அனைத்து இஸ்லாம் நூலகம்

64 - போர்கள்

1

அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தபோது, “நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?” என்று அவர்களிடம் வினவப்பட்டது. “பத்தொன்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். “நபி (ஸல்) அவர்களுடன் நீங்களும் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?” என்று வினவப் பட்டபோது, “பதினேழு” என்றார்கள். “இவற்றில் முதல் போர் எது?” என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “அல்உஸைரா அல்லது அல்உஷைர்” என்று பதிலளித்தார்கள். க(த்)தாதா (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள், “அல்உஷைராதான் (சரியான உச்சரிப்பு)” என்றார்கள். அத்தியாயம் :

2

சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் வாயிலாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் (அறியாமைக் காலத்தில் இணை வைப்போரின் முக்கிய தலைவர்களில் ஒருவனான) உமய்யா பின் கலஃபுக்கு நண்பராயிருந்தார். உமய்யா, மதீனா வழியாக (ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காக)ச் செல்லும்போது (மதீனாவில்) சஅத் (ரலி) அவர்களிடம் தங்குவார். (அதே போல்) மக்கா வழியாக சஅத் (ரலி) அவர்கள் சென்றால் உமய்யாவிடம் தங்குவார்கள். (ஹிஜ்ரத் நடைபெற்று) நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்த சமயம், உம்ரா செய்யும் நோக்கத்தில் சஅத் (ரலி) அவர்கள் மக்காவிற்குச் சென்றபோது உமய்யாவிடம் தங்கினார்கள். (அப்போது நடந்ததை சஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) “இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதற்கு (ஏதுவாக) ஆள் நடமாட்டமில்லாத (அமைதியான) ஒரு நேரத்தை எனக்குக் கூறுவீராக” என்று நான் உமய்யாவிடம் கேட்டேன். (மக்கள் ஓய்வெடுக்கும்) நண்பகலுக்கு நெருக்கமான நேரத்தில் என்னுடன் உமய்யா புறப்பட்டார். (நான் தவாஃப் செய்துகொண்டிருந்தபோது) எங்களை அபூஜஹ்ல் சந்தித்து (உமய்யாவின் குறிப்புப் பெயரைச் சொல்லி), “அபூஸஃப்வானே! உம்மோடு இருக்கும் இவர் யார்?” என்று கேட்டார். உமய்யா, “இவர்தான் சஅத்” என்றார். அப்போது என்னிடம் அபூஜஹ்ல், “மதம் மாறிச் சென்றவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதாக நினைத்துக்கொண்டு (அவர்களுக்கு மதீனாவில்) தஞ்ச மளித்த நீங்கள் கொஞ்சமும் அஞ்சாமல் மக்கா(விற்குள்) வந்து (கஅபாவை) சுற்றிக்கொண்டிருப்பதை நான் காண்பதா? அல்லாஹ்வின் மீதாணையாக! அபூஸஃப்வானோடு (மட்டும்) நீ இல்லா விட்டால் நீ உன் வீட்டாரிடம் சுகமாகப் போய்ச் சேர்ந்திருக்கமாட்டாய்” என்று சொன்னார். அதற்கு அபூஜஹ்லைப் பார்த்து, நான் உரத்த குரலில், “அல்லாஹ்வின் மீதாணையாக! (கஅபாவைச்) சுற்ற விடாமல் மட்டும் என்னை நீ தடுத்தால், நீ (வாணிபக் குழுவுடன் கடந்து) செல்லும்மதீனாவின் தடத்தை நான் இடை மறிப்பேன். இதைவிட அது உனக்கு மிகவும் கடினமானதாயிருக்கும்” என்று சொன்னேன். அப்போது என்னிடம் உமய்யா, “சஅதே! இந்த (மக்கா) பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் தலைவரான அபுல் ஹகம் (அபூஜஹ்ல்) எதிரில் சப்தமிட்டுப் பேசாதீர்!” என்று சொன்னார். அதற்கு நான், “உமய்யாவே! (அபூஜஹ்லுக்கு வக்காலத்து வாங்காமல்) எம்மை விட்டுவிடுவீராக! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (நபித்தோழர்கள்) உம்மைக் கொலை செய்வார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்” என்று சொன்னேன். “மக்காவிலா (நான் கொல்லப்படுவேன்)?” என்று உமய்யா கேட்டார். அதற்கு, “எனக்குத் தெரியாது” என்று நான் பதிலளித்தேன். இதனால் உமய்யா மிகவும் பீதியடைந்தார். தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது, (தம் மனைவியிடம்), “உம்மு ஸஃப்வானே! என்னைப் பார்த்து சஅத் என்ன சொன்னார் தெரியுமா?” என்று கேட்டார். “அவர் (அப்படி) என்ன சொன்னார்?” என்று அவள் கேட்டதற்கு உமய்யா, “அவர்கள் (நபித்தோழர்கள்) என்னைக் கொலை செய்வார்கள் என்று அவர்களிடம் முஹம்மது தெரிவித்தாராம். நான், “மக்காவிலா?' என்று (சஅதிடம்) கேட்டேன். “தெரியாது' என்று சஅத் சொன்னார்” (என்று கூறிவிட்டு,) “அல்லாஹ்வின் மீதாணையாக! நான், “மக்கா'வைவிட்டு (இனிமேல்) வெளியேறப்போவதில்லை” என்றும் கூறினார். பத்ர் போர் நாள் வந்தபோது, போருக்குப் புறப்படும்படி மக்களைத் தூண்டிக்கொண்டிருந்த அபூஜஹ்ல், “உங்கள் வணிகக் குழுவைச் சென்ற டையுங்கள் (அதைக் காப்பாற்றுங்கள்)” என்று கூறினார். ஆனால், உமய்யா (மக்காவிலிருந்து) வெளியே செல்வதை வெறுத்தார். (இதை அறிந்த) அபூஜஹ்ல் அவரிடம் வந்து, “அபூஸஃப்வானே! (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவரான நீங்களே (போருக்குச் செல்லாமல்) பின்வாங்குவதை மக்கள் கண்டால் உங்களுடன் அவர்களும் பின்வாங்கி (போருக்குச் செல்லாமல் இருந்து)விடுவார்களே” என்று சொன்னார். அபூஜஹ்ல், உமய்யாவிடம் இதை (வலியுறுத்திச்) சொல்லிக்கொண்டே இருந்தார். முடிவாக, உமய்யா, “இப்போது நீ என்னை வென்றுவிட்டாய் (உன் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்). ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நான் மக்கா நகரத்தின் உயர்ரக ஒட்டகம் ஒன்றை வாங்கப்போகிறேன்” என்று சொன்னார்; (தமக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் நிலை வந்தால் தப்பி வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒட்டகம் ஒன்றும் வாங்கினார்.) பிறகு (தம் மனைவியிடம் வந்து) “உம்மு ஸஃப்வானே! (போருக்குச் செல்லத் தேவையான சாதனங்களை) எனக்குத் தயார் செய்” என்றார் உமய்யா. அப்போது அவள், “அபூஸஃப்வானே! உங்கள் யஸ்ரிப் (மதீனா) நண்பர் (சஅத், நீங்கள் கொல்லப்படுவது குறித்து) உங்களிடம் சொன்னதை மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டாள். அதற்கு உமய்யா, “இல்லை. (மறக்கவில்லை.) இவர்களுடன் சிறிதளவு தூரம் செல்வதைத் தவிர வேறெந்த எண்ணமும் எனக்கில்லை” என்றார். (பத்ர் போருக்கு) உமய்யா புறப்பட்டுச் சென்றபோது (படையினர் முகாமிட்டுத்) தங்கும் ஒவ்வோர் இடத்திலும் (தப்பியோட ஆயத்தமாக தமக்கு அருகிலேயே) தமது ஒட்டகத்தைக் கட்டிவைத்துக்கொள்ளலானார். அவர் இவ்வாறே தொடர்ந்து செய்துவந்தார். இறுதியில் பத்ர் போர்க்களத்தில் உமய்யாவை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (முஸ்லிம் படையால்) கொலை செய்தான்.3 அத்தியாயம் :

3

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரைத் தவிர, நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ர் போரிலும் கலந்துகொள்ளவில்லை. அதில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) நபி (ஸல்) அவர்கள் குறைஷியரின் வாணிபக் குழுவை (வழிமறிக்க) எண்ணியே போனார்கள். (போன இடத்தில்) போர் செய்யும் எண்ணம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ர் களத்தில்) சந்திக்கும்படி செய்துவிட்டான். அத்தியாயம் :

4

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களது அவைக்குச் சென்றேன். நான் அவர்களது அவையில் (கலந்துகொண்டு, அவர்கள் கூறும் விஷயங்களை எடுத்துரைப்பவனாக) இருப்பது, அதற்கு நிகரான (மற்ற அனைத்)தைவிடவும்எனக்கு விருப்பானதாயிருக்கும். (மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:) நான், நபி (ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், “(இறைத்தூதர்) மூசாவின் சமுதாயத்தார், “நீங்களும் உங்கள் இறைவனும் போய்ப் போர் செய்யுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியதுபோல நாங்கள் கூறமாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப் பக்கமும், இடப் பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளுடன்) போரிடுவோம்” என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்,) நபி (ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை நான் கண்டேன். (எனது சொல்) அவர்களை மகிழச்செய்தது.7 அத்தியாயம் :

5

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ருடைய தினத்தன்று (மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட தமது படையினரையும் மிகப் பெருந் தொகையினரான எதிரிகளையும் கண்ட) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (இறைமறுப்பாளர்களுக்கெதிராக எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ அளித்த) உனது உறுதிமொழியையும் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) நான் கோருகிறேன். (இறைவா! இந்த இறைநம்பிக்கையாளர்களை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இல்லாமல்போய்விடுவர்” என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு, “போதும் (அல்லாஹ்வின் தூதரே!)” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தாம் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து) “விரைவில் அந்தப் படையினர் தோற்கடிக்கப்படுவர். அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவர்” என்று (54:45ஆவது குர்ஆன் வசன வாசகத்தைக்) கூறிக்கொண்டே வெளியேறி வந்தார்கள். அத்தியாயம் :

6

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையாளர்களில் யார் இடையூறு எதுவுமின்றி அறப்போரில் கலந்துகொள்ளாமல் (தமது இருப்பிடத்திலேயே) தங்கிவிடுகிறார்களோ அவர்களும், யார் தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் போராடுகிறார்களோ அவர்களும் (தகுதியில்) சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆம்) இறைவசனம், பத்ர் போருக்குச் செல்லாதவர்களையும் அதில் கலந்துகொள்ளச் சென்றவர்களையும் குறிப்பிடுகின்றது. அத்தியாயம் :

7

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் (பத்ர் போரின்போது) சிறுவர்களாகக் கருதப்பட்டோம். (அதனால் எனக்கும் அவருக்கும் பத்ர் போரில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.) அத்தியாயம் :

8

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் பத்ர் போரின்போது சிறுவர்களாகக் கருதப் பட்டோம். பத்ர் போரில் அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர்.8 அத்தியாயம் :

9

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் கலந்துகொண்ட நபித் தோழர்கள் என்னிடம் கூறினார்கள்: தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்றவர்களான முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலான அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையில் நாங்கள் இருந்தோம்.9 மேலும், பராஉ (ரலி) அவர்கள் கூறி னார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! தாலூத் அவர்களுடன் இறைநம்பிக்கை யாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை. அத்தியாயம் :

10

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர் களான நாங்கள் பேசிக்கொள்வோம்: பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கையும், தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையும் முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலேயாகும். அவர்களுடன் இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை. அத்தியாயம் :

11

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: “முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ர் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையே ஆகும். இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் அவர்களுடன் ஆற்றைக் கடக்கவில்லை” என்று நாங்கள் பேசிக் கொள்வது வழக்கம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

12

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை நோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, அபூஜஹ்ல் பின் ஹிஷாம் போன்ற சிலருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் (நால்வரும்) சூரிய வெப்பத்தால் (உடல் உப்பி, நிறம் மாறி) உருமாறி (பத்ர் போர்க்களத்தில்) மாண்டு கிடந்ததை நான் கண்டேன். அன்றைய தினம் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது.11 அத்தியாயம் :

13

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் அபூஜஹ்லின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தபோது நான் அவனிடம் வந்தேன். அப்போது அவன், “நீங்கள் எவனைக் கொலை செய்தீர்களோ அவனைவிடச் சிறந்தவன் ஒருவன் உண்டா?” என்று (தன்னைத்தானே புகழ்ந்தபடி) சொன்னான்.13 அத்தியாயம் :

14

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் (பத்ர் போர் முடிந்தபோது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே, அவன் குற்றுயிராகக் கிடக்கக் கண்டார் கள். அப்போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக் கொண்டு, “அபூஜஹ்ல் நீதானே!” என்று கேட்டார்கள். “நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனித னுக்கு மேலாக' அல்லது “தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப் பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக' ஒருவன் உண்டா?” என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.14 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

15

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போர் (நடந்த) நாளில், “அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரப்) போனார்கள். அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் குற்றுயிராகக் கிடக்கக் கண்டார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக்கொண்டு, “அபூஜஹ்லே! நீயா?” என்று கேட்டார்கள். (அப்போது) அவன், “ “தம் (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக' அல்லது “நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக' ஒருவன் உண்டா?” என்று கேட்டான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

16

17

பத்ர் போரில் அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகியோர் அபூஜஹ்லைக் கொன்றது) தொடர்பான தகவல் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் வாயிலாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

18

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறைமறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில் (பெருங் கருணையாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான்தான் முதல் நபராக இருப்பேன்.15 கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “இவர்கள் தம்முடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் (22:19) இறைவசனம், பத்ர் போரின்போது (களத்தில் இறங்கித்) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) அலீ, ஹம்ஸா, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.16 அத்தியாயம் :

19

அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி- ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே, “இவர்கள் தம் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் (22:19) இறைவசனம் அருளப்பட்டது. அத்தியாயம் :

20

அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது: “இவர்கள் தம் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19) இறைவசனம் எங்கள் தொடர்பாகவே அருளப்பட்டது. அத்தியாயம் :

21

கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “இந்த வசனங்கள் (22: 19, 20, 21) பத்ர் போரின்போது (முன்னின்று போரிட்ட) ஆறு பேர்கள் குறித்து அருளப்பட்டன” என்று அபூதர் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுச் சொன்னார்கள்.17 அத்தியாயம் :

22

கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “இவர்கள் தம் இறைவனுடைய (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19) வசனம் பத்ர் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய ஹம்ஸா, அலீ, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது. அத்தியாயம் :

23

அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒருவர், “அலீ (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்டார்களா?” என்று கேட்டார். (“ஆம். கலந்துகொண்டார்கள்) கவசத்திற்குமேல் கவசம் அணிந்து கொண்டு (களத்தில் இறங்கி) தனித்துப் போராடினார்கள்” என்று பராஉ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :

24

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் (மக்கா இறைமறுப்பாளர்களின் தலைவனான) உமய்யா பின் கலஃபும் (பரஸ்பரம் சொத்தையும், உறவினர் களையும் காப்பதென எங்களுக்குள்) எழுத்துபூர்வமான ஒப்பந்தம் செய்து கொண்டோம். பிறகு பத்ர் போரில் உமய்யா கொல்லப் பட்டதையும் அவருடைய மகன் (அலீ பின் உமய்யா) கொல்லப்பட்டதையும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுவிட்டு, அப்போது பிலால் (ரலி) அவர்கள், “உமய்யா பிழைத்துக்கொண்டால் நான் பிழைக்கப்போவதில்லை” என்று கூறியதாகவும் குறிப்பிட்டார்கள்.18 அத்தியாயம் :

25

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) “அந்நஜ்ம்' எனும் (53வது) அத்தியாயத்தை ஒதினார்கள். (ஓதி முடித்த) உடன் நபி (ஸல்) அவர்கள் “சஜ்தா' செய்தார்கள். அங்கிருந்த முதியவர் ஒருவரை தவிர மற்ற அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் “சஜ்தா' செய்தனர். அவர் ஒரு பிடி மண்ணை அள்ளித் தமது நெற்றிக்குக் கொண்டுசென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (சஜ்தாவைக் கேலி செய்து) சொன்னார். பிறகு, அந்த மனிதர் இறைமறுப்பாளராகவே (பத்ரில்) கொல்லப்பட்டதை நான் கண்டேன்.19 அத்தியாயம் :

26

உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களி(ன் உடலி)ல் வாளால் ஏற்பட்ட மூன்று காயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று அவர்களது தோள்பட்டையில் இருந்தது. நான் (சிறுவனாயிருந்தபோது) எனது விரல்களை (விளையாட்டாக) அந்தக் காயத்துக்குள் நுழைப்பவனாக இருந்தேன். (இதில்) இரு காயங்கள் பத்ர் போரிலும் இன்னொன்று “யர்மூக்' போரிலும் ஏற்பட்டவையாகும். (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அவர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் (அவர்களது வாள் கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானிடம் இருந்தது.) என்னிடம் அப்துல் மலிக் பின் மர்வான், “உர்வாவே! ஸுபைர் அவர்களின் வாளைத் தங்களுக்கு (அடையாளம்) தெரியுமா?” என்று கேட்டார். நான், “ஆம்' (தெரியும்) என்றேன். “அதில் என்ன (அடையாளம்) உள்ளது?” என்று கேட்டார். “பத்ர் போரில் அதன் முனை முறிந்துபோய்விட்டது. அந்த முறிவுதான் (அடையாளம்)” என்றேன். “உண்மை சொன்னீர்” என்று அப்துல் மலிக் பின் மர்வான் கூறினார். பிறகு, “அவர்களுடைய வாட்கள் பல்வேறு படைகளில் -கலந்துகொண்டு எதிரிகளின் வாட்களுடன்- மோதி முனைகள் முறிந்திருந்தன” எனும் (நாபிஃகாவின் பிரபல கவிதையிலிருந்து ஓர்) அடியைக் கூறினார். பிறகு அந்த வாளை என்னிடம் அப்துல் மலிக் பின் மர்வான் திருப்பிக் கொடுத்துவிட்டார். அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் (பின் உர்வா-ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பிறகு அந்த வாளை எங்கள் மத்தியில் மூவாயிரம் (திர்ஹம் / தீனாருக்கு) விலை மதிப்பிட்டோம். எங்களில் ஒருவர் (என் சகோதரர் உஸ்மான்) அதை வாங்கிக்கொண்டார். அதை நான் வாங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அத்தியாயம் :

27

உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களின் வாள் வெள்ளியால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்களின் வாள் வெள்ளியால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தியாயம் :

28

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யர்மூக் போரின்போது20 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம், “(கிழக்கு ரோமானியரான பைஸாந்தியர்மீது) நீங்கள் தாக்குதல் தொடுக்கக் கூடாதா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் தொடுப்போமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூறினர். அப்போது ஸுபைர் (ரலி) அவர்கள், “நான் தாக்குதல் தொடுக்கும்போது நீங்கள் வாக்கைக் காப்பாற்றமாட்டீர்கள் (நீங்களும் என்னோடு சேர்ந்து போரிடமாட்டீர்கள்)” என்று கூறினார்கள். “இல்லை. அப்படி நாங்கள் செய்யமாட்டோம்” என்று அவர்கள் கூறினர். பிறகு ஸுபைர் (ரலி) அவர்கள் பைஸாந்தியர்மீது தாக்குதல் தொடுத்து, அவர்களின் அணிகளைச் சிதறடித்து, அவர்களைக் கடந்து சென்றார்கள். (ஒத்துழைப்பதாகச் சொன்ன) யாரும் (அப்போது) அவருடன் இருக்கவில்லை. பிறகு (தோழர்களை நோக்கி) அவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவர்களது குதிரையின் கடிவாளத்தை பைஸாந்தியர் பிடித்துக்கொண்டு அவர்களது தோள்மீது வெட்டி இரண்டு காயங்களை ஏற்படுத்தினர். (ஏற்கெனவே) பத்ர் போரில் ஏற்பட்ட ஒரு காயம் அந்த இரண்டுக்கும் மத்தியில் இருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது அந்த(க் காயத்தின்) தழும்புகளில் என் விரல்களை விட்டு விளையாடுபவனாயிருந்தேன். (யர்மூக் போர் நடந்த) அன்று ஸுபைர் (ரலி) அவர் களுடன் பத்து வயதுடைய (அவர்களின் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் இருந்தார். அவரை ஒரு குதிரையில் அமர்த்தி அவருக்கு(ப் பாதுகாப்பாக) ஓர் ஆளையும் ஸுபைர் (ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள். அத்தியாயம் :

29

அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்து நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக்கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தார் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றி)க் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் தமது தேவை ஏதோ ஒன்றுக்காகச் செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்த (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்ன மனிதரின் மகன் இன்ன மனிதரே! இன்ன மனிதரின் மகன் இன்ன மனிதரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இறைவன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மை என்றே நாங்கள் கண்டுகொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இறைவன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானதுதான் என்று நீங்கள் கண்டுகொண்டீர்களா?” என்று கேட்டார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களைவிட நன்கு செவியுறுபவர்களாக நீங்கள் இல்லை” என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) க(த்)தாதா (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப்படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி (ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும் அவர்களுக்கு) அல்லாஹ் உயிர் கொடுத்தான்.21 அத்தியாயம் :

30

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ “அல்லாஹ்வின் அருட்கொடையை(ப் பெற்ற பின்பு அதனை) நன்றி கெட்ட போக்காக மாற்றி (தம்முடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் தள்ளிவிட்டவர்களை (நபியே!) நீர் காணவில்லையா?' எனும் (14:28ஆம்) இறைவசனம், அல்லாஹ்வின் மீதாணையாக! குறைஷிக் குல இறைமறுப்பாளர்களையே குறிக்கிறது” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். “அவர்கள் குறைஷிகளாவர். “அல்லாஹ் வின் அருட்கொடை' என்பது முஹம்மத் (ஸல்) அவர்களைக் குறிக்கும். “அழிவுக் கிடங்கு' என்பது பத்ருடைய நாளில் (இறைத்தூதரை எதிர்த்துப் போரிட்டு குறைஷியர் வீழ்ந்த) நரகத்தைக் குறிக்கும்” என்று அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

31

32

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ரின் கிணற்றருகில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு (உள்ளே கிடந்த இறைமறுப்பாளர்களின் சடலங்களை நோக்கி), “உங்களுக்கு உங்களுடைய இறைவன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானதுதான் என்று கண்டுகொண்டீர்களா?” என்று கேட்டார்கள். பிறகு, “இவர்கள், நான் கூறுவதை இப்போது செவியுறுகிறார்கள்” என்றும் கூறினார்கள். (“இறந்தவர்கள் செவியுறுகிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்ற) தகவல் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, “நான் அவர்களுக்குச் சொல்லிவந்த (கொள்கைகள்) எல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்' என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள். பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக), “(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது” எனும் (35:22) இறைவசனத்தை (இறுதிவரை) ஓதினார் கள்.23 அத்தியாயம் :

33

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இளைஞராயிருந்த ஹாரிஸா பின் சுராகா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் பத்ர் போரில் கொல்லப்பட்டார்கள். ஆகவே, அவர்களின் தாயார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஹாரிஸாவுக்கு உள்ள தகுதியைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். (இப்போது) ஹாரிஸா சொர்க்கத்தில் இருந்தால் நான் நன்மையை நாடி பொறுமைகாப்பேன். (இதுவன்றி) வேறு நிலையாக இருப்பின், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அடப்பாவமே! இழந்து தவிக்கிறாயோ!” (என்று கூறிவிட்டு) “சொர்க்கம் ஒன்றே ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கம் பல உண்டு. (உன் மகன்) ஹாரிஸா (உயர்ந்த சொர்க்கமான) “ஜன்னத்துல் பிர்தவ்ஸ்' எனும் சொர்க்கத்தில் இருக்கிறார்” என்று கூறினார்கள்.24 அத்தியாயம் :

34

அலீ (பின் அபீதாலிப் - ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூமர்ஸத் (கன்னாஸ் பின் ஹுஸைன்- ரலி) அவர்களையும், ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும், “நீங்கள் “ரவ்ளத்து காக்' எனுமிடம்வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில்) இணைவைப்பாளர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பாளர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் பின் அபீபல்(த்)தஆ அனுப்பியுள்ள (நமது ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)” என்று கூறினார்கள். (பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தனது ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந் தோம். அவளிடம், “கடிதம் (எங்கே? அதை எடு)” என்று கேட்டோம். அவள், “எம்மிடம் கடிதம் எதுவுமில்லை” என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்கவைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை. அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாகக் கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்” என்று சொன்னோம். விடாப்பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்டபோது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தனது இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டுசென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர் (ஹாதிப் பின் அபீபல்(த்)தஆ) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; அவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்துகொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிóருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களுடைய மனைவி மக்களையும், அவர்களது செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர்” என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்” என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று (மீண்டும்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவர் பத்ர் போரில் கலந்துகொண்டவர் அல்லவா? பத்ரில் கலந்துகொண்டவர்களை நோக்கி அல்லாஹ், “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது' அல்லது “உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம் அல்லவா?” என்று சொன்னார்கள்.25 இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் தம் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, “அல்லாஹ்வும் அவனு டைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.26 அத்தியாயம் :

35

அபூஉசைத் (மாலிக் பின் ரபீஆ- ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், “(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் அவர்கள்மீது அம்பெய்யுங்கள். (அவர்கள் தூரத்திலிருக்கும்போது அம்புகளை எய்து வீணாக்கிவிடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.27 அத்தியாயம் :

36

அபூஉசைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ர் போரின்போது எங்களிடம், “(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் -அதாவது அதிக எண்ணிக்கையில் உங்களை அவர்கள் சூழ்ந்துகொண்டால் -அம்பெய்யுங்கள். (எதிரிகளை அம்பு தாக்காது என்றிருப்பின், வீணாக்கிவிடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

37

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள், (மலைக்கணவாயில் நிறுத்தப்பட்ட) அம்பெய்யும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை(த் தலைவராக) நியமித்தார்கள். (அந்தப் போரின்போது முஸ்óம் களாகிய) எங்களில் எழுபது பேரை (இணைவைப்பவர்களான) அவர்கள் கொன்றனர். (அதற்குமுன் நடந்த) பத்ர் போரின்போது நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் இணை வைப்பாளர்களில் எழுபது பேரைக் கைது செய்து இன்னும் எழுபது பேரைக் கொன்று, (ஆக மொத்தம்) நூற்று நாற்பது பேரை வீழ்த்தினார்கள். (இதைப் பற்றி) அபூசுஃப்யான் கூறினார்: இந்த (உஹுத் போரின்) நாள் பத்ருடைய நாளுக்குப் பதிலாகும். போர் என்பதே (கிணற்று) வாளிகள்தான். (மாறி, மாறிதான் இறைக்க முடியும்)28 அத்தியாயம் :

38

நன்மை என்பது அல்லாஹ் (இந்த உஹுத் போருக்குப்) பின்பு நமக்குக் கொணர்ந்த நன்மையும், (இரண்டாம்) பத்ர் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நமது வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும்.29 “இதை (என் தந்தை) அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்தார்கள் என்று நான் எண்ணுகிறேன்” என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

39

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பத்ர் போரின்போது (படை) அணியில் நின்றுகொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் இளவயதுடைய இரு இளைஞர்கள் (நின்றுகொண்டு) இருந்தனர். அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன்.30 அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடத்தில், “என் பெரிய தந்தையே! அபூஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார். அப்போது நான், “என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொல்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக்கொண்டுள்ளேன்”என்றார். அப்போது மற்றொருவரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலாமவரைப் போலவே என்னிடம் கூறினார். அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. ஆதலால், அவ்விருவருக்கும் அபூஜஹ்லை சுட்டிக் காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் “அஃப்ரா'வின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர்.31 அத்தியாயம் :

40

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்துப் பேரை உளவுப்படையாக (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். இப்படைக்கு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடைய மகன் ஆஸிமின் (தாய் வழிப்)பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்களைத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவிற்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள “அல்ஹத்தா' என்ற இடத்தில் இருந்தபோது “ஹுதைல்' குலத்தைச் சேர்ந்த “பனூ லிஹ்யான்' எனும் கிளைக் குலத்தாருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளையினர் (அவர் களைப் பிடிப்பதற்காக) அம்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் திரண்டு, உளவுப்படையினரின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் இறங்கித் தங்கி, சாப்பிட்டுவிட்டுச் சென்றிருந்த இடத்தில் பேரீச்சம் பழங்களைக் கண்டனர். “(இது) யஸ்ரிப் (மதீனா) நகரின் பேரீச்சம் பழம்” என்று (தங்களுக்குள்) பேசிக்கொண்டனர். எனவே, அவர்களின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்தனர். இவர்களின் வருகை ஆஸிம் (ரலி) அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும் தெரிந்தபோது அவர்கள் (மலைப் பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர். அப்போது (துரத்தி வந்த) அந்தக் கூட்டத்தார் அவர்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு அவர்களைப் பார்த்து, “இறங்கி வந்து சரணடைந்துவிடுங்கள். உங்களில் யாரையும் கொல்லமாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக்குறுதியும் தருகிறோம்” என்று கூறினர். அப்போது ஆஸிம் பின் ஸாபித் அவர்கள் (தம் சகாக்களை நோக்கி), “(என்) சமூகத்தாரே! நான் ஓர் இறைமறுப்பாளனின் (வாக்குறுதியை நம்பி அவனது) பொறுப்பில் இறங்கிச் செல்லமாட்டேன்” (என்று கூறிவிட்டு,) “இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்துவிடு” என்று சொன்னார்கள். அந்த இறை மறுப்பாளர்கள், உளவுப்படையினரின் மீது அம்பெய்து, ஆஸிமை(யும், மற்றும் அறுவரையும்) கொன்றுவிட்டனர். பிறகு குபைப், ஸைத் பின் அத்தஸினா மற்றும் இன்னொரு மனிதர் (ஆகிய மூவரும்) அவர்களுடைய உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின் பேரில் இறங்கி வந்தனர். அவர்கள் (மூவரும்) தம் கையில் கிடைத்தவுடன் இறைமறுப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், “இது முதல் துரோகம். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வரமாட்டேன். இவர்களிடம் எனக்கு நல்ல அத்தியாயம் :

41

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: பத்ர் போரில் கலந்துகொண்டவரான34 சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை நோய்வாய்ப்பட்டார்கள். எனவே (அவர்களைக் கவனித்துக்கொள்ள) பகல் பொழுது உயர்ந்தபின் “ஜுமுஆ (தொழுகை)' நேரம் நெருங்கிவிட்டிருந்த நிலையில், இப்னு உமர் (ரலி) அவர்கள் சயீத் (ரலி) அவர்களிடம் புறப்பட்டுப் போனார்கள். மேலும், ஜுமுஆ தொழுகையை இப்னு உமர் விடவேண்டியதாயிற்று.35 அத்தியாயம் :

42

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை அப்துல்லாஹ் பின் உத்பா அவர்கள், உமர் பின் அப்தில்லாஹ் பின் அல்அர்கம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்கத் தீர்ப்பு கேட்டது பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, சுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்: சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் “பனூ ஆமிர் பின் லுஅய்' குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். -சஅத் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்டவராவார்- “விடைபெறும் ஹஜ்'ஜின்போது சஅத் (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள். அப்போது “சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப்பின் ஏற்படும்) உதிரப்போக்கிóருந்து சுபைஆ அவர்கள் சுத்தமானபோது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக்கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான “அபுஸ்ஸனாபில் பின் பஅகக்' (ரலி) அவர்கள் சுபைஆ (ரலி) அவர்களிடம் வந்து, “திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவனை இழந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப்பின் காத்திருக்க வேண்டிய “இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும்வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்துகொள்ள முடியாது” என்று கூறி னார்கள். சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, “நீ பிரசவித்துவிட்டபோதே (மணம் புரிந்துகொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்' என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். மற்றோர் அறிவிப்பில், பத்ரில் கலந்துகொண்ட இயாஸ் பின் (அல்)புகைர் (ரலி) அவர்கள் தமக்கு அறிவித்ததாக முஹம்மத் பின் இயாஸ் (ரஹ்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அத்தியாயம் :

43

நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “உங்களிடையே பத்ர் போரில் கலந்துகொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(பத்ரில் கலந்துகொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்” என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவ்வாறுதான் வானவர்களில் பத்ர் போரில் கலந்துகொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ர் போரில் கலந்துகொண்டவரான ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

44

முஆத் பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அகபா' விசுவாசப் பிரமாணம் அளித்தவர்களில் ஒருவரான ராஃபிஉ (ரலி) அவர்கள், பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான தம்முடைய மகன் ரிஃபாஆ (ரலி) அவர்களிடம், “ அகபா வாக்குப் பிரமாணத்திற்குப் பிரதியாக பத்ரில் நான் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியளிக்குமா?” என்று கேட்பது வழக்கம். “ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (பத்ர் போரில் கலந்து கொண்டவர்களைப் பற்றி முந்தைய ஹதீஸில் உள்ளபடி) கேட்டார்கள்” என்றும் ராஃபிஉ (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

45

முஆத் பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: வானவர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) கேட்டார். அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் (ரஹ்) கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை முஆத் பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்த நாளில் யஸீத் பின் அல்ஹாத் (ரஹ்) அவர்களுடன் நான் இருந்தேன். “(நபி (ஸல்) அவர்களிடம்) கேள்வி கேட்டவர் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான்” என ரிஃபாஆ (ரஹ்) கூறினார்கள் என்று யஸீத் சொன்னார்கள். அத்தியாயம் :

46

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

47

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஸைத் (ரலி) அவர்கள் (தமக்குப் பின்) எந்தச் சந்ததியையும் விட்டுச் செல்லாமல் இறந்துபோனார்கள். மேலும், அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்ட வராயிருந்தார்கள்.37 அத்தியாயம் :

48

அப்துல்லாஹ் பின் கப்பாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூசயீத் பின் மாலிக் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பிய போது, அவர்களுடைய துணைவியார் குர்பானி இறைச்சியை (சாப்பிடுவதற்காக)க்கொண்டுவந்து அவர்களுக்கு முன்னால் வைத்தார். அப்போது அவர்கள், “இது பற்றி நான் (மார்க்கத் தீர்ப்புக்) கேட்காத வரையில் இதை உண்ணமாட்டேன்' என்று கூறினார்கள். உடனே அவர்கள் தம் தாய்வழிச் சகோதரரான கத்தாதா பின் நுஅமான் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். -அவர் பத்ர் போரில் கலந்துகொண்டவராயிருந்தார்38 -(அவரிடம் சென்று) இது பற்றிக் கேட்டார்கள். அதற்கு கத்தாதா (ரலி) அவர்கள், “குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்குமேல் (சேமித்து வைத்து) எவரும் சாப்பிடக் கூடாது என்ற சட்டத்தை மாற்றும் உத்தரவு நீங்கள் (பயணம்) சென்றதற்குப் பின்னால் வெளியானது' என்று கூறினார்கள்.39 அத்தியாயம் :

49

ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது நான் உபைதா பின் சயீத் பின் அல்ஆஸ் என்பவனைச் சந்தித்தேன். அவன் தன் இரு கண்களைத் தவிர வேறெதுவும் வெளியில் தெரியாத விதத்தில் தன் உடல் முழுவதையும் ஆயுதங்களால் மூடி மறைத்திருந்தான். அவன் “அபூதாத்தில் கரிஷ்' (மக்கள் பலம் மிக்கவன்) என்னும் குறிப்புப் பெயரால் அறியப்பட்டுவந்தான். (போர்க் களத்தில் அவன்) நான் “அபூதாத்தில் கரிஷ்' (என்று பெருமையாகச்) சொன்னான். நான் அவன்மீது ஈட்டியைப் பாய்ச்சி அவன் கண்களில் தாக்கினேன். உடனே அவன் இறந்துவிட்டான். “நான் அவன்மீது எனது காலை வைத்து மிதித்து மிகவும் சிரமப்பட்டு அந்த ஈட்டியை இழுத்தெடுத்தேன். ஈட்டியின் இரு ஓரங்களும் வளைந்துபோயிருந்தன” என்று ஸுபைர் (ரலி) அவர்கள் சொன்ன தாக ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்த ஈட்டியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களிடம் (இரவலாகக்) கேட்கவே, ஸுபைர் (ரலி) அவர்கள் அதைக் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஸுபைர் (ரலி) அவர்கள் அதை (திரும்ப) எடுத்துக்கொண்டார்கள். பிறகு அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் (இரவலாகக்) கேட்க, அதை அவர்களுக்கு ஸுபைர் (ரலி) அவர்கள் கொடுத்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்தபோது, அதை உமர் (ரலி) அவர்கள் (இரவலாகக்) கேட்டார்கள். அதனை ஸுபைர் அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் இறந்தபோது அதை ஸுபைர் அவர்கள் எடுத்து (தம்மிடம் வைத்து)க்கொண்டார்கள். பிறகு அவர்களிடம் உஸ்மான் (ரலி) அவர்கள் அதைக் கேட்க, அவர்களுக்கும் அதை ஸுபைர் (ரலி) அவர்கள் கொடுத்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டபோது, அந்த ஈட்டி அலீ (ரலி) அவர்களி(ன் குடும்பத்தாரி)டம் வந்தது. அதனை, ஸுபைர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ், (அலீ (ரலி) அவர்களின் பிள்ளைகளிடம்) கேட்டார்கள். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கொல்லப்படும் வரையில் அது அவர்களிடமே இருந்துவந்தது. அத்தியாயம் :

50

பத்ர் போரில் கலந்துகொண்ட வரான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)40 அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னிடம் வாக்குப் பிரமாணம் தாருங்கள்” என்று கூறினார்கள்.41 அத்தியாயம் :

51

நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் சாலிமைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்கள். அவருக்குத் தம் சகோதரரின் மகளான ஹின்த் பின்த் வலீத் பின் உத்பாவைத் திருமணமும் செய்துவைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைதை வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டது போல (சாóமை, அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் வளர்ப்பு மகனாக்கிக்கொண்டார்கள்.) மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைப்பதும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) ஆக்கும் பழக்கமும் இருந்துவந்தன. “வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள்” எனும் (33:5) வசனத்தை அல்லாஹ் அருளும்வரையில் (இந்தப் பழக்கம் நீடித்தது.)42 “பிறகு (அபூஹுதைஃபாவின் துணைவியார்) சஹ்லா (பின்த் சுஹைல் -ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்...” என்று (தொடங்கும்) ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல்யமான் (ரஹ்) அவர்கள்) முழுமையாகக் கூறினார்கள்.43 அத்தியாயம் :

52

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக்கொண்டிருந்த காலித் பின் தக்வான் (ரஹ்) அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பதுபோல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ர் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களி டையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்லிக்கொள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

53

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ரில் கலந்துகொண்டவருமான அபூதல்ஹா (ஸைத் அல்அன்சாரீ-ரலி) அவர்கள் கூறியதாவது: “எந்த வீட்டினுள் நாயோ உருவப் படமோ உள்ளதோ அந்த வீட்டினுள் (இறையருளைச் சுமந்து வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உயிரினங்களின் சிலைகளையும், உருவப் படங்களையும் கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் (இப்படிக்) கூறினார்கள்” (என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.)44 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது அத்தியாயம் :

54

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து எனது பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த நிதியான ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு (மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத்) தந்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னுடன் வந்து “இத்கிர்' புல்லை நாங்கள் கொண்டு வருவதெனச் சொல்லியிருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர் களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளை யும், தீவனப் பைகள் மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன். அப்போது என் இரு ஒட்டகங்களும் அன்சாரீ ஒருவரது அறையின் அருகே மண்டியிட்டு அமரச் செய்யப்பட்டிருந்தன. நான் சேகரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது (திரும்பி வந்தேன். அப்போது) என் இரு ஒட்டகங்களின் திமில்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதி (கத்தியால்) பிளக்கப்பட்டிருந்தது. அவற்றின் ஈரல் குலைகள் பிடுங்கப்பட்டிருந்தன. அவற்றின் (இந்த அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் (கண்ணீர் சிந்தவிடாமல்) கட்டுப்படுத்த முடியவில்லை. நான், “இதை(யெல்லாம்) செய்தவர் யார்?” என்று கேட்டேன். மக்கள், “ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப்தான் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழு ஒன்றில்தான் இருக்கிறார். அவருடன் அவருடைய நண்பர்களும் பாடகியொருத்தியும் உள்ளனர். அந்தப் பாடகி தமது பாடலினிடையே, “ஹம்ஸாவே! இந்தக் கொழுத்த கிழம் ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி)விடுங்கள்” என்று பாடினாள். உடனே ஹம்ஸா தமது வாளை நோக்கிப் பாய்ந்து (எடுத்து வந்து) அந்த இரு ஒட்டகங்களின் திமில்களை வெட்டி இடுப்பைப் பிளந்தார். மேலும், அதன் ஈரல் குலைகளை வெளியே எடுத்தார்” என்று பதிலளித்தனர். (அலீ (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:) உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா அவர்களும் இருந்தார்கள். நான் சந்தித்த (துயரத்)தை நபி (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டு, “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இன்றைய நாளைப் போன்ற (பயங்கர மான) ஒருநாளை (ஒருபோதும்) நான் பார்த்ததில்லை. ஹம்ஸா, என் இரு ஒட்டகங்களையும் (அநியாயமாகத்) தாக்கி அவற்றின் திமில்களை அறுத்துவிட்டார். அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதிகளை (வாளால்) பிளந்துவிட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் (நண்பர்கள்) குழுவுடன் இருக்கிறார்” என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது அங்கி ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அணிந்துகொண்டு நடந்து செல்ல, அவர்களை நானும் ஸைத் பின் ஹாரிஸாவும் பின்தொடர்ந்து சென்றோம். ஹம்ஸா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். நபிகளாருக்கு அனுமதியளிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸாவை, அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸாவின் இரு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். ஹம்ஸா, நபி (ஸல்) அவர்களைப் பார்த்தார். பிறகு (தமது) பார்வையை உயர்த்தி அவர்களின் இரு முழங்கால்களையும் பார்த்தார். பிறகு பார்வையை உயர்த்தி நபி (ஸல்) அவர்களது முகத்தைப் பார்த்தார். பிறகு, “நீங்கள் எல்லாம் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல்) அப்படியே பின்வாங்கிய வண்ணம் தாம் வந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.45 அத்தியாயம் :

55

அப்துல்லாஹ் பின் மஅகில் அல்முஸனீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி-அவர்கள் இறந்தபோது) அவர்களுக்கு (ஜனாஸா தொழுவித்த) அலீ (ரலி) அவர்கள் (வழக்க மாகக் கூறும் தக்பீரைவிடக் கூடுதலாக ஒருமுறை) தக்பீர் கூறினார்கள். (இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட போது) “சஹ்ல் (பின் ஹுனைஃப் -ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்டார்கள். (பத்ர் போரில் கலந்து கொண்டவருக்குப் பிறரைவிடத் தனிச் சிறப்பு உண்டு. அதனால் கூடுதலாக தக்பீர் கூறினேன்)” என்று அலீ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.46 அத்தியாயம் :

56

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொருவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.) -குனைஸ் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ர் போரில் கலந்துகொண்ட வருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள்-47 உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: எனவே, நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, “நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் செய்துவைக்கிறேன்” என்று கூறினேன். (அதற்கு) உஸ்மான் (ரலி) அவர்கள், “(உங்கள் மகளை நான் மணம் புரிந்துகொள்ளும்) இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்தபின் எனது முடிவைக் கூறுகிறேன்)” என்று சொன்னார்கள். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானைச் சந்தித்தபோது) அவர், “இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன்” என்று கூறினார்கள். ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) “நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்துவைக்கிறேன்” என்றுகூறினேன். அபூபக்ர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்தப் பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான் (ரலி) அவர்களைவிட அபூபக்ர் (ரலி) அவர்கள்மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்துவைத்தேன். பிறகு (ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தபோது, “நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்குப் பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என்மீது மனவருத்தம் இருக்கக்கூடும்” என்று கூறினார்கள். நான், “ஆம்' என்று கூறினேன். (அதற்கு அபூபக்ர்-ரலி) அவர்கள், “நீங்கள் கூறியபோது நான் உங்களுக்குப் பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர் களை (தாம் மணம் புரிந்துகொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்குப் பதிலேதும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக்கொண்டிருந்திருப்பேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

57

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் குடும்பத்தாருக்காகச் செய்யும் செலவும் தர்மமே ஆகும். இதை பத்ர் போரில் கலந்துகொண்டவரான அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.48 அத்தியாயம் :

58

முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கூஃபாவின் ஆளுநர் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (ஒருநாள்) அஸ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தி விட்டார்கள். அப்போது ஸைத் பின் ஹசன் (ரஹ்) அவர்களின் பாட்டனாரும் பத்ர் போரில் கலந்துகொண்டவருமான அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் வந்து, “(முஃகீரா அவர்களே!) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (ஐவேளை தொழுகைகளையும் அவற்றுக்குரிய நேரங்களில்) தொழுதார் கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஐந்து (நேரத்) தொழு கைகளை (அவ்வாறே) தொழுதார்கள். பிறகு, ஜிப்ரீல் (அலை) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), “இவ்வா(று குறித்த நேரங்களில் தொழுதுகாட்டுமா)றே நான் பணிக்கப்பட்டுள்ளேன் என்று (கூறியதெல் லாம்) உங்களுக்குத் தெரியுமே!” என்று கேட்டார்கள். உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களது ஆட்சிக் காலத்தில் (ஒரு நாள், அன்னார் தொழுகையைத் தாமதப்படுத்தியபோது) அவர்களிடம் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸைத் தெரிவித்தார்கள்.49 அத்தியாயம் :

59

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரு (2:285, 286), வசனங்களை, யார் இரவு நேரத்தில் ஓதுகிறாரோ அந்த இரண்டும் அவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக ஆகிவிடும். இதை பத்ர் போரில் கலந்துகொண்டவரான அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூமஸ்ஊத் அல்பத்ரீ (ரலி) அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தபோது அவர்களை நான் சந்தித்து இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அப்போது (அல்கமா (ரஹ்) அவர்களிடம் கூறியதைப் போன்றே) என்னிடமும் அதைக் கூறினார்கள். அத்தியாயம் :

60

“நபி (ஸல்) அவர்களின் தோழரும், அன்சாரிகளில் பத்ர் போரில் கலந்து கொண்டவருமான இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள், “நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன்...” (என்று கூறித் தொடங்கும்) இந்த ஹதீஸின் முழு வடிவத்தை மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.50 அத்தியாயம் :

61

இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள் கூறியதாவது: பனூ சாலிம் குலத்தில் ஒருவரும் அவர்களில் சிறப்புக்குரியவருமான ஹுஸைன் பின் முஹம்மத் (ரலி) அவர்களிடம் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் குறித்து மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைப் பற்றி நான் கேட்டபோது, அதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.51 அத்தியாயம் :

62

முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பனூ அதீ குலத்தில் பெரியவரும், நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்துகொண்ட ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்களின் மகனுமான அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) அறிவித் தார்கள்: (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் குதாமா பின் மழ்ஊன் (ரலி) அவர்களை பஹ்ரைன் (நாட்டின்) ஆளுநராக நியமித்தார்கள். அவர் பத்ர் போரில் கலந்துகொண்டவராவார். மேலும் அவர் (உமர் (ரலி) அவர்களின் மகன்) அப்துல்லாஹ் பின் உமருக்கும், (உமர் (ரலி) அவர்களின் மகள்) ஹஃப்ஸாவுக் கும் தாய்மாமன் ஆவார். அல்லாஹ் இவர்கள் அனைவரைக் குறித்தும் அன்பு கொள்வானாக! 4012, 4013 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று பத்ர் போரில் கலந்துகொண்டவர்களான என் தந்தையின் இரு சகோதரர்கள் (ளுஹைர், முளஹ்ஹர்) கூறினர்.52 இதை சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சாலிம் அவர்களிடம், “நீங்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்' என்று கூறிவிட்டு, “ராஃபிஉ தம்மீது சிரமத்தை ஏற்படுத்திக்கொண்டார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

63

64

அப்துல்லாஹ் பின் ஷத்தாத் பின் அல்ஹாத் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் பத்ரில் கலந்துகொண்டவரான ரிஃபாஆ பின் ராஃபிஉ அல்அன்சாரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன்...53 அத்தியாயம் :

65

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ ஆமிர் பின் லுஅய் குலத் தாரின் நட்புறவு ஒப்பந்தக்காரரும் நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்துகொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து (ஜிஸ்யா) காப்புவரியை வசூலித்துக் கொண்டுவரும்படி (அரசு அதிகாரியாக்கி) அனுப்பியிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனை செய்யும்) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் (வந்து) நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றினர். நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்துத்) திரும்ப அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, “அபூஉபைதா ஏதோ கொண்டுவந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்று கூற, அன்சாரிகள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கொரு நற்செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ் வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. மாறாக, உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப்போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அது அவர்களை அழித்துவிட்டதைப்போல் உங்களையும் அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.54 அத்தியாயம் :

66

67

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (பத்ர் போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த அப்பாஸ் (ரலி) அவர்களின் விடுதலை தொடர்பாக), “எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களிடமிருந்து பிணைத்தொகை பெறாமல் நாங்கள் (அவரை) விட்டு விடுகிறோம்; நீங்கள் எங்களுக்கு அனுமதி கொடுங்கள்” என்று அனுமதி கோரினர். நபி (ஸல்) அவர்கள், “அவரிடமிருந்து ஒரு வெள்ளி நாணயத்தைக்கூட (வாங்காமல்) ஒருபோதும் விட்டுவிடாதீர் கள்” என்று கூறினார்கள்.56 அத்தியாயம் :

68

உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புறவு ஒப்பந்தக்காரரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ரில் கலந்துகொண்டவருமான மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இறைமறுப்பாளர் ஒருவரை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவர் என் கை ஒன்றை வாளால் துண்டித்துவிட்டார். பிறகு, அவர் என்னைவிட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக்கொண்டு, “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்' என்று சொன்னார். இதை அவர் சொன்னதற்குப் பிறகு நான் அவரைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வேண்டாம்.) அவரைக் கொல்லாதே” என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர் என் கை ஒன்றைத் துண்டித்துவிட்டார். அதைத் துண்டித்த பிறகுதானே இதைச் சொன்னார்!” என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவரைக் கொன்றுவிட்டால்அவரைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவர் வந்துவிடுவார். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவரிருந்த (குற்றவாளியான) நிலைக்கு நீ சென்றுவிடுவாய்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

69

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: “அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போர் (நடந்த) நாளில் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைத் தேடிச்) சென்றார்கள். அப்போது அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாக) அவனைத் தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். (அவனை நோக்கி), “அபூஜஹ்லே! நீயா?” என்றும் கேட்டார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “இப்படித்தான் இந்த நிகழ்ச்சியை (எனக்கு) அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். மேலும், “இப்னு மஸ்ஊத் அவர்கள் (அபூஜஹ்லை நோக்கி), “அபூஜஹ்லே நீயா?' என்று கேட்டபோது, “நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன் சமுதாயத்தாராலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... யாரும் உண்டா?' என்று (தன்னைத் தானே புகழ்ந்தவனாக) அபூஜஹ்ல் சொன்னான்” என சுலைமான் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.57 அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “விவசாயி அல்லாத ஒருவன் என்னைக் கொன்றிருந்தால்... (நன்றாயிருந் திருக்குமே!)” என்று அபூஜஹ்ல் கூறியதாக இடம்பெற்றுள்ளது.58 அத்தியாயம் :

70

உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “என்னுடன் நம் அன்சாரித் தோழர்களிடம் (பனூ சாஇதா சமுதாயக்கூடத்துக்கு) வாருங்கள்” என்று கூறினேன். (நாங்கள் போய்க்கொண்டிருந்தோம்.) அப்போது அன்சாரிகளில் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களான இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தார்கள்.59 அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை) நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் கூறியபோது, “உவைம் பின் சாஇதா (ரலி), மஅன் பின் அதீ (ரலி) ஆகியோரே அந்த இருவர்' என்று அவர்கள் கூறினார்கள்.60 அத்தியாயம் :

71

கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் கலந்துகொண்டவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒருவருக்கு, தீனார்/திர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தின் போது), “(உதவித் தொகையை) மற்றவர்களைவிட இவர்களுக்கு அதிகமாக்கித் தருவேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

72

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் “அத்தூர்' (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருக்க நான் கேட்டேன். இதுதான் இறைநம்பிக்கை எனது இதயத்தில் இடம் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும்.61 அத்தியாயம் :

73

நபி (ஸல்) அவர்கள் பத்ர் போரில் பிடிபட்ட கைதிகள் தொடர்பாகக் கூறினார்கள்: முத்இம் பின் அதீ உயிரோடிருந்து இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால், நான் அவருக்காக இவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிட்டிருப்பேன்.62 இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் படுகொலை நடைபெற்றது. அது பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.63 பிறகு இரண்டாம் குழப்பமான “அல்ஹர்ரா போர்' நடைபெற்றது. அது ஹுதைபியா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.64 பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.65 அத்தியாயம் :

74

முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்களின் (மீது சொல்லப்பட்ட அவதூறு) நிகழ்ச்சி குறித்து உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லா பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிடம் செவியுற்றேன். (அவர்களில்) ஒவ்வொரு வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தனர். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நானும் (அபூருஹ்மின் மகள்) உம்மு மிஸ்(த்)தஹும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்(த்)தஹ் (மிஸ்(த்)தஹின் தாயார்) தமது கம்பளி அங்கியில் இடறிக்கொண்டார். அப்போது அவர், (அவதூறில் கலந்துகொண்ட தம் மகன் மிஸ்(த்)தஹைச் சபித்தவராக), “மிஸ்(த்)தஹ் நாசமாகட்டும்” என்று கூறினார். நான், “மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்?” என்று கூறினேன்... பிறகு அவதூறு பற்றிய ஹதீஸை (முழு வடிவத்துடன்) அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.66 அத்தியாயம் :

75

மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறப்போர்கள் குறித்து அறிவிப்புச் செய்ததற்குப் பின்னால்) இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள், “இவைதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறப்போர்கள்' என்று கூறினார்கள். அப்போது (பத்ர் போரில் மாண்டுபோன குறைஷித் தலைவர்களின் சடலங்களைக் கிணற்றில்) எறிந்துவிட்டு அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாகக் கண்டுகொண்டீர்களா?” எனக் கேட்டார்கள் என்று (பத்ர் போர் பற்றிய) ஹதீஸையும் கூறினார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், “இறந்துபோன மக்களை நோக்கியா பேசுகின்றீர்கள்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களிடம் நான் கூறுவதை, அவர்களைவிட நீங்கள் நன்கு செவியுறுபவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.67 (அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) குறைஷி (முஸ்லிம்)களில், (ஏதேனும் தகுந்த காரணத்தால்) பத்ர் போரில் கலந்து(கொள்ளாதபோதிலும், கலந்துகொண்டதாகத் கருதப்பட்டுப் போர்ச் செல்வத்தில்) பங்கு வழங்கப்பட்டவர்கள் மொத்தம் எண்பத்தியொரு பேராகும். “(போர்ச் செல்வத்தில்) குறைஷியரின் பங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது; நூறு பேர் இருந்தனர். “அல்லாஹ்வே மிக அறிந்தவன்' என்று ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் சொன்னார்கள்” என உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுவது வழக்கம். அத்தியாயம் :

76

ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது முஹாஜிர்களுக்கு (போர்ச் செல்வத்திலிருந்து) நூறு பங்குகள் ஒதுக்கப்பட்டன. இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.68 அத்தியாயம் :

77

இப்னு உமர் (ரó) அவர்கள் கூறியதாவது: (மதீனா யூதர்களான பனுந்) நளீர் குலத்தாரும் (பனூ) குறைழா குலத்தாரும் (நபி (ஸல்) அவர்கள்மீது) போர் தொடுத்தனர். எனவே, பனுந் நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். (பனூ) குறைழா குலத்தார் (வருத்தம் தெரிவித்ததால் அவர்கள்)மீது கருணைகாட்டி (மன்னித்து) அவர்களை அங்கேயே (வசிக்க) விட்டுவிட்டார்கள். (ஆனால், பனூ) குறைழா குலத்தாரும் போர் தொடுத்தபோது அவர்களுடைய ஆண்களைக் கொலை செய்தார்கள். மேலும், அவர்களுடைய பெண்களையும் அவர்களுடைய குழந்தைகளையும், அவர்களுடைய உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச் செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் வந்து சேர்ந்துகொண்ட (பனூ குறைழா குலத்தார்) சிலருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். அந்தச் சிலர் முஸ்லிம்களாக மாறிவிட்டனர். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் குலத்தாரான “பனூ கைனுகா' கூட்டத்தாரையும், பனூ ஹாரிஸா (குலத்தாரான) யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள்.87 அத்தியாயம் :

78

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “(குர்ஆனின் 59ஆவது அத்தியாயத்தின் பெயரை) “அல்ஹஷ்ர்' அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். (அப்போது) அவர்கள் “அந்நளீர்' அத்தி யாயம் என்று கூறுங்கள் என்றார்கள்.88 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

79

அனஸ் பின் மாóக் (ரó) அவர்கள் கூறியதாவது: (பனூ) குறைழா, (பனுந்) நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும்வரையில் (அன்சார்களில்) சிலர் நபி (ஸல்) அவர்க(ளின் செலவுக)ளுக்காகப் பேரீச்சமரங்களை (அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவற்றை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.89 அத்தியாயம் :

80

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தேசத் துரோகிகளும் கொடுஞ்செயல் புரிந்தவர்களுமான) பனுந் நளீர் குலத் தாரின் பேரீச்சமரங்களை (போர்க் கால நடவடிக்கையாக) எரித்துவிட்டார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள்.90 அது “புவைரா' என்னும் இடமாகும்.91 எனவேதான், “நீங்கள் சில பேரீச்சமரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)” எனும் (59:5) இறைவசனம் அருளப்பெற்றது.92 அத்தியாயம் :

81

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பனுந் நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (புவைரா எனுமிடத்தில்) எரித்தார்கள். இந்த (புவைரா) சம்பவம் குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்: புவைராவில்பற்றியது நெருப்பு;(கையாலாகாத குறைஷி)குலத்தாரானபனூ லுஅய் தலைவர்களுக்குஎளிதாகிப்போனது. அப்போது (முஸ்லிமாகாமல் இருந்த) அபூசுஃப்யான் பின் ஹாரிஸ், ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கு (கவிதையிலேயே பின்வருமாறு) பதிலளித்தார்: அல்லாஹ்அச்செயலை நீடிக்கச்செய்யட்டும்!அதன்நாலா புறங்களிலும்அக்னிபற்றி எறியட்டும்! தெரியும் உனக்குபுவைராவிலிருந்துதொலைவில் இருப்பது யார்?நம்மிருவரின் ஊர்களில்சேதம் எதற்கு?93 அத்தியாயம் :

