அனைத்து இஸ்லாம் நூலகம்

15 - ஹஜ் புத்தகம்

1

2

3

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஹ்ராம்" கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(முழு நீளச்) சட்டைகள், தலைப் பாகைகள், முழுக் கால்சட்டைகள்,முக்காடுள்ள மேலங்கிகள் (புர்னுஸ்), காலுறைகள் (மோஸா) ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்துகொள்ளட்டும். ஆனால், காலுறை இரண்டும் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும். குங்குமப்பூ மற்றும் "வர்ஸ்" ஆகிய வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட எந்த ஆடைகளையும் அணியாதீர்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :

4

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையில், "கீழங்கி கிடைக்காத ("இஹ்ராம்" கட்டிய)ஒருவர் முழுக்கால் சட்டை அணிவார்; காலணிகள் கிடைக்காத ஒருவர் காலுறைகள் அணிவார்" என்று குறிப்பிட்டதை நான் செவியுற்றேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் அரஃபா வில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்" என இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களைத் தவிர மற்றவர்களது அறிவிப்பில் "அரஃபா உரையில் அவ்வாறு குறிப்பிட்டார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :

5

6

7

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இஹ்ராமின்போது) காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை அணியட்டும்; கீழங்கி கிடைக்காதவர் முழுக் கால்சட்டை அணியட்டும். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

8

9

10

ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் "நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்க வேண்டும் (என ஆசையாக உள்ளது)" என்று கூறுவார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு அருகிலுள்ள) "ஜிஅரானா" எனுமிடத்தில் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு மேலே துணியொன்று நிழலுக்காகக் கட்டப்பட்டிருந்தது. அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் உள்ளிட்ட அவர்களுடைய தோழர்களில் சிலரும் இருந்தனர். அப்போது அதிகமாக நறுமணம் பூசிய, கம்பளியாலான அங்கியணிந்த ஒரு மனிதர் வந்தார். அவர், "அல்லாஹ்வின் தூதரே! அதிகமாக நறுமணம் பூசப்பட்ட அங்கியால் "இஹ்ராம்" கட்டியவர் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, அமைதியாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெற்றது. உடனே உமர் (ரலி) அவர்கள், "இங்கு வாருங்கள்" என சைகையால் (என் தந்தை) யஅலா (ரலி) அவர்களை அழைத்தார்கள். (என் தந்தை யஅலா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) நான் சென்று (நபி (ஸல்) அவர்களுக்கு மேலே கட்டப்பட்டிருந்த துணிக்குள்) எனது தலையை நுழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டை விட்ட நிலையில் சிறிது நேரம் காணப்பெற்றார்கள். பிறகு அவர்களைவிட்டு அந்த (சிரம)நிலை விலகியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "சற்று முன்னர் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?" என்றார்கள். அந்த மனிதர் தேடப்பட்டு, அழைத்துவரப்பட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "உம்மீதுள்ள நறுமணத்தை மூன்றுமுறை கழுவிக்கொள்க. (தைக்கப்பட்டுள்ள உமது) அங்கியைக் களைந்து விடுக. (தைக்கப்படாத ஆடை அணிந்து கொள்க.) பிறகு உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

11

12

13

14

15

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்த் வாசிகள் கர்னிலும் "இஹ்ராம்" கட்டுவார்கள். இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (தொடர்ந்து) யமன்வாசிகள் யலம்லமில் "இஹ்ராம்" கட்டுவார்கள் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எனக்குச் செய்தி எட்டியது. அத்தியாயம் :

16

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்த் வாசிகள் கர்னிலும் "இஹ்ராம்" கட்டுவார்கள். இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யமன்வாசிகள் யலம்லமில் "இஹ்ராம்" கட்டுவார்கள் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (நபித் தோழர்களால்) எனக்குச் சொல்லப்பட்டது; (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக) நான் அதைச் செவியுறவில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

17

18

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

19

20

21

22

அபுஸ்ஸுபைர் (முஹம்மத் பின் முஸ்லிம் - ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் "இஹ்ராம்" கட்டும் இடம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு கூறியதை நான் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே ஜாபிர் (ரலி) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள் என நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :

23

24

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க, வல்முல்க்க, லா ஷரீக்க லக்" என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன "தல்பியா" ஆகும். (பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். உனக்கு இணை துணை கிடையாது. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமிலர்.) இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "லப்பைக் லப்பைக் வ சஅதைக், வல்கைரு பி யதைக், லப்பைக் வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்" என்று கூடுதலாகக் கூறுவார்கள். (பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். நன்மைகள் உன் கைகளிலேயே உள்ளன. இதோ வந்துவிட்டேன். வேண்டுதல்கள் உன்னிடமே. நற்செயல்கள் உனக்காகவே.) அத்தியாயம் :

25

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபா பள்ளிவாசல் அருகில் தமது வாகன ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்த பிறகு "லப்பைக் அல்லாஹும்ம! லப்பைக் லப்பைக், லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க வல்முல்க்க, லா ஷரீக்க லக்" என்று தல்பியா கூறுவார்கள். நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன "தல்பியா" ஆகும் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள் என மக்கள் கூறினர். மேலும், இதனுடன் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "லப்பைக் லப்பைக் வ சஅதைக். வல்கைரு பியதைக் லப்பைக். வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்" என்றும் கூறுவார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாயிலிருந்து (நேரடியாகவே) தல்பியாவைக் கற்றேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :

26

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்திருந்த நிலையில் "லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க, வல் முல்க்க லா ஷரீக்க லக்" என்று கூறியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது தல்பியாவில்) இதைவிடக் கூடுதலாக வேறெதையும் கூற மாட்டார்கள். இதன் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் துல்ஹுலைஃபா பள்ளிவாசல் அருகில் தமது ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்ததும் இவ்வாறு தல்பியா கூறி "இஹ்ராம்" கட்டுவார்கள்" என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். மேலும் (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியவாறே தல்பியா கூறி "இஹ்ராம்" கட்டுவார்கள். லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்! லப்பைக் வ சஅதைக். வல்கைரு ஃபீ யதைக். லப்பைக். வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்" எனக் கூறுவார்கள் என்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுவார்கள். அத்தியாயம் :

27

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இணைவைப்பாளர்கள் (ஹஜ்ஜின்போது) "லப்பைக், லா ஷரீக்க லக்" (உன் அழைப்பை ஏற்றோம். உனக்கு இணை ஏதுமில்லை) என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்குக் கேடுதான். போதும்! போதும்! (இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்)" என்பார்கள். (ஏனெனில்,) அதன் பிறகு இணைவைப்பாளர்கள் "இல்லா ஷரீக்கன் ஹுவ லக்க. தம்லிகுஹு வ மா மலக் (ஆனால், உனக்கு ஓர் இணையாளன் இருக்கின்றான்; அவனுக்கு நீ எசமானன். அவன் எவருக்கும் எசமான் அல்லன்; அல்லது அவனுக்கும் அவனுடைய உடமைகளுக்கும் நீயே அதிபதி) என்றும் கூறுவார்கள். இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்போது, இவ்வாறு இணைவைப்பாளர்கள் கூறுவார்கள். அத்தியாயம் :

28

29

சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "பைதாஉ" எனும் இடத்திலிருந்தே "இஹ்ராம்" கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டால் அவர்கள், "பைதாஉ எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டினார்கள் என நீங்கள் பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹுலைஃபா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த) அந்த மரத்திற்குப் பக்கத்தில் தமது ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்தபோதே "இஹ்ராம்" கட்டினார்கள்" என்று கூறுவார்கள். அத்தியாயம் :

30

மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டையும் பன்னிரண்டு தடவைகள் நிறைவேற்றியுள்ளேன். நான் அவர்களிடம், "அபூஅப்திர் ரஹ்மான்! நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த்தேன்"என உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. ஆனால், "இஹ்ராம்" கட்டுவது தொடர்பான தகவல் வேறுவிதமாகக் காணப்படுகிறது. அத்தியாயம் :

31

32

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தின் வளையத்தில் காலை வைத்து, ஒட்டகம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும்போது, துல்ஹுலைஃபாவில் ("இஹ்ராம்" கட்டி) தல்பியா கூறுவார்கள். அத்தியாயம் :

33

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரான போது "தல்பியா" கூறினார்கள். அத்தியாயம் :

34

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, அது நிலைக்கு வந்தபோது "தல்பியா" கூறியதை நான் பார்த்தேன். அத்தியாயம் :

35

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("இஹ்ராம்" கட்டி ஹஜ் கிரியைகளை) ஆரம்பித்த போது, இரவில் துல்ஹுலைஃபாவில் தங்கினார்கள்; அங்குள்ள பள்ளிவாசலில் தொழுதார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

36

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டும்போது, அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்காக அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்; அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது, கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

37

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டும்போது அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்காக அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது அவர்கள், கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பு அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதற்காகவும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். இதை, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

38

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்கு முன் அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்காக நான் அவர்களுக்கு நறுமணம் பூசுவேன்; அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும் போதும், அவர்கள் கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பு அவர்களுக்கு நான் நறுமணம் பூசுவேன். இதை, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

39

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும், அவர்கள் "இஹ்ராம்" கட்டும்போதும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். இதை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

40

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜிற்காக "இஹ்ராம்" கட்டிய போதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் எனது கையால் அவர்களுக்கு ("தரீரா" எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

41

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது எதனால் அவர்களுக்கு நறுமணம் பூசினீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மிக நல்ல வாசனைப் பொருளால் (நறுமணம் பூசிவிட்டேன்)" என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

42

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்கு முன் என்னால் இயன்ற மிக நல்ல வாசனைப் பொருளை அவர்களுக்குப் பூசிவந்தேன். பின்னர் அவர்கள் "இஹ்ராம்" கட்டுவார்கள். அத்தியாயம் :

43

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது அவர்கள் "இஹ்ராம்" கட்டியதற்காகவும், அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோது அவர்கள் "தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு முன்பும் எனக்குக் கிடைத்தவற்றில் மிக நல்ல நறுமணத்தை அவர்களுக்கு நான் பூசிவிட்டேன். அத்தியாயம் :

44

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. அதற்குப் பகரமாக "அது அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது பூசிய நறுமணமாகும்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

45

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("இஹ்ராம்" கட்டி) "தல்பியா" கூறியபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

46

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தல்பியா" கூறியபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

47

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது அவர்களது தலை வகிட்டில் நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

48

49

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது, அவர்களது தலை வகிட்டில் பூசியிருந்த கஸ்தூரியின் ஒளியை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

50

51

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்கு முன்பும், துல்ஹஜ் பத்தாம் நாளில் அவர்கள் கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணப்பொருளை அவர்களுக்கு நான் பூசிவந்தேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

52

53

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசிவிடுவேன். அவர்கள் தம் துணைவியரிடம் சென்றுவிட்டுப் பின்னர் நறுமணம் கமழக் கமழ காலையில் "இஹ்ராம்" கட்டியிருப்பார்கள். அத்தியாயம் :

54

55

ஸஅப் பின் ஜஸ்ஸாமா அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலுள்ள) "அல்அப்வா" அல்லது "வத்தான்"எனுமிடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். எனது முகத்தில் ஏற்பட்ட (மாற்றத்)தை அவர்கள் கண்டபோது, "நாம் "இஹ்ராம்" கட்டியிருப்பதால் தான் இதை ஏற்க மறுத்தோம்" என்று கூறினார்கள். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

56

மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

57

மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் இறைச்சியை அன்பளிப்பாக வழங்கினேன்"என ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

58

59

மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் மன்ஸூர் பின் அல்முஅதமிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் ஒரு காலை அன்பளிப்பாக வழங்கினார்கள்" என்று காணப்படுகிறது. ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த காட்டுக் கழுதையின் பின் சப்பையை (அன்பளிப்பாக வழங்கினார்கள்)" என்று இடம் பெற்றுள்ளது. ஷுஅபா (ரஹ்) அவர்களது மற்றோர் அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் விலாப் பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்" என்று வந்துள்ளது. அத்தியாயம் :

60

61

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டுச் சென்றோம். எங்களில் "இஹ்ராம்" கட்டியவர்களும் இருந்தனர்; "இஹ்ராம்" கட்டாதவர்களும் இருந்தனர். (நான் "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை.) நாங்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) "அல்காஹா" எனுமிடத்தில் இருந்தபோது, என் தோழர்கள் எதையோ உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. உடனே நான் என் குதிரையின் சேணத்தைப் பூட்டி, எனது ஈட்டியை எடுத்துக்கொண்டு (குதிரையில்) ஏறினேன். அப்போது என் (கையிலிருந்து) சாட்டை கீழே விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டேன். அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருப்பதால் "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்" என்று கூறிவிட்டார்கள். எனவே, நானே இறங்கி அதை எடுத்துக்கொண்டு (குதிரையில்) ஏறி, மணல் மேட்டுக்கு அப்பாலிருந்த அந்தக் கழுதைக்குப் பின்னால் (மறைந்து) சென்று, அதை நோக்கி என் ஈட்டியை எறிந்தேன். பிறகு அதை அறுத்து என் தோழர்களிடம் கொண்டுவந்தேன். அப்போது அவர்களில் சிலர் "உண்ணுங்கள்" என்றனர். வேறு சிலர் "உண்ணாதீர்கள்" என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னால் (சென்று ஓரிடத்தில் தங்கி) இருந்தார்கள். ஆகவே, நான் எனது குதிரையை முடுக்கி,அவர்களிடம் போ(ய் அதை "இஹ்ராம்" கட்டியவர்கள் உண்பதைப் பற்றி வினவி)னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது அனுமதிக்கப்பெற்றதுதான். எனவே, அதை உண்ணுங்கள்" என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

62

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு பயணத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். மக்கா செல்லும் சாலை ஒன்றில் நான் இருந்தபோது, "இஹ்ராம்" கட்டியிருந்த என் தோழர்கள் சிலருடன் பின்தங்கி விட்டேன். அப்போது நான் "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை. இந்நிலையில் நான் (வழியில்) காட்டுக் கழுதையொன்றைக் கண்டு, எனது குதிரைமேல் அமர்ந்தேன். அப்போது என் தோழர்களிடம் என் சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் ("இஹ்ராம்" கட்டியிருந்ததால் அதை எடுத்துத்தர) மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எனது ஈட்டியை எடுத்துத் தரும்படி கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, நானே (இறங்கி) அதையெடுத்து அந்தக் கழுதையைத் தாக்கிக் கொன்றேன். நபித்தோழர்களில் சிலர் அதிலிருந்து உண்டார்கள். வேறுசிலர் (உண்ண) மறுத்துவிட்டனர். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தபோது, அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதுவெல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உண்ணக் கொடுத்த உணவாகும்" என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

63

64

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா ஒப்பந்தம் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். என் தோழர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை. "ஃகைகா" எனுமிடத்தில் எதிரிகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, (எதிரிகளை எதிர்கொள்ள) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முன்னே) சென்றார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் (சென்றுகொண்டு) இருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர். நான் கூர்ந்து கவனித்தபோது, ஒரு காட்டுக் கழுதை எனக்குத் தென்பட்டது. உடனே நான் அதை ஈட்டியால் தாக்கி (ஓடவிடாமல்) நிறுத்திவிட்டேன். என் தோழர்களிடம் உதவி கோரினேன். ("இஹ்ராம்" கட்டியிருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் இறைச்சியை நாங்கள் உண்டோம். இந்நிலையில் (எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோமோ என்று நாங்கள் அஞ்சினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடி எனது குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் (வழியில்) நான் "பனூ ஃகிஃபார்" குலத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீர் எங்கே சந்தித்தீர்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அவர்களை "தஅஹின்" எனும் நீர்நிலையருகே (சந்தித்து) விட்டுவந்தேன். அப்போது அவர்கள் "சுக்யா" எனும் சிற்றூரில் மதிய ஓய்வெடுக்கப் போய்க்கொண்டிருந்தார்கள்" என்று கூறினார். நான் அவர்களைச் சென்றடைந்து, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினர். பயணத்தில் உங்களைப் பிரிந்துவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சினர். (எனவே, அவர்கள் வந்துசேரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்" என்றேன். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காத்திருந்தார்கள். தொடர்ந்து நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒரு காட்டுக் கழுதையை) வேட்டையாடினேன். என்னிடம் அதில் சிறிதளவு எஞ்சியுள்ளது" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடனிருந்த) மக்களிடம், "உண்ணுங்கள்" என்றார்கள். அப்போது அம்மக்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். அத்தியாயம் :

65

66

மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஷைபான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களில் யாரேனும் அதைத் தாக்குமாறு அவரைத் தூண்டினாரா, அல்லது தாக்குமாறு சைகை செய்தாரா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என இடம்பெற்றுள்ளது. ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நீங்கள் சைகை செய்தீர்களா, அல்லது (அவருக்கு) உதவி செய்தீர்களா, அல்லது நீங்களே வேட்டையாடினீர்களா?" என்று கேட்டார்கள் எனக் காணப்படுகிறது. ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் (அவருக்கு) உதவி செய்தீர்களா என்று கேட்டார்களா? அல்லது நீங்கள் வேட்டையாடினீர்களா என்று கேட்டார்களா" என்று எனக்குத் தெரியவில்லை. அத்தியாயம் :

