என்று சொல்ல, அவர்கள், அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள். (புதிய கிப்லாவான) கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்துவிட்டிருந்தனர். அவர்கள் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவதென்பது எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது, “அல்லாஹ், உங்கள் இறைநம்பிக்கையைப் பாழ்படுத்து பவன் அல்லன். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் பரிவு மிகுந்தோனும் கருணையுடையோனுமாவான்” எனும் (2:143ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.25 அத்தியாயம் :

14

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், “இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்டளையிடு; காத்திருக்கிறேன்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “(நமது செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்துவிட்டீர்களா?” என்று இறைவன் கேட்பான். அவர்கள், “ஆம் (எடுத்துரைத்துவிட்டேன்)” என்று சொல்வார்கள். அப்போது அவர்களுடைய சமுதாயத்தாரிடம், “உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை” என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், “உங்களுக்குச் சாட்சியம் சொல்கின்றவர் யார்?” என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், “முஹம்மதும் அவருடைய சமுதாயத்தாரும்” என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், “நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச் செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள்” என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருப்பார். இதையே, “இவ்வாறே, உங்களை நாம் நடுநிலைச் சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று பகர்வோராகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று பகர்பவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதே இதற்குக் காரணம்” எனும் (2:143) இறைவசனம் குறிக்கிறது. “நடுநிலையான' (வசத்) என்பதற்கு “நீதியான' என்பது பொருள்.26 இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

15

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் “சுப்ஹ்' தொழுகையை “மஸ்ஜிது குபா'வில் தொழுதுகொண்டிருந்தபோது ஒரு மனிதர் வந்து, “கஅபாவை (தொழுகையில்) முன்னோக்கும்படி கட்டளையிட்டு நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆ(னின் ஒரு வசனத்தி)னை அல்லாஹ் அருளியுள்ளான்” என்று சொன்னார். உடனே, (பைத்துல் மக்திஸின் திசையை நோக்கித் தொழுதுகொண்டிருந்த) அம்மக்கள், கஅபாவை நோக்கித் (தங்கள் முகங்களைத்) திருப்பிக்கொண்டனர்.27 அத்தியாயம் :

16

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுதவர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை.28 அத்தியாயம் :

17

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் குபாவில் “சுப்ஹ்' தொழுகையில் இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “சென்ற இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (தொழுகையில் இதுவரை முன்னோக்கிவந்த பைத்துல் மக்திஸைவிட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, (மக்களே!) கஅபாவையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள்.29 அத்தியாயம் :

18

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் குபாவில் சுப்ஹ் தொழுகை தொழுதுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, “சென்ற இரவு நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (அதில்) அவர்கள் (தொழுகையில் இதுவரை தாம் முன்னோக்கிவந்த பைத்துல் மக்திஸை விட்டுவிட்டு இனிமேல் மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை தொழுகையில் முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்குங்கள்” என்று சொன்னார். அப்போது மக்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் வட்டமடித்து கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள். அத்தியாயம் :

19

பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி “பதினாறு' அல்லது “பதினேழு' மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.31 அத்தியாயம் :

20

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் “குபா'வில் “சுப்ஹ்' தொழுகை யிலிருந்தபோது, ஒரு மனிதர் வந்து, “சென்ற இரவு (நபி (ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமடித்து கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். (அதற்குமுன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது.32 அத்தியாயம் :

21

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் குபாவில் “சுப்ஹ்' தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு (குர்ஆன் வசனம்) அருளப்பெற்றுள்ளது. (அதில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆகவே, அ(ந்த இறையில்லத்)தை நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார். அப்போது அவர்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் வட்டமிட்டு (தற்போதைய) கிப்லா(வான கஅபா)வை நோக்கித் திரும்பினார்கள். அத்தியாயம் :

22

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை. எனவே, யார் (கஅபா எனும்) அவ்வீட்டில் ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவது குற்றமில்லை” என்ற (2:158) வளமும் உயர்வுமிக்க இறைவனின் வசனப்படி, ஸஃபா, மர்வாவுக்கிடையே சுற்றிவராவிட்டாலும் குற்றமேதுமில்லை என்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” எனக் கேட்டேன். அப்போது நான் சிறுவயதுடையவனாயிருந்தேன். அதற்கு (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், “(என் சகோதரி அஸ்மாவின் மகனே!) நீ சொன்னது தவறு. அந்த வசனத்தில் “அவ்விரண்டையும் சுற்றிவராம லிருப்பது குற்றமில்லை' என்றிருந்தால்தான் நீ கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்சாரிகளின் விஷயத்தில் அருளப்பெற்றதாகும். அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்முன் தாங்கள் வழிபட்டுவந்த “முஷல்லல்' எனும் குன்றில் உள்ள) “மனாத்' எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்த மனாத் (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையிலிருந்த) “குதைத்' எனும் இடத்திற்கு நேர் எதிரில் இருந்தது. அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வா குன்றுகளுக்கு மத்தியில் சுற்றி வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாம் வந்தபோது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி (அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா, மர்வா இடையே சுற்றிவருவதைப் பாவமாகக் கருதுகின்றோம். இது சரியா? என)க் கேட்டார்கள். அப்போது தான் அல்லாஹ், “நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை” என்ற (2:158) இந்த வசனத்தை அருளி னான்.34 அத்தியாயம் :

23

ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “ஸஃபா மர்வா(வுக்கிடையே ஹஜ், உம்ராவின்போது ஓடுவதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் அதனை அறியாமைக் காலச் செய்கை என்று கருதிவந்தோம். ஆகவே, இஸ்லாம் வந்தபோது நாங்கள் அவற்றுக்கிடையில் ஓடுவதை நிறுத்திவிட்டோம். அப்போது உயர்ந்தோனாகிய அல்லாஹ், “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங் களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில்லத்தில் ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகிறாரோ அவர் அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவதில் குற்றமேதுமில்லை' எனும் (2:158ஆவது) இவ்வசனத்தை அருளினான்” என்று பதிலளித்தார்கள்.35 அத்தியாயம் :

24

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்துவிடுகிறாரோ அவர் நரகம் புகுவார்” என்று கூறினார்கள். “(அப்படியானால்) யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்” என்று நான் சொன்னேன்.36 அத்தியாயம் :

25

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இஸ்ரவேலர்களிடையே பழிக்குப் பழிவாங்கும் (கிஸாஸ்) சட்டம் (நடைமுறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக்கொண்டு கொலை செய்தவனை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. ஆகவே, அல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்களின்) இந்தச் சமுதாயத்தாருக்கு, “கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. சுதந்திரமான மனிதன் சுதந்திரமான மனிதனுக்குப் பதிலாகவும், அடிமை அடிமைக்குப் பதிலாகவும், பெண் பெண்ணுக்குப் பதிலாகவும் (பழிவாங்கப் படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட கொலையுண்டவனின் உறவினரான) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால் நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகை) செலுத்த வேண்டும்” என்று கூறுகிறான். “மன்னிப்பளித்தல்' (அஃப்வ்) என்பது திட்டமிட்டுச் செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்ல முறையில் அதனைக் கொலையாளி செலுத்த வேண்டும். “இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையும் ஆகும்.” அதாவது உங்களுக்கு முன்பிருந்தவர்(களான பனூ இஸ்ராயீல்)கள்மீது கடமையாக்கப்பட்டிருந்ததைவிட இது இலேசாகும். இதற்கும் அப்பால் எவன் எல்லை மீறுகின்றானோ அவனுக்கு-அதாவது எவன் உயிரீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின்பும் (பழிக்குப் பழியாகக்) கொலை செய்கிறானோ அவனுக்கு- வதைக்கும் வேதனையே உண்டு. (2:178) இதை முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

26

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கொலைக் குற்றத்தில்) அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.37 அத்தியாயம் :

27

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையின் சகோதரி (அத்தை) “ருபய்யிஉ' (பின்த் அந்நள்ர்) அவர்கள் ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்து விட்டார்கள். ஆகவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)டம்மன்னித்துவிடும்படி கோரினர். அவர்கள் (மன்னிக்க) மறுத்துவிட்டனர். ஆகவே, என் அத்தையின் குலத்தார் ஈட்டுத் தொகை செலுத்த முன்வந்தனர். அதற்கும் அவர்கள் மறுத்துவிடவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இறைச்சட்டப்படி தீர்ப்பளிக்கும்படி கேட்டு) வந்தனர். அப்போதும் அவர்கள் பழிவாங்கு வதைத் தவிர வேறெதற்கும் (ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரி) “ருபய்யிஉ'வின் முன்பல் உடைக்கப்படுமா? வேண்டாம்! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! அவரது முன்பல் உடைக்கப்படக் கூடாது” என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும்” என்று சொன்னார்கள். அதற்குள் அந்த (இளம்பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்துவிட்டனர். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர்; அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விட்டால் அவன் அதை நிறைவேற்றி (மெய்யாக்கிக் காட்டி) விடுகின்றான்” என்று கூறினார்கள்.38 அத்தியாயம் :

28

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் கால மக்கள் (குறைஷியர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி (ஸல்) அவர்கள், “(ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகின்றவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் அதை விட்டுவிடலாம்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

29

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு “ஆஷூரா' (முஹர்ரம் பத்தாம்) நாளன்று நோன்பு நோற்கப்பட்டுவந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது விரும்பியவர் ஆஷூரா நாளன்று நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டு விட்டனர்.39 அத்தியாயம் :

30

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நான் உணவுண்டு கொண்டி ருந்தபோது அஷ்அஸ் பின் கைஸ் அவர்கள் வந்து, “இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே!” என்று (நான் நோன்பு நோற்காமல் உண்டுகொண்டிருப்பதைக் கண்டு வியந்து) சொன்னார். நான், “ரமளான் (நோன்பு) கடமையாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டுவந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது அந்த (ஆஷுரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கைவிடப்பட்டது. ஆகவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்” என்று சொன்னேன். அத்தியாயம் :

31

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கும் நாளாக ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்றுவந்தார்கள். (ஹிஜ்ரத் செய்து) மதீனா நகருக்கு அவர்கள் வந்தபோது அந்நாளில் தாமும் நோன்பு நோற்று, (மற்றவர்களும்) நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். பிறகு ரமளான் (நோன்பு) கடமையானபோது ரமளான் (மாத நோன்பு) கடமையான வழிபாடானது; ஆஷூரா நோன்பு கைவிடப்பட்டு, அன்று விரும்பியவர் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் நோன்பு நோற்காமலும் இருக்கலாம் என்று (கூடுதல் வழிபாடாக) ஆகிவிட்டது.40 அத்தியாயம் :

32

அதாஉ பின் அபீ ரபாஹ்-(ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “வ அலல்லதீன யுதவ்வகூனஹு ஃபித்யத் துன் தஆமு மிஸ்கீன்” (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு(ம் அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பைக் கைவிட்டதற்குப்) பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்) எனும் (2:184ஆவது) இறைவசனத்தை ஓதி, “இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

33

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், (2:184ஆவது வசனத்தில், “அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” என்பதன் மூலத்தை) “ஃபித்யத்து தஆமி மஸாகீன' என்று (“ஏழைகள்' எனப் பன்மையாக) ஓதிக்காட்டி “இது, சட்டம் காலாவதியாகிவிட்ட வசனமாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

34

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: “நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பெற்றபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டுப் பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (“உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.44 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் பின் அபீஉபைத் அல்அஸ்லமீ (ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்து விட்டார்கள்.45 அத்தியாயம் :

35

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ரமளான் மாத நோன்பு கடமையானபோது, மக்கள் ரமளான் மாதம் முழுவதும் (தம்) மனைவியரை நெருங்காமலிருந்தார்கள். (மக்களில்) சிலர் தங்களுக்குத் தாங்களே அநீதியிழைத்துக்கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ், “(இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்துவிட்டான்” எனும் (2:187ஆவது) வசனத்தை அருளினான்.46 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

36

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இந்த 2:187ஆவது வசனம் அருளப் பெற்றதும்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக்கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப்பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்துகொள்ள முடியவில்லை. காலையானதும் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று,) “அல்லாஹ்வின் தூதரே! என் தலையணையின் கீழே (இந்த இரு கயிறுகளையும்) வைத்திருந்தேன். (ஆயினும் இரண்டையும் பிரித்தறிய முடியவில்லையே?!)” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “வெள்ளைக் கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள் தலையணைக்குக் கீழே இருந்திருந்தால், உங்கள் தலையணை நிச்சயம் (மிக) விசாலமானதாய் இருக்க வேண்டும்” என்று சொன்னார்கள்.47 அத்தியாயம் :

37

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதரே! கறுப் புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிற்றைப் பிரித்தறிய முடியும் நேரம் வரும்வரை” என்ற (2:187ஆவது) வசனத்திலுள்ள கயிறுகள் (அல்கைத்) என்பவை உண்மையிலேயே இரண்டு கயிறுகள்தானா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரண்டு கயிறுகளையும் நீங்கள் (எடுத்துப்) பார்த்திருந்தால் உண்மையிலேயே நீங்கள் பிடரி அகலமானவர் (அறிவு குறைந்தவர்)தான் என்று கூறிவிட்டுப் பிறகு, “(அதன் பொருள்) அதுவன்று; மாறாக, அது இரவின் கருமையும், பகலின் வெண்மையுமாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

38

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஆரம்பத்தில்) “வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” எனும் (2:187ஆவது வசனத்தின்) தொடர் “விடியóன்' (“மினல் ஃபஜ்ர்') எனும் சொல் நீங்கலாக அருளப்பட்டது. அப்போது மக்கள் சிலர் நோன்பு நோற்க நாடினால், தங்கள் இரு கால்களிலும் (ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும் (மற்றொன்றில்) கறுப்புக் கயிற்றையும் கட்டிக்கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை உண்டுகொண்டிருப்பார்கள். ஆகவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், “மினல் ஃபஜ்ர்' (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போது அவர்கள், அதிகாலையையும் இரவையும்தான் இது குறிக்கிறது என்று அறிந்துகொண்டார்கள்.48 அத்தியாயம் :

39

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாயில் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாயில் வழியே நுழைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ், “நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின்வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தான் புண்ணிய வான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன்வாயில்கள் வழியே நுழையுங்கள்” எனும் (2:189ஆவது) வசனத்தை அருளினான்.49 அத்தியாயம் :

40

41

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள். உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள் எனும் (2:195ஆவது) இறைவசனம் (இறைவழியில்) செலவிடுவதைக் (கைவிடுவது) குறித்து அருளப்பட்டது.51 அத்தியாயம் :

42

அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இந்தப் பள்ளிவாசலில் - அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் - கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், “உமக்கு இந்த அளவுக்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை” என்று கூறிவிட்டு, “உம்மிடம் ஆடு ஏதேனும் உண்டா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்று நாட்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை “ஸாஉ' உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, இந்த (2:196ஆவது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும்” என்று சொன்னார்கள்.52 அத்தியாயம் :

43

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: “தமத்துஉ' (ஹஜ் தொடர்பான இந்த 2:196ஆவது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. ஆகவே, நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடை செய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்பெறவில்லை. நபி (ஸல்) அவர்களும் தாம் இறக்கும்வரை அதைத் தடை செய்யவில்லை. (ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் கருத்)தைத் தமது (சொந்த) அபிப்பிராயப்படி தெரிவித்தார். முஹம்மத் (பின் இஸ்மாயீல் அல்புகாரீ) கூறுகிறேன்: “அவர் உமர் (ரலி) அவர்கள்தான்” என்று சொல்லப்படு கின்றது.54 அத்தியாயம் :

44

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உகாழ், மஜன்னா, மற்றும் ஃதுல் மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்துச் சந்தைகளாக இருந்தன. (இஸ்லாம் வந்த பிறகு) மக்கள் ஹஜ்ஜுப் பருவத்தில் (அங்கு) வியாபாரம் செய்வதைப் பாவச்செயலாகக் கருதினர். ஆகவே, ஹஜ் பருவத்தில், “உங்கள் இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்கள்மீது குற்றமாகாது” எனும் (2:198 ஆவது) வசனத் தொடர் அருளப்பட்டது.55 அத்தியாயம் :

45

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்.) அவர்கள் “கடினமான (சமயப் பற்றுடைய)வர்கள்' எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற அரபியர் அனைவருமே அரஃபாத் தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, (ஃதுல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான், “மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்” எனும் (2:199ஆவது) இறைவசனமாகும்.56 அத்தியாயம் :

46

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்காவிலேயே தங்கியிருப்பவர், அல்லது “தமத்துஉ' ஹஜ் செய்கின்ற எண்ணத்தில் உம்ராவை முடித்து அதற்கான இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் இருப்பவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கூடுதலாக) இறையில்லம் கஅபாவை அவர் தவாஃப் செய்யலாம் (சுற்றி வரலாம்.) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி (ஹஜ் கிரியைகளை நிறைவேற்றி) அரஃபா பயணமாகிவிட்டால் அவர் தம்மால் இயன்ற குர்பானியைக் கொடுக்க வேண்டும். அது ஒட்டகம், அல்லது மாடு, அல்லது ஆடு இவற்றில் அவர் விரும்பும் எதுவாகவும் இருக்கலாம். குர்பானி பிராணி கிடைக்கவில்லையென்றால் ஹஜ் நாட்களில் அரஃபா நாளுக்கு முன்பாக மூன்று நோன்புகள் நோற்க வேண்டும். (மூன்று நோன்புகளில்) கடைசி நோன்பு அரஃபா நாளில் வந்துவிட்டாலும் பரவாயில்லை. பிறகு மக்காவிலிருந்து புறப்பட்டு அரஃபாத்திற்கு அவர் செல்லட்டும். அங்கு அஸ்ர் தொழுகையிலிருந்து இரவின் இருள் படரும்வரை தங்கியிருக்கட்டும். பிறகு அரஃபாத்திலிருந்து மற்ற மக்களெல்லாரும் புறப்பட்டு திரும்பிச் செல்லும்போது அவரும் திரும்பிச் செல்லட்டும். பிறகு மக்கள் அனைவருடனும் சேர்ந்து இரவை முஸ்தóஃபாவில் கழிக்கட்டும். பிறகு அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரட்டும்! (அவர் மட்டுமன்றி) நீங்கள் (அனைவரும்) விடியும்வரை அதிகமாக அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும், லா இலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்றும் கூறி இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். பிறகு அங்கிருந்து திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், மக்களும் அங்கிருந்துதான் திரும்பிக்கொண்டிருந்தனர். உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வந்து, அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (2:199) (அதாவது,) நீங்கள் (ஷைத்தானுக்குக்) கல்லெறிந்தபிறகு (திரும்பிச் செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.) அத்தியாயம் :

47

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! எங்கள் இறைவா! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக?” எனப் பிரார்த்தித்துவந்தார்கள். அத்தியாயம் :

48

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: “அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் (எதற்கெடுத் தாலும்) கடுமையாகச் சண்டைபிடிப்ப வனேயாவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.57 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

49

50

51

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியிடம் பின்புறத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, “உங்கள் பெண்கள் உங்களுக்குரிய “விளைநிலம்' ஆவர். ஆகவே, உங்கள் விளைநிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்” எனும் (2:223ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.62 அத்தியாயம் :

52

மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்குச் சகோதரி ஒருவர் இருந்தார். என்னிடம் அவரைப் பெண்கேட்டு வந்தனர். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மஅகில் பின் யசார் (ரலி) அவர்களின் சகோதரியை அவருடைய கணவர் மணவிலக்குச் செய்து “இத்தா' காலம் கழியும்வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே) விட்டுவிட்டார். பிறகு, மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்பமிருந்தும்) மஅகில் (ரலி) அவர்கள் (அவரை மீண்டும் (அவருடைய கணவருக்கே) மணமுடித்துக் கொடுக்க) மறுத்துவிட்டார்கள். அப்போதுதான், “அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்துகொள்வதை நீங்கள் தடுக்க வேண்டாம்” எனும் (2:232ஆவது) வசனம் அருளப்பெற்றது.63 அத்தியாயம் :

53

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தறுவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்கட்டும்! ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் வல்லமை மிக்கவனும் விவேகமிக்கவனும் ஆவான்” எனும் (2:240ஆவது இறைவசனம் குறித்து இந்த) இறைவசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (2:234) மாற்றிவிட்டதே! இதை “ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?' அல்லது “இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவைக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.64 அத்தியாயம் :

54

அப்துல்லாஹ் பின் அபீநஜீஹ் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களுடைய மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள்” (எனும் 2:234ஆவது வசனத்தின் விளக்கத்தில்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (கணவன் இறந்துபோன) அந்தப்பெண் (நான்கு மாதம், பத்து நாட்கள் காத்திருத்தல் எனும்) இந்த “இத்தா'வைத் தம் கணவனு டைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தறுவாயில்இரு)ப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் தெரிவிப்பார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் கிடையாது.” எனும் (2:240 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம், பத்து நாட்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம், இருபது நாட்களை(க் கணவனின்) இறுதி விருப்ப(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப)மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாட்களில்) தம் கணவனின் இறுதி விருப்பப்படி (கணவனின் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் (நான்கு மாதம் பத்து நாட்களுக்குப்பின்) வெளியேறிக்கொள்ளலாம். இதைத்தான், “வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம்வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் தெரிவிப்பார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் கிடையாது” என்று இவ்வசனம் (2:240) குறிப்பிடுகின்றது. ஆக, (நான்கு மாதம் பத்து நாட்கள் எனும்) “இத்தா' கால வரம்பு கணவனை இழந்த கைம்பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும்.65 (ஆகவே, 2:234ஆவது வசனம், 2:240ஆவது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இந்த வசனம் (2:240), அவள் தன்னுடைய கணவனது வீட்டில்தான் “இத்தா' இருக்க வேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் “இத்தா' இருப்பாள். இதையே, “(தானாக விரும்பி வெளியேறினால் தவிர, கட்டாயப்படுத்தி) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம்வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதி விருப்பம் தெரிவிப்பார்களாக” எனும் இந்த இறை வசனத்தொடர் குறிக்கின்றது என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்தைச் சற்றுத் தெளிவுபடுத்தும் விதத்தில்) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் “இத்தா' இருப்பாள். தனக்காகத் தெரிவிக்கப்பட்ட இறுதி விருப்பத்தில் கண்டுள்ளபடி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெளியேறி (வேறு எங்கேனும் தங்கி)க்கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஆயினும் அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. தொடர்ந்து அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12ஆவது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்து தர கணவன் இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்ற முறை)யை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் “இத்தா' இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.66 இதையே முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் ஓர் அறிவிப்பாளர்தொடர் வழியாக இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர் களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடமிருந்து அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்த மேற்சொன்ன கருத்தைப் போலவே அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

55

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் முக்கியமானவர்கள் பலர் அமர்ந்திருந்த அவையொன்றில் நான் அமர்ந்தேன். அவர்களிடையே அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது நான், சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் (ரலி) தொடர்பான அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களின் ஹதீஸை எடுத்துரைத்தேன்.67 அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் உத்பாவின் தந்தையுடைய சகோதரர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்கள்) இதை ஏற்றுக்கொண்டதில்லையே” என்று சொன்னார். உடனே நான் உரத்த குரலில், “கூஃபா நகரத்திற்கு அருகிலுள்ள (அப்துல்லாஹ் பின் உத்பா என்ற) மனிதரின் தவற்றை நான் வெளிப்படுத்துகிறேன் என்றால் நான் மிகக் துணிச்சலுடையவன்தான்” என்று சொன்னேன்.68 பிறகு நான் (அந்த அவையிலிருந்து) வெளியேறிவிட்டேன். (செல்லும் வழியில்) “மாலிக் பின் ஆமிர்' அல்லது “மாóக் பின் அவ்ஃப்' (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். (அவரிடம்) நான், “தான் கர்ப்பிணியாயிருக்க, தன்னைவிட்டு (கணவன்) இறந்துவிட்ட பெண் விஷயத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “(கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியான) அவளுக்குச் சலுகை அளிக்காமல் கடும் சிரமத்தை (மட்டும்) அளிக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். (இந்நிலையில்தான்) பெண்கள் தொடர்பான (சட்டங்கள் இடம்பெற்றுள்ள “அல்பகரா' எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பிறகு (“அத்தலாக்' எனும்) சிறிய அத்தியாயம் அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.69 மற்றோர் அறிவிப்பில் முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள், “(வழியில்) நான் அபூஅதிய்யா மாலிக் பின் ஆமிர் அவர்களைச் சந்தித்தேன்” என்று (சந்தேக மின்றி ஒருவர் பெயரை மட்டும்) கூறியதாக வந்துள்ளது. அத்தியாயம் :

56

அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அகழ்ப் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “நம்மை நடுத்தொழுகையைத் தொழ விடாமல் சூரியன் மறையும்வரை எதிரிகள் தடுத்துவிட்டார்கள். அவர்களின் புதைகுழிகளையும் “வீடுகளையும்' அல்லது அவர்களின் “வயிறுகளையும்' அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!” என்று சொன்னார்கள்.70 அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்களே சந்தேகத் துடன் “அல்லது அவர்களுடைய வயிறு களையும்” என்று சொன்னார்கள்.71 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களின் வழியாக வந்துள்ளது. அத்தியாயம் :

57

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள்” எனும் (2:238ஆவது) வசனம் அருளப்பெறும்வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் அருளப்பெற்றவுடன் பேசாமலிருக்கும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது.72 அத்தியாயம் :

58

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் அச்ச நேரத் தொழுகை குறித்து கேட்கப்பட்டால் (இப்படிக்) கூறுவார்கள்: (முதலில்) இமாமும் மக்களில் ஒரு பிரிவினரும் (ஓர் இடத்திற்கு) முன்னேறிச் செல்வார்கள். மக்களுக்கு இமாம் ஒரு ரக்அத் தொழுவிப்பார். மக்களில் மற்றொரு பிரிவினர் தொழாமல் மக்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் (பாதுகாப்பு அரணாக) இருப்பார்கள். இமாமுடன் இருப்பவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடித்துவிட்டால், சலாம் கொடுக்காமலேயே இதுவரை தொழாதவர்களின் இடத்திற்குச் சென்றுவிடுவர். இப்போது இதுவரை தொழாதவர்கள், முன்சென்று இமாமுடன் ஒரு ரக்அத்தைத் தொழுதுகொள்வர். பிறகு, இமாம் இரண்டு ரக்அத்களைத் தொழுது முடித்த நிலையில் திரும்பிச் சென்றுவிட, அதன் பிறகு இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் நின்று தனித்தனியாக ஒரு ரக்அத் தொழுவார்கள். இப்படியாக, இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் இரு ரக்அத்களைத் தொழுதுவிட்டிருப்பார்கள். இதைவிடக் கடுமையான அச்ச நிலை ஏற்பட்டால் அவர்கள் நடந்தவர்களாகவோ, தம் கால்களால் நின்ற நிலையிலோ, வாகனத்தில் பயணம் செய்தவர்களாகவோ கிப்லா திசையை முன்னோக்கியபடி, அல்லது முன்னோக்காமல் தொழலாம். இதன் அறிவிப்பாளரான மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டே இதை அறிவித்திருப்பதாக நான் கருதுகிறேன் என்று நாஃபிஉ (ரஹ்) கூறினார்கள்.74 அத்தியாயம் :

59

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிóருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பார்களாக!” எனும் இந்த (2:240ஆவது) இறைவசனத்(தின் சட்டத்)தை மற்றோர் (2:234ஆவது) இறைவசனம் மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?” என்று கேட்டேன். உஸ்மான் (ரலி) அவர்கள், இதை (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டு விடுவீராக! என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.75 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லது அதைப் போன்று' என இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :

60

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறந்துபோனவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர் களைவிடவும் நாமே சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.) ஏனெனில், “என் இறைவா! மரித்தவர் களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!” என்று அன்னார் கேட்டார்கள். இறைவன்,”நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “அவ்வாறன்று (நம்பியிருக்கிறேன்)! ஆயினும், என் உள்ளம் நிம்மதியடைவதற் காகவே கேட்கிறேன்” என்று பதிலளித் தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.76 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

61

(அப்துல் அஸீஸ் பின் அப்தில் மலிக்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும், அவர்களுடைய சகோதரர் அபூபக்ர் பின் அபீமுளைக்கா அவர்கள், உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்தும் (கேட்டு) அறிவித் தார்கள்: உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் நபித் தோழர்களிடம், “நீரருவிகள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்ற திராட்சை மற்றும் பேரீச்சந்தோட்டம் ஒருவருக்கு இருந்து...” (என்று தொடங்கும்) இந்த (2:266ஆவது) வசனம் எது தொடர்பாக அருளப்பெற்றது என நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேட்க, அவர்கள், “அல்லாஹ்வே அறிந்தவன்” என்று பதிலளித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் கோப மடைந்து, “எங்களுக்குத் தெரியும்; அல்லது தெரியாது என்று (இரண்டில் ஒன்றைத் தெளிவாகச்) சொல்லுங்கள்” என்று கேட்க, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அதைப் பற்றி என் உள்ளத்தில் ஒரு கருத்து உள்ளது, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “என் சகோதரர் மகனே! சொல்லுங்கள்; உங்களை நீங்களே அற்பமாகக் கருதிக்கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது, ஒரு செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “என்ன செயல்?” என்று கேட்க, இப்னு அப்பாஸ், “ஒரு செயலுக்கு” என்று (மீண்டும்) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “செல்வந்தனாகிய ஒரு மனிதன் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நற்செயல் புரிந்துவந்தான். பிறகு அல்லாஹ் அவனிடம் ஷைத்தானை அனுப்ப, (அவனுடைய தூண்டுதலால்) அந்த மனிதன் பாவங்கள் புரிய, அது அவனுடைய (முந்தைய நற்)செயல்களை மூழ்கடித்துவிட்டது; (அதைத்தான் இங்கு இறைவன் இப்படி உவமித்துக் கூறுகிறான்)” என்று சொன்னார்கள்.77 அத்தியாயம் :

62

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம்பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்துகொள்வான். நீங்கள் விரும்பினால், “அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்” எனும் (இந்த 2:273ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

63

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) வட்டி தொடர்பாக அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அவற்றை (பள்ளிவாசலில் வைத்து) ஓதிக்காட்டினார்கள். பிறகு, மது வியாபாரத் தைத் தடை செய்தார்கள்.78 அத்தியாயம் :

64

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: “அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று அவற்றைப் பள்ளிவாசலில் (மக்களுக்கு) ஓதிக்காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். அத்தியாயம் :

65

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்ற போது அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்து (மக்களுக்கு) ஓதிக்காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :

66

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று அவற்றை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.80 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

67

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 2:281ஆவது) வசனம் ஆகும்.81 அத்தியாயம் :

68

மர்வான் அல்அஸ்ஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் - அவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தான் - “உங்கள் மனத்திலுள்ள வற்றை நீங்கள் வெளியிட்டாலும், அல்லது அவற்றை மறைத்துக்கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களி டம் விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான்” எனும் இந்த (2:284ஆவது) இறைவசன(த்தின் சட்ட)ம் மாற்றப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.82 அத்தியாயம் :

69

மர்வான் அல்அஸ்ஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவர் -அவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தான் என்று எண்ணுகிறேன்- “உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அல்லது அவற்றை மறைத்துக்கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான்” எனும் இந்த (2:284ஆவது) இறைவசனத்(தின் சட்டத்)தை இதற்குப் பின்னுள்ள (“அல்லாஹ், எந்த ஆன்மாவுக்கும் அதன் சக்திக்கு மீறிய பொறுப்புகளைச் சுமத்துவதில்லை” எனும் 2:286ஆவது) இறைவசனம் மாற்றிவிட்டது” என்று கூறினார்கள்.83 அத்தியாயம் :

70

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உமக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறுசில (முத்தஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் “கோணல்' உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி வேறெவரும் அறியார். அறிவில் முதிர்ந்தவர்களோ, “இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன' என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை” எனும் (3:7ஆவது) வசனத்தை ஓதிவிட்டு, “பல பொருள்களுக்கு இடமளிக்கின்ற வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள்தான் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்துகொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என்று சொன்னார்கள்.5 அத்தியாயம் :

71

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால், “இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிட மிருந்து காக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்)” எனும் (3:36ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.7 அத்தியாயம் :

72

அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக)ப் பறித்துக்கொள்வதற்காக ஒரு பிரமாண (வாக்குமூல)த்தின்போது துணிந்து பொய்ச் சத்தியம் செய்பவர், தம்மீது கோபம்கொண்டிருக்கும் நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், “அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதி நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். இன்னும் அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு” எனும் (3:77ஆவது) வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்பால், அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் (எங்களிடம்) வந்து, “அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்கிறார்?” என்று கேட்க, நாங்கள், “இப்படி இப்படிச் சொன்னார்கள்” என்று பதிலளித்தோம். (அதற்கு) அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவர் சொன்னது உண்மைதான்.) என் தொடர்பாகத்தான் அந்த (3:77ஆவது) வசனம் அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனது கிணறு (ஒன்று) இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக எனக்கும் யூதர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்கள் வழக்கைக் கொண்டுசென்றோம். நபி (ஸல்) அவர்கள், “ஒன்று உன் சாட்சி; அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் (இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படுகிறது.)” என்று சொன்னார்கள். உடனே நான், “அப்படியென்றால், (யூதரான) இவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எவர் ஒரு பிரமாண (வாக்குமூல)த்தின்போது, அதன் மூலம் ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாக)ப் பறித்துக்கொள்வதற்காகத் திட்டமிட்டுப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்” என்று சொன்னார்கள்.8 அத்தியாயம் :

73

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடைவீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தாம் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்தபோது) கொடுக்காத (விலை) ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்தார். (வாங்க வந்த) முஸ்óம்களில் ஒருவரைக் கவர்(ந்து அவரிடம் தமது பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார். அப்போது “அல்லாஹ்வின்உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக் கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறு மில்லை” எனும் (3:77ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.9 அத்தியாயம் :

74

இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இரு பெண்கள் “ஒரு வீட்டில்' அல்லது “ஓர் அறையில்' (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருவரின் மீது குற்றம் சாட்டினார். இந்த வழக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டுசெல்லப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத்) தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாகப் பலிகொள்ளப்பட்டுப்) போய்விடும்' என்று சொன்னார்கள்” எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருவருக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவருக்கு, “அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை” எனும் (3:77ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவருக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி னார்கள். அவரும் தம் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக்கொண்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், “பிரதிவாதி (தமது குற்றத்தை மறுத்தால்) சத்தியம் செய்ய வேண்டும்' என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :

75

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் தம் வாய்ப்பட எனக்கு அறிவித்ததாவது: (குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையிலான (ஹுதைபியா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வணிகக் குழுவினருடன் ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் (சிரியா) நாட்டில் இருந்துகொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களிடமிருந்து (கிழக்கு ரோமானியப் பேரரசர் சீசர்) ஹிரக்ளீயஸிற்குக் கடிதமொன்று கொண்டுவரப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து “திஹ்யா அல்கல்பீ' அவர்கள் கொண்டுவந்து, “புஸ்ரா'வின் அரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹிரக்ளீயஸிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அப்போது ஹிரக்ளீயஸ் (தம்மைச் சூழ அமர்ந்திருந்த பிரதிநிதிகளிடம்) “தம்மை இறைவனின் தூதரெனக் கூறிக்கொண்டிருக்கும் இந்த மனிதரின் (முஹம்மதின்) சமுதாயத்தைச் சேர்ந்த எவரேனும் இங்கு (நம் நாட்டில்) இருக்கின்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம்' என்று பதிலளித் தார்கள். அப்போது (ஷாமில் வியாபாரத் திற்காகத் தங்கியிருந்த) நான் குறைஷியர் சிலருடன் அழைக்கப்பட்டேன். ஆகவே, நாங்கள் ஹிரக்ளீயஸிடம் சென்றோம். அவர் முன்னிலையில் (அரசவையில்) எங்களை அமரச் செய்தார்கள். அப்போது ஹிரக்ளீயஸ், “தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொல்óக்கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?” என்று கேட்டார். அதற்கு நான், “நான்(தான் நெருங்கிய உறவினன்)” என்று சென்னேன். ஆகவே, அவரது முன்னிலையில் என்னை அமரவைத்தனர். என் சகாக்களை எனக்குப் பின்னால் அமரவைத்தனர். பிறகு ஹிரக்ளீயஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்து (அவரிடம்), “தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மனிதரைப் பற்றி இவரிடம் கேட்கப்போகிறேன்; இவர் என்னிடம் பொய் சொன்னால் (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல்” என்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் பொய் சொன்னால் அதை என் சகாக்கள் தெரிவித்துவிடுவார்கள் என்பது (குறித்த அச்சம்) மட்டும் இல்லாதிருந்தால் (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நான் பொய்(யான விவரங்களைச்) சொல்லியிருப்பேன். பிறகு, ஹிரக்ளீயஸ் தம் மொழிபெயர்ப் பாளரிடம், “உங்களிடையே அந்த மனிதரின் குடும்பப் பாரம்பரியம் எப்படிப் பட்டது? என்று இவரிடம் கேள்” என்று சென்னார். நான், “அவர் எங்களிடையே சிறந்த குடும்பப் பாரம்பரியத்தை உடைய வராவார்” என்று பதிலளித்தேன். ஹிரக்ளீயஸ், “அவருடைய முன்னோர்களில் அரசர் எவராவது இருந்திருக்கி றாரா?” என்று கேட்டார். நான் “இல்லை' என்று சொன்னேன். ஹிரக்ளீயஸ், “அவர் தம்மை “நபி' என வாதிப்பதற்குமுன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதாவது) நீங்கள் சந்தேகம் கொண்டீர்களா?” என்று கேட்டார். நான், “இல்லை” என்று சொன்னேன். “அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?” என்று கேட்டார். நான், “இல்லை; பலவீனமானவர்கள்தான் அவரைப் பின்பற்றுகின்றனர்” என்றேன். அவர், “அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனரா? அல்லது குறைந்துகொண்டே போகின்றனரா?” என்று கேட்டார். நான், “இல்லை; அவர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்” என்று சொன்னேன். அவர், “அவரது மார்க்கத்தில் இணைந்தபிறகு தம் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் தமது பழைய மதத்திற்கே திரும்பிச் செல்வதுண்டா?” என்று கேட்டார். நான், “இல்லை' என்று சொன்னேன். அவர், “அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?” என்று கேட்டார். நான், “உண்டு' என்று சொன்னேன். அவர், “அவ்வாறாயின், அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எவ்வாறு இருந்தன?” என்று கேட்டார். நான், எங்களிடையேயான போர்கள் (கிணற்று) வாளிகள்தான். (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒருமுறை) அவர் எங்களை வெற்றி கொள்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெற்றி கொள்வோம்” என்று சொன்னேன். அவர், “அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா?” என்று கேட்டார். நான், “இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இருக் கின்றோம். இதில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பது எங்களுக்குத் தெரியாது” என்று சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்குவாய்ப்புக் கிடைக்கவில்லை. (பிறகு) அவர், “இவருக்கு முன்னால் (குறைஷியரில்) வேறு எவரேனும் இப்படி (தம்மை “நபி' என) வாதித்ததுண்டா?” என்று கேட்டார். நான், “இல்லை” என்று சொன்னேன். பிறகு ஹிரக்ளீயஸ் தம் மொழி பெயர்ப்பாளரிடம் (இவ்வாறு) கூறினார்: “அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம் உங்களிடையே அவருடைய குடும்பப் பாரம்பரியம் குறித்துக் கேட்டேன். அவர் சிறந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே இறைத் தூதர்கள் சிறந்த பாரம்பரியத்திóருந்தே தேர்ந்தெடுக்கப்படுவர். நான் உம்மிடம் அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கு நீர் “இல்லை' என்றீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருப்பாராயின், “தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும் அடைய) விரும்பும் ஒரு மனிதர் இவர்' என்று நான் கூறியிருப்பேன். “மக்களில் அவரைப் பின்பற்றுபவர்கள் மேட்டுக்குடியினரா? அல்லது பலவீனமானவர்களா?” என்று அவரைப் பின்பற்றுபவர்களைக் குறித்துக் கேட்டேன். அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர். நான் உம்மிடம், “அவர் தம்மை “நபி' என வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நீர் “இல்லை' என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)ôத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன். உம்மிடம் நான் “அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோரில் எவராவது தமது (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்திகொண்டு அதிóருந்து வெளியேறிச் செல்வதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு “இல்லை' என்றீர். இறைநம்பிக்கை இத்தகையதே! உள்ளத்தின் எழிலோடு அது கலந்து விடும்போது (அதைக் குறித்து யாரும் வெறுப்படையமாட்டார்.) உம்மிடம் நான் “அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்துவருகின்றனரா? அல்லது குறைந்துவருகின்றனரா?” என்று கேட்டேன், நீர் “அதிகரித்தே வருகின்றனர்' என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை அத்தகையதுதான். அது முழுமையடையும்வரை (அதிகரித்துக்கொண்டே செல்லும்). மேலும் உம்மிடம் நான், “அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நீங்கள் போர் புரிந்தீர்கள் என்றும், உங்களுக்கும் அவருக்கும் இடையே போர் கிணற்று வாளிகள்தான் (போரில் வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் மாறி மாறிவருகின்றன) என்றும், (ஒருமுறை) அவர் உங்களை வெற்றிகொண்டால் (மறுமுறை) நீங்கள் அவரை வெற்றிகொள்கிறீர்கள் என்றும் பதிலளித்தீர். இறைத்தூதர்கள் அப்படித்தான் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும். “அவர் வாக்கு மீறுகின்றாரா?” என்று உம்மை நான் கேட்டதற்கு நீர், “அவர் வாக்கு மீறுவதில்லை' என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையவர்களே; அவர்கள் வாக்கு மீறுவதில்லை. நான், “இவருக்குமுன் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன்வைத்த துண்டா?” என்று உம்மிடம் கேட்டபோது நீர் “இல்லை' என்று பதிலளித்தீர். அவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன்வைத்திருந்ததாக (நீர் கூறி) இருப்பின், “தமக்கு முன்னர் (சிலரால்) முன்வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் செல்கின்ற ஒரு மனிதர் இவர்' என நான் சொல்லியிருப்பேன்” என்று சொன்னார். பிறகு ஹிரக்ளீயஸ், “அவர் என்ன செய்யும்படி உங்களுக்குக் கட்டளையிடு கின்றார்?” என்று கேட்டார். நான், “தொழுகையை நிறைவேற்றும்படியும், தர்மம் செய்யும்படியும், உறவைக் காத்து வரும்படியும், ஒழுக்கமாக வாழும்படியும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகின்றார்” என்று சொன்னேன். ஹிரக்ளீயஸ், “அவரைக் குறித்து நீர் சொன்னவை அனைத்தும் உண்மை யானால், அவர் இறைத்தூதர்தான். அவர் வரப்போகிறார் என்று நான் அறிந்துவைத்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷியராகிய) உங்களிலிருந்து வருவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க நான் விரும்புவேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன். அவரது ஆட்சி (ஒரு காலத்தில்) என் இரு பாதங்களுக்குக் கீழுள்ள (இந்த) இடத்தையும் எட்டியே தீரும்” என்று சொன்னார். பிறகு ஹிரக்ளீயஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கடிதத்தைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டுவரப்பட்டது.) அதை அவர் வாசிக்கச் செய்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால்... இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து கிழக்கு ரோமாபுரியின் அதிபர் ஹிரக்ளீயஸுக்கு (எழுதப்பட்ட கடிதம்:) நல்வழியைப் பின்பற்றியவர்மீது (இறைவனின்) சாந்தி நிலவட்டும். இஸ்லாத்தை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால், ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்க ளுக்குச் சேர வேண்டிய நன்மையை இரு மடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (குடிமக்களான) விவசாயி களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல்போவதன் குற்றமும்) உங்களையே சாரும். வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அது யாதெனில்:) “அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதையும் நாம் இணை வைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளலாகாது'. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால், “நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிகின்ற) முஸ்óம்கள்தான் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள்' என்று கூறிவிடுங்கள். ஹிரக்ளீயஸ் அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தபோது, அவருக்கு அருகிலேயே (அவரைச் சுற்றிலுமிருந்த கிழக்கு ரோமானிய ஆட்சியாளர்களின்) குரல்கள் உயர்ந்தன. கூச்சல் அதிகரித்தது. எங்களை வெளியே கொண்டுசெல்லும்படி உத்தரவிடப்பட்டது. உடனே நாங்கள் (அரசவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம். நாங்கள் வெளியே வந்தபோது, நான் என் சகாக்களிடம், “இப்னு அபீகப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் (கிழக்கு ரோமரின்) மன்னரே அவருக்கு அஞ்சுகிறாரே!” என்று சொன்னேன். (அன்று முதல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதி கொண்டவனாகவே நான் இருந்துவந்தேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (தமது அறிவிப்பில்) கூறியிருப்பதாவது: “பிறகு ஹிரக்ளீயஸ் கிழக்கு ரோமானிய ஆட்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்களைத் தமது மாளிகை ஒன்றில் ஒன்றுகூட்டி அவர்களிடையே, “அந்திமக் காலத்தில் உங்களுக்கு வெற்றியும் நல்வழியும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையும், உங்களது ஆட்சி உங்களிடமே நீடிக்க வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு உண்டா? (அப்படியானால் இந்த இறுதித் தூதரை நம்புங்கள்)” என்று பேசினார். இதைக் கேட்டவுடனேயே காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவதுபோல வாயில்களை நோக்கி அவர்கள் வெருண் டோடி, வாயில் அருகில் சென்றதும், அவை தாளிடப்பட்டிருக்கக் கண்டனர். அப்போது மன்னர் ஹிரக்ளீயஸ், “அவர்களை என்னிடம் திருப்பிக் கொண்டுவாருங்கள்” என அவர்களுக்கு அழைப்புவிடுத்தார். (அவ்வாறே அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம்) “நீங்கள் உங்கள் மதத்தின் மீது எவ்வளவு பிடிப்புக் கொண்டுள்ளீர்கள் என்பதை நான் சோதிக்கவே இவ்வாறு செய்தேன். நான் விரும்பியதை இப்போது ஐயமற அறிந்துகொண்டேன்” என்று அவர் கூறியதும், அனைவரும் அவருக்குச் சிரம்பணிந்தனர். அவரைக் குறித்துத் திருப்தியும் அடைந்தனர்.10 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

76

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனா (முஸ்லிம்களான) அன்சாரிகளி லேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் அதிகமான பேரீச்சந் தோட்டங்கள் உடையவராய் இருந்தார்கள். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலுக்கு எதிரேயிருந்த “பீருஹா' (அல்லது “பைருஹா') எனும் தோட்டம் தம் சொத்துகளிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்தத் தோட்டத்திற் குச் சென்று அதிலுள்ள நல்ல (சுவையான) நீரைப் பருகும் வழக்கமுடையவராய் இருந்தார்கள். “நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடைய மாட்டீர்கள்” எனும் (3:92ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! “நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்' என அல்லாஹ் கூறுகின்றான். என் சொத்துகளில் எனக்கு மிகவும் விருப்பமானது “பீருஹா' (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனிமேல்,) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். இதற்கான நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இது இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நல்லது. அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!” என்று சொல்லிவிட்டு, நீர் கூறியதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அ(ந்தத் தோட்டத்)தை உம்முடைய நெருங்கிய உறவினர்களிடையே (தர்மமாக) வழங்குவதையே நான் (பெரிதும்) விரும்புகிறேன்” என்றார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், “அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் யூசுஃப், ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், (“அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!' என்பதற்குப் பதிலாக) “அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம் தானே' என்று (நபிகளார் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.11 யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் மாலிக் (ரஹ்) அவர்களிடம், “அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே' என்று வாசித்துக்காட்டினேன். (அவர்கள் அதை மறுக்கவில்லை.) அத்தியாயம் :

77

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆகவே, அந்த (பைருஹா)த் தோட்டத்தை ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கும் உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் (அபூதல்ஹா (ரலி) அவர்கள் தர்மமாக) வழங்கிவிட்டார்கள். ஆனால், நான்தான் (அவ்விருவரையும்விட) அவருக்கு நெருங்கிய உறவினராய் இருந்தேன். அதிலிருந்து எனக்கு அவர் சிறிதும் கொடுக்கவில்லை.12 அத்தியாயம் :

78

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரில் விபசாரம் புரிந்துவிட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்துவந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள், “நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரி பூசி அவர்களை அடிப்போம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) “ரஜ்ம்' (சாகும்வரை கல்லால் அடிக்கும் மரண) தண்டனையை நீங்கள் காணவில்லையா?” என்று கேட்க, யூதர்கள், “(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை” என்று பதிலளித்தனர். உடனே (யூத மார்க்க அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், யூதர்களிடம், “பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டுவந்து ஓதிக்காட்டுங்கள்” என்று சொன்னார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது.) அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேத ஓதுநர் “கல்லெறி தண்டனை' தொடர்பான வசனத்தின் மீது தமது கையை வைத்து (மறைத்துக்கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) கல்லெறி தண்டனை பற்றிய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அந்த ஓதுநரின் கையை அந்த வசனத்தைவிட்டு இழுத்துவிட்டு, “இது என்ன?” என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, “இது கல்லெறி தண்டனை பற்றிய வசனம்” என்று சொன்னார்கள். ஆகவே, (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் (கல்லெறி)தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே, அவ்விரு வருக்கும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசóல் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக் காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே கல்லெறி தண்டனை தரப்பட்டது. அந்தப் பெண்ணின் அந்த நண்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவள்மீது கவிழ்ந்துகொள்வதை நான் பார்த்தேன்.13 அத்தியாயம் :

79

அபூஹாஸிம் சுலைமான் அல்அஷ்ஜஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கென்று தோற்றுவிக்கப் பெற்ற சமூகத்தாரில் மிகச் சிறந்தவர்களாவீர்” எனும் (3:110ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில், “நீங்கள் மக்களில் சிலரை (போர்க் கைதிகளாகச் சிறைபிடித்து) அவர்களின் கழுத்தைச் சங்கிலிகளில் பிணைத்துக் கொண்டுவருகிறீர்கள். (இந்நிலையிலும் மனம் திருந்தி) முடிவாக அவர்கள் இஸ்லாத்தில் இணைகின்றனர். (இவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும் நீங்களே) மக்களிலேயே சிறந்தவர் களாவீர்கள்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.14 அத்தியாயம் :

80

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “உங்களில் இரு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியமிழக்கத் தொடங்கிய நேரத்தையும் (நபியே! நீர் நினைவு கூர்க!)” எனும் (3:122ஆவது) இறைவசனம் (அன்சாரிகளாகிய) எங்கள் தொடர்பாகவே அருளப்பெற்றது. பனூ ஹாரிஸா மற்றும் பனூ சலிமா குலத்தாரான நாங்கள்தான் அந்த இரு பிரிவினர். இந்த இறைவசனம் (எங்கள் கோழைத்தனத்தை எடுத்துரைத்தாலும் அது) அருளப்பெறாமல் இருந்திருக்கக் கூடாதா என்று நாங்கள் விரும்பமாட்டோம். ஏனெனில், “அல்லாஹ் அவ்விரு பிரிவினருக்கும் பாதுகாவலனாக இருந்தான்” என்று (அதில்) அல்லாஹ் கூறியிருக்கின்றான். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை அறிவிக்கும்போது, “இது அருளப்பெறாமல் இருந்திருந்தால் அது எனக்கு மகிழ்வைத் தந்திராது” என்று சொன்னார்கள்.15 அத்தியாயம் :

81

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (உஹுத் போரில் பலத்த காயமுற்ற பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போது, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்த்' (அல்லாஹ், தன்னைப் புகழ்வோரின் புகழுரையைச் செவிமடுக்கின்றான்; எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்.) என்று சொன்ன பின்பு, “இறைவா! இன்னார், இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று (சில எதிரிகளுக்கெதிராகப்) பிரார்த்திப்பதை நான் கேட்டிருக்கிறேன். அப்போது அல்லாஹ், “அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அநீதியாளர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உமக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3:128 ஆவது) வசனத்தை அருளினான்.16 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

82

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூஉவுக்குப் பிறகு “குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த்' என்று சொன்ன பின்பு, “இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா பின் ஹிஷாம் மற்றும் அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக!17 இறைவா! முளர் குலத்தாரின்மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களின் சமுதாயத் தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.18 அதைச் சப்தமாகச் சொல்வார்கள். தமது ஃபஜ்ர் தொழுகைகள் சிலவற்றில், “இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக” என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த் திப்பார்கள். அல்லாஹ், “அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உமக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3:128ஆவது) வசனத்தை அருளும்வரை இப்படிப் பிரார்த்தித்துவந்தார்கள்.19 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

83

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரின் போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களைக் காலாட்படையினருக்கு(த் தளபதியாக) நியமித்தார்கள். அப்படையினர் தோற்று ஓடினர். (அப்போது நடந்த) அந்தச் சம்பவத்தைத்தான், “இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக்கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்றுகொண்டிருந்ததை (நினைத்துப்பாருங்கள்)” எனும் இந்த (3:153ஆவது) இறைவசனம் குறிப்பிடு கின்றது. அப்போது நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை.20 அத்தியாயம் :

84

அபூதல்ஹா ஸைத் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் நடந்த நாளில் எங்கள் அணிகள் (நின்றிருந்த) இடத்தில் நாங்கள் இருந்தபோது எங்களைச் சிற்றுறக்கம் ஆட்கொண்டது. அதனால் எனது வாள் என் கையிலிருந்து (நழுவி) விழத் தொடங்க, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, நானும் அதை எடுப்பேன்.21 அத்தியாயம் :