82

83

84

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கஅப் பின் அல்அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாராயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்” என்று சொன்னார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள்99 எழுந்து, “நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறை கூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(சரி) சொல்' என்றார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, “இந்த மனிதர் (முஹம்மத்-ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்” என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, “உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்” என்றும் கூறினார்கள். கஅப் பின் அல்அஷ்ரஃப், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்” என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள், “நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இன்னும் இருந்துகொண்டிருக்கிறோம்)” என்று (சலிப்பாகப் பேசுவதுபோல்) கூறிவிட்டு, “நீ எங்களுக்கு ஒரு வஸ்க் அல்லது இரண்டு வஸ்க் (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது கஅப் பின் அல்அஷ்ரஃப், “சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், “நீ எதை விரும்புகிறாய் (கேள்)?” என்று கூறினர். கஅப் பின் அல்அஷ்ரஃப், “உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று சொன்னான். அவர்கள், “எங்கள் பெண்களை எப்படி அடைமானமாக உன்னிடம் தர முடியும்? நீயோ அரபிய ரிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)” என்று சொன்னார்கள். “(அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், “எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும்போது) ஏசப்பட்டால் அப்போது, “இவன் ஒரு வஸ்க் அல்லது இரண்டு வஸ்க்குகளுக்குப் பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்' என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே!எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்” என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். (பிறகு) அவர்கள் தம்முடன் அபூநாயிலா (ரலி) அவர்கள் இருக்க, இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். -அபூநாயிலா (ரலி) அவர்கள், கஅப் பின் அல்அஷ்ரஃபிற்குப் பால்குடிச் சகோதரர் ஆவார்- அவர்களைத் தனது கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் பின் அல்அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், “இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர் (வேறு யாருமல்ல.) முஹம்மத் பின் மஸ்லமாவும் எனது (பால்குடிச்) சகோதரர் அபூநாயிலாவும்தான்” என்று பதிலளித்தான். அம்ர் அல்லாத மற்ற அறிவிப்பாளர்கள், “(முஹம்மத் பின் மஸ்லமாவுடன் வந்தவர்கள்) அபூஅப்ஸ் பின் ஜப்ர் (ரலி), ஹாரிஸ் பின் அவ்ஸ் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர்தான்” என்று கூறினர். அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், “தம்முடன் இருவரிருக்க முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் வந்தார்கள்” என்று அறிவித்தார்கள். -அறிவிப்பாளர் அம்ர் (ரஹ்) அவர்கள் ஒருமுறை, “(முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் தம் சகாக்களை நோக்கி) “பிறகு அவனது தலையை உங்களையும் நான் நுகரச் செய்வேன்' என்று கூறினார்கள்” என்று அறிவித்தார்கள். -அம்ர் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றவர்களின் அறிவிப்பில், “என்னிடம் அரபுப் பெண்களிலேயே நறுமணம் மிக்கவளும், அரபுகளிலேயே முழுமை யானவளும் இருக்கிறாள்” என்று கஅப் பின் அல்அஷ்ரஃப் கூறினான் எனக் காணப்படுகிறது. அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), “கஅப் பின் அல்அஷ்ரஃப் வந்தால் நான் அவனது (தலை) முடியைப் பற்றியிழுத்து அதை நுகர்வேன். அவனது தலையை எனது பிடியில் கொண்டுவந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதைச் சைகையாக எடுத்துக்கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டிவிடுங்கள்” என்று (உபாயம்) கூறினார்கள். பிறகு கஅப் பின் அல்அஷ்ரஃப் (தன் ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “இன்றுபோல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை” என்று சொன்னார்கள். மேலும், முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?” என்று கேட்டார்கள். அவன், “சரி (நுகர்ந்து பார்)” என்று கூறினான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனது தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரச் சொன்னார்கள். “(மீண்டுமொரு முறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா?” என்று கேட்டார்கள். அவன், “சரி (அனுமதிக்கிறேன்)' என்று கூறினான். முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டுவந்தபோது, “பிடியுங்கள்' என்று கூறினார்கள். உடனே (அவர்களுடைய சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.100 அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் பல தடவை இந்த ஹதீஸை எமக்கு அறிவித்தார்கள். ஆயினும், அப்போது அவர்கள் “ஒரு வஸ்க், இரண்டு வஸ்குகள் (அளவை)' சம்பந்தமாகக் கூறவில்லை. அன்னாரிடம் நான், “இந்த அறிவிப்பில் ஒரு வஸ்க், இரு வஸ்குகள் சம்பந்தமாக (ஏதேனும்) இடம்பெற்றுள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அதில் ஒரு வஸ்க், இரு வஸ்குகள் பற்றி இடம் பெற்றுள்ளது என எண்ணுகிறேன்” என்று பதிலளித்தார்கள்.- -(அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) கூறுகிறார்கள்:) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத இன்னொருவரின் அறிவிப்பில், “குருதி சொட்டுவது போன்ற ஒரு சப்தத்தை நான் கேட்கிறேன்” என்று கஅபின் மனைவி (ஏதோ ஆபத்து நேரவிருப்பதை உணர்த்தும் விதத்தில்) கூற அவன், “அவர் என் சகோதரர் முஹம்மத் பின் மஸ்லமாவும், என் பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும்தான். ஒரு கண்ணியவான் இரவு நேரத்தில் (ஈட்டி) எறிய அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்” எனப் பதிலளித்ததாகவும் இடம்பெற்றுள்ளது. -முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த இரு மனிதர்களுடன் (கஅப் பின் அல் அஷ்ரஃபின் வீட்டுக்கு) உள்ளே நுழைந்தார்கள்- அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், அந்த இரு மனிதர்களின் பெயர்களையும் குறிப்பிட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், “அவர்களில் சிலரின் பெயரை மட்டும் அம்ர் குறிப்பிட்டார். “இரண்டு மனிதர்கள் தம்முடனிருக்க முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) வந்தார்கள்' என்றே அம்ர் அறிவித்தார்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

85

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒரு குழுவினரை (யூதனான) அபூராஃபிஉ என்பவனிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் (கோட்டைக் குள்ளிருந்த) அவனது வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைக் கொன்றுவிட்டார்கள்.103 அத்தியாயம் :

86

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை அபூராஃபிஉவிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்தார்கள். அபூராஃபிஉ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புண்படுத்திவந்ததுடன், அவர்களுக்கெதிராக(ப் பகைவர்களுக்கு) உதவியும் செய்துவந்தான்.104 அவன் ஹிஜாஸ் பிரதேசத்திலிருந்த தனது கோட்டையில் இருந்தான். ஆகவே அன்சாரிகள் அந்தக் கோட்டையை நெருங்கினார்கள். அப்போது சூரியன் மறைந்துவிட்டிருந்தது. மக்கள் தங்கள் மேய்ச்சல் கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் தம் சகாக்களிடம், “நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் காவலனிடம் சென்று ஏதாவது தந்திரம் செய்து (கோட்டைக்கு) உள்ளே நுழைய முடியுமா என்று பார்த்துவருகிறேன்” என்று கூறினார். உடனே அவர் சென்று கோட்டை வாசலை நெருங்கினார். பிறகு, தமது ஆடையால் தம்மை மூடிக்கொண்டு இயற்கைக் கடனை நிறைவேற்றுவது போல் (கோட்டைக்கு வெளியே ஓரிடத்தில்) அமர்ந்துகொண்டார். (கோட்டைவாசி களான) மக்கள் (அனைவரும்) உள்ளே நுழைந்துவிட்டனர். அப்போது காவலன், “அல்லாஹ்வின் அடியானே! (கோட்டைக்கு) உள்ளே நுழைய விரும்பினால் நுழைந்துகொள். நான் வாசலை மூடப்போகிறேன்” என்றுகூறினான். உடனே நான் உள்ளே நுழைந்து (ஓரிடத்தில்) பதுங்கிக்கொண்டேன். மக்கள் (அனைவரும்) நுழைந்ததும் அவன் வாசலை மூடிவிட்டான். பிறகு சாவிகளை ஒரு கொழுவியில் (கொக்கி) தொங்கவிட்டான். நான் சாவிகளை நோக்கிச் சென்று அவற்றை எடுத்துக்கொண்டேன். பிறகு வாசலைத் திறந்தேன். அபூராஃபிஉவிடம் இராக்கதை சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது அவன் தனது மாடியறையில் இருந்தான். அவனுடைய இராக்கதை நண்பர்கள் அவனைப் பிரிந்து (விடைபெற்றுச்) சென்றபோது அவனை நோக்கி நான் (ஏணியில்) ஏறினேன். (கோட்டையின்) ஒவ்வொரு வாசலையும் திறக்கும்போதும் உள்ளிருந்து நான் தாழிட்டுக்கொண்டே சென்றேன். மக்கள் என்னை இனம் கண்டுகொண்டாலும் அபூராஃபிஉவை நான் கொன்றுவிடும்வரையில் அவர்கள் என்னை வந்தடையப் போவதில்லை” என்று நான் (என் மனத்திற்குள்) கூறிக்கொண்டேன். பிறகு அவனிடம் போய்ச்சேர்ந்தேன். அவன் இருட்டான ஓர் அறையில் தன் குடும்பத்தாருக்கிடையே இருந்தான். அந்த வீட்டில் அவன் எங்கே இருக்கிறான் என்பது எனக்குத் தெரியவில்லை. அப்போது நான், “அபூராஃபிஉவே!' என்று அழைத்தேன். அவன், “யார் அது?' என்று கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குறிவைத்து வாளால் பதற்றத்துடன் ஒரு வெட்டு வெட்டினேன். (இருப்பினும், என் நோக்கம்) எதையும் நான் நிறைவேற்றி வி(ட்)ட(தாகக் கருத)வில்லை. அப்போது அவன் கூச்சலிட்டான். உடனே நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன். சிறிது நேரம் தாமதித்து மீண்டும் அவனிடம் வந்து, “அபூராஃபிஉவே! இது என்ன சத்தம்” என்று (அவனுக்கு உதவ வந்தவன்போல்) கேட்டேன். அதற்கு அவன், “உன் தாய்க்குக் கேடு நேரட்டும்! எவனோ ஒருவன் வீட்டில் (நுழைந்து) சற்றுமுன் என்னை வாளால் வெட்டினான்” என்று கூறினான். உடனே நான் ஆழப்பதியும்படி இன்னொரு வெட்டு வெட்டினேன். (அப்போதும்) அவனை நான் கொல்ல (முடிய)வில்லை. பிறகு வாள் முனையை அவன் வயிற்றில் வைத்து அழுத்தினேன். அது முதுகு வழியே வெளியேறியது. அப்போது நான் அவனைக் கொன்று விட்டேன் என்று அறிந்துகொண்டேன். பிறகு ஒவ்வொரு கதவாக எல்லாக் கதவுகளையும் திறந்துகொண்டே சென்று அவனது ஏணிப்படியை அடைந்தேன். (ஏணியில் இறங்கலானேன்.) தரைக்கு வந்து விட்டேன் என்று நினைத்துக்கொண்டு எனது காலை வைத்தேன். (ஆனால்,) நிலவு காயும் (அந்த) இரவில் நான் விழுந்துவிட்டேன். அப்போது எனது கால் உடைந்து விட்டது. உடனே நான் தலைப்பாகை(த் துணி)யால் அதற்குக் கட்டுப்போட்டேன். பிறகு நடந்து வந்து (கோட்டை) வாசலில் அமர்ந்துகொண்டேன். “நான் அவனைக்கொன்றுவிட்டேன் என்று (உறுதியாக) அறியும்வரையில் நான் இந்த இரவில் (இங்கிருந்து) நகரமாட்டேன்” என்று (எனக்குநானே) சொல்லிக்கொண்டேன். பிறகு, அதிகாலையில் சேவல் கூவியபோது மரணச் செய்தி அறிவிப்ப வன் கோட்டைச் சுவர்மீது நின்று, “ஹிஜாஸ்வாசிகளின் (பிரபல) வியாபாரி அபூராஃபிஉ இறந்துவிட்டார்” என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் என் சகாக்களிடம் வந்து, “விரைவாகச் செல்லுங்கள். அபூராஃபிஉவை அல்லாஹ் கொன்றுவிட்டான்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களை அடைந்து நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “உனது காலை நீட்டு” என்று கூறினார்கள். நான் என் காலை நீட்டினேன். அதில் (தம் கரத்தால்) தடவிவிட்டார்கள். (எனது கால் குணமடைந்து) ஒருபோதும் நோய் காணாததுபோல் அது மாறிவிட்டது. அத்தியாயம் :

87

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூராஃபிஉவிடம் அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் பின் உத்பா (ரலி) அவர்களையும் அவர்களுடன் இன்னும் சிலரையும் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் சென்று கோட்டையை நெருங்கியபோது அவர்களை நோக்கி (தலைவர்) அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள், “நான் சென்று பார்த்து வரும்வரையில் நீங்கள் (இங்கேயே) இருங்கள்” என்று கூறினார்கள். தொடர்ந்து பின்வருமாறு கூறினார்கள்: அப்போது (கோட்டைவாசிகளுக்குத் தெரியாமல்) கோட்டைக்குள் நுழைவதற்காக நான் உபாயம் செய்தேன். அப்போது யூதர்களுடைய கழுதையொன்று காணாமற் போய்விட்டது. அதைத் தேடிய வண்ணம் தீப்பந்தத்துடன் அவர்கள் (கோட்டையிலிருந்து) வெளியேறினர். நான் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுவிடுவேனோ என்று அஞ்சினேன். நான் இயற்கைக் கடனை நிறைவேற்றுவது போல (எனது ஆடையால்) என் தலையையும் காலையும் மூடிக்கொண்டேன். பிறகு காவலன், “யார் (கோட்டைக்குள்) நுழைய விரும்புகிறார்களோ அவர்கள் நான் கதவை மூடுவதற்குமுன் நுழைந்து கொள்ளட்டும்” என்று கூறினான். உடனே நான் நுழைந்து கோட்டைவாசலுக்கு அருகிலிருந்த கழுதைத் தொழுவம் ஒன்றில் பதுங்கிக்கொண்டேன். அப்போது (யூத) மக்கள் அபூராஃபிஉவிடம் இரவுச் சாப்பாட்டை உண்டனர். பிறகு இரவின் ஒரு பகுதி முடியும் வரையில் (கதை) பேசிக்கொண்டிருந்தனர். பிறகு மக்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பினர். பின்னர் ஆரவாரங்கள் அடங்கி, எந்த அரவமும் கேட்காமலிருந்தபோது நான் (பதுங்கியிருந்த இடத்திலிருந்து) வெளியேறினேன். (கோட்டையின்) காவலன் மாடத்தில் கோட்டையின் சாவியை வைத்ததை நான் (பதுங்கிக்கொண்டிருந்தபோது) பார்த்திருந்தேன். அதை நான் எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்தேன். நான் (என் மனத்திற்குள்) “மக்கள் என்னை இனம் கண்டுகொண்டால் நிதானமாக(த் தப்பி)ச் சென்றுவிட வேண்டும்' என்று சொல்லிக் கொண்டேன். பிறகு, அந்த மக்கள் தங்கியிருந்த அறைகளின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டினேன். பிறகு அபூராஃபிஉ (தங்கியிருந்த மாடியறை) நோக்கி ஏணி வழியாக ஏறினேன். அப்போது அவனது அறை இருள் சூழ்ந்திருந்தது. அதன் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அந்த மனிதன் எங்கே (இருக்கிறான்) என்று என்னால் அறிய முடியவில்லை. உடனே நான், “அபூராஃபிஉவே!” என்று அழைத்தேன். அவன், “யார் அது?' என்று கேட்டான். உடனே நான் சப்தம் வந்த திசையைக் குறிவைத்து அவனை வெட்டினேன். அவன் கூச்சலிட்டான். அது (நான் நினைத்த) பலனைத் தரவில்லை. பிறகு அவனுக்கு நான் உதவி செய்வது போல, “அபூராஃபிஉவே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று என் குரலை மாற்றிக்கொண்டு கேட்டேன். உடனே அவன், “உனக்கு நான் ஆச்சரியமாகத் தெரிகிறேனா? உன் தாய்க்குக் கேடு உண் டாகட்டும். என்னிடம் ஒருவன் வந்து வாளால் என்னை வெட்டினான்” என்று கூறினான். மீண்டும் (குரல் வந்த திசையைக்) குறிவைத்து அவனை நான் வெட்டினேன்.(நான் நினைத்தபடி) அப்போதும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மீண்டும் அவன் கூச்சலிட்டான். அவனுடைய வீட்டார் எழுந்துவிட்டனர். பிறகு அவனுக்கு உதவி செய்பவனைப் போன்று (பாசாங்கு செய்தபடி) குரலை மாற்றிக்கொண்டு (அவனுக்கு அருகில்) வந்தேன். அப்போது அவன் மல்லாந்து படுத்திருந்தான். உடனே (எனது) வாளை அவனது வயிற்றில் வைத்துச் செலுத்தினேன். அப்போது (அவனது) எலும்பின் (மீது என் வாள் குத்துகின்ற) சப்தத்தை நான் கேட்டேன். பிறகு பதறிக்கொண்டே (அவனது அறையிலிருந்து) வெளியேறி ஏணிப்படிக்கு வந்தேன். இறங்க விரும்பினேன். (ஆனால்,) அதிலிருந்து நான் விழுந்துவிட்டேன். எனது கால் முறிந்துவிட்டது. எனவே, நான் அதை (எனது தலைப்பாகைத் துணியால்) கட்டினேன். பிறகு (கோட்டைக்கு வெளியிலிருந்த) என் சகாக்களிடம் நொண்டிக்கொண்டே வந்து அவர்களை நோக்கி, “நீங்கள் (விரைவாகச்) சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (காரியம் முடிந்துவிட்ட) நற்செய்தியைச் சொல்லுங்கள். (மரணச் செய்தி அறிவிப்பவனிடமிருந்து அபூராஃபிஉவின் மரணச்) செய்தியை நான் கேட்கும்வரையில் நான் (இங்கிருந்து) நகரமாட்டேன்” என்று கூறினேன். பிறகு அதிகாலை நேரத்தில் மரணச் செய்தி அறிவிப்பவன் (கோட்டைச் சுவர் மீது) ஏறி, “அபூராஃபிஉ இறந்துவிட்டார்” என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் எழுந்து நடக்கலானேன். (அளவு கடந்த மகிழ்ச்சியால்) எனக்கு வலிகூடத் தெரியவில்லை. என் சகாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சேர்வதற்கு முன் நான் சகாக்களைச் சென்றடைந்துவிட்டேன். ஆதலால், நானே நபி (ஸல்) அவர்களிடம் (அந்த) நற்செய்தியைச் சொன்னேன்.105 அத்தியாயம் :

88

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “இதோ, (வானவர்) ஜிப்ரீல் போர்த் தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப்பிடித்துக்கொண்டிருக்கிறார்” என்று கூறி னார்கள்.107 அத்தியாயம் :

89

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுத் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப்பின் உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். (அது) உயிரோடுள்ளவர்களிடமும் இறந்தவர் களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது. பிறகு அவர்கள் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது ஏறி, “நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். (என்னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (அல்கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப்படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன். நிச்சயமாக! (எனது மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணைவைப்பாளர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை; ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டு) மோதிக்கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.108 நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்த இறுதிப் பார்வையாக அது அமைந்தது. அத்தியாயம் :

90

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: இணைவைப்போரை அன்றைய (உஹுத் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். நபி (ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹுத் மலைக் கணவாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்து, “(எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர வேண்டாம்; நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய (எண்ணி கீழே வர) வேண்டாம்” என்று கூறினார்கள். நாங்கள் அவர்களை (களத்தில்) சந்தித்தபோது அவர்கள் (தோல்வியுற்று) வெருண்டோடிவிட்டனர். பெண்களெல் லாம், (தம் கால்களில் அணிந்திருந்த) கால்தண்டைகள் வெளியில் தெரிய மலையில் ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது (அம்பெய்யும் குழுவினரான) அவர்கள், “(நமக்கே வெற்றி!) போர்ச் செல்வம்! போர்ச் செல்வம்! (சேகரிப்போம், வாருங்கள்)” என்று கூறலாயினர். அப்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களை நோக்கி), “என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “இந்த இடத்தைவிட்டு (எந்தச் சூழ்நிலையிலும்) நகராதீர்கள்' என அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள். (எனவே, போர்ச் செல்வங்களை எடுப்பதற்காக இங்கிருந்து நகர வேண்டாம்) என்று சொன்னார்கள். ஆனால், சகாக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே (எங்கு செல்கிறோம் என்று தெரியாதவாறு) திசைமாறிப் போயினர். (இறுதியில் முஸ்லிம்களில்) எழுபது பேர் கொல்லப்பட்டனர்.109 (அப்போது எதிரணித் தலைவர்) அபூசுஃப்யான் முன்வந்து, “(உங்கள்) கூட்டத்தில் முஹம்மத் இருக்கின்றாரா?” என்று (பலமுறை) கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளிக்க வேண்டாம்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். மீண்டும், “(உங்கள்) கூட்டத்தில் அபூகுஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு நீங்கள் பதில் தர வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். பிறகு, “கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?” என்று கேட்டுவிட்டு (பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி), “இவர்களெல்லாரும் கொல்லப்பட்டுவிட்டனர்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அறை கூவலுக்குப்) பதிலளித்திருப்பார்கள்” என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர் (ரலி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், “தவறாகச் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! உனக்கு கவலை தரும் செய்தியைத்தான் உனக்காக அல்லாஹ் வைத்துள்ளான்” என்று பதிலடி கொடுத்தார்கள். அதற்கு அபூசுஃப்யான், “(கடவுள்) ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது.” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். “(அல்லாஹ்வின் தூதரே) நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று மக்கள் கேட்டனர். “அல்லாஹ்வே மிகவும் உயர்ந்தவன்; மிகவும் மகத்துவமிக்கவன்” என்று கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அவ்வாறே பதில் தரப்பட்டது.) அபூசுஃப்யான், “எங்களுக்குத்தான் “உஸ்ஸா' (எனும் தெய்வம்) இருக்கின்றது; உங்களிடம் “உஸ்ஸா' இல்லையே” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று வினவ நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எங்களின் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியொரு) உதவியாளன் இல்லையே!” என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள். (அவ்வாறே முஸ்óம்கள் பதிலளித்தனர்.) “இந்த (உஹுதுடைய) நாள், பத்ர் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். யுத்தம் என்பதே (கிணற்று) வாளிகள்தான். (மாறி மாறித்தான் இறைக்க முடியும். உங்கள் தோழர்களில்) அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளை யிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தை அளிக்கவும் செய்யாது” என்று அபூசுஃப்யான் கூறினார்.110 அத்தியாயம் :

91

இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் (அவர்கள் நோன்பை நிறைவு செய்யும் நேரத்தில்) உணவு கொண்டுவரப்பட்டது. (அன்று பகல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அப்போது அவர்கள், “முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் (உஹுத் போரில்) கொல்லப்பட்டார்கள்- அவர் என்னைவிடச் சிறந்தவர்-அவர் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டார். (அந்தச் சால்வையால்) அவரது தலை மூடப்பட்டால், அவருடைய இரு கால்கள் வெளியே தெரிந்தன. அவருடைய இரு கால்கள் (அதனால்) மூடப்பட்டால், தலை வெளியில் தெரிந்தது” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மேலும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், (பின்வருமாறு) கூறியதாக நான் எண்ணுகிறேன்: ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் (உஹுத் போரில்) கொல்லப்பட்டார்கள். அவர் என்னைவிடச் சிறந்தவர். (அவரும் அதுபோலவே பற்றாக்குறை மிக்க சிறிய சால்வையாலேயே கஃபனிடப்பட்டார்) பிறகு (அந்த ஏழ்மை நிலை நம்மைவிட்டு நீங்கி, இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்கு இந்த உலகின் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டன; அல்லது இந்த உலக(ச் செல்வ)த்திலிருந்து (இதோ, நீங்கள் காண்கின்றீர்களே) இந்த அளவுக்கு நமக்குத் தரப்பட்டது. நாங்கள் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதோ என்று நாம் அஞ்சுகிறோம்” என்று கூறினார்கள். பிறகு (தமக்காகக் கொண்டுவரப்பட்ட) உணவை (உண்ணாமல் அப்படியே) விட்டுவிட்டு அழலானார்கள்.112 அத்தியாயம் :

92

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில்' என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தமது கையிலிருந்த பேரீச்சங்கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும்வரையில் போரிட்டார்.113 அத்தியாயம் :

93

கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தம் பிரதிபலனை (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமலேயே சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் தான், முஸ்அப் பின் உமைர் (ரலி). அவர் உஹுத் போர் நாளன்று கொல்லப்பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச்சென்றார். அதைக் கொண்டு அவரது தலையை நாங்கள் மறைத்தால் அவருடைய இரு கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், “அவரது தலையை அத்துணி யால் மறைத்துவிட்டு, அவரது கால்மீது “இத்கிர்' புல்லையிடுங்கள் -அல்லது அவரது கால் மீது சிறிது “இத்கிர்' புல்லைப் போடுங்கள்” என்று கூறினார்கள். (உஹுத் போரில் கலந்துகொண்ட) எங்களில் வேறுசிலர் இருக்கிறார்கள். அவர்களின் (தியாகத்திற்கான) பிரதிபலன் (இந்த உலகிலும்) கனிந்துவிட்டது. அதை அவர்கள் பறித்து (அனுபவித்து)க்கொண்டார்கள்.114 அத்தியாயம் :

94

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் அந்நள்ர்-ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார். அன்னார் (திரும்பி வந்தவுடன்), “(இணைவைப்பாளர்களுடன்) நபி (ஸல்) அவர்கள் நடத்திய முதல் போரில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்களுடன் என்னையும் அல்லாஹ் பங்கு பெறவைத்திருந்தால் நான் கடும் முயற்சியெடுத்து (வீரமாகப்) போரிடுவதை அல்லாஹ் நிச்சயம் பார்த்திருப்பான்” என்று சொன்னார். அவர் உஹுத் போரைச் சந்தித்தார். (அதில் கலந்துகொண்டார். அந்தப் போரில்) மக்கள் தோல்வியுற்றனர். அப்போது அவர், “இறைவா! இந்த முஸ்லிம்கள்செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகி றேன். இணைவைப்பாளர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக் கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) தமது வாளுடன் முன்னேறிச் சென்றார். அப்போது (எதிரில் வந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சந்தித்து, “சஅதே! எங்கே (செல்கிறீர்கள்)? உஹுத் மலைக்கு அருகிலிருந்து நான் சொர்க்கத்தின் சுகந்தத்தை உணர்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார். பிறகு, (உடல் முழுதும் சிதைந்துபோனதால்) அடையாளம் அறியப்படாத நிலைமையில் கொல்லப்பட்டார். அவரை அவருடைய சகோதரி, மச்சத்தை வைத்தோ -அல்லது அவருடைய கை விரல் நுனிகளை வைத்தோ அடையாளம் கண்டுகொண்டார். அவரது உடலில் (வாளால்) வெட்டப்பட்டும், (ஈட்டியால்) குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன.115 அத்தியாயம் :

95

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: (உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் உத்தரவுப்படி) நாங்கள் திருக்குர்ஆனைப் (பல ஏடுகளில்) பிரதியெடுத்துக்கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத, நான் கேட்டிருந்த “அல்அஹ்ஸாப்' (எனும் 33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனம் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே,அதை நாங்கள் தேடிப்பார்த்தபோது அது குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:) இறைநம்பிக்கையாளரில் இத்தகைய வர்களும் இருக்கின்றனர்: அல்லாஹ்விடம் தாம் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டிவிட்டிருக் கிறார்கள்; அவர்களில் சிலர் தமது இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள்; இன்னும் சிலர் (அதை நிறைவேற்ற தருணம்) எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். (33:23) உடனே அந்த வசனத்தைத் திருக்குர்ஆனில் அதற்குரிய அத்தியாயத்தில் (எழுதிச்) சேர்த்துவிட்டோம்.116 அத்தியாயம் :

96

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போருக்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது, நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்து விட்டனர்.117 (இவர்கள்மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் இரு பிரிவினராகப் பிரிந்துவிட்டார்கள். ஒரு பிரிவினர், “(திரும்பி ஓடியவர்களைக்) கொன்றுவிடுவோம்” என்று கூறினர். மற்றொரு பிரிவினர், “அவர்களை நாம் கொலை செய்யக் கூடாது” என்று கூறினர். (அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர்.) அப்போது பின்வரும் வசனம் அருளப்பெற்றது: உங்களுக்கு என்ன நேர்ந்தது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் நீங்கள் இரு பிரிவினர்களாக உள்ளீர்கள்? அவர்கள் தேடிக்கொண்ட (தீய) வினையால் அவர் களை அல்லாஹ் வீழ்த்திவிட்டான். யாரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவரை நீங்கள் நல்வழிப்படுத்த விரும்புகிறீர்களா? (நபியே!) அல்லாஹ் யாரை வழிதவற விட்டுவிடுகிறானோ அவருக்கு எந்த (நல்) வழியையும் ஒருபோதும் நீர் காணமாட்டீர். (4:88) மேலும், நபி (ஸல்) அவர்கள், “மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்குவதைப்போல் அது பாவங்களைப் போக்கிவிடுகிறது” என்று சொன்னார்கள்.118 அத்தியாயம் :

97

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: “அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர்” என்னும் இந்த (3:122ஆம்) இறைவசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே அருளப்பெற்றது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், “அவ்விரு பிரிவினருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்” என்று (எங்களை அவ்வசனத்தில் மேன்மைப்படுத்திக்) கூறுகின்றான்.120 அத்தியாயம் :

98

ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திருமணம் முடித்துக் கொண்டாயா, ஜாபிரே?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன்.”கன்னி கழிந்த பெண்ணையா? கன்னிப் பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான், “(கன்னிப் பெண்ணை) அல்ல; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்துகொண்டேன்)” என்று கூறினேன். “உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்) ஒன்பது புதல்வியரை விட்டுவிட்டு உஹுத் போரின்போது (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக உள்ளனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்துவிடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாக)ப் பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ செய்தது சரிதான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

99

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தம்மீது கடன் இருக்கும் நிலையில் ஆறு புதல்வியரை (அநாதைகளாக) விட்டுவிட்டு என் தந்தை உஹுத் போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார். பேரீச்சம்பழங்களைக் கொய்யும் (அறுவடைக்) காலம் வந்தபோது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “என் தந்தை உஹுத் போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார் என்பது தங்களுக்குத் தெரியும். அவர் நிறையக் கடனையும் விட்டுச்சென்றுள்ளார். கடன்காரர்கள் தங்களைச் சந்திக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ சென்று எல்லாப் பேரீச்சங்கனிகளையும் களத்தில் ஒரு மூலையில் (தனித் தனியாகக்) குவித்து வை!” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களை நான் அழைத்தேன். நபி (ஸல்) அவர்களைக் கடன்காரர்கள் கண்டபோது என்னால் ஆத்திரமூட்டப்பட்டவர்களைப் போல அந்த நேரத்தில் தெரிந்தார்கள். கடன்காரர்கள் (கடுமையாக) நடந்துகொள்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, அதில் பெரிய குவியலை மூன்று முறை சுற்றிவந்து அதன் அருகே அமர்ந்தார்கள். பிறகு, “உன் (கடன்காரத்) தோழர்களைக் கூப்பிடு” என்று கூறினார்கள். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கனிகளை) அவர்களுக்கு அளந்து கொடுத்துக்கொண்டேயிருந்தார்கள். என் தந்தையின் (கடன்) பொறுப்பை அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான். நானோ, “அல்லாஹ், என் தந்தையின் (கடன்) பொறுப்பை நிறைவேற்றினால் போதும். என் சகோதரிகளிடம் ஒரு பேரீச்சம் பழத்துடன் திரும்பிச் செல்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை' என்று திருப்திப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பேரீச்சம் பழக் குவியல்கள் முழுவதையும் (தீர்ந்து போகாமல்) அல்லாஹ் பாதுகாத்தான். எந்த அளவுக்கென்றால் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த அந்தக் குவியலில் ஒரு பேரீச்சங்கனிகூட குறையாமலிருந்ததை நான் பார்த்தேன்.121 அத்தியாயம் :

100

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். அவர்களுடன் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் நபியவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வெள்ளை நிற உடையணிந்திருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.122 அத்தியாயம் :

101

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்துஎனக்காக (அம்புகளை) உருவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (என்னிடம்), “அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

102

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காகத் தம் தாயையும் தந்தையையும் ஒன்றுசேர்த்து, (“என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று) கூறி (போர் புரிய உற்சாகமூட்டி)னார்கள்.123 அத்தியாயம் :

103

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையுமே ஒன்று சேர்த்து எனக்காக (அர்ப்பணிப்பதாக)க் கூறினார்கள். அறிவிப்பாளர் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தாம் போர் புரிந்துகொண்டிருந்தபோது, “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் பற்றியே இவ்வாறு சஅத் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அத்தியாயம் :

104

அலீ (பின் அபீதாலிப் -ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை. அத்தியாயம் :

105

அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின்மாலிக் (ரலி) அவர்களைத் தவிர124 வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை. ஏனெனில், நான் உஹுத் (போர் நடந்த) நாளில், “சஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் (சஅத் அவர்களிடம்) கூறியதைக் கேட்டேன். அத்தியாயம் :

106

அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (உஹுதில்) போரிட்டுவந்த அந்த நாட்களில் ஒன்றில், தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களையும், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களையும் தவிர்த்து (முஹாஜிர்களில் வேறு யாரும்) அவர்களுடன் எஞ்சியிருக்கவில்லை. இது குறித்து தல்ஹா (ரலி) அவர்களும், சஅத் (ரலி) அவர்களும் (நேரடியாக) அறிவித்த ஹதீஸையும் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.125 அத்தியாயம் :

107

சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், தல்ஹா பின் உபைதில்லாஹ், மிக்தாத் பின் அல்அஸ்வத், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோருடன் நான் தோழமை கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவிப்பதை நான் கேட்டதில்லை. ஆயினும், தல்ஹா (ரலி) அவர்கள் (மட்டும்) உஹுத் போர் நாள் பற்றி அறிவிப்பதை நான் கேட்டுள்ளேன்.126 அத்தியாயம் :

108

கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களின் செயலிழந்துபோன கையைப் பார்த்தேன். உஹுத் நாளில் அந்தக் கையால் நபி (ஸல்) அவர்களை அன்னார் காத்த(போது எதிரிகளால் வெட்டப்பட்ட)ôர்கள்.127 அத்தியாயம் :

109

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தமது தோல் கேடயத்தால் மறைத்துக்கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள். மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள், இரண்டு அல்லது மூன்று வில்களை உடைத்துவிட்டார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், “அதை அபூதல்ஹாவிடம் போடு” என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை (தலையை உயர்த்தி) எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கிவிடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் (காயமுற்றவர்களுக்கு) மும்முரமாக (பணிவிடைகள் செய்துகொண்டு) இருப்பதை நான் கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய தோல்பைகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்துகொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்துகிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டுவந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை நான் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.128 அத்தியாயம் :

110

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப் பட்டனர். அப்போது இப்லீஸ்,-அல்லாஹ் அவனைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!- “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால்இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கத்தினான். உடனே, முஸ்óம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின்அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின்அணியினருடன் (மோதலேற் பட்டுப்) போரிட்டுக்கொண்டனர். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், தம் தந்தை “அல்யமான்' அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். ஆகவே, “அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!” என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணை யாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா (ரலி) அவர்கள் (இவ்வாறு மன்னித்ததால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.129 (இங்கு ஹ‚தைஃபா (ரலி) அவர்கள் தம் தந்தையை “கண்டார்கள்' என்பதைக் குறிக்க “பஸ‚ர' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) “பஸ‚ர்த்து' என்பது ஒரு காரியத்தில் ஒருவருக்குள்ள “அகப் பார்வையை'க் குறிக்கும். “அப்ஸர்த்து' என்பது கண்ணால் பார்க்கும் “புறப் பார்வையை'க் குறிக்கும். சிலர், பஸ‚ர்த்து, அப்ஸர்த்து இரண்டும் ஒன்றே என்பர். அத்தியாயம் :

111

உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்ய (எகிப்துவாசியான) ஒரு மனிதர் வந்தார். அப்போது ஒரு கூட்டத்தார் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, “இந்தக் கூட்டத்தார் யார்?” என்று கேட்டார். மக்கள், “இவர்கள் குறைஷிகள்” என்று கூறினர். அவர், “(இவர்களில்) முதிர்ந்த அறிஞர் யார்?” என்று கேட்டார். மக்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்” என்று பதிலளித்தனர். பிறகு அவர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்று, “(இப்னு உமர் அவர்களே!) நான் தங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்பேன். நீங்கள் எனக்கு அதைப் பற்றி (பதில்) சொல்வீர்களா? இந்த இறையில்லத்தின் புனிதத்தை முன்வைத்து தங்களிடம் கேட்கிறேன்: உஸ்மான் பின் அஃப்பான் உஹுத் நாளில் (போர்க்களத்திலிருந்து) வெருண்டோடியதைத் தாங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (அறிவேன்)” என்று பதிலளித்தார்கள். அவர், “உஸ்மான் (ரலி) அவர்கள், பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “அவர் (ஹுதைபியாவில் நடந்த) “பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாணத்திலும் கலந்துகொள்ளவில்லை என்பது உங்களுக் குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு) அந்த மனிதர், (உஸ்மான் (ரலி) அவர்கள், தாம் நினைத்திருந்தது போன்றே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள்தான் என்று தொனிக்கும்படி) “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னார். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: “வா! (இவற்றிலெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏன் பங்கு பெறவில்லையென்று) நீ கேட்டது பற்றி உனக்கு நான் விளக்குகிறேன். உஸ்மான் (ரலி) அவர்கள் உஹுத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியம் கூறுகின்றேன். பத்ர் போரில் அவர்கள் கலந்துகொள்ளாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் (ருகய்யா (ரலி) அவர்கள்) உஸ்மானுடைய மனைவியாக இருந்தார்கள். அப்போது அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரது பங்கும் உங்களுக்குக் கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைப் போய்க் கவனியுங்கள்)' என்று சொன்னார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.) “பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களைவிட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷியரிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை;) எனவேதான், உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். மேலும், இந்தச் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக் கையைச் சுட்டிக்காட்டி, “இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் இடக் கையின் மீது தட்டினார்கள். பிறகு, “(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார்கள்.” (இவ்வாறு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணிவைத்திருந்த) அந்த மனிதரிடம், “நான் சொன்ன இந்தப் பதில்களை எடுத்துக்கொண்டு இப்போது நீ போகலாம்” என்று சொன்னார்கள்.130 அத்தியாயம் :

112

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள், (அம்பெய்யும்) காலாட் படையினருக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை (தலைவராக)ஆக்கினார்கள். மேலும், அப்படையினர் தோற்றுப்போய் ஓடிவிட்டார்கள். அதுதான், அவர்களுக்குப் பின்னால் இருந்து அவர்களை இறைத்தூதர் அழைத்த நேரமாகும்.131 அத்தியாயம் :

113

அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல் -ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது சிற்றுறக்கம் ஆட்கொண்டவர்களில் நானும் ஒருவனாகஇருந்தேன். எந்த அளவுக்கென்றால் எனது வாள் எனது கையிலிருந்து பலமுறை (நழுவி) விழுந்துவிட்டது. அது விழ, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, அப்போதும் நான் அதை எடுப்பேன்.132 அத்தியாயம் :

114

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ர் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்; ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறியதற்குப் பின்னால், நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இன்னான்,இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒன்று அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில், அவர்கள் அநீதி இழைத்தவர்களாவர்.” எனும் (3:128) வசனத்தை அருளினான். அத்தியாயம் :

115

சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுத் போரில் காயப்படுத்தப்பட்ட போது எதிரிகளான) ஸஃப்வான் பின் உமய்யா, சுஹைல் பின் அம்ர், ஹாரிஸ் பின் ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒன்று அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில், அவர்கள் அநீதி இழைத்தவர் களாவர்.” என்ற (3:128) எனும் வசனம் அருளப்பெற்றது.134 அத்தியாயம் :

116

ஸஅலபா பின் அபீமாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை)ப் பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மகளின்) மகளுக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினர். -அலீ (ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களைக் கருத்தில்கொண்டே (இப்படிக்) கூறினர்- அப்போது உமர் (ரலி) அவர்கள், “உம்மு குல்ஸூமைவிட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும், உம்மு சலீத் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்துகொடுத்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்” என்று கூறினார்கள். (மேலும்) “அவர் எங்களுக்காக உஹுத் போர் நடந்த நாளில் தோலால் ஆன தண்ணீர் பைகளைச் சுமந்துகொண்டு வந்துகொண்டிருந்தார்” என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.136 அத்தியாயம் :

117

ஜஅஃபர் பின் அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: நான் (ஒரு பயணத்தில்) உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ஹிம்ஸு (நகரு)க்கு138 வந்து சேர்ந்தபோது என்னிடம், உபைதுல்லாஹ் பின் அதீ அவர்கள், “(உஹுத் போரின்போது ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றவரான) வஹ்ஷீ (ரலி) அவர்களைச் சந்திக்க உங்களுக்கு விருப்பமுண்டா? (நாம் அவர்களைச் சந்தித்து) ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றது பற்றிக் கேட்போமே!” என்று கூறினார்கள். நான், சரி என்றேன். வஹ்ஷீ (ரலி) அவர்கள் ஹிம்ஸில் வசித்துக்கொண்டி ருந்தார். (நாங்கள் அங்கு போய் அங்குள்ளவர்களிடம்) அவரைப் பற்றி விசாரித்தோம். “அவர் தமது அந்தக் கோட்டைக்குள் இருக்கிறார்; அவர் தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரிய தோல் பை போன்று (பருமனாக) இருப்பார்” என்று எங்களிடம் கூறப்பட்டது. பிறகு நாங்கள் (அவரிடம்) வந்தோம். சிறிது நேரம் அவரருகில் நின்றோம். பிறகு அவருக்கு நாங்கள் சலாம் சொன்னபோது, அவர் (எங்களுக்கு) பதில் சலாம் சொன்னார். உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் தமது தலைப்பாகைத் துணியால், தம் இரு கண்களையும் கால்களையும் தவிர வேறெதையும் வஹ்ஷீ (ரலி) அவர்கள் பார்க்க முடியாத அளவுக்குச் சுற்றிக் கட்டியிருந்தார். அப்போது, உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், “வஹ்ஷீ அவர்களே! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?” என்று கேட்டார்கள். அப்போது வஹ்ஷீ (ரலி) அவர்கள், உபைதுல்லாஹ் அவர்களைப் பார்த்தார். பிறகு “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. (உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை.) ஆயினும், எனக்கு இது தெரியும்: அதீ பின் அல்கியார் ஒரு பெண்ணைத் மணமுடித்தார்.139 அந்தப் பெண், “உம்மு கித்தால் பின்த் அபில்ஈஸ்' என்று அழைக்கப்பட்டார். அதீ அவர்களுக்கு (மனைவி) உம்மு கித்தால் மக்காவில் வைத்து ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்போது, அந்தக் குழந்தைக்குப் பாலூட்டும் செவிலித் தாயை நானே தேடினேன். (பாலூட்டுபவளைக் கண்டு பிடித்த பிறகு) நான் அந்தக் குழந்தையைச் சுமந்துகொண்டு, அதன் தாயுடன் சென்று அந்தக் குழந்தையைப் பாலூட்டுபவளிடம் ஒப்படைத்தேன். (அந்தக் குழந்தையின் பாதங்களை அப்போது நான் பார்த்தேன்.) உம்முடைய இரு பாதங்களைப் பார்த்தால் அது போலவே இருக்கிறது” என்று கூறினார். அப்போது உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், மூடியிருந்த தமது முகத்தைத் திறந்தார்கள். பிறகு, “ஹம்ஸா (ரலி) அவர்களை நீங்கள் கொன்றது பற்றி எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். வஹ்ஷீ (ரலி), “சரி (சொல்கிறேன்)” என்று கூறினார். (பிறகு, கொலைச் சம்பவத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:) ஹம்ஸா (ரலி) அவர்கள் பத்ர் போரில் (என் எசமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா பின் அதீ பின் அல்கியார் என்பாரைக் கொலை செய்திருந்தார். எனவே, என் எசமான் ஜுபைர் பின் முத்இம் என்னிடம், “என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ (அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய்” என்று கூறினார். ஆகவே, அய்னைன் (உஹுத்) ஆண்டில் -அய்னைன் என்பது உஹுத் மலைக்கருகிலுள்ள ஒரு மலையாகும். இந்த இரு மலைகளுக்குமிடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு - (குறைஷி) மக்கள் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபோது அம்மக்களுடன் போர்(க் களம்) நோக்கி நானும் சென்றேன். மக்கள் போருக்காக அணிவகுத்து நின்றபோது சிபாஉ பின் அப்தில் உஸ்ஸா என்பவன் (அணியை விட்டு) முன்னால் வந்து, “(என்னோடு) தனியே மோதுபவர் உண்டா?” என்று கேட்டான். அவனை நோக்கி ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுடனும் (பகைத்துக்கொண்டு) மோத வந்திருக்கி றாயா?” என்று கேட்டார்கள். பிறகு ஹம்ஸா (ரலி) அவர்கள் அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள்.அவன் கழிந்து போய்விட்ட நேற்றையதினம் போல் (மடிந்தவனாக) ஆகிவிட்டான். நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்துகொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை(க் கவனிக்காமல்) நெருங்கி வந்தபோது, எனது ஈட்டியை அவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரது புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அதுதான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷியர் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்றபோது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்டபின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்றுவிட்டேன். தாயிஃப்வாசிகள் (இஸ்லாத்தை அறிந்துகொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.140 அப்போது, என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தரமாட்டார் கள்; (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)” என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவின ருடன் நானும் புறப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டபோது, “நீர் வஹ்ஷீதானே?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன். “நீர் தானே ஹம்ஸாவைக் கொன்றீர்?” என்று கேட்டார்கள். நான், “உங்களுக்குக் கிடைத்த தகவலின்படி விஷயம் நடந்தது உண்மைதான்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “(உம்மைக் காணும்போது என் தந்தையின் சகோதரர் ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னைவிட்டு உன் முகத்தை மறைத்துக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டபோது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பெரும் பொய்யன் முசைலிமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களுடன் போர் புரிவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), “நிச்சயம் நான் முசைலிமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல (வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடு செய்யலாம்” என்று கூறிக்கொண்டேன். (அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிய போர்ப்படையிóருந்த) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போதுதான் அவனுடைய விஷயத்தில் நடக்க வேண்டியது நடந்து முடிந்தது.141 அப்(போரின்)போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்று கொண்டிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன்மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) எனது ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனது இரு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனது பின்தோள்களுக்கிடையிóருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடிவந்தார். தமது வாளால் அவனது உச்சந்தலைமீது ஓங்கி வெட்டிவிட்டார். (அவன்தான் முசைóமா.) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (முசைலிமா கொல்லப்பட்டபோது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்துகொண்டு, “அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்துவிட்டான்” என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள். அத்தியாயம் :

118

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உஹுத் போரில் உடைக்கப்பட்ட) தமது (முன்வாய்ப் பற்களில், கீழ் வரிசையில் வலப்புறம் இருந்த) பல்லைச் சுட்டிக்காட்டி143 “நபியை (இப்படிச்) செய்துவிட்ட சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது” என்று கூறினார்கள். (மேலும்,) “அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் எவனைக் கொன்றுவிடுவார்களோ அவன்மீது(ம்) அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகி விட்டது” என்று கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

119

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் பாதையில் நபி (ஸல்) அவர்கள் எவனைக் கொன்று விட்டார் களோ அவன்மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது. (மேலும்,) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தியவர்கள்மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது.144 அத்தியாயம் :

120

அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுத் போரின்போது) ஏற்பட்ட காயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தைக் கழுவிவிட்டவரையும், (கழுவு வதற்காகத்) தண்ணீரை ஊற்றிவிட்டுக் கொண்டிருந்தவரையும், சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருளையும் நான் அறிவேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு விளக்கிச்) சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அந்தக் காயத்தைக் கழுவி விட்டுக்கொண்டிருந்தார்கள். அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (தமது) கேடயத்தில் (தண்ணீர் நிரப்பி வந்து அந்தக் காயத்தைக் கழுவுவதற்காக) நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். தண்ணீர் மேன்மேலும் இரத்தத்தை அதிகமாக்குவதையே கண்டபோது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் பாயின் ஒரு பகுதியை எடுத்துவந்து (சாம்பலாகும்வரை) அதைக் கரித்து, அதைக் காயத்தின் மீது அழுத்திவைத்தார்கள். இரத்தம் (வருவது) நின்றுவிட்டது. அன்றைய (உஹுத் போர்) தினத்தில் நபி (ஸல்) அவர்களின் கீழ்ப்பல் உடைக்கப் பட்டது. மேலும், அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. மேலும், (அவர்களது) தலைக் கவசம் அவர்களுடைய தலையின் மீதே வைத்து நொறுக்கப்பட்டது. அத்தியாயம் :

121

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒரு நபி எவனைக் கொன்றுவிட்டார்களோ அவன்மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தியவன்மீதும் அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது. இதை இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.145 அத்தியாயம் :

122

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “தமக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் செவிசாய்த்தார்கள். அவர்களில் யார் (அல்லாஹ்வை) அஞ்சி நன்மை புரிந்தார்களோ அவர்களுக்கு மகத்தான பிரதிபலன் உண்டு.” என்னும் (3:172ஆவது) வசனத்தை (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள் ஓதிவிட்டு என்னிடம், “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! உன் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களும் (என் தந்தையும் உன் பாட்டனாருமான) அபூபக்ர் (ரலி) அவர்களும் (அந்த அழைப்பை ஏற்ற) அவர்களில் அடங்குவர். உஹுத் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டபோது இணைவைப்பாளர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்துவிடுவார்களோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். (அப்போது) “அவர்களுக்குப் பின்னால் (அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்?” என்று கேட்டார்கள். (உஹுதில் கலந்துகொண்ட) நபித்தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க) முன்வந்தனர்” என்று கூறினார்கள். அவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்களும், ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களும் இருந்தனர்.146 அத்தியாயம் :

123

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: அன்சாரிகளைவிட, அதிக உயிர்த் தியாகிகள் கொண்ட, மறுமை நாளில் ஒளி மிகுந்த வேறெந்தக் குலத்தாரையும் அரபுக் குலங்களுக்கிடையே நாம் அறியவில்லை. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரில் அன்சாரிகளில் எழுபது பேர் கொல்லப்பட்டனர். “பிஃரு மஊனா' போரின்போது எழுபது பேரும், யமாமா போரின்போது எழுபது பேரும் கொல்லப்பட்டனர். அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் “பிஃரு மஊனா' போர் நடந்தது.149 மகாபொய்யன் முசைóமாவின் மீதான யமாமா போர் அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் நடந்தது.150 அத்தியாயம் :

124

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரில் (உயிர்த் தியாகிகளாகக்) கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே துணியில் சேர்த்து வைத்து (கஃபனிட்டு) “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” என நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அவரது உடலை உட்குழியில் முதலில் வைப்பார்கள். மேலும், “மறுமை நாளில் இவர்களுக்கு நானே சாட்சியாவேன்” என்று கூறிவிட்டு, அவர்களுடைய இரத்தத்துடனேயே அவர்களை அடக்கம் செய்யும்படி உத்தரவிட்டார்கள். அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸா தொழுகை) தொழவுமில்லை; அவர்கள் நீராட்டப்படவுமில்லை.151 அத்தியாயம் :

125

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒரு கனவு கண்டேன். (அதில்) நான் ஒரு வாளை அசைத்தேன். அதன் முனை முறிந்துவிட்டது. உஹுத் போரின் போது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை அது குறித்தது. பிறகு மீண்டுமொரு முறை அதை நான் அசைத்தேன். அது முன்பிருந்ததைவிட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுத் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும், (சிதறி ஓடிய) இறைநம்பிக்கையாளர்கள் (மீண்டும்) ஒன்றுதிரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில காளை மாடுகளை (அவை அறுக்கப்படுவது போல்) கண்டேன். (உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் வழங்கிய தகுதி (அவர்கள் இவ்வுலகில் இருந்த நிலையைவிட அவர்களுக்குச்) சிறந்தது ஆகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுத் நாளில் கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பவை யாகும். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.153 அத்தியாயம் :

126

கப்பாப் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்குரிய பிரதிபலன் அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையுமே (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் சென்று விட்டனர். அவர்களில் ஒருவர்தான், முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள். அவர் உஹுத் நாளில் கொல்லப்பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச்சென்றார். அவரது தலையை நாங்கள் அதன் மூலம் மறைத்தால் அவருடைய இரு கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், “அவரது தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவர்மீது “இத்கிர்' புல்லையிடுங்கள்- அல்லது அவரது கால்மீது “இத்கிர்' புல்லைப் போடுங்கள்” என்று கூறினார்கள். (உஹுத் போரில் கலந்துகொண்ட) எங்களில் வேறுசிலரும் உள்ளனர். அவர்களின் (பிரதிபலன் இந்த உலகிலும்) கனிந்துவிட்டது. அதை அவர்கள் (இவ்வுலகிலும்) பறித்து (அனுபவித்துக்கொண்டார்கள்.154 அத்தியாயம் :)

127

அனஸ் (பின் மாலிக்-ரலி) அவர்கள் கூறியதாவது: “இந்த (உஹுத்) மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கி றோம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.156 அத்தியாயம் :

128

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போரிலிருந்து நாங்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோது) உஹுத் (மலை) நபி (ஸல்) அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அவர்கள், “இந்த மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்தார்கள். நான் இரு (கருங்கற்கள் நிறைந்த) மலைகளுக்கிடையிலுள்ள பகுதியை (மதீனாவை)ப் புனிதமானதாக அறிவிக்கிறேன்” என்று கூறினார்கள்.157 அத்தியாயம் :

129

உக்பா பிர் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுத் போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்கு (மிம்பருக்கு) வந்து, “நிச்சயமாக, நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், நான் இப்போது (“அல்கவ்ஸர்' எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு “பூமியினுடைய கருவூலங்களின் திறவுகோல்கள்' அல்லது “பூமியின் திறவு கோல்கள்' கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பாளர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை; ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டுக்கொண்டு) மோதிக்கொள் வீர்களோ என்றுதான் பயப்படுகின்றேன்” என்று கூறினார்கள்.158 அத்தியாயம் :

130

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பத்துப் பேர் கொண்ட) உளவுப் படையொன்றை (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் புதல்வர் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்களை அப்படையினருக்குத் தலைவராக்கி னார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள (“ஹத்தா' என்ற) இடத்தில் இருந்தபோது “ஹுதைல்' குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அம்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் (கிளம்பி, உளவுப் படையினரைப் பிடிப்பதற்காக) அவர்களின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தனர். உளவுப் படையினர் இறங்கித் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். படையினர் மதீனாவிóருந்து உணவாகக் கொண்டுவந்திருந்த பேரீச்சம் பழங்களின் கொட்டைகளை அங்கே கண்டனர். அப்போது, “இது “யஸ்ரிப்' (மதீனா நகரின்) பேரீச்சம்பழம்” என்று சொல்லிக்கொண்டனர். எனவே, உளவுப் படையினரின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்து, இறுதியில் அவர் களை அடைந்தேவிட்டனர். ஆஸிம் (ரலி) அவர்களும், அவர்களுடைய நண்பர்களும் இதை அறிந்தபோது (மலைப் பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர். அப்போது (துரத்தி வந்த) அந்தக் கிளையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, “நீங்கள் எங்களிடம் இறங்கிவந்துவிட்டால், உங்களில் யாரையும் நாங்கள் கொலை செய்யமாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக்குறுதியும் தருகிறோம்” என்று கூறினர். அப்போது ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நான் ஓர் இறைமறுப்பாளரின் (வாக்குறுதியை நம்பி அவரது) பாதுகாப்பில் இறங்கிச் செல்லமாட்டேன். இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்துவிடு” என்று கூறினார்கள். அப்போது அக்கிளையினர் உளவுப் படையினருடன் சண்டையிட்டு ஆஸிம் (ரலி) அவர்கள் உட்பட ஏழுபேரை அம்பெய்து கொன்றுவிட்டனர். இறுதியில் குபைப் (ரலி), ஸைத் (ரலி), மற்றொருவர் மட்டுமே160 எஞ்சியிருந்தனர். இம்மூவருக்கும் உறுதிமொழியும் வாக்குறுதியும் (எதிரிகள்) அளித்தனர். அவர்களது உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின்பேரில் இறங்கிவந்தனர். அவர்கள் (மூவரும்) தம் கையில் கிடைத்தவுடன் (எதிரிகள்) தம் அம்பின் நாணை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், “இது முதலாவது நம்பிக்கைத் துரோகம்” என்று கூறி, அவர்களுடன் வர மறுத்துவிட்டார்,எனவே, அவரை (அடித்து)த் துன்புறுத்தி தம்முடன் வரும்படி நிர்பந்தித்தனர். ஆனால், அவர் உடன்படவில்லை.எனவே, அவரை அவர்கள் கொலை செய்துவிட்டனர். பிறகு, குபைப் (ரலி) அவர்களையும், ஸைத் பின் அத்தஸினா (ரலி) அவர்களை யும் கொண்டுசென்று மக்காவில் விலைக்கு விற்றுவிட்டனர். ஹாரிஸ் பின் ஆமிர் பின் நவ்ஃபல் என்பவருடைய மக்கள், குபைப் (ரலி) அவர்களை (பழிதீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக்கொண்டனர். (ஏனெனில்,) குபைப் (ரலி) அவர்கள் ஹாரிஸ் பின் ஆமிரை பத்ர் போரின்போது கொன்றிருந்தார். ஹாரிஸின் மக்களிடம் குபைப் (ரலி) அவர்கள் (புனித மாதங்கள் முடிந்து) அவரைக் கொல்ல அவர்கள் ஒன்றுதிரளும் (நாள் வரும்)வரையில் கைதியாக இருந்துவந்தார். (கொல்லப்படும் நாள் நெருங்கியபோது தம்முடைய மறைவான உறுப்புகளிóருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப் (ரலி) அவர்கள் இரவலாகக் கேட்டார். அவளும் அவருக்கு இரவலாகத் தந்தாள். (அதற்குப்பின் நடந்ததை அப்பெண்மணியே விளக்கிக்) கூறுகிறார்: நான் என்னுடைய சிறிய மகனைக் கவனிக்காமல் இருந்துவிடவே, அவன் (விளையாடிக்கொண்டே) தவழ்ந்து குபைப் அவர்களிடம் வந்து சேர்ந்தான். அவனை குபைப் அவர்கள் தமது மடியில் வைத்துக்கொண்டார்கள். (இந்நிலையில்) அவரை நான் பார்த்தபோது பலமாக அதிர்ந்தேன். இதை அவர் புரிந்துகொண்டார். அவரது கையில் கத்தி இருந்தது. அப்போது அவர், “இவனை நான் கொன்றுவிடுவேன் என்று அஞ்சுகிறாயா? அல்லாஹ்வின் நாட்டப்படி நான் அப்படிச் செய்பவன் அல்லன்” என்று கூறினார். குபைபைவிடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒருநாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்துச்) சாப்பிட்டுக்கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) “அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு” என்று அந்தப் பெண் கூறிவந்தார்- (அவரைக் கொல்வதற்காக - மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே அவரை அவர்கள் கொண்டுவந்தபோது, “இரண்டு ரக்அத்கள் நான் தொழுதுகொள்ள என்னை விடுங்கள்” என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் (ரலி) இரண்டு ரக்அத்கள் தொழுதார்.) பிறகு, அவர்களின் பக்கம் திரும்பி, “நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணிவிடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன்” என்று கூறினார். அவர்தான் (இறைவழியில்) கொல்லப்படுவதற்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் ஆவார். பிறகு, “இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக்(கொண்டு, தனித் தனியாக இவர்களைக் கவனித்துக்கொள்வாயாக!” என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு, நான்முஸ்óமாகக் கொல்லப்படுகையில்எதைப் பற்றியும்பொருட்படுத்தப்போவதில்லை. எந்த இடத்தில்நான் இறந்தாலும்இறைவனுக்காகக்கொல்லப்படுகிறேன் (என்பதில் மகிழ்ச்சியே)! நான் கொல்லப்படுவதுஇறையன்புக்காக எனும்போது,அவன் நாடினால்துண்டிக்கப்பட்டஎன் உறுப்புகளின்இணைப்புகள்மீதுகூடவளம் வழங்குவான் என்று (கவியாகக்) கூறினார்கள். பிறகு, உக்பா பின் அல்ஹாரிஸ் என்பவன் குபைப் (ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொன்றுவிட்டான். மேலும், (ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டுவிட்ட செய்தி குறைஷியருக்குக் கிடைத்தபோது) அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்வதற்காக அவரது உடலில் ஓர் உறுப்பை எடுத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (ஏனெனில்,) ஆஸிம் (ரலி) அவர்கள் பத்ர் போரின்போது அவர்களின் தலைவர்களில் ஒருவரைக் கொலை செய்திருந்தார். (அவரது உடலின் ஒரு முக்கிய உறுப்பை வெட்ட அவர்கள் போனபோது) ஆஸிம் (ரலி) அவர்களுக்குமேல் (அன்னாரைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப் போன்று ஆண் தேனீக்களை அனுப்பினான். குறைஷியரின் தூதர்களிடமிருந்து ஆஸிம் (ரலி) அவர்களை (சூழ்ந்துகொண்டு) அவை பாதுகாத்தன. ஆகவே, அவரிடமிருந்து எதையும் எடுக்க அவர்களால் இயலவில்லை.161 அத்தியாயம் :