67

68

69

70

அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு உம்ராப் பயணத்தில்) தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தோம். அப்போது அவர்களுக்கு (வேட்டையாடப்பட்ட) ஒரு பறவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தல்ஹா (ரலி) அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். எனவே, எங்களில் சிலர் அதைச் சாப்பிட்டனர். வேறுசிலர் (சந்தேகம் ஏற்பட்டதால் சாப்பிடாமல்) பேணுதலாக இருந்துவிட்டனர். தல்ஹா (ரலி) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தபோது, அதைச் சாப்பிட்டவர்களின் செயலைச் சரி கண்டார்கள் (குறை கூறவில்லை). மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இ(வ்வாறு வேட்டையாடப்பட்ட)தைச் சாப்பிட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள். அத்தியாயம் :

71

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு (வகை) உயிரினங்கள் தீங்கிழைப்பவை ஆகும். அவை புனித (ஹரம்) எல்லையிலும் வெளியிலும் கொல்லப்படும். (அவையாவன:) பருந்து, (நீர்க்)காகம், எலி, வெறிநாய். இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்களிடம், "பாம்பைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அது அற்பமாக (அடித்து)க் கொல்லப்படும்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

72

73

74

75

76

77

78

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்களைப் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்ல உத்தரவிட்டார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :

79

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து உயிரினங்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் தீங்கிழைக்கக்கூடியவை ஆகும். அவற்றைக் கொல்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. தேள், (நீர்க்)காகம், பருந்து, எலி, வெறிநாய் ஆகியவைதாம் அவை. இதை நபி (ஸல்) அவர்களின் துணை வியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

80

ஸைத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் "எலி, தேள், பருந்து, வெறிநாய், (நீர்க்)காகம் ஆகியவற்றைக் கொல்ல "உத்தரவிடப்பட்டது" அல்லது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்" என்று என்னிடம் தெரிவித்தார்" என விடையளித்தார்கள். அத்தியாயம் :

81

ஸைத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "இஹ்ராம் கட்டிய ஒருவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் "வெறிநாய், எலி, தேள், பருந்து, (நீர்க்)காகம், பாம்பு ஆகியவற்றைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுவந்தார்கள்" என்று என்னிடம் கூறினார்" என்றார்கள். இவற்றை ஒருவர் தொழுகையில் இருக்கும்போதும் கொல்லலாம் என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :

82

83

84

85

86

87

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து உயிரினங்களை ஒருவர் இஹ்ராம் கட்டிய நிலையில் கொன்றுவிட்டாலும் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. தேள், எலி,வெறி நாய், (நீர்க்)காகம், பருந்து ஆகியவைதாம் அவை. இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படும் வாசகமே இங்கு இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

88

89

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: "உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்கவேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது பலியிட வேண்டும்" எனும் இந்த (2:196 ஆவது) வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. நான் (ஹுதைபியா நேரத்தில் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் "அருகில் வா!" என்றார்கள். நான் அருகில் சென்றேன். "இன்னும் நெருங்கி வா!" என்றார்கள். நான் இன்னும் நெருங்கினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், (தலைமுடியை மழித்துவிட்டு) அதற்குப் பரிகாரமாக (மூன்று) நோன்பு நோற்க வேண்டும். அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது (என்னால்) இயன்ற ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :

90

91

92

93

அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகில் (கூஃபா) பள்ளிவாசலில் அமர்ந்தேன். அவர்களிடம், "..அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்கவேண்டும். அல்லது பலியிட வேண்டும" எனும் இந்த (2:196ஆவது) வசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள், "இந்த வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. எனது தலையில் பிணி ஏற்பட்டிருந்தது. எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். எனது தலையிலிருந்த பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை" என்று கூறிவிட்டு, "உனக்கு ஓர் ஆடு கிடைக்குமா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். அப்போதுதான் இந்த (2:196ஆவது) வசனம் அருளப் பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை "ஸாஉ" உணவு வீதம், ஆறு ஏழைகளுக்கு உணவளி" என்று சொன்னார்கள். ஆகவே, இந்த வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பெற்றது. ஆனால், அதன் சட்டம் உங்கள் அனைவருக்கும் பொதுவானதாகும்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

94

95

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்த நிலையில் (தமக்கேற்பட்டிருந்த ஒற்றைத் தலைவலியின் காரணத்தால்) குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

96

அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் தமது தலையின் நடுவே குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். அப்போது அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தார்கள். அத்தியாயம் :

97

நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் "அல்மலல்" எனுமிடத்தை அடைந்த போது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் "அர்ரவ்ஹா" எனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண் வலி கடுமையாகிவிட்டது. உடனே உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) "இஹ்ராம்" கட்டியிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது,இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்" என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

98

நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டது. அப்போது அவர்கள் கண்ணில் அஞ்சனம் (சுருமா) இட்டுக்கொள்ள விரும்பினார்கள். இதை அறிந்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தடை விதித்துவிட்டு, கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அவருக்கு உத்தர விட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (கண்வலி எற்பட்டோருக்கு) அவ்வாறு செய் தார்கள் என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றும் அறிவித்தார்கள். அத்தியாயம் :

99

அப்துல்லாஹ் பின் ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "அல்அப்வா" எனுமிடத்தில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகிய இருவரும் (ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டனர். அதாவது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் தமது தலையைக் கழுவலாம்" என்று கூறினார்கள். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவக் கூடாது"என்றார்கள். இதையடுத்து அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அதைப் பற்றிக் கேட்பதற்காக அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பிவைத்தார்கள். நான் சென்றபோது அவர்கள் கிணற்றின் மேல் ஊன்றப்பட்டிருக்கும் இரு மரக்குச்சிகளுக்கிடையே ஒரு துணியால் திரையிட்டுக் குளித்துக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினேன். அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். "நான் அப்துல்லாஹ் பின் ஹுனைன் (வந்திருக்கிறேன்). "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது எவ்வாறு தமது தலையைக் கழுவுவார்கள்?" என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்கள்" என்று சொன்னேன். அபூ அய்யூப் (ரலி) அவர்கள் தமது கையைத் திரையின் மீது வைத்து, தமது தலை தென்படும் அளவிற்குத் திரையைக் கீழே இறக்கினார்கள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த மனிதரிடம், "தண்ணீர் ஊற்று" என்றார்கள். அவர் தண்ணீர் ஊற்ற, அபூ அய்யூப் (ரலி) அவர்கள், பின்னிருந்து முன்னாகவும் முன்னிருந்து பின்னாகவும் தம் கைகளைக் கொண்டுசென்று தமது தலையைத் தேய்த்துக் கழுவினார்கள். பிறகு, "இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

100

101

102

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

103

104

105

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இஹ்ராம் கட்டியிருந்த) ஒரு மனிதரது கழுத்தை அவரது ஒட்டகம் முறித்துவிட்டது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டும்படியும் அவரது முகத்தையும் தலையையும் திறந்து வைக்குமாறும் உத்தரவிட்டார்கள். "ஏனெனில் அவர், மறுமை நாளில் "தல்பியா" சொன்னவராக எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள். அத்தியாயம் :

106

107

108

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் "இஹ்ராம்" கட்டியவராக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர் தமது ஒட்டகத்திலிருந்து விழுந்துவிட்டார். அவரது ஒட்டகம் (அந்த இடத்திலேயே) அவரைக் கொன்றுவிட்டது. (அதனால் அவர் இறந்துவிட்டார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவருக்கு நீராட்டி, இரு ஆடையால் பிரேத ஆடை (கஃபன்) அணிவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்கள். எந்த நறுமணமும் பூசக் கூடாது; அவரது தலை வெளியில் தெரிய வேண்டும் (என்றும் உத்தரவிட்டார்கள்). இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் இந்த ஹதீஸை அபூபிஷ்ர் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அப்போது "அவரது தலையும் முகமும் வெளியில் தெரிய வேண்டும். ஏனெனில், அவர் மறுமை நாளில் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்த நிலையில் ("இஹ்ராம்" கட்டியவராக) எழுப்பப்படுவார்" என்று அறிவித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

109

110

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இஹ்ராம் கட்டி) இருந்தார். அப்போது அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரை நீராட்டுங்கள். ஆனால், எந்த நறுமணத்தையும் அவருக்குப் பூசாதீர்கள். அவரது முகத்தை மூடாதீர்கள். ஏனெனில் அவர், மறுமை நாளில் "தல்பியா" சொல்லிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள். அத்தியாயம் :

111

112

113

114

115

116

117

118

119

120

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள், "விடைபெறும்" ஹஜ் ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் உம்ராச் செய்வதற்காக "இஹ்ராம்" கட்டியவர்களும் இருந்தனர். ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களும் இருந்தனர். நாங்கள் மக்காவை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவராமல் உம்ராவிற்காக ("தமத்துஉ") "இஹ்ராம்" கட்டியவர், (உம்ராவை முடித்துவிட்டு) இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளட்டும். உம்ராவிற்காக ("கிரான்") "இஹ்ராம்" கட்டி, தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்திருப்பவர் (துல்ஹஜ் பத்தாம் நாளில்) தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டாம். ஹஜ்ஜுக்காக மட்டும் ("இஃப்ராத்") "இஹ்ராம்" கட்டியிருப்பவர் தமது ஹஜ்ஜை முழுமையாக்கட்டும்" என்று கூறினார்கள். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாள் வரும்வரை மாதவிடாயுடனேயே நான் இருந்தேன். நானோ உம்ராவிற்காக மட்டுமே "இஹ்ராம்" கட்டியிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிடுமாறும், உம்ராவிற்காக நான் "இஹ்ராம்" கட்டியதை விட்டுவிட்டு ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டிக்கொள்ளுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் செய்தேன். நான் ஹஜ்ஜை நிறைவேற்றிய பின் என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களை அனுப்பி, எந்த உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமலேயே நான் ஹஜ்ஜை அடைந்து கொண்டேனோ அந்த உம்ராவிற்காக இஹ்ராம் கட்டி வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :

121

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள், "விடைபெறும்" ஹஜ் ஆண்டில் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக நான் "இஹ்ராம்" கட்டினேன். நான் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், "தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருப்பவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்" என்று சொன்னார்கள். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாள் இரவை நான் அடைந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ராவிற்காக (மட்டும்) "இஹ்ராம்" கட்டியிருந்தேன். (இந்நிலையில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது) நான் எவ்வாறு ஹஜ் செய்வது?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உனது தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டுக்கொள். உம்ராவை நிறுத்திவிட்டு, ஹஜ் செய்துகொள்" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் ஹஜ்ஜை நிறைவேற்றியதும் நபி (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களுக்கு (என்னை "தன்ஈமு"க்கு அழைத்துச் செல்லுமாறு) உத்தரவிட, அவர் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமர்த்திக்கொண்டு,நான் நிறுத்திவைத்திருந்த உம்ராவிற்காக "தன்ஈம்" எனும் இடத்தில் "இஹ்ராம்" கட்டச் செய்தார். அத்தியாயம் :

122

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (விடைபெறும் ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டோம். அப்போது அவர்கள், "உங்களில் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற்கும் (கிரான்) "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்! ஹஜ்ஜுக்கு மட்டும் (தமத்துஉ) "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், அதற்காக "இஹ்ராம்" கட்டட்டும்! உம்ராவிற்கு மட்டும் (இஃப்ராத்) "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், அதற்காக "இஹ்ராம்" கட்டட்டும்!" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" கூறினார்கள். அவ்வாறே அவர்களுடன் மக்களில் சிலரும் "இஹ்ராம்" கட்டினர். வேறுசிலர் உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டிற்கும் "இஹ்ராம்" கட்டினர். இன்னும் சிலர் உம்ராவிற்கு மட்டும் "இஹ்ராம்" கட்டினர். நான் உம்ராவிற்காக மட்டும் "இஹ்ராம்" கட்டியவர்களில் ஒருவராக இருந்தேன். அத்தியாயம் :

123

124

125

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நாங்கள் துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறையை எதிர்பார்த்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காக (தமத்துஉ) "இஹ்ராம்" கட்டியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) "இஹ்ராம்" கட்டியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டியவர்களில் ஒருவராக இருந்தேன்" என்று ஹதீஸ் துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த அறிவிப்பில், "ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றித்தந்தான்"என அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் "இதற்கு(ப் பரிகாரமாக)ப் பலியிடலோ, தர்மமோ, நோன்போ (ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து) நிகழவில்லை" என ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

126

127

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். நாங்கள் "சரிஃப்" எனுமிடத்தில், அல்லது அதற்கு அருகில் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. நபி (ஸல்) அவர்கள் நானிருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னிடம், "உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு அவர்கள், "இந்த மாதவிடாய் பெண்கள்மீது அல்லாஹ் விதியாக்கிய (இயற்கையான) ஒன்றாகும். எனவே, நீ குளிக்கும்வரை, இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர,ஹாஜிகள் செய்கின்ற மற்றெல்லாக் கிரியைகளையும் செய்துகொள்" என்றார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

128

129

130

131

132

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் சிலர் ஹஜ் (இஃப்ராது)க்கு மட்டும் "இஹ்ராம்" கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) "இஹ்ராம்" கட்டினர். இன்னும் சிலர் உம்ராச் செய்து முடித்துவிட்டு, ஆசுவாசமாக "ஹஜ்(ஜுத் தமத்து)" செய்வதற்காக "இஹ்ராம்"கட்டினர். - காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக வந்தார்கள்... (மற்ற விவரங்கள் மேற் கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.) அத்தியாயம் :

133

134

135

136

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் எல்லாரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரு கிரியைகளையும் நிறைவேற்றிவிட்டுத் திரும்புகின்றனர். நான் மட்டும் (ஹஜ் என்கிற) ஒரேயொரு கிரியையை நிறைவேற்றிவிட்டுத் திரும்புகிறேனே?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ (சற்றுக்) காத்திருந்து, (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் "தன்ஈமு"க்குச் சென்று, அங்கு உம்ராவிற்காக "தல்பியா" கூறிக்கொள். பிறகு நாளை நாம் இன்னின்ன இடத்தில் சந்திப்போம். ஆனால், உம்ராவிற்கான நற்பலன் (நீ ஏற்றுக்கொண்ட) "உனது சிரமத்திற்கு" அல்லது "உனது பொருட்செலவிற்கு" தக்கவாறுதான் கிட்டும்!" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

137

138

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். நாங்கள் மக்கா சென்றடைந்ததும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தோம். அதன் பிறகு, பலிப்பிராணியை (தம்முடன்) கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் பலிப்பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொண்டனர். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் நான் இறையில்லத்தைச் சுற்றிவரவில்லை. (ஹஜ் முடிந்து) "அல்முஹஸ்ஸப்" எனுமிடத்தில் தங்கும் (துல்ஹஜ் பதினான்காவது) இரவு வந்தபோது, நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் அனைவரும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துத் திரும்புகின்றனர். நான் ஹஜ்ஜை மட்டுமே முடித்து விட்டுத் திரும்புகிறேனே?" என்றேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாம் மக்கா வந்தடைந்த இரவுகளில் நீ இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "அவ்வாறாயின், நீ உன் சகோதரர் (அப்துர் ரஹ்மான்) உடன் "தன்ஈமு"க்குச் சென்று அங்கிருந்து உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி (உம்ராவை நிறைவேற்றி)க்கொள். பிறகு இன்னின்ன இடத்தில் நாம் சந்திப்போம்" என்று கூறினார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியார்) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நான் உங்களைப் புறப்படவிடாமல் தடுத்துவிடுவேன் என எண்ணுகிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செல்லமாக), "உன் கழுத்தறுந்து போக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கொடுத்துவிட்டாயே!) நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி வரவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். (அப்படியானால்) பரவாயில்லை நீ புறப்படு!" என்றார்கள். (தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக்கொண்டிருந்தபோது (உம்ராவை முடித்துத் திரும்பிய) என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் குன்றிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தேன். அல்லது அவர்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள்; நான் ஏறிக்கொண்டிருந்தேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

139

140

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள், அல்லது ஐந்தாவது நாள் அன்று (மக்காவிற்கு) வந்தார்கள். அப்போது நானிருந்த இடத்திற்குக் கோபத்துடன் வந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் கோபப்படுத்தியவர் யார்? அவரை, அல்லாஹ் நரகத்தில் நுழைவிப்பானாக!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "உனக்குத் தெரியுமா? நான் மக்களிடம் (பலிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் தமது ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கிக்கொள்ளட்டும் என) ஓர் உத்தரவு பிறப்பித்தேன். ஆனால், அவர்களோ தயக்கம் காட்டுகிறார்கள். நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், (என்னுடன்) பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்கமாட்டேன்; இங்கு வந்த பிறகு வாங்கியிருப்பேன்; பின்னர் மக்கள் (தம் ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி) இஹ்ராமிலிருந்து விடுபட்டதைப் போன்று நானும் விடுபட்டிருப்பேன்" என்றார்கள். (ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் தயக்கம் காட்டுவதைப் போன்றுள்ளது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எண்ணுகிறேன் என இடம் பெற்றுள்ளது.) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

141

142

143

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்காவிற்கு அருகிலுள்ள) "சரிஃப்" எனும் இடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. "அரஃபா"வில் தூய்மை அடைந்தேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ ஸஃபா மற்றும் மர்வாவில் சுற்றி (சயீ) வந்ததே உனது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் போதுமானதாகிவிட்டது" என்றார்கள். அத்தியாயம் :