85

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது, “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்” என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்” என மக்கள் (சிலர்) கூறியபோது சொன்னார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு இறைநம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப் பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்” என்றும் அவர்கள் கூறினார்கள்.23 அத்தியாயம் :

86

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்டபோது, “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்” (ஹஸ்பியல்லாஹ‚ வ நிஅமல் வக்கீல்) என்பதே அவர்களின் கடைசி வார்த்தையாக இருந்தது. அத்தியாயம் :

87

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாகக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கறுப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாகச்) சுற்றப்படும். அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை -அதாவது அவரது இரு தாடைகளைப்- பிடித்துக்கொண்டு, “நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்' என்று சொல்லும்” எனக் கூறினார்கள். பிறகு, “அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கிறார்களோ அவர்கள் தமக்கு அதை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்கேயாகும். அவர்கள் எதை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும் நீங்கள் செய்கின்றவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்” எனும் இந்த (3:180ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.24 அத்தியாயம் :

88

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஃபதக்' நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ர் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) “அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்' இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது.- அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வழிபாடு செய்யும் இணைவைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் கலந்து இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல்துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, “எங்கள்மீது புழுதி கிளப்பாதீர்” என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (நபி (ஸல்) அவர்களிடம்) “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இந்த) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச்சொல்லுங்கள்” என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “இல்லை; அல்லாஹ்வின் தூதரே! (இந்த) அவையிலேயே இதை எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்” என்றார். இதைக் கேட்ட முஸ்óம்களும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் “சஅதே! அபூஹுபாப் - அப்துல்லாஹ் பின் உபை - சொன்னதை நீங்கள் கேள்விப்பட வில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்” என்றார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். உங்களுக்கு வேதம் அருளிய (இறை)வன் மீதாணை யாக! இந்த (மதீனா) ஊர்வாசிகள் அவருக்கு முடிசூட்டித் தலைவராக்க முடிவு செய்திருந்த வேளையில், அல்லாஹ் உங்களுக்கு அருளிய சத்திய (வேத)த்தைக் கொண்டுவந்துவிட்டான். எனவே, அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய (மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் உங்களுக்கு முன்னால் அவ்வாறு அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக் கொப்ப இணைவைப்பாளர்களையும் வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்களின்) நிந்தனைகளைப் பொறுத்துக்கொள்பவர்களாகவும் இருந்தனர். அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்குமுன் வேதம் அருளப்பட்ட வர்களிடமிருந்தும் இணைவைப்போரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிó ருந்து விலகி நடந்தால், அதுதான் உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (3:186) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறைநம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை இறைமறுப்பாளர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக் காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகி விட்ட பின்னர் அவர்களின் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேயாம். ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும்வரை (அவர்களை) நீங்கள் மன்னியுங்கள். நிச்சயமாக! அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றல் உள்ளவன். (2:109) அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக்கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போருக்குச் சென்றபோது அன்னாரின் மூலம் அல்லாஹ் குறைஷி இறைமறுப்பாளர் களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் அவருடனிருந்த இணை வைப்பாளர்களும், சிலை வழிபாடு செய்வோரும் “(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. ஆகவே, இந்த (இறை)த்தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதிமொழியளித்துவிடுங்கள்” என்று கூறி (வெளித் தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர். அத்தியாயம் :

89

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய், தாம் கலந்துகொள்ளாமல்போனதற்குப் பொய்யான) சாக்குப்போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்)செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள். அப்போதுதான், “தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனை யிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு” எனும் (3:188ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :

90

அல்கமா பின் வக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மதீனா ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம்25 தம் காவலரிடம், “ராஃபிஉ! நீர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, “தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத (சாதனைகள் முதலிய)வற்றுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்று விரும்புகின்ற மனிதர் ஒவ்வொருவரும் வேதனை செய்யப்படுவர் என்றிருப்பின், நாம் அனைவருமே வேதனை செய்யப்பட வேண்டி வருமே!' என்று (நான் வினவியதாகக்) கேள்” என்று சொன்னார். (அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்ட போது) “உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதை மறைத்து விட்டு (உண்மைக்குப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் (தகவல்) தெரிவித்ததற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பதுபோல் அவர்கள் காட்டிக்கொண்டார்கள். தங்களுக்கு (இறைவன் மூலம்) வழங்கப்பெற்ற (உண்மை)தனைத் தாங்கள் மறைத்துவிட்டது குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்” என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதினார்கள்: வேதம் வழங்கப்பட்டவர்களிடம் “நீங்கள் அதை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது' என அல்லாஹ் உறுதிமொழி வாங்கி னான். ஆனால், அதை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக அற்ப விலையை வாங்கிக்கொண்டனர் என்பதை (நபியே! அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) அவர்கள் வாங்கிக்கொண்டது மிக மோசமானதாகும். தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்துகொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிóருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு. (3:187, 188).26 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

91

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நான் என் சிறிய தாயார் (அவர்களும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் இரவில் தங்கியிருந் தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு உறங்கிவிட்டார்கள். இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி வந்தபோது (எழுந்து) அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கியவாறு, “நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன” எனும் (3:190ஆவது) வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து (சென்று) அங்கத் தூய்மை செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று (மக்களுடன்) “சுப்ஹ்' தொழுதார்கள்.27 அத்தியாயம் :

92

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நான் என் சிறிய தாயார் (அவர்களும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்கள் வீட்டில் இரவு தங்கினேன். அப்போது நான் “நிச்சயம் (இன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகையை பார்ப்பேன்” என்று சொல்லிக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலையணையொன்று போடப்பட்டது. அவர்கள் அதன் நீளவாட்டில் (தலை வைத்து) உறங்கினார்கள். அவர்கள் (விழித்தெழுந்து) தம் முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு (குர்ஆனின் மூன்றாவது அத்தியாயமான) ஆலு இம்ரானிலிருந்து கடைசிப் பத்து வசனங்களை ஓதி முடித்தார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று, அதை எடுத்து அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்ததைப் போன்றே செய்தேன். பிறகு சென்று அவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டேன். நபி (ஸல்) அவர்கள் தமது (வலக்) கரத்தை என் தலைமீது வைத்தார்கள். பிறகு, என் காதைப் பிடித்துத் திருகி (உஷார்படுத்தி)னார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார் கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, பிறகு “வித்ர்' தொழுதார்கள்.28 அத்தியாயம் :

93

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களிடம் (ஒருநாள்) இரவில் தங்கினேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய வீட்டாரும் அதன் நீளவாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுஇரவு நேரம்வரை, அல்லது அதற்குச் சற்று முன்புவரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்புவரை உறங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்தெழுந்து தமது முகத்திóருந்து தம் இரு கரங்களால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தார்கள். தமது உளூவை அவர்கள் செம்மையாகச் செய்து கொண்டு தொழுவதற்காக நின்றார்கள். அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்துவிட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கரத்தை என் தலைமீது வைத்து என் வலக் காதைத் திருகினார்கள். (பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு “வித்ர்' தொழுதார்கள். பிறகு பாங்கு சொல்பவர் (தொழுகை அறிவிப்பாளரான பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லிவிட்டு) தம்மிடம் வரும்வரை ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹ் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். அத்தியாயம் :

94

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களிடம் (ஒருநாள்) இரவில் தங்கினேன். நான் தலையணையின் அகலவாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய வீட்டாரும் அதன் நீளவாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுஇரவு நேரம் வரை, அல்லது அதற்குச் சற்று முன்பு வரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்புவரை உறங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்தெழுந்து தமது முகத்திலிருந்து தம் கரத்தால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே எழுந்து சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தார்கள். தமது உளூவை அவர்கள் செம்மையாகச் செய்துகொண்டு தொழுவதற்காக நின்றார்கள். அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்துவிட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கரத்தை என் தலைமீது வைத்து என் வலக்காதைத் திருகலானார்கள். (பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு “வித்ர்' தொழுதார்கள். பிறகு பாங்கு சொல்பவர் (தொழுகை அறிவிப்புச் செய்பவரான பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லிவிட்டுத்) தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹ் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.29 அத்தியாயம் :

95

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணம் முடித்துக்கொண்டார். அவளுக்குப் பேரீச்சமரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்சமரத்திற்காகவே அந்தப் பெண்ணை அவர் தம்மிடம் வைத்திருந்தார். மற்றபடி அவளுக்கு அவரது உள்ளத்தில் (இடம்) ஏதுமிருக்கவில்லை. ஆகவே அவர் விஷயத்தில்தான், “அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்துகொள்ளலாம்” எனும் (4:3ஆவது) வசனம் அருளப்பெற்றது. அறிவிப்பாளர் (ஹிஷாம் பின் யூசுஃப், அல்லது ஹிஷாம் பின் உர்வா-ரஹ்) கூறுகிறார்: (இதை அறிவித்தபோது) உர்வா (ரஹ்) அவர்கள், “அந்தப் பேரீச்சமரத்திலும் அவரது செல்வத்திலும் அப்பெண் அவருக்குப் பங்காளியாய் இருந்தாள்” என்று அறிவித்தார் என நான் எண்ணு கிறேன்.2 அத்தியாயம் :

96

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்துகொள்ளலாம்” எனும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்: என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் பொறுப்பில் வளர்கின்ற- அவருடைய செல்வத்தில் பங்காளியாக இருக்கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவளது செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளது மஹ்ர் (மணக்கொடை) விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் - மற்றவர்கள் அவளுக்கு அளிப்பது போன்ற மஹ்ரை அவளுக்கு அளிக்காமல்-அவளை மணமுடித்துக்கொள்ள விரும்புகிறார் எனும் நிலையில் இருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பி லிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செலுத்தாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை மணமுடித்துக்கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்றப் பெண்களில் தங்களுக்கு விருப்பமான பெண்களை மணமுடித்துக்கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. இந்த இறைவசனம் அருளப்பெற்ற பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், “பெண்கள் விஷயத்தில் விளக்கம் கூறுமாறு (நபியே!) உம்மிடம் அவர்கள் கோருகின்றனர்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான். மேலும் (இந்த) பிந்திய வசனத்தில் (4:127) உயர்ந்தோன் அல்லாஹ் “மேலும் யாரை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவதில்லையோ...” என்று கூறியிருப்பது, உங்களில் (காப்பாளராயிருக்கும்) ஒருவர் தம் (பராமரிப்பில் இருந்துவரும்) அநாதைப் பெண்ணை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை (மணந்துகொள்ள) விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். அப்பெண்கள் செல்வத்திலும் அழகிலும் குறைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகிற்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் “நீதியான முறையிலேயே அல்லாமல் வேறு எந்த வகையிலும் மணமுடித்துக்கொள்ளலாகாது' என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.3 அத்தியாயம் :

97

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வராக இருந்தால், அவர் (அநாதை களின் சொத்துகளிலிருந்து உண்பதைத்) தவிர்த்துக்கொள்ளட்டும். அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்!” எனும் (4:6ஆவது) இறைவசனம் அநாதையின் செல்வம் தொடர்பாக அருளப்பட்டது. (அதைப்) பராமரிப்பவர் ஏழையாக இருந்தால், அதைப் பராமரிப்பதற்குப் பகரமாக நியாயமான அளவு அதிலிருந்து (எடுத்து) உண்ணலாம். (இதுதான் அதன் பொருள்.)4 அத்தியாயம் :

98

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பாகப்பிரிவினையின்போது உற வினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோர் வந்துவிட்டால் அவர்களுக் கும் அதிலிருந்து (சிறிது) அளியுங்கள். மேலும், அவர்களிடம் கனிவான வார்த்தை களைக் கூறி (அனுப்பி)விடுங்கள்” எனும் (4:8ஆவது) வசனம், (சட்டம்) நடை முறையிலுள்ள வசனமாகும்; காலாவதியாக்கப்பட்ட வசனமன்று.5 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.6 அத்தியாயம் :

99

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (என்) பனூ சலிமா குலத்தாரிடையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்தபோது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். ஆகவே, சிறிது தண்ணீரைக் கொண்டு வரச்சொல்லி அதிலிருந்து அங்கத் தூய்மை செய்து என்மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வத்தை என்ன செய்ய வேண்டுமென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்!” என்று கேட்டேன். அப்போதுதான், “அல்லாஹ் உங்கள் பிள்ளைகளின் (பாகப்பிரிவினை) விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகின்றான்” என்று தொடங்கும் (4:11ஆவது) வசனம் அருளப்பெற்றது.7 அத்தியாயம் :

100

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறந்தவரின்) சொத்து (அவருடைய) பிள்ளைகளுக்குரியதாக இருந்தது; (இறந்தவரின்) இறுதிவிருப்பம் (மூலம் கிடைப்பது) மட்டுமே தாய் தந்தையருக்கு உரியதாக இருந்துவந்தது. அல்லாஹ் அதிலிருந்து, தான் விரும்பி யதை மாற்றி(யமைத்து), ஆணுக்கு இரு பெண்களின் பங்கை நிர்ணயித்துத் தாய் தந்தையரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கையும் மூன்றில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும் நான்கில் ஒரு பங்கையும் கணவனுக்குப் பாதிப் பங்கையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்.8 அத்தியாயம் :

101

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “(அறியாமைக் காலத்தில்) ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுகளே அவருடைய மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ளவும் செய்வார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்க(ôது அப்படியே விட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க)மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசுகளான) அவர்கள்தான் அவள்மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள். அப்போதுதான் இது தொடர்பாக, “இறைநம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய (மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக்கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள்” எனும் (4:19ஆவது) வசனம் அருளப்பெற்றது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

102

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த (4:33ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள “மவாலிய' எனும் சொல்லுக்கு “வாரிசுகள்' என்பது பொருள். இவ்வசனத்தின் விவரமாவது: முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது (ஆரம்பத்தில்) அன்சாரி (ஒருவர் இறந்து விட்டால் அவரு)க்கு அவருடைய உறவினர்கள் அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பர்) வாரிசாகிவந்தார். நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம். (பின்னர்) “தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுகளை நாம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தியுள்ளோம்” எனும் (4:33ஆவது) வசனம் அருளப்பெற்றபோது இந்த நியதி (இறைவனால்) மாற்றப்பட்டுவிட்டது. பின்னர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கு வாரிசுரிமை போய், உதவி புரிதல், ஒத்துழைப்பு நல்குதல், அறிவுரை பகர்தல் ஆகியவைதான் உள்ளன. உடன்படிக்கை செய்துகொண்டவருக்காக இறுதிவிருப்பம் (வேண்டுமானால்) தெரிவிக்கலாம்.10 இதன் அறிவிப்பாளர்களான அபூ உசாமா (ரஹ்) அவர்கள் இத்ரீஸ் (ரஹ்) அவர்களிடமும், இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்களி டமும் ஹதீஸைக் கேட்டுள்ளார்கள்.11 அத்தியாயம் :

103

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்! (காண்பீர்கள்.) மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை' என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “மேகமே இல்லாத பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக்கொள்வீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் (அப்போதும்) “இல்லை' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொள்ளாததைப் போன்றே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ளமாட்டீர்கள்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கி னார்கள்: மறுமை நாள் ஏற்படும்போது அறிவிப் பாளர் ஒருவர், “ஒவ்வொரு சமுதாய மும் (உலக வாழ்வில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று அறிவிப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும் கற்சிலைகளையும் வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் ஒருவர்(கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வழிபட்டுக்கொண்டு நன்மைகளும் புரிந்துகொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்களிடம், “யாரை நீங்கள் வழிபட்டுக்கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அவர்கள், “அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை” என்று கூறப் படும். மேலும், “இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!” என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையைச்) சுட்டிக்காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டுசெல்லப்படுவார்கள். அது கானலைப் போலக் காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக்கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள். பிறகு கிறித்தவர்கள் அழைக்கப்பட்டு, “நீங்கள் எதை வழிபட்டுக்கொண்டிருந் தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மசீஹை (ஈசாவை) வழிபட்டுக்கொண்டிருந்தோம்” என்று கூறுவர். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை” என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியதைப் போன்று இவர்களும் கூறுவர். இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டுக்(கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணிவைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்).12 அப்போது, “எதை நீங்கள் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வாரு சமுதாயமும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றனரே!” என்று கேட்கப்படும். அவர்கள், “உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவை யுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிராமல் அவர் களைப் பிரிந்திருந்தோம். (அப்படி யிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று பதிலளிப்பர். அதற்கு அல்லாஹ், “நானே உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கமாட்டோம்” என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவர்.13 அத்தியாயம் :

104

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். நான், “தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு “அந்நிசா' அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். “ஒவ்வொரு சமுதாயத்தாரிலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உம்மை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள், “நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.14 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

105

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (என் சகோதரி) அஸ்மாவின் கழுத்து மாலையொன்று (ஒரு பயணத்தில் என்னிட மிருந்து) தொலைந்துவிட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடுவதற்காகச் சிலரை அனுப்பிவைத்தார்கள். அப்போது தொழுகை (நேரம்) வந்துவிட்டது. அப்போது அவர்கள் அங்கத் தூய்மை யுடன் இருக்கவில்லை. (உளூ செய்வதற்கு) தண்ணீரும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, உளூ இன்றியே அவர்கள் தொழுதார்கள். அப்போதுதான் உயர்ந்தோன் அல்லாஹ் தயம்மும் (மாற்று அங்கத் தூய்மை பற்றிய சட்டத்தைக் கூறும்) இறைவசனத்தை அருளினான்.15 அத்தியாயம் :

106

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்” எனும் (4:59ஆவது) வசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா பின் கைஸ் பின் அதீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது இறங்கியது.16 அத்தியாயம் :

107

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு “அல்ஹர்ரா' எனுமிடத்திலிருந்த கால்வாய் ஒன்றின் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஸுபைரே! (முதலில் உங்கள் தோப்புக்கு) நீங்கள் நீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருப்பவருக்குத் தண்ணீரை அனுப்புங்கள்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) அந்த அன்சாரி, “அல்லாஹ்வின் தூதரே! அவர் உங்கள் அத்தை (ஸஃபிய்யா பின்த் அப்தில் முத்தலிபின்) மகன் என்பதாலா (அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறீர்கள்)?” என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தில் சிவந்து)விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (ஸுபைர் (ரலி) அவர்களைப் பார்த்து), “ஸுபைரே! (உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு வரப்பு களைச் சென்றடையும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்துங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருக்கும் தோப்புக்காரருக்குத் தண்ணீரை விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள். அந்த அன்சாரித் தோழர் தம்மைக் கோபப்படுத்தியபோது நபி (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களின் உரிமையைத் தெளிவான தீர்ப்பின் மூலம் முழுமையாக வழங்கிவிட்டார்கள். அதற்குமுன் அவர்கள் இருவருக்குமே சகாயம் கிடைக்கும் வகையில் ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின், “(நபியே!) உம்முடைய இறைவன்மீது சத்தியமாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட (சண்டை சச்சரவு முதலிய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு, பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்புக் குறித்துத் தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும் அதற்கு இணங்கி நடக்காத வரை அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாகமாட்டார்கள்” எனும் (4:65ஆவது) வசனம் இது தொடர்பாக அருளப்பெற்றது என்றே நான் எண்ணுகிறேன்.17 அத்தியாயம் :

108

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறுதியாக) நோயுற்றுவிடுகின்ற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலக வாழ்வு - மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததில்லை” என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் (உயிர்) கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின்போது அவர்களின் குரல் கடுமையாகக் (கட்டிக்கொண்டு) கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ் யார்மீது தன் அருட்கொடைகளைப் பொழிந்தானோ அந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், உத்தமர்களுடன் (என்னைச் சொர்க்கத்தில் சேர்த்தருள்)” என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். (இதிலிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டேன்.18 அத்தியாயம் :

109

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் தாயாரும் (மக்காவில் இஸ்லாத்தை ஏற்றிருந்த) ஒடுக்கப்பட்ட பலவீனமான பிரிவினரைச் சேர்ந்தவர் களாயிருந்தோம்.19 அத்தியாயம் :

110

இப்னு அபீமுளைக்கா (அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “எந்த உத்தியையும் கையாள முடியாமல், எந்த வழியும் தெரியாமல் பலவீனமான நிலையில் இருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரைத் தவிர” எனும் (4:98ஆவது) இறைவசனத்தை ஓதிவிட்டு, “(ஹிஜ்ரத் செய்ய இயலாததால்) அல்லாஹ் மன்னிப்பளித்த (பலவீனமான)வர்களில் நானும் என் தாயாரும் இருந்தோம்” என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (4:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹஸிரத்' (மனம் ஒப்பாது) எனும் சொல்லுக்கு, “(அவர்களின் உள்ளங்கள் இடம் கொடுக்காமல்) குறுகிக்கொண்டன' என்பது பொருள். (4:135ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தல்வூ' (தவறாகச் சாட்சியம் கூறினால்) எனும் சொல்லுக்கு, “நீங்கள் (உண்மைக்குப் புறம்பாகச்) சாட்சியம் சொல்ல நாக்கைச் சுழற்றினால்” என்பது பொருள். மற்றவர்கள் கூறுகின்றனர்: (4:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முராஃகம்' எனும் சொல்லுக்கு “புலம்பெயரும் இடம்' (தஞ்சம் புகுமிடம்) என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல்லான) “ராஃகம்த்து' எனும் சொல்லுக்கு, “நான் என் சமுதாயத்தைத் துறந்துவிட்டேன்” என்பது பொருள். (4:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மவ்கூத்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட (கடமை)' என்பது பொருள். அத்தியாயம் :

111

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் 4:88ஆவது இறைவசனம் குறித்துக் கூறியதாவது: (உஹுத் போருக்காக) நபி (ஸல்) அவர்களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்துவிட்டனர். இவர்கள் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டு) மக்கள் இரு பிரிவினராக ஆகிவிட்டனர். ஒரு பிரிவினர், “(நயவஞ்சகர்களாகிய) அவர்களைக் கொன்றுவிடுங்கள் (அல்லாஹ்வின் தூதரே!)” என்று கூறினர். மற்றொரு பிரிவினர், “(வெளிப்படையில் முஸ்லிம்களாகிய அவர்களைக் கொல்ல) வேண்டாம்” என்று கூறினர். அப்போதுதான், “உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகிவிட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக்கொண்ட (தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்துவிட்டான்” எனும் (4:88ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. மேலும், நபி (ஸல்) அவர்கள், “மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்கிவிடுவதைப் போல் அது தீமையை அகற்றிவிடும்” என்றுசொன்னார்கள்.20 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால் அதை அவர்கள் பரப்பிவிடுகிறார்கள். ஆனால், அதைத் தூதரிடமும் அவர்களில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார் களாயின், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அ(ச்செய்தியின் உண்மை நிலை)தனை நன்கு அறிந்திருப்பார்கள் (எனும் 4:83ஆவது வசனத்தொடர்). (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அஃதாஊ' எனும் சொல்லுக்கு “பரப்பிவிடுவார்கள்' என்பது பொருள். “யஸ்தன்பித்தூன' எனும் சொல்லுக்கு “ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள்' என்பது பொருள். (4:86ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “ஹசீப்' எனும் சொல்லுக்கு “போதுமானவன்' என்பது பொருள். (4:117ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இனாஸ்' எனும் சொல் கல், மண் போன்ற உயிரற்ற பொருட்களைக் குறிக்கும். “மரீத்' எனும் சொல்லுக்கு “(தீமையில்) பிடிவாதமாக இருப்பவன்' என்பது பொருள். (4:119ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபலயுபத்திகுன்ன' எனும் சொற்றொடருக்கு “அவர்கள் (தம் கால்நடைகளின் காதுகளைக்) கிழித்துத் துண்டிப்பார்கள்” என்பது பொருள். (4:122ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கீல்' எனும் பதமும் “கவ்ல்' எனும் பதமும் (பேச்சு, சொல் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும். (4:155ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தபஅ' எனும் சொல்லின் செயப்பாட்டு வினைச்சொல்லான) “துபிஅ' எனும் சொல்லுக்கு “முத்திரையிடப்பட்டது' என்பது பொருள். அத்தியாயம் :

112

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இது (4:93ஆவது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்து விளக்கம் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், “ஓர் இறைநம்பிக்கை யாளரை வேண்டுமென்றே கொலை செய்கின்றவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்” எனும் இந்த (4:93ஆவது) வசனம் அருளப்பெற்றது. இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் காலாவதியாக்கவில்லை” என்று கூறினார்கள்.21 அத்தியாயம் :

113

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 4:94ஆவது வசனம் குறித்துக் கூறியதாவது: ஒரு மனிதர் தமது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக்கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப் பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அவரது ஆட்டுமந்தையையும் எடுத்துக்கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான். இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறைவழியில் (அறப்போருக் காக) புறப்படுவீர்களாயின் (பகைவரையும் நண்பரையும்) தெளிவாகப் பிரித்தறிந்துகொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறைநம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு முகமன் (சலாம்) கூறியவரிடம், நீர் இறைநம்பிக்கையாளர் அல்லர் என்று சொல்லாதீர்கள். (4:94) (இங்கே “உலகப் பொருள்' என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.22 அறிவிப்பாளர் அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (இந்த வசனத்தில் “சலாம்' எனும் வார்த்தையை) சலாம் என்றே ஓதினார்கள். (சலம் என்று உச்சரிக்கவில்லை.) அத்தியாயம் :

114

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மர்வான் பின் அல்ஹகமைப் பள்ளிவாசலில் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்: “இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆவது) வசனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டிக்கொண்டிருக்கும்போது, இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக, என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர் புரிந் திருப்பேன்” என்று சொன்னார்கள். அவர் கண்பார்வையற்றவராக இருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்கள்மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். ஆகவே, என் தொடை நசுங்கிப்போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களின் தொடை என்மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது. பிறகு அந்நிலை அகன்றது. அப்போதுதான் அல்லாஹ் “இடையூறு உள்ளவர்கள் தவிர' எனும் சொற்றொடரை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.23 அத்தியாயம் :

115

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: “இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப் போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களை அழைக்க, அவர் (வந்து) அதை எழுதினார். அப்போது இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் வந்து தமது ஊனத்தைப் பற்றி முறையிட்டார். அப்போதுதான் அல்லாஹ், “இடையூறு உள்ளவர்கள் தவிர' எனும் சொற்றொடரை அருளினான்.24 அத்தியாயம் :

116

பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: “இறைநம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்துகொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்” எனும் (4:95ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். (ஸைத் பின் ஸாபித்) அவர்கள், மைக் கூட்டையும் “பலகையையும்' அல்லது “அகலமான எலும்பையும்' தம்முடன் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் “இந்த (4:95ஆவது) வசனத்தை எழுதிக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்குப் பின்புறம் இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் கண் பார்வையற்றவன் ஆயிற்றே!” என்று கேட்டார்கள். அப்போது அதே இடத்தில், “இறைநம்பிக்கையாளர்களில் இடையூறு உள்ளவர்கள் தவிர அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” என்ற இவ்வசனம் (4:95- முழுமையாக) அருளப்பெற்றது. அத்தியாயம் :

117

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் வசனம் (4:95) பத்ர் போர் பற்றியும், பத்ருக்காகப் புறப்பட்டவர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

118

முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் அபுல்அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: மதீனாவாசிகள் ஒரு படைப்பிரிவை அனுப்ப வேண்டும் எனக் கட்டாயப் படுத்தப்பட்டனர்.25 அந்தப் படைப்பிரிவில் என் பெயரும் பதிவு செய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா (ரஹ்) அவர்களைச் சந்தித் தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மை யாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களது காலத்தில் முஸ்óம்களில் சிலர் இணைவைப்பாளர் களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ர் போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப் பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். ஆகவே, (முஸ்óம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும்; அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (4:97) அருளினான்: (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (அவர்களை நோக்கி, “இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?” என வினவுவார்கள். அதற்கு அவர்கள், “பூமியில் நாங்கள் பலவீனமானவர்களாய் இருந்தோம்” எனப் பதிலளிப்பார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?” என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம்தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.26 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

119

இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தை களைத் தவிர!” எனும் (4:98ஆவது) இறை வசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இயலாதவர்கள் என அல்லாஹ் அறிவித்தவர்களில் என் தாயார் (உம்முல் ஃபள்ல்) அவர்களும் ஒருவராயிருந்தார்.28 அத்தியாயம் :

120

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுது கொண்டிருந்தபோது, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று சொல்லிவிட்டு, பிறகு சஜ்தா செய்வதற்கு முன்பாக, “இறைவா! (மக்காவில் சிக்கித் தவிக்கும்) அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்கிக் கடுமைப்படுத்துவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.29 அத்தியாயம் :

121

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவதில் உங்கள்மீது தவறேதுமில்லை” எனும் (4:102ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது, “அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் காயமுற்றுக் கிடந்தார்கள். (அப்போது இந்த வசனம் அருளப்பட்டது)” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

122

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு (4:127) விளக்கமளிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒருவர் தம்மிடமுள்ள அநாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும் வாரிசாகவும் இருந்துவருவார். பேரீச்சமரம் உள்பட அவரது செல்வத்தில் அவள் பங்காளியாக இருந்துவரும் நிலையில் அப்பெண்ணை அவரே மணமுடித்துக்கொள்ள விரும்புவார். மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து, அவள் (ஏற்கெனவே) பங்காளியாக இருப்பதன் மூலம் அவ(ளுக்குக் கணவனாக வருகின்ற வ)னும் தம் சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் (காப்பாளர்) வெறுத்து வந்தார். எனவே, அவளை (வேறொருவன் மணமுடிக்க விடாமல்) காப்பாளர் தடுத்துவந்தார். அப்போதுதான், “ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால் கணவன்- மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை; (எந்நிலையிலும்) சமாதானம் செய்துகொள்வதே நலம் தரக்கூடியதாகும்” எனும் (4:128ஆவது) வசனம் அருளப்பெற்றது.30 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (4:35ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஷிகாக்' எனும் சொல்லுக்கு “பரஸ்பரப் பிணக்கு' என்பது பொருள். அத்தியாயம் :

123

ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், “ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ளமாட்டான் என்றோ புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன்-மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதுமில்லை” எனும் (4:128 ஆவது) வசனம் குறித்துக் கூறுகையில், “தம்மிடம் இருந்துவரும் மனைவியுடன் முறையாக இல்லறம் நடத்த விரும்பாத ஓர் ஆண் அவளைப் பிரிந்துவிட விரும்புகிறான். (இந்நிலையில் கணவனிடம்) அவள், “எனது (செலவுத் தொகை உள்ளிட்ட) உரிமையை உனக்கு நான் விட்டுக்கொடுத்துவிடுகிறேன்; (என்னை மணவிலக்குச் செய்து விடாமல் தொடர்ந்து மனைவியாகவே இருக்க அனுமதிக்க வேண்டும்)' என்று கோருகிறாள். இது தொடர்பாகவே இவ்வசனம் (4:128) அருளப்பெற்றது” என்று குறிப்பிட்டார்கள்.31 அத்தியாயம் :

124

அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் அவையில் இருந்தோம். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் வந்து எங்கள் அருகே நின்று சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு, “உங்களைவிடச் சிறந்த கூட்ட(த்தாரான நபிகளார் கால)த்தவர் மத்தியிலேகூட நயவஞ்சகம் இறக்கிவைக்கப்(பட்டுச் சோதிக்கப்)பட்டது” என்று சொன்னார்கள். நான், “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்.) “நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டில் இருப்பார்கள்' என்று அல்லாஹ் கூறுகிறானே!” என்று சொல்ல, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் புன்னகைத்தார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எழுந்து நிற்க, அவர்களுடைய தோழர்கள் கலைந்து சென்றுவிட்டனர். உடனே ஹுதைஃபா (ரலி) அவர்கள் பொடிக் கற்களை என்மீது எறிந்(து என்னை அழைத்)தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள், “நான் அப்துல்லாஹ்வின் சிரிப்பைக் கண்டு வியப்படைந்தேன். ஆனால், நான் சொன்னதை அவர்கள் நன்கு அறிந்துகொண்டார்கள். உங்களைவிடச் சிறந்தவர்களாயிருந்த ஒரு சமுதாயத்தார் மீதும் நயவஞ்சகம் இறக்கிவைக்கப்பட்டது. பிறகு அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர்; அவர்களின் குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான்” என்றார்கள்.32 அத்தியாயம் :

125

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் (இறைத்தூதர்) யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன்' என்று (என்னைப் பற்றி) எவரும் கூறுவது அவருக்குத் தகாது. இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33 அத்தியாயம் :

126

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறியவர் பொய் சொல்லிவிட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

127

பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: (நபி (ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற (குர்ஆன்) அத்தியாயம் “பாராஅத்' எனும் (9ஆவது) அத்தியாயமாகும். (பாகப்பிரிவினை தொடர்பாக) இறுதியாக அருளப்பெற்ற வசனம், “(நபியே!) உங்களிடம் மக்கள் விளக்கம் கேட்கிறார்கள்” எனும் (இந்த 4:176ஆவது) வசனமாகும்.34 அத்தியாயம் :

128

தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓது கிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்க ளிடையே அருளப்பெற்றிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்” என்று கூறினர். உமர் (ரலி) அவர்கள், “அது எப்போது அருளப்பெற்றது? எங்கே அருளப்பெற்றது? அது அருளப்பெற்ற வேளையில் அரஃபா (ஃதுல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்” என்று கூறினார்கள்.3 (இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்” எனும் (5:3ஆவது) வசனம் அருளப்பெற்ற நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக் கிழமையாக) இல்லையா என்று நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகின்றேன்.4 அத்தியாயம் :

129

நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பயணம் ஒன்றில் (பனுல் முஸ்த்தலிக் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) “பைதா' அல்லது “தாத்துல் ஜைஷ்' எனுமிடத்தில் (வந்துகொண்டு) இருந்தபோது, எனது கழுத்தணி அறுந்து விழுந்து (காணாமற் போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு முகாமிட்டுத்) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் (முகாமிட்டுத்) தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் சென்று, “(உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார்கள். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று முறையிட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்ó என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப் படுத்து) இருந்ததுதான் என்னை அசைய விடாமல் (அடிவாங்கிக்கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித் தெழுந்தபோதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போதுதான் “தயம்மும்' (மாற்று அங்கத் தூய்மை) உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இது குறித்து) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அபூபக்ரின் குடும்பத்தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட நலன்களில் (பரக்கத்) இது (தயம்மும் எனும் சலுகை) முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன)” என்று கூறினார்கள். (பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணாமற் போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.6 அத்தியாயம் :

130

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (பனுல் முஸ்த்தலிக் போர் முடிந்து) மதீனாவிற்கு வந்துகொண்டிருந்தபோது (மதீனாவுக்கருகில் உள்ள) “பைதா' எனுமிடத்தில் என் கழுத்து மாலையொன்று (அறுந்து) விழுந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அங்கே தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, இறங்கி, எனது மடியில் தலை வைத்து உறங்கினார்கள். (அப்போது என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னை நோக்கி வந்து, என்னை வேகமாகக் குத்தி, “ஒரு கழுத்து மாலைக்காக (பயணத்தைத் தொடர விடாமல்) மக்களைத் தடுத்து நிறுத்திவிட்டாயே” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் மடிமீது தலை வைத்துப் படுத்து) இருந்த காரணத்தால் நான் (அசையாமல்) உயிரற்(ற சடலம் போன்)றுஇருந்துவிட்டேன். அதனால் எனக்குக் கடும் வேதனை ஏற்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் விழித்தெழுந்தார்கள். சுப்ஹ் தொழுகை (நேரம்) வந்துவிட்டது. அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் தேடப்பட்டது. அது கிடைக்க வில்லை. அப்போதுதான், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள்வரை உங்களுடைய கரங்களையும் கழுவிக்கொள்ளுங்கள்” என்று தொடங்கி “தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி “தயம்மும்' செய்துகொள்ளுங்கள்” என்று கூறும் (5:6 ஆவது) வசனம் அருளப்பெற்றது. அப்போது உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களால் மக்களுக்கு அருள்வளம் (பரக்கத்) பொழிந்துள்ளான், அபூபக்ரின் குடும்பத்தாரே! நீங்களே அவர்களுக்கு ஓர் அருள்வளம்தான்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

131

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: மிக்தாத் (ரலி) அவர்கள், பத்ர் போரின்போது, “அல்லாஹ்வின் தூதரே! இஸ்ரவேலர்கள் மூசா (அலை) அவர்களிடம், “நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின் றோம்' என்று சொன்னதைப் போல் உங்களிடம் நாங்கள் சொல்லமாட்டோம். மாறாக, செல்லுங்கள்; நாங்களும் உங்களுடன் இருப்போம்” என்று சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிட்டதைப் போலிருந்தது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் சொன்னபோது நான் (அங்கு) இருந்தேன்” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாகத் தொடங்குகிறது.7 அத்தியாயம் :

132

அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (உமய்யா கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். (அறியாமைக் காலத்து “அல்கசாமா' எனும் சத்தியமுறை பற்றி அன்னார் கேட்க, அது பற்றி) மக்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். (இதில் பழிவாங்கல் இருப்பது உண்மைதான். உங்களுக்கு முன்பிருந்த) கலீஃபாக்கள் இதன்படி பழிவாங்க உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் சொன்னார்கள். உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தம் முதுகுக்குப் பின்னால் அமர்ந்திருந்த என் பக்கம் திரும்பி, “அப்துல்லாஹ் பின் ஸைத் அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்' அல்லது “அபூகிலாபாவே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், “திருமணமான பின்பு விபசாரம் புரிந்த மனிதரையும், அல்லது உயிருக்குப் பதிலாக அன்றி (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றவரையும், அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களையும் எதிர்த்துப் போரிட்டவரையும் தவிர, வேறு எந்த மனிதரையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியிருப்பதாக நான் அறியவில்லை” என்று சொன்னேன். அப்போது அன்பஸா பின் சயீத் (ரஹ்) அவர்கள், “என்னிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (“அல்கசாமா' மற்றும் “உரைனா' சம்பவம் குறித்து) இப்படி இப்படியெல்லாம் அறிவித்தார்கள்” என்று சொன்னார்கள். நான் சொன்னேன்: “அனஸ் (ரலி) அவர்கள் என்னிடம்கூட (இப்படிச்) சொன்னார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு சமுதாயத்தார் (“உக்ல்' மற்றும் “உரைனா' குலத்தைச் சேர்ந்தவர்கள்) வந்து உரையாடினார்கள். அப்போது அவர்கள், “இந்தப் பூமி (மதீனா)எங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை (நாங்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டோம்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “இதோ, எங்களின் (தர்ம காரியத்திற் காக வந்துள்ள) இந்த ஒட்டகங்கள் (மேய்ச்சலுக்காக நகருக்கு) வெளியே செல்லவிருக்கின்றன. நீங்களும் இவற்று டன் சென்று இவற்றின் பாலையும் இவற்றின் சிறுநீரையும் அருந்துங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் அவற்றுடன் வெளியே சென்று அவற்றின் சிறுநீரையும் அவற்றின் பாலையும் அருந்தி (நோய் நீங்கி) குணமடைந்தனர். பின்னர், ஒட்டகம் மேய்ப்பவரின்மீது பாய்ந்து அவரைக் கொன்றுவிட்டனர்; ஒட்டகங்களை ஓட்டியும் சென்றுவிட்டனர். ஓர் உயிரை (அநியாயமாகக்) கொன்று அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருட னும் போர் புரிந்து, அல்லாஹ்வின் தூதரை அச்சுறுத்திய இ(ந்தக் கொடுஞ்செயல் புரிந்த)வர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் தாமதம் காட்ட முடியுமா, என்ன? அப்போது அன்பஸா (ரஹ்) அவர்கள், (வியப்புத் தெரிவிப்பது போல) “சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று சொன்னார்கள். நான், “என்னை நீங்கள் சந்தேகப்படுகின்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(இல்லை) இதை எங்களுக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று கூறிவிட்டு, “இந்த ஊர் (ஷாம்)வாசிகளே! இவரையும் இவரைப் போன்றவர் களையும் அல்லாஹ் உங்களிடையே வாழவைத்திருக்கும்வரை நீங்கள் நன்மையிலேயே நீடிப்பீர்கள்” என்று சொன்னார்கள்.8 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

133

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையின் சகோதரி-ருபய்யிஉ பின்த் அந்நள்ர் (ரலி)-ஓர் அன்சாரி இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தார் பழிவாங்கலைக் கோரி நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்களும் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறு நடக்காது; ருபய்யிஉவின் பல் உடைக்கப்படாது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அனஸே! (இந்த வழக்கில்) அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும் (ஆகவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)” என்று கூறினார்கள். பிறகு அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் திருப்தியுடன் ஈட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர். (ருபய்யிஉவைப் பழிவாங்காமல் மன்னித்துவிட்டனர்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றிவிடுகின்றான்” என்று சொன்னார்கள்.9 அத்தியாயம் :

134

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: முஹம்மத் (ஸல்) அவர்கள், தம்மீது அருளப்பெற்ற (வேதத்)திலிருந்து எதையும் மறைத்தார்கள் என்று உங்களிடம் யாரும் சொன்னால் அவர் பொய் சொல்லிவிட்டார். அல்லாஹ்வோ, “(எம்) தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக!” என்று கூறுகின்றான்.10 அத்தியாயம் :

135

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: “நீங்கள் செய்த அர்த்தமற்ற சத்தியங் களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை” எனும் (5:89ஆவது) இறைவசனம், “லா வல்லாஹி (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!') என்றும், “பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!') என்றும் (பொருள் கொள்ளாமல் பழக்கத்தின் காரணமாகச் சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுகின்றவரின் விஷயத்தில் அருளப்பெற்றது. அத்தியாயம் :

136

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்), சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும்வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்துவந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் ஒரு சத்தியத்தைச் செய்து, (அதன்பின் அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று கருதினால் (அதைக் கைவிட்டு) அல்லாஹ் அளித்த சலுகையை ஏற்றுக் கொண்டு எது சிறந்ததோ அதையே செய்வேன்” என்று சொன்னார்கள்.11 அத்தியாயம் :

137

கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “எங்களுடன் துணைவியர் யாரும் இல்லாத நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஓர்) அறப் போரில் கலந்துகொண்டிருந்தோம். ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், “நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)கொள்ளலாமா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, “இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க்கொள்ளாதீர்கள்” எனும் (5:87ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.12 அத்தியாயம் :

138

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மது பானத்தைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பெற்ற காலகட்டத் தில் ஐந்து வகையான மது பானங்கள் மதீனாவில் இருந்தன. அவற்றில் திராட்சை மதுபானம் இருக்கவில்லை.14 அத்தியாயம் :

139

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள் “ஃபளீக்' என்றழைக்கின்ற (பழுக்காத) இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களிடம் இருக்கவில்லை. (ஒருமுறை) நான் (என் தாயாரின் இளைய கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் இன்னாருக்கும் இன்னாருக்கும் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் வந்து, “உங்களுக்குச் செய்தி எட்டியதா?” என்று கேட்டார். அங்கு இருந்தவர்கள், “என்ன அது?” என்று கேட்டனர். அவர், “மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று பதிலளித்தார். அப்போது அவர்கள், “அனஸே! இந்த (மது) பீப்பாய்களைக் கீழே கொட்டிவிடுங்கள்” என்று கூறினர். அந்த மனிதர் அறிவித்த பிறகு அவர்கள் மதுவைக் குறித்து (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை; மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. அத்தியாயம் :

140

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: மக்கள் சிலர், உஹுத் போர் நடந்த நாளின் காலையில் மது அருந்தினர். அன்று அவர்கள் அனைவருமே வீர மரணம் அடைந்தார்கள். இது, மது தடை செய்யப்படுவதற்கு முன்னர் நடந்ததாகும்.15 அத்தியாயம் :

141

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை யிóருந்தபடி, “(இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு) மக்களே! மதுபானத் தடை(ச் சட்டம்) அருளப்பெற்றுவிட்டது. திராட்சை, பேரீச்சம்பழம், தேன், கோதுமை, தீட்டப்படாத கோதுமை ஆகிய ஐந்து பொருட்களிலிருந்தும் மது தயாரிக்கப் படுகிறது. (ஆயினும்,) அறிவை மயக்கும் அனைத்தும் மதுதான்” என்று கூறி னார்கள்.16 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

142

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (மதுபானம் தடை செய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும். அபுந்நுஅமான் (ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள் வழியாக இதே ஹதீஸ் கூடுதல் தகவலுடன் வந்துள்ளது. அந்தத் தகவலாவது: அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மதுபானம் தடை செய்யப்பட்ட நாளன்று) நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது (முழு) மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பெற்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடை செய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவிப்புச் செய்தார். இதைக் கேட்டதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள், “வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)” எனச் சொன்னார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), “இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மது பானம் தடை செய்யப்பட்டுவிட்டது என்று அறிவிக்கிறார்” என்று சொன்னேன். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், “நீ போய், இதைக் கொட்டி விடு!” என்று சொன்னார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களது மதுபானம் (பழுக்காத) பேரீச்சங்காய் மதுவாக இருந்தது. அப்போது மக்களில் சிலர், “(உஹுத் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!” என்று கூறினர். அப்போதுதான், “இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடை செய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்கள்மீது (அது) குற்றமாகாது” எனும் (5:93ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.17 அத்தியாயம் :

143

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருநாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், “நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒரு மனிதர், “என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இன்னார்' என்று சொன்னார்கள். அப்போதுதான், “இறைநம்பிக்கைகொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித்துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் இந்த (5:101ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

144

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி (ஸல்) அவர்களிடம்), “என் தந்தை யார்?” என்று கேட்டார். தமது ஒட்டகம் காணாமற் போய்விட்ட இன்னொருவர், “என் ஒட்டகம் எங்கே?” என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்கள் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத்தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். (5:101) அத்தியாயம் :

145

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “பஹீரா' என்பது, (அறியாமைக் காலச்) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுவந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள். “சாயிபா' என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் குணமாதல் போன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுதலில்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரிய விடப்பட்டு வந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படுவதில்லை. (அது நினைத்த தண்ணீரில் வாய்வைக்கும்; நினைத்த நிலத்தில் மேயும்; யாரும் அதைத் தடுக்கமாட்டார்கள்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அம்ர் பின் ஆமிர் அல்குஸாஈ' தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். முதன் முதலாக “சாயிபா' (ஒட்டகத்தைச் சிலைகளுக்காக நேர்ச்சை செய்து) திரியவிட்டவர் அவர்தான்.19 “வஸீலா' என்பது, முதல் ஈற்றிலும் இரண்டாம் ஈற்றிலும் பெண்குட்டி ஈனுகின்ற இளம் ஒட்டகமாகும்; இதை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிட்டுவந்தனர். இரண்டு (ஈற்று)க்குமத்தியில் ஆண்குட்டி ஈனாமல் ஒன்றை யடுத்து மற்றொன்றும் (பெண்குட்டியாக) அமைந்திருப்பதால் (இதை “தொடர்ந்து வரக்கூடியது' எனும் பொருளில்) “வஸீலா' என்று அழைத்தனர். “ஹாம்' என்பது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒட்டகங்களைச் சூல் கொள்ளச்செய்த (பொலி) ஒட்டகமாகும். இவ்வாறு சூல் கொள்ளச்செய்தபின் அந்த (பொலி) ஒட்டகத்தை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக அப்படியே விட்டுவந்தனர்; அதன் மீது சுமை ஏற்றாமல் விட்டுவிட்டனர்; எனவே, அதன் மீது சுமை எதுவும் ஏற்றப்படவில்லை. இதை “ஹாமீ' (தன் முதுகைப் பாதுகாத்துக்கொண்ட ஒட்டகம்) என்று பெயரிட்டு அழைத்தனர். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

146

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் (தின்று) தகர்த்துக்கொண்டி ருப்பதை நான் கண்டேன். “அம்ர் (பின் ஆமிர் அல்குஸாஈ' நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்றுகொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து) திரிய விட்டவர் அவர்தான். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

147

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), “மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, “எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போன்று நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம்” எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு, “அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தான். அறிந்துகொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப்பக் கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்று சொல்வேன். அதற்கு, “இவர்கள் உங்களு(டைய மரணத்து)க்குப்பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போன்று, “நான் அவர்களுடன் இருந்தவரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!” என்று பதிலளிப்பேன். அதற்கு, “இவர்களை நீங்கள் பிரிந்ததி óருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தமது மார்க்கத்திலிருந்து வெளியேறிக்கொண்டுதான் இருந்தார்கள்” என்று கூறப்படும்.20 அத்தியாயம் :

148

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படவிருக்கிறீர்கள். சிலபேர் இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். அப்போது நான் நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போல், “நான் அவர்களுடன் இருந்தவரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! (இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும் அவர்கள் உன் அடியார்களே!) நீயே யாவற்றையும் மிகைத்தவ னும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்” (5:117,118) என்று சொல்வேன். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

149

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். (ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்:) “நிச்சயமாக (இறுதித் தீர்ப்பிற்குரிய) அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். (பெண்களின்) கருப்பைகளில் இருப்பவற்றையும் அவனே அறிவான். எந்த மனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப்போகிறான் என்பதை அறிவதில்லை. தாம் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ்தான் (யாவற்றையும்) நன்கு அறிந்தவனாகவும் நுண்ணறிவுள்ளவனாகவும் இருக்கின் றான். (31:34)5 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :

150

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேத னையை உங்கள்மீது அனுப்பவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக் களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, “உங்களுக்கு மேலிருந்து ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கிவைக்கவும் அவன் ஆற்றலுள்ளவன்” என்பதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறைவா!) உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள். “உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்து' என்பதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்கள், “உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள். “அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும்” என்பதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (முந்தைய வேதனைகளைவிட) “எளிதானது' அல்லது “இது சுலபமானது' ஆகும்” என்று சொன்னார்கள்.7 அத்தியாயம் :

151

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “எவர் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லையோ அவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர்” எனும் (6:82ஆவது) வசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்கள், “எங்களில் எவர்தான் (தமக்குத் தாமே) அநீதியிழைக்கவில்லை?” என்று கேட்டனர். அப்போது, “இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்” எனும் (31:13ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.8 அத்தியாயம் :

152

அபுல்ஆலியா ருஃபைஉ பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உங்கள் நபியினுடைய தந்தையின் சகோதரருடைய புதல்வர், அதாவது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எனக்கு அறிவித்தார்கள்: “நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது.9 அத்தியாயம் :

153

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் முறையாகாது.10 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

154

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஸாத் (எனும் 38ஆவது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா உண்டா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம் (38:24ஆவது வசனத்தில் சஜ்தா உண்டு)” என்று கூறிவிட்டு, “நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் (சந்ததி களாக) வழங்கினோம்” என்று தொடங்கி, “இவர்களுடைய நல்வழியையே நீரும் பின்பற்றுவீராக!” என்பதுவரை (6:84-90 வசனங்களை) ஓதினார்கள். பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தாவூத் (அலை) அவர்கள் இந்த (வசனத் தில் கூறப்பட்டுள்ள) இறைத்தூதர்களில் ஒருவர்தான்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பிந்திய மூன்று தொடர்களில் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூடுதலாகக் கூறுகிறார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டேன். அதற்கு அவர்கள், “முந்தைய இறைத்தூதர்களைப் பின்பற்றும்படி கட்டளையிடப் பட்டவர்களில் உங்கள் நபி (ஸல்) அவர்களும் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.11 அத்தியாயம் :

155

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் யூதர்களைத் தன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்கு அல்லாஹ் செத்த பிராணி களின் கொழுப்புகளை (ஹராமாக்கித்) தடை செய்தபோது அதை அவர்கள் உருக்கி அத(ன் விலையி)னை உட்கொண்டார்கள். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.13 அத்தியாயம் :

156

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால் தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்க மானவை அனைத்திற்கும் அல்லாஹ் தடை விதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்” (என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்). அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “இதை நீங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக் கேட்டீர்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். நான், “இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்' என்று பதில் சொன்னார்கள். அத்தியாயம் :

157

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு மேற்கில் உதயமாவதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருப்பவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் இறைநம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதருக்கும் அவர் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

158

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை யுக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரது (அப்போதைய புதிய) இறைநம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்” என்று கூறிவிட்டு, “உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (யுகமுடிவு) நாளில் முன்னரே இறைநம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும், அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) இறைநம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது” எனும் இந்த (6:158ஆவது) வசனத்தை ஓதினார்கள்.14 அத்தியாயம் :

159

அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் (பின்வரும்) இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம்! அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அவர்கள் சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள். “அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடை செய்துள்ளான். மேலும், அல்லாஹ்வைவிட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இலர். ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான்” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :

160

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தமது முகத்தில் அறைவாங்கிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே மக்கள் அவரை அழைத்(து வந்)தனர். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இவர் முகத்தில் ஏன் அறைந்தீர்கள்?” என்று கேட்க அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் யூதர்களைக் கடந்து சென்றேன். அப்போது இவர், “மனிதர்கள் அனைவரிலும் மூசாவை (சிறந்தவராக)த்தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!” என்று சொல்லக் கேட்டேன். உடனே நான், “முஹம்மதை விடவுமா?” என்று கேட்டேன். எனக்குக் கோபம் மேலிட, நான் இவரை அறைந்துவிட்டேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “இறைத்தூதர் களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையாகிவிடுவார்கள். மூர்ச்சை தெளிந்து எழுகின்றவர்களில் முதல் ஆளாக நான் இருப்பேன். அப்போது நான் மூசாவின் அருகே இருப்பேன். அவர் இறைவனுடைய அரியணையின் (அர்ஷின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பார். அவர் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டாரா, அல்லது “தூர்சீனா' மலையில் (இறைவனைச் சந்திக்கச் சென்றபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பதிலாக இங்கு (மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.3 மன்னும் சல்வாவும்4 அத்தியாயம் :