131

ஜாபிர் (பின் அப்தில்லாஹ் -ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசிர்வஆ (உக்பா பின் அல்ஹாரிஸ்) என்பவனே குபைப் (ரலி) அவர்களைக் கொன்றான். அத்தியாயம் :

132

அனஸ் (பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எழுபது பேரை ஒரு தேவைக்காக அனுப்பிவைத்தார்கள். -அவர்கள் “குர்ராஉ' (குர்ஆனை நன்கறிந்த வர்கள்) என்று அழைக்கப்பட்டனர்- அப்போது பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த ரிஅல் மற்றும் தக்வான் ஆகிய இரு கூட்டத்தார், “பிஃரு மஊனா' என்றழைக்கப்படும் ஒரு கிணற்றுக்கு அருகில் அவர்களை இடைமறித்தனர். அப்போது அந்த நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்க ளிடம் போரிடுவதற்காக) உங்களை நாடி நாங்கள் வரவில்லை. நபி (ஸல்) அவர்களின் ஒரு தேவைக்காகவே நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம்” என்று கூறினர். ஆயினும், அவர்கள் அந்த நபித்தோழர்களைக் கொன்றுவிட்டனர். ஆகவே, அவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் அதிகாலைத் தொழுகையில் பிரார்த்தித்தார்கள். இதுவே (தொழுகையில்) “குனூத்' (எனும் சிறப்பு துஆ ஓதுவ)தின் துவக்கமாகும். நாங்கள் அதற்குமுன் “குனூத்' ஓதுபவர்களாக இருக்கவில்லை.162 அறிவிப்பாளர் அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: ஒரு மனிதர் அனஸ் (ரலி) அவர்களிடம், குனூத் குறித்து, “அது ருகூவிற்குப் பின்பா? அல்லது கிராஅத் ஓதி முடித்த பின்பா? (எப்போது அதை ஓத வேண்டும்?)” என்று கேட்டார். அதற்கு, “அல்ல; கிராஅத் ஓதி முடித்த பின்புதான்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :

133

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மாதம் (ஃபஜ்ர் தொழுகையில்) ருகூஉவிற்குப் பின்னால் அரபுக் குலத்தார் பலருக்கெதிராகப் பிரார்த்தித்து “குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். அத்தியாயம் :

134

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ரிஅல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ லிஹ்யான் குலத்தார்163 (வந்து தம்முடைய) பகைவர்களுக்கு எதிராக (படை தந்து) உதவும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கோரினர். அப்போது அவர்களுக்கு அன்சாரிகளில் எழுபது பேரை அனுப்பி வைத்து நபி (ஸல்) அவர்கள் உதவினார்கள். அந்தக் காலத்தில் அவர்களை (அந்த எழுபது பேர்களை) நாங்கள் “குர்ராஉ' (குர்ஆனை நன்கறிந்தவர்கள்) என்று பெயரிட்டு அழைத்துவந்தோம். அவர்கள் பகலில் (பிழைப்பிற்காக) விறகு சேகரிப்பவர்களாகவும் இரவில் தொழக்கூடியவர்களாகவும் இருந்துவந்தனர். இவர்கள் (பயணம் செய்து) “பிஃரு மஊனா' எனுமிடத்தை அடைந்தபோது (பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த) அவர்கள், இவர்களை வஞ்சித்துக் கொன்றுவிட்டனர். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியபோது ஒரு மாத காலம் சுப்ஹ் தொழுகையில் அரபுக் குலங்களான ரிஅல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ லிஹ்யான் ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்து “குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். இவர்கள் குறித்து (அருளப்பட்டிருந்த) குர்ஆன் (வசனமொன்றை) ஓதிவந்தோம். பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டோம். அவன் எங்கள் மீது அன்பு கொண்டான்; எங்களை அவன் அன்பு கொள்ளச்செய்தான்' என்று எங்களைப் பற்றி எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” என்பதே அந்த வசனமாகும்.164 அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதகாலம்வரையில் சுப்ஹ் தொழுகையில் அரபுக் குலங்களைச் சேர்ந்த ரிஅல், தக்வான், உஸய்யா, மற்றும் பனூ லிஹ்யான் ஆகிய கூட்டத்தாருக்கு எதிராக “குனூத்' பிரார்த்தனை புரிந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் கலீஃபா பின் கய்யாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அன்சாரிகளான அந்த எழுபது பேரும் பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டார்கள்” என்று காணப்படுகிறது. அத்தியாயம் :

135

அனஸ் (பின் மாலிக் - ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாயார்) உம்மு சுலைம் அவர்களின் சகோதரர், என் தாய் மாமா (ஹராம் பின் மில்ஹான் - ரலி) அவர்களை (குர்ஆனை நன்கறிந்தவர்களான எழுபது) பயணிகளில் ஒருவராக நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். இணைவைப்பாளர்களின் தலைவன் ஆமிர் பின் துஃபைல், பின்வரும் மூன்று விஷயங்களில் ஒன்றைத் தேர்ந் தெடுக்கும்படி (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினான்: கிராமப்புற மக்கள் உங்களுக்குச் சொந்தம்; (அவர்களுக்கு ஆட்சியாளராக நீங்கள் இருங்கள்;) நகர்ப்புற மக்கள் எனக்குச் சொந்தம். (நான் அவர்களுக்கு ஆட்சியாளராக இருப்பேன்.) அல்லது நான் உங்களுக்கு கலீஃபாவாக (பிரதிநிதியாக) இருப்பேன். அல்லது ஆயிரக்கணக்கான ஃகதஃபான் குலத்தாருடன் (வந்து) உங்களோடு போர் தொடுப்பேன்” என்று கூறினான். பிறகு இன்னாரின் தாய் வீட்டில் “ஆமிர்' கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டான். அப்போது அவன், “இன்னாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் இளம் ஒட்டகத்திற்கு ஏற்படும் கொள்ளை நோய் போன்று (எனக்கும்) ஏற்பட்டுவிட்டது. எனவே, எனது குதிரையை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூறினான். பிறகு அவன் தனது குதிரையின் முதுகின் மீதே இறந்துபோனான்.165 (என் தாய்) உம்மு சுலைம் அவர்களின் சகோதரர் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களும், கால் ஊனமுற்றவர் ஒருவரும், இன்னாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரும்166 (நபி (ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் பனூ ஆமிர் குலத்தாரை நோக்கி) நடந்தார்கள். அப்போது ஹராம் அவர்கள் (தம்மிரு சகாக்களை நோக்கி), “நீங்கள் இருவரும் (எனக்கு) அருகிலேயே இருங்கள். நான் பனூ ஆமிர் குலத்தாரிடம் செல்கிறேன். அவர்கள் எனக்குப் பாதுகாப்பளித்தால் நீங்கள் (அப்படியே) இருங்கள். என்னை அவர்கள் கொன்றுவிட்டால் நீங்கள் உங்கள் சகாக்களிடம் சென்று (தெரிவித்து)விடுங்கள்” என்று கூறி னார்கள். (பிறகு, பனூ ஆமிர் குலத்தாரிடம் சென்று, அவர்களை நோக்கி,) “எனக்குப் பாதுகாப்புத் தருவீர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தியைத் தெரிவிக்கிறேன்” என்று கேட்டுவிட்டு அவர்களிடம் (அந்தச் செய்தியைப்) பேசலானார்கள். அப்போது அக்குலத்தார் ஒருவனுக்குச் சைகை செய்ய, அவன் ஹராம் (ரலி) அவர்களுக்குப் பின்னால் வந்து அவர்களை (ஈட்டியால்) குத்திவிட்டான். -அறிவிப்பாளர் ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) கூறுகிறார்கள்: “ஈட்டியால் குத்தி (மறுபக்கம்வரை) செலுத்தினான்' என்று கூறியதாக எண்ணுகிறேன்.- உடனே ஹராம் அவர்கள், “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்). கஅபாவின் அதிபதி மீதாணையாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார்கள். பிறகு அன்னாரின் உயிர் பிரிந்தது. கால் ஊனமுற்றவரைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அந்த ஊனமுற்றவர் மலை உச்சியில் இருந்தார். பிறகு, (இச்சம்பவத்தில் உயிர்நீத்தவர்கள் தொடர்பாக) அல்லாஹ் எங்கள்மீது (ஒரு வசனத்தை) அருளினான். பிறகு அந்த வசனம் (அல்லாஹ்வின் ஆணையின்படி) நீக்கப்பட்டுவிட்டது. “நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டோம். அவன் எங்கள்மீது அன்பு கொண்டான். (அருள் வளங்களை அள்ளித் தந்து) எங்களை அவன் அன்பு கொள்ளச் செய்தான்” (என்பதே அந்த வசனம்). ஆகவே, நபி (ஸல்) அவர்கள், ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக் கும் விரோதமாக நடந்துகொண்ட உஸய்யா ஆகிய குலத்தாருக்கெதிராக முப்பது நாள் அதிகாலை(த் தொழுகை)யில் பிரார்த்தனை புரிந்தார்கள்.167 அத்தியாயம் :

136

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: “பிஃரு மஊனா' சம்பவத்தின்போது, என் தாய்மாமன் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்கள் (ஈட்டியால்) குத்தப்பட்ட சமயத்தில், தமது காயத்திலிருந்து - இதோ இப்படி - இரத்தத்தை அள்ளித் தமது முகத்தின் மீதும் தலையின் மீதும் தெளித்துக்கொண்டு, “கஅபாவின் அதிபதி மீதாணையாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

137

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (மக்கா இறைமறுப்பாளர்கள் கொடுத்த) தொல்லை கடுமையானபோது (மதீனாவுக்கு ஹிஜ்ரத்) புறப்பட அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(சற்று) பொறுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து நீங்கள் ஹிஜ்ரத் செல்ல) தங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (“ஆம்') நான் அதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறிவந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். பின்பு ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், லுஹ்ர் நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அவர்களை அழைத்தார்கள். மேலும், “(அபூபக்ர் அவர்களே! நான் இரகசியம் பேச வேண்டும்) உங்களுடன் இருப்பவர்களை வெளியே செல்லும்படி கூறுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னுடனிருக்கும்) இந்த இருவரும் என்னிரு பெண்மக்கள் (ஆயிஷாவும், அஸ்மாவும்)தான்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து, மக்காவிலிருந்து) புறப்பட எனக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது உங்களுக்குத் தெரிந்ததா?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நானும் உடன் வருவதை விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு, “(ஆம்) உடன் வருவதை விரும்புகிறேன்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் இரண்டு ஒட்டகங்கள் இருக்கின்றன. அவற்றை முன்கூட்டியே (ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்வதற்கென தயார் நிலையில் வைத்துள்ளேன்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பின்பு, அவற்றில் ஒன்றை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அந்த ஒட்டகத்திற்கு “ஜத்ஆ' என்று பெயர். பிறகு இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்று, ஸவ்ர் (மலைக்) குகைக்கு வந்து அதில் அவர்கள் இருவரும் ஒளிந்துகொண்டனர். ஆமிர் பின் ஃபுஹைரா, என் தாய்வழிச் சகோதரர் துஃபைல் பின் அப்தில்லாஹ் பின் சக்பரா அவர்களின் அடிமையாக இருந்தார். மேலும், (என் தந்தை) அபூபக்ர் அவர்களிடம் பால் தரும் ஒட்டகம் ஒன்றிருந்தது. ஆமிர் பின் ஃபுஹைரா அந்த ஒட்டகத்தை மக்காவாசிகளுடன் மதிய வேளையிலும் காலை வேளையிலும் ஓட்டிச் செல்லக் கூடியவராக இருந்தார். காலை நேரத்தில் மக்காவாசிகளுடன் இருக்கும் அவர், இரவின் கடைசி நேரத்தில் நபி (ஸல்) அவர்களிடமும் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் (அவர்களுக்கு ஒட்டகப் பால் தருவதற்காகச்) சென்றுவிடுவார். பிறகு அந்த ஒட்டகத்தை (மேய்ப்பதற்கு) ஓட்டிச் செல்வார். ஆனால், இடையர்களில் யாருக்கும் இது தெரியாது. நபி (ஸல்) அவர்கள் (குகையிலிருந்து அபூபக்ருடன்) புறப்பட்டபோது அவ்விருவருடன் ஆமிர் பின் ஃபுஹைராவும் புறப்பட்டார். மதீனா போய்ச் சேரும்வரையில் அவர்கள் இருவரும் (முறைமாற்றி) ஆமிரைத் தமக்குப்பின் அமர்த்திக்கொண்டனர். (பின்பு) பிஃரு மஊனா நாளில் ஆமிர் பின் ஃபுஹைரா கொல்லப்பட்டார்.168 உர்வா (பின் அஸ்ஸுபைர் -ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிஃரு மஊனாவில் இருந்த (குர்ஆனை நன்கறிந்த)வர்கள் கொல்லப்பட்டு அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கைது செய்யப்பட்டபோது அன்னாரைப் பார்த்து ஆமிர் பின் துஃபைல், கொல்லப்பட்டுக் கிடந்த (உயிர்த் தியாகிகளில்) ஒருவரைச் சுட்டிக்காட்டி, “இவர் யார்?” என்று கேட்டான். அதற்கு அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள், “இவர் ஆமிர் பின் ஃபுஹைரா” என்று கூறினார். அதற்கு ஆமிர் பின் துஃபைல், “இவர் கொல்லப்பட்ட பின்பு இவர் வானத்திற்கு உயர்த்தப்படுவதை நான் கண்டேன். எந்த அளவுக்கென்றால் வானத்தை நான் நோக்கியபோது, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அவர் இருந்தார். பிறகு அவர் (பூமியில்) வைக்கப்பட்டார்” என்று கூறினான். (கொல்லப்பட்ட) அவர்களின் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு (வானவர் ஜிப்ரீல் மூலம்) எட்டியது. அவர்கள் கொல்லப்பட்ட செய்தியைத் தம் தோழர்களுக்கு (பின்வருமாறு) நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்: உங்கள் தோழர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் தம் இறைவனிடம், “இறைவா! நாங்கள் உன்மீது அன்பு கொண்டோம். நீ எங்கள்மீது அன்பு கொண்டாய்; எங்களைப் பற்றிய இந்தச் செய்தியை எங்கள் சகோதரர்களுக்குத் தெரிவித்துவிடுவாயாக!” என்று கூறினர். எனவே இறைவன் அவர்களைப் பற்றிய செய்தியை நமக்கு அறிவித்தான். அறிவிப்பாளர் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) கூறுகிறார்கள்: (பிஃரு மஊனா நிகழ்ச்சி நடந்த) அந்நாளில் அவர்களில் உர்வா பின் அஸ்மா பின் அஸ்ஸல்த் (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். எனவேதான், (ஸுபைர் (ரலி) அவர்களின் மகனாகிய) எனக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. (அன்று) முன்திர் பின் அம்ர் (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். எனவேதான், (என் சகோதரர் முன்திர் பின் ஸுபைருக்கு) “முன்திர்' எனப் பெயரிடப்பட்டது. அத்தியாயம் :

138

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் (தொழுகையில்) ருகூவிற்குப் பின்னால் “குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். (அதில்) ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும், “உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டனர்” என்றும் கூறுவார்கள். அத்தியாயம் :

139

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிஃரு மஊனாவில் தம் தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் முப்பது நாள் அதிகாலை(த் தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, ரிஅல், தக்வான், (பனூ) லிஹ்யான், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்த உஸய்யா ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஆகவே, இறைவன் தன்னுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதிவந்தோம். பின்னர் (இறைவனால் அந்த வசனம்) காலாவதியாக் கப்பட்டது. (அந்த வசனம் இதுதான்:) “நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம். அவன் எங்கள்மீது அன்பு கொண்டான். நாங்களும் அவன்மீது அன்பு கொண் டோம்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்.169 அத்தியாயம் :

140

ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத் (எனும் சிறப்பு துஆ நபிகளார் காலத்தில் இருந்ததா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். அப்போது நான், “ருகூவிற்கு முன்பா? அல்லது பின்பா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ருகூஉவிற்கு முன்புதான்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “தாங்கள் ருகூஉவிற்குப் பின்னால்தான் என்று சொன்னதாக இன்னார் எனக்குத் தெரிவித்தாரே” என்று கேட்டேன். அதற்கு, “அவர் தவறாகக் கூறியிருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு(ம்கூட) ஒரு மாத காலம்தான் குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் “குர்ரா' (குர்ஆனை நன்கறிந்தவர்கள்) என்று கூறப்பட்டுவந்த சிலரை -அவர்கள் எழுபது பேர் ஆவர்- இணைவைப்பவர்கள் சிலரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்களது தரப்பிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே (பரஸ்பர பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த இவர்களது கை ஓங்கிவிட்டது. (அந்த 70 பேரையும் கொன்றுவிட்டனர்.) “எனவேதான், அவர்களுக்கெதிராக ஒரு மாத காலம் ருகூவிற்குப் பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “குனூத்' ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.170 அத்தியாயம் :

141

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது (படை வீரர்களைப் பார்வையிட்டு ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்களிடம் நானாக முன்சென்று(என்னைப் படையில் சேர்த்துக்கொள்ளும் படி) கேட்டேன். அப்போது எனக்குப் பதினான்கு வயது. எனவே, என்னை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. பிறகு (அடுத்த ஆண்டு) அகழ்ப் போரின் போது நானாக முன்சென்று கேட்டேன். அப்போது எனக்கு வயது பதினைந்து. எனவே, என்னை அனுமதித்தார்கள்.172 அத்தியாயம் :

142

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போர் சமயத்தில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தோம். நபித்தோழர்கள் அகழ் தோண்டிக்கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் தோள்மீது மண் சுமந்துகொண்டிருந்தோம். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா!மறுமை வாழ்வு தவிரவேறுவாழ்வு கிடையாது. (அதற்காக உழைக்கும்)முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும்வழங்குவாய் மன்னிப்பு!” என்று (பாடியபடி) கூறினார்கள்.173 அத்தியாயம் :

143

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ் (வெட்டும் பணியைப் பார்வை யிடுவதற்காக அந்த இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது குளிரான காலை நேரத்தில் முஹாஜிர்களும் அன்சாரிகளும் (அகழ்) தோண்டிக்கொண்டிருந்தனர். அவர்களுக்காக அந்தப் பணியைச் செய்வதற்கு அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் படும் பாட்டையும், பசியை யும் கண்டபோது, இறைவா!மறுமை வாழ்வேவாழ்வாகும். (அதற்காக உழைக்கும்அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்வழங்குவாய் மன்னிப்பு! என்று நபி (ஸல்) அவர்கள் (கவிதையாகக்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் அவர்கள், நாங்கள்முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்தோம்!உயிரோடு இருக்கும்வரைஎப்போதும்அறப்போர் புரிவோம்! என்று கூறினர்.174 அத்தியாயம் :

144

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: முஹாஜிர்களும் அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்ட ஆரம்பித்தனர். அப்போது தம் முதுகு களின் மீது மண் எடுத்துச்சென்ற வண்ணம், நாங்கள்முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்தோம்!உயிரோடு இருக்கும்வரைஇஸ்லாத்தில் நிலைப்போம்! என்று (பாடியபடி) கூறிக்கொண்டி ருந்தனர். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் நபி (ஸல்) அவர்கள், இறைவா!மறுமையின் நன்மை தவிரவேறு நன்மை கிடையாது! அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்வழங்குவாய் வளம்! என்று (பாடலிலேயே) கூறினார்கள்.175 அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அகழ் தோண்டிக்கொண்டிருக்கும்) அவர்களுக்கு எனது ஒரு கையளவு தொலி நீக்கப்படாத கோதுமை கொண்டு வரப்பட்டு, கெட்டுப்போன கொழுப்புடன் சேர்த்துச் சமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு முன் வைக்கப்படும். அப்போது அவர்கள் எல்லாரும் பசியுடன் இருப்பார்கள். அந்தக் கெட்டுப்போன கொழுப்பு நாற்றமடித்தபடி தொண்டையிலேயே சிக்கிக்கொள்ளும். அத்தியாயம் :

145

அய்மன் அல்ஹபஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நாங்கள் அகழ்ப் போரின்போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறையொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை.) உடனே (இது பற்றித் தெரிவிக்க) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “இதோ ஒரு பாறை அகழில் காணப்படுகிறது” என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் இறங்கிப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களது வயிற்றில் ஒரு கல் கட்டப் பட்டிருந்தது. (ஏனெனில்,) நாங்கள் மூன்று நாட்கள் எதையும் உண்ணாமóருந் தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (உளி போன்ற) குந்தாலி எடுத்துப் பாறைமீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! வீடுவரை செல்ல என்னை அனுமதியுங்கள்” என்று கேட்டேன். (அவர்கள் எனக்கு அனுமதி வழங்கினார்கள். பிறகு, நான் வீட்டுக்குச் சென்று) என் மனைவி (சுஹைலா பின்த் மஸ்ஊத்) இடம், “நபி (ஸல்) அவர்கள் பசியோடிருப்பதை நான் பார்த்தேன். அதைப் பார்த்துக்கொண்டு என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “என்னிடம் சிறிதளவு கோதுமையும் பெட்டையாட்டுக் குட்டி ஒன்றும் உள்ளது” என்று கூறினாள். உடனே நான் அந்த ஆட்டுக் குட்டியை அறுத்தேன். என் மனைவி கோதுமையை அரைத்தாள். பிறகு நாங்கள் இறைச்சியைச் சட்டியிலிட்டோம். குழைத்த மாவு இளகி (பக்குவ நிலைக்கு) வந்தது. மூன்று கற்களாலான அடுப்புக்குமேல் சட்டியிருந்தது. அது முழுமையாக வெந்துவிடும் நிலையிலிருந்தது. இந்த நிலையில் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். “என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது. அல்லாஹ் வின் தூதரே! நீங்களும் (உங்களுடன்) இன்னும் “ஒருவர்' அல்லது “இருவர்' வாருங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “(உம்மிடம்) எவ்வளவு உணவு இருக்கிறது?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு அதை (அதன் அளவை)க் கூறினேன். “இதுவே அதிகம்; சிறந்ததும் கூட” என்று கூறினார்கள். பிறகு நபி அவர்கள், “நான் வரும்வரையில் (அடுப்பி லிருந்து) சட்டியை இறக்க வேண்டாம்; சட்டியிலிருந்து ரொட்டியையும் இறக்க வேண்டாம் என்று நீர் உம் மனைவியிடம் சொல்வீராக” என்று கூறினார்கள். பிறகு (அங்கிருந்த தம் தோழர்களிடம்) நபி (ஸல்) அவர்கள்,”(எல்லாரும்)எழுங்கள்” என்று கூறினார்கள். உடனே முஹாஜிர்களும் அன்சாரிகளும் எழுந்தனர். நான் என் மனைவியிடம் சென்றபோது, “உனக்குக் கேடுதான்! நபி (ஸல்) அவர்கள் தம்மோடு இருக்கும் முஹாஜிர்களுடனும் அன்சாரிகளுடனும் வருகிறார்களே (என்ன செய்வதெனத் தெரியவில்லையே)!” என்று கூறினேன். உடனே என் மனைவி, “(உணவின் அளவு குறித்து) உங்களிடம் நபியவர்கள் கேட்டார்களா?” என்று வினவினார். அதற்கு நான், “ஆம்' என்று பதிலளித்தேன். (நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் வந்து சேர்ந்து,) “(வீட்டிற்குள்) முண்டியடிக்காமல் நுழையுங்கள்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ரொட்டியைப் பிய்த்து அதன் மீது இறைச்சியை வைத்தார்கள். அதிலிருந்து எடுத்தவுடன் சட்டியையும் அடுப்பையும் மூடிவைத்தார்கள். தம் தோழர்களுக்கு அருகில் அதை வைத்தார்கள். பிறகு (சட்டியிலிருந்து இறைச்சியை) எடுத்து (தம் தோழர்களுக்கு)க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டியைப் பிய்த்தபடியும் (பாத்திரத்திலிருந்து இறைச்சியை) எடுத்து (ரொட்டியின் மீது வைத்து)க் கொடுத்தபடியும் இருந்தார்கள். அவர்கள் வ”ôர உண்டனர். இறுதியில் சிறிதளவு எஞ்சியது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (ஜாபிர் அவர்களின் மனைவியை நோக்கி), “இதை நீங்களும் உண்ணுங்கள்; அன்பளிப்பும் செய்யுங்கள். ஏனெனில், மக்கள் பசியுடன் உள்ளனர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

146

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர் களின் வயிறு (பசியால்) மிகவும் ஒட்டி யிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, “நபி (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப்போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா?” என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டுவந்தார். அதில் ஒரு “ஸாஉ' அளவு தொலிநீக்கப்படாத கோதுமை இருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக்குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தார். நான் (அறுத்து) முடிக்கும்போது அவரும் (அரைத்து) முடித்துவிட்டார். மேலும் அதைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும்போது என் மனைவி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிட வேண்டாம். (“உணவு கொஞ்சம்தான் இருக்கிறது' என்று கூறிவிடுங்கள்)” என்று சொன்னார். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு “ஸாஉ' அளவு தொலி நீக்கப்படாத கோதுமையை அரைத்து வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்” என்று அழைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலில், “அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), “நான் வரும்வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்” என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்துகொண்டிருந்தார்கள். நான் என் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி (ஸல்) அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்துகொண்டார். அப்போது நான், “நீ நபி (ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் அதில் (தமது திருவாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் வளம் கொழிக்கப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து வளம் கொழிக்கப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), “ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழைப்பீராக. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக்கொண்டிருப்பீராக. பாத்திரத்தை இறக்கி வைத்துவிடாதே” என்று கூறினார்கள். அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர். ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவை விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்தமெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும் குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது. மேலும், எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும் குறைந்துவிடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.176 அத்தியாயம் :

147

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: “(பகைவர்கள்) உங்களு(டைய கணவாய்)க்கு மேற்புறமிருந்தும், உங்களு(டைய கணவாய்)க்குக் கீழ்ப்புறமிருந்தும் உங்களிடம் (படையெடுத்து) வந்ததை நினைவுகூருங்கள். அப்போது (உங்கள்) கண்கள் நிலைகுத்தி நின்றன. இதயங்கள் தொண்டைகளை அடைத்துக்கொண்டன” எனும் (33:10ஆவது) இறைவசனம் குறிப்பிடும் சம்பவம் அகழ்ப் போர் தினத்தில் நடந்தது. அத்தியாயம் :

148

பராஉ (பின் ஆஸிப்-ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது (அகழ் வெட்டிக்கொண்டிருந்த சமயத்தில்) நபி (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்துகொண்டிருந்தார்கள். மண் “அவர்களுடைய வயிற்றி(ன் முடியி)னை மறைத்(துப் படிந்)திருந்தது' அல்லது “அவர்களின் வயிற்றில் புழுதி படிந்திருந்தது'. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடியவண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக!அல்லாஹ் (மட்டும்)இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்!தர்மம் செய்திருக்கமாட்டோம்தொழுதும் இருக்கமாட்டோம்! (இறைவா!)எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (எதிரிகள்)எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்.எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள் விரும்பினாலும்இடம் தரமாட்டோம்! “நாங்கள் இடம் தரமாட்டோம்; நாங்கள் இடம் தரமாட்டோம்” என்பதை உரத்த குரலில் கூறினார்கள்.177 அத்தியாயம் :

149

நபி (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் வெற்றிக்குப் பிறகு) கூறினார்கள்: நான் (“ஸபா' என்னும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; “ஆத்' சமுகத்தார் (“தபூர்' எனும்) மேலைக் காற்றால் அழிக்கப்பட்டனர். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.178 அத்தியாயம் :

150

பராஉ (பின் ஆஸிப் -ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அகழ் தோண்டினார்கள். அப்போது அவர்கள் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டி ருந்ததை நான் பார்த்தேன். அவர்களது வயிற்றின் சருமத்தை என்னைவிட்டு மண் மறைத்துவிட்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் நிறைய உரோமம் உடையவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்கள் மண் சுமந்துகொண்டே இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் (ஈரசைச் சீர்) பாடல் வரிகளைப் பாடிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன் (அந்தப் பாடல் இதுதான்:) இறைவா!நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்!தர்மம் செய்திருக்கமாட்டோம்தொழுதும் இருக்கமாட்டோம்! (இறைவா!)எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (எதிரிகள்)எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள் விரும்பினாலும்இடம் தரமாட்டோம்!179 “நபி (ஸல்) அவர்கள், (“நாங்கள் இடம் தரமாட்டோம்' என்ற) கடைசி வார்த்தையை நீட்டியபடி முழக்கமிட்டார்கள்” என்று அறிவிப்பாளர் கூறுகிறார். அத்தியாயம் :

151

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (போரில்) கலந்துகொண்ட முதல்நாள் அகழ்ப் போர் தினமாகும்.180 அத்தியாயம் :

152

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களது கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. நான் அவர்களிடம், “மக்களின் (அரசியல்) விவகாரங்களில் நீங்கள் பார்ப்பது நடந்துகொண்டிருக்கிறது. எனக்கோ இந்த (ஆட்சியதிகார) விஷயத்தில் எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை. (இந்நிலையில், அவர்கள் கூட்டியுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நான் செல்லத்தான் வேண்டுமா?”) என்று கேட்டேன்.181 அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், “(நடந்துகொண்டிருக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்குப்) போய்ச் சேர்வீராக. ஏனெனில், அவர்கள் உம்மை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீர் செல்லாமல் இருப்பதால் மக்களிடையே (மேலும்) பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். நான் செல்லும்வரை என்னை அவர்கள் விடாமல் வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். (நானும் சென்றேன். அங்கே ஒருமித்த கருத்து உருவாகாமல்) மக்கள் பிளவுபட்டிருந்தபோது முஆவியா (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.182 அவர்கள் தமது உரையில் (இப்னு உமர் (ரலி) அவர்களையும் அன்னாருடைய தந்தை உமர் (ரலி) அவர்களையும் கருத்தில் கொண்டு), “எவர் இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் கருத்துச் சொல்ல விரும்புகிறாரோ அவர் தம் தலையைக் காட்டட்டும். ஏனெனில், அவரைவிடவும் அவருடைய தந்தையைவிடவும் நாமே ஆட்சிப் பொறுப்பிற்கு மிகவும் அருகதையானோர்” என்று கூறினார்கள். ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (இப்னு உமர் -ரலி) அவர்களிடம், “நீங்கள் (அப்போது) முஆவியா (ரலி) அவர்களுக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அப்போது நான் எனது துண்டை அவிழ்த்து (உதறிப் போட்டு)க்கொண்டு “(உஹுத் மற்றும் “கன்தக்' போர்களில் முஆவியாவே,) உங்களுடனும் உங்கள் தந்தை (அபூசுஃப்யான்) உடனும் இஸ்லாத்திற்காகப் போரிட்ட (அலீ (ரலி) போன்ற)வரே இந்த (ஆட்சியதிகார) விஷயத்திற்கு உங்களைவிடத் தகுதி வாய்ந்தவர்' என்று சொல்ல நினைத்தேன். ஆயினும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, இரத்தம் சிந்தச் செய்துவிடும் ஒரு வார்த்தையை நான் கூறிவிடுவேனோ; நான் கூறிய வார்த்தைக்கு நான் நினைக்காத கருத்து கற்பிக்கப்பட்டுவிடுமோ என்றெல்லாம் அஞ்சினேன். மேலும், சொர்க்கத்தில் (பொறுமையாளர்களுக்காக) அல்லாஹ் தயாரித்துவைத்துள்ளவற்றை எண்ணிப் பார்த்தேன் (அதனால் அவர்களுக்குப் பதில் கூறவில்லை)” என்று கூறினார்கள். அப்போது நான், “(நல்ல வேளை, நீங்கள் கோப உணர்ச்சிக்கு ஆளாகாமல்) பாதுகாக்கப்பட்டீர்கள்” என்று கூறினேன். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மஹ்மூத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (“கூந்தல்' என்பதைக் குறிக்க “நஸ்வாத்' எனும் சொல்லுக்குப் பதிலாக) “நவ்சாத்' எனும் சொல் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

153

சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போர் (முடிந்து குறைஷியர் தோல்வியுற்றுத் திரும்பிச் சென்ற) தினத்தன்று நபி (ஸல்) அவர்கள், “(இனி போர் தொடுப்பதானால்,) நாமே அவர்களின் மீது போர் தொடுக்க வேண்டும்; அவர்கள் நம்மீது (இனி) போர் தொடுக்க (சக்தி பெற) மாட்டார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

154

சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அகழ்ப் போரில் தோல்வியுற்று எதிர்) அணியினர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பியபோது, “இப்போது (போர் புரிவ தானால்) நாம்தான் அவர்களுடன் போர் புரிய வேண்டும்; (இனி) அவர்கள் நம்முடன் போர் புரிய முடியாது; நாம்தான் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.183 அத்தியாயம் :

155

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “எதிரிகளுடைய வீடுகளையும், அடக்கத் தலங்களையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! ஏனெனில், அவர்கள் சூரியன் மறையும்வரை நடுத்தொழுகை(யான அஸ்ர் தொழுகை) யிலிருந்து நமது கவனத்தைத் திசைதிருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.184 அத்தியாயம் :

156

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை நான் அஸ்ர் தொழ இயலவில்லை” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நானும் இதுவரை அஸ்ர் தொழவில்லை” என்று கூறினார்கள். பின்னர் “புத்ஹான்' எனும் பள்ளத் தாக்கிற்கு நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்தோம். சூரியன் மறைந்தபிறகு அஸ்ரையும் அதன் பின்னர் மஃக்ரிபையும் (எங்களுடன்) நபியவர்கள் தொழுதார்கள்.185 அத்தியாயம் :

157

ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எதிரிகளின் செய்தியை (வேவு பார்த்து)க் கொண்டு வருபவர் யார்?” என்று கேட்டார்கள். ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள், “நான்' என்று (முன்வந்து) கூறினார்கள். மீண்டும், “எதிரிகளின் செய்தியை அறிந்து எம்மிடம் கொண்டு வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்கள், “நான்' என்று கூறினார்கள். பிறகு, “எதிரிகளின் செய்தியை எம்மிடம் கொண்டுவருபவர் யார்?” என்று (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்கள், “நான்' என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்யேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; என்னுடைய (பிரத்யேக) உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள்.186 அத்தியாயம் :

158

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரில் எதிரிகள் தோல்வி யுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும்போது), “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவி புரிந்தான். கூட்டுப் படையினரை அவனே தன்னந்தனியாக வென்றான். எனவே, அவனுக்குப் பின்னால் வேறு எதுவும் (நிலைக்கப்போவது) இல்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :

159

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அகழ்ப் போரின்போது ஒன்றுதிரண்டு தாக்கவந்த எதிர்)கூட்டுப் படையினருக்குக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, “இறைவா! குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்குத் தீர்ப்பவனே! (சத்திய மார்க்கத்தை வேரறுக்க ஒன்றுதிரண்டு படையெடுத்து வந்துள்ள இந்தக்) கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.187 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

160

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறப்போரிலிருந்து, அல்லது ஹஜ்ஜி லிருந்து, அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது முதலில் மூன்று முறை, “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று கூறிவிட்டுப் பிறகு பின்வருமாறு கூறுவார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியன. அவனுக்கே புகழனைத்தும் உரியன. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையோன். நாங்கள் பாவங்களிலிருந்து மீண்டு, பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், வழிபட்டவர்களாகவும், எங்கள் இறைவனுக்குச் சிரம்பணிந்தவர்களாகவும் அவனைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகின்றோம். அல்லாஹ் தனது வாக்குறுதியை மெய்யாக்கிவிட்டான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டுப் படையினரை தோற்கடித்துவிட்டான்.188 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

161

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள், அகழ்ப் போரிலிருந்து திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். (அப்போது வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (வானவர்களாகிய) நாங்கள் அதைக் கீழே வைக்கவில்லை. எனவே, அவர்களை நோக்கிப் புறப்படுங்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எங்கே (போவது)?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, இங்கே!” என்று “பனூ குறைழா' (என்னும் யூதக்) குலத்தாரை (அவர்கள் வசிக்குமிடம்) நோக்கிச் சைகை காட்டினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.190 அத்தியாயம் :

162

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் நபி (ஸல்) அவர்கள் “பனூ குறைழா' குலத்தாரை நோக்கிச் சென்றபோது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனிவந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போதுகூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.191 அத்தியாயம் :

163

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி (ஸல்) அவர்கள், “பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்களில்) எவரும் அஸ்ர் தொழுகையைத் தொழ வேண்டாம்” என்று கூறினார்கள்.192 வழியிலேயே அஸ்ர் (தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், “பனூ குறைழா குலத்தாரை அடையாத வரை நாம் அஸ்ர் தொழ வேண்டாம்” என்று கூறினர். வேறுசிலர், “(தொழுகை நேரம் தவறிப்போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை; (“வேகமாக அங்கு போய்ச்சேருங்கள்' என்ற கருத்தில்தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.193 அத்தியாயம் :

164

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா மற்றும் பனுந் நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும்வரை, நபி (ஸல்) அவர்களுக்கு, (அன்சாரிகள்) சிலர் பேரீச்ச மரங்களை(ப் பயன்படுத்திக்கொள்ளும்படி அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தனர். (பனூ குறைழா, பனுந் நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்ட பின்னர் அன்சாரிகளிடமே அந்த மரங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.194 (அந்தச் சமயத்தில்) என் குடும்பத்தார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களுக்குத் தாங்கள் கொடுத்திருந்த மரங்கள் அனைத்தையும், அல்லது அவற்றில் சிலவற்றை (திரும்பத் தரும்படி) கேட்குமாறு எனக்கு உத்தரவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் அந்த மரங்களை (பராமரிக்கும் பொறுப்பைத் தம் வளர்ப்புத் தாய்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் கொடுத்திருந்தார்கள். (நான் அந்த மரங்களை நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தபோது அங்கு) உம்மு அய்மன் (ரலி) அவர்கள் வந்தார்கள். எனது கழுத்தின் மீது துணியைப் போட்டு, “முடியாது! யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு (அவற்றைத்) தரமாட்டார் கள். (ஏனெனில்,) அவற்றை அவர்கள் எனக்கு (உரிமையாக்கித்) தந்துவிட்டார்கள்” என்றோ அல்லது இது போல வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (உம்மு அய்மன் (ரலி) அவர்களைப் பார்த்து அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அதற்குப் பகரமாக) உங்களுக்கு இந்த அளவு தருகிறேன்” என்று கூறினார்கள். (அப்போது) உம்மு அய்மன் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த அளவு நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தரும்வரை (அவற்றை உங்க ளிடம் திருப்பித் தர) முடியாது” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) அனஸ் (ரலி) அவர்கள், “அது போன்று பத்து மடங்கு (தருவதாக' நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ) அல்லது அதுபோன்ற வேறொரு வார்த்தையைக் கூறியதாகவோ நான் எண்ணுகிறேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

165

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (யூதர்களான) “பனூ குறைழா' குலத்தார் (கைபரிலிருந்த தம் கோட்டையிலிருந்து)இறங்கிவந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சஅத் பின் முஆத் (ரó) அவர்களுக்கு ஆளனுப்பிட, அன்னார் கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபிகளார் தாற்காலிகமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும், நபி (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவரை' அல்லது “உங்களில் சிறந்தவரை' நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கிவிடு)ங்கள்” என்று அன்சாரிகளிடம் சொன்னார்கள். பிறகு, “(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பிற்கு (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறீர்கள்?)” என்று கேட்டார்கள். சஅத் (ரலி) அவர்கள், “இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்றுவிட வேண்டும்; இவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் நீங்கள் கைது செய்ய வேண்டும் என்று நான் தீர்ப்பளிக்கிறேன்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்” அல்லது “அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்” என்று சொன்னார்கள்.195 அத்தியாயம் :

166

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அகழ்ப் போரின்போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அன்னாரது கை நரம்பில் குறைஷியரில் ஒருவனான ஹிப்பான் பின் அல்அரிகா எனப்படுபவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டுவந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலையிலிருந்த புழுதியைத் தட்டிய வண்ணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுதத்தைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு “எங்கே?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது “பனூ குறைழா' குலத்தார் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள். (பலநாள் முற்றுகைக்குப் பின்னர்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு இறங்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், தீர்ப்பை சஅத் பின் முஆத் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். சஅத் (ரலி) அவர்கள், “பனூ குறைழாக்களில் போர் புரியும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் கைது செய்யப்பட வேண்டும்; அவர்களின் சொத்துகள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்” என்று கூறினார்கள். (காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந் தோடிக்கொண்டிருந்த சமயம்) சஅத் (ரலி) அவர்கள், “இறைவா! உன்னுடைய தூதரை நம்பிக்கை கொள்ளாமல் அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர் புரிவதே மற்ற எதையும்விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் (குறைஷியரான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்று நான் எண்ணுகிறேன். குறைஷியருடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச்செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் எனது காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்குமரணத்தை அளித்துவிடு” என்று பிரார்த்தித்தார்கள். அன்னாரது நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களது கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த “பனூ ஃகிபார்' குலத்தாருக்கு சஅத் அவர்களின் கூடாரத்திலிருந்து தம்மை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம்தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள், “கூடாரவாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன? என்று கேட்டுக்கொண்டு, அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தாலேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் அன்னார்மீது அன்பு கொள்வானாக!196 அத்தியாயம் :

167

பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள், (“பனூ குறைழா' நாளில் கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், “இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்” என்று கூறினார்கள்.197 அத்தியாயம் :

168

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பனூ குறைழா' போரின்போது ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களை நோக்கி, இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக் கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

169

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் செய்த) ஏழாவது போரான “தாத்துர் ரிக்காஉ' போரின்போது தம் தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் அச்சநேரத் தொழுகையைத் தொழுதார்கள்.201 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் அச்ச நேரத் தொழுகையை “தூ கரத்' எனும் இடத்தில் தொழுதார்கள்.202 அத்தியாயம் :

170

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: முஹாரிப் மற்றும் ஸஅலபா போரின்போது203 நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுதார்கள். அத்தியாயம் :

171

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (நஜ்த் பகுதி “ஃகதஃபான்' குலத்தார் வசித்துவந்த) “நக்ல்' எனுமிடத்திற்கு “தாத்துர் ரிக்காஉ' போருக்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது “ஃகதஃபான்' குலத்தாரின் ஒரு கூட்டத்தைச் சந்தித்தார்கள். மக்களில் சிலர் சிலரைக் கண்டு அஞ்சினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களுடன்) அச்சநேரத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். சலமா பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களுடன் நான் “அல்கரத்' போரில் கலந்துகொண்டேன். அத்தியாயம் :

172

அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம்தான் இருந்தது. அதில் நாங்கள் முறைவைத்துப் பயணம் செய்தோம். (வாகனம் கிடைக்காமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்துவிட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்துவிட்டன. அப்போது நாங்கள் எங்களுடைய கால்களில் கிழிந்த துணிகளைச் சுற்றிக்கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு கிழிந்த துணிகளை நாங்கள் கால்களில் கட்டியிருந்ததால் தான் அந்தப் போருக்கு “தாத்துர் ரிக்காஉ' (ஒட்டுத் துணிப் போர்) என்று பெயர் சூட்டப்பட்டது. அறிவிப்பாளர் அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை அறிவித்தபின் அபூமூசா (ரலி) அவர்கள், தாம் இதை அறிவித்ததைத் தாமே விரும்பாமல், “நான் இதை (வெளியே) சொல்ல விரும்பாமல்தான் இருந்தேன்” என்றார்கள். தமது நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அன்னார் விரும்பவில்லைபோலும். அத்தியாயம் :

173

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “தாத்துர் ரிக்காஉ' போரில் கலந்துகொண்ட (நபித்தோழர்களில்) ஒருவர் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அப்போரின்போது) அச்சநேரத் தொழுகையைத் தொழுதார்கள். (எங்களில்) ஓர் அணியினர் நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) அணிவகுத்தனர். இன்னோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்தனர்.அப்போது நபி (ஸல்) அவர்கள், தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுவித்துவிட்டு அப்படியே நின்றுகொண்டார்கள். (நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையை நிறைவேற் றிய) அந்த அணியினர் தமக்கு (மீதியிருந்த இன்னொரு ரக்அத்தைத் தனியாகப்) பூர்த்தி செய்துகொண்டு திரும்பிச் சென்று, எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்து நின்று கொண்டார்கள். பிறகு (அதுவரை எதிரிகளுக்கு எதிரே நின்றுகொண்டிருந்த) இன்னோர் அணியினர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் மீதியிருந்த ஒரு ரக்அத்தை இவர்களுக்குத் தொழுவித்துவிட்டு (அப்படியே) அமர்ந்து கொண்டிருந்தார்கள். (இரண்டாவது அணியினர்) தமக்கு (மீதியிருந்த ஒரு ரக்அத்தைப்) பூர்த்தி செய்துகொண்டனர். பிறகு அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள். இதை ஸாலிஹ் பின் கவ்வாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

174

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நஜ்த் பகுதியின்) “நக்ல்' எனுமிடத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு ஜாபிர் (ரலி) அவர்கள் அச்சநேரத் தொழுகையைப் பற்றி (முழுமையாக) அறிவித்தார்கள். இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அது (ஸாலிஹ் பின் கவ்வாத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் வந்துள்ள அச்சநேரத் தொழுகை முறை)தான் அச்சநேரத் தொழுகை பற்றி நான் கேள்விப்பட்ட திலேயே மிகச் சிறந்ததாகும்.204 காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அச்சநேரத் தொழுகையை “பனூ அன்மார்' போரின் போது தொழுதார்கள்.205 அத்தியாயம் :

175

சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அச்சநேரத் தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி இமாமும் அவருடன் அவர்களில் ஓர் அணியினரும் நிற்பர். இன்னோர் அணியினர் எதிரிகளை நோக்கித் தம் முகங்கள் இருக்கும் வண்ணம் (தொழாமல்) நிற்பர். அப்போது இமாம் தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுவிப்பார். பிறகு, அவர்கள் எழுந்து தமக்கு (மீதியிருக்கும்) ஒரு ரக்அத்தை அந்த இடத்திலேயே இரண்டு சஜ்தாக்கள் செய்து பூர்த்தி செய்துகொள்வர். பிறகு இவர்கள் மற்றோர் அணியினரின் இடத்திற்குச் சென்றுவிடுவர். அந்த (இரண்டாவது) அணியினர் (இமாமிடம்) வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து இன்னொரு ரக்அத்தை இமாம் தொழுவார். இப்போது இமாமுக்கு இரண்டு ரக்அத்துகள் ஆகிவிடும். பிறகு இவர்கள் (மீதியிருக்கும் ஒரு ரக்அத்தைத் தனியாக எழுந்து) ருகூஉ செய்து இரண்டு சஜ்தாக்கள் செய்து தொழுவார்கள். இதை ஸாலிஹ் பின் கவ்வாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். -இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் ஸாலிஹ் பின் கவ்வாத் (ரஹ்) அவர்களின் (அச்சநேரத் தொழுகை பற்றிய நபிமொழி) அறிவிப்பு வந்துள்ளது. -சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து ஸாலிஹ் பின் கவ்வாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் (அச்சநேரத் தொழுகை பற்றிய) அறிவிப்பு இன்னோர் அறிவிப்பாளர்தொடரிலும் வருகிறது. அத்தியாயம் :

176

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (“தாத்துர் ரிக்காஉ') போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். அப்போது நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டு அவர்களுக்காக அணிவகுத்தோம்.206 அத்தியாயம் :

177

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு அணிகளில் ஓரணியினருக்கு (அச்சநேரத் தொழுகையைத்) தொழுவித் தார்கள். (அப்போது) மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு முன்னால் (நின்றுகொண்டு) இருந்தனர். பிறகு முதல் அணியினர் திரும்பிச் சென்று தம் தோழர்கள் (இரண் டாம் அணியினர்) நின்றுகொண்டிருந்த இடத்தில் (எதிரிகளுக்கு முன்னால்) நின்றுகொண்டனர். பிறகு இரண்டாம் அணியினர் (தொழுகைக்கு) வந்தனர். அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் சேர்ந்து ஒரு ரக்அத் தொழுதுவிட்டு, அவர்கள் (தொழுகையில்) இருக்க நபியவர்கள் சலாம் கொடுத்தார்கள். பிறகு இந்த அணியினர் எழுந்து (மீதியிருந்த) தமது ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர். முதல் அணியினரும் எழுந்து (மீதியிருந்த) தம்முடைய ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர். அத்தியாயம் :

178

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி ஒரு போருக்குச் சென்றேன். அத்தியாயம் :

179

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாத்துர் ரிக்காஉ) போருக்காகச் சென்றேன். (போரை முடித்துக்கொண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பிக்கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வுகொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தமது வாளை அந்த மரத்தில் தொங்க விட்டார்கள். அப்போது நாங்கள் சற்று கண்ணயர்ந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்துகொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது இவர் எனது வாளை (எனக்கெதிராக) உருவிக்கொண்டார். அந்த வாள் உருவப்பட்டு இவரது கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், “என்னிட மிருந்து உன்னைக் காப்பவர் யார்?' என்று கேட்டார். நான், “அல்லாஹ்' என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்” என்று கூறினார்கள். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. (மன்னித்து விட்டுவிட்டார்கள்.)207 அத்தியாயம் :

180

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: “தாத்துர் ரிகாஉ' போரில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு (போரை முடித்துக்கொண்டு) நாங்கள் நிழல் நிறைந்த ஒரு மரத்தினருகே வந்தோம். அந்த மரத்தை நபி (ஸல்) அவர்களு(டைய மதிய ஓய்வு)க்காக விட்டுவிட்டோம். அப்போது இணைவைப்பாளர்களில் ஒருவர் வந்தார். நபி (ஸல்) அவர்களின் வாள் அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டி ருந்தது. உடனே அதை அவர் உருவிக் கொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி, “எனக்கு நீர் அஞ்சுகிறீரா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (கொஞ்சமும் அஞ்சாமல்) “இல்லை” என்று பதிலளித்தார்கள். அவர், “இப்போது என்னிடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்' என்று பதிலளித்தார்கள். அப்போது நபித்தோழர்கள் அவரைக் கண்டித்தார்கள். பிறகு தொழுகைக்காக “இகாமத்' சொல்லப்பட்டது. அப்போது (தம் தோழர்களில்) ஓர் அணியினருக்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் (அச்சநேரத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு இந்த அணியினர் பின்னால் விலகிக்கொள்ளவே (எதிரிகளைக் கண்காணித்துக்கொண்டிருந்த அணியினர் வந்தனர்.) அந்த அணியினருக்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு ரக்அத்களும், மக்களுக்கு இரண்டு ரக்அத்களும் ஆயின. அந்த மனிதரின் பெயர் “ஃகவ்ரஸ் பின் அல்ஹாரிஸ்' என்றும், இப்போரில் “முஹாரிப் கஸஃபா' கூட்டத்தாரை நபி (ஸல்) அவர்கள் எதிர்கொண்டார்கள் என்றும் அபூஅவானா (ரஹ்) அவர்களிட மிருந்து முசத்தத் (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :

181

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (நஜ்த் பகுதியிலுள்ள) “நக்ல்' எனுமிடத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் அச்சநேரத் தொழுகையைத் தொழுவித்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களுடன் நஜ்த் போரின் போது அச்சநேரத் தொழுகையைத் தொழுதேன்” என்று கூறுகிறார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் “கைபர்' போரின்போதுதான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.208 அத்தியாயம் :

182

இப்னு முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்துகொண்டு “அஸ்ல்' (புணர்ச்சி இடைமுறிப்பு) பற்றிக் கேட்டேன்.210 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பனுல் முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது, அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. மேலும், (அந்தப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும்போது) “அஸ்ல்' செய்ய நினைத்தோம். (ஆனால்,) நம்மிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க, அவர்களிடம் கேட்பதற்குமுன் நாம் “அஸ்ல்' செய்வதா?” என்று (எங்களுக்குள்) பேசிக்கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு, “நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள்வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.211 அத்தியாயம் :

183

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (“தாத்துர் ரிக்காஉ' எனும்) நஜ்த் போருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். (போரை முடித்துக்கொண்டு திரும்பிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே நிழல் பெற்று ஓய்வெடுத்தார்கள். தமது வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். மக்கள் (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே பிரிந்து சென்று நிழல் பெற்று (ஓய்வெடுத்துக்)கொண்டிருந்தனர். நாங்கள் இவ்வாறு இருந்துகொண்டி ருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் (அவர்களிடம்) வந்தோம். அப்போது ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்துகொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது என்னிடம் இவர் வந்து எனது வாளை உருவியெடுத்துக்கொண்டார். உடனே நான் விழித்துக்கொண்டேன். எனது வாளை உருவிய நிலையில் எனது தலைமாட்டில் இவர் நின்றுகொண்டிருந்தார். “என்னிடமிருந்து உங்களைக் காப்பது யார்?” என்று கேட்டார். நான், “அல்லாஹ்' என்று பதிலளித்தேன். உடனே அவர் வாளை உறையிலிட்டார். பிறகு அவர் அமர்ந்துகொண்டார். அவர் இவர்தான்” என்று கூறினார்கள். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்காமல் (மன்னித்து) விட்டார்கள்.212 அத்தியாயம் :

184

ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “அன்மார்' போரின்போது தமது வாகனத்தின் மீதமர்ந்தவாறு கிழக்குத் திசையை நோக்கி கூடுதலானத் தொழுகையைத் தொழுவதை நான் பார்த்தேன்.214 அத்தியாயம் :

