அனைத்து இஸ்லாம் நூலகம்

77 - ஆடை

1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது ஆடையைத் (தரையில் படும் படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘யார் தமது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு செல்கின் றாரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழங்கியின் இரு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விடுகிறது” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்” என்று கூறினார்கள்.4 அத்தியாயம் :

3

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அவசரத்து டன் எழுந்து தமது ஆடையை இழுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள் (பள்ளிவாசலில் இருந்து சென்றுவிட்ட) மக்கள் அனைவரும் திரும்பி வந்தனர். நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணம் விலகும்வரை இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி, ‘‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ் வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். அவற்றில் (கிரகணங்களில்) ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது, அதை அவன் அகற்றும் வரை அவனிடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்கள்.5 அத்தியாயம் :

4

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள் (இரும்புப் பிடி போட்ட) ஒரு கைத்தடியைக் கொண்டு வந்து அதை (பூமியில் தடுப்பாக) நட்டுவைத்துப் பிறகு, தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்வதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆடையை வரிந்துகட்டிக் கொண்டு (தம் அறையிலிருந்து) வெளியே வந்ததை நான் பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் கைத்தடி நடப்பட்டிருந்த திசையை நோக்கி (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மக்களும் (வாகனப்) பிராணிகளும் கைத்தடிக்கு அப்பால் நபி (ஸல்) அவர்களுக்குமுன் நடந்துசெல்வதை நான் பார்த்தேன்.6 அத்தியாயம் :

5

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகின்றவர்) நரகத்தில் (புகுவார்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

6

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்வத்தோடு தமது கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.7 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

7

‘நபி (ஸல்) அவர்கள்’ அல்லது ‘அபுல்காசிம் (ஸல்) அவர்கள்’ கூறி னார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதர் (தமக் குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்து கொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென அவரை அல்லாஹ் பூமிக்குள் புதையச்செய்து விட்டான். அவர் மறுமை நாள்வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டேயிருப்பார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

8

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதர் தமது கீழங்கியை (தற்பெருமையுடன் தரை யில்) இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது அவரை பூமியில் புதைந்து போகும்படி செய்யப்பட்டது. அவர் அப்படியே (தமது உடல்) குலுங்கியபடி மறுமை நாள்வரை பூமியினுள் அழுந்திச் சென்றுகொண்டேயிருப்பார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.8 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அவற்றில் ஒன்றில் ஜரீர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது: நான் சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களுடன் அவர்களது வீட்டு வாசலருகே அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘‘அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மேற்சொன்ன ஹதீஸைப் போன்று கேட்டதாகக் கூறியதை நான் செவியுற்றேன்” என்றார்கள். அத்தியாயம் :

9

ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்களைக் குதிரையொன்றின் மீது சென்றுகொண்டிருந்தபோது சந்தித்தேன். அவர்கள் (கூஃபாவில்) தாம் தீர்ப்பளிக்கும் இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் (மேற்கண்ட) இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அவர்கள் எனக்கு(ப் பின்வருமாறு) அறிவித்தார்கள்: ‘‘யார் தற்பெருமையின் காரணத்தால் தமது ஆடையை(த் தரையில்படும்படி) இழுத்துக்கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன். அப்போது நான் முஹாரிப் (ரஹ்) அவர்களிடம், ‘தமது கீழங்கியை’ என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது அறிவிப்பில் சொன்னார்களா?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், ‘கீழங்கி’ என்றோ, ‘(முழு நீளச்) சட்டை’ என்றோ அன்னார் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

10

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்க, நான் (அங்கு) அமர்ந் திருந்தபோது ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் வந்தார். அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ரிஃபாஆ அவர்களின் மனைவியாக இருந்தேன். அவர் என்னை ஒட்டு மொத்தமாக மணவிலக்குச் செய்து விட்டார். ஆகவே, நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அவர்களை மணமுடித்துக்கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றது தான், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்லிவிட்டுத் தமது முகத்திரையின் குஞ்சத்தை எடுத்துக்காட்டினார். காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் இந்தச் சொல்லை வாசலில் நின்றவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். காலித் பின் சயீத் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதியளிக்கப்படவில்லை. அப்போது காலித் அவர்கள், ‘‘அபூபக்ரே! இவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் பகிரங்கமாக இப்படிப் பேசக் கூடாது என்று நீங்கள் தடுக்கமாட்டீர்களா?” என்று (வெளியிலிருந்தவாறே) கேட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்ததற்கு மேலாக வேறொன்றும் செய்யவில்லை. அப்பெண்ணிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீ (உன் பழைய கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச்செல்ல விரும்புகிறாய் போலும். (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும் அது முடியாது” என்று சொன்னார்கள். பிறகு (இவ்விஷயத்தில்) இதுவே (சட்ட) வழிமுறையாகிவிட்டது.10 அத்தியாயம் :

11

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ....பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது மேல்துண்டைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்துகொண்டார்கள். பிறகு நானும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் பின்தொடர, நபி (ஸல்) அவர்கள் நடந்து சென்றார்கள். அவர்கள் ஹம்ஸா (ரலி) அவர்கள் இருந்த வீட்டிற்குச் சென்று (உள்ளே செல்ல) அனுமதி கேட்டார்கள். அங்கு இருந்தவர்களும் இவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.12 அத்தியாயம் :

12

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று ஒரு மனிதர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஹ்ராம் கட்டியவர் (முழுநீளச்) சட்டை அணியமாட்டார்; முழுக்கால் சட்டை அணியமாட்டார்; முக்காடுள்ள மேலங்கியும் அணியமாட்டார். காலுறைகளும் (மோஸாக்களும்) அணியமாட்டார். அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறை (மோஸாக்)களைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி அணிந்துகொள்ளட்டும்” என்று பதிலளித்தார்கள்.13 அத்தியாயம் :

13

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் பிரேதம் மண்ணறைக்குள் வைக்கப்பட்டபிறகு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவரை வெளியே எடுக்கும்படி உத்தரவிட்டார் கள். அவ்வாறே அவர் வெளியே எடுக்கப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முழங்கால்களின் மீது வைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது உமிழ்நீரை அவர்மீது உமிழ்ந்து தமது (முழுநீளச்) சட்டையை அவருக்கு அணிவித்தார்கள். (இதன் காரணத்தை) அல்லாஹ்வே அறிவான்.14 அத்தியாயம் :

14

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டபோது அவருடைய புதல்வர் (அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே தங்களது (முழுநீளச்) சட்டையை என்னிடம் கொடுங்கள். அதில் நான் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவிப்பேன். மேலும், அவருக்காகத் தாங்கள் தொழவைத்து பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் தமது (முழுநீளச்) சட்டையை வழங்கி ‘‘(அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிப்) பணிகளை நீங்கள் முடித்துவிட்டால் எனக்குத் தெரிவியுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர் (தம் தந்தையின் இறுதிப் பணிகளை) முடித்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபைக்காக (ஜனாஸா தொழுகை) தொழுதிட வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை இழுத்து ‘‘நயவஞ்சகர்களுக்குத் தொழவைக்கக் கூடாது என்று அல்லாஹ் தங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?” என்று கேட்டுவிட்டு, ‘‘நீங்கள் (நயவஞ்சகர்களான) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி, அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவேமாட்டான்” என அல்லாஹ் கூறுகின்றான் என்று சொன்னார்கள். உடனே ‘‘நயவஞ்சகர்களில் இறந்துவிட்டவர் எவருக்காகவும் ஒருபோதும் (நபியே!) நீர் தொழுவிக்க வேண்டாம். அவர்களின் மண்ணறையருகே நிற்கவும் வேண்டாம்” எனும் (9:84ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. இதையடுத்து நயவஞ்சகர்களுக்கு (ஜனாஸா) தொழுவிப்பதை நபியவர்கள் கைவிட்டார்கள்.15 அத்தியாயம் :

15

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்: அவர்களின் நிலையானது, இரும் பாலான நீளங்கிகள் அணிந்த இரு மனிதர்களின் நிலையைப் போன்றதாகும். அவர்களின் கைகள் அவர்களது மார்போடும் கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்பவர், ஒன்றைத் தர்மம் செய்யும்போதெல்லாம் அவரது நீளங்கி விரிந்து, விரல் நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரது பாதத் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ தர்மம் செய்ய எண்ணும் போதெல்லாம் அவனது நீளங்கி அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் மற்றதின் இடத்தைப் பிடித்துவிடுகிறது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விரலால் தமது சட்டைக் கழுத்தை (நெருக்கி) இவ்வாறு சுட்டிக்காட்டினார்கள். மேலும், ‘‘அவன் தனது நீளங்கியை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் (வியப்படைவாய்; ஏனெனில்) அது விரியாது” என்றும் கூறினார்கள்.16 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், (‘இரண்டு நீளங்கிகள்’ என்பதற்குப் பதிலாக) ‘இரண்டு கவசங்கள்’ என வந்துள்ளது. அத்தியாயம் :

16

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தின் போது) தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர் களை எதிர்கொண்டேன். பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு நீளங்கி (ஜுப்பா) அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் வாய்கொப்பு ளித்து நாசிக்குத் தண்ணீர் செலுத்தி விட்டுத் தமது முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் சட்டைக் கைகளிலிருந்து வெளியே எடுக்கப் போனார்கள். ஆனால், சட்டைக்கைகள் குறுகலாக இருந்தன. ஆகவே, தம் இரு கைகளையும் அவர்கள் நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவிக்கொண்டார்கள். மேலும், தலையை (ஈரக் கையால் ‘மஸ்ஹ்’ செய்து) தடவிக்கொண்டார்கள். (‘மோஸா’ எனும்) காலுறையையும் (ஈரக் கையால்) தடவிக்கொண்டார்கள்.17 அத்தியாயம் :

17

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், ‘‘உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளை நீரை அவர்கள்மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந் தார்கள். இதனால் அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. ஆகவே, அவற்றை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹ் செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் (மோஸா எனும்) காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள், ‘‘அவற்றை விட்டு விடுவீராக. ஏனெனில், நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலை யிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன்” என்று சொல்லி (ஈரக்கையால் அவற்றைத்) தடவி (மஸ்ஹ் செய்து)கொண்டார்கள்.18 அத்தியாயம் :

18

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கபா’ எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்களுக்கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, மக்ரமா (ரலி) அவர்கள் (என்னிடம்), ‘‘அன்பு மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் செல்” என்று சொல்ல, நான் அவர்களை அழைத்துச் சென்றேன். (அங்கு சென்று சேர்ந்ததும்) ‘‘நீ உள்ளே போய் நபி (ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா” என்று சொன்னார்கள். நான் அவ்வாறே மக்ரமா (ரலி) அவர்களிடம் வரும்படி நபி (ஸல்) அவர்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் மக்ரமா (ரலி) அவர்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர்களிடம் அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. மேலும், நபியவர்கள் ‘‘உங்களுக்காக இதை எடுத்துவைத்தேன்” என்று சொன்னார்கள். மக்ரமா (ரலி) அவர்கள் அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, ‘‘மக்ரமா திருப்தி அடைந்துவிட்டான்” என்று சொன்னார்கள்.19 அத்தியாயம் :

19

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஆண்கள் பட்டு அணிவது தடை செய்யப்படுவதற்கு முன்பு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (‘ஃபர்ரூஜ்’ எனும்) நீண்ட பட்டு உடுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்துகொண்டார்கள். பிறகு அதை அணிந்தவாறே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள். பிறகு (தொழுதுவிட்டுத்) திரும்பியதும் அதை வெறுப்பவர்கள் போன்று பலமாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, ‘‘இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்த தன்று” எனக் கூறினார்கள்.20 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

