அனைத்து இஸ்லாம் நூலகம்

52 - சாட்சியம்

1

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர் எனக்கு, ஆயிஷா (ரலி) அவர்களை (சிலர் அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது. அவதூறு சொன்னவர்கள் தாங்கள் பேசிய அவதூறுகளையெல்லாம் சொன்ன போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியாரை (ஆயிஷா வை)ப் பிரிந்துவிடுவது தொடர்பாக ஆலோசனை கலப்பதற்காக வேண்டி அலீ (ரலி) அவர்களையும் உசாமா (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வேத அறிவிப்பு (வஹீ) தாற்காலிகமாக நின்றுபோயிருந்தது. உசாமா (ரலி) அவர்கள், ‘‘அவர் (ஆயிஷா), தங்கள் துணைவியார். (அவரைப் பற்றி) நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை” என்று கூறினார்கள். மேலும், (ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீரா (ரலி) அவர்கள், ‘‘அவர் (ஆயிஷா), தம் வீட்டாரின் குழைத்த மாவை வளர்ப்பு ஆடு வந்து தின்கின்ற அளவுக்கு (அப்படியே) விட்டுவிட்டு உறங்கிவிடுகின்ற இள வயதுச் சிறுமி என்பதற்கு அதிகமாகக் குறைசொல்வதற்கு அவரிடம் நான் எதையும் பார்க்கவில்லை” என்று கூறினார்கள். (அதன்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் வீட்டாரின் விஷயத் தில் எனக்கு (மன) வேதனை அளித்துவிட்ட ஒரு மனிதனுக்கு (அப்துல்லாஹ் பின் உபை என்ற நயவஞ்சகனுக்கு) எதிராக எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் நல்லதைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை. மேலும், எந்த மனிதரைக் குறித்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறியமாட்டேனோ அவரை (இணைத்து) அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் (குழப்பவாதியான யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நாடிச் சென்றார்கள். (தோட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நுழைந்தவுடன் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்ப்பதற்கு முன்பே, அவனிடமிருந்து எதையேனும் கேட்டுவிட வேண்டும் எனத் திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களுக் கிடையே தம்மை மறைத்துக்கொண்டு நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் தன் படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வைக் குள் (குறிகாரர்கள் முணுமுணுப்பதைப் போல்) எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக் கிடையே தம்மை மறைத்துக்கொண்டு வருவதை இப்னு ஸய்யாதின் தாய் பார்த்து விட்டாள். அவள் தன் மகனை நோக்கி, ‘‘ஸாஃபியே! இதோ முஹம்மத் (வந்து கொண்டிருக்கிறார்)” என்று கூறிவிட்டாள். உடனே இப்னு ஸய்யாத் விழிப்படைந்து முணுமுணுப்பதை நிறுத்திவிட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவள் (இப்னு ஸய்யாதின் தாய்) அவனை (உஷார்படுத்தாமல்) விட்டு விட்டிருந்தால், (தன் உண்மை நிலையை அவனே) அம்பலப்படுத்திவிட்டிருப்பான்” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :

3

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் ரிஃபாஆவிடம் (அவருடைய மணபந்தத்தில்) இருந்தேன். பிறகு அவர் என்னை மணவிலக்குச் செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். ஆகவே, நான் அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அவரிடம் (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் (இந்த முகத்திரைத்) துணியின் குஞ்சத்தைப் போன்றதுதான் (அவர் ஆண்மை குறைந்தவர்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? நீ (உன் இரண்டாவது கணவரான) இவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காதவரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது” என்று கூறி னார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந் தார்கள். காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், தமக்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்றுகொண்டிருந் தார்கள். அவர்கள், ‘‘அபூபக்ரே! இந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் பகிரங்க மாகச் சொல்லிக்கொண்டிருப்பதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று (வாசலில் நின்றபடியே) கேட்டார்கள்.3 அத்தியாயம் :

4

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அபூஇஹாப் பின் அஸீஸ் (ரலி) அவர்களின் மகளை மணந்துகொண்டேன். ஒரு பெண் என்னிடம் வந்து, ‘‘உங்களுக் கும் நீங்கள் மணந்துகொண்ட பெண்ணுக் கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) நான் பாலூட்டியிருக்கிறேன்” என்று கூறினாள். நான், ‘‘நீ எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணம் புரிந்துகொண்டபோது) நீ எனக்கு (இதை) அறிவிக்கவில்லையே” என்று கூறிவிட்டு, அபூஇஹாபின் குடும்பத்தாரிடம் (இது உண்மைதானா என்று) கேட்டனுப்பினேன். அவர்கள், ‘‘எங்கள் பெண்ணுக்கு அவள் பாலூட்டியதாக நாங்கள் அறியவில்லை” என்று கூறினர். உடனே (மக்காவில் இருந்த) நான், மதீனாவிலிருந்த நபி (ஸல்) அவர்களிடம் (தீர்ப்புப் பெறுவதற்காக) பயணித்துச் சென்று அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுவிட்ட பின்னால், (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?” என்று கூறினார்கள். ஆகவே, நான் அவளைப் பிரிந்துவிட்டேன். அவள் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.4 அத்தியாயம் :