185

இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் சொன்னதைப் பற்றி அறிவித்தனர். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதி யினை அறிவித்தனர். அவர்களில் சிலர், சிலரைவிட இந்தச் சம்பவத்தை நன்கு நினைவில் நிறுத்தியவர்களாகவும், அதை எடுத்துரைப்பதில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். ஆயிஷா (ரலி) அவர்களின் (இச் சம்பவம்) தொடர்பாக ஒவ்வொருவரும் அறிவித்த செய்தியை நான் மனனமிட்டுக் கொண்டேன். இவர்களில் சிலர் சிலரை விட இந்தச் சம்பவத்தை நன்கு மனனமிட்டவர்களாக இருந்தாலும் ஒருவரின் அறிவிப்பு மற்றவரின் அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் பயணம் புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (யாரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் மேற்கொண்ட (“பனுல் முஸ்தலிக்' என்ற) ஓர் அறப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய “பர்தா' எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்பட்டும் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்பட்டும் வந்தேன். நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் அந்தப் போர் முடிந்து திரும்பிக் கொண்டி ருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கியபோது, இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். அப்போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக்கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) “ழஃபாரி' நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து)விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று எனது மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக்கொண்டிருந்தது (நான் விரைவில் திரும்பிச் சென்று படையினருடன் சேர விடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைக்கும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு, அதைச் சுமந்து சென்று, நான் பயணம் செய்து வந்த என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவையே அவர்கள் உண்பார்கள். ஆகவே சிவிகையைத் தூக்கியபோதும், அதைச் சுமந்தபோதும் அது கனமில்லாமல் இருந்ததை (சம்பந்தப்பட்ட) மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் இளம் வயது பெண்ணாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்க லானார்கள். படையினர் சென்ற பிறகு, (தொலைந்து போன) எனது மாலை கிடைத்துவிட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.) அங்கு அவர்களில் அழைப்பவரோ பதில் கொடுப்பவரோ எவரும் இருக்கவில்லை. நான் ஏற்கெனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிப்போ(ய் அங்கு அமரலா)னேன். நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு படையினர் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மிகைத்துவிட, நான் தூங்கிவிட்டேன். படை சென்றதற்குப் பின்னால் (படையினர் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச்செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத்தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் (அங்கே) தூங்கிக்கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். பர்தா சட்டம் அருளப்பெறுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். ஆகவே, என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்துகொண்டார். அவர், என்னை அறிந்துகொண்டு, “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே எனது முகத்திரையால் என் முகத்தை மறைத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர், “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்று கூறியதைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து கேட்கவுமில்லை. பிறகு, அவர் விரைவாகத் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக்கொள்ள வசதியாக) அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் எழுந்து சென்று அதில் ஏறிக்கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக்கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அப்போது அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்டிருந்தார்கள். (இப்போது எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்துபோனார்கள். என்மீது அவதூறு (பிரசாரம்) செய்வதில் பெரும் பங்கு வகித்துக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தப் பழிச்சொல் பரப்பப்பட்டும், அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலிடம் பேசப்பட்டும் வந்தது. அப்போது அவன் அதை ஏற்று, காது தாழ்த்திக் கேட்டு, அதை (மேன்மேலும்) கிளறிவிட்டுக்கொண்டிருந்தான்- என்று எனக்குச் செய்தி கிடைத்தது. அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் மேலும் கூறுகிறார்கள்: அவதூறு கூறியவர்(களான முஸ்லிம்)களில் ஹஸ்ஸான் பின் ஸாபித், மிஸ்த்தஹ் பின் உஸாஸா, ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ஆகியோரைத் தவிர மற்றச் சிலரின் பெயர்கள் எனக்குத் தெரியாது. ஆயினும் அல்லாஹ் (தனது வேதத்தில், “எவர் அவதூறு கற்பித்தார்களோ நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு குழுவினரே” என்று 4:11ஆம் வசனத்தில்) கூறியதுபோல அவர்கள் ஒரு குழுவினர் ஆவர். அ(ந்தச் சம்பவத்)தில் பெரும் பங்கு வகித்தவன் (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் ஆவான். தமக்கு முன்னால் ஹஸ்ஸான் அவர்கள் ஏசப்படுவதை ஆயிஷா (ரலி) அவர்கள் விரும்பாதவர்களாக இருந்தார்கள். மேலும், “அந்த ஹஸ்ஸான் அவர்கள்தான் இந்தக் கவிதையைச் சொன்னவர்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவார்கள்: “(பகைவர்களே!) என் தந்தையும், என் தந்தையின் தந்தையும், எனது மானமும்உங்களிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களின் மானத்தைக் காக்கும் கேடய மாகும்” (தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான் நோயுற்றுவிட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் நோயுறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது) அவர்களிடம் காண முடியாமல்போனது, எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார் கள்; பிறகு, “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்பார்கள்; பிறகு போய்விடுவார்கள். அவ்வளவுதான். இதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டுவந்த) அந்தத் தீய சொல்லில் ஒரு சிறிதும், நான் நோயிலிருந்து குணமடைந்து வெளியே செல்லும்வரை எனக்குத் தெரியாது. அப்போது நான் மிஸ்த்தஹின் தாயாருடன் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திவந்த “மனாஸிஉ' (எனப்படும் புறநகர்ப் பகுதியை) நோக்கிச் சென்றோம்.நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்றுகொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் முந்தைய அரபியரின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதை நாங்கள் தொந்தரவாகக் கருதிவந்தோம். நானும் உம்மு மிஸ்த்தஹும் சென்றோம். -அவர் அபூருஹ்ம் பின் முத்தலிப் பின் அப்தி மனாஃப் அவர் களின் மகளாவார். அபூபக்ர் (ரலி) அவர் களின் தாயின் சகோதரியான (ராயித்தா) பின்த் ஸக்ர் பின் ஆமிர்தான் உம்மு மிஸ்த்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்த்தஹின் மகனே, மிஸ்த்தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அல்முத்தலிப் ஆவார். (இத்தகைய) உம்மு மிஸ்த்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக்கொண்டு என் வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்த்தஹ் தன் ஆடையில் இடறிக்கொண்டார். உடனே அவர், “மிஸ்த்தஹ் நாசமாகட்டும்” என்று (தன் மகனைச் சபித்தவராகக்) கூறினார். நான், “மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்” என்று கூறினேன். அதற்கு அவர், “அம்மா! அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டார். “என்ன சொன்னார்?” என்று நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் இல்லத்திற்குத் திரும்பிவந்தபோது (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து சலாம் கூறிவிட்டு “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அப்போது நான், “என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?” என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து, என்மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். (நான் என் தாய் வீட்டிற்குச் சென்றேன்) என் தாயாரிடம், “அம்மா! மக்கள்(என்னைப் பற்றி) என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று கேட்டேன். என் தாயார், “அன்பு மகளே! உன்மீது (இந்த விஷயத் தைப்) பெரிதுபடுத்திக்கொள்ளாதே! அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்தி கள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்” என்று கூறினார்கள். நான், “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?” என்று (வியப்புடன்) கேட்டேன். அன்றிரவு காலைவரை அழுதேன். என் கண்ணீரும் ஓயவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்தபோதும் அழுதேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் அவர்களையும், உசாமா பின் ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வேதஅறிவிப்பு (வஹீ) (தாற்காலிகமாக) நின்றுபோயிருந்தது. உசாமா அவர்களோ, நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும், நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் குடும்பத்தார் மீது இருந்த (பாசத்)தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். “(அல்லாஹ்வின் தூதரே!) தங்களுடைய துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை” என்று உசாமா கூறினார்கள். அலீ அவர்களோ (நபி (ஸல்) அவர்களின் மன வேதனையைக் குறைக்கும் விதமாக), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா நீங்கலாகப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண்ணை (பரீராவை)க் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, “பரீராவே! நீ (ஆயிஷாவிடம்) உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, “தங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (கவனக் குறைவான) இளவயதுப் பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் (மேடையில்) ஏறி நின்று அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலைத் தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஸ்லிம்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனை அளித்த ஒரு மனிதனைத் தண்டிக்க எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நல்லதையே நான் அறிவேன். அவர்கள் (அவதூறு கற்பித்த நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். என்னோடுதான் அவர் என் வீட்டாரிடம் வந்திருக்கிறார் (தனியாக வந்ததில்லை)” என்று கூறினார்கள். உடனே பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! அவனை தண்டிக்கத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனதுகழுத்தைத் துண்டித்துவிடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்” என்று கூறினார்கள். உடனே, “கஸ்ரஜ்' குலத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்தார். அவர் “கஸ்ரஜ்' குலத்தின் தலைவரான சஅத் பின் உபாதா ஆவார். ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களின் தாயார், இவரது குடும்பத்தில் ஒருவரும், இவருடைய தந்தையின் சகோதரரின் மகளும் ஆவார். இவர் அதற்குமுன் நல்ல மனிதராகத்தான் இருந்தார். ஆயினும், குலமாச்சரியம் அவரை உசுப்பிவிடவே சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பார்த்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது. அவன் உமது குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவன் கொல்லப்படுவதை நீர் விரும்பமாட்டீர்” என்று கூறினார். உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, - இவர், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். - சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம், “நீர்தான் தவறாகப் பேசினீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகின்றீர்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேடைமீது நின்றுகொண்டிருக்க அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிடத் தயாராகிவிட்டனர்.நபி (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு தாமும் மௌனமாகிவிட்டார்கள். அன்றைய நாள் முழுவதும் நான் அழுதுகொண்டிருந்தேன். என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க), என் ஈரல் பிளந்துவிடுமோ என்றெண்ணும் அளவுக்கு அழுதிருந்தேன். என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக் கமும் தழுவவில்லை. என் தாய் தந்தையர் என் அருகேயிருக்க நான் அழுதுகொண்டிருந்தபோது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்துகொண்டாள். நாங்கள் இவ்வாறு இருந்துகொண்டிருக்கும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு அமர்ந்துகொண்டார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாத காலம்வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்துவந்தார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனைப் புகழ்ந்துவிட்டு, “இறைவாழ்த்துக்குப்பின்! ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னை குற்றமற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு. ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்தபோது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை. நான் என் தந்தையார் (அபூபக்ர் (ரலி) அவர்கள்) இடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு என் சார்பாகப் பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு (என் சார்பாகப்) பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தாயார், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், “நானோ வயது குறைந்த இளம் பெண் ஆவேன். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவளும் ஆவேன். இந்நிலையில், அல்லாஹ்வின் மீதாணையாக! (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட) இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனத்தில் பதிந்துபோய், அதை உண்மையென்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே, நான் குற்றமற்றவள் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப்போவதில்லை; நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால் -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி (யஅகூப்) அலை) அவர்களையே உவமையாகக் கருதுகிறேன். (அதாவது:) “(இதைச்) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும்.” (குர்ஆன் 12:18)” என்று கூறினேன். “நான் அப்போது குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்; (அந்த) அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான்” என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக்கொண்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! என் விஷயத்தில் (மக்களால்) ஓதப்படுகின்ற வேத அறிவிப்பை (குர்ஆனில்) அல்லாஹ் அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் பேசுகின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னை குற்றமற்றவள் என்று உணர்த்தும் ஏதேனுமொரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள் என்றுதான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது (திருக்குர்ஆன் வசனங்கள்) அருளப்பெறத் தொடங்கிவிட்டன. உடனே (வேத அறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து சின்னஞ்சிறு முத்துகளைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அவர்கள்மீது அருளப்பெற்ற (இறைச்)சொற்களின் பாரத்தினால்தான் (அவர்களுக்கு வியர்வை வழியும் அளவுக்குச் சிரம நிலை) ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக்கொண்டே பேசிய முதல் வார்த்தையாக, “ஆயிஷா! அல்லாஹ் உன்னைக் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்” என்று கூறினார்கள். உடனே என் தாயார், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து செல்” என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், “மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்லமாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்து)வேன்” என்றேன். (அப்போது) அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் (24 : 11-20) பத்து வசனங்களை அருளியிருந் தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவு படுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்த்தஹுக்காக நான் சிறிதும் உதவி செய்யமாட்டேன்” என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள் - மிஸ்த்தஹ் பின் உஸாஸா, தம் உறவினர் என்பதாலும் அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவுக்குக் கொடுத்துவந்தார்கள் - அப்போது அல்லாஹ், “உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தம்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதை மன்னித்து (பிழைகளை)ப் பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவான்” (24:22) எனும்வசனத்தை அருளினான். அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்த்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவுக்காக வழங்கி வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக் கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்தமாட்டேன்” என்றும் கூறினார்கள். (குர்ஆனில் எனது கற்பொழுக்கம் பற்றிய வசனங்கள் அருளப்பெறுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள். “ஸைனபே! “நீ (ஆயிஷாவைக் குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?' அல்லது “(அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?' என்று (ஸைனபிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழிசுமத்தாமல்) நான் பாதுகாத்துவைத்திருக்கிறேன். அல்லாஹ் வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்” என்று பதிலளித்தார்கள். ஸைனப் அவர்கள்தான், நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், தார்மீகப் பண்பால் அவரை அல்லாஹ் பாதுகாத்திருந்தான்.216 ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா (என்னுடன்) போரிட லானார். (என் விஷயத்தில் அவதூறு பேசி) அழிந்துபோனவர்களுடன் அவரும் அழிந்துபோனார். அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதுதான் அந்த (நால்வர்) குழுவிடமிருந்து எனக்குக் கிடைத்த அறிவிப்பாகும். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! எவரைக் குறித்து (அந்தப் பழிச்சொல்) கூறப்பட்டதோ அந்த மனிதர் (ஸஃப்வான், தம்முடைய அன்னையான என்னுடன் தம்மை இணைத்து அவதூறு பேசுவதைக் கேட்டு), “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்); எனது உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் ஒருபோதும் எந்த (அந்நியப்) பெண்ணின் மறைவிடத்தையும் திறந்ததில்லை” என்று கூறினார். அதன் பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார். இதை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :

186

இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அலீ (ரலி) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள்மீது அவதூறு கூறியவர்களில் ஒருவர் என்று உங்களுக்குச் செய்தி கிடைத்ததா?” என என்னிடம் வலீத் பின் அப்தில் மலிக் கேட்டார். நான், “இல்லை; (அலீ (ரலி) அவர்கள் அவ்வாறு கூறவில்லை.) மாறாக, “தம் விஷயத்தில் அலீ (ரலி) அவர்கள் மௌனம் சாதித்தார்கள்' என ஆயிஷா (ரலி) அவர்கள் தங்களிடம் தெரிவித்தார்கள் என்று உங்கள் குலத்தைச் சேர்ந்த அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம் கூறினர்” என்று பதிலளித்தேன். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் (மற்ற அறிவிப்பாளர்கள் இன்னும் இது பற்றி அதிக விளக்கம் கேட்டபோது) அவர்கள் பதிலளிக்கவில்லை. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்காத “முஸல்லிமன்' (அலீ (ரலி) அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்) என்ற வார்த்தையையே வலீத் அவர்களுக்கு ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பதிலாகக் கூறினார்கள். (வேறெதையும் கூடுதலாகக் கூறவில்லை.) அத்தியாயம் :

187

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நானும் ஆயிஷாவும் உட்கார்ந்திருந் தோம். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், “இன்னாரை அல்லாஹ் நிந்திக்கட்டும். இன்னாரை அல்லாஹ் நிந்திக்கட்டும்” என்று கூறியபடி வந்தாள். நான், “ஏன் (இப்படிச் சொல்கிறாய்?)” என்று கேட்டேன். அதற்கு அவள், “(அவதூறுச்) செய்தியைப் பேசியவர்களில் என் மகனும் ஒருவன்” என்று பதிலளித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அவள், “இன்னின்னவாறு பேசப்படுகின்றது” என்றாள். ஆயிஷா (ரலி) அவர்கள், “இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்களா?” என்று கேட்டார்கள். அவள், “ஆம் (செவியுற்றார்கள்)' என்று பதில் சொன்னாள். பிறகு, “(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் செவியுற் றார்களா?” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். இதற்கும் அவள், “ஆம்' என்றாள். உடனே, ஆயிஷா (ரலி) அவர்கள் மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார்கள். பிறகு குளிர்காய்ச்சலுடன்தான் மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். நான் ஆயிஷாவின் மீது ஆடையொன்றைப் போர்த்தி மூடிவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, “இவருக்கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள் ஒருவேளை இவரைப் பற்றிப் பேசப்பட்டு வரும் செய்தியின் காரணத்தால் (காய்ச்சல் ஏற்பட்டு) இருக்கலாம்” என்று சொன்னார்கள். நான், “ஆம்' என்றேன். உடனே ஆயிஷா (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்துகொண்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள்.217 நான் என்னதான் (சமாதானம்) சொன்னாலும் நீங்கள் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் உவமை, (நபி) யஅகூப் (அலை) அவர்களுடையவும் அவர்களின் பிள்ளைகளுடையவும் நிலையாகும்.(யஅகூப் (அலை) அவர்கள் சொன்னது போன்றே) “அல்லாஹ்தான் நீங்கள்(புனைந்து) கூறுபவற்றுக்கெதிராக உதவிகோரத் தகுதியானவன் ஆவான்”' என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு, ஆயிஷா நிரபராதி என (அறிவிக்கும் வசனத்தை) அல்லாஹ் அருளினான். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம், “(இதற்காக) அல்லாஹ்வையே நான் புகழ்கிறேன்; வேறெவரையும் புகழமாட்டேன்; உங்களையும் புகழமாட்டேன்” என்று சொன்னார்கள்.218 அத்தியாயம் :

188

இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், “இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்துச் சொல்லிக்கொண்டு...” எனும் (24:15) இறைவசனத்தை “இஃத் தலிக்கூனஹு...' என ஓதிவந்தார்கள். (இதன் மூலச் சொல்லான) “வல்க்' (எடுத்துச்சொல்லுதல்) என்பதற்கு “பொய்(யை எடுத்துச்)சொல்லுதல்' என்பது பொருள்” என (விளக்கம்) கூறிவந்தார்கள். மேலும், அறிவிப்பாளர் இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள், “இந்த வசனத்தைப் பற்றி ஆயிஷா அவர்களுக்கே நன்கு தெரியும். ஏனென்றால், இந்த வசனம் அவர்கள் குறித்துத்தான் இறங்கியது” என்று கூறினார்கள். அத்தியாயம் :

189

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களை ஏசிக்கொண்டே (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “ஹஸ்ஸானை ஏசாதே. ஏனென்றால், அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சார்பில் (எதிரிகளின் வசைக் கவிதைகளுக்குப்) பதிலடி தருபவராய் இருந்தார்கள். (ஒருநாள்) ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இணைவைப்பாளர்(களான குறைஷி)களுக்கெதிராக வசைக்கவி பாட அனுமதி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பிறகு என்னுடைய வமிசாவளியை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “(அவர்களைப் பற்றி நான் வசைக்கவி பாடும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுவதைப் போன்று உங்களை உருவி எடுத்துவிடுவேன்” என்று கூறினார்.219 உர்வா (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், “நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசினேன். ஏனெனில், ஆயிஷா (ரலி) அவர்கள்மீது அவதூறு கூறுவதில் பெரும் பங்கு வகித்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்” என்று அன்னார் கூறியதாகக் காணப்படுகிறது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

190

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அமர்ந்து கவி பாடிக்கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷாவைப்) பாராட்டிக்கொண்டும் இருந்தார்கள். (தம் பாடல்களில்) ஹஸ்ஸான், ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி, “நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத் திற்கப்பாற்பட்டவர்; (அவதூறு மூலம்) பேதைப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்” என்று பாடினார்கள்.220 அப்போது ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆனாலும், நீங்கள் அப்படியல்ல (என்னைப் பற்றி அவதூறு பேசுபவர் களுடன் சேர்ந்துகொண்டு நீங்களும் புறம் பேசினீர்கள்”) என்று கூறினார்கள். (தொடர்ந்து) அறிவிப்பாளர் மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ஹஸ்ஸான் அவர்களைத் தங்களிடம் வர ஏன் அனுமதிக்கிறீர்கள்? அல்லாஹ் (தனது வேதத்தில்), “அவர்களில் (அவதூறு பரப்புவதில்) பெரும் பங்கு வகித்தவருக்குக் கடினமான வேதனையுண்டு' (24:11) என்று கூறுகிறானே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “கண்பார்வை பறிபோவதைவிடக் கொடிய வேதனை ஏது?” என்று கூறிவிட்டு, “அவர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சார்பில் பதிலளிப்பவராக' அல்லது “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சார்பில் (எதிரிகளுக்குப் பதிலடியாக) வசைக்கவி பாடுபவராக' இருந்தார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

191

ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா ஆண்டில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். ஓரிரவு எங்களுக்கு மழை பெய்தது. (அன்று காலை) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹ் தொழுவித்தார்கள். பிறகு எங்களை நோக்கி நேராகத் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று நாங்கள் கூறினோம். அப்போது, “என்னை நம்பக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரண்டு பிரிவினராக) உள்ளனர். “அல்லாஹ்வின் கருணையாலும், அல்லாஹ் அளித்த வாழ்வாதாரத்தாலும், அவனது அருட்கொடையாலும் நமக்கு மழை பொழிந்தது' என்று கூறுபவர்கள் என்னை நம்பி நட்சத்திரத்திரத்தை மறுத்தவர்களாவர். “இந்த நட்சத்திரத்தால் தான் எங்களுக்கு மழை பொழிந்தது' எனக் கூறுபவர்கள் என்னை மறுத்து நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்' என்று அல்லாஹ் சொன்னான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.222 அத்தியாயம் :

192

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாழ்நாளில்) நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவற்றில் தமது ஹஜ்ஜின்போது செய்த உம்ராவைத் தவிர (மற்ற) அனைத்தையும் “துல்கஅதா' மாதத்திலேயே செய்தார்கள்” என்று என்னிடம் சொல்லிவிட்டு, அந்த நான்கையும் கூறினார்கள்: 1. ஹுதைபியா நிகழ்வின்போது செய்த உம்ரா. இதை (ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு) துல்கஅதா மாதத்தில் செய்தார்கள்.223 2. அதற்கு அடுத்த (ஹிஜ்ரீ 7ஆம்) ஆண்டு துல்கஅதாவில் செய்த உம்ரா. 3. ஹுனைன் போர்ச் செல்வங்களைப் பங்கிட்டுக் கொடுத்த “ஜிஅரானா' எனுமிடத்திலிருந்து சென்று (ஹிஜ்ரீ 8ஆம் ஆண்டு) துல்கஅதாவில் செய்த உம்ரா. 4. தமது ஹஜ்ஜுடன் (ஹிஜ்ரீ 10ஆம் ஆண்டு) செய்த உம்ரா.224 அத்தியாயம் :

193

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா ஆண்டில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் “இஹ்ராம்' கட்டியிருந்தார்கள். நான் (மட்டும்) இஹ்ராம் கட்டவில்லை.225 அத்தியாயம் :

194

பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: (“நிச்சயமாக நாம் உங்களுக்கு ஒரு மகத்தான வெற்றியளித்துள்ளோம்” எனும் 48:1ஆம் வசனத்திலுள்ள) “வெற்றி' என்பது மக்கா வெற்றி(யைத்தான் குறிக்கிறது) என்று நீங்கள் கருதுகிறீர்கள். மக்கா வெற்றியும் வெற்றியாகத்தானிருந்தது. (ஆனால்) நாங்கள் ஹுதைபியா சமாதான ஒப்பந்த நாளில் (நடைபெற்ற) “ரிள்வான்' உறுதிப் பிரமாணத்தையே பெரும் வெற்றியாகக் கருதுகிறோம். (அன்று) நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபியா என்பது ஒரு கிணறாகும். அந்தக் கிணற்றிலிருந்து ஒரு துளி நீரைக்கூட விட்டுவிடாமல் நாங்கள் (தண்ணீரை) இறைத்துவிட்டோம். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அங்கு அவர்கள் வந்து அந்தக் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்துகொண்டார்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரும்படி கூறினார்கள். (அந்தத் தண்ணீரால்) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பின்னர் வாய் கொப்புளித்துவிட்டுப் பிரார்த்தித்தார்கள். பிறகு (உளூ செய்து வாய் கொப்புளித்த) அந்தத் தண்ணீரைக் கிணற்றுக்குள் ஊற்றினார்கள். பின்பு சிறிது நேரம் அந்தக் கிணற்றை நாங்கள் அப்படியே விட்டுவிட்டோம். பின்னர் அந்தக் கிணறு நாங்களும் எங்கள் ஊர்திப் பிராணிகளும் (குடிக்க) விரும்பிய (அளவு) தண்ணீரைத் திருப்பித் தந்தது.226 அத்தியாயம் :

195

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா தினத்தன்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “ஆயி ரத்து நானூறு பேர்' அல்லது “அதைவிட(க் கொஞ்சம்) அதிகம் பேர்' இருந்தனர். அவர்கள் ஒரு கிணற்றருகில் தங்கினர். அப்போது அந்தக் கிணற்றிலிருந்து (எல்லா நீரையும்) இறைத்துவிட்டனர். (தண்ணீர் தீர்ந்துவிட்டபோது) நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (அது பற்றிக் கூறினர்.) அப்போது, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்கு வந்து அதன் ஓரத்தில் அமர்ந்தார்கள். பின்பு “அந்தக் கிணற்று நீரிலிருந்து ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டுவரப்பட்டபோது அதில் உமிழ்ந்தார்கள். பிறகு பிரார்த்தனை புரிந்தார்கள். பிறகு (அதைக் கிணற்றுக்குள் கொட்டிவிட்டு), “அதைச் சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். பின்பு (நபித்தோழர்கள்) தாங்களும் தங்கள் ஊர்திப் பிராணிகளும் தாகம் தணித்துக் கொண்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். அத்தியாயம் :

196

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஹுதைபியா உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோலால் ஆன ( நீர்க்) குவளை ஒன்று இருந்தது. அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதன் பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன (நேர்ந்தது)?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் குவளையிலிருக்கும் தண்ணீரைத் தவிர நாங்கள் உளூ செய்வதற்கோ குடிப்பதற்கோ எங்களிடம் வேறு தண்ணீரில்லை” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை அந்தக் குவளைக்குள் வைத்தார்கள். அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து ஊற்றுக் கண் போல தண்ணீர் பொங்கி வரத் தொடங்கியது. அப்போது நாங்கள் அந்தத் தண்ணீரை அருந்தவும் செய்தோம். மேலும், அங்கத் தூய்மையும் செய்தோம். (அறிவிப்பாளர் சாலிம் பின் அபில்ஜஅத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) “நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், “அன்று நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?” என்று கேட்டேன். “நாங்கள் ஒரு லட்சம் பேராக இருந்திருந்தாலும் அந்தத் தண்ணீர் எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர்தான் இருந்தோம்” என்று பதிலளித்தார்கள்.227 அத்தியாயம் :

197

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம், “அவர்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தார்கள் என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள் என்று எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம், “ஹுதைபியா தினத்தன்று நபி (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர் என்று ஜாபிர் (ரலி) அவர்களே எனக்கு அறிவித்தார்கள்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

198

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா தினத்தன்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்த வர்கள்” என்று கூறினார்கள். (அப்போது) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந் தோம். இப்போது (மட்டும்) எனக்குக் கண் பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்” என்றே கூறினார்கள். ஜாபிர் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பிலும் “(அவர்கள்) ஆயிரத்து நானூறு பேர் இருந்தனர்” என்றே வந்துள்ளது. அத்தியாயம் :

199

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அந்த மரத்தின் கீழ் உறுதிப் பிரமாணம் செய்தவர்கள் (சுமார்) ஆயிரத்து முன்னூறு பேர் ஆவர்.228 (இதில்) “அஸ்லம்' குலத்தார் முஹாஜிர்களில் எட்டில் ஒரு பகுதியினராக இருந்தனர்.229 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

200

அந்த மரத்தின் கீழ் உறுதிப் பிரமாணம் (பைஅத்துர் ரிள்வான்) செய்தவர்களில் ஒருவரான மிர்தாஸ் பின் மாலிக் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும், அவர்களுக்கடுத்தவர்கள் அடுத்ததாகவும் (உயிர்) கைப்பற்றப்படுவர். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்தபின் இப்புவியில்) மட்டமான பேரீச்சம் பழத்தை யும் தொலி நீக்கப்படாத கோதுமையையும் போன்ற தரம் தாழ்ந்த மக்களே எஞ்சி யிருப்பர். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான்.230 அத்தியாயம் :

201

மர்வான் பின் அல்ஹகம் அவர்களும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் கூறியதாவது: ஹுதைபியா ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் (சுமார்) ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம் தோழர்களுடன் (மதீனா விலிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள். துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் குர்பானி பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அடையாளமும் இட்டுவிட்டு, பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள்.231 அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் சுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து எத்தனை முறை செவியுற்றேன் எனக் கணக்கிட்டுக் கூற முடியாது. மேலும் அன்னார், “குர்பானி பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டது, அடையாளம் இட்டது ஆகியவை நடந்த இடம் குறித்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து நான் அறியவில்லை” என்றும் கூறினார்கள். அத்தியாயம் :

202

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் ஹுதைபியா ஆண்டில் “உம்ரா'வுக்காக “இஹ்ராம்' கட்டியிருந்தபோது) என் முகத்தில் பேன்கள் விழுந்துகொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது, “உம் (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்றேன். அப்போது ஹுதைபியாவிலிருந்த நபி (ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்ததால் அவர்கள் ஹுதைபியாவிலேயே இஹ்ராமிóருந்து விடுபட வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அப்போது அல்லாஹ் (குற்றப்) பரிகாரம் சம்பந்தப்பட்ட (2:196ஆவது) வசனத்தை அருளினான். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு “ஃபரக்' தானியத்தை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்; அல்லது ஓர் ஆட்டை குர்பானி செய்ய வேண்டும்; அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்” என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.232 அத்தியாயம் :

203

உமர் (ரலி) அவர் களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள்அடிமை) அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கடைத்தெருவிற்குச் சென்றேன். அப்போது ஓர் இளம் பெண் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! சின்னஞ்சிறு சிறுவர்களை விட்டுவிட்டு என் கணவர் இறந்துபோய்விட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆட்டுக் கால் குளம்பைச் சமைப்பதற்குக்கூட அவர்களால் முடியாது. மேலும், எந்தவித விளைநிலமோ, (பால் கறப்பதற்குக்) கால்நடையோ அவர்களிடம் இல்லை. (பசியும்) பஞ்சமும் அவர்களை அழித்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். நான் குஃபாஃப் பின் ஈமா அல்ஃகிஃபாரீ என்பவரின் மகளாவேன். என் தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபியாவில் கலந்துகொண்டார்கள்” என்று கூறினார். அங்கிருந்து நகராமல் அப்பெண்ணுடனே நின்றிருந்த உமர் (ரலி) அவர்கள், “நெருங்கிய உறவே வருக!” என்று வாழ்த்துக் கூறினார்கள். பிறகு தம் வீட்டில் கட்டிவைக்கப்பட்டிருந்த திடகாத் திரமான ஒட்டகம் ஒன்றை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். பின்பு உணவு தானியங்களை இரு மூட்டைகளில் நிரப்பி, அந்த இரண்டையும் அந்த ஒட்டகத்தின் மீது ஏற்றிவைத்தார்கள். அந்த இரு மூட்டைகளுக்கிடையே (செலவுக்குத் தேவையான) காசுகளையும் ஆடைகளையும் ஏற்றினார்கள். பிறகு அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு, “(தற்போது) இதை ஓட்டிச் செல். இது தீர்ந்துபோவதற்குள் அல்லாஹ் உங்களுக்கு நன்மையைத் தருவான்” என்று (அப்பெண்மணியிடம்) கூறினார்கள். அப்போது ஒருவர், “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! இந்தப் பெண்ணுக்கு அதிகமாகவே வழங்கி விட்டீர்கள்” என்று கூறினார். (அதற்கு) உமர் (ரலி) அவர்கள், “உன்னை உன் தாய் இழக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும், சிறிது காலம் ஒரு கோட்டையை முற்றுகையிட்டு அதை அவர்களிருவரும் வெற்றி கொண்டதை நான் பார்த்தேன். பிறகு அதில் (கிடைத்த போர்ச் செல்வத்தில்) நமக்குரிய பங்குகளைக் கோரலானோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

204

முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பைஅத்துர் ரிள்வான் எனும் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை நான் பார்த்திருந்தேன். பின்பு (ஒருமுறை) அங்கு நான் வந்தேன். அப்போது என்னால் அதை அறிய முடியவில்லை. மஹ்மூத் பின் ஃகைலான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “பிறகு அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது” என முசய்யப் (பின் ஹஸ்ன்-ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. அத்தியாயம் :

205

தாரிக் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஹஜ்ஜுக்குச் சென்றுகொண்டி ருந்தபோது, தொழுதுகொண்டிருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். “இது என்ன தொழுமிடம்?” என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், “இதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பைஅத்துர் ரிள்வான்' எனும் உறுதிப் பிரமாணம் வாங்கிய மரம் இருந்த இடம்” என்று கூறினர். பின்பு நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம் வந்து இது பற்றித் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “அந்த மரத் தின் கீழ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்களில் ஒருவரான என் தந்தை (முசய்யப் - ரலி) அவர்கள், “(உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டு நாங்கள் அங்கு சென்றபோது அந்த மரத்தை நாங்கள் மறந்துவிட்டோம். எங்களால் அதை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை” என்று கூறினார்கள் எனத் தெரிவித்துவிட்டு, பிறகு சயீத் (ரஹ்) அவர்கள், “முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே அதை அறியவில்லை. நீங்கள் அறிந்துவிட்டீர்களா? அப்படியானால், நீங்களே அதிகம் தெரிந்தவர்கள்” என்று (பரிகாசமாகக்) கூறினார்கள். அத்தியாயம் :

206

அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் செய்தவர் களில் ஒருவரான முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மறு ஆண்டு அந்த இடத்திற்குத் திரும்பவும் சென்றோம். அப்போது அந்த இடம் (அடையாளம் காண முடியாதவாறு) எங்களுக்குக் குழம்பிவிட்டது. அத்தியாயம் :

207

தாரிக் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம் அந்த மரத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அப்போது சயீத் அவர்கள் சிரித்துவிட்டு, அ(ந்தப் பிரமாணத்)தில் கலந்துகொண்டவரான என் தந்தை (அடுத்த ஆண்டே அந்த மரத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று) தெரிவித்ததாகக் கூறினார். அத்தியாயம் :

208

அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அந்த மரத்தின(டியில் பைஅத்துர் ரிள்வான் செய்தவ)ர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்: எவரேனும் ஒரு கூட்டத்தார் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டுவந்தால் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இவர்கள் மீது கருணை புரிவாயாக!” என்று பிரார்த்திப்பது வழக்கம். என் தந்தை (அபூஅவ்ஃபா-ரலி) தமது ஸகாத்தைக் கொண்டுசென்றார். அப்போது, “இறைவா!அபூஅவ்ஃபாவின் குடும்பத்தாருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தித் தார்கள்.233 அத்தியாயம் :

209

அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அல்ஹர்ரா' போரின்போது அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) அவர்களிடம் மக்கள் உறுதிமொழி கொடுத்துக்கொண்டிருந்தபோது (அப்துல்லாஹ்) இப்னு ஸைத் (ரலி) அவர்கள் மக்களிடம், “எதற்காக இப்னு ஹன்ழலா உறுதிமொழி வாங்குகிறார்?” என்று கேட்டார்கள். “மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருக்கும்படி (உறுதிமொழி வாங்குகிறார்)” என்று அவர்களிடம் கூறப்பட்டது. (அப்போது) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஹுதைபியாவில் அளித்த உறுதி மொழிக்குப்) பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்க மாட்டேன்” என்று கூறினார்கள்.234 இப்னு ஸைத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபியாவில் கலந்துகொண்ட வராவார். அத்தியாயம் :

210

இயாஸ் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (சலமா பின் அல் அக்வஉ -ரலி) அவர்கள் அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவராவார். அவர்கள் என்னிடம், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (வெள்ளிக்கிழமை) “ஜுமுஆ' தொழுதுவிட்டு (வீட்டிற்கு)த்திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவில்கூட, சுவர்களுக்கு நிழல் படிந்திருக்காது” என்று கூறினார்கள். அத்தியாயம் :

211

யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதவாது: நான், சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், “ஹுதைபியா தினத்தன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்?” என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், “மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்” என்று பதிலளித்தார்கள்.235 அத்தியாயம் :

212

முசய்யப் பின் ராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களைச் சந்தித்து, “தங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கட்டும். தாங்கள் நபி (ஸல்) அவர்களின் நட்பைப் பெற்றதோடு, அவர்களிடம் அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணமும் செய்து கொடுத்தீர்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “என் சகோதரர் மகனே! (நபி -ஸல்) அவர்களுக்குப் பிறகு நாங்கள் உருவாக்கி விட்டதை (எல்லாம்) நீ அறியமாட்டாய்” என்று (பணிவுடன்) கூறினார்கள்.236 அத்தியாயம் :

213

“அந்த மரத்தின் கீழ் நான் நபி (ஸல்) அவர்களிடம் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தேன்” என்று ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இதை அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

214

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நிச்சயமாக, நாம் உங்களுக்கு ஒரு வெளிப்படையான வெற்றியை அளித்துள்ளோம்” (48:1) எனும் வசனம் ஹுதைபியா (சமாதான ஒப்பந்தத்தைக் குறிக்கக்கூடியது) ஆகும்” என்று நான் கூறினேன். (அப்போது) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், “(நபியவர்களே,) தங்களுக்கு இனிய வாழ்த்துகள். (தங்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்துவிட்டதாக அந்த வசனத்தின் தொடர்ச்சியில் கூறுகின்றானே, அந்த வெற்றியால்) எங்களுக்கு என்ன (பயன்)?” என்று கேட்டனர். அப்போது, “இறைநம்பிக்கையாளர் களான ஆண்களையும் பெண்களையும் சொர்க்கங்களில் நுழையச் செய்வதற்காகவே (இவ்வாறு நாம் வெற்றியளித்தோம்); அந்தச் சொர்க்கங்களுக்கிடையே நதிகள் ஓடிக்கொண்டிருக்கும்” (48:5) எனும்வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு நான் கூஃபாவுக்கு வந்து, இந்த ஹதீஸையெல்லாம் கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதாக (அங்குள்ளவர்களிடம்) அறிவித்தேன். பிறகு நான் கூஃபாவிலிருந்து திரும்பி (கத்தாதா (ரஹ்) அவர்களிடம்) வந்து அவர்களிடம் இது பற்றிக் கூறினேன். அப்போது அவர்கள், “நாம் உங்களுக்கு வெற்றியளித்தோம் எனும் வசனம் ஹுதைபியாவைக் குறிக்கிறது என்பதை எனக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். தங்களுக்கு இனிய வாழ்த்துகள் என்று (தொடங்கும் ஹதீஸை) இக்ரிமா (ரஹ்) அவர்களே எனக்கு அறிவித்தார்கள் (முழு ஹதீஸையும் ஒரே நபரிடமிருந்து நான் கேட்டு அறிவிக்கவில்லை)” என்று கூறினார்கள். அத்தியாயம் :

215

மஜ்ஸஆ பின் ஸாஹிர் அல்அஸ்லமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை ஸாஹிர் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் அந்த மரத்தின் கீழ் (நடந்த “பைஅத்துர் ரிள்வான்' உறுதிமொழி ஏற்பில்) கலந்துகொண்டவர்களாவார். அன்னார் கூறினார்கள்: (நாட்டுக்)கழுதை இறைச்சி (வெந்துகொண்டிருந்த) சட்டிக்குக் கீழே நான் (நெருப்பு) மூட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அறிவிப்பாளர், “கழுதை இறைச்சியை (உண்ண வேண்டாமென) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குத் தடை விதிக்கிறார்கள்” என்று அறிவித்தார். அத்தியாயம் :

216

மஜ்ஸஆ பின் ஸாஹிர் பின் அல்அஸ்லமீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: என்னுடைய (பனூ அஸ்லம்) குலத்தைச் சேர்ந்தவரும், அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவருமான உஹ்பான் பின் அவ்ஸ் (ரலி) அவர்களுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டிருந்தது. அவர்கள் (தொழுகையில் தரையில் முழங்கால் மூட்டு அழுந்தாமலிருப்பதற்காக) சஜ்தா செய்யும்போது தமது முழங்காலுக்குக் கீழே தலையணை ஒன்றை வைத்துக்கொள்வார்கள். அத்தியாயம் :

217

புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' உடன்படிக்கை செய்தவ)ர்களில் ஒருவரான சுவைத் பின் அந்நுஅமான் (ரலி) அவர்கள், “(கைபருக்கு அருகிலுள்ள “ஸஹ்பா' என்னுமிடத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் மாவு கொண்டுவரப்பட்டது. அப்போது அதை அவர்கள் சாப்பிட்டார்கள்” என்று கூறினார்கள்.237 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

218

அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், நபித்தோழர்களில் ஒருவரும், அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' உடன்படிக்கை செய்தவ)ர்களில் ஒருவருமான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், “வித்ர் தொழுகை உடைக்கப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆரம்பத்திலேயே நீ வித்ர் தொழுதிருந்தால் இறுதியில் நீ வித்ர் தொழ வேண்டாம்” என்று பதிலளித்தார்கள்.238 அத்தியாயம் :

219

உமர் (ரலி) அவர்களால் விடுதலைசெய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமை) அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஓர் இரவில் பயணம் செய்து கொண்டி ருந்தார்கள்.239 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் நபியவர்களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. மீண்டும் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபிகளார் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. “உமரே! உன்னை உன் தாய் இழக்கட்டும். மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்குப் பதிலளிக்க வில்லையே” (என்று தம்மைத்தாமே) உமர் (ரலி) அவர்கள் (கடிந்து) கூறினார்கள். மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி முஸ்óம் களுக்கு முன்னால் வந்து சேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இப்படி நான் நடந்துகொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றுவிடுமோ என்று அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் அழைப்பதைக் கேட்டேன். (நான் நினைத்ததைப் போன்றே) என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன். அப்போது அவர்கள், “இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பெற்றுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறினார்கள். பிறகு, “உங்களுக்கு நாம் வெளிப்படையானதொரு வெற்றியை அளித்துள்ளோம்” என்று (தொடங்கும் - 48:1ஆம் வசனத்தை) ஓதினார்கள். அத்தியாயம் :

220

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகியஇருவரும்-ஒருவர் மற்றவரைவிடக் கூடுதலாகக்- கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “ஹுதைபியா' ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் குர்பானி பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அதற்கு அடையாளமும் இட்டார்கள். பின்னர் அங்கிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் “குஸாஆ' குலத்தாரில் (புஸ்ர் பின் சுஃப்யான் என்ற) ஒருவரை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். “ஃகதீருல் அஷ்தாத்' எனும் இடத்தில் நபியவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களின் உளவாளி வந்து, “குறைஷியர் உங்களைத் தாக்குவதற்காகப் பெரும் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்; பல்வேறு குலத்தாரை (ஓரிடத்தில்) ஒன்றுதிரட்டி வைத்துள்ளனர். அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் (கஅபாவிற்குச்) செல்ல(வோ, மக்காவிற்குள் நுழையவோ) விடாமல் தடுப்பார்கள்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மைத் தடுக்க நினைக்கும் இவர்களின் குடும்பத்தாரிடமும் சந்ததி களிடமும் நான் (போர் தொடுக்கச்) செல்ல வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நம்மிடம் அவர்கள் (போர் புரிய) வந்தால், (அதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் அனுப்பி வைத்த) உளவாளியை(யும்) அந்த இணைவைப்பாளர்களுக்குத் தெரியாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான்.240 அவ்வாறு அவர்கள் வராவிட்டால் அவர்களை நாம் இழப்புக்குள்ளாக்கிவிட்டுச் செல்வோம்.” என்று கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த இறையில்லத்தை நாடித்தானே நீங்கள் புறப்பட்டு வந்தீர்கள். யாரையும் கொல்லவோ எவரிடத்திலும் போரிடவோ நீங்கள் வரவில்லையே. எனவே, இறையில்லத்தை நோக்கிச் செல்லுங்கள். இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மை எவன் தடுக்கின் றானோ அவனுடன் நாம் போரிடுவோம்” என்று (ஆலோசனை) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பெயரால் பயணத்தைத் தொடருங்கள்” என்று கூறினார்கள்.241 4180, 4181 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மர்வான் பின் அல் ஹகம் ஆகிய இருவரும் ஹுதைபியா (ஆண்டில் நடந்த)”உம்ரா' (நிகழ்ச்சி) குறித்துக் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா தினத்தன்று (குறைஷியரின் தலைவரான) சுஹைல் பின் அம்ரிடம் ஒரு (குறிப்பிட்ட) கால வரம்பிட்டுச் சமாதான ஒப்பந்தம் (செய்துகொள்வதாகப் பத்திரம்) எழுதியபோது, சுஹைல் பின் அம்ர் (பின்வரும்) சில நிபந்தனைகளையும் விதித்தார்: எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் திருப்பி அனுப்பியே ஆக வேண்டும்; அவரைவிட்டு நீங்கள் ஒதுங்கிவிட வேண்டும். இந்த நிபந்தனைகள்மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய சுஹைல் மறுத்தார். (ஆனால், தங்களுக்குப் பாதகமான) இதை இறைநம்பிக்கை யாளர்கள் வெறுத்தார்கள். மேலும், (இதற்குச் சம்மதிக்கச்) சிரமப்பட்டார்கள். அதுபற்றி (வியந்து) பேசவும் செய்தார்கள். சுஹைல் இந்த நிபந்தனைகள்மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய மறுத்துவிட்டபோது (அந்த நிபந்தனை களை ஏற்று) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒப்பந்தப் பத்திரத்தை) எழுதினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வந்து சேர்ந்த) சுஹைலின் மகன் அபூஜந்தலை அன்றைய தினமே அவருடைய தந்தை சுஹைல் பின் அம்ரிடம் திரும்ப ஒப்படைத்தார்கள். மேலும், அந்த (ஒப்பந்த)க் காலத்தில் தம்மிடம் வந்த எந்த ஆண் மகனையும் -அவர் முஸ்லிமாக இருந்தாலும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள். (அப்போது) இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்தனர். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு (ஹிஜ்ரத் செய்து) வந்தவர்களில் உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்ஸூமும் இருந்தார். அவர் இளம் பெண்ணாக இருந்தார். அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பிவிட வேண்டுமெனக் கோரியபடி அவர்களின் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது, இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் விஷயத்தில் தனது (60:10ஆம்) வசனத்தை அல்லாஹ் அருளினான்.242 இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

221

222

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: “நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தால்...' என்று தொடங்கும் இந்த (60:12ஆம்) வசனத்தின் காரணத்தால் (தம்மிடம்) ஹிஜ்ரத் செய்து வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரிசோதித்துவந்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் சகோதரரிடமிருந்து பின்வருமாறு அறிவிக் கின்றார்கள்: இணைவைப்பாளர்களின் மனைவியரில் எவர் ஹிஜ்ரத் செய்து வந்து (முஸ்லிம்களை மணமுடித்துக்கொண்டு) விட்டார்களோ அவர்களுக்காக அவர் களுடைய (இணை வைப்பாளர்களான) கணவன்மார்கள் (மணக்கொடையாகச்) செலவிட்டதை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என அல்லாஹ் தன் தூதருக்குக் கட்டளையிட்டான். இதைக் கூறிவிட்டு, தொடர்ந்து அபூபஸீர் (ரலி) அவர்கள் தொடர்பான அறிவிப்பையும் முழுமையாகக் கூறினார்கள்.243 அத்தியாயம் :

223

இப்னு உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், குழப்ப(ம் நிறைந்த கால)த்தில் உம்ராவிற்காக (மக்காவிற்குப்) புறப்பட்டுச் சென்றார்கள்.244 அப்போது அவர்கள், “நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட ஹுதைபியா சம்பவத்தின் போது) செய்ததைப் போன்று செய்வோம்” என்று கூறிவிட்டு, உம்ராவிற்காக (இஹ்ராம் கட்டி) “தல்பியா' சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியதே இதற்குக் காரணமாகும்.245 அத்தியாயம் :

224

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக) இஹ்ராம் கட்டியிருந்தார்கள். மேலும், (இறையில்லத்திற்குச் செல்ல முடியாமல்) நான் தடுக்கப்பட்டால், இறை யில்லம் செல்ல விடாமல் (ஹுதைபியா ஆண்டு) நபி (ஸல்) அவர்களை குறைஷியர் தடுத்தபோது நபி (ஸல்) அவர்கள் செய்தது போல நானும் செய்வேன்”246 என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது” (33:21) எனும் வசனத்தை ஓதினார்கள். அத்தியாயம் :

225

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜின் ராணுவம் முற்றுகையிட்டிருந்த குழப்பமான கால கட்டத்தில், உம்ராவிற்காக மக்காவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர்-உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ், சாலிம் பின் அப்தில்லாஹ் ஆகிய இருவரும் என ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது- “இந்த வருடம் தாங்கள் (உம்ராவிற்குச் செல்லாமல் இங்கேயே) தங்கிவிடலாமே. ஏனென்றால், நீங்கள் கஅபாவிற்குப் போய் சேரமாட்டீர்கள் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார். அதற்கு அவர்கள், “நாங்கள் (ஹுதைபியா ஆண்டு) நபி (ஸல்) அவர்களுடன் (உம்ரா செய்வதற்காக மக்கா) புறப்பட்டுச் சென்றோம்; அப்போது, குறைஷி குல இறைமறுப்பாளர்கள் எங்களை கஅபாவுக்குச் செல்ல விடாமல் தடுத்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி பிராணிகளை அறுத்துவிட்டுத் (தமது) தலையை மழித்துக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் தலைமுடியைக் குறைத்துக்கொண்டனர். (அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்)” என்று கூறினார்கள். தொடர்ந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “நான் உம்ரா செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன். கஅபாவிற்குச் செல்ல எனக்கு வழி விடப்பட்டால் “தவாஃப்' செய்வேன். அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தது போல நானும் செய்வேன்” என்று கூறினார்கள். பின்னர் சிறிது நேரம் நடந்துவிட்டு, “(இஹ்ராமிலிருந்து விடுபடுகிற விஷயத்தில் ஹஜ், உம்ரா ஆகிய) அந்த இரண்டையும் நான் ஒன்று போலவே கருதுகிறேன். நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என்மீது) கடமையாக்கிக்கொண்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள். (பிறகு மக்காவிற்குப் போனபோது) ஒரேயொரு தவாஃபும் ஒரேயொரு சஃயும் செய்து (ஹஜ் உம்ரா ஆகிய) இரண்டிலிருந்தும் விடுபட்டார் கள்.247 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

226

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “உமர் (ரலி) அவர்களுக்கு முன்பே (அவர்களுடைய புதல்வரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் முஸ்óமாகிவிட்டார்கள்' என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். (நடந்தது) அவ்வாறல்ல. மாறாக, ஹுதைபியா தினத்தில் உமர் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரிடமிருந்த தமது குதிரையை அதன் மீது (அமர்ந்து) போர் புரிவதற்காக வாங்கி வருமாறு (தம் புதல்வர்) அப்துல்லாஹ்வை அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரத்தின் கீழ் (தம் தோழர்களிடம்) உறுதிமொழி வாங்கிக்கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களுக்கு இது தெரியவில்லை. அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தார்கள். பிறகு போய் அந்தக் குதிரையை வாங்கி, அதை உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் போருக்காக (தமது உருக்குச் சட்டையை) அணிந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரத்தின் கீழ் உறுதிமொழி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுடன் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தார்கள். இதைத்தான் மக்கள், “உமர் அவர்களுக்கு முன்பாகவே (அவர்களுடைய புதல்வர்) இப்னு உமர் முஸ்லிமாகிவிட்டார்' என்று பேசிக்கொள்கிறார்கள். அத்தியாயம் :

227

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா நாளில் நபி (ஸல்) அவர்களுடனிருந்த மக்கள், பல்வேறு மரங்களின் நிழலில் பிரிந்து சென்று (ஓய்வெடுத்துக்கொண்டு) இருந்தனர். அப்போது சிலர் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வரை நோக்கி), “அப்துல்லாஹ்வே! மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். என்ன விஷயம் என்று பார்” என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் போய்ப் பார்த்தபோது அல்லாஹ்வின் தூதரிடம்) மக்கள் உறுதிமொழி கொடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டுப் பின்னர் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். (அவர்களிடம் விவரத்தைக் கூறவே) உடனே உமர் (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்று உறுதிமொழி அளித்தார்கள். அத்தியாயம் :

228

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது நாங்களும் அவர்களுடனிருந்தோம். (மக்காவில் நுழைந்ததும் புனித கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தார்கள். நாங்களும் அவர்களுடன் சுற்றி (தவாஃப்) வந்தோம். அவர்கள் தொழுதார்கள். நாங்களும் அவர்களுடன் தொழுதோம். அவர்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே தொங்கோட்டம் ஓடினார்கள். (நாங்களும் ஓடினோம்.) அப்போது (இணைவைக்கும்) மக்காவாசிகளில் எவரும் அவர்களை எந்த விதத்திலும் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை மறைத்துக் கொண்டு (அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக) இருந்தோம்.248 அத்தியாயம் :

229

அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ஸிஃப்பீன் சண்டையிலிருந்து சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது நாங்கள் அவர்களிடம் (அவர் சண்டையில் ஈடுபாடு காட்டாதது பற்றி) செய்தி அறியச் சென்றோம். அப்போது அவர்கள், “(நான் இந்தப் போரில் ஈடுபாடு கொள்ளாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள். உங்கள்) எண்ணத்தையே குற்றம் சாட்டுங்கள். அபூஜந்தல் (அபயம் தேடி வந்த ஹுதைபியா உடன்படிக்கையின்) நாளில், நபி (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன் - அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் - (அத்தகைய மன நிலையில் அன்று நான் இருந்தேன். அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக்கொண்டது எங்களுக்குச் சிரமம் தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை அடைய (முடக்கப்பட்ட) அந்த வாட்களே வழி வகுத்தன. ஆனால், இதுவெல்லாம் ஸிஃப்பீன் போருக்கு முன்னால்தான். (ஆனால், முஸ்லிம்களுக்கிடையிலேயே போர் மூண்டுவிட்ட இந்தச் சூழ்நிலையில்) நாங்கள் குழப்பத்தின் ஒரு மூலையை அடைக்கப்போனால் இன்னொரு மூலை பீறிட்டு வெடிக்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.249 அத்தியாயம் :

230

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா சமயத்தில் (உம்ராவுக்காக நான் “இஹ்ராம்' கட்டியிருந்தபோது) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (அப்போது என் தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்துகொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன். அதற்கு, “உனது தலையை மழித்துக்கொள். பின்பு மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது (உன்னால் முடிந்த) ஏதாவது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துக் குர்பானி செய். (இதுவே இஹ்ராம் கட்டிய நிலையில் தலையை மழித்ததற்கான பரிகாரமாகும்)” என்று கூறினார்கள்.250 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த மூன்றில்) எதை முதலில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அத்தியாயம் :

231

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் “இஹ்ராம்' கட்டியவர்களாக ஹுதைபியாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணைவைப்பாளர்கள் தடுத்துவிட்டிருந்தனர். எனக்கு (காது சோணைவரை) நிறைய தலைமுடி இருந்தது. (அதிலிருந்த) பேன்கள் என் முகத்தின் மீது (உதிர்ந்து) விழத் தொடங்கின. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன். (அப்போதுதான், “இஹ்ராம்' கட்டியவர் “இஹ்ராம்' கட்டியிருக்கும்போது செய்யக் கூடாத காரியங்களைச் செய்துவிட்டால் அதற்கான பரிகாரம் என்ன என்பது தொடர்பாக), “உங்களில் யாரேனும் நோயாளியாக இருந்தால், அல்லது அவரது தலையில் துன்பம் தரும் (பேன், பொடுகு, காயம் அல்லது நோய்) ஏதும் இருந்தால் (அதன் காரணத்தால் இஹ்ராம் கட்டிய நிலையிலேயே அவர் தமது தலையை மழித்துக்கொள்ள நேரிட்டால் அதற்குப்) பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது குர்பானி கொடுக்க வேண்டும்” எனும் இந்த (2:196ஆம்) வசனம் அருளப்பெற்றது.251 அத்தியாயம் :

232

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: “உக்ல்' மற்றும் “உரைனா' குலத்தாரில் சிலர் மதீனாவிற்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகப் பேசினர். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பால் தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள். நாங்கள் விளைநிலங்கள் வைத்திருப்பவர்கள் அல்லர். (நாங்கள் பால் தரும் கால்நடை களைக் காடுகளில் மேய்த்து அதன் பாலை அருந்துபவர்களாய் இருந்தோம்)” என்று கூறினர். அவர்களுக்கு மதீனா(வின் தட்ப வெப்பம்) ஒத்துக்கொள்ளவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பத்துக்குட்பட்ட) ஒட்டகங்களை யும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கும்படி உத்தரவிட்டார்கள். மேலும் “ஒட்டகங்கள் (மேயும்) இடத்திற்குச் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் பருகிக்கொள்ளுங்கள் (இன்ஷா அல்லாஹ் நிவாரணம் கிடைக்கும்)” என்று உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றனர்.) அவர்கள் (கருங்கற்கள் நிறைந்த) “அல்ஹர்ரா' பகுதியில் இருந்தபோது இஸ்லாத்திலிருந்து விலகி இறை மறுப்பாளர்களாக (மதம்) மாறிவிட்டனர். மேலும், நபி (ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளர் (யசார்-ரலி) அவர்களைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களை (தங்களுடன்) ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, (அவர்களைப் பிடித்து வர) அவர்களைத் தொடர்ந்து ஆளனுப்பினார்கள். (அவர்கள் பிடிபட்டு மதீனாவுக்குக் கொண்டுவரப்பட்டபோது) அவர்களுக்கு தண்டனை கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (மக்கள்) அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடு போட்டார்கள். அவர்களுடைய கை(கால்)கள் வெட்டப்பட்டு, (மதீனாவின் புறநகரான) “அல்ஹர்ரா' பகுதியில் அவர்கள் விடப்பட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டுபோயினர்.253 அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்களைத்) தர்மம் செய்யுமாறு தூண்டிக்கொண்டும் சித்திரவதை செய்ய வேண்டாமென தடுத்துக்கொண்டும் இருந்தார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் கத்தாதா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், (நபி (ஸல்) அவர்களிடம் வந்தவர்கள்) உரைனா குலத்தார் (மட்டுமே) என்று காணப்படுகிறது. மற்றோர் அறிவிப்பில், “உக்ல் குலத்தாரில் சிலர் வந்தனர்” என்று இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :

233

அபூகிலாபா (ரஹ்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) அபூரஜாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் என் உரிமையாளர் அபூகிலாபா அவர்களுடன் ஷாம் நாட்டில் இருந்தேன். (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒருநாள் மக்களிடம், “இந்த “கசாமா' (சத்திய முறை) தொடர்பாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று ஆலோசனை கேட்டார்கள்.254 “அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உங்களுக்குமுன் (வாழ்ந்த) கலீஃபாக்களும் தீர்ப்பளித்த உண்மை (விதி)தான்” என்று மக்கள் பதிலளித்தனர். அபூகிலாபா (ரஹ்) அவர்கள், அப்போது உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் அரியணைக்குப் பின்னால் இருந்தார்கள். அப்போது அன்பசா பின் சயீத் (ரஹ்) அவர்கள், “உரைனா குலத்தார் பற்றிய அனஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ் எங்கே (போயிற்று)?” என்று கேட்டார்கள்.255 அப்போது அபூகிலாபா (ரஹ்) அவர்கள், “(உரைனா குலத்தார் பற்றி) எனக்கும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உரைனா குலத்தாரில் சிலர்' என்று காணப்படுகிறது. மற்றோர் அறிவிப்பில், “உக்ல் குலத் தாரில் சிலர்' (என்று கூறிவிட்டு) முழு நிகழ்ச்சியையும் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :

234

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். “தூ கரத்' எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரிய ஒர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப் பட்டுவிட்டன” என்று கூறினார். நான், “அவற்றை யார் பிடித்துச் சென்றார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “கத்ஃபான் குலத்தார்” என்று பதில் சொன்னார். உடனே நான் உரக்கச் சப்தமிட்டு, “யா ஸபாஹா! (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று மதீனாவின் இரு மலை களுக்கிடையிóருந்த அனைவருக்கும் கேட்கும்படி மும்முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற ஒட்டகங்களைக்) கையில் பிடித்துக்கொண்டு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். “அக்வஇன் மகன் நான்!இன்று அற்பர்கள் (அழியும்) நாள்” என்று (பாடியபடி) கூறிக்கொண்டே அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் ஈரசைச்சீர் பாடலை பாடிக்கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன். (அவர்களை நான் விரட்டிச் சென்றபோது) அவர்கள் விட்டுவிட்டுப் போன முப்பது சால்வைகளை நான் எடுத்துக்கொண்டேன். (அப்போது) நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்(து சேர்ந்த)னர். நான், “அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கூட்டத்தார் தாகமுடன் இருந்தபோதும் அவர்கள் தண்ணீர் குடிக்க விடாமல் நான் தடுத்துவிட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச்சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படையை இப்போதே அனுப்புங்கள்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அக்வஉ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மை யாக நடந்துகொள்” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிற்குத்) திரும்பி வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவிற்குள் நுழையும்வரையில் என்னைத் தமக்குப் பின்னே தம் ஒட்டகத்தின் மீது அமர்த்திக் கொண்டார்கள்.257 அத்தியாயம் :

235

சுவைத் பின் அந்நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போர் நடந்த ஆண்டு, நபி (ஸல்) அவர்களுடன் நானும் புறப்பட்டேன். கைபருக்கு அருகிலுள்ள “ஸஹ்பா' என்ற இடத்தை அடைந்ததும் நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர், பயண உணவுகளைக் கொண்டு வரும்படி கூறினார்கள். அப்போது, மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டுவரப்படவில்லை. அதைக் குழைக்கும்படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி (ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மஃக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பின்னர் (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள்.259 அத்தியாயம் :

236

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், “ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை(ப் பாடி) எங்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்களா?” என்று கூறினார். ஆமிர் (ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காகப் (பின்வரும் ஈரசைச்சீர் பாடலைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள். “இறைவா!நீ இல்லையென்றால் நாங்கள்நல்வழி பெற்றிருக்கமாட்டோம்தர்மமும் செய்திருக்கமாட்டோம்தொழுதிருக்கவுமாட்டோம். நாங்கள் புரிந்துவிட்டபாவங்களுக்காகஎங்களை மன்னிப்பாயாக!உனக்கே நாங்கள் அர்ப்பணம்! (போர்முனையில் எதிரியைநாங்கள் சந்திக்கும்போதுஎங்கள் பாதங்களைஉறுதிப்படுத்துவாயாக! எங்கள்மீது அமைதியைப்பொழிவாயாக! (அறவழிக்கு)நாங்கள் அழைக்கப்பட்டால்வந்துவிடுவோம். எங்களிடம்மக்கள் (அபயக்) குரல்எழுப்பினால்(உதவிக்கு வருவோம்)”260 என்று பாடிக்கொண்டிருந்தார்கள். (வழக்கம் போலப் பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடத் தொடங் கின.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இந்த ஒட்டக வோட்டி?” என்று கேட்டார்கள். “ஆமிர் பின் அல்அக்வஉ” என்று மக்கள் பதிலளித்தார்கள். அப்போது, “அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மக்களில் ஒருவர், “இறைத்தூதரே! (அவருக்கு வீர மரணமும் அதையடுத்து சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா?” என்று கேட்டார். பிறகு நாங்கள் கைபருக்கு வந்து, கைபர் வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசியேற்பட்டது. பிறகு உயர்ந்தோனான அல்லாஹ், கைபர்வாசிகளுக்கு எதிராக (எங்களுக்கு) வெற்றியளித்தான். வெற்றியளிக்கப்பட்ட அன்று மாலை, மக்கள் நிறைய நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது என்ன நெருப்பு? எதற்காக இதை மூட்டியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.”இறைச்சி சமைப்பதற்காக” என்று மக்கள் கூறினர். “எந்த இறைச்சி?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நாட்டுக் கழுதைகளின் இறைச்சி' என்று மக்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவற்றைக் கொட்டிவிட்டு, அந்தப் பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களைக் கழுவிக்கொள்ளலாமா?” என்று கேட்டார். “அப்படியே ஆகட்டும்” என்று கூறினார்கள். (அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது ஆமிர் (ரலி) அவர்களின் வாள் குட்டையாக இருந்தது. (அதனால்) அவர்கள் குனிந்து, ஒரு யூதனின் காலை வெட்டப்போனபோது அன்னாரது வாளின் மேற்பகுதி, அன்னாரின் முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள். (கைபர் வெற்றிக்குப்பின் மதீனாவை நோக்கி) மக்கள் திரும்பியபோது- சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்- எனது கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (என் தந்தையின் சகோதரர்) ஆமிரின் நற்செயல்கள் (அமல்கள்) அழிந்துவிட்டன; (அவர் தமது வாளால் தம்மைத்தாமே குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்) என்று மக்கள் எண்ணுகிறார்கள்” என்று தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதைக் கூறியவர் தவறிழைத்துவிட்டார். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு” என்று கூறியவாறு, தம் இரு விரல்களையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். (தொடர்ந்து) “அவர் துன்பங்களைத் தாங்கினார்; (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்து) பூமியில் உலவிய இவரைப் போன்ற அரபுகள் மிகவும் குறைவானவர்களே” என்று கூறினார்கள்.261 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “(இவரைப் போன்றவர்) பூமியில் பிறப்பது அரிது” என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