161

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சமையல் காளான் (தானாக வளர்வதில்) “மன்னு'வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5 அத்தியாயம் :

162

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு சமயம்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை கோபப்படுத்திவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தம்மை மன்னித்துவிடுமாறு வேண்டினார்கள். ஆனால், உமர் (ரலி) அவர்கள் மன்னிக்காமல் அபூபக்ர் (ரலி) அவர்களின் முகத்திற்கு முன்னால்(தம் வீட்டுக்) கதவைச் சாத்தினார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள். (அப்போது) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அபூபக்ர் (ரலி) அவர்கள் வருவதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதோ உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்” என்று சொன்னார்கள். (பிறகு) உமர் (ரலி) அவர்களும் தம்மால் ஏற்பட்டுவிட்ட செயலுக்கு வருந்தியவராக நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து சலாம் (முகமன்) கூறி அமர்ந்தார்கள்; (நடந்த) செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். (இதைக் கண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (வாக்குவாதத்தை தொடங்கிவைத்ததால் உமரைவிட) நானே அதிகம் அநீதியிழைத்தவனாகிவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மக்களே!) என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? (ஒரு காலத்தில்) “மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று சொன்னேன். அப்போது நீங்கள், “பொய் சொல்கிறீர்' என்று கூறினீர்கள். ஆனால் அபூபக்ர் அவர்களோ, “நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்” என்றார்கள்.6 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) “ஃகாமர' எனும் சொல்லுக்கு “நன்மையில் முந்திக்கொண்டார்' என்பது பொருள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

163

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களிடம், “ஹித்ததுன்' (எங்கள் பாவச் சுமையை இறக்குவாயாக!) என்று கூறிக்கொண்டே அதன் வாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாய் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிடுவோம்” என்று கூறப்பட்டது. ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க் கூறி)யபடி தம் புட்டங்களால் தவழ்ந்த வண்ணம் சென்றார்கள். மேலும் (உள்ளே நுழையும்போது) “ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்” (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய வித்து) என்று (பரிகாசமாகச்) சொன்னார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.7 அத்தியாயம் :

164

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர் களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்த வர்களே உமர் (ரலி) அவர்களின் அவை யினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா” என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்” என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள். உயைனா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோன் அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!” (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்” என்று சொன்னார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு (ரலி) அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக்காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக் கூடியவர்களாய் இருந்தார்கள். அத்தியாயம் :

165

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!” எனும் (7:199ஆவது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் அருளினான். அத்தியாயம் :

166

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்களின் நற்குணங்களில் ஒன்றான மன்னிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இவ்வசனத்தில்- 7:199) அல்லாஹ் கட்டளையிட் டுள்ளான்.8 அத்தியாயம் :

167

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்அன்ஃபால்' அத்தியாயம் (எது தொடர்பாக அருளப்பெற்றது என்பது) குறித்து வினவினேன். (அதற்கு) அவர்கள், “அது பத்ர் போர் தொடர்பாக அருளப்பெற்றது” என்று சொன்னார்கள். (மேலும், இந்த அத்தியாயத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட சொற்களுக்குப் பின்வருமாறு விளக்க மளிக்கப்பட்டுள்ளது:) (8:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷ்ஷவ்கத்' எனும் சொல்லுக்கு “(ஆயுத) முனை' என்பது பொருள். (8:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முர்திஃபீன்' எனும் சொல்லுக்கு “படை படையாக' என்பது பொருள். (இதன் வினைச்சொல்லான) “ரதிஃபனீ' மற்றும் “அர்தஃபனீ' என்பதற்கு “என்னைத் தொடர்ந்துவந்தான்' என்று பொருள். (8:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃதூகூ' (சுவைத்துப் பாருங்கள்) எனும் சொல்லுக்கு “அனுபவித்துப் பாருங்கள்' என்பது பொருள். வாயால் சுவைப்பதை இது குறிக்காது. (8:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபயர்குமஹு' எனும் சொல்லுக்கு “தீயோரை அவன் ஒன்றுசேர்ப்பான்' என்று பொருள். (8:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷர்ரித்' எனும் சொல்லுக்கு “சிதறி(யோ)டச்செய்யுங்கள்' என்பது பொருள். (8:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ இன் ஜனஹூ' எனும் சொற்றொடருக்கு “அவர்கள் (சமாதானத்தைக்) கோரினால்' என்று பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்ஸில்ம்' எனும் சொல்லும் “அஸ்ஸல்ம், அஸ்ஸலாம் ஆகிய சொற்களும் (“சமாதானம்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். (8:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யுஸ்கின' எனும் சொல்லுக்கு “முறியடிப்பார்' என்று பொருள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (8:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முகாஃ' எனும் சொல் “அவர்கள் தங்கள் விரல் (நுனி)களைத் தங்கள் வாய் களுக்குள் நுழைத்துக்கொள்வதைக்' குறிக்கும். “தஸ்தியா' எனும் சொல்லுக்கு “சீட்டியடித்தல்' என்று பொருள். (8:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லி யுஸ்பித்தூக்க' எனும் சொல்லுக்கு “உங்களை அடைத்துவைக்க' என்பது பொருள். அத்தியாயம் :

168

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் மோசமானவர்கள், (உண்மையை) விளங்கிக்கொள்ளாத செவிடரும் ஊமையரும்தான் எனும் (8:22ஆவது) இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், “பனூ அப்தித் தார் குலத்தைச் சேர்ந்த சிலர்தான் அவர்கள்” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :

169

அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (“மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், “நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அவனுடைய தூதருக்கும் பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா?” எனக் கேட்டார்கள். பிறகு, “நான் (பள்ளிவாசலிலிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உமக்குக் கற்பிக்கிறேன்” என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப்போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி (ஸல்) அவர்கள், “அது அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' எனும் (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்தான்” என்று சொன்னார்கள்.3 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

170

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், “இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியம்தான் என்றிருப்பின் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையைஎங்களுக்குக் கொண்டுவா!” என்று சொன்னான். அப்போது “(நபியே!) நீர் அவர் களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையைஇறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டி ருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனைக்குள்ளாக்காமல் ஏன் இருக்க வேண்டும்? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” எனும் வசனங்கள் (8:33,34) அருளப்பெற்றன. அத்தியாயம் :

171

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், “இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியமே என்றிருப்பின், எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!” என்று சொன்னான். அப்போது “(நபியே!) நீர் அவர் களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனைக்குள்ளாக்காமல் ஏன் இருக்க வேண்டும்? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” எனும் வசனங்கள் (8:33,34) அருளப்பெற்றன. அத்தியாயம் :

172

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒரு மனிதர் என்னிடம் வந்து, “அபூஅப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன் வேதத்தில் (பின்வருமாறு) கூறியிருப்பதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார். “இறைநம்பிக்கையாளர்களில் இரு பிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்குமிடையே சமாதானப்படுத்திவிடுங்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் மீது (எல்லை மீறி) அநீதியிழைத்தால், அநீதியிழைத்தோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும்வரை அவர்களை நீங்கள் எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விருவருக்கிடையே நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் நீதிமான்களை நேசிக்கின்றான்” (49:9). “இந்நிலையில், அல்லாஹ் தன் வேதத்தில் கூறியுள்ளபடி நீங்கள் போரிட முன்வராமல் இருப்பது ஏன்?” என்றும் கேட்டார். நான், “என் சகோதரர் மகனே! இந்த (49:9ஆவது) வசனத்திற்கு ஏதேனும் சமாதானம் கூறிவிட்டு (முஸ்லிம்களில் ஒரு பிரிவினருக்கெதிராகப்) போர் புரியாமல் இருந்துவிடுவது, “ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய பிரதிபலன் நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான். மேலும், அவன்மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் உள்ளது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைத்துள்ளான்” என்ற (4:93ஆவது) வசனத்திற்குச் சமாதானம் சொல்வதைவிட எனக்கு உவப்பாதாயிருக்கும்” என்று கூறினேன்.4 அந்த மனிதர் “ “(பூமியிóருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிவிடும் வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள்' (8:39) என்று அல்லாஹ் கூறுகின்றானே!” என்று கேட்டார். நான், “(இதை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் செயல்படுத்திவிட்டோம். அப்போது இஸ்லாம் (உறுப்பினர் எண்ணிக்கையில்) குறைவானதாக இருந்தது. அப்போது (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட) ஒரு மனிதர் தமது மார்க்கத்தின் விஷயத்தில் குழப்பத்திற்கு(ம் சோதனைக்கும்) உள்ளாக்கப்பட்டார்; ஒன்று (எதிரிகள்) அவரைக் கொன்றுவிடுவார்கள். அல்லது அவரைக் கட்டிவைத்துவிடுவார்கள். முடிவில் இஸ்லாம் (அதன் உறுப்பினர்களால்) அதிகரித்தபோது எந்தக் குழப்பமும் (எஞ்சி) இருக்கவில்லை” என்று பதிலளித்தேன். தாம் எண்ணி வந்ததற்கு நான் இணங்காததை அவர் கண்டதும், “அலீ (பின் அபீதாலிப்) மற்றும் உஸ்மான் (பின் அஃப்பான்) விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். நான், “அலீ மற்றும் உஸ்மான் ஆகியோர் விஷயத்தில் என் கருத்து (இதுதான்:) உஸ்மான் (ரலி) அவர்களை அல்லாஹ்வே மன்னித்துவிட்டான். ஆனால் அவர்களை மன்னிக்க நீங்கள் விரும்பவில்லை. அலீ (ரலி) அவர்களோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகனும் நபியவர்களின் மருமகனும் ஆவார்கள்” என்று கூறினேன்.5 (இதன்அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இப்னு உமர் (ரலி) அவர்கள், “இதோ நீங்கள் காண்கின்ற இந்த இடத்தில் உள்ளதுதான் நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமாவின்) இல்லமாகும்” என்று -தம் கரத்தால் சைகை செய்தவாறு- கூறினார்கள். அத்தியாயம் :

173

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அப்போது) ஒருவர் (அன்னாரிடம்), “நீங்கள் (இந்த முஸ்லிம்களுக்கிடையிலான) குழப்பத்தின் (காரணமாக விளைந்துள்ள) போரைக் குறித்து என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “குழப்பம்' (ஃபித்னா) என்றால் என்ன என்பது உமக்குத் தெரியுமா? முஹம்மத் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களுடன் போரிட்டுவந்தார்கள். இணைவைப்பாளர்களிடம் முஸ்லிம் ஒருவர் சென்றால் குழப்பத்தில் (சோதனையில்) சிக்கிக்கொள்வார்” என்று பதிலளித்துவிட்டு, “அவர்களது போர் ஆட்சியதிகாரத்திற்காக நடக்கும் உங்களது போரைப் போன்று இருந்ததில்லை” என்றும் கூறினார்கள். அத்தியாயம் :

174

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்” எனும் (8:65ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் பத்து பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு விதியாக்கப்பட்டது. இதையே, “இருநூறு பேரைக் கண்டு இருபது பேர் வெருண்டோடக் கூடாது” என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் பலமுறை தெரிவித்தார்கள். அதன் பிறகு, “எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்துகொண்டு, தற்சமயம் (அதை) உங்களுக்குத் தளர்த்தி விட்டான். ஆகவே, உங்களில் (பொறுமையும்) சகிப்புத் தன்மை(யும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் (மற்ற) இருநூறு பேரை வெற்றி கொண்டு விடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களிடம் இருந்தால் அல்லாஹ்வின் உதவியால் (மற்ற) இரண்டாயிரம் பேரை வெற்றி கொண்டுவிடுவார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” எனும் (8:66ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. (அதன் மூலம்) அல்லாஹ் நூறு முஸ்லிம்கள் இருநூறு பேரைக் கண்டு வெருண்டோடக் கூடாது என்று விதித்தான். ஒருமுறை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் இவ்வசனம் (8:65) குறித்துக் கூறியபோது (கூஃபாவின் நீதிபதியும் தாபிஉமான அப்துல்லாஹ்) இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள், “நன்மை புரியும்படி கட்டளையிட்டுத் தீமையிலிருந்து தடுப்பதையும்கூட நான் இது போன்றே கருதுகின்றேன் என்று கூறினார்” என்றும் கூடுதலாக அறிவித்தார்கள். அத்தியாயம் :

175

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்” எனும் (8:65ஆவது) வசனம் அருளப்பெற்று, (முஸ்óம்) ஒருவர் (இறைமறுப்பாளர்கள்) பத்துப் பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட போது அது முஸ்லிம்களுக்குச் சிரமமாயிருந்தது. ஆகவே, (சட்டத்தைத்) தளர்த்தும் வசனம் வந்தது. அதில் அல்லாஹ், “எனினும், உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் அறிந்துகொண்டு தற்சமயம் (அதனை) உங்களுக்குத் தளர்த்திவிட்டான். ஆகவே, உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் நூறு பேர் (எதிரிகளில்) இருநூறு பேரை வெற்றி கொள்வார்கள்” எனும் வசனம்(8:66) அருளப்பெற்றது. (எதிரிகளைச் சமாளிக்கும்) விகிதத்தை அல்லாஹ் குறைத்துவிட்டபோதே அதே அளவுக்குச் சகிப்புத் தன்மையையும் அவன் குறைத்துவிட்டான். அத்தியாயம் :

176

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) உம்மிடம் அவர்கள் (வாரிசுகள் இல்லாமல் இறந்துவிடுவோர் குறித்து) தீர்ப்புக் கேட்கிறார்கள்; அத்தகையவர்கள் குறித்து உங்களுக்கு அல்லாஹ் தீர்ப்பு அளிக்கிறான்... என்று நீர் கூறுவீராக!” எனும் (4:17ஆவது) இறை வசனம்தான் கடைசியாக அருளப்பெற்ற இறைவசனமாகும். (9ஆவது அத்தியாயமான) “பராஅத்' (அத்தவ்பா) அத்தியாயமே இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயம் ஆகும்.2 அத்தியாயம் :

177

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அபூபக்ர் (ரலி) அவர்கள் தலைமையில் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய (வர)க் கூடாது; நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது” என்று மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் அனுப்பிவைத்தார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பிரகடனம் செய்யும்படி அலீ (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொடர்ந்து) கூறுகிறார்கள்: எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹிஜ்ஜா பத்தாம்) நாளன்று மினாவாசிகளிடையே, “(இணை வைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்தும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யமாட்டார் என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.3 அத்தியாயம் :

178

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது தலைமையில் நடந்த) அந்த ஹஜ்ஜின்போது “துல்ஹிஜ்ஜா மாதம் பத்தாம் (நாளான நஹ்ருடைய) நாளில் மினாவில் “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது' என்றும் அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் (ஒருவனாக) அனுப்பிவைத்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பொது அறிவிப்புச் செய்யும்படி கட்டளையிட்டார்கள். ஆகவே, எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹிஜ்ஜா பத்தாம்) நாளன்று மினாவாசிகளிடையே (இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டனர் என்றும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும் இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.4 அத்தியாயம் :

179

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைவராக்கி அனுப்பிய ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது' என்றும், “நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது' என்றும் மக்களிடையே பொது அறிவிப்புச் செய்யும் ஒரு குழுவினருடன் என்னையும் (ஓர் அறிவிப்பாளராக) அனுப்பிவைத்தார்கள். இதன் அறிவிப்பாளரான ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் (இந்த) ஹதீஸின் அடிப்படையில், “(துல்ஹிஜ்ஜா பத்தாம் நாளான) நஹ்ருடைய நாள்தான் பெரிய ஹஜ் நாளாகும்” என்று சொல்லிவந்தார்கள். அத்தியாயம் :

180

ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், “இந்த இறைவசனத்தில் (9:12) குறிப்பிடப்பட்டுள்ள (இறைமறுப்பாளர்களின் தலை)வர்களில் மூன்று பேரைத் தவிர வேறெவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. நயவஞ்சகர்களிலும் நான்கு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை” என்று கூறினார்கள்.5 அப்போது கிராமவாசி ஒருவர், “முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே! நீங்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்: எங்கள் வீடுகளைத் துளையிட்டு, எங்களின் உயர்தரமான பொருள்களைத் திருடிச் செல்கின்ற இவர்களின் நிலை என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லையே” என்று கேட்டார். அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அவர்கள் பாவிகளே! (இறை மறுப்பாளர்களோ நயவஞ்சகர்களோ அல்லர்.) ஆம்! அவர்களில் நால்வர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார்கள். அவர்களில் ஒருவர் வயது முதிர்ந்த கிழவர். (எந்த அளவுக்கு முதியவரென்றால்,) குளிர்ந்த நீரைப் பருகினால்கூட அதன் குளிர்ச்சி அவருக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அத்தியாயம் :

181

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது கருவூலம் மறுமை நாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :

182

ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (மதீனாவிற்கு அருகிலுள்ள) “ரபதா' எனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது நான், “இந்த இடத்தில் நீங்கள் தங்கியிருக்கக் காரணமென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டில் இருந்தோம். அப்போது நான், “எவர் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனை இருக்கிறது எனும் “நற்செய்தி'யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக” எனும் (9:34ஆவது) இறைவசனத்தை ஓதினேன். அதற்கு (ஷாமின் ஆட்சியாளர்) முஆவியா (ரலி) அவர்கள், “இந்த வசனம் (முஸ்லிம்களாகிய) நம் விஷயத்தில் (நம்மை எச்சரிப்பதற்காக) அருளப்படவில்லை; வேதக்காரர்கள் விஷயத்தில் (அவர்களை எச்சரிப்பதற்காகத்தான்) அருளப்பட்டது” என்று சொன்னார்கள். நான், “இது நம் விஷயத்திலும் அவர்கள் விஷயத்திலுமே (இருவரையும் சேர்த்து எச்சரிக்கை விடுக்கவே) அருளப்பட்டது என்று சொன்னேன்” எனப் பதிலளித்தார்கள்.7 அத்தியாயம் :

183

காலித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றோம். அப்(பயணத்தின்)போது அவர்கள் (9:35ஆவது இறைவசனத்தைப் பற்றி), “இது ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப்பெறுவதற்கு முந்தையதாகும். ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப் பெற்றபோது செல்வங்களைத் தூய்மைப் படுத்தக்கூடியதாய் ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என்று கூறினார்கள்.8 அத்தியாயம் :

184

(“விடைபெறும் ஹஜ்'ஜில் உரை யாற்றியபோது) நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போர் புரிவது விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்ற வையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹிஜ்ஜா, முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ் ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து “ரஜப்' மாதம் ஆகும்.9 இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

185

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நான் (ஹிஜ்ரத் பயணத்தின்போது) நபி (ஸல்) அவர்களுடன் (“ஸவ்ர்' எனும்) அந்தக் குகையில் (ஒளிந்துகொண்டு) இருந்தேன். அப்போது நான் இணைவைப்பாளர்களின் (கால்) சுவடுகளைக் கண்டேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்களில் ஒருவர் தமது காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவாரே!” என்று (அச்சத்துடன்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகின்றீர்?” என்று கேட்டார்கள்.10 அத்தியாயம் :

186

இப்னு அபீமுளைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது நான் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,) “இப்னு ஸுபைருடைய தந்தை ஸுபைர் (ரலி) அவர்களும், அவர்களுடைய தாயார் அஸ்மா (ரலி) அவர்களும், அவர்களுடைய சிறிய தாயார் ஆயிஷா (ரலி) அவர்களும், அவர்களுடைய பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களும், அவர்களுடைய பாட்டி ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஆயிற்றே! (இத்தகைய சிறப்புகள் மிக்க இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக்கு நீங்கள் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து, ஏன் கலீஃபாவாக ஏற்கக் கூடாது?)” என்று கேட்டேன்.11 (இதன் அறிவிப்பாளரும் புகாரீ (ரஹ்) அவர்களின் ஆசிரியருமான) அப்துல்லாஹ் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “இதன் அறிவிப்பாளர் தொடர் எத்தகையது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “எமக்கு அறிவித்தார்' (ஹத்தஸனா) என்று சொல்லத் தொடங்கினார். அதற்குள் ஒருவர் அவரது கவனத்தை (வேறொரு கேள்வியால்) திசை திருப்பவே (இன்னார் அறிவித்தார் என்று) இப்னு ஜ‚ரைஜின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்துவிட்டார். (இதனால், இப்னு ஜ‚ரைஜிடமே அவர் நேரடியாகக் கேட்டிருக்கலாம்; அல்லது வேறொருவர் வாயிலாக இப்னு ஜ‚ரைஜிடமிருந்து அறிவித்திருக்கலாம்.) அத்தியாயம் :

187

இப்னு அபீமுளைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக் கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இடையே சிறிது (மனத்தாங்கல்) ஏற்பட்டிருந்தது. அப்போது நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் காலையில் சென்று, “நீங்கள் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் போரிட்டு அல்லாஹ்வின் (புனிதத் தலமான) ஹரமை (இரத்தம் சிந்த) அனுமதிக்கப்பட்ட இடமாக (ஹலாலானதாக) ஆக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இறைவன் காப்பாற்றட்டும். இப்னு ஸுபைரையும் பனூ உமய்யாக்களையும்தான் ஹரமில் போர் புரிவதை அனுமதிக்கின்றவர்களாக அல்லாஹ் எழுதிவைத்துள்ளான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்கள் (என்னிடம்) “இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்' என்று சொன்னார்கள். நான், “இந்த ஆட்சியதிகாரம் அவரைவிட்டு எங்கே போய்விடும்? அவருடைய தந்தையோ -அதாவது ஸ‚பைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களோ- நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவியாளராவார். அவருடைய பாட்டனாரோ -அதாவது அபூபக்ர் (ரலி) அவர்களோ- (நபி (ஸல்) அவர்களின்) குகைத்தோழர் ஆவார். அவருடைய தாயாரோ -அதாவது அஸ்மா (ரலி) அவர்களோ- “கச்சுடையாள்' (என்று நபி (ஸல்) அவர்களால் சிறப்புப் பெயர் சூட்டப்பெற்றவர்) ஆவார். அவர்களுடைய சிறிய தாயாரோ -அதாவது ஆயிஷா (ரலி) அவர்களோ- இறைநம்பிக்கையாளர்களின் அன்னை யாவார். அவர்களுடைய அத்தையோ -அதாவது ஹதீஜா (ரலி) அவர்களோ- நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆவார். நபி (ஸல்) அவர்களின் அத்தையோ -அதாவது ஸஃபிய்யா (ரலி) அவர்களோ- அவருடைய பாட்டியாவார். மேலும் அவர், இஸ்லாத்தில் நெறி பிறழாதவர்; குர்ஆனை நன்கறிந்தவர். அல்லாஹ்வின் மீதாணையாக! உமய்யாக்கள் என்னுடன் உறவாடுகிறார்கள் என்றால் சொந்தத்தின் காரணத்தால் உறவாடுகிறார்கள்.12 எனக்கு அவர்கள் ஆட்சியாளர் களானால் அதற்குத் தகுதியுடையோராயும் சிறந்த பாரம்பரியமுடையோராயுமே ஆட்சியாளர்களாகின்றனர். (அப்படியிருந்தும் நான் அவர்களைக் கைவிட்டு, இப்னு ஸுபைருக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய உறுதிபூண்டேன். ஆனால்) அவரோ “துவைத்'களுக்கும், “உசாமா'க்களுக்கும், “ஹுமைத்'களுக்கும் (என்னைவிட) முன்னுரிமை அளித்துவிட்டார். (இப்னு ஸுபைருடைய குலத்தாரான) “பனூ அசத்' குலத்தைச் சேர்ந்த பனூ துவைத், பனூ உசாமா, பனூ ஹுமைத் ஆகிய குடும்பங்களையே குறிப்பிடுகின்றார்கள்.13 இப்னு அபில்ஆஸ் -அப்துல் மலிக் பின் மர்வான்- அவர்கள் (தம் சகாக்களிடையே பல சிறப்புகள் பெற்று) முன்னேறிச் செல்கிறார். இவரோ -இப்னுஸ் ஸுபைரோ- பின்னடைவுக்கு ஆளாகிவிட்டார். அத்தியாயம் :

188

இப்னு அபீமுளைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: இந்த (ஆட்சியதிகாரத்தின்) விஷயத்தில் (அது தனக்கே சேர வேண்டு மென்று) இப்னு ஸுபைர் அவர்கள் உறுதியாக நிற்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? “நான் இப்னு ஸுபைருக்காக (அவருக்கு ஆதரவு கொடுப்பதா, வேண்டாமா என்பதில்) என் மனசாட்சியுடன் விவாதித்து வருகிறேன். (இந்த அளவுக்கு) நான் அபூபக்ர் (ரலி) அவர்களுக்காகவோ உமர் (ரலி) அவர்களுக்காகவோ வாதாடிய தில்லை. அவர்கள் இருவருமோ இப்னு ஸுபைரைவிட அனைத்து நன்மைகளுக் கும் தகுதி வாய்ந்தோராய் இருந்தனர்” என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். “இப்னு ஸுபைர் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் அத்தை (ஸஃபிய்யா) உடைய (புதல்வரின்) புதல்வரும், ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் புதல்வரும் ஆவார். மேலும், அவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் (புதல்வி அஸ்மாவின்) புதல்வரும், கதீஜா (ரலி) அவர்களின் சகோதரர் (அவ்வாம்) உடைய (புதல்வர் ஸுபைரின்) புதல்வருமாவார். இன்னும் அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி (அஸ்மா) உடைய புதல்வரும் ஆவார்” என்று (மக்களிடம்) கூறினேன். ஆனால், இப்னு ஸுபைரோ, தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டு என்னைவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். நான் அவருக்கு நெருக்கமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. “மேலும், நானாக முன்வந்து இதற்கு ஆதரவு தெரிவித்தால் அதை அவர் ஏற்கவே செய்வார் என்றே நான் கருதியிருந்தேன். (இனியும் எனக்கு) அவர் நன்மை ஏதேனும் செய்வார் என்று நான் கருதவில்லை. (அப்படி) அவர் (தமது நிலையில்) உறுதியாக இருப்பாரென்றால், என்னுடைய தந்தை உடன்பிறந்தவரின் மக்கள் (பனூ உமய்யா) என்மீது ஆட்சி செலுத்துவதே மற்றவர்கள் (பனூ அசத்) என்மீது ஆட்சி செலுத்துவதைவிட எனக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று நான் எண்ணிக்கொண்டேன். அத்தியாயம் :

189

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பிவைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும், “இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்” என்று சொன்னார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒரு மனிதர், “நீங்கள் நீதியாக நடந்துகொள்ளவில்லை” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவருடைய பரம்பரையில் ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். (வேட்டைக்காரனின் அம்பு வேட்டைப் பிராணியைத் துளைத்துவிட்டு வெகுவிரைவில் வெளியேறுவதைப் போன்று) அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்” என்று கூறினார்கள்.14 அத்தியாயம் :

190

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது நாங்கள் கூலிக்குச் சுமை சுமக்கும் வேலை செய்யலானோம். அபூஅகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு “ஸாஉ' (பேரீச்சம்பழம்) கொண்டுவந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டுவந்தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், “(அரை “ஸாஉ' கொண்டுவந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக் கொண்டுவந்திருக்கிறார்” என்று (குறை) சொன்னார்கள். அப்போதுதான், “(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்களென்றால், இறைநம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரிவழங்குவோரின் தானதர்மங் களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காகச்) சிரமப்பட்டுச் சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அவர்களை அல்லாஹ் நகைக்கின்றான். மேலும், அவர்களுக்கு வதைக்கும் வேதனையும் உண்டு” எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.15 அத்தியாயம் :

191

அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், “தர்மம் செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அப்போது நாங்கள் இரு கையளவு (தானியம் தர்ம மாகக்) கொண்டுவருவதற்குக்கூடக் கடுமையாக உழைப்போம். (ஆனால்,) எங்களில் சிலருக்கு இன்று ஒரு லட்சம் (தீனார்/திர்ஹம்) உள்ளது” என்று - தம்மைப் பற்றியே குறிப்பிடுவதைப் போன்று - கூறினார்கள்.16 அத்தியாயம் :

192

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டபோது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்கு கஃபனிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் மேலங்கியைக் கேட்டார்கள்.17 அவரிடம் நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று (அதாவது நயவஞ்சகருக்கு பாவமன்னிப்புக் கோர வேண்டாமென்று) உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்!” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பாவன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் விருப்ப உரிமையளித்துள்ளான்” என்று கூறிவிட்டு, “(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது கோராமல் இருப்பீராக! (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீர் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்” என்று கூறுகிறான். நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்” என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவர் நயவஞ்சகராயிற்றே!” என்று சொன்னார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நீர் நிற்க வேண்டாம்” எனும் (9:84ஆவது) வசனத்தை அருளினான்.18 அத்தியாயம் :

193

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்கர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இறந்தபோது அவருக்கு ஜனாஸா தொழு கையை முன்னின்று நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதற்காக) எழுந்த போது அவர்களிடம் நான் குதித்தோடிச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இப்னு உபைக்கு நீங்கள் முன்னின்று தொழுகை நடத்துகிறீர்களா? அவரோ இன்னின்ன காலகட்டத்தில் இப்படி இப்படியெல்லாம் சொன்னாரே!” என்று அவர் சொன்னவற்றை (எல்லாம்) நபியவர்களுக்குப் பட்டியóட்டுக் காட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை புரிந்துவிட்டு, “எனக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளுங்கள், உமரே!” என்று சொன்னார்கள். நான் அவர்களை இன்னும் அதிகமாகத் தடுக்கவே, அவர்கள், “இவருக்காகப் பாவமன்னிப்புக் கோரவும் கோராமல் இருக்கவும் எனக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டுள்ளது. நான் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதைத் தேர்ந் தெடுத்துக்கொண்டேன்.) நான் எழுபது முறையைவிட அதிகமாகப் பாவமன்னிப் புக் கோரினால் இவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கப்படும் என்று எனக்குத் தெரிய வருமாயின் எழுபது முறையைவிட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுவித்துவிட்டுத் திரும்பினார்கள். சற்று நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் “பராஅத்' (9ஆவது) அத்தியாயத்திலிருந்து, “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் ஜனாஸா தொழுவிக்க வேண்டாம்; அவருடைய மண்ணறை அருகேயும் நீர் நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்து விட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்துபோனார்கள்” எனும் (9:84, 85 ஆகிய) இரு வசனங்கள் அருளப்பெற்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குமுன் பேசிய என் துணிச்சலைக் கண்டு பின்னர் நான் வியந்தேன். (எனினும்) அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகவும் அறிந்தவர்கள். அத்தியாயம் :

194

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்து விட்டபோது அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியை அவரிடம் கொடுத்து அப்துல்லாஹ் பின் உபையை அதில் கஃபனிடும்படி உத்தர விட்டார்கள். பிறகு அவருக்கு ஜனாஸா தொழுவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, “நயவஞ்சகராயிருந்த இவருக்கு நீங்கள் தொழுவிக்கிறீர்களா? அல்லாஹ்வோ, இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டாம் என்று உங்களைத் தடுத்துள்ளானே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவர்களுக்காக நான் பாவமன்னிப்புக் கோரலாம் அல்லது கோராமலும் இருக்கலாம் என்று) “எனக்கு அல்லாஹ் நான் விரும்பியதைச் செய்துகொள்ள விருப்ப உரிமை அளித்துள்ளான்' அல்லது “அல்லாஹ் எனக்கு இவ்வாறு அறிவித்துள்ளான்' என்று கூறி, “(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது கோராமல் இருப்பீராக. (இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) அவர்களுக்காக நீர் எழுபது முறை பாவ மன்னிப்புக் கோரினாலும் அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான்” எனும் (9:80ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். பிறகு, “நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காக அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோருவேன்” என்று சொன்னார்கள். பின்னர் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுடன் தொழுதோம். பிறகு அல்லாஹ், “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் இறுதித்தொழுகை தொழுவிக்க வேண்டாம்; அவருடைய மண்ணறை அருகேயும் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி) நீர் நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்து விட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்துபோனார்கள்” எனும் (9:84ஆவது) வசனத்தை நபிகளாருக்கு அருளினான். அத்தியாயம் :

195

அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் “தபூக்' போரில் கலந்துகொள்ளாமல் தாம் பின்தங்கிவிட்டது குறித்துக் கூறியதை நான் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நல்வழியில் செலுத்தியபிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்துகொள்ளாதது குறித்து வினவியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போல) பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால், பொய் கூறிய (மற்ற)வர்கள் அழிந்ததைப் போல நானும் அழிந்துபோயிருப்பேன். “நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக்கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்கள்மீது திருப்தி கொண்டுவிட வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள்மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்கள்மீது ஒருபோதும் திருப்தி கொள்ளமாட்டான்” எனும் வசனங்கள் (9:95, 96) அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்துபோனார்கள்.19 அத்தியாயம் :

196

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: இன்றிரவு என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்து என்னை (தூக்கத்திலிருந்து) எழுப்பி (அழைத்து)ச் சென்றார் கள். அவர்கள் இருவரும் தங்கச் செங்கல்லாலும் வெள்ளிச் செங்கல்லாலும் கட்டப்பெற்றிருந்த ஒரு நகரத்திற்கு சென்று சேர்ந்தார்கள். அப்போது எங்களைச் சில மனிதர்கள் எதிர்கொண்டார்கள். அவர்களின் உடலமைப்பில் பாதி நீ பார்த்ததிலேயே மிக அழகானதாயும், மற்றொரு பாதி நீ பார்த்ததிலேயே மிக அருவருப்பானதாயும் இருந்தது. அ(ந்த வான)வர்கள் இருவரும் அந்த மனிதர்களிடம், “நீங்கள் சென்று அந்த ஆற்றில் விழுங்கள்” என்று கூற அவர்களும் அவ்வாறே அதில் விழுந்தனர். பிறகு எங்களிடம் திரும்பிவந்தனர். (அதற்குள்) அந்த அருவருப்பான தோற்றம் அவர்களை விட்டுச் சென்றுவிட்டிருந்தது. அவர்கள் மிக அழகான தோற்றமுடையவர்களாக மாறிவிட்டிருந்தனர். (என்னை அழைத்துச் சென்ற) அந்த இருவரும் என்னிடம், “இதுதான் “அத்ன்' எனும் சொர்க்கம். இதுதான் உங்கள் தங்குமிடம்” என்று கூறிவிட்டுப் பிறகு, “பாதி (தோற்றம்) அழகானதாயும் பாதி (தோற்றம்) அருவருப்பானதாயும் இருந்தவர்கள் (உலக வாழ்வில்) நற்செயலையும் வேறு தீய செயலையும் கலந்துவிட்டவர்கள். அவர்களின் குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான்” என்று (விளக்கம்) சொன்னார்கள். இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

197

முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்) அபூதாலிபுக்கு மரணவேளை வந்தபோது அவரருகில் அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும் இருக்க, நபி (ஸல்) அவர்கள் வந்து, “என் பெரிய தந்தையே! “லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடம் தங்களுக்காக வாதாடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும், “அபூதாóபே! (உங்கள் தகப்பனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் மார்க்கத்தையா நீங்கள் வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “(என் தந்தையின் சகோதரரே!) உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக் கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும்வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பேன்” என்று சொன்னார்கள். அப்போதுதான், “இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள்தான் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும்- அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும்கூட- அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பதற்கு நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை” எனும் (9:113 ஆவது) இறைவசனம் அருளப்பட்டது.21 அத்தியாயம் :

198

அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் பாட்டனார்) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (இறுதி நாட்களில்) கண்பார்வை அற்றவராக இருந்தபோது அவர்களைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்த அன்னாருடைய புதல்வரான (என் தந்தை) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்: (என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில் தாம் கலந்து கொள்ளாததைப் பற்றிய) தமது செய்தியை விவரித்தபோது, “எவரது விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்ததோ அவர்களது குற்றத்தை அல்லாஹ் மன்னித்துவிட்டான்” என்று தொடங்கும் (9:118ஆவது) இறைவசனம் குறித்துச் சொன்னவற்றை நான் செவியுற்றேன். கஅப் (ரலி) அவர்கள் தமது பேச்சின் இறுதியில் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், “(அல்லாஹ்வின் தூதரே!) என் பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வத்தின் மீதான (எனது) உரிமையை விட்டுவிட்டு அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அதைத் தர்மமாக அளித்துவிடுகிறேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது” என்று சொன்னார்கள்.22 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

199

அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தையும் (தபூக் போரில் கலந்துகொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப் பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்உஸ்ரா' (எனும் தபூக்) போர், பத்ர் போர் ஆகிய இரு போர்களைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட எந்த அறப்போரிலும் நான் கலந்துகொள்ளாமல் ஒருபோதும் இருந்ததில்லை. மேலும் (தபூக் போரில் கலந்து கொள்ளாதது பற்றிய) உண்மையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முற்பகலில் நான் சொல்லிவிட முடிவு செய்தேன். தாம் மேற்கொண்ட எந்தப் பயணத்திலிருந்து (ஊரை நோக்கித் திரும்பி) வரும்போதும் முற்பகல் நேரத்தில்தான் பெரும்பாலும் நபி (ஸல்) அவர்கள் வருவார்கள். (அப்படி வந்ததும்) தம் வீட்டிற்குச் செல்லாமல் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது அவர்களின் வழக்கம். (வழக்கப்படி அன்றும் தொழுதுவிட்டு, தபூக் போரில் கலந்துகொள்ளாதவர்களான) என்னிடமும் (ஹிலால், முராரா எனும்) என்னிரு சகாக்களிடமும் பேசக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் (மக்களுக்குத்) தடை விதித்தார்கள். (அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின்தங்கிவிட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை. ஆகவே, மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரம் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்துவந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்துவிட நபி (ஸல்) அவர்கள் எனக்கு இறுதித் தொழுகை தொழுவிக்காமல் இருந்துவிடுவார்களோ! அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்து போனால்) எனக்கு இறுதித் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பதுதான். அப்போதுதான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (எங்களுடன் பேசக் கூடாதென மக்களுக்குத் தடை விதித்ததிலிருந்து ஐம்பது நாட்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்தபோது இது நடந்தது. அந்நேரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள் என்னைக் குறித்து நல்லெண்ணம் கொண்டவராகவும் என் விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்துபவராகவும் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மு சலமா! கஅபின் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (நடுநிசியைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால்) மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்க விடாமல் செய்து விடுவார்கள்” என்றார்கள். ஆக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றியபின் எங்கள் (மூவரின்) பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டது குறித்து (மக்களுக்கு) அறிவிப்புச் செய்தார்கள். -நபி (ஸல்) அவர்களுக்கு (ஏதேனும்) மகிழ்ச்சி ஏற்படும்போது அவர்களின் முகம் நிலவின் ஒரு துண்டு போலாகிப் பிரகாசிக்கும். (போருக்குச் செல்லாமல் இருந்துவிட்டு) சாக்குப்போக்குச் சொன்னவர்களிடமிருந்து அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூவரின் விஷயத்தில் மட்டுமே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில்தான் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து அல்லாஹ் (வசனத்தை) அருளி னான். போரில் கலந்துகொள்ளாமலிருந்த வர்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பொய்யுரைத்துத் தவறான சாக்குப்போக்குகளைக் கூறியவர்கள் குறித்து மிகக் கடுமையாகப் பேசப்பட்டது. அது போல் யாரைக் குறித்தும் பேசப் பட்டதில்லை. தூயோன் அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே! போர் முடிந்து) நீங்கள் அவர்களிடம் திரும்பிய சமயத்தில் உங்களிடம் அவர்கள் (வந்து போருக்குத் தாம் வராதது குறித்து மன்னிப்புத் தேடி) சாக்குப்போக்குக் கூறுகின்றனர். (ஆகவே, அவர்களை நோக்கி, நபியே!) நீர் கூறுவீராக: நீங்கள் சாக்குப்போக்குக் கூறாதீர்கள். நாங்கள் உங்களை ஒருபோதும் நம்பவேமாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்துவிட்டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். பின்னர் நீங்கள் மறைவானவை, வெளிப்படையானவை ஆகிய அனைத்தையும் அறிந்தவனிடம் கொண்டுவரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அந்த நேரத்தில் அவனே உங்களுக்கு அறிவிப்பான். (9:94)23 அத்தியாயம் :

200

அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் பாட்டனார்) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் (இறுதிக் காலத்தில் கண் பார்வையற்ற அவர்களுக்கு) வழிகாட்டியாக இருந்த (என் தந்தை) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தாம் தபூக் போரில் கலந்து கொள்ளாமலிருந்துவிட்ட செய்தியை அறிவித்தபோது நான் அவர்களிடமிருந்து (பின்வருமாறு) செவியுற்றேன்: அல்லாஹ்வின் மீதாணையாக!உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததை விடச் சிறப்பாக வேறெவரையும் அல்லாஹ் சோதித்ததாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இந்த நாள்வரை நான் திட்டமிட்டுப் பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின்வரும் வசனங்களை அருளினான்: நிச்சயமாக அல்லாஹ் (தன்) தூதர்மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்ப வேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகள்மீதும் (அருள் புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக்கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்கள்மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்கள்மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான். மேலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவுக்கு மோசமாகிவிட்டிருந்த தெனில்,) பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது குறுகி அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாகிவிட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அவர்களை அல்லாஹ் மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள். (9:117-119) அத்தியாயம் :

201

ஸைத் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) -அன்னார் வேத அறிவிப்பை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார்- அவர்கள் கூறியதாவது: யமாமா போர் நடைபெற்றபின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னை அழைத்துவர ஆளனுப்பினார்கள்.24 (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: உமர் அவர்கள் என்னிடம் வந்து, “இந்த யமாமா போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். (இறைமறுப் பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (ஆகவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்றுசேர்க்க வேண்டுமென நான் கருதுகின்றேன்” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?” என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்” என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும்வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (உசிதமானதாகக்) கண்டேன். (இதை அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர் (ரலி) அவர்கள் (ஏதும்) பேசாமல் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். (பிறகு) அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்), “நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக வேத அறிவிப்புகளை எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்றுதிரட்டுங்கள்” என்று கூறினார்கள்.25 அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டு மென எனக்கு அவர்கள் கட்டளை யிட்டிருந்தாலும்கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், “நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்” என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக்கொண்டிருந்தேன். முடிவில் எதற்காக அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன்வந்தேன்.) ஆகவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுத் தோல்கள், அகலமான எலும்புகள், பேரீச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களுடைய நெஞ்சங்கள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) “அத்தவ்பா' எனும் (9ஆவது) அத்தியாயத்தின் (கடைசி) இரு வசனங்களை குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை. (அவை:) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்துள்ளார். நீங்கள் படும் துன்பம் அவருக்குப் பளுவாக இருக்கும். மேலும், உங்கள்மேல் அதிக அக்கறை கொண்டவர், இறை நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும் கருணையும் உள்ளவர் ஆவார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அரியணையின் (அர்ஷின்) அதிபதியாயிருக்கின்றான். (9:128, 129) (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப் பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும்வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர் (ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும்வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்தது.26 இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்ராஹீம் பின் சஅத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “(அவ்விரு வசனங்கள்) “குஸைமா' (ரலி) அல்லது “அபூகுஸைமா' (ரலி) அவர்களிடம் இருந்தன” என (ஐயப்பாட்டுடன்) அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :

202

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தார்கள். (அங்கு) யூதர்கள் “ஆஷூரா' (முஹர்ரம் பத்தாம் நாள்) நோன்பு நோற்றுக்கொண்டிருந்தார்கள். அன்றி அவர்கள், “இது மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்ட நாள்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “(யூதர்களான) இவர்களைவிட மூசா (அலை) அவர்களுக்கு நீங்கள்தான் அதிக உரிமையுடையவர்கள்; எனவே, (அந்நாளில்) நீங்கள் நோன்பு நோற்பீர்களாக!” என்று சொன்னார்கள்.3 அத்தியாயம் :

203

முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த (11:5ஆவது) வசனத்தை (வேறோர் ஓதல் முறையின்படி), “அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்” என ஓத நான் கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள், “மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும்போது (தம் ஆடையை நீக்கிப் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரிந்துவிடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலைகுனிந்து)கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

204

முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்” என்று இந்த (11:5ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். நான், “அபுல்அப்பாஸே! இந்த வசனத்திலுள்ள “அவர்களின் நெஞ்சங்கள் திரும்பிக் கொள்கின்றன' என்பதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அவர்கள், “சிலர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ள விரும்பும்போது, அல்லது (இயற்கைக் கடனை நிறைவேற்ற) தனியே ஒதுங்கச் செல்லும்போது (தம் பிறவி உறுப்பு வெளியே தெரிந்துவிடுகின்றதே என்று) வெட்கப்பட்டு (குனிந்து தம் நெஞ்சுகளால் அதை மூடி மறைக்க முற்பட்டு)வந்தார்கள். அப்போது இந்த இறைவசனம் அருளப்பட்டது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

205

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங் களை) அல்லாஹ்விடமிருந்து மறைப்ப தற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்” எனும் (11:5ஆவது) இறைவசனத்தை (பிரபல ஓதல் முறையின் படி) “அலா இன்னஹும் யஸ்னூன ஸுதூரஹும்' என்றே ஓதினார்கள். அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களல்லாத மற்றச் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: (இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யஸ்தஃக்ஷூன' எனும் சொல்லுக்கு, “அவர்கள் தங்கள் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்” என்று பொருள். (11:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சீஅ பிஹிம்' என்பதற்கு “லூத் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரைக் குறித்த நல்லெண்ணத்தை இழந்தார்கள்' என்று பொருள். “ளாக்க பிஹிம்' என்பதற்கு “தம் விருந்தினர்களைக் குறித்து (அவர்களைத் தீய செயலுக்குப் பயன்படுத்திக்கொள்ளத் தம் சமுதாயத்தார் முயல்வார்களோ எனும்) சங்கடம் லூத் (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது” என்று பொருள். (11:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பிகித்இம் மினல் லைல்' என்பதற்கு “இரவின் இருட்டு இருக்கும்போதே' என்பது பொருள். (11:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இலைஹி உனீப்' எனும் வாக்கியத்திற்கு “அவன் பக்கமே நான் திரும்புகிறேன்' என்பது பொருள். அத்தியாயம் :

206

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நீ (என் அன்பை அடைந்திட) (அறவழியில்) செலவு செய். உனக்காக நான் செலவு செய்வேன்” என்று சொன்னான். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள் ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கின்றது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்டது எதுவும் அவனது கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்துவிடவில்லை பார்த்தீர்களா! (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனது அரியணை (அர்ஷ்) நீரின் மேóருந்தது. அவனது கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகின்றான்; உயர்த்துகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (11:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஉதராக்க' எனும் சொல் “அரவ்த்துஹு' எனும் (வினைச்)சொல்லிலிருந்து “இஃப்தஅல்த்த' எனும் வாய்பாட்டு வினையெச்சத்தில் அமைந்துள்ளது. “அரவ்த்துஹு' என்பதற்கு “அவனுக்கு நான் கேடு உண்டாக்கினேன்' என்று பொருள். இ(ந்த மூலத்)திலிருந்துதான் “யஉரூஹு' (அவனுக்குப் பாதிப்பை உண்டாக்குவான்), “இஉதரானீ' (எனக்கு அவன் பாதிப்பை உண்டாக்கினான்) ஆகிய வினைச்சொற்கள் பிறந்தன. “ஒவ்வோர் உயிரினத்தின் குடுமியும் அவனது பிடியிலேயே இருக்கிறது” எனும் (11:56ஆவது) வசனத்தின் கருத்தாவது: அவனது ஆட்சியதிகாரத்திலேயே உள்ளது. (11:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அநீத்' எனும் சொல்லும் (அதே போன்ற) “அநூத்', “ஆநித்' ஆகிய சொற்களும் (“இறுக்கமான பிடிவாதக்காரன்' என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும். (11:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யகூலுல் அஷ்ஹாத்' (சாட்சியாளர்கள் கூறுவர்) எனும் தொடரில் “அல்அஷ்ஹாத்' என்பதன் ஒருமை “ஷாஹித்'; “அஸ்ஹாப்' என்பதன் ஒருமை “ஸாஹிப்' (நண்பன்) என்பதைப் போல. (11:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தஅமரக்கும்' எனும் சொல்லுக்கு “உங்களை (அதில்) வசிப்பவர்களாக ஆக்கினான்' என்று பொருள். இதே வகையைச் சேர்ந்ததே “அஉமர்த்துஹுத் தார' என்பதும். இதன் பொருள்: அவனுக்கு இவ்வீட்டை (அவன் வாழ்நாள் முழுவதும்) உடைமையாக்கிக் கொடுத்தேன். (11:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நகிரஹும்' எனும் சொல்லும், (அதே போன்ற) “அன்கரஹும்', “இஸ்தன்கரஹும்' ஆகிய சொற்களும் (“அவர்களைப் புதிராகப் பார்த்தார்' என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும். (11:73ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹமீதுன் மஜீத்' என்பதில் “மஜீத்' (மாட்சிமை மிகுந்தவன்) எனும் சொல் “மாஜித்' எனும் (வினையாலணையும் பெயர்ச்) சொல்லில் இருந்து “ஃபஈல்' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும். “ஹமீத்' (புகழுக்குரியவன்) எனும் சொல் “ஹமித' எனும் (வினைச்)சொல்லிலிருந்து செயப்பாட்டு எச்சவினையின் (மஹ்மூத்) பொருள் கொண்டதாகும். (11:82ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சிஜ்ஜீல்' எனும் சொல்லுக்கு “கெட்டியான, பெரிய' என்று பொருள். “சிஜ்ஜீல்', “சிஜ்ஜீன்' இரண்டுக்கும் பொருள் ஒன்றே. (இச்சொற்களின் இறுதியிலுள்ள) “லாம்', நூன்' ஆகிய எழுத்துகள் (உச்சரிப்பில்) நெருக்கமானவையாகும். (கவிஞர்) தமீம் பின் முக்பில் கூறினார்: எத்தனையோகாலாட் படையினர்முற்பகல் வேளையில்கடுமையாக (சிஜ்ஜீன்)தாக்கிவிடுகின்றனர்தலைக் கவசங்களில்!மாபெரும் வீரர்கள்கூடஅதைப் பற்றி அறிவுறுத்துவர்இறுதி மூச்சின்போது.3 அத்தியாயம் :

207

ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அபூஅப்திர் ரஹ்மான்) இப்னு உமர் (ரலி) அவர்கள் (கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு, “அபூஅப்திர் ரஹ்மானே!' அல்லது “இப்னு உமரே!' (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர் “அவருடைய இறைவனுக்கருகில் கொண்டுவரப்படுவார்.' அல்லது “இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார்.' அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். (அவரிடத்தில் இறைவன்), “நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா” என்(று கேட்)பான். அவர், “(ஆம்) அறிவேன். என் இறைவா!” என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், “இவற்றை யெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகின்றேன்” என்று கூறுவான். பிறகு அவரது நற்செயல்களின் பதிவேடு (அவரிடத்தில் வழங்கப்பட்டுச்) சுருட் டப்படும். “மற்றவர்கள்' அல்லது “இறைமறுப்பாளர்கள்' சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, “இவர் கள்தான், தம் இறைவன்மீது பொய் யைப் புனைந்துரைத்தவர்கள்” என அறிவிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்றார்கள்.5 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

208

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அநீதியாளனுக்கு விட்டுக்கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவேமாட்டான்” என்று கூறிவிட்டு, பிறகு,”அநீதி இழைக்கும் ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனது பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனது பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதும் ஆகும்” எனும் (11:102ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். அத்தியாயம் :

209

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (அந்நியப்) பெண் ஒருவரை முத்தமிட்டுவிட்டார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது “பகலின் இரு முனைகளிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுங்கள். நிச்சயமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன. (அல்லாஹ்வை) நினைவுகூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல் ஆகும்” எனும் (11:114ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அந்த மனிதர், “இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான்” என்று பதிலளித்தார்கள்.6 அத்தியாயம் :

210

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தான் கண்ணியத்திற்குரியவர். அவர், இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 அத்தியாயம் :

211

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம், “மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்விடம் மக்களிலேயே கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், “நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் நபி (இஸ்ஹாக்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் நபி (யஅகூப்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் நபி யூசுஃப் அவர்கள்தான்” என்று பதிலளித்தார்கள். மக்கள், “இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், “அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியரின் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? என்றார்கள். மக்கள், “ஆம்' என்றனர். நபி (ஸல்) அவர்கள், “அறியாமைக் காலத்தில் உங்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள்தான் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர் களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.3 அத்தியாயம் :

212

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள்மீது அவதூறு கற்பித்தவர்கள், தாம் சொன்னதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது ஆயிஷா (ரலி) குற்றமற்றவர்கள் என்று அல்லாஹ் அறிவித்ததைப் பற்றி நான், உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிட மிருந்து செவியுற்றுள்ளேன். இவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு எடுத்துரைத்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்), “நீ நிரபராதி என்றால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்ற மற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் புரிந்திருந்தால் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு” என்று சொன்னார்கள். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! யூசுஃப் (அலை) அவர்களுடைய தந்தையை விட(ச் சிறந்த) முன்னுதாரணம் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. எனவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்” (12:18) என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், “இந்த அவதூறைப் புனைந்து கொண்டுவந்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்...” என்று (தொடங்கும் 24:11 முதல் 20 வரையுள்ள) பத்து வசனங்களை அருளினான்.4 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