5

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் வேத அறிவிப்பு (வஹீ) வாயிலாக (இரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக் கப்பட்டுவந்தார்கள். இப்போது (நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின்) வேத அறிவிப்பு நின்றுபோய்விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்ப தெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைக் கொண்டுதான். ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகின்றாரோ அவரை நம்பிக்கைக்குரியவராக்கி கௌரவமாக நடத்துவோம். அவரது இரகசியம் எதையும் கணக்கிலெடுக்கமாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர் நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகிறாரோ அவரை நாம் நம்பவோ (அவர் சொல்லும் சமாதானத்தை) உண்மைப்படுத்தவோமாட்டோம்; அவர் தமது அந்தரங்கம் அழகானது என்று வாதிட்டாலும் சரியே.5 அத்தியாயம் :

6

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. இறந்தவரின் நற்பண்புகள் குறித்து மக்கள் புகழ்ந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டுசெல்லப்பட்டது. மக்கள் அதன் தீய பண்புகள் குறித்து இகழ்ந்தனர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘உறுதி யாகிவிட்டது” என்று கூறினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! அதற்கும் யிஉறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்கள்; இதற்கும் யிஉறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘இது சமூகத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கை யாளர்கள் பூமியில் இறைவனின் சாட்சிகள் ஆவர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

7

அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனா நகரில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரைவாகவும் இறந்துகொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது ஒரு பிரேதம் (ஜனாஸா) சென்றது. அதைக் குறித்து புகழ்ந்துரைக்கப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்தும் புகழ்ந்துரைக் கப்பட்டது. அதற்கும் உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. அதைக் குறித்து இகழ்ந்து பேசப்பட்டது. உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். நான், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! என்ன உறுதியாகிவிட்டது?” என்று கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘எந்த முஸ்லிமுக்கு நான்கு பேர், ‘அவர் நல்லவர்’ என்று சாட்சியம் சொல்கின்றார் களோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள், ‘‘மூன்று பேர் சாட்சி சொன்னாலுமா?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; மூன்று பேர் சாட்சியம் சொன்னாலும் சரி (அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிப்பான்)” என்று கூறினார்கள். நாங்கள், ‘‘இரண்டு பேர் சாட்சியம் சொன்னாலுமா?” என்று கேட்டோம். அவர்கள், ‘‘ஆம்; இரண்டு பேர் சாட்சியம் சொன்னாலும் சரியே” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவரைப் பற்றி (‘‘ஒருவர் சாட்சி சொன்னாலுமா?” என்று) கேட்கவில்லை. அத்தியாயம் :

8

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் வீட்டில் நுழைவதற்கு ‘அஃப்லஹ்’ (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதி தரவில்லை. அவர்கள், ‘‘நான் உன் தந்தையின் சகோதர ராயிருக்க, நீ என்னிடமே திரையிட்டு (மறைத்து)க்கொள்கிறாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அதெப்படி (நீங்கள் என் தந்தையின் சகோதரராக முடியும்)?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘என் சகோதரரின் மனைவி என் சகோதரரின் (வாயிலாக அவரிடம் ஊறிய) பாலை உனக்குப் புகட்டியுள்ளார்” என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘‘அஃப்லஹ் சொன்னது உண்மையே. (நீ திரையின்றி இருக்கும் நிலையில் உன் முன்னால் வர) அவருக்கு அனுமதி கொடுக்கலாம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

9

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் தொடர்பாக, ‘‘அவரை மணப்பது எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று. (ஏனெனில்) இரத்த உறவால் எவையெல் லாம் தடை செய்யப்படுமோ அவை யெல்லாம் (செவிலித் தாயிடம்) பால் குடிப்பதாலும் தடை செய்யப்படும். அவள் என் பால்குடிச் சகோதரரின் (ஹம்ஸாவின்) மகள் ஆவாள்” என்று கூறினார்கள்.7 அத்தியாயம் :

10

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒரு மனிதர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். எனவே, நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என நான் நினைக்கிறேன்; அல்லாஹ்வின் தூதரே! இதோ தங்கள் (துணைவியார்) இல்லத் திற்குள் செல்ல இந்த மனிதர் அனுமதி கேட்கிறார்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும், ‘‘அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்” என்று கூறினார்கள். நான், ‘‘இன்னார் உயிருடன் இருந்தால் அவர் திரையின்றி என்னைச் சந்திக்க முடியும்தானே!” என்று என் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆம். (சந்திக்கலாம்.) பிறப்பு எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால்குடியும் நெருங்கிய உறவுகளாக்கிவிடும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

11

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஒரு மனிதர் அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். ‘‘ஆயிஷாவே! இவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘‘என் பால்குடிச் சகோதரர்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆயிஷாவே! உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில், பசியால் (பால் அருந்தினால்)தான் பால்குடி உறவு ஏற்படும்” என்று கூறினார்கள்.8 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

12

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றிப் போரின்போது (மக்ஸூமி குலத்தவரான ஃபாத்திமா பின்த் அஸ்வத் என்னும் பெயருடைய) பெண்ணொருவர் திருடிவிட்டார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரது கையைத் துண்டிக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அவரது கை துண்டிக்கப்பட்டது. (அவரைப் பற்றி) ‘‘அவர் அழகிய முறையில் பாவமீட்பு பெற்றார்; திருமண மும் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் (எங்களிடம்) வந்துகொண்டிருந்தார். நான் அவரது தேவையை (அறிந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.12 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