144

145

146

147

148

149

150

151

152

153

154

155

156

157

158

159

160

161

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (மினாவில் மஸ்ஜிதுல் கைஃப் அருகிலுள்ள) இவ்விடத்தில் அறுத்துப் பலியிட்டேன். ஆனால், மினா முழுவதும் பலியிடும் இடமாகும். எனவே, (மினாவில்) நீங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே பலியிட்டுக்கொள்ளுங்கள். நான் (அரஃபா நடுவிலுள்ள "ஜபலுர் ரஹ்மத்" மலைக்குக் கீழே) தங்கினேன். ஆனால், அரஃபா முழுவதும் தங்குமிடமாகும். நான் (முஸ்தலிஃபாவில் "மஷ்அருல் ஹராம்" குன்றின் அருகில்) தங்கினேன். ஆனால், முஸ்தலிஃபா முழுவதும் தங்குமிடமாகும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

162

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா(விலுள்ள கஅபா)விற்கு வந்ததும் "ஹஜருல் அஸ்வது"க்குச் சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பின்னர் வலப் புறமாக நடந்துசென்று (கஅபாவைச்) சுற்றலானார்கள். மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாகவும் நான்கு சுற்றுகள் சாதாரணமாக நடந்தும் சுற்றினார்கள். அத்தியாயம் :

163

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்போது) குறைஷியரும் அவர்களுடைய சமயச் சார்புடையோரும் (தங்களை உயர்வாகக் கருதிக்கொண்டு) முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள் ("ஹரம்" புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்). அவர்கள் "கடினமான (சமயப் பற்றுடைய)வர்கள்" (ஹும்ஸ்) எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற எல்லா அரபியரும் "அரஃபா"பெருவெளியில் தங்குவார்கள். இஸ்லாம் வந்தபோது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், (குறைஷிக் குலத்தவரான) தன் தூதருக்கு (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) "அரஃபாத்" சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்தே புறப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டான். அக்கட்டளையே "பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்" (2:199) எனும் இறைவசனமாகும். அத்தியாயம் :

164

165

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒரு முறை) எனது ஒட்டகம் ஒன்றைத் தொலைத்து விட்டேன். அரஃபா நாளன்று நான் எனது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அரஃபா" பெருவெளியில் மக்களுடன் தங்கியிருப்பதைக் கண்டேன். அப்போது நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் (முஸ்தலிஃபாவில் தங்கும்) "ஹும்ஸ்"களில் ஒருவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?" என்று சொல்லிக் கொண்டேன். குறைஷியர் கடினமான சமயப் பற்றுடையவர் (ஹும்ஸ்)களாகவே கருதப்பட்டனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

166

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (யமன் நாட்டிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் (துல்ஹுலைஃபாவில்) "அல்பத்ஹா" பள்ளத்தாக்கில் தங்கியிருந்தார்கள். அவர்கள் என்னிடம், "ஹஜ் செய்வதற்காகவா வந்துள்ளீர்?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "நீர் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளீர்?" என்று கேட்டார்கள். நான், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே நானும் "இஹ்ராம்" கட்டியுள்ளேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்றே செய்தீர். நீர் (சென்று) இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப் செய்து), ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றி (தொங்கோட்டம் ஓடி)விட்டு, இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்க" என்றார்கள். அவ்வாறே நான் (சென்று) இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் சுற்றி விட்டுப் பின்னர் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவினரான) ஒரு பெண்ணிடம் சென்றேன். அவர் எனது தலையில் பேன் பார்த்து விட்டார். பின்னர் (துல்ஹஜ் எட்டாவது நாளில்) நான் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி தல்பியாச் சொன்னேன். இவ்வாறே (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளலாம் என்றே) நான் மக்களுக்குத் தீர்ப்பும் வழங்கிவந்தேன். உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது என்னிடம் ஒரு மனிதர், "அபூமூசா!" அல்லது "அப்துல்லாஹ் பின் கைஸ்!" உங்களது ஒரு தீர்ப்பை நிறுத்திவையுங்கள். ஏனெனில், உங்களுக்குப் பின்னர் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) ஹஜ்ஜின் கிரியைகளில் செய்துள்ள மாற்றத்தை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறினார். அதன் பின்னர் நான், "மக்களே! நாம் யாருக்கேனும் மார்க்கத் தீர்ப்பு ஏதேனும் வழங்கியிருந்தால் (அதை உடனடியாக செயல்படுத்திவிடாமல்) அவர் எதிர்பார்த்திருக்கட்டும். ஏனெனில், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வருவார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்" என்று கூறினேன். உமர் (ரலி) அவர்கள் வந்ததும் அவர்களிடம் நான் நடந்ததைச் சொன்னேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் வேதம் ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்கும்படி கட்டளையிடுகிறது. நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலிப்பிராணி தனது இடத்தை அடையாத வரை (அதாவது குர்பானி கொடுக்காத வரை) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

167

168

169

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பணி நிமித்தம்) என்னை யமன் நாட்டுக்கு அனுப்பியிருந்தார்கள். நான் அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் அவர்களிடம் சரியாக வந்து சேர்ந்தேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூமூசா! நீர் "இஹ்ராம்" கட்டியபோது எவ்வாறு (தல்பியா) சொன்னீர்?" என்று கேட்டார்கள். நான், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே நான் "இஹ்ராம்" கட்டுகிறேன்" என்று கூறினேன் என்றேன். அதற்கு அவர்கள், "நீர் (உம்முடன்) ஏதேனும் பலிப் பிராணி கொண்டுவந்துள்ளீரா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "அவ்வாறாயின், நீர் சென்று இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்க" என்றார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

170

171

172

173

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மக்கா செல்லும் வழியில்) "உஸ்ஃபான்" எனுமிடத்தில் அலீ (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் சந்தித்துக்கொண்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் "தமத்துஉ" செய்வதற்கு, அல்லது (ஹஜ் பருவத்தில்) உம்ராச் செய்வதற்குத் தடை விதித்துவந்தார்கள். எனவே, அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஒரு செயலில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? அதற்கு நீங்கள் தடை விதிக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், "(இந்த முடிவில்) நீங்கள் எம்மை விட்டுவிடுங்கள்!" என்று கூற, அதற்கு அலீ (ரலி) அவர்கள் "என்னால் உங்களை விட்டுவிட முடியாது" என்று சொன்னார்கள். தமது நிலையில் உஸ்மான் (ரலி) அவர்கள் (உறுதியாக) இருப்பதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள் ஹஜ்,உம்ரா ஆகிய இரண்டிற்கும் (கிரான்) சேர்த்து (இஹ்ராம் கட்டி) தல்பியாச் சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

174

175

176

177

அப்துர் ரஹ்மான் பின் அபிஷ்ஷஅஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) ஆகியோரிடம் சென்று, "நான் இவ்வருடம் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்ய (தமத்துஉ) முடிவு செய்துள்ளேன்" என்றேன். அதற்கு இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், "ஆனால், உங்கள் தந்தை (அபுஷ் ஷஅஸா) அவர்கள் இவ்வாறு (தமத்துஉ செய்ய) முடிவு செய்பவராக இருக்கவில்லை" என்றார்கள். இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை யஸீத் பின் ஷரீக் (ரஹ்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) "அர்ரபதா" எனும் இடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்துசென்றார்கள். அப்போது அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம் இதை (தமத்துஉ) பற்றி வினவியபோது அபூதர் (ரலி) அவர்கள், "தமத்துஉ செய்வது, (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது. அது உங்களுக்கு உரியதன்று"என விடையளித்தார்கள். அத்தியாயம் :

178

179

180

181

182

183

184

185

முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் எந்த நோயால் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது என்னிடம் ஆளனுப்பி (என்னை அழைத்தார்கள். நான் சென்றபோது பின்வருமாறு) கூறினார்கள்: நான் உமக்குச் சில ஹதீஸ்களை அறிவிக்கப்போகிறேன். எனக்குப் பின்னர் அவற்றின் மூலம் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடும். நான் உயிரோடு வாழ்ந்தால் அவற்றை யாருக்கும் அறிவிக்க வேண்டாம். நான் இறந்துவிட்டால் நீர் விரும்பினால் அவற்றை (மக்களிடம்) அறிவியுங்கள். எனக்கு (வானவர்களால்) சலாம் சொல்லப்பட்டுவந்தது. அறிக: நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் (ஹஜ் காலத்தில்) சேர்த்துள்ளார்கள். பின்னர் அந்நடைமுறையை மாற்றக்கூடிய எந்த இறைவசனமும் அருளப் பெறவில்லை. நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவுமில்லை. பின்னர் ஒரு மனிதர் அவ்(வாறு தமத்துஉ செய்யும்) விஷயத்தில் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார். அத்தியாயம் :

186

187

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

188

189

190

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது உம்ராவுடன் ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்கள்.அவர்கள் பலிப்பிராணியை (ஹஜ்ஜில்) அறுத்துப் பலியிட்டார்கள். (மதீனாவாசிகள் "இஹ்ராம்" கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவில் இருந்தே தம்முடன் பலிப்பிராணியை நபியவர்கள் கொண்டுவந்தார்கள். முதலில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறி, பின்னர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள். மக்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்குமாக "இஹ்ராம்" கட்டியிருந்தனர். மக்களில் சிலர் பலிப்பிராணியை அறுத்துப் பலியிடுபவர்களாக இருந்தனர். (அதற்காக) அவர்கள் பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவந்திருந்தனர். வேறுசிலரோ அறுத்துப் பலியிடுபவர்களாக இருக்கவில்லை. (ஏனெனில், அவர்கள் தம்முடன் பலிப்பிராணியை கொண்டு வந்திருக்கவில்லை.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும், மக்களிடம் "உங்களில் பலிப் பிராணியைக் கொண்டுவந்தவர்கள்,தமது ஹஜ்ஜை நிறைவு செய்யாதவரை இஹ்ராமிலிருந்து விடுபடக்கூடாது. பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இறை யில்லம் கஅபாவையும், ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் சுற்றி வந்துவிட்டு, தமது தலைமுடியை குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளட்டும். பின்னர் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி அறுத்துப் பலியிடட்டும். பலிப்பிராணி கிடைக்காதவர்கள், ஹஜ்ஜின் நாட்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை முடித்து) தமது வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்றுக்கொள்ளட்டும்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும் (கஅபாவை ஏழு முறை) சுற்றிவந்து விட்டு, முதல் வேலையாக (கஅபாவின்) மூலையை (ஒட்டிப் பதிக்கப்பெற்றுள்ள ஹஜருல் அஸ்வதை)த் தொட்டு முத்தமிட்டார்கள். ஏழில் மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கி) வேகமாக நடந்தும், நான்கு சுற்றுகள் மெதுவாக நடந்தும் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள். இறையில்லத்தைச் சுற்றி முடித்ததும் மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் சலாம் கொடுத்துவிட்டு நேராக ஸஃபாவுக்குச் சென்று, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஏழு தடவைச் சுற்றி (சயீ) வந்தார்கள். பிறகு ஹஜ்ஜை முடிக்கும்வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடாமலிருந்தார்கள். துல்ஹஜ் பத்தாவது நாள் (யவ்முந் நஹ்ர்) அன்று தமது பலிப்பிராணியை அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். மக்களில் பலிப்பிராணியைக் கொண்டுவந்து அறுத்துப் பலியிட்டவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்தனர். அத்தியாயம் :

191

192

மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், அதில் "அவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. "நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம்" என்றே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

193

194

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தோழர்களும் உம்ராவுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியதைப் பற்றிய மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பெற்றுள்ளது. அத்தியாயம் :

195

196

197

198

199

200

201

202

மேற்கண்ட ஹதீஸ் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "அவர்கள் உங்களை இறையில்லத்துக்குச் செல்லவிடாமல் தடுப்பார்கள்" என்று சொல்லப்பட்டபோது, "அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று செய்வேன்" என்று கூறினார்கள்" என இடம் பெற்றுள்ளது; ஹதீஸின் இறுதியில் "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்"என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்ற குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :

203

204

பக்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்ததை நான் கண்டேன்" என்று கூறினார்கள். நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், "நாங்கள் ஹஜ்ஜுக்கு (மட்டுமே) தல்பியாச் சொன்னோம்" என்றார்கள். நான் அனஸ் (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து, இப்னு உமர் (ரலி) அவர்கள் சொன்னதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் "நாங்கள் சிறுவர்களாகவே இருந்தோம் போலும்" என்றார்கள். அத்தியாயம் :

205

206

207

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "ஒருவர் உம்ராவிற்காக (மக்கா நகருக்கு) வந்து இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார். ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே "சயீ" செய்யவில்லை. இந்நிலையில், அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடலாமா? (அதாவது இஹ்ராமிலிருந்து விடுபடலாமா?)" என்று கேட்டோம். அதற்கு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு) வந்தபோது இறையில்லம் கஅபாவை ஏழு முறைச் சுற்றிவந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமிற்குப் பின்னால் (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் ஏழு முறை (ஓடினார்கள்). உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

208

209

210

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் "இஹ்ராம்" கட்டியவர்களாக (ஹஜ்ஜுக்கு)ப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்களில்) தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருப்பவர் தமது இஹ்ராமிலேயே நீடிக்கட்டும்; பலிப்பிராணியைக் கொண்டுவராதவர் இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்" என்று சொன்னார்கள். அப்போது என்னுடன் பலிப்பிராணி இல்லாததால் நான் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டேன். (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களுடன் பலிப்பிராணி இருந்ததால் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அப்போது நான் எனது ஆடையை அணிந்து புறப்பட்டேன்; ஸுபைர் (ரலி) அவர்கள் அருகில் அமர்ந்தேன். உடனே அவர்கள் "என்னிடமிருந்து எழுந்து (சென்று) விடு" என்றார்கள். அப்போது நான், "உங்கள் மீது (ஆசையோடு) பாய்ந்துவிடுவேன் என அஞ்சுகிறீர்களா?" என்று கேட்டேன். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

211

மேற்கண்ட தகவல் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நாங்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும் அதில், ("என்னிடமிருந்து எழுந்துவிடு" என்பதற்குப் பதிலாக) "என்னைவிட்டு விலகிச் சென்றுவிடு" என்று ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு நான், "உங்கள்மீது (ஆசையோடு) பாய்ந்துவிடுவேன் என நீங்கள் அஞ்சுகிறீர்களா?" என்று கேட்டேன் என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

212

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அஸ்மா (ரலி) அவர்கள் (மக்காவில் "அல்முஅல்லா" பொது மையவாடி அருகிலுள்ள) "அல்ஹுஜூன்" எனும் மலையைக் கடந்து செல்லும்போதெல்லாம் பின்வருமாறு அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன்: அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கருணை புரியட்டும்! சாந்தி அளிக்கட்டும்! நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இங்கு வந்து தங்கினோம். அப்போது எங்களிடம் (பயணத்திற்கான) மூட்டை முடிச்சுகள் குறைவாகவே இருந்தன; பயண வாகனங்களும் உணவுகளும் குறைவாகவே இருந்தன. அப்போது நானும் என் சகோதரி ஆயிஷாவும் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களும் இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உம்ராவிற்காக "இஹ்ராம்"கட்டி தல்பியாச் சொன்னோம். நாங்கள் கஅபாவைச் சுற்றி ("சயீ"யும் செய்து) வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம். பிறகு மாலையில் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டினோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹாரூன் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அஸ்மா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை கூறியதாவது"என்றே இடம்பெற்றுள்ளது. "அப்துல்லாஹ்" எனும் அவர்களது பெயர் இடம்பெறவில்லை. அத்தியாயம் :

213

முஸ்லிம் அல்குர்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "தமத்துஉ" வகை ஹஜ் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனுமதியளித்தார்கள். -இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் அதற்குத் தடை விதித்துவந்தார்கள்- எனவே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இதோ இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களின் தாயார் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தமத்துஉ" செய்யத் தம்மை அனுமதித்தார்கள் எனக் கூறுகிறார்கள். ஆகவே, அவரிடம் சென்று அதைப் பற்றிக் கேளுங்கள்" என்றார்கள். அவ்வாறே அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் கனத்த உடலுடைய கண் பார்வையற்ற பெண்மணியாக இருந்தார்கள். அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தமத்துஉ" செய்வதற்கு அனுமதியளித்தார்கள்" எனக் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :

214

215

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா"ச் சொன்னார்கள். அவர்களுடைய தோழர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா"ச் சொன்னார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை; அவர்களுடைய தோழர்களில் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. மற்றவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர்களில் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் ஒருவராக இருந்ததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அத்தியாயம் :

216

மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "தம்மிடம் பலிப்பிராணி இல்லாதவர்களில் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் மற்றொரு மனிதரும் அடங்குவர்; எனவே, அவர்கள் இருவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

217

218

219

மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்), யஹ்யா பின் கஸீர் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டினார்கள்" என்று நஸ்ர் பின் அலீ (ரஹ்) அவர்களது முந்தைய அறிவிப்பில் இடம் பெற்றதைப் போன்றே உள்ளது. அபூஷிஹாப் அப்து ரப்பிஹி பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டினோம்" என்று காணப்படுகிறது. நஸ்ர் பின் அலீ (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரின் அறிவிப்புகளிலும் "அல்பத்ஹா எனுமிடத்தில் சுப்ஹுத் தொழுதார்கள்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