213

ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் ஆயிஷாவும் வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தபோது ஆயிஷாவுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “(அவரைப் பற்றிப்) பேசப்பட்டுவரும் பேச்சின் காரணத்தால் (காய்ச்சல் வந்து) இருக்கலாம்!” என்று கூறினார்கள். நான், “ஆம்! (அப்படித்தான்)” என்றேன். ஆயிஷா எழுந்து உட்கார்ந்து கொண்டு, எனக்கும் உங்களுக்கும் உரிய முன்னுதாரணம் யஅகூப் (அலை) அவர்களும் அவர்களுடைய பிள்ளை களும் ஆவர். இல்லை; உங்கள் மனம் ஒரு (பெரிய) காரியத்தை உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. எனவே, அழகான பொறுமையே (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்துரைப்பவற்றிலிருந்து அல்லாஹ்விடமே உதவி கோர வேண்டும்” (12:18) என்று சொன்னார்கள். அத்தியாயம் :

214

அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (12:23ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “காலத் ஹைத்த லக்க' எனும் தொடரை, அது நமக்கு எப்படிக் கற்றுத் தரப்பட்டுள்ளதோ அப்படியே நாம் ஓதுகிறோம் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். (12:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஸ்வாஹு' எனும் சொல்லுக்கு “இவரைத் தங்கவைத்தல்' என்பது பொருள். (12:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்ஃபயா' எனும் சொல்லுக்கு “அவர்கள் இருவரும் கண்டனர்' என்று பொருள். (37:69ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள “அல்ஃபவ் ஆபாஅஹும்' என்பதற்கு “அவர்கள் தம் மூதாதையரைக் கண்டார்கள்' என்று பொருள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், (37:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “பல் அஜிப்த்த வ யஸ்கரூன்' என்பதை) “பல் அஜிப்த்து வ யஸ்கரூன்' (நான் ஆச்சரியப்படுகின்றேன்; அவர்களோ பரிகசிக்கின்றனர்) என்று ஓதினார்கள். அத்தியாயம் :

215

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடமிருந்து குறைஷியர் இஸ்லாத்தை ஏற்கக் காலம் தாழ்த்தியபோது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட) ஏழாண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்தி என்னை இவர்களிடமிருந்து பாதுகாத்திடுவாயாக!” என்று (அவர்களுக்கெதிராகப்) பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் வந்து (வளங்கள்) அனைத் தையும் அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், அவர்கள் எலும்புகளைச் சாப்பிட்டனர்; (கடும் பசி, பட்டினியால் கண் பஞ்சடைந்து பார்வை மங்கி அவர்களில்) ஒருவர் வானத்தை நோக்கினால், அவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். அல்லாஹ் கூறுகின்றான்: “இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும்” (44:10). மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் சற்று வேதனையை அகற்றி விடுகின்றோம். (ஆனால், அப்போதும்) நீங்கள் (பழைய நிலைக்கே) திரும்புகிறீர்கள் (44:15). இந்நிலையில், மறுமை நாளில் இறைமறுப்பாளர்களைவிட்டு வேதனை நீக்கப்படுமா என்ன? (நிச்சயம் நீக்கப்படப் போவதில்லை.) ஆக, (கடுமையான பசி, பட்டினி ஏற்பட்டதன் மூலம்) அந்தப் புகையும் வந்துவிட்டது; பத்ர் போரில் (இறைவனின்) தண்டனையும் வந்துவிட்டது.5 அத்தியாயம் :

216

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) “லூத்' (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டு வானாக! அன்னார் வலுவான ஓர் ஆதர வாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவுக்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க்கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். அவர்களிடம் அல்லாஹ், “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டபோது அவர்கள், “ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்துபோனதை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்” என்று பதிலளித்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

217

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “(நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறைஉதவி வரும் என்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும்கூட)க்கருதலானார்கள். இந்நிலையில் நமது உதவி அவர்களை வந்தடைந்தது” என்று அல்லாஹ் கூறுகின்றான் (12:110). இவ்வசனத்தின் மூலத்தில் (“பொய் யுரைக்கப்பட்டது என்பதைக் குறிப்ப தற்குரிய சொல்லை) “குஃத்திபூ' (தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது “குஃதிபூ' (மக்கள் தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது எனக் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? என்று நான் கேட்டேன். “குஃத்திபூ (தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள்) என்றுதான் வாசிக்க வேண்டுமென ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். உடனே, “தங்களுடைய சமுதாயத்தார் தங்களைப் பொய்ப்பித்திருக்கிறார் கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள். (ஆனால், “ழன்னூ- நபிமார்கள் சந்தேகித்தார்கள்' என்றுதானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகின்றவாறு எப்படிப் பொருள் கொள்ள முடியும்?)” என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆம்! என் ஆயுளின் (இரட்சகன்) மீதாணையாக! அதை அவர்கள் உறுதியாக நம்பியே இருந்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், “ழன்னூ' என்பதற்கு “நபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்' என்றே பொருள் கொள்ள வேண்டும்; “சந்தேகித்தார்கள்' என்று பொருள் கொள்ளக் கூடாது)” என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) அவர்களிடம் நான், “ “கத் குஃதிபூ' (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்று நபிமார்கள் கருதலானார்கள்) என்று இருக்கலாமோ!” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் காப்பற்றட்டும்! நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை” என்றார்கள். உடனே நான், “இந்த வசனம் (கூறும் பொருள்)தான் என்ன?” என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “இறைத் தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தார் தங்கள் இறைவனை நம்பி, இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என்று ஏற்று, அதன் பிறகு (தாம் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே போய், இறைஉதவியும் தள்ளிப் போய்க்கொண்டிருந்த அந்த(ச் சூழ்) நிலையில்தான், அந்த இறைத்தூதர்கள், தம் சமுதாயத்தாரில் தமது செய்தியை பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டனர். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள்கூட (இறைஉதவி வரத் தாமதமான தாலும், துன்பமும் துயரமும் நீண்டுகொண்டே சென்ற காரணத்தாலும்) நமது செய்தியைப் பொய்யென்று கருதுகின்றார்கள் என்றும் அந்த இறைத்தூதர்கள் எண்ணலானார்கள். அப்போதுதான் நமது உதவி அவர்களை வந்தடைந்தது” (என்பதே அந்த வசனத்தின் பொருள்) எனப் பதிலளித்தார்கள்.7 அத்தியாயம் :

218

உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்), “அது அழுத்தல் குறி இல்லாமல் “குஃதிபூ' என்றிருக்கலாம் அல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் காப்பாற்றட்டும்' என்று மேற்கண்டபடி சொன்னார்கள். அத்தியாயம் :

219

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருப்பைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும், மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3 அத்தியாயம் :

220

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், “ “ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்' அல்லது “(அவரைப்) போன்றிருக்கும்' ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. மேலும் இப்படி... இப்படி... இப்படியெல்லாம் இராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக்கொண்டிருக்கும். (அத்தகைய ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள்)” என்று சொன்னார்கள். அப்போது என் மனத்தில், “அது பேரீச்ச மரம்தான்” என்று தோன்றியது. அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை நான் கண்டேன். ஆகவே, நான் பேச விரும்பவில்லை. (அங்கிருந்த) மக்கள் ஒன்றும் சொல்லாமலிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தாமே), “அது பேரீச்சமரம்” என்று கூறினார்கள். நாங்கள் (புறப்பட) எழுந்தபோது நான் உமர் (ரலி) அவர்களிடம், “என் அன்புத் தந்தையே! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனத்தில் அது பேரீச்சமரம்தான் என்று தோன்றியது” என்றேன். அதற்கு அவர்கள், “(அப்துல்லாஹ்!) நீ ஏன் (மனத்தில் தோன்றியதைக்) கூறாமலிருந்தாய்?” என்று கேட்டார்கள். நான், “நீங்களெல்லாரும் பேசாமலிருப்பதைப் பார்த்தேன். எனவே, நான் பேசவோ எதுவும் சொல்லவோ விரும்பவில்லை” என்று பதிலளித்தேன். உமர் (ரலி) அவர்கள், “நீ அதைச் சொல்லியிருந்தால் அதுவே இன்ன இன்ன (செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாய் இருந்திருக்கும்” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :

221

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் (இறந்தபின்) அடக்கத் தலத்தில் விசாரிக்கப்படும்போது, அவர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என்று உறுதிமொழி கூறுவார். இதுதான், “(இறை)நம்பிக்கை கொண் டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும் மறுமையிலும் உறுதிப்படுத்துகின்றான்' எனும் (14:27ஆவது) இறைவசனத்தின் கருத்தாகும். இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3 அத்தியாயம் :

222

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் அருட்கொடையை இறைமறுப்பாக மாற்றி (தம்முடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் தள்ளி விட்டவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? எனும் (14:28ஆவது) இறைவசனம், மக்காவாசிகளில் இருந்த இறைமறுப்பாளர்களைக் குறிக்கிறது” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.4 அத்தியாயம் :

223

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (சுஃப்யான் (ரஹ்) அல்லாத) மற்றவர் களின் அறிவிப்பில், “(அந்த ஓசையின் மூலம்) அல்லாஹ் தன் கட்டளையை வானவர்களுக்கு எட்டச்செய்வான்” என்று (கூடுதலாகக்) காணப்படுகிறது. (இறைக்கட்டளையைச் செவியுறும் வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள். பின்னர்) அவர்களின் இதயத்தைவிட்டுப் பீதி அகற்றப்படும்போது அவ்வானவர்கள், (அல்லாஹ்விற்கு நெருக்கமாயிருக்கும்) வானவர்களிடம், “நம் இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவுகின்றனர். அவர்கள் வினவியோரிடம், “(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்” என்று பதிலளிப்பர். உடனே, (இறைவனின் கட்டளை குறித்த) அந்த உரையாடலை ஒட்டுக்கேட்பவர்கள் செவியேற்றுவிடுகின்றனர். ஒருவர் மற்றவர் மேலே இருந்துகொண்டு இவ்வாறாக (கடைசி ஆள்வரை) ஒட்டுக்கேட்கின்றனர். சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (தமது அறிவிப்பில், அவர்களில் ஒருவர் மற்றவர் மேல் இருக்கும் விதத்தை) தமது வலக் கையின் விரல்களை விரித்துவைத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது அடுக்கி வைத்து (சைகையால்) விளக்கிக் காட்டினார்கள். அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் ஒருவர் அதைத் தம் சகாவிடம் தெரிவிப்ப தற்கு முன்பாகவே சில சமயங்களில் அவரைத் தீச்சுவாலை தாக்கிக் கரித்து விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் (தீச்சுவாலை) அவரைச் சென்றடைவதற் குள்ளாகவே (அந்த உரையாடலை) அவர் தமக்கு அடுத்துள்ளவரிடமும், அவர் தமக்குக் கீழுள்ளவரிடமும் தெரிவித்து இறுதியாகப் பூமிவரை அதைச் சேர்த்துவிடுகிறார்கள். சுஃப்யான் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “கடைசியில் அது பூமிக்கு வந்துசேர்ந்து சூனியக்காரனின் வாயில் இடப்படுகிறது. உடனே அவன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சில உண்மைகளை (மட்டும்) கூறுகின்றான். (இதைக் கேட்கும்) மக்கள், “இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென சூனியக்காரர்கள் நம்மிடம் கூற, அதை நாம் உண்மையானதாகவே காணவில்லையா?' என்று கூறுவார்கள். வானிலிருந்து ஒட்டுக்கேட்கப்பட்ட தகவலினாலேயே இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்து வந்துள்ள மற்றோர் அறிவிப்பில், “சூனியக்காரன் மற்றும் சோதிடனின் வாயில் இடப்படுகிறது” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் இந்த ஹதீஸை அம்ர் பின் தீனாரிடம் கேட்டபோது, அன்னார் இக்ரிமாவிடமும், இக்ரிமா அபூஹுரைரா (ரலி) அவர்களிடமும் கேட்டதாகத் தெரிவித்தாரா?” என வினவினேன். அதற்கு சுஃப்யான், “ஆம்' என்று பதிலளித் தார்கள். மேலும், நான் சுஃப்யான் அவர்களிடம், “இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள “ஃபுஸ்ஸிஅ' (பீதி அகற்றப்படும்போது) எனும் சொல்லை நபி (ஸல்) அவர்கள் அவ்வாறுதான் (“ஃபுஸ்ஸிஅ' என்று) ஓதினார்கள் என நீங்கள் குறிப்பிட்டதாக ஒருவர் அறிவித்தாரே! (அது சரிதானா?)” என்று வினவினேன். அதற்கு அன்னார், “அம்ர் பின் தீனார் அவர்கள் இவ்வாறுதான் ஓதினார்கள். ஆனால், அம்ர் (இக்ரிமாவிடமிருந்து) இவ்வாறுதான் செவியுற்றாரா என்பது எனக்குத் தெரியாது. இதுவே எங்களது ஓதல் முறையாகும்” என்று பதிலளித்தார்கள்.2 அத்தியாயம் :

224

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹிஜ்ர்'வாசிகளைக் குறித்து, “இந்தச் சமுதாயத்தாரின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லும்போது அழுதுகொண்டே செல்லுங்கள். நீங்கள் அழுதபடி செல்லப் போவதில்லையென்றால், அவர்களைத் தீண்டிய வேதனை உங்களையும் தீண்டி விடாமலிருக்க அவர்(களின் வசிப்பிடங்)களைக் கடந்துசெல்லாதீர்கள்” என்று சொன்னார்கள்.3 அத்தியாயம் :

225

அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நான் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் என்னைக்கடந்து சென்றார்கள். அப்போது என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும்வரை அவர்களிடம் செல்லவில்லை. (தொழுது முடித்த) பிறகு சென்றேன். அவர்கள், “(நான் அழைத்த வுடன்) நீர் ஏன் என்னிடம் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் தொழுதுகொண்டிருந்தேன்” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் நீங்கள் பதிலளியுங்கள்” என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு, “நீர் பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்லும் முன்பாக குர்ஆனிலேயே மகத்தான அத்தியாயமொன்றை உமக்கு நான் கற்றுத் தர வேண்டாமா?” என்று கேட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். நான் அவர்களுக்கு (அவர்கள் சொன்னதை) நினைவுபடுத்தினேன். அவர்கள், “அகிலத் தாரின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” (என்று தொடங்கும் “அல்ஃபாத்திஹா' அத்தியாயம்தான்.) அது திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த மகத்தான குர்ஆனும் ஆகும்” என்று சொன்னார்கள்.4 அத்தியாயம் :

226

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (“அல்ஃபாத்திஹா' அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

227

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அவர்களோ (தமது) வேதத்தைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள்” எனும் (15:91ஆவது) வசனம் வேதக்காரர்களைக் குறிக்கிறது. அவர்கள் (தமது) வேதத்தைப் பல கூறுகளாகப் பிரித்துக்கொண்டு, அதில் (தமக்கு இசைவான) சிலவற்றை நம்பி ஏற்றுக்கொண்டார்கள். (இசைவில்லாத) சிலவற்றை ஏற்க மறுத்துவிட்டார்கள். இதை சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

228

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(தம்) வேதத்தைப் பலவாறாகப் பிரித்தோர்மீது (முன்னர்) நாம் (வேதனையை) இறக்கியதைப் போன்றே” எனும் (15:90ஆவது) வசனம் (வேதக்காரர்களான) யூதர்கள் மற்றும் கிறித்தவர்களைக் குறிக்கிறது. அவர்கள் (தமது வேதத்தில்) சிலவற்றை நம்பி ஏற்று, சிலவற்றை மறுத்தார்கள். இதை அபூழப்யான் ஹுஸைன் பின் ஜுன்துப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

229

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத் தனத்திலிருந்தும் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், அடக்கத் தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்துவந்தார்கள். அத்தியாயம் :

230

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப் மற்றும் மர்யம் ஆகிய அத்தியாயங்கள் குறித்துக் கூறுகையில், “இவை அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் உள்ளவையாகும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங்களில் அடங்கும்” என்று குறிப்பிட்டார்கள்.2 (இந்த அத்தியாயத்தில் 56ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபஸயுன் ஃகிளூன' எனும் சொல்லுக்கு, “(தலையை) அசைப்பார்கள்” என்பது பொருள். (இதே வார்த்தையின் இறந்தகால வினைச்சொல்லான) “நஃகளத் சின்னுக்க' என்பதற்கு “உன் பல் அசைந்தது' என்று பொருள்- என மற்றவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

231

அபூஹுரைரா (ரலி) அவர்கள், கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஈலியா' (எனும் ஜெரூசலத்து)க்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களிடம் மது மற்றும் பால் கோப்பைகள் இரண்டு கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டையும் அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, பால் கோப்பையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள், “உங்களை இயற்கை நெறியின் பக்கம் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மதுக் கோப்பையை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப்போயிருக்கும்” என்று சொன் னார்கள்.4 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

232

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இரவின் ஒரு சிறு பகுதியில் நான் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ்வரை சென்றுவந்த தகவலைச் சொன்ன சமயம்) குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர். அப்போது நான் (கஅபாவின்) “ஹிஜ்ர்'எனும் (வளைந்த) பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்கு அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். உடனே நான் அதைப் பார்த்தபடியே அதன் அடையாளங்களை அவர்களுக்கு விவரிக்கலானேன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், “இரவில் நான் பைத்துல் மக்திசிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில் குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர். (அப்போது நான் “ஹிஜ்ர்' பகுதியில் நின்றிருந்தேன்.)” என்று (நபியவர்கள் கூறியதாகக்) கூடுதலாக இடம்பெற்றுள்ளது. (17:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “காஸிஃப்' எனும் சொல்லுக்கு “எல்லாவற்றையும் பிடுங்கி எறியும் பலத்த காற்று' என்பது பொருள். அத்தியாயம் :

233

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில், ஒரு குலத்தாரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால், “அமிர பனூ ஃபுலான்” (இன்ன குலத்தார் எண்ணிக்கையில் பெருகிவிட்டனர்) என்று கூறிவந்தோம். மற்றோர் அறிவிப்பில் “(அமிர என்பதற்குப் பதிலாக) “அமர' என்று காணப் படுகிறது.6 அத்தியாயம் :

234

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை ஒன்று அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. (அதை) நபி (ஸல்) அவர்கள் தம் பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு கூறினார்கள்: நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்றுதிரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியுற முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறுசிலரை நோக்கி) “உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர் களா?” என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறுசிலரிடம், “(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர். ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தர விட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம்பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக் காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் இன்று (கடும்) கோபம் கொண்டிருக்கிறான். இதற்குமுன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறிவிட்டு, “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள். உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, “நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதலாவது (முக்கிய) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான்.7 எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப்போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பதுபோல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டேன்.8 நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!” என்று கூறிவிட்டு, “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்” என்பார்கள். (அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று,) “இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (கடுங்)கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.9- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள். அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்களிடம் சென்று, “மூசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தனது தூதுத்துவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தி யுள்ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கூறுவார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், “இன்று என் இறைவன் (என்மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப்போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன்.10 நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள். அவ்வாறே மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் சென்று, “ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் குழந்தை யாய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங் கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு ஈசா (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (என்மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.- (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள். அப்போது மக்கள் என்னிடம் வந்து “முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களது முன், பின் பாவங்களை இறைவன் மன்னித்துவிட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியணைக்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்குமுன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு, “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி, “இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்' என்பேன். அதற்கு “முஹம்மதே! சொர்க்கத் தின். வாயில்களில் வலப் பக்க வாயில் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாயில்களிலும் மக்களுடன் இணைந்து நுழையலாம்' என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்க வாயிலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் “மக்காவிற்கும் (யமனிலுள்ள) “ஹிம்யர்' எனும் ஊருக்கும் இடையிலுள்ள' அல்லது “மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள' தூரமாகும்.11 அத்தியாயம் :

235

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாவூத் (அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம்- முழுவதையும் ஓதிவிடுவார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.12 அத்தியாயம் :

236

அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளராக) அழைக்கின்றனரோ அவர்களேகூடத் தங்களுடைய (உண்மை யான) இறைவனுக்கு அதிகம் நெருக்கமான வராய் ஆவது யார் என்பதற்காக அவனது நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” எனும் (17:57ஆவது) வசனம் குறித்து விளக்கம் அளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்: மனிதர்களில் சிலர் “ஜின்' இனத்தாரில் சிலரை வழிபட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்(டு அல்லாஹ்வை வழிபட்)டனர். (அப்படியிருந்தும்,) இந்த மனிதர்கள் தமது (இணைவைக்கும்) மார்க்கத்தையே (தொடர்ந்து) பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். மற்றோர் அறிவிப்பில், “17:56ஆவது வசனம் குறித்து விளக்கமளிக்கையில்...” என்று காணப்படுகிறது. அத்தியாயம் :

237

அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இந்த இணைவைப்பாளர் கள் யாரை(க் கடவுளராய்) அழைக்கின் றனரோ அவர்களேகூடத் தங்களுடைய (உண்மையான) இறைவனது நெருக் கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்” எனும் (17:57ஆவது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) விளக்கம் அளித்தார்கள்: “ஜின்' இனத்தாரில் சிலர் (மனிதர்கள் சிலரால்) வணங்கப்பட்டுவந்தனர். பின்னர் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர். அத்தியாயம் :

238

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) உமக்கு நாம் காண்பித்த (இக்)காட்சியையும், சபிக்கப்பட்ட மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப்பதையும் இம்மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்” எனும் (17:60ஆவது) வசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸிற்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாருக்குக் காட்டப்பட்ட கண்கூடான காட்சியைக் குறிக்கிறது. “சபிக்கப்பட்ட மரம்' என்பது “சப்பாத்திக் கள்ளி' செடியைக் குறிக்கிறது.13 அத்தியாயம் :

239

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். அதிகாலைத் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் ஒன்றுசேர்கின்றனர். இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால், “(நபியே!) அதிகாலையில் ஓதுவதைக் கடைப்பிடியுங்கள். (ஏனெனில்,) அதி காலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக்கூடியதாகும்” எனும் (17:78ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று சொன் னார்கள்.14 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

240

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் மறுமை நாளில் பல குழுக்களாக ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு சமுதாயத்தாரும் தத்தம் நபியைப் பின்தொடர்ந்து சென்று, “இன்னாரே (எங்களுக்காக அல்லாஹ்விடம்) பரிந்துரை செய்யுங்கள்” என்று கேட்பார்கள். (ஒவ்வொரு நபியும் தம்மால் இயலாதென்று மறுத்துக்கொண்டே வர) இறுதியில் நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரை (கோரிக்கை) செல்லும். (நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார்கள்.) நபியவர்களை அல்லாஹ் (“மகாமும் மஹ்மூத்' எனும்) உயர் தகுதிக்கு அனுப்பும் நாளில் இது நடக்கும்.15 அத்தியாயம் :

241

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகை அறிவிப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும்போது, “இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவிருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரித்தான (சொர்க்கத்தின்) உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அன்னாருக்குத் தந்தருள் வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் தகுதிக்கு அவர்களை அனுப்பி வைப்பாயாக!” என்று எவர் பிரார்த்திக் கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.16 அத்தியாயம் :

242

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறையில்லம் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருந்த நிலையில், நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நுழைந்தார்கள். தமது கரத்திலிருந்த குச்சியால் அவற்றைக் குத்தியபடி, “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக்கூடியதே!” (17:81)என்றும், “உண்மை வந்துவிட்டது; அசத்தியம் புதிதாக ஒன்றையும் செய்து விடவுமில்லை; (இனி) அது மீண்டும் ஒருமுறை பிறக்கப்போவதுமில்லை” (34:49) என்றும் கூறலானார்கள்.17 அத்தியாயம் :

243

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் (பேரீச்சந்தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் (நபியவர்களைச் சுட்டிக்காட்டி), “இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்” என்றார். மற்றவர், “உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது?” என்று அவரிடம் கேட்டார். இன்னொருவர், “நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக் கூடாது. (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்)” என்றார். பின்னர், (அனைவரும் சேர்ந்து), “அவரிடம் கேளுங்கள்” என்றனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உயிரை (ரூஹை)ப் பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள். அவர்களுக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. அப்போது நான், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறுகின்றது என அறிந்துகொண்டேன். ஆகவே, நான் எனது இடத்திலேயே எழுந்து நின்றுகொண்டேன். வேத அறிவிப்பு (வஹீ) இறங்கியதும், அவர்கள், “(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். சொல்வீராக: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது” எனும் (17:85ஆவது) இறைவசனத்தைக் கூறினார்கள்.18 அத்தியாயம் :

244

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(நபியே)! உமது தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம் எனும் (17:110ஆவது) இறைவசனம் தொடர்பாகக் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருதி) மக்காவில் தம் தோழர்களுடன் மறைந்துதொழும்போது குர்ஆனை சப்தமிட்டு ஓதுவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்கும்போது, குர்ஆனையும் அதை அருளிய இறைவனையும், அதை (மக்கள் முன்) கொண்டுவந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். ஆகவே, உயர்ந்தோன் அல்லாஹ் தன் நபியிடம் “நீர் உமது தொழுகையில் குரலை உயர்த்த வேண்டாம். அதாவது உரத்த குரலில் ஓதாதீர்கள். (ஏனெனில்,) இணைவைப்போர் அதைக் கேட்டுவிட்டு குர்ஆனை ஏசுவார்கள். (அதற்காக உடன் தொழுகின்ற) உம்முடைய தோழர்களுக்கே கேட்காதவாறு ஒரேயடியாகக் குரலைத் தாழ்த்தவும் வேண்டாம்! இவ்விரண்டுக்கு மிடையே, மிதமான போக்கைக் கைக்கொள்வீராக!” என்று கூறினான். அத்தியாயம் :

245

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “இந்த (17:110ஆவது) வசனம், பிரார்த்தனை (துஆ எனும் வேண்டுதல்) தொடர்பாக அருளப்பெற்றது” என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.19 அத்தியாயம் :

246

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடமும், ஃபாத்திமாவிடமும் இரவு நேரத்தில் வந்து, ‘‘நீங்கள் இருவரும் (‘தஹஜ்ஜுத்’) தொழவில்லையா?” என்று கேட்டார்கள்.2 (18:22ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ரஜ்மம் பில்ஃகைப்’ (மறைவான விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்துவிட்டவர்களைப்போல்) என்பதன் கருத்தாவது: (குகைவாசிகள் எத்தனை பேர் என்பது பற்றிய உண்மை நிலை) அவர்களுக்குத் தெளிவாக வில்லை. (18:28ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபுருத்’ எனும் சொல்லுக்கு ‘கவலைக்குரியது’ என்பது பொருள். (18:29ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘சுராதிக்’ எனும் சொல்லுக்கு ‘(நரகத்தின் ஜுவாலை) கூடாரங்களையும், கூடாரங்களால் சூழப்பட்ட அறையையும் போல (அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்)’ என்று பொருள். (18:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஹாவிருஹு’ (அவனிடம் பேசிக்கொண்டிருக்கின்றான்) எனும் சொல் ‘முஹாவரா’ (உரையாடல்) எனும் வேர்ச்சொல்லிருந்து பிறந்ததாகும். (18:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லாகின்ன ஹுவல்லாஹு ரப்பீ’ எனும் தொடருக்கு ‘லாகின் அன ஹுவல்லாஹு ரப்பீ’ (நிச்சயமாக அந்த அல்லாஹ்தான் என்னைப் படைத்துப் பராமரிப்பவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன்) என்று பொருள். (18:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கிலாலஹுமா எனும் சொல்லுக்கு ‘அவ்விரண்டுக்கும் இடையே’ என்று பொருள். (18:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸலக்’ எனும் சொல்லுக்கு ‘யாரும் காலூன்றி நிற்க முடியாத அளவுக்கு வழுவழுப்பானது’ என்று பொருள். (18:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வலாயா’ (அதிகாரம்) எனும் சொல், ‘அல்வல்யு’ எனும் வேர்ச்சொல்லிருந்து பிறந்ததாகும். (இதே வசனத்திலுள்ள) ‘உக்பன்’ எனும் சொல்லும் ஆகிபத், உக்பா, உக்பத் ஆகிய சொற்களும் ஒன்றாகும். இவற்றுக்கு ‘முடிவு’ என்பது பொருள். (18:55ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘குபுல்’ மற்றும் (இன்ன பிற ஓதல் முறைகளில் வந்துள்ள) கபல், கிபல் ஆகிய சொற்களுக்கு ‘(கண்) எதிரில்’ என்று பொருள். (18:56ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘லி யுத்ஹிளூ’ எனும் சொல்லுக்கு ‘வீழ்த்திவிடுவதற்காக’ என்று பொருள். (இச்சொல்) ‘வழுக்கிவிடுதல்’ எனும் பொருள் கொண்ட ‘தஹள்’ எனும் வேர்ச் சொல்லிலிருந்து வந்ததாகும். அத்தியாயம் :

247

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘களிர் (அலை) அவர்களுடைய சம காலத்தவரான மூசா, இஸ்ரவேலர்களின் இறைத்தூதரான மூசா (அலை) அல்லர். (அவர் வேறொரு மூசா) என்று (பேச்சாளரான) நவ்ஃப் அல்பிகாலி3 கூறுகிறாரே!” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் விரோதி பொய் உரைத்துவிட்டார். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செவியுற்றதாக எமக்கு அறிவித்துள்ளார்கள்: (ஒருமுறை) மூசா (அலை) அவர்கள், இஸ்ரவேலர்களிடையே நின்று சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘‘மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான்” என்று பதிலளித்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில் மூசா (அலை) அவர்கள், ‘‘(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, ‘‘(இல்லை;) இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்” என்று அறிவித்தான். மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், ‘‘நீங்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக்கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங்கள்!) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார்” என்று சொன்னான். எனவே, மூசா (அலை) அவர்கள் ஒரு கூடையில் மீனை எடுத்துக்கொண்டு நடந்தார்கள். தம்முடன் தம் உதவியாளர் யூஷஉ பின் நூனையும் அழைத்துக் கொண்டார்கள். இருவரும் (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) பாறைக்கு வந்து சேர்ந்தபோது அங்கு இருவரும் தலைவைத்து உறங்கினார்கள். கூடையிலிருந்த அந்த மீன் கூடையிலிருந்து குதித்து வெளியேறிக் கடலில் விழுந்தது. கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துக்கொண்டு (செல்லத் தொடங்கி)விட்டது. நீரோட்டத்தை மீனைவிட்டு அல்லாஹ் தடுத்துவிடவே அதைச் சுற்றி ஒரு வளையம் போல் நீர் ஆகிவிட்டது. மூசா (அலை) அவர்கள் (தூக்கத்திலிருந்து) விழித்தபோது அன்னாருடைய தோழர் (யூஷஉ) மீனைப் பற்றி அன்னாருக் குத் தெரிவிக்க மறந்துவிட்டார். எஞ்சிய பகலிலும் இரவிலும் அவர்கள் (தம் பயணத்தில் தொடர்ந்து) நடந்தனர்.மறுநாள் ஆனபோது மூசா தம் உதவி யாளரை நோக்கி, ‘‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவாரும்! நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்” என்று சொன்னார்கள். (18:62) அல்லாஹ் தமக்குக் கட்டளையிட்ட (இடத்)தை தாண்டிச் செல்லும்வரை, மூசா (அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை. அவர்களுடைய உதவியாளர், ‘‘நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவறவிட்டு)விட்டேன். அதை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தான்தான் எனக்கு மறக்கடித்துவிட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தன் வழியை அமைத்துக்கொண்டது” என்று கூறினார். (18:63) -அது மீனுக்குப் பாதையாகவும் மூசா (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய உதவியாளருக்கும் வியப்பாகவும் அமைந்தது.- அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘அதுதான் நாம் தேடிக்கொண்டிருந்த இடம்” என்று கூறினார்கள். உடனே அவர்களிருவரும் தங்கள் அடிச்சுவடு களைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில் அந்தப் பாறைக்கு இருவரும் வந்துசேர்ந்தார்கள். அங்கே தம்மை முழுவதுமாக ஆடையால் மூடியபடி ஒரு மனிதர் (களிர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர் (களிர்), ‘‘உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)?” என்று வினவினார். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், ‘‘பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூசாவா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, ‘‘உங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்” என்று கூறினார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்” என்று சொன்னார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், ‘‘நீர் என்னைப் பின்தொடர்ந்து வருவதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நானாக உமக்கு அதனை அறிவிக்கும்வரையில் நீர் என்னிடம் (அதைப் பற்றி ஏன், எதற்கு என்று விளக்கம்) கேட்கலாகாது” என்று கூறினார். பிறகு (மூசா, களிர்) இருவரும் கடற்கரையோரமாக நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் (மூவரும்) தங்களை ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (ஏழை களான மரக்கல உரிமையாளர்கள்) களிர் (அலை) அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை(த் தங்கள் மரக்கலத்தில்) கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக்கொண்டனர். இருவரும் மரக்கலத்தில் ஏறியதுதான் தாமதம்; களிர் (அலை) அவர்கள் வாய்ச்சி ஒன்றால் மரக்கலத்தின் (அடித்தளப்) பலகைகளில் ஒன்றைக் கழற்றி (அந்த இடத்தில் முளைக்குச்சியை அறைந்து)விட்டார்கள். (இதைக் கண்ட) மூசா (அலை) அவர்கள் திடுக்குற்றார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் களிரை நோக்கி, ‘‘கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றிக்கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே ஓட்டையாக்கிவிட்டீர்களே! இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் பெரிய (அபாயமான) செயலைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு களிர், ‘‘என்னுடன் உங்களால் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் கூறவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், நான் மறந்துபோனதற்காக என்னைத் தண்டித்து, என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்கள்” என்று கூறினார்கள். -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதல் முறையில் மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்.- (அப்போது) சிட்டுக்குருவியொன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, தன் (சின்னஞ்சிறு அலகால்) கடலில் ஒருமுறை உறிஞ்சி (நீர் அருந்தி)யது. அப்போது மூசா (அலை) அவர்களிடம் களிர் (அலை) அவர்கள், ‘‘உம்முடைய அறிவும் என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில், இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் கடலிலிருந்து எடுத்த (நீரின்) அளவுதான் (நம் அறிவு)” என்று சொன்னார்கள். பிறகு இருவரும் மரக்கலத்திóருந்து வெளியேறி, கடலோரமாக நடந்து கொண்டிருந்தபோது சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்ட களிர் (அலை) அவர்கள், அச்சிறுவனின் தலையைப் பிடித்துத் திருகிக் கொன்றுவிட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம், ‘‘ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்துவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே! நீங்கள் மிகக் கேடான செயலைச் செய்துவிட்டீர் கள்!” என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) உங்களுக்கு நான் சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். -(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைôனா (ரஹ்) அவர்கள் ‘‘இம்முறை களிர் (அலை) அவர்கள் கூறியது, முதல்முறை கூறியதைவிட (சற்று)க்கடுமையானதாகும்” என்று கூறினார்கள்.4- அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உங்களுடன் சேர்த்துக்கொள்ளாதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது” என்றார்கள். தொடர்ந்து இருவரும் நடந்தார்கள். இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவருக் கும் விருந்தோம்பல் செய்ய மறுத்து விட்டார்கள். (இந்நிலையில்) அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழலாமா என யோசித்துக் கொண்டிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைப் பார்த்த) உடன் களிர் (அலை) அவர்கள் அந்தச் சுவரைத் தமது கரத்தால் செப்பனிட்டார்கள். அப்போது மூசா (அலை) அவர்கள், ‘‘இந்த மக்களிடம் நாம் வந்து (உணவுகேட்டு)ம், இவர்கள் நமக்கு உணவளிக்கவு மில்லை; விருந்தோம்பல் செய்யவுமில்லை. (அவ்வாறிருந்தும் வேண்டுமென்றே நீங்கள் அவர்களின் சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள்.) நீங்கள் நினைத் திருந்தால் அதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே!” என்றார்கள். களிர் (அலை) அவர்கள், ‘‘இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத (இம்மூன்று) விஷயங்களின் விளக்கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறிவித்துவிடுகிறேன்” என்று கூறினார்கள். (இந்த நிகழ்ச்சியைக் கூறி முடித்தபின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மூசா பொறுமையாக இருந்திப்பாரேயானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகளை) நமக்கு இறைவன் அறிவித்திருப்பான் என்று நாம் விரும்பினோம்” என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (18:79ஆவது வசனத்தின் மூலத்தில்) ‘‘வ கான அமாமஹும் மலிக்குன் யஃகுஃது குல்ல சஃபீனத்தின் ஸாலிஹத்தின் ஃகஸ்பா” என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் பழுதில்லா நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக்கொண்டிருந்தான்.) மேலும், (18:80ஆவது வசனத்தின் மூலத்தில்) ‘‘வ அம்மல் ஃகுலாமு ஃப கான காஃபிரன் வ கான அபவாஹு முஃமினைனி” என்று ஓதுவார்கள். (பொருள்: அச்சிறுவன் இறைமறுப்பாள னாகவும் அவனுடைய தாய் தந்தை இறைநம்பிக்கையாளர்களாகவும் இருந் தனர்”)5 அத்தியாயம் :

248

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்துகொண்டிருந்த போது அவர்கள், ‘‘என்னிடம் (ஏதேனும் விளக்கம் கேட்க நினைத்தால்) கேளுங்கள்!” என்றார்கள். நான், ‘‘அபூஅப்பாஸ்6 அவர்களே!- அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்!- (இராக்கிலுள்ள) ‘கூஃபா’ நகரில் கதை சொல்லும் மனிதர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ‘நவ்ஃப்’ என்று சொல்லப்படும். அவர், (களிர் (அலை) அவர்களின் சமகாலத்தவரான) மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூசா (அலை) அவர்கள் அல்லர் (அவர் வேறொரு மூசாதான்)’ எனக் கூறுகிறார்” என்று சொன்னேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் விரோதி பொய் சொல்லிவிட்டார். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு (பின்வருமாறு) அறிவித்துள்ளார்கள்: ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் மூசா (அலை) அவர்கள் (தம் சமுதாய) மக்களுக்கு, (இறைவன் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை) நினைவூட்டிக் கண்கள் ததும்ப இதயங்கள் நெகிழ்ந்துருகும் அளவுக்கு உபதேசித்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து சேர்ந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! பூமியில் உங்களைவிட அறிந்தவர் எவரேனும் உண்டா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். ஆகவே, மூசா (அலை) அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள், ‘‘(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” எனப் பதிலளிக்காமல் விட்டுவிட்டார்கள். எனவே, மூசா (அலை) அவர்களிடம், ‘‘இல்லை. (உம்மைவிட அறிந்தவர் ஒருவர் பூமியில் இருக்கிறார்)” என்று (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) சொல்லப்பட்டது. மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! எங்கே (அவர் இருக்கிறார்)?” என்று கேட்க, இறைவன், ‘‘இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் (அவர் இருக்கிறார்)” என்றான். மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! நான் அவரைப் புரிந்துகொள்ள அடையாளமொன்றை எனக்கு ஏற்படுத்துவாயாக!” என்று கேட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘மீன் உங்களைவிட்டுப் பிரிகின்ற இடத்தில் (அவர் இருப்பார்) என அல்லாஹ் கூறினான்” என்று அறிவிப்பாளர் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். ‘‘உயிரற்ற மீன் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள்; அதற்கு உயிரூட்டப்படும் இடமே (அவர் இருக்கும் இடமாகும்) என அல்லாஹ் கூறினான்” என்று யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ஆக, மூசா (அலை) அவர்கள் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு (‘யூஷஉ பின் நூன்’ எனும்) தம் உதவியாளரிடம், ‘‘மீன் உம்மை விட்டுப் பிரிந்துவிடும் இடத்தை நீர் எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்தச் சிரமத்தையும் உமக்கு நான் தரமாட்டேன்” என்றார்கள். உதவியாளர், ‘‘(எனக்கு) நீங்கள் அதிகமான சிரமத்தைத் தரவில்லை” என்றார். ‘‘மூசா தம் உதவியாளரை நோக்கி...” என்று தொடங்கும் (18:60ஆவது) இறைவசனம்இதையே குறிப்பிடுகிறது. உதவியாளர் என்பது யூஷஉ பின் நூனைக் குறிக்கிறது. அவரது பெயர் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இல்லை. மூசா (அலை) அவர்கள் ஈரப்பதம் மிகுந்த ஓரிடத்தில் பாறையொன்றின் நிழலில் இருந்துகொண்டிருந்த சமயம் அந்த மீன் (உயிர் பெற்றுக் கடலில்) துள்ளிக் குதித்தது. அப்போது மூசா (அலை) அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உதவியாளர், ‘‘தாமாக விழித்தெழும்வரை நான் இவர்களை எழுப்பமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டார். இறுதியில் (மீன் உயிர் பெற்றுவிட்ட செய்தியை) அவர்களுக்குத் தெரிவிக்க மறந்துவிட்டார். மீன் (கூடையிலிருந்து) துள்ளிக் குதித்துக் கடலினுள் நுழைந்துகொண்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட, மீன் சென்ற அடையாளம் கல்லில் பதிந்தது போலானது. அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என்னிடம் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், ‘‘அந்த மீன் சென்ற (வழியின்) அடையாளம் வளையம் போலாகிவிட்டது” என்று கூறியவாறு தம்மிரு பெருவிரல்களையும் அவற்றை அடுத்துள்ள இரு (ஆட்காட்டி) விரல் களையும் வளையமிட்டு இவ்வாறெனக் காட்டினார்கள். (மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்றுகொண்டேயிருந்தார்கள். மறுநாள் புலர்ந்தபோது, மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம், ‘‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா!) நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்” என்று சொன்னார்கள். அதற்கு உதவியாளர், (மூசா (அலை) அவர்களிடம், ‘அல்லாஹ் உங்களிடமிருந்து களைப்பை அகற்றிவிட்டான்” என்று கூறினார். இத்தகவல் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இல்லை. உடனே அவர்கள் இருவரும் (வந்த வழியே) திரும்பியபோது களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள். அறிவிப்பாளர் உஸ்மான் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள், ‘‘களிர் (அலை) அவர்கள் கடல் நடுவி(லிருந்த தீவி)ல் பசுமையான விரிப்பொன்றின் மீது வீற்றிருந்தார்கள்” என்று என்னிடம் கூறினார்கள். (தொடர்ந்து) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: களிர் (அலை) அவர்கள், தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தி மூடிக்கொண்டு (அமர்ந்து) இருந்தார்கள். ஆடையின் ஓர் ஓரத்தைத் தம் கால்களுக்குக் கீழேயும் மற்றோர் ஓரத்தைத் தம் தலைக்குக் கீழேயும் வைத்திருந்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்கள் அன்னாருக்கு சலாம் (முகமன்) கூற, அவர் (பதில் சலாம் கூறிவிட்டு) தமது முகத்திலிருந்து (அந்த ஆடையை) விலக்கி, ‘‘எனது இந்தப் பகுதியில் (இவ்வாறு) சலாம் கூறும் வழக்கமும் உண்டா? நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘பனூ இஸ்ராயீல் களின் (இறைத்தூதரான) மூசாவா?” என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘என்ன விஷயம்?” எனக் கேட்க, ‘‘உங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக நான் (உங்களிடம்) வந்துள்ளேன்” என்று மூசா (அலை) அவர்கள் கூறினார்கள். ‘‘உங்கள் கரங்களிலுள்ள ‘தவ்ராத்’ வேதமும் உங்களுக்கு இறைச்செய்தி (வஹி) வந்துகொண்டிருப்பதும் உங்களுக்குப் போதாதா? மூசாவே! (அல்லாஹ் வழங்கியுள்ள) சில அறிவு என்னிடம் உள்ளது. அதை (எல்லாம்) அறிந்துகொள்வது உங்களுக்கு அவசியமாகாது. (இதைப் போன்றே அல்லாஹ் வழங்கியுள்ள) சில அறிவு உங்களிடம் உள்ளது. அதை (எல்லாம்) அறிந்துகொள்வது எனக்கு முறையாகாது” என்று களிர் (அலை) அவர்கள் கூறினார்கள்.7 அப்போது பறவை ஒன்று (பறந்து வந்து) தன் அலகால் கடலிலிருந்து (நீரை உறிஞ்சி) எடுத்தது. களிர் (அலை) அவர்கள் (மூசா (அலை) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தப் பறவை தன் அலகால் இந்தக் கடலிலிருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவுதான் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகை யில் என் அறிவும் உங்கள் அறிவும் உள்ளது” என்றார்கள். அவர்கள் இருவரும் மரக்கலத்தில் (ஏறி) பயணம் செய்தபோது சிறு சிறு மரக்கலங்களைக் கண்டனர். அவை இக்கரைக்காரர்களை அக்கரைக்காரர் களிடம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தன. அவர்கள் களிர் (அலை) அவர்களை அடையாளம் புரிந்துகொண்டு, ‘‘(இவர்) அல்லாஹ்வின் நல்லடியார்; இவரிடம் நாம் கட்டணம் கேட்கக் கூடாது” என்று கூறினர். -அறிவிப்பாளர் ஒருவர் கூறுகிறார்: நாங்கள் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘அவர் களிர் (அலை) அவர்கள்தானே?” என்று கேட்டோம். சயீத் (ரஹ்) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள்.- அப்போது களிர் (அலை) அவர்கள் (வாய்ச்சியின் உதவியால்) மரக்கலத்தின் ஒரு பலகையைக் கழற்றி அந்த இடத்தில் ஒரு முளைக்குச்சியை வைத்(து அறைந்)தார்கள். (இதைக் கண்ணுற்ற) மூசா (அலை) அவர்கள் (களிர் அவர்களிடம்), ‘‘(கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றி வந்தவர்களின்) மரக்கலத்தை ஓட்டையாக்கிவிட்டீர்களே! இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் மாபெரும் (அபாயமான) செயலையன்றோ செய்துவிட்டீர்கள்!” என்று கூறினார்கள். -’அபாயமானது’ என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள ‘இம்ர்’ எனும் சொல்லுக்கு ‘வெறுக்கப்பட்டது’ என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.- களிர் (அலை) அவர்கள், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் உங்களுக்கு (ஏற்கெனவே) சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். (களிர் (அலை) அவர்களின் நடவடிக்கைகள் குறித்து மூசா (அலை) அவர்கள்) முதல் தடவை பொறுமை யிழந்தது மறதியினாலாகும். இரண்டாம் தடவை பொறுமையிழந்தது சார்பு நிலை (ஷர்த்) ஆகும். மூன்றாம் முறை பொறுமையிழந்தது திட்டமிட்டு நடந்ததாகும்.8 மூசா (அலை) அவர்கள், ‘‘நான் மறந்துவிட்டதை வைத்து என்னைத் தண்டித்து என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்கள்” என்று சொன்னார்கள். பிறகு இருவரும் (நடந்தனர். வழியில்) ஒரு சிறுவனைச் சந்திக்கவே, களிர் (அலை) அவர்கள் அவனைக் கொன்றுவிட்டார்கள். அறிவிப்பாளர் யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘களிர் (அலை) அவர்கள், (வழியில்) விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைக் கண்டார்கள். உடனே (அவர்களில்) இறைமறுப்பாளனாகவும் அழகாகவும் இருந்த சிறுவன் ஒருவனைப் பிடித்துப் படுக்கவைத்துக் கத்தியால் அறுத்துவிட்டார்கள்” என சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அப்போது மூசா (அலை) அவர்கள் (களிர் (அலை) அவர்களிடம்), ‘ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரையா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே?” என்று கூறினார்கள். -(‘ஒரு பாவமும் அறியாத’ என்பதைக் குறிக்க குர்ஆன் மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘ஸகிய்யத்’ எனும் சொல்லை மற்றோர் ஓதல் முறையில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘ஸாகியத்’ என்று ஓதுவார்கள். அதற்கு ‘கீழ்ப்படிகின்றவன்’ என்பது பொருள். ‘ஃகுலாமன் ஸாகியா’ (‘கீழ்ப்படியும் சிறுவன்’) என்பதைப் போல.- மீண்டும் இருவரும் நடந்தார்கள். (இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள்.) அந்த ஊரில் கீழே விழலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள். அதைக் கண்ட உடனே, களிர் (அலை) அவர்கள் அந்தச் சுவரை நிலைநிறுத்தினார்கள். -இதைக் கூறும்போது சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், தம் கையால் இவ்வாறு எனச் சாடை செய்து காட்டினார்கள்.- யஅலா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘களிர் (அலை) அவர்கள், தமது கையால் சுவரைத் தடவ, அது நேராக நின்றுகொண்டது” என்று சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன். மூசா (அலை) அவர்கள், ‘‘நீங்கள் இதற்குக் கூலி வாங்கிக்கொண்டிருக்கலாமே” என்றார்கள். ‘நாம் சாப்பிடுவதற்காக(வாவது) கூலி வாங்கியிருக்கலாமே’ என்று மூசா (அலை) அவர்கள் கூறியதாக சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (18:79ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ கான வராஅஹும் மலிக்’ (அவர்களுக்கப்பால் ஓர் அரசன் இருந்தான்) என்பதை ‘வ கான அமாமஹும் மலிக்’ (அவர்களுக்கு முன்னால் ஓர் அரசன் இருந்தான்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதியுள்ளார்கள். சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அல்லாத மற்ற அறிவிப்பாளர்கள், ‘‘அ(ம்மன்ன)வன் (பெயர்) ‘ஹுதத் பின் புதத்’ என்றும், கொல்லப்பட்ட அச்சிறுவன் (பெயர்) ‘ஜைஸூர்’ என்றும் கருதுகின்றனர். ‘‘அந்த மரக்கலம் கடலில் (கூலி) வேலை பார்க்கும் ஏழைகள் சிலருக்குரியது. அதைப் பின்னப்படுத் தவே நான் அவ்வாறு செய்தேன். (ஏனென்றால், அம்மரக்கலம் செல்லும் மார்க்கத்தில்) இவர்களுக்குமுன் ஓர் (கொடுங்கோல்) அரசன் இருக்கிறான். அவன் (தான் காணும் நல்ல) மரக்கலங் கள் யாவற்றையும் அக்கிரமமாக அபகரித்துக்கொள்வான்” என்று களிர் (அலை) அவர்கள் கூறினார்கள். (18:79) அதாவது பின்னமான மரக்கலங்கள் அவனைக் கடந்து சென்றால் அதிலுள்ள பின்னத்தைக் கண்டு அதை அவன் விட்டுவிடுவான். மரக்கலக்காரர்கள் அவனைக் கடந்து சென்றதும் அதைப் பழுது பார்த்துப் பயன் பெற்றுக்கொள்வர். (அவர்களுடைய கையிலிருந்து மரக்கலம் போகாது). அறிவிப்பாளர்களில் சிலர், ‘‘(மரக்கலத்தில் ஏற்பட்ட) ஓட்டையைக் கண்ணாடியால் அவர்கள் அடைத்துவிட்டனர்” என்பர். வேறுசிலர், ‘‘அதைத் தாரால் அடைத்து விட்டனர்” என்பர். (கொல்லப்பட்ட சிறுவனுடைய விஷயம் என்னவெனில்,) அவனுடைய தாய், தந்தை இருவரும் (நல்ல) இறைநம்பிக்கையாளர்களாய் இருந்தனர்.(ஆனால்,) அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அக்கிரமம் செய்யும்படியும் (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்துவிடுவான் என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம். அதாவது அவன்மீதுள்ள பாசம் அவனது (பொய்யான) மதத்தைப் பின்பற்றும்படி அவர்களைத் தூண்டிவிடுமோ என்றஞ்சினோம். அவ்விருவருக்கும் இறைவன், இவனைவிட நல்லவனையும் பரிசுத்தமானவனையும் (பெற்றோர்மீது) அதிக அன்பு கொள்ளக்கூடியவனையும் பதிலாகக் கொடுப்பதை நாம் விரும்பினோம் என்று களிர் (அலை) அவர்கள் கூறினார்கள். ‘‘ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரையா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்?” என்று மூசா (அலை) அவர்கள் வினவி யதற்கேற்பவே இவ்வாறு களிர் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள். (18:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்ரப ருஹ்மா’ எனும் சொற்றொ டருக்கு, ‘களிர் (அலை) அவர்கள் கொன்ற முதல் (சிறு)வனைவிட (பெற்றோரான) அவர்கள் இருவர்மீதும் மிகவும் அன்பு பாராட்டுபவன் என்று பொருள். ‘‘(அவனுக்குப்) பதிலாக ஒரு பெண் மகவு அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது” என சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அல்லாதவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது. ‘‘அ(ச்சிறுவனுக்குப் பதிலாக வழங்கப் பட்ட)து பெண் மகவாகும்” என (அறிஞர்) பலர் வாயிலாக தாவூத் பின் அபூஆஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