20

சுலைமான் பின் தர்கான் அத்- தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள்மீது முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்) ஒன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பளி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது. அத்தியாயம் :

21

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(முழுநீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், முக்காடுள்ள மேலங்கிகள் (புர்னுஸ்), காலுறைகள் (மோஸாக்கள்) ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் (மோஸாக்கள்) அணிந்துகொள்ளட்டும். ஆனால், காலுறை இரண்டும் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து) கொள்ளட்டும். குங்குமப்பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர் கள்” என்று சொன்னார்கள்.22 அத்தியாயம் :

22

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இஹ்ராம் கட்டியவர்களில்) கீழங்கி கிடைக்காதவர் முழுக்கால் சட்டை அணிந்துகொள்ளட்டும்; காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை (மோஸாக் களை) அணிந்துகொள்ளட்டும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

23

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் போது எந்த ஆடையை அணிய வேண்டும் என்று தாங்கள் உத்தரவிடுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(முழுநீளச்) சட்டை, முழுக்கால் சட்டை, தலைப் பாகைகள், முக்காடுள்ள மேலங்கிகள், (‘மோஸா’ எனும்) காலுறைகள் ஆகிய வற்றை அணியாதீர்கள். ஒருவரிடம் காலணிகள் இல்லையென்றால் அவர் மட்டும் காலுறைகளை (மோஸாக்களை) கணுக்கால்களுக்குக் கீழ் இருக்குமாறு அணிந்துகொள்ளட்டும். குங்குமப்பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள்” என்று சொன்னார்கள்.23 அத்தியாயம் :

24

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஹ்ராம் கட்டியவர் சட்டை அணியமாட்டார்; தலைப்பாகையையும் முழுக்கால் சட்டையையும் முக்காடுள்ள மேலங்கியையும் அணியமாட்டார். குங்குமப்பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையையும் (மோஸாக்கள் எனும்) காலுறைகளையும் அணியமாட்டார்; காலணிகள் கிடைக்காதவரைத் தவிர. காலணிகள் கிடைக்கவில்லையெனில் அவர் (மேலிருந்து) கணுக்கால்களுக்குக் கீழே காலுறை (மோஸா) இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.25 அத்தியாயம் :

25

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்காவிலிருந்த) முஸ்லிம்களில் சிலர் அபிசீனியாவுக்குப் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘சற்று பொறுங்கள். ஏனெனில், எனக்கு (இறைவனிடமிருந்து) அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அனுமதியை(த்தான்) எதிர்பார்க்கின்றீர்களா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஹிஜ்ரத் செய்ய வேண்டுமென்பதற்காகத் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டார்கள். மேலும், (இந்தப் பயணத்திற்காகவே) தம்மிடம் இருந்த இரு ஊர்தி ஒட்டகங்களுக்கு நான்கு மாதம் கருவேலந்தழையைத் தீனியாகப் போட்டு (வளர்த்து) வந்தார் கள். (தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் ஒருமுறை நண்பகல் நேரத்தின் மத்தியில் எங்கள் வீட்டில் அமர்ந்துகொண்டிந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘‘இதோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையில் முக்காடிட்டபடி நம்மை நோக்கி-நம்மிடம் வருகை தந்திராத நேரத்தில்-வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று ஒருவர் கூறினார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களை ஏதோ ஒரு (முக்கியமான) விஷயம்தான் இந்த நேரத்தில் இங்கே வரச்செய்திருக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டார்கள். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி வழங்க அவர்களும் உள்ளே வந்தார்கள். உள்ளே நுழையும்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களிடம் இருப்பவர்களை வெளியே அனுப்புங்கள்” என்று சொல்ல, அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘இங்கிருப்பவர்கள் உங்கள் (துணைவி யாருடைய) குடும்பத்தார்தான். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு (ஹிஜ்ரத்) புறப்பட அனுமதியளிக்கப்பட்டு விட்டது” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியென்றால் தங்களுடன் நானும் வர விரும்புகிறேன். என் தந்தை தங்களுக்கு அர்ப்பண மாகட்டும்; அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி” என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட் டும். இந்த என் இரு ஊர்தி ஒட்டகங்களில் ஒன்றைத் தாங்கள் எடுத்துக்கொள்ளுங் கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்” என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அவர்கள் இருவருக்காகவும் வேண்டிப் பயண ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்து முடித்தோம். இருவருக்கும் ஒரு தோல் பையில் பயண உணவை வைத்தோம். (என் சகோதரி) அஸ்மா பின்த் அபீபக்ர் தன் இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அந்தத் தோல்பையின் வாயில் வைத்துக் கட்டினார். இதனால்தான் ‘இரு கச்சுடையாள்’ (‘தாத்துந் நிதாக்கைன்’) என்று அவர் பெயர் சூட்டப்பட்டார். பிறகு நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் ‘ஸவ்ர்’ எனும் மலையிலுள்ள ஒரு குகையை அடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் தங்கினார்கள். அவர்களுடன் (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ரும் இரவில் தங்கியிருப்பார். அப்துல்லாஹ் சமயோசித அறிவு படைத்த, புத்திக்கூர்மையுள்ள இளைஞராக இருந்தார். அவர் அவ்விருவரிடமிருந்தும் (வைகறைக்கு முந்திய) ‘ஸஹர்’ நேரத்தில் (விடைபெற்றுப்) புறப்பட்டுவிடுவார். இரவு (மக்காவில்) தங்கியிருந்தவரைப் போன்று குறைஷியருடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவருக்கெதிரான (குறைஷியரின்) சூழ்ச்சிகள் எதுவாயினும் அதைக் கேட்டு நினைவில் இருத்திக்கொண்டு இருள் கலக்கும் நேரத்தில் அவர்களிடம் அதைக் கொண்டுசெல்வார். அவர்கள் இருவருக்காகவும் பாலை அன்பளிப்பாகக் கறந்துகொள்ள இரவல் கொடுக்கப்பட்ட ஆடொன்றை அபூபக்ர் (ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமையான ஆமிர் பின் ஃபுஹைரா அவர்கள் மேய்த்துவந்தார்கள். அவர் இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதை அவர்கள் இருவரிடமும் ஓட்டிவருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழிப்பார்கள். அந்த ஆட்டை ஆமிர் பின் ஃபுஹைரா இரவின் இருள் இருக்கும் போதே விரட்டிச் சென்றுவிடுவார். இவ்வாறு (அவ்விருவரும் அக்குகையில் தங்கியிருந்த) மூன்று இரவு களில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார்.28 அத்தியாயம் :

26

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தமது தலையில் இரும்புத் தொப்பி அணிந்தவாறு மக்கா வினுள் நுழைந்தார்கள்.29 அத்தியாயம் :

27

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ‘நஜ்ரான்’ நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது அவர்களைக் கிராமவாசி யொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவுக்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அச்சு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, ‘‘முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத் திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட் டார்கள்.31 அத்தியாயம் :

28

அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு பெண்மணி ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டுவந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் இதை என் கையால் நெய்தேன். இதைத் தாங்கள் அணிவதற்காக வழங்குகிறேன்’ என்று சொன்னார்” என சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ‘புர்தா’ என்றால் என்ன என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். (அங்கிருந்தவர்கள் ‘தெரியும்’ என்று சொல்ல,) ‘‘ஆம். அது கரைவைத்து நெய்யப்பட்ட போர்வை” என சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள். (பின்னர் தொடர்ந்து அவர்கள் சொன்னார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது தமக்குத் தேவை யென்று கருதி அதை வாங்கிக்கொண்டார் கள். பிறகு, அதைக் கீழங்கியாக அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது மக்களில் ஒருவர் அதைத் தொட்டுப்பார்த்து (அதன் அழகை ரசித்தவராக) ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணியக்கொடுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் நாடிய (நேரம்)வரை அந்த அவையில் அமர்ந்திருந்துவிட்டு (தமது வீட்டுக்கு)த் திரும்பினார்கள். பிறகு அந்தச் சால்வையை மடித்து அந்த மனிதருக்குக் கொடுத்தனுப்பினார்கள். மக்கள், ‘‘நீ செய்தது சரியல்ல. நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கேட்பவரை (வெறுங் கையோடுத்) திருப்பி அனுப்புவதில்லை என்று தெரிந்துகொண்டே அவர்களிடம் (ஏன்) இதைக் கேட்டாய்” என்று சொன்னார்கள். அதற்கு அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதைக் கேட்டதெல்லாம் நான் இறக்கும் நாளில் என் (உடல் அணிவிக்கப்படும்) கஃபனாக இது இருக்கட்டும் என்பதற்காகத்தான்” என்றார். அவ்வாறே அது அவருக்கு கஃபனாக ஆயிற்று.32 அத்தியாயம் :

29

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் நிலவு பிரகாசிப்பதுபோல் முகங்கள் பிரகாசித்தவாறு சொர்க்கத்துக்குள் நுழைவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல்அசதீ (ரலி) அவர்கள் தம்மீதிருந்த கோடுபோட்ட வண்ணப் போர்வையை உயர்த்தியவாறு எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக” என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்” என்று சொன் னார்கள்.33 அத்தியாயம் :

30

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘எந்த ஆடை நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘(பருத்தி யாலான) யமன் நாட்டுச் சால்வை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

31

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அணிவதற்கு (பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான ஆடையாக இருந்தது. அத்தியாயம் :

32

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தி யாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது” என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அத்தியாயம் :

33

ஆயிஷா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தமது கறுப்புக் கம்பளி ஆடையைத் தமது முகத்தின் மீது போட்டுக்கொள்ளலானார் கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தமது முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்து கொண்டே ‘‘யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட் டும். அவர்கள் தம் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதைக்) குறித்து எச்சரித்தார்கள்.34 அத்தியாயம் :

34

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். பிறகு அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்கள். (தொழுது முடித்து) சலாம் கொடுத்தவுடன், ‘‘எனது இந்தக் கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், சற்று முன்பு அது தொழுகையிலிருந்து என் கவனத்தைத் திருப்பிவிட்டது. அபூஜஹ்மின் (மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். -அவர் அதீ பின் கஅப் குலத்தைச் சேர்ந்த அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா பின் ஃகானிம் என்பவர் ஆவார்.-35 அத்தியாயம் :

35

அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றை யும் எடுத்துக்காட்டி, ‘‘இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது” என்று சொன்னார்கள்.36 அத்தியாயம் :

36

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘முலாமசா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபார முறைகளுக்குத் தடை விதித்தார்கள்.37 ஃபஜ்ருக்குப் பிறகு சூரியன் உயரும்வரை தொழுவது, அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும்வரை தொழுவது ஆகிய இரு (நஃபில்) தொழுகைகளுக்கும் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டுவைத்துக்கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்வதற்கும் (இஹ்திபா) தடை விதித்தார்கள். ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ) தடை விதித்தார்கள்.38 அத்தியாயம் :