220

221

222

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இது, நாம் (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்குமிடையே இடைவெளிவிட்டுப்) பயனடைந்த உம்ராவாகும். ஆகவே, "(உங்களில்) எவரிடம் பலிப்பிராணி இல்லையோ அவர் முழுமையாக இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடட்டும். ஏனெனில், மறுமை நாள்வரை ஹஜ்ஜுடன் உம்ராவும் சேர்ந்திருக்கும்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

223

அபூஜம்ரா அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் "தமத்துஉ" வகை ஹஜ் செய்தேன். அவ்வாறு செய்யலாகாதென என்னைச் சிலர் தடுத்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதைச் செய்யுமாறு எனக்கு அவர்கள் உத்தரவிட்டார்கள். பின்னர் (ஒரு நாள்) நான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்று (அதன் அருகில்) உறங்கினேன். அப்போது ஒருவர் எனது கனவில் தோன்றி "ஒப்புக்கொள்ளப்பட்ட உம்ராவும் பாவச் செயல் கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜும் (உமக்குக் கிடைத்துவிட்டன)"என்று கூறினார். உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று நான் (கனவில்) கண்டதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் "அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன். (இந்த ஹஜ் முறை) அபுல்காசிம் (ஸல்) அவர்களின் வழி முறையாகும்" என்று கூறினார்கள். அத்தியாயம் :

224

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) "துல்ஹுலைஃபா"வில் லுஹ்ர் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப்பக்கத்திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை அதிலிருந்து துடைத்தார்கள்; இரு செருப்புகளை (அதன் கழுத்தில் அடையாளத்திற்காக) தொங்கவிட்டார்கள். பின்னர் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, "பைதாஉ" எனும் குன்றில் அது நேராக நின்றதும் ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது. அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "துல்ஹுலைஃபா"விற்கு வந்தபோது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. "அங்கு லுஹ்ர் தொழுதார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. (இறையில்லம் கஅபாவைச் சுற்றியவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்.) அத்தியாயம் :

225

226

227

228

229

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் முஆவியா (ரலி) அவர்கள், "நீங்கள் அறிவீர்களா? நான் "மர்வா" அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடியைக் கத்தரிக்கோலால் (கத்தரித்துக்) குறைத்துள்ளேன்" என்றார்கள். "இதை நான் உங்களுக்கு எதிரான ஆதாரமாகவே அறிகிறேன்" என்று நான் சொன்னேன். அத்தியாயம் :

230

231

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

232

233

234

235

236

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

237

238

239

240

241

242

அபூஇஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எத்தனை அறப்போர்களில் நீங்கள் கலந்துகொண்டீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பதினேழு அறப்போர்களில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன்)" என்று விடையளித்தார்கள். தொடர்ந்து அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது போர்களில் கலந்துகொண்டார்கள். அவர்கள் (மதீனாவிற்கு) நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் -விடைபெறும் ஹஜ்- மட்டுமே செய்தார்கள்" என்றும் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், "(நாடு துறந்து செல்வதற்கு முன்) அவர்கள் மக்காவில் இருந்தபோது மற்றொரு ஹஜ் செய்துள்ளார்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். அத்தியாயம் :

243

244

245

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

246

247

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அஷ்ஷஜரா" எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். (திரும்பும்போது) "அல் முஅர்ரஸ்" எனும் இடத்தின் வழியாக நுழைவார்கள். மக்காவிற்குள் செல்லும்போது மேற்புறக்கணவாய் (அஸ்ஸனிய்யத்துல் உல்யா) வழியாக நுழைந்து, கீழ்ப்புறக் கணவாய் (அஸ்ஸனிய்யத்துஸ் ஸுஃப்லா) வழியாக வெளியேறுவார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்பத்ஹாவிலுள்ள அஸ்ஸனிய்யத்துல் உல்யா வழியாக நுழைவார்கள்" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

248

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்கு வந்த போது, அதன் மேற்புறம் (அஸ்ஸனிய்யத்துல் உல்யா) வழியாக நுழைந்து அதன் கீழ்ப்புறம் (அஸ்ஸனிய்யத்துஸ் ஸுஃப்லா) வழியாக வெளியேறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

249

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலுள்ள "கதாஉ" (எனும் கணவாய்) வழியாக நுழைந்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் (மேற்பகுதியிலுள்ள "கதாஉ", கீழ்ப் பகுதியிலுள்ள "குதாஉ" ஆகிய) அவ்விரண்டு வழிகளிலும் நுழைவார்கள்; பெரும்பாலும் "கதாஉ" (எனும் கணவாய்) வழியாகவே நுழைவார்கள். அத்தியாயம் :

250

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தூத் தவா" எனுமிடத்தில் இரவில் தங்கி விட்டுக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள். இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "சுப்ஹுத் தொழுகும் வரை தங்கியிருப்பார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

251

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வந்தால், "தூத் தவா"வில் இரவில் தங்காமல் இருக்கமாட்டார்கள். காலையில் (சுப்ஹுத் தொழுது) குளித்துவிட்டுப் பின்னர் பகல் நேரத்தில் மக்காவினுள் நுழைவார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்வார்கள் என அவர்கள் குறிப்பிடுவார்கள். அத்தியாயம் :

252

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும்போது "தூத் தவா" எனும் இடத்தில் இறங்குவார்கள்;சுப்ஹுத் தொழும்வரை அங்கேயே இரவில் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இடம் அங்குள்ள கெட்டியான மேட்டின் மீது அமைந்துள்ளது. அங்கு தற்போது பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடம் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடமன்று. அந்தப் பள்ளி வாசலுக்குக் கீழ்ப்புறமாக அமைந்துள்ள கெட்டியான மேடே (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடமாகும். அத்தியாயம் :

253

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("தூத் தவா"வில்) கஅபாவின் திசையில் அமைந்த ஓர் உயரமான மலையின் இரு குன்றுகளை நோக்கி (அல்லாஹ்வை வணங்கி)னார்கள். (அதாவது தற்போது) அங்கு கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலை, மேட்டுப் புறத்தில் அமைந்த தொழும் இடத்திற்கு இடப்பக்கமாக ஆக்கிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இடம், கறுப்பு மேட்டிற்குக் கீழே சுமார் பத்து முழம் தள்ளி இருந்தது. உமக்கும் கஅபாவிற்கும் இடையே அமைந்த உயரமான மலையின் இரு குன்றுகளை நோக்கித் தொழுதார்கள். - இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

254

255

256

257

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைச் சுற்றிவரும்போது முதல்) மூன்று சுற்றுகளில் "ஹஜருல் அஸ்வத்" முதல் (மறுபடியும்) "ஹஜருல் அஸ்வத்"வரை விரைவாக நடந்தார்கள். (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதரணமாக) நடந்தார்கள். அத்தியாயம் :

258

259

260

261

262

263

அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃபின் போதும், ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவரும்போதும் விரைந்து நடந்தார்கள். (எனவே) அது நபிவழியாகும் என உங்களுடைய சமூகத்தார் கூறுகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்" என்றார்கள். அத்தியாயம் :

264

அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்ததாகவே எண்ணுகிறேன்"என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அதைப் பற்றி எனக்கு விவரமாகச் சொல்லுங்கள்" என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மர்வா" அருகில் (அதைச் சுற்றிவரும்போது) ஓர் ஒட்டகத்தின் மீதிருந்ததை நான் கண்டேன். அப்போது அவர்களைச் சுற்றி ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்" என்றேன். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அவர்களைவிட்டு மக்கள் விரட்டப்படவோ வலுக்கட்டாயப் படுத்தப்படவோ மாட்டார்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :

265

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (உம்ரத்துல் களாவிற்காக மக்காவிற்கு) வந்தபோது,யஸ்ரிபின் (மதீனாவின்) காய்ச்சலால் உடல் நலிவுற்றிருந்தனர். அப்போது (மக்கா நகர) இணைவைப்பாளர்கள், "நாளைய தினம் (மதீனாவின்) காய்ச்சலால் நலிவடைந்து, அதனால் சிரமத்தைச் சந்தித்த ஒரு கூட்டத்தார் உங்களிடம் வரப்போகிறார்கள்" என்று (ஏளனமாகப்) பேசிக்கொண்டனர். அதன்படி இணைவைப்பாளர்கள் (கஅபாவிற்கு அருகிலுள்ள அரை வட்டப்பகுதியான) ஹிஜ்ரை ஒட்டிய இடத்தில் உட்கார்ந்துகொண்(டு நபித்தோழர்களைப் பார்வையிட்)டனர். அப்போது இணைவைப்பாளர்களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைச் சுற்றிவரும்போது முதல்) மூன்று சுற்றுகள் விரைந்து நடக்குமாறும்,ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே (மெதுவாக) நடந்து செல்லுமாறும் கட்டளையிட்டார்கள். அப்போது இணைவைப்பாளர்கள், "(மதீனாவின்) காய்ச்சலால் இவர்கள் பலவீனமடைந்துள்ளனர் என நீங்கள் கருதினீர்கள். இவர்களோ இன்னின்னதைவிட பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்" என்று (தம்மிடையே) பேசிக்கொண்டனர். தவாஃபின் அனைத்துச் சுற்றுகளிலும் விரைந்து நடக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடாததற்குக் காரணம்,மக்கள்மீது கொண்ட இரக்கமேயாகும். அத்தியாயம் :

266

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே) தொங்கோட்டம் ஓடியதும், இறையில்லத்தைச் சுற்றிவரும் போது விரைந்து நடந்ததும் இணைவைப்பாளர்களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காகத்தான். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

267

268

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் "ஹஜருல் அஸ்வத்" மூலையையும், அதையொட்டி ஜுமஹியரின் குடியிருப்புகளை நோக்கி அமைந்துள்ள (ருக்னுல் யமானீ) மூலையையும் தவிர வேறெந்த மூலைகளையும் தொட்டு முத்தமிட மாட்டார்கள். அத்தியாயம் :

269

270

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கூட்ட நெரிசலுள்ள நேரத்திலும் கூட்ட நெரிசலற்ற நேரத்திலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுல் யமானீ, ஹஜருல் அஸ்வத் ஆகிய இவ்விரு மூலைகளையும் தொட்டு முத்தமிட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் அவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதைக் கைவிட்டதில்லை. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

271

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தமது கையால் தொட்டு, பின்னர் தமது கையை முத்தமிட்டதை நான் கண்டேன். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ததை நான் பார்த்ததிலிருந்து நானும் அவ்வாறு செய்வதைக் கைவிட்ட தில்லை" என இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

272

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இவ்விரு யமனிய மூலைகளைத் தவிர (கஅபாவின்) வேறெந்த இடத்தையும் தொட்டு முத்தமிட்டதை நான் கண்டதில்லை. அத்தியாயம் :

273

274

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுவிட்டு, "நான் உன்னை முத்தமிடுகிறேன். (ஆனால்,) நீ ஒரு கல் என்பதை நான் நன்கு அறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டேன். (எனவே நானும் உன்னை முத்தமிட்டேன்)" என்றார்கள். அத்தியாயம் :

275

அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முன்தலை வழுக்கையானவர் (அதாவது உமர் (ரலி) அவர்கள்), ஹஜருல் அஸ்வதை முத்தமிடும் போது, "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உன்னை முத்தமிடுகிறேன். நீ தீங்கோ நன்மையோ செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்"என்று கூறியதை நான் பார்த்தேன். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அபீபக்ர் அல்முகத்தமீ, அபூகாமில் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "சின்ன வழுக்கத் தலையரை நான் பார்த்தேன்" என ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :

276

277

278

279

280

281

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்தார்கள். அப்போது,முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

282

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது தமது வாகனத்தின் மீதமர்ந்து இறையில்லத்தைச் சுற்றிவந்தார்கள்; அப்போது அவர்கள் தமது முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள். மக்கள் தம்மைப் பார்(த்து ஹஜ்ஜின் கிரியைகளைப் படி)க்க வேண்டும்; தம்மிடம் (மார்க்க விளக்கங்கள்) கேட்க வேண்டும்;அதற்கேற்ப தாம் மக்களின் பார்வையில் படவேண்டும் என்பதற்காகவே (வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்). ஏனெனில், அப்போது மக்கள் (திரளாக) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர். அத்தியாயம் :

283

284

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது தமது ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; அப்போது (கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள். (கூட்ட நெரிசலில்) தம்மைவிட்டு மக்கள் விரட்டியடிக்கப்படுவதை அவர்கள் வெறுத்ததே அ(வர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்த)தற்குக் காரணமாகும். அத்தியாயம் :

285

286

287

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராத எவர்மீதும் (குற்றம்) ஏதுமிருப்பதாக நான் கருதவில்லை. (எனவே) அவ்விரண்டுக்குமிடையே நான் சுற்றி வராமலிருப்பதை நான் ஒரு பொருட்டாகவே எண்ண மாட்டேன்" என்றேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நீ சொல்வது தவறு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் (ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே) சுற்றிவந்தனர். எனவே, அது ஒரு நபிவழியாக ஆகிவிட்டது. "முஷல்லல்" எனும் இடத்திலிருந்த சிலைகளுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களே ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றி வராமலிருந்தனர். இஸ்லாம் வந்தபோது, அதைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போதுதான் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமில்லை" எனும் (2:158ஆவது) வசனத்தை அருளினான். (இவ்வசனத்தில்) "அவ்விரண்டையும் சுற்றாமலிருப்பது குற்றமில்லை" என்றிருந்தால்தான் நீ சொல்லும் கருத்து வரும்" என்றார்கள். இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸை நான் அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம் சொன்னபோது,அதைக் கேட்டு அவர்கள் வியப்படைந்தார்கள். ("இந்த வசனத்திற்கு) இதுதான் (சரியான) விளக்கமாகும். அறிஞர்களில் பலர் "ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராத அரபுகள் "இவ்விரு கற்(குன்று)களுக்கிடையே சுற்றிவருவது அறியாமைக் காலச்செயலாகும்" என்றார்கள் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். (ஆனால்) அன்சாரிகளில் வேறுசிலரோ "இறையில்லம் கஅபாவைச் சுற்றிவருமாறே நாம் பணிக்கப்பட்டுள்ளோம். ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே அவ்வாறு (சுற்றிவருமாறு) நாம் பணிக்கப்படவில்லை" என்று கூறினர். அப்போதுதான் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்..." என்று (2:158ஆவது) தொடங்கும் வசனத்தை அருளினான். இந்த வசனம் இவ்விருசாரார் தொடர்பாகவும் அருளப் பெற்றிருக்கலாம் என நான் கருதுகிறேன்" என்று அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

288

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன்" என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. மேலும் அதில், பின்வருமாறும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது: அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவதைப் பாவமாகக் கருதிவந்தோம்" என்று கூறினர். அப்போது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று" (2:158) எனும் வசனத்தை அருளினான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரண்டுக்கும் இடையே சுற்றிவருவதை (தமது) வழிமுறையாக்கினார்கள். எனவே, அவ்விரண்டுக்குமிடையே சுற்றுவதைக் கைவிட எவருக்கும் (உரிமை) இல்லை. அத்தியாயம் :

289

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளும் "ஃகஸ்ஸான்" குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் "மனாத்" எனும் சிலைக்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா" கூறுபவர்களாய் இருந்தனர். எனவே, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவதை அவர்கள் பாவமாகக் கருதினர். (ஆனால்,) அதுவே அவர்களின் மூதாதையரிடையே நிலவிவந்த மரபாக இருந்தது. அன்சாரிகள் இஸ்லாத்தைத் தழுவியபோது,அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினர். இதுதொடர்பாகவே அல்லாஹ், "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமன்று. யார் கூடுதலாக நன்மை செய்கிறாரோ (அவருக்கு) அல்லாஹ் நன்றி பாராட்டக்கூடியவனும் நன்கறிந்தவனும் ஆவான்" (2:158) எனும் வசனத்தை அருளினான். அத்தியாயம் :

290

291

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ் மற்றும் உம்ராவின்போது) நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஒரேயொரு தடவை தவிர (கூடுதலாகச்) சுற்றிவரவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஆரம்பத்தில் சுற்றிவந்த ஒரேயொரு தடவை தவிர" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

292

293

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

294

295

296

297

298

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

299

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (அரஃபா நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவிலிருந்து அரஃபாவிற்குச் சென்றோம். அப்போது எங்களில் சிலர் தல்பியா (லப்பைக்...) கூறிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறிக்கொண்டிருந்தனர். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

300

அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நாங்கள் "அரஃபா" தினத்தன்று காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது எங்களில் சிலர் "தக்பீர்" சொல்லிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் "தல்பியா"சொல்லிக்கொண்டிருந்தனர். நாங்களோ தக்பீர் சொல்லிக்கொண்டிருந்தோம்" என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் அபீசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் எனக்கு இந்தச் செய்தியை அறிவித்த அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களைக் கண்டு வியப்படைகிறேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் உங்கள் தந்தையிடம் எப்படி வினவாமலிருந்தீர்கள்?" என்று கேட்டேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