237

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் கைபருக்கு வந்தார்கள் - அவர்கள் ஒரு சமுதாயத்தார்மீது இரவு நேரத்தில் (படையெடுத்துச்) செல்வார் களாயின் காலை நேரம் வரும்வரையில் அவர்களை நெருங்கமாட்டார்கள்- அவ்வாறே காலையானதும் யூதர்கள் தம் மண்வெட்டிகளையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு (வயல்வெளிகளை நோக்கி) வெளியேறி வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை யூதர்கள் பார்த்த போது, “முஹம்மதும், அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும், (அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்)” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “கைபர் பாழாகிவிட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட(வர்களான அந்தச் சமுதாயத்த)வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்” என்று கூறி னார்கள்.262 அத்தியாயம் :

238

அனஸ் பின் மாóக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அதிகாலை நேரத்தில் நாங்கள் (போரிடுவதற்காக) கைபருக்குச் சென்றோம். அந்த ஊர்வாசிகள் மண்வெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபோது, “முஹம்மதும் -அல்லாஹ் வின் மீதாணையாக! முஹம்மதும்- (அவரது ஐந்தணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்)” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்). கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்கு வோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்” என்று கூறினார்கள். அப்போது எங்களுக்குக் கழுதை இறைச்சி கிடைத்தது. எனவே, நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், “(நாட்டுக்)கழுதை இறைச்சியை உண்ண வேண்டாமென அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களைத் தடுக்கின்றனர். ஏனெனில், அது அசுத்த மாகும்” என்று அறிவித்தார். அத்தியாயம் :

239

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போரின்போது) ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) கழுதைகள் சாப்பிடப்பட்டுவிட்டன” என்று கூறினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். பிறகு இரண்டாம் முறையும் அவர் வந்து, “கழுதைகள் சாப்பிடப்பட்டுவிட்டன” என்று கூறினார். அப்போதும் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வந்து, “கழுதைகள் தீர்ந்துபோய்விட்டன” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு உத்தரவிட அவர், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கின்றனர்” என்று மக்களிடையே அறிவிப்புச் செய்தார். உடனே, இறைச்சி கொதித்துக்கொண்டிருந்த அந்தப் பாத்திரங் கள் கவிழ்க்கப்பட்டன. அத்தியாயம் :

240

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: கைபருக்கு அருகே (ஓரிடத்தில்) நபி (ஸல்) அவர்கள் இருட்டிலேயே சுப்ஹ் தொழுதுவிட்டுப் பிறகு, “அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக் கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்” என்று கூறினார்கள். கைபர்வாசிகள் (முஸ்லிம் படை களைக் கண்டதும்) வீதிகளில் ஓடினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம்முடன்) போரிட்டவர்களைத் தாக்கினார்கள். அவர்களின் குடும்பத்தா(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைக் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப் பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள் (முதலில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் சொந்தமானார்கள். அவரது விடுதலையையே மணக்கொடையாக ஆக்கி (அவரை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்து)க்கொண்டார்கள். அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை ஸாபித் (ரஹ்) அவர்கள் அறிவித்தபோது அவர்களிடம், “அபூ முஹம்மதே! நபி (ஸல்) அவர்கள் என்ன மணக்கொடை கொடுத்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நீங்கள்தான் கேட்டீர்களா?” என்று நான் வினவினேன். அதற்கு ஸாபித் (ரஹ்) அவர்கள் தமது கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக (“ஆம்' என்று கூறுவதுபோல) தமது தலையை அசைத்தார்கள். அத்தியாயம் :

241

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (கைபர் போரில்) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை நபி (ஸல்) அவர்கள் கைது செய்து, பின்னர் அவர்களை விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்தச் செய்தியைக் கூறுகையில் அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் என்ன மணக்கொடை கொடுத்தார்கள்?” என்று நான் கேட்டேன். “(ஸஃபிய்யா-ரலி) அவர்களது விடுதலையையே அவர்களின் மணக்கொடையாக ஆக்கினார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :

242

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர்மீது போர் தொடுத்தபோது' அல்லது “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பியபோது', மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்; (அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன்,) லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனையும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கின்றான்” என்று கூறினார்கள். அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஊர்திப் பிராணிக்குப் பின்னால் இருந்துகொண்டு, “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (யுக்தியும் சக்தியும் அல்லாஹ்வின் மூலமே அன்றி வேறெதன் மூலமும் இல்லை) என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் கைஸே!” என்று அழைத்தார்கள். “காத்திருக்கிறேன் (கூறுங்கள்), அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “உமக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங் களில் ஒரு கருவூலமாகும்” என்று கூறினார்கள். நான், “சரி (கட்டாயம் கூறுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினேன்.(அந்த வார்த்தை,) “லா ஹவ்ல வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று சொன்னார்கள்.263 அத்தியாயம் :

243

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அன்றைய தினத்தின் போரை முடித்துக்கொண்டு) தம் படையினரிடமும், எதிர் அணியினர் தம் படையினரிடமும் திரும்பியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே (“குஸ்மான்' என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் இருந்தார். அவர், (யூதர்களின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்ட எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தமது வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார். அப்போது, “இன்றைய தினம் இன்ன மனிதர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தி செய்ததைப் போன்று வேறெவரும் நம்மில் தேவை தீரப் போரிடவில்லை” என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். அப்போது மக்களில் (அக்ஸம் பின் அபில்ஜவ்ன் என்ற) ஒருவர், “நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப்போகிறேன்” என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார். அவர் நிற்கும்போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றார். அந்த (குஸ்மான் என்ற) மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி தமது வாளை (அதன் கீழ் பகுதியைப்) பூமியில் வைத்து, அதன் கூரான மேல்பகுதியைத் தமது மார்புகளுக்கிடையில் வைத்து, பிறகு அந்த வாளின் மீது தமது உடலை அழுத்தித் தற்கொலை செய்துகொண்டார். (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே நான், “அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு' என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடிப் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்.) பிறகு அவர் மிகக் கடுமையாக (எதிரிகளால்) காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி, தமது வாளின் (கீழ்) முனையைப் பூமியில் (நட்டு)வைத்து அதன் மேல்முனையைத் தம் மார்புகளுக்கிடையில் வைத்துத் தம்மை அந்த வாளின் மீது அழுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால்,(உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்” என்று கூறினார்கள்.264 அத்தியாயம் :

244

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போது தம்முடன் இருந்தவர்களில், தம்மை முஸ்லிம் என்று கூறிக்கொண்ட ஒரு மனிதரைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது, அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அவருக்கு நிறையக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. மக்களில் சிலர், (நபி (ஸல்) அவர்களின் அந்தச் சொல்லை) சந்தேகப்படலாயினர். அப்போது அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணர்ந்தார். எனவே, தமது அம்புக் கூட்டுக்குள் கையை நுழைத்து, அதிலிருந்து அம்புகளை எடுத்து, அவற்றால் தம்மை அறுத்துத் தற்கொலை செய்துகொண்டார். (அதைக் கண்ட) முஸ்லிம்களில் சிலர் விரைந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சொன்னது உண்மைதான் என அல்லாஹ் உறுதிப்படுத்திவிட்டான். இன்ன மனிதர் தம்மைத்தாமே அறுத்துக் தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறினர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்னாரே! நீங்கள் எழுந்து சென்று (மக்களிடையே), “இறை நம்பிக்கையாளரைத் தவிர (வேறெவரும்) சொர்க்கத்தில் நுழைய முடியாது. அல்லாஹ், இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதரின் வாயிலாகவும் வலுவூட்டுகின்றான்' என்று பொது அறிவிப்புச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.265 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

245

அபூஹ‚ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன்ஹுனைன் போரில் கலந்துகொண்டோம்... இதை உபைதுல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். “கைபர் போரில் நபி (ஸல்) அவர்களு டன் கலந்துகொண்ட ஒருவர் எனக்குக் கூறினார்...” இந்த ஹதீஸ் மொத்தம் ஏழு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

246

யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சலமா (பின் அல்அக்வஉ - ரலி) அவர்களின் காலில் ஒரு வெட்டுக் காயத்தின் அடையாளத்தை நான் கண்டேன். அவரிடம், “அபூமுஸ்லிமே! இது என்ன காயம்?” என்று கேட்டேன். “இது கைபர் போர் தினத்தில் ஏற்பட்ட காயம். அப்போது மக்கள், “சலமா தாக்கப்பட்டு விட்டார்' என்று கூறினர். உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் அந்தக் காயத்தின் மீது மூன்று முறை இலேசாக உமிழ்ந்தார்கள். (அதன்பின்) இந்த நேரம்வரை (அதில்) எனக்கு நோவு ஏற்பட்டதில்லை” என்று சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

247

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு போரில் (கைபரில்) நபி (ஸல்) அவர்களும், யூத இணைவைப்பாளர்களும் சந்தித்துப் போரிட்டுக்கொண்டனர். (போர் நடைபெற்றபோது ஒருநாள் போரை நிறுத்திவிட்டு) முஸ்லிம்கள், யூதர்கள் ஆகியோரில் ஒவ்வொரு கூட்டத்தாரும்தத்தம் படையினர் (தங்கியிருந்த இடத்தை) நோக்கித் திரும்பினர். முஸ்லிம்களிடையே ஒருவர் இருந்தார். அவர் (போரின்போது யூதர்களான) இணைவைப்பாளர்களின் அணியிலிருந்து பிரிந்துசென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகித்) தனியாகப் போரிட்ட எவரையும் விட்டுவிடாமல் பின்தொடர்ந்து சென்று, தனது வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! (இன்றைய தினம்) இன்ன மனிதர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தி செய்தது போல வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை” என்று (மக்களால்) பேசப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். “(வீரதீரத்துடன் கடுமையாகப் போரிட்ட) இவரே நரகவாசிகளில் ஒருவராயிருந்தால் எங்களில் யார்தான் சொர்க்கவாசி!” என்று மக்கள் கூறினர். அந்த மக்களில் ஒருவர், “நான் அவரைப் பின்தொடர்ந்து செல்லப்போகிறேன். அவர் விரைந்தாலும் மெதுவாகச் சென்றாலும்அவருடன் இருப்பேன்” என்று கூறினார். (பிறகு அவரைத் தேடிக் கண்டு பிடித்துத் தொடர்ந்து சென்றார். வீர தீரமாகப் போரிட்ட.) அந்த மனிதர் (போரில்) காயப்படுத்தப்பட்டார். (வலி தாங்க முடியாமல்) அவசரமாக இறந்துபோக விரும்பி, தமது வாளின் (கீழ்) முனையைப் பூமியில் (நட்டு) வைத்து, அதன் மேல்முனையைத் தம் மார்புகளுக்கிடையில் வைத்து, அதன் மீது தம்மை அழுத்தித் தற்கொலை செய்து கொண்டார். (அவரைப் பின்தொடர்ந்து சென்று இந்தக் காட்சிகளைக் கண்டு வந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என நான் உறுதி கூறுகிறேன்” என்று கூறினார். “என்ன அது?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (கண்டு வந்ததை) நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால், உண்மையில் அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இன்னொரு மனிதர்) மக்களின் வெளிப் பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்” என்று கூறினார்கள்.266 அத்தியாயம் :

248

அபூஇம்ரான் (அப்துல் மலிக் பின் ஹபீப் அல்ஜவ்னீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள் (ஒருமுறை) வெள்ளிக்கிழமை அன்று (பஸ்ராவில் இருந்த ஒரு பள்ளிவாசலில்) மக்களை நோட்டமிட்டார்கள். அப்போது (அவர்களின் தலையில்) “தைலசான்' எனும் ஒரு வகை சால்வையைக் கண்டார்கள்.267 உடனே, “இப்போது இவர்கள் கைபர் யூதர்களைப் போல உள்ளனர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

249

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் அலீ (பின் அபீதாலிப் -ரலி) அவர்கள் பின்தங்கிவிட்டார்கள். அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களுடன் செல்லாமல், பின்தங்கிவிட்டேனே!” என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டார்கள். (கைபர்) வெற்றி கொள்ளப்பட்ட நாளின் (முந்தைய) இரவில் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப்போகிறேன்”; அல்லது, “(அத்தகைய) ஒரு மனிதர் நாளை இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்” (என்று சொல்லிவிட்டு,) “அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள். அதை (யாரிடம் கொடுக்கப்போகிறார்கள் என்று) நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது, “இதோ, அலீ!” என்று கூறப்பட்டது. (அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் (அலீ-ரலி) அவர்களிடம் (அக்கொடியைக்) கொடுக்க, (நபியவர்கள் சொன்னவாறே) அவர்களுக்கு வெற்றியளிக்கப்பட்டது.268 அத்தியாயம் :

250

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நாளில், “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற, மேலும், அல்லாஹ்வுடையவும் அவனு டைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம், நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப்போகிறேன். அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள். அந்தக் கொடி தம்மில் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் ஆழ்ந்திருந்தனர். மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அலீ பின் அபீதாலிப் எங்கே?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண்வலி ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்டபோது அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே அன்னாரது கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள், “நம்மைப் போன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும்வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நிதானமாகச் சென்று, அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள்மீது கடமையாகின்ற, அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது (அரபியரின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக்கொள்வதைவிட, அல்லது அவற்றைத் தர்மம் செய்வதை)விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று சொன் னார்கள்.269 அத்தியாயம் :

251

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தோம். நபி (ஸல்) அவர்களுக்கு (“கமூஸ்' என்னும்) கோட்டையின் வெற்றியை அல்லாஹ் அளித்தபோது, (போர்க் கைதியான) ஸஃபிய்யா பின்த் ஹுயை பின் அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புதுமணப் பெண்ணாக இருந்த ஸஃபிய்யாவின் கணவர் (போரில்) கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில் “குமுஸ்' பங்கிலிருந்து) பெற்று (மணந்து)கொண்டார்கள். அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்கள். (கைபருக்கு அருகிலுள்ள) “சத்துஸ் ஸஹ்பா' என்னுமிடத்தை நாங்கள் அடைந்தபோது மாதவிடாயிலிருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அதன் பிறகு (பேரீச்சம்பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) “ஹைஸ்' எனப்படும் ஓர் உணவைத் தயாரித்துச் சிறிய தோல் விரிப்பில் வைத்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “உன் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய மணவிருந்தாக (வலீமா) அது அமைந்தது. பிறகு நாங்கள் மதீனா நோக்கிப் புறப்பட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின்மேல், ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத் திரையமைத்தார்கள். பிறகு தமது ஒட்டகத்தின் அருகில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து, தமது முழங்காலை வைக்க, அவர்களது முழங்கால் மீது தமது காலை வைத்து (அன்னை) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் ஏறியதை நான் பார்த்தேன்.270 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

252

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுடன் கைபர் வழியில் (“சத்துஸ் ஸஹ்பா' எனும் இடத்தில்) மூன்று நாட்கள் தங்கி தாம்பத்திய உறவை ஆரம்பித்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் “பர்தா' முறை விதியாக்கப்பட்டவர்களில் (நபியவர்களின் துணைவியரில்) ஒருவராக இருந்தார்கள்.271 அத்தியாயம் :

253

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள “சத்துஸ் ஸஹ்பா' எனுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் மணவிருந்துக்கு (வலீமா) முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல்விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டுவந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (“ஹைஸ்' எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்óம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள், “ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இறைநம்பிக்கை யாளர்களின் அன்னை (நபியவர்களின் துணைவி)யரில் ஒருவரா? அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?” என்று பேசிக்கொண்டனர். “ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப் - திரையிட்(டுக்கொள்ளும்படி கட்டளையிட்)டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (நபியவர்களின் துணைவியரில்) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்” என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்ட போது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்தபிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள்.272 அத்தியாயம் :

254

அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கைபரை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு மனிதர், கொழுப்பு அடங்கிய தோல்பை ஒன்றை எறிந்தார். நான் அதை எடுக்க பாய்ந்து சென்றேன். அப்போது நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். (என் ஆசையை நபியவர்கள் தெரிந்துவிட்டதால்) நான் வெட்கமடைந்தேன்.273 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

255

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போரின்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டையும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிகளையும் உண்ண வேண்டா மெனத் தடை விதித்தார்கள்.274 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் நாஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே, “வெள்ளைப் பூண்டு உண்ண வேண்டாம்” என்பது இடம்பெற்றுள்ளது. நாட்டுக் கழுதைகளின் இறைச்சி (தொடர்பாக) சாலிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே காணப்படுகிறது. அத்தியாயம் :

256

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முத்ஆ' (தவணை முறை) திருமணம் செய்ய வேண்டாம் எனவும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் எனவும் தடை விதித்தார்கள்.275 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

257

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை (உண்ண வேண்டாமென)த் தடை செய்தார்கள். அத்தியாயம் :

258

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

259

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (நாட்டுக்) கழுதை களின் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடை விதித்தார்கள். குதிரைகளை (அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள் அனுமதித்தார்கள். அத்தியாயம் :

260

இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போர் அன்று எங்களுக்குப் பசியேற்பட்டது. அப்போது (சமையல் செய்யப்பட்டுக்கொண்டிருந்த) பாத்திரங்கள் கொதித்துக்கொண்டிருந்தன. அவற்றில் சில பாத்திரங்களில் (இருந்த இறைச்சி) வெந்தும்விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் வந்து, “கழுதைகளின் இறைச்சியில் சிறிதும் உண்ணாதீர்கள். அதைக் கொட்டிவிடுங்கள்” என்று கூறினார். இதன் அறிவிப்பாளர் கூறுகிறார்: அப்போது நாங்கள், “அதை (உண்ண வேண்டாமென) நபி (ஸல்) அவர்கள் தடை விதித்ததற்குக் காரணம், அதில் (நபி (ஸல்) அவர்களுக்குச் சேர வேண்டிய) “குமுஸ்' நிதி எடுக்கப்பட்டிருக்கவில்லை; (அதனால், தாற்காலிகமாகத் தடை விதித்துள்ளார்கள்)” என்று பேசிக்கொண்டோம். எங்களில் சிலர், “அறவே (நிரந்தரமாக உண்ண வேண்டாமென்றே) தடை விதித்தார்கள். ஏனெனில், அவை மலத்தைத் தின்கின்றன” என்று கூறினர்.276 அத்தியாயம் :

261

(கைபர் போரில்) மக்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு(நாட்டு)க் கழுதைகள் கிடைத்தன. உடனே அவற்றை மக்கள் சமைத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், “பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்” என்று பொதுஅறிவிப்புச் செய்தார். இதை பராஉ (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

262

கைபர் போரின்போது மக்கள் (அடுப்புகளில்) பாத்திரங்களை வைத்து (நாட்டுக் கழுதை இறைச்சியை சமைத்து)விட்டிருக்க நபி (ஸல்) அவர்கள், “பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள். இதை பராஉ (ரலி) அவர்களும் இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

263

“நாங்கள் நபி (ஸல்) அவர் களுடன் (கைபர்) போருக்குச் சென்றோம்...” (என்று தொடங்கும்) முந்தைய ஹதீஸின் கருத்தில் அமைந்த பராஉ (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

264

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், கைபர் போரின்போது நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை-அது பச்சையாயிருந்தாலும் சமைக்கப்பட்டிருந்தாலும்-எறிந்துவிடுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதற்குப்பின் அதை உண்ண (அனுமதி யளித்து) எங்களுக்கு அவர்கள் உத்தர விடவேயில்லை. அத்தியாயம் :

265

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைப் புசிக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்ததற்குக் காரணம், அது மக்களைச் சுமந்து செல்லும் வாகனமாக இருப்பதால் (அது உண்ணப் படும் பட்சத்தில்) அவர்களுக்கு வாகனம் இல்லாமல் போய்விடுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள் என்பதாலா? அல்லது கைபர் போரின் போது நாட்டுக் கழுதைகளை (புசிக்க வேண்டாமென) அவர்கள் (நிரந்தரமாகத்) தடை செய்துவிட்டார்களா என்பது எனக்குத் தெரியாது. அத்தியாயம் :

266

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரு பங்குகளையும் காலாட்படை வீரருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள். இந்த அறிவிப்பிற்கு நாஃபிஉ (ரஹ்) அவர்கள், “(போரில் கலந்துகொண்ட) ஒரு மனிதருடன் ஒரு குதிரையிருந்தால் (குதிரைக்காக இரு பங்குகளும், உரிமை யாளருக்காக ஒரு பங்கும் சேர்த்து) அவருக்கு மூன்று பங்குகள் கிடைக்கும். அவருடன் குதிரை இல்லாவிட்டால் அவருக்கு ஒரு பங்கு கிடைக்கும்” என்று விளக்கம் அளித்தார்கள்.277 அத்தியாயம் :

267

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “(அல்லாஹ்வின் தூதரே!) கைபர் (போரில் கிடைத்த போர்ச் செல்வத்தின்) “குமுஸ்' (ஐந்தில் ஒரு பாகம்) நிதியிலிருந்து பனுல் முத்தலிப் கிளையினருக்குக் கொடுத்தீர்கள்; எங்களுக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டீர்கள். நாங்களும் அவர்களும் உங்களுடன் ஒரே மாதிரியான உறவு முறை உடையவர்கள்தானே?” என்று கேட்டோம். அப்போது (அல்லாஹ்வின் தூதர் -ஸல்) அவர்கள், “பனுல் முத்தóபும் பனூ ஹாஷிமும் ஒருவர்தான்” என்று கூறினார்கள். (மற்றோர் அறிவிப்பில்,) “பனூ அப்தி ஷம்ஸ் கிளையாருக்கும் பனூ நவ்ஃபல் கிளையாருக்கும் நபி (ஸல்) அவர்கள் (குமுஸில்) சிறிதும் பங்கு தரவில்லை” என்று ஜுபைர் (ரலி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.278 அத்தியாயம் :

268

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப் பட்டுவிட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூருஹ்ம் ஆவார். நான்தான் அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். -அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூபுர்தா ஆமிர் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “எனது (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்” என்றோ “ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம்” என்றோ (என் தந்தை அபூமூசா (ரலி) அவர்கள்) சொன்னார்கள்- நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனா நோக்கிப்) பயணித்தோம். எங்கள் கப்பல் (திசை மாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை (கொண்டுசென்று) இறக்கிவிட்டது. (அபிசீனியாவில்) ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். (ஏற்கெனவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து, அவர் தம் சகாக்களுடன் அபிசீனியாவில் தங்கியிருந்தார்.) பிறகு (அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க) அவருடன் நாங்களும் தங்கினோம். இறுதியில், நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம்.279 அப்போது சிலர், கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, “உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்துவிட்டோம்” என்று கூறலாயினர். எங்களுடன் (மதீனாவிற்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள்.நஜாஷீ மன்னரை நோக்கி (அபீசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மா (ரலி) அவர்களும் ஒருவராவார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தம்முடைய மகள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களைக் கண்டபோது, “இவர் யார்?” என்று (தமது மகள் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம்) கேட்டார்கள். “(இவர்) அஸ்மா பின்த் உமைஸ்” என்று ஹஃப்ஸா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், “இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?” என்று கேட்டார்கள். அதற்கு, “ஆம்' என்று அஸ்மா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் வந்துவிட்டோம். ஆகவே, உங்களைவிட நாங்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்டு அஸ்மா (ரலி) அவர்கள் கோபப்பட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியாக நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்றுவந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவி லிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய “நாட்டில்' அல்லது “பூமியில்' இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்காமல் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறி, அவர்களிடம் (நியாயம்) கேட்கப்போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்லமாட்டேன்; திரித்துப் பேசவுமாட்டேன். நீங்கள் சொன்னதைவிடக் கூட்டிச் சொல்லவுமாட்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

269

நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உமர் அவர்கள் இன்னின்னவாறு சொன்னார்கள்” என்று கூறினார்கள். “அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்” என்று அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களைவிட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவருடைய சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு)தான் உண்டு. (அபிசீனியா விலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு” என்று கூறினார்கள். அஸ்மா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூமூசாவும் அவர்களுடைய கப்பல் சகாக்களும் கூட்டங்கூட்டமாக என்னிடம் வந்து, இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டனர். அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்தப் பொன்மொழியைவிட இந்த உலகத்தில் வேறெதுவும் அவர்களின் மகிழ்ச்சிக்குரியதாகவோ, அவர்களின் மனதில் பெருமைக்குரியதாகவோ இருக்கவில்லை. அத்தியாயம் :

270

(தொடர்ந்து) அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் அபூமூசா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைத் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்காவிட்டாலும், இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும், அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். “அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால்' அல்லது “எதிரிகளைச் சந்தித்தால்' அவர்களைப் பார்த்து, “என் தோழர்கள், தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடு கின்றனர் என்று (துணிவோடு) கூறுவார்” என்று கூறினார்கள்.280 இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

271

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அபிசீனியாவிலிருந்து அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த) நாங்கள் கைபர் வெற்றிக்குப்பின் (ஜஅஃபர் (ரலி) அவர்களுடன்) நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அவர்கள் (போர்ச் செல்வத்திலிருந்து) எங்களுக்கும் பங்கு தந்தார்கள். எங்களைத் தவிர (கைபர்) வெற்றியின்போது (படையில்) இருக்காத வேறெவருக்கும் நபி (ஸல்) அவர்கள் பங்கு தரவில்லை. அத்தியாயம் :

272

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கைபரை வெற்றி கொண்டோம். அப்போது நாங்கள் பொன்னையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. மாடு, ஒட்டகம், (வீட்டு) உபயோகப்பொருட்கள், தோட்டங்கள் ஆகியவற்றையே போர்ச் செல்வமாகப் பெற்றோம். பிறகு நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள) “வாதில் குரா' எனுமிடத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். நபியவர்களுடன் “மித்அம்' எனப்படும் ஓர் அடிமையும் இருந்தார். அவரை “பனுள் ளிபாப்' குலத்தாரில் (ரிஃபாஆ பின் ஸைத் என்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் சிவிகையை அந்த அடிமை இறக்கிக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு அவர்மீது பாய்ந்தது. “அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்!” என்று மக்கள் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை. எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும்முன் அவர் எடுத்துக்கொண்ட போர்வையே அவருக்கு நரக நெருப்பாகி எரிந்துகொண்டிருக்கிறது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்டபோது ஒரு மனிதர், “ஒரு செருப்பு வாரை' அல்லது “இரண்டு செருப்பு வார்களைக்' கொண்டுவந்து, “இது (போர்ச் செல்வம் பங்கிடப்படும்முன்) நான் எடுத்துக்கொண்ட பொருள்” என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இது சாதாரண செருப்பு வார் அல்ல. இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே) நரகத்தின் “செருப்பு வார்' அல்லது “இரு வார்கள்' ஆகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

273

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் உயிர் யார் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! பின்னால்வரும் மக்களை ஏதுமில்லாத வறியவர்களாக விட்டுச்சென்றுவிடுவேனோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், எனது ஆட்சிக் காலத்தில் எந்த ஊர் வெற்றி கொள்ளப்பட்டாலும் அதை, கைபர் நிலங் களை நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்ததுபோல (தனி மனிதருக்கான வருவாய் மானியமாக) பங்கிட்டுக் கொடுத்திருப்பேன். எனினும், அவற்றை (எதிர்கால) மக்களுக்குக் கருவூலமாக (அறக்கொடையாக்கி)விட்டுச் செல்கிறேன். அதில் அவரவர் தத்தமது பங்கைப் பெற்றுக்கொள்வர். அத்தியாயம் :

274

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பின்னால் வரும் முஸ்லிம்கள் (உடைய ஏழ்மை பற்றிய அச்சம் எனக்கு) இல்லையாயின் எந்த ஊர் (எனது ஆட்சிக் காலத்தில்) வெற்றி கொள்ளப்படுகிறதோ அதை, கைபர் நிலங்களை நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்ததுபோல நானும் பங்கிட்டுக் கொடுத்துவிடுவேன். இதை அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.281 அத்தியாயம் :

275

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் வெற்றிக்குப் பிறகு) நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “(போரில் கிடைத்த செல்வத்தில் எனக்கும் ஒரு பங்கு கொடுங்கள்” என்று) கேட்டேன். அப்போது சயீத் பின் அல்ஆஸ் உடைய மகன்களில் (அபான் என்றழைக்கப்பட்ட) ஒருவர், “இவருக்குப் பங்கு கொடுக்காதீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.உடனே நான், “இவர் இப்னு கவ்கல் (என்ற நுஃமான் பின் மாலிக்) அவர்களை (உஹுத் போரில்) கொன்றவர்” என்று கூறினேன். உடனே அவர் (என்னைப் பற்றி), “என்ன ஆச்சரியம்! (தனது “தவ்ஸ்' குலத்தார் வசிக்கின்ற) “ளஃன்' எனும் மலை உச்சியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழிமுயல் (ஒரு முஸ்லிமைக் கொன்று விட்டதற்காக என்னைக் குறை சொல்கின்றதே!)” என்று கூறினார்.282 அத்தியாயம் :

276

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபான் (பின் சயீத்) அவர்களை ஒரு போர்ப் படையில் (தளபதியாக) மதீனாவிலிருந்து நஜ்தை நோக்கி அனுப்பிவைத்தார்கள். பிறகு, கைபர் வெற்றிக்குப்பின் அங்கிருந்த நபி (ஸல்) அவர்களிடம் அபானும் அவருடைய தோழர்களும் வந்தனர். அவர்களுடைய குதிரைகளின் சேணங்களெல்லாம் பேரீச்ச மர நார்களைப் போல் இருந்தன. (வெற்றிச் செல்வங்கள் ஏதுமின்றி வெற்றுடலாய் காணப்பட்டன). அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! (கைபரில் கிடைத்த போர்ச் செல்வத்திலிருந்து) இவர்களுக்குப் பங்கிட்டுத் தராதீர்கள்” என்று கூறினேன். அதற்கு அபான் அவர்கள், “ளஃன்' மலை உச்சியிலிருந்து இறங்கி வந்த குழிமுயலே! நீயா இப்படி(ச் சொல்கிறாய்)?” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபானே! அமருங்கள்” என்று கூறினார்கள். ஆனால், அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில்) பங்கு தரவில்லை. அத்தியாயம் :

277

சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கைபர் வெற்றிக்குப்பின்) அபான் பின் சயீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சலாம் கூறினார்கள். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர் இப்னு கவ்கல் (என்ற நுஅமான் பின் மாலிக்) அவர்களைக் கொன்றவர்” என்று கூறினார்கள். உடனே அபான் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களை நோக்கி, “என்ன ஆச்சரியம்! “ளஃன்' மலை உச்சியிலிருந்து துள்ளியோடி வந்திருக்கும் இந்தக் குழிமுயல் (நான் முஸ்லிமாகாமல் இருந்தபோது உஹுத் போரில் இப்னு கவ்கல் எனும் முஸ்லிமான) ஒரு மனிதரைக் கொன்றுவிட்டதற்காக என்னைக் குறைசொல்கிறதே! அல்லாஹ் என் கைகளால் (வீர மரணத்தை அவருக்கு வழங்கி) அவரை கண்ணியப்படுத்தியுள்ளான். (அப்போது என்னை அவர் கொன்றிருந்தால் நான் இழிவுக்குரியவனாகி இழப்புக்குள்ளாகிப் போயிருப்பேன். ஆனால்,) அவருடைய கைகளால் என்னைக் கேவலப்படுத்தாமல் அல்லாஹ் தடுத்துவிட்டான்” என்று கூறினார்கள்.283 அத்தியாயம் :

278

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் எஞ்சியதிலிருந்தும் தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள்.284 அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (“நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தார் சாப்பிடுவார்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே,) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு மாற்றத்தையும் செய்யமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எந்த நிலையில் அந்தச் சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் (அந்தச் சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன்” என்று (ஃபாத்திமா அவர்களுக்குப்) பதில் கூறி(யனுப்பி) னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். இதனால் அபூபக்ர் (ரலி) அவர்கள்மீது மனவருத்தம் கொண்டு இறக்கும்வரையில் அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்தபின், ஆறுமாத காலம் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா (ரலி) இறந்தபோது, (இறப்பதற்கு முன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கேட்டுக் கொண்டிருந்ததற்கிணங்க) அவர்களுடைய கணவர் அலீ (ரலி) அவர்கள் இரவிலேயே ஃபாத்திமாவை அடக்கம் செய்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்குக்கூட இது குறித்துத் தகவல் தெரிவிக்கவில்லை. அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு (இறுதித் தொழுகை) தொழுவித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் வாழ்ந்தவரையில் அலீ (ரலி) அவர்கள்மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக்கவனம் இருந்துவந்தது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்துவிட்டபின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ (ரலி) அவர்கள் கண்டார்கள்.285 எனவே, (ஆட்சித் தலைவர்) அபூபக்ரிடம் சமரசம் பேசவும் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்துகொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்துகொடுத்திருக்கவில்லை. ஆகவே, “தாங்கள் (மட்டும்) எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வர வேண்டாம்” என்று கூறி அலீ (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். (அபூபக்ர் (ரலி) அவர்களுடன்) உமர் (ரலி) அவர்கள் வருவதை அலீ (ரலி) அவர்கள் விரும்பாததே (அலீ (ரலி) அவர்கள் இவ்வாறு கூறக்) காரணமாகும். அப்போது உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்), “அல்லாஹ் வின் மீது சத்தியமாக! நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லாதீர்கள் (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்துவிடலாம்)” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்துகொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களிடம் நான் செல்லத்தான் போகிறேன்” என்று கூறிவிட்டு, அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைத்துதித்தார்கள்- பிறகு (அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி), “தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் (ஆட்சித் தலைமைப்) பொறுப்பையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறாமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எங்களுக்குள்ள உறவுமுறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என நாங்கள் கருதிவந்தோம்” என்று கூறினார்கள். (இது கேட்டு) அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன. அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசத் துவங்கியபோது, “என் உயிர் யார் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி நான் வாழ்வதைவிட, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் அன்புக்குரியவர்கள். இந்தச் செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையில் ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்துவிடவில்லை. இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான் செய்யாமல் விட்டுவிடவுமில்லை” என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், “தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்துகொடுப்ப தற்கான நேரம் (இன்று) மாலையாகும்” என்று கூறினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகையை முடித்ததும் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதேறி ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ (ரலி) அவர்கள் குறித்தும், அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பின்னர் (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரினார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள், ஏகத்துவ உறுதிமொழி கூறியபின் அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், தாம் செய்த இக்காரியத்திற்குக் காரணம், அபூபக்ர் (ரலி) அவர்கள்மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்ததோ அல்ல; மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என (நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாராகிய) நாங்கள் கருதியதேயாகும். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் (எங்களிடம் கேட்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டார்கள். அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது” என்று கூறினார்கள். இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ அவர்களைப் பார்த்து), “நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்” என்று கூறினர். தமது போக்கை அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டுவந்துவிட்டபோது முஸ்லிம்கள்அலீ (ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்க மானவர்களாக ஆகிவிட்டனர்.286 அத்தியாயம் :

279

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது, “இனி நம் வயிறு பேரீச்சங்கனிகளால் நிரம்பும்” என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம். அத்தியாயம் :

280

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபரை வெற்றி கொள்ளும்வரையில் நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை. அத்தியாயம் :

281

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் கூறியதாவது: (கைபர் வெற்றிக்குப்பின்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (சவாத் பின் ஃகஸிய்யா எனப்படும்) ஒருவரை கைபரின் அதிகாரியாக நியமனம்செய்தார்கள். அங்கிருந்து அவர் உயர் ரகப் பேரீச்சங்கனிகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைபரின் பேரீச்சங்கனிகள் எல்லாமே இப்படி (உயர் ரகமானவையாக)த்தான் உள்ளனவா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; அல்லாஹ்வின் தூதரே! மட்டமான பேரீச்சங்கனிகளில் இரண்டு “ஸாஉ'களுக்கு இந்த உயர் ரகப் பேரீச்சங்கனிகளில் ஒரு “ஸாஉ'வையும், மட்டமான பேரீச்சங்கனிகளில் மூன்று “ஸாஉ'களுக்கு இந்தப் பேரீச்சங்கனிகளில் இரண்டு “ஸாஉ'களையும் நாங்கள் வாங்கு வோம்” எனக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர். மட்டமான பேரீச்சங்கனியை திர்ஹங்களுக்கு விற்று, அந்தத் திர்ஹங்களைக் கொண்டு உயர் ரகப் பேரீச்சங்கனியை வாங்குவீராக!” எனக் கூறினார்கள்.288 அத்தியாயம் :

282

அபூசயீத் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் கூறியதாவது: அன்சாரிகளில் பனூ அதீ குடும்பத்தை சேர்ந்த (சவாத் பின் ஃகஸிய்யா எனப்படும்) ஒருவரை கைபருக்கு அதிகாரியாக்கி நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

283

அப்துல்லாஹ் (பின் உமர் -ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, “அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்துகொள்ளலாம்; அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது; (மீதிப் பாதியை மதீனாவின் இஸ்லாமிய அரசுக்குக் கொடுத்துவிட வேண்டும்)” எனும் நிபந்தனையின் பேரில் நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள்.289 அத்தியாயம் :

284

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று அன்பளிப்பாக தரப்பட்டது.292 அத்தியாயம் :

285

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை ஒரு படைக் குழுவினருக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். மக்களில் சிலர் ஸைத் (ரலி) அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால் (இது ஒன்றும் புதிதல்ல.) இவருக்குமுன் (மூத்தா போரின்போது)இவருடைய தந்தையின் (ஸைத் (ரலி) அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறை கூறிக்கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவருடைய மகனான) இவர்தான் அவருக்குப்பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று சொன்னார்கள்.294 அத்தியாயம் :

286

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “துல்கஅதா' மாதத்தில் உம்ரா செய்யச் சென்றபோது மக்காவாசிகள் அவர்களை மக்காவிற்குள் நுழையவிட மறுத்தார்கள். இறுதியில், நபி (ஸல்) அவர்கள், “மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாட்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும்' எனும் நிபந்தனையின் பேரில் மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, “இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்துகொண்ட சமாதான ஒப்பந்த நிபந்தனைகள்' என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், “நாங்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டோம்; நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் நம்புவோமாயின் உங்களை (மக்காவில் நுழைய விடாமல்) தடுத்திருக்கமாட்டோம்; ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுதான்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதும் ஆவேன்” என்று பதிலளித்துவிட்டு, அலீ (ரலி) அவர்களை நோக்கி, “ ”அல்லாஹ்வின் தூதர்' என்பதை அழித்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், “முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (தகுதியைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்தார்கள் -அவர்களுக்கு எழுதத் தெரிந்திருக்கவில்லை- பிறகு, “இது அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மத் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் ஆகும். அதன் விவரமாவது: (முஸ்லிம்களில் எவரும்) உறையிலிட்ட வாளைத் தவிர வேறு ஆயுதங்களை மக்காவிற்குள் கொண்டுவரக் கூடாது. மக்காவாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும்கூட, அவரை முஹம்மது தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மது தடுக்கக் கூடாது” என்று எழுதி(விடுமாறு கூறி)னார்கள். (அடுத்த ஆண்டு) நபி (ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணை(யான மூன்று நாட்கள்) முடிந்தவுடன் மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, “உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் முடிந்துவிட்டது” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டு) வெளியேறினார்கள். அப்போது (உஹுத் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா (ரலி) அவர்களின் (அநாதை) மகள், “என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!” என்று (கூவிக்கொண்டே) நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அவர்கள் அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், “இவளை எடுத்துக்கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளைத் தூக்கிவைத்துக்கொள்” என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்களும், ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும், ஜஅஃபர் (ரலி) அவர்களும் (ஒவ்வொருவரும், “அவளை நான்தான் வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டுச் சச்சரவிட்டுக்கொண்)டனர். அலீ (ரலி) அவர்கள், “நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்” என்று கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்கள், “இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை (அஸ்மா பின்த் உமைஸ்) என் மனைவியாவார்” என்று கூறினார்கள். ஸைத் (ரலி) அவர்கள், “(இவள், நபியவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவத்தின் மூலம் வந்த) என் சகோதரரின் மகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்குச் சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர் (ரலி) அவர்கள், அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், “சிற்றன்னை அன்னையின் இடத்தில் இருக்கிறாள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்களை நோக்கி, “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்களை நோக்கி, “நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள். மேலும், ஸைத் (ரலி) அவர்களை நோக்கி, “நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எமது பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)” என்று கூறினார்கள்.297 அலீ (ரலி) அவர்கள், “தாங்கள் ஹம்ஸாவின் மகளை மணமுடித்துக் கொள்ளக் கூடாதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் மகள் ஆவாள். (ஆகவே, நான் அவளை மணமுடிக்க முடியாது)” என்று சொன்னார்கள்.298 அத்தியாயம் :

287

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கி)ப் புறப்பட்டார்கள். குறைஷி இறைமறுப்பாளர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியாவில் தமது பலிப் பிராணியை அறுத்து (பலியிட்டு)விட்டுத் தமது தலையை மழித்துக்கொண்டார்கள். மேலும், அவர்களுடன், “வரும் ஆண்டில், தாம் (தம் தோழர்களுடன்) உம்ரா செய்ய (அனுமதிக்கப்பட) வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வரமாட்டோம்; குறைஷியர் விரும்புகின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்' எனும் நிபந்தனையின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண் டார்கள். அவர்களிடம் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத்தின்படியே அடுத்த ஆண்டு உம்ரா செய்ய நாடி, மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து)விட்டபோது, குறைஷியர் நபி (ஸல்) அவர்களை (மக்காவைவிட்டு) வெளியேறும்படி உத்தரவிட, நபி (ஸல்) அவர்களும் வெளியேறிவிட்டார்கள்.299 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

288

289

இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின் படி ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு) உம்ரா செய்தபோது, நபி (ஸல்) அவர்களைத் (தாக்கித்) துன்புறுத்தி விடாமலிருப்பதற்காக அவர்களை இணைவைப்பாளர்களின் சிறுவர்களிடமிருந்து நாங்கள் (பாதுகாப்பு வளையம் அமைத்து) மறைத்துக் கொண் டோம்.301 அத்தியாயம் :

290

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (உம்ரத்துல் களாவிற்காக மக்காவுக்கு) வந்தபோது, “யஸ்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் ஒரு குழு நம்மிடம் வந்துள்ளது” என்று இணைவைப்பாளர்கள் பேசிக்கொண்டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி (ஸல்) அவர்கள் “(கஅபாவைச் சுற்றி வருகையில்) மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்' என்றும் “ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும்' என்றும் கட்டளையிட்டார்கள். “(தவாஃப் வரும்போது) மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்' என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடாததற்குக் காரணம் அவர்கள் மீது கொண்ட இரக்கமேயாகும்.302 “நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புப் பெற்ற ஆண்டில் (உம்ரத்துல் களாவிற்காக) மக்காவிற்கு வந்தபோது (தம் தோழர்களை நோக்கி,) “(கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருகையில்) தோள்களைக் குலுக்கியவாறு ஓடுங்கள்; ஏனேனில், உங்கள் பலத்தை இணைவைப்பாளர்களுக்கு நான் காட்ட வேண்டும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. “அப்போது இணைவைப்பாளர்கள், “குஅய்கிஆன்' எனும் மலையின் திசையில் (இருந்து எட்டிப் பார்த்துக்கொண்டு) இருந்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு சலமா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :

291

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்ல(ம் கஅபாவைச் சுற்றிவந்த நேர)த்திலும் ஸஃபா- மர்வா இடையேயும் தொங்கோட்டம் ஓடியது, இணைவைப்பாளர்களுக்குத் தமது வலிமையைக் காட்டுவதற்காகத்தான். அத்தியாயம் :

292

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹுதைபியா உடன்படிக்கையின்படி ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு உம்ரா செய்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டார்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் அவர்களுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். பிறகு மைமூனா (ரலி) அவர்கள் (மக்காவிலிருந்து சிறிது தொலைவிலுள்ள) “சரிஃப்' எனுமிடத்தில் இறந்தார்கள்.303 அத்தியாயம் :

293

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு செய்த) “உம்ரத்துல் களா'வின்போது (முந்தைய ஆண்டு விடுபட்ட உம்ராவை நிறைவேற்றியபோது) மைமூனா (ரலி) அவர்களை மணந்துகொண்டார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

294

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மூத்தா போரின்போது ஜஅஃபர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு (விழுந்து) கிடக்க, அவர்களருகே நான் நின்று (அவர்கள் அடைந்திருந்த) ஈட்டிக் காயங்களும் வாட்களின் காயங்களுமாக ஐம்பது காயங்களை எண்ணினேன். அவற்றில் ஒன்றுகூட அவர்களுடைய முதுகில் (ஏற்பட்ட காயமாக) இருக்கவில்லை. (மாறாக, நேருக்குநேர் நின்று முன்புறத்தி லேயே காயம் அடைந்தார்கள்.) அத்தியாயம் :

295

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூத்தா போரின்போது ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களைப் படைத் தளபதியாக நியமித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஸைத் கொல்லப்பட்டுவிட்டால் ஜஅஃபர் (தலைமையேற்கட்டும்!) ஜஅஃபர் கொல்லப்பட்டுவிட்டால் அப்துல்லாஹ் பின் ரவாஹா (தலைமையேற்கட்டும்)” என்று சொன்னார்கள். நான் அந்த அறப்போரில் அவர்களு டன் (பங்கேற்று) இருந்தேன். நாங்கள் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களைத் தேடிச் சென்றபோது கொலையுண்டவர்களில் அவரைக் கண்டோம். அவர்களுடைய உடலில் இருந்த காயங்கள், ஈட்டிக் காயங்களும் அம்புக் காயங்களுமாக மொத்தம் தொண்ணூறுக்கும் அதிகமாக இருந்ததைக் கண்டோம்.305 அத்தியாயம் :

296

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஸைத் (பின் ஹாரிஸா -ரலி) அவர்களும் ஜஅஃபர் (பின் அபீதாலிப் -ரலி) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) கொல்லப்பட்டுவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப்பெற்று மக்களுக்கு) நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அப்போது சொன்னார்கள்: (முதலில் இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் பிடித்தார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். அடுத்து ஜஅஃபர் பிடித்தார். அவரும் கொல்லப்பட்டு விட்டார். அடுத்து இப்னு ரவாஹா பிடித்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். அறிவிப்பாளர் கூறுகிறார்: அப்போது நபி (ஸல்) அவர்களுடைய கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டி ருந்தன. இறுதியில், அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் பின் அல்வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரது கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்துவிட்டான்” என்று சொன்னார்கள்.306 அத்தியாயம் :

297

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மூத்தா போரில், ஸைத்) இப்னு ஹாரிஸா, ஜஅஃபர் பின் அபீதாலிப் , அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் கவலை கொண்ட முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே!' என்று அழைத்து, ஜஅஃபர் (ரலி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரிவைத்து) அழுவதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்று மீண்டும் வந்து, “அவர்களை நான் தடுத்தேன். ஆனால், அவர்கள் (எனது சொல்லுக்குக்) கட்டுப்படவில்லை” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், “(நீ சென்று அவர்களைத் தடுத்து நிறுத்து” என) மீண்டும் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்று திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களை (அப்பெண்கள்) மிஞ்சிவிட்டனர்” என்றார். -”அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நான் நினைக்கிறேன்- பின்னர் நான் அம்மனிதரை நோக்கி, “அல்லாஹ் உமது மூக்கை மண் கவ்வச் செய்வானாக! நபி (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை; அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக்கூறினேன்.307 அத்தியாயம் :

298

ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், ஜஅஃபர் (ரலி) அவர்களின் மகனா(ர் அப்துல்லாஹ் பின் ஜஅஃப)ருக்கு முகமன் கூறினால், “இரு சிறகுகள் உடையவரின் மகனே! உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்' என்று கூறுவார்கள்.308 அத்தியாயம் :

299

காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: மூத்தா போரின்போது (தீவிரமாகப் போர் புரிந்ததால்), என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைந்துவிட்டன; என் கரத்தில் யமன் நாட்டின் அகலமான வாள் ஒன்று மட்டுமே (உடையாமல்) எஞ்சியது. அத்தியாயம் :

300

காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “மூத்தா' போரின்போது (தீவிரமாகப் போர் புரிந்ததால்) என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைந்துபோயின. என்னுடைய அகலமான யமன் நாட்டு வாள் ஒன்றுதான் என் கையில் உடையாமல் எஞ்சியிருந்தது. அத்தியாயம் :

301

நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் (மூத்தா போருக்கு முன்பு ஒருமுறை நோயின் காரணத்தால்) மூர்ச்சையுற்றுவிட்டார்கள். உடனே (அன்னார் இறந்துவிட்டார் என எண்ணிய என் தாயாரும்) அன்னாருடைய சகோதரி (யுமான) அம்ரா (ரலி) அவர்கள், “அந்தோ! மலையாக இருந்தவரே! அப்படி இருந்தவரே! இப்படி இருந்தவரே!” என்று (பலவாறாகப் புலம்பி) அழத்தொடங்கி னார்கள். அவரைப் பற்றி ஒவ்வொன்றாக எடுத்துச்சொல்லலானார்கள். அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் மூர்ச்சை தெளிந்(து கண் விழித்)தபோது, தம் சகோதரியை நோக்கி, “நீ சொன்ன ஒவ்வொன்றுக்கும் என்னிடம், “இவ்வாறுதான் நீ இருக்கிறாயா?' என்று (வானவர் ஒருவரால்) கேட்கப்பட்டது” என்று (அழுது புலம்பியதைக் கண்டிக்கும் தொனியில்) கூறினார்கள். அத்தியாயம் :

302

நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களுக்கு (நோயின் காரணத்தால்) மூர்ச்சை ஏற்பட்டபோது இப்படி நடந்தது. ஆகவே, அவர்கள் (மூத்தா போரில்) இறந்துவிட்ட (செய்தி எட்டிய)போது, அவருடைய சகோதரி (அவர் முன்பே கண்டித்திருந்த காரணத்தால்) அவருக்காக அழவில்லை. அத்தியாயம் :

303

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹுரகா' கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக்கொண்டபோது அவர், “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக்கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்றுவிட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், “உசாமாவே! அவர், “லா இலாஹ இல்லல்லாஹ்' என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். நான், “(நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தம்மைத் தற்காத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு சொன்னார்” என்று சொன்னேன். (ஆனால், என் சமாதானத்தை ஏற்காமல்) நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எந்த அளவுக் கென்றால், நான், “(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!)' என்றுகூட நினைத்தேன். அத்தியாயம் :

304

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன்.310 அவர்கள் அனுப்பிக்கொண்டிருந்த படைப்பிரிவுகளில் கலந்துகொண்டு ஒன்பது அறப்போர்களுக்குச் சென்றுள் ளேன். (அவற்றில்) ஒருமுறை எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒருமுறை எங்களுக்கு உசாமா (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.311 அத்தியாயம் :

305

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். அவர்கள் அனுப்பிக்கொண்டிருந்த படைப்பிரிவுகளில் கலந்துகொண்டு ஒன்பது அறப்போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒருமுறை எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒருமுறை உசாமா (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். அத்தியாயம் :

306

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒன்பது அறப்போர்களில் கலந்துகொண்டேன்.312 நான் (உசாமா) இப்னு (ஸைத் பின்) ஹாரிஸா (ரலி) அவர்களுடன் அறப் போர் புரிந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள் உசாமா (ரலி) அவர்களை எங்களுக்குத் தளபதியாக நியமித்திருந்தார்கள். அத்தியாயம் :

307

யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன்” என்று சொல்லிவிட்டு, “கைபர் போர், ஹுதைபியா(வில் நடக்கவிருந்து தவிர்க்கப்பட்ட) போர், ஹுனைன் போர், தூ கரத் போர் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்கள். அவற்றில் மீதியை நான் மறந்துவிட்டேன். அத்தியாயம் :

308

அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர் களையும், “நீங்கள் “ரவ்ளத்து காக்' எனும் இடம்வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் “ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), “கடிதத்தை வெளியே எடு” என்று கூறினோம். அவள், “என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று சொன்னாள். நாங்கள், “ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து)விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு)விடுவோம்” என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம். அதில், ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்பாளர்களிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹாத்திபே! என்ன இது?” என்று கேட்டார் கள். ஹாத்திப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப் பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்து களையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால், (இணைவைப்பாளர்களான) மக்கா வாசிகளுக்கு நான் உபகாரம் எதை யாவது செய்து அதற்குப் பிரதியுப காரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால், இணைவைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் என் மார்க்க(மான இஸ்லா)த்தைவிட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவியபின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகரின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவர் பத்ர் போரில் கலந்துகொண்டிருக்கிறார். மேலும், உங்களுக்கென்ன தெரியும்? ஒருவேளை, அல்லாஹ் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்துவிட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள்.314 அப்போது அல்லாஹ் பின்வரும் (60ஆவது) அத்தியாயத்தை அருளினான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரை நண்பர்களாக எடுத்துக் கொண்டு, நட்பின் காரணத்தால் (உங்களின் இரகசியங்களை) அவர்களுடன் (பரிமாறிக் கொண்டு) உறவாட வேண்டாம்! அவர்கள், உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை மறுத்துவிட்டவர்கள்...(60:1) அத்தியாயம் :

309

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்கா வெற்றிப் போருக்காக (மக்கா நோக்கி)ப் புறப்பட்டார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், “அப்போது நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். “கதீத்' எனும் இடத்தை -உஸ்ஃபானுக்கும் குதைதுக்கும் இடையே உள்ள நீர் நிலையை- அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். அந்த மாதம் கழியும் வரையிலும்கூட அவர்கள் நோன்பு நோற்கவில்லை” என்று வந்துள்ளது.316 அத்தியாயம் :

310

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்முடன் முஸ்லிம்கள் பத்தாயிரம் பேரை அழைத்துக்கொண்டு (மக்கா வெற்றிப் போருக்காக) மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். -இது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) வருகை தந்ததிலிருந்து எட்டரை ஆண்டின் தொடக்கத்தில் நடை பெற்றது- நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் நோன்பு நோற்றபடி பயணம் செய்தார்கள். இறுதியில் “கதீத்' என்னுமிடத்திற்குச் சென்று சேர்ந்தார்கள். -இந்த இடம் உஸ்ஃபானுக்கும் “குதைத்' எனுமிடத்திற்குமிடையே உள்ள நீர்நிலையாகும்- (அங்கு) நபி (ஸல்) அவர்கள் நோன்பை விட்டுவிட மக்களும் நோன்பை விட்டுவிட்டார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைகளில் பிந்தியது, அதற்கடுத்துப் பிந்தியதுதான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறுகிறார்கள்.317 அத்தியாயம் :

311

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத் தில் (மக்கா வெற்றிக்குப்பின்) ஹுனைன் நோக்கி (அறப் போருக்காக)ப் புறப்ப(டத் திட்டமி)ட்டார்கள். அப்போது மக்கள் (நோன்பு நோற்கும் விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். சிலர் நோன்பு நோற்றிருந்தார்கள்; சிலர் நோன்பு நோற்றிருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள், தமது வாகனத் தில் நன்கு அமர்ந்துகொண்டபோது ஒரு “பால் பாத்திரத்தை' அல்லது “தண்ணீர்ப் பாத்திரத்தை' கொண்டுவரும்படி கூறி, அதைத் “தமது உள்ளங்கையில்' அல்லது “தமது வாகனத்தில்' வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். அப்போது நோன்பை விட்டுவிட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர்களிடம், “நீங்களும் நோன்பை விடுங்கள்” என்று சொன்னார் கள். அத்தியாயம் :

312

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் (ரமளான் மாதம்) புறப்பட் டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

313

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். “உஸ்ஃபான்' எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் உள்ள பாத்திரம் கொண்டுவரச் செய்து (ரமளானின்) பகற்பொழுதில் மக்கள் காண வேண்டுமென்பதற்காக அதை அருந்தி நோன்பை முறித்துக்கொண்டார்கள். மக்காவை அடையும்வரை நோன்பு நோற்கவில்லை. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள். ஆகவே, (பயணத்தில் நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பை விட்டுவிட விரும்புபவர் விட்டுவிடவும் செய்யலாம்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.318 அத்தியாயம் :