37

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும், வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள். வியாபாரத்தில் ‘முலாமசா’ மற்றும் ‘முனாபஃதா’ ஆகிய முறைகளைத் தடை செய்தார்கள். ‘முலாமசா’ என்றால், இரவிலோ பகலிலோ (ஒரு பொருளை வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொரு வரின் துணியைத் தமது கரத்தால் தொடுவதாகும். (அவ்வாறு தொட்டு விட்டாலே வியாபாரம் உறுதியாகிவிடும் என்ற நிபந்தனையின்பேரில்) அதைத் தொட்டதோடு முடித்துக்கொண்டு விரித்துப் பார்க்காமலேயே வாங்குவதாகும். ‘முனாபதா’ என்பது, ஒருவர் மற் றொருவரை நோக்கித் தமது துணியை எறிய, அந்த மற்றவர் இவரை நோக்கித் தமது துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமிடையிலான வியாபார (ஒப்பந்த)மாக அதுவே ஆகிவிடுவதாகும். ஆடை அணியும் முறைகள் இரண்டும் வருமாறு: 1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ. அதாவது ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்களில் ஒன்றில் போட்டுக்கொள்ள அவருடைய உடன் இரு பக்கங்களில் ஒன்று துணியின்றி வெளியே தெரிவதாகும். 2. இஹ்திபா. அதாவது ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரிய (அதைத் துணியால் மறைக்காமல்) அமர்ந்திருப்பதாகும். அத்தியாயம் :

38

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு விதமாக ஆடை அணிவதைத் தடை செய்தார்கள். மர்ம உறுப்பு வெளியே தெரியும்படி ஒருவர் ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த் திக்கொண்டு அமர்ந்திருப்பதையும் (இஹ்திபா), ஒரே துணியை (இரு தோள் களில் ஒன்றில்) சுற்றிக்கொண்டு ஒரு பக்கம் துணியில்லாமல் இருப்பதையும் (இஷ்திமால்) தடை செய்தார்கள். (வியாபார முறைகளில்) முலாமசாவையும், முனாபதா வையும் தடை செய்தார்கள்.40 அத்தியாயம் :

39

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டு விடுவதையும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முதுகையும் முழங் கால்களையும்) போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு (குத்துக் காலிட்டு) அமர்வதையும் (இஹ்திபா) நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.41 அத்தியாயம் :

40

உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டுவரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்புநிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நாம் யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதில் கூறாமல்) மௌனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முகாலிதை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொல்ல, அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டுவரப்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும், ‘‘(இந்த ஆடையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு” என்று கூறிவிட்டு, ‘‘உம்மு காலிதே! இது ‘சனாஹ்’ (அழகாயிருக்கிறது)” என்று சொன்னார்கள். (நபி (ஸல்) அவர்கள் கூறிய) ‘சனாஹ்’ எனும் சொல், அபிசீனிய மொழிச் சொல்லாகும். அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.42 அத்தியாயம் :

41

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள், ‘‘அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (இனிப்புப் பொருளை) மென்று இவனது வாயிலிடுவதற்காக இவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லும்வரை இவன் எதையும் சாப்பிட்டு விட வேண்டாம்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச்சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் ‘ஹுரைஸ்’ (அல்லது ‘ஜவ்ன்’) குலத்தார் தயாரித்த கறுப்புநிறக் கம்பளி மேலங்கியை அணிந்துகொண்டு மக்கா வெற்றியின்போது தம்மிடம் வந்த தமது ஊர்தி ஒட்டகத்திற்கு அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.43 அத்தியாயம் :

42

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அல்குறழீ (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒருமுறை) அந்தப் பெண்மணி பச்சைநிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மைத் துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தமது மேனியில் (கன்றியிருந்த) பச்சைநிற அடையாளத்தை எனக்குக் காட்டினார். -(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி- (நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, ‘‘அல்லாஹ்வின் தூதரே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரது (பச்சைநிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது” என்று சொன்னேன். (இதற்கிடையில்) -அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் தம் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். ஆகவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரு மகன்களைத் தம்முடன் அழைத்துவந்தார். அப்பெண்மணி, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை” என்று கூறி, தமது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் பின் ஸபீர், ‘‘பொய் சொல்கிறாள், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்” என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்படி (ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்துகொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும்வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ ‘அனுமதிக்கப்பட்டவள்’ அல்லது ‘ஏற்றவள்’ அல்லள்” என்று சொன்னார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களுடைய இரு மகன்களை யும் நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். ‘‘இவர்கள் உங்கள் புதல்வர்களா?” என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், ‘‘ஆம்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதைவிடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்” என்று சொன்னார்கள்.45 அத்தியாயம் :

43

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது நான் நபி (ஸல்) அவர்களின் வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரு மனிதர்களைப் பார்த்தேன். அதற்கு முன்பும் அவர்களை நான் பார்த்ததில்லை; அதற்குப் பின்பும் அவர்களை நான் பார்க்கவில்லை.47 அத்தியாயம் :

44

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக்கொண்டி ருந்தபோது, நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ‘‘லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)” என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)” என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூதர் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கும்போது, ‘‘அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே” என்று கூறிவந்தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (விபசாரம், திருடு போன்ற குற்றம் புரிந்த) ஒருவர் இறக்கும்போதோ அதற்கு முன்போ மனம்வருந்தி பாவமன்னிப்புக் கோரி, ‘‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை)” என்று சொல்லியிருந்தால்தான் அவருக்கு இவ்வாறு மன்னிப்பு அளிக்கப்படும்.48 அத்தியாயம் :

45

அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் ஆதர்பைஜானில் இருந்தபோது எங்களிடம் உமர் (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அறிந்த வரை (அவர்கள் குறிப்பிட்ட ‘இந்த அளவு’ என்பது, ஆடைகளின் கரைகளில் செய்யப்படும்) வேலைப்பாட்டைக் குறிக்கிறது. அத்தியாயம் :

46

அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஆதர் பைஜானில் இருந்தபோது உமர் (ரலி) அவர்கள் எங்களுக்கு, ‘‘நபி (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. மேலும், (அந்த அளவை விவரிக்கும் வகையில்) தம் இரு விரல்களை வரிசைப்படுத்திக் காட்டினார்கள்” என்று கடிதம் எழுதினார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைர் (ரஹ்) அவர்கள் (இதை அறிவிக்கையில்) நடுவிரலையும் சுட்டு விரலையும் உயர்த்திக்காட்டினார்கள். அத்தியாயம் :

47

அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் (ஆதர்பைஜானில்) இருந் தோம். அப்போது அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்: நபி (ஸல்) அவர்கள், ‘‘இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது” என்று சொன்னார்கள். ...மற்றோர் அறிவிப்பில், ‘‘அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் தமது சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் சைகை செய்தார்கள்” என்ற கூடுதல் தகவல் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

48

அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) மதாயின் (தைஃபூன்) நகரில் இருந்தார்கள். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (அக்னி ஆராதனையாளரான) ஊர்த் தலைவர் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர்மீது வீசியெறிந்து விட்டு, (அங்கிருந்தவர்களிடம்) ‘‘நான் இவரை(ப் பலமுறை) தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்க்காத காரணத்தால்தான் நான் இதை அவர்மீது வீசியெறிந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘தங்கம், வெள்ளி, சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு ஆகிய இவையெல்லாம் இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்’ என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.50 அத்தியாயம் :

49

ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள், ‘‘நான் அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்” என்று (பின்வரும் ஹதீஸை) அறிவிக்க லானார்கள். உடனே நான், ‘‘நபி (ஸல்) அவர்களிடமிருந்தா?” என்று கேட்க, அதற்கு அவர்கள் உறுதியான தொனியில், ‘‘(ஆம்) நபி (ஸல்) அவர்களிடமிருந்துதான்” என்று கூறிவிட்டு, ‘‘(ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் ஒருபோதும் அதை அணியமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சொன்னார்கள். அத்தியாயம் :

50

ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் ‘‘முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘(ஆண் களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணியமாட்டார்’ என்று சொன்னார்கள்” எனக் கூறக் கேட்டேன். அத்தியாயம் :

51

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணிய மாட்டார்” என்று கூறியதாக உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அத்தியாயம் :

52

இம்ரான் பின் ஹித்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பட்(டா)டை குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) கேட்டேன். அவர்கள், ‘‘இப்னு உமர் (ரலி) அவர்களைக் கேளுங்கள்” என்று கூற நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அபூஹஃப்ஸ், அதாவது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், ‘மறுமையில் யாருக்கு எந்தப் பங்குமில்லையோ அவர் தான் இம்மையில் பட்(டா)டை அணிவார்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என எனக்கு அறிவித்தார்கள். (இதைக் கேட்ட) நான், ‘‘உண்மையே சொன்னார்; அபூஹஃப்ஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைக்கவில்லை” என்று சொன் னேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

53

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டாடை யொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாங்கள் அதைத் தொட்டு அதன் (மென்மை மற்றும் தரம்) காரணமாக வியக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதைக் கண்டு நீங்கள் வியக் கின்றீர்களா?” என்று கேட்க நாங்கள், ‘‘ஆம்” என்றோம். நபி (ஸல்) அவர்கள் ‘‘சொர்க்கத்தில் சஅத் பின் முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை ஆகும்” என்று சொன்னார்கள்.52 அத்தியாயம் :

54

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்காரப் பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.53 அத்தியாயம் :

55

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சிவப்பு மென்பட்டு விரிப்புகளையும் (‘மீஸரா), ‘கஸ்’ வகைப் பட்டுத் துணியையும் எங்களுக்குத் தடை செய்தார்கள். அத்தியாயம் :

56

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் ஏற்பட்டிருந்த சொறிசிரங்கின் காரணத்தால் பட்டாடை அணிந்துகொள்ள அவர்கள் இருவருக்கும் நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.55 அத்தியாயம் :

57

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கியொன்றை எனக்கு வழங்கினார்கள். நான் அதை அணிந்துகொண்டு வெளியே புறப்பட்டேன். அப்போது அவர்களின் முகத்தில் கோபக்குறியை நான் கண்டேன். ஆகவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்.57 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

58

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக்கொண்டால், தங்களிடம் தூதுக் குழுக்கள் வரும்போதும் வெள்ளிக் கிழமையின்போதும் அணிந்துகொள்ள லாமே” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மறுமையில்) எந்தப் பேறும் இல்லாதவர்தான் இதை (இம்மையில்) அணிவார்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அதன் பிறகு உமர் (ரலி) அவர்களுக்கு, அவர்கள் அணிந்துகொள்வதற்கு ஏற்றாற்போன்று கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்றை அனுப்பிவைத்தார்கள். எனவே உமர் (ரலி) அவர்கள், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) இது பற்றித் தாங்கள் சொன்னதை நான் கேட்டிருக்க (இப்போது) இதை எனக்கே அணியக் கொடுத்துள்ளீர்களே!” என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை நான் உங்களுக்கு அனுப்பிவைத்தது அதை நீங்கள் விற்றுக்கொள்ளவோ (பெண்களுக்கு) அணியத்தரவோதான்” என்று பதிலளித்தார்கள்.58 அத்தியாயம் :

59

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியார் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள்59 கோடுகள் போட்ட பட்டு சால்வையொன்றை அணிந்திருந்ததை நான் கண்டேன். அத்தியாயம் :

