4 - உளூ
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சிறு துடக்கு ஏற்பட்டவர் அங்கத் தூய்மை செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது” எனக் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஹள்ரமவ்த்’ (யமன்) எனும் இடத்தைச் சேர்ந்த ஒருவர், “அபூஹுரைரா (ரலி) அவர்களே! சிறு துடக்கு என்பது என்ன?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘சப்தத் துடனோ சப்தமின்றியோ நாற்ற வாயு பிரிவது’ என்று பதிலளித்தார்கள்.3 அத்தியாயம் :
நுஐம் பின் அப்தில்லாஹ் அல் முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். பின்னர் “மறுமை நாளில் என் சமுதாயத்தார் அங்கத் தூய்மையின் உறுப்புகளிலுள்ள அடையாளங்களால் ‘(பிரதான) உறுப்புகள் பிரகாசிப்போரே!’ என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் யாருக்கு (தம் உறுப்புகளை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.4 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தொழும்போது வாயு பிரி வதைப் போன்ற உணர்வு ஒருவருக்கு ஏற்படுவது பற்றி முறையிட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வாயு பிரிவதன்) சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது நாற்றத்தை உணராத வரை அவர் (தொழுகையிலி ருந்து) திரும்ப வேண்டாம்” என்றார்கள்.5 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓரிரவு தங்கியிருந்தேன். அந்த இரவில் (தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். இரவின் ஒரு பகுதி ஆனதும் (உறங்கிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து, தொங்கவிடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் பையிலிருந்து, (தண்ணீர் எடுத்து) இலேசாக அங்கத் தூய்மை செய்தார்கள். -(இதன் அறிவிப்பவர்களில் ஒருவ ரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், ‘இலேசாக அங்கத் தூய்மை செய்தார்கள்’ என்பதோடு ‘குறைந்தபட்ச அளவில்’ என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார்கள்.-6 பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுவதற் காக நின்றார்கள். உடனே நானும் அவர்களைப் போன்றே (இலேசாக) அங்கத் தூய்மை செய்துவிட்டுவந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திக்கொண்டார்கள். பின்னர் அவர்கள் அல்லாஹ் நாடிய அளவுக்குத் தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது எழுந்து அவருடன் (சுப்ஹு) தொழுகைக்குப் போய் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால், (மீண்டும்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யவில்லை.7 (இதன் அறிவிப்பாளரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், “மக்கள் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்கள்தான் உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது’ என்று கூறுகின்றனரே! (அது உண்மையா?)” என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள், “இறைத் தூதர்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி(யான வஹீ)யாகும் என்று (வந்துள்ள நபிமொழியை) உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள். பிறகு “(மகனே!) உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக கனவில் கண்டேன்” (37:102) எனும் இறைவசனத்தையும் (தமது கருத்துக்குச் சான்றாக) ஓதிக்காட்டினார்கள். சுஃப்யான் (ரஹ்) அவர்கள் சில நேரங்களில், “நபி (ஸல்) அவர்கள், குறட்டை விட்டுத் தூங்கிவிட்டு பிறகு (எழுந்து) தொழுவார்கள்” என்றும், வேறுசில நேரங்களில் “நபி (ஸல்) அவர்கள் சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு எழுந்து தொழுதார்கள்” என்றும் அறிவித்துள்ளார்கள். ஆனால், மேற்கண்ட முழு ஹதீஸில் உள்ளவாறே பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அரஃபா’விலிருந்து (‘முஸ்தலிஃபா’வுக்குத்) திரும்பிக்கொண்டி ருந்தார்கள். ஒரு கணவாயை அடைந்த போது, அங்கு (தமது ஊர்தியைவிட்டு) இறங்கி, சிறுநீர் கழித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை செய்தார்கள்; அங்கத் தூய்மையை (சுருக்கமாகவே செய்தார்கள். நன்கு தேய்த்து மும்முறை கழுவி) முழுமையாக்கவில்லை. அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! (இங்கு) தொழப் போகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உமக்கு முன்னர் (உள்ள முஸ்தலிஃபாவில்) நடைபெறும்” என்று கூறிவிட்டு ஊர்தியில் ஏறிக்கொண்டார்கள். ‘முஸ்தலிஃபா’வுக்கு வந்ததும், இறங்கி மீண்டும் அங்கத் தூய்மை செய்தார்கள். இப்போது அங்கத் தூய்மையை நிறைவாகச் செய்தார்கள். பின்னர் தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டதும், மஃக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பிறகு ஒவ்வொரு மனிதரும் தத்தமது ஒட்டகத்தை தம் தங்குமிடங்களில் படுக்கவைத்தனர். தொடர்ந்து இஷா தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டபோது, அதையும் தொழுவித்தார்கள். (மஃக்ரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளுக்கிடையே வேறெந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை. அத்தியாயம் :
அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது (ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதைக் கொண்டு) தமது முகத்தைக் கழுவினார்கள். -அதாவது (ஒரே) ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாயும் கொப்புளித்து மூக்கிற்கும் நீர் செலுத்தி னார்கள். பிறகு ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதை -இவ்வாறு- மற்றொரு கையுடன் சேர்த்துக்கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள். பிறகு ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதன் மூலம் தமது வலக் கையைக் கழுவினார்கள். பின்னர் ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதன் மூலம் தமது இடக் கையைக் கழுவினார்கள். பிறகு தமது (ஈரக்கையால்) தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். பிறகு ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதைத் தமது வலக் காலின் மீது சிறுகச் சிறுக ஊற்றி அதைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடக் காலில் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு “இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியிடம் (தாம்பத்திய உறவுகொள்ளும் எண்ணத் தில்) செல்லும்போது, “அல்லாஹ்வின் திருப்யெரால் (பிஸ்மில்லாஹ்); இறைவா! ஷைத்தானை எங்களைவிட்டு விலக்கி வைப்பாயாக! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத் தானை விலக்கிவைப்பாயாக!” என்று பிரார்த்தித்து(விட்டு உறவு கொண்டு), அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந் தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்ப தில்லை. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற் குள் நுழையும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸி” (இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘கழிப்பிடத்திற்கு வந்தால்’ என்றும், ஹம்மாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘(கழிப்பிடத்திற்குள்) நுழைந்தால்’ என்றும், அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘(கழிப்பிடத்திற்குள்) நுழைய நினைத்தால்’ என்றும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கி யிருந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தார்கள். அப் போது அவர்களுக்காக நான் (அங்கத் தூய்மை செய்ய) தண்ணீர் வைத்தேன். அவர்கள் (திரும்பிவந்ததும்), “இதை வைத்தவர் யார்?” என்று கேட்டார்கள். (என்னைப் பற்றித்) தெரிவிக்கப்பட்டது. அப்போது “இறைவா! இவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பாயாக!” என்று (எனக்காக) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்க வேண்டாம்; (அதன் திசையில்) தமது முதுகைக் காட்டி அமரவும் வேண்டாம். (மாறாக) கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக்கொள்ளுங்கள்.9 இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
வாசிஉ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இயற்றைக் கடனை நிறைவேற்ற நீ அமரும்போது, கிப்லாவையோ, பைத்துல் மக்திஸையோ முன்னோக்கக் கூடாது என்று மக்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனால், நான் ஒரு நாள் எங்கள் (ஹஃப்ஸா) வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்களின் மீது பைத்துல் மக்திஸின் திசையை முன்னோக்கியபடி இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருப்பதை (தற் செயலாக)க் கண்டேன்” என்று கூறு வார்கள்.10 பிறகு என்னிடம், “புட்டங்களில் தொழுபவர்களில் நீங்களும் ஒருவரோ!” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் அவ்வாறு தொழுதேனா என்று) எனக்குத் தெரியாது” என்றேன். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தரையுடன் (புட்டத்தை) சேர்த்துக் கொண்டவராகவும் புட்டத்தைத் தரை யிலிருந்து உயர்த்தாமலும் சஜ்தா செய்(து தொழு)பவரைத்தான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இவ்வாறு) குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியர் இயற்கைக் கடனை நிறைவேற்ற இரவு நேரத்தில் (ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்த) ‘மனாஸிஉ’களுக்கு (வீட்டை விட்டு) வெளியே செல்லும் வழக்க முடையவர்களாய் இருந்தார்கள். -மனாஸிஉ என்பது (மதீனாவின் புறநகரிலிருந்த) விசாலமான திறந்த வெளிகளாகும்.- இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “உங்கள் துணைவியரை (வெளியே செல்லும்போது) பர்தா இட்டு மறைத்துக்கொள்ளச் சொல்லுங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான சவ்தா (ரலி) அவர்கள் ஓர் இரவு இஷா நேரத்தில் (இயற்கைக் கடனை நிறைவேற்ற) வெளியே சென்றார்கள். -அவர்கள் உயரமான பெண்மணியாக இருந்தார்கள்.- அவர்களைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், “சவ்தா! உங்களைக் கண்டுகொண்டோம்” என்று பர்தா (பற்றிய வசனம்) அருளப்படாதா என்ற பேராவலில் சவ்தா (ரலி) அவர்களை அழைத்துக் கூறினார்கள். அப்போது அல்லாஹ், பர்தா தொடர்பான வசனத்தை அருளினான். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “(என் துணைவி யரே!) நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்ல உங்களுக்கு அனுமதி யளிக்கப்பட்டு உள்ளது” என்று சொன் னார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் ‘வெளியே செல்லல்’ என்பதற்கு ‘இயற்கைக் கடனை நிறைவேற்ற திறந்த வெளிகளுக்குச் செல்லல்’ என்பதே நபி (ஸல்) அவர்களின் கருத்தாகும் என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் தேவையொன்றுக்காக (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டுக் கூரைமீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும் (பைத்துல் மக்திஸ் இருக்கும்) ஷாம் (சிரியா) திசையை முன்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் (தமது வீட்டிலிருந்த கழிவறையில்) இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொண்டிருப்பதை நான் (தற்செயலாகக்) கண்டேன். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நான் (ஒரு தேவை நிமித்தம்) எங்கள் வீட்டுக் கூரைமீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்கள் மீதமர்ந்தவர்களாக பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையை முன்னோக்கியபடி (இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொண்டு) இருப்பதைக் கண்டேன்.11 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற (வீட்டை விட்டுப்) புறப்பட்டால், நானும் இன்னொரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் எடுத்துக்கொண்டு செல்வோம். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுல்வலீத் ஹிஷாம் பின் அப்தில் மலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) “அந்தத் தண்ணீரால் நபி (ஸல்) அவர்கள் துப்புரவு செய்துகொள்வதற்காக (எடுத்துச் சென்றோம்)” என்ற கருத்தில்தான் அனஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற வெளியே சென்றால், நானும் எங்க(ள் அன்சாரிக)ளில் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றுடன் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம். (அந்தத் தண்ணீரால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துப்புரவு செய்துகொள்வார்கள்.)13 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (புறநகர்ப் பகுதி யிலுள்ள) கழிப்பிடத்திற்குச் செல்லும் போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும் (மறைப் புக்கான) ஒரு கைத்தடியையும் (அனஸா) எடுத்துச் செல்வோம். (தமது தேவையை முடித்துவிட்டு) தண்ணீரால் அவர்கள் துப்புரவு செய்துகொள்வார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்கள், ‘அனஸா’ என்பது ‘மேற்புறத்தில் பூண் இடப்பட் டுள்ள கைத்தடியாகும்’ என்று குறிப்பிடு கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (எதையும்) பருகும் போது, பாத்திரத்திற்குள் மூச்சுவிட வேண்டாம்; கழிப்பிடம் சென்றால் பிறவி உறுப்பை வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, பிறவி உறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத் தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது, அவர்களைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்கள் அருகில் நான் சென்றபோது, “நான் (இயற்கைக் கடனை முடித்தபின்) சுத்தம் செய்வதற்காக எனக்குச் சில கற்களை(த் தேடி எடுத்து)வாரீர். எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்துவிடாதீர்” என்று சொன்னார்கள். நான் (கற்களைப் பொறுக்கியெடுத்து) எனது