249

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘இறைத்தூதரான மூசா (அலை) அவர்கள், களிர் (அலை) அவர்களைச் சந்தித்த மூசா அல்லர் (அவர் வேறொரு மூசா) என்று (பேச்சாளர்) நவ்ஃப் அல்பிகாலி கூறுகிறார்” என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் விரோதி பொய் சொல்லிவிட்டார். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்றார்: (ஒருமுறை) மூசா (அலை) அவர்கள், பனூ இஸ்ராயீல்களிடையே நின்று சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘‘மக்களில் மிகவும் அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான்” என்று பதிலளித்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள், ‘‘(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, ‘‘இல்லை; இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்” என்று அறிவித்தான். மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு (எனக்கு) வழி எப்படி?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், ‘‘நீங்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு கூடையில் போட்டுக்கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங் கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார். அவரைப் பின்பற்றிச் செல்லுங்கள்” என்று சொன்னான். எனவே, மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளர் ‘யூஷஉ பின் நூனுடன்’ அந்த மீன் சகிதமாகப் புறப்பட்டு (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) பாறைக்கு வந்து சேர்ந்து அதனருகில் ஓய்வெடுத்தார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் தம் தலையை வைத்து (படுத்து) உறங்கியும்விட்டார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அம்ர் பின் தீனார் (ரஹ்) அல்லாதோரின் அறிவிப்பில், ‘‘மேலும் அந்தப் பாறைக் கடியில் ஒரு நீரூற்று இருந்தது. அதற்கு ‘ஜீவ நீரூற்று’ என்று பெயர். அதன் நீர் பட்ட எந்தப் பொருளும் உயிர் பெறாமல் இருக்காது. அவ்வாறே அந்த மீனின் மீதும் அந்த ஊற்றின் நீர் பட்டது” என்று காணப்படுகிறது. உடனே அந்த மீன் (உயிர் பெற்று) அசைந்து, கூடையிலிருந்து நழுவி கடலுக்குள் புகுந்தது. மூசா (அலை) அவர்கள் கண் விழித்த போது தம் உதவியாளரை நோக்கி, ‘‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா! நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்” என்று சொன்னார்கள். (18:62) தமக்குக் கட்டளையிடப்பட்ட (இடத்)தைத் தாண்டிச் செல்லும்வரை மூசா (அலை) அவர்கள் களைப்பை உணர வில்லை. உதவியாளர் யூஷஉ பின் நூன் மூசா (அலை) அவர்களிடம், ‘‘நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவறவிட்டு)விட்டேன். அதை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தானே எனக்கு மறக்கடித்துவிட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தன் வழியை அமைத்துக்கொண்டது” என்று கூறினார். அதற்கு மூசா, ‘‘நாம் தேடி வந்த இடம் அதுதான்” என்று கூறினார். (18:63, 64) ஆகவே, அவர்களிருவரும் தங்கள் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். (மீன் நழுவிய பாறைக்கு அருகிலிருந்த கடற்பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது) மீன் (நீந்திச்) சென்ற இடத்தில் (இருந்த தண்ணீர்) வளையம் போலிருக்கக் கண்டனர். மூசா (அலை) அவர்களின் உதவியாளருக்கு அது வியப்பாகவும், மீனுக்கு அது (தப்பும்) வழியாகவும் இருந்தது. அவர்கள் இருவரும் அந்தப் பாறைக்குப் போய்ச் சேர்ந்தபோது அங்கே தம்மை முழுவதுமாக ஆடையால் (போர்த்தி) மூடிக்கொண்டபடி ஒரு மனிதர் (களிர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர், ‘‘உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)?” என்று வினவினார். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், ‘‘பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூசாவா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, ‘‘உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக உங்களைப் பின்தொடர்ந்து வரட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், மூசா (அலை) அவர்களிடம், ‘‘மூசாவே! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன். அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறினார்கள். (மீண்டும்) மூசா (அலை) அவர்கள், ‘‘இல்லை; நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்” என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘நீர் என்னைப் பின்தொடர்ந்து வருவதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும், நானாக உமக்கு அறிவிக்கும்வரையில் நீர் என்னிடம் அதைப் பற்றி (ஏன், எதற்கு என்று) கேட்கலாகாது” என்று கூறினார். பிறகு (மூசா, களிர்) இருவரும் கடற்கரையோரமாக நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அப்போது (ஏழைகளான மரக்கல உரிமையாளர்களால்) களிர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு அவர்களைத் தங்கள் மரக்கலத்தில் அவர்கள் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக்கொண்டனர்.அவர்களிருவரும் மரக்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். அப்போது சிட்டுக்குருவியொன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, தன் (சின்னஞ் சிறிய) அலகைக் கடலில் அமிழ்த்தி (ஓரிரு ‘மிடறு’ நீர்அருந்தி)யது. அப்போது மூசா (அலை) அவர்களிடம் களிர் (அலை) அவர்கள், ‘‘உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும், (ஏன்) படைப்பினங்கள் யாவற்றின் அறிவும் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில், இந்தச் சிட்டுக்குருவி தன் அலகை (கடலுக்குள்) அமிழ்த்தி (நீர் எடுத்தி)ட்ட அளவுதான்” என்று சொன்னார்கள். மூசா (அலை) அவர்கள் மரக்கலத்தில் ஏறிச் சிறிது நேரம்தான் கழிந்திருக்கும். களிர் (அலை) அவர்கள் வாய்ச்சி ஒன்றை எடுத்து மரக்கலத்தை ஓட்டையாக்கி (அதை முளைக்குச்சியால் அடைத்து)விட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், களிரை நோக்கி, ‘‘கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டு மென்றே ஓட்டையாக்கிவிட்டீர்களே! இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் பெரிய (அபாயமான) செயலைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள். பிறகு இருவரும் (மரக்கலத்திலிருந்து இறங்கி,) நடந்து, சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கருகில் சென்றனர். அப்போது களிர் (அலை) அவர்கள், அச்சிறுவனின் தலையைப் பிடித்துத் துண்டாக்கி(த் தனியே எடுத்து)விட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், களிர் (அலை) அவர்களிடம், ‘‘ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்துவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே! நீங்கள் மிகக் கேடான செயலைச் செய்துவிட்டீர்கள்!” என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள்,” நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று முன்பே நான் சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால், என்னை உங்களுடன் சேர்த்துக்கொள்ளாதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது” என்றார்கள். தொடர்ந்து இருவரும் நடந்தார்கள். இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவருக்கும் விருந்தோம்பல் செய்ய மறுத்துவிட்டார்கள். (இந்நிலையில்) அந்த ஊரில் சாய்ந்தவாறு கீழே விழலாமா என யோசித்துக்கொண்டிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைப் பார்த்த) உடன் களிர் (அலை) அவர்கள் இவ்வாறு தமது கரத்தால் அதைச் செப்பனிட்டார்கள். அப்போது மூசா (அலை) அவர்கள் களிரிடம், ‘‘இந்த ஊருக்குள் நாம் வந்து(உணவு கேட்டு)ம், இவர்கள் நமக்கு விருந்தோம்பல் செய்யவில்லை; நமக்கு உணவளிக்கவுமில்லை. (அவ்வாறிருந்தும் வேண்டுமென்றே நீங்கள் அவர்களது சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள்.) நீங்கள் நினைத்திருந்தால் அதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே!” என்றார்கள். களிர் (அலை) அவர்கள், ‘‘இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத (இம்மூன்று) விஷயங்களின் விளக்கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறிவித்து விடுகிறேன்” என்று கூறினார்கள். (இந்த நிகழ்ச்சியைக் கூறி முடித்தபின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மூசா பொறுமையாக இருந்திப்பாரே யானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகள்) நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் என நாம் விரும்பினோம்” என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (18:79ஆவது வசனத்தின் மூலத்தில்) ‘‘வ கான அமாமஹும் மலிக்குன் யஃகுது குல்ல சஃபீனத்தின் ஸாலிஹத்தின் ஃகஸ்பா” என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் பழுதில்லா நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக்கொண்டிருந்தான்.) மேலும், (18:80ஆவது வசனத்தின் மூலத்தில்) ‘‘வ அம்மல் ஃகுலாமு ஃப கான காஃபிரன்” என்று ஓதுவார்கள். (பொருள்: அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான்.)9 அத்தியாயம் :

250

முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் என் தந்தை (சஅத் பின் அபீ வக்காஸ்) அவர்களிடம் ‘‘இந்த (18:103ஆவது) வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், ‘ஹரூரிய்யாக்களா? என்று கேட்டேன்.10 அதற்கு அவர்கள், ‘‘(ஹரூரிய்யாக்கள்) இல்லை; யூதர்களும் கிறித்தவர்களும்தான் அவர்கள். யூதர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்தார்கள். கிறித்தவர் களோ சொர்க்கத்தை நிராகரித்தார்கள்; அங்கு உணவோ பானமோ கிடையாது என்று சொன்னார்கள்.11 ‘ஹரூரிய்யாக்களோ’, அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தபின் அவனுடன் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறிப்பவர்கள் ஆவார்கள்” என்று சொன்னார்கள். (என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஹரூரிய்யாக்களை ‘பாவிகள்’ என்று குறிப்பிட்டுவந்தார்கள். (‘இறைமறுப்பாளர்கள்’ என்று கூறுவதில்லை.) அத்தியாயம் :

251

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கை யளவு எடைகூட அவன் (மதிப்பு) பெற மாட்டான். ‘‘மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்” எனும் (18:105ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

252

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், ‘சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அறிவிப்புச் செய்பவர், ‘‘இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்பார். அவர்கள், ‘‘ஆம்! இதுதான் மரணம்” என்று பதிலளிப் பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: ‘நரகவாசிகளே!’ என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் ‘‘இதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்பார். அவர்கள், ‘‘ஆம் (அறிவோம்); இதுதான் மரணம்” என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், ‘‘சொர்க்கவாசிகளே! நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை” என்று கூறுவார். இதை அறிவித்த அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், ‘‘(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீர் அவர்களை எச்சரிப்பீராக! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். ஆதலால் இவர்கள் நம்பிக்கை கொள்ளவேமாட்டார்கள்” எனும் (19:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், ‘‘இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அலட்சியமாக உள்ளனர். ஆகவே, இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்றும் சொன்னார்கள். அத்தியாயம் :

253

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘‘நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?” என்று கேட்டார்கள்.2 அப்போதுதான் ‘‘(நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன்” எனும் (19:64ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :

254

கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ’ என்பவர்3 எனக்குத் தர வேண்டியிருந்த ஒரு கடனைக் கேட்டு அவரிடம் நான் சென்றேன். ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக்கொண்டு) இருக்கும்வரை, நான் உனக்குத் தரமாட்டேன்” என்று அவர் சொன்னார். நான், ‘‘நீ இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை நான் முஹம்மதை நிராகரிக்கமாட்டேன்” எனக் கூறினேன். அவர் ‘‘நான் இறந்து மீண்டும் எழுப்பப்படுவேனா?” என்று கேட்டார். நான் ‘ஆம்’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர், ‘‘அப்படியாயின், எனக்கு அங்கேயும் செல்வமும் சந்ததியும் கிடைக்கும். அப்போது உனக்குத் தரவேண்டிய கடனை நான் செலுத்திவிடுகிறேன்” என்று சொன்னார். அப்போதுதான் ‘‘(நபியே!) நம் வசனங்களை மறுத்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறினானே அவனை நீர் பார்த்தீரா?” எனும் (19:77ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.4 இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

255

கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மக்காவில் (அறியாமைக் காலத் தில்) கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். அப்போது ‘ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ’ என்பவருக்கு வாள் ஒன்றைச் செய்து கொடுத்தேன். பின்னர் அதற்கான கூலியைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அவர், ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை உனக்குத் தரமாட்டேன்” என்று சொன்னார். நான், ‘‘உன்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து, பிறகு உயிர்கொடுக்கும்வரை நான் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்” என்று சொன்னேன். அதற்கு அவர் ‘‘என்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து பிறகு என்னை எழுப்பினால், அப்போதும் எனக்குச் செல்வமும் சந்ததியும் இருக்கும்” என்று சொன்னார். உடனே அல்லாஹ்: ‘‘நம் வசனங்களை மறுத்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீர் பார்த்தீரா? மறைவானவற்றை அவன் அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா?” எனும் (19:77,78) வசனங்களை அருளினான். இந்த ஹதீஹ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘வாள்’ மற்றும் ‘அஹ்த்’ எனும் சொல்லுக்கான ‘உறுதிமொழி’ எனும் பொருள் ஆகியவை இடம் பெறவில்லை. அத்தியாயம் :

256

கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அறியாமைக் காலத்தில் கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. நான் திருப்பித் தரும்படி கேட்டு அவரிடம் சென்றேன். அவர் ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் உனக்குத் தரமாட்டேன்” என்று சொன்னார். நான் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு நீ மறுமையில் உயிரூட்டப்பட்டு எழுப்பப்படும்வரை நான் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்” என்றேன். அவர், ‘‘அப்படியாயின், நான் இறந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் வரை என்னை விட்டுவிடு! பின்பு மறுமையில், எனக்குச் செல்வமும் சந்ததியும் கொடுக்கப்படும். அப்போது நான் உனது கடனைச் செலுத்துவேன்” என்று சொன்னார். அப்போதுதான் ‘‘நம் வசனங்களை மறுத்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீர் பார்த்தீரா? மறைவானவற்றை அவன் அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? எனும் (19:77, 78ஆவது) வசனங்கள் இறங்கின. அத்தியாயம் :

257

கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. ஆகவே, அதைத் திருப்பித் தரும்படி கேட்டு நான் அவரிடம் சென்றேன். அவர் என்னிடம் ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் உனது கடனைச் செலுத்தமாட்டேன்” என்று சொன்னார். நான், ‘‘நீர் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் அவரை ஒருபோதும் நிராகரிக்கமாட்டேன்” என்று சொன்னேன். அதற்கு அவர் ‘‘இறந்த பிறகு நான் உயிருடன் எழுப்பப்படுவேனா? அப்படியானால், செல்வமும் மக்களும் அங்கே திரும்பக் கிடைக்கும்போது உன் கடனை நிறைவேற்றிவிடுகிறேன்” என்று சொன்னார். அப்போதுதான் ‘‘நம் வசனங்களை நிராகரித்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீர் பார்த்தீரா? அவன் மறைவானவற்றை அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? இல்லை; அவன் சொல்வதை நாம் எழுதிவைப்போம். (மறுமையில்) நீண்ட நெடும் வேதனையை நாம் அவனுக்கு அளிப்போம். அவன் (தன் உடைமைகள் எனப் பெருமையடித்துப்) பேசிக்கொண்டிருப்பவை (அனைத்தும் இறுதியில்) நமக்கே உரியனவாகிவிடும். அவன் (செல்வம், சந்ததி எதுவுமின்றி) தனியாகவே நம்மிடம் வருவான்” எனும் (19:77-80) இறைவசனங்கள் அருளப்பெற்றன.5 அத்தியாயம் :

258

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம், ‘‘நீங்கள்தான் மக்களைத் துர்பாக்கியவான்களாக்கி, அவர்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவரா?” என்று கேட்டார்கள். ஆதம் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், ‘‘அல்லாஹ் தன் தூதர் பதவிக்காகவும் தனக்காகவும் தேர்ந்தெடுத்துக்கொண்டு தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘‘என்னைப் படைப்பதற்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி நான் செய்வேன் என) என்மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா?” என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள் ‘ஆம்’ (கண்டேன்) என்றார்கள். இப்படி(ப் பேசி) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் (வாதத்தில்) வென்றார்கள்.4 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (20:39ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்யம்மு’ எனும் சொல்லுக்கு ‘கடல்’ என்பது பொருள்.5 அத்தியாயம் :

259

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அது பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் ‘‘இதுதான் மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்ட நாள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘இவர்களைவிட மூசா (அலை) அவர்களுக்கு நாமே அதிக உரிமையுடையவர்கள். ஆகவே, நீங்கள் இந்நாளில் நோன்பு நோறுங்கள்” என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.6 அத்தியாயம் :

260

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வாதிட்டார்கள். அப்போது ‘‘உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர்கள் நீங்கள்தானே!” என்று மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் கேட்டார்கள். (பதிலுக்கு) ஆதம் (அலை) அவர்கள் ‘‘மூசா! தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள்தானே? என்னைப் படைப்பதற்கு முன்பே என்மீது அல்லாஹ் ‘எழுதிவிட்ட அல்லது விதித்துவிட்ட’ ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறீர்கள்?” என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆதம் (அலை) அவர்கள் (தமது இந்த பதிலால்) மூசா (அலை) அவர்களைத் தோற்கடித்துவிட்டார்கள்” என்று சொன்னார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7 அத்தியாயம் :

261

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப், மர்யம், தாஹா மற்றும் அல்அன்பியா ஆகிய அத்தியாயங்கள் அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் அடங்கும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங்களில் உள்ளவையாகும்.2 கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: (21:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுஃதாதன்’ எனும் சொல்லுக்கு ‘துண்டு துண்டாக்கினார்’ என்று பொருள். (21:33ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபலக்’ எனும் சொல்லி(ன் விளக்கவுரையி)ல் ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள், ‘‘நூற்பு இயந்திரத்தின் தகளி போல் (சுழன்றபடி கோள்கள் அனைத்தும் அதனதன் நீள்வட்டப் பாதையில் நீந்திச் செல்கின்றன)” என்று சொன்னார்கள். ‘யஸ்பஹூன்’ எனும் சொல்லுக்கு ‘சுற்றுகின்றன’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (21:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஃபஷத்’ எனும் சொல்லுக்கு ‘மேய்ந்தது’ என்பது பொருள். (21:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘வ லா ஹும் மின்னா) யுஸ்ஹபூன்’ எனும் சொல்லுக்கு ‘(எமது வேதனையிலிருந்து) அவர்கள் தடுக்கப்படமாட்டார்கள்’ என்று பொருள். (21:92ஆவது வசனத்திலுள்ள) ‘நீங்கள் யாவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே’ என்பதற்கு ‘நீங்கள் யாவரும் ஒரே மார்க்கத்தைச் சேர்ந்தவர் களே’ என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (21:98ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹஸப்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் ‘விறகு’ என்பது பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்: (21:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹஸ்ஸூ’ (உணர்ந்தனர்) எனும் சொல்லுக்கு ‘அதை எதிர்பார்த்தனர்’ என்று பொருள். இச்சொல் ‘அஹ்ஸஸ்த்து (இஹ்ஸாஸன்)’ எனும் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். (இதற்கு ‘ஐம்புலன்களால் உணர்ந்தேன்’ என்பது பொருள்.) (21:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காமிதீன்’ எனும் சொல்லுக்கு ‘அணைந்து போனவர்கள்’ என்பது பொருள். ‘ஹஸீத்’ எனும் சொல்லுக்கு ‘வேரோடு அறுவடை செய்யப்பட்டது’ என்று பொருள். இச்சொல்லே ஒருமை, இருமை, பன்மை ஆகிய மூன்று நிலைகளுக்கும் பொருந்தும். (21:19ஆவது வசனத்திலுள்ள) ‘அவர்கள் சோர்வடையமாட்டார்கள்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘லா யஸ்தஸ்ஹிரூன்’ எனும் சொல்லுக்குரியதாகும். ‘ஹஸீர்’ (சோர்வடைந்தவன்), ‘ஹஸர்த்து பஈரீ’ (என் ஒட்டகத்தைக் களைப்படையச் செய்தேன்) ஆகிய சொற்கள் இதில் அடங்கும். (அடுத்த அத்தியாயத்தில் வரும் 22:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அமீக்’ எனும் சொல்லுக்கு ‘தொலைவு’ என்பது பொருள். (21:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நுகிசூ’ எனும் சொல்லுக்கு ‘அவர்கள் மீண்டும் (இறைமறுப்பின் பக்கமே) திருப்பப்பட்டனர்’ என்று பொருள். (இச்சொல்லுக்கு ‘வெட்கத்தால் தலைகுனிந்தனர்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) (21:80ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஸன்அத்த லபூஸ்’ எனும் சொல்லுக்கு ‘கவசங்கள் தயாரிப்பு’ என்று பொருள். (21:93ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தகத்தஊ அம்ரஹும்’ எனும் வாக்கியத்திற்கு ‘தங்களின் (மார்க்க) விஷயங்களில் பிளவுபட்டனர்’ என்று பொருள். (21:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹஸீஸ்’ எனும் சொல்லும் அல்ஹிஸ்ஸு, அல்ஜர்ஸ், அல்ஹம்ஸ் ஆகிய சொற்களும் ஒரே பொருள் கொண்டவையாகும். இவற்றுக்கு ‘மெல்லிய ஒலி’ என்பது பொருள். (21:109ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆஃதன்த்துகும்’ எனும் சொல்லுக்கு ‘உங்களுக்கு நான் அறிவித்துவிட்டேன்’ என்று பொருள். (இதைப் போன்றே 41:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆஃதன்னாக்க’ எனும் சொல்லுக்கு ‘உமக்கு நாங்கள் அறிவிக்கிறோம்’ என்று பொருள். ‘‘ஒளிவு மறைவின்றி நீயும் எதிராளியும் சம நிலையில் இருக்கும் வகையில் போர்ப் பிரகடனம் செய்வதை” இது (21:109ஆவது வசனம்) குறிக்கும். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (21:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லஅல்லக்கும் துஸ்அலூன்’ எனும் சொற்றொடருக்கு ‘நீங்கள் (மற்றவர்களால்) புரிந்துக்கொள்ளப்படலாம்’ என்பது பொருள். (21:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இர்தளா’ எனும் சொல்லுக்கு ‘அவன் விரும்பினான்’ (‘ரளிய’) என்று பொருள். (21:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தமாஸீல்’ எனும் சொல்லுக்கு ‘சிலைகள்’ என்பது பொருள். (21:104ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸிஜில்லு’ எனும் சொல்லுக்கு ‘ஏடு’ என்பது பொருள். அத்தியாயம் :

262

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது, ‘‘(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் (காலணி அணியாத) வெறுங்காலுடைய வர்களாக, உடையணியாதவர்களாக, ‘விருத்த சேதனம்’ செய்யப்படாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்” என்று கூறிவிட்டு, ‘‘முதலில் நாம் (அவர்களைப்) படைத்ததைப் போன்றே (மறுமை நாளில்) நாம் அவர்களை மீண்டும் படைப்போம். இது நமது வாக்குறுதியாகும். நாம் இதனைச் செய்தே தீருவோம்” எனும் (21:104ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடை அணிவிக்கப்படும் முதல் மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தான். அறிந்துகொள்ளுங்கள்: என்னுடைய சமுதாயத்தாரில் சிலபேர் கொண்டுவரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்தை நோக்கிக்) கொண்டுசெல்லப்படுவர். அப்போது நான், ‘‘என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்று சொல்வேன். அதற்கு, ‘‘இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப்பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது” என்று சொல்லப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போன்று ‘‘நான் அவர்களிடையே (வாழ்ந்துகொண்டு) இருந்த வரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகிவிட்டாய்” என்று பதிலளிப்பேன். அதற்கு, ‘‘இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிóருந்து இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தமது மார்க்கத்திóருந்து விலகிச் சென்றுகொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும்.3 அத்தியாயம் :

263

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஆதி மனிதரை நோக்கி,) ‘ஆதமே!’ என்பான். அதற்கு அவர்கள், ‘‘என் இறைவா! இதோ வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன்” என்று கூறுவார்கள். அப்போது ‘‘நீங்கள் உங்கள் வழித்தோன்றல்களிருந்து நரகத்திற்கு அனுப்பப்படவிருப்பவர்களை (மற்றவர்களிóருந்து) தனியாகப் பிரிக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடு கிறான்” என்று ஒருவர் அறைகூவல் விடுப்பார். ஆதம் (அலை) அவர்கள், ‘‘எத்தனை நரகவாசிகளை?” என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (வெளியே கொண்டுவாருங்கள்)” என்று பதிலளிப்பார். இப்படி அவர் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்துவிடுவாள்; பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுவான். மக்களை போதையுற்றவர்களாய் நீர் காண்பீர். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார் கள். ஆனால், (அந்த அளவுக்கு) அல்லாஹ்வின் வேதனை கடுமையாய் இருக்கும்”. நபியவர்கள் இவ்வாறு கூறியது (அங்கு கூடியிருந்த) மக்களுக்குச் சிரமமாக இருந்தது. (அச்சத்தினால்) அவர்களின் முகங்கள் நிறம் மாறிவிட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் (தனியாகப் பிரிக்கப்படாமல், நரகம் செல்லும் குழுவிலேயே) இருப்பார்கள்” என்று கூறிவிட்டு பிறகு, ‘‘ ‘நீங்கள் (மறுமை நாளில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கறுப்பு முடியைப் போலத்தான்’ அல்லது ‘கருநிறக் காளையின் மேனியில் உள்ள வெண்ணிற முடியைப் போலத்தான்’ (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்” என்று கூறினார்கள். பின்னர் ‘‘(என் சமுதாயத்தாராகிய) நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள். உடனே நாங்கள் (மகிழ்ச்சியூட்டும் இந்த நற்செய்தி கேட்டு) ‘‘அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். பிறகு நபியவர்கள், ‘‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும்” என்று கூறினார்கள். நாங்கள் (பெரும் மகிழ்ச்சியால் மீண்டும்,) ‘‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். பிறகு நபியவர்கள், ‘‘சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும்” என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்) ‘‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களின் அறிவிப்பி லும் இவ்வாறே காணப்படுகிறது. ஜரீர் பின் அப்தில் ஹமீத், ஈசா பின் யூனுஸ், அபூமுஆவியா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், (இந்த 22:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘சுகாரா’ எனும் சொல்லுக்குப் பதிலாக) ‘சக்ரா’ என்று காணப்படுகிறது. (பொருள் ஒன்றே). அத்தியாயம் :

264

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘விளிம்பில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்ற சிலரும் மக்களிடையே உள்ளனர்” எனும் (22:11 ஆவது) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், ‘‘சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக்கொள்வர்.) அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர்களின் குதிரைகள் குட்டி ஈன்றால் அப்போது, ‘‘இது (இஸ்லாம்) நல்ல மார்க்கம்” என்று கூறுவார்கள். அவர்களுடைய மனைவியர் ஆண் குழந்தைகள் பெறவில்லையென்றால், அவர்களின் குதிரைகள் குட்டி ஈனவில்லை யென்றால், ‘‘இது கெட்ட மார்க்கம்” என்று சொல்வார்கள். (இவர்கள் தொடர்பாக இந்த இறைவசனம் அருளப்பெற்றது)” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

265

கைஸ் பின் உபாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூதர் (ரலி) அவர்கள், ‘‘இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19 ஆவது) வசனம், பத்ர் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) ஹம்ஸா மற்றும் அவர்களுடைய இரு நண்பர்கள் (அலீ, உபைதா) தொடர்பாகவும், (இறைமறுப்பாளர்களான) உத்பா மற்றும் அவருடைய இரு நண்பர்கள் (ஷைபா, வலீத்) தொடர்பாகவுமே அருளப்பெற்றது” எனச் சத்தியமிட்டுக் கூறிவந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.3 அத்தியாயம் :

266

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறைமறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில், (அளவிலா அருளாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அறிவிப்பாளர் கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இவர்களைக் குறித்தே, ‘‘இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் (22:19ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அவர்கள் பத்ர் போரின்போது (களத்தில் இறங்கி) தனித்து நின்று போராடிய (முஸ்லிம்களான) அலீ, ஹம்ஸா, உபைதா (ரலி) ஆகியோரும் (இறைமறுப்பாளர்களான) ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோரும் ஆவர்.4 அத்தியாயம் :

267

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பனூ அஜ்லான்’ குலத்தாரின் தûலைவராயிருந்த ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்களிடம் (அதே குலத்தைச் சேர்ந்த) ‘உவைமிர்’ என்பவர்3 வந்து ‘‘தன் மனைவியுடன் வேறொரு அந்நிய ஆடவன் (தகாத உறவுகொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகிறீர்கள்? அவன் அந்த அந்நிய ஆடவனைக் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள்” என்று சொன்னார். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே!” என்று (விஷயத்தைச் சொல்லி) கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை (என்பதை உணர்ந்துகொண்டு திரும்பி வந்துவிட்டார்). நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார் கள் என்று ஆஸிம் (ரலி) அவர்களிடம் உவைமிர் (ரலி) அவர்கள் கேட்க, அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய கேள்விகளை விரும்பவில்லை; மேலும், இப்படிக் கேட்பதை அவர்கள் அநாகரிகமாகக் கருதுகிறார்கள்” என்று பதில் சொன்னார்கள். உடனே உவைமிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்காமல் ஓயமாட்டேன்” என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் இருக்கக் கண்டால் அவன் அம்மனிதனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப்பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ் உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் குர்ஆன் வசனத்தை அருளியுள்ளான்” என்று கூறி, அவ்விருவருக்கும் அல்லாஹ் தன் வேதத்தில் குறிப்பிட்டுள்ள (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்யும்படி கட்டளையிட்டார்கள்.4 அவ்வாறே, தம் மனைவிமீது (குற்றம் சாட்டி) உவைமிர் (ரலி) அவர்கள் ‘லிஆன்’ செய்தார்கள். பிறகு ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் என் மனைவியாகவே) வைத்திருந்தால், இவளுக்கு அநீதி இழைத்தவனாகிவிடுவேன்” என்று கூறிவிட்டு, அவளை மணவிலக்குச் செய்துவிட்டார். இந்த வழிமுறையே அவர்களுக்குப்பின் ‘லிஆன்’ செய்யும் கணவன் மனைவியருக்கு முன்மாதிரியாகி விட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கவனியுங்கள்! கரு நிறமும் கன்னங்கரிய கருவிழியும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையை இவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றி உண்மை பேசியதாகவே நான் கருதுகிறேன். அரணையைப் போல், சிவப்பான பிள்ளையை அவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றிப் பொய் பேசியதாகவே நான் கருதுவேன்” என்று சொன்னார்கள். பின்னர் உவைமிர் சொன்னதை மெய்ப்பிக்கும் விதத்தில் அவள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வர்ணித்த தோற்றத்திலேயே (கருநிறமும், கன்னங்கரிய கருவிழியும் தடித்த கால்களும் உடைய) பிள்ளையைப் பெற்றெடுத்தாள். இதனால் அக்குழந்தை தன் தாயுடன் இணைத்தே (‘இன்னவளின் மகன்’ என்று) அழைக்கப்படலாயிற்று. அத்தியாயம் :

268

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனைக் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப்பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ், அந்தக் கணவன் மனைவி தொடர்பாக குர்ஆனில் தான் கூறியுள்ள ‘லிஆன்’ எனும் சாப அழைப்புப் பிரமாணச் சட்டத்தை அருளினான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மனிதரிடம், ‘‘உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள். பிறகு அந்த (கணவன், மனைவி) இருவரும் ‘லிஆன்’ செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதர் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார். (அன்றிலிருந்து) அந்த நிகழ்ச்சியே ‘லிஆன்’ செய்யும் கணவன் மனைவியரைப் பிரித்துவைப்பதற்கு முன்மாதிரியாகிவிட்டது. அப்பெண் கருவுற்றிருந்தாள். அவளுடைய கணவர் அக்கருவை (‘தனக்குரியது’ என) ஏற்க மறுத்தார். (பின்னர் அவளுக்குப் பிறந்த) அவளுடைய மகன் அவளுடன் இணைத்தே (இன்னவளின் மகன்) என்று அழைக்கப்பட்டுவந்தான். பிறகு அவன் அவளிடமிருந்தும், அவள் அவனிடமிருந்தும் அல்லாஹ் ஏற்படுத்திய பங்கினைப் பெறுகின்ற வாரிசுரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. அத்தியாயம் :

269

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் (கர்ப்பவதியான) தம் மனைவியை ‘ஷரீக் பின் சஹ்மா’ என்பவருடன் இணைத்து (இருவருக்குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(உன்) ஆதாரத்தைக் கொண்டுவா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி வழங்கப்படும்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவியுடன் ஓர் அந்நிய ஆடவன் இருப்பதைக் கண்டாலுமா ஆதாரம் தேடிக்கொண்டு செல்லவேண்டும்?” என்று கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘(உன்) ஆதாரத்தைக் கொண்டுவா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும்” என்று சொன்னார்கள். அதற்கு ஹிலால் (ரலி) அவர்கள், ‘‘தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். எனது முதுகைக் கசையடியிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான்” என்று சொன்னார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி (ஸல்) அவர்களுக்கு ‘‘யார் தம் மனைவியர்மீது அவதூறு கூறி” என்று தொடங்கும் (24:6-9) வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.5 நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால் (ரலி) அவர்களுடைய மனைவிக்கு ஆளனுப்பினார்கள். (இதற்கிடையே) ஹிலால் (ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக் கோரி (தவறு தம்முடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகின்றவர் யார்?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி, ‘‘இது (பொய்யான சத்தியமாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்திவிடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!)” என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திóருந்து பின்வாங்கிவிடுவார் என்றே எண்ணினோம். ஆனால், பிறகு அவர், ‘‘காலமெல்லாம் என் சமுதாயத்தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவதில்லை” என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்து முடித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘இவளைக் கவனித்துவாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது ‘ஷரீக் பின் சஹ்மா’வுக்கே உரியதாகும்”என்று சொன்னார்கள். அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி (ஸல்) அவர்கள், ‘‘இது பற்றிய இறைச்சட்டம் (‘லிஆன்’ விதி) மட்டும் வந்திருக்காவிட்டால், நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

270

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் (உவைமிர்) தம் மனைவியின் மீது (விபசாரக்) குற்றம்சாட்டி அவளுடைய குழந்தையை (தன்னுடையதாக) ஏற்க மறுத்தார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் (‘சாப அழைப்புப் பிரமாணம்’ செய்திடுமாறு) உத்தரவிட்டார்கள். அவர்களும் (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ள முறைப்படி (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். பிறகு, நபி (ஸல்) அவர்கள் ‘‘குழந்தை அப்பெண்ணிற்குரியது” என்று தீர்ப்பளித்து, ‘லிஆன்’ செய்த (கணவன், மனைவி) இருவரையும் (மண பந்தத்திலிருந்து) பிரித்துவைத்தார்கள். அத்தியாயம் :

271

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அதில் அதிகப் பங்குபெற்ற (அவர்களின் தலை)வனுக்கு மிகப் பெரும் வேதனையுண்டு” எனும் (24:11ஆவது) இறைவசனம், (நயவஞ்சகர்களின் தலைவன்) ‘அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்’ என்பானைக் குறிக்கிறது. அத்தியாயம் :

272

இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்களென்று இறைவன் (தனது வேதத்தில்) அறிவிப்புச் செய்ததைப் பற்றியும் தெரிவித்தனர். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதி யினை எனக்கு அறிவித்தனர். அவர்களில் சிலர் சிலரைவிட இந்தச் சம்பவத்தை நன்கு மனனமிட்டு வைத்திருந்தாலும், ஒருவரின் அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் மற்றவரின் அறிவிப்பு அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவித்ததாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள். இவ்வாறே அவர்கள் தாம் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். (இது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். (அப்பயணத்தின்போது) நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்படுவேன். அதில் நான் இருக்கும் நிலையிலேயே (கீழே) இறக்கி வைக்கப்படுவேன். நபி (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக்கொண்டி ருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கியபோது இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் (சிவிகையிóருந்து) எழுந்து (இயற்கைக்கடனை நிறை வேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக்கொண்டபின் முகாமை நோக்கிச் சென்றேன். அப்போது (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ‘ழஃபாரி’ நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து)விட்டது. ஆகவே நான் (திரும்பிச் சென்று) எனது மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக்கொண்டிருந்தது, (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது. எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கிச் சென்று நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதைய) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். ஆகவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக வேறு இருந்தேன். எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்தபடி) நடக்கலாயினர். படை கடந்து சென்றபிறகு (காணாமற்போன) எனது மாலை கிடைத்துவிட்டது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.) அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்பவரும் இருக்கவில்லை. நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க என் கண்ணில் உறக்கம் மேலிட்டுவிட நான் தூங்கிவிட்டேன். படை சென்றதற்குப் பின்னால் (படை ‘னர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் (தவறவிடப்பட்ட பொருள்களைத் தேடுவதற்காக) வந்து சேர்ந்தார். அவர் (அங்கே) தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். ஆகவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். அவர் என்னை அறிந்துகொண்டு ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில் விலகியிருந்த) எனது மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர் ‘இன்னா óல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியுறவுமில்லை. பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக்கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங்கால்களை (தமது காலால்) மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை நடத்திச் செல்லலானார். இறுதியில் படையினர் (மதிய ஓய்வுக் காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்ட பின்னர் நாங்கள் அவர்களை வந்தடைந்தோம். இப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என்மீது அவதூறு(ப் பிரசாரம்) செய்ததில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து ஒரு மாதகாலம் நான் நோயுற்றுவிட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. நான் நோயுறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இம்முறை நான் நோயுற்றிருந்தபோது) அவர்களிடம் காண முடியாமல்போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு ‘எப்படி இருக்கிறாய்’ என்று கேட்பார்கள். பிறகு திரும்பிச் சென்றுவிடுவார்கள். அவ்வளவுதான். இதுதான் எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைப் பற்றி வெளியே பேசப்பட்டு வந்த) அந்தத் தீய சொல் பற்றி ஒரு சிறிதும் (உடல் நலம் தேறுவதற்குமுன்) எனக்குத் தெரியாது. நோயிலிருந்து குணமடைந்தபின் நானும் என்னுடன் மிஸ்தஹின் தாயாரும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த ‘மனாஸிஉ’ (எனப்படும் புறநகர் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்றுகொண்டிருந்தோம். கழிப்பிடம் நோக்கி வெளியே செல்லும் எங்களது இந்த வழக்கம் முந்தைய அரபியரின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. அப்போது நாங்கள் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப் பிடங்கள் அமைப்பதைத் தொந்தரவாகக் கருதிவந்தோம். நானும் உம்மு மிஸ்தஹும் நடந்தோம். அவர் அபூருஹ்ம் (பின் முத்தலிப்) பின் அப்தி மனாஃப் அவர்களின் புதல்வியாவார். அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (ராயித்தா) பின்த் ஸக்ர் பின் ஆமிர்தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்தஹின் புதல்வரே மிஸ்தஹ் பின் உஸாஸா (பின் அப்பாத் பின் முத்தலிப்) ஆவார். (இத்தகைய) உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக்கொண்டு எனது வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தமது ஆடையில் இடறிக்கொண்டார். உடனே அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று (தம் புதல்வரைச் சபித்தவராகக்) கூறினார். நான், ‘‘மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?” என்று கூறினேன். அதற்கு அவர், ‘‘அம்மா! அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டார். ‘‘என்ன சொன்னார்?” என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு எனது நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் எனது வீட்டுக்குத் திரும்பி வந்தபோது (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எனக்கு சலாம் சொல்லிவிட்டு, ‘‘எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அப்போது நான் ‘‘என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?” என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து என்மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக்கொள்ள அப்போது நான் விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். உடனே நான் என் பெற்றோரிடம் வந்து(சேர்ந்)தேன். என் தாயாரிடம், ‘‘அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?” என்று கேட்டேன். என் தாயார், ‘‘என் அன்பு மகளே! உன்மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுபடுத்திக் கொள்ளாதே! அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தம் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்” என்று கூறினார். உடனே நான், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்.) இப்படியா மக்கள் பேசிவிட்டார்கள்!” என்று (வியப்புடன்) சொன்னேன். அன்றிரவு காலைவரை நான் அழுதேன். என் கண்ணீரும் ஓயவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்தபோதும் அழுதேன். (இதற்கிடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (அதாவது என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் அவர்களையும், உசாமா பின் ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அத்தருணத்தில் வேதஅறிவிப்பு (தாற்காó கமாக) நின்றுபோயிருந்தது. உசாமா பின் ஸைத் (ரலி) அவர் களோ நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் (குடும்பத்தார்மீது) இருந்த பாசத்தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுடைய துணைவியாரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை” என்று அப்போது உசாமா சொன்னார்கள். அலீ அவர்களோ (நபி (ஸல்) அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக) ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண் (பரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, ‘‘பரீராவே! (ஆயிஷாவிடம்) உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது நீ பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, ‘‘தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர், தம் வீட்டாரின் குழைத்த மாவை அப்படியே விட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார். (வீட்டிலுள்ள) ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (விவரமும்) வயது(ம்) குறைந்த இளம்பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார். அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலுக்கு எதிராக உதவி கோரி எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) இருந்தவாறு, ‘‘முஸ்லிம் மக்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனுக்கெதிராக எனக்கு உதவிபுரிபவர் யார்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நல்ல தையே நான் அறிவேன். அவர்கள் (அவதூறு கிளப்பிய நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் வீட்டாருடன் இணைத்து) அவதூறு கூறியுள்ளனர். அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். நான் இருக்கும்போதுதான் அவர் என் வீட்டிற்கு வந்திருக்கிறார். (தனியாக வந்ததில்லை)” என்று கூறினார்கள். உடனே (பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் எழுந்து நின்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவனுக்கெதிராகத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) ‘அவ்ஸ்’ குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவனது கழுத்தைத் துண்டித்துவிடுகிறோம். எங்கள் சகோதரர்களான ‘கஸ்ரஜ்’ குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் செய்து முடிக்கிறோம்” என்று கூறினார்கள். உடனே சஅத் பின் உபாதா எழுந்தார். இவர் கஸ்ரஜ் குலத்தின் தலைவராவார். இவர் அதற்குமுன் நல்ல மனிதராகத்தான் இருந்தார். ஆயினும், குலமாச்சர்யம் அவரை உசுப்பிவிடவே, அவர் சஅத் பின் முஆத் அவர்களைப் பார்த்து, ‘‘அல்லாஹ்வின் மீதணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்! அவனை நீர் கொல்ல மாட்டீர். அவனைக் கொல்ல உம்மால் முடியாது” என்று கூறினார். உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்றார். இவர் (அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். அவர் சஅத் பின் உபாதா அவர்களிடம் ‘‘நீர்தான் தவறாகப் பேசினீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றேதீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். அதனால்தான் நயவஞ்கர்களின் சார்பாக வாதிடுகின்றீர்!” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட்டுக்கொள்ளத் தயாராகிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். பிறகு தாமும் அமைதியாகிவிட்டார்கள். அன்றைய நாள் முழுவதும் நான் அப்படியே இருந்தேன். என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகே இருந்தார்கள். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) தூக்கம் என்னைத் தழுவாமலும் கண்ணீர் ஓயாமலும் அழுதுவிட்டிருந்தேன். என் ஈரல் பிளந்துவிடுமோ என்று என் பெற்றோர் எண்ணிக்கொண்டிருந்தனர். நான் அழுதுகொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்து கொண்டிருந்தபோது, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்துகொண்டாள். நாங்கள் இவ்வாறு இருக்கையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாதகாலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விட மிருந்து தீர்ப்பு எதுவும்) அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்துவந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்துவிட்டு, ‘‘ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்துவிடுவான். (ஒருகால்) நீ குற்றமேதும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு! ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால், அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்தபோது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை. அப்போது நான் என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்) இடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்குப் பதில் கூறுங்கள்!” என்று சொன்னேன். அதற்கு என் தந்தையார், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வதென்பதே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். பிறகு நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதில் கூறுங்கள்!” என்று சொன்னேன். அதற்கு என் தாயார், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘‘நானோ வயது குறைந்த இளம் பெண். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள். இந்நிலையில் (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட) இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்து போய் அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக நான் அறிவேன். ஆகவே, உங்களிடம் நான் குற்றமற்றவள் என்று கூறினால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- அதை நீங்கள் நம்பப்போவதில்லை. நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- நான் சொல்வதை அப்படியே (உண்மை என்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (எனக்கும்) உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி யாகூப் -அலை) அவர்களையே உவமானமாகக் காண்கிறேன். (அதாவது:) (இதைச்) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும் (12:18) என்று கூறினேன். பிறகு (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக்கொண்டேன். அப்போது நான் குற்றமற்றவள் என்பதையும் மேலும், அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்பதையும் நன்கறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! ஓதப்படுகின்ற வேத அறிவிப்பை (வஹீயை) என் விஷயத்தில் அல்லாஹ் அருள்வான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் ஓதப்படுகின்ற ஒன்றைச் சொல்கின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (எங்கள் வீட்டில் அமர்ந்திருந்த இடத்திóருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை. வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது (குர்ஆன் வசனங்கள்) அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே அவர்களுக்கு (வேத அறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரமநிலை அவர்களைப் பற்றிக்கொண்டது. அது கடுங்குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து வியர்வைத் துளிகள் சிறு முத்துகளைப் போல் வழியத் தொடங்கிவிட்டன. அவர்களின் மீது அருளப்பட்ட இறைவசனத்தின் பாரத் தினால்தான் (அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு) இந்தச் சிரமநிலை ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டு விலகியவுடன் (மகிழ்ச்சியுடன்) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை ‘‘ஆயிஷா! வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விட்டான்” என்பதாகவே இருந்தது. உடனே என் தாயார், ‘‘அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்!” என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்லமாட்டேன். வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வையே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்து)வேன்” என்று சொன்னேன். (அப்போது) அல்லாஹ், ‘‘அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலை தொடர்பாக அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து மிஸ்தஹ் (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன்” என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள். அப்போது அல்லாஹ் ‘‘உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர் களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் புலம் பெயர்ந்தவர்களுக்கோ (எதுவும்) வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்க ளுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணை யுடையோனுமாய் இருக்கின்றான்” எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டுவந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்” என்றும் சொன்னார்கள். (குர்ஆனில் எனது கற்பொழுக்கம் குறித்த வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம்முடைய இன்னொரு துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். ‘‘ஸைனபே! நீ (ஆயிஷா குறித்து) என்ன ‘அறிந்திருக்கிறாய்?’ அல்லது ‘பார்த்திருக்கிறாய்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் காதையும் என் கண்ணையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்துக் கொள்கிறேன். ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்” என்று கூறினார்கள். ஸைனப் அவர்கள்தான் நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்ச முடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா (என்னுடன்) மோதிக்கொள்ளலானார். (என் விஷயத்தில்) அவதூறு பேசி அழிந்துபோனவர்களுடன் அவரும் அழிந்துபோனார்.6 அத்தியாயம் :

273

ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: தம்மீது அவதூறு கூறப்பட்டபோது (அதைக் கேள்விப்பட்ட) ஆயிஷா மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார்.7 அத்தியாயம் :

274

இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (24:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஃத் தலக்கவ்னஹு’ (உங்கள் நாவுகளால் பரப்பிக்கொண்டிருந்த நேரத்தை) எனும் பதத்தை) ஆயிஷா (ரலி) அவர்கள் ‘இஃத் தலிகூனஹு’ (நீங்கள் பொய் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தை) என்று ஓதுவதை நான் செவியுற்றேன்.8 அத்தியாயம் :

275

இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் இறப்ப தற்குமுன், (இறப்பின் துன்பத்தால்) அவதிக்குள்ளாக்கப்பட்டிருந்த வேளையில் (அவர்களைச் சந்திக்க) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அனுமதி கோரினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘என்னை அவர் புகழ்ந்து பேசிவிடுவாரோ என அஞ்சுகிறேன்” என்றார்கள். அப்போது ‘‘(வந்திருப்பவர்) நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் புதல்வரும் முஸ்லிம் களில் முக்கியமானவரும் ஆவார்” என்று சொல்லப்பட்டது. உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அவரை (உள்ளே வர) அனுமதியுங்கள்” என்று சொன்னார்கள். (அன்னார் உள்ளே வந்ததும்,) ‘‘உங்களுக்குத் தற்போது எப்படியுள்ளது?” என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வை அஞ்சி நடந்திருந்தால் நலத்துடனேயிருப்பேன்” என்று பதிலளித் தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் நாடினால் நலத்துடனேயே இருப்பீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியாவீர்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களைத் தவிர வேறெந்தக் கன்னிப் பெண்ணையும் மணம் புரியவில்லை. நீங்கள் நிரபராதி எனும் செய்தி வானத்திலிருந்து (வேத அறிவிப்பாகவே) இறங்கிற்று” என்று (புகழ்ந்து) சொன்னார்கள். (அவர்கள் சென்றவுடன்) அவர்களுக்குப் பின்னாலேயே இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இப்னு அப்பாஸ் (என்னிடம்) வந்து என்னைப் புகழ்ந்தார். நான் முற்றாக மறக்கப்பட்டுவிட்ட (சாதாரணமான)வளாக இருந்திருக்க வேண்டும் என விரும்பினேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

276

காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வர அனுமதி கேட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், ‘மறக்கப்பட்டுவிட்டவளாக’ என்பதைக் கூறவில்லை. அத்தியாயம் :

277

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்தபோது) தம்மைச் சந்திக்க (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் அனுமதி கோரியதாக (என்னிடம்) கூறினார்கள். அப்போது நான் ‘‘(அவதூறு பரப்புவதில் பங்கெடுத்துக்கொண்ட) இவருக்கா அனுமதி அளிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘அவருக்குப் பெரும் வேதனை ஏற்பட்டுவிட்டதல்லவா?” என்று கூறினார்கள். ‘‘ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (இறுதிக் காலத்தில்) கண்பார்வை இழந்துவிட்டதையே ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்” என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘நீங்கள்பத்தினி;அறிவாளி;சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்.(அவதூறு மூலம்)பேதைப் பெண்களின்மாமிசத்தைப் புசித்துவிடாமல்பட்டினியோடு காலையில் எழுபவர்” என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களைக் குறித்து கவிதை) பாடினார்கள். அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘ஆனால், நீங்கள் (அத்தகையவரல்லர். அவதூறு பரப்பியவர்களுடன் சேர்ந்து கொண்டவர்தான் நீங்கள்)” என்று கூறி னார்கள்.9 அத்தியாயம் :

278

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது) வந்து, ‘‘நீங்கள்பத்தினி;அறிவாளி;சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்.(அவதூறு மூலம்)பேதைப் பெண்களின்மாமிசத்தைப் புசித்துவிடாமல்பட்டினியோடு காலையில் எழுபவர்” என்று அவர்களைப் புகழ்ந்து கவிதை பாடினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘(ஹஸ்ஸானே!) நீங்கள் அப்படியில்லையே!” என்று சொன்னார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இவரைப் போன்றவர்களை நீங்கள் உங்களிடம் வர விடுகின்றீர்களா? அல்லாஹ்வோ ‘இந்த அவதூறுப் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தவர் களுக்குப் பெரும் வேதனை உண்டு’ என்று (24:11ஆவது வசனத்தில்) கூறுகின்றானே!” என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘குருடாவதைவிடப் பெரிய தண்டனை வேறேது?” என்று கேட்டுவிட்டு, ‘‘அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சார்பாக (அவர்கள்மீது வசைக்கவிதை பாடிய எதிரிகளுக்குக் கவிதை மூலமே) பதிலடி கொடுத்துவந்தார்” என்று சொன்னார்கள்.10 அத்தியாயம் :