314

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (அதை வெற்றி கொள்வதற்காக மதீனாவிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்ட போது, அவர்கள் வருகிற செய்தி (மக்கா) குறைஷியருக்கு எட்டியது. உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபூசுஃப்யான் பின் ஹர்ப், ஹகீம் பின் ஹிஸாம், புதைல் பின் வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட்டனர்.319 அவர்கள் பயணம் மேற்கொண்டு “மர்ருழ் ழஹ்ரான்' எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தபோது (அங்கே பல இடங்களில் மூட்டப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை, அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன. அப்போது அபூசுஃப்யான், “இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப் பைப் போன்றே இருக்கிறதே” என்று கேட்டார். அதற்கு புதைல் பின் வர்கா, “இது (“குபா'வில் குடியிருக்கும் “குஸாஆ' எனப்படும்) பனூ அம்ர் குலத்தாரின் நெருப்புகள்” என்று கூறினார். உடனே அபூசுஃப்யான் (பனூ) அம்ர் குலத்தாரின் எண்ணிக்கை இதைவிட மிகக் குறைவாகும். (எனவே, அவர்களின் நெருப்பு களாக இருக்க வாய்ப்பில்லை)” என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்துவிட்டனர். உடனே அவர்களை அடைந்து, அவர்களைப் பிடித்து (கைது செய்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தனர். பின்பு அபூசுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கி முன்னேறிச்) சென்றபோது அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “குதிரைப் படை செல்லும்போது நெரிசல் ஏற்படக்கூடிய (குறுகலான) இடத்தில் அபூசுஃப்யானை நிறுத்திவையுங்கள். அவர் முஸ்லிம்களைப் பார்க்கட்டும் (அவர்களது படைபலத்தைப் புரிந்துகொள்ளட்டும்)” என்று கூறினார்கள். (அவ்வாறே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரை (அந்த இடத்தில்) நிறுத்திவைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் அனைத்துக் குலத்தாரின் படைகளும் ஒவ்வொன்றாகஅபூசுஃப்யானைக் கடந்து செல்லத் தொடங்கின. அவரை ஒரு படை கடந்து சென்ற வுடன், “அப்பாஸே! இவர்கள் யார்?” என்று அபூசுஃப்யான் கேட்டார். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இவர்கள் ஃகிஃபாரீ குலத்தார்” என்று பதிலளித்தார்கள். அப்போது, “எனக்கும் ஃகிஃபார் குலத்தாருக்கும் என்ன சம்பந்தம்? (எங்களுக்கிடையில் பூசலோ மோதலோ இல்லையே!)” என்று அபூசுஃப்யான் கூறினார். பிறகு ஜுஹைனா குலத்தார் அவரைக் கடந்து சென்றனர். அப்போது அபூசுஃப்யான் முன்பு போலவே கேட்டார். பிறகு (அவரைக் கடந்து) சஅத் பின் ஹுதைம் குலத்தார் சென்றனர். அப்போதும் அதே போல அபூசுஃப்யான் கேட்டார். (பிறகு) சுலைம் குலத்தார் சென்றனர். முன்பு போலவே அபூசுஃப்யான் கேட்டார். (அப்பாஸ் (ரலி) அவர்களும் முன்பு போலவே பதிலளித்தார்கள்.) இறுதியாக ஒரு (பெரிய) படை முன்னோக்கி வந்தது. அதைப் போன்ற (பெரும்) படையை அபூசுஃப்யான் பார்த்திருக்கவில்லை. “இவர்கள் யார்?” என்று அபூசுஃப்யான் கேட்க, “இவர்கள்தான் அன்சாரிகள். சஅத் பின் உபாதா இவர்களின் தலைவர். அவருடன்தான் (அன்சாரிகளின்) கொடியிருக்கிறது” என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அபூசுஃப்யானே! இன்று, (தப்பிக்க முடியாத மாபெரும்) யுத்த நாளாகும். இன்று கஅபாவி(ன் புனித எல்லையி)னுள்ளேகூட யுத்தம் அனுமதிக்கப்படும்” என்று (உணர்ச்சி வசப்பட்டுக்) கூறினார்கள். அதற்கு அபூசுஃப்யான் “அப்பாஸே! அழிவு நாளில் இது மிக நல்ல நாள் (குறைஷியருக்கு ஆபத்தே; என்றாலும், நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு)” என்று கூறினார். பிறகு, ஒரு படை வந்தது. அது (இதுவரை வந்த) படைகளிலேயே மிகவும் சிறியதாக இருந்தது. அவர்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் இருந்தார் கள். நபி (ஸல்) அவர்களுக்குரிய கொடி, ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம் இருந்தது. அபூ சுஃப்யானைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றபோது அவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), “சஅத் பின் உபாதா என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் என்ன சொன்னார்?” என்று கேட்டார்கள். “இப்படி இப்படி எல்லாம் கூறினார்” என்று அபூசுஃப்யான் (விவரித்துச்) சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உண்மைக்குப் புறம்பானதை சஅத் கூறிவிட்டார்” என்று சொல்லிவிட்டு, “மாறாக, இந்த நாள் இறையில்லம் கஅபாவை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் நாள்; கஅபாவிற்குத் திரை போர்த்தப்படும் (முக்கியமான) நாள்” என்று கூறினார்கள்.320 அறிவிப்பாளர் உர்வா (பின் அஸ்ஸுபைர்-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கொடியை (மக்காவின் பொது அடக்கத்தலத்திற்கு அருகிலுள்ள) “ஹ—þன்' எனும் இடத்தில் நட்டுவைக்கும்படி உத்தரவிட்டார்கள். (மக்கா வெற்றிக்குப்பின்) அப்பாஸ் (ரலி) அவர்கள் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம், “அபூஅப்தில்லாஹ்வே! இங்குதான் அந்தக் கொடியை நட்டுவைக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள்” என்றார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் அன்றைய தினம் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை மக்காவின் மேற்பகுதியான “கதா' எனும் கணவாய் வழியாக (மக்காவிற்குள்) நுழையுமாறு உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “குதா' வழியாக நுழைந்தார்கள்.321 அன்றைய தினம் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களின் குதிரைப் படையினரில் இருவர் வீரமரணம் அடைந்தனர். ஒருவர் ஹ‚பைஷ் பின் அல்அஷ்அர் (ரலி) அவர்களும் மற்றொருவர் குர்ஸ் பின் ஜாபிர் அல்ஃபிஹ்ரீ (ரலி) அவர்களும் ஆவார்கள்.322 அத்தியாயம் :

315

முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி “அல்ஃபத்ஹ்' எனும் (48ஆவது) அத்தியாயத்தை “தர்ஜீஉ' எனும்323 ஓசை நயத்துடன் ஓதிக்கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன். மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டுவிடுவார்கள் என்றில்லாவிட்டால் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் “தர்ஜீஉ' செய்து ஓதிக்காட்டியதைப்போல் நானும் ஓதிக்காட்டியிருப்பேன். அத்தியாயம் :

316

317

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மக்காமீது நமக்கு) வெற்றியளித்தால், இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நாம் தங்கப்போகும் இடம் (பனூ கினானா குலத்தாரின் “முஹஸ்ஸப்' எனும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில்தான் (குறைஷியர்) இறைமறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப்போவதாகச் சூளுரைத்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

318

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி முடிந்து) ஹுனைன் (போருக்குச்) செல்லத் திட்டமிட்டபோது, “அல்லாஹ் நாடினால் நாளை நாம் தங்கப்போகும் இடம் “பனூ கினானா' குலத்தாரின் (முஹஸ்ஸப் எனும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில்தான் (மக்கா குறைஷியர்) இறைமறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப்போவதாகச் சபதம் செய்தார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

319

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒரு மனிதர் வந்து, “இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றான்” எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவனைக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.326 மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், “நாம் அறிந்தவரை நபி (ஸல்) அவர்கள் அன்று இஹ்ராம் கட்டி இருக்கவில்லை. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

320

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தார் கள். அப்போது அவர்கள், “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. சத்தியம் வந்துவிட்டது; (இனி) அசத்தியம் மீண்டும் ஒருமுறை பிறக்காது” என்று கூறிக்கொண்டே, தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள்.327 அத்தியாயம் :

321

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இருந்த (இறைத்தூதர்களான) இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் அகற்றப்பட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களைத் தன் கருணையைவிட்டு அப்புறப்படுத்து வானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விருவரும் அம்புகளின் மூலம் குறிபார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்த தில்லை என்பதை இ(தைச் செய்த)வர்கள் அறிந்தேவைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். பிறகு, கஅபாவில் நுழைந்தார்கள். அதன் மூலைகளில் (நின்று) “தக்பீர்'கள் கூறினார்கள்; ஆனால், அதனுள் தொழாமல் வெளியேறி விட்டார்கள். 328 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. மூன்றாவது தொடர் (நபித்தோழர் விடுபட்ட) “முன்கத்திஉ' ஆகும். அத்தியாயம் :

322

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தம் வாகனத்தின் மீது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அமரவைத்துக்கொண்டு மக்காவின் மேற்பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் கஅபாவின் பொறுப்பாளர்களில் ஒருவரான உஸ்மான் பின் தல்ஹா(ரலி) அவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களது வாகனம் இறுதியில் பள்ளி வாசலில் சென்று மண்டியிட்டு அமர்ந்தது. நபி (ஸல்) அவர்கள், இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டுவரும்படி உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டுவரப்பட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைத் திறந்துகொண்டு) உசாமா (ரலி), பிலால் (ரலி),உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே நீண்ட ஒரு பகல் நேரத்திற்குத் தங்கியிருந்தார்கள்; பிறகு வெளியே வந்தார்கள். மக்கள் கஅபாவினுள் நுழைய ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். நான்தான் (அதனுள்) முதலில் நுழைந்தவன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் (கஅபாவின்) வாசலுக்குப் பின்னே நின்று கொண்டிருக்கக் கண்டேன். உடனே அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?” என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சைகையால் சுட்டிக்காட்டினார்கள். நான் அவர்களிடம், “எத்தனை ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்?” என்று கேட்க மறந்துவிட்டேன்.329 அத்தியாயம் :

323

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலிருந்த “கதா' எனும் கணவாயின் வழியாக (மக்காவினுள்) நுழைந்தார்கள்.330 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

324

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியான “கதா' எனும் கணவாய் வழியாக ஊருக்குள் நுழைந்தார்கள். அத்தியாயம் :

325

இப்னு அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “ளுஹா' தொழுகை தொழுததாக உம்மு ஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் எமக்கு அறிவிக்கவில்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்ட நாளில் தமது வீட்டில் குளித்ததாகவும் பிறகு எட்டு ரக்அத்கள் தொழுததாகவும் உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் அதைவிட விரைவாகத் தொழுத வேறெந்தத் தொழுகையையும் நான் கண்டதில்லை; ஆயினும், அவர்கள் (அந்தத் தொழுகையிலும்) ருகூவையும் சஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்” என்று சொன்னார்கள்.331 அத்தியாயம் :

326

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் தம் ருகூவிலும் சஜ்தாவிலும், “சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க அல்லாஹும் மஃக்ஃபிர் லீ “ (இறைவா! எம் அதிபதியே! உன்னைப் போற்றிப்புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பார்கள்.332 அத்தியாயம் :

327

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்ட மூத்த வயதினருடன் வயதில் இளையவனான எனக்கும் (தமது அவையில்) இடமளித்துவந்தார் கள். ஆகவே, அவர்களில் சிலர், “எங்களுடன் இந்த இளைஞருக்கு ஏன் இடமளிக்கிறீர்கள்? எங்களுக்கு அவர் வயதில் பிள்ளைகள்கூட இருக்கின்ற னரே?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்” என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒருநாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியினைப் பற்றி உணர்த்திக்காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாரும் வந்தவுடன் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், “இதா ஜாஅ நஸ்ருல்லாஹி” (நபியே! இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீர் பார்க்கும்போது உம்முடைய இறைவனைப் புகழ்ந்து அவனைத் துதிப்பீராக! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக!)” எனும் (குர்ஆனின் 110ஆவது “அந்நஸ்ர்') அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக்காட்டி, “இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், “நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்று (விளக்கம்) கூறினர். சிலர், “எங்களுக்குத் தெரியாது” என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னிடம், “இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித்தான் கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அது, அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டது என அறிவித்த அறிவிப்பாகும். ஆகவே, “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள “வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றிதான், (நபியே!) உமது ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீர் உம்முடைய இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! அவன் (நீர் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உமக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள்.333 அத்தியாயம் :

328

சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பியபோது அவரிடம் அபூஷுரைஹ் அல்அத்வீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: தலைவரே! எனக்கு அனுமதி தாருங்கள். மக்கா வெற்றிக்கு மறுநாள், நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை உங்களுக்கு நான் கூறுகிறேன். என் காதுகள் அதைச் செவியுற்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது; அவர்கள் அதைக் கூறும்போது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின் வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வே மக்காவிற்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்குப் புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர் கள் அல்லர். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரத்தை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் இங்கு போர் செய்ததால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், “அல்லாஹ் தன் தூதருக்குத்தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை” என்று கூறிவிடுங்கள். எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி அளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மை நேற்றைய அதன் புனிதத் தன்மையைப் போல் மீண்டு வந்துவிட்டது. (இதை இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லிவிடுங்கள்” என்று கூறினார்கள். அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம், “இதற்கு அம்ர் உங்களுக்கு என்ன பதில் கூறினார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ அபூஷுரைஹே! உம்மை விட இதைப் பற்றி நான் நன்கு அறிந்தவன். நிச்சயமாக, புனித (ஹரம்) எல்லை, குற்றவாளிக்கும், கொலை செய்துவிட்டு, அல்லது கொள்ளை அடித்துவிட்டு ஓடி வந்தவருக்கும் பாதுகாப்பு அளிக்காது என அம்ர் கூறினார்” என்று பதிலளித் தார்கள்.334 (இங்கு “கொள்ளை' என்பதைக் குறிக்க) “கர்பத்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு “சோதனை' என்பது (சொற்) பொருளாகும். அத்தியாயம் :

329

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றி ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்தபோது, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மது வியாபாரத்தைத் தடை செய்து விட்டார்கள்” என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அத்தியாயம் :

330

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள், நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையைக் குறைத்து (கஸ்ர் செய்து) தொழுதவர்களாக (மக்கா நகரில்) பத்து நாட்கள் தங்கினோம்.335 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

331

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரில் இரண்டு ரக்அத்கள் (கஸ்ராகத்) தொழுதபடி பத்தொன்பது நாட்கள் தங்கியிருந்தார்கள்.336 அத்தியாயம் :

332

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (மக்கா வெற்றிப்) பயணத்தின் போது நபி (ஸல்) அவர்களுடன் தொழுகை யைக் குறைத்துத் தொழுதவர்களாக பத்தொன்பது நாட்கள் தங்கினோம். (பொதுவாக) நாங்கள் (பிரயாணம் மேற்கொண்டு தங்கினால்) பத்தொன்பது நாட்கள்வரை குறைத்துத் தொழு(தபடி தங்கு)வோம். அதற்கு மேலும் நாங்கள் தங்கும் போது (குறைத்துத் தொழாமல் வழக்கப்படி) முழுமையாகத் தொழுவோம். அத்தியாயம் :

333

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ஸஅலபா பின் ஸுஐர் (ரலி) அவர்கள்-அன்னாரின் முகத்தை நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் (அன்போடு தடவிக் கொடுத்திருந்தார்கள் - எனக்குத் தெரிவித்தார்கள்...337 அத்தியாயம் :)

334

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களுடன் இருந்தபோது, அபூ ஜமீலா சுனைன் (ரலி) அவர்கள், தாம் நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றிருந்ததாகவும் அவர்களுடன் மக்கா வெற்றி ஆண்டில் (மக்கா நோக்கி இஸ்லாமியச் சேனையில் ஒருவராகப்) புறப்பட்டதாகவும் சொன்னார்கள். அத்தியாயம் :

335

அம்ர் பின் சலிமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர்நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக்கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் “தம்மை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக' அல்லது “அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்' கூறுகிறார்” என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப அத்தியாயம் :

336

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், “ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் என் மகன்தான்'என்று கூறி (மக்கா செல்லும்போது)அவனைப் பிடித்து(வைத்து)க்கொள்ளும்படி உறுதிமொழி வாங்கியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கா வெற்றியின் சமயம் மக்காவுக்கு (தம் தோழர்களுடன்) வருகை தந்தபோது, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அவர்களுடன் ஸம்ஆவின் மகன் அப்த் (ரலி) அவர்களும் சென்றார்கள். சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைச் சுட்டிக்காட்டி), “இவன் என் சகோதரரின் மகன்; இவனைத் தன் மகன் என்று (சொல்லி, இவனைப் பிடித்துக்கொள்ளும்படி என்னிடம்) என் சகோதரர் உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று சொன்னார். அப்த் பின் ஸம்ஆ, “அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன். இவன் (என் தந்தை) ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன்; அவள் என் தந்தையின் அதிகாரத்தில் இருந்தபோதுதான் இவன் பிறந்தான்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைக் கூர்ந்துபார்த்தார்கள். அவன் (மக்காவாசிகளிலேயே) உத்பா பின் அபீவக்காஸை (தோற்றத்தில்) மிகவும் ஒத்திருந்தான். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவன் உனக்குரியவன்தான்; இவன் உன் சகோதரன்தான், அப்த் பின் ஸம்ஆவே!” என்று சொன்னார்கள். அவன் ஸம்ஆவின் அதிகாரத்தில் (அவனுடைய தாய்) இருந்தபோது பிறந்த காரணத்தால் அப்படிச் சொன்னார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்பா பின் அபீவக்காஸின் சாயலில் அந்த இளைஞன் இருந்ததைப் பார்த்த காரணத்தால், (தம் துணைவியார் சவ்தா (ரலி) அவர்களை நோக்கி, “ஸம்ஆ வின் மகள்) சவ்தாவே! இவனிடமிருந்து நீ திரையிட்டுக்கொள்” என்று சொன்னார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(ஒரு பெண்) யாருடைய அதிகாரத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது' என்று சொன்னார்கள்” என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.338 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இந்தத் தீர்ப்பை (மக்களுக்கு) உரக்க அறிவித்துவந்தார்கள். அத்தியாயம் :

337

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் மக்கா வெற்றிப் போரின்போது (மக்ஸூமி குலப்) பெண் ஒருவர் திருடிவிட்டார். ஆகவே, அவருடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவருக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உசாமா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) அவருக்காகப் (பரிந்து) பேசியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனை களில் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்திவிடும்படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்?” என்று கேட்டார்கள். உடனே உசாமா (ரலி) அவர்கள், “எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். மாலை நேரம் வந்தபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்ற எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனதுதகுதிக்கேற்றபடி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, “இறைவாழ்த்துக்குப்பின்! உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த (குலத்த)வர் திருடும்போது அவரை (தண்டிக்காமல்) விட்டுவந்ததும், பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வர் திருடும்போது அவருக்குத் தண்டனை கொடுத்து வந்ததும்தான். முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடிவிட்டிருந்தாலும் அவரது கையையும் நான் கண்டிப்பாக வெட்டியிருப்பேன்” என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டார்; மேலும், மணம் புரிந்தும்கொண்டார். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதன் பிறகு அவர் என்னிடம் வந்துகொண்டிருந்தார். நான் அவரது தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிடுவேன்.339 அத்தியாயம் :

338

முஜாஷிஉ பின் மஸ்ஊத் பின் ஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றிக்குப் பிறகு, நான் என் சகோதரர் (முஜாலித் பின் மஸ்ஊத்) உடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஹிஜ்ரத் செய்வதற் கான உறுதிமொழியை என் சகோதரரிடம் தாங்கள் பெற வேண்டுமென்பதற்காக அவரை அழைத்துக்கொண்டு நான் தங்களிடம் வந்துள்ளேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “(மக்கா வெற்றிக்கு முன்பு) ஹிஜ்ரத் செய்தவர்கள் அதிலுள்ள நன்மையை (முன்பே) கொண்டுசென்றுவிட்டார்கள்” என்று பதில் சொன்னார்கள். நான், “(அப்படியென்றால்) எதற்காக அவரிடம் தாங்கள் உறுதிமொழி பெறுவீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இஸ்லாத்தின்படி நடக்கவும் இறைநம்பிக்கையில் நிலைத்திருக்கவும், (தேவைப்படும்போது) அறப்போர் புரியவும் நான் அவரிடம் உறுதிமொழி பெறுவேன்” என்று பதிலளித்தார்கள்.340 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதற்குப்பின் நான் (முஜாஷிஉ அவர்களின் சகோதரர்) மஅபத் (எனும்முஜாலித்) அவர்களைச் சந்தித்தேன். அவரே சகோதரர்கள் இருவரில் பெரியவராக இருந்தார். (இந்தச் செய்தி பற்றி) அவரிடம் விசாரித்தேன். அவர், “முஜாஷிஉ உண்மையே சொன்னார்” என்று கூறினார். அத்தியாயம் :

339

முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழி யைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூமஅபத் (முஜாலித்) அவர்களை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத், அதற்குரியவர் களுக்குக் கடமையாகி (நிறைவேறி மக்கா வெற்றியோடு) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின்படி நடக்கவும் அறப்போர் புரியவும்தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்” என்று சொன்னார்கள். இதன் அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இதை எனக்கு அறிவித்த முஜாஷிஉ (ரலி) அவர்களின் சகோதரர்) அபூமஅபத் (முஜாலித்-ரலி) அவர்களைப் பின்னர் நான் சந்தித்து, அவரிடம் (இந்தச் செய்தி பற்றி) விசாரித்தேன். அவர், “முஜாஷிஉ உண்மையே சொன்னார்” என்று கூறினார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் முஜாஷிஉ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்: நான் என் சகோதரர் முஜாலிதுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அத்தியாயம் :

340

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “நான் ஹிஜ்ரத் செய்து, ஷாம் (சிரியா) நாட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “(மக்கா வெற்றிக்குப் பிறகு) ஹிஜ்ரத் என்பது இல்லை. ஆயினும், அறப்போர் உண்டு. எனவே, நீ சென்று (அறப்போரில் கலந்துகொள்ளும்) உன் (விருப்பத்தி)னைமுன்வை! (அதற்கான வாய்ப்பு) எதுவும் உனக்குக் கிடைத்தால் அவ்வாறே சென்று அறப்போர் புரி. இல்லையேல் திரும்பிவிடு” என்று சொன்னார்கள்.341 அத்தியாயம் :

341

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறி னார்கள்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (நான் ஹிஜ்ரத் செய்து, ஷாம் (சிரியா) நாட்டிற்குச் செல்ல விரும்புவதாகக்) கூறினேன். அதற்கு அவர்கள், “இன்று' அல்லது “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு' ஹிஜ்ரத் என்பதே கிடையாது” என்று முன்பு (அறிவித்ததைப்) போலவே சொன்னார்கள். அத்தியாயம் :

342

முஜாஹித் பின் ஜப்ர் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “(மக்கா) வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் என்பதே கிடையாது” என்று சொல்லிவந்தார்கள். அத்தியாயம் :

343

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உபைத் பின் உமைர் அல்லைஸீ (ரஹ்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் ஹிஜ்ரத்தைப் பற்றி அவர் கேட்டார். அதற்கு அவர்கள், “இன்று (மக்கா வெற்றி கொள்ளப்பட்டுவிட்ட பிறகு) ஹிஜ்ரத் கிடையாது. (ஒரு காலத்தில்,) இறைநம்பிக்கையாளர்கள் (தமது மார்க்கத்தைப் பின்பற்ற முடியாதவாறு) தாம் சோதனைக்கு ஆளாக்கப்படுவோமோ என்று அஞ்சி, தமது மார்க்கத்துடன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தியுறச் செய்வதை) குறிக்கோளாகக் கொண்டு (தம் தாய் நாட்டைத் துறந்து) ஓடிவந்தார்கள். ஆனால், இன்றோ அல்லாஹ் இஸ்லாத்தை மேலோங்கச் செய்துவிட்டான். இன்று இறைநம்பிக்கையாளர், தாம் விரும்பிய இடத்தில் தம் இறைவனை வழிபடலாம். ஆயினும், (ஹிஜ்ரத்தான் இனி இல்லையே தவிர) அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் (இன்றும்) உண்டு” என்று பதிலளித்தார்கள்.342 அத்தியாயம் :

344

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது (மக்களிடையே) எழுந்து நின்று, “அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்தபோதே மக்காவைப் புனிதப்படுத்திவிட்டான். ஆகவே, அது அல்லாஹ் புனிதப்படுத்திய காரணத்தால் இறுதி நாள்வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பிறகும் எவருக்கும் அது அனுமதிக்கப்படாது. எனக்குக்கூட (மக்கா வெற்றி கொள்ளப்படும் இத்தருணத்தில்) சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகள் கிள்ளப்படக் கூடாது. பிறர் தவறவிட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறவரும் எடுக்கக் கூடாது” என்று சொன்னார்கள். உடனே, அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! “இத்கிர்' எனும் புல் நீங்கலாகத்தானே? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் தேவைப்படுகிறது” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்துவிட்டுப் பிறகு, “இத்கிர் நீங்கலாகத்தான்; அ(தை வெட்டிப் பயன்படுத்துவ)து அனுமதிக் கப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.343 அத்தியாயம் :

345

இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் கையில் வெட்டுக் காயம் ஒன்றைக் கண்டேன். அவர்கள், “ஹுனைன் போரில் நபி (ஸல்) அவர்களுடன் நான் இருந்த போது இந்தக் காயம் எனக்கு ஏற்பட்டது” என்றார்கள். நான், “ஹுனைன் போரில் நீங்கள் கலந்துகொண்டீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(ஆம், அதிலும்) அதற்கு முன்பு நடந்த போர்களிலும் கலந்துகொண்டேன்” என்றார்கள். அத்தியாயம் :

346

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஒரு மனிதர் வந்து, “அபூஉமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் (தோற்றுப்) பின்வாங்கிவிட்டீர் களா?” என்று கேட்டார். நான், “நபி (ஸல்) அவர்கள் தோற்றுப் பின்வாங்கிச் செல்லவில்லை என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன். ஆயினும், சமுதாயத்தில் அவசரக்காரர்கள் சிலர் (பதுங்கியிருந்த எதிரிகளைக் கவனிக்காது அவர்களின் போர்ச்செல்வங்களைச் சேகரிப்பதில்) அவசரப்பட்டுவிட்டார்கள். அப்போது (அம்பெய்வதில் வல்லவர்களான) ஹவாஸின் குலத்தார் அவர்கள் மீது (சரமாரியாக) அம்பெய்தார்கள். அப்போது அபூசுஃயான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது “பைளா' எனும் வெள்ளைக் கோவேறுக் கழுதையின் தலையைப் பிடித்துக்கொண்டிருக்க, “நான் இறைத்தூதர்தான்;இது பொய்யல்ல.நான் அப்துல் முத்தலிபின்(மகனுடைய) மகன் ஆவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் (பாடியபடி) கூறிக்கொண்டிருந்தார்கள்.345 அத்தியாயம் :

347

அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், “நீங்கள் ஹுனைன் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் தோற்றுப் பின்வாங்கிச் சென்றீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(எங்களில் சிலர் பின்வாங்கிச் சென்றது உண்மையே. ஆயினும்,) நபி (ஸல்) அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை. (எதிரிகளான) ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், “நான் இறைத்தூதர்தான்;இது பொய்யல்ல.நான் அப்துல் முத்தலிபின்(மகனுடைய) மகன் ஆவேன்' என்று (பாடியபடி) கூறிக்கொண்டிருந்தார்கள். அத்தியாயம் :

348

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைஸ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் என்னிடம், “நீங்கள் ஹுனைன் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு (புறமுதுகிட்டு) ஓடிவிட்டீர்களா?” என்று கேட்டார். நான், “(எங்களில் சிலர் அப்படி ஓடியது உண்மைதான்;) ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வாங்கி ஓடவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தனர். நாங்கள் அவர்கள்மீது (முதலில்) தாக்குதல் நடத்தியபோது அவர்கள் தோற்று (சிதறியோடி)விட்டனர். ஆகவே, நாங்கள் போர்ச் செல்வங் களைச் சேகரிக்க விரைந்தோம். அப்போது நாங்கள் அம்புகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது “பைளா' எனும் வெள்ளைக் கோவேறு கழுதையின்மீது அமர்ந்துகொண்டிருக்கக் கண்டேன். அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள், “நான் இறைத்தூதர்தான்;இது பொய்யல்ல...” என்று (பாடியபடி) கூறிக்கொண்டிருந் தார்கள்.346 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்ராயீல் பின் யூனுஸ் (ரஹ்), ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் தமது கோவேறு கழுதையிóருந்து இறங்கினார்கள்” என்று அறிவித்துள்ளனர்.347 அத்தியாயம் :

349

மர்வான் பின் அல்ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது: ஹவாஸின் குலத்தின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (“ஜிஇர்ரானா' என்னும் இடத்திற்கு) முஸ்லிம்களாக வந்தபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்திருத்தார்கள். (வந்தவர்கள்) நபியவர்களிடம் (முஸ்லிம்கள் ஹுனைன் போரில் கைப்பற்றிய) தம் செல்வங்களையும் போர்க் கைதிகளையும் திருப்பித் தந்துவிடும்படி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னுடன் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர். (இவர்களுக்கும் நான் போர்ச் செல்வத்தில் பங்கு தர வேண்டியுள்ளது.) பேச்சில் எனக்கு மிகவும் பிரியமானது உண்மையான பேச்சேயாகும். போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வங்கள் இரண்டில் நீங்கள் விரும்பியதைத் திரும்பப் பெற்றுக்கொள் ளுங்கள். நான் உங்களை எதிர்பார்த்து(க் கைதிகளைப் பங்கிடாமல்) இருந்தேன்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியபோது பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் ஹவாஸின் குலத்தாரை எதிர்பார்த்துக் காத்திருந் தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டிலொன்றைத்தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக் குத் தெளிவாகிவிட்டபோது, “எங்கள் கைதிகளையே நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்கேற்ற முறையில் புகழ்ந்துவிட்டு, “இறைவாழ்த்துக்குப்பின்! உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர். இவர்களில் (நம்மிடம்) போர்க் கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன். உங்களில் எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கின்றாரோ அவர் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லாஹ், (இனிவரும் நாட்களில்) முதலாவதாக நமக்குத் தரவிருக்கும் (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து அவருக்கு நாம் தருகின்ற வரை அவற்றைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகிறாரோ அவர் அவ்வாறே வைத்திருக்கட்டும்” என்று கூறினார்கள். மக்கள், “நாங்கள் மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத்) திருப்பிக் கொடுக்கச் சம்மதிக்கின்றோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் இதற்கு யார் சம்மதிக்கிறார், யார் சம்மதிக்கவில்லை என்பது எமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள். உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்கள் முடிவை எனக்குத் தெரிவிக்கட்டும்” என்று கூறினார்கள். மக்கள் திரும்பிச் செல்ல, அவர்களு டன் அவர்களின் தலைவர்கள் பேசினார் கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தலைவர்கள் திரும்பி வந்து, மக்கள் மனப்பூர்வமாகச் சம்மதித்து விட்டதாகத் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) கூறுகிறார்கள்:) இதுதான் ஹவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும்.348 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

350

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்தபோது உமர் (ரலி) அவர்கள், தாம் அறியாமைக் காலத்தில் நேர்ச்சை செய்திருந்த ஓர் “இஃதிகாஃப்' தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி கட்டளையிட்டார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.349 அத்தியாயம் :

351

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ஹுனைன் (போர் நடந்த) ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப் பட்டோம். (எதிரிகளைப் போர்க் களத்தில்) நாங்கள் சந்தித்தபோது (ஆரம்பத்தில்) முஸ்லிம்கள் (சிலர்) இடையே உறுதியற்ற நிலை ஏற்பட்டது. நான் இணைவைப்பாளன் ஒருவனைப் பார்த்தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு அவரைக் கொல்ல முயன்றான். நான் அவன் பின்பக்கமாகச் சென்று வாளால் அவனது (கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டி அவனது கவசத்தைத் துண்டித்துவிட்டேன். உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னை இறுக அணைத்துக் கொண்டான். அதனால் நான் மரணக் காற்றை சுவாசிக்கலானேன். பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னை விட்டு விட்டான். உடனே நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்து, “மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு” என்று பதிலளித்தார்கள். பிறகு, மக்கள் (அப்பாஸ் -ரலி அவர்கள் அழைத்ததால் போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டு, “போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடóóருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று, “எனக்கு எவர் சாட்சியம் சொல்வார்?” என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்துகொண்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், “போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடóó ருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து நின்று, “எனக்கு யார் சாட்சியம் சொல்வார்?” என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்துவிட்டேன். பிறகு, (மூன்றாவது தடவையாக) அதே போன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே நான் எழுந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூகத்தாதாவே! உங்களுக்கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். (நடந்த நிகழ்ச்சியை) நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன். ஒரு மனிதர், “இவர் உண்மையே சொன்னார், அல்லாஹ்வின் தூதரே! இவரால் கொல்லப்பட்டவரின் உடóó ருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னிடம் உள்ளன. எனக்காக அவரை (ஏதாவது கொடுத்துத்) திருப்திப்படுத்திவிடுங்கள்” என்று சொன்னார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் அரிமான்களில் ஓர் அரிமான் அல்லாஹ்வின் சார்பாகவும் அவனுடைய தூதரின் சார்பாகவும் போரிட்டு, (தம்மால்) கொல்லப்பட்ட வரின் உடóலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுத்துவிடுவதை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “(அபூபக்ர்) உண்மை சொன்னார்” என்று கூறிவிட்டு என்னிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அதை எனக்கே கொடுத்துவிட்டார்கள். நான் அந்தப் பொருளை விற்றுவிட்டு பனூ சலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந்தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவியபின் நான் தேடிய முதல் சொத்தாகும்.350 அத்தியாயம் :

352

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின்போது முஸ்லிம்களில் ஒருவர் இணைவைப்பாளர்களில் ஒருவரோடு போரிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன். இணைவைப்பாளர்களில் இன்னொருவர் அந்த முஸ்óமைக் கொல் வதற்காக அவருக்குப் பின்னாலிருந்து ஒளிந்து ஒளிந்து வந்துகொண்டிருப்பதையும் கண்டேன். ஒளிந்தபடி அவரைத் தாக்க வந்தவரை நோக்கி (அவரைத் தடுப்பதற்காக) நான் விரைந்தோட, அவர் என்னைத் தாக்குவதற்காகத் தமது கையை ஓங்கினார். நான் அவரது கையில் தாக்கி அதைத் துண்டித்துவிட்டேன். பிறகு அவர் என்னைப் பிடித்துக்கொண்டு, நான் (என் உயிர் பிரிந்துவிடுமோ என்று) அஞ்சும் அளவுக்குக் கடுமையாக என்னைக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டுப் பிடி தளர்ந்தார். பிறகு நான் அவரை(க் கீழே) தள்ளிக் கொன்றுவிட்டேன். (ஆனால்,) முஸ்óம்கள் தோற்றுவிட்டனர். நானும் அவர்களுடன் தோற்றுப்போனேன். நான் அப்போது (தோற்ற) மக்களி டையே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இருப்பதைக் கண்டேன். நான் அவர்களிடம், “மக்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு” என்று சொன்னார்கள். பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து (தீரத்துடன் போரிட்டு வென்றார்கள். இறுதியில், தம் போர்ச் செல்வத்தைக் குறித்துக்) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவர் தன்னால் கொல்லப்பட்ட (எதிரி) ஒருவரை, அவர்தான் கொன்றார் என்பதற்கு ஒரு சான்றைக் கொண்டுவருகிறாரோ அவருக்கே கொல்லப்பட்டவரின் உடóóருந்து எடுக்கப்படும் பொருட்கள் உரியன” என்று சொன்னார்கள். ஆகவே, என்னால் கொல்லப்பட்டவரை நான்தான் கொன்றேன் என்பதற்கு சான்று தேடுவதற்காக நான் எழுந்தேன். ஆனால், எனக்காகச் சாட்சியம் சொல்பவர் யாரையும் நான் காணவில்லை. ஆகவே, உட்கார்ந்துகொண்டேன். பிறகு ஏதோ தோன்ற, நான் ஒருவரைக் கொன்றதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், “(இவரால் கொல்லப்பட்டதாக) இவர் சொல்கின்ற அந்த மனிதரின் ஆயுதம் என்னிடம் இருக்கின்றது. நானே இதை எடுத்துக்கொள்ள அவரிடமிருந்து (எனக்கு) இசைவு பெற்றுத்தாருங்கள்” என்று சொன்னார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “அப்படி முடியாது. (கொல்லப்பட்டவரின்) அந்த உடைமைகளை, அல்லாஹ்வுக் காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிடுகின்ற, அல்லாஹ்வின் அரிமாக் களில் ஓர் “அரிமா'வை விட்டுவிட்டு குறைஷியரின் (பலவீனமான) ஒரு குஞ்சுப் பறவைக்கு அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுக்கமாட்டார்கள்” என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து எனக்கு அந்தப் பொருளைக் கொடுத்தார்கள். நான் அதை விற்று பேரீச்சந்தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதுதான் நான் இஸ்லாத்திற்கு வந்தபின் தேடிக்கொண்ட முதல் சொத்தாக அமைந்தது. அத்தியாயம் :

353

அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள், ஹுனைன் போரை முடித்துக்கொண்டு திரும்பிய போது, அபூஆமிர் (ரலி) அவர்களை (தளபதியாக்கி) “அவ்த்தாஸ்' பள்ளத்தாக்கிற்கு ஒரு படையை அனுப்பிவைத்தார்கள். அப்போது அபூஆமிர் அவர்கள் (கவிஞன்) “துரைத் பின் அஸ்ஸிம்மா'வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்கு மிடையில் சண்டை நடந்தது. அதில்) துரைத் கொல்லப்பட்டான். அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூஆமிர் (ரலி) அவர்களுடன் என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூஆமிர் அவர்களின் முழங்காலில் அம்பு பாய்ந்தது. ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்பை எய்து, அதை அவர்களது முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று, “என் தந்தையின் சகோதரரே! உங்கள்மீது அம்பெய்தவன் யார்?” என்று கேட்டேன். “என்மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ!” என்று (அவனை நோக்கி) என்னிடம் சைகை காட்டினார்கள். நான் அவனை நோக்கிச் சென்று, அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக்கொண்டே, “(என்னைக் கண்டு ஓடுகிறாயே) உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்கமாட்டாயா?” என்று கேட்டேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக்கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளால் மோதிக்கொண்டோம். அப்போது அவனை நான் கொன்றுவிட்டேன். பிறகு நான் அபூஆமிர் அவர்களிடம் (சென்று), “உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் (என் மூலம்) கொன்றுவிட்டான்” என்று கூறினேன். பிறகு, (“எனது முழங்காலில் பாய்ந்திருக்கும்) இந்த அம்பைப் பிடுங்கியெடு” என்று அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. “என் சகோதரரின் மகனே! நபி (ஸல்) அவர்களுக்கு (என்) சலாம் கூறி, எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கேட்கும்படி கோரு” என்று அபூஆமிர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்துவிட்டு, சிறிது நேரத்திற்குப்பின் அபூஆமிர் (ரலி) அவர்கள் (வீர)மரணமடைந்தார்கள். பிறகு (அங்கிருந்து) நான் திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தமது வீட்டில் (பேரீச்சம் நாரால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன்மீது விரிப்பு ஒன்று இருந்தது.352 (எனினும்) கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும், இரு விலாப் புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. பிறகு அவர்களிடம் எங்கள் செய்தியையும் அபூஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி அபூஆமிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றிக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரும்படி கூறி, அதில் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும்விட (தகுதியில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் நான் பார்த்தேன். உடனே நான், “எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “இறைவா! அப்துல்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (நபி (ஸல்) அவர்கள் புரிந்த இரு பிரார்த்தனைகளில்) ஒன்று அபூஆமிர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்று அபூமூசா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும். அத்தியாயம் :

354

நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அரவானி ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த அரவானி (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவிடம், “அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர்மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால், நீ ஃகைலானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நான்கு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொல்வதை நான் செவியுற்றேன்.354 (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இந்த அரவானிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது” என்று சொன்னார்கள். இப்னு உயைனா (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அரவானியின் பெயர் “ஹீத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.355 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் “அப்போது நபி (ஸல்) அவர்கள் தாயிஃபை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

355

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:356 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்டபோது அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, “இறைவன் நாடினால் நாம் (நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு வருத்தமளித்தது. அவர்கள், “இதை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா?” என்று பேசிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்) ஒருமுறை, “நாம் திரும்பிச் செல்வோம்” என்று சொன்னார்கள். பிறகு (தோழர்களின் தயக்கத்தைக் கண்டு) முற்பகலிலேயே போர் புரியுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் முற்பகலில் போர் புரிய, (அதனால்) (பலத்த) காயங்களுக்கு ஆளானார்கள்.357 அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவன் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு (இப்போது) மகிழ்ச்சியை அளித்தது. (அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு) நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.358 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் இதை அறிவித்தபோது ஒருமுறை, “நபி (ஸல்) அவர்கள் (சிரித்தார்கள்” என்பதற்குப் பதிலாக) புன்னகைத்தார்கள்” என்று அறிவித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

356

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தெரிந்துகொண்டே தம்மைத் தம் தந்தையல்லாத (வேறு) ஒருவருடன் இணைத்து, (“நான் அவருடைய மகன்தான்” என்று) வாதாடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் (புகுவது) தடை செய்யப்பட்டதாகும். “அல்லாஹ்வின் பாதையில் ஓர் அம்பை முதன் முதலாக எய்தவரான சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய தாயிஃப் நகர மக்களின் அடிமைகள்) சிலரோடு தாயிஃப் கோட்டையின் மதில் சுவரைத் தாண்டிக் குதித்து நபி (ஸல்) அவர்களிடம் வந்த அபூபக்ரா (ரலி)359 அவர்களிடமிருந்தும் இதை நான் செவியுற்றேன்” என்று அபூஉஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள், (தமக்கு இதை அறிவித்த அபுல்ஆலியா, அல்லது அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களிடம்), “உங்களிடம் (இந்த நபிமொழிக்கு) இருவர் சாட்சியம் பகர்ந்துள்ளனர்; அவர்கள் இருவரும் உங்களுக்குப் போதும்” என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், “ஆம்; அவ்விரு வரில் ஒருவர் அல்லாஹ்வின் பாதை யில் (முதன் முதலாக) ஓர் அம்பை எறிந்தவராவார். மற்றொருவரோ, நபி (ஸல்) அவர்களிடம் தாயிஃபிலிருந்து வந்த இருபத்து மூன்று பேரில் மூன்றாமவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மொத்தம் ஆறு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

357

அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது: மக்காவுக்கும் மதீனாவிற்குமிடையே “ஜிஅரானா' எனுமிடத்தில் பிலால் (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தபோது நான் அவர்களிடம் இருந்தேன்.360 அப்போது கிராமவாசி ஒருவர் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, “நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தியைப் பெற்றுக்கொள்” என்று சொன்னார்கள்.361 அதற்கு அவர், “இந்த நற்செய்தியைத் தான் எனக்கு நீங்கள் நிறையச் சொல்லிவிட்டீர்களே!” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் கோப மடைந்தவரைப் போன்று என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி வந்தார்கள். “இவர் (எனது) நற்செய்தியை ஏற்க மறுத்துவிட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். நாங்கள் இருவரும், “நாங்கள் ஏற்றுக் கொண்டோம்” என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டுவரச்சொல்லி, அதில் தம் இரு கைகளையும் தமது முகத் தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள்.362 பிறகு (எங்களிடம்), “இதிóருந்து சிறிது அருந்திவிட்டு, உங்கள் முகங் களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்; நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, “(இறைநம்பிக்கையாளர்களான) உங்களின் அன்னை(யான என)க்காகவும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதிவையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதிவைத்தோம். அத்தியாயம் :

358

ஸஃப்வான் பின் யஅலா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டாதா என்று நான் ஆசைப்பட்டுவந்தேன்” என்று கூறுவது வழக்கம். ஒருமுறை, நபி (ஸல்) அவர்கள் (தாயிஃபிலிருந்து திரும்பும் சமயம்) ஜிஅரானாவில் இருக்கும்போது அவர்களுக்குத் துணியால் (கூடாரம் அமைத்து) நிழல் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தத் துணிக் (கூடாரத்திற்)குள் நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். அப்போது வாசனைத் திரவியத்தில் தோய்ந்த, மேலங்கியொன்றை அணிந் திருந்த கிராமவாசியொருவர் வந்தார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொண்டபின் மேலங்கியொன்றை அணிந்துகொண்டு உம்ராவுக்காக வந்த ஒரு மனிதரைக் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். உடனே உமர் (ரலி) அவர்கள் யஅலா (ரலி) அவர்களை, “(அருகில்) வாருங்கள்” என்று கைகளால் சைகை செய்து அழைத்தார்கள். யஅலா (ரலி) அவர்கள் தமது தலையை (கூடாரத்திற்கு) உள்ளே நுழைத்தார்கள். அப்போது (வேத அறிவிப்பு அருளப்பெற்றுக்கொண்டிருக்க) நபி (ஸல்) அவர்களின் முகம் சிவந்து, அவர்கள் அப்படியே சிறிது நேரம் குறட்டைவிட்டபடி இருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை அவர்களைவிட்டு அகன்றது. பிறகு அவர்கள், “சற்று நேரத்திற்கு முன்பு என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள். உடனே அந்த மனிதர், தேடி அழைத்துவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள், “உம்மீதுள்ள வாசனைத் திரவியத்தை மூன்று முறை கழுவுக! (தைக்கப்பட்டு அணிந்துள்ள) மேலங்கியைக் கழற்றிவிடுக! பிறகு உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க!” என்று பதிலளித்தார்கள்.363 அத்தியாயம் :

359

அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹுனைன் நாளில் போர்ச் செல்வங்களை வழங்கியபோது உள்ளங் கள் தேற்றப்பட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களிடையே (அவற்றைப்)பங்கிட்டார்கள். (மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்குக் கிடைத்ததுபோல் தமக்கும் கிடைக்காமல் போனதால் அவர்கள் கவலையடைந்தவர்களைப் போல் காணப்பட்டார்கள். ஆகவே, அவர்களிடையே (ஆறுதலாக) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். (அவ்வுரையில்), “அன்சாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் காணவில்லையா? அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நல்வழியை அளித்தான். நீங்கள் பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அப்போது அல்லாஹ் என் மூலமாக உங்களைப் பரஸ்பரம் நேசமுடையவர்களாக்கினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்கினான் (அல்லவா?)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை) ஒவ்வொன்றாகச் சொல்லும்போதெல்லாம், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிகமாக உபகாரம் புரிந்தவர்கள்” என்று அன்சாரிகள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் பதிலளிக்காமலிருப்பது எதனால்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் சொல்லும்போதெல்லாம் அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே பேருபகாரிகள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால் இன்னின்னவாறெல்லாம் (நீங்கள் எனக்குச் செய்த உபகாரங்களை நினைவுபடுத்தும் வகையில்) சொல்ல முடியும். ஆனால், (இந்த) மக்கள் (நான் கொடுக்கும்) ஆடு களையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்)கொண்டு போக, நீங்கள் உங்கள் இல்லங் களுக்கு இறைத்தூதரையே (என்னையே) உங்களுடன் கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா? ஹிஜ்ரத் (நிகழ்ச்சி) மட்டும் நடந்திருக்கா விட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப்பேன். மக்களெல்லாரும் ஒரு கணவாயிலும் ஒரு பள்ளத்தாக்கிலும் சென்றாலும் நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும்தான் செல்வேன். அன்சாரிகள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் (போன்றவர்கள்) ஆவர். மற்றவர்கள் மேலாடை போன்றவர் கள்.364 நீங்கள் எனக்குப் பின்னால் விரைவிலேயே (ஆட்சியதிகாரத்தில்)உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும்) “ஹவ்ள் (அல்கவ்ஸர்' எனும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும்வரை (நிலைகுலையாமல்) பொறுமையுடன் இருங்கள்” என்று சொன்னார்கள்.365 அத்தியாயம் :

360

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை (வெற்றிப் பரிசாக) அளித்தபோது நபி (ஸல்) அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) மக்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானார்கள். உடனே (அன்சாரிகளில்) சிலர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷியரின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்காமல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை விட்டுவிடுகிறார் களே!” என்று (கவலையுடன்) சொன்னார் கள். அவர்களின் இந்தப் பேச்சு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அன்சாரி களுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு கூடாரத்தில் ஒன்று திரட்டினார்கள். அவர்களுடன் மற்றவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடியதும் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, “உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? (உண்மைதானா?)” என்று கேட்க அன்சாரிகளில் விவரமானவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் தலைவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய மக்கள் சிலர்தான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷியரின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க, நம்மை விட்டுவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே!' என்று பேசிக்கொண்டனர்” என்று கூறினார்கள். அப்போது, நபி (ஸல்) அவர்கள், “இறைமறுப்பைவிட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். (அதன் வாயிலாக) அவர்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்திக்கொள்கிறேன். மக்கள் (பிற உலகச்) செல்வங்களை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்றுத் திரும்பும் செல்வங்களைவிட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்” என்றுசொன்னார்கள். அன்சாரிகள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எங்களுடன் உங்களைக் கொண்டுசெல்வதையே) விரும்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “விரைவில் (உங்களைவிடப் பிறருக்கு ஆட்சியதிகாரத்தில்) அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) சந்திக்கும்வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (எனக்கு வழங்கப்படவுள்ள சிறப்புப் பரிசான “அல்கவ்ஸர்' எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன்” என்று சொன்னார்கள். ஆனால், மக்கள் பொறுமையாக இருக்க வில்லை.366 அத்தியாயம் :

361

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: மக்கா வெற்றியின்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியருக்கிடையே போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். ஆகவே, அன்சாரிகள் (தமக்குப் பங்கு தரவில்லையே என்று) கோபித்துக்கொண்டார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “மக்கள் உலகச் செல்வத்தை எடுத்துக்கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே உங்களுடன் கொண்டுசெல்வதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், “ஆம், (அதைத்தான் விரும்புகிறோம்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “மக்கள் ஒரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயிலோ பள்ளத்தாக்கிலோதான் செல்வேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

362

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின்போது ஹவாஸின் குலத்தார் (நபி (ஸல்) அவர்களைப்) போர்க் களத்தில் சந்தித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன், (அறப்போர் வீரர்கள்) பத்தாயிரம் பேர் இருந்தனர். (மக்கா வெற்றியின்போது) பொது மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களும் இருந்தனர்.367 அப்போது (ஹவாஸின் குலத்தாரின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்) அவர்கள் பின்வாங்கிச் சென்ற னர். நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகளே! (என்னாயிற்று உங்களுக்கு?)” என்று கேட்க, அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் அழைப்புக்குப் பதிலளித்து உங்களுக்கு அடிபணிந்தோம். இதோ, உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். உங்கள் முன்னால் இருக்கின்றோம்” என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தைவிட்டு) இறங்கி, “நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய துதருமாவேன்” என்று சொன்னார்கள். (பிறகு அந்தப் போரில்) இணைவைப்பாளர்கள் தோற்றுவிட்டனர். பின்னர், நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களுக்கும் முஹாஜிர்களுக்கும் (போர்ச் செல்வத்தில் பங்கு) கொடுத்தார்கள்; அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. அன்சாரிகள் (தமக்குக் கொடுக்காததைக் குறித்து அதிருப்தியுடன்) பேசினர். உடனே நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளை அழைத்து (தாமிருந்த) கூடாரத்தினுள் இருக்கச் செய்து, “இந்த மக்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் கொண்டுசெல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே கொண்டுசெல்வதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்” என்றும் சொன்னார்கள். அத்தியாயம் :

363

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை ஒன்றுகூட்டி, “(இந்தக்) குறைஷி யர், அறியாமைக் கொள்கையை இப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள்; (இஸ்லாத்தை ஏற்றதனால் நேரும்) சோதனைகளுக்குப் புதியவர்கள். ஆகவே, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், (இஸ்லாத்துடன்) அவர்களுக்கு இணக்கத்தை ஏற்படுத்தவும் நான் விரும்பினேன். மக்கள் உலகச் செல்வத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதருடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா?” என்று கேட்டார்கள். அன்சாரிகள், “ஆம் (அதைத்தான் விரும்புகிறோம்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “மக்கள் ஒரு கணவாயில் செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் செல்வார்களாயின், நான் “அன்சாரிகளின் கணவாயில்தான்' அல்லது “அன்சாரிகளின் பள்ளத்தாக்கில்தான்' செல்வேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

364

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை (மக்களிடையே) பங்கிட்டபோது அன்சாரிகளில் ஒரு மனிதர், “இந்தப் பங்கீட்டில் நபியவர்கள் இறைத் திருப்தியை நாடவில்லை” என்று (மனத்தாங்கலுடன்) பேசினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைத் தெரிவித்தேன். உடனே அவர்களுடைய முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட்டது. பிறகு அவர்கள், “(இறைத்தூதர்) மூசாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்; ஆயினும், சகித்துக் கொண்டார்கள்” என்று சொன்னார்கள்.368 அத்தியாயம் :

365

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின்போது, நபி (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை (அளித்து அதிகமாக) வழங்கினார்கள். (புதிய முஸ்லிம்களில் ஒருவரான) அக்ரஉ (பின் ஹாபிஸ்-ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ -ரலி) அவர்களுக்கும் அதே போன்று கொடுத்தார்கள். இன்னும் சிலருக்கும் கொடுத்தார்கள். அப்போது ஒரு மனிதர், “இந்தப் பங்கீட்டில் அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை” என்று சொன்னார்.369 உடனே நான், “இதை நிச்சயம் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்” என்று சொன்னேன். (அவ்வாறே நபி (ஸல்) அவர்களிடம் சென்று நான் சொல்ல) அவர்கள், “(இறைத்தூதர்) “மூசாவுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும். இதைவிட அதிகமாக அவர்கள் மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும், சகித்துக் கொண்டார்கள்” என்று சொன்னார்கள்.370 அத்தியாயம் :

366

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின்போது ஹவாஸின் குலத்தாரும் ஃகதஃபான் குலத்தாரும் மற்றவர்களும் தம் கால்நடைகளுடனும் குழந்தை குட்டிகளுடனும் (போர்க் களத்தில்) நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டனர்.அப்போது நபி (ஸல்) அவர்களுடன் பத்தாயிரம் பேரும் (மக்கா வெற்றியில்) பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களில் பலரும் இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தனியாக) விட்டுவிட்டுப் பின்வாங்கிச் சென்றுவிட்டனர். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் மட்டும் தனியே எஞ்சி நின்றார்கள். அப்போது, அவர்கள் இரண்டு (முறை) அழைப்பு விடுத்தார்கள். இரண்டையும் கலந்துவிடாமல் (இடைவெளி இருக்குமாறு) பார்த்துக்கொண்டார்கள். தம் வலப் பக்கம் திரும்பி, “அன்சாரி களே!” என்று அழைக்க அவர்கள், “இதோ, வந்துவிட்டோம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம்; (கவலைப்படாமல்) மகிழ்ச்சியுடனிருங்கள்” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் இடப் பக்கம் திரும்பி, “அன்சாரிகளே! என்று அழைத்தார்கள். அவர்கள் (மீண்டும்), “இதோ, தங்கள் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து வந்தோம், அல்லாஹ்வின் தூதரே! (கவலையின்றி) மகிழ்ச்சியுடனிருங்கள். நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது “பைளா' எனும் வெள்ளைக் கோவேறு கழுதையின் மீது அமர்ந்திருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, “நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்” என்று சொன்னார்கள். பிறகு, இணைவைப்பாளர்கள் (அந்தப் போரில்) தோற்றுப்போனதால், ஏராளமான போர்ச் செல்வங்களை நபி (ஸல்) அவர்கள் பெற்றார்கள்; அவற்றை முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியில்) பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டவர்களிடையேயும் பங்கிட்டார்கள்; அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே அன்சாரிகள் (சிலர்), “ஏதேனும் (போர் போன்ற) கடுமையான பிரச்சினை என்றால் (உயிரை அர்ப்பணித்து உதவிட) நாங்கள் அழைக்கப்படுகிறோம். ஆனால், (பிரச்சினை தீர்ந்ததும்) மற்றவர்களுக்குப் போர்ச் செல்வங்கள் கொடுக்கப்படுகின்றன” என்று (மனக் குறையுடன்) பேசிக்கொண்டார்கள். இவர் கள் இப்படிப் பேசிக்கொள்ளும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, “அன்சாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய இந்தச் செய்தி என்ன? (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். அவர்கள் (உண்மைதான் என்பது போல்) மௌனமாயிருந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டுசெல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சொந்தமாக்கிக்கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா?” என்று கேட்டார்கள். அன்சாரிகள், “ஆம் (நாங்கள் அதைத்தான் விரும்புகிறோம்) என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களெல்லாரும் ஒரு பள்ளத்தாக்கில் செல்ல, அன்சாரிகள் மட்டும் வேறொரு பள்ளத்தாக்கில் செல்வார்களாயின் நான் அன்சாரிகள் செல்லும் பள்ளத்தாக்கையே தேர்ந்தெடுப்பேன்” என்று சொன்னார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் (ரலி) அவர்களிடம்,) “அபூஹம்ஸாவே! நீங்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா?” என்று கேட்க, அனஸ் (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களைவிட்டு எங்கே போவேன்?” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

367

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிப் படைப்பிரிவு ஒன்றை அனுப்பினார்கள். நான் அதில் இடம் பெற்றிருந்தேன். (அந்தப் போரில் கிடைத்த போர்ச் செல்வங்களில்) எங்கள் ஒவ்வொருவரின் பங்கும் பன்னிரண்டு ஒட்டகங்களாக இருந்தன. எங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களுக்குரிய பங்குக்கும் மேல் அதிகமாக ஒவ்வோர் ஒட்டகம் கொடுக்கப்பட்டது. ஆக, நாங்கள் (ஒவ்வொருவரும்) பதிமூன்று ஒட்டகங்களைப் பெற்றுத் திரும்பினோம்.372 அத்தியாயம் :

368

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு “அஸ்லம்னா' (நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்) என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. ஆகவே, அவர்கள் (தங்களுடைய வழக்குப்படி) “ஸபஃனா, ஸபஃனா' (நாங்கள் மதம் மாறிவிட்டோம், மதம் மாறிவிட்டோம்) என்று சொல்லலானார்கள். உடனே அவர்களில் சிலரை காலித் (ரலி) அவர்கள் கொல்லவும் சிலரைச் சிறைபிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒருநாள் காலித் (ரலி) அவர்கள், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்லமாட்டேன்; மேலும், என் சகாக்களில் எவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்கள்” என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, “இறைவா! “காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை' என்று உன்னிடம் தெரிவித்துக்கொள்கிறேன்” என இருமுறை சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அத்தியாயம் :

369

அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள்.(அவர்கள் ஏதோ தவறிழைத்துவிட) அவர்கள்மீது அவர் கோபமுற்று, “நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி உங்களுக்குக் கட்டளையிட வில்லையா?” என்று கேட்டார். அவர்கள், “ஆம் (கட்டளை யிட்டார்கள்)” என்று பதிலளித்தனர். அவர், “அப்படியென்றால் எனக்காக விறகு சேகரியுங்கள்” என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே சேகரித்தனர். அவர், “நெருப்பு மூட்டுங்கள்” என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு மூட்டினார்கள். அவர், “இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள்” என்று கூற, அவர்கள் அதில் நுழையப்போனார்கள். அதற்குள் (அதில் நுழைய விடாமல்) அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும் அவர்கள், “(நரக) நெருப்பிலிருந்து வெருண்டோடித்தான் நாம் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம்” என்று கூறலாயினர். நெருப்பு அணைந்து போகும்வரை இவ்வாறே கூறிக்கொண்டிருந்தனர். பிறகு, படைத் தளபதியின் கோபம் தணிந்து அவர் அமைதியடைந்தார். பிறகு நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியபோது, “அதில் அவர்கள் நுழைந்திருந்தால் மறுமை நாள்வரையிலும்கூட அதிலிருந்து அவர்கள் வெளியேறியிருக்கமாட்டார்கள்.375 கீழ்ப்படிதல் என்பது நற்செயல்களில்தான்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