301

302

303

304

305

306

307

308

309

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பியபோது, (வழியில்) ஒரு பள்ளத்தாக்கை அடைந்ததும் (வாகனத்திலிருந்து) இறங்கி சிறுநீர் கழித்தார்கள். ("சிறுநீர் கழித்தார்கள்" என்று வெளிப்படையாகவே உசாமா கூறினார்கள்; "நீர் ஊற்றிக் கழுவினார்கள்" என்று சூசகமாகக் கூறவில்லை.) பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை செய்தார்கள். (தலா ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறையே கழுவினார்கள்.) முழுமையாக அங்கத் தூய்மை செய்யவில்லை. அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்றார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்து முஸ்தலிஃபா வந்ததும் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

310

311

312

மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள "அந்நஸ்" (விரைவு) என்பது "அல் அனக்" (மிதவேகம்) என்பதைவிடக் கூடுதல் வேகமாகும்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

313

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

314

315

316

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். அத்தியாயம் :

317

318

319

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் (அரஃபாவிலிருந்து) திரும்பி முஸ்தலிஃபாவிற்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் ஒரேயோர் இகாமத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்துவிட்டுத் திரும்பினார்கள். பிறகு, "இவ்வாறே இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள்" என்றும் கூறினார்கள். அத்தியாயம் :

320

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தில்) எந்தத் தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் தொழாமல் வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை; இரண்டு தொழுகைகளைத் தவிர. ஒன்று: முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதது. மற்றொன்று: அன்றைய (மறு)நாள் ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய (வழக்கமான) நேரத்திற்கு முன்னரே (முஸ்தலிஃபாவில்) தொழுதது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய (வழக்கமான) நேரத்திற்கு முன் இருட்டிலேயே தொழுதது" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

321

322

323

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கும் முன்பே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குத்) தாம் புறப்பட்டுச் செல்ல சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்தலிஃபா இரவில் அனுமதி கேட்டார்கள்- (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) சவ்தா கனத்த உடலுடையவராக (மெதுவாக நடப்பவராக) இருந்தார்கள்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படுவதற்கு முன்பே புறப்பட்டுச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை சுப்ஹுவரை அங்கேயே தங்கியிருக்கச் செய்தார்கள். பிறகு அவர்கள் (சுப்ஹுத் தொழுதுவிட்டுப்) புறப்படவே நாங்களும் புறப்பட்டுச் சென்றோம். சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்று முன்பே சென்றதைப் போன்று, நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும்விட அது எனக்கு மிகவும் உவப்பானதாய் இருந்திருக்கும். இதன் அறிவிப்பாளரான காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள "ஸபிதா" எனும் சொல்லுக்கு "கனத்த உடலுடையவர்" என்று பொருள். அத்தியாயம் :

324

325

326

327

328

சாலிம் பின் ஷவ்வால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் என்னை முஸ்தலிஃபாவிலிருந்து (மினாவிற்கு) இரவி(ன் இருளி)லேயே அனுப்பிவைத்தார்கள்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

329

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இவ்வாறே செய்துவந்தோம். (அதாவது) "ஜம்உ" விலிருந்து மினாவிற்கு இருளிலேயே (விடியலுக்கு முன்பே) புறப்பட்டுச் செல்வோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அம்ர் பின் முஹம்மத் அந்நாகித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("ஜம்உ" என்ப தன் மற்றொரு பெயரான) "முஸ்தலிஃபா விலிருந்து..." என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

330

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பலவீனர்(களான பெண்)களுடன்" அல்லது "பயணச் சுமைகளுடன்" என்னையும் "ஜம்உ" (முஸ்தலிஃபா)விலிருந்து (மினாவிற்கு) இரவிலேயே அனுப்பிவைத்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

331

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்துப் பலவீனர்களை முன்கூட்டியே (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்களில் நானும் ஒருவன் ஆவேன். இதை உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

332

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்துப் பலவீனர்களை முன்கூட்டியே (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். இதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

333

இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைக்கு முந்தைய (சஹர்) நேரத்திலேயே தம் பயணச்சாமான்களுடன் என்னை (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு) அனுப்பி வைத்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவு நன்கு இருக்கவே) நீண்ட இரவில் என்னை (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள்" என்று கூறினார்கள் எனும் செய்தி தங்களுக்கு எட்டியதா?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள் "இல்லை; மேற்கண்டவாறு அதிகாலைக்கு முந்தைய (சஹர்) நேரத்திலேயே என்னை அனுப்பிவைத்தார்கள் என்று மட்டுமே கூறினார்கள்" என்றார்கள். நான் அவரிடம், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நாங்கள் ஃபஜ்ருக்கு முன்பே ஜம்ராவில் கல்லெறிந்தோம் என்று கூறினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், "இல்லை; மேற்கண்டவாறு மட்டுமே கூறினார்கள்" என்று விடையளித்தார்கள். "ஃபஜ்ரை எங்கு தொழுவித்தார்கள்?" என்று நான் கேட்க, "இல்லை; மேற்கண்டவாறு மட்டுமே கூறினார்கள்" என்றார்கள். அத்தியாயம் :

334

335

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பத்னுல் வாதி" பள்ளத்தில் நின்று "ஜம்ரத்துல் அகபா"வின் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீரும் கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், "மக்கள் மேற்பரப்பில் நின்றல்லவா கல்லை எறிகின்றனர்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது ஆணையாக! "அல்பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ (அந்த அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்று பதிலளித்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

336

சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி, "ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொகுத்தளித்த முறைப்படி குர்ஆனைத் தொகு(த்துப் பதிவு செய்யு)ங்கள். (அல்பகரா அத்தியாயம், அந்நிசா அத்தியாயம், ஆலு இம்ரான் அத்தியாயம் என்றெல்லாம் கூறுவதைத் தவிர்த்து) பசுமாட்டைப் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், மகளிர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், இம்ரானின் சந்ததியர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம் (எனப் பெயரிட்டு, குர்ஆன் வசனங்களை ஜிப்ரீல் கொண்டுவந்த வரிசை முறைப்படி பதிவு செய்யுங்கள்)" என்றார். நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களைச் சந்ததித்தபோது ஹஜ்ஜாஜ் கூறியதைத் தெரிவித்தேன். அப்போது இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜாஜைக் கடிந்துரைத்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் (ஹஜ்ஜின் போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (மினாவில்) "ஜம்ரத்துல் அகபா"விற்குச் சென்று அதனை ஒட்டியுள்ள "பத்னுல் வாதி" பள்ளத்தாக்கில் இறங்கி ஜம்ராவை நோக்கி நின்று அதன் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீரும் கூறினார்கள். அப்போது அவர்களிடம் நான், "அபூஅப்திர் ரஹ்மான்! மக்கள் இப்பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்றவாறு கல்லை எறிகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! "அல் பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்று விடையளித்தார்கள். - மேற்கண்ட செய்தி மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "ஹஜ்ஜாஜ், "அல்பகரா அத்தியாயம் எனச் சொல்லாதீர்கள்" என்று கூறியதைக் கேட்டேன் என அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிப்பு ஆரம்பிக்கிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட அறிவிப்பில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :

337

338

339

340

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்கள் இறையில்லம் கஅபா தமக்கு இடப்பக்கமாகவும், மினா தமக்கு வலப்பக்கமாகவும் இருக்கும்படி (பத்னுல் வாதி பள்ளத்தாக்கில்) நின்று ஜம்ராவின் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். மேலும், "அல்பகரா அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்றும் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

341

342

உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி) அவர்கள் கூறியதாவது: "விடைபெறும்" ஹஜ்ஜின்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்தபடி "ஜம்ரத்துல் அகபா"வின் மீது கல் எறிந்துவிட்டுத் திரும்பிச் சென்றதை நான் கண்டேன். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒட்டகத்தைப் பிடித்து இழுத்துச் சென்றார். மற்றொருவர் வெயில் படாமலிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமீது தமது ஆடையை உயர்த்திப் பிடித்து (நிழலிட்டுக்) கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நிறைய விஷயங்களைக் கூறினார்கள். "அல்லாஹ்வின் வேதத்தின்படி உங்களை வழி நடத்தக்கூடிய, உறுப்புகள் துண்டிக்கப்பட்ட, கறுப்பு நிற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவரது சொல்லைக் கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்" என்று அவர்கள் கூறியதையும் நான் செவியுற்றேன். அத்தியாயம் :

343

344

345

உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: "விடைபெறும்" ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். உசாமா (ரலி), பிலால் (ரலி) ஆகிய இருவரையும் நான் கண்டேன். அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களது ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். மற்றவர் வெயில் படாமலிருக்கத் தமது ஆடையை உயர்த்திப் பிடித்து அவர்களை மறைத்துக்கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஜம்ரத்துல் அகபா"வில் கல் எறியும்வரை (இவ்வாறு செய்துகொண்டிருந்தனர்).169 முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஅப்திர் ரஹீம் (ரஹ்) அவர்களது இயற்பெயர் காலித் பின் அபீயஸீத் என்பதாகும். அவர் முஹம்மத் பின் சலமா (ரஹ்) அவர்களின் தாய்மாமன் ஆவார். அவரிடமிருந்து வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்), ஹஜ்ஜாஜ் அல்அஃவர் (ரஹ்) ஆகி யோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். அத்தியாயம் :

346

347

348

349

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என்று பிரார்த்தித்ததும் மக்கள், "அல்லாஹ்வின் தூதரே, குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ், மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்), "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்..." என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மறுபடியும்) "அல்லாஹ், மழித்துக்கொள்பவர்களுக்கு அருள்புரிவானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (திரும்பவும்) "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்வர்களுக்கும்..." என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக)" எனப் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :

350

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ் கிரியைகளுக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையை மழித்தார்கள். அவர்களுடைய தோழர்களில் சிலரும் மழித்துக்கொண்டனர். வேறுசிலர் (சிறிதளவு) முடியைக் குறைத்துக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என்று ஓரிரு முறை பிரார்த்தித்தார்கள். பிறகு "முடியை குறைத்துக்கொண்டவர்களுக்கும் (அருள் புரிவானாக)" என்று பிரார்த்தித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

351

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவாயாக!" என்று பிரார்த்தித்தபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக் கொள்பவர்களுக்கும் (சேர்த்துப் பிரார்த்தியுங்கள்)" என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா! மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவாயாக!" என்றார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்..." என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (இறைவா, அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :

352

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" எனப் பிரார்த்தித்ததும் மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! "குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" என்று (மீண்டும்) பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்), "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். மக்கள் (மறுபடியும்) "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்..." என்றதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குறைத்துக்கொள்பவர்களுக்கும் (மன்னிப்பு அளிப்பாயாக)" என்று பிரார்த்தித்தார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

353

மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், நான்காவது தடவையில் "குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள் என இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :

354

355

உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது தலையை மழித்துக் கொள்பவர்களுக்காக மூன்று முறையும், முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்காக ஒரு முறையும் பிரார்த்தித்ததை நான் செவியுற்றேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "விடைபெறும் ஹஜ் ஜின்போது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :

356

357

மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (தலையின்) வலப்பக்கத்தை நாவிதரிடம் காட்டி "எடு" என்றார்கள். பிறகு அந்த முடியைத் தமக்கு அருகிலிருந்த மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பின்னர் தமது (தலையின்) இடப்பக்கத்தை நாவிதரிடம் காட்டினார்கள். அவர் அதை மழித்தார். அந்த முடியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் (தமது தலையின்) வலப்பக்கத்திலிருந்து ஆரம்பித்தார்கள். ஓரிரு முடிகளை மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பின்னர் இடப்பக்கத்தைக் காட்டி அவ்வாறே (மழிக்கச்) செய்தார்கள். பிறகு, "அபூதல்ஹா இங்கே இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். (அவர் வந்ததும்) அவரிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். அத்தியாயம் :

358

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா"வில் கல்லெறிந்துவிட்டுப் பிறகு பலி ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதை அறுத்தார்கள். நாவிதரும் அங்கே அமர்ந்திருந்தார். அவரி டம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைக் கையால் சுட்டிக் காட்டினார்கள். வலப் பக்கத்தை அவர் மழித்ததும் முடியைத் தமக்கு அருகிலிருந்தவர்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பிறகு நாவிதரிடம் "மறு பக்கத்தை மழி" என்றார்கள். பின்னர் "அபூதல்ஹா எங்கே?" என்று கேட்டு, (அவர்கள் வந்ததும்) அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். அத்தியாயம் :

359

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா"வில் கற்களை எறிந்து, தமது பலிப்பிராணியை அறுத்துப் பலியிட்டதும் தமது தலையை மழித்தார்கள். நாவிதரிடம் தமது தலையின் வலப்பக்கத்தைக் காட்டியபோது, அவர் அதை மழித்தார். அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் இடப்பக்கத்தைக் காட்டி "மழி" என்றார்கள். அவர் மழித்ததும் அதை அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்து "இதை மக்களிடையே விநியோகிப்பீராக!" என்றார்கள். அத்தியாயம் :

360

361

362

363

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து) நின்று, "நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்னின்ன கிரியைகளைச் செய்ய வேண்டும் என அறிந்திருக்க வில்லை" என்றார். பிறகு மற்றொரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்ன கிரியையைச் செய்ய வேண்டும் என (தவறாக) நினைத்துக் கொண்டுவிட்டேன் எனக்கூறி, (கல்லெறிதல், பலிப்பிராணியை அறுத்தல், தலைமுடி களையுதல் ஆகிய) இம்மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார். அவற்றுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்" என்றே விடையளித்தார்கள். அத்தியாயம் :

364

மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ள "இம்மூன்று விஷயங்களை" என்பதைத் தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன; "இம்மூன்று விஷயங்களை" எனும் வாசகம் அவரது அறிவிப்பில் இடம்பெறவில்லை. யஹ்யா அல்உமவீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் பலியிடுவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன். கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்" என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :

365

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் அறுத்துப் பலியிடுவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "குற்றமில்லை; (இப்போது) பலியிடுவீராக!" என்றார்கள். அவர், "நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டு விட்டேன்" என்றார். அதற்கும் "குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

366

மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் ஓர் ஒட்டகத்தின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார்" என ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :

367

368

369

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "தவாஃபுல் இஃபாளா"ச் செய்துவிட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ர் தொழுகையைத் தொழுதார்கள். இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்களும் "நஹ்ரு" டைய நாளில் "தவாஃபுல் இஃபாளா"ச் செய்து விட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ர் தொழுவார்கள். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள் என்றும் அவர்கள் குறிப்பிடுவார்கள். அத்தியாயம் :

370

அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்த ஏதேனும் ஒரு செய்தியை என்னிடம் கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தர்வியா”வுடைய (துல்ஹஜ் எட்டாவது) நாளில் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மினாவில்" என்று பதிலளித்தார்கள். நான், "(கிரியைகளை முடித்து) மினாவிலிருந்து புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கு அஸ்ர் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அல்அப்தஹ் எனுமிடத்தில்" என்று பதிலளித்துவிட்டு, பிறகு "உன்னுடைய தலைவர்கள் செய்வதைப் போன்று நீயும் செய்து கொள்" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

371

372

373

374

375

376

377

378

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றிக்குப் பின் ஹுனைன் செல்லத் திட்டமிட்டபோது) "அல்லாஹ் நாடினால் நாளை நாம் "பனூ கினானா" பள்ளத்தாக்கில் (அல்முஹஸ்ஸபில்) தங்குவோம். அந்த இடத்தில்தான் குறைஷியர் "நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்" என்று சூளுரைத்தனர்" என்று கூறினார்கள். அத்தியாயம் :

379

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜில்) மினாவில் இருந்தபோது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாளை நாம் பனூ கினானா -அதாவது அல்முஹஸ்ஸப்- பள்ளத்தாக்கில் தங்குவோம். அந்த இடத்தில்தான் குறைஷியர் "நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்" என்று சூளுரைத்தனர். அதன் விவரம் வருமாறு: குறைஷியரும் பனூ கினானா குலத்தாரும் பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குலத்தாருக்கெதிராக (அவர்களைச் சமூக பகிஷ்காரம் செய்வதாக) உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒப்படைக்காதவரை அவ்விரு குலத்தாருடன் திருமண உறவோ வணிகரீதியான கொடுக்கல் வாங்கலோ வைத்துக்கொள்ளக் கூடாது என்று தீர்மானம் செய்தனர். அத்தியாயம் :

380

381

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

382

383

பக்ர் பின் அப்தில்லாஹ் அல்முஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இறையில்லம் கஅபா அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, "உங்கள் தந்தையின் சகோதரர் மக்கள், (ஹாஜிகளுக்கு) தேனும் பாலும் விநியோகிக்கின்றனர். நீங்களோ (உலர்ந்த திராட்சைப்) பழரசம் விநியோகிப்பதை நான் காண்கிறேனே, ஏன்? உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விட்டதா, அல்லது கருமித்தனம் செய்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. எங்களுக்கு எந்த வறுமையும் ஏற்பட்டுவிடவில்லை; கருமித்தனமும் செய்ய வில்லை. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) உசாமா (ரலி) அவர்கள் இருக்க, எங்களிடம் வந்து தண்ணீர் கேட்டார்கள். அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் நாங்கள் பழரசம் கொண்டுவந்(து கொடுத்)தோம். அவர்கள் அதைப் பருகிவிட்டு மீதியை உசாமா (ரலி) அவர்களுக்குப் பருகக் கொடுத்தார்கள். பிறகு, "நன்றே செய்தீர்கள்! நன்றே செய்தீர்கள்! இவ்வாறே செய்துவாருங்கள்!" என்று (எங்களைப் பாராட்டிக்) கூறினார்கள். எனவே,நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (உத்தரவுப்படியே செய்து வருகிறோம். அந்த) உத்தரவிற்கு மாற்றம் செய்ய நாங்கள் விரும்பவில்லை" என்று சொன்னார்கள். அத்தியாயம் :