279

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தொடர்பாக அவதூறு பேசப் பட்டபோது எனக்கு இன்னும் அது தெரிந்திராத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தொடர்பாக உரையாற்றிட எழுந்து நின்றார்கள். ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிவிட்டு, ‘‘என் மனைவியின் மீது அபாண்டப்பழி சுமத்தியவர்கள் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் எந்தத் தீயொழுக்கத்தையும் நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய பண்பையும் நான் காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறு எந்தச் சமயத்திலும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில் வெளியில் சென்றால் அவரும் என்னுடனேயே இருப்பார்” என்று சொன்னார்கள். உடனே சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அவர்களின் கழுத்தைச் சீவுவதற்கு என்னை அனுமதியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். ‘கஸ்ரஜ்’ குலத்தாரிடையேயிருந்து ஒரு மனிதர் எழுந்து, ‘‘பொய் சொன்னீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (அவதூறு கற்பித்தவர்கள்) ‘அவ்ஸ்’ குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால், அவர்களின் கழுத்துச் சீவப்படுவதை நீர் விரும்பமாட்டீர்” என்று சொன்னார். -ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களு டைய தாயார் அந்த மனிதரின் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள்.- (அவர்களிடையே வாக்குவாதம் எந்த அளவுக்கு முற்றிவிட்டதென்றால்) ‘அவ்ஸ்’ குலத்தாருக்கும் ‘கஸ்ரஜ்’ குலத்தாருக்கும் இடையே பள்ளிவாசலிலேயே குழப்பமும் கைகலப்பும் மூண்டுவிடப் பார்த்தது. (இவற்றில் எதுவுமே) எனக்குத் தெரியாது. அன்று மாலை நான் (இயற்கைத்) தேவைக்காக உம்மு மிஸ்தஹ் என்பாருடன் புறப்பட்டேன். (வழியில்) அவரது கால் (அவரது கம்பளி அங்கியால்) இடறியது. அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான், ‘‘என் அன்னையே! உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் மௌனமாயிருந்தார். பிறகு இரண்டாவது முறையாக அவரது கால் இடறியது. அப்போதும் அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான், ‘‘உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?” என்று கேட்டேன். பின்னர், மூன்றாம் முறையாக அவரது கால் இடறியது. அப்போதும் அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான் அவரை அதட்டினேன். அவர் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவனை உங்களுக்காகத்தான் திட்டுகிறேன்” என்று சொன்னார். நான், ‘‘எனது எந்த விஷயத்திற்காக?” என்று கேட்டேன். அப்போதுதான் அவர் என்னிடம் விஷயத்தை உடைத்தார். நான், ‘‘இப்படியா நடந்தது?” என்று கேட்டேன். அவர் ‘‘ஆம் அல்லாஹ்வின் மீதாணையாக, (இப்படித்தான் நடந்தது)” என்று பதிலளித்தார். நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். (அதிர்ச்சியில்) நான் எங்கே போனேன்; எதற்காகப் போனேன் என்பதுகூட எனக்கு நினைவில்லாதது போலாகிவிட்டது. அதில் கொஞ்சமோ அதிகமோ எதுவும் நினைவில் இல்லை. எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்” என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில் விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். நான் வீட்டினுள் சென்றபோது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்களைக் கீழ்த்தளத்திலும் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களை (குர்ஆன்) ஓதியவர்களாய் வீட்டின் மேல்தளத்திலும் இருக்கக் கண்டேன். என் தாயார், ‘‘என் அன்பு மகளே! என்ன விஷயமாக வந்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்து செய்தியைச் சொன்னேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட அளவுக்குக் கவலை அவர்களுக்கு ஏற்படவில்லை! அப்போது அவர்கள் ‘‘என் அன்பு மகளே! இந்த விவகாரத்தை, உன்மீது (பெரிதாக்கிக்கொள்ளாமல்) இலேசாக்கிக்கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! தன்னை விரும்பும் கணவரிடம் இருக்கும் ஓர் அழகிய பெண்ணுக்குச் சக்களத்திகள் பலபேர் இருக்க, அவர்கள் அவள்மீது பொறாமைப்படுவதும், அவளைப் பற்றிக் குறைகூறுவதும் இயல்புதான்” என்று சென்னார்கள். எனக்கு ஏற்பட்ட அளவுக்கு இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கவலை ஏற்படவில்லை என்பது இதிலிருந்து தெரிந்தது. நான் ‘‘என் தந்தைக்கு இந்த விஷயம் தெரியுமா?” என்று கேட்டேன். தாயார் ‘ஆம்’ என்று சொன்னார். ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு...?” என்று கேட்டேன். ‘ஆம்’ அல்லாஹ்வின் தூதருக்கும் தெரியும் என்றார் என் தாயார். நான் கண்ணீர் சிந்தி வாய்விட்டு அழலானேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் வீட்டின் மேல் தளத்தில் ஓதிக்கொண்டிருக்கையில், என் அழுகைச் சப்தத்தைக் கேட்டு கீழே இறங்கி வந்தார்கள். என் தாயாரிடம் ‘‘இவள் விஷயம் என்ன?” என்று கேட்டார்கள். என் தாயார், ‘‘அவளைப் பற்றிக் கூறப்பட்ட அவதூறுச் செய்தி அவளுக்கு எட்டிவிட்டது” என்று சொன்னார். உடனே அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்தன. பிறகு அவர்கள், ‘‘என் அன்பு மகளே! நீ உன் வீட்டிற்கே திரும்பிச் செல்ல வேண்டுமென்று உன்னிடம் வற்புறுத்துகிறேன்” என்று கூறினார்கள். நான் திரும்பி வந்துவிட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் வீட்டிற்கு வந்திருந்து என் பணிப்பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள் ‘‘இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து ‘அவர்கள் பிசைந்து வைத்த மாவை’ அல்லது ‘அவர்கள் குழைத்து வைத்த மாவை’த் தின்றுவிட்டுச் செல்லும் அளவுக்கு (மெய் மறந்து) உறங்கிவிடுவார்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையையும் நான் (அவரிடம்) அறியவில்லை” என்று சொல்லியிருந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அவளை அதட்டி, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்!” என்று அவளிடம் விரிவாக விஷயத்தை விளக்கினார். அப்போதும் அவள் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக, பொற்கொல்லன், சிவப்பான (தூய்மையான) தங்கக் கட்டியை எப்படி மாசுமறுவற்றதாகக் கருதுவானோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன்” என்றே சொன்னாள். எந்த மனிதரைக் குறித்து (என்னுடன் இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் ‘‘அல்லாஹ் தூய்மையானவன். நான் இதுவரை எந்த அந்நியப் பெண்ணின் ஆடையையும் நீக்கியதில்லையே!” என்று சொன்னார். பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைந்தார்.11 என் தாய் தந்தை இருவரும் என்னிடம் காலையில் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு வரும்வரை அவர்கள் (என்னிடமே) இருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, என் தாய் தந்தை இருவரும் (ஒருவர்) என் வலப் பக்கமும், (மற்றவர்) என் இடப் பக்கமும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘‘ஆயிஷா! நீ ‘தீய செயல் ஏதும் புரிந்திருந்தால்’ அல்லது ‘அநீதியிழைத்திருந்தால்’, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக்கொள்! ஏனெனில் அல்லாஹ், தன் அடியார்களிடமிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறான்” என்று சொன்னார்கள். அப்போது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து வாசலில் அமர்ந்திருந்தாள். நான், (நபி (ஸல்) அவர்களிடம்,) ‘‘இந்தப் பெண் வெளியே சென்று ஏதாவது சொல்வாள் என்று நீங்கள் வெட்கப்படவில்லையா?” என்று கேட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனக்கு) அறிவுரை கூறினார்கள். நான் என் தந்தையின் பக்கம் திரும்பி, ‘‘இவர்களுக்குப் பதில் சொல்லுங்கள்” என்றேன். அவர்கள் ‘‘நான் என்ன பதில் சொல்வது?” என்று கேட்டார்கள். பிறகு நான் என் தாயாரிடம் திரும்பி, ‘‘இவர்களுக்குப் பதில் சொல்லுங்கள்!” என்றேன். அவர்கள், ‘‘நான் என்ன சொல்வேன்?” என்று கேட்டார்கள். அவ்விருவருமே பதில் அளிக்காத காரணத்தால், நான் ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனது தகுதிக்கேற்ப அவனைப் போற்றிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக, நான் (இப்படிச்) செய்யவில்லையென்று உங்களிடம் சொன்னால், -வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நான் உண்மையே பேசுகிறேன் என்பதை அறிவான்- அது எனக்கு உங்களிடம் பயனளிக்கப்போவதில்லை. நீங்கள் அதைப் பேசிவிட்டீர்கள். அது உங்கள் உள்ளத்தில் பதிந்தும்விட்டது. நான் அப்படிச் செய்தேன் என்று சொன்னால் -நான் அப்படிச் செய்யவில்லை என்பதை அல்லாஹ் அறிவான்- ‘‘தனக்குத்தானே (செய்த குற்றத்தை ஏற்று) ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டாள்” என்று நீங்கள் சொல்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக, (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களுடைய தந்தையையே உங்களுக்கும் எனக்கும் உவமையாக நான் காண்கிறேன்” -அப்போது (யூசுஃப் அவர்களுடைய தந்தை) யஅகூப் (அலை) அவர்களின் பெயரை நினைவுபடுத்திப் பார்த்தேன். ஆனால் நினைவுக்கு வரவில்லை- ‘‘(இந்நிலையில்,) பொறுமையை மேற்கோள்வதே அழகானது. நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடமே நான் பாதுகாப்புக்கோருகிறேன்” என யஅகூப் (அலை) அவர்கள் கூறியதையே நானும் கூறுகிறேன்.12 அந்த நேரத்தில் அல்லாஹ்வின தூதர் (ஸல்) அவர்கள்மீது, (குர்ஆன் வசனங் கள்) அருளப்பெற்றன. ஆகவே, நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘வஹீ’ (‘வேத அறிவிப்பு’ அருளப்படுவது) அவர்களுக்கு நிறுத்தப்பட்டபோது, நான் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைத் தெளிவாகக் கண்டேன். அவர்கள் தம் நெற்றி (வியர்வை)யைத் துடைத்துக்கொண்டிருந்தார்கள். மேலும் ‘‘ஆயிஷா! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் நீ குற்றமற்றவள் என்று (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான்” என்று சொன்னார்கள். நான் அன்று கடுங்கோபத்துடன் இருந்தேன். என் தாய் தந்தையர் என்னிடம் ‘‘நீ எழுந்து நபி (ஸல்) அவர்களிடம் செல்!” என்று கூறினர். அதற்கு, ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அவர்களிடம் எழுந்து செல்லவுமாட்டேன். அவர்களைப் பாராட்டவுமாட்டேன். உங்கள் இருவரையுங் கூட பாராட்டமாட்டேன். மாறாக, என்னைக் குற்றமற்றவளாக அறிவித்து வேத அறிவிப்பை அருளிய அல்லாஹ்வையே புகழ்வேன். நீங்கள் (என்மீதான) அவதூற்றைக் கேட்டுக்கொண்டிருந்தீர்கள். அதை மறுக்கவுமில்லை; அதை மாற்ற முயலவுமில்லை” என்று சொன்னேன். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூறிவந்தார்கள்: (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அவர்களின் மார்க்கப் பேணுதலின் காரணத்தால், அல்லாஹ் (அவதூறுப் பிரசாரத்தில் பங்குபெறவிடாமல்) காப்பாற்றிவிட்டான். அவர்கள் என்னைப் பற்றி நல்ல கருத்தையே சொன்னார்கள். ஆனால், அவர்களின் சகோதரியான ஹம்னாவோ (அவதூறு பேசி) அழிந்தவர்களுடன் சேர்ந்து அழிந்துபோனார். (முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹும், ஹஸ்ஸான் பின் ஸாபித்தும் ஆவர். நயவஞ்சகன் அப்துல்லாஹ் பின் உபைதான் அதனுடன் (பல குற்றச்சாட்டுகளைத்) தேடி இணைத்து அதைப் பரப்பி வந்தவன் ஆவான். அவதூறு பரப்பியவர்களில் பெரும் பங்கு வகித்தவனும் அவன்தான். ஹம்னாவும்கூட. (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘மிஸ்தஹுக்கு பயன்தரும் எந்த உதவியும் இனி ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ், ‘‘உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் புலம் பெயர்ந்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணை யுடையோனுமாய் இருக்கின்றான்” எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான். (இந்த வசனத்தில்) ‘உலுல் ஃபள்ல்’ (செல்வம் படைத்தோர்) என்று அபூபக்ர் (ரலி) அவர்களையே அல்லாஹ் குறிப்பிட்டான். ‘மஸாக்கீன்’ (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக, எங்கள் இறைவா! எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறி, தாம் முன்பு செய்துவந்ததைப் போன்றே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்துவரத் தொடங்கினார்கள். அத்தியாயம் :

280

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! ‘‘(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்கள் மார்புகள்மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க்கொள்ளட்டும்!” எனும் (24:31 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளியபோது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.13 அத்தியாயம் :

281

ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள்மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்” எனும் (24:31ஆவது) வசனம்இறங்கியபோது, பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி (மறைத்து)க்கொண்டார்கள். அத்தியாயம் :

282

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இந்த உலகில் அவனை இரு கால்களால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனை, அவனது முகத்தால் நடக்கச்செய்திட முடியாதா?” என்று (பதிலுக்குக்) கேட்டார்கள். (இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், ‘‘ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக! ‘‘என்று சொன்னார்கள். அத்தியாயம் :

283

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘நான் கேட்டேன்.’ அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘கேட்கப்பட்டது’. அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பிப்பதுதான் (பெரும் பாவம்)” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது” என்று சொன்னார்கள். நான் ‘‘பிறகு எது?” என்று கேட்க, அவர்கள் ‘‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபசாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல் களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற் கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் இந்த (25:68ஆவது) இறைவசனம் இறங்கிற்று.2 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

284

காசிம் பின் அபீபஸ்ஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்தவனுக்குப் பாவமன்னிப்பு உண்டா?” என்று கேட்டுவிட்டு, ‘‘மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை...” எனும் (25:68ஆவது) இறைவசனத்தையும் அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அதைக் கேட்ட சயீத் (ரஹ்) அவர்கள், ‘‘இதே வசனத்தை நீங்கள் (என்னிடம்) ஓதிக்காட்டியதைப் போன்றே நானும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள், ‘‘இது (25:68) மக்காவில் அருளப்பெற்ற வசனமாகும். இ(தன் சட்டத்)தை, மதீனாவில் அருளப்பெற்ற ‘அந்நிசா’ அத்தியாயத்திலுள்ள ஒரு வசனம் (4:93) மாற்றிவிட்டது” என்று பதிலளித்தார்கள்.3 அத்தியாயம் :

285

சயீத் பின் ஜுபைர் (ரஹ்)அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையாளரை (வேண்டுமென்றே) கொலை செய்தல் (பாவமன்னிப்புக் குரிய குற்றமா என்பது) தொடர்பாக (இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஆகவே, நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கிப் பயணம் மேற்கொண்டேன். அவர்கள், ‘‘இது (4:93) இறுதியாக இறங்கிய வசனங்களில் ஒன்றாகும். இதை எந்த வசனமும் மாற்றவில்லை” என்று பதிலளித்தார்கள்.4 அத்தியாயம் :

286

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான், ‘‘அவனுக்குரிய தண்டனை நரகம்தான்” எனும் (4:93ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் ‘‘அவனுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது” என்று சொன்னார்கள். புகழோங்கிய இறைவனின் ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை” எனும் (25:68ஆவது) வசனம் குறித்துக் கேட்டதற்கு, ‘‘இந்த வசனம் அறியாமைக் காலத்தைப் பற்றியதாகும்” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.5 அத்தியாயம் :

287

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்...” எனும் (4:93ஆவது) இறைவசனத்தைப் பற்றியும், ‘‘மேலும், (கொலை செய்யக் கூடாது என) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்லமாட்டார்கள்” என்று தொடங்கி ‘‘பாவமன்னிப்புக் கோரி இறை நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர் தவிர” என்று முடியும் (25:68-70) வசனங் கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நான்தான் அன்னாரிடம் கேட்டேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இந்த வசனங்கள் (25:63-69) இறங்கியபோது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடை விதித்த உயிர்களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீய செயல்கள் புரிந்தோம். (ஆகவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்)” என்று கூறிக்கொண்டனர். ஆகவே அல்லாஹ், ‘‘அவர்களில் எவர் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும் கருணையுடையோனும் ஆவான்” எனும் (25:70ஆவது) வசனத்தை அருளினான் என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

288

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் ‘‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்...” என்று தொடங்கும் (4:93ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (அவ்வாறே) நான் அந்த வசனம் குறித்து அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இந்த (4:93ஆவது) வசனத்(தின் சட்டத்)தை வேறெந்த வசனமும் மாற்றவில்லை” என்று சொன்னார்கள். ‘‘அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அவர்கள் அழைப்பதில்லை” என்று தொடங்கும் (25:68ஆவது) வசனம் குறித்துக் கேட்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள். அது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இது இணைவைப்போர் தொடர்பாக அருளப்பெற்றது” என்று பதிலளித்தார்கள்.6 அத்தியாயம் :

289

மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இந்த 25:77ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘லிஸாமன்’ எனும் சொல்லுக்கு விளக்கமளிக்கும்போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘(மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் (வந்து) சென்றுவிட்டன. ஒன்று: புகை; இரண்டாவது, சந்திரன் பிளப்பது; மூன்றாவது, கிழக்கு ரோமானியர் (தோல்வியடைந்து பின்னர் அவர்கள் வெற்றி காண்பது); நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனையான பிடியும் அவனுடைய வேதனையும்” என்று சொன்னார்கள்.7 அத்தியாயம் :

290

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மறுமை நாளில் தம் தந்தையின் மீது தூசியும், கரும் புழுதியும் படிந்திருக்கும் நிலையில் அவர்களைக் காண்பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3 (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்ஃகபரா’, ‘அல்கத்தரா’ ஆகிய சொற்களுக்கு (‘புழுதி’ எனும்) ஒரே பொருள் ஆகும். அத்தியாயம் :

291

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் தந்தையைச் சந்திப்பார்கள். அப்போது ‘‘இறைவா! ‘மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவுபடுத்தமாட்டாய்’ என எனக்கு வாக்களித்தாயே!” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், ‘‘இறை மறுப்பாளர்கள் சொர்க்கத்தில் நுழையத் தடை விதித்துவிட்டேன்” என்று பதிலளிப்பான்.4 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

292

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீர் எச்சரிப்பீராக!” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின்மீது ஏறிக்கொண்டு, ‘‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குடும்பங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் ‘‘ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை” என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், ‘‘நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான். அப்போது தான் ‘‘அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்...” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.5 அத்தியாயம் :

293

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ், ‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!” எனும் (26:214ஆவது) வசனத்தை அருளியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் கூட்டத்தாரே!’ அல்லது ‘இது போன்ற ஒரு வார்த்தையைக்’ கூறியழைத்து, ‘‘உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கி (காப்பாற்றி)க்கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்றவியலாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தóபின் புதல்வரான (என் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் அவர்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபியாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் புதல்வியான ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது” என்று சொன்னார்கள்.6 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

294

முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர்) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூஜஹ்லையும், ‘அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் முஃகீரா’வையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘என் தந்தையின் சகோதரரே! ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)’ என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும் ‘‘அபூதாóபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவரிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்ன தையே சொல்லி (அவரைத் தடுத்து)க்கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, ‘‘நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்” என்பதாகவே இருந்தது. ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்” என்று சொன்னார்கள். அப்போதுதான், ‘‘இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை” எனும் (9:113 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ‘‘(நபியே!) நீர் விரும்பியவரை(யெல்லாம்) நல்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான்” எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.2 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (28:76ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலில் குவ்வத்தி’ (பலவான்கள்) என்பதன் கருத்தாவது: (காரூனின் பொக்கிஷங்களின் சாவிகளைப் பலவான்களான) ஆண்களில் ஒரு குழுவினரால்கூட சுமக்க முடியாது. ‘ல தனூஉ’ எனும் சொல்லுக்கு ‘சிரமமாக மாறும்’ என்பது பொருள். (28:10ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபாரிஃகா’ எனும் சொல்லுக்கு ‘(மூசாவுடைய தாயாரின் உள்ளம்) மூசாவின் நினைவைத் தவிர (வேறெல்லாக் கவலைகளிலிருந்தும் நீங்கி) வெறுமையாக இருந்தது’ என்று பொருள். (28:76ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபரிஹீன்’ எனும் சொல்லுக்கு ‘ஆணவம் கொண்டோர்’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘பூரிப்படைவோர்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) (28:11ஆவது வசனத்திலுள்ள) ‘அவரை நீ பின்தொடர்ந்து செல்’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘குஸ்ஸீஹி’ எனும் சொல்லுக்குரியதாகும். சில நேரங்களில் ‘சம்பவத்தை எடுத்துரைத்தல்’ எனும் பொருளிலும் இச்சொல் வருவதுண்டு. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன் ஜுனுபின்’ எனும் சொல்லுக்கு ‘தூரத்திலிருந்து’ என்பது பொருள். (இச்சொல்லும்) ‘அன் ஜனாபத்தின்’ எனும் சொல்லும் (பொருளில்) ஒன்றே. ‘அன் இஜ்தினாப்’ எனும் சொல்லும் அவ்வாறே. (28:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யப்தி” (தாக்க) எனும் சொல் ‘யப்து” என்றும் வாசிக்கப்பட்டுள்ளது. (28:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஃதமிரூன’ எனும் சொல்லுக்கு ‘ஆலோசனை செய்துகொண்டிருக்கின்றனர்’ என்று பொருள். (28:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்உத்வான்’ எனும் சொல்லும், ‘அல்அதாஉ’ எனும் சொல்லும், ‘அத்தஅத்தீ’ எனும் சொல்லும் (‘எல்லை மீறல்’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். (28:29ஆவது வசனத்திலுள்ள) ‘கண்டார்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ஆனஸ’ எனும் சொல்லுக்குரியதாகும். (28:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜத்வா’ எனும் சொல்லுக்கு ‘தீக்கொழுந்து இல்லாத கெட்டியான எரி கொள்ளி’ என்பது பொருள். (27:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷ்ஷிஹாப்’ எனும் சொல்லுக்கு ‘தீக்கொழுந்து உள்ள எரிகொள்ளி’ என்பது பொருள். (28:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜான்’ எனும் சொல், பாம்பு வகைகளில் ஒன்றை (வெண்ணிறச் சிறிய பாம்பை)க் குறிக்கும். ‘அஃபாஈ’ (பெண்ணின விஷப் பாம்பு) மற்றும் ‘அசாவித்’ (கருநாகம்) ஆகியவற்றையும் (20:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹய்யத்’ (பாம்பு) எனும் சொல் குறிக்கும். (28:34ஆவது வசனத்திலுள்ள) ‘உதவியாளர்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ரித்ஃ’ எனும் சொல்லுக்குரியதாகும். (இதே வசனத்திலுள்ள சொல்லை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘யுஸத்திக்குனீ’ (அவர் என்னை உண்மைப்படுத்திவைப்பார்) என்று ஓதினார்கள். (வேறுசிலர் ‘யுஸத்திக்னீ’ என்று ஓதியுள்ளார்கள்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (28:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸ நஷுத்து’ எனும் சொல்லுக்கு, ‘உமக்கு நாம் உதவி புரிவோம்’ என்று பொருள். (‘ஸ நஷுத்து அளுதக்க’ என்பதற்கு ‘உமது கரத்தை நாம் வலுப்படுத்துவோம்’ என்று பொருள்.) நீ யாருக்காவது உதவி புரியும்போதெல்லாம் நீ அவருக்குக் கரமாக ஆகிவிடுகிறாய்! (அதனால், இங்கு ‘கரம்’ அல்லது ‘கொடுங்கை’ (‘அளுத்’) எனும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.) (28:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மக்பூஹீன்’ எனும் சொல்லுக்கு ‘நாசமடைந்தவர்கள்’ என்பது பொருள். (28:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்ஸல்னா லஹுமுல் கவ்ல’ எனும் வாக்கியத்திற்கு ‘(நம்முடைய வேத) வாக்கை அவர்களுக்கு நிறைவாகத் தெளிவுபடுத்தினோம்’ என்று பொருள். (28:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஜ்பா’ எனும் சொல்லுக்கு ‘கொண்டுவரப்படுகிறது’ என்பது பொருள். (28:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பத்திரத்’ எனும் சொல்லுக்கு ‘அடாவடித்தனம் புரிந்தனர்’ என்று பொருள். (28:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உம்மிஹா’ (அதன் தலைநகர்) என்பது மக்காவையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் குறிக்கும். (28:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துகின்னு’ எனும் சொல்லுக்கு ‘(உள்ளங்கள்) மறைத்துவைக்கின்ற’ என்று பொருள். (இதன் இறந்தகால வினைச் சொல்லான) ‘அக்னன்த்து’ என்பதற்கு ‘மறைத்தேன்’ என்று பொருள். (இதையே) ‘கனன்த்து’ என்று சொன்னால் ‘மறைத்தேன்’ என்றும், ‘வெளிப்படுத்தினேன்’ என்றும் (எதிரிடைப்) பொருள் வரும். (28:82ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வை கஅன்ன’ எனும் சொல், ‘அலம் தர’ (நீர் பார்க்கவில்லையா?) எனும் சொல்லுக்கு நிகரானதாகும். (இதே சொல்லுக்கு ‘என்ன நேர்ந்தது’ என்றும், ‘ஆச்சரியம்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யப்சுத்து’ எனும் சொல்லுக்குத் ‘தாராளமாக வழங்குகிறான்’ என்றும், ‘யக்திரு’ எனும் சொல்லுக்கு ‘சுருக்கிவிடுகின்றான்’ என்றும் பொருள். அத்தியாயம் :

295

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (28:85ஆவது வசனத்திலுள்ள) ‘நீங்கள் திரும்ப வேண்டிய இடம்’ (மஆத்) என்பது மக்காவைக் குறிக்கிறது என்று கூறினார்கள். அத்தியாயம் :

296

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘கிந்தா’3 எனும் இடத்தில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘‘மறுமை நாளில் புகை ஒன்று வந்து நயவஞ்சகர்களின் செவிப்புலன்களையும் பார்வைப் புலன்களையும் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கையாளருக்கு ஜலதோஷம் ஏற்படுவது போன்றிருக்கும்” என்று சொன்னார். (இதைக் கேட்ட) நாங்கள் பீதியடைந்தோம். உடனே நான், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். (இதைக் கேட்டதும்) அவர்கள் கோபமுற்று (எழுந்து நேராக) அமர்ந்துகொண்டு (பின்வருமாறு) கூறினார்கள்: அறிந்தவர் சொல்லட்டும்! அறியாதவர், அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று சொல்லட்டும்! ஏனெனில், ஒருவர் தாம் அறியாததை, எனக்குத் தெரியாது என்று சொல்வதும் அறிவின்பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘‘சொல்வீராக: நான் இதற்காக, உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவனல்லன்” என்று (38:86) கூறியுள்ளான். மேலும், குறைஷியர் இஸ்லாத்தை ஏற்பதில் காலம் தாழ்த்தினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் குறைஷியருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, எனக்கு உதவி செய்!” என்று வேண்டினார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. இறுதியில் அதில் அவர்கள் (பலரும்) அழிந்துபோனார்கள். மேலும் பலர் செத்தவற்றையும் எலும்புகளையும் உண்ண வேண்டியதாயிற்று. இன்னும் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். இந்நிலையில் அபூசுஃப்யான் வந்து, ‘‘முஹம்மதே! நீர் எங்களிடம் உறவுகளைப் பேணுமாறு கட்டளையிட்டபடி வந்தீர். உம் சமுதாயத்தாரோ அழிந்துகொண்டி ருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் (இந்தப் பஞ்சத்தை நீக்கும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானத்திóருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது சூழ்ந்துகொள்ளும்; அது வதைக்கும் வேதனையாகும்” என்று தொடங்கி, ‘‘மெய்யாகவே, (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். எனினும், நீங்கள் (பாவம் செய்யவே) திரும்பச் செல்கிறீர்கள்” என்பது வரையிலான (44:10-15) வசனங்களை ஓதிக்காட்டினார்கள். (நபி (ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றுவிட்டாலும்,) மறுமை வேதனை வந்தால் அது அவர்களைவிட்டு அகற்றப்படவாபோகிறது? (இல்லை. பஞ்சம் நீங்கிய) பிறகு மீண்டும் அவர்கள் இறைமறுப்புக்கே திரும்பிவிட்டனர். இதைத்தான் அல்லாஹ், ‘‘மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் அவர்களிடம் பழிவாங்கியே தீருவோம்” என்று (44:16ஆவது வசனத்தில்) பத்ர் போரைக் குறிக்கும் வகையிலும், வ லிஸாமன் (தண்டனை உங்களைப் பிடித்தே தீரும்) என்று (25:77ஆவது வசனத்தில்) அதே பத்ர் போரைக் குறிக்கும் வகையிலும் கூறுகின்றான். மேலும், ‘‘அலிஃப். லாம். மீம். (நபியே!) (கிழக்கு) ரோமர்கள் அண்டை நாட்டில் (இப்போது) தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். (எனினும்) அவர்கள் இத்தோல்விக்குப்பின் சில ஆண்டுக்குள்ளேயே வெற்றி அடைவார்கள்” என்றும் அல்லாஹ் கூறுகின்றான். (30:1-3) இது முன்பே (நடந்து) முடிந்துவிட்டது.4 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

297

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப் போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி,) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, அக்னி ஆராதனையாளர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டுப் பிறகு, ‘‘எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோஅதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில் (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது” எனும் (30:30ஆவது) வசனத்தைஓதிக்காட்டினார்கள்.5 அத்தியாயம் :

298

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘எவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ” எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. ஆகவே, அவர்கள், ‘‘எங்களில் எவர்தான் தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்துவிடாமல் (கலப்பற்ற இறைநம்பிக்கை மிக்கவராய்) இருக்கிறார்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அது அப்படியல்ல; (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம் ‘‘இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்” என்று சொல்லியிருப்பதை (குர்ஆன் வாயிலாக) நீர் கேட்கவில்லையா?”என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :

299

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள்முன் வந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (வாகனமேதுமின்றி) நடந்து வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘‘ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?” என்று கேட்டார். அவர்கள், ‘‘ஈமான் (இறைநம்பிக்கை) என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப்பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வழிபடுவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸகாத்’தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்” என்றார்கள். அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இஹ்சான்’ (நன்மை புரிதல்) என்றால் என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஹ்சான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான் (எனும் உணர்வுடன் அவனை வழிபடுவதாகும்.)” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது வரும்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக்கூறுகிறேன்: ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.3 காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும். ‘‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கின்றான். இன்னும், அவன் கருப்பைகளில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்” (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று சொன்னார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்துவரச் சென்றார்கள். (அவரைத் தேடியும்) அவரை அவர்கள் எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி (ஸல்) அவர்கள், ‘‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்” என்று சொன்னார்கள்.4 அத்தியாயம் :

300

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்” என்று கூறிவிட்டு, பிறகு ‘‘நிச்சயமாக, மறுமை(நாள் எப்போது வரும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” என்று தொடங்கும் (31:34 ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.5 அத்தியாயம் :

301

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அருள் வளமும் உயர்வும் உடைய அல்லாஹ், ‘‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன்” என்று கூறுகின்றான். இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால், ‘‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.2 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் ‘‘இது நபிமொழியா? (அல்லது உங்களின் கருத்தா?)” என வினவப்பட, அன்னார் ‘‘(இது நபிமொழி இல்லாமல்) வேறென்ன?” என்று (திருப்பிக்) கேட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அத்தியாயம் :

302

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘உயர்ந்தோன் அல்லாஹ், ‘என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை, (அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுக்கு முன்னே) சொற்பமானவையே ஆகும்’ எனக் கூறுகின்றான்” என்று சொன்னார்கள். பிறகு, ‘‘அவர்கள் செய்துகொண்டி ருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனத்தை ஒதினார்கள். மற்றோர் அறிவிப்பில், அபூஹுரைரா (ரலி) அவர்கள் (32:17ஆவது வசனத்தின் மூலத்தில் உள்ள ‘குர்ரத்’ (குளிர்ச்சி) எனும் ஒருமையான சொல்லை) ‘குர்ராத்’ என(ப் பன்மையாக) வாசித்தார்கள் என்று காணப்படுகிறது. அத்தியாயம் :

303

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த ஓர் இறைநம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள் விரும்பினால், ‘‘நிச்சயமாக, இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார்” எனும் (33:6ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். ஓர் இறைநம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி, இறந்துபோய்) செல்வத்தை விட்டுச்சென்றால் அவருடைய தந்தை வழி உறவினர்கள் -அவர்கள் எவ்வகையினராயினும் சரி -அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்! எவர் (இறக்கும்போது) ஒரு கடனை (அடைக்காமல்) விட்டுச்செல்கின்றாரோ, அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கிறாரோ அவர்கள் என்னிடத்தில் வரட்டும். நானே அவர்களுக்குரிய காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 அத்தியாயம் :

304

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘வளர்ப்புப் புதல்வர்களை அவர் களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ‘ஸைத் பின் முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்துவந்தோம்.3 அத்தியாயம் :

305

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்” என்று தொடங்கும் (33:23ஆவது) வசனம், அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றதென்றே நாங்கள் கருதுகிறோம்.4 அத்தியாயம் :

306

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்,) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்தபோது ‘அல்அஹ்ஸாப்’ எனும் (33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதக் கேட்டிருந்தேன். குஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள்.5 (அந்த வசனம் இதுதான்:) ‘‘இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்.” (33:23)6 அத்தியாயம் :

307

நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடுமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.7 என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார்கள்: ‘‘(ஆயிஷாவே)! நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும்வரை அவசரப்பட வேண்டாம்” என்று சொன்னார்கள். என்னுடைய பெற்றோர் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிடப்போவதில்லை என்று நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், ‘‘நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக” என்று தொடங்கும் (33:28, 29) இரு வசனங்களை முழுமையாகச் சொன்னார்கள். அப்போது நான், ‘‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை இல்லத்தையுமே விரும்புகிறேன்” என்று நபியவர்களிடம் சொன்னேன்.8 அத்தியாயம் :

308

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளித்திடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டளை யிடப்பட்டபோது, அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார் கள்: ‘‘(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக் கொள்ளும்வரை அவசரப்பட வேண்டாம்” என்று சொன்னார்கள். என் பெற்றோர் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப்போவ தில்லை என்று நபியவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், ‘‘நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களது வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுஉலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை தயார் செய்துவைத்துள்ளான்” எனும் (33:28,29) வசனங்களை ஓதினார்கள். அப்போது நான், ‘‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்” என்று சொன்னேன். பிறகு நபி (ஸல்) அவர்களின் இதரத் துணைவியரும் என்னைப் போன்றே செயல்பட்டனர்.9 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

309

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘(நபியே!) நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உமது உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்...” எனும் இந்த (33:37ஆவது) வசனம் (நபி (ஸல்) அவர்களின் அத்தை மகளான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) மற்றும் (நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது.10 அத்தியாயம் :

310

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக (மணக்கொடையின்றி) வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘‘ஒரு பெண் தன்னைத் தானே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?” என்று சொல்லிக்கொண்டேன். ‘‘(நபியே! உம்முடைய துணைவியரான) அவர்களில் நீர் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீர் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் ஒதுக்கிவைத்தவர்களில் யாரை விரும்புகிறீரோ அவர்களை (மறுபடியும்) உம்முடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உம்மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (33:51ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் ‘‘உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாகப் பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.12 அத்தியாயம் :

311

முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே! உங்கள் துணைவி யரான) அவர்களில் நீர் விரும்பி யவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீர் விரும்பிய வர்களை (விரும்பும் காலம்வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீரோ அவர்களை (மறுபடியும்) உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உம்மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (33:51 ஆவது) இறைவசனம் அருளப்பட்ட பிறகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் மற்றொரு மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்கும்படி அனுமதி கேட்பார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள். நான், ‘‘அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! (வேறொரு மனைவிக்காக எனது நாளை விட்டுக்கொடுக்கும்படி,) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காகவும் தங்களை விட்டுக்கொடுக்க விரும்பமாட்டேன்’ என்று சொல்வேன்” என்றார்கள்.13 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

312

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.14 அத்தியாயம் :

313

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஸைனப் பின்த் ஜஹ்ஷ்’ (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள்.15 மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே அமர்ந்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பதுபோல் (பல முறை) காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந் திருக்கவில்லை. அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்துவிட்டார்கள். அவர்கள் எழுந்து விடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்)கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களிடம்) செல்லப்போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து(கொண்டு பேசிக்)கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்று விட்டார்கள். நான் உடனே உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் உள்ளே செல்லப்போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், ‘‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்” என்று தொடங்கும் இந்த (33:53ஆவது) வசனத்தை அருளினான். அத்தியாயம் :

314

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பிவைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (‘வலீமா’ விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டுவிட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக்கொண்டே அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அல்லாஹ், ‘‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்” எனும் (33:53ஆவது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்துவிட்டனர். அத்தியாயம் :

315

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரொட்டியும் இறைச்சியும் விருந்தாக அளித்து, ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (வலீமா விருந்து) உணவுக்காக மக்களை அழைப்பதற்கு நான் அனுப்பப்பட்டேன். ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் உண்பார்கள்; புறப்பட்டுவிடுவார்கள். பிறகு மற்றொரு கூட்டத்தார் வருவார்கள். உண்பார்கள்; போய்விடுவார்கள். இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லை என்பதுவரை நான் மக்களை அழைத்தேன். பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அழைப்பதற்கு இனி ஒருவரும் இல்லை” என்றேன். அவர்கள், ‘‘உங்கள் உணவை எடுத்துச் செல்லுங்கள்!” என்றார்கள். (விருந்து முடிந்தும்) மூன்று பேர் மட்டும் வீட்டில் பேசிக்கொண்டே இருந்து விட்டனர். நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்குச் சென்று ‘‘வீட்டாரே! அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் (உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!)” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘வ அலைக்குமுஸ் ஸலாம், வ ரஹ்மத்துல்லாஹ் (தங்கள்மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!) தங்களின் (புதிய) துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்? பாரக்கல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு வளம் வழங்கட்டும்!)” என்று (மணவாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியர் அனைவரின் அறைகளையும் தேடிச்சென்று ஆயிஷா (ரலி) அவர்களுக்குச் சொன்னதைப் போன்றே (முகமன்) சொல்ல, அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே (பிரதி முகமனும் மணவாழ்த்தும்) கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (புதுமணப் பெண் ஸைனப் (ரலி) அவர்களிடம்) திரும்பி வர, அப்போதும் வீட்டில் அந்த மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர்.நபி (ஸல்) அவர்களோ அதிக வெட்க (சுபாவ)ம் உடையவர்களாய் இருந்தார்கள். ஆகவே, (அவர்களை விரைவாகப் போகச் சொல்லாமல்,) ஆயிஷா (ரலி) அவர்களின் அறையை நோக்கி நடந்தபடி (மீண்டும்) புறப்பட்டார்கள். அந்த மூவரும் வெளியேறிவிட்டார்கள் என்று ‘நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா?’ அல்லது, ‘(மற்றவர் மூலம்) தெரிவிக்கப்பட்டதா?’ என்பது எனக்குத் தெரியவில்லை. (இதைக் கேட்ட உடன்) நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்கு) திரும்பி வந்தார்கள். அவர்கள் ஒரு காலை வாசற்படியிலும் மற்றொன்றை வெளியேயும் வைத்தபோது, எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்க விட்டார்கள். (அப்போதுதான்) பர்தா (சட்டம்) தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :

316

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது ‘வலீமா’ (மணவிருந்து) கொடுத்தார்கள். மக்களுக்கு ரொட்டியும் இறைச்சியும் வயிறு நிரம்ப உண்ணக் கொடுத்தார்கள். பிறகு, துணைவியாருடன் தாம்பத்தியத்தைத் தொடங்கும் நாளின் காலையில் வழக்கமாகத் தாம் செய்து வந்ததைப் போன்று (தம் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களுடைய அன்னை யரின் அறைகளுக்கு (அன்றும்) சென்றார்கள். அவர்களுக்கு சலாம் (முகமன்) சொல்லி, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். துணைவியரும் நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் (பிரதி முகமன்) சொல்லி, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். (ஸைனப் (ரலி) அவர்களிருந்த) தம் இல்லத்திற்குத் திரும்பி வந்தபோது, (விருந்துண்ட) இருவர் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவ்விருவரைக் கண்டதும் அவர்கள் வீட்டிலிருந்து திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டிலிருந்து திரும்பிச் சென்றதைப் பார்த்தபோது, வேகமாக (வெளியே) சென்றுவிட்டனர். அவ்விருவரும் வெளியே சென்றுவிட்டதாக ‘நானே நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேனா,’ அல்லது ‘அவர்களுக்கு (இச்செய்தி வேறு யார் மூலமும்) தெரிவிக்கப்பட்டதா?’ என்பது எனக்குத் தெரியவில்லை. (இதையறிந்த) உடனே, நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள் சென்று, (அவர்களைத் தொடர்ந்து வீட்டிற்குள் செல்ல முயன்ற) எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். அப்போதுதான் பர்தா தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது. இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அவர் களிடமிருந்து இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. அத்தியாயம் :

317

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு ‘‘சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீஙகள் யார் என்பது எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!” என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் என் தேவை ஒன்றுக்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் சொன்னார்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளினான். பிறகு அந்நிலை அவர்களைவிட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களது கரத்தில் அப்படியே இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள்.16 அத்தியாயம் :

318

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பர்தா தொடர்பான வசனம் அருளப் பெற்ற பிறகு, என் வீட்டினுள் வருவதற்கு அபுல் குஅய்ஸின் சகோதரர் ‘அஃப்லஹ்’ (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்டுப் பெறாத வரை உள்ளே வர அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன்” என்று கூறிவிட்டேன். ஏனெனில், எனக்குப் பாலூட்டியவர், அஃப்லஹின் சகோதரரான அபுல் குஅய்ஸ் அல்லர். அபுல் குஅய்ஸின் மனைவிதான் எனக்குப் பாலூட்டியவர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அபுல் குஅய்ஸின் சகோதரரான ‘அஃப்லஹ்’ என்னிடம் (வீட்டினுள் வர) அனுமதி கேட்டார். தங்களிடம் அனுமதி கேட்காத வரை அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன் என்று மறுத்துவிட்டேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘உன் (பால்குடித்) தந்தையின் சகோதரருக்கு நீ ஏன் அனுமதி தரவில்லை?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பாலூட்டியவர் அந்த (அபுல் குஅய்ஸ் என்ற) ஆண் அல்லவே? மாறாக, அபுல் குஅய்ஸின் மனைவிதானே எனக்குப் பாலூட்டினார்!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவருக்கு (அஃப்லஹுக்கு) அனுமதி கொடு! ஏனென்றால், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர்தான். உன் வலக்கரம் மண்ணாகட்டும்” என்று சொன்னார்கள்.17 (இதன் அறிவிப்பாளரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதனால்தான் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘பிறப்பால் (ஏற்படும் நெருங்கிய உறவுகளில்) யாரை மணப்பதற்குத் தடை விதிக்கிறீர்களோ, அவர்களை மணக்கப் பால்குடி உறவாலும் தடை விதியுங்கள்” என்று கூறுவார்கள். அத்தியாயம் :

319

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ் வின் தூதரே! தங்கள்மீது ‘சலாம்’ கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம்.18 (தங்கள்மீது) ‘ஸலவாத்’ கூறுவது எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்” என்று சொல்லுங்கள்!” எனப் பதிலளித்தார்கள்.19 அத்தியாயம் :

320

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது (தங்கள்மீது) சலாம் கூறும் முறை. (தொழுகையில் ஓதப்படும் ‘அத்தஹிய்யாத்’ மூலம் இதனை நாங்கள் அறிவோம்.) ஆனால், உங்கள்மீது நாங்கள் ‘ஸலவாத்’ சொல்வது எப்படி?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக்க வ ரசூலிக்க கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம; வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம” என்று சொல்லுங்கள்” என்றார்கள்.20 மற்றோர் அறிவிப்பில், ‘கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம’ (இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ வளத்தை வழங்கியதைப் போன்று) என்று காணப்படுகிறது. ... யஸீத் பின் ஹாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது: ‘‘கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம” (என்று சொல்லுங்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.) இந்த ஹதீஸ் மொத்தம் நான்கு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

321

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூசா (அலை) அவர்கள் அதிகம் வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள். ‘‘மூசாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் சொன்ன குறைபாட்டிலிருந்து அவர் தூய்மையானவர் என்பதை அல்லாஹ் நிரூபித்தான். அவர் அல்லாஹ்விடம் கண்ணியம் பொருந்தியவராய் இருந்தார்” எனும் (33:69ஆவது) இறைவசனம் அதைத்தான் குறிக்கின்றது.21 அத்தியாயம் :

322

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் இறைக் கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை,) பாறைமேல் சங்கிóயால் அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள். அப்போது வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள்.) பின்னர், அவர்களின் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும்போது (அல்லாஹ்விற்கு நெருக்கமான வானவர்களிடம்) ‘‘உங்கள் இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவுகின்றார்கள். அதற்கு அவர்கள் வினவியோரிடம், ‘‘(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான் -அவன் உயர்ந்தவன்; பெரியவன்”- என்று கூறுவர். உடனே அந்த உரையாடலை ஒட்டுக் கேட்பவர்களும் (அவர்களிடமிருந்து) ஒட்டுக் கேட்பவர்களும் ஒருவர் மற்றவர் மேலே இவ்வாறு இருந்துகொண்டு செவியுற்றுவிடுகின்றனர். இதைக் கூறும்போது (அறிவிப்பாளர்) சுஃப்யான் (ரஹ்) அவர்கள், தம் விரல்களைச் சாய்த்து அவற்றுக்கிடையே பிரித்துக்காட்டி (ஒன்றன்மீது ஒன்றை அடுக்கி) விளக்கிக்காட்டினார்கள். ஆக, முதலில் ஒட்டுக்கேட்டவர் அந்த உரையாடலைத் தனக்குக் கீழே இருப்பவரிடமும், பிறகு அவர் தமக்குக் கீழே இருப்பவரிடமும், இறுதியில் (கேட்டவர்) சூனியக்காரனின் அல்லது குறிசொல்பவனின் நாவில் போட்டுவிடுகின்றார்கள். சில நேரங்களில் அந்த உரையாடலை அடுத்தவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே (முதலில் ஒட்டுக்கேட்டவரைத்) தீச் சுவாலை சென்றடைந்து (கரித்து)விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் தீச் சுவாலை சென்றடைவதற்கு முன்பே அந்த உரையாடலை (அடுத்தவரிடம்) சேர்த்துவிடுவதுமுண்டு. (இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பூமியிலுள்ள குறிகாரன்வரை அது போய்ச்சேர்கிறது.) அவன் அதனுடன் நூறு பொய்களை(க் கலந்து மக்களிடம்) பேசுகின்றான். அப்போது (இதைக் கேட்கும் மக்களிடையே) இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென அவர் (குறிகாரர்) நம்மிடம் (முன்னறிவிப்பாக) சொல்லிவிட்டிருக்கவில்லையா?” என்று பேசப்படும். இப்போது வானத்திலிருந்து செவியேற்கப்பட்ட அந்த வார்த்தையினால் (குறி சொல்லும்) அவர் உண்மை சொல்லிவிட்டதாகக் கருதப்படுவார்.3 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

323

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக்குன்றின் மீது ஏறி, ‘‘யா ஸபாஹா!” (‘‘உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!”) என்று கூறினார்கள்.4 உடனே அவர்களை நோக்கி குறைஷியர் ஒன்றுதிரண்டு வந்து, ‘‘உங்களுக்கு என்ன (நேர்ந்துவிட்டது)?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘எதிரிகள், காலையிலோ அல்லது மாலையிலோ உங்களைத் தாக்க வருகிறார்கள் என்று நான் அறிவித்தால் என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள். ‘ஆம் (நம்புவோம்)’ என்று அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவனாவேன்” என்று சொன்னார்கள். உடனே அபூலஹப், ‘‘உனக்கு நாசம் உண்டாகட்டும். இதைச் சொல்லத்தான் எங்களை (இங்கே) ஒன்றுகூட்டினாயா?” என்று கேட்டான். உடனே அல்லாஹ், ‘‘அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்...” எனும் (111:1ஆவது) வசனத்தை அருளினான்.5 அத்தியாயம் :

324

அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: சூரியன் மறையும் நேரத்தில் நான் நபி (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தேன். அப்போது அவர்கள், ‘‘சூரியன் எங்கு (சென்று) மறைகிறது என்பது உமக்குத் தெரியுமா, அபூதர்ரே?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது இறை அரியணைக்கு (அர்ஷ்) கீழே சிரவணக்கம் (சஜ்தா) செய்வதற்காகச் செல்கின்றது. இதைத்தான், ‘‘சூரியன், தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இது வல்லமை மிக்கவனும் நன்கறிந்தோனுமான (இறை)வனின் நிர்ணயமாகும்” எனும் (36:38ஆவது) இறைவசனம் குறிக்கின்றது” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :

325

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது” எனும் (36:38 ஆவது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது நிலைகொள்ளுமிடம் இறைவனின் அரியணைக்குக் கீழே உள்ளது” என்று கூறினார்கள்.3 அத்தியாயம் :

326

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘எவரும் தம்மை (இறைத்தூதர் யூனுஸ்) இப்னு மத்தாவைவிடச் சிறந்தவர் என வாதிடுவது தகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

327

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் யூனுஸ் பின் மத்தாவைவிடச் சிறந்தவர்” என்று எவர் (என்னைக் குறித்து புகழ்ந்து) கூறுகின்றாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்.2 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

328

அவ்வாம் பின் ஹவ்ஷப் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் முஜாஹித் (ரஹ்) அவர்களிடம், ‘ஸாத்’ அத்தியாயத்திலுள்ள (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்ட போது அதற்கு அன்னார், ‘‘(நபியே!) அவர்கள்தான் அல்லாஹ்வால் நல்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களுடைய வழியினையே நீங்களும் பின்பற்றிச் செல்லுங்கள்...” என்ற (6:90ஆவது) வசனத்தைப் பதிலாகச் சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வது வழக்கம்.2 அத்தியாயம் :

329

அவ்வாம் பின் ஹவ்ஷப் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் முஜாஹித் (ரஹ்) அவர்களிடம், ‘ஸாத்’ அத்தியாயத்தின் (ஓதலுக்குரிய)சஜ்தா (வசனம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘தாங்கள் (ஸாத் அத்தியாயத்தில்) சஜ்தா செய்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” என்று கேட்டேன். அதற்கு அன்னார், ‘‘மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சுலைமானும்” என்று தொடங்கி, ‘‘(நபியே!) அவர்கள்தான் அல்லாஹ்வால் நல்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களு டைய வழியினையே நீங்களும் பின்பற்றுங்கள்...” என்று முடியும் (6:84-90 ஆகிய) வசனங்களை நீங்கள் ஓதவில்லையா? என்று கேட்டார்கள். பிறகு, ‘‘எவரைப் பின்பற்றுமாறு உங்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளை யிடப்பட்டிருந்ததோ அத்தகையவர்களில் தாவூத் (அலை) அவர்களும் ஒருவராவார். எனவே (நபி தாவூத் (அலை) அவர்களைப் பின்பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (‘ஸாத்’ அத்தியாயத்தில் நன்றிக்காக) சஜ்தா செய்தார்கள். (எனவே, நாமும் ‘ஸாத்’ அத்தியாயத்தில் நன்றிக்காக சஜ்தா செய்ய வேண்டும்) என்று பதிலளித்தார்கள்.3 (38:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உஜாப்’ எனும் சொல்லுக்கு ‘வியப்புக்குரியது’ என்று பொருள். (38:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்கித்து’ எனும் சொல்லுக்கு (பொதுவாக) ‘ஏடு’ என்பது பொருள். ஆனால், இங்கு ‘நற்செயல்களின் பதிவேடு’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (38:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஸ்ஸத்’ எனும் சொல்லுக்கு ‘ஆணவம் கொண்டவர்கள்’ என்று பொருள். (38:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மில்லத்துல் ஆகிரா’ (வேறு சமுதாயம்) எனும் சொல், குறைஷியர் சமுதாயத்தைக் குறிக்கிறது. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இக்திலாக்’ எனும் சொல்லுக்கு ‘பொய்’ என்பது பொருள். (38:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அஸ்பாப்’ எனும் சொல், வானத்தின் வாயில்களுக்குச் செல்லும் வழிகளைக் குறிக்கிறது. (38:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுன்த்’ (படையினர்) எனும் சொல் குறைஷியரைக் குறிக்கிறது. (38:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலாயிகல் அஹ்ஸாப்’ (அந்தக் கூட்டத்தார்) என்பது முந்தைய தலைமுறை’னரைக் குறிக்கும். (38:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபவாக்’ (தாமதித்தல்) எனும் சொல்லுக்கு ‘(உலகின்பால்) திரும்புதல்’ என்று பொருள். (38:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கித்தனா’ எனும் சொல்லுக்கு ‘எங்களின் வேதனையை’ என்று பொருள். (38:63ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இத்தகத்னாஹும் சிக்ரிய்யா’ (நாம் அவர்களைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தோமா?) என்பதன் கருத்தாவது: (தாழ்ந்தவர்களாக) அவர்களை நாம் அறிந்திருந்தோமா? (38:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்ராப்’ எனும் சொல்லுக்கு ‘வயதொத்தவர்கள்’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (38:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அய்த்’ எனும் சொல்லுக்கு ‘வணக்க வழிபாட்டில் செயலாற்றல்’ என்றும், ‘அல்அப்ஸார்’ எனும் சொல்லுக்கு ‘அல்லாஹ்வின் விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனை’ என்றும் பொருள். (38:32ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஹுப்பல் கைரி அன் திக்ரி ரப்பீ’ எனும் சொற்றொடரிலுள்ள ‘அன்’ எனும் இடைச்சொல்லுக்கு ‘மின்’ எனும் இடைச்சொல்லின் பொருளாகும். (இதன்படி,) ‘‘என்னுடைய இறைவனை நினைக்காமல் இந்த நல்ல (குதிரைச்) செல்வங்களில் லயித்துவிட்டேன்” என்று இவ்வசனத்திற்குப் பொருள் அமையும். (38:33ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘தஃபிக்க மஸ்ஹன்’ என்பதற்கு ‘அவற்றின் கணைக்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுக்கலானார்’ என்று பொருள்.4 (38:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அஸ்ஃபாத்’ எனும் சொல்லுக்கு ‘விலங்குச் சங்கிலி’ என்பது பொருள். அத்தியாயம் :

330

நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) கூறினார்கள்: முரட்டு ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது -என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள்- அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க விரும்பினேன். அப்போது ‘‘இறைவா! எனக்குப்பின் வேறு எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக” (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘‘ஆகவே, அதை நான் விரட்டி அடித்துவிட்டேன்” என்றும் இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :

331

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அவர்கள், ‘‘மக்களே! ஒன்றை அறிந்தவர், அதைப் பற்றிக் கூறட்டும்! அறியாதவர், ‘அல்லாஹ்வே நன்கறிந்தவன்’ என்று கூறட்டும்! ஏனெனில், ஒருவர் தாம் அறியாததைக் குறித்து ‘அல்லாஹ்வே நன்கறிந்தவன் (எனக்குத் தெரியாது)’ என்று சொல்வதும் அறிவின்பாற்பட்டதாகும். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘(நபியே!) கூறுக: நான் இதற்காக உங்களிடம் கூலி எதையும் கோரவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவனும் அல்லன்” என்று தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கூறியுள்ளான். (38:86) இதோ (கிந்தா எனுமிடத்தில் ஒருவர் பேசிவரும்) புகையைக் குறித்து உங்களுக்கு நான் சொல்கிறேன் (கேளுங்கள்): அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரை இஸ்லாத்திற்கு (வருமாறு) அழைத்தார்கள். ஆனால், அவர்கள் அதில் காலம் தாழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘இறைவா! (இவர்களைத் திருத்த உன் தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் காலத்து ஏழு (பஞ்சம் நிலவிய) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்!” எனப் பிரார்த்தித்தார்கள். எனவே, அவர்களைப் பஞ்சம் வாட்டியது. அது அனைத்தையும் அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், (பஞ்சத்தின் கோரப் பிடியினால்) அவர்கள் பிணத்தையும், (பிராணிகளின்) தோல்களையும் உண்டார்கள். மேலும், கடும் பசியால் (கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகையைத்தான் காண்பார். அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) தெளிவானதொரு புகை வானத்திலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது சூழ்ந்துகொள்ளும். அது வதைக்கும் வேதனையாகும். (44:10,11) உடனே குறைஷியர், ‘‘எங்கள் இறைவா! எங்களைவிட்டு இவ்வேதனையை நீக்கிவிடு; நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசிக்கிறோம்” என்று வேண்டினர். (44:12) ‘‘(ஆனால், அந்நேரத்தில்) அவர்களுக்கு நல்லுணர்ச்சி எவ்வாறு பயனளிக்கும்? நிச்சயமாக (நம்முடைய) வெளிப்படையான தூதர் அவர்களிடம் வந்தே இருக்கின்றார். எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து (அவரைப் பற்றி, ‘இவர்) எவராலோ பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தான்’ என்று கூறினர். மெய்யாகவே (நீங்கள் திருந்தக் கூடுமென்று) அவ்வேதனையை (இன்னும்) சிறிது (காலத்திற்கு) நீக்கி வைத்தோம். (எனினும்,) நிச்சயமாக நீங்கள், (பாவம் செய்யவே) மீளுகின்றீர்கள்.” (44:13-15) (நபி (ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றது.) ஆனால், மறுமை நாள் வேதனை (அவர்களைவிட்டு) அகற்றப்படவா போகிறது? ஆக, பஞ்சம் அகற்றப்பட்டது. பிறகு மீண்டும் அவர்கள் இறைமறுப்பிற்கே திரும்பிவிட்டனர். ஆகவே, அல்லாஹ் அவர்களை பத்ர் போரின்போது (கடுமையாகப்) பிடித்தான். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மிக்க பலமாக அவர்களை நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம். (44:16)6 அத்தியாயம் :