370

அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பி னார்கள்; அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்குப் பொறுப்பாளராக அனுப்பினார்கள். யமன் இரு மாகாணங்களாகும்.377 பிறகு, “(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போதுகூட) வெறுப்பேற்றிவிடாதீர் கள்” என்று (அறிவுரை) கூறினார்கள். அவர்கள் இருவரும் தத்தம் பணி (இடங்களு)க்குச் சென்றனர். அவர்கள் தத்தம் (எல்லைக்கு உட்பட்ட) பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது, தம் சகாவின் (பகுதிக்கு) அருகில் வந்துவிட்டால் (அவருடன்) தமது சந்திப்பைப் புதுப்பித்துக்கொண்டு சகாவுக்கு சலாம் கூறுவார். ஒருமுறை முஆத் (ரலி), தம் பகுதிக்குள் சென்றுகொண்டிருந்தபோது தம் சகாவான அபூமூசா (ரலி) அவர்களின் (பகுதிக்கு) அருகே வந்துவிட, தமது கோவேறு கழுதையின் மீது பயணித்தபடி அவர்களிடம் சென்றுசேர்ந்தார். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், தம்மிடம் மக்கள் ஒன்றுகூடியிருக்க (தமது அவையில்) அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம், தம் இரு கைகளும் தம் கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். முஆத் (ரலி) அவர்கள், அபூமூசா (ரலி) அவர்களிடம், “அப்துல்லாஹ் பின் கைஸ் அவர்களே! என்ன இது?” என்று கேட்டார்கள். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், “இவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபின் அதை நிராகரித்துவிட்டவன்” என்று பதிலளித்தார்கள்.378 முஆத் (ரலி) அவர்கள், “இவன் கொல்லப்படும்வரை நான் (என் வாகனத்தி லிருந்து) இறங்கமாட்டேன்” என்றார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், “இவன் கொண்டு வரப்பட்டிருப்பதே அதற்காகத்தான். ஆகவே, நீங்கள் இறங்குங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு முஆத், (ரலி) அவர்கள் “இவன் கொல்லப்படும்வரை நான் (வாகனத்திóருந்து) இறங்கமாட்டேன்” என்று (மீண்டும்) சொன்னார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அவனைக் கொல்லும்படி உத்தரவிட, அவ்வாறே அவன் கொல்லப்பட்டான். பிறகு முஆத் (ரலி) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி, “அப்துல்லாஹ்வே! நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், “(இரவு, பகல் நேரங்களில்) அடிக்கடி ஓதிவருகிறேன்” என்று பதிலளித்தார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள், “முஆதே! நீங்கள் எப்படி அதை ஓதுகிறீர்கள்?” என்று கேட்க, முஆத் (ரலி) அவர்கள், “இரவின் முற்பகுதியில் நான் உறங்கிவிடுகிறேன். உறக்கத்தில் என் பங்கை முடித்து எழுகிறேன். பிறகு, அல்லாஹ் எனக்கு விதித்துள்ள அளவு ஓதுகிறேன். ஆகவே, நான் எழு(ந்து வழிபடு)வதற்கு இறைவனிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

371

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்குப் பொறுப்பாளராக அனுப்பிவைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள், “அவை யாவை?” என்று கேட்டார்கள். நான் “அல்பித்உ, அல்மிஸ்ர்' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று பதிலளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இதை எனக்கு அறிவித்த (என் தந்தை) அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம், “ அல்பித்உ என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்பித்உ என்பது தேனில் தயாரிக்கப்படும் பானம், அல்மிஸ்ர் என்பது தொலி நீக்கப்படாத கோதுமையில் தயாரிக்கப்படும் பானம்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

372

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, “(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போதுகூட) வெறுப்பூட்டிவிடாதீர்கள். (தீர்ப்பளிக்கும்போது) ஒத்த கருத்துடன் நடந்துகொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)” என்று (அறிவுரை) கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் தொலி நீக்கப்படாத கோதுமையில் தயாராகும் ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாராகும் ஒருவகை பானமான “பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று பதிலளித்தார்கள். பின்பு நாங்கள் இருவரும் (எங்கள் பணிக்குச்) சென்றுவிட்டோம். (பின்னர் ஒருமுறை சந்தித்தபோது) முஆத் (ரலி) அவர்கள் என்னிடம், “நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார். நான், “நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் வாகனத்தின் மீதிருந்தபடியும் அடிக்கடி ஓதுகிறேன்” என்று பதிலளித்தேன். முஆத் (ரலி) அவர்கள், “நானோ உறங்குவேன்; எழுந்திருப்பேன். நான் எழு(ந்து வழிபடு)வதற்கு (இறைவனிடம்) பிரதிபலன் எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்காகவும் எதிர்பார்க்கி றேன்” என்று சொன்னார். பிறகு கம்பளியாலான கூடாரமொன்றை அமைத்துக்கொண்டார். பிறகு நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் (அடிக்கடி) சந்திக்கலானோம். முஆத் என்னைச் சந்தித்தபோது என்னிடம் ஒரு மனிதர் கட்டிவைக்கப்பட்டிருந்தார். (அதைக் கண்ட) முஆத் (ரலி) அவர்கள், “என்ன இது?” என்று கேட்டார்கள். நான், “இவன் இஸ்லாத்தை ஏற்று, பிறகு மதம் மாறிவிட்ட ஒரு யூதன்” என்று பதிலளித்தேன். முஆத் (ரலி) அவர்கள், “இவனது கழுத்தை நான் துண்டிப்பேன்” என்றார். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

373

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரின் (யமன்) நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அப்தஹ்' பள்ளத்தாக்கில் தங்கியிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள், “அப்துல்லாஹ் பின் கைஸே! நீங்கள் ஹஜ் செய்ய நாடினீர்களா?” என்று கேட்டார்கள். நான், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “நீங்கள் (இஹ்ராமின்போது) என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ தாங்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டுகிறேன் என்று சொன்னேன்” எனப் பதிலளித்தேன். அவர்கள், “உங்களுடன் பலிப் பிராணியை நீங்கள் கொண்டுவந்தீர்களா?” என்று கேட்டார்கள். நான், “கொண்டுவரவில்லை” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், இறையில்லமான கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வாருங்கள்; ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே தொங்கோட்டம் ஓடுங்கள்; பிறகு, இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) விடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன். இறுதியில் கைஸ் குலத்துப் பெண்களில் ஒருத்தி எனக்குத் தலை வாரினாள். இவ்வாறே, உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும்வரை நாங்கள் செயல்பட்டுவந்தோம்.379 அத்தியாயம் :

374

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யமன் நாட்டுக்கு அனுப்பியபோது சொன்னார்கள்: நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்லப்போகிறீர்கள். அவர்களிடம் நீங்கள் செல்லும்போது, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்றும் “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றும் உறுதிமொழி கூற அவர்களை அழையுங்கள். இதில் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்கள்மீது ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகை களை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதிலும் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களில் செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளிடையே பங்கிடப்பட வேண்டிய ஸகாத்தை அவர்கள்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதிலும் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படியும்போது, அவர்களின் செல்வங் களில் உயர்ந்தவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கின்றேன். அநீதிக்குள்ளானவரின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேதுமில்லை.380 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: (இங்கு “கீழ்ப்படிதல்' என்பதைக் குறித்து) “அ(த்)தாஊ' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. தவ்வஅ, தாஅ, அ(த்)தாஅ எல்லாம் (பொருளில்) ஒன்றே! “நான் கீழ்ப்படிந்தேன்' என்பதை திஅ(த்)து, துஅ(த்)து, அ(த்)தஅத்து என (மூன்று முறையில்) கூறலாம். அத்தியாயம் :

375

அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆத் (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்கு(ப் பொறுப்பாளராக) வந்தபோது மக்களுக்கு சுப்ஹ் தொழுகை தொழுவித் தார்கள். அப்போது, “அல்லாஹ், (தன் தூதர்) இப்ராஹீமை உற்றநண்பராக ஆக்கிக்கொண்டான்” எனும் (4:125ஆம்) வசனத்தை ஓதினார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது” என்று சொன்னார்.381 மற்றோர் அறிவிப்பில் கூடுதாக உள்ள தாவது: நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு(ப் பொறுப்பாளராக) அனுப்பினார்கள். (அங்கு சென்றபின்) முஆத் (ரலி) அவர்கள் சுப்ஹ் தொழுகையில் (இமாமாக நின்று குர்ஆனின் நான்காவது அத்தியாயமான) “அந்நிசா' அத்தியாயத்தை ஓதினார்கள். “அல்லாஹ் இப்ராஹீமை உற்றநண்பராக ஆக்கிக்கொண்டான்” (4:125) எனும் வசனத்தை முஆத் (ரலி) அவர்கள் ஓதியபோது அவர்களுக்குப் பின்னாóருந்த ஒரு மனிதர், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது” என்று சொன்னார். அத்தியாயம் :

376

பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்கு எங்களை அனுப்பினார்கள். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் இடத்தில் அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அலீயே! காலிதின் சகாக்களில் “உங்களைத் தொடர்ந்து (யமன் நாட்டுக்கு) வர விரும்புபவர் தொடர்ந்து வரட்டும்! (மதீனாவை முன்னோக்சிச் செல்ல) விரும்புபவர் முன்னோக்கிச் செல்லட்டும்!' என்று அவர்களுக்கு உத்தரவிடுங்கள்” என்று சொன்னார்கள். நான் அலீ (ரலி) அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் ஒருவனாயிருந் தேன். போர்ச் செல்வமாக, பெரும் எண்ணிக்கையில் “ஊகியா'க்களை நான் பெற்றேன். அத்தியாயம் :

377

புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களிடம் “குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ (ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக்கொண்ட பின்) குளித்துவிட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோபமடைந்து காலித் (ரலி) அவர்களிடம், “இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டேன். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அதற்கு அவர்கள், “புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?” என்று கேட்க நான், “ஆம்!' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “அவர்மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு “குமுஸ்' நிதியில் அதைவிட அதிக உரிமையுள்ளது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

378

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: உயைனா பின் பத்ர் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல்கைல் (ரலி). நான்காமவர் அல்கமா (ரலி); அல்லது ஆமிர் பின் துஃபைல் (ரó). அப்போது நபித்தோழர்களில் ஒருவர், “இதைப் பெறுவதற்கு இவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம்தான்” என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ண முள்ளன” என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பிய, நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?” என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்து விடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்” என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், “எத்தனையோ தொழுகையாளிகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகிறார்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைப் பிளந்து பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை” என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றுகொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள். மேலும் கூறினார்கள்: இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவார்கள். ஆனால்,அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்கள், வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார் கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளைஅடைந்தால் “ஆத்' கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்.383 அத்தியாயம் :

379

அதாஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: “(யமன் நாட்டிலிருந்து ஹஜ் செய்வதற் காக வருகை தந்த) அலீ (ரலி) அவர்களுக்கு, அவர்களது இஹ்ராமிலேயே தொடர்ந்து நீடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இதே ஹதீஸ் சற்று கூடுதல் தகவலுடன் இடம்பெற்றுள்ளது: அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (யமனின்) அதிகாரி என்ற முறையில் (ஹஜ் செய்ய) வருகை தந்தார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அலீயே! நீங்கள் எதற்காக இஹ்ராம் கட்டினீர்கள்?” எனக் கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே நானும் கட்டியுள்ளேன்” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இப்போது இருப்பதைப் போன்று இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒருசேர முடித்தபின்னர்) குர்பானி கொடுங்கள்” என்று சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக குர்பானி பிராணி ஒன்றைப் பலியிட்டார்கள்.384 அத்தியாயம் :

380

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் (சேர்த்து ஒரே) இஹ்ராம் கட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜை எண்ணியபோது நாங்களும் அவர்களுடன் ஹஜ்ஜையே எண்ணினோம். நாங்கள் மக்காவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், “எவருடன் குர்பானி பிராணி இல்லையோ அவர் தமது ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி (நிய்யத் செய்து ஹஜ்ஜைப் பிறகு செய்து) கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுடன் குர்பானி பிராணி இருந்தது. அப்போது எங்களிடம் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய நாடியவராக யமனிலிருந்து வர, நபி (ஸல்) அவர்கள், “எதற்காக இஹ்ராம் கட்டினீர்கள்? ஏனெனில், உங்கள் மனைவி(யும் என் மகளுமான ஃபாத்திமா) நம்முடன்தான் இருக்கிறார்” என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இஹ்ராமிலேயே நீடித்திருங்கள். ஏனெனில், நம்முடன் குர்பானி பிராணி உள்ளது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

381

ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் “துல் கலஸா' என்றழைக்கப்பட்டுவந்த (இணை வைப்போரின்) ஆலயம் ஒன்று இருந்தது. அது “யமன் நாட்டு கஅபா' என்றும் “ஷாம் நாட்டு (திசையை நோக்கி வாசல் அமைந்த) கஅபா' என்றும் அழைக்கப்பட்டுவந்தது. ஆகவே, என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “என்னை துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். உடனே நான் நூற்றைம்பது (குதிரை) சவாரி செய்யும் வீரர்களுடன் புறப்பட்டு விரைந்து சென்றேன். அதை நாங்கள் உடைத்துப் போட்டுவிட்டு, அங்கு நாங்கள் கண்டவர்களைக் கொன்றுவிட்டோம். பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு (விவரம்) தெரிவித்தேன். அவர்கள் எங்களுக்காகவும் (இந்த நடவடிக்கையில் பங்கு பெற்ற) “அஹ்மஸ்' குலத்தாருக்காகவும் (நன்மை வேண்டிப்) பிரார்த்தித்தார்கள்.386 அத்தியாயம் :

382

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அது “கஸ்அம்' குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது “யமன் நாட்டு கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் “அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். “அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள், தம் விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவுக்கு அதில் அடித்து, “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்துவிட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், “தங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத்தான் நான் உங்களிடம் வந்துள்ளேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(இறைவா!) “அஹ்மஸ்' குலத்தாரின் குதிரைகளிலும் அவர்களின் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக!” என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.387 அத்தியாயம் :

383

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், “சரி (விடுவிக்கிறேன்)” என்று சொன்னேன். அவ்வாறே, “அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். “அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தமது கையால் என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்களது கையின் அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன். அப்போது அவர்கள், “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு நான் (ஒருபோதும்) எந்த குதிரையிலிருந்தும் விழுந்ததில்லை. “துல் கலஸா' என்பது யமன் நாட்டிலிருந்த “கஸ்அம்' மற்றும் “பஜீலா' குலத் தாரின் ஆலயமாகும். அதில், வழிபாடு செய்யப்பட்டுவந்த பலிபீடங்கள் இருந்தன. அது “அல்கஅபா' என்று அழைக்கப் பட்டுவந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்துவிட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக் குறி கேட்கின்ற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கே (அருகில்தான்) இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சிக்கிக்கொண்டால் உன் கழுத்தைத் துண்டித்துவிடுவார்கள்” என்று கூறப்பட்டது. அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்துகொண்டிருந்தபோது நான் அவரருகே சென்று நின்றேன். அப்போது நான் (அம்மனிதரிடம்), “நீ இந்த அம்புகளை உடைத்தெறிந்துவிட்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை' என்று நீ உறுதிமொழி சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டிவிடுவேன்” என்று சொன்னேன். அவ்வாறே அவர் அவற்றை உடைத்துவிட்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று உறுதிமொழி கூறினார். பிறகு “அஹ்மஸ்' குலத்தாரில் “அபூஅர்த்தாத்' என்னும் (குறிப்புப்) பெயர் கொண்ட ஒரு மனிதரை, நபி (ஸல்) அவர்களிடம் (அந்த ஆலயம் அழிக்கப்பட்ட) இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பிவைத்தேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அதைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுதான் (ஆக்கி)விட்டு வந்துள்ளேன்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) “அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அளிக்கும் படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :

384

அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “தாத்துஸ் ஸலாஸில்' (போருக்குச் சென்ற) படைக்கு என்னை(த் தளபதியாக்கி) அனுப்பினார்கள். (நான் திரும்பி வந்தவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “மனிதர்களில் தங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷா' என்று பதிலளித்தார்கள். நான், “ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)' என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு யார்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “உமர்' என்று பதிலளித்தார்கள். இன்னும் பலரையும் பட்டியலிட்டு (அவர்களெல்லாரும் தமக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று) கூறினார்கள். “தமக்குப் பிரியமானவர்களின் பட்டியலில் என்னைக் கடைசி ஆளாக ஆக்கிவிடுவார்களோ' என்று அஞ்சியதால் நான் மௌனமாயிருந்துவிட்டேன்.389 அத்தியாயம் :

385

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் யமன் நாட்டில் இருந்தேன். அப்போது யமன்வாசிகளில் “தூ கலாஉ' மற்றும் “தூ அம்ர்' ஆகிய இருவரை நான் சந்தித்தேன்.391 அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிப் பேசலானேன். அப்போது “தூ அம்ர்' என்னிடம், “நீங்கள் சொல்லும் உங்கள் தோழரின் செய்தி உண்மையெனில் அவர் இறந்துபோய் மூன்று நாட்கள் கடந்துவிட்டன என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். அவர்கள் இருவரும் என்னுடன் வந்தார்கள். நாங்கள் இன்னும் பயணத்திலேயே இருந்துகொண்டிருக்கும்போது மதீனாவின் திசையிலிருந்து ஒரு பயணக் கூட்டம் வந்துகொண்டிருப்பது தென்பட்டது. நாங்கள் அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டுவிட்டார்கள். மக்கள் அனை வரும் நல்லவர்களாக உள்ளனர்” என்று பதிலளித்தனர். உடனே “தூ கலாஉ' மற்றும் “தூ அம்ர்' இருவரும், “நாங்கள் இருவரும் புறப்பட்டு வந்தோம். (எனினும், இப்போது திரும்பிச் செல்கிறோம்.) இறைவன் நாடினால் (அவரிடம்) திரும்பி வருவோம்' என்று உங்கள் தோழரிடம் (அபூபக்ரிடம்) சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். பிறகு யமன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் செய்தியைத் தெரிவித்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அவர்களை (என்னிடம்) நீங்கள் அழைத்துவந்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். பிறகு (என்னைச் சந்திக்கும்) ஒரு சந்தர்ப்பம் வந்தபோது தூ அம்ர், “ஜரீரே! நீங்கள் எனக்கு உபகாரம் செய்திருக்கிறீர்கள். ஆகவே, நான் உங்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறேன். அரபு மக்களாகிய நீங்கள், தலைவர் ஒருவர் இறந்துவிட்டால், (உங்களுக்குள் ஒருவரையொருவர் கலந்தாலோசித்து) வேறொருவரைத் தலைவராகத் தேர்ந் தெடுத்துக்கொள்ளும்வரை நன்மையில் இருப்பீர்கள். (ஆட்சித் தலைமை) வாள் பலத்தால் உருவாவதாயிருந்தால், ஆட்சித் தலைவர் களாக வருபவர்கள் மன்னர்களாக இருப்பார்கள். அவர்கள் மன்னர்கள் கோபப்படுவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகக்) கோபப்பட்டு, மன்னர்கள் திருப்தியடைவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகத்) திருப்தியடைவார்கள்” என்று சொன்னார். அத்தியாயம் :

386

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையினருக்கு அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக்கினார்கள். அவர்கள் (மொத்தம்) முன்னூறு பேர் இருந்தனர். (அதில் நானும் கலந்து கொள்ள) நாங்கள் புறப்பட்டோம். சிறிது தூரம் சென்றபின், வழியில் (எங்கள்) பயண உணவு தீர்ந்துபோய் விட்டது. ஆகவே, அபூஉபைதா (ரலி) அவர்கள் படையினரின் பயண உணவுகளை ஒன்று திரட்டும்படிக் கட்டளையிட, அவை ஒன்றுதிரட்டப்பட்டன. அவை இரு பைகள் நிறையப் பேரீச்சம் பழங்களாய் இருந்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அது தீரும்வரை (அதிலிருந்து) எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக உண்ணக் கொடுத்தார்கள். ஆகவே, எங்களுக்கு ஒவ்வொரு பேரீச்சம் பழம்தான் (ஒவ்வொரு தினமும்) கிடைத்துவந்தது. அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), “(ஒருநாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் உங்களுக்குப் போதாதே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அதுவும் தீர்ந்து போனபோதுதான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது சிறிய மலை போன்ற (திமிங்கில வகை) மீன் ஒன்றைக் கண்டோம். படை வீரர்கள் பதினெட்டு நாட்கள் அதிலிருந்து உண்டார்கள். பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளில் இரண்டை (பூமியில்) நட்டுவைக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவை நட்டுவைக்கப்பட்டன. பிறகு (அவற்றுக்கிடையே) தமது வாகனத்தைச் செலுத்தும்படி அவர்கள் உத்தரவிட, அவ்வாறே செலுத்தப்பட்டது. அவ்விரு விலா எலும்புகளின் கீழே அவ்வாகனம் சென்றது; எனினும், அவ்விரண்டையும் தொடாமலேயே அது (அவற்றுக்கிடையே புகுந்து வெளியே) சென்றுவிட்டது.393 அத்தியாயம் :

387

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை (ஓர் அறப்போருக்கு) அனுப்பினார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் எங்கள் தளபதியாக இருந்தார்கள். நாங்கள் குறைஷியரின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆகவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். ஆகவே அந்தப் படைப்பிரிவு “கருவேல இலைப் படைப்பிரிவு' என்று பெயர் சூட்டப்பட்டது. கடல் எங்களுக்காக “அல்அம்பர்' (கொழுப்புத் தலை திமிங்கலம்) எனப்படும் ஓர் உயிரினத்தை (கரையில் ஒதுக்கிப்) போட்டது. நாங்கள் அதிலிருந்து அரை மாதம் உண்டோம். அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக்கொண்டோம். அதனால் எங்கள் பழைய (வலிமையான) உடல்கள் எங்களுக்கு திரும்பக் கிடைத்துவிட்டன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்த (பெரிய) மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுத் தம்முடனிருந்த மிக உயரமான மனிதரிடம் சென்றார்கள். (அவரை அந்த விலா எலும்பின் கீழே நடந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார்கள்). மற்றோர் அறிவிப்பில், “ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு, அந்த எலும்பு(க் கூட்டு)க்குக் கீழே நடந்து சென்றார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தப் படையினரில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்களையும் மீண்டும் மூன்று ஒட்டகங்களையும் அறுத்தார். பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் (“இனி அறுக்க வேண்டாம்” என்று) அவரைத் தடுத்துவிட்டார்கள். அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் (போரிலிருந்து திரும்பியபின் தம் தந்தை சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம்), “நான் அந்தப் படையில் இருந்தேன். அப்போது மக்கள் கடும் பசிக்கு ஆளானார்கள்” என்று சொன்னார்கள். அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார். கைஸ் (ரலி) அவர்கள், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “அவர்கள் மீண்டும் பசிக்கு ஆளானார்கள்” என்று சொல்ல, அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார். அவர், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “மீண்டும் அவர்கள் பசிக்கு ஆளானார்கள்” என்றார். மீண்டும் அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார். உடனே அவர், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “மீண்டும், அவர்கள் பசிக்கு ஆளானார்கள்” என்று சொல்ல, அவருடைய தந்தை, “நீ ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்றார். அவர், “(மூன்று முறைக்குப் பிறகு) நான் அறுக்க வேண்டாமெனத் தடுக்கப்பட்டுவிட்டேன்” என்று சொன்னார். அத்தியாயம் :

388

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் “கருவேல இலைப் படைப் பிரிவி'ல் சென்றோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது இறந்த (பெரிய) மீன் ஒன்றைக் கடல், (கரையில் கொணர்ந்து) போட்டது. (அதற்குமுன்) அதைப் போல் (ஒரு மீனை) நாங்கள் பார்த்ததேயில்லை. அது “அல்அம்பர்' (கொழுப்புத் தலை திமிங்கலம்) என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்து அரை மாதம் நாங்கள் உண்டோம். அபூஉபைதா அவர்கள் அதன் (விலா) எலும்புகளில் ஒன்றை எடுத்து பூமியில் நட்டுவைக்க (அதன் கீழே) ஒருவர் வாகனத்தில் சென்றார். அறிவிப்பாளர் அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் (ரலி) அவர்கள் இவ்விதம் கூற நான் கேட்டேன்: அபூஉபைதா (ரலி) அவர்கள், “உண்ணுங்கள்” என்று சொன்னார்கள். நாங்கள் மதீனாவுக்கு (திரும்பி) வந்த போது, நபி (ஸல்) அவர்களிடம் அதைச் சொன்னோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் (கடலிலிருந்து) வெளிப்படுத்திய அந்த உணவை உண்ணுங்கள். (அதனால் தவறில்லை.) உங்களுடன் (அதில் சிறிது) இருந்தால் நமக்கும் உண்ணக்கொடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அவர்களில் சிலர், நபி (ஸல்) அவர்களிடம் (அந்த மீனில்) ஒரு துண்டைக் கொண்டுவந்தனர். அதை நபி (ஸல்) அவர்கள் உண்டார்கள். அத்தியாயம் :

389

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “விடைபெறும் ஹஜ்'ஜ‚க்கு முந்தைய ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவுக்குத்) தலைவராக ஆக்கியிருந்தார்கள். அப்போது (துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளான) நஹ்ருடைய நாளில் (மினாவில் வைத்து), “இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்போர் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லம் கஅபாவை நிர்வாணமாக யாரும் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது” என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னை அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.395 அத்தியாயம் :

390

பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: முழுமையான வடிவில் அருளப்பெற்ற இறுதி அத்தியாயம், “பராஅத்' (எனும் 9ஆவது “அத்தவ்பா') அத்தியாயம் ஆகும். இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயப் பகுதி “அந்நிசா'வின் இறுதிப் பகுதியாகும். அந்த வசனம் வருமாறு: (நபியே!) மக்கள் உங்களிடம் “கலாலா' பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் உங்களுக்கு “கலாலா' பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான்...(4:176)396 அத்தியாயம் :

391

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ தமீம் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று அவர்களிடம் சொன்னார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு நற்செய்தி சொன்னீர் கள். (அது இருக்கட்டும்! தர்மம்) கொடுங்கள்” என்று சொன்னார்கள். (இவர்கள் நம் நற்செய்தியை ஏற்க மறுத்து உலகப் பொருளையே விரும்புகிறார்களே என்று) நபி (ஸல்) அவர்களது முகத்தில் கவலை காணப்பட்டது. அப்போது யமன் நாட்டிலிருந்து (அஷ்அரீ குலத்தார்) சிலர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “(யமன்வாசிகளே!) நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு யமனியர், “நாங்கள் (அதை) ஏற்றுக்கொண்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.398 அத்தியாயம் :

392

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரிடம் மூன்று அம்சங் கள் குடிகொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன். அவையாவன: 1. “பனூ தமீம் குலத்தார்தான் என் சமுதாயத்தாரிலேயே தஜ்ஜாலிடம் மிகக் கடுமையாக நடந்துகொள்பவர்கள்” என்று (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். 2. அக்குலத்தாரைச் சேர்ந்த பெண் போர்க்கைதி ஒருவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தார். ஆகவே, (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “அவளை விடுதலை செய்துவிடு. ஏனெனில், அவள் (இறைத்தூதர்) இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சந்ததிகளில் ஒருத்தியாவாள்” என்று சொன்னார்கள். 3. (ஒருமுறை) பனூ தமீம் குலத்தாரின் தானப் பொருள்கள் வந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவை “ஒரு (முக்கிய) சமுதாயத்தின்' அல்லது “என் சமுதாயத்தின்' தானப் பொருட்கள்” என்று சொன்னார்கள்.400 அத்தியாயம் :

393

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூபக்ர் (ரலி) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) கஅகாஉ பின் மஅபத் பின் ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “இல்லை; அக்ரஉ பின் ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்” என்று சொன்னார் கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களிடம்), “நீங்கள் எனக்கு மாற்றமாகக் கருத்துச் சொல்லவே விரும்புகிறீர்கள்” என்று சொல்ல, உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு மாற்றமாகக் கருத்துச் சொல்வது என் நோக்கமல்ல” என்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக்கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே, “இறைநம்பிக்கை கொண்ட வர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்” எனும் (49:1ஆவது) வசனம் முழுவதுமாக அருளப்பெற்றது. அத்தியாயம் :

394

அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “என்னிடம் “நபீத்' (பழச்சாறு மது) வைக்கப்படுகின்ற மண்பாண்டம் ஒன்று இருந்தது. மண்பாண்டத்தில் இனிப்பாக இருக்கும் நிலையில் நான் அதை அருந்துவேன். நான் அதை அதிகமாக அருந்தி, மக்களுடன் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் (போதையில் தாறுமாறாக நடந்து) கேவலப்பட்டுப் போய்விடுவேன் என நான் அஞ்சினேன்” என்று சொன்னேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(அப்துல் கைஸ்) சமுதாயத்தாரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். இழிவுக்குள்ளாகாமலும், மனவருத்தத்திற்குள்ளாகாமலும் வருக!” என்று சொன்னார்கள். அம்மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் உங்களுக்குமிடையே “முளர்' குலத்து இணைவைப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர். இதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ள) புனித மாதங்களில் தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. ஆகவே, எந்தக் கட்டளைகளை நாங்கள் செயல்படுத்தினால் நாங்கள் சொர்க்கம் செல்லவும் எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களை அவற்றின் பக்கம் நாங்கள் அழைக்கவும் ஏதுவாக இருக்குமோ அத்தகைய கட்டளைகளில் (முக்கியமான) சிலவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான் நான்கு விஷயங்களைக் கட்டளையிடுகின்றேன்: 1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது. அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று உறுதி கூறுவதுதான் (அது). 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. ஸகாத் (கட்டாயக்கொடை) வழங்கு வது. 4. ரமளான் மாதம் நோன்பு நோற்பது. மேலும், “போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசுக்குச்) செலுத்தும்படியும் (உங்களுக்குக்) கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கின்றேன். மது ஊற்றி வைக்கப்படும் பாத்திரங்களான சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய், மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங் கள்தான் அவை” என்றார்கள்.402 அத்தியாயம் :

395

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் “ரபீஆ' கோத்திரத்தின் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். (உங்களைச் சந்திக்க விடாமல்) உங்களுக்கும் எங்களுக்குமிடையே “முளர்' குலத்து இறைமறுப்பாளர்கள் தடையாக உள்ளனர். அதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில்தான் நாங்கள் உங்களிடம் வர முடியும். ஆகவே, எங்களுக்குச் சில விஷயங்களைக் கட்டளையிடுங்கள். அவற்றை நாங்கள் கடைப்பிடிப்போம்; எங்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் கடைப்பிடித்து நடக்கும்படி அழைப்போம்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நான்கு விஷயங்களை (செயல்படுத்தும்படி) உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன். (கட்டளையிடும் நான்கு விஷயங் களாவன:) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது; (அதாவது) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதி கூறுவது - இவ்வாறு சொல்லி “ஒன்று' என (தமது விரலால்) எண்ணினார்கள் - தொழுகையைக் கடைபிடிப்பது, ஸகாத் வழங்குவது, மேலும், நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லாஹ்வுக்காகச் செலுத்துவது (ஆகியவைதான் அவை.) (மதுபானம் ஊற்றிவைக்கப் பயன்படும்) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய், மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கிறேன்.403 அத்தியாயம் :

396

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் என்னிடம், “ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் சலாமையும் அவருக்குக் கூறுங்கள். அஸ்ருக்குப்பின் இரண்டு ரக்அத்கள் தொழுவது பற்றி அவரிடம் கேளுங்கள். “நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத்தொழுகையை (அன்னையே!) தாங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோமே' எனக் கேளுங்கள்” என்று (அம்மூவரும்) கூறினர். மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், தாமும் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறு (அஸ்ருக்குப்பின்) தொழுபவர் களைத் தடுப்பவர்களாக இருந்தோம் என்று கூறினார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று என்னை அம்மூவரும் அனுப்பிய விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீங்கள் உம்மு சலமாவிடம் சென்று கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் திரும்பி வந்து அவர்கள் மூவரிடமும் ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை உம்மு சலமா (ரó) அவர்களிடம் சென்று கேட்குமாறு அவர்கள் மூவரும் மீண்டும் என்னை அனுப்பினார்கள். (அவ்வாறே அவர்களிடம் வந்து நான் விஷயத்தைக் கேட்டபோது) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தொழ வேண்டாமெனத் தடை செய்ததை நான் கேட்டிருக்கிறேன். பிறகு (ஒருமுறை) அஸ்ர் தொழுதுவிட்டு அவர்கள் எனது அறைக்கு வந்து, அந்த இரு ரக்அத்களைத் தொழுதார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் “பனூ ஹராம்' குலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பணிப்பெண்ணை அனுப்பி, “நீ அவர்களுக்கு அருகில் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இந்த இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டாமென நீங்கள் தடை செய்ததை நான் கேட்டிருக்கவில்லையா? ஆனால், தாங்களே இப்போது அதைத் தொழப் பார்க்கின்றேனே?' என நான் கேட்டதாக அவர்களிடம் நீ சொல். அவர்கள் தமது கையால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு” எனக் கூறினேன். அப்பெண்ணும் சொன்னபடி செய்தார். நபி (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்தபோது அப்பெண் திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி (ஸல்) அவர்கள், “அபூஉமய்யாவின் மகளே! (உம்மு சலமாவே!) அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்கள் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையினரில் சிலர் தம் குலத்தார் இஸ்லாத்தை ஏற்றுள்ள செய்தியைத் தெரிவிக்க என்னிடம் வந்திருந்ததால், லுஹ்ருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்களை என்னால் தொழ முடிய வில்லை; அத்தொழுகையே (இப்போது நான் தொழுத) இந்த இரண்டு ரக்அத் களாகும்' என்றார்கள்.404 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

397

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலில் (வெள்ளிக்கிழமை) தொழுவிக்கப்பட்ட ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு (இஸ்லாத்தில்) முதன் முதலாக தொழுவிக்கப்பட்ட ஜுமுஆ தொழுகை, “ஜுவாஸா' எனுமிடத்தில் - அதாவது பஹ்ரைனில் இருந்த ஒரு கிராமத்தில்-அப்துல் கைஸ் குலத்தாரின் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையே ஆகும்.405 அத்தியாயம் :

398

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்' பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரை (கைது செய்து) கொண்டுவந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, “(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர், ஸுமாமாவே?” என்று கேட்டார்கள். அவர், “நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் பழிக்குப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்; (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்; நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார். எனவே, அவர் (அப்படியே) விடப்பட்டார். மறுநாள் வந்தபோது அவரிடம், “ஸுமாமாவே! என்ன கருதுகிறீர்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியதுதான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்” என்றார். அவரை நபியவர்கள் (அன்றும் அப்படியே) விட்டுவிட்டார்கள். நாளை மறுநாள் வந்தபோது, “நீர் என்ன கருதுகிறீர்? ஸுமாமாவே!” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழி கூறுகிறேன். மேலும், முஹம்மத், அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதிமொழி கூறுகிறேன்” என மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. நான் (மக்காவுக்குச் சென்று) உம்ரா செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில்தான் உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக்கொண்டனர். இப்போது தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், “நீர் மதம் மாறிவிட்டீரா?” என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிóருந்து ஒரு கோதுமை தானியம்கூட (மக்காவாசி களான) உங்களுக்கு வராது” என்று சொன்னார்கள்.407 அத்தியாயம் :

399

400

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது (கனவில்) பூமியின் கருவூலங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அப்போது என் கையில் தங்கக் காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன. அவை எனக்குப் பெரும் சுமையாகத் தென்பட்டன. அப்போது அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்விரண்டையும் நான் ஊதினேன். அவ்விரண்டும் (பறந்து) சென்றுவிட்டன. “அவ்விரண்டும், எந்த இரு மகா பொய்யர்களுக்கிடையே நான் இருக்கின் றேனோ அவர்களைக் குறிக்கும்' என்று நான் விளக்கம் கண்டேன். அவ்விரு பொய்யர்கள் (அன்சீ என்ற) “ஸன்ஆ'வாசி யும் (முசைலிமா என்ற) “யமாமா'வாசியும் ஆவர்.409 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

401

402

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: மகா பொய்யன் முசைலிமா மதீனா விற்கு வந்திருக்கின்றான் என்ற செய்தி எங்களுக்கு எட்டியது. அவன் ஹாரிஸின் மகள் (கய்யிஸா என்பாள்) வீட்டில் தங்கினான். அந்த ஹாரிஸ் பின் குரைஸின் மகள் அவனுக்கு மனைவியாக இருந்தாள். அவள், அப்துல்லாஹ் பின் ஆமிருடைய (மக்களின்) தாய் ஆவாள். ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முசைலிமாவிடம் சென்றார்கள். இந்த ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அவர்கள்தான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (அதிகாரபூர்வ) பேச்சாளர்' என்று அழைக்கப்பட்டுவந்தவர் ஆவார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் (பேரீச்ச மட்டையாலான) குச்சியொன்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முசைலிமாவின் அருகே நின்று அவனிடம் பேச்சுக் கொடுத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் முசைலிமா, “நீங்கள் விரும்பினால் உங்களுக்கும் (உங்கள் நபித்துவ) பதவிக்கும் இடையே குறுக்கிடாமல் நாம் விலகிக்கொள்கிறோம். (ஆனால்,) உங்களுக்குப் பின்னர் நீங்கள் அந்தப் பதவியை எமக்கு அளித்திட வேண்டும்” என்று சொன்னான். நபி (ஸல்) அவர்கள், “நீ என்னிடம் இந்தக் குச்சியைக் கேட்டாலும்கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். எனக்கு (கனவில்) காட்டப்பட்ட அதே ஆள்தான் நீ என்று உன்னை நான் கருதுகிறேன். இதோ, இந்த ஸாபித் பின் கைஸ் உனக்கு என் சார்பாக பதிலளிப்பார்” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அத்தியாயம் :

403

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆகிப், சய்யித் எனும் நஜ்ரான் வாசிகள் இருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “சாபஅழைப்புப் பிரார்த்தனை' (முபாஹலா) செய்வதற்காக வந்தனர்.414 அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், “நீர் அவ்வாறு செய்யாதீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் உண்மையிலேயே இறைத்தூதராக இருந்து, நாம் சாபஅழைப்புப் பிரார்த் தனை செய்துவிட்டோமானால் நாமும் உருப்படமாட்டோம்; நமக்குப்பின் வரவிருக்கும் நம் சந்ததிகளும் உருப்பட மாட்டார்கள்” என்று சொன்னார். (பிறகு) இருவரும் சேர்ந்து (நபி (ஸல்) அவர்களிடம்), “நீங்கள் எங்களிடம் கேட்கின்றவற்றை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுடன் அனுப்புங்கள். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரைத் தவிர வேறெவரையும் எங்களுடன் அனுப்ப வேண்டாம்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (ஒவ்வொரு வரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள், “அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் அவர்களே! எழுந்திருங்கள்” என்று சொன்னார்கள். அவர் எழுந்து நின்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர்” என்று சொன்னார் கள்.415 அத்தியாயம் :

404

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நஜ்ரான்வாசிகள் நபி (ஸல்) அவர்களி டம் வந்து, “நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுக்காக அனுப்புங்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரைத்தான் நான் உங்களிடம் அனுப்புவேன்” என்று சொன்னார்கள். மக்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அத்தியாயம் :

405

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அவர்களின்) நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. இந்தச் சமுதாயத்தாரின் நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் அவர்களாவார். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.416 அத்தியாயம் :

406

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை), “பஹ்ரைனின் நிதி வந்தால் உனக்கு நான் இப்படி இப்படி மூன்று முறை (அள்ளிக்) கொடுப்பேன்” என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால், பஹ்ரைன் நிதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்வரை வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தில்) அந்த நிதி வந்தபோது அவர்கள் பொது அறிவிப்புகள் செய்பவர் ஒருவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவருக்காவது கடன் தர வேண்டியிருந்தாலோ அல்லது அவர்கள் எவருக்காவது ஏதேனும் வாக்களித்திருந்(து அதை நிறைவேற்றும் முன்பாக அவர்கள் இறந்துவிட்டிருந்)தாலோ அவர் என்னிடம் வரட்டும்” என்று அறிவிப்புச் செய்யும்படி உத்தரவிட்டார்கள். ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “நபி (ஸல்) அவர்கள், “பஹ்ரைன் நிதி வந்தால் உனக்கு நான் இப்படி இப்படி மூன்று முறை (அள்ளிக்) கொடுப்பேன்' என்று சொன்னார்கள்” எனத் தெரிவித்தேன். அப்போது எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (சிறிது) கொடுத்தார்கள். அதற்குப்பின் அவர்களை நான் சந்தித்து மீண்டும் கேட்டேன். அப்போது அவர்கள் (எதுவும்) எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் அவர்களிடம் நான் சென்றேன். அப்போதும் அவர்கள் ஏதும் தரவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் மூன்றாவது முறையாகச் சென்றேன். அப்போதும் எனக்குத் தரவில்லை. ஆகவே, நான் அவர்களிடம், “(முதலில்) நான் உங்களிடம் வந்தேன். அப்போது நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு (இரண்டாம் முறையாக) வந்தேன். அப்போதும் நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு (மூன்றாம் முறை நான்) உங்களிடம் வந்தேன். அப்போதும் நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், என்னிடம் நீங்கள் கருமித்தனம் காட்டுவதாகவே நான் கருதுவேன்” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “நான் கருமித்தனம் காட்டுவதாகவா நீ சொன்னாய். கருமித்தனத்தைவிடக் கொடிய நோய் ஏது?” என்று மூன்று முறை கேட்டார்கள். “ஒவ்வொரு முறை உனக்குத் தர மறுத்தபோதும் உனக்குக் கொடுக்க வேண்டுமென்றே கருதினேன்” என்றும் கூறினார்கள். அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “இதை எண்ணிக்கொள்' என்று சொன்னார்கள். நான் அதை எண்ணிப் பார்த்தேன். அது ஐநூறு (தீனார்/திர்ஹம்) இருந்தது. அப்போது அவர்கள், “இதே போன்று இன்னும் இரண்டு மடங்கை நீ எடுத்துக் கொள்' என்று சொன்னார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.418 அத்தியாயம் :

407

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து (மதீனாவில்) சிறிது காலம் தங்கியிருந்தோம். அப்போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அவர்களுடைய தாயாரும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர் களுடைய வீட்டினுள்) அதிகமாகச் சென்று வருவதையும் அவர்களுடனேயே எப்போதும் இருப்பதையும் கண்டு, அவர்கள் (இருவரும்) நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றே நாங்கள் கருதினோம்.421 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

408

ஸஹ்தம் பின் முளர்ரிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் கூஃபா நகரின் ஆட்சியாளராக) வருகை தந்தபோது, இந்த “ஜர்ம்' குடும்பத்தாரைச் (சந்தித்து அவர்களை)க் கண்ணியப்படுத்தினார்கள்.422 (ஒருமுறை) நாங்கள் அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் கோழியைப் பகல் உணவாக உண்டு கொண்டிருந்தார்கள். அப்போது கூட்டத்தில் ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அபூமூசா (ரலி) அவர்கள் அவரை உணவு உண்ண அழைத்தார்கள். அம்மனிதர், “இது, (அசுத்தம்) எதையோ தின்றுகொண்டி ருப்பதை நான் பார்த்தேன். ஆகவே, நான் இதை அருவருக்கிறேன்” என்றார். உடனே அபூமூசா (ரலி) அவர்கள், “இங்கே வா! நபி (ஸல்) அவர்கள் இதை உண்பதை நான் பார்த்திருக்கிறேன்” என்று சொன்னார்கள். அம்மனிதர், “நான் இதை உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளேன்” என்று சொன்னார். உடனே அபூமூசா (ரலி) அவர்கள், “இங்கே வா! உன் சத்தியத்தைப் பற்றி நான் உனக்குத் தெரிவிக்கிறேன். நாங்கள், அஷ்அரீ குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நாங்கள் (பயணம் செய்ய) வாகனம் அளித்து உதவும்படி அவர்களிடம் கேட்டோம். அவர்கள் எங்களுக்கு வாகனம் அளிக்க மறுத்துவிட்டார்கள். ஆகவே, மீண்டும் அவர்களிடம் (பயணம் செய்ய) வாகனம் கேட்டோம். அவர்கள், “நீங்கள் பயணம் செய்வதற்காக உங்களுக்கு வாகனம் தரமாட்டேன்” என்று சத்தியம் செய்துவிட்டார்கள். பிறகு சிறிது நேரம்தான் தங்கியிருந்திருப்பார்கள். அதற்குள் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. எங்களுக்கு (பத்துக்குட்பட்ட ஒட்டகங்கள் கொண்ட மந்தைகளில்) ஐந்து மந்தைகள் வழங்கும்படி கட்டளையிட்டார்கள். நாங்கள் அதை எங்கள் கைவசம் பெற்றுக்கொண்டபோது, “நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களின் சத்தியத்தை நாம் மறக்கடித்துவிட்டோம். எனவே, நாம் ஒருபோதும் முன்னேற முடியாது” என்று சொல்லிக்கொண்டோம். உடனே நான் அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பயணம் செய்ய வாகனம் தரமாட்டேன் என்று தாங்கள் சத்தியம் செய்துவிட்டு இப்போது நாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு வாகனம் தந்துவிட்டீர்களே” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம்! ஆயினும், நான் ஒரு விஷயத்திற்காகச் சத்தியம் செய்து அதன் பின் அதுவல்லாத வேறொன்றை, அதைவிடச் சிறந்ததாகக் கண்டால் அந்தச் சிறந்ததையே செய்வேன் (சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்)” என்று சொன்னார்கள்.423 அத்தியாயம் :

409

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ தமீம் குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள், பனூதமீம் குலத்தாரே!” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “நீங்கள் எங்களுக்கு நற்செய்தி சொல்லிவிட்டீர்கள்தானே! (இனி ஏதேனும்) எங்களுக்கு வழங்கிடுங்கள்” என்று கேட்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட்டது. அப்போது யமன்வாசிகளில் சிலர் (அஷ்அரீ குலத்தார்) வந்தனர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்” என்று கூறினார்கள். அந்த யமனியர், “ஏற்றுக் கொண்டுவிட்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர்.424 அத்தியாயம் :

410

அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கை (ஈமான்) இங்கேயுள்ளது” என்று தமது கையால் யமன் நாட்டின் பக்கம் சைகை காட்டிக் கூறினார்கள். மேலும், “கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங் களின் வால்களைப் பிடித்தபடி, அவற்றை அதட்டிக்கொண்டே (நாடோடிகளாகச்) சென்றுகொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்” என்று சொன்னார்கள்.425 அத்தியாயம் :

411

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யமன்வாசிகள் உங்களிடம் வந்திருக் கிறார்கள். அவர்கள் இளகிய மனமுடையவர்கள்; மென்மையான இதய முடையவர்கள். இறைநம்பிக்கை, யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். தற் பெருமையும் அகம்பாவமும் ஒட்டக மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி) களிட(மு)ம் காணப்படுகின்றன. கம்பீரமும் (அதே நேரத்தில்) அமைதியும் ஆடுகளின் உரிமையாளர்களிடம் காணப்படுகின்றன. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.426 இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

412

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். குழப்பம் இங்கே (கிழக்கில்) உள்ளது. இங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.427 அத்தியாயம் :

413

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யமன்வாசிகள் உங்களிடம் வந்துள் ளனர். அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள். மென்மையான இதயம் உடையவர்கள். மார்க்க ஞானம் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்; விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

414

அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர் களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது கப்பாப் (ரலி) அவர்கள் வந்து, “அபூஅப்திர் ரஹ்மானே! நீங்கள் (குர்ஆன்) ஓதுவதைப் போல் இந்த இளைஞர்களால் ஓத முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் உங்களுக்கு (குர்ஆன்) ஓதிக்காட்டும்படி இவர்களில் சிலருக்குக் கட்டளையிடுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு கப்பாப் (ரலி) அவர்கள், “சரி! (ஓதிக்காட்டச் சொல்லுங்கள்)” என்று சொன்னார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (என்னிடம்), “அல்கமா! நீங்கள் ஓதுங்கள்” என்று கூற, ஸியாத் பின் ஹுதைர் (ரஹ்) அவர்களுடைய சகோதரர் ஸைத் பின் ஹுதைர் (ரஹ்) அவர்கள், “அல்கமா, எங்களில் மிகச் சிறந்த ஓதுநராக இல்லாதிருக்க, அவரையா ஓதச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் நபி (ஸல்) அவர்கள் உங்கள் குலத்தார் (பனூ அசத்) பற்றியும், அல்கமாவுடைய குலத்தார் (நகஉ) பற்றியும் கூறியதை உங்களுக்கு நான் அறிவிப்பேன்” என்று சொன்னார்கள். அப்போது நான் (குர்ஆனின் 19ஆவது) அத்தியாயம் “மர்யமி'லிருந்து ஐம்பது வசனங்களை ஓதினேன். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (கப்பாப் (ரலி) அவர்களை நோக்கி), “(இவரது ஓதல்) எப்படியிருப்பதாகக் கருதுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு அவர்கள், “நன்றாக ஓதினார்” என்று பதிலளித்தார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நான் எதை ஓதினாலும் அதை இவரும் ஓதிவிடுவார்” என்று சொன்னார்கள். பிறகு, கப்பாப் (ரலி) அவர்களின் பக்கம் திரும்பினார்கள். அப்போது அவர்கள் தங்க மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். ஆகவே, “இந்த மோதிரம் கழற்றி எறியப்படும் வேளை (இன்னும்) வரவில்லையா?” என்று கேட்டார்கள். கப்பாப் (ரலி) அவர்கள், “இன்றைக்குப் பிறகு இதை நான் அணிந்திருப்பதை ஒருபோதும் நீங்கள் பார்க்கமாட்டீர்கள்” என்று சொல்லிவிட்டு, அதைக் கழற்றி எறிந்துவிட்டார்கள்.428 இதே ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

415

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “தவ்ஸ் குலத்தார் அழிந்துவிட்டனர்; (இறைவனுக்கும் இறைத்தூதருக்கும்) மாறு செய்துவிட்டனர்; (இஸ்லாத்தை) ஏற்க மறுத்துவிட்டனர். ஆகவே, தாங்கள் அவர்களுக்கெதிராகப் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! “தவ்ஸ்' குலத்தாரை நல்வழியில் செலுத்துவாயாக!. அவர்களை (எம்மிடம்) கொண்டுவருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.430 அத்தியாயம் :

416

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் (இஸ் லாத்தை ஏற்பதற்காக) வந்தபோது வழியில், “எவ்வளவு நீண்டகளைப்பூட்டும் இரவு!இருந்தாலும்காத்தது அந்தஇரவுதான்!இறைமறுப்பு இல்லத்திலிருந்து!” என்று பாடினேன். என் அடிமை ஒருவன் வழியில் தப்பியோடிவிட்டான். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். நான் அவர்களிடம் இருந்தபோது (எனது) அந்த அடிமை வந்தான். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அபூஹுரைராவே! இதோ உன் அடிமை!” என்று கூறினாôர்கள். நான், “அவன் அல்லாஹ்வின் அன்புக்காக (விடுதலை)” என்று சொல்லி அவனை விடுதலை செய்துவிட்டேன்.431 அத்தியாயம் :

417

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்களிடம் (அவர் களது ஆட்சிக் காலத்தில்) ஒரு குழுவாக நாங்கள் வந்தோம். அவர்கள் ஒவ்வொரு மனிதராகப் பெயர் சொல்லி அழைக்கலானார்கள்; (என்னை முதலில் அழைக்கவில்லை.) ஆகவே நான், “என்னைத் தெரியவில்லையா, இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம், தெரியும். மக்கள் மறுத்தபோது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றீர்கள்; அவர்கள் (இஸ்லாத்தை ஏற்காமல்) பின்வாங்கிச் சென்றபோது நீங்கள் (அதை ஏற்க) முன்வந்தீர்கள். அவர்கள் (ஸகாத்தை வழங்காமல்) மோசடி செய்தபோது நீங்கள் நிறைவேற்றினீர்கள். (உண்மையை) அவர்கள் நிராகரித்தபோது நீங்கள் ஏற்றீர்கள்” என்று சொன்னார்கள். நான், “அப்படியென்றால் (என்னை முதலில் அழைக்காதது குறித்து) நான் பொருட்படுத்தப்போவதில்லை” என்றேன். அத்தியாயம் :

418

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “விடைபெறும் ஹஜ்'ஜ‚க்காகப் புறப்பட்டோம். (முதóல்) உம்ரா செய்வதற்காக இஹ்ராம் கட்டினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரிடம் குர்பானி பிராணி உள்ளதோ அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் சேர்த்து (கிரான்) செய்து கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறை வேற்றிய பிறகே அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்” என்று சொன்னார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் மக்காவுக்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லை. ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே ஓடவுமில்லை. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அப்போது அவர்கள், “உன் தலை (முடியை) அவிழ்த்து வாரிக்கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள். உம்ராவை விட்டுவிடு” என்று சொன்னார் கள். அவ்வாறே நான் செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடன் தன்யீமுக்கு அனுப்பினார்கள். (அங்கு இஹ்ராம் கட்டி) உம்ராவை நிறைவேற்றினேன். “இது (இந்த உம்ரா) உனது (விடுபட்ட) உம்ராவுக்குப் பதிலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடவும் (சயீ) செய்தனர். பிறகு இஹ்ராமிóருந்து விடுபட்டுப் பின்னர் மினாவிலிருந்து திரும்பியபின் மற்றொரு முறையும் சுற்றி (தவாஃப்) வந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரேயொரு முறைதான் சுற்றி (தவாஃப்) வந்தனர்.434 அத்தியாயம் :

419

இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உம்ரா செய்பவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்” என்று சொன்னதாக அதாஉ (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். நான், “எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “குர்பானி பிராணி களை அறுத்துத் தியாகம் செய்வதற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகில் உள்ளது” (22:33) எனும் இறை வசனத்தை ஆதாரமாகக் கொண்டும், நபி (ஸல்) அவர்கள், “விடைபெறும் ஹஜ்ஜின்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடும்படி தம் தோழர்களுக்கு உத்தரவிட்டதை ஆதாரமாகக்கொண்டும்தான் இப்படிக் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், “அரஃபாவில் தங்குவதற்கு முன்பும் அங்கிருந்து வந்த பின்பும் (இரண்டு நேரங்களிலுமே) இஹ்ராமிலிருந்து விடுபடுவது அனுமதிக்கப்பட்டதே என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதிவந்தார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

420

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் “பத்ஹா'வில் இருந்தபோது நான் சென்றேன். அவர்கள், “ஹஜ் செய்ய நாடிவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்றேன். அவர்கள், “எதற் காக இஹ்ராம் கட்டினீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே (அதே ஹஜ்ஜுல் கிரானுக் காகவே) நானும் இஹ்ராம் கட்டினேன்” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே (சயீ) ஓடுங்கள்; பிறகு இஹ்ராமிóருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடிய பிறகு கைஸ் குலத்துப் பெண்ணொருத்தியிடம் சென்றேன். அவள் என் தலையில் பேன் பார்த்தாள்.435 அத்தியாயம் :

421

நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜை நிறைவேற்றிய ஆண்டில், (தவாஃபும் சயீயும் செய்து தலைமுடியைக் குறைத்துவிட்டு) உம்ராவிலிருந்து விடுபட்டுவிடும்படி தம் துணைவியருக்கு உத்தரவிட்டார்கள். அப்போது நான், “நீங்கள் ஏன் (இஹ்ராமிóருந்து) விடுபடவில்லை?” என்று கேட்டேன். அவர்கள், “நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியச் செய்துவிட்டேன். என் குர்பானி பிராணிக்குக் கழுத்தில் (அடையாள) மாலை தொங்கவிட்டுவிட்டேன். ஆகவே, நான் குர்பானி பிராணியை அறுக்கும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடப்போவதில்லை” என்று சொன்னார்கள்.436 அத்தியாயம் :

422

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “விடைபெறும் ஹஜ்'ஜின்போது “கஸ்அம்' குலத்துப் பெண் ஒருவர் மார்க்கத் தீர்ப்பு கேட்டார். அப்போது, ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (வாகனத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டிருந்தார். அந்தப் பெண், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ், தன் அடியார்கள்மீது கடமையாக்கிய (ஹஜ்ஜின்) விதி, வாகனத்தில் சரியாக அமர முடியாத அளவுக்குத் தள்ளாத முதியவரான நிலையில் என் தந்தையிடம் வந்து சேர்ந்தது. ஆகவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம் (நிறைவேறும்)” என்று பதிலளித்தார்கள்.437 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

423

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது “கஸ்வா' எனும் (தமது) ஒட்டகத்தின் மீது (பயணம் செய்தபடி) உசாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு முன்னோக்கிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர். இறுதியில், அவர்கள் தம் ஒட்டகத்தை இறையில்லம் (கஅபாவின்) அருகே மண்டியிட்டு அமரச்செய்தார்கள். பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம், “(கஅபாவின்) சாவியை எம்மிடம் கொண்டுவாருங்கள்” என்று சொல்ல, அவரும் சாவியைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களுக்காகக் கதவைத் திறந்தார். நபி (ஸல்) அவர்களும் உசாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் (பின் தல்ஹா-ரலி) ஆகியோரும் உள்ளே நுழைந்தனர். பிறகு அவர்கள் (கஅபாவின்) கதவை மூடிக்கொண்டு நீண்ட பகல் முழுவதும் தங்கிப் பிறகு வெளியேறினர். மக்கள் (கஅபாவின்) உள்ளே நுழையப் போட்டியிட்டனர். நான் அவர்களை முந்திக்கொண்டு (உள்ளே நுழைந்து)விட்டேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அவர்களிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?” என்று கேட்டேன். அவர்கள், “அந்த இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்” என்று சொன்னார்கள். அப்போது இறையில்லம் கஅபாவுக்கு இரண்டு வரிசைகளில் ஆறு தூண்கள் இருந்தன. இறையில்லம் கஅபாவின் வாயில் தம் முதுகுக்குப் பின்னாலிருக்க முதல் வரிசையிலிருந்த இரு தூண்களுக்கிடையே நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்கள் தொழுத இடம், நீங்கள் கஅபாவினுள் நுழையும்போது உங்களுக்கும் உங்கள் எதிரிலிருக்கும் சுவருக்குமிடையே அமையும். நான் பிலால் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?” என்று கேட்க மறந்துவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தில் சிவப்புச் சலவைக் கல் ஒன்று (பதிக்கப்பட்டு) இருந்தது.438 .4401 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் (மற்றொரு) துணைவியாரான ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு “விடைபெறும் ஹஜ்'ஜின்போது மாதவிடாய் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அவர் நம்மை (மக்காவிலிருந்து புறப்பட விடாமல்) தடுத்துவிட்டாரா?” என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், “அவர் தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்” என்று கூற, நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் பரவாயில்லை. அவர் புறப்படலாம்” என்று சொன்னார்கள்.439 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

424

425

426

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பத்தொன்பது அறப்போர்களில் கலந்துகொண்டார்கள். மேலும், அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்த பின்பு ஒரேயொரு ஹஜ்தான் செய்தார்கள். அந்த ஹஜ்ஜத்துல் வதாவுக்குப் பிறகு அவர்கள் வேறெந்த ஹஜ்ஜும் செய்யவில்லை. அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத்திற்கு முன்பு) மக்காவில் இருந்தவாறு மற்றொரு ஹஜ் செய்துள்ளார்கள்.441 அத்தியாயம் :

427

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “ஹஜ்ஜத்துல் வதா'வின்போது என்னிடம், “மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்!” என்று சொல்லிவிட்டு, “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்வதன் மூலம் இறைமறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் மாறிவிடாதீர்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

428

அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள “முளர்' குலத்தாரின் ரஜப் மாதமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.442 (ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் பத்தாம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது துல்ஹிஜ்ஜா மாதம் இல்லையா?” என்று கேட்டார்கள். நாங்கள், “ஆம்' என்றோம். (பிறகு,) “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது (புனிதமிக்க) நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள், “ஆம்' என்றோம். மேலும், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது நஹ்ருடைய (துல்ஹிஜ்ஜா பத்தாம்) நாள் அல்லவா?” எனக் கேட்க, நாங்கள், “ஆம்' என்றோம். (பிறகு,) “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் - உங்கள் மானமும் - உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் வழிதவறியவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள். இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர் களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரைவிட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம்.443 -இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, “முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மை சொன்னார்கள்” என்று கூறுவார்கள்.- பிறகு, நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தை யும்) சேர்த்துவிட்டேனா?” என்று இரண்டு முறை கேட்டார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள்கூறுகிறார்கள்: “உங்கள் மானமும்' என்பதையும் சேர்த்தே அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :

429

தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யூதர்களில் சிலர், (ஒரு குறிப்பிட்ட இறை வசனம் பற்றி), “இந்த வசனம் (யூதர்களான) எங்களிடையே அருளப்பட்டிருந்தால் நாங்கள் (இது அருளப்பெற்ற) அந்த நாளை (கொண்டாடப்பட வேண்டிய) பெருநாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்” என்று கூறினர். உமர் (ரலி) அவர்கள், “எந்த வசனம் அது?” என்று கேட்க அவர்கள், “ இன்று நான் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக முழுமைப்படுத்திவிட்டேன்; உங்கள்மீது என் அருட்கொடையை நிறைவாகப் பொழிந்துவிட்டேன்; உங்களுக்கு (உரிய) வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை அங்கீகரித்துக்கொண்டேன்' எனும் (5:3) இறைவசனம்தான் அது” என்று பதிலளித் தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இது எந்த இடத்தில் அருளப்பெற்றது என்பது எனக்குத் தெரியும். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“ஹஜ்—த்துல் வதா'வின் சமயத்தில்) அரஃபாவில் நின்றுகொண்டிருந்தபோது அருளப் பெற்றது” என்று சொன்னார்கள்.444 அத்தியாயம் :

430

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (“விடைபெறும் ஹஜ்'ஜின் போது) புறப்பட்டோம். எங்களில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர்; ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தார்கள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தவர்களும், ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டியிருந்தவர்களும் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “ஹஜ்ஜத்துல் வதா ஆண்டில்' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.445 அத்தியாயம் :

431

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் சமயம் (நான் மக்காவிலிருந்த போது எனக்கேற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்தை எதிர்நோக்கியிருந்தேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! பொருளாதார வசதியுள்ள எனக்கு என் ஒரே மகளைத் தவிர வேறு வாரிசு எவரும் இல்லாத நிலையில், நீங்கள் காணும் இந்த நோய் என்னைப் பீடித்துள்ளது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கைத் தர்மம் செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்' என்று சொன்னார்கள். நான், “அப்படியானால் என் சொத்தில் பாதியைத் தர்மம் செய்யட்டுமா?” என்று கேட்க அதற்கும், “வேண்டாம்' என்று சொன்னார்கள். நான், “மூன்றில் ஒரு பங்கைத் தர்மம் செய்யட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள், “மூன்றில் ஒரு பங்கா? மூன்றில் ஒரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்களுடைய வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் நிலையில் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச்செல்வது சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடிச் செய்கின்ற செலவு எதுவாயினும் அதற்குப் பகரமாக உங்களுக்குப் பிரதிபலன் தரப்படும். எந்த அளவுக்கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாய்க்குள் இடுகின்ற ஒரு கவளம் உணவுக்கும்கூட (உங்களுக்குப் பிரதிபலன் அளிக்கப்படும்)” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்களெல்லாரும் மதீனாவுக்குச் சென்றுவிடுவார்கள்.) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின்தங்கியவனாக ஆகிவிடுவேனா?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்துகொண்டே இருந்தால் உங்கள் தகுதியும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்” எனக் கூறிவிட்டு உங்களை வைத்துச் சில கூட்டத்தார் நன்மையடைவதற்காவும் மற்றச் சிலர் துன்பமடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்கவைக்கப்படலாம்” என்று கூறினார்கள். மேலும், “இறைவா! என் தோழர்களின் ஹிஜ்ரத்தை முழுமையாக்குவாயாக! தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்தைய இணைவைக்கும் மார்க்கத்திற்கே) இவர்களைத் திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே” எனப் பிரார்த்தித்தார்கள். (நோயாளியாயிருந்த மற்றொருவரான) சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக, “பாவம், சஅத் பின் கவ்லா! (அவர் நினைத்தது நடக்கவில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள்.446 அத்தியாயம் :

432

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “ஹஜ்—த்துல் வதா'வின்போது (ஹஜ் வழிபாடுகளை நிறைவு செய்தபின்) தம் தலையை மழித்துக்கொண்டார்கள்.447 அத்தியாயம் :

433

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் சிலரும் விடைபெறும் ஹஜ்ஜின்போது (ஹஜ் வழிபாடுகளை நிறைவு செய்தபின்) தம் தலையை மழித்துக்கொண்டார்கள். (தோழர்கள்) சிலர் தம் தலைமுடியைக் குறைத்துக் கொண்டார்கள்.448 அத்தியாயம் :

434

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் மக்களுக்குத் தொழுவித்தபடி நின்றுகொண்டிருந்தபோது, கழுதை யொன்றில் பயணித்தபடி நான் அவர் களை நோக்கிச் சென்றேன். (எனது) அந்தக் கழுதை (தொழுகையாளிகளின்) ஓரணியில் ஒரு பகுதிக்கு முன்னால் நடந்து சென்றது. பிறகு நான் அதிலிருந்து இறங்கி மக்களுடன் வரிசையில் நின்றுகொண்டேன்.449 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

435

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களுடன் நான் இருந்துகொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹஜ் பயணத்தின் வேகத்தைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அவர்களின் பயண வேகம்) நடுநிலையானதாய் இருந்தது. (மக்கள் நெரிசல் இல்லாத) விசாலமான இடம் வந்ததும் அவர்கள் விரைந்து செல்வார்கள்” என்று சொன்னார்கள்.450 அத்தியாயம் :

436

அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (முஸ்தலிஃபாவில்) மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதேன்.451 அத்தியாயம் :

437

அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது: என் நண்பர்கள் என்னை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் உஸ்ரா (போரின்) படையுடன் செல்லவிருந்தனர்- உஸ்ரா போரே தபூக் போராகும்- அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும்படி என்னைத் தங்களிடம் அனுப்பிவைத்துள்ளனர்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் வின் மீதாணையாக! உங்களுக்கு எந்த வாகனத்தையும் என்னால் தரவியலாது” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்திóருந்த சமயத்தில் நான் அவர்களிடம் சென்று விட்டேன். நான் அதை அறிந்திருக்க வில்லை. நபி (ஸல்) அவர்கள் (வாகனம் தர) மறுத்ததாலும் என்மீது அவர்கள் வருத்தம் கொண்டிருப்பார்கள் என்ற அச்சத்தாலும் நான் கவலை கொண்டவனாகத் திரும்பி னேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதை என் நண்பர்களிடம் வந்து தெரிவித்தேன். சிறிது நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள், “அப்துல்லாஹ் பின் கைஸே!” என்று பிலால் (ரலி) அவர்கள் அழைப்பதைக் கேட்டேன். உடனே நான் பதிலளித்தேன். அப்போது அவர்கள், “உங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கிறார்கள். அவர்களது அழைப்பை ஏற்றுச் செல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள், “ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரு ஒட்டகங்களையும், ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரு ஒட்டகங்களையும்....” என்று ஆறு ஒட்டகங்களைக் காட்டி, “பிடித்துக்கொள்வீராக” என்று சொன் னார்கள். அவற்றை அப்போதுதான் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்கள். உங்கள் நண்பர்களிடம் இவற்றை (ஓட்டி)க்கொண்டு சென்று அவர்களிடம், “ அல்லாஹ் அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த ஒட்டகங்களை உங்கள் பயணத்திற்காக அளித்துள்ளார்கள். எனவே, இவற்றில் ஏறிப் பயணம் செய்யும்படி சொல்லச் சொன்னார்கள்' எனத் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள். அவர்களிடம் நான் அவற்றை (ஓட்டி)க்கொண்டு சென்று, “நபி (ஸல்) அவர்கள் இவற்றின் மீது உங்களைப் பயணம் செல்லும்படி கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னுடன் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“நான் எந்த வாகனமும் தரமாட்டேன்' என்று) கூறியதைக் கேட்டவர்களிடம் விசாரிக்கும்வரையில் உங்களை நான் விடமாட்டேன். ஏனெனில், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை உங்களிடம் சொல்லிவிட்டதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாதல்லவா?” எனக் கூறினேன். அதற்கு என் நண்பர்கள், “(அதற்கெல்லாம் அவசியமில்லை.) உங்களை உண்மையாளர் என்றே நாங்கள் கருதுகிறோம். (இருந்தாலும், நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற காரணத்தால்) நீங்கள் விரும்பியபடி நாங்கள் செய்கிறோம்” என்று சொன்னார் கள். நான் அவர்களில் சிலரை அழைத்துக்கொண்டு, “நான் அவர்களுக்குத் தரமாட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதóல்) மறுத்ததையும், பிறகு அவர்களே தந்ததையும் அறிந்த சிலரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது அந்தச் சிலர், நான் மக்களிடம் சொன்னதைப் போன்றே கூறினார்கள். அத்தியாயம் :

438

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக்கொள்வதற்காக மதீனாவில்) அலீ (ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற் காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “மூசாவிடம் ஹாரூன் இருந்த இடத்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

439

யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் சிரம(ப் போரான தபூக்) யுத்தத்தில் கலந்து கொண்டேன். என் செயல்களிலேயே அந்தப் அறப்போர்தான் என்னிடம் மிக உறுதி வாய்ந்ததாகும். என்னிடம் கூலித் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதரிடம் சண்டையிட்டார். அந்த இருவரில் ஒருவர் மற்றவரின் கையைக் கடித்துவிட்டார். கடிபட்டவர், கடித்தவரின் வாயிலிருந்து தமது கையை இழுத்துக்கொள்ள முனைந்தபோது, கடித்தவரின் முன்பற்களில் ஒன்று கழன்று (விழுந்து)விட்டது. இருவரும் (தமது வழக்கை) நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றபோது, அவர்கள் பல்லை இழந்தவருக்கு நஷ்டஈடு தரத் தேவையில்லை (பழிவாங்கிக் கொள்ளவும் அனுமதியில்லை)” என்று தீர்ப்பளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அறிவிப்பாளர் ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள், “அவ்விருவரில் யார், யாரைக் கடித்தார் என்று எனக்குத் தெரிவித்தார்கள். ஆனால், நான் அதை மறந்துவிட்டேன். மேலும், “ஒட்டகத்தின் வாயில் மெல்லக் கொடுப்பதுபோல் உனது வாயில் நீ மெல்லுவதற்காக அவர் தமது கையை விட்டுவைத்திருப்பாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதாகவும் ஸஃப்வான் அவர்கள் கூறினார்கள் என்று நினைக்கிறேன்.453 அத்தியாயம் :

440

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரைத் தவிர, நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. தவிரவும் நான் பத்ர் போரிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் பத்ரில் கலந்துகொள்ளாத எவரும் (அல்லாஹ்வால்) கண்டிக்கப்படவில்லை. (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரின் வணிகக் குழுவை (வழி மறிக்க) நாடியே (பத்ருக்குப்) போனார்கள். (போன இடத்தில்) போர் செய்யும் திட்டம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ர் களத்தில்) சந்திக்கும்படி செய்துவிட்டான்.455 “இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப் போம்' என (அன்சாரிகளான) நாங்கள் உறுதிமொழி அளித்த “அகபா இரவில்' அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் இருந்தேன். இதற்குப் பதிலாக பத்ர் போரில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; “அல்அகபா' பிரமாணத்தைவிட “பத்ர்', மக்களிடையே பெயர்பெற்றதாக இருந்தாலும் சரியே!456 (தபூக் போரில் கலந்துகொள்ளாததையடுத்து நடந்த நிகழ்ச்சிகள் குறித்த) எனது செய்திகள் சில பின்வருமாறு: அந்த (தபூக்) போரில் நான் கலந்துகொள்ளாதபோது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ்நாளில்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்கள் ஒரு போதும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், அந்தப் போரின்போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன். மேலும், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அறப்போருக்குச் செல்ல நாடினால் (பெரும்பாலும்) வேறெதற்கோ செல்வது போன்று (இரு பொருள்படும்படி பேசிப் பாசாங்கு செய்து) அதை மறைக்காமல் இருந்ததில்லை.457 ஆனால், தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயிலில் நபி (ஸல்) அவர்கள் படையெடுத்துச் செல்லவிருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் (பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும், அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்த்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார்கள். அப்போதுதான் அவர்கள் தங்களின் போருக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்துகொள்ள முடியும். தாம் விரும்பிய திசையை (தபூக்கை) அவர்களுக்குத் தெரிவித்தும்விட்டார்கள்.458 “எழுதப்படும் எந்தப் பதிவேடும் இத்தனைப் பேருக்கு இடமளிக்காது' எனும் அளவுக்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். (போரில் கலந்துகொள்ளாமல்) தலைமறைவாகிவிடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறைஅறிவிப்பு (வஹீ) வராத வரையில், (தாம் போருக்கு வராத) விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியவராது என்று எண்ணவே செய்வார். (அந்த அளவுக்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந் தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற (அறுவடைக் காலமான அந்த வெப்பம் மிகுந்த வெயில்) காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் முஸ்óம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டி ருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்யக் காலை நேரத்தில் செல்லலானேன். எனது பயணத்திற்கான எந்த ஏற்பாட்டை யும் செய்து முடிக்காமல் திரும்பி வந்துவிடுவேன். “(நினைக்கும்போது) அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத்தான் சக்தியிருக்கிறதே! (பிறகு நான் ஏன் அவசரப்பட வேண்டும்?)' என்று என் மனத்திற்குள் கூறிக்கொண்டேன். என் நிலை இப்படியே நீடித்துக்கொண்டிருந்தது. மக்கள் (ஆயத்தப் பணிகளில்) மும்முரமாக ஈடுபட்டனர். (ஒரு வழியாகப் பயண ஏற்பாடு முடிந்தது.) பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்முடன் முஸ்óம்களை அழைத்துக்கொண்டு (ஒரு) காலை நேரத்தில் புறப்பட்டுவிட்டார்கள். அப்போதும் நான் எனது பயணத்திற்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்கவில்லை. “நபி (ஸல்) அவர்கள் சென்றபின் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டு அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொள்வேன்' என்று நான் (என் மனத்திற்குள்) சொல்லிக்கொண்டேன். அவர்கள் அனைவரும் சென்றபிறகு (அன்றைய இரவும் கழிந்து) மறுநாள் காலை பயண ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தேன். ஆனால், அன்றைய தினமும் எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்தேன். அதற்கு அடுத்த நாள் காலையிலும் நினைத்தேன். அன்றும் எந்த ஏற்பாடும் செய்து முடிக்கவில்லை. (இன்று, நாளை என்று) எனது நிலை இழுபட்டுக்கொண்டே சென்றது. முஸ்லிம்கள் விரைவாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். (எனக்கு) அந்தப் போர் கைநழுவி விட்டது. நான் உடனடியாகப் புறப் பட்டுச் சென்று படையினருடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படி நான் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். (ஆனால், என்ன செய்வது?) அது என் விதியில் எழுதப் பட்டிருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னால், மதீனா வில் நான் மக்களிடையே சுற்றி வரும்போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர்களையும் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர், பெண்கள் போன்ற) பலவீனர்களையும் தவிர வேறெவரையும் நான் (மதீனாவிற்குள்) பார்க்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தபூக் சென்றடையும்வரையில் என்னை நினைவுகூரவேயில்லை. தபூக்கில் மக்க ளிடையே அமர்ந்துகொண்டிருக்கும் போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கஅப் என்ன ஆனார்?” என்று கேட்டார்கள். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! அவரின் இரு சால்வைகளும் (ஆடை அணிகலன்களும்) அவற்றைத் தம் தோள்களில் போட்டு அவர் (அழகு) பார்த்துக்கொண்டிருப்பதும்தான் அவரை வர விடாமல் தடுத்துவிட்டன” என்று கூறினார். உடனே முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், (அந்த மனிதரை நோக்கி), “தீய வார்த்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) மௌனமாகவே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டியபோது கவலை என் மனத்தில் (குடி) புகுந்தது. (அல்லாஹ்வின் தூதரிடம் சாக்குப் போக்குச் சொல்வதற்காகப்) பொய்யான காரணங்களை நான் யோசிக்கத் தொடங்கினேன். “நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்?” என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். மேலும், அதற்காக நான் என் குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் (ஆலோசனை) உதவி தேடினேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் (மதீனாவை) நெருங்கி வந்துவிட்டார்கள் என்று (செய்தி) சொல்லப் பட்டபோது (நான் புனைந்துவைத்திருந்த) பொய்மை என் மனத்தைவிட்டு விலகி விட்டது. “பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக்கொள்ள முடியாது. (அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். அவன் தன் தூதருக்கு உண்மை நிலவரத் தைத் தெரிவித்துவிடுவான்)' என்று உணர்ந்து, நபி (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்லிவிட முடிவு செய்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுதபின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்துகொள்வது அவர்களின் வழக்கம். (வழக்கம்போல்) அதை அவர்கள் செய்தபோது, (தபூக் போரில் கலந்துகொள்ளச் செல்லாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு (தாம் போருக்கு வராமல்போனதற்கு) சாக்குப்போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களின் வெளிப்படையான காரணங்களை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டார்கள். அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்னபோது கோபத்திóருப்பவர் எவ்வாறு புன்னகைப் பாரோ அதுபோலப் புன்னகைத்தார்கள். பிறகு, “வாருங்கள்” என்று கூறினார்கள். உடனே நான் அவர்களிடம் (சில எட்டுகள் வைத்து) நடந்து சென்று அவர்களின் முன்னிலையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், “(போரில்) நீர் ஏன் கலந்துகொள்ளவில்லை. நீர் (போருக்காக) வாகனம் வாங்கிவைத்திருந்தீர் அல்லவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம். (வாங்கிவைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாதாயவாதிக்கு அருகில் நான் அமர்ந்துகொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப்போக்குச் சொல்லி (அவரது) கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். (எவராலும் வெல்ல முடியாத) வாதத்திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என்மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்துவிடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்சமயம்) அது தொடர்பாக என்மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் போரில் கலந்துகொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை விட்டு நான் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்குமுன் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை” என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் உண்மை சொல்லிவிட்டார்” (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தப் பாவத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. (போரில்) கலந்துகொள்ளாத (மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்குக்கூட உங்களால் இயலாமல் போய்விட்டதே! நீங்கள் செய்த பாவத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்கும் பாவமன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே!” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ சலிமா குலத்தார் என்னைக் கடுமையாக ஏசிக்கொண்டேயிருந்தனர். எந்த அளவுக் கென்றால், நான் (அல்லாஹ்வின் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்குமுன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்துகொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லிவிடலாமா என்றுகூட நான் நினைத்தேன். பிறகு நான் பனூ சலிமா குலத்தாரை நோக்கி, “(தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட) இந்த நிலையை என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கிறார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். இரண்டு பேர் நீங்கள் சொன்னதைப் போன்றே (உண்மையான காரணத்தை நபியவர்களிடம்) சொன்னார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டதுதான் அப்போது அவர்கள் இருவருக்கும் (பதிலாகச்) சொல்லப்பட்டது” என்று கூறினார்கள். அப்போது நான், “அவர்கள் இருவரும் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முராரா பின் ரபீஉ அல்அம்ரீ அவர்களும், ஹிலால் பின் உமய்யா அல்வாக்கிஃபீ அவர்களும்” என்று பத்ர் போரில் கலந்துகொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ சலிமா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச்) சென்றுவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்துகொள்ளாதவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்கள் விஷயத்தில் மாறிப்போய்விட்டனர். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்புவியே மாறிவிட்டது போலவும் அது எனக்கு அந்நியமானது போலவும் நான் கருதினேன். இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாட்கள் இருந்தோம். என் இரு சகாக்களும் (முராராவும், ஹிலாலும்) செயலிழந்துபோய்த் தம் இல்லங்களிலேயே அமர்ந்துகொண்டு அழுதுகொண்டிருந்தனர். ஆனால் நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவனாகவும் (மன) வலிமை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டைவிட்டு) வெளியேறி முஸ்óம்களுடன் (ஐங்காலத்) தொழுகையில் கலந்துகொண்டும், கடைவீதிகளில் சுற்றிக்கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேசமாட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வேன். தொழுகையை முடித்துக்கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும்போது சலாம் கூறுவேன். எனக்குப் பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். பிறகு, அவர்களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகைகளை நிறைவேற்றுவேன். அப்போது (என்னை நபி (ஸல்) அவர்கள் பார்க்கிறார்களா என்று) ஓரக் கண்ணால் இரகசியமாகப் பார்ப்பேன். நான் என் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பியதும் அவர்கள் என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொள்வதுமாக இருந்தார்கள். மக்களின் புறக்கணிப்பு நீடித்துக் கொண்டே சென்றபோது, நான் நடந்து போய் அபூகத்தாதா (ரலி) அவர்களின் தோட்டத்தின் மதில் சுவர்மீது ஏறினேன். -அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார்- அவருக்கு நான் சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்குப் பதில் சலாம் சொல்லவில்லை. உடனே நான், “அபூகத்தாதா! அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கி றேன் என்று நீர் அறிவீர்தானே?” என்று கேட்டேன். அதற்கு அவர் (பதிலேதும் கூறாமல்) மௌனமாயிருந்தார். பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து (முன்பு போலவே) கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாகவேயிருந்தார். (மூன்றாம் முறையாக) மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன். அப்போது அவர், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று (மட்டும்) பதிலளித்தார். அப்போது என் இரு கண்களும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு நான் திரும்பி வந்து அந்தச் சுவரில் ஏறி (வெளியேறி)னேன். (நிலைமை இவ்வாறு நீடித்துக்கொண்டிருக்க) ஒருநாள் மதீனாவின் கடைத் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் (சிரியா) நாட்டு விவசாயிகளில் ஒருவர், “கஅப் பின் மாலிக்கை எனக்கு அறிவித்துத் தருபவர் யார்?” என்று (என்னைக் குறித்து) விசாரித்துக்கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர். உடனே அவர் என்னிடம் வந்து, “ஃகஸ்ஸான்' நாட்டின் அரசனிடமிருந்து (எனக்கு எழுதப் பட்டிருந்த) கடிதமொன்றைத் தந்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: நிற்க! உங்கள் தோழர் (முஹம்மத்) உங்களைப் புறக்கணித்து (ஒதுக்கி)விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்துவிடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம். இதை நான் படித்தபோது, “இது இன்னொரு சோதனையாயிற்றே!” என்று (என் மனதிற்குள்) கூறிக்கொண்டு அதை எடுத்துச் சென்று (ரொட்டி சுடும்) அடுப்பிலிட்டு எரித்துவிட்டேன். ஐம்பது நாட்களில் நாற்பது நாட்கள் கழிந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய ஒரு தூதர் என்னிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் மனைவி யிடமிருந்து விலகிவிட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நான், “அவரை நான் மணவிலக்குச் செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அவர், “இல்லை. (விவாகரத்துச் செய்ய வேண்டாம்.) அவரைவிட்டு நீங்கள் விலகிவிட வேண்டும். அவரை நெருங்கக் கூடாது (இதுவே இறைத்தூதர் உத்தரவு)” என்று கூறினார். இதைப் போன்றே என் இரு சகாக்களுக்கும் (நபி (ஸல்) அவர்கள் உத்தரவு) அனுப்பியிருந்தார்கள். ஆகவே, நான் என் மனைவியிடம், “உன் குடும்பத்தாரிடம் சென்று, இது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும்வரையில் அவர்களுடனேயே இருந்து வா!” என்று சொன்னேன். (என் சகா) ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்களின் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “(என் கணவர்) ஹிலால் பின் உமய்யா செயல்பட முடியாத வயோதிகர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை. ஆயினும், அவர் உன்னை (தாம்பத்திய உறவு கொள்ள) நெருங்க வேண்டாம்” என்று சொன்னார்கள். ஹிலால் அவர்களின் மனைவி, “அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடைய விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதிலிருந்து இந்த நாள்வரையில் அழுதுகொண்டேயிருக்கிறார்” என்றும் (அல்லாஹ்வின் தூதரிடம்) கூறினார். கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: என் வீட்டாரில் ஒருவர், “தம் கணவ ருக்குப் பணிவிடை புரிய ஹிலால் பின் உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்ததுபோல், உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடை புரிய) அனுமதிக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டால் (நன்றாயிருக்குமே)” என்று கூறினார். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்கமாட்டேன். என் மனைவி விஷயத்தில் நான் அனுமதி கோரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன (பதில்) சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாக (வேறு) இருக்கிறேன். (ஹிலால், வயோதிகர். அதனால் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலுகை காட்டியிருக்கலாம்)” என்று கூறி (மறுத்து)விட்டேன். அதற்குப்பின் பத்து நாட்கள் (இவ்வாறே) இருந்தேன். எங்களிடம் பேசக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்த நாளிலிருந்து ஐம்பது நாட்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ர் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118ஆவது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) “பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொறுத்தவரை அது குறுகி, நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது. அப்போது, “சல்உ' மலைமீதேறிப் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், “கஅப் பின் மாóக்கே! உமக்கு ஒரு நற்செய்தி!” என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந் தேன். விடிவுகாலம் வந்துவிட்டது என்று நான் அறிந்துகொண்டேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்தபோது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று அறிவித்துவிட்டார்கள்' என நான் விளங்கிக்கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார். அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலைமீது ஏறிக்கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி சொன்னார்.) மேலும், (மலைமீதிருந்து வந்த) அந்தக் குரல் அக்குதிரையைவிட வேகமாக வந்து சேர்ந்தது. எவரது குரலை (மலைமீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்தபோது நான் என் இரு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பதிலாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (அந்த வகை ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாய் இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூகத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி நான் அணிந்துகொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன். அப்போது (வழியில்) மக்கள் கூட்டங்கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவமன்னிப்புக் கிடைத்ததால், “அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்து விட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம்” என்று கூறலாயினர். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்கள் இருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் எழுந் தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர்களில் அவர்களைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி (வருவ தற்காக) எழவில்லை. தல்ஹா (ரலி) அவர் களின் இந்த அன்பை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னபோது, மகிழ்ச்சியால் அவர்கள் தம் முகம் மின்னிக்கொண்டிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மை உம்முடைய தாய் பெற்றெடுத்தது முதல் உம்மைக் கடந்து சென்ற நாட்களில் மிகச் சிறந்த நாளான இன்று உமக்கு (பாவமன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி கூறுகிறேன்” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (இந்த நற்செய்தியைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேதஅறிவிப்பின் அடிப்படையில்) தெரிவிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “இல்லை. (என் தரப்பிலிருந்து நான் இதைத் தெரிவிக்கவில்லை.) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்துள்ள வேதஅறிவிப்பின் அடிப்படையில்)தான் தெரிவிக்கிறேன்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஏதாவது) மகிழ்ச்சி ஏற்படும்போது அவர்களது முகம் சந்திரனின் ஒரு துண்டுபோல் பிரகாசிக்கும். அவர்களது முகத்தின் பிரகாசத்தை வைத்து அவர்களது சந்தோஷத்தை நாங்கள் அறிந்துகொள்வோம்.459 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்துகொண்டபோது, “அல்லாஹ்வின் தூதரே! எனது பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வங்கள் அனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக்கொள்வ தற்காக) தர்மமாக அளித்துவிடுகிறேன்” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது” என்று கூறினார்கள். “கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக் கொள்கிறேன்.460 அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசிய காரணத்தால்தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதையடுத்து நான் உயிரோடு வாழும்வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேசமாட்டேன்” என்று கூறினேன். ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்ததைப் போன்று வேறெந்த முஸ்óமுக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதிமொழியை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன நாளிலிருந்து எனது இந்த நாள்வரை நான் பொய்யை நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் கால(மனை)த்திலும் அல்லாஹ் என்னைப் (பொய் சொல்ல விடாமல்) பாதுகாப்பான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், “நிச்சயமாக அல்லாஹ், இந்த நபியையும் நெருக்கடியான நேரத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளையும் அவர்களில் ஒரு பிரிவினரின் உள்ளங்கள் பிறழ முற்பட்ட பின்னரும் மன்னித்துவிட்டான். மறுபடியும் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அவர்கள்மீது அவன் பரிவுடையவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (தீர்ப்பு) ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்த மூவரையும் (அல்லாஹ் மன்னித்தான்). இறுதியில் பூமி விரிந்ததாக இருந்தும்கூட அது அவர்களுக்குச் சுருங்கிவிட்டது. அவர்களின் உள்ளங்களும் அவர்களுக்கு இறுக்கமாகிவிட்டன. மேலும், அல்லாஹ்விடமிருந்து (தப்பிக்க) அவனை விட்டால் வேறு புகóடம் கிடையாது என்று அவர்கள் (உறுதியாக) எண்ணினர். அவர்கள் பாவமீட்சி பெற வேண்டுமென்பதற்காக மீண்டும் அவர்களை அல்லாஹ் மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையை அதிகமாக ஏற்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; உண்மையாளர்களுடன் இருங்கள் (9:117-119) எனும் வசனங்களை அருளினான். ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழிகாட்டியபின், தன் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னை உண்மை பேசச்செய்து உபகாரம் புரிந்ததைப் போன்று வேறெந்த உபகாரத்தையும் நான் மிகப் பெரியதாக ஒருபோதும் கருதவில்லை. நான் அவர்களிடம் பொய் பேசியிருந்தால், (போருக்குச் செல்லாமல்) பொய் சொன்னவர்(களான நயவஞ்சகர்)கள் அழிந்துபோனது போல நானும் அழிந்துவிட்டிருப்பேன். ஏனெனில், இறைவன் வேதஅறிவிப்பு (வஹீ) அருளியபோது யாருக்கும் சொல்லாத கடுமையான சொற்களைப் பொய் சொன்னவர்கள் குறித்து அருளினான். “(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் (போர் முடிந்து) அவர்களிடம் திரும்பிவந்தால், அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்பதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். எனவே, அவர்களை நீங்கள் அலட்சியப்படுத்திவிடுங்கள். அவர்கள் அசுத்தமானோர் ஆவர். அவர்களின் புகலிடம் நரகமாகும். அவர்கள் தேடிக்கொண்டிருந்த (தீய)வற்றுக்கு (இதுவே) தண்டனை ஆகும். (இறைநம்பிக்கையாளர்களே! அவர்கள் குறித்து நீங்கள் திருப்தியடைய வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். அவர்கள் குறித்து நீங்கள் திருப்தியடைந்தாலும், பாவம் புரியும் இக்கூட்டத்தார் குறித்து அல்லாஹ் திருப்தியடையமாட்டான்” (9:95,96) என்று உயர்ந்தோனும் வளமிக்கோனுமான அல்லாஹ் கூறினான். குறிப்பாக, எங்கள் மூவரின் விவகாரம் மட்டும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (பொய்ச்) சத்தியம் செய்தவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களிடமும் உறுதிப் பிரமாணம் பெற்று அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். (எங்களது) அந்த விவகாரத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிக்கும்வரையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் விவகாரத்தைத் தள்ளிப்போட்டுவந்தார்கள். இதனால்தான் (9ஆவது அத்தியாயத்தின் 118ஆவது வசனத்தில்) அல்லாஹ் எங்களைக் குறித்து, “தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட அந்த மூவரையும்' என்று பொதுவாகவே குறிப்பிட்டுள்ளான். “போருக்குச் செல்லாத மூவர்' என்று கூறவில்லை. “நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் பொய்யான சாக்குப்போக்குக் கூறியவர்களின் காரணங்களை உடனுக்குடன் ஏற்றுக்கொண்டது போலல்லாமல் எங்கள் விவகாரத்தை (உடனே தீர்க்காது) அல்லாஹ் தள்ளிப்போட்டு வந்தான்” என்பதே அதன் கருத்தாகும். “தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தாம் பின்தங்கிவிட்ட காலகட்டத்தைக் குறித்து தம் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தபோது இதை அவர்கள் கூற நான் கேட்டேன்” என்று கஅப் (ரலி) அவர்கள் முதிய வயதடைந்து கண்பார்வை இழந்துவிட்ட சமயம் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த -அவர்களுடைய புதல்வர்- அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸை அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

441

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “அல்ஹிஜ்ர்' பிரதேசத்தைக் கடந்து சென்றபோது, “தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் நுழையும்போது (இறைத் தண்டனையாக) அவர்களைத் தீண்டிய வேதனை, நம்மையும் தீண்டிவிடுமோ எனும் அச்சத்துடன் அழுதுகொண்டு நுழைவதைத் தவிர வேறு விதமாக நுழையாதீர்கள்” என்று சொன்னார்கள். பிறகு, தமது தலையை (தமது மேலங்கியால்) மறைத்துக்கொண்டு அந்தப் பள்ளத்தாக்கைக் கடக்கும்வரை வேகவேகமாகப் பயணித்தார்கள்.462 அத்தியாயம் :

442

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிஜ்ர்வாசிகளைக் குறித்து, “இவர்களைத் தீண்டியதைப் போன்ற அதே வேதனை நம்மையும் தீண்டிவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே அல்லாமல் வேறு முறையில், வேதனை செய்யப்பட்ட இந்த மக்களின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) கூறினார்கள்.463 அத்தியாயம் :

443

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். அவர்களின் தேவை முடிந்ததும் நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக எழுந்தேன். நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். தம் முழங்கைகள் இரண்டையும் அவர்கள் கழுவப்போனபோது அவர்களது (மேலங்கியின்) சட்டைக் கைகள் இரண்டும் (இறுக்கமாக) நெருக்கலாயின. அவர்கள் மேலங்கியின் கீழேயிருந்து கைகளை வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தம் காலுறைகளின் மீது ஈரக்கையால் தொட்டு “மஸ்ஹ்' செய்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா பின் அல்முஃகீரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இது தபூக் போரின்போது நடைபெற்ற நிகழ்ச்சி என்றே (என் தந்தை) முஃகீரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என அறிகிறேன். அத்தியாயம் :

444

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரிலிருந்து (திரும்பி மதீனாவை) முன்னோக்கிச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது அவர்கள், “இது “தாபா' (தூய்மையானது) ஆகும். இதோ இந்த உஹுத் மலை நம்மை நேசிக்கின்றது; நாமும் அதை நேசிக்கின்றோம்” என்று சொன்னார்கள்.464 அத்தியாயம் :

445

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி (வருகையில்) மதீனாவை நெருங்கியபோது, “மதீனாவில்மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் அறப்போரில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத்தாக்கு எதுவாயினும் அவர்களும் (தம் உள்ளத்தாலும் எண்ணங்களாலும்) உங்களுடன் இருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதீனாவில்தானே இருக்கிறார் கள்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் மதீனாவில்தான் இருக்கிறார்கள்; அத்தியாவசியக் காரணங்கள்தான் அவர்களை (இந்த அறப்போரில் கலந்துகொள்ள விடாமல்) தடுத்துவிட்டன. (ஆயினும், அவர்களது உள்ளம் நம்முடன்தான் உள்ளது)” என்று பதிலளித்தார்கள்.465 அத்தியாயம் :

446

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் “குஸ்ரூ' எனும்) கிஸ்ராவுக்குத் தாம் எழுதிய கடிதத்தை அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, (அதை கிஸ்ராவிடம் கொடுத்துவிடச் சொல்லி) பஹ்ரைனின் ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டு அனுப்பினார்கள்.467 பஹ்ரைன் ஆளுநர் அக்கடிதத்தை கிஸ்ராவிடம் ஒப்படைத்தார். கிஸ்ரா அதைப் படித்ததும் அதை(த் துண்டு துண்டாக)க் கிழித்துப் போட்டுவிட்டார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கிஸ்ரா' ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்” என்று சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் சொன்னதாக நினைக்கிறேன்.468 அத்தியாயம் :

447

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டு (ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முற்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட மிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளித்தான். பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் “தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது” என்று சொன்னார்கள்.469 (இதுதான் எனக்குப் பயனளித்த நபி (ஸல்) அவர்களின் சொல்). அத்தியாயம் :

448

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (தபூக் போரிலிருந்து திரும்பி வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்பதற்காக “வதா' மலைக் குன்றுக்கு சிறுவர்களுடன் சென்றதை நினைவுகூர்கின்றேன். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (“சிறுவர்கள்' என்பதைக் குறிக்க “ஃகில்மான்' என்பதற்குப் பதிலாக) “ஸிப்யான் என்று சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் மற்றொருமுறை (இதை அறிவிக்கும்போது) கூறினார்கள். அத்தியாயம் :

449

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து வந்தபோது, அவர்களை வழியிலேயே சந்தித்து வரவேற்க சிறுவர்களுடன் சேர்ந்து நான் “வதா' மலைக் குன்றுக்குச் சென்றதை (இப்போது) நினைவுகூர்கின்றேன்.470 அத்தியாயம் :

450

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, “ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்துவருகிறேன்.472 அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக் குழாய் அறுந்துபோவதை நான் உணரும் நேரமாகும் இது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

451

உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் இறுதியாகத் தொழுத) மஃக்ரிப் தொழுகை யில், “வல்முர்சலாத்தி உர்ஃபன்' எனும் (குர்ஆனின் 77ஆவது) அத்தியாயத்தை ஓதுவதைச் செவியுற்றேன். அதன் பிறகு அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்கள் எங்களுக்குத் தொழுவிக்கவில்லை.473 அத்தியாயம் :

452

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், என்னைத் தமக்கு அருகிலேயே (எப்போதும்) அமர்த்திக்கொள்வது வழக்கம். ஆகவே, (ஒருநாள்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எங்களுக்கு இப்னு அப்பாஸைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்கின்றனர்” என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவரது (கல்வித்) தகுதி உங்களுக்கே தெரியும்” என்று (என்னைக் குறித்துச்) சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களின் மத்தியில் வைத்து) என்னிடம், “(நபியே!) அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் பார்க்கும்போது” எனும் (110:1,2ஆவது) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், “(இவ்வசனத்தின் வாயிலாக) அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவித்தான்” என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இந்த வசனத்திலிருந்து அறிந்துகொண்டதையே நானும் அறிந்துகொண்டேன்” என்று சொன்னார்கள்.474 அத்தியாயம் :

453

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)” என்று கேட்டுவிட்டுச் சொன்னார்கள்: (வியாழக்கிழமையன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், “என்னிடம் (எலும்பைக்) கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டனர். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல (என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்). மக்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத் தில் பேசுகிறார்களா? அவர்களிடமே விளக்கம் கேளுங்கள்” என்று கூறினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், “என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறைநினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது” என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை.) மேலும், அவர்கள் தம் தோழர்களுக்கு (தம் மரணத் தறுவாயில்) மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். “அரபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர்களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்துவந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்” என்று சொன்னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் அபில்முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின்) “மூன்றாவது கட்டளையைச் சொல்லாமல் மௌன மாயிருந்துவிட்டார்கள்' அல்லது “(அதை அவர்கள் அறிவித்திருக்கலாம்; ஆனால்,) நான் அதை மறந்துவிட்டேன்'.475 அத்தியாயம் :

454

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது வீட்டில் மக்கள் பலரும் இருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது நபி (ஸல்) அவர்கள், “வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது மக்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (அவர்களை எழுதித் தரச் சொல்லித் தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம்தான் குர்ஆன் இருக்கின்றதே. நமக்கு அல்லாஹ்வின் வேதமே போதும்” என்று சொன்னார்கள். உடனே அங்கு வீட்டிலிருந்தோர், கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், “(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொண்டுபோய்க் கொடுங்கள். உங்களுக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் வழிதவறிச் செல்லமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். மற்றச் சிலர் வேறு விதமாகச் சொன்னார்கள். அவர்களின் கூச்சலும் சச்சரவும் அதிகரித்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எழுந்திருங்கள்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு கூச்சலிட்டுக்கொண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் அந்த மடலை எழுத முடியாமல்போனதுதான் சோதனை யிலும் பெரும் சோதனையாகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்.476 அத்தியாயம் :

455

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இருக்கையில் அவர்களின் உயிர் கைப்பற் றப்பட்டதோ அந்த நோயின்போது (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து (அவர்களது காதில்) இரகசியமாக ஏதோ சொல்ல, ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு (மீண்டும்) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்து இரகசியமாக ஏதோ சொல்ல, அவர்கள் சிரித்தார்கள். நாங்கள் அதைப் பற்றி (ஃபாத்திமா (ரலி) அவர்களிடம்) விசாரித்தோம். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (முதல் முறை அழைத்தபோது), தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறந்துவிடப்போவதாக இரகசியமாக என்னிடம் சொன்னார்கள். ஆகவே, நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறையில்), “அவர்களுடைய குடும்பத்தாரிலேயே நான்தான் முதலாவதாக அவர்களைப் பின்தொடர்ந்து (உலகைப் பிரிந்து) செல்லவிருப்பவள்' என்று இரகசியமாக என்னிடம் தெரிவித்தார்கள். ஆகவே, நான் சிரித்தேன்” என்று சொன்னார்கள்.477 அத்தியாயம் :

456

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: “உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என்று நான் (நபி (ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குரலில்), “அல்லாஹ் அருள் புரிந்துள்ள இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர் கள் மற்றும் நல்லடியார்களுடன்” எனும் (4:69) இறைவாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். ஆகவே, “இவ்வுலகம், மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப்பட்டது' என்று நான் எண்ணிக்கொண்டேன்.478 அத்தியாயம் :

457

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, “(இறைவா!) உயர்ந்த தோழர்க(ளான இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள் மற்றும் நல்லடியார்க)ளுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று சொல்லத் தொடங்கினார்கள். அத்தியாயம் :

458

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரை' அல்லது “(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாதவரை' எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப் படவில்லை என்று சொல்லிவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் மூர்ச்சையடைந்துவிட்டார்கள். மூர்ச்சை தெளிந்தபோது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், “இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்)” என்று பிரார்த் தித்தார்கள். உடனே நான், “இனி (நபி (ஸல்) அவர்கள்) நம்முடன் இருக்க மாட்டார்கள்” என்று சொன்னேன்.ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இதுதான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) நான் அறிந்துகொண்டேன். அத்தியாயம் :

459

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக்கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானுடன், அவர் பல் துலக்கும் ஈரமான (பேரீச்சங்)குச்சி இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த, நான் அந்தப் பல் துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன். அதை உதறிப் பக்குவப்படுத்தியபின் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைவிட அழகாகப் பல் துலக்கியதை அதற்குமுன் நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவுடன் “தம் கையை' அல்லது “தம் விரலை' உயர்த்திப் பிறகு, “(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என மும்முறை பிரார்த்தித்தார்கள். பிறகு (தம் ஆயுளை) முடித்துக்கொண்டார்கள். அறிவிப்பாளர் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே நபி (ஸல்) அவர்களின் தலை (சாய்ந்தபடி) இருந்தபோது அவர்கள் இறந்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள். அத்தியாயம் :

460

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம்மீது ஊதி, தமது கையை (தம் உடல்மீது) தடவிக்கொள்வார்கள்.479 நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, அவர்கள் (ஓதி) ஊதிக்கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்)மீது தடவலானேன். அத்தியாயம் :

461

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்கள் என் பக்கம் தம் முதுகைச் சாய்த்தபடி (என் அரவணைப்பில்) இருக்க, அவர்கள் பக்கம் நான் காது தாழ்த்திக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அவர்கள், “இறைவா! என்னை மன்னித்து எனக்குக் கருணை புரிவாயாக! (சொர்க்கத்தில்) என்னை (உயர்ந்த) தோழர்களுடன் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்திப்பதை நான் செவியுற்றேன். அத்தியாயம் :

462

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள், எந்த நோயிலிருந்து எழுந்திராமல் போய்விட்டார்களோ அந்த நோயின்போது, “அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு (மட்டும்) இல்லாவிட்டால் அவர்களின் அடக்கத் தலம் (அனைவருக்கும் தெரியும்படி) வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆயினும், “தமது அடக்கத் தலம் எங்கே வழிபாட்டுத் தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ' என்று அவர்கள் அஞ்சினார்கள்.480 அத்தியாயம் :

463

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்தபோது, என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் தெரிவித்தபோது அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “தெரியாது' என்று பதிலளித்தேன். “அவர்தான் அலீ பின் அபீதாலிப்” என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள். மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்க்காலப் பராமரிப்புக்காக) என் இல்லத்திற்கு வந்து, அவர்களின் நோய் கடுமையாகிவிட்டபோது அவர்கள், “வாய்ப் பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என்மீது ஊற்றுங்கள். (அதன் குளிர்ச்சியால்) மக்களுக்கு நான் உபதேசம் செய்யக்கூடும்” என்று கூறினார்கள். எனவே, நாங்கள் அவர்களை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குச் சொந்த மான துணி அலசும் பாத்திரத்தின்மேல் அமரவைத்தோம். பிறகு அவர்கள்மீது தோல் பைகளிலிருந்து (நீரை) ஊற்றத் தொடங்கினோம். அவர்கள், “(சொன்னபடி) செய்துவிட்டீர்கள் (போதும்)” என்று கையால் சைகை செய்யலானார்கள். பிறகு மக்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்று அவர்களுக்குத் தொழுவித்தார்கள்; பிறகு அவர்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.481 அத்தியாயம் :

464

ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது தம் முகத்தின் மீது ஒரு கம்பளித் துணியைத் தூக்கிப் போட்டுக் கொள்ளலானார்கள். மூச்சுத் திணறுவது போல் உணர்ந்தால் தம் முகத்தைவிட்டு அதை விலக்கிக்கொண்டார்கள். அவர்கள் இந்நிலையில் இருக்கும்போது, “அல்லாஹ் யூதர்களையும் கிறித்தவர்களையும் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்” என்று அவர்கள் செய்ததைக் குறித்து (“அதே போல் நீங்களும் செய்து விடாதீர்கள்” என்று) எச்சரித்தார்கள்.482 அத்தியாயம் :

465

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(மக்களுக்குத் தலைமை தாங்கித்) தொழுவிக்கும்படி (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏன் கட்டளையிட்டீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வாதிட்டேன்.483 நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அவர்களின் இடத்தில் செயல்படும் ஒரு மனிதரை மக்கள் விரும்புவார்கள் என்று என் மனத்திற்கு ஒருபோதும் படவில்லை. மேலும், அவர்களின் இடத்தில் செயல்பட முன்வரும் எவரையும் மக்கள் ஒரு துர்க்குறியாகவே கருதுவார்கள் என்றுதான் நான் எண்ணிவந்தேன். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்களைவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விலக்கிவிட வேண்டும் என்று நான் விரும்பினேன். இதே ஹதீஸை இப்னு உமர் (ரலி), அபூமூசா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளனர். அத்தியாயம் :

466

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்கு மிடையே சாய்ந்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எவரது மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒருபோதும் நான் வருந்துவ தில்லை.484 அத்தியாயம் :

467

முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் - (இவருடைய தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில் கலந்து கொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார்- அன்னார் எனக்கு அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், “அபுல்ஹசனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?” என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்” என்று சொன் னார்கள். அப்போது அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு, (பிறரது) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆகிவிடப்போகிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரைவில் தமது இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தóபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாளம் கண்டு கொள்பவன் நான். எனவே, எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். “இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்தபிறகு) யாரிடமிருக்கும்?” என்று கேட்டுக்கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடத்தில் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப்பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்” என்று சொன்னார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அ(வர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்யும் அதிகாரத்)தைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டார்கள். அத்தியாயம் :

468

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்கள் திங்கட்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகையில் இருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தபோது ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் திரையை விலக்கிக்கொண்டு திடீரென (வெளியே) வந்தவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான். மக்கள் தொழுகை அணிகளில் நின்று கொண்டி ருக்க, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுப் பிறகு புன்னகைத்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்து கொள்ளத் தம் குதிகால்களால் பின்வாங்கிச் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவிக்க வர விரும்புகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நினைத்துவிட்டார்கள். முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியால் தமது தொழுகையில் (கவனம் சிதறி) குழப்பத்திற்குள்ளாக இருந்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்' என்று தம் கரத்தால் சைகை செய்தார்கள். பிறகு, அறைக்குள் நுழைந்துகொண்டு திரையைத் தொங்கவிட்டார்கள்.485 அத்தியாயம் :

469

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் எனது (முறையில் தங்க வேண்டிய) நாளில் எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறந்தார்கள். அவர்களது இறப்பின்போது அவர்களது எச்சிலையும் எனது எச்சிலை யும் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என்மீது பொழிந்த அருட்கொடைகளில் ஒன்றாகும். (இருவரின் எச்சிலும் ஒன்றுசேர்ந்தது எப்படியென்றால்,) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தனது கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்த்துக்கொண்டிருந்த தைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள் என்று நான் புரிந்துகொண்டேன். ஆகவே, “உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா?” என்று நான் கேட்க, அவர்கள், தம் தலையால், “ஆம்' என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க, அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான், “பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள், தம் தலையால், “ஆம்' என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய “தோல் பாத்திரம் ஒன்று' அல்லது “பெரிய மரக் குவளையொன்று' இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் (தோல் பாத்திரமா; மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக்கொண்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு” என்று கூறலானார்கள். பிறகு தமது கரத்தைத் தூக்கி, “(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று பிரார்த்திக் கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.486 அத்தியாயம் :

470

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, “நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?” என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கிவந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களது தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக்கொண்டான். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள், தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், “என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள். அப்துர் ரஹ்மானே!” என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் அதைப் பற்களால் கடித்து மென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப்படுத்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர் களுடைய எச்சில் எனது எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள். அத்தியாயம் :

471

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் எனது (முறை வரும்) நாளில் எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) இறந்தார்கள். (அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும்போது பிரார்த்தனையின் மூலம் (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோருவது வழக்கம். (அவ்வாறே இம்முறையும்) நான் அவர்களுக்காகப் பிரார்த்தித்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிக்கொண்டே சென்றேன். அப்போது அவர்கள் தம் தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, “(இறைவா சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று பிரார்த்தித்தார்கள். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் தமது கரத்தில் பச்சைப் பேரீச்ச மட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு (அப்பக்கமாகச்) சென்றார் நபி (ஸல்) அவர்கள் அவரைக் கூர்ந்து பார்க்கலானார்கள். அப்போது நான், அது அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்று எண்ணி, அதை வாங்கி அதன் நுனியை மென்று, அதை உதறி நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் இதுவரை பல் துலக்கியதிலேயே மிக அழகான முறையில் அதனால் பல் துலக்கினார்கள். பிறகு அதை என்னிடம் கொடுத்து விட்டார்கள். பிறகு “அவர்களது கரம் விழுந்துவிட்டது' அல்லது “அ(க்குச்சி யான)து அவர்களின் கரத்திóருந்து விழுந்துவிட்டது'. இவ்விதம் நபி (ஸல்) அவர்களின் எச்சிலையும் எனது எச்சிலையும் (அவர்களது) உலக வாழ்வின் இறுதி நாளில், மறுமை வாழ்வின் முதல் நாளில் அல்லாஹ் ஒன்றுசேர்த்தான். அத்தியாயம் :

472

473

ஆயிஷா (ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்னால்அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் முத்தமிட்டார்கள். அத்தியாயம் :

474

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டி ருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். அப்போது அவர்கள் எங்களை நோக்கி, “எனது வாயில் மருந்தூற்றாதீர்கள்' என்பது போல் சைகை செய்யலானார்கள். “நோயாளி மருந்தை வெறுப்பது போலத்தான் (நபி அவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாம் எனத் தடை செய்யவில்லை)” என்று நாங்கள் சொல்லிக்கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது, “என் வாயில் மருந்தை ஊற்ற வேண்டாமென நான் தடுக்க வில்லையா? (அப்படியிருந்தும் ஏன் நான் மயக்கத்திலிருந்தபோது மருந்தூற்றினீர்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “(ஆம்! தடுத்தீர்கள்.) நோயாளி மருந்தை வெறுப்பது போலத் தான் (நீங்களும் இதை வெறுத்து, “வேண்டாம்' என்கிறீர்கள் என நாங்கள் நினைத்தோம்)” என்று கூறினோம். அவர்கள், “நான் பார்த்துக்கொண்டிருக்க, ஒருவர் பாக்கியில்லாமல் இந்த வீட்டிலுள்ள அனைவர் வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, “ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், (மருந்தூற்றும்போது) உங்களுடன் அவர் கலந்துகொள்ளவில்லை” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

475

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் (தமக்குப்பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டார்களாமே” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “இதைச் சொன்னவர் யார்?” என்று கேட்டுவிட்டு, “(நபி (ஸல்) அவர்களின் இறுதி வேளையில்) நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டுவரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்துபோய்விட்டார்கள். (அவர்கள் இறந்துபோனதைக்கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க,) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பு தொடர்பாக) எப்படி அவர்கள் இறுதி விருப்பம் தெரிவித்திருப்பார்கள்?” என்று கேட்டார்கள்.489 அத்தியாயம் :

476

தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் இறுதி விருப்பம் தெரிவித்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், “இல்லை' என்று பதிலளித்தார்கள். நான், “அப்படியென்றால் “மக்கள்மீது இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பது எப்படிக் கடமையாக்கப்பட்டது?' அல்லது “இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வுடைய வேதத்தின்படி செயல்படுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.490 அத்தியாயம் :

477

அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, (வேறு எந்தச் செல்வத்தையோ) விட்டுச் செல்லவில்லை; “பைளா' எனும் தமது கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், வழிப்போக்கர்களுக்குத் தர்மமாக ஆக்கிவிட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.491 அத்தியாயம் :

478

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் நோய் கடுமையானபோது, அவர்களுக்கு மயக்க மேற்படத் தொடங்கியது. அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தோ! (மரணத்தின்) வேதனையால் அவதிப்படும் என் தந்தையே!” என்று கூறினார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், “இன்றைய தினத்திற்குப்பின் உன் தந்தைக்கு எந்த வேதனையும் இல்லை” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது, ஃபாத்திமா (ரலி) அவர்கள், “தந்தையே!அதிபதியின் அழைப்பைஏற்றவரே! தந்தையே!ஃபிர்தவ்ஸ் சோலையைஉறைவிடமாகக் கொண்டவரே! தந்தையே!தெரிவிக்கிறோம்உங்கள் இறப்பைவானவர் ஜிப்ரீலுக்கு!”என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டபோது ஃபாத்திமா (ரலி) அவர்கள் (என்னை நோக்கி), “அனஸே! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது மண்ணை அள்ளிப்போட உங்கள் மனம் எப்படி இடம் தந்தது?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :

479

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று கூறுவார்கள். பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, அவர்கள் தம் தலையை எனது மடிமீது வைத்திருந்த நிலையில் மயக்கமுற்றார்கள். பிறகு அவர்களின் மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலை குத்தி நின்றது. பிறகு, “இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று சொன்னார்கள். அப்போது நான், அவர்கள் (இப்போது) நம்முடன் இருப்பதை விரும்பவில்லை; (மறுமைப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டார்கள்) என்று (மனத்திற்குள்) கூறிக்கொண்டேன். ஆரோக்கியமானவர்களாய் இருந்த போது, (“இறைத்தூதர்கள் அனைவரும் இறக்கும்முன் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்படுவார்கள்' என்று) அவர்கள் கூறிய சொல் இதுதான் என நான் புரிந்துகொண்டேன். நபி (ஸல்) அவர்கள் பேசிய இறுதி வார்த்தை, “இறைவா! உயர்ந்த தோழர்களுடன் (என்னையும் சேர்த்தருள்)” என்பதுதான். இதை (உர்வா (ரஹ்) போன்ற) பல அறிஞர்களின் அவையில் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள். அத்தியாயம் :

480

ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம்மீது குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள்; (ஹிஜ்ரத்துக்குப்பின்) மதீனாவில் பத்தாண்டுகள் இருந்தார்கள்.492 அத்தியாயம் :

481

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறுபத்து மூன்று வயதுடையவர்களாய் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். “இதை சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களும் எனக்குத் தெரிவித்தார்கள்” என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.493 அத்தியாயம் :

482

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: முப்பது “ஸாஉ' தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பகரமாகத் தமது இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.494 அத்தியாயம் :

483

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர், உசாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உசாமாவின் (நியமன) விஷயத்தில் நீங்கள் (குறை) ஏதோ பேசியதாக எனக்குத் தெரியவந்தது. நிச்சயமாக அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

484

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஓர் அறப்போருக்காகப்) படையொன்றை அனுப்பி, அதற்கு உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். (அவரைவிட மூத்தவர்கள் பலர் இருக்க, அவர் தலைமை தாங்குவது சரியல்லவென்று) மக்கள் (சிலர்) அவரது தலைமையைக் குறை கூறினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, “இவரது தலைமையைக் குறித்து நீங்கள் இப்போது குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதன்று;) இதற்கு முன்பு (மூத்தா போரின்போது) இவருடைய தந்தையின் தலைமையையும்தான் நீங்கள் குறை கூறிக்கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஆட்சியதிகாரத்திற்குத் தகுதியானவராகத் தான் இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராகவும் இருந்தார். மேலும், அவருக்குப்பின் (அவருடைய புதல்வரான) இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று சொன்னார்கள்.496 அத்தியாயம் :

485

அபுல்கைர் மர்ஸத் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: நான் அப்துர் ரஹ்மான் பின் அஸ் ஸுனாபிஹீ (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் எப்போது (மதீனாவுக்கு) புலம்பெயர்ந்து வந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஸுனாபிஹீ (ரஹ்) அவர்கள், “நாங்கள் யமன் நாட்டிலிருந்து (நபியின் நகரமான மதீனாவை நோக்கி) புலம்பெயர்ந்து வந்தோம். நாங்கள் “ஜுஹ்ஃபா'வுக்கு வந்து சேர்ந்தபோது, (தமது வாகனத்தில் பயணித்தபடி) பயணி ஒருவர் எங்களை நோக்கி வந்தார். நான் அவரிடம், “(முக்கியச்) செய்தி ஏதும் உண்டா?” என்று கேட்டேன். அந்தப் பயணி, “ஐந்து நாட்களுக்கு முன்பு நாங்கள் நபி (ஸல்) அவர்களை அடக்கம் செய்துவிட்டோம்” என்று பதிலளித்தார். நான், “லைலத்துல் கத்ர் (குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தின் கண்ணிய மிக்க இரவு) பற்றி நீங்கள் (மதீனாவில்) ஏதேனும் செவியுற்றீர்களா?” என்று ஸுனாபிஹீ (ரஹ்) அவர்களிடம் கேட்க, அவர், “ஆம். நபி (ஸல்) அவர்களின் (பள்ளிவாசலின்) தொழுகை அறிவிப்பாளரான பிலால் (ரலி) அவர்கள், “அது (ரமளான் மாதத்தின்) கடைசிப் பத்து நாட்களில் ஏழாவது இரவில் கிடைக்கும்' என்று எனக்குத் தெரிவித்தார்கள்” எனப் பதிலளித்தார்கள்.497 அத்தியாயம் :

486

அபூஇஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் எத்தனை அறப்போர்களில் நீங்கள் கலந்துகொண்டீர்கள்?” என்று நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “பதினேழு (அறப்போர்களில் நபி (ஸல்) அவர்களுடன் நான் கலந்துகொண்டேன்)” என்று பதிலளித்தார்கள். நான், “நபி (ஸல்) அவர்கள் எத்தனை அறப்போர்களில் கலந்துகொண்டார்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பத்தொன்பது போர்களில் (கலந்து கொண்டார்கள்)” என்று பதிலளித்தார்கள்.498 அத்தியாயம் :

487

பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் பதினைந்து அறப்போர்களில் கலந்து கொண்டேன். அத்தியாயம் :

488

புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல் அவர்களுடன் பதினாறு அறப்போர்களில் கலந்துகொண்டேன். அத்தியாயம் :)