384

385

386

387

388

389

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

390

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பலிப்பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்திலும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்துகொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

391

392

அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுச் சேர்த்தோம்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், "இஹ்ராமிற்குப் பிறகு வாங்கப்பட்ட பலிப்பிராணியில் ("அல்ஜஸூர்") கூட்டுச் சேர்ந்துகொள்வதைப் போன்று இஹ்ராமின் போது வாங்கப்பட்ட பலிப்பிராணியில் ("அல்பதனத்") கூட்டுச் சேர்ந்து கொள்ளலாமா?" என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "அதுவும் பலிப்பிராணிகளில் உள்ளதே!" என்று கூறினார்கள். ஜாபிர் (ரலி) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கையில் பங்கேற்றார்கள். அவர்கள், "நாங்கள் அன்றைய தினத்தில் எழுபது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டோம். ஓர் ஒட்டகத்தில் தலா ஏழு பேர் கூட்டுச் சேர்ந்துகொண்டோம்" என்று கூறினார்கள். அத்தியாயம் :

393

அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஹஜ் பற்றிக் கூறுகையில், "நபி (ஸல்) அவர்கள், நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது பலிப் பிராணியை அறுத்துப் பலியிடுமாறும், பலிப்பிராணியில் ஒரு குழுவினர் கூட்டுச் சேர்ந்துகொள்ளுமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஹஜ்ஜின் இஹ்ராமைக் களைந்துகொள்ளுமாறு மக்களுக்கு உத்தரவிட்டபோதே இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :

394

395

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் ஆயிஷா (ரலி) அவர்கள் சார்பாக ஒரு மாட்டை அறுத்துப் பலியிட்டார்கள். அத்தியாயம் :

396

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) தம் துணைவியர் சார்பாக அறுத்துப் பலியிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தமது ஹஜ்ஜின் போது ஆயிஷா (ரலி) அவர்கள் சார்பாக ஒரு மாட்டை (அறுத்துப் பலியிட்டார்கள்)" என்று இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :

397

398

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப்பிராணிகளுக்கான அடையாள மாலைகளைத் திரித்(துத் தயாரித்)ததுண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றைத் தம் பலிப்பிராணிகளின் கழுத்தில் தொங்கவிட்டு, (ஹரமிற்கு) அனுப்பி வைப்பார்கள். பிறகு "இஹ்ராம்" கட்டியவர் தவிர்த்துக் கொள்ளும் எதையும் தவிர்த்துக் கொள்ளாதவர்களாக (எங்களிடையே) அவர்கள் தங்கியிருப்பார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

399

400

401

402

403

404

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி) அவர்கள்) கூறியதாவது: நான் அந்தப் பலிப் பிராணிகளின் அடையாள மாலைகளை, எங்களிடமிருந்த கம்பளியால் திரித்(துத் தயாரித்)தேன். (பலிப் பிராணிகளை அனுப்பிய பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் நிலையேதும் இல்லாமல் எங்களிடையே (சாதாரணமாகவே) இருந்தார்கள். "இஹ்ராம் கட்டாதவர் தம் துணைவியிடம் மேற்கொள்ளும்" அல்லது "ஆடவர் தம் துணைவியிடம் மேற்கொள்ளும்" அனைத்தையும் மேற்கொண்டார்கள். அத்தியாயம் :

405

406

407

408

409

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பலிப்பிராணியின் கழுத்தில் தொங்கவிடப்படும் அடையாள மாலையை நான் திரிப்பதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

410

411

412

413

414

415

416

417

418

419

அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் "பயண வாகனம் கிடைக்கும்வரை அதில் முறையோடு ஏறிச் செல்க" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். இதை மஅகில் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

420

மூசா பின் சலமா அல்ஹுதலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் சினான் பின் சலமா (ரஹ்) அவர்களும் உம்ராவிற்குச் சென்றோம். சினான் தம்முடன் ஒரு பலி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து)வந்தார். அந்த ஒட்டகம் வழியில் களைத்துப்போய் நின்றுவிட்டது. இது (இப்படியே) செல்ல இயலாமல் நின்றுவிட்டால், இதை எப்படி நான் கொண்டுசெல்வேன் என்று தெரியாமல் அவர் விழித்தார். மேலும், அவர் "நான் ஊர் சென்றதும் இதுதொடர்பாக விரிவாகக் கேட்டறிவேன்" என்று சொல்லிக்கொண்டார். இதற்கிடையில் முற்பகல் நேரம் ஆகிவிட்டது. நாங்கள் "அல்பத்ஹா" எனும் இடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது சினான் (ரஹ்) அவர்கள், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் இதைப்பற்றி நாம் பேசுவோம்" என்று கூறினார்கள். அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) தமது பலி ஒட்டகத்தின் நிலை பற்றிக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: விவரம் தெரிந்தவரிடம்தான் வந்துசேர்ந்திருக்கிறீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதினாறு பலி ஒட்டகங்களுடன் ஒரு மனிதரை (மக்காவிற்கு) அனுப்பி வைத்தார்கள். அவற்றைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தார்கள். அவர் (சிறிது தூரம்) சென்று விட்டுத் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! பலி ஒட்டகங்களில் ஒன்று களைத்துப் போய் (பயணத்தைத் தொடர முடியாமல்) நின்றுவிட்டால், அதை நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்த இடத்திலேயே) அதை அறுத்துவிடுக; அதன் (கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள) செருப்புகளில் அதன் இரத்தத்தைத் தோய்த்து அதை அதன் விலாப்பகுதியில் பதித்துவிடுக. நீயோ உன் பயணக் குழுவினரில் எவருமோ அதை உண்ண வேண்டாம்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதினெட்டு பலி ஒட்டகங்களுடன் ஒரு மனிதரை அனுப்பிவைத்தார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேற்கண்ட ஹதீஸின் ஆரம்பத்திலுள்ள குறிப்புகள் அவற்றில் இடம்பெறவில்லை. அத்தியாயம் :

421

422

துஐப் அபூகபீஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலி ஒட்டகங்களுடன் என்னை (மக்காவிற்கு) அனுப்பி வைத்தார்கள். அப்போது, "இவற்றில் ஏதேனும் ஒன்று பாதிப்புக்குள்ளாகி இறந்துவிடுமோ என நீர் அஞ்சினால், உடனே அதை அறுத்துவிடுவீராக! பிறகு அதன் (கழுத்தில் கிடக்கும்) செருப்பில் அதன் இரத்தத்தை நனைத்து, அதன் விலாப் புறத்தில் அ(ந்த அடையாளத்)தைப் பதித்துவிடுவீராக! நீரோ உன் பயணக் குழுவினரில் எவருமோ அதை உண்ணாதீர்" என்று கூறினார்கள். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

423

424

425

426

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

427

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

428

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

429

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

430

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

431

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

432

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

433

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

434

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா அல்ஹஜபீ (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவிற்குள் சென்றனர். உஸ்மான் தாழிட்டார். அவர்கள் (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். பின்னர் பிலால் (ரலி) அவர்கள் வெளியே வந்தபோது அவர்களிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உள்ளே) என்ன செய்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "இரண்டு தூண்களைத் தமக்கு இடப்பக்கமும் ஒரு தூணைத் தமக்கு வலப் பக்கமும் மூன்று தூண்களைத் தமக்குப் பின்புறமும் இருக்குமாறு (நின்று) தொழுதார்கள்" என்று விடையளித்தார்கள். அன்று இறையில்லம் கஅபாவில் ஆறு தூண்கள் இருந்தன. அத்தியாயம் :

435

436

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கா வெற்றி ஆண்டில் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களது ஒட்டகத்தின் மீது (பயணம் செய்து) வந்து, கஅபாவின் முற்றத்தில் தமது ஒட்டகத்தை மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களை அழைத்(துவரச் செய்)து, "என்னிடம் கஅபாவின் சாவியைக் கொண்டுவாருங்கள்" என்று கூறினார்கள். (சாவியைப் பெறுவதற்காக) உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் தம் அன்னையிடம் சென்றபோது, அவர் அதைத் தர மறுத்தார். அப்போது உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் சாவியை என்னிடம் தந்துவிடுங்கள்! இல்லாவிட்டால், என் முதுகந்தண்டிலிருந்து இந்த வாள் வெளியேறும்" என்று கூறினார்கள். பின்னர் அவர் அந்தச் சாவியை உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுக்க, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து அதைக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் கதவைத் திறந்தார்கள்... மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :

437

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவெற்றி நாளில்) இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அப்போது அவர்களுடன் உசாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர். அவர்கள் உள்ளே சென்று,தாழிட்டுக்கொண்டு நீண்ட நேரம் தங்கியிருந்தார்கள். பின்னர் கதவு திறக்கப்பெற்றபோது, நானே முதல் ஆளாக உள்ளே நுழைந்தேன். அப்போது வெளியே வந்துகொண்டிருந்த பிலால் (ரலி) அவர்களைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் எந்த இடத்தில் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "அவ்விரு முன் தூண்களுக்கிடையே" என்று பதிலுரைத்தார்கள். நான் பிலால் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?" என்று கேட்க மறந்துவிட்டேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

438

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் கஅபாவிற்குப் போய்ச்சேர்ந்தேன். அங்கு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உசாமா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைந்திருந்தார்கள். உள்ளே சென்றதும் உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் கஅபாவின் தலைவாயிலை மூடிவிட்டார்கள். பிறகு நீண்ட நேரம் அதனுள் இருந்தார்கள். பின்னர் கதவு திறக்கப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். நான் படியில் ஏறி கஅபாவிற்குள் நுழைந்தேன். (வெளியே வந்து கொண்டிருந்தவர்களிடம்), "நபி (ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இங்கு தான்" என (ஓர் இடத்தைக் காட்டி)க் கூறினார்கள். நான் அவர்களிடம் "நபி (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள்?" என்று கேட்க மறந்துவிட்டேன். அத்தியாயம் :

439

440

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைவதை நான் கண்டேன். அப்போது அந்த நால்வருடன் வேறெவரும் கஅபாவிற்குள் நுழையவில்லை. பின்னர் தாழிடப்பட்டுவிட்டது. என்னிடம் "பிலால் (ரலி) அவர்கள்" அல்லது "உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள்", "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நடுவில் வலப்பக்கமிருக்கும் இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்" எனக் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :

441

இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நீங்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்படியே உத்தரவிடப்பட்டுள்ளீர்கள்; கஅபாவினுள் நுழையுமாறு உங்களுக்கு உத்தரவிடப்படவில்லை" என்று கூறியதைத் தாங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், கஅபாவிற்குள் நுழைய வேண்டாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தடை விதிக்கவில்லை. ஆயினும், அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வருமாறு கூறியதைச் செவியுற்றேன்: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்துப் பகுதிகளிலும் பிரார்த்தித்துவிட்டு, உள்ளே தொழாமலேயே வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவின் (வாசல்) முன் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் "இதுவே உங்கள் தொழும் திசை (கிப்லா) ஆகும்" என்றும் கூறினார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அதன் பகுதிகள் என்பது என்ன? அதன் ஒவ்வொரு மூலையையுமா குறிப்பிடுகிறீர்கள்?"என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை; இறையில்லத்தின் ஒவ்வொரு திசையிலும் (பிரார்த்தித்தார்கள்)" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

442

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்தார்கள். அதனுள் ஆறு தூண்கள் இருந்தன. ஒவ்வொரு தூணுக்கு அருகிலும் நின்று அவர்கள் பிரார்த்தித்தார்கள். ஆனால், தொழவில்லை. அத்தியாயம் :

443

444

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆயிஷா!) உன்னுடைய (குறைஷி) சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருங்கிய காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவை இடித்துவிட்டு இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் இந்த ஆலயத்தை (புதுப்பித்து)க் கட்டியபோது, அ(தன் அடித்தளத்)தைவிடச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்டனர். மேலும்,அதற்கு ஒரு பின்புற வாசலையும் நான் அமைத்திருப்பேன்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

445

446

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய சமுதாயத்தார் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டியபோது, இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்தை (விடச் சற்று)க் குறைத்துவிட்டார்கள் என்பதை நீ அறிவாயா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்திற்கு அதை நீங்கள் மாற்றிவிடலாமல்லவா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், அவ்வாறே நான் செய்திருப்பேன்" என்றார்கள். (இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) (நான் இந்த ஹதீஸை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (அவர்களிடம் தெரிவித்தபோது) அவர்கள், "ஆயிஷா (ரலி) அவர்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டிருந்தால் அது சரியே! (இறையில்லம் கஅபாவின்) "ஹிஜ்ர்" பகுதியை அடுத்துள்ள இரு (ஷாமிய) மூலைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முத்தமிடாததற்குக் காரணம், இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீது இறையில்லம் முழுமையாக்கப்படாமல் இருந்ததே ஆகும் என்று நான் கருதுகிறேன்"என்றார்கள். அத்தியாயம் :

447

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் சமுதாயத்தார் "அறியாமைக் காலத்திற்கு" அல்லது "இறைமறுப்பிற்கு"நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவின் கருவூலங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டிருப்பேன். மேலும், "ஹிஜ்ர்" எனும் அரைவட்டப் பகுதியை கஅபாவுடன் இணைத்து,கஅபாவின் தலை வாயிலை (கீழிறக்கி)ப் பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

448

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆயிஷா! உன் சமுதாயத்தார் இணைவைப்புக்கு நெருக்கமான காலத்தவர்கள் என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவை நான் இடித்துவிட்டு, (உயர்ந்திருக்கும் அதன் தளத்தைத்) தரையோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன். மேலும், கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக அதற்கு இரு வாயில்களை அமைத்திருப்பேன். "ஹிஜ்ர்"பகுதியில் ஆறு முழங்களைக் கூடுதலாக்கியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டியபோது அதைக் குறைத்து (சற்று உள்ளடக்கிக் கட்டி)விட்டனர்" என்றார்கள். அத்தியாயம் :

449

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யஸீத் பின் முஆவியா ஆட்சிக்காலத்தில் ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்தபோது, இறையில்லம் கஅபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்றுகூடும் வரை இறையில்லத்தை அதே நிலையிலேயே விட்டு வைத்தார்கள்.(பனூ உமய்யாக்களான) ஷாம்வாசிகளுக்கு எதிராக "மக்களுக்கு எழுச்சியூட்டுவதற்காகவே"அல்லது "அவர்களை ரோஷம்கொள்ளச் செய்வதற்காகவே" அவ்வாறு விட்டுவைத்தார்கள். (ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்டபோது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "மக்களே! கஅபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா, அல்லது அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?" என்று கேட்டார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதிருந்த அதே நிலையில் கஅபாவை விட்டுவிடுங்கள்; மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதும், நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பெற்றபோதும் இருந்த நிலையில் அதன் கற்களையும் (விட்டுவிடுங்கள்)" என்றார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர் கள்)? நான் (கஅபாவை இடித்துப் புதுப்பிப்பதா, அல்லது பழுதடைந்ததைச் செப்பனிடுவதா எனும் விஷயத்தில்) என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வருவேன்" என்றார்கள். நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்தித்தபோது, இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்கள். அப்போது மக்கள் முதலில் கஅபாவின் மீது ஏறும் மனிதர்மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கி விடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒரு மனிதர் கஅபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லை கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள், ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கட்டடப் பணி நிறைவடையும்வரை (இறையில்லத்திற்குத் தாற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின்மீது திரையும் தொங்கவிட்டார்கள். மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் "என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(உன்னுடைய சமுதாய) மக்கள் இறை மறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின் - என்னிடம் கஅபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக்கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்பது (ஒருபுறம்) இருக்க - நான் "ஹிஜ்ர்" பகுதியில் ஐந்து முழங்களை கஅபாவுடன் சேர்த்துவிட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இன்று என்னிடம் பொருளாதாரமிருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லை" என்று கூறி(விட்டு, கஅபாவைப் புதுப்பிக்கலா)னார்கள். பின்னர் கஅபாவில் "ஹிஜ்ர்" பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள்; மக்கள் பார்த்துக்கொண்டிருக்கவே (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே கஅபாவை எழுப்பினார்கள். (முடிவில்) கஅபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகமாக்கிய பின்பும் அது குறைவாகவே பட்டது. எனவே, மேலும் பத்து முழங்களை அதிகமாக்கினார்கள்; அத்துடன் உள்ளே நுழைவதற்கு ஒரு வாயில்; வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித்தளத்தின் மீது கஅபாவை எழுப்பியுள்ளார்; அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்" என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், "நாம் இப்னுஸ் ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை, எனவே, அவர் உயர்த்திக்கட்டியதை அப்படியே விட்டுவிடுவீராக! "ஹிஜ்ர்"பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்துவிட்ட வாயிலை மூடிவிடுவீராக!" என்று பதில் எழுதினார். எனவே, ஹஜ்ஜாஜ் ("ஹிஜ்ர்" பகுதிச் சுவரை) இடித்து முன்பிருந்த அமைப்பிற்கே மாற்றி அமைத்தார். அத்தியாயம் :