13

ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: விபசாரம் புரிந்துவிட்ட திருமணமாகாத ஒருவருக்கு நூறு சாட்டையடிகள் வழங்க வேண்டும் என்றும் ஓராண்டுக் காலத்திற்கு அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.13 அத்தியாயம் :

14

நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயார் என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து எனக்குச் சிறிதளவு அன்பளிப்பு வழங்கும்படி கேட்டார்கள். (முதலில் மறுத்த) என் தந்தைக்கு ஏதோ தோன்ற பிறகு அந்த அன்பளிப்பை எனக்கு வழங்கினார். என் தாயார், ‘‘நீங்கள் நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்காத வரை நான் திருப்தி அடையமாட்டேன்” என்று கூறினார்கள். ஆகவே, என் தந்தை சிறுவனாக இருந்த என் கையைப் பிடித்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, ‘‘இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த் ரவாஹா இவனுக்குச் சிறிதளவு அன்பளிப்புத் தரும்படி என்னிடம் கேட்டாள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா?” என்று கேட்டார்கள். என் தந்தை, ‘‘ஆம் (உண்டு)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை அநீதிக்கு சாட்சியாக் காதீர்கள்” என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன். மற்றோர் அறிவிப்பில், ‘‘நான் அநீதிக்கு சாட்சியாக இருக்கமாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.14 அத்தியாயம் :

15

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். லிஇந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், ‘‘(தமது தலைமுறைக்குப்) பிறகு இரண்டு தலைமுறைகளை நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? அல்லது மூன்று தலைமுறைகளைக் கூறினார்களா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள்லி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக, உங்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியமளிக்கும்படி கோரப்படாமலேயே (தாமாக) சாட்சியம் அளிப்பார் கள்.15 அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடையே உண்டு கொழுக்கும் (தொந்தி பெருக்கும்) நிலை தோன்றும்.16 இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

16

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறை’னர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் தோன்றும். அவர்களது சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்.17 இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (சிறுவர்களான) எங்களை அவர்கள் (நபித்தோழர்கள்), ‘அஷ்ஹது பில்லாஹ்’ (அல்லாஹ்வின் பெயரால் சாட்சியம் அளிக்கிறேன்) என்றோ, ‘அலய்ய அஹ்துல்லாஹ்’ (அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி) என்றோ கூறினால், கடிந்து (கண்டித்து)வந்தார்கள்.18 அத்தியாயம் :

17

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் குறித்து வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல், பெற்றோரைப் புண்படுத்தல், கொலை செய்தல், பொய் சாட்சியம் அளித்தல் ஆகியன (பெரும் பாவங் களாகும்)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

18

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) ‘‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்றுமுறை) கேட்டார்கள். மக்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)” என்று சொன்னார் கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்(தான் அவை)” என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘‘அறிந்துகொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்)தான்” என்று கூறினார்கள். யிநிறுத்திக்கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

19

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைச் செவியுற்று, ‘‘அவருக்கு அல்லாஹ் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து (சற்று) மறந்துவிட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்பாத் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப் படுகிறது: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறி னார்கள்: நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுதார்கள். அப்போது பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) அவர்கள் (குர்ஆன் ஓதுகின்ற) குரலைச் செவியுற்று (என்னிடம்), ‘‘ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா?” என்று கேட்டார்கள். ‘யிஆம் (இது அப்பாதின் குரல்தான்)” என்று நான் பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! அப்பாதிற்குக் கருணை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :

20

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். ஆகவே, அப்துல்லாஹ் பின் உம்மி மக்(த்)தூம் (வைகறை) தொழுகை அறிவிப்புச் செய் யும்வரை லிஅல்லது அவரது தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும்வரைலி (சஹ்ருக்காக) உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உம்மி மக்(த்)தூம் (ரலி) அவர்கள் கண்பார்வையற்றவராக இருந்தார்கள். அவரிடம் யிகாலை நேரம் வந்து விட்டது’ என்று மக்கள் கூறும்வரை அவர் பாங்கு சொல்லமாட்டார். அத்தியாயம் :

21

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் சில அங்கிகள் வந்தன. என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல். அவர்கள் நமக்கு அவற்றிலிருந்து எதையேனும் தருவார்கள்” என்று கூறினார்கள். என் தந்தை (நபி (ஸல்) அவர்களின் வீட்டு) வாசலருகே நின்று பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரது குரலைப் புரிந்துகொண்டு, தம்முடன் ஓர் அங்கியை எடுத்துக்கொண்டு, அதன் நிறைகளைக் காட்டியபடி வெளியே வந்தார்கள். அப்போது அவர்கள், ‘‘உமக்காக இதை நான் எடுத்து வைத்தேன்; உமக்காக இதை நான் எடுத்து வைத்தேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அத்தியாயம் :

22

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், ‘‘ஆம் (பாதியளவுதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதுதான் அவர்களது அறிவின் குறைபாடாகும்” என்று கூறினார்கள்.19 அத்தியாயம் :

23

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உம்மு யஹ்யா பின்த் அபீஇஹாபை மணந்துகொண்டேன். (இந்நிலையில்) ஒரு கறுப்பு நிற அடிமைப் பெண் வந்து, ‘‘நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கிறேன்” என்று கூறினாள். இந்தச் செய்தியை நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (முகம் திருப்பிக்கொண்டு) என்னை அலட்சியம் செய்தார்கள். நான் என் இருப்பிடத்திலிருந்து விலகி (அவர்களின் முகம் இருக்கும் பக்கம்) சென்று அவர்களிடம் அதை (திரும்ப)க் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டி யிருப்பதாகச் சொல்லும்போது எப்படி (நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ முடியும்)?” என்று கேட்டார்கள்; என்னை அவளுடன் சேர்ந்து வாழக் கூடாதென்று விலக்கினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

24

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பெண்ணை மணமுடித்தேன். (இந்நிலையில்) வேறொரு பெண் வந்து, ‘‘நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும், உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கி றேன்” என்று கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்: (அவர்களிடம் இது பற்றிக் கேட்டதற்கு), ‘‘(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால் குடித்ததாகக்) கூறப்பட்டுவிட்ட பிறகு எப்படி (நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்துவிடு” என்றோ அது போன்றதையோ கூறினார்கள். அத்தியாயம் :

25

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது என்ப தைத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் யாரது (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல் வார்கள். இவ்வாறே, அவர்கள் மேற்கொண்ட ஓர் அறப்போரின்போது,20 (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக் கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்டபோது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்ற மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் தேவையை நான் முடித்துக்கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது (தற்செயலாக) என் நெஞ்சை நான் தொட்டுப்பார்த்தேன்; (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக்கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது. ஆகவே, எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் (வைத்துக்) கட்டுவோர், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் பயணம் செய்யும் என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிவைத்து ஏற்றியபோது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம்பெண்ணாகவும் இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள். படையினர் சென்றபிறகு (தொலைந்துபோன) என் கழுத்து மாலை எனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கெனவே தங்கியிருந்த இடத்தை நாடிச் சென்றேன். படையினர், நான் காணாமல்போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்தபொழுது என் கண்களில் (உறக்கம்) மேலிட நான் தூங்கிவிட்டேன். ஸஃப்வான் பின் அல்முஅத்தல் அஸ்ஸுலமீ என்பவர், (படையினர் முகாமிட்டிருந்த இடத்தில் தவறவிட்டுச்சென்ற பொருட்களை எடுப்பதற்காகப்) படையினர் சென்றபின் தங்குவார். அவர், நான் தங்கியிருந்த இடத்திற்கு காலையில் வந்துசேர்ந்தார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (ஆகவே, என்னை அடையாளம் தெரிந்துகொண்டு) அவர், ‘‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்)” என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச்செய்து, அதன் முன்னங்காலை (தமது காலால்) மிதித்துக்கொள்ள நான் அதன் மீது ஏறிக்கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக்கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நண்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்டிருந் தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார் கள். என்மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப்பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லில் மூழ்கிப்போயிருந் தார்கள். நான் நோயுறும்போது நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகின்ற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும்போது அவர்களிடம் காண முடியாமல்போனது, எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, ‘‘நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்பார்கள்; (பிறகு போய்விடுவார்கள்.) அவ்வளவுதான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டுவந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து) குணமடைந்துவிட, நானும் உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும், நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திவந்த யிமனாஸிஉ’ எனுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டுமே இவ்வாறு செல் வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்றுகொண்டிருந்தோம். எங்களின் இந்த வழக்கம் வனாந்திரங் களில் வசித்துவந்த பண்டைய அரபியரின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்றுகொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹ், தாம் அணிந்திருந்த கம்பளி அங்கியில் இடறிக்கொண்டார். அப்போது அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று கூறி னார். நான், ‘‘மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள். நான் ‘‘என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படி யொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து என்மீதான அவதூறு) செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய் தந்தையரிடம் சென்றேன். என் தாயாரிடம், ‘‘மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று கேட்டேன். என் தாயார், ‘‘என் அன்பு மகளே! உன்மீது இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திக்கொள்ளாதே. அல்லாஹ் வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தம்) கணவரிடம் பிரியத்துக் குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளு டைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவே யாகும்” என்று கூறினார்கள். நான், ‘‘சுப்ஹானல்லாஹ்...! (இறைவன் தூயவன்!) இப்படியா மக்கள் பேசிக்கொள் கிறார்கள்?” என்று கேட்டேன். அன்றிரவு விடிய விடிய எனக்குக் கண்ணீர் நிற்க வில்லை; தூக்கம் (கண்களைத்) தழுவ வில்லை. காலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத் தார்கள். அப்போது வேத அறிவிப்பு (வஹீ) தாமதமாயிற்று. உசாமா (ரலி) அவர்களோ, தமது உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் துணைவியர்மீதிருந்த பாசத்தை அடிப் படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியார்! அல்லாஹ்வின் மீதாணையாக! நல்லதைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை” என்று அவர்கள் கூறினார்கள். அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களோ (நபி (ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றி மனைவியர் பலர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, ‘‘பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி), ‘‘தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப்போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார். உடனே அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலைத் தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரி (பின்வருமாறு பேசி)னார்கள்: என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டிக்க எனக்கு உதவி புரிபவர் யார்? அவர்கள் (அவதூறு கற்பித்த நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் நான் இருக்கும்போது தவிர (வேறு நேரங்களில்) வந்ததில்லை. உடனே (அன்சாரிகளில் ‘அவ்ஸ்’ கூட்டத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனைத் தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) ‘அவ்ஸ்’ குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனது கழுத்தைத் துண்டித்துவிடுகிறோம். எங்கள் சகோதரர்களான யிகஸ்ரஜ்’ குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்” என்று கூறினார்கள். உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந் தார் லிஇவர் முன்பு நல்ல மனிதராகத்தான் இருந்தார். எனினும், குல மாச்சரியம் அவரைத் தூண்டிவிடலி (சஅத் பின் முஆதை நோக்கி), ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது” என்று கூறினார். உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, உபாதா (ரலி) அவர்களை நோக்கி, ‘‘நீர்தான் பெய்யுரைத் தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகின்றீர்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்று கொண்டி ருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கி, அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு தாமும் மௌனமாகிவிட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அன்றைய நாள் முழுவதும் நான் அழுதுகொண்டேயிருந்தேன்; என் கண்ணீரும் ஓயவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலையில் என் தாய் தந்தையர் என் அருகே இருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்துவிடுமோ என்றெண்ணும் அளவுக்கு அழுதிருந்தேன். என் தாய் தந்தையர் என்னிடம் அமர்ந்திருக்க, நான் அழுதுகொண்டிருந்தபோது, அன்சாரிப் பெண் ஒருவர் வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். நான் அவருக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவரும் அழுதபடி அமர்ந்துகொண்டார். நாங்கள் இவ்வாறு இருந்துகொண்டிருக் கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலி ருந்து அவர்கள் என்னருகே அமர்ந்த தில்லை. ஒரு மாத காலம்வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு யிவஹீ’யாக அருளப்படவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை)” என்று கூறிவிட்டு, ‘‘ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரி, அவனிடம் பாவமீட்பு பெற்றுக்கொள். ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருப்பதாக நான் கருதவில்லை. நான் என் தந்தையிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என் சார்பாகப் பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு என் சார்பாகப் பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தாயார், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். நானோ வயது குறைந்த இளம்பெண்; குர்ஆனிலிருந்து அதிகம் தெரியாதவள். ஆகவே, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட வற்றை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனத்தில் பதிந்துபோய், அதை உண்மையென்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நான் தங்களிடம் சொன்னால் லிநான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்லி நீங்கள் அதை நம்பப்போவ தில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால் லிநான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்லி (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக் கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை (யஃகூப் (அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும்” (குர்ஆன், 12:18) என்று கூறினேன்.21 பிறகு படுக்கையில் திரும்பிப் படுத்துக்கொண்டேன். அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்று நம்பினேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! என் தொடர்பாக அல்லாஹ் வேத அறிவிப்பு (வஹீ) அருள்வான் என நான் எண்ணவில்லை. குர்ஆனில் என் தொடர்பாகப் பேசப்படும் அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய எனது எண்ணமாகும். மாறாக, நான் குற்றமற்றவள் என்று காட்டும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்தேன். அல்லாஹ் வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்த எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப் பெற்றுவிட்டது. உடனே (வேத அறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துகளைப் போன்று வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட்டு நீங்கியவுடன் (மகிழ்ச்சியோடு) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை, ‘யிஆயிஷா! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்” என்று என்னிடம் கூறியதுதான். என் தாயார், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து செல்” என்று கூறினார்கள். நான், ‘‘மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களி டம் நான் செல்லமாட்டேன். அல்லாஹ் வைத் தவிர வேறு யாரையும் நான் புகழவுமாட்டேன்” என்றேன். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பிய வர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் பத்து வசனங்களை (24:11லி20) அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் செலவிடமாட்டேன்” என்று கூறினார்கள். லிமிஸ்தஹ் பின் உஸாஸா தம் உற வினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள்லி உடனே உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘உங்களில் செல்வமும் தயாள குணமும் படைத்தோர் (தம்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ இறைவழியில் புலம் பெயர்ந்தவர்களுக்கோ எதுவும் வழங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்ய வேண்டாம்” என்று தொடங்கி, ‘‘அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்குவதை நீங்கள் விரும்பமாட்டீர்களா...” (24:22) என்பதுவரையிலான வசனத்தை அருளி னான். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு முன்பு தாம் செய்துவந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள். (குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தொடர்பாக (தமது இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள். ‘‘ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின்மேல் பழிபோடாமல்) நான் பாதுகாத்துக்கொள்கிறேன்.22 அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்” என்று பதிலளித்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள்தான் எனக்கு (அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அவரை அல்லாஹ் (இறையச்சமுடைய,) தார்மீகப் பண்புகளில் பாதுகாத்திருந்தான்.23 இந்த ஹதீஸ் மொத்தம் பத்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தம் அறிவிப்புகளில் கூறுகிறார்கள்: என்னிடம் உர்வா, சயீத், அல்கமா, உபைதுல்லாஹ் (ரஹ்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறிய வர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷாவை அல்லாஹ் தூய்மைப்படுத்தியது பற்றியும் தெரிவித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் இச்சம்பவத் தில் ஆளுக்கொரு பகுதியை எனக்கு அறிவித்தார்கள். சிலர் சிலரைவிட நன்கு ம”மிட்டும் சம்பவத்தை உறுதியான முறையிலும் கூறினர். அவர்கள் ஒவ்வொருவரும் அறிவித்ததை நான் ம”மிட்டுள்ளேன். ஒருவரது அறிவிப்பு மற்றவரின் அறிவிப்பை உறுதிப்படுத்துகிறது. அத்தியாயம் :

26

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்குக் கேடுதான்; உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, ‘‘உங்களில் எவர் தம் சகோதர ரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருக் கிறாரோ அவர், ‘‘இன்ன மனிதரை நான் (இவ்வாறு) எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரை விசாரணை செய்பவன். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன்” என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

27

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்துகொண்டி ருப்பதையும் அவரை அளவுக்கதிமாகப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதையும் செவியுற்றார்கள். உடனே ‘‘நீங்கள் அந்த மனிதரின் முதுகை அழித்து விட்டீர்கள்லிஅல்லதுலிமுறித்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

28

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுத் போர் நடந்த காலகட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்துகொள்ள) எனக்கு அனுமதி யளிக்கவில்லை. அகழ்ப் போரின்போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத் தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள். அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். (இப்னு உமர் (ரலி) அவர்களுடைய) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், ‘‘(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்குமிடையில் (வேறுபடுத்திக்காட்டும்) எல்லைக் கோடாகும்” என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (இராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படி தம் ஆளுநர்களுக்குக் கடிதம் எழுதினார்கள் அத்தியாயம் :

29

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது பருவ வயதை அடைந்துவிட்ட ஒவ்வொரு வர்மீதும் கடமையாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

30

31

இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பிரதிவாதிதான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்கு (கடிதம்) எழுதி னார்கள். அத்தியாயம் :

32

அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு செல்வத்தை (அநியாயமாக) அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய்ச் சத்தியம் செய்பவர், தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனை (மறுமையில்) சந்திப்பார்” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.) பிறகு அதை உறுதிப்படுத்தும் விதத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘எவர் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்கவும்மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும்” (3:77) எனும் வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, ‘‘அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் லி ரலி) உங்களிடம் என்ன சொல்கிறார்?” என்று கேட்க, நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில்தான் அந்த வசனம் இறங்கியது. எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு விஷயத்தில் வழக்கு இருந்துவந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றோம். அவர்கள், ‘‘உம்முடைய இரு சாட்சிகள். அல்லது அவருடைய சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன)” என்று கூறினார்கள். நான், ‘‘அப்படியென்றால், அவர் (அந்த யூதர் தயங்காமல்) பொய்ச் சத்தியம் செய்வாரே; (பொய்ச் சத்தியம் செய்வதைப் பற்றி) கவலைப்படமாட்டாரே” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர் ஒரு பிரமாணத்தின்போது அதன் மூலம் ஒரு சொத்தை அடைந்துகொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர், தம்மீது கோபம் கொண்ட நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொற்களை உறுதிப்படுத்தி (குர்ஆனில் ஒரு வசனத்தை) அல்லாஹ் அருளினான்” என்று கூறிவிட்டு, இந்த இறைவசனத்தை (3:77) ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :

33

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் தம் மனைவியை ஷரீக் பின் சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் (அவதூறு கூறிய தற்குத் தண்டனையாக) உன் முதுகில் சாட்டையடி தரப்படும்” என்று கூறினார்கள். அதற்கு ஹிலால் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர், தம் மனைவியின்மேல் ஒரு மனிதரை (தவறான உறவு கொள்ள)ப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் உன் முதுகில் சாட்டையடி தரப்படும்” என்று மீண்டும் கூறினார்கள். இதையடுத்து சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) தொடர்பான ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.27 அத்தியாயம் :

34

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரிடம் (மறுமை நாளில்) அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும். ஒருவர், (மக்களின் போக்குவரத்துப்) பாதையில் எஞ்சிய தண்ணீரை வழிப் போக்கர்களுக்கு (தராமல்) தடுக்கும் மனிதர் ஆவார். மற்றொருவர், உலக ஆதாயத்திற் காகவே ஆட்சியாளரிடம் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தவர் ஆவார். தாம் விரும்புவதை தமக்குக் கொடுத்தால் (பிரமாணத்தின் அடிப்படையில்) ஆட்சி யாளரிடம் விசுவாசமாக நடந்துகொள்வார். இல்லையெனில் விசுவாசமாக நடந்து கொள்ளமாட்டார். இன்னொருவர் ஒரு மனிதரிடம் அஸ்ர் தொழுகைக்குப் பிறகு ஒரு பொருளுக்கு விலை கூறி, அந்தப் பொருளுக்கு இன்ன விலையைத் தாம் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது (பொய்) சத்தியம் செய்ய, (அதை நம்பி) அந்த மனிதர் (அவர் சொன்ன விலைக்கு) அதை எடுத்துக்கொள்ளும்படி செய்தவர் ஆவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

35

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (பிரமாண வாக்குமூலத்தின்போது) ஒரு செல்வத்தை அபகரித்துக்கொள்ளும் நோக்கத்துடன் சத்தியம் செய்பவர், தம்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் (மறுமையில்) அவனைச் சந்திப்பார். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

36

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கூட்டத்தார் (ஒரு பொருள் தொடர்பாக ஆதாரமேயின்றி ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடியபோது) சத்தியம் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக்கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் (முதலில்) சத்தியம் செய்வதென்பதை அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தர விட்டார்கள். அத்தியாயம் :

37

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (கடைத்தெருவில்) தமது சரக்கை (மக்கள்முன்) வைத்து, அல்லாஹ் வின் பெயரால் சத்தியமிட்டு, தாம் அதற் குத் தராத விலையைத் தந்திருப்பதாக (பொய்) கூறினார். அது தொடர்பாகத்தான் மேற்கண்ட இறைவசனம் (3:77) அருளப் பட்டது. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பொய் சொல்லி விலையை ஏற்றுபவர், லிவட்டி வாங்குபவரைப் போன்றுலி மோசடிக்காரர் ஆவார். அத்தியாயம் :

38

அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு மனிதரின் லிஅல்லது சகோதரரின்லி செல்வத்தை அபகரித்துக்கொள்வதற்காக, ஒரு பிரமாண(வாக்கு மூலத்)தின்போது பொய்யாகச் சத்தியம் செய்பவர், தம்மீது கோபம் கொண்ட நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் இதை உறுதிப்படுத்தி, மேற்கண்ட குர்ஆன் வசனத்தை (3:77) அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அப்போது அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘அப்துல்லாஹ் இன்று உங்களிடம் என்ன பேசினார்?” என்று கேட்க, நான். ‘‘இன்னின்ன விஷயங்களைப் பேசினார்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘அந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது” என்று கூறினார்கள். அத்தியாயம் :

39

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பகலிலும் இரவி லும் ஐந்து தொழுகைகள் (இஸ்லாத்தில் கட்டாயக் கடமையாகும்)” என்று பதில் கூறினார்கள். அவர், ‘‘இதைத் தவிர (வேறு தொழுகை) ஏதும் என்மீது (கடமையாக் கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, ‘‘இல்லை; நீயாக விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மேலும், ‘‘ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும்” என்று கூறினார்கள். அவர், ‘‘இதைத் தவிர வேறு (நோன்புகள்) ஏதேனும் என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, ‘‘இல்லை; நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் ‘‘இதைத் தவிர வேறு ஏதேனும் (தர்மம்) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். ‘‘இல்லை; நீயாக விரும்பிச் செலுத்தும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்குமேல் நான் அதிகமாகச் செய்யவும்மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும்மாட்டேன்” என்று கூறியபடி திரும்பிச் சென்றார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

40

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: யார் சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்; அல்லது அமைதியாக இருக்கட்டும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

41

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிட வாக்கு சாதுரியம் மிக்கவராக இருக்கக்கூடும். ஆகவே, எவரது (சாதுரியமான) சொல்லை வைத்து அவருடைய சகோதரனின் உரிமையில் ஒன்றை (அவருக்குரியது) என்று நான் தீர்ப்பளித்துவிடுகிறேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் ஒதுக்கித்தருகிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். அத்தியாயம் :

42

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: (கிழக்கு ரோமானிய மன்னர்) ஹிரக் ளீயஸ் என்னிடம், ‘‘அவர் (முஹம்மத்லிஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?› என்று உம்மிடம் நான் கேட்டேன். ‘‘அவர் தொழுகை, வாய்மை, சுயக்கட்டுப்பாடு, வாக்குறுதியை நிறைவேற்றல், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்ப ஒப்படைத்தல்30 ஆகியவற்றைக் கடைப் பிடிக்குமாறு கட்டளையிடுகிறார் என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்” என்று கூறினார். அத்தியாயம் :

43

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும்போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

44

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது, (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (பஹ்ரைன் ஆளுநர்) அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தர வேண்டியதிருந்தால், அல்லது நபியவர்களிடமிருந்து யாருக் காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரது உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)” என்று கூறினார்கள். (இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், ‘‘எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்” என்று கூறினேன். லி ‘‘இப்படிக் கூறியபோது, தம் இரு கைகளையும் ஜாபிர் (ரலி) அவர்கள் மூன்றுமுறை விரித்துக் காட்டினார்கள்” என்று அறிவிப்பாளர் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் லி அபூபக்ர் (ரலி) அவர்கள் என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும், பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள்.31 அத்தியாயம் :

45

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் (இராக்கில் உள்ள) யிஹீரா’வாசியான யூதர் ஒருவர், ‘‘மூசா (அலை) அவர்கள் (எட்டு ஆண்டு அல்லது பத்தாண்டு பணிபுரிதல் என்ற) இரண்டு தவணைகளில் எதை நிறைவேற்றினார்கள்?” என்று கேட்டார். நான், ‘‘எனக்குத் தெரியாது. நான் அரபுப் பேரறிஞரிடம் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்) சென்று அவரிடம் கேட்கும்வரை (காத்திரு)” என்று கூறினேன். அவ்வாறே, நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள், ‘‘அவ்விரண்டில் அதிக மானதை, அவ்விரண்டில் மிக நல்லதை நிறைவேற்றினார்கள். இறைத்தூதர் (எவராயினும்) சொன்னால் செய்(து முடித்துவிடு)வார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

46

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் சமுதாயமே! இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள்மீது அருளப் பெற்றுள்ள உங்கள் வேதம் (குர்ஆன்) இறைவனின் செய்திகளில் மிகவும் புதியது. அதை நீங்கள் கலப்படமில்லாத நிலையில் ஓதிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படியிருக்க, நீங்கள் வேதக்காரர்களிடம் எப்படி (வேதங் களின் விவரங்களைக்) கேட்கிறீர்கள்? வேதக்காரர்கள் அல்லாஹ் எழுதியதை மாற்றிவிட்டார்கள்; தங்கள் கைகளால் இறைவேதத்தை மாற்றிவிட்டு, ‘‘அதன் மூலம் சொற்ப விலையை வாங்கிக் கொள்வதற்காக, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்று கூறுகிறார்கள் (என அல்லாஹ் சொல்கின்றான்). (2:79) (அல்லாஹ்விடமிருந்து) உங்களுக்கு வந்துள்ள (மார்க்க) ஞானம், அவர்களிடம் கேட்பதிலிருந்து உங்களைத் தடுக்க வில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! வேதக்காரர்களில் யாரும் உங்களுக்கு அருளப்பட்ட (வேதத்)தைப் பற்றிக் கேட்பதை நாம் கண்டதேயில்லையே. இதை உபைதுல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

47

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைச் சட்டங்கள் மீறப்படும்போது வாளாவிருப்பவர், அவற்றை மீறி நடப்பவர் ஆகியோருக்கு உதாரணம் ஒரு கூட்டத் தாரின் நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த்தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல்தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின் கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு மேல்தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அதனால் மேல்தளத்திலிருந்தவர்களுக்குத் தொல்லை ஏற்பட்டது. ஆகவே, (கீழ்த்தளத்தில் இருந்த) ஒருவன் ஒரு கோடரியை எடுத்து, கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிடத் தொடங்கினான். மேல்தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, ‘‘உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவன், ‘‘நீங்கள் என்னால் தொல்லைக்குள்ளானீர் கள். எனக்குத் தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. (அதனால் கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்வேன்)” என்று கூறினான். அப்போது (துளையிட விடாமல்) அவனுடைய இரு கைகளையும் அவர்கள் பிடித்துக்கொண்டால் அவர்கள் அவனையும் காப்பாற்றுவார்கள்; தங்களையும் காப்பாற்றிக்கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில் துளையிட) விட்டுவிட்டால் அவனையும் அழித்துவிடுவார்கள்; தங்களையும் அழித்துக்கொள்வார்கள். இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

48

காரிஜா பின் ஸைத் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்கள் (அன்சாரிப்) பெண்களில் ஒருவரான உம்முல் அலா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தார்.34 அவர் என்னிடம் தெரிவித்ததாவது: (மக்கா முஸ்லிம்களான) யிமுஹாஜிர்களை யாருடைய வீட்டில் தங்கவைப்பது’ என்பதை அறிய அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது (எங்கள் வீடு) உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர் களின் பங்கில் வந்தது. ஆகவே, உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் எங்களிடம் தங்கினார்கள். அவருக்கு நோய் ஏற்பட்ட போது நாங்கள் அவரை கவனித்துக் கொண்டோம். இறுதியில், அவர் இறந்த போது, அவரை அவரது துணிகளில் வைத்து (கஃபனிட்டு)விட்டோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். (நான் உஸ்மான் பின் மழ்வூனை நோக்கி), ‘‘அபூசாயிபே! உங்கள்மீது இறையருள் உண்டாவதாக! அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தெரியாது. என் தந்தையும், என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உஸ்மானுக்கோ மரணம் வந்துவிட்டது. நான் அவருக்கு நன்மையையே எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவரிடம் எப்படி நடந்துகொள்ளப்படும் (மறுமையில் அவரது நிலை என்னவாகும்?)› என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று ஒருபோதும் கூறுவதேயில்லை. நபியவர்கள் இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு நான் உறங்கினேன். அப்போது கனவில் உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீருற்று (கொடுக்கப்பட்டு) இருப்பதாகக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அந்தக் கனவைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் ‘‘அது அவருடைய (நற்)செயல்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

49

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் செய்ய விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் யாருடைய பெயர் வருகிறதோ அவர் நபி (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்படுவார். நபி (ஸல்) அவர்கள் (தம்) துணைவியரில் ஒவ்வொருவருக்கும் தமது இரவையும் பகலையும் பங்கிட்டிருந்தார்கள். (ஆனால், நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தமது பகலையும் இரவையும் எனக்குப் பரிசளித்துவிட்டார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்பை (பெற) விரும்பியே அவர்கள் இப்படிச் செய்தார்கள். இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35 அத்தியாயம் :

50

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையி(ல் நிற்பதி)லும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகுமானால், நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷா தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.36 அத்தியாயம் :