60

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘நபி (ஸல்) அவர்களுக்கெதிராக (அவர்களைச் சங்கடப்படுத்தும் வகை யில்) கூடிப்பேசிச் செயல்பட்ட அந்த இரு துணைவியர் யார்?” என உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டுமென ஓராண்டு காலமாக நான் (நினைத்துக் கொண்டு) இருந்தேன். ஆயினும், உமர் (ரலி) அவர்கள்மேல் (மரியாதை கலந்த) அச்சம் கொள்ளலானேன். இவ்வாறிருக்கையில் (ஹஜ்ஜுக்கு வந்த) உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் (‘மர்ருழ் ழஹ்ரான்’ எனும்) ஓரிடத்தில் தங்கினார்கள். அப்போது (தமது இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தடிக்குச் சென்றார்கள். அவர்கள் (தமது தேவையை முடித்துக்கொண்டு) வந்தபோது அவர்களிடம் நான் அது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவுமே (அந்த இரு துணைவியர்)” என்று பதிலளித்துவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்: அறியாமைக் காலத்தில் நாங்கள் பெண்களை ஒரு பொருட்டாகவே மதித்த தில்லை. இஸ்லாம் வந்து, அல்லாஹ் பெண்களைக் குறித்து (அவர்களின் உரிமைகளையும் கடமைகளையும் பேணுமாறு தனது வேதத்தில்) குறிப்பிட்ட போதுதான் பெண்களுக்கு எங்கள்மீதுள்ள உரிமையை அறிந்துகொண்டோம். ஆயினும், எங்கள் விவகாரங்கள் எதிலும் தலையிட பெண்களை நாங்கள் அனுமதிக்கவில்லை. (இந்நிலையில் ஒருநாள்) எனக்கும் என் மனைவிக்குமிடையே (காரசாரமான) வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் என்னைக் கடுமையாகப் பேசிவிட்டார். உடனே நான், ‘‘நீ அங்கேயே (உன் இடத்திலேயே) இரு! (என் விஷயத்தில் தலையிடாதே)” என அவரிடம் சொன் னேன். அவர் ‘‘என்னிடம்தான் நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள். (ஆனால்,) உங்கள் புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) நபி (ஸல்) அவர்களை (எதிர்த்துப் பேசி) மன வேதனைக்குள்ளாக்கியுள்ளார்” என்றார். உடனே நான் (என் புதல்வி) ஹஃப்ஸா விடம் சென்று, ‘‘அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்ய வேண்டாமென உன்னை நான் எச்சரிக்கி றேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்களை மன வேதனைக்குள்ளாக்கிய விஷயத்தில் முதலில் நேராக ஹஃப்ஸா விடமே சென்றேன். அடுத்து (நபி (ஸல்) அவர்களின் இன்னொரு துணைவியாரும் என் உறவினருமான) உம்மு சலமாவிடம் சென்று (ஹஃப்ஸாவிடம் சொன்னதைப் போன்றே) கூறினேன். உடனே அவர், ‘‘உமரே! உம்மைக் கண்டு நான் வியப்புறுகிறேன். எங்கள் விவகாரங்கள் அனைத்திலும் நீங்கள் தலையிட்டுவிட்டு, இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையிலான விவகாரத்தையும்கூட நீங்கள் விட்டுவைக்கவில்லை” என்று கூறி (என்னை) மடக்கிவிட்டார். மேலும், அன்சாரிகளில் (எனக்கு நண்பர்) ஒருவர் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அவர் இல்லாமல்போய் நான் அங்கு இருந்தால், அங்கு நடப்பதை நான் அவருக்குத் தெரிவிப்பேன். (இதைப் போன்றே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் நான் இல்லாமல் அவர் இருந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அவர் எனக்குத் தெரிவிப்பார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றியிருந்த (அரசர்கள் மற்றும் குலத் தலை)வர்கள் அனைவரும் அவர்களுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். (அன்றைய) ஷாம் நாட்டின் ‘ஃகஸ்ஸான்’ அரசன் ஒரு வனைத் தவிர வேறு யாரும் (பகைமை கொண்டு) இருக்கவில்லை. அவன் (எங்கள்மீது போர் தொடுக்க) வரலாம் என நாங்கள் அச்சம் கொண்டிருந்தோம். (இந்நிலையில் ஒருநாள்) அந்த அன்சாரி (நண்பர்) திடீரென்று வந்து ‘‘ஒரு சம்பவம் நடந்துவிட்டது” என்றார். நான் ‘‘என்ன அது? ஃகஸ்ஸானிய(மன்ன)ன் (படையெடுத்து)வந்துவிட் டானா?” என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘‘அதைவிட மிகப் பெரிய சம்பவம் நடந்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்” என்றார். உடனே நான் (புறப்பட்டு) வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அனைவரின் அறைகளி லிருந்தும் அழுகைச் சத்தம் வந்துகொண்டி ருந்தது. நபி (ஸல்) அவர்களோ தமது மாடியறைக்கு ஏறிவிட்டிருந்தார்கள். மாடியின் தலைவாசலில் பணியாளர் (ரபாஹ்) அமர்ந்துகொண்டிருந்தார். நான் அவரிடம் வந்து, ‘‘எனக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் செல்ல) அனுமதி கேள்” என்றேன். (அவரும் உள்ளே சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். நான் (படியிலேறி அறைக்குள்) சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் (ஈச்சம்) பாயில் (படுத்து) இருந்தார்கள். அந்தப் பாய் அவர்களின் விலாவில் சுவடு பதித்திருந்தது. அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அங்கு (அவர்களது தலைமாட்டில்) பதனிடப்படாத தோல்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. (கால்மாட்டில்) கருவேல இலைகள் இருந்தன. அப்போது ஹஃப்ஸா, உம்மு சலமா ஆகியோரிடம் நான் கூறியதையும், உம்மு சலமா என்னிடம் கூறிய பதிலையும் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச்சொன்னேன். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள். (அந்த மாடியறையில்) நபி (ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் (தங்கி) இருந்தார்கள். பிறகு (அங்கிருந்து) இறங்கினார்கள்.61 அத்தியாயம் :

61

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இரவு (திடீரென) விழித்தெழுந்து ‘‘அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனை கள்தான் என்ன? (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட கருவூலங்கள்தான் என்ன! (என் துணைவியரில்) இந்த அறைகளில் (உறங்கிக்கொண்டு) உள்ளோரை எழுப்பி உணர்வூட்டுகின்றவர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருக்கும் எத்து ணையோ பெண்கள், மறுமை நாளில் (துணியே கிடைக்காமல்) நிர்வாணமாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள்.62 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) ஹின்த் பின்த் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களின் சட்டைக்கைகளில் (அவை விசாலமானவையாக இருந்ததால் கை வெளியே தெரிந்துவிடுமோ என அஞ்சி) தம் விரல்களுக்கிடையே பொத்தான்கள் வைத்திருப்பார்கள். அத்தியாயம் :

62

உம்மு காலித் பின்த் காலித்(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டுவரப் பட்டன. அவற்றில் கறுப்புநிறக் கம்பளி ஆடை ஒன்றும் இருந்தது. அவர்கள், ‘‘இந்த ஆடையை நாம் யாருக்கு அணி விப்போம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேட்க, மக்கள் (பதில் பேசாமல்) மௌனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்மு காலிதை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று உத்தர விட்டார்கள். உடனே (சிறுமியாக இருந்த) நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன். உடனே அவர்கள் அந்த ஆடையைத் தமது கையால் எனக்கு அணிவித்து, ‘‘(இதை நீ உடுத்தி பழையதாக்கிக்) கிழித்து நைந்துபோகச் செய்துவிடு” என்று இருமுறை சொன்னார்கள். பிறகு அந்த ஆடையின் வேலைப்பாட்டைக் கவனித்துப் பார்க்கலானார்கள். பிறகு என் பக்கம் தமது கையால் சைகை காட்டி, ‘‘உம்மு காóதே! இது ‘சனா’ (அழகாயிருக்கிறது)” என்று சொல்லலானார்கள். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ‘சனா’ எனும் அபிசீனியச் சொல்லுக்கு ‘அழகு’ என்பது பொருள். அறிவிப்பாளர் இஸ்ஹாக் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஆடையை உம்மு காலித் (ரலி) அவர்கள் அணிந்திருந்ததைப் பார்த்ததாக எங்கள் குடும்பப் பெண் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.64 அத்தியாயம் :

63

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆண்கள் (தமது மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.65 அத்தியாயம் :

64

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘இஹ்ராம்’ கட்டியவர் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம், அல்லது குங்குமப்பூச் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.66 அத்தியாயம் :

65

(பராஉ ர) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அதிக உயரமாகவுமில்லாமல் குட்டையாகவும் இல்லாமல்) நடுத்தர உயரமுள்ளவர்களாய் இருந்தார்கள். சிவப்புநிற அங்கி ஒன்றில் அவர்களை நான் பார்த்திருக்கிறேன். (அந்த ஆடையில்) நபி (ஸல்) அவர்களைவிட அழகான எவரையும் எப்போதும் நான் கண்டதேயில்லை.67 அத்தியாயம் :

66

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோயாளியை நலம் விசாரிப்பது, ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்து லில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்கமுகல்லாஹ்-அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் கூறுவது உள்ளிட்ட ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, ‘கஸ்’ எனும் பட்டு கலந்த (எகிப்தியப்) பஞ்சாடை, தடித்த பட்டு, மென்பட்டுத் திண்டுகள் (மீஸரா) உள்ளிட்ட ஏழு பொருட் களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.68 அத்தியாயம் :

67

சயீத் அபூமஸ்லமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘ஆம் (தொழுதுவந்தார்கள்)” என்று சொன்னார்கள்.69 அத்தியாயம் :

68

உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த் தேன். உங்கள் தோழர்களில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்க வில்லை” என்று கூறினேன். அவர்கள் ‘‘அவை யாவை? இப்னு ஜுரைஜே!” எனக் கேட்டார்கள். நான் ‘‘(கஅபாவைச் சுற்றி வரும்போது அதன் மூலைகளில் ‘ஹஜருல் அஸ்வத்’ மற்றும் ‘ருக்னுல் யமானி’ ஆகிய) இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடக் கண்டேன். மேலும், (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளை நீங்கள் அணிவதை நான் கண்டேன். நீங்கள் (உங்கள் ஆடைக்கு) மஞ்சள் சாயமிடுவதைக் கண்டேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது மக்கள் (துல்ஹிஜ்ஜா மாத) பிறை பார்த்தவுடன் ‘இஹ்ராம்’ கட்டினாலும் நீங்கள் மட்டும் (துல்ஹிஜ்ஜா) எட்டாவது நாள் வரும்வரை இஹ்ராம் கட்டாமருப்பதை நான் கண்டேன் (இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?)” என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு மூலைகளை மட்டுமே தொட்டதை நான் பார்த்தேன். (அதனால் தான் நானும் அப்படிச் செய்கிறேன்.) (முடி அகற்றப்பட்ட) செருப்புகளைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத காலணிகளை அணிவதையும் அதனுடன் அங்கத் தூய்மை (உளூ) செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அவற்றை அணிவதை விரும்புகிறேன். மஞ்சள் நிறமோ, அதைக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆடைக்குச்) சாயமிடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதனால் (என் ஆடைக்குச்) சாயமிடுவதை விரும்புகிறேன். (துல்ஹிஜ்ஜா எட்டாம் நாள்) இஹ்ராம் கட்டுவதோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் (துல்ஹிஜ்ஜா எட்டாம் நாள்) பயணத்திற்குத் தயாராகி நிற்கும்வரை இஹ்ராம் கட்டி நான் பார்த்ததில்லை.70 அத்தியாயம் :

69

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவர் குங்குமப்பூச் சாயம் அல்லது ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ‘‘(இஹ்ராம் கட்டியிருக்கும் போது) காலணிகள் கிடைக்காதவர், (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணியட்டும்; காலுறைகளைக் கணுக்கால் களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும்” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.71 அத்தியாயம் :

70

நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: (இஹ்ராமின்போது) கீழங்கி இல்லாத வர் முழுக்கால் சட்டை அணிந்துகொள் ளட்டும். காலணிகள் இல்லாதவர் (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணிந்துகொள்ளட்டும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.72 அத்தியாயம் :

