89 - கட்டாயம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) தொழுகையில், “இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆ, சலமா பின் ஹிஷாம், வலீத் பின் அல்வலீத் ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா! (கடும்பகை கொண்ட) ‘முளர்’ குலத்தார் மீது உனது பிடியை இறுக்குவாயாக! யூசுஃப் (அலை) அவர்கள் காலத்தில் நீ அனுப்பிய (பஞ்சமான) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளை அனுப்புவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.2 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் இருக் கின்றனவோ அவர் இறைநம்பிக்கையின் (ஈமானின்) சுவையை அடைவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும்விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று இறைமறுப்பிற்குத் திரும்புவதை அவர் வெறுப்பது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4 அத்தியாயம் :
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கூஃபா பள்ளிவாசல் ஒன்றில் கூடி யிருந்த மக்களிடம்) சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் இஸ்லாத்தை ஏற்றதற்காக உமர் அவர்கள் என்னைக் கட்டிவைத்(து தண்டித்)த(அனுபவத்)தை நான் கண்டுள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்களுக்கு நீங்கள் செய்த (துரோகத்)தைக் கண்டு (மனம் தாளாமல்) ‘உஹுத்’ மலை தகர்ந்துபோனால் அதுவும் சரியானதே!5 அத்தியாயம் :
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்துகொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக் கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டவாறு, “எங்களுக்காக இறைவ னிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒரு மனிதர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரது தலையில் வைக்கப்பட்டு, அது இரு பாதியாகப் பிளக்கப்படும். (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக்கொண்ட) அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவுக்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’விலிருந்து ‘ஹள்ரமவ்த்’ வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தனது ஆட்டின் விஷயத்தில் ஓநாயையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள்தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்” என்று சொன்னார்கள்.6 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் பள்ளிவாசலில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். உடனே நாங்கள் அவர்களுடன் புறப்பட்டுச் சென்று ‘பைத்துல் மித்ராஸ்’ எனுமிடத்தை அடைந்தோம். அங்கு நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, “யூதர்களே! இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். (இவ்வுலகிலும் மறு உலகிலும்) நீங்கள் சாந்தி அடைவீர்கள்” என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அதைக் கேட்ட யூதர்கள், “அபுல்காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள்” என்று கூறினார்கள். “இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு மீண்டும் (இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்து) அவ்வாறே கூறினார்கள். அப்போதும் யூதர்கள், “அபுல்காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள்” என்று கூறினர். பிறகு மூன்றாம் முறையும் (அவ்வாறே) நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களை (இந்த ஊரிலிருந்து) நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் யார் தமது (அசையாச்) சொத்துக்குப் பதிலாக ஏதேனும் (விலை யைப்) பெற்றால் அந்தச் சொத்தை அவர் விற்றுவிடட்டும். இல்லையேல், பூமியானது அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் உரியது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.7 அத்தியாயம் :
கன்ஸா பின்த் கிதாம் அல்அன் சாரிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்துவைத்த) அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.9 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! பெண் களிடம் அவர்களது திருமணம் தொடர்பாக யோசனை கேட்கப்பட வேண்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள். நான், “அவ்வாறாயின் கன்னிப்பெண்ணிடம் யோசனை கேட்கப்படும்போது அவள் வெட்கப்பட்டுக்கொண்டு மௌனமாக இருப்பாளே?