332

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒருநாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நீங்கள் கூறிவருகின்ற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்பு விடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)” என்று கூறினர். அப்போது, ‘‘(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது) என்று அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரம் செய்வதில்லை...” எனும் (25:68 ஆவது) வசனம் அருளப்பெற்றது. மேலும், ‘‘(நபியே!) கூறுவீராக: எல்லைமீறி தமக்குத்தாமே அநீதியிழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள்...” எனும் (39:53ஆவது) வசனமும் அருளப்பெற்றது. அத்தியாயம் :

333

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூத மத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல்மீதும், பூமிகளை ஒரு விரல்மீதும், மரங்களை ஒரு விரல்மீதும், தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல்மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல்மீதும் வைத்துக்கொண்டு, ‘‘நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்” என்று சொல்வான் என நாங்கள் (எங்களது வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்” என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, ‘‘அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் கற்பிக்கும் இணைகளுக்கு அவன் அப்பாற்பட்டவன்; தூயவன்” எனும் (39:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். அத்தியாயம் :

334

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக்கொள்வான்; வானங்களைத் தனது வலக்கரத்தில் சுருட்டிக்கொள்வான்; பிறகு, ‘‘நானே அரசன்! எங்கே பூமியின் அரசர்கள்?” என்று கேட்பான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

335

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டாவது எக்காளம் ஊதப்பட்ட பின், (மூர்ச்சை தெளிந்து,) தலையை உயர்த்துபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூசா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அன்னார் இறைவனது அரியணையைப் பிடித்தபடி (நின்று கொண்டு) இருப்பார்கள். (முதல் எக்காளம் ஊதப்பட்டபோதே மூர்ச்சையாகாமல் இதே நிலையில் அன்னார் இருந்தார்களா; அல்லது இரண்டாவது எக்காளம் ஊதப்பட்டதற்குப் பின்புதானா (அந்நிலைக்கு வந்தார்கள்)?” என்பது எனக்குத் தெரியாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3 அத்தியாயம் :

336

அபூசாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம் மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த இரு எக்காளங்களுக்கும் மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது” என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய நண்பர்கள், ‘‘அபூஹுரைரா அவர்களே! நாட்களில் நாற்பதா?” என்று கேட்டனர். ‘‘(இதற்கு பதில் சொல்வதிலிருந்து) நான் விலகிக்கொள்கிறேன்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர்கள், ‘‘வருடங்கள் நாற்பதா?” என்று கேட்டனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என்று பதில் சொன்னார்கள். நண்பர்கள், ‘‘மாதங்கள் நாற்பதா?” என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நான் விலகிக்கொள்கிறேன். (ஏனெனில், எனக்கே இது குறித்துத் தெரியாது)” என்று கூறிவிட்டு, ‘‘மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஆனால், அவனது (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியைத் தவிர! அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

337

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம், ‘‘இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த மிகக் கடுமையான துன்பம் எதுவென்று எனக்கு அறிவியுங்கள்!” என்று கேட்டேன். அதற்கு அன்னார் (பின்வருமாறு) கூறினார்கள்: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் வளாகத்தில் (ஹிஜ்ர் பகுதியில்) தொழுது கொண்டிருந்தபோது, உக்பா பின் அபீமுஐத் என்பவன் முன்னோக்கி வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தோளைப் பிடித்து, தன் துணியை அவர்களது கழுத்தில் போட்டு முறுக்கி (மூச்சுத் திணறும்படி) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து, அவனது தோளைப் பிடித்து இழுத்துவிட்டு, (நபியவர்களைத் துன்புறுத்த விடாமல் தடுத்து,) ‘‘ ‘என் இறைவன் அல்லாஹ்தான்’ என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிóருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்திருக்கிறார்” (40:28) என்று கேட்டார்கள்.4 அத்தியாயம் :

338

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இந்த (41:22ஆவது) வசனம் குறித்துக் கூறியதாவது: (ஒருமுறை) ‘குறைஷியரில் இருவரும் அவர்களுடைய துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷி குலத்தைச் சேர்ந்த அவர்களுடைய மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும்’ (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்துகொண்டு) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘‘நமது பேச்சை அல்லாஹ் கேட்டுக்கொண்டிருக்கின்றான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?” என்று கேட்டார். அவர்களில் ஒருவர், ‘‘(நம் பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான்” என்று பதிலளித்தார். மற்றொருவர் ‘‘நம் பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக்கொண்டி ருப்பதானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான்” என்று கூறினார். அப்போதுதான், ‘‘(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களி óருந்து) தவிர்ந்துகொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” எனும் இந்த வசனம் (41:22) அருளப்பெற்றது. அத்தியாயம் :

339

340

தாவூஸ் பின் கைசான் அல்யமானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘உறவினர்களிடம் அன்பு காட்டுவதைத் தவிர” எனும் (42:23ஆவது) வசனத்தொடர் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது (அங்கிருந்த) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், ‘‘(இந்த வசனத்திலுள்ள) ‘உறவினர்கள்’ என்பது, முஹம்மத் (ஸல்) அவர்களின் உறவினர்களை (பனூ ஹாஷிமை)க் குறிக்கும்” என்று கூறினார்கள். உடனே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவசரப்பட்டுவிட்டீர்; குறைஷி குலத்தின் எல்லாக் கிளை’னருக்கும் நபி (ஸல்) அவர்களுடன் உறவுமுறை இருக்கத்தான் செய்தது” என்று கூறிவிட்டு, ‘‘நபி (ஸல்) அவர்கள், (குறைஷியரின் அனைத்துக் கிளை’னரையும் நோக்கி) குறைந்தபட்சம் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள உறவு முறையைப் பேணி (நல்ல முறையில்) நடந்துகொள்ள வேண்டுமென்றே பெரிதும் நான் விரும்புகிறேன் என்று சொன்னார்கள்” என விளக்கமளித்தார்கள். அத்தியாயம் :

341

யஅலா பின் உமைய்யா அத்தமீமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், உரைமேடை (மிம்பர்) மீதிருந்தபடி, ‘‘ ‘(நரகத்தின் பொறுப்பாளரான வானவர்) மாலிக்கே! உங்கள் இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்!’ என்று (நரகவாசிகள்) சப்தமிடுவார்கள்” எனும் (43:77ஆவது) வசனத்தை ஓதக் கேட்டேன்.2 கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (43:56ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘மஸலன் லில் ஆகிரீன்’ எனும் சொற்றொடருக்கு ‘பிற்கால மக்களுக்கு அறிவுரையாக (ஆக்கினோம்)’ என்று பொருள். கத்தாதா (ரஹ்) அல்லாதோர் கூறியதாவது: (43:13ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘முக்ரினீன்’ எனும் சொல்லுக்கு ‘கட்டுப்படுத்தக்கூடியவர்கள்’ என்று பொருள். ‘இன்னார் இன்னாரைக் கட்டுப்படுத்தக்கூடியவர்’ என்பதைக் குறிக்க ‘முக்ரின்’ எனும் சொல் ஆளப்படுவதுண்டு. (43:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்வாப்’ எனும் சொல்லுக்கு ‘கைப் பிடிகள் இல்லாத கோப்பைகள்’ என்பது பொருள். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (43:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உம்முல் கிதாப்’ என்பதற்கு ‘மொத்த ஏடு - மூல ஏடு’ என்பது பொருள். (43:81ஆவது வசனத்தின் பொருளாவது:) ரஹ்மானுக்குக் குழந்தை இல்லை; (அவ்வாறு இருப்பதாக யாரும் கூறினால்) கடுமையாக எதிர்ப்பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். ‘ரஜுலுன் ஆபிதுன்’ எனும் சொல்லுக்கும், ‘ரஜுலுன் அபிதுன்’ எனும் சொல்லுக்கும் ‘வழிபடும் மனிதன்’ என்றே பொருள். (வ கீலிஹீ யா ரப்பீ எனும் 43:88ஆவது வசனத்தை) ‘வ காலர் ரஸூலு யா ரப்பீ’ என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதியுள்ளார்கள்.3 ‘‘அபித, யஅபது எனும் வினைச் சொற்கள் வழியாக வரும் (ஆபித் எனும் வினையாலணையும் பெயரின் பன்மையான) ‘ஆபிதீன்’ என்பதற்கு ‘மறுக்கக் கூடியவர்கள்’ எனப் பொருள்” என்றும் கூறப்படுகிறது. அத்தியாயம் :

342

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘(மறுமை நாளின் அடையாளங் களில்) ஐந்து அடையாளங்கள் நடந்து (முடிந்து)விட்டன. ஒன்று புகை; இரண்டாவது (கிழக்கு) ரோமர்கள் (பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் வெற்றி கண்டது); மூன்றாவது சந்திரன் பிளந்தது; நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும்” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :

343

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குறைஷியருக்கு ஏற்பட்ட) இந்தப் பஞ்சத்திற்குக் காரணம், குறைஷியர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சத்தைப்போல இவர்களுக்கும் ஏற்படட்டும்” எனக் குறைஷியருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டது. எலும்புகளை அவர்கள் சாப்பிடும் அளவுக்கு(ப் பஞ்சம் கடுமையாக இருந்தது.) அவர்களில் ஒருவர் (கடும் பசியால் கண் பஞ்சடைந்து) களைப்படைந்து தமக்கும் வானத்திற்கும் இடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அப்போது அல்லாஹ், ‘‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை நீர் எதிர்பார்த்திருப்பீராக! அது மனிதர்களைச் சூழ்ந்துகொள்ளும்; அது வதைக்கும் வேதனை ஆகும்” எனும் (44:10, 11 ஆகிய) வசனங்களை அருளினான். அப்போது ஒருவர் (அபூசுஃப்யான்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ் வின் தூதரே! முளர் குலத்தாருக்கு மழைவேண்டிப் பிரார்த்தியுங்கள். அவர்கள் அழிவுக்குள்ளாகிவிட்டனர்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘முளர் குலத்தின ருக்கா? நீங்கள் துணிவுமிக்கவர்தான்” என்று கூறிவிட்டு, (அவர்களுக்காக) மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே அவர்களுக்கு வானம் பொழிந்தது. அப்போது, ‘‘மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்” எனும் (44:15ஆவது) வசனம் அருளப்பட்டது. (பிறகு அவர்களுக்குப் பஞ்சம் விலகி,) வளமான வாழ்வு ஏற்பட்டபோது, பழைய (இணைவைக்கும்) நிலைக்கே திரும்பிச் சென்றனர். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம்” எனும் (44:16ஆவது) வசனத்தை அருளினான். அந்நாள் பத்ர் போர் நாளாகும்.3 அத்தியாயம் :

344

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நீங்கள் அறியாத ஒன்றைக் குறித்து (கேட்கப்படும்போது,) ‘‘அல்லாஹ்வே நன்கறிவான்” என்று கூறுவது அறிவின் பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரிடம் ‘‘(நபியே! அவர்களிடம்) நீர் கூறிவிடுக: இந்த (அழைப்பு)ப் பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவன் அல்லன்” என்று கூறியுள்ளான். (38:86). குறைஷியர் நபி (ஸல்) அவர்களிடம் எல்லை மீறி நடந்து, மாறுசெய்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப்போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. மக்கள் (பசிக்) கொடுமையால் எலும்புகளையும் செத்தவற்றையும் தின்றனர். அவர்களில் ஒருவர் பசி மயக்கத்தால், (கண் பஞ்சடைந்து) தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அவர்கள் ‘‘எங்கள் இறைவா! எங்களைவிட்டு இந்த வேதனையை நீக்கிடுவாயாக! நிச்சயமாக, நாங்கள் நம்பிக்கை கொண்டுவிடுகிறோம்” என்று கூறினர். (44:12) அப்போது, (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) ‘‘நாம் அவர்களைவிட்டுச் சற்று வேதனையை அகற்றிவிட்டால், அவர்கள் (பழைய இணைவைப்பு நிலைக்குத்) திரும்பச் சென்றுவிடுவர்” என்று கூறப்பட்டது. ஆனாலும், நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காகத்) தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், அவர்களைவிட்டு (தனது வேதனையை) அகற்றினான். உடனே அவர்கள் (பழைய இணைவைக்கும் நிலைக்கே) திரும்பச் சென்றனர். (சத்திய நெறியை ஏற்போம் என்று அவர்கள் செய்து கொடுத்த வாக்குறுதியை விட்டெறிந்தனர்.) ஆகவே, அல்லாஹ் பத்ர் போர் நாளில், அவர்களைப் பழிவாங்கினான். இதைத்தான், ‘‘(நபியே!) வெளிப் படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக!” என்று தொடங்கி, ‘‘நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம்” என்று முடியும் (44:10-16) வசனங்கள் குறிப்பிடுகின்றன.4 அத்தியாயம் :

345

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். (சிறு உரையாடலுக்குப்) பிறகு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை நம்ப மறுத்துத் தமக்கு மாறுசெய்த குறைஷியருக்கெதிராக, ‘‘இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப்போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுத்து, இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு, எல்லாவற்றையும் அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், அவர்கள் (பசியால்) செத்த பிராணிகளைப் புசிக்கலாயினர். அவர்களில் ஒருவர் பசியாலும் களைப்பாலும் எழுந்து (பார்த்தால் கண் பஞ்சடைந்துபோய்) தமக்கும் வானுக்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். பிறகு, ‘‘(நபியே!) வெளிப்படையான தொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக!” என்று தொடங்கி, ‘‘மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்” என்று முடியும் (44:10-15) வசனங்களை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதினார்கள். பிறகு அன்னார், ‘‘மறுமை நாளில் அவர்களைவிட்டு வேதனை அகற்றப் படுமா என்ன?” என்று கேட்டுவிட்டு, ‘பலமாக பிடிக்கும் நாள்’ என்பது, ‘பத்ர் போர் தினமாகும்’ என்று (44:16ஆவது வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள். அத்தியாயம் :

346

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை (நபியாக) அனுப்பி ‘‘(நபியே!) கூறிவிடுவீராக: இந்த (அழைப்பு)ப்பணிக்காக உங்களிடம் நான் எந்தப் பிரதிபலனையும் கோரவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவன் அல்லன்” என்று கூறினான். (36:86). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்குக் குறைஷியர் மாறுசெய்ததைக் கண்டபோது ‘‘இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப்போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுத்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவர்களைப் பஞ்சம் வாட்டியது; அனைத்துப் பொருட்களையும் அழித்துவிட்டது. அவர்கள் (பசியால்) எலும்புகளையும் தோல்களையும் புசிக்க நேர்ந்தது. அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘‘அவர்கள் தோல்களையும், செத்தவற்றையும் சாப்பிட்டனர்” என்று கூறினார். (அப்போது) பூமியிலிருந்து புகையின் தோற்றத்தைப்போல் வெளியேறத் தொடங்கியது. அப்போது அபூ சுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘முஹம்மதே! உம் சமுதாயத்தார் அழிந்துவிட்டனர். அவர்களைவிட்டு (பஞ்சம்) விலகப் பிரார்த்தனை புரியுங்கள்!” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (பஞ்சமும் அகன்றது.) பிறகு ‘‘இதற்குப்பின் நீங்கள் (இறைமறுப்புக்கே) திரும்பிவிடுவீர்கள்” என்று சொன்னார்கள். மன்ஸூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக!” என்று தொடங்கி ‘‘திரும்பச் செல்கிறீர்கள்” என்று முடியும் (44:10-15) வசனங்களை ஓதினார்கள்” என்றும், ‘‘(அவர்களைவிட்டு) மறுமையின் வேதனை அகற்றப்படுமா என்ன? புகை, பலமான பிடி, வேதனை ஆகியன நடந்து முடிந்துவிட்டன” என்றும் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவர் சந்திரன் பிளந்தது பற்றியும், இன்னொருவர் (கிழக்கு) ரோமர்கள் (தோற்கடிக்கப்பட்டு, பிறகு வென்றது) குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.5 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

347

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் நடந்து (முடிந்து) விட்டன. ஒன்று, (பத்ர் போரில் எதிரிகளுக்குக் கிடைத்த) தண்டனை. இரண்டாவது, (கிழக்கு) ரோமர்கள் (பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் வெற்றி கண்டது). மூன்றாவது, இறைவனின் தண்டனைப் பிடி. நான்காவது, சந்திரன் பிளந்தது. ஐந்தாவது, புகை.6 அத்தியாயம் :

348

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறிமாறி வரச் செய்கிறேன்.2 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

349

யூசுஃப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மர்வான் பின் அல்ஹகமை ஹிஜாஸ் மாகாணத்தின் ஆளுனராக முஆவியா (ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள். மர்வான் (ஒருநாள் மக்களை ஒன்றுகூட்டி,) உரை நிகழ்த்தினார். அப்போது, முஆவியா (ரலி) அவர்களுடைய புதல்வர் யஸீத் குறித்துப் பேசியவாறு முஆவியாவுக்குப் பின்னர் யஸீதுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்ய வேண்டுமெனக் கூறினார். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் மர்வானுக்கு (மறுப்புத் தெரிவித்து) ஏதோ கூறினார். உடனே மர்வான் ‘‘அவரைப் பிடியுங்கள்!” என்று (தம் சிப்பாய்களுக்கு) உத்தரவிட்டார். உடனே அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் தம் சகோதரி ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்துகொண்டார்கள். ஆகவே, அவரைப் பிடிக்க அவர்களுக்குத் துணிச்சல் ஏற்படவில்லை. அப்போது மர்வான், ‘‘ஒருவன் தன் பெற்றோரிடம் ‘‘சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக்கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகிறீர்களா?...” எனும் (46:17ஆவது) வசனத்தை இவர் (போன்றவர்களின்) விஷயத்தில்தான் அல்லாஹ் அருளினான்” என்று கூறினார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் திரைக்கப்பால் இருந்துகொண்டு, ‘‘(அபூபக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தாராகிய) எங்கள் விஷயத்தில், என் கற்பொழுக்கத்தை அறிவிக்கும் வசனத்தைத் தவிர, வேறு எந்த வசனத்தையும் குர்ஆனில் அல்லாஹ் அருளவில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :

350

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரிப்பவர்களாகக் கண்ட தில்லை. அவர்கள் புன்னகைப்பவர்களா கவே இருந்தார்கள்.2 அத்தியாயம் :

351

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அருளாளன் அல்லாஹ்வின் அரியணையின் கால்களில் ஒன்றைப் பற்றி(க்கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், ‘‘என்ன?” என்று கேட்டான். அதற்கு உறவு, ‘‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்” என்று கூறியது. ‘‘உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்துகொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுகின்றவரை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு உறவு, ‘‘ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்று கூறியது. அல்லாஹ் ‘‘இது (அவ்வாறுதான்) நடக்கும்” என்று கூறினான். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால், ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (47:22ஆவது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

352

சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மேற்கண்ட இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்து விட்டுப் பிறகு, ‘‘நீங்கள் விரும்பினால், ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (47:22ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

353

மேற்சொன்ன இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (47:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆசின்’ எனும் சொல்லுக்கு ‘மாறுகின்ற’ என்பது பொருள். அத்தியாயம் :

354

அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் நபி அவர் களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) உமர் கேட்டார்கள். அப்போதும் நபிகளார் பதிலளிக்கவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தம்மைத் தாமே கடிந்து கொண்டவர்களாக), ‘‘உம்மை உமரின் தாய் இழக்கட்டும்! மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே” என்று கூறினார்கள். மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி மக்களுக்கு முன்னால் வந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்துகொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் சப்தமிட்டு அழைப்பதைக் கேட்டேன். நான் நினைத்தபடி என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன். அப்போது அவர்கள், ‘‘இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன்மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறிவிட்டு, ‘‘உமக்கு நாம் வெளிப்படையான வெற்றியை அளித்துள்ளோம்” என்று (தொடங்கும் 48:1ஆவது இறைவசனத்தை) ஓதினார்கள்.2 அத்தியாயம் :

355

கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) நாம் உமக்கு வெளிப்படை யான வெற்றியை அளித்துள்ளோம்” எனும் (48:1ஆவது) இறைவசனம் ஹுதைபியா உடன்படிக்கையையே குறிக்கிறது” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.3 அத்தியாயம் :

356

அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயத்தைத் ‘தர்ஜீஉ’ செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஓதியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக்காட்ட நினைத்தால் (அவ்வாறு) நான் செய்திருப்பேன்.4 அத்தியாயம் :

357

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் ‘‘தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவுக்கு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்?)” என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) ‘‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்டார்கள்.5 அத்தியாயம் :

358

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று வழிபடுவார்கள். ஆகவே நான், ‘‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?” என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். ‘ருகூஉ’ செய்ய நினைக்கும்போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, ‘ருகூஉ’ செய்வார்கள்.6 அத்தியாயம் :

359

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்” எனும் இந்த (48:8ஆவது) குர்ஆன் வசனத்தையே ‘தவ்ராத்’ வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்: ‘‘நபியே! நிச்சயமாக நாம் உம்மை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீர் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ் வையே சார்ந்திருப்பவர் (‘முத்தவக்கில்’) என்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்). (என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்து விட்டுவிடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும்வரை அல்லாஹ் அவரது உயிரைக் கைப்பற்றமாட்டான். மக்கள் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.7 அத்தியாயம் :

360

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்களில் ஒருவர் (குர்ஆன்) ஓதிக்கொண்டிருந்தார். அவரது குதிரை அவர் வீட்டில் கட்டப்பட்டிருந்தது. அப்போது அது மிரளத் தொடங்கியது. அவர் வெளியே வந்து பார்த்தபோது, ஒன்றையும் அவர் காணவில்லை. (அப்போதும்) அது மிரண்டுகொண்டி ருந்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது” என்று கூறினர்கள்.8 அத்தியாயம் :

361

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா நாளன்று நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்.9 அத்தியாயம் :

362

அந்த மரத்தின்கீழ் நடைபெற்ற (‘பைஅத்துர் ரிள்வான்’ எனும்) சத்தியப் பிரமாணத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அப்துல்லாஹ்பின் முகஃப்பல் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பொடிக்கற்களை இரு விரல்களால் எறிந்து விளையாடும்) ‘கத்ஃப்’ எனும் கல் சுண்டு விளையாட்டிற்குத் தடை விதித்தார்கள்.10 அத்தியாயம் :

363

உக்பா பின் ஸுஹ்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன். (நபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.)11 அத்தியாயம் :

364

அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அந்த மரத்(தின்கீழ் சத்தியப் பிரமாணம் செய்)தவர்களில் ஒருவரான ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் (கூறினார்கள்:)12 அத்தியாயம் :

365

ஹுபைப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் (‘காரிஜிய்யா’ எனும் கிளர்ச்சியாளர்கள் குறித்து) கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்: நாங்கள் ‘ஸிஃப்பீன்’ எனுமிடத்தில் இருந்தோம். அப்போது (‘அப்துல்லாஹ் பின் அல்கவ்வா’ என்றழைக்கப்படும்) ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் வேதத்தின்பால் (தீர்ப்புக்காக) அழைக்கப்படுகின்றவர்களை நீங்கள் காணவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், ‘‘ஆம். (அல்லாஹ்வின் வேதம் கூறுகின்ற தீர்ப்புப்படி செயல்பட அழைப்பு விடுக்கப் பெற்றால் அதை நான் ஏற்றுக்கொள்வேன்”) என்று கூறினார்கள். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (இப்போரில் கலந்துகொள்ளாததற்காக யார்மீதும் குற்றம் சாட்டாதீர்கள். மாறாக,) உங்களையே குற்றம் சாட்டிக்கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடைபெற்ற ஹுதைபியா நாளில் எங்களை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போர் புரிவது உசிதமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பாளர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக்கூட ஏற்றுக்கொண்டோம்). அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டுவிடும்போது நம் வீரர்கள் சொர்க்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியிருக்க, நாம் நமது மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள். (முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணைவைப்பாளர்கள்மீது) உமர் (ரலி) அவர்கள் கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து ‘‘அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதைப் போன்றே) கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘‘கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள். அப்போது ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயம் இறங்கிற்று.13 அத்தியாயம் :

366

இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள். அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். -”அந்த இன்னொரு வருடைய பெயர் எனக்குத் தெரியாது” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று” என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, ‘‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்குமேல் உயர்த்தாதீர்கள்!” எனும் (49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2 இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த வசனம் அருளப்பெற்றபின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்துகொள்வார்கள். இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில் தம் பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை. அத்தியாயம் :

367

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (49:2ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘அவரைக் குறித்த செய்தியைத் தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில் அமர்ந்துகொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார். அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘(எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்குமேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி)வந்தேன். என் (நற்)செயல்கள் அழிந்துவிட்டன; நான் நரகவாசிகளில் ஒருவன்தான்” என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார்” என்று தெரிவித்தார். அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று ‘நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்!” என்று கூறினார்கள்.3 அத்தியாயம் :

368

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) ‘கஅகாஉ பின் மஅபத்’ அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள்” என்று (யோசனை) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அக்ரஉ பின் ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்!” என்று (யோசனை) கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, ‘எனக்கு மாறு செய்வதை’ அல்லது ‘எனக்கு எதிராக மாறு செய்வதையே’ நீங்கள் விரும்பினீர்கள் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘உங்களுக்கு எதிராகப் பேசுவது எனது நோக்கமன்று” என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக்கொண்டபோது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்துவிட்டன. இது தொடர்பாகவே, ‘‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்” எனும் (49:1ஆவது) இறைவசனம் முழுவதும் அருளப்பெற்றது.4 அத்தியாயம் :

369

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார் கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) ‘‘இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, ‘‘போதும்! போதும்!” என்று கூறும்.2 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :

370

முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நரகத்திடம் ‘‘உனக்கு வயிறு நிரம்பி விட்டதா?” என்று கேட்கப்படும். அது, ‘‘இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும். அப்போது அருள்வளமிக்க வனும் உயர்ந்தோனுமான அல்லாஹ் தனது பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது ‘‘போதும்! போதும்!” என்று கூறும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். (ஆனால், இதன்) அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூசுஃப்யான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்கள் பெரும்பாலும் ‘‘அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்றே (மவ்கூஃபாக) அறிவிப்பார்கள். அத்தியாயம் :

371

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. அப்போது நரகம், ‘‘பெருமையடிப்பவர்களுக்காகவும்அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்த மாக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னது. சொர்க்கம், ‘‘எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்” என்று கூறியது. அல்லாஹ் சொர்க்கத்திடம், ‘‘நீ எனது அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகின்றேன்” என்று கூறினான். நரகத்திடம் ‘‘நீ வேதனை(க்காகத்)தான். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்” என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தனது காலை அதன் மீது வைக்கும்வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் ‘‘போதும்! போதும்!” என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

372

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் இரவில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் பதினான்காம் இரவின் முழுநிலவைக் கூர்ந்து நோக்கியபடி, ‘‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதுபோல் உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலு மானால் அதைச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உம்முடைய இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக!” எனும் (50:39ஆவது) வசனத்தை ஓதினார்கள்.3 அத்தியாயம் :

373

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் (தன்னைத்) துதிக்கும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். இதுவே, ‘‘சுஜூத் செய்து வணங்கி முடித்த பின்பும்...” எனும் (50:40ஆவது) இறைவசனத்தின் கருத்தாகும். அத்தியாயம் :

374

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘நான் நோயுற்றுள்ளேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின்போது) நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நீ மக்களுக்கு அப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி வருவாயாக!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றிவந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பகுதியில் தொழுதுகொண்டிருந்தார்கள்.2 அத்தியாயம் :

375

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். ‘‘(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துபவர்களா?” எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘மஃக்ரிப் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ அத்தியாயத்தை ஓதி னார்கள்” என்று முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் தம் தந்தை (ஜுபைர் பின் முத்இம்) இடமிருந்து அறிவித்தார்கள்” என்பதை மட்டுமே ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். என் நண்பர்கள் எனக்கு அறிவித்த (மீதமுள்ள) கூடுதல் தகவலை நான் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுறவில்லை. அத்தியாயம் :

376

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அன்னையே! முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கிறாரோ அவர் பொய்யுரைத்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்” என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) ‘‘கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” எனும் (6:103ஆவது) வசனத்தையும், ‘‘எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹீயின் (வேதஅறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை” எனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்” என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்” என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) ‘‘எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப்போகிறான் என்பதை அறிவதில்லை” எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள்” என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) ‘‘தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உம்மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக!...” எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். ‘‘மாறாக, முஹம்மத் (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்” என்று சொன்னார்கள்.4 அத்தியாயம் :

377

ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(வளைந்த) வில்லின் இரு முனை களுக்கிடையிலான நெருக்கத்தைப்போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்” எனும் (53:9, 10) வசனங்களைக் குறித்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.5 அத்தியாயம் :

378

அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத் தைப்போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்” எனும் (53:9,10) வசனங்கள் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்களை அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத்தோற்றத்தில்) முஹம்மத் (ஸல்) அவர்கள் கண்டார்கள்” என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

379

அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ ‘உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார்’ எனும் (53:18ஆவது) வசனத்தின் கருத்தாவது: அடிவானத்தை அடைத்துக்கொண்டுவிட்டிருந்த பச்சை விரிப்பு ஒன்றை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.6 அத்தியாயம் :

380

அபுல் ஜவ்ஸா அவ்ஸ் பின் அப்தில்லாஹ் அர்ரப்ஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘லாத், உஸ்ஸா...” எனும் (53:19ஆவது) வசனத்திலுள்ள ‘லாத்’ என்பது, ஹாஜி களுக்காக மாவு பிசைந்து தந்துகொண்டிருந்த ஒரு மனிதராவார் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.7 அத்தியாயம் :

381

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின்மீது சத்தியமாக!’ என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், ‘‘வா சூது விளையாடுவோம்” என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.8 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

382

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (‘‘ஹஜ்ஜில் ஸஃபா - மர்வாவுக்கிடையே சுற்றிவராவிட்டாலும் குற்றமில்லைதானே? அப்படித்தானே 2:158ஆவது இறைவசனம் தெரிவிக்கிறது. தங்கள் கருத்து என்ன?” என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘முஷல்லல் எனும் குன்றில் இருந்த ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டியவர்கள் (ஹஜ்ஜில்) ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையில் சுற்றிவராமலிருந்தார்கள். அப்போதுதான் ‘‘நிச்சயமாக ‘ஸஃபா’, ‘மர்வா’ (எனும் இரு குன்றுகள்) அல்லாஹ் வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்...” எனும் (2:158 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சுற்றிவந்தனர்” என்று சொன்னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘மனாத் என்பது, (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையில்) ‘குதைத்’ எனும் இடத்தில் ‘முஷல்லல்’ எனும் குன்றிலிருந்த சிலையாகும்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில், ‘‘இந்த (2:158ஆவது) இறைவசனம் அன்சாரிகள் குறித்து அருளப்பட்டது; அன்சாரிகளும் ‘ஃகஸ்ஸான்’ குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்முன் ‘மனாத்’ சிலைக்காக, இஹ்ராம் கட்டிவந்தனர்” என்று தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது. ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘‘மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலிருந்த ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டிவந்தவர்களில் சில அன்சாரிகளும் இருந்தனர். அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! மனாத்திற்கு மரியாதை செய்யும் முகமாக நாங்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே சுற்றி வராமலிருந்தோம்...’ என்று கூறினர்” எனத் தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது.9 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

383

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) ‘அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தா செய்தனர். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.10 இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை (அவர்கள் அறிவித்ததாக)க் குறிப்பிடவில்லை.11 அத்தியாயம் :

384

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஓதலுக்குரிய) ‘சஜ்தா’ அருளப்பெற்ற முதல் அத்தியாயம் ‘அந்நஜ்ம்’ ஆகும். அதை ஓதியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்த அனைவரும் (அவர்களுடன் சேர்ந்து) ‘சஜ்தா’ செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர! அம்மனிதன் ஒரு பிடி மண்ணை எடுத்து (தன் நெற்றிக்குக் கொண்டுசென்று) அதன் மீது சஜ்தாச் செய்ததை நான் கண்டேன். பின்னர் அவன் (பத்ர் போரின்போது) இறைமறுப்பாளனாகக் கொல்லப்பட்டதை நான் கண்டேன். அவன்தான் உமய்யா பின் கலஃப் ஆவான்.12 அத்தியாயம் :

385

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று சொன்னார்கள்.2 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

386

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்துகொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், ‘‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (இரு முறை) கூறினார்கள். அத்தியாயம் :

387

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.3 அத்தியாயம் :

388

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்காவாசிகள் (நபி (ஸல்) அவர்களி டம்) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.4 அத்தியாயம் :

389

அனஸ் (பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அத்தியாயம் :

390

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தகிர்’ என்றோ, ‘முஸ்ஸகிர் என்றோ ஓதவில்லை.)6 அத்தியாயம் :

391

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃஹல் மின்(ம்) முத்தகிர்’ (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தகிர்’ என்றோ, ‘முஸ்ஸகிர்’ என்றோ ஓதவில்லை.) அத்தியாயம் :

392

அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம் (54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின் (ம்) முத்தகிர்’ என்று ஓத வேண்டுமா? அல்லது ‘முஃதக்கிர்’ என்று ஓத வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘ஃபஹல் மின் முத்தகிர்’ என்றே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதக் கேட்டேன். மேலும், ‘‘நபி (ஸல்) அவர்கள், ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ என ‘தால்’ (எனும் எழுத்து)கொண்டே ஓதியதை நான் கேட்டேன் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

393

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (54ஆவது அத்தியாயத்தின் மூலத்தி லுள்ள இத்தொடரை) நபி (ஸல்) அவர்கள் ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ என்றே ஓதினார்கள். அத்தியாயம் :

394

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின்(ம்) முத்தக்கிர்’ என்றே ஓதினார்கள். அத்தியாயம் :

395

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ‘ஃபஹல் மின்(ம்) முஸ்ஸகிர்’ என்று நான் ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள், ‘‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (என்றே ஓதுக!)” என்றார்கள்.7 அத்தியாயம் :

396

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது கூடாரமொன்றில் இருந்தபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இறைவா! எங்களுக்கு வெற்றி அளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த இறைநம்பிக்கையாளர்களை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இன்றைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுவர்” என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையுடன் எழுந்து, ‘‘இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்” எனும் (54:45ஆவது) வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.8 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

397

யூசுப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்கள், ‘‘நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோது, மக்காவில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு, ‘‘தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதும் ஆகும்” எனும் (54:46 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது” என்று கூறினார்கள். அத்தியாயம் :

398

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பத்ர் போரின்போது தமது கூடாரமொன்றில் இருந்தபடி, ‘‘(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதிமொழியையும் உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப்போவதில்லை” என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக் கொண்டு, ‘‘போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, ‘‘இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதும் ஆகும்” எனும் (54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.9 அத்தியாயம் :

399

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை; (வேறு) இரு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருள்களும் பொன்னால் ஆனவையாகும்.2 ‘அத்ன்’ எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன்மீதுள்ள ‘பெருமை’ எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.3 இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

400

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறைநம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.4 அத்தியாயம் :

401

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கின்றது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்றுகொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது. (அந்த அளவுக்கு அது பெரிய மரமாகும்.) நீங்கள் விரும்பினால் ‘‘(படர்ந்து விரிந்த) நீண்ட நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்” எனும் (56:30ஆவது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 அத்தியாயம் :

402

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘‘அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். ‘‘அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர்” என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் அருளப்பெற்றுக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டுவிட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள்” என்று கூறினார்கள். நான் அவர்களிடம், ‘அல்அன்ஃபால்’ எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘பத்ர் போர் குறித்து அது அருளப்பெற்றது” என்று பதிலளித்தார்கள். நான் ‘அல்ஹஷ்ர்’ எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘‘அது பனுந் நளீர் குலத்தார் குறித்து அருளப்பெற்றது” என்று பதிலளித்தார்கள்.2 அத்தியாயம் :

403

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (59ஆவது அத்தியாயத்தின் பெயரை) ‘அல்ஹஷ்ர்’ அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். அவர்கள், ‘அந்நளீர்’ அத்தியாயம் என்று கூறுங்கள் என்றார்கள்.3 அத்தியாயம் :

404

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘புவைரா’ எனுமிடத்திலிருந்த ‘பனுந் நளீர்’ குலத்தாருடைய சில பேரீச்ச மரங்களை (அவர்களின் தேசத் துரோகக் கொடுஞ் செயல்களுக்காக) எரித்தார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டினார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் அடிமரங்களின் மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதி யுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)” எனும் (59:5ஆவது) வசனத்தை அருளினான்.4 அத்தியாயம் :

405

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனுந் நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவை யாகும். அவற்றைப் பெறுவதற்காக முஸ்óம்கள் (தங்களின்) குதிரைகளையோ ஒட்டகங்களையோ செலுத்திப் போர் செய்திருக்கவில்லை. ஆகவே, அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியனவாக இருந்தன. அவற்றிலிருந்து நபியவர்கள் தமது ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்துவந்தார்கள். பிறகு, மீதமானவற்றை அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டுவந்தார்கள்.5 அத்தியாயம் :

406

அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக்கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக்கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?” என்று கூறினார்கள்.6 இந்தச் செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’ எனப்படும் ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே” என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘‘(குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே!” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். ‘‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதைவிட்டு உங்களைத் தடுத்தாரோ அதைவிட்டு நீங்கள் விலகி இருங்கள்” எனும் (59:7ஆவது) வசனத்தை நீ ஓதியதில்லையா?” என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘‘ஆம் (ஓதியுள்ளேன்)” என்று பதிலளித்தார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (மேலே குறிப்பட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்” என்று சொன்னார்கள். அந்தப் பெண்மணி, ‘‘உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக நான் கருதுகிறேன்” என்று கூறினார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!” என்று கூறினார்கள். ஆகவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தமது எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்” என்று கூறினார்கள். 4887அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக்கொள்ளும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து உம்மு யஅகூப் எனும் பெண்மணி அறிவித்த இந்த ஹதீஸை நானும் கேள்விப்பட்டுள்ளேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

407

408

அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (‘அபூலுஃலுஆ ஃபைரோஸ்’ என்பவனால் கத்தியால் குத்தப்பட்ட பிறகு) உமர் (ரலி) அவர்கள், ‘‘(இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து (அவர்களின் கண்ணியத்தைக் காத்துக்)கொள்ள வேண்டும் என்று (எனக்குப் பின்னர் வரவிருக்கும்) ‘கலீஃபா’வுக்கு நான் இறுதி அறிவுரை கூறுகிறேன். மேலும், நபி (ஸல்) அவர்கள் (மற்றும் நபித்தோழர்கள்) ‘ஹிஜ்ரத்’ செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தம் இருப்பிடமாகக் கொண்டு இறைநம்பிக்கையை (உறுதியாகப்) பற்றிக்கொண்ட அன்சாரிகளில் நன்மை புரிபவரிடமிருந்து (அவரது நன்மையை) ஏற்று, அவர்களில் தவறிழைப்பவரை மன்னிக்க வேண்டும் என்று நான் அந்த கலீஃபாவுக்கு அறிவுரை கூறுகிறேன்” என்றார்கள்.7 அத்தியாயம் :

409

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுவரச் சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘‘இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்” என்று சொன்னார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘‘நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்லி (அவரை அழைத்துக்கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, ‘‘(இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்துவைத்துக்கொள்ளாதே!” என்று சொன்னார். அதற்கு அவர் மனைவி, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை” என்று பதிலளித்தார். அவர், ‘‘(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்துவைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவதுபோல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக்கொள்வோம்” என்று சொன்னார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ‘வியப்படைந்தான்’ அல்லது (மகிழ்ச்சியால்) ‘சிரித்துக்கொண்டான்’ ‘‘ என்று சொன்னார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘தமக்கே தேவை இருந்தும்கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்...” எனும் (59:9ஆவது) வசனத்தை அருளினான்.8 அத்தியாயம் :

410

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரை வீரர்களான) என்னையும், ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும், மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களையும் ‘‘நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடம்வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் பெண்ணொருத்தி இருக்கிறாள். (மக்காவிலுள்ள விரோதிகளுக்கு ‘ஹாத்திப் பின் அபீபல்த்தஆ’ நமது இரகசியத் திட்டங்களை எழுதித் தெரிவித்துள்ள) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். அதை அவளிடமிருந்து கைப்பற்றி வாருங்கள்!” என்று கூறியனுப்பினார்கள். உடனே நாங்கள் (புறப்பட்டுச்) சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தன. நாங்கள் அந்த ‘ரவ்ளத்து காக்’ எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒட்டகச் சிவிகையில் இருந்த அந்தப் பெண்ணைக் கண்டோம். (அவளிடம்) நாங்கள், ‘‘கடிதத்தை வெளியே எடு!” என்று சொன்னோம். அதற்கு அவள், ‘‘என்னிடம் கடிதம் ஏதுமில்லை” என்று பதிலளித்தாள். நாங்கள், ‘‘ஒன்று, நீயாகக் கடிதத்தை எடுத்து(க் கொடுத்து)விடு! இல்லையேல், (உன்னைச் சோதனையிடுவதற்காக உனது) ஆடையை நீ களைய வேண்டியிருக்கும்” என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம். அதில் ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருக்கக் கண்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஹாத்திபே! என்ன இது?” என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள் (தம் குற்றத்தை ஒப்புக்கொண்டு), ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்காமல் அவர்களிடையே (வசித்துவந்த) ஒருவனாகவே இருந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர் களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்காவில் உறவினர் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் (எவரும்) இல்லாததால், மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் (பிரதியுபகாரமாக) என் உறவினரைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் விரும்பினேன். (அதனால், அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாமைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்கோ இவ்விதம் செய்யவில்லை” என்று (காரணம்) கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் உங்களிடம் உண்மையே சொன்னார்” என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்; (சதி வேலைகள் செய்த) இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் பத்ர் போரில் கலந்துகொண்டார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பத்ர் போரில் பங்கேற்றவர்களிடம், ‘நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்துவிட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள். ‘ஹாத்திப் பின் அபீபல்த்தஆ’ (ரலி) அவர்கள் விஷயத்தில்தான், ‘‘இறை நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர் களாயிருப்பவர்களை நீங்கள் நண்பர்களாக்கிக்கொள்ளாதீர்கள்” என்று தொடங்கும் (60:1ஆவது) வசனம் அருளப்பெற்றது என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இந்த இறைவசனம் (அலீ (ரலி) அவர்களின்) அறிவிப்பிலேயே உள்ளதா? அல்லது அம்ர் பின் தீனார் அவர்களின் (அறிவிப்பின்போது வந்த) சொல்லா என்பது எனக்குத் தெரியாது.2 ... அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘‘ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள் தொடர்பாகத்தான் இவ்வசனம் (60:1) அருளப்பெற்றதா?” என்று கேட்கப்பட்டது. சுஃப்யான் (ரஹ்) அவர்கள், ‘‘இப்படித்தான் மக்களின் அறிவிப்பு களில் காணப்படுகிறது. இந்த அறிவிப்பை நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிட மிருந்து செவியுற்றேன். அதில் ஒரு வார்த்தையைக்கூட நான் விட்டுவிடவில்லை. நான் அல்லாத வேறு யாரும் அம்ர் (ரஹ்) அவர்களிடமிருந்து இதை நன்கு நினைவில் நிறுத்திக்கொண்டதாக நான் கருதவில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :

411

நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிóருந்து) புலம்பெயர்ந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களைப் பரிசோதனை செய்துவந்தார்கள். இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக்கொண்டாரோ அவரிடம், ‘‘உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், ‘‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை.3 இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

412

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (மகளிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிராமணம் செய்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர்கள் அல்லாஹ்வுடன் எதையும் இணைவைக்கமாட்டார்கள்” எனும் (60:12ஆவது) இறைவசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரிவைத்து அழ வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கிச் சமிக்ஞை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தமது கையைப் பின்னால் இழுத்துக்கொண்டார். மேலும், அவர், ‘‘இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரிவைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரிவைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன்” என்று கூறினார். அவளுக்கு எந்தப் பதிலையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரிவைத்து)விட்டுத் திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவளிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள். அத்தியாயம் :

413

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘எந்த ஒரு நற்செயலிலும், (நபியே!) உமக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்” எனும் (60:12ஆவது) இறைவசனத்தி(ன், விளக்கவுரையி)ல், ‘‘இதுவும் பெண்கள்மீது அல்லாஹ் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.4 அத்தியாயம் :

414

உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்கமாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா?” என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களின் கூடுதலான அறிவிப்பில் ‘‘அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள்” என்றே காணப்படுகிறது. (‘பெண்கள் பற்றிய வசனம்’ என்று காணப்படவில்லை.) தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவர் (இந்த உறுதிமொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேற்கூறப்பட்ட (விபசாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்று சொன்னார்கள்.5 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

415

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அப்போது அவர்கள் அனைவரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்குமுன் தொழுபவர்களாக இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்தபின்) நபி (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையிலிருந்து) இறங்கி, மக்களைத் தமது கையால் அமரச் செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பதுபோல் உள்ளது. பிறகு ஆண்(களின் வரிசை)களைப் பிளந்துகொண்டு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அப்போது, ‘‘நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுடன் எதையும் இணைவைக்கமாட்டார்கள் என்றும், திருடமாட்டார்கள் என்றும், விபசாரம் செய்யமாட்டார்கள் என்றும், தம்முடைய குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள் என்றும், தங்கள் கை கால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்டமாட்டார்கள் என்றும், எந்த ஒரு நற்செயலிலும் உமக்கு மாறு செய்யமாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளித்தால், அப்போது அவர்களிடமிருந்து விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளும். மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும். நிச்சயமாக, அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும், மிகுந்த கருணையாளனும் ஆவான்” எனும் (60:12ஆவது) இறைவசனம் முழுவதையும் ஓதிமுடித்துவிட்டு, ‘‘இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா?” என்று கேட்டார்கள். ஒரேயொரு பெண்மணி மட்டும், ‘‘ஆம் (நீடிப்போம்), அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அவரைத் தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. -அந்தப் பெண் யாரென்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹசன் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை- அப்பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தர்மம் செய்யுங்கள்!” என்று சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை விரித்தார்கள். அப்போது மோதிரங்களையும் மெட்டிகளையும் அப்பெண்கள் பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போடலானார்கள்.6 அத்தியாயம் :

416

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்குப் பல பெயர்கள் உண்டு; நான் ‘முஹம்மத்’ (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் ‘அஹ்மத்’ (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் ‘மாஹீ’ (அழிப்பவர்) ஆவேன்; அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான். நான் ‘ஹாஷிர்’ (ஒருங்கிணைப்பவர்) ஆவேன்; என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள்; நான் ‘ஆகிப்’ (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன். இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 அத்தியாயம் :

417

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62ஆவது) அத்தியாயத்தில், ‘‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)” எனும் (3ஆவது) வசனம் அருளப்பெற்றது. அப்போது, ‘‘அந்த (ஏனைய) மக்கள் யார்?, அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி) அவர்கள் மீது தமது கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் கூட்டத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் ‘சில மனிதர்கள்’ அல்லது ‘இவர்களில் ஒருவர்’ அதை அடைந்தே தீருவார்” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :

418

அபுல்ஃகைஸ் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘‘இவர்களில் சில மனிதர்கள் இதை அடைந்தே தீருவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

419

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ தொழுகை யில்) இருந்தபோது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றுவிட்டனர். பன்னிரண்டு பேரே எஞ்சியிருந்தனர். அப்போதுதான் ‘‘அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின்றனர்” எனும் (62:11ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.3 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

420

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அறப்போரில் நான் இருந்து கொண்டிருந்தேன்.2 அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை (பின் சலூல்) என்பவன், ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (முஹாஜிர்களுக்கு) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, ‘‘நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்” என்று கூறினான். அவன் கூறியதை ‘(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்’ அல்லது ‘உமர் (ரலி) அவர்களிடம்’ கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) ‘‘நாங்கள் அவ்வாறு சொல்லவேயில்லை” என்று அவர்கள் சாதித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சென்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் பின் உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை (என் வாழ்நாளில்) ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவுக்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று கூறினார்கள். அப்போது, ‘‘இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது” என்று தொடங்கும் இந்த (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, ‘‘ஸைதே! அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்தி விட்டான் (நீர் சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்)” என்று கூறினார்கள். அத்தியாயம் :

421

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தந்தையாருடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரை விட்டு) விலகிச் சென்றுவிடுவார்கள்’ என்று சொல்வதையும், மேலும், ‘‘நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணியவான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகரிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்” என்று கூறுவதையும் நான் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தை யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, ‘‘நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை” என்று சத்தியம் செய்தனர். எனவே அவர்களை நம்பிவிட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நம்ப) மறுத்துவிட்டார்கள். (என் வாழ்நாளில் அதற்குமுன்) இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவுக்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ், ‘‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது” என்று தொடங்கி ‘‘ஆயினும், நயவஞ்சகர்கள் அறியமாட்டார்கள்” என்று முடியும் (63:1-8) வசனங்களை அருளினான். உடனே, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, ‘‘ஸைதே! அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்திவிட்டான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

422

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:. (நயவஞ்கர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை, ‘‘அல்லாஹ் வின் தூதருடன் இருப்போருக்கு (முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவழிக்காதீர் கள்” என்றும், ‘‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், ...” என்றும் கூறியபோது, அதை நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது என்னை அன்சாரிகள் கண்டித்தார்கள். அப்துல்லாஹ் பின் உபை, தான் அப்படிச் சொல்லவில்லை என்று சத்தியம் செய்தான். ஆகவே, நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கிவிட்டேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள் (எனத் தகவல் வந்தது). உடனே நான் அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், ‘‘(ஸைதே!) அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்திவிட்டான்” என்று கூறினார்கள். மேலும், ‘‘இவர்கள்தான் ‘இறைத் தூதருடன் இருப்பவர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்’ என்று கூறினார்கள்...” எனும் (63:7ஆவது) வசனமும் அருளப்பெற்றது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

423

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அந்தப் பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை தம் நண்பர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் நபியிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள்” என்றும், ‘‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள், இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்” என்றும் சொன்னான். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (அவன் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபைக்கு ஆளனுப்பினார்கள். (அவன் வந்தவுடன்,) அவனிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தான் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தான். அன்சாரிகள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார்” என்று (என்னைப் பற்றிக்) கூறினார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான கவலை) ஏற்பட்டது. அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில், ‘‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது...” என்று தொடங்கும் (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தங்கள் தலையைத் திருப்பிக்கொண்டார்கள். (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஷுபும் முசன்னதா’ (சாய்த்துவைக்கப் பட்டிருக்கும் மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்டசாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது. அத்தியாயம் :

424

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தந்தையாருடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் (அவரிடமிருந்து) விலகிச் சென்றுவிடுவர். நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து நிச்சயம் வெளியேற்றிவிடுவர்” என்று கூறுவதை நான் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். என் சிறிய தந்தையார் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். (ஆனால்,) அப்துல்லாஹ்வையும் அவனுடைய ஆட்களையும் உண்மையாளர்கள் என நபியவர்கள் நம்பினார்கள். பின்னர், என்னை அழைத்(து விசாரித்)தார்கள். நான் அவர்களிடம் (நடந்ததை) எடுத்துரைத்தேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, ‘‘நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை” என்று சத்தியம் செய்தனர். (அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நம்பினார்கள்.) என்னை நம்ப மறுத்துவிட்டார்கள். (என் வாழ்நாளில்) அதற்குமுன் இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதே இல்லை எனும் அளவுக்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்தேன். என் சிறிய தந்தையார் (என்னிடம்), ‘‘நபி (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன்மீது கோபமடையும் அளவுக்குச் செல்வார்கள் என நான் நினைக்கவில்லை” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், ‘‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது, நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம் என்று கூறுகின்றனர்” எனும் (63:1ஆவது) வசனத்தை அருளினான். உடனே எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அந்த வசனத்தை எனக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு, ‘‘ஸைதே! அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்திவிட்டான்” என்று கூறினார்கள்.3 அத்தியாயம் :