71

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தாம் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போதும், தலைவாரிக் கொள்ளும்போதும், காலணி அணிந்துகொள்ளும்போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.73 அத்தியாயம் :

72

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது கால் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதல் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

73

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள். அத்தியாயம் :

74

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலணிக்கு இரண்டு வார்கள் இருந்தன. அத்தியாயம் :

75

ஈசா பின் தஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு வார்கள் கொண்ட இரு காலணி களை எங்களுக்குக் காட்டினார்கள். (பின்னர் இது குறித்துக் கூறுகையில்) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், ‘‘இதுதான் நபி (ஸல்) அவர்களின் காலணியாகும்” என்று சொன்னார்கள்.74 அத்தியாயம் :

76

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு சிவப்புக் கூடாரத் தில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்த தண்ணீரை எடுத்ததை நான் பார்த்தேன். மக்கள் அந்தத் தண்ணீருக்காகப் போட்டியிட்டனர். அதில் சிறிது கிடைக்கப்பெற்றவர் அதைத் (தமது மேனியில்) தடவிக் கொண்டார். அதிலிருந்து சிறிதும் கிடைக் கப் பெறாதவர் தம் தோழர் கையிலிருந்த ஈரத்தை எடுத்து (தடவி)க்கொண்டார்.75 அத்தியாயம் :

77

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப் பட்ட தோல் கூடாரத்தில் ஒன்று திரட்டி னார்கள்.76 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

78

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத் தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக்கொண்டு (அதில்) தொழு வார்கள். அதைப் பகல் நேரத்தில் (கீழே) விரித்துக்கொண்டு அதன்மீது அமர் வார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். இறுதியில் (இவ்வாறு இரவில் வந்து தொழும்) மக்கள் (எண்ணிக்கை) அதிகமாகிவிடவே, நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, ‘‘மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படையமாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்” என்று சொன்னார்கள்.77 அத்தியாயம் :

79

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என் அன்பு மகனே! நபி (ஸல்) அவர்களிடம் மேலங்கிகள் சில வந்திருப்பதாகவும் அவற்றை அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக்கொண்டி ருப்பதாகவும் எனக்குச் செய்தி எட்டி யுள்ளது. ஆகவே, எம்மை அவர்களிடம் அழைத்துச் செல்” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் சென்று நபி (ஸல்) அவர்களை, அவர்களின் வீட்டில் கண்டோம். அப்போது என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என் அருமை மகனே! எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு” என்று சொன்னார்கள். அதை மரியாதைக் குறைவாகக் கருதிய நான், ‘‘உங்களுக்காக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கூப்பிடுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என் அன்பு மகனே! (நபி -ஸல்) அவர்கள் சர்வாதிகாரி அல்லர்” என்று சொல்ல, நான் நபி (ஸல்) அவர்களைக் கூப்பிட்டேன். அப்போது அவர்கள் பொன் பித்தான் பொருத்தப்பட்ட அலங்காரப் பட்டு மேலங்கியொன்றை எடுத்துக் கொண்டுவந்து, ‘‘மக்ரமாவே! இதை உங்களுக்காக நான் எடுத்து வைத்தேன்” என்று சொல்லி மக்ரமாவிடம் அதைக் கொடுத்தார்கள்.78 அத்தியாயம் :

80

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பொன் மோதிரம்’ அல்லது ‘தங்க வளையம்’, சாதாரணப் பட்டு, தடித்தப் பட்டு, அலங்காரப் பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்க ளுக்குத் தடை விதித்தார்கள். மேலும், நோயாளிகளை நலம் விசாரிப் பது, ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் உங்க ளுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்குப் பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவி புரிவது ஆகிய ஏழு (நற்)செயல் களைக் கடைப்பிடிக்குமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.79 அத்தியாயம் :

81

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரத்தை அணிய வேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடை விதித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

82

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும்படி) வைத்துக்கொண்டார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்று) மோதிரம் செய்து (அணிந்து)கொண்டார்கள். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் தமது பொன் மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு, வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள்.80 அத்தியாயம் :

83

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பொன் மோதிரம்’ அல்லது ‘வெள்ளி மோதிரம்’ ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும்படி) வைத்துக்கொண்டார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று (இலச்சினை) பொறித்தார்கள். மக்களும் அதைப் போன்று மோதிரத்தைத் தயாரித்து (அணிந்து)கொண்டனர். மக்கள் அதைத் தயாரித்து (அணிந்து)கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது தமது மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு, ‘‘நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்” என்று சொன்னார்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். மக்களும் வெள்ளி மோதிரங்களை அணியலானார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த மோதிரத்தை அணிந்துகொண்டார்கள். பிறகு (அதை) உமர் (ரலி) அவர்களும், பிறகு உஸ்மான் (ரலி) அவர்களும் அணிந்துகொண்டார்கள். இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது.81 அத்தியாயம் :

84

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றை அணிந்து கொண்டிருந்தார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டு, ‘‘நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்” என்று சொன்னார்கள். மக்களும் தங்களின் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டார்கள். அத்தியாயம் :

85

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வெள்ளி மோதிரம் ஒன்றை நான் கண்டேன். பிறகு மக்கள், (அதைப் போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து)கொண்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் அணிந்திருந்த) தமது (பொன்) மோதிரத்தை(க் கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும் தம் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டனர். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

86

ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் மோதிரம் எதையேனும் தயாரித்(து அணிந்)திருந்தார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷா தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுவித்தார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களின் (கல்) மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள்.82 அத்தியாயம் :

87

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதன் (கல் பதிக்கும்) குமிழும் வெள்ளியில் ஆனதாகவே இருந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

88

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களி டம் வந்து, ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள)வே வந்துள்ளேன்” என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுப் பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள். அவர் நீண்ட நேரமாக நின்றுகொண்டி ருப்பதைக் கண்ட ஒரு மனிதர் ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) இவர் தங்களுக்குத் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துத்தாருங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இவருக்கு மணக்கொடையாகக் கொடுக்க உம்மிடம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், ‘‘ஏதுமில்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஏதேனும் கிடைக்குமா என்று) பார்” என்றார்கள். அந்த மனிதர் (எங்கோ) போய்விட்டுத் திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘போய்த் தேடுங்கள். இரும்பு மோதிரமாக இருந்தாலும் சரியே” என்று சொல்ல, அந்த மனிதர் போய்விட்டுத் திரும்பி வந்து, ‘‘இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு இரும்பு மோதிரம்கூடக் கிடைக்கவில்லை” என்றார். அவர் கீழங்கி அணிந்திருந்தார். அவருக்கு மேல்துண்டுகூட இருக்கவில்லை. அந்த மனிதர், ‘‘எனது கீழங்கியை அவளுக்கு நான் மணக்கொடையாக வழங்குகிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது கீழங்கியா? அதை இவள் அணிந்துகொண்டால், உனக்கு அதில் ஏதும் இருக்காது. அதை நீர் அணிந்துகொண்டால், இவளுக்கு அதில் ஏதும் இருக்காது” என்று சொன்னார்கள். உடனே அம்மனிதர் சற்று ஒதுங்கி அமர்ந்துகொண்டார். பிறகு அவர் திரும்பிச் செல்வதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரச்சொல்ல, அவரும் அழைத்துவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனனமாக) உள்ளது?” என்று கேட்க, அவர் இன்னின்ன அத்தியாயங்கள் என்று சில அத்தியாயங்களை எண்ணிக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்துவைத்தேன்” என்று சொன்னார்கள்.83 அத்தியாயம் :

89

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அரபியரல்லாதவர்களான (கிழக்கு ரோம் நாட்டைச் சேர்ந்த) ‘ஒரு குழுவினருக்கு’ அல்லது ‘மக்களில் சிலருக்கு’க் கடிதம் எழுத விரும்பினார் கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அரபியரல்லாதோர் முத்திரையுள்ள கடிதத்தையே ஏற்றுக்கொள்வார்கள்” என்று சொல்லப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ் வின் தூதர் முஹம்மத்) என்று இலச் சினை பொறித்தார்கள். இப்போதும் நான் ‘நபி (ஸல்) அவர்களின் விரலில்’ அல்லது ‘அவர்களின் கையில்’ அந்த மோதிரம் மின்னியதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. அத்தியாயம் :

90

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அது (அவர் களின் வாழ்நாளில்) அவர்களது கையில் இருந்தது. பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களது கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ் வின் தூதர் முஹம்மத்) என்றிருந்தது.84 அத்தியாயம் :

91

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, ‘‘நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் (‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். ஆகவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களின் சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத்திரையில்) பார்க்கின்றேன்.85 அத்தியாயம் :

92

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பைஸாந்திய) கிழக்கு ரோமானியருக்குக் கடிதம் எழுத விரும்பியபோது அவர்களிடம், ‘‘தங்கள் கடிதம் முத்திரையிடப்படாமலிருந்தால் அதை ரோமானியர் ஒருபோதும் படிக்கமாட்டார்கள்” என்று கூறப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. நான் அவர்களது கையில் (பிரகாசித்த) அதன் வெண்மையை (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது.87 அத்தியாயம் :

93

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தமது உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்துகொண்டார்கள். மக்களும் (அவ்வாறே) பொன் மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில் ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘‘நான் அதைச் செய்திருந்தேன். ஆனால், அதை நான் இனி அணியமாட்டேன்” என்று கூறிவிட்டு, அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள். மக்களும் எறிந்துவிட்டனர்.88 (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஜுவைரிய்யா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், ‘‘(நபி (ஸல்) அவர்கள் மோதிரத்தைத்) தமது வலக் கையில் அணிந்துகொண்டார்கள்” என்று சொன்னதாகவே நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :

94

அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று இலச்சினை பொறித்தார்கள். மேலும், ‘‘நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என இலச்சினை பொறித் துள்ளேன். ஆகவே, வேறு யாரும் அதைப் போன்று இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்று கூறினார்கள்.89 அத்தியாயம் :

95

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபா (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது, அவர்கள் (ஸகாத்தின் அளவை விளக்கி) எனக்குக் கடிதம் எழுதினார்கள். அப்போது (அதில் காணப்பட்ட) மோதிர (முத்திரையின்) இலச்சினை மூன்று வரிகள் கொண்டதாயிருந்தது. ‘முஹம்மத்’ என்பது ஒரு வரியிலும், ‘ரசூல்’ என்பது ஒரு வரியிலும், ‘அல்லாஹ்’ என்பது ஒரு வரியிலும் இருந்தது. அத்தியாயம் :

96

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மோதிரம் (அவர்களது வாழ்நாளில்) அவர்களின் கரத்திலேயே இருந்தது. அவர்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் அபூபக்ரின்) கரத்தில் இருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப்பின் உமர் (ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் உமரின்) கரத்தில் இருந்தது. உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வந்தபோது, அவர்கள் (ஒருமுறை) அரீஸ் எனும் கிணற்றின் (விளிம்பின்) மீது அமர்ந்திருந்த சமயத்தில் (ஏதோ சிந்தனையில் தம்மையறியாமல்) மோதிரத் தைக் கழற்றுவதும் அணிவதுமாக இருந்தார்கள். அப்போது அது (தவறி கிணற்றுக்குள்) விழுந்துவிட்டது. (அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக) உஸ்மான் (ரலி) அவர்களுடன் நாங்கள் மூன்று நாட்கள் (அங்கு) போய்வந்து கொண்டிருந்தோம். பிறகு, கிணற்று நீரை இரைத்து(த் தூர்வாரி)ப் பார்த்தார்கள். அப்போதும் அது எங்களுக்குக் கிடைக்க வில்லை.90 அத்தியாயம் :

97

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் (நோன்புப்) பெருநாளி(ன் தொழுகையி)ல் கலந்து கொண்டேன். அவர்கள் (அன்று) உரையாற்றுவதற்கு முன்பாகத் தொழுதார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு வஹ்ப் (ரலி) அவர்களது அறிவிப் பில், ‘‘பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் (தம்) மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் துணியில் போடலானார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.91 அத்தியாயம் :

98

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (தொழுகைத் திடலுக்குப்) புறப்பட்டுவந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் (தொழுகை எதுவும்) தொழவில்லை. பிறகு பெண்களிடம் வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காதணிகளையும் நறுமண மாலைகளையும் (கழற்றி) தர்மமாகத் தரலானார்கள். அத்தியாயம் :

99

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடமிருந்து) அஸ்மா (ரலி) அவர்களின் மாலையொன்று (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தொலைந்து போய்விட்டது. நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். (தேடிச் சென்றபோது) தொழுகை நேரம் வந்து விட்டது. அவர்களிடம் அங்கத் தூய்மை (உளூ) செய்யத் தண்ணீர் இல்லை. (அந்த இடத்தில்) அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவுமில்லை. அங்கத் தூய்மை (உளூ) செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். இந்த விஷயத்தை அவர்கள் (திரும்பிவந்து) நபி (ஸல்) அவர்களிடம் சென்னார்கள். அப்போது அல்லாஹ் ‘தயம்மும்’ (செய்துகொள்ள அனுமதி வழங்கும்) வசனத்தை அருளினான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அந்தக் கழுத்து மாலையை நான் (என் சகோதரி) அஸ்மாவிடமிருந்து இரவல் வாங்கியிருந்தேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.92 அத்தியாயம் :

100

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நோன்புப்) பெருநாளன்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு தார்கள். அதற்கு முன்பும் சரி; அதற்குப் பின்பும் சரி அவர்கள் (கூடுதலாக) எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்களிடம் (மகளிர் பகுதிக்கு) வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே ஒரு பெண் தனது கம்மலை(க் கழற்றி)ப் போடலானார். அத்தியாயம் :

101

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் (‘பனூ கைனுகா’ கடைவீதியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்குச்) செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) ‘‘பொடியன் எங்கே?” என்று மும்முறை கேட்டார்கள். பிறகு ‘‘அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களுடைய புதல்வர் ஹசன் (ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தவாறு நடந்து வந்தார்கள். அவர் களைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் இப்படித் தமது கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹசன் (ரலி) அவர்களும் இவ்வாறு தமது கையை விரித்தபடி (நபி (ஸல்) அவர்களை அணைத்திட) அவர்களை நோக்கி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை அணைத்துக்கொண்டு, ‘‘இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும் இவரை நேசிப்பவர் களையும் நேசிப்பாயாக” என்று பிரார்த் தனை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படிப் பிரார்த்தனை செய்தபிறகு அலீயின் புதல்வர் ஹசன் (ரலி) அவர் களைவிட வேறெவரும் எனக்கு அதிகப் பிரியமானவராக இருக்கவில்லை.94 அத்தியாயம் :

102

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும் சபித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

103

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் பெண் களையும் சபித்தார்கள். மேலும், ‘‘அவர் க(ளில் அரவானிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் இன்னாரை வெளியேற்றி னார்கள்.95 அத்தியாயம் :

104

(நபியவர்களுடைய துணைவி யார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் வீட்டில் (ஆணுமல்லாத பெண்ணு மல்லாத) அரவானி ஒருவர் இருந்தபோது நபி (ஸல்) அவர்களும் அங்கு இருந்தார்கள். அப்போது அந்த அரவானி, என் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவிடம், ‘‘அப்துல்லாஹ்வே! நாளை உங்களுக்கு தாயிஃப் நகரத்தின் மீது அல்லாஹ் வெற்றியளித்தால் ஃகைலானின் மகளை உனக்கு நான் காட்டுகிறேன். (அவளை மணந்துகொள்.) ஏனெனில், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘(அரவானிகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வரவேண்டாம்” என்று சொன்னார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: அவளுடைய வயிற்றுச் சதையின் நான்கு மடிப்புகளின் காரணத்தால் ‘‘முன்பக்கம் நான்கு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்” என்று அந்த அரவானி சொன்னார். அந்த நான்கு மடிப்புகளின் ஓரங்கள் இரு புறங்களிலும் சேர்ந்து பின்புறம் எட்டு ஓரங்களாக காட்சி தருவதால் ‘‘பின்பக்கம் எட்டு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்” என்று கூறினார்.96 ‘தரஃப்’ (ஓரம்) எனும் சொல் ஆண் பாலாயினும், அது வெளிப்படையாகக் குறிப்பிடப்படாததால் ‘அர்பஉ’ (நான்கு), ‘ஸமான்’ (எட்டு) ஆகிய எண்கள் (இலக்கண விதிக்கு மாறாக) ஆண்பாலாகவே (மூலத்தில்) குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தியாயம் :

105

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும்.97 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

106

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடி களை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங் களும் இயற்கை மரபுகளில் அடங்கும் இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

107

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகியவை இயற்கை மரபு களில் அடங்கும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

108

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்துகொள்வதற்காகச் சவரக்கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகி யவைதான் அவை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

109

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:) இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்தால் தமது தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள். அத்தியாயம் :

110

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

111

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் (தமது நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்குச் சிறிதளவே நரை ஏற்பட்டிருந்தது” என்று பதிலளித்தார்கள்.99 அத்தியாயம் :

112

ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் (தமது நரைமுடிக்குச்) சாயம் பூசியதுண்டா?” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்குச் சாயம் பூசுகின்ற அளவுக்கு நரைக்கவில்லை. அவர்களின் தாடியிóருந்த வெள்ளை முடிகளை நான் நினைத்திருந்தால் எண்ணிக் கணக்கெடுத்திருக்க முடியும்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

113

உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். (உம்மு சலமா ஒரு சிமிழைக் கொண்டு வந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி (ஸல்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டு விட்டால், அவர் தமது நீர் பாத்திரத்தை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன். அறிவிப்பாளர் இஸ்ராயீல் பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள், (சிமிழின் அளவைக் காட்டும் விதத்தில்) தம் மூன்று விரல்களை மடித்துக்காட்டினார்கள். அத்தியாயம் :

114

உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முடிகளிலிருந்து சாயமிடப்பட்ட ஒரு முடியை எங்களிடம் எடுத்துக் காட்டினார்கள். அத்தியாயம் :

115

உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உம்மு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிவப்பான முடியை எனக்குக் காட்டினார்கள்.100 அத்தியாயம் :

116

நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: யூதர்களும் கிறித்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை; ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறுசெய்யுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.102 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

117

அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு அதிக உயரமானவர்களாக வும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறம் உடைய வர்களாகவும் இல்லை; மாநிறம் கொண்ட வர்களாகவும் இல்லை; கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடியுடையவர் களாகவும் இல்லை. (மாறாக, இவற்றில் நடுநிலையாளராக இருந்தார்கள்.) நாற்பது வயதின் தொடக்கத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் தூதராக நியமித்தான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் (வேதஅறிவிப்பு நின்றுபோன மூன்று ஆண்டுகள் நீங்கலாக) பத்து ஆண்டுகளும் மதீனா நகரில் பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள்கூட இல்லாத நிலையில் அவர்களை அல்லாஹ் இறக்கச்செய்தான்.103 அத்தியாயம் :

118

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: சிவப்புநிற ஆடையில் நபி (ஸல்) அவர்களைவிட அழகானவராக வேறெ வரையும் நான் பார்க்கவில்லை. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: மாலிக் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களிடமிருந்து என் தோழர்களில் ஒருவர், ‘‘நபி (ஸல்) அவர்களின் தலைமுடி (நீண்டு வளர்ந்திருக்கும் சமயத்தில்) அவர்களின் தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தது” என்று அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை பராஉ (ரலி) அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அறிவிப் பதை நான் கேட்டிருக்கிறேன். இதை அறிவிக்கும்போதெல்லாம் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிட மிருந்து ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸில், ‘‘நபி (ஸல்) அவர்களின் (தலை)முடி அவர்களின் காதின் சோணையை எட்டும் அளவுக்கு இருந்தது” என்று இடம்பெற்றுள்ளது.104 அத்தியாயம் :

119

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (இறையில்லம்) கஅபாவின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்களில் மாநிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மாநிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள்வரை நீண்ட முடிகளில் நீ பார்த்தவற்றிலேயே மிக அழகான முடி அவருக்கு இருந்தது. அதை அவர் வாரிவிட்டிருந்தார். அதிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. அவர் ‘இரு மனிதர்களின் மீது சாய்ந்தபடி’ அல்லது ‘இரு மனிதர்களின் தோள்கள் மீது சாய்ந்தபடி’ இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தார். நான், ‘‘யார் இவர்?” என்று கேட்டேன். ‘மர்யமின் குமாரர் மஸீஹ் (ஈசா)’ என்று பதிலளிக்கப்பட்டது. அப்போது அங்கே கடும் சுருள் முடிகொண்ட, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கிருந்த கண் (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், ‘‘யார் இவன்?” என்று கேட்டேன். ‘மஸீஹுத் தஜ்ஜால்’ என்று பதிலளிக்கப்பட்டது. இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.105 அத்தியாயம் :

120

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் (தலை)முடி அவர்களது தோள்களில் பட்டுக் கொண்டிருந்தது. அத்தியாயம் :

121

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் (தலை)முடி அவர்களின் தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. அத்தியாயம் :

122

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (தலை)முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (தலை)முடி அலையலையானதாக இருந்தது. படிந்த முடியாகவும் இல்லை; சுருள் முடியாகவும் இல்லை; அவர்களின் காது மடல்களுக்கும் அவர்களது தோளுக்கும் இடையே தொங்கிக்கொண்டிருந்தது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

123

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பருத்த கைகள் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப்பின் அவர்களைப்போல் (வேறு யாரையும்) நான் பார்க்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் (தலை)முடி அலையலை யானதாக இருந்தது. படிந்ததாகவும் இல்லை; சுருள் முடியாகவும் இல்லை. அத்தியாயம் :

124

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பருத்த கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாகவும், முகம் அழகானவர்களாகவும் இருந்தார் கள். நான் அவர்களுக்கு முன்போ அவர்களுக்குப் பின்போ அவர்களைப் போல் (வேறு யாரையும்) பார்க்கவில்லை. அவர்களின் உள்ளங்கைகள் விசால மானவையாக இருந்தன. அத்தியாயம் :

125

அனஸ் பின் மாலிக் (ரலி), அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பருத்த பாதங்களை உடையவர்களாகவும் அழகிய முகம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களைப் போல் (வேறெவரையும்) நான் பார்க்கவில்லை. அத்தியாயம் :

126

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உறுதியான பாதங்களும் (உறுதியான) உள்ளங்கைகளும் உடையவர்களாக இருந்தார்கள். அத்தியாயம் :

127

அனஸ் (ரலி), அல்லது ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பருத்த உள்ளங்கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப்பின் அவர்களைப் போன்றவர் எவரையும் நான் பார்க்கவில்லை. அத்தியாயம் :

128

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது மக்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர், ‘‘அவனுடைய இரு கண்களுக்குமிடையே ‘காஃபிர்’ (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்” என்று சொன்னார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘நான் இவ்வாறு கேள்விப்பட்டதில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், ‘‘(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (எத்தகைய) உருவ அமைப்பில் இருந்தார் என்று அறிய வேண்டுமென்றால் உங்கள் தோழரை (என்னை)ப் பாருங்கள். மூசா (அலை-அவர்கள் எத்தகையவர் என்றால்) அவர்கள் பழுப்பு நிறமுடையவர்கள்; சுருள் முடி கொண்டவர்கள்; ஈச்ச மர நாரினால் மூக்கணாங்கயிறு இடப்பட்ட சிவப்பு ஒட்டகம் ஒன்றின் மீது பயணம் செய்தவாறு இருப்பார்கள். அவர்கள் (ஹஜ் செய்ய) ‘தல்பியா’ கூறியவாறு (‘அல்அஸ்ரக்’ எனும்) பள்ளத்தாக்கில் இறங்கியபோது (அவர்களைக் கண்டேன். அந்தக் காட்சியை) நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது” என்று சொன்னார்கள் எனத் தெரிவித்தார்கள்.106 அத்தியாயம் :

129

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், ‘‘(தலையில்) சடை வளர்த்திருப்பவர் (ஹஜ்ஜின் முடிவில் தலைமுடியை) மழித்துக்கொள்ளட்டும். (சடை வளர்ப்ப தன் மூலம்) களிம்பு தடவித் தலை முடியைப் படியவைப்பவர்களுக்கு ஒப்பாகிவிட வேண்டாம்” என்று சொல்ல நான் கேட்டேன். (இதை அறிவிப்பவரான சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:) (என் தந்தை) இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலைமுடியைக் களிம்பு தடவிப் படியவைத்துக்கொண்டதை நான் பார்த்தேன்” என்று கூறுவார்கள்.108 அத்தியாயம் :

130

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோது) தலைமுடியைக் களிம்பு தடவிப் படியவைத்தவர்களாக, ‘‘லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க, லா ஷரீ(க்)க ல(க்)க லப்பைக்க, இன்னல் ஹம்த வந்நிஅமத்த ல(க்)க வல்முல்(க்)க, லா ஷரீ(க்)க லக்க” என்று கூற நான் கேட்டேன். இந்த வார்த்தைகளைவிட அதிகமாக அவர்கள் எதையும் கூறவில்லை. (பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். இணையில்லா தோனே! உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமில்லை).109 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

131

நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்களின் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து இன்னும் விடுபடாமலிருக்க அவர்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்களே!” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்து விட்டேன். மேலும், என் தியாக (குர்பானி)ப் பிராணிக்கு (அடையாள) மாலை தொங்க விட்டுவிட்டேன். ஆகவே, நான் (ஹஜ் செய்து, அந்தப் பிராணியை) அறுக்கும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.110 அத்தியாயம் :

132

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், எந்த விஷயங் களில் தமக்கு (இறைக்)கட்டளை ஏதும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப்போவதை விரும்பிவந்தார்கள். வேதக்காரர்கள் தங்களது தலைமுடியை (வகிடெடுத்து வாரி விடாமல் நெற்றி யில்) தொங்கவிட்டுவந்தார்கள். இணை வைப்பாளர்கள் தங்கள் தலை (முடி)களை வகிடு எடுத்துப் பிரித்துவந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (முதலில்) முன் தலைமுடியை (நெற்றியில்) தொங்கவிட்டுவந்தார்கள். பிறகு அதை (வகிடெடுத்து)ப் பிரித்தார்கள்.111 அத்தியாயம் :

133

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டி யிருந்தபோது அவர்களின் தலை வகிடு களில் (அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன் பூசியிருந்த) நறுமணப் பொருள் மின்னியதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அப்துல்லாஹ் பின் ரஜாஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘நபி (ஸல்) அவர்களின் வகிட்டில்’ என்று (ஒருமையாக) வந்துள்ளது. அத்தியாயம் :

134

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான) என் சிறிய தாயார் மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களின் இல்லத்தில் நான் ஓரிரவு தங்கினேன். அந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். இரவில் (‘தஹஜ்ஜுத்’ தொழுகை) தொழுவதற்காக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நான் (எழுந்து) அவர்களுக்கு இடப் பக்கமாக(ப் போய்) நின்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என் தொங்கும் முடியைப் பிடித்துத் தமது வலப் பக்கத்தில் என்னை நிறுத்திக்கொண்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அம்ர் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘என் தொங்கும் முடியைப் பிடித்து’ அல்லது ‘என் தலையைப் பிடித்து’ என்று (ஐயப்பாட்டுடன்) இடம் பெற்றுள்ளது.112 அத்தியாயம் :

135

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடுமி (‘கஸஉ’) வைத்துக்கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நான், உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், ‘கஸஉ’ (குடுமி) என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஒருவர் சிறுவனின் தலைமுடியை மழிக்கும்போது (சிறிது மழித்துவிட்டு), இங்கும் அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) முடியை (மழிக்காமல்) அப்படியே விட்டுவிடுவதாகும்” என்று கூறி, தமது நெற்றிமுடி மற்றும் தலையின் இரு பக்கங்களையும் எங்களிடம் சுட்டிக் காட்டினார்கள். உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘சிறுமி, சிறுவன் இருவருக்கும் இதே சட்டம்தானா?” என்று கேட்கப்பட்டது. அவர்கள் ‘‘எனக்குத் தெரியாது. ஆனால், உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் ‘சிறுவன்’ என்று (மட்டும்)தான் சொன்னார்கள்” எனப் பதிலளித்துவிட்டு, ‘‘இது தொடர்பாக உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் திரும்பத் திரும்ப நான் கேட்டதற்கு அவர்கள், ‘‘சிறுவனுக்கு நெற்றியின் இரு பக்க முடிகளையும் பிடறி முடிகளையும் அப்படியே விட்டுவிடுவதால் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ‘கஸஉ’ என்பது அவனது தலையில் முடி எதுவும் இல்லாதிருக்க அவனுடைய நெற்றியில் மட்டும் முடியை அப்படியே விட்டுவிடுவதாகும் (இதுதான் கூடாது). இவ்வாறே தலையின் ஒரு பக்கம் மட்டும் முடியை மழித்து மறுபக்கம் அப்படியே விட்டுவிடுவதும் கூடாது” என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள். அத்தியாயம் :

136

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்து விட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டுவிடுவதைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :

137

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியபோது நான் அவர்களுக்கு என் கையால் நறுமணம் பூசிவிட்டேன். மேலும், (இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்ட போதும்) ‘மினா’வில் வைத்து (அங்கிருந்து) அவர்கள் (தவாஃபுஸ் ஸியாரத் செய்ய) புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு நறுமணம் பூசினேன். அத்தியாயம் :

138

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றி லேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவுக்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும் அவர்களின் தாடியிலும் என்னால் காண முடிந்தது. அத்தியாயம் :

139

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்புமீறி வீட்டிலிருப்பவர்கள்மீது விழக்கூடும் என்ற) காரணத்தால்தான்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

140

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலையை நான் வாரிவிட்டிருக்கிறேன். ... இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.113 அத்தியாயம் :

141

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தலைவாரிக் கொள்ளும்போதும் சரி, அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போதும் சரி இயன்ற வரை வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதே அவர்களுக்கு விருப்ப மானதாக இருந்தது.114 அத்தியாயம் :

142

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ் கூறுகின்றான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பும் அளவுக்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன். (மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையைவிட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.115 அத்தியாயம் :

143

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியபோது நான் அவர்களுக்கு என்னிட மிருந்ததிலேயே மிக நல்ல வாசனைப் பொருளைப் பூசிவந்தேன்.116 அத்தியாயம் :

144

ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும்) நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக்கொள் வார்கள். மேலும், அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட) நறுமணப் பொருளை மறுத்ததில்லை” என்று கூறினார்கள்.117 அத்தியாயம் :

145

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் என் இரு கைகளால் அவர்களுக்கு (‘தரீரா’ எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

146

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக்கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அல்லாஹ்வின் வேதத்திலும் அது உள்ளதே! ‘‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதிóருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து விலகியிருங்கள்” என்பதே அந்த (59:7ஆவது) வசனம்.120 அத்தியாயம் :

147

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் சொற்பொழிவு மேடையின் மீது நின்று கொண்டு (மெய்க்)காவலர் ஒருவரது கையிலிருந்த முடிக்கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்துக்காட்டி, ‘‘(மதீனா வாசிகளே!) உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்றதைத் தடை செய்து, ‘பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்துபோனதெல்லாம் அவர்களுடைய பெண்கள் இதைப் பயன்படுத்தியபோதுதான்’ என்று சொல்ல நான் கேட்டேன்” எனக் கூறினார்கள்.121 அத்தியாயம் :

148

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணை யிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

149

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவருடைய தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே, அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டுமுடி வைக்க விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒட்டு முடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிóருந்து அப்புறப்படுத்துகின்றான்)” என்று கூறி னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.122 அத்தியாயம் :

150

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் என் மகளுக்கு மணமுடித்துவைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளது தலைமுடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார். ஆகவே, அவளது தலையில் நான் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் சபித்தார்கள். அத்தியாயம் :

151

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் (‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத் தட்டும்’ என்று) சபித்தார்கள். அத்தியாயம் :

152

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்.) இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், ‘‘பல் ஈறுகளிலும் பச்சை குத்தப்படுவதுண்டு” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

153

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றினார்கள். மேலும், முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘‘இந்த ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் செயலை யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் இதை ‘போலி’ (‘ஸூர்’) என அழைத்தார்கள்” என்று ஒட்டுமுடி வைப்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.123 அத்தியாயம் :

154

அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், பச்சை குத்திவிடும் பெண்களையும் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்கிக்கொள்ளும் பெண்களையும் அழகிற்காக பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்களையும் (மொத்தத்தில்) அல்லாஹ் படைத்த உருவ அமைப்பை மாற்றும் பெண்களை சபித்தார்கள். (இதைக் கேள்விப்பட்ட) உம்மு யஅகூப் என்ற பெண், ‘‘என்ன இது (இவ்வாறெல்லாம் சபித்தீர்களாமே)?” என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத் தையும் நான் ஓதியுள்ளேன். (நீங்கள் குறிப்பிட்ட) அதை நான் அதில் காண வில்லையே!” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய்: ‘‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதிóருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகி இருங்கள்” (எனும் 59:7 ஆவது வசனமே அது) என்று பதிலளித்தார்கள்.125 அத்தியாயம் :

155

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் சபித்தார்கள். அத்தியாயம் :

156

அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் மகளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத்தால் அவளது தலைமுடி கொட்டிவிட்டது. அவளை நான் மணமுடித்துக் கொடுத்திருக்கிறேன். அவளது தலைமுடியுடன் ஒட்டுமுடி வைக்கலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்)” என்று சொன்னார்கள்.127 அத்தியாயம் :

157

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்துபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அத்தியாயம் :

158

அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தி லுள்ள முடிகளை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டதே” என்று சொன்னார்கள்.128 அத்தியாயம் :

159

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘கண்ணேறு (திருஷ்டிபடுவது) உண்மை தான்” என்று சொன்னார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.129 ...இந்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தும் இரு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :

160

161

அவ்ன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் குருதிஉறிஞ்சி எடுக்கும் அடிமை ஒருவரை விலைக்கு வாங்கி, அவருடைய குருதிஉறிஞ்சு கருவிகளை உடைத்தபோது) அவர்களை நான் கண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரத்தத்தின் விலையையும், நாய் விற்ற காசையும் (பெறக் கூடாதெனத்) தடை செய்தார்கள். மேலும், வட்டி உண்பவனையும் அதை உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் (சபித்தார்கள்).130 அத்தியாயம் :