ஆடையின் ஓரத்தில் போட்டுக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்கள் பக்கத்தில் வைத்துவிட்டு, அங்கிருந்து திரும்பிவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை முடித்துவிட்டு) அக்கற்களால் சுத்தம் செய்துகொண்டார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றபோது, தமக்காக மூன்று கற்களைக் கொண்டுவருமாறு என்னைப் பணித்தார் கள். (நான் தேடிப் பார்த்தபோது) இரண்டு கற்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றேன். மூன்றாவது கல்லைத் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை. கெட்டிச் சாணத்தை எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தேன். நபியவர்கள் கற்களைப் பெற்றுக் கொண்டு, சாணத்தை எறிந்துவிட்டு, “இது அசுத்தமானது” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒவ்வோர் உறுப்பையும்) தலா ஒரு முறை கழுவி அங்கத் தூய்மை செய்தார்கள்.14 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒவ்வோர் உறுப்பையும்) தலா இரண்டு முறை கழுவி அங்கத் தூய்மை செய்தார்கள். அத்தியாயம் :
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி (அங்கத் தூய்மை செய்தார்கள். ஆரம்பமாக) தம் இரு முன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்திற்குள் நுழைத்து, (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்புளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தி னார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். (பிறகு) தம் இரு கைகளையும் முழங்கைவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பின்னர் தம் இரு கால்களையும் கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் “யார் எனது (இந்த) அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் உள்ளத்தில் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவருடைய முன்பாவங்கள் மன்னிக்கப் படும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :
ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள், அங்கத் தூய்மை செய்தபோது (எங்களைப் பார்த்து), “நான் ஒரு நபிமொழியை உங்களுக்குச் சொல்லட்டுமா? (குர்ஆனின்) ஒரு வசனம் மட்டும் இல்லையானால், அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டு, “ஒரு மனிதர் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, (கடமையான ஒரு) தொழுகையை நிறைவேற்றுவாராயின், அவர் (அடுத்த வேளைத் தொழுகையை) தொழுது முடிக்கும்வரை அவருக்கும் அந்த (இரண்டாம் வேளைத்) தொழுகைக்கும் இடையில் ஏற்பட்ட (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன் என்றார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “நாம் அருளிய சான்றுகளையும் நல்வழியையும் வேதத்தில் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்திய பிறகும் அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர்” (2:159) எனும் வசனமே (உஸ்மான் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட) அந்த வசனமாகும். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அங்கத் தூய்மை செய்கிறாரோ அவர் மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்தட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்து விட்டுக் கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால், அவர் தாம் அங்கத் தூய்மை செய்யப்போகும் தண்ணீருக்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையைக் கழுவிக்கொள்ளட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் இரவில் (உறங்கும் போது) தமது கை எங்கே இருந்தது என்பதை அறியமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்த) ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அஸ்ர் (தொழுகையின்) நேரத்தை அடைந்து விட்ட நிலையில் எங்களிடம் அவர்கள் வந்துசேர்ந்தார்கள். அப்போது நாங்கள் அங்கத் தூய்மை செய்துகொண்டிருந் தோம். (கால்களைக் கழுவாமல்) கால்களை ஈரக்கையால் தடவிக்கொண்டிருந்தோம். இதைக் கண்ணுற்ற நபி (ஸல்) அவர்கள் “(அங்கத் தூய்மையில் கழுவப்படாத) இத்தகைய குதிகால்களுக்கு நரகம்தான்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் உரத்த குரலில் கூறினார்கள். அத்தியாயம் :