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவளது மௌனமே சம்மதமாகும்” என்று சொன்னார்கள்.10 அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒருவர் (தமக்குச் சொந்தமான) ஓர் அடிமையை தமது ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்துவிடுவதாக அறிவித்தார். அப்போது அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறெந்தச் செல்வமும் இருக்கவில்லை. இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த அடிமையை என்னிடமிருந்து விலைக்கு வாங்குபவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அவனை நுஐம் பின் நஹ்ஹாம் (ரலி) அவர்கள் எண்ணூறு வெள்ளிக் காசுகள் (திர்ஹம்) கொடுத்து விலைக்கு வாங்கிக்கொண்டார்கள். அந்த கிப்தீ (எகிப்து) அடிமை (இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களின் ஆட்சியின்) முதலாவது ஆண்டில் இறந்துவிட்டான்.12 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அறியாமைக் காலத்தில்) ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசு களே அவருடைய மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்து வந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக் கொள்ளவும் செய்வார்கள்; நினைத்தால் (வேறெவருக்காவது) அவளை மண முடித்துக் கொடுத்துவிடுவார்கள். நினைத்தால் மணமுடித்துக் கொடுக்க(ôமல் அப்படியே விட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க)மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரைவிட (இறந்துவிட்ட கணவனின் வாரிசுகளான) அவர்கள்தான் அவள்மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள். அப்போதுதான் இது தொடர்பாக “இறைநம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று” எனும் (4:19 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.13 அத்தியாயம் :
ஸஃபிய்யா பின்த் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் கணவருடைய தந்தை கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில்) அரசாங்க அடிமைகளில் ஒருவன் (ஆட்சியாளர் அதிகாரத்திற்குட்பட்ட) ‘குமுஸ்’ நிதியிலுள்ள ஓர் அடிமைப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டான். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அவனுக்கு (ஐம்பது) சாட்டையடி கொடுத்து (ஆறு மாத காலத்திற்கு) அவனை நாடுகடத்தவும் செய்தார்கள். ஆனால், அந்த அடிமையால் பலவந்தப்படுத்தப்பட்டாள் என்பதால் அந்த அடிமைப் பெண்ணுக்கு அவர்கள் கசையடி தண்டனை வழங்கவில்லை. அடிமையல்லாத ஒருவன் கற்பழித்துவிட்ட கன்னியான அடிமைப்பெண் குறித்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: கன்னிகழியாதிருந்த அந்த அடிமைப் பெண்ணுக்குரிய விலையை நீதிபதி நிர்ணயி(த்து கன்னி கழிந்ததால் ஏற்பட்ட இழப்பீட்டைக் கற்பழித்தவனிடமிருந்து வசூலி)ப்பார். மேலும், (கற்பழித்த) அவனுக்குக் சாட்டையடி தண்டனை வழங்கப்படும். ஆனால், கன்னிகழிந்த அடிமைப் பெண்ணுக்கு இழப்பீடு ஏதும் வழங்க வேண்டுமென்று அறிஞர்களின் தீர்ப்புகளில் காணப்படவில்லை. ஆயினும், அவளைக் கற்பழித்தவனுக்குத் தண்டனை உண்டு. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் துணைவியாரான சாரா அவர்களுடன் தமது தாயகத்தைத் துறந்து சென்றார்கள். ‘மன்னன் ஒருவன்’ அல்லது ‘கொடுங்கோலன் ஒருவன்’ இருந்த ஓர் ஊருக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தார்கள். (இந்தச் செய்தியறிந்த) அவன் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் ஆளனுப்பி “(உம்முடனிருக்கும்) அப்பெண்ணை என்னிடம் அனுப்பிவை” என்று கூறினான். இப்ராஹீம் (அலை) அவர்களும் (வேறு வழியின்றி) அவ்வாறே சாரா அவர்களை அனுப்பிவைத்தார்கள். அவன் (தவறான எண்ணத்துடன்) சாரா அவர்களை நோக்கி எழுந்து வந்தான். சாரா அவர்கள் எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்து, தொழுதுவிட்டு, “அல்லாஹ்வே நான் உன்னையும் உன்னுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டிரு(ப்பது உண்மையாக இரு)ந்தால் இந்த நிராகரிப்பாளன் என்னை ஆட்கொள்ள விடாதே” என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பால்) கால்களால் உதைத்துக்கொண்டான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.14 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்óமின் சகோதரர் ஆவார். அவருக்கு அநீதியிழைக்கவுமாட்டார்; அவரை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கை விட்டுவிடவுமாட்டார். எவர் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகின்றான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.20 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் சகோதரன் அநீதியாளனாக இருக்கும் நிலையிலும் அநீதிக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்” என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! அநீதியிழைக்கப்பட்ட வனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அநீதியாளனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவனை அநீதியிழைக்கவிடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அநீதியாளனுக்குச் செய்யும் உதவியாகும்” என்றார்கள்.21 அத்தியாயம் :