450

451

452

அபூகஸஆ சுவைத் பின் ஹுஜைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல் மலிக் பின் மர்வான் இறையில்லம் கஅபாவைச் சுற்றி(தவாஃப்)வந்து கொண்டிருந்த போது, "அல்லாஹ் இப்னுஸ் ஸுபைரை அழிக்கட்டும்! அவர் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி) அவர்கள்மீது) பொய்யுரைக்கிறார். ஆயிஷா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ஆயிஷா! உன் சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், நான் இறையில்லம் கஅபாவை இடித்துவிட்டு "ஹிஜ்ர்" பகுதியை அதனுடன் அதிகமாக்கியிருப்பேன். ஏனெனில், உன் சமுதாயத்தார் அதன் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர் என்று கூறினார்கள்" என ஆயிஷா (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக அவர் கூறுகிறார்" என்றார். அப்போது ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள், "இவ்வாறு கூறாதீர்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஏனெனில், இறைநம்பிக்கையாளர்களின் அன்னை இப்படிக் கூறியதை நானும் கேட்டுள்ளேன்" என்றார்கள். அப்துல் மலிக் பின் மர்வான், "கஅபாவை இடி(த்துப் புதுப்பி)ப்பதற்கு முன்பே இதை நான் கேட்டிருந்தால், நிச்சயமாக இப்னுஸ் ஸுபைர் கட்டிய அமைப்பிலேயே கஅபாவை நான் விட்டிருப்பேன்" என்றார். அத்தியாயம் :

453

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (புனித கஅபாவை ஒட்டியுள்ள ஹிஜ்ர் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, "இதுவும் கஅபாவில் சேர்ந்ததா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம்" என்று விடையளித்தார்கள். நான், "அப்படியானால்,கஅபாவுடன் இதை அவர்கள் ஏன் இணைக்கவில்லை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உன் (குறைஷி) சமூகத்தாருக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது" என்று பதிலளித்தார்கள். நான், "கஅபாவின் வாயிலை உயரமாக வைத்திருப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தாம் நாடியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தாம் நாடியவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுப்பதற்காகவுமே உன் சமுதாயத்தார் இவ்வாறு செய்தனர். உன் சமூகத்தார் அறியாமைக் காலத்துக்கு நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பதால், அவர்களின் மனத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கு இல்லாதிருந்தால், நான் இந்த வளைந்த சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியுடன் சேர்ந்தாற்போல் ஆக்க முடிவு செய்திருப்பேன்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :

454

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ர் (எனும் வளைந்த சுவரைப்) பற்றிக் கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் அதில், "ஏணி வைக்காமல் ஏற முடியாத அளவிற்குக் கஅபாவின் தலைவாயில் உயரமாக இருக்கக் காரணம் என்ன என்று கேட்டேன்" என்றும் இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :

455

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தபோது, "கஸ்அம்" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்க வந்தார். ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார்; அப்பெண்ணும் ஃபள்லைப் பார்த்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபள்லின் முகத்தை வேறு பக்கம் திருப்பி விடலானார்கள். அப்பெண், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்களுக்கு விதியாக்கிய ஹஜ் கடமை, முதியவரான என் தந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அவரால் வாகனத்தில் அமர்ந்து செல்ல இயலாது. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள். இது "விடைபெறும்" ஹஜ்ஜின் போது நடைபெற்றது. அத்தியாயம் :

456

ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "கஸ்அம்" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார். இந்நிலையில், அவருக்கு அல்லாஹ் விதியாக்கிய ஹஜ் கடமை ஏற்பட்டுள்ளது. அவரால் தமது ஒட்டகத்தின் முதுகில் அமர இயலாது" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் சார்பாக நீ ஹஜ் செய்யலாம்" என்றார்கள். அத்தியாயம் :

457

458

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை) குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி (தம்) குழந்தையை உயர்த்திக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என விடையளித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

459

460

461

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்" என்றார்கள். அப்போது ஒரு மனிதர், "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் "ஆம்" என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்" என்று கூறிவிட்டு, "நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள்!" என்றார்கள். அத்தியாயம் :

462

463

464

465

466

467

மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.

468

469

470

471

472

473

474

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு பெண், அவளுடைய தந்தை, அல்லது மகன், அல்லது கணவன்,அல்லது சகோதரன், அல்லது (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களோ, அதற்கு மேலாகவோ பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

475

476

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்கவேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும்போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்னின்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "நீர் சென்று உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர" எனும் (ஆரம்பக்) குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :

477

478

479

அலீ பின் அப்தில்லாஹ் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (பின்வரும் பிரார்த்தனையை)க் கற்றுத் தந்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட்டால், தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் மூன்று முறை தக்பீர் ("அல்லாஹு அக்பர்") கூறுவார்கள். பிறகு "சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமலி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஅதஹ். அல்லா ஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலி வல்அஹ்ல்" என்று கூறுவார்கள். (பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலையில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல்களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா,இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சியிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.) திரும்பி வரும்போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள். ஆனால், அவற்றுடன் பின்வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கள்: "ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்" (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்). அத்தியாயம் :

480

481

482

483

484

485

486

487

488

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது, "துல்ஹுலைஃபா"வில் "அல்பத்ஹா" பள்ளத்தாக்கில் தமது ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்குதான் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்வார்கள். அத்தியாயம் :

489

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "துல்ஹுலைஃபா"வில் இரவின் இறுதி நேரத்தில் ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக் கொண்டு) இருந்தபோது "வளமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கிறீர்கள்" என (கனவில்) கூறப்பட்டது. அத்தியாயம் :

490

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "துல்ஹுலைஃபா"வில் (அல்அகீக்) பள்ளத்தாக்கின் நடுவில் இரவின் இறுதி நேரத்தில் ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக்கொண்டு) இருந்தபோது, "வளமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கிறீர்கள்" என (கனவில்) கூறப்பட்டது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓய்வெடுக்கும் இடத்தைத் தேடியவராக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்தை மண்டியிடவைத்து, ஓய்வெடுக்கும் பள்ளிவாசலுக்கருகில் உள்ள இடத்தில், சாலிம் (ரஹ்) அவர்களும் எங்கள் ஒட்டகங்களை மண்டியிடவைத்தார்கள். அந்த இடம் பள்ளத்தாக்கின் நடுவில் உள்ள பள்ளி வாசலுக்குக் கீழே இருந்தது. பள்ளிவாசலுக்கும் கிப்லாவுக்குமிடையே நடுவில் (நபி (ஸல்) அவர்கள் ஓய்வெடுத்த) அந்த இடம் இருந்தது. அத்தியாயம் :

491

492

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். "இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?" என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

493

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் உம்ராச் செய்வது, மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச்செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குச் சொர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

494

495

496

497

498

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மக்காவில் தங்கள் (பெரிய தந்தையின்) வீட்டில் தங்குவீர்களா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(என் பெரிய தந்தையின் புதல்வர்) அகீல், குடியிருப்புகள் அல்லது வீடுகளில் எதையேனும் நமக்காக விட்டுவைத்துள்ளாரா, என்ன?" என்று கேட்டார்கள். (நபியவர்களின் பெரிய தந்தையான) அபூதாலிபின் சொத்துக்களுக்கு அகீலும் தாலிபும் வாரிசானார்கள். (அபூதாலிபின் மற்ற இரு புதல்வர்களான) ஜஅஃபர் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்களில்) எதற்கும் வாரிசாக (முடிய)வில்லை. (அப்போது) அகீலும் தாலிபும் இறைமறுப்பாளர்களாக இருந்தனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

499

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜின் போது, நாங்கள் மக்காவை நெருங்கிய வேளையில் நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் நாளை எங்கு தங்குவீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(அபூதாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டு வைத்துள்ளாரா?" என்று கேட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் தாங்கள் எங்கு தங்குவீர்கள்?"என்று கேட்டேன். -இது மக்கா வெற்றியின்போது நடந்ததாகும்.- அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுவைத்துள்ளாரா?" என்று கேட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

500

501

502

503

504

505

506

507

508

509

510

511

512

513

ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டாமல் தலையில் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்காவிற்குள் நுழைந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மக்கா வெற்றி நாளில் நுழைந்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது. - ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தலையில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து கொண்டு (மக்காவினுள்) நுழைந்தார்கள். அத்தியாயம் :

514

515

அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டிய நிலையில் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

516

அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்களுக்குமிடையே தொங்கவிட்டவர்களாகச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சொற்பொழிவு மேடை மீதிருந்ததை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :

517

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்து, மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறி வித்ததைப் போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக அறிவிக்கிறேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவின் (அளவைகளான) "ஸாஉ"மற்றும் "முத்"து ஆகியவற்றில் இரு மடங்கு (வளம் ஏற்படப்) பிரார்த்திக்கிறேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

518

மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே "இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று இரு மடங்கு (வளம் வேண்டி) நான் பிரார்த்திக்கிறேன்" என்று இடம்பெற்றுள்ளது. - சுலைமான் பின் பிலால் (ரஹ்) மற்றும் அப்துல் அஸீஸ் பின் அல்முக்தார் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்ததைப் போன்றே" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

519

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான், இதன் (அதாவது மதீனாவின்) இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன். இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

520

நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மர்வான் பின் அல்ஹகம் மக்களிடையே உரையாற்றியபோது மக்காவைப் பற்றியும், மக்காவாசிகள் மற்றும் மக்காவின் புனிதம் பற்றியும் குறிப்பிட்டார். மதீனாவைப் பற்றியோ மதீனாவாசிகள் மற்றும் மதீனாவின் புனிதம் பற்றியோ குறிப்பிடவில்லை. அப்போது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் மர்வானை அழைத்து, "நீர் மக்காவைப் பற்றியும் மக்காவாசிகள் மற்றும் மக்காவின் புனிதம் பற்றியும் கூறினீர். மதீனாவைப் பற்றியோ மதீனாவாசிகளைப் பற்றியோ மதீனாவின் சிறப்பு பற்றியோ கூறவில்லையே ஏன்? மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புனிதமானதாக அறிவித்துள்ளார்கள். இந்த விஷயம் எங்களிடமுள்ள ஒரு "கவ்லானீ" (குலத்தாரின் மெல்லிய) தோல் ஏட்டில் பதியப்பெற்றுள்ளது. நீர் விரும்பினால் அதை உமக்கு நான் வாசித்துக்காட்டுவேன்" என்று கூறினார்கள். மர்வான் (சிறிது நேரம்) அமைதியாக இருந்தார். பிறகு, "அதில் சிலவற்றை நானும் செவியுற்றுள்ளேன்" என்றார். அத்தியாயம் :

521

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன். அதன் முள்மரங்கள் வெட்டப்படக் கூடாது; அதன் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படக் கூடாது. இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

522

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியின் மரங்களை வெட்டுவது, அதன் வேட்டைப் பிராணிகளைக் கொல்வது ஆகியவற்றுக்கு நான் தடை விதிக்கிறேன். மக்கள் அறிந்துகொள்பவர்களாயிருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும். எவரும் அதை வெறுத்து அதை விட்டுச் சென்றால், அவரை விடச் சிறந்தவரை அதில் அல்லாஹ் குடியமர்த்தாமல் இருப்பதில்லை. அங்கு ஏற்படும் பசி பட்டினியையும் கடினமான வாழ்க்கையையும் சகித்துக்கொண்டு அங்கு நிலைத்திருப்பவருக்கு மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக அல்லது சாட்சியம் அளிப்பவனாக இருப்பேன். இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

523

மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "மதீனாவாசிகளுக்குத் தீங்கிழைக்க எவரேனும் விரும்பினால் "நெருப்பில் ஈயம் கரைவதைப் போன்று" அல்லது "தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று" அவரை அல்லாஹ் கரைத்துவிடுவான்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

524

ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (மதீனாவிற்கு அருகில்) "அகீக்" எனுமிடத்திலிருந்த தமது பெரிய வீட்டிற்கு வாகனத்தில் புறப்பட்டார்கள். (வழியில்) அடிமையொருவர் "ஒரு மரத்தை வெட்டிக்கொண்டிருப்பதை" அல்லது "இலைகளைப் பறித்துக்கொண்டிருப்பதை"க் கண்டார்கள். உடனே (அவரைப் பிடித்து) அவரது மேலாடையைக் கழற்றிக்கொண்டார்கள். சஅத் (ரலி) அவர்கள் திரும்பிவந்தபோது அவர்களிடம் அந்த அடிமையின் வீட்டார் வந்து தங்கள் அடிமையிடமிருந்து கைப்பற்றியதை "அந்த அடிமையிடம்" அல்லது "தங்களிடம்" திரும்பித் தருமாறு கேட்டார்கள். அப்போது சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வெகுமதியாக வழங்கிய எதையும் திருப்பித் தருவதிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்" எனக் கூறி, அவர்களிடம் அதைத் தர மறுத்துவிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

525

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், "உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை செய்வதற்காகத் தேடி (அழைத்து)வாருங்கள். (நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்)" என்று கூறினார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னை வாகனத்தில் தமக்குப் பின்னால் அமரவைத்துக்கொண்டு (கைபரை நோக்கிப்) புறப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழியில்) தங்கும்போதெல்லாம் அவர்களுக்கு நான் பணிவிடைகள் செய்து வந்தேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா நோக்கி) வந்துகொண்டிருந்தபோது, "உஹுத் மலை" அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்த மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்"என்று சொன்னார்கள். பிறகு பார்வையில் மதீனா பட்டபோது, "இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று, இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியைப் புனித (நகர)மாக நான் அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் (அளவைகளான) "முத்"து மற்றும் "ஸாஉ" ஆகியவற்றில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அவற்றில் ("இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை" என்பதற்குப் பதிலாக) "இந்த இரு கருங்கல் மலைகளுக்கிடையே உள்ள பகுதியை" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

526

527

528

ஆஸிம் பின் சுலைமான் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் புனித (நகர)மாக அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அது புனித (நகர)மாகும். அதன் மரங்கள் வெட்டப்படக் கூடாது. யார் அவ்வாறு செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்" என்று கூறினார்கள். அத்தியாயம் :

529

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக! (குறிப்பாக) அவர்களது (அளவைகளான) "ஸாஉ" மற்றும் "முத்"து ஆகியவற்றில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :

530

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய வளத்தைப் போன்று இரு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

531

யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தமது வாளின் உறையில் ஏடு ஒன்றைத் தொங்கவிட்டவர்களாக எங்களிடையே உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்) "நம்மிடம் அல்லாஹ்வின் வேதத்தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற) இந்த ஏட்டையும் தவிர நாம் ஓதுகின்ற நூலேதும் உள்ளதெனக் கூறுகின்றவர் பொய்யுரைத்து விட்டார்" என்று கூறி (விட்டு, அதை விரித்துக் காட்டலா)னார்கள். அதில், (உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது விவரங்களும் காயங்களுக்கான தண்டனை குறித்தும் எழுதப்பெற்றிருந்தன. மேலும், அதில் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் எழுதப்பட்டிருந்தது: மதீனா நகரமானது, (அங்குள்ள) "அய்ர்" மலையிலிருந்து "ஸவ்ர்" (எனும் சிறிய) மலைவரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துகின்றானோ, அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாட்டையும் கூடுதலான வழிபாட்டையும் மறுமை நாளில் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான். முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்.) அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். தன் தந்தை அல்லாத ஒருவரைத் தன் தந்தை என வாதிடுபவனுக்கு, அல்லது தன்னை விடுதலை செய்த உரிமையாளர் அல்லாத ஒருவரைத் தன் உரிமையாளர் எனக் கூறுபவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் கூடுதலான வழிபாடு எதையுமே மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) மற்றும் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம்" என்பதோடு ஹதீஸ் முடிகிறது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம் பெறவில்லை. இவ்விருவரின் அறிவிப்பில் "அந்த ஏடு அலீ (ரலி) அவர்களது வாளில் தொங்கவிடப்பட்டிருந்தது" எனும் குறிப்பும் காணப்படவில்லை. அத்தியாயம் :

532

மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் மேற்கண்ட அறிவிப்பில் உள்ள விவரங்களுடன், "ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கிறானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் கூடுதலான வழிபாடு எதுவுமே ஏற்கப்படாது" என்பதும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. இவற்றில் "தன் தந்தை அல்லாத ஒருவரை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மறுமை நாளில்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "தன்னை விடுதலை செய்த உரிமையாளர் அல்லாதவரைத் தன் காப்பாளராக ஆக்கிக்கொள்பவருக்கு..." எனும் சொற்றொடரும், சாபம் பற்றிய குறிப்பும் இடம்பெறவில்லை. அத்தியாயம் :

533

534

535

மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "மறுமை நாளில்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை. மேலும், "முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்.) அவர்களில் சாமானிய மக்கள்கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கிறானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கூடுதலான வழிபாடு மற்றும் கடமையான வழிபாடு எதையுமே மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்" என்பதும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