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, (தண்ணீர் வந்ததும்) தம் (முன்) கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்திற் குள் நுழைத்து (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்புளித்து, மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தம் இரு கைகளையும் முழங்கைவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு ஒவ்வொரு காலையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு “(இதோ!) நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யக் கண்டேன்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘யார் என்னுடைய இந்த அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, பின்னர் வேறு எந்த எண்ணங்களுக்கும் தமது உள்ளத் தில் இடம் தராமல், இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய முன்பாவங்களை அல்லாஹ் மன்னிக்கி றான்’ என்று கூறினார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நீர் குவளையில் (தண்ணீர் அள்ளி) மக்கள் அங்கத் தூய்மை செய்துகொண்டி ருந்தபோது (அவ்வழியே) எங்களைக் கடந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் சென்றார் கள். அவர்கள் (எங்களைப் பார்த்து), “அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்யுங்கள். ஏனெனில், அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் ‘(அங்கத் தூய்மையில்) சரியாகக் கழுவப்படாத குதிகால்களுக்கு நரகம்தான்’ என்று கூறினார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! நீங்கள் நான்கு காரியங் களைச் செய்வதை நான் பார்க்கிறேன். உங்கள் நண்பர்க(ளான நபித்தோழர்க)ளில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை” என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இப்னு ஜுரைஜ்! அவை யாவை?” என்று கேட்டார்கள். நான் சொன்னேன்: (கஅபாவைச் சுற்றிவரும்போது அதன் மூலைகளில்) ருக்னுல் யமானீ மற்றும் ஹஜருல் அஸ்வத் ஆகிய இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடுவதைக் கண்டேன். (மற்ற மூலைகளை நீங்கள் தொடுவதில்லை.) மேலும், முடி அகற்றப்பட்ட தோல் காலணிகளையே நீங்கள் அணிவதை நான் பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ஆடைக்கு மஞ்சள் நிறச் சாயமிடுவதையே நான் பார்க்கிறேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது மக்கள் (துல்ஹஜ்) பிறை கண்டவுடன் ‘இஹ்ராம்’ கட்டினாலும், நீங்கள் ‘இஹ்ராம்’ கட்டாமல் துல்ஹஜ் எட்டாம் நாள் (யவ்முத் தர்வியா)வரை இருப்பதைக் கண்டேன் (இவைதான் அந்த நான்கு விஷயங்கள்)”. அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுல் யமானீ, ஹஜருல் அஸ்வத் ஆகிய இரு மூலைகளைத் தவிர வேறெதையும் தொடுவதை நான் கண்டதில்லை (ஆகவே, நானும் அப்படிச் செய்கிறேன்). முடி அகற்றப்பட்ட காலணிகளைப் பொறுத்த வரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத காலணிகளை அணிவதையும் அதனுடன் (காலைக் கழுவி) அங்கத் தூய்மை செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதை அணிவதை விரும்புகிறேன். மஞ்சள் நிறத்தைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆடைக்கு) அதன் மூலம் சாய மிடுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே, அதைக் கொண்டு சாயமிடுவதை நான் விரும்புகிறேன். ‘இஹ்ராம்’ கட்டுவதைப் பொறுத்த வரையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும் (துல்ஹஜ் எட்டாம் நாள்)வரை இஹ்ராம் கட்டுவதை நான் பார்த்ததில்லை (எனவேதான், நானும் எட்டாம் நாள் ‘இஹ்ராம்’ கட்டுகிறேன்). அத்தியாயம் :
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் மக(ள் ஸைனப் (ரலி) இறந்தபோது அவர்க)ளை நீராட்டுவது குறித்துப் பெண்களிடம் கூறுகையில், “அவருடைய வலப் பக்கத்தி லிருந்தும், அங்கத் தூய்மை செய்ய வேண்டிய உறுப்புக்களிலிருந்தும் (கழுவ) ஆரம்பியுங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்துகொள்ளும்போதும் தலைவாரிக் கொள்ளும்போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்து வேலைகளிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.16 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அஸ்ர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். மக்கள் அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தில் (சிறிது) தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தினுள் தமது கரத்தை வைத்து, அப்பாத்திரத்திலிருந்து அங்கத் தூய்மை செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விரல்களுக்குக் கீழேயிருந்து தண்ணீர் சுரப்பதை நான் கண்டேன். மக்களில் இறுதி ஆள்வரை அனைவரும் அங்கத் தூய்மை செய்து முடித்தார்கள். அத்தியாயம் :
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபீதா (பின் அம்ர் அஸ்ஸல் மானீ-ரஹ்) அவர்களிடம், ‘அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து’ அல்லது ‘அனஸின் குடும்பத்தாரிடமிருந்து’ நாங்கள் பெற்ற நபி (ஸல்) அவர்களின் சில முடிகள் எங்களி டம் இருக்கின்றன என்று சொன்னேன். அதற்கு அபீதா (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகமும் அதில் உள்ளவற்றை யும்விட எனக்கு மிகவும் உவப்பான தாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) தமது தலைமுடியை மழித்த போது, அபூதல்ஹா (ரலி) அவர்களே முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முடிகளில் சிலவற்றை எடுத்து (பத்திரப்படுத்தி)க்கொண்டார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருடைய பாத்திரத் தில் நாய் (வாய்வைத்துக்) குடித்துவிடு மானால், அவர் அந்தப் பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த தோல்) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் அள்ளிவந்து, அந்நாய் தாகம் தீரும்வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவரது நற்செயலைப் பாராட்டி (ஏற்று) அவரைச் சொர்க்கத்தில் அனுமதித்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில், (வெளியே) சிறுநீர் கழித்துவிட்டு, (மண்தரையாக இருந்த) பள்ளிவாசலுக்குள் நாய்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தன. இதற்காக மக்கள் (பள்ளிவாசலில் தண்ணீர்) எதையும் தெளிப்பவர்களாக இருக்க வில்லை. அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியாவது: (நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பிவைத்து, அது (பிராணிகளைக் கவ்விக்) கொன்றுவிட்டாலும் அதை நீங்கள் உண்ணலாம். (அந்தப் பிராணியை) நாய் தின்றிருக்குமானால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அது (அப்பிராணியை) தனக்காகவே (கவ்வி) வைத்துக் கொண்டுள்ளது” என்று கூறினார்கள். நான், “எனது நாயை வேட்டையாட அனுப்புகிறேன்; அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிடித்தது எது என்று எனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் நாயைத்தான் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி அனுப்பினீர்களே தவிர, மற்றொரு நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பவில்லை; எனவே, (அதை) உண்ணாதீர்கள்” என்று சொன்னார்கள்.18 அத்தியாயம் :
சயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியார் (அங்கத் தூய்மை செய்து கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் இருக்கும் நேரமெல்லாம் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறாôர்; அவருக்கு சிறு துடக்கு (ஹதஸ்) ஏற்படாத வரை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அரபி மொழி (நன்கு) தெரியாத ஒருவர், “ஹதஸ் என்றால் என்ன, அபூஹுரைரா அவர்களே!?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பின்துவாரத்திலிருந்து வெளியாகும் காற்று (சப்தம்)” என்று பதிலளித் தார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் நிற்கும்போது பின்துவாரத்திலிருந்து பிரியும் காற்றின்) சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது (அதன்) நாற்றத்தை உணராத வரை (தொழுகையை விட்டு) திரும்பிச் செல்ல வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: பாலுணர்வு கிளர்ச்சி நீர் (‘மதீ’) அதிக மாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றிக்) கேட்க வெட் கப்பட்டு மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவ்வாறே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். “அதற்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதுதான் கடமை; (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் “ஒருவர் (தம் மனைவி யுடன்) தாம்பத்திய உறவு மேற்கொண்டார். ஆனால், விந்து வெளியாகவில்லை (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா, என்ன) சொல்லுங்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அவர் தமது ஆண் குறியைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குச் செய்வதைப் போன்று அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள். மேலும், இது பற்றி அலீ (ரலி), ஸுபைர் (ரலி), தல்ஹா (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகியோரைக் கேட்டபோது, இவ்வாறே அவர் செய்ய வேண்டுமென அவர்கள் அனை வரும் வலியுறுத்தினர்.21 அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலி ருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள். “நாம் உங்களை