425

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘ஒரு போரில்’ அல்லது ‘ஒரு படையில்’ இருந்துகொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்.4 அப்போது (அடி வாங்கிய) அன்சாரீ, ‘‘அன்சாரிகளே! (உதவுங்கள்.)” என்று கூறினார். அந்த முஹாஜிர், ‘‘முஹாஜிர்களே! உதவுங்கள்!” என்று கூறினார். இந்தப் பேச்சை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்று, ‘‘இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை” என்று கூறினார்கள். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இதைக் கேட்டுவிட்டு, ‘‘இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்” என்று (அன்சாரிகளுக்குப் பரிந்துகொண்டு) கூறினான். நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘என்னை விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது” என்று சொன்னார்கள். மக்காவாசிக(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களைவிட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளைவிட அதிகமாகிவிட்டனர். மற்றோர் அறிவிப்பில், ‘நாங்கள் ஒரு போரில் இருந்தோம்’ என்பதற்குப் பதிலாக ‘‘நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்துகொண்டிருந்தோம்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. அத்தியாயம் :

426

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அல்ஹர்ரா’ போரில் கொல்லப்பட்டோருக்காக நான் (பெரிதும்) துக்கப்பட்டேன்.5 நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக” என்று பிரார்த்தித்ததை நான் செவியுற்றேன். அன்சாரிகளுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும் நபி (ஸல்) அவர்கள் (துஆவில்) குறிப்பிட்டார்களா; இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஃபள்ல் (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தபோது அன்னாருடன் இருந்தவர்களில் சிலர், (ஸைத் பின் அர்கம் (ரலி) பற்றிக்) கேட்டனர். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ‘‘(நயவஞ்சகர்களின் முறைகேடான பேச்சுக் குறித்து இவர் தெரிவித்த தகவலை நபிகளார் ஏற்க மறுத்துவிட்ட பின்னர், இவரை உண்மைப்படுத்தி அல்லாஹ் வசனத்தை அருளியபோது) ‘இவர் தம் காதால் கேட்டது உண்மையே என அல்லாஹ்வே அறிவித்துவிட்டான்’ என்று இவர் தொடர்பாகத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” எனப் பதிலளித்தார்கள். அத்தியாயம் :

427

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு போரில் இருந்துகொண்டி ருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, ‘‘அன்சாரிகளே! (உதவுங்கள்)” என்று கூறினார். முஹாஜிர், ‘‘முஹாஜிர்களே! (உதவுங்கள்)” என்று கூறினார். இந்தப் பேச்சை அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு எட்டச் செய்துவிட்டான். நபி (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘‘முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார். உடனே, அன்சாரி ‘அன்சாரிகளே, (உதவுங்கள்)’ என்று கூற, முஹாஜிரும், ‘முஹாஜிர்களே, (உதவுங்கள்)’ என்று கூறினார்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இத்தகைய வாதங்களைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களைவிட) அதிகமாக இருந்தார் கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளைவிட) அதிகரித்துவிட்டனர். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை, ‘‘இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக, நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்” என்று கூறினான். அப்போது (செய்தி அறிந்த) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், ‘‘என்னை விடுங்கள்; இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். ‘முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார்’ என்று மக்கள் பேசிவிடக் கூடாது” என்று சொன்னார்கள்.6 அத்தியாயம் :

428

சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் துணைவியாரை விவாகரத்துச் செய்துவிட்டார்கள். அப்போது அவர்களுடைய துணைவியாருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே, (என் பாட்டனார்) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதைத்) தெரிவித்தார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் கோபப்பட்டார்கள். பிறகு, ‘‘அவர் (அப்துல்லாஹ் பின் உமர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்து, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும்வரை தம் மனைவியாகவே வைத்துக்கொள்ளட்டும்! பிறகு, (மீண்டும்) அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு (அதிலிருந்து) தூய்மையும் அடைந்துவிட்டால், அப்போது அவருக்குத் தோன்றினால் விவாகரத்துச் செய்யட்டும்! அதுவும் தாம்பத்திய உறவுக்கு முன்னால். (மாதவிலக்கிலிருந்து தூய்மையாகியிருக்கும்) இந்தக் காலமே, (பெண்களை விவாகரத்துச் செய்ய) ஆண்களுக்கு இறைவன் உத்தரவிட்ட காலமாகும்” என்றும் கூறினார்கள்.2 அத்தியாயம் :

429

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (அங்கு வந்த) அந்த மனிதர், ‘‘தன் கணவன் இறந்து நாற்பது நாட்களுக்குப்பின் பிரசவித்த ஒரு பெண்(ணின் ‘இத்தா’ பிரசவத்தோடு முடிந்துவிடுமா என்பது) பற்றி எனக்குத் தீர்ப்பு வழங்குங்கள்” என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இரு தவணைகளில் பிந்தியது” என்று கூறினார்கள்.3 உடனே நான் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,) ‘‘கர்ப்பிணிகளுக்கான ‘இத்தா’ காலம் அவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரையிலாகும்” (என்று குர்ஆன் 65:4ஆவது வசனம் கூறுகிறதே!) என்று கேட்டேன். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நானும் என் சகோதரர் மகன் அபூசலமா(வின் கருத்துடன்) உடன்(பட்டு) இருக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் பணியாளர் ‘குறைப்’ என்பவரை, (இது குறித்து) கேட்பதற்காக உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். அதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்கள் கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவருடைய கணவர் (சஅத் பின் கவ்லா -ரலி) இறந்துவிட்டார். அவர் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின்னால், சுபைஆ (ரலி) குழந்தை பெற்றெடுத்தார். உடனே அவரைப் பெண் பேசப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் திருமணம் முடித்துவைத்தார்கள். அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ்ஸனாபில் (பின் பஅக்கக் -ரலி) அவர்களும் ஒருவராவார். (எனவே, கர்ப்பிணிக்கு ‘இத்தா’, பிரசவம் வரையில்தான்.) அத்தியாயம் :

430

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (மார்க்க அறிஞர்) அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் இருந்த அவையில் இருந்துகொண்டிருந்தேன். அவருடைய நண்பர்கள் அவரைக் கண்ணியப்படுத்திவந்தனர். (அப்போது அன்னாரின் நண்பர்களில் ஒருவர், கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியின் ‘இத்தா’ காலம் குறித்துப் பேசினார்.) அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள், ‘‘இரு தவணைகளில் பிந்தியது” என்று கூறினார்கள். உடனே நான், ‘‘அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் வாயிலாகக் கிடைத்த ‘சுபைஆ பின்த் அல்ஹாரிஸ்’ (ரலி) அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைச் சொன்னேன். அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்களுடைய நண்பர்களில் சிலர் என்னை நோக்கி (அமைதியாக இருக்கும்படி) சைகை செய்தனர். நான் அதைச் சட்டெனப் புரிந்து கொண்டேன். ஆகவே, நான் ‘‘அப்துல்லாஹ் பின் உத்பா (தற்போது) ‘கூஃபா’வில்தான் இருக்கிறார். (அவர் சொல்லாத ஒன்றை) அவர்மீது நான் பொய்யாகச் சொல்வதானால் நான் துடுக்கானவன் ஆவேன்” என்று சொன்னேன். உடனே (என்னைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்தவர்) கூச்சப்பட்டார். மேலும், அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா அவர்கள், ‘‘ஆனால், அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுடைய தந்தையின் சகோதரர் (இப்னு மஸ்ஊத்) அவர்கள் அப்படிக் கூறவில்லையே!” என்று சொன்னார். ஆகவே, நான் அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டேன். அவர்களும் சுபைஆ (ரலி) அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைக் கூறலானார்கள். நான் (அவர்களிடம்), ‘‘இது குறித்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஏதேனும் கேட்டுள்ளீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் நாங்கள் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (கணவர் இறந்து கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் விஷயத்தில் ‘இத்தா’ காலத்தை நீட்டித்து) அவளுக்குச் சிரமத்தை அளிக்கிறீர்களா? அவளுக்குச் சலுகை காட்டக் கூடாதா? (உண்மை என்னவென்றால்,) பெண்கள் தொடர்பான (‘அத்தலாக்’ எனும்) சிறிய அத்தியாயம், பெண்கள் தொடர்பான (‘அல்பகரா’ எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பின்னரே அருளப்பெற்றது. (பின்னால் அருளப்பெற்ற அந்த வசனம் இதுதான்:) ‘‘மேலும் கர்ப்பிணிகளுக்கான ‘இத்தா’ காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும்” (65:4)4 அத்தியாயம் :

431

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(ஒருவர் அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் சத்தியமிட்டு) விலக்கிக்கொள்ளும்பட்சத்தில், (சத்தியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கான) பரிகாரத்தை அவர் செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு, ‘‘உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” எனும் (33:21ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.2 அத்தியாயம் :

432

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும், ‘‘(தேன் சாப்பிட்டபின்,) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ அவர், நபி (ஸல்) அவர்களிடம், ‘‘கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூற வேண்டும்” என்று கூடிப்பேசி முடிவு செய்துகொண்டோம். (வழக்கம்போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், ‘‘இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்திவிட்டு வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதை அருந்தமாட்டேன்; நான் சத்தியமும் செய்துவிட்டேன்” என்று கூறிவிட்டு, ‘‘இது குறித்து எவரிடமும் தெரிவித்துவிடாதே!” என்றும் கூறினார்கள். (இது குறித்தே மேற்கண்ட 66:1ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.) அத்தியாயம் :

433

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை. (ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் தமது (இயற்கைத்) தேவை ஒன்றுக்காக ‘அராக்’ மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தமது தேவையை முடித்துக்கொண்டு வரும்வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக நின்றுகொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட இருவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தான் அந்த இருவர்” என்று பதிலளித்தார்கள்.3 உடனே நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் உங்கள்மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லை” என்று சொன்னேன். அப்போது, ‘‘(இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்” என்று கூறிய உமர் (ரலி) அவர்கள், பிறகு (பின்வருமாறு) தெரிவித்தார்கள்: ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தைஅல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய பங்கு)தனை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.) (ஒருநாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக்கொண்டிருந்தபோது என் மனைவி, ‘‘நீங்கள் இப்படிச் செய்யலாமே” என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், ‘‘உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?” என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ‘‘கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் கோபமாக இருந்தார்கள்” என்று சொன்னார். உடனே நான் எழுந்து, அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக்கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, ‘‘என் அருமை மகளே! நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?)” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு” என்றார். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை (ஆயிஷாவை)ப் பார்த்து நீயும் துணிந்துவிடாதே!” என்று (அறிவுரை) சொன்னேன். பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான) உம்மு சலமாவிடம் (அறிவுரை கூறச்) சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார்.4 இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, ‘‘கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டுவந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவுக்கு வந்துவிட்டீர்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு சலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்துவிட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி (கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்துவிட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து)விட்டேன். மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களது அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம். (அந்தக் காலகட்டத்தில் ஷாம் நாட்டு) ‘ஃகஸ்ஸான்’ வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒருநாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். ‘‘திறங்கள், திறங்கள்” என்று சொன்னார். (கதவைத் திறந்த) நான், ‘‘ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘அதைவிடப் பெரியது நடந்துவிட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரைவிட்டு விலகிவிட்டார்கள்” என்றார். உடனே நான், ‘‘ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!” என்று கூறிவிட்டு, எனது உடையை எடுத்து (அணிந்து)கொண்டு புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். அவரிடம் நான், ‘‘இந்த உமர் பின் அல்கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்!” என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்துவிட்டார்கள். (நான் உள்ளே சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களுடைய துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு சலமாவின் பேச்சு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக்கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஏன் அழுகிறீர்கள்?” என்றார்கள். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (கிழக்கு ரோமானிய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்.5 அத்தியாயம் :

434

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உமர் (ரலி) அவர்களிடம் (ஒரு வசனம் குறித்து) கேட்க நினைத்துக் கொண்டிருந்தேன். ஆகவே, (வாய்ப்புக் கிடைத்தபோது அவர்களிடம்) ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)கள் விஷயத்தில் கூடிப்பேசிச் செயல்பட்ட இரு துணைவியர் யார்?” என்று கேட்டேன். என் பேச்சை நான் முடிப்பதற்குள், ‘‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தான்” என்று உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.7 அத்தியாயம் :

435

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)கள்விஷயத்தில் கூடிப்பேசிச் செயல்பட்ட இரு துணைவியர் யார்? என்பது பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று (நெடு நாட்களாக) எண்ணிக்கொண்டிருந்தேன். இவ்வாறு ஓராண்டு காலம் இருந்துவிட்டேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. (இந்நிலையில் ஒருமுறை) நான் ஹஜ்ஜுக்காக உமர் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ‘(மர்ருழ்) ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது உமர் (ரலி) அவர்கள் தம் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றபோது, ‘‘அங்கத் தூய்மை செய்தவற்கான தண்ணீரை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்காகத் தண்ணீர்க் குவளையை எடுத்துவந்து அவர்களுக்குத் தண்ணீரை ஊற்றலானேன்.நான் (நினைத்திருந்ததைக் கேட்பதற்கு இதுதான்) சந்தர்ப்பம் எனக் கருதினேன். உடனே நான், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப்பேசிச் செயல்பட்ட அந்த இரு துணைவியர் யார்?” என்று கேட்டேன். நான் என் பேச்சை முடிப்பதற்குள், ‘‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தான் (அவர்கள் இருவரும்)!” என்று உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :

436

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அனைவரும் சேர்ந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்துகொண்டபோது, ‘‘நபி (ஸல்) அவர்கள் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்குப் பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும்” என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (66:5ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.8 அத்தியாயம் :

437

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (68:13ஆவது வசனத்தின் விளக்கத்தில்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவன் குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாவான். ஆட்டிற்கு (வேறுபடுத்திக் காட்டும்) ஓர் அடையாளம் (காதணி) இருப்பதுபோல், அவனுக்கும் (அவனுடைய கழுத்தில் ஓர்) அடையாளம் உள்ளது” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :

438

ஹாரிஸா பின் வஹ்ப் அல் ஃகுஸாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்க வாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; தற்பெருமை கொள்வோர் ஆவர். அத்தியாயம் :

439

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்துவந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (வளையாமல்) ஒரே கட்டையைப்போல் மாறிவிடும். இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

440

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் (காலத்து) மக்களிடையே (வழிபாடு செய்யப்பட்டுக்கொண்டு) இருந்த சிலைகள், பின்பு அரபியரிடையே இருந்தன. ‘வத்து’ என்பது, ‘தூமத்துல் ஜந்தல்’ எனும் இடத்திலிருந்த ‘கல்ப்’ குலத்தாரின் சிலையாகும்.2 ‘சுவாஉ’ என்பது ‘பனூ ஹுஃதைல்’ குலத்தாரின் சிலையாகும்.3 ‘யஃகூஸ்’ என்பது ‘பனூ முராத்’ குலத்தாரின் சிலையாக இருந்தது. பின்னர், ‘சபஉ’ சமுதாயத்தாருக்கு அருகில் (யமனிலுள்ள) ‘ஜவ்ஃப்’ எனுமிடத்தில் வசித்துவந்த ‘பனூ ஃகுதைஃப்’ குலத்தாருக்குச் சொந்தமானது. ‘யஊக்’ என்பது ‘பனூ ஹம்தான்’ குலத்தாரின் சிலையாகும். ‘நஸ்ர்’ என்பது (யமனின் பழங்குடியரான) ‘ஹிம்யர்’ மக்களின் சிலையாகும். இவர்கள் ‘துல்கிலாஉ’ என்பவருடைய சந்ததியினராவர். (தெய்வச் சிலைகளாகக் கற்பிக்கப்பட்ட) இவை (ஐந்தும்) நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஐந்து நல்ல மனிதர்களின் பெயர்களேயாகும். பின்னர் இவர்கள் மரணமடைந்தபொழுது இவர்களுடைய மக்களின் மனத்தில் ஷைத்தான், ‘‘அ(ந்த நல்ல)வர்கள் அமர்ந்துவந்த அவைகளில் சிலைகளை நிறுவுங்கள். (அவர்களின் நினைவாக) அவற்றுக்கு அவர்களின் பெயர்களையே சூட்டுங்கள்!” என்று எண்ணச் செய்தான். (அதன்படியே) அவர்களும் செய்தனர். அப்போது அந்தச் சிலைகள் வழிபாடு செய்யப்படவில்லை. ஆனால், (தங்களின் பெரியவர்களை நினைவுகூர்வதற்காகச் சிலை நிறுவிய) அந்த மக்களும் இறந்து, (அந்தச் சிலைகள் நிறுவப்பட்டதற்கான காரணம் குறித்த) அறிவும் மங்கிவிட்டபோது அச்சிலைகள் வழிபாடு செய்யப்படத் தொடங்கின. அத்தியாயம் :

441

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ‘உகாழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்க விடாமல் ஷைத்தான் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள்மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பிவந்தன. அப்போது தலைவர்கள், ‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், ‘‘வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள்மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன” என்று பதிலளித்தனர். ‘‘புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்கும் இடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்” என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர். ‘திஹாமா’ எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது ‘உகாழ்’ சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ‘ஃபஜ்ர்’ தொழுகையை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்), ‘‘வானத்துச் செய்திகளை (கேட்க முடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்” என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, ‘‘எங்கள் கூட்டத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனைச் செவியுற்றோம். அது நல்வழியைக் காட்டுகின்றது. எனவே, நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்” என்று கூறினர். (இதையொட்டி) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் தூதருக்கு, ‘‘(நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்றனர்...” என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான். ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி ‘வஹி’யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.2 அத்தியாயம் :

442

யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் முதன்முதலாக அருளப்பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார், ‘‘போர்த்தியிருப்பவரே!” (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம்என்றார்கள். நான், ‘‘(நபியே!) படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுக!” (இக்ரஉ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (96:1ஆவது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகிறார்கள்? என்றேன். அதற்கு அபூசலமா அவர்கள், ‘‘நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டேன். நீங்கள் (என்னிடம்) கேட்டது போலவே நானும் அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் சொல்லப்போவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக் குகையில் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கினேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் வலப் பக்கத்தில் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. என் இடப் பக்கத்தில் பார்த்தேன். அங்கும் எதையும் நான் காணவில்லை. எனக்கு முன்னால் பார்த்தேன். அங்கும் நான் எதையும் காணவில்லை. எனக்குப் பின்னால் பார்த்தேன். அங்கும் நான் எதையும் காணவில்லை. ஆகவே, நான் என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு ஒன்றை நான் கண்டேன்.2 ஆகவே, நான் (என் துணைவியாரான) கதீஜாவிடம் சென்று, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள். குளிர்ந்த நீரை என்மீது ஊற்றுங்கள்!” என்று கூறினேன். அவர்கள் எனக்குப் போர்த்தியும்விட்டார்கள்; என்மீது குளிர்ந்த நீரை ஊற்றவும் செய்தார்கள். அப்போது, ‘‘போர்த்திக்கொண்டு (படுத்து) இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! மேலும், உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக!” எனும் (74:1-3) வசனங்கள் அருளப்பெற்றன.3 அத்தியாயம் :

443

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ‘ஹிரா’ மலைக் குகையில் தங்கியிருந்தேன் (எனத் தொடங்கி) மேற்கண்ட ஹதீஸைப் போன்றே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக அறிவிக் கப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

444

யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசலமா (ரஹ்) அவர்களிடம் ‘‘முதன்முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது?” என்று கேட்டேன். அதற்கு அன்னார், ‘‘போர்த்தியிருப்பவரே!” (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம் என்றார்கள். அப்போது நான், ‘‘(நபியே!) படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுக!” (இக்ரஉ பிஸ்மி ரப்பிக்கல்லஃதீ கலக்) எனும் (96:1ஆவது) வசனம் என்றல்லவா எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது! என்றேன். அதற்கு அபூசலமா (ரஹ்) அவர்கள், ‘‘நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், ‘‘முதன்முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்” எனும் (74:1ஆவது) வசனம் என்று கூறினார்கள். உடனே நான், ‘‘இக்ரஉ பிஸ்மி ரப்பிக்கல்லஃதீ கலக்” எனும் (96:1ஆவது) வசனம்தான் (முதன்முதலில் அருளப்பட்ட வசனம்) என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதே! என்று கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் தெரிவிக்கப் போவதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் ‘ஹிரா’ மலைக் குகையில் தங்கியிருந்தேன். நான் என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கி அங்கிருந்த பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்திருப்பேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டேன். உடனே நான் எனக்கு முன்புறத்திலும் எனக்குப் பின்புறத்திலும் எனக்கு வலப் பக்கத்திலும் எனக்கு இடப் பக்கத்திலும் பார்த்தேன். அப்போது அவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்கும் இடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே நான் கதீஜாவிடம் சென்று, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள்! என்மீது குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்!” என்று கூறினேன். மேலும் எனக்கு, ‘‘போர்த்திக்கொண்டு (படுத்து) இருப்பவரே, எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக!” எனும் (74:1-3) இறைவசனங்கள் அருளப்பெற்றன.4 அத்தியாயம் :

445

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (வேத அறிவிப்பு) நின்றுபோயிருந்த இடைக் காலத்தைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் நடந்துபோய்கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு எனது தலையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து மிரட்சியால் நான் அதிர்ச்சிக் குள்ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என் துணைவி யாரான) கதீஜாவிடம், ‘‘எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்று சொன்னேன். அவர்களும் எனக்குப் போர்த்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ், ‘‘போர்த்தி யிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக!” எனும் (74:1-5) வசனங்களைத் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளினான்.5 (மேற்கண்ட 74:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஸ்’ (அசுத்தம்) என்பது சிலைகளைக் குறிக்கும். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

446

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: வஹீ (வேத அறிவிப்பு) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நடந்துபோய்க்கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். உடனே வானை நோக்கி என் பார்வையை உயர்த்தினேன். அங்கு, ‘ஹிரா’ குகையில் என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டிருந்தார். உடனே நான் அவரைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு (கீழே) பூமியில் விழுந்துவிட்டேன். அப்போது நான் (நடுக்கமுற்றவனாக) என் வீட்டாரிடம் (திரும்பி) வந்து (கதீஜாவிடம்), ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்றேன். அப்போது, ‘‘போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக!” எனும் (74:1-5) வசனங்களை அல்லாஹ் அருளினான். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (74:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஸ்’ (அசுத்தம்) எனும் சொல், சிலைகளைக் குறிக்கும். (மேற்கண்ட வசனம் அருளப்பெற்ற) பின்னர் ‘வஹீ’ தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று.6 அத்தியாயம் :

447

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தம்மீது ‘வஹீ’ (வேத அறிவிப்பு) அருளப்பெறும்போது, நபி (ஸல்) அவர்கள் (தாம் இதை எங்கே மறந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தால் வேக வேகமாக ஓதி,) தமது நாவை அசைப்பவர் களாக இருந்தார்கள். -அருளப்பெறும் வேத வசனங்களை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தம் நாவை அசைத்து ஓதினார்கள் என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்- அப்போது, ‘‘(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2 அத்தியாயம் :

448

மூசா பின் அபீஆயிஷா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: தம்மீது ‘வஹீ’ (வேத அறிவிப்பு) அருளப்பெறும்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு உதடுகளையும் அசைத்துக்கொண்டிருந்தார்கள். ஆகவே, (அல்லாஹ்விடமிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கு ‘வஹீ’ அருளப்பெறும்போது அவசர அவசரமாக உமது நாவை அசைக்காதீர் என்று உத்தரவிடப்பட்டது. (எங்கே தம்மீது அருளப்பெறும் வேத வசனங்கள் நினைவில் பதியாமல் மறதியில்,) தம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும். ‘‘அதை ஒன்றுசேர்த்து, ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும்” எனும் (75:17ஆவது) வசனத்திற்கு ‘நாமே உமது நெஞ்சத்தில் அதனை(ப் பதியச் செய்து,) ஒன்றுசேர்ப்போம். நீர் அதை ஓதும்படி செய்வோம்’ என்று பொருள். ‘‘நாம் இதை ஓதிவிட்டோமாயின்...” எனும் (75:18ஆவது) வசனத்திற்கு, ‘ஜிப்ரீல் மூலமாக உமக்கு என் வசனங்கள் அருளப்பட்டுவிடுமாயின்...’ என்று பொருள். ‘‘நீர் ஓதுவதைத் தொடர்வீராக! பின்னர் அ(தன் கருத்)தை விளக்குவதும் நமது பொறுப்பாகும்” எனும் (75:19ஆவது) வசனத்திற்கு, ‘உம்முடைய நாவினால் பிறருக்கு விளக்கிக் கொடுக்கச் செய்வதும் எமது பொறுப்பேயாகும்’ என்று பொருள். அத்தியாயம் :

449

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) இந்த வஹியை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டுவரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நாவையும் இரு உதடுகளையும் (எங்கே மறந்துவிடப்போகிறதோ என்ற அச்சத்தால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக்கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களது வதனத்திலேயே காணப்படலாயிற்று. ஆகவே அல்லாஹ், ‘‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா” என்று தொடங்கும் (75ஆவது அத்தியாயத்திலுள்ள) ‘‘இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர். அதை (உமது மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீர்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16,17) வசனங்களை அருளினான். அதாவது, ‘உமது நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உமது நாவால் ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும்’ என்று இறைவன் கூறினான். மேலும், ‘‘நாம் இதை ஓதிவிட்டோமாயின், நீர் ஓதுவதைத் தொடர்வீராக!” என்ற (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது ‘நாம் (வானவர் மூலம்) அருளும்போது, அதைக் கவனத்துடன் கேட்பீராக!’ என்று கூறினான். ‘‘பின்னர், அதை விளக்குவதும் எமது பொறுப்பாகும்” எனும் (75:19ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘உமது நாவால் அதை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உம்மை (ஆயத்தம்) செய்வது நமது பொறுப்பாகும்’ என்று கூறினான். (இந்த இறைவசனங்கள் அருளப்பட்ட பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (‘வஹீ’ கொண்டுவரும்போது,) தலையைத் தாழ்த்தி (அருளப்படுவதை நபி (ஸல்) அவர்கள் மௌனத்துடன் கேட்டு)க்கொண்டிருப்பார்கள். (இறைவசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும்போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள். ‘‘(மனிதனே! இது) உனக்குக் கேடுதான்! கேடேதான்” எனும் (75:34ஆவது) வசனம் ஓர் எச்சரிக்கையாகும். அத்தியாயம் :

450

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘‘வல்முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!)” எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக்கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (தனது புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக்கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு தனது புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிóருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று சொன் னார்கள்.3 அத்தியாயம் :

451

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தபோது அவர்களுக்கு, ‘‘வல்முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!)” எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக்கொண்டிருந்தோம். அந்நேரம் பாம்பு ஒன்று (தனது புற்றிó ருந்து) வெளிப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘அதை விடாதீர்கள்; கொன்று விடுங்கள்” என்று கூறினார்கள். உடனே (அதைக் கொல்ல) போட்டியிட்டுக்கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு (தனது புற்றுக்குள் புகுந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப் பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

452

453

அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘கஸ்ர்’ எனும் சொல்லுக்கு விளக்கம் கூறுகையில்,) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: நாங்கள் குளிர் காலத்தில் குளிர்காய்வதற்காக மூன்று முழம், அல்லது அதைவிடக் குறைந்த அளவில் மரக்கட்டைகளை வெட்டி எடுத்துவருவோம். அவற்றுக்கு நாங்கள் ‘கஸர்’ எனப் பெயரிட்டழைத்துவந்தோம்.4 அத்தியாயம் :

454

அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்” எனும் (77:32ஆவது) இறைவசனத் திற்கு விளக்கம் கூறுகையில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்: நாங்கள் மூன்று முழம், அல்லது அதைவிட அதிகமான அளவிலுள்ள மரக்கட்டைகளை நாடிச் செல்வோம். அவற்றைக் குளிர் காலத்திற்காக நாங்கள் எடுத்துவைப்போம். அவற்றுக்கு ‘அல்கஸர்’ எனப் பெயரிட்டு அழைத்துவந்தோம். (77:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜிமாலத்துன் ஸுஃப்ர்’ எனும் சொற்றொடர், மரக்கலங்களைக் கட்டும் கயிறுகளைக் குறிக்கும். அக்கயிறுகள் மனிதர்களின் இடுப்புகளைப் போல் (பருமனாக) மாறும் அளவுக்குத் திரிக்கப்படும். அத்தியாயம் :

455

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘‘வல்முர்சலாத்தி” (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கிச் சீறிக்கொண்டு வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைக் கொல்லுங்கள்!” என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக்கொண்டு நாங்கள் விரைந்தோம். அது (தனது புற்றுக்குள் ஓடிப்)போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள். அறிவிப்பாளரான உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘இந்நிகழ்ச்சி மினாவிலிருந்த ஒரு குகையில் நடந்தது” என்று என் தந்தையிடமிருந்து (கேட்டு) நான் மனனமிட்டுள்ளேன். அத்தியாயம் :

456

அபூசாலிஹ் ஃதக்வான் அஸ் ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரை யும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்டக் காலம்) நாற்பது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய நண்பர்கள்,) ‘‘(அபூஹுரைரா அவர்களே!) நாட்களில் நாற்பதா?” என்று கேட்டனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘(நான் அறியாததற்குப் பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘‘நாற்பது மாதங்களா?” என்று கேட்டனர். அதற்கும் ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘வருடங்கள் நாற்பதா?” என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள். பின்னர், ‘‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைகளுக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிப்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பைத் தவிர! அதுதான் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்” என்று மேலும் சொன்னார்கள்.2 அத்தியாயம் :

457

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: தமது நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரு விரல்கள்போல் (நெருக்கமாகவே) அனுப்பட்டுள்ளோம்” என்று கூறக் கேட்டேன். (79:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாம்மா’ (அமளி) எனும் சொல்லுக்கு ‘அனைத்துப் பொருள்களையும் துவம்சம் செய்யக்கூடியது’ என்று பொருள். அத்தியாயம் :

458

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை மனனமிட்டு(ச் சிரம மின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளுடன் இருப்பவரைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதிவருகின்றவர் இரு மடங்கு நன்மைகளுக்குரியவரைப் போன்றவராவார். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

459

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘(அது) அகிலத் தாரின் அதிபதிமுன் மக்களெல்லாரும் நிற்கும் நாள்” எனும் (83:6ஆவது) இறை வசனத்தை ஓதிவிட்டு, ‘‘அன்று தம் இரு காதுகளின் பாதிவரை தேங்கி நிற்கும் தமது வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப் போய்விடுவார்” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :

460

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(மறுமை நாளில்) விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்” என்று சொன்னார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ‘‘எவரது வினைப்பதிவேடு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ, அவர் எளிதான முறையில் விசாரணைக் குள்ளாக்கப்படுவார்” என்றல்லவா அல்லாஹ் (84:8ஆவது வசனத்தில்) கூறுகின்றான்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின்போது யார் துருவித் துருவி விசாரிக்கப்படுவாரோ, அவர் அழிந்தார்” என்று கூறினார்கள்.2 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

461

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(84:19 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தபக்கன் அன் தபக்கின்’ எனும் சொற்றொடருக்கு ‘நிச்சயமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியதுள்ளது’ என்பது பொருள்” என்று கூறிவிட்டு, ‘‘இந்த வசனம் உங்களுடைய நபி (ஸல்) அவர்களையே முன்னிலைப்படுத்திப் பேசுகிறது” என்று சொன்னார்கள்.3 அத்தியாயம் :

462

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்களில் (புலம்பெயர்ந்து மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் ‘முஸ்அப் பின் உமைர்’ (ரலி) அவர்களும் ‘இப்னு உம்மி மக்த்தூம்’ (ரலி) அவர்களும்தான். அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தரலானார் கள். பிறகு, அம்மார் (ரலி), பிலால் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் (கொண்ட குழு) உடன் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வந்தார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள(து வருகைய)ôல், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவுக்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், ‘‘இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்” என்று கூறி (மகிழலாயி)னர். நான், ‘‘சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ எனும் (87ஆவது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முஃபஸ்ஸல்) அத்தியாயங்களுடன் ஓதும் வரையில் நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வரவில்லை.2 அத்தியாயம் :

463

அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியதை நான் செவியுற்றேன். அப்போது அவர்கள், ‘‘(இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுத் துவத்திற்குச் சான்றாகப் பாறையிóருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்ற வனையும் நினைவுகூர்ந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்களிலுள்ள நற்பேறற்ற ஒருவன் முன்வந்தபோது...” எனும் (91:12ஆவது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, ‘‘அபூஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்திற்காக (அதாவது அதைக் கொல்வதற்காக) முன்வந்தான்” என்று சொன்னார்கள்.2 மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்க(ளின் உரிமைக)ள் குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பதுபோல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காகப்) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு (உடலிலிருந்து பிரியும் துர்)வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, ‘‘(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) ‘உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?” என்று கேட்டபடி அறிவுரை கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், ‘‘(ஒட்டகத்தைக் கொன்றவன்) ஸுபைர் பின் அல்அவ்வாம் அவர்களின் தந்தையின் சகோதரர் அபூஸம்ஆவைப் போல (செல்வாக்கு மிக்கவனாக) இருந்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

464

அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய (மாணவ) சகாக்கள் சிலருடன் (அன்றைய) ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அப்போது நாங்கள் (அங்கு) வந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டு, (எங்களைச் சந்திப்பதற்காக,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது, ‘‘(குர்ஆனை) ஓதத் தெரிந்தவர்கள் உங்களிடையே உண்டா?” என்று கேட்டார் கள். நாங்கள், ‘ஆம்’ என்று சொன்னோம். ‘‘சரி, உங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது தோழர்கள், என்னை நோக்கி சைகை செய்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘ஓதுங்கள்!’ என்று (என்னிடம்) கூறினார்கள். உடனே நான், ‘‘வல்லைலி இஃதா யஃக்ஷா, வந்நஹாரி இஃதா தஜல்லா, வஃத்தகரி வல்உன்ஸா” என்று (92ஆவது அத்தியாயத்திலிருந்து) ஓதினேன்.அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘இதை உங்கள் தோழர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலி) அவர்களுடைய வாயிலிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன். ‘‘(இப்படித்தான்) நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து நான் ஓதக் கேட்டுள்ளேன். ஆனால், இவர்கள் (ஷாம்வாசிகள்) நான் கூறுவதை மறுக்கிறார்கள். (பிரபல ஓதல் முறையிலுள்ள, ‘‘வமா கலக்கஃத் தகர வல்உன்ஸா” என்றே ஓத வேண்டும் என்று கூறுகின்றார்கள்)” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :

465

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்த) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள். பிறகு, ‘‘அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல்முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?” என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘‘நாங்கள் அனைவரும்தான்” என்று பதிலளித்தோம். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘(இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல்முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?” என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா (ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். ‘‘வல்லைலி இஃதா யஃக்ஷா” எனும் வசனத்தில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா (ரஹ்) அவர்கள், ‘வஃத்தகரி வல்உன்ஸா’ என்றே ஓதினார்கள் என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘நான் சாட்சியம் கூறுகின்றேன்: நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே நான் கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்), ‘வமா கலக்கஃத் தக்கர வல்உன்ஸா’ என்றே நான் ஓத வேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களை நான் பின்பற்றமாட்டேன்” என்று கூறினார்கள்.3 அத்தியாயம் :

466

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருநாள்) ஒரு ஜனாஸாவிற்காக நபி (ஸல்) அவர்களுடன் ‘பகீஉல் ஃகர்கத் (எனும் மதீனாவின் பொது மையவாடியி)ல்’இருந்துகொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், ‘‘சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள். உடனே மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு, நன்மைக்குரிய (சொர்க்கத் தின்) வழியை நாம் எளிதாக்குவோம். எவர் உலோபித்தனம் செய்து, (அல்லாஹ் வையும்) பொருட்படுத்தாது, (இம் மார்க்கத்திலுள்ள) நல்லறங்களையும் பொய்யாக்கிவிடுகின்றாரோ, அவருக் குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்” எனும் (92:5-10) இறை வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.4 அத்தியாயம் :

467

468

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவிற்காக (வருகை தந்து) இருந்தார்கள். அப்போது நபியவர்கள் குச்சியொன்றை எடுத்துத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், ‘‘தமது இருப்பிடம் நரகத்திலா, அல்லது சொர்க்கத்திலா என்று எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ அவருக்கு, எளிய வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்” எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

469

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நாங்கள் (‘ஜனாஸா’ ஒன்றுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் (‘பகீஉல் ஃகர்கத்’ எனும் மதீனாவின் பொது மையவாடியில்) அமர்ந்திருந்தோம். அப்போது நபியவர்கள், ‘‘சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ, நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள். உடனே நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) நாங்கள் இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டோம். (அதற்கு,) நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை! நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ, அவருக்கு எளிய வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்” எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :

470

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருநாள் மதீனாவிலுள்ள பொது மையவாடியான) ‘பகீஉல் ஃகர்கதி’ல் ஒரு ஜனாஸாவில் கலந்துகொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலை(த் தரையில்) குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். பிறகு ‘‘உங்களில் எவரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா, அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறுள்ளதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை” என்று சொன்னார்கள். ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தலை) எழுத்தின் மீது நாங்கள் பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் செய்யாமல் இருந்துவிடமாட்டோமா? எங்களில் யார் (விதியின்படி) நற்பேறு பெற்றவரோ அவர் நற்பேறுள்ளவராக மாறுவார். எங்களில் யார் (விதிப்படி) நற்பேறற்றவரோ அவர் நற்பேறற்றவர் களின் செயலுக்கு மாறுவார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இதோ பாருங்கள்!) நல்லவருக்கு நல்லவர்களின் செயலைப் புரிய வகைசெய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ” எனும் (92:5-10) வசனங்களை ஓதினார்கள். அத்தியாயம் :

471

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (‘பகீஉல் ஃகர்கத்’ மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அன்னார் ஒரு பொருளை எடுத்து அதைத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். மேலும் அவர்கள், ‘‘தமது இருப்பிடம் நரகத்திலா அல்லது சொர்க்கத்திலா என்று (விதியில்) எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (அவ்வாறாயின்,) எங்கள் (தலை) எழுத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் புரிவதைக் கைவிட்டுவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் செயலாற்றுங்கள். (உங்களில்) ஒவ்வொரு வருக்கும், அவர் படைக்கப்பட்ட (நோக்கத்)தை அடைய வகைசெய்யப்படும். நல்லவர்களில் உள்ளவருக்கு நல்லோரின் செயலைப் புரியவும், கெட்டவர்களில் உள்ளவருக்குக் கெட்டோரின் செயலைச் செய்யவும் வழிகாணப்படும்” என்று கூறிவிட்டு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ” எனும் (92:5-10) வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.5 அத்தியாயம் :

472

ஜுன்துப் பின் (அப்தில்லாஹ் பின்) சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது ‘இரண்டு இரவுகள்’ அல்லது ‘மூன்று இரவுகள்’ (இரவுத் தொழுகைக்காகக்கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, ‘‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) ‘இரண்டு இரவுகளாக’ அல்லது ‘மூன்று இரவுகளாக’ உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை” என்று கூறினாள்.2 அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும் இருண்டுவிட்ட இரவின்மீது சத்தியமாக! (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (93:1-3) வசனங்களை அருளினான்.3 அத்தியாயம் :

473

ஜுன்துப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்கள் நண்பர் (வானவர் ஜிப்ரீல்) தங்களிடம் தாமதமாகத்தான் வந்துள்ளார் என்று நான் கருதுகிறேன்” என்று கூறினார்.4 அப்போதுதான், ‘‘(நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (93:3ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :

474

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷா தொழுகை யின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (95ஆவது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதினார்கள்.2 (95:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தக்வீம்’ எனும் சொல்லுக்கு ‘படைப்புகளை செம்மைப்படுத்தல்’ என்பது பொருள். அத்தியாயம் :

475

நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. ஆகவே, அவர்கள் ‘ஹிரா’ குகைக்குச் சென்று அங்கு வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுவந்தார்கள். (இவ்வாறு) தம் குடும்பத்தாரிடம் திரும்புவதற்குமுன் பல இரவுகள் (அங்கு தங்கி) இருந்துவந்தார்கள். அதற்காக (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டுசெல்வார்கள். பிறகு (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பச் சென்று அது போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைக் கொண்டுசெல்வார்கள். இந்நிலை, ஹிரா குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும்வரை நீடித்தது. ஒருநாள் அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) வந்து, ‘‘ஓதுவீராக!” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்றார்கள். (பின்பு நடந்தவற்றை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்: அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு என்னை இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்றார். அப்போதும், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவுக்கு இரண்டாவது முறையாக இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்று சொன்னார். அப்போதும், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்று கூறினேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவுக்கு மூன்றாவது முறையாக என்னை இறுகத் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார். பிறகு, அந்த வசனங்களுடன், தம் கழுத்துச் சதைகள் (அச்சத்தால்) படபடக்க திரும்பி வந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் நபியவர்கள் நுழைந்தார்கள். ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே கதீஜாவும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. கதீஜா அவர்களிடம் (நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு), ‘‘கதீஜா! எனக்கென்ன நேர்ந்தது? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், ‘‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதலடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணை (யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவு களைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படு வோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்குச் சகாயம் செய்கிறீர்கள். (அதனால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான ‘வராக்கா பின் நவ்ஃபல்’ என்பாரிடம் சென்றார்கள். - ‘வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவச் சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்; மேலும் அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.- அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மது) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்!” என்றார்கள். அப்போது அவர் (நபியவர்களிடம்), ‘‘என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட ‘வரக்கா’, ‘‘(நீர் கண்ட) இவர்தான் (இறைத்தூதர்) மூசாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார்” என்று கூறிவிட்டு, ‘‘(மகனே! உம்மை உம் சமூகத்தார் உமது நாட்டிலிருந்து வெளியேற்றும்) அந்தச் சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தச் சமயத்தில் உயிருள்ளவனாய் இருந்தால் நன்றாயிருக்குமே!” என்று சொல்லி வேறுசில வார்த்தைகளையும் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்?” என்று கேட்க, ‘வரக்கா’, ‘‘ஆம். நீங்கள் பெற்றிருக்கின்ற (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்ததில்லை. உமது (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்” என்று சொன்னார். அதன் பின்னர் ‘வரக்கா’ நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்புடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேத அறிவிப்பு) வருவது சிறிது காலம் நின்றுபோயிற்று. அதனால் அவர்கள் கவலைப்பட்டார்கள்.3 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

476

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: வேத அறிவிப்பு (வஹீ) நின்று போயிருந்த இடைக் காலம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது ஆகாயத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு எனது பார்வையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். உடனே நான் (என் துணைவியார் கதீஜாவிடம்) திரும்பி வந்து, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்றேன். அவர்களும் எனக்குப் போர்த்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ், ‘‘போர்த்தி யிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்தி ருப்பீராக! அசுத்தத்திலிருந்து விலகி யிருப்பீராக!” எனும் (74:1-5) வசனங்களை அருளினான். -(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட 74:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஸ்’ (அசுத்தம்) என்பது, அறியாமைக் கால மக்கள் வழிபட்டுவந்த சிலைகளைக் குறிக்கும்.- இதன் பின்னர் வேத அறிவிப்பு (வஹீ) தொடரலாயிற்று.4 அத்தியாயம் :

477

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார்.5 அத்தியாயம் :

478

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

479

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹிரா குகையிலிருந்து), கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு இந்த ஹதீஸை (மேற்கண்டபடி முழுவதுமாக) அறிவிப்பாளர் குறிப்பிடுகிறார். அத்தியாயம் :

480

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘கஅபா’ அருகில் முஹம்மத் தொழுது கொண்டிருப்பதை நான் கண்டால் அவரது கழுத்தின் மீது நிச்சயமாக மிதிப்பேன் என்று அபூஜஹ்ல் சொன்னான். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, ‘‘அவன் மட்டும் அப்படிச் செய்தால், வானவர்கள் அவனைக் கடுமையாகப் பிடி(த்துத் தண்டி)ப்பார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

481

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை (ரலி) அவர்கள் அழுதுவிட்டார்கள்.2 அத்தியாயம் :

482

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்) அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், ‘‘உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98ஆவது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள் என எனக்குச் செய்தி எட்டியுள்ளது” என்றார்கள். அத்தியாயம் :

483

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு நான் குர்ஆனை ஓதிக்காட்ட வேண்டுமென எனக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா?” என (பெருமிதத்துடன்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், ‘‘அகிலத்தாரின் அதிபதியிடம் நான் பிரஸ்தாபிக்கப்பட்டேனா?” என்று (மீண்டும்) கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள். இதைக் கேட்ட (உபை) அவர்களின் கண்கள் (ஆனந்தத்தால்) கண்ணீரை உகுத்தன. அத்தியாயம் :

484

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்). ஒரு மனிதருக்கு நற்பலன் பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்கு (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். குதிரையை இறைவழியில் பயன்படுத்து வதற்காகப் பசுமையான ஒரு ‘வெட்ட வெளியில்’ அல்லது ‘தோட்டத்தில்’ ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டிவைத்திருக்கும்) கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்கு ‘அந்தப் பசும் புல்வெளியில்’ அல்லது ‘அந்தத் தோட்டத்தில்’ மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அது தன் கயிற்றைத் துண்டித்துக் கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகளும், கெட்டிச் சாணங்களும்கூட அவருக்கு நன்மைகளாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (குதிரையின் உரிமையாளரான) அவருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருக்குரிய நன்மையாகவே ஆகும். இன்னொருவர் தம் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதனுடைய பிடரியின் (அதாவது அதை விற்ற தொகையின் ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு, (அவரது) இந்தக் குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவர் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் (சன்மார்க்கத்தாருடன்) பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். அதன் காரணத்தால், அது அவருக்குப் பாவச்சுமையாக மாறிவிடுகின்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவற்றைக் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; ‘யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர” என்று சொன்னார்கள்.2 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அத்தியாயம் :

485

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள், ‘‘இவை குறித்து எனக்கு இந்தத் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த வசனத்தைத் தவிர வேறெதுவும் அருளப்படவில்லை” என்று கூறிவிட்டு, ‘யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் (99:7,8) இறை வசனங்களை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :

486

தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், ‘‘ஜிப்ரீலே, இது என்ன?” என்று கேட்டேன். ‘‘இது அல்கவ்ஸர்” என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

487

அபூஉபைதா ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘(நபியே!) நாம் உங்களுக்கு ‘அல்கவ்ஸரை’ அருளினோம்” எனும் (108:1ஆவது) இறைவசனம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘‘(அது சொர்க்க) நதியாகும். அது உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துகள் உள்ளன. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்று (எண்ணற்றதாய்) இருக்கும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

488

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (108:1ஆவது வசனத்தில் இடம்பெற் றுள்ள) ‘அல்கவ்ஸர்’ தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், ‘‘அது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள (அனைத்து) நன்மைகளாகும்” எனத் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்களில், ஒருவரான) அபூபிஷ்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘மக்கள் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள நதி என்று கூறுகின்றனரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

489

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றி யும் கிடைத்து...” எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின்னர் ‘சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்பிர் லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை. அத்தியாயம் :

490

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் அதிகமாக ‘சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும் மஃக்பிர் லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.2 அத்தியாயம் :

491

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.: உமர் (ரலி) அவர்கள், ‘‘(நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து...” எனும் (110ஆவது) அத்தியாயம் குறித்து (பத்ர் போரில் கலந்துகொண்ட) நண்பர் களிடம் கேட்டார்கள். நண்பர்கள், ‘‘பல நாடுகளையும் கோட்டைகளையும் வெற்றி கொள்வது (குறித்துத்தான் இந்த வசனம் முன்னறிவிப்புச் செய்கிறது)” என்று கூறினர். ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். ‘‘(இது,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆயுட்காலம், அல்லது ஓர் உதாரணமாகும். (இதன் மூலம்) அவர்களது இறப்புச் செய்தி முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது” என்று (விளக்கம்) கூறினேன்.3 அத்தியாயம் :

492

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர் வருத்தமடைந்து, ‘‘எங்களுக்கு இவரைப் போன்ற (வயதில்) பிள்ளைகள் இருக்க, இவரை எங்களுடன் ஏன் அமரச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால்தான்” என்றார்கள். பின்னர் ஒருநாள் (எங்களை) உமர் (ரலி) அவர்கள் (தமது அவைக்கு) அழைத்தார்கள். அப்போதும் என்னை அவர்களுடன் அமரச் செய்தார்கள். அவர்களுக்கு (என் தகுதியை உணர்த்திக்) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்தார்கள் என்றே கருதினேன். (எனவே, அனைவரும் வந்ததும் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்...” எனும் (110:1ஆவது) இறைவசனம் குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் சிலர், ‘‘நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம்” என்று (அவ்வசனத்திற்கு விளக்கம்) கூறினர். அவர்களில் இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதியாயிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறுதான் கூறுகிறீர்களா?” எனக் கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். ‘‘அவ்வாறாயின், நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். நான், ‘‘அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களது ஆயுட்காலம் (முடிந்துவிட்டதைக்) குறித்து (முன்)அறிவிப்புச் செய்ததாகும். ‘இறைவனின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்...’ அதாவது இது, உங்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டது) பற்றிய அறிகுறியாகும். எனவே, உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து, அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் ஆவான் (என்பதே இதன் விளக்கமாகும்)” என்று பதிலளித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் கூறுகின்ற விளக்கத்தையே இ(ந்த அத்தியாயத்)திலிருந்து நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள்.4 111. ‘அல்லஹப்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (111:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘தப்ப’ எனும் சொல்லின் வேர்ச்சொல்லும், 40:37ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘தபாப்’ எனும் சொல்லுக்கு ‘இழப்பு’ என்பது பொருள். (11:101ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தத்பீப்’ எனும் சொல்லுக்கு ‘சீரழிவு’ என்று பொருள். அத்தியாயம் :

493

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீ ராக!” (அதாவது,) ‘தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!’) எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ‘ஸஃபா’ (மலை) மீதேறி உரத்த குரலில், ‘‘யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!)” என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், ‘‘யார் இவர்?” என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்றுகூடினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘‘உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கி யுள்ளது என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்” என்றார்கள். (அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூலஹப், ‘‘உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா?” என்று கேட்டான். பின்னர் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது, ‘‘அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்” எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. இந்த (111:1ஆவது) வசனத்தை (அதன் இறுதியில் ‘கத்’ எனும் இடைச்சொல்லை இணைத்து) ‘வ கத் தப்ப’ (அவன் அழிந்தும்விட்டான்) என்றே அப்போது (அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) அவர்கள் ஓதினார்கள்.2 அத்தியாயம் :

494

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள ‘ஸஃபா’ எனும்) அந்த மலைமீதேறி, ‘‘யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள். உடனே அவர்களிடம் குறைஷியர் குழுமினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களிடம் ‘காலையிலோ மாலையிலோ (உங்களைத் தாக்குவதற்காக) உங்களை நோக்கிப் பகைவர்கள் வருகிறார்கள்’ என்று தகவல் சொன்னால் என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?, கூறுங்கள்!” என்று கேட்டார்கள். (குழுமியிருந்த மக்கா) மக்கள், ‘‘ஆம் (நம்பவே செய்வோம்)” என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால், கடும் வேதனையொன்று எதிர்நோக்கி யுள்ளது என உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூலஹப், ‘‘உனக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகத்தான் எங்களை ஒன்றுதிரட்டினாயா?” என்று கேட்டான். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயத்தை அருளினான். அத்தியாயம் :

495

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘உமக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகவா எங்களை நீ ஒன்றுகூட்டினாய்!” என்று (நபி (ஸல்) அவர்களைப் பார்த்து) அபூலஹப் கேட்டான். அப்போது, ‘‘அழியட்டும், அபூலஹபின் இரு கரங்கள்...” எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. அத்தியாயம் :

496

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை முதலில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். (உண்மையில், மனிதன் இறந்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதைவிட, அவனை ஆரம்பமாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்துவிட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமன்று.) ‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஏற்படுத்திக்கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ ஏகன்; (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை.2 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

497

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை ஆரம்பத்தில் படைத்ததைப் போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். ‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஏற்படுத்திக்கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (அல்லாஹ் கூறுகின்றான்:) ‘‘அவன் (எவரையும்) பெற்றவனுமல்லன்; (யாருக்கும்) பிறந்தவனுமல்லன். (ஆகவே, அவனுக்குப் பெற்றோருமில்லை; பிள்ளைகளுமில்லை). தவிர, அவனுக்கு நிகராகவும் யாருமில்லை” (112:3,4) (112:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஃப்வ்’ எனும் சொல்லும், கஃபீஃ, கிஃபாஉ ஆகிய சொற்களும் (‘நிகரானவன்’ என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

498

ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களி டம் ‘முஅவ்விதத்தைனி’ (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114ஆவது அத்தியாயங்கள் குர்ஆனில் கட்டுப்பட்டவையா என்பது) பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் (நபியே! கூறுக: நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று) கூறப்பட்டது. நானும் கூறினேன்” என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) ஆகவே, நாங்களும் (நானும் உபை பின் கஅபும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.2 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

499

ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘அபூமுன்ஃதிரே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் இப்படி இப்படிச் சொல்கிறாரே?” என்று கேட்டேன்.2 அதற்கு உபை (ரலி) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் (இவ்விரு அத்தியாயங்களிலும், ‘நபியே! கூறுக: நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று) கூறப்பட்டது. (அதற்கேற்ப) நானும் கூறினேன்” என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர் ஸிர்ரு கூறுகிறார்கள்:) ஆகவே, நாங்கள் (நானும் உபை அவர்களும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.3 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :