57 - கும்ஸ்
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து எனது பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) தாம்பத்தியம் தொடங்க விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னு டன் வந்து யிஇத்கிர்’ புல்லைக் கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன் படுத்திக்கொள்ள நான் விரும்பினேன். நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளையும் தீனிப் பைகள், மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன். அப்போது என் இரு ஒட்டகங்களும் அன்சாரி ஒருவருடைய அறையின் அருகே மண்டியிட்டு அமரச்செய்யப் பட்டிருந்தன. நான் சேகரிக்க விரும்பிய வற்றைச் சேகரித்துவிட்டபோது திரும்பி வந்தேன். அப்போது என் இரு ஒட்டகங் களின் திமில்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றின் (அடி வயிற்று) இடுப்புப் பகுதி (கத்தியால்) கிழிக்கப்பட்டிருந்தது. அவற் றின் ஈரல் குலைகள் பிடுங்கப்பட்டி ருந்தன. அவற்றின் இந்த (அவல)க் காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் (கண்ணீர் சிந்த விடாமல்) கட்டுப்படுத்த முடியவில்லை. நான், ‘‘இதையெல்லாம் செய்தவர் யார்?” என்று கேட்டேன். மக்கள், ‘‘ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப்தான் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழு ஒன்றில்தான் இருக்கிறார்” என்று பதிலளித்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களிடம் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களுடைய செயலால் நான் அடைந்த வேதனை என் முகத்தில் தென்பட, அதைப் புரிந்துகொண்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இன்றைய நாளைப் போன்ற (பயங்கரமான) ஒரு நாளை ஒருபோதும் நான் பார்த்த தில்லை. ஹம்ஸா என் இரு ஒட்டகங்களை யும் தாக்கி அவற்றின் திமில்களை அறுத்துவிட்டார். அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதிகளை (வாளால்) கிழித்து விட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் நண்பர்கள் குழுவுடன் இருக்கிறார்” என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது அங்கி ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்துகொண்டு நடந்து செல்ல, அவர்களை நானும் ஸைத் பின் ஹாரிஸா வும் பின்தொடர்ந்து சென்றோம். ஹம்ஸா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபிக்கு அனுமதி கொடுத்தார்கள். அங்கே அவர்கள் (அனைவரும்) மது அருந்திக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹம்ஸாவை அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸாவின் இரு கண்களும் சிவந்திருக்க, அவர் போதையுற்றிருந்தார். ஹம்ஸா, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் பார்வையை உயர்த்தி அவர்களின் இரு முழங்கால்களையும் பார்த்தார்; பிறகு பார்வையை உயர்த்தி, அவர்களின் வயிற்றுப் பகுதியைப் பார்த்தார்; பிறகு தலையை உயர்த்தி அவர்களுடைய முகத்தைப் பார்த்தார். பிறகு, ‘‘நீங்கள் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார்.2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, தாம் வந்த வழியே (திரும்பாமல்) அப்படியே பின்வாங்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.3 அத்தியாயம் :
முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரஹ்) அவர்களிடம் சென்று அந்த (ஃபதக் தொடர்பான) நிகழ்ச்சி பற்றிக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: நான் என் வீட்டாருடன் ஒரு நீண்ட பகல் வேளையில் அமர்ந்திருந்தபோது (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் தூதர் ஒருவர் என்னிடம் வந்து, ‘‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அழைக்கிறார், வாருங்கள்” என்று சொன்னார். நான் அவருடன் சென்று உமர் (ரலி) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அவர்கள் அங்கே ஒரு கட்டிலில் ஈச்ச ஓலையாலான மேற்பரப்பில் அதற்கும் தமக்கும் இடையே பாய் எதுவுமில்லாமல் ஒரு தோல் தலையணையின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தேன். அப்போது அவர்கள், ‘‘மாலிக்கே! உங்கள் குலத்தாரில் சில குடும்பத்தார் நம்மிடம் வந்தனர். அவர்களுக்கு (அளவு குறிப்பிடாமல்) சிறிய ஓர் அன்பளிப்புத் தரும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். அதை உங்கள் கைவசமாக்கிக் கொண்டு அவர்களிடையே நீங்கள் பங்கிட்டு விடுங்கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! வேறெவரிடமாவது இந்தப் பொறுப்பை நீங்கள் ஒப்படைத்தால் நன்றாயிருக்குமே” என்று சொன்னேன். அதற்கு, ‘‘நீங்கள் அதைக் கைவச மாக்கிக் கொண்டுசென்று அவர் களிடையே பங்கிடுங்கள்” என்று (மீண்டும்) உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். நான் உமரிடம் அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் அவர்களுடைய மெய்க்காவலர் யியர்ஃபஉ’ என்பவர் வந்து, ‘‘உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள், ‘‘ஆம்” என்று அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து சலாம் சொல்லி அமர்ந்தார்கள். பிறகு யியர்ஃபஉ’ சற்று நேரம் தாமதித்து வந்து, ‘‘அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் தாங்கள் சந்திக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘ஆம்” என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர். அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்” என்று சொன்னார்கள் லிஅல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூ நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து (யிஃபய்உ’ நிதியாகக்) கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டு வந்தனர்லி அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் மற்றும் அவர்களுடைய தோழர்களின் குழு, ‘‘இறைநம்பிக்கையாளர் களின் தலைவரே! அவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்துவிடுங்கள்” என்று கூறியது. உமர் (ரலி) அவர்கள், ‘‘பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்ற னவோ அவன் பொருட்டால் கேட்கின் றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(நபிமார்களான எங்களுக்கு) எவரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே” என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், ‘‘அவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்” என்று பதிலளித்தனர். உடனே உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, ‘‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவ்விருவரும், ‘‘ஆம், அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்” என்று பதிலளித்தனர். உமர் (ரலி) அவர்கள், ‘‘அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இந்தச் செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை...” (என்று கூறிவிட்டு,) ‘‘அல்லாஹ் எந்தச் செல்வத்தை அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக்கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச்சென்றதால் கிடைத்ததல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகின்றவர்களின் மீது தன் தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்” எனும் (இந்த 59:6) இறைவசனத்தை ஓதினார் கள்.6 தொடர்ந்து, ‘‘எனவே, இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை; அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில், அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே மீதமாயிற்று. அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவுக்காக அவர்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள்.” (இவ்வளவும் சொல்லிவிட்டு,) ‘‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கின்றேன். இதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தார்கள். பிறகு, அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும், ‘‘உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன். நீங்கள் இதை அறிவீர் களா?” என்று கேட்டுவிட்டு (தொடர்ந்து), ‘‘பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத் துக்கொண்டான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், யிநான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்’ என்று கூறி அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப்போல் செயல்பட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள்; நல்ல விதமாக நடந்துகொண்டார்கள்; நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான். அப்போது நான் அபூபக்ர் (ரலி) அவர் களின் பிரதிநிதியாக ஆனேன். அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு வருடங் களுக்கு என் கைவசம் எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் நடந்துகொண்ட முறைப்படியும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நடந்துகொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டு வந்தேன். நான் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன்; நல்ல விதமாக நடந்துகொண்டேன்; நேரான முறையில் நடந்துகொண்டேன்; உண்மை யையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு, நீங்கள் இருவரும் என்னிடம் வந்து பேசினீர்கள்; நான் உங்களிடம் ஒருமுறை பேசினேன். உங்கள் இருவரின் விஷயமும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள்.7 இவரும் என்னிடம் தம் மனைவிக்கு அவரது தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கை (பெற) விரும்பியபடி வந்தார் லிஅலீ (ரலி) அவர்களைத்தான் அப்படிச் சொன்னார்கள்8லி நான் உங்கள் இருவரிடமும், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான நாங்கள் விட்டுச்செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே’ என்று சொன்னார்கள்’ என்றேன். எனினும், ‘அதை உங்கள் இருவரிடமே கொடுத்துவிடுவதுதான் உசிதமானது’ என்று எனக்குத் தோன்றியபோது நான், ‘நீங்கள் இருவரும் விரும்பினால் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தமும் அவனுக் களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப் பாக இருக்க, ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்ர் (ரலி) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள்’ என்னும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும், யிஎங்களிடம் அதைக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்துவிட்டேன்” என்று சொன்னார்கள். பிறகு (குழுவினரை நோக்கி), ‘‘ஆகவே, நான் உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் கேட்கின்றேன். நான் இவ்விருவரிடமும் அந்த நிபந்தனையின்படி அந்தச் சொத்தைக் கொடுத்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். குழுவினர், ‘‘ஆம் (கொடுத்துவிட்டீர்கள்)” என்று பதிலளித்தனர். பிறகு அலீ (ரலி) மற்றும் அப்பாஸ் (ரலி) ஆகியோரை நோக்கி, ‘‘நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பெயரால் கேட்கின்றேன். நான் அதை உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின்படியே கொடுத்துவிட்டேனா?” என்று கேட்க, அவ்விருவரும், யிஆம்’ என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிட மிருந்து கோருகின்றீர்களா? எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலைபெற் றுள்ளனவோ அவன்மீது சத்தியமாக! நான் அந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தரமாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்துவிடுங்கள். அதை உங்களுக்குப் பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்” என்று சொன்னார்கள்.9 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (எங்களது) இந்தக் கிளை யிரபீஆ’ குலத்தைச் சேர்ந்ததாகும். எங்களுக்கும் உங்களுக்குமிடையே யிமுளர்’ குலத்து நிராகரிப்பாளர்கள் (நாம் ஒருவரையொருவர் சந்திக்கத்) தடையாக உள்ளனர். ஆகவே, (போர் செய்வதும் கொள்ளையும் வழிப்பறியும் அனைவராலும் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களில் தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் தங்களிடம் வந்துசேர முடியாதவர்களாயிருக்கின்றோம். எனவே, நாங்கள் எடுத்து நடக்கவும் எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் தங்கி விட்ட)வர்களுக்கு எடுத்துச்சொல்லவும் ஏற்ற ஒரு விஷயத்தை எங்களுக்குக் கட்டளையிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான்கு விஷயங்களை உங்களுக்குக் கட்டளை யிட்டு நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கிறேன். நான் கட்டளையிடு பவை: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது; ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’ என்று சாட்சியம் மொழிவது லி(இதைச் சொல்லியபடி) நபி (ஸல்) அவர்கள் தம் கையால் (எண்ணிக்) கணக்கிட்டார்கள்லி தொழுகையைக் கடைப்பிடிப்பது, ஸகாத் கொடுப்பது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களுக்குக் கிடைக்கும் போர்ச் செல்வங் களிலிருந்து ஐந்திலொரு பங்கை அல்லாஹ்வுக்காகச் செலுத்திவிடுவது ஆகியன. மேலும், (மது வைத்திருக்கப் பயன்படுகின்ற) சுரைக்காய்க் குடுவைகள்; மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரங்கள், மண் சாடிகள் ஆகியவற்றை (பயன்படுத்த வேண்டாமென்று) உங்களுக்குத் தடை செய்கின்றேன்” என்று கூறினார்கள்.10 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் வாரிசுகள் ஒரு பொற்காசைக்கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்குச் சேரவேண்டிய வாழ்க்கைச் செலவும் என் பிரதிநிதியின் ஊதியமும்போக நான் விட்டுச்செல்பவை யெல்லாம் தர்மமேயாகும்.11 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.12 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் நிலைப்பேழையிலிருந்த சிறிதளவு தொலி நீக்கப்பட்ட கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு, அதை நான் அளந்தேன். (அதனால், சிறிது காலத் திற்குப்பின்) அது தீர்ந்துபோய்விட்டது. அத்தியாயம் :
அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தை யும் வெள்ளைக் கோவேறுக் கழுதை யையும் தவிர வேறெதையும் (தாம் இறந்தபோது) விட்டுச்செல்லவில்லை. மேலும், அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தர்மமாக விட்டுச்சென்றார்கள்.13 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நோயின் கடுமை அதிகரித்து விட்டபோது என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட தம் மற்ற மனைவிமார்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்.14 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் வீட்டில் எனது முறைக்குரிய நாளில் (வந்திருந்தபோது) என் தொண்டைக்கும் என் மார்புக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் எனது எச்சிலையும் அவர்களுடைய எச்சிலையும் ஒன்றுசேர்த்திருந்தான். (எப்படியெனில்) நபி (ஸல்) அவர்கள் (கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் குச்சியைக் கொண்டுவந்தார். நபி (ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பலவீனமாக இருந்தார்கள். ஆகவே, நான் அந்தக் குச்சியை எடுத்து மென்று பிறகு அதனால் நபி (ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கிவிட்டேன்.15 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துகொண்டிருந்தபோது நான் அவர் களைச் சந்திக்கச் சென்றேன்; (சந்தித்து முடித்த) பின்பு திரும்பிச் செல்ல எழுந்தேன். என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எழுந்தார்கள். தமது (மற்றொரு) மனைவி உம்மு சலமா (ரலி) அவர்களின் வீட்டு வாசலை ஒட்டியுள்ள பள்ளிவாசல் கதவுக்கு அருகே வந்து சேர்ந்தபோது எங்கள் இருவரையும் இரண்டு அன்சாரிகள் கடந்துசென்றனர். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி சலாம் கூறி விட்டுச் சென்றுவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘‘அவசரப்படாதீர்கள். (இவர் என் மனைவிதான்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்படித் தங்களிடம் சொன்னது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதற்கு அவ்விருவரும், ‘‘அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களை நாங்கள் சந்தேகிப்போமா?)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மனிதனின் இரத்தம் சென்றடை யும் இடங்களில் எல்லாம் ஷைத்தானும் சென்றடைகின்றான். உங்கள் உள்ளங்களில் அவன் சந்தேகம் எதையேனும் போட்டு விடுவானோ என்று நான் அஞ்சினேன்” என்று பதிலளித்தார்கள்.16 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குமேலே (ஒரு வேலையாக) நான் ஏறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் கிப்லாவுக்கு முதுகைக் காட்டியபடியும் ‘ஷாம்’ (சிரியா) திசையை நோக்கியபடியும் (கழிப்பிடத்தில்) இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.17 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் அறை’லிருந்து சூரிய வெளிச்சம் விலகாத நிலையில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.18 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, ஆயிஷா (ரலி) அவர்களின் உறைவிடத்தை (இராக் நாடு அமைந்துள்ள கிழக்குத் திசையை) நோக்கிச் சைகை செய்து, ‘‘இங்கிருந்துதான் குழப்பம் ஏற்படும்” என்று மூன்று முறை கூறிவிட்டு, ‘‘ஷைத்தானின் கொம்பு எங்கிருந்து உதயமாகின்றதோ அங்கி ருந்து....” என்று கூறினார்கள்.19 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டுக்கொண்டிருக்கும் குரலை நான் செவியுற்றேன். உடனே நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! இதோ, ஒரு மனிதர் தங்கள் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்கின்றார்” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரை இன்னார்லி ஹஃப்ஸாவின் தந்தைக்குப் பால்குடிச் சகோதரர்லி என்று நான் கருதுகின்றேன்; (ஒருவருடைய வயிற்றில்) பிறப்பது எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் (ஒருவரிடம்) பால்குடிப்பதும் நெருங்கிய உறவுகளாக்கிவிடும்” என்று கூறினார்கள்.20 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக (கலீஃபா) ஆக்கப்பட்ட பொழுது, என்னை பஹ்ரைனுக்கு (ஆளுந ராக) அனுப்பிவைத்தார்கள். எனக்கு ஓர் ஆணையை எழுதி, அதில் நபி (ஸல்) அவர்களுடைய மோதிரத்தால் முத்திரை யிட்டார்கள்.21 அந்த மோதிரத்தில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டிருந்தன. யிமுஹம்மத்’ (எனும் சொல்) ஒரு வரியிலும் யிரசூல்’ (யிதூதர்’ எனும் சொல்) ஒரு வரியிலும் ‘அல்லாஹ்’ (‘அல்லாஹ்வின்’ எனும் சொல்) ஒரு வரியிலும் (யிமுஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ லி ‘அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்’ என்று) பொறிக்கப்பட்டிருந்தது. அத்தியாயம் :
ஈசா பின் தஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் இரண்டு தோல்வார்கள் கொண்ட, (அணிந்து) நைந்துபோன இரு காலணிகளைக் காட்டினார்கள். பின்னர், ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், ‘‘அவ்விரண் டும் நபி (ஸல்) அவர்களின் காலணிகள்” என்று அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள். அத்தியாயம் :
அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் ஒட்டுப்போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக்காட்டி, ‘‘இதை உடுத்திக்கொண்டி ருந்தபோதுதான் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சுலைமான் பின் அல்முஃகீரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது: ஆயிஷா (ரலி) அவர்கள் யமன் நாட்டில் தயாரிக்கப்படுகின்ற கெட்டியான கீழங்கி ஒன்றையும் நீங்கள் ‘அல்முலப்பதா’ (ஒட்டுப்போட்டது) என்றழைக்கின்ற வகையிலிருந்து ஒரு போர்வையையும் (நபி (ஸல்) அவர்களுடையவை என்று) எடுத்துக்காட்டினார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் (மரத்தாலான) குவளை உடைந்துவிட்டது. (உடைந்து போய்) ஓட்டை (ஏற்பட்ட) பகுதியை நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிச் சங்கிலியால் அடைத்துவிட்டார்கள். அறிவிப்பாளர் ஆஸிம் (ரஹ்) அவர்கள், ‘‘நான் அந்தக் குவளையைக் கண்டேன். அதில் தண்ணீர் குடித்தேன்” என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :
அலீ பின் ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன்) (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் லிஅவர்கள்மீது அல்லாஹ் கருணை புரிவானாக!லி கொல்லப்பட்ட காலகட்டத்தில் யஸீத் பின் முஆவியா வைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தேன்.22 என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகி றீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கின்றேன்)” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு ‘‘அப்படி எதுவுமில்லை” என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாளை எனக்குக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தார் உங்களிடமிருந்து தமது அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக்கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணை யாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்றுசேராது” என்று கூறினார்.23 (பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கள் (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூஜஹ்லுடைய மகளை (மணந்துகொள்ள)ப் பெண்பேசினார்கள். (அந்த நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தமது இந்தச் சொற்பொழிவு மேடையில் (நின்ற படி) உரையாற்றியதை நான் செவியுற் றேன். லிஅப்போது நான் பருவவயதை அடைந்துவிட்டிருந்தேன்லி நபி (ஸல்) அவர்கள், ‘‘ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தமது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படு வார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை லி(அபுல்ஆஸ் பின் ரபீஉவை)லி அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைக் குறித்து (நினைவுகூர்ந்து) புகழ்ந்தார்கள். ‘‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்கு றுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்.24 மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்றுசேர முடியாது” என்று கூறினார்கள்.25 அத்தியாயம் :
இப்னு ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள்26 கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களைக் குறை பேசுபவர்களாக இருந்திருப்பின் மக்கள் சிலர் அவர்களிடம் வந்து, உஸ்மான் (ரலி) அவர்களுடைய (அரசின்) ஸகாத் வசூலிக்கும் ஊழியர்கள் குறித்து முறையிட்டபோதே குறை பேசியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அலீ (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘நீ உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று, யிஇந்த ஏடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்த ஸதகா (ஸகாத்தின் சட்டங்கள்) ஆகும். இந்த ஏட்டிலுள்ளபடி ஸகாத் வசூலிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று தெரிவி” என்று கூறினார்கள். நான் அதை எடுத்துக்கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘‘அது நமக்குத் தேவையில்லை. (அது ஏற்கெனவே நம்மிடம் உள்ளது)” என்று கூறிவிட்டார்கள். ஆகவே, நான் அதை அலீ (ரலி) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்து விவரம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ‘‘அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிடு” என்று கூறினார்கள். அத்தியாயம் :
முஹம்மத் பின் ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்), ‘‘இந்த ஏட்டை எடுத்துக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் போ! ஏனெனில், இதில்தான் ஸகாத் பற்றிய நபி (ஸல்) அவர்களின் கட்டளைகள் உள்ள”’ என்று சொல்லி என்னை அனுப்பினார்கள்.27 அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் துணைவியாரான) ஃபாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் (அவர் களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள். (விவரமறிந்துகொண்ட) நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி (ஸல்) அவர்கள், ‘‘(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இரு வரும் இருங்கள்” என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின்மீது உணர்ந் தேன். (அந்த அளவுக்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்துகொண்டார்கள்). பின்னர், ‘‘நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிடச் சிறந்த ஒன்றை உங்க ளுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும், யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் லிஅன்சாரிகளில்லி ஒரு மனிதருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு யிமுஹம்மத்’ என்று பெயர் வைக்க அவர் விரும்பினார். அந்த அன்சாரித் தோழர் (அனஸ் பின் ஃபுளாலா (ரலி) அவர்கள்) என்னிடம் கூறினார்: நான் அக்குழந்தையை என் கழுத்தில் சுமந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்; நபி (ஸல்) அவர்கள், ‘‘என் பெயரைச் சூட்டி அழையுங்கள். ஆனால், (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டி அழைக்காதீர்கள்.ஏனெனில், நான் உங்களிடையே பங்கீடு செய்பவனாகவே (காசிம்) ஆக்கப்பட்டுள் ளேன்” என்று கூறினார்கள்.29 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘நான் பங்கிடுப வனாக அனுப்பப்பட்டுள்ளேன். உங்களி டையே நான் பங்கிடுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அம்ர் பின் மர்ஸூக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுவதாவது: அந்த அன்சாரித் தோழர் ‘காசிம்’ என்ற பெயரைத் தம் குழந்தைக்குச் சூட்ட விரும்பினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்; என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது அக்குழந்தைக்கு அவர் யிகாசிம்’ என்று பெயர் சூட்டினார். அப்போது மற்ற அன்சாரித் தோழர்கள், ‘‘உம்மை நாங்கள் அபுல்காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைக்கவும்மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும்மாட்டோம்” என்று கூறினார்கள். அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நான் யிகாசிம்’ என்று பெயர் சூட்டினேன். அன்சாரித் தோழர்கள், யிஉம்மை நாங்கள் ‘அபுல்காசிம்’ என்ற குறிப்புப் பெயரால் அழைக்கவும்மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும் மாட்டோம்’ என்று கூறிவிட்டார்கள்” என்று சொன்னார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அன்சாரிகள் நல்ல வேலை செய்தார்கள். ஆகவே, என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், எனது (அபுல் காசிம் என்னும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நான் பங்கிடுபவú”’ என்று கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருக்கு அல்லாஹ் நன்மை புரிய நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைத் தருகின்றான். அல்லாஹ்வே கொடுப்பவனாவான்; நான் பங்கிடுபவன் ஆவேன். இந்த (என்) சமுதாயத்தார், அவர்களை எதிர்ப்பவர்கள்மீது ஆதிக்கம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். இறுதி யில், அவர்கள் ஆதிக்கம் பெற்றவர்களாக இருக்கும் நிலையிலேயே இறைக்கட்டளை (மறுமை நாள்) வந்துவிடும்.30 இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (எதையும்) உங்களுக்குக் கொடுப்பதுமில்லை; (எதையும்) உங்களுக் குக் கொடுக்காமல் தடுத்து நிறுத்திக் கொள்வதுமில்லை. நான் பங்கிடுபவன்தான். எங்கு கொடுக்கும்படி (அல்லாஹ்வால்) எனக்குக் கட்டளையிடப்படுகிறதோ அங்கு கொடுக்கின்றேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாகப் பங்கிடாமல் (அநியாயமாகப் பங்கீடு செய்து) கையாள் கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே கிடைக்கும். இதை கவ்லா அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரைகளின் நெற்றிகளில் நன்மையும் நற்பலனும் போர்ச் செல்வமும் மறுமை நாள்வரை பிணைக்கப்பட்டிருக்கின்றன.34 இதை உர்வா பின் அல்ஜஅத் அல் பாரிக்கீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பாரசீகப் பேரரசர்) இப்போதைய கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப்பின் கிஸ்ரா எவரும் இருக்கமாட்டார். (கிழக்கு ரோமானியப் பேரரசரான இப்போதைய) சீசர் அழிந்துவிட்டால் அவருக்குப்பின் சீசர் எவரும் இருக்கமாட்டார். என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவ்விருவரின் (கிஸ்ரா மற்றும் சீசரின்) கருவூலங்களை நீங்கள் அல்லாஹ் வின் பாதையில் செலவழிப்பீர்கள்.35 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப் பிறகு கிஸ்ரா எவரும் இருக்கமாட்டார். (தற்போதைய கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அவருக்குப் பிறகு சீசர் எவரும் இருக்கமாட்டார். என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் அவ்விருவரின் கருவூலங்களையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பீர்கள். இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. (எனக்கு முந்தைய இறைத்தூதர்களுக்கு அனுமதிக் கப்படவில்லை).36 இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் போரிடு வதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவன் பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் புகுத்துவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மை யுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத் துடன் அவரை அவரது வீட்டிற்குத் திரும்பக் கொண்டுவர அல்லாஹ் பொறுப் பேற்றுக்கொண்டுள்ளான்.37 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்களில் ஒருவர் அறப் போருக்குச் சென்றார்.38 அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், ‘‘ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவர் அவளுடன் தாம்பத்தியம் தொடங்க விரும்பி இன்னும் தொடங்காமல் இருந்தால், அவர் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் கூரையை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக்கொண்டிருப் பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம்” என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார். ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸ்ர் தொழுகையின் நேரத்தில், அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக்கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப்போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, ‘‘நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்” என்று கூறிவிட்டு, ‘‘இறைவா! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்துவிடுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.39 எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும்வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது. (வெற்றி பெற்ற)பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார். அப்போது அதை (எரித்துக் கருக்கி) உண்பதற்கு (வானிலிருந்து) நெருப்பு வந்தது. ஆனால், அவற்றை அது உண்ண வில்லை.40 ஆகவே, அந்த இறைத்தூதர், ‘‘(இந்தப் பொருட்களிலிருந்து) திருடப்பட்ட பொருள் ஒன்று உங்களிடையே உள்ளது. ஆகவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு மனிதர் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்” என்று கூறினார். (உறுதிமொழி கொடுத்துக் கொண்டிருந்தபோது) ஒரு மனிதனின் கை இறைத்தூதரின் கையோடு ஒட்டிக்கொண் டது. அப்போது இறைத்தூதர், ‘‘உங்களி டையேதான் திருடப்பட்ட பொருள் உள்ளது. ஆகவே, உன் குலத்தார் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்” என்று கூறினார்.41 (அவ்வாறே அவர்கள் கொடுக்க) இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை அவருடைய கையுடன் ஒட்டிக்கொண்டது. அப்போது அவர், ‘‘உங்களிடையேதான் திருடப்பட்ட பொருள் உள்ளது” என்றார். ஆகவே, அம்மக்கள் தங்கத்தாலான பசுமாட்டுத் தலை ஒன்றைக் கொண்டுவந்து அதை வைத்தனர். நெருப்பு வந்து அதைத் தின்றுவிட்டது. பிறகு அல்லாஹ், போரில் கிடைக்கும் பொருட்களை (எடுத்துக்கொண்டு பயன்படுத்த) நமக்கு அனுமதியளித்தான்.42 நமது பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு அதை நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்களின் வருங்காலத் தலை முறை இல்லாவிட்டால் நபி (ஸல்) அவர்கள் கைபர் பகுதியைப் பங்கிட்டதைப் போன்று நான் வெல்கின்ற ஒவ்வோர் ஊரையும் (அவ்வூரிலுள்ள நிலங்களையும்) அதை (வென்றவர்களான) உரியவர்களி டையே பங்கிட்டிருப்பேன். இதை அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘யிஒரு மனிதர் போரில் கிடைக்கும் பொருட்களுக்காகப் போரிடுகிறார். மற்றொரு மனிதர் தாம் (புகழ்ந்து) பேசப் பட வேண்டும் என்பதற்காகப் போர் புரிகிறார். (இன்னொருவர்) தமது (வீரமிக்க) அந்தஸ்தைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகப் போர் புரிகிறார். (இவர்களில்) யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர் ஆவார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘யார் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறாரோ அவர்தான் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.43 அத்தியாயம் :
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குத் தங்கப் பித்தான்கள் கொண்ட பட்டு அங்கிகள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவற்றை அவர்கள் தம் தோழர்கள் சிலரிடையே பங்கிட்டார்கள். அவற்றிலிருந்து (ஒன்றை) மக்ரமா பின் நவ்ஃபல் (ரலி) அவர்களுக்காகத் தனியே எடுத்து வைத்தார்கள். மக்ரமா (ரலி) அவர்கள், தம் மகன் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களுடன் வந்து வாசலருகே நின்று, ‘‘நபி (ஸல்) அவர்களை எனக்காகக் கூப்பிடு” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், மக்ரமா (ரலி) அவர்களின் குரலைக் கேட்டு, அங்கியை எடுத்துக்கொண்டு வந்து மக்ரமாவைச் சந்தித்து, தங்கப் பித்தான்களுடன் அவரை வரவேற்று, ‘‘மிஸ்வரின் தந்தையே! உமக்காக நான் இதை எடுத்து வைத்தேன். மிஸ்வரின் தந்தையே! உமக்காக நான் இதை எடுத்து வைத்தேன்” என்று சொன்னார்கள். (ஏனெனில்,) மக்ரமா (ரலி) அவர்களின் இயல்பில் சிறிது (கடுமை) இருந்தது.44 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா, பனூ நளீர் ஆகிய குலத்தாரை வெற்றி கொள்ளும்வரை, (இலவசமாகப் பயன் படுத்திக்கொள்ளும்படி தம்) பேரீச்ச மரங்களை நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் கொடுத்துவைத்திருந்தார்கள். அதன் (பனூ குறைழாவையும் பனூ நளீரையும் வெற்றி கொண்ட) பிறகு அவற்றை அவர்களிடமே நபி (ஸல்) அவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார் கள்.45 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் பின் அல் அவ்வாம் (ரலி) அவர்கள் யிஜமல்’ போரின் போது நின்றபடி என்னை அழைத்தார்கள்.46 நான் அவர்களின் பக்கத்தில் சென்று நின்றேன். அவர்கள், ‘‘என் அன்பு மகனே! இன்று (தமக்கு எதிரானவரின் பார்வையில்) அக்கிரமக்காரராகவோ (தமது பார்வையில்) அநீதி இழைக்கப்பட்டவராகவோ இருப்பவரைத் தவிர வேறெவரும் கொல்லப்படமாட்டார்கள். நான் இன்று அநீதியிழைக்கப்பட்ட நிலையில் (நிரபராதி யாகக்) கொல்லப்பட்டுவிடுவேன் என்றே கருதுகிறேன். (அதைவிட) எனது கடன் தான் எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. நமது கடன் நமது செல்வத்தில் எதையாவது மீதிவைக்கும் என்று நீ கருதுகிறாயா? மகனே! நம் சொத்தை விற்றுவிட்டு என் கடனை அடைத்துவிடு” என்று சொன்னார்கள். பிறகு தமது சொத்தில் மூன்றிலொரு பங்கை (இன்ன நற்பணிகளுக்காகச் செலவிட வேண்டுமென்று இறுதி விருப்பம் தெரிவித்து) சாசனம் செய்தார்கள். அந்த மூன்றிலொரு பங்கில் மூன்றிலொரு பங்கைத் தம் மக்களுக்கு லி அப்துல்லாஹ்வின் மக்களுக்கு லி கொடுக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்கள். அதாவது ‘‘ஒன்பதில் ஒரு பங்கைலி அதுவும் நம் சொத்திலிருந்து கடனை அடைத்த பின்பு மீதியிருந்தால் லி உன் மக்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்” என்று விருப்பம் தெரிவித்தார்கள். லிஏனெனில், அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் பிள்ளைகள் சிலர், ஸுபைர் (ரலி) அவர் களின் பிள்ளைகளான குபைப், அப்பாத் ஆகியோருக்கு ஈடான வயதுடையவர் களாய் இருந்தனர். அப்போது ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஒன்பது ஆண் பிள்ளைகளும் ஒன்பது பெண் பிள்ளை களும் இருந்தனர்லி (தொடர்ந்து) அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: தமது கடனை அடைத்துவிடும்படி என்னிடம் சொல்லத் தொடங்கினார்கள். பிறகு, ‘‘என் அன்பு மகனே! அதில் சிறிது உன்னால் அடைக்க முடியவில்லையென் றால் என் எஜமானிடம் உதவி கேள்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள், யிஎன் எஜமான்’ என்று யாரைக் குறிப்பிட்டார்கள் என்று (முதலில்) எனக்குத் தெரியவில்லை. அதனால் நான், ‘‘என் தந்தையே! தங்கள் எஜமான் யார்?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘அல்லாஹ்தான்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களின் கடனை அடைப்பதில் எனக்குச் சிரமம் ஏற்பட்ட போதெல்லாம், ‘‘(என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களின் எஜமானனே! அவர் சார்பாக அவரது கடனை நீ அடைப்பாயாக!” என்று பிரார்த்தித்துவந்தேன். அந்த (எஜமான்) அல்லாஹ்வும் அதை அடைத்துவந்தான். ஸுபைர் (ரலி) அவர்கள் போரில் கொல்லப்பட்டார்கள். ஆனால், அவர்கள் ஒரு பொற்காசையோ வெள்ளிக்காசையோகூட (ரொக்கமாக) விட்டுச்செல்லவில்லை; இரண்டு நிலங்களைத் தவிர. அவற்றில் ஒன்று ‘அல்ஃகாபா’வில் இருந்த நிலமாகும்.47 மற்றும் மதீனாவில் பதினொரு வீடுகளையும் பஸ்ராவில் இரண்டு வீடுகளையும் கூஃபாவில் ஒரு வீட்டையும் எகிப்தில் ஒரு வீட்டையும் அவர்கள் விட்டுச்சென்றார்கள். அவர்கள் மீதிருந்த கடன் ஏற்பட்ட விதம் இதுதான்: ஒரு மனிதர் ஸுபைர் (ரலி) அவர்களிடம் சில பொருட்களைக் கொண்டுவந்து அடைக்கலமாகத் தந்து விட்டுச் செல்வது வழக்கம். ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘வேண்டாம். இதை நான் அடைக்கலப் பொருளாக ஏற்கமாட்டேன். மாறாக, இது என் பொறுப்பில் கடனாகும். அது அழிந்துபோய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் எந்த ஆட்சிப் பொறுப்பையும் ஒருபோதும் விரும்பியதில்லை. யிகராஜ்’ (எனும் காப்பு) வரி வசூலிக்கும் பொறுப்பையோ வேறெந்தப் பணப் பொறுப்பையுமோ ஏற்றுக்கொண்டதில்லை; நபி (ஸல்) அவர்களுடன், அல்லது அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோருடன் அறப் போரில் பங்கெடுத்து (அதனால் கிடைத்த போர்ச் செல்வங்களில் பங்குபெற்றுக்) கொண்டதைத் தவிர (வேறெந்த வழியிலும் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பொருளீட் டியதில்லை). நான் அவர்கள் மீதிருந்த கடனை எண்ணிப்பார்த்தேன். மொத்தம் இருபத்திரண்டு லட்சம் கடன் இருக்கக் கண்டேன். அப்போது ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘என் சகோதரர் மகனே! என் சகோதரர்மீது எவ்வளவு கடன் இருக்கின்றது?” என்று கேட்டார்கள்.48 நான் அதை மறைத்து, ‘‘ஒரு லட்சம்தான்” என்று சொன்னேன். ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் சொத்துகள் அவ்வளவு கடனையும் அடைக்கப் போதாதே” என்று சொன்னார்கள். நான், ‘‘என் தந்தையின் கடன் இருபத்திரண்டு லட்சமாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இவ்வளவு (பெருந்தொகையை அடைக்க) உங்களால் முடியாது என்றே நான் கருதுகிறேன். உங்களால் அதில் ஓரளவு அடைக்க முடியாமல்போனால் என்னிடம் உதவி கேளுங்கள்” என்று சொன்னார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் ‘அல்ஃகாபா’ வில் ஒரு லட்சத்து எழுபதாயிரத்திற்கு ஒரு சொத்தை வாங்கியிருந்தார்கள். அதை நான் பதினாறு லட்சத்திற்கு விலை மதிப்பிட்டிருந்தேன். பிறகு (மக்களிடையே), எழுந்து நின்று, ‘‘எவருக்கு ஸுபைர் (ரலி) அவர்கள் கடன் தர வேண்டியுள்ளதோ அவர் நம்மிடம் அல்ஃகாபாவுக்கு வரட்டும்” என்று அறிவித்தேன். உடனே அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள், என்னிடம் வந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு ஸுபைர் (ரலி) அவர்கள் நான்கு லட்சம் தர வேண்டி யிருந்தது. ஆகவே, அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள் விரும்பினால் என் கடனை உங்களுக்கே விட்டுக்கொடுத்து விடுகி றேன்” என்று சொன்னார்கள். நான், ‘‘வேண்டாம்” என்று சொன்னேன். உடனே அவர்கள், ‘‘சரி, நீங்கள் (சில கடன்களை) சற்றுத் தாமதமாக அடைப்பதாயிருந்தால் என் கடனையும் அப்படிப்பட்ட கடன்களில் ஒன்றாக நீங்கள் விரும்பினால் ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘அதுவும் வேண்டாம் (உடனே உங்கள் கடனை வாங்கிக் கொள்ளுங்கள்)” என்று சொல்லிவிட்டேன். அவர்கள், ‘‘அப்படியென்றால் (உங்கள் நிலத்திலிருந்து என் கடனுக்குச் சமமான) ஒரு பகுதியை எனக்குத் தந்துவிடுங்கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘இங்கிருந்து இதுவரை உங்களுக்கு உரியது” என்று (அவருக்குச் சேரும் நிலத்தின் அளவை வரையறுத்துச்) சொன்னேன். நான் அந்த ‘அல்ஃகாபா’ (மற்றும் வீடுகளில்) சிலவற்றை விற்று என் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களின் கடனை (முழுவதுமாக) அடைத்துவிட்டேன். அல்ஃகாபாவின் நிலத்தில் நாலரைப் பங்குகள் மட்டும் விற்கப்படாமல் மீதமாயிருந்தன. முஆவியா (ரலி) அவர்களிடம் அம்ர் பின் உஸ்மான், முன்திர் பின் ஸுபைர், அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) ஆகியோர் இருக்க, நான் அங்கு சென்றேன். முஆவியா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘அல்ஃகாபாவிலிருக்கும் (உங்கள் தந்தை ஸுபைர் (ரலி) அவர் களின்) சொத்திற்கு எவ்வளவு விலைமதிப்பு சொல்லப்பட்டது?” என்று என்னிடம் கேட்க, நான், ‘‘ஒவ்வொரு பங்கும் ஒரு லட்சம்” என்று பதிலளித்தேன். அவர்கள், ‘‘அதில் எவ்வளவு (விற்காமல்) எஞ்சி யுள்ளது?” என்று கேட்டார்கள். நான், ‘‘நாலரைப் பங்குகள் எஞ்சியுள்ள”’ என்று பதில் சொன்னேன். முன்திர் பின் ஸுபைர் அவர்கள், ‘‘நான் ஒரு பங்கை ஒரு லட்சம் கொடுத்து எடுத்துக்கொள்கிறேன்” என்று சொன்னார். அம்ர் பின் உஸ்மான் அவர்கள், ‘‘நான் ஒரு பங்கை ஒரு லட்சம் கொடுத்து எடுத்துக்கொள்கிறேன்” என்று சொன்னார் கள். இப்னு ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘நான் ஒரு பங்கை ஒரு லட்சம் கொடுத்து எடுத்துக்கொள்கிறேன்” என்று சொன்னார் கள். முஆவியா (ரலி) அவர்கள், ‘‘இப்போது எவ்வளவு மீதியுள்ளது?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஒன்றரைப் பங்கு (மட்டும்தான்) மீதியுள்ளது” என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், ‘‘நான் அதை ஒன்றரை லட்சம் கொடுத்து எடுத்துக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் (தமக்கு வர வேண்டிய நான்கு லட்சத்திற்குப் பதிலாக தமக்குத் தரப்பட்ட நிலத்தை) முஆவியா (ரலி) அவர்களிடம் ஆறு லட்சத்திற்கு விற்று (இரண்டு லட்சம் இலாபம் அடைந்து)விட்டார்கள். நான் என் தந்தையின் கடன்களையெல்லாம் அடைத்து முடித்தபிறகு (என் சகோதரர்களான) ஸுபைர் (ரலி) அவர்களின் மக்கள், ‘‘நமக்கிடையே நமது வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுவிடுங்கள்” என்று என்னிடம் கோரினர். நான், ‘‘முடியாது, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (ஹஜ்) பருவத்தில் நான்காண்டுகளுக்கு, ‘‘ஸுபைர் (ரலி) அவர்கள் எவருக்குக் கடன் தர வேண்டி யுள்ளதோ, அவர் நம்மிடம் வரட்டும். நாம் அவர் கடனை அடைப்போம்” என்று அறிவிக்காமல் உங்களிடையே அவருடைய சொத்துகளைப் பங்கிடவே மாட்டேன்” என்று சொல்லிவிட்டேன். பிறகு ஒவ்வோர் ஆண்டும் ஹஜ்ஜுப் பருவத்தில் அறிவிப்புக் கொடுக்கத் தொடங்கினேன். நான்காண்டுகள் கழிந்து விட்டபின் (யாரும் ஸுபைர் (ரலி) அவர்கள் கடன் தர வேண்டியிருப்பதாகக் கேட்டு வராததால் என் சகோதர சகோதரி களான) ஸுபைர் (ரலி) அவர்களின் மக்களுக்கிடையே மீதிச் சொத்துகளைப் பங்கிட்டுவிட்டேன். (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு நான்கு துணைவியர் இருந்தனர். ஸுபைர் (ரலி) அவர்கள் தமது இறுதி விருப்பமாகத் தெரிவித்த (மரண சாசனப் பங்கான) மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்தது போக, மீதியை அவர்களின் துணைவியருக்குக் கொடுத்தேன். ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு லட்சம் கிடைத்தது. ஆக, ஸுபைர் (ரலி) அவர்களின் சொத்துகளின் மொத்த மதிப்பு (கடனுக்காகக் கொடுத்தது, நல்லறங்களுக்காகச் செய்த மரண சாசனத் தொகை, வாரிசுகளுக்குக் கிடைத்தது ஆகிய அனைத்தும் சேர்ந்து) ஐந்து கோடியே இரண்டு இலட்சமாகும் (என மற்றோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது).49 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் போனதற்குக் காரணம், அவர்களின் துணைவியார் நோயாளியாக இருந்ததுதான். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியாவார்.50 அப்போது நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், ‘‘பத்ர் போரில் கலந்துகொண்டவருக்குரிய நன்மையும் (போர்ச் செல்வத்தில்) அவருக் குரிய பங்கும் உங்களுக்கு உண்டு” என்று கூறினார்கள். அத்தியாயம் :
மர்வான் பின் அல் ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது: ஹவாஸின் குலத்தின் தூதுக் குழு வினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்களாக வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் தம் செல்வங்களை யும் போர்க் கைதிகளையும் திருப்பித் தந்துவிடும்படி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பேச்சில் எனக்கு மிகவும் பிரியமானது உண்மையான பேச்சேயாகும். போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வங்கள் இரண்டில் நீங்கள் விரும்பியதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களை எதிர்பார்த்(துக் காத்)திருந்தேன்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியபோது பத்துக் கும் மேற்பட்ட நாட்கள் ஹவாஸின் குலத் தாரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டிலொன்றைத்தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, ‘‘நாங்கள் எங்கள் கைதிகளையே திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குரிய முறையில் புகழ்ந்துவிட்டு, ‘‘அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தபின் கூறுகிறேன்: உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர். இவர்களில் (நம்மிடம்) போர்க் கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன். எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கிறாரோ அவர் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லாஹ் (இனிவரும் நாட்களில்) முதலாவதாக நமக்குத் தரவிருக்கும் (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து நாம் தருகின்ற வரை அவற்றைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகிறாரோ அவர் அவ்வாறே வைத்திருக்கட்டும்” என்று கூறினார்கள். அப்போது மக்கள், ‘‘நாங்கள் மனப் பூர்வமாக (போர்க் கைதிகளைத்) திருப்பிக் கொடுக்கச் சம்மதிக்கின்றோம், அல்லாஹ் வின் தூதரே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் இதற்கு (உண்மையிலேயே) யார் சம்மதிக்கிறார்; யார் சம்மதிக்கவில்லை என்று எமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்கள் முடிவை எனக்குத் தெரிவிக்கட்டும்” என்று கூறினார்கள். மக்கள் திரும்பிச் செல்ல, அவர்களிடம் அவர்களின் தலைவர்கள் பேசினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தலைவர்கள் திரும்பி வந்து மக்கள் மனப்பூர்வமாகச் சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:) இதுதான் ஹவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும்.53 அத்தியாயம் :
ஸஹ்தம் பின் முளர்ரிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது கோழிக்கறி உணவு வந்தது. அவர்களிடம் தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த சிவப் பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (கிழக்கு ரோமானியரிடையேயிருந்து பிடித்துக் கொண்டுவரப்பட்ட) போர்க் கைதிகளில் ஒருவரைப் போன்று காணப் பட்டார். அபூமூசா (ரலி) அவர்கள் அந்த மனிதரை உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், ‘‘இந்தக் கோழி (அசுத்தம்) எதையோ தின்பதை நான் பார்த்தேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே இதை இனி உண்பதில்லை என்று சத்தியம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். இதைக் கேட்ட அபூமூசா (ரலி) அவர்கள், ‘‘இங்கே வா! இதைப் பற்றி உனக்கு (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) அறிவிக்கி றேன்” என்று சொல்லிவிட்டுக் கூற லானார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான ஊர்தி ஒட்டகங்கள் என்னிடம் இல்லை” என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. உடனே எங்களைக் குறித்து, ‘‘அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே?” என்று கேட்டுவிட்டு, எங்களுக்கு (ஒட்டக மந்தைகளில்) வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து மந்தைகளைத் தரும்படி உத்தரவிட்டார்கள். நாங்கள் (அதைப் பெற்று) சென்றுகொண்டிருந்தபோது, நாங்கள் எங்களுக்குள், ‘‘நாம் என்ன காரியம் செய்துவிட்டோம். (நமக்குக் கொடுக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபின் மீண்டும் இவற்றை நாம் வாங்கிச் சென்றால்) இவற்றில் நமக்கு வளம் வழங்கப்படாதே” என்று பேசிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம். ‘‘நாங்கள் தங்களிடம், யிநாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு ஒட்டகங்கள் கொடுங்கள்’ என்று கேட்டோம். யிநாங்கள் ஏறிச் செல்ல ஒட்டகம் கொடுக்க முடியாது’ என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை. மாறாக, அல்லாஹ்தான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒரு வாக்குக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச் சிறந்த தாகக் கருதும்பட்சத்தில், சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற் காகப் பரிகாரம் செய்துவிடுவேன்” என்று சொன்னார்கள். இது இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக் குழுவை யிநஜ்த்’ பகுதியை நோக்கி அனுப்பிவைத்தார்கள். அதில் நானும் (ஒருவனாக) இருந்தேன். நாங்கள் நிறைய ஒட்டகங்களைப் போர்ச்செல்வமாகப் பெற்றோம். எங்கள் பங்குகள் (ஒவ்வொருவருக்கும்) பன்னிரண்டு ஒட்டகங்கள் அல்லது பதினொன்று ஒட்டகங்களாக இருந்தன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஒட்டகம் அதிகப்படியாகத் தரப்பட்டது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அறப்போருக்காகப்) படைக் குழுக்களில் தாம் அனுப்பிவைக்கும் சிலருக்கு மட்டும் குறிப்பாகக் கொடுத்துவந்தார்கள். அவர்கள் பொதுவாகப் படையினருடன் சேர்ந்து பெறுகின்ற பங்குக்குமேல் (சற்று) அதிகப் படியாகக் கொடுத்துவந்தார்கள்.54 அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா அவர்களும் மற்றொருவர் அபூருஹ்ம் அவர்களும் ஆவர். நான்தான் அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். லிஞீஎன் குலத்தாரில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்’ என்றோ, ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம்’ என்றோ என் தந்தை அபூமூசா (ரலி) அவர்கள் சொன்னார்கள் என நான் நினைக்கிறேன்” என அறிவிப்பாளர் அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்லி நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் மன்னர் நஜாஷீயிடம் எங்களை இறக்கிவிட்டது. அவரிடம் (அபிசீனியாவில்) ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும் அவர்களுடைய சகாக்களையும் தற்செயலாகச் சந்தித்தோம். ஜஅஃபர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை இங்கு அனுப்பி (இங்கேயே) தங்கும்படி உத்தரவிட்டுள்ளார்கள். ஆகவே, நீங்களும் எங்களுடன் (இங் கேயே) தங்குங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, நாங்கள் அவருடன் தங்கி னோம். இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) சென்றோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம். உடனே அவர்கள் (கைபர் போரில் கிடைத்த பொருட்களில்) எங்களுக்கும் பங்கு கொடுத்தார்கள். லிஅல்லது எங்களுக்கும் அதிலிருந்து கொடுத்தார்கள்லி கைபர் வெற்றியில் கலந்துகொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தரவில்லை. தம்முடன் (அதில்) கலந்துகொண்டவர் களுக்கு மட்டும்தான் பங்கிட்டுத் தந்தார் கள். ஆனால், எங்கள் கப்பலில் வந்தவர் களுக்கு மட்டும் ஜஅஃபர் (ரலி) அவர்களு டனும் அவர்களுடைய சகாக்களுக்களு டனும் (சேர்த்துப்) பங்கிட்டுத் தந்தார்கள். அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பஹ்ரைனுடைய நிதி எம்மிடம் வந்தால் உனக்கு இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைனுடைய நிதி வரவில்லை. (அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில்) பஹ்ரைனுடைய நிதி வந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவரை அனுப்பினார்கள். அவர், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இருந்து வரவேண்டிய) கடனோ, (நிறைவேற்றப்பட வேண்டிய) வாக்குறுதியோ (நிறைவேறாமல்) இருக்குமாயின் அவர் நம்மிடம் வரட்டும்” என்று கூறினார். நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இன்னின்னவாறு சொன்னார்கள்” என்று கூறினேன். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் மூன்று முறை இரு கைகளையும் குவித்து அள்ளித் தந்தார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தம் இரு கைகளையும் ஒன்றுசேர்த்து அள்ளிப் போடுவது போல் சைகை செய்யத் தொடங்கினார்கள். பிறகு எங்களிடம், ‘‘இப்படித்தான் எங்களிடம் முஹம்மத் பின் முன்கதிர் (ரஹ்) அவர்கள் சொன் னார்கள்” என்று கூறினார்கள்.55 ஒருமுறை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் (இப்னுல் முன்கதிர் (ரஹ்) அவர்கள் வழியாகக்) கூறியதாவது: ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. பிறகு மூன்றாம் முறையாக நான் அவர்களிடம் சென்று, ‘‘உங்களிடம் நான் (முதல் முறையாகக்) கேட்டும் நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று, நீங்கள் எனக்குத் தர வேண்டும்; இல்லையெனில், என்னிடம் நீங்கள் கஞ்சத்தனம் காட்டுவதாகப் பொருள்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘நான் உங்களிடம் கஞ்சத்தனம் காட்டுகிறேன் என்றா சொன்னீர்கள்? நான் உங்களுக்குத் தராமலிருந்துவிட்ட ஒவ்வொரு முறையும் உங்களுக்குத் தர விரும்பிய நிலையில்தான் (இருந்தேன்; இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தாலேயே) அப்படிச் செய்தேன்” என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், ‘‘எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் கைகள் நிறைய ஒரு முறை அள்ளித் தந்துவிட்டு, யிஇதை எண்ணிக்கொள்’ என்று கூறினார்கள். நான் (எண்ணிப் பார்த்தபோது) அது ஐநூறு இருக்கக் கண்டேன். அபூபக்ர் (ரலி) அவர்கள், யிஇது போன்றதை இரு முறை எடுத் துக்கொள்’ என்று சொன்னார்கள்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் முஹம்மத் பின் முன்கதிர் (ரஹ்) அவர்கள், ‘‘கருமித்தனத்தை விட மோசமான நோய் உண்டா?” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஜிஅரானா’வில் வைத்து போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம், ‘‘நீதி யுடன் நடந்துகொள்ளுங்கள்” என்று கூறி னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இறைத்தூதராகிய) நானே நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் (என்னைப் பின்பற்ற வேண்டிய) நீ வழிதவறிப் போய்விடுவாய்” என்று பதிலளித்தார்கள்.56 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் பத்ர் போரில் பிடிபட்ட கைதிகளைப் பற்றிப் பேசும்போது கூறினார்கள்: முத்இம் பின் அதீ அவர்கள் உயிரோ டிருந்து,57 இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத்தொகை வாங்காமலே) விட்டு விடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால் நான் அவருக்காக இவர் களை (பிணைத்தொகை வாங்காமலேயே) விட்டுவிட்டிருப்பேன். இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ் வின் தூதரே! பனுல் முத்தலிப் கிளை யாருக்கு (குமுஸிலிருந்து)) கொடுத்தீர்கள்; எங்களுக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டீர் கள். நாங்களும் அவர்களும் உங்களுடன் ஒரே மாதிரியான உறவுமுறை உடையவர் கள்தானே?” என்று கேட்டோம்.58 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பனுல் முத்தலிபும் பனூ ஹாஷிமும் ஒருவர்தான்” என்று கூறினார்கள்.59 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘பனூ அப்தி ஷம்ஸ் கிளையாருக்கும் பனூ நவ்ஃபல் கிளையாருக்கும் நபி (ஸல்) அவர்கள் (குமுஸில்) பங்கு தரவில்லை” என்று ஜுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது. ‘‘பனூ அப்தி ஷம்ஸ், பனூ ஹாஷிம், பனுல் முத்தலிப் ஆகியோர் தாய் வழிச் சகோதரர்கள் ஆவர். அவர்களுடைய தாயார் ஆத்திகா பின்த் முர்ரா என்பவர் ஆவார். நவ்ஃபல் என்பவர் இந்தக் குலங்களின் தந்தை வழிச் சகோதரர் ஆவார்” என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களி லும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்றுகொண்டிருந்தனர். ‘அவர்களைவிடப் பெரிய வயதுடையவர் களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா’ என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண்சாடை செய்து, ‘‘என் பெரிய தந்தையே! நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?” என்று கேட்டார். நான், ‘‘ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!” என்று கேட்டேன். அதற்கு அந்த இளவல், ‘‘அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் ஒருவர் இறக்கும்வரை அவனது உடலைவிட்டு எனது உடல் பிரியாது (ஒன்று நான், அல்லது அவன் மரணிக்கும்வரை அவனுடன் போரிட்டுக்கொண்டே இருப்பேன்)” என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்துபோனேன். அப்போது மற்றோர் இளவலும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, ‘‘இதோ, நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!” என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக்கொண்டு போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார் கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் யார் அவனைக் கொன்றவர்?” என்று கேட்டார் கள். அவர்களில் ஒவ்வொருவரும், ‘‘நான் தான் (அவனைக் கொன்றேன்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். இருவரும், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, ‘‘நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) ‘‘அபூஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹுக்கு உரியவை” என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹ் (ரலி) அவர்களும் ஆவர். அத்தியாயம் :
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப்பட் டோம்.60 (எதிரிகளைப் போர்க் களத்தில்) நாங்கள் சந்தித்தபோது (ஆரம்பத்தில்) முஸ்லிம்களுக்குள் பதற்றம் நிலவியது. (அவர்கள் தோல்வியுற்றனர்.) நான் இணைவைப்பவன் ஒருவனைப் பார்த் தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு அவரைக் கொல்ல முயன்றான். நான் அவனைச் சுற்றிக் கொண்டு அவன் பின்பக்கமாகச் சென்று வாளால் அவனது (கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டினேன். உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னை இறுக அணைத்துக்கொண்டான். அதனால் நான் மரணக் காற்றை சுவாசிக்க லானேன். பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னை விட்டு விட்டான். உடனே நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்து, ‘‘மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘(இது) அல்லாஹ் விதித்த விதி” என்று பதிலளித்தார்கள். பிறகு, மக்கள் (அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்ததால் போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டு, ‘‘போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று, ‘‘எனக்கு எவர் சாட்சி சொல்வார்?” என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்துகொண்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘‘போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து நின்று, ‘‘எனக்கு எவர் சாட்சி சொல்வார்?” என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து விட்டேன். பிறகு மூன்றாவது தடவையாக அதே போன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே நான் எழுந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அபூகத்தாதாவே! உங்களுக்கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நடந்த நிகழ்ச்சியை நான் அவர்களிடம் எடுத் துரைத்தேன். ஒரு மனிதர், ‘‘இவர் சொன்னது உண்மையே. அல்லாஹ்வின் தூதரே! இவரால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னி டம் உள்ளன. எனக்காக (அவருக்கு ஏதேனும் வழங்கி) அவரைத் திருப்திப் படுத்திவிடுங்கள்” என்று சொன்னார். அப்போது அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள், ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் சார்பாகவும் போரிட்டு (தன்னால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘(அபூபக்ர்) உண்மை சொன்னார்” என்று கூறிவிட்டு அதை எனக்கே கொடுத்துவிட்டார்கள். நான் அந்தப் போர்க் கவசத்தை விற்றுவிட்டு பனூ சலிமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவியபின் நான் சேகரித்த முதல் சொத்தாகும். அத்தியாயம் :
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (நிதியுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி) கேட் டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘‘ஹகீமே! இந்தச் செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) கொடையுள்ளத் தோடு பெறுகிறாரோ அவருக்கு இதில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் (நிறையத்) தின்றும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவராவார். மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கைதான் (வாங்கும்) தாழ்ந்த கையைவிட மேலானதாகும்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது சத்தியமாக! தங்களுக்குப்பின், நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும்வரை வேறெவரிடமிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டேன்” என்று கூறினேன். அறிவிப்பாளர் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பு (நிதியை) வழங்க அழைப்புக் கொடுத்துவந்தார்கள். ஆனால், ஹகீம் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் ஏற்க மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் ஹகீம் (ரலி) அவர்களுக்கு (நிதி வழங்க) அழைப்புக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்தும் (உதவி நிதியை) ஏற்க அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள், ‘‘முஸ்லிம்களே! (வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கும்) இந்தச் செல்வத்திலிருந்து ஹகீம் அவர்களின் பங்காக அல்லாஹ் கொடுத்த அவரது உரிமையை அவர்முன் நான் சமர்ப்பித்து விட்டேன். அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்” என்று கூறினார்கள். இவ்விதம் ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப்பிறகு மக்களில் எவரிடமிருந்தும் எதையும், தாம் இறக்கும்வரை பெற்றுக் கொள்ளவில்லை.61 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு), ஒருநாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை. இப்போது அதை நான் நிறைவேற்றலாமா?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், உமர் (ரலி) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட போர்க் கைதிகளிலிருந்து இரண்டு அடிமைப் பெண்களைப் பெற்றிருந்தார்கள். அவ்விருவரையும் மக்காவிலுள்ள ஒரு வீட்டில் தங்கவைத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட கைதிகளுக்குக் கருணை காட்டி அவர் களைச் சுதந்திரமாக விட்டுவிட்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் சாலைகளில் (சுதந்திரமாக) நடமாடத் தொடங்கினார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் தம் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம், ‘‘அப்துல்லாஹ்வே! இங்கே பார். என்ன இது” என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்க் கைதிகள் மீது கருணை புரிந்து அவர்களைச் சுதந்திரமாக விட்டுவிட்டார்கள்” என்று சொன்னார்கள். (உடனே) உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியென்றால் நீ சென்று அந்த இரு அடிமைப் பெண்களையும் சுதந்திரமாகச் செல்ல விட்டுவிடு” என்று கூறினார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜிஅரானாவிலிருந்து உம்ரா செய்யவில்லை. அப்படி அவர்கள் உம்ரா செய்திருந்தால் அது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலிருந்திருக்காது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘குமுஸ் (ஐந்திலொரு பங்கு) நிதியிலிருந்து இந்த இரு அடிமைப் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்” என்று வந்துள்ளது. மஅமர் பின் ஸாயித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உமர் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் செய்த நேர்ச்சை குறித்து, ‘‘இஃதிகாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தேன்” என்று மட்டுமே வந்துள்ளது. ‘‘ஒருநாள் இஃதிகாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தேன்” என்று (யிஒருநாள்’ எனும் குறிப்பு) இடம் பெறவில்லை.62 அத்தியாயம் :
அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிலருக்குக் கொடுத்துச் சிலருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார் கள். அவர்கள் (அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்) நபி (ஸல்) அவர் களைக் குறை சொல்வதைப் போன்ற சூழ்நிலை நிலவியது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர், நம்பிக்கை பலவீனப்பட்டுப் போய்விடுவார் என்றும் பொறுமையிழந்து நிலைகுலைந்து போய்விடுவார் என்றும் நான் அஞ்சு கிறேனோ அவருக்குக் கொடுக்கிறேன். இன்னும் சிலருக்கு, அவர்களின் உள்ளத் தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மை யையும் தன்னிறைவான (போதுமென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல் விட்டுவிடுகிறேன். அத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர்தான் அம்ர் பின் தஃக்லிப் அவர்களும்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நன்மையும் போதுமென்ற குணமும் உடையவர்களில் ஒருவனாகக் குறிப்பிட்டு)ப் புகழ்ந்து பேசிய இந்தச் சொல்லுக்குப் பகரமாக (விலையுயர்ந்த செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் எனக்குக் கிடைத்திருந்தாலும் நான் அவற்றை விரும்பியிருக்கமாட்டேன்.63 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஆஸிம் ளஹ்ஹாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில செல்வம், அல்லது கைதிகள் கொண்டுவரப்பட்டனர். அவர்களை நபியவர்கள் பங்கிட்டார்கள்” என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் குறைஷியருடன் நேசத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக அவர்களுக்குக் கொடுக்கிறேன். ஏனெனில், அவர்கள் அறியாமைக் காலக் கொள்கையை விட்டு விட்டு (இப்போதுதான்) புதிதாக இஸ்லாத் தில் இணைந்துள்ளனர். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை அல்லாஹ், தன் தூதருக்கு (ஹுனைன் போரில்) அளித்தபோது அவர்கள் குறைஷியரில் சிலருக்கு நூறு ஒட்டகங் களைக் கொடுக்கலானார்கள்.64 உடனே அன்சாரிகளில் சிலர், ‘‘அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை மன்னிப்பானாக! நம் வாட்களில் எதிரிகளின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க குறைஷியருக்குக் கொடுக்கிறார்கள்; நம்மை விட்டுவிடுகிறார் களே!” என்று பேசிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களின் இந்தப் பேச்சு தெரிவிக்கப் பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம் ஆளனுப்பி அவர்களை வரச்சொல்லி, பதனிடப்பட்ட தோலால் ஆன கூடாரம் ஒன்றில் அவர்களை ஒன்றுதிரட்டினார்கள். அவர்களுடன் வேறெவரையும் அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்றுதிரண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, ‘‘உங்களைப் பற்றி எனக்கு எட்டிய செய்தி என்ன?” என்று கேட்டார்கள். அன்சாரிகளிடையே இருந்த அறிஞர்கள், ‘‘எங்களில் கருத்துடையோர் எதுவும் சொல்லவில்லை, அல்லாஹ்வின் தூதரே! ஆயினும், எங்களிடையேயுள்ள இளம் வயது வாலிபர்கள், அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை மன்னிப்பானாக! நம் வாட்களில் எதிரிகளின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷியருக்குக் கொடுக்கி றார்கள். ஆனால், நம்மை விட்டுவிடுகிறார் களே!› என்று பேசிக்கொண்டார்கள்” என்று பதில் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைமறுப்பைக் கைவிட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு நான் கொடுக்கிறேன். மக்களெல்லாரும் செல்வங்களை எடுத்துக் கொண்டுசெல்ல, உங்கள் வசிப்பிடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (உங்களுடன் அழைத்துக்)கொண்டு செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் எடுத்துக்கொண்டு திரும்பிச் செல்ப வற்றைவிட நீங்கள் எடுத்துக்கொண்டு திரும்பிச் செல்வதே சிறந்ததாகும்” என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஆம்; (நீங்களே எங்களுக்குப் போதுமென்று) நாங்கள் திருப்தியடைந் தோம்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்குப்பின், (ஆட்சிப் பொறுப்பிலும் போரில் கிடைக்கும் செல்வங்களைப் பங்கிடுவதிலும்) உங்களைவிட மற்றவர் களுக்கு மிக அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். அந்நிலையில் அல்லாஹ்வையும் யிஹவ்ளுல் கவ்ஸர்’ தடாகத்தின் அருகே அவனுடைய தூதரை (என்னை)யும் சந்திக்கும்வரை பொறுமையைக் கைக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். இதை அறிவித்துவிட்டு அனஸ் (ரலி) அவர்கள், ‘‘ஆனால், நாங்கள் பொறுமையைக் கைக்கொள்ளவில்லை” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்களுடன் மக்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிடித்துக்கொண்டு (போரில் கிடைத்த பொருட்களிலிருந்து தங்களுக்குக் கொடுக்கும்படி) கேட்கலானார் கள். இறுதியில், அவர்களை (சூழ்ந்து கொண்டு நெருக்கியபடி) ஒரு கருவேல மரத்தின் அருகே தள்ளிக்கொண்டு சென்று அவர்களின் மேல்துண்டைப் பறித்துக் கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு என் மேல் துண்டைக் கொடுத்துவிடுங்கள். இந்த (கருவேல மரத்தின்) முட்கள் அளவுக்கு ஒட்டகங்கள் (என்னிடம்) இருந்தாலும் அவற்றை நான் உங்களிடையே பங்கிட்டு விடுவேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவோ, பொய் சொல்பவனாகவோ, கோழையாகவோ பார்க்கமாட்டீர்கள்” என்று சொன்னார்கள்.65 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் கரை தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந் தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி, அந்தச் சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவுக்கென்றால் அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி (ஸல்) அவர்களது தோளின் ஒரு மூலையில் அடையாளம் பதித்திருந்ததை நான் கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத் திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தர விட்டார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (ரலி) அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும்போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! இந்தப் பங்கீட்டில் நீதி கடைப்பிடிக்கப்படவில்லை; இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும்” என்று கூறினார். நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறு யார்தான் நீதியுடன் நடந்துகொள்வார்கள்? அல்லாஹ், (இறைத்தூதர்) மூசா அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்துக் கொண்டார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்த நிலத்திலிருந்து (பேரீச்சங்) கொட்டைகளை நான் என் தலையில் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டிருந்தேன். அந்த நிலம் என் வீட்டிலிருந்து இரண்டு மைல் (3.5 கி.மீ.) இருந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘‘நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் சொத்துகளிலிருந்து ஒரு நிலத்தை ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள்” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் ஹிஜாஸ் பூமியிலிருந்து நாடு கடத்தி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர்வாசிகளை வெற்றி கொண்டபோது அவர்களை கைபரிலிருந்து வெளியேற்ற விரும்பினார்கள். அவர்கள் அதை வென்றபோது அந்த நிலப்பரப்பு யூதர்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாக இருந்தது. யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அவர்கள் அதில் உழைத்துப் பயிரிடுவார்கள்; அவர்களுக்கு விளைச்சலில் பாதி தரப்பட வேண்டும்’ என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களை (அங்கேயே தங்கி வசித்துக்கொள்ள) விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நாங்கள் விரும்பும்வரை அதே நிபந்தனையின்படி நாங்கள் உங்களை விட்டுவைப்போம்” என்று கூறி னார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் அவர்களை தைமா, ஜெரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு66 நாடு கடத்தும்வரை அவ்வாறே அவர்கள் அங்கே வசித்துவர அனுமதிக்கப் பட்டார்கள்.67 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு மனிதர், கொழுப்பு அடங்கிய தோல்பை ஒன்றை எறிந்தார். நான் அதை எடுக்க விரைந்து சென்றேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர் களைக் கண்டு நான் வெட்கமடைந் தேன். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்கள் அறப்போர்களில் எங்களுக்குத் தேனும் திராட்சைப் பழமும் கிடைத்துவந்தன. அதை நாங்கள் உண்போம். ஆனால், அதை நாங்கள் (சேகரித்து வைப்பதற்காகக்) கொண்டுசெல்வதில்லை. அத்தியாயம் :
இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் கோட்டையின் முற்றுகையில் ஈடுபட்டிருந்த நாட்களில் நாங்கள் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டிருந்தோம். கைபர் போர் தொடங்கிய நாளன்று நாங்கள் நாட்டுக் கழுதைகளை (போர்ச் செல்வமாக)ப் பெற்று அவற்றை அறுத் தோம். (அவற்றைச் சமைக்கின்ற) பாத்திரங்கள் கொதிக்கத் தொடங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய அறிவிப்பாளர், ‘‘பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள். கழுதைகளின் இறைச்சிகளில் சிறிதும் உண்ணாதீர்கள்” என்று (உரக்கக் கூவி) அறிவித்தார். (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் (தொடர்ந்து) கூறுகிறார்கள்: இந்த அறிவிப்பைச் செவியுற்ற நாங்கள், ‘‘அதிலிருந்து ஐந்தில் ஒரு பங்கு (குமுஸ்) செலுத்தப்படாததே இந்தத் தடை அறிவிப்புக்குக் காரணம்” என்று சொன்னோம். மற்றவர்கள், ‘‘(அப்படியல்ல;) அதை என்றைக்குமாக நபி (ஸல்) அவர்கள் தடை செய்துவிட்டார்கள்” என்று கூறினார்கள். சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களும் நிரந்தரமாகத் தடை செய்தார்கள் என்றே கூறினார்கள். அத்தியாயம் :