536

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் மான்கள் மேய்ந்துகொண்டிருப்பதை நான் கண்டால் அவற்றை (விரட்டவோ பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்கமாட்டேன். (ஏனெனில்) "மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி புனிதமானதாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :

537

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவித்தார்கள். ஆகவே, நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மான்களைக் கண்டால்,அவற்றைப் பீதிக்குள்ளாக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைச் சுற்றி பன்னிரண்டு மைல் தொலைதூரத்தைப் பாதுகாக்கப்பட்ட (புனித) எல்லையாக அறிவித்தார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

538

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் (பேரீச்சங்கன்றுகளை நட்டு அதில்) முதலாவதாகப் பழுக்கும் கனியைக் காணும்போது, அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு, "இறைவா! எங்கள் கனிகளில் எங்களுக்கு வளம் அருள்வாயாக! எங்கள் நகரத்தில் வளம் கொழிக்கச் செய்வாயாக! எங்கள் (அளவைகளான) "ஸாஉ" மற்றும் "முத்"து ஆகியவற்றில் வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் அடியாரும் உன் உற்ற நண்பரும் உன் தூதரும் ஆவார்கள். நான் உன் அடிமையும் தூதரும் ஆவேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா நகருக்காக உன்னிடம் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவிற்காக உன்னிடம் பிரார்த்திக்கிறேன். அவர்கள் மக்காவிற்காகப் பிரார்த்தித்த அளவிற்கு,அல்லது அதனுடன் மற்றொரு மடங்கும் (வளம் வேண்டி) நான் பிரார்த்திக்கிறேன்" என்பார்கள். பிறகு அ(ங்கு கனியைக் கொண்டு வந்த)வரின் சிறு குழந்தையை அழைத்து அதனிடம் அந்தக் கனியைக் கொடுப்பார்கள். அத்தியாயம் :

539

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதலாவதாகப் பழுக்கும் கனி கொண்டுவரப் பட்டால், "இறைவா! எங்கள் நகரத்தில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! எங்கள் கனிகளிலும் எங்கள் (அளவைகளான) "முத்"து மற்றும் "ஸாஉ" ஆகியவற்றிலும் (தற்போதுள்ள) வளத்துடன் மற்றொரு மடங்கு வளத்தை வழங்குவாயாக" என்று பிரார்த்தித்துவிட்டு, அங்கு வந்திருக்கும் குழந்தைகளில் மிகச் சிறிய குழந்தைக்கு அந்தக் கனியைக் கொடுப்பார்கள். அத்தியாயம் :

540

மஹ்ரீயின் முன்னாள் அடிமையான அபூசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) மதீனாவில் மக்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டன. அப்போது நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று "நான் குழந்தை குட்டிகள் அதிகம் உடையவன்; எங்களுக்குக் கடுமை(யான நெருக்கடி) ஏற்பட்டுள்ளது. எனவே, நான் என் குடும்பத்தாருடன் (மதீனாவைவிட்டு) ஏதேனும் ஒரு செழிப்பான ஊருக்கு இடம்பெயர விரும்புகிறேன்" என்று கூறினேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதே! மதீனாவையே (உங்கள் இருப்பிடமாக) வைத்துக்கொள்! ஏனெனில், நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு "உஸ்ஃபான்" எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு பல இரவுகள் தங்கினோம். அப்போது மக்களில் சிலர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் எந்த (நிம்மதியான) நிலையிலும் இல்லை. நம் குடும்பத்தார் தனிமையில் உள்ளனர். அவர்களைக் குறித்து அச்சமற்ற நிலையில் நாம் இல்லை" என்று கூறினர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, "நீங்கள் சொன்னதாக எனக்கு எட்டியுள்ள இத்தகவல் என்ன? "நான் எவன்மீது சத்தியம் செய்வேனோ" அல்லது "என் உயிர் எவன் கையிலுள்ளதோ" அவன்மீது சத்தியமாக! "நீங்கள் விரும்பினால்" எனது ஒட்டகத்தில் சேணத்தைப் பூட்டுமாறு கட்டளையிட்டு, அதன் முடிச்சுகள் எதையும் அவிழ்க்காமல் (விரைந்து) நான் மதீனாவிற்குச் செல்ல வேண்டும்; அல்லது (அவ்வாறு செல்ல) "நான் எண்ணுகிறேன்" என்று கூறிவிட்டு, "இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக ஆக்கினார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக ஆக்கினேன். மதீனாவிற்குள் இரத்தம் சிந்தப்படக் கூடாது. அங்கு போருக்காக ஆயுதம் ஏந்தப்படக்கூடாது. அங்கு தீனிக்காகத் தவிர எந்தத் தாவரமும் வெட்டப்படக் கூடாது. இறைவா! எங்கள் நகரில் எங்களுக்கு வளம் சேர்ப்பாயாக! இறைவா! எங்கள் (பெரிய அளவையான) "ஸாஉ"வில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! எங்கள் (சிறிய அளவையான) "முத்"துவிலும் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! எங்கள் "ஸாஉ"விலும், எங்கள் "முத்"துவிலும், எங்கள் நகரத்திலும் எங்களுக்கு வளம் சேர்ப்பாயாக! இறைவா! இப்போதுள்ள வளத்துடன் இரு(மடங்கு) வளத்தை ஏற்படுத்துவாயாக!" (என்று பிரார்த்தித்தார்கள். பிறகு) "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! மதீனாவின் அனைத்து கணவாய்களிலும் சாலை முனைகளிலும் இரு வானவர்கள் இருந்து அதைக் காவல் புரிந்து கொண்டேயிருக்கின்றனர்; நீங்கள் மதீனா சென்றடையும் வரை (அவ்வாறு காவல் புரிந்து கொண்டிருக்கின்றனர்)" என்று கூறினார்கள். பிறகு மக்களிடம், "புறப்படுங்கள்" என்றார்கள். அவ்வாறே நாங்கள் மதீனா நோக்கிப் புறப்பட்டோம். "நாங்கள் எவன்மீது சத்தியம் செய்வோமோ" அல்லது "எவன்மீது சத்தியம் செய்யப்படுமோ" அவன்மீது ஆணையாக! (இங்கு அறிவிப்பாளர் ஹம்மாம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களே ஐயத்துடன் அறிவிக்கிறார்கள்.) நாங்கள் மதீனாவிற்குள் நுழைந்து எங்கள் ஒட்டகங்களிலிருந்து சேணங்களை நாங்கள் இறக்கி வைத்திருக்கவில்லை. அதற்குள் எங்கள்மீது அப்துல்லாஹ் பின் ஃகத்ஃபானின் மக்கள் தாக்குதல் தொடுத்தனர். அதற்கு முன் (தாக்குதல் தொடுக்க) எந்தத் தூண்டுகோலும் அவர்களுக்கு இருக்கவில்லை. அத்தியாயம் :

541

542

543

மஹ்ரீயின் முன்னாள் அடிமையான அபூசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் "அல்ஹர்ரா" (போர் நடந்த) நாட்களில் சென்று, நான் மதீனாவிலிருந்து இடம்பெயர்ந்து செல்வது தொடர்பாக ஆலோசனை கேட்டேன். மேலும், அவர்களிடம் (மதீனாவின்) விலைவாசி (உயர்ந்துள்ளது) பற்றியும், எனது பெரிய குடும்பம் பற்றியும் அவர்களிடம் முறையிட்டேன். மதீனாவின் நெருக்கடியையும் பசி பட்டினியையும் சகித்துக்கொண்டு என்னால் இருக்க முடியாது என்றும் தெரிவித்தேன். அப்போது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "உமக்குக் கேடுதான். அ(வ்வாறு மதீனாவைவிட்டுச் செல்வ)தற்கு உம்மை நான் அனுமதிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதீனாவின் இடர்பாடுகளைச் சகித்துக்கொண்டு இறந்துபோகும் எந்த மனிதருக்கும் மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக இருப்பேன்; அவர் முஸ்லிமாக இருந்தால்!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். அத்தியாயம் :

544

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன். இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதை அறிவிப்பவரான) அப்துர் ரஹ்மான் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு (என் தந்தை) அபூசயீத் (ரலி) அவர்கள் எவரது கையிலாவது (மதீனாவின்) பறவை இருக்கக் கண்டால், உடனே அவரது கரத்திலிருந்து அதை விடுவித்துப் பறக்க விட்டுவிடுவார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

545

546

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மதீனாவிற்கு (நாடு துறந்து) வந்த போது, மதீனாவில் பெருநோய் ஏற்பட்டிருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நோய்வாய்ப்பட்டனர். தம் தோழர்கள் நோய்வாய்ப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது, "இறைவா! நீ மக்காவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கியதைப் போன்று, அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! மேலும், இந்நகரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக! இதன் (அளவைகளான) "ஸாஉ"மற்றும் "முத்"து ஆகியவற்றில் எங்களுக்கு நீ வளத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை "ஜுஹ்ஃபா" எனுமிடத்திற்கு இடம்பெயரச் செய்வாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

547

548

549

ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான யுஹன்னஸ் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜின் ராணுவம் முற்றுகையிட்ட) குழப்பமான காலகட்டத்தில் நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் அவர்களுடைய அடிமைப் பெண்களில் ஒருவர் வந்து சலாம் சொல்லிவிட்டு, "அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! நெருக்கடியான ஒரு காலகட்டம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே,நான் (மதீனாவிலிருந்து) வெளியேற விரும்புகிறேன்" என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "பேதைப் பெண்ணே! உட்கார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் சகித்துக்கொள்ளும் எவருக்கும் மறுமைநாளில் நான் சான்றுரைப்பவனாக, அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். அத்தியாயம் :

550

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவின் இடர்பாடுகளைச் சகித்துக்கொண்டவருக்காக மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக இருப்பேன். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

551

552

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதன் (அதாவது மதீனாவின்) இடர்பாடுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் சகித்துக் கொண்டவருக்காக மறுமை நாளில் நான் சான்றுரைப்பவனாக, அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்.- இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

553

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் எவர் மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் சகித்துக் கொள்கிறாரோ அவருக்காக மறுமைநாளில் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக நான் இருப்பேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

554

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவின் நுழைவாயில்களில் வானவர்கள் இருப்பர். மதீனாவிற்குள் கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

555

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறுதி நாள் நெருங்கும்போது) மஸீஹுத் தஜ்ஜால் கிழக்குத் திசையிலிருந்து மதீனாவைக்குறிவைத்து வந்து, "உஹுத்"மலைக்குப் பின்னால் இறங்குவான். பின்னர் வானவர்கள் அவனது முகத்தை ஷாம் திசை (வடக்கு) நோக்கித் திருப்பிவிடுவார்கள். அங்குதான் அவன் மடிவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

556

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அன்று ஒருவர் தம் தந்தையின் சகோதரர் மகனையும் தம் உறவினரையும் "செழிப்பான இடத்திற்கு வா! செழிப்பான இடத்திற்கு வா!" என அழைப்பார். ஆனால், அவர்கள் (உண்மையை) அறிந்திருப்போராயின் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர்களில் எவரேனும் மதீனாவை வெறுத்து அதிலிருந்து வெளியேறினால், அவருக்குப் பதிலாக அவரைவிடச் சிறந்தவரை அங்கு அல்லாஹ் அமர்த்தாமல் இருப்பதில்லை. கவனியுங்கள்: மதீனா, (கொல்லனின்) உலையைப் போன்று அசுத்தங்களை அகற்றிவிடும். இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று, மதீனா தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றாமல் இறுதி நாள் நிகழாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

557

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எல்லா ஊர்களையும் தூக்கிச் சாப்பிடக்கூடிய, "யஸ்ரிப்" என மக்கள் கூறக்கூடிய ஓர் ஊருக்கு (நாடு துறந்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன். அதுதான் மதீனாவாகும். இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று மதீனா (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "உலை, துருவை நீக்கிவிடுவதைப் போன்று" என்று இடம்பெற்றுள்ளது."இரும்பு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :

558

559

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக) விசுவாசப் பிரமாணம் செய்தார். (பின்னர்) அந்தக் கிராமவாசிக்கு மதீனாவில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "முஹம்மதே! என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள். பின்னர் (மீண்டும்) வந்து, "என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்" என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். பிறகு (மீண்டும்) வந்து, "என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்" என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிடவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதீனா, (கொல்லனின்) உலை போன்றதே ஆகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும்; அதிலுள்ள நல்லவர்கள் தூய்மையாவார்கள்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :

560

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அது (அதாவது மதீனா) தூயது (தைபா) ஆகும். நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்குவதைப் போன்று மதீனா தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றும். இதை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

561

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்ந்தோன் அல்லாஹ்வே மதீனாவுக்கு "தாபா" (தூயது) எனப் பெயரிட்டான். இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

562

563

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவ்வூர் (அதாவது மதீனா)வாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ், கரைந்துபோகச் செய்துவிடுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("கேடு" என்பதைக் குறிக்க) "சூஉ" என்பதற்குப் பகரமாக "ஷர்ரு" (தீங்கு) எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

564

565

566

567

568

569

570

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் பற்றி (பின்வருமாறு) கூறினார்கள்: மதீனாவாசிகள், மதீனா சிறந்த நிலையில் இருக்கும்போதே, அதை வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் சரணாலயமாக விட்டுச் செல்வர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகிறேன்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களின் ஆசிரியரான) இந்த அபூஸஃப்வான் என்பாரின் பெயர் அப்துல்லாஹ் பின் அப்தில் மலிக் என்பதாகும். அநாதையாயிருந்த அவர், இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களின் பொறுப்பில் பத்து ஆண்டுகள் வளர்ந்தார். அத்தியாயம் :

571

572

573

574

575

576

577

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உஹுத்" மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுத் மலையைக் கூர்ந்து நோக்கி, "உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்" என்றார்கள். அத்தியாயம் :

578

579

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெரூசலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து) பயணம் மேற்கொள்ளப்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

580

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராம்" பள்ளிவாசலைத் தவிர! ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைத்தூதர்களில் இறுதியானவர் ஆவார்கள். அவர்கள் எழுப்பிய பள்ளிவாசல், (இறைத் தூதர் எழுப்பிய) பள்ளிவாசல்களில் இறுதியானதாகும். (இதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) மற்றும் அபூஅப்தில்லாஹ் அல்அஃகர்ரு (ரஹ்) ஆகியோர் கூறினர்: (பொதுவாக) அபூஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே (ஹதீஸ்களை) அறிவிப்பார்கள் என்பதில் நாங்கள் ஐயம் கொள்ளவில்லை. அதுவே இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து உறுதிப்படுத்திக்கொள்ள நாங்கள் தவறியதற்குக் காரணமாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் இறந்த பிறகு நாங்கள் இந்த ஹதீஸ் குறித்து விவாதித்தோம். அதைப் பற்றி நாம் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் பேசாமலிருந்தது குறித்து எங்களை நாங்களே நொந்து கொண்டோம். அதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றிருந்தால், அதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்திருப்பார்களே என்று கூறினோம். இந்நிலையில் எங்களிடம் அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். அவர்களிடம் நாங்கள் இந்த ஹதீஸையும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் கேட்கத் தவறிய அந்த விஷயத்தையும் தெரிவித்தோம். அப்போது அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் இறைத்தூதர்களில் இறுதியானவன் ஆவேன்; எனது பள்ளிவாசல் (இறைத்தூதர்கள் எழுப்பிய பள்ளிவாசல்களில்) இறுதிப் பள்ளிவாசல் ஆகும் என்று கூறினார்கள் என்றே அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" என்றார்கள். அத்தியாயம் :

581

யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் தொழுவதன் சிறப்புக் குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை;ஆயினும், அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என என்னிடம் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் தொழுவதானது, மற்ற பள்ளிவாசல்களில் "ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிட" அல்லது "ஆயிரம் தொழுகைகள் தொழுவதைப் போன்று" சிறந்ததாகும். (மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராம்" பள்ளிவாசலைத் தவிர! இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

582

583

584

585

586

587

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் கடுமையாக நோய்வாய்ப்பட்ட போது, "அல்லாஹ் எனக்கு நிவாரணமளித்தால் நிச்சயம் நான் புறப்பட்டுச் சென்று (ஜெரூசலத்திலுள்ள) "பைத்துல் மக்திஸ்" பள்ளிவாசலில் தொழுவேன்" என்று கூறினார். அவருக்கு உடல் நலம் ஏற்பட்டது. பின்னர் அவர் பயணம் செல்ல ஆயத்தமாகி நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களிடம் சென்று சலாம் சொன்னார்; அ(வர்களிடம் தமது பயணத்திற்கான காரணத்)தைத் தெரிவித்தார். அப்போது மைமூனா (ரலி) அவர்கள் "நீ அமர்ந்து, (பயணத்திற்காக) நீ தயார் செய்து வைத்தவற்றை (இங்கேயே) சாப்பிடு. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று தொழு. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இ(ந்த மஸ்ஜிதுந் நபவீ ஆலயத்)தில் தொழுவதானது, மற்ற பள்ளிவாசல்களில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிடச் சிறந்ததாகும்; கஅபா (அமைந்துள்ள "மஸ்ஜிதுல் ஹராம்") பள்ளிவாசலைத் தவிர" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

588

589

590

591

592

593

594

595

596

597

598

599

அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் "குபா"விற்குச் செல்வார்கள். "நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு செல்வதை நான் பார்த்தேன்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். அத்தியாயம் :

600

601