162

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்தும் பெண்ணொருத்தி உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: பச்சை குத்துவதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து (ஏதேனும்) செவியுற்றவர் (யாராவது உங்களில்) இருக்கின்றாரா?” என்று (எங்களிடம்) கேட்டார்கள். நான் எழுந்து, ‘‘இறைநம்பிக்கையாளர் களின் தலைவரே! நான் செவியுற்றிருக்கி றேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்க, ‘‘(பெண்களே! பிறருக்குப்) பச்சை குத்திவிடாதீர்கள்; நீங்களும் பச்சை குத்திக்கொள்ளாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன் எனக் கூறினேன். அத்தியாயம் :

163

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் சபித்தார்கள். அத்தியாயம் :

164

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தின் முடியை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துப்பிரித்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயல்பான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப் பட்டுள்ளது.131 அத்தியாயம் :

165

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (சிலைகள் முதலான) உருவப் படங்களும் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டுவரும்) வானவர் கள் நுழையமாட்டார்கள்.132 இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

166

முஸ்லிம் பின் ஸுபைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களுடன் யசார் பின் நுமைர் (ரஹ்) அவர்களது இல்லத்தில் இருந்தோம். அப்போது யசார் (ரஹ்) அவர்களின் வீட்டுத் திண்ணையில் சில சிலைகள் இருப்பதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கண்டார்கள். உடனே ‘‘அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப் போர்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் செவியுற்றதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :

167

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப் படுவார்கள். அவர்களிடம், ‘‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)” என (இடித்து)க் கூறப்படும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

168

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டுவைத்ததில்லை. அத்தியாயம் :

169

அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல்தளத்தில் உருவப்படங்களை வரைபவர் ஒருவர் உருவங்களை வரைந்துகொண்டிருந்தார். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” என்றார்கள். பிறகு (அங்கத் தூய்மை செய்வதற்காகத்) தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி தம் இரு கைகளையும் அக்குள்வரை கழுவினார்கள். நான், ‘‘அபூஹுரைரா அவர்களே! இது (அக்குள்வரை கையைக் கழுவுவது), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற விஷயமா?” எனக் கேட்க, அவர்கள், ‘‘(அங்கத் தூய்மை செய்யப்படும் உடலுறுப்புகள் மறுமையில் வெண்மையாகும்போது அக்குள்வரை) வெண்மை பரவும்” (என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்) என்றார்கள். அத்தியாயம் :

170

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச்சித்திரங்கள் பொறித்த எனது திரைச்சீலை ஒன்றால் நான் எனது அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்து விட்டு, ‘‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தான்” என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை (இருக்கை)யாக, அல்லது இரு தலையணை (இருக்கை)களாக ஆக்கிக்கொண்டோம்.133 அத்தியாயம் :

171

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். நான் குஞ்சம் வைத்த கெட்டித் திரைச் சீலையொன்றை (வீட்டில்) தொங்கவிட்டிருந்தேன். அதில் உருவச் சித்திரங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அதைக் கழற்றிவிடும்படி என்னைப் பணித்தார்கள். ஆகவே, நான் அதைக் கழற்றிவிட்டேன். அத்தியாயம் :

172

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:) நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (அள்ளி, ஒன்றாகக்) குளித்துவந்தோம். அத்தியாயம் :

173

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (உயிரினங்களின்) உருவப்படங் கள் உள்ள திண்டு ஒன்றை வாங்கினேன். நபி (ஸல்) அவர்கள் (வீட்டின்) கதவருகே வந்து நின்றார்கள். ஆனால், உள்ளே வரவில்லை. (இதைக் கண்டு திடுக்குற்ற) நான், ‘‘நான் செய்த பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீள்கிறேன் (நான் என்ன குற்றம் செய்தேன்?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்தத் திண்டு என்ன?” என்று கேட்டார்கள். நான், ‘‘இதன் மீது நீங்கள் அமர்வதற்காகவும் இதைத் தலையணையாக நீங்கள் பயன்படுத்திக்கொள்வதற்காகவும் நான் வாங்கினேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)” என்று சொல்லப்படும். மேலும், (உயிரினங்களின்) உருவப்படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என்று கூறினார்கள்.134 அத்தியாயம் :

174

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உயிரினங்களின்) உருவப்படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள். இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள், பின்னர் நோய்வாய்ப்பட்டபோது நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்களின் வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக்கொண்டிருந்தது. நான் (உடனிருந்த) நபி (ஸல்) அவர் களின் துணைவியாரான மைமூனா (ரலி) அவர்களுடைய வளர்ப்பு மகன் உபைதுல்லாஹ் பின் அஸ்வத் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம், ‘‘உருவப்படங்களைப் பற்றி முன்பு ஒருநாள் ஸைத் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா?” என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், ‘துணியில் பொறிக்கப்பட்டதைத் தவிர’ என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார்கள்.135 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

175

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச்சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக்கொண்டேயிருக் கின்றன” என்று சொன்னார்கள்.136 அத்தியாயம் :

176

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக) வாக்களித்திருந்தார்கள். ஆனால், அவரது வருகை தாமதப்பட்டது. இதையடுத்து நபி (ஸல்) அவர்களுக்குக் கவலை உண்டானது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தாம் அடைந்த கவலையை ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் (தெரிவித்து) முறையிட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘(வானவர்களாகிய) நாங்கள் உருவப்படமும் நாயும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்” என்று சொன்னார்கள்.137 அத்தியாயம் :

177

நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது வீட்டுக்குள் நுழையாமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். அவர் களின் முகத்தில் வெறுப்பு தெரிந்தது. நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விடமும் அல்லாஹ்வின் தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘என்ன திண்டு இது?” என்று கேட்டார்கள். நான், ‘‘நீங்கள் அமர்ந்துகொள்வதற்காகவும் தலையணையாகப் பயன்படுத்திக்கொள்வ தற்காகவும்தான் இதை வாங்கினேன்” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர்கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும்” எனச் சொன்னார்கள். மேலும், உருவப்படங்கள் இருக்கும் வீட்டினுள் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என்றும் சொன்னார்கள்.138 அத்தியாயம் :

178

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் குருதி உறிஞ்சியெடுக்கும் அடிமை ஒருவரை (விலைக்கு) வாங்கி னேன். (அவருடைய குருதிஉறிஞ்சு கருவிகளை உடைத்துவிட்டேன். ஏனெ னில்,) நபி (ஸல்) அவர்கள், இரத்தத்தின் விலையையும் நாய்விற்ற காசையும் விபசாரியின் சம்பாத்தியத்தையும் (ஏற்கக் கூடாதென்று) தடை செய்தார்கள். மேலும், வட்டி (வாங்கி) உண்பவனை யும் வட்டி உண்ணக்கொடுப்பவனையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் உருவப் படங்களை வரைகின்றவனையும் சபித் தார்கள்.139 அத்தியாயம் :

179

நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களி டம் இருந்தேன். அவர்களிடம் மக்கள் விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். (பொதுவாக) தம்மிடம் (விளக்கம்) கேட்கப் படாத வரை நபி (ஸல்) அவர்கள் சொன்ன தாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (எதையும்) கூறமாட்டார்கள். அப்போது (ஒருவர் கேட்ட கேள்விக் குப் பதிலளிக்கும் வகையில்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘உலகில் ஓர் உருவப்படத்தை வரைகின்றவர் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால், அவரால் ஊத முடியாது என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :

180

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கழுதை வாகனத்தில் சேணம் விரித்து, அதன் மீது ‘ஃபதக்’ நகர முரட்டுத் துணி விரித்து அதன் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக்கொண்டார்கள்.140 அத்தியாயம் :

181

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றியின்போது) நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த சமயம், அவர்களை அப்துல் முத்தலிபின் குடும்பத்துச் சிறுவர்கள் வரவேற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்தச் சிறுவர்களில்) ஒருவரைத் தமக்கு முன்னாலும் மற்றொருவரைத் தமக்குப் பின்னாலும் (தமது ஒட்டகத்தில்) அமர்த்திக் கொண்டார்கள். அத்தியாயம் :

182

அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இக்ரிமா (ரஹ்) அவர்கள் முன்னிலையில், ‘‘(ஊர்திப் பிராணியின் மீது மூவர் அமர்ந்து செல்லக் கூடாது; அவ்வாறு அமர்ந்து செல்லும்) அந்த மூவரில் தீயவர் யார்?” என்பது குறித்துப் பேசப்பட்டது. அப்போது இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது மக்காவுக்கு) வந்தார்கள். (அவர்களை வரவேற்ற சிறுவர்களில் அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வர்களான) ‘குஸம் (ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்’ அல்லது ‘ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், குஸம் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்’ நபி (ஸல்) அவர்கள் (வாகனத்தில்) ஏற்றிக்கொண்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த மூவரில் (நபி, குஸம், ஃபள்ல்) ‘யார் தீயவர்?’ அல்லது ‘யார் நல்லவர்?’ என்று கூறமுடியுமா?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :

183

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஊர்தியில்) இருந்து கொண்டிருந்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்து டன் இணைந்த சாய்வுக் கட்டைதான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்தில் வந்து கொண்டிருந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘முஆதே!’ என்று அழைத்தார் கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்றேன். பிறகு சிறிது தூரம் சென்றபின், ‘முஆதே’ என்று (மீண்டும்) அழைத்தார் கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்றேன். சிறிது தூரம் சென்றபின் (மீண்டும்) ‘முஆதே!’ என்றார்கள். (அப்போதும்) நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கி றேன். (கூறுங்கள்)” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும். அவனுக்கு எதையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும்” என்றார்கள். இன்னும் சிறிது தூரம் சென்றபின் ‘முஆத் பின் ஜபலே’ என்று அழைத்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (சொல்லுங்கள்)” என்று பதில் கூறினேன். அவர்கள், ‘‘அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி அவனுக்கு இணைவைக்காமல்) செயல்பட்டுவரும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(இத்தகைய) மக்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமையாகும்” என்று சென்னார்கள்.141 அத்தியாயம் :

184

அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட்டோம். அபூதல்ஹா (ரலி) அவர்கள் சென்றுகொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நான் (ஊர்தியில்) அமர்ந்துகொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களுடைய ஊர்தியில்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா) அமர்ந்துகொண்டிருந்தார். அப்போது (நபியவர்களின்) ஒட்டகம் இடறிவிழுந்தது. நான், ‘‘(அந்த ஒட்டகத்தில்) பெண் இருக்கிறாரே!” என்று சொன்னேன். பிறகு நான் (என் ஊர்தியிலிருந்து) இறங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் உங்கள் அன்னை” என்று சொன்னார்கள். பிறகு, நான் சேணத்தைக் கட்டினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏறிக்கொண்டு) பயணம் செய்யலானார்கள். மதீனாவை ‘நெருங்கியபோது’ அல்லது ‘பார்த்தபோது’ நபி (ஸல்) அவர்கள் ‘‘பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாக, எங்கள் இறைவனை வழிபட்டவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக (நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கிறோம்)” என்று கூறினார்கள்.142 அத்தியாயம் :

185

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கால்களில் ஒன்றை மற்றொன்றின்மீது தூக்கிவைத்தவர்களாகப் பள்ளிவாசலில் (மல்லாந்து) படுத்திருப்பதை நான் பார்த்தேன்.143 அத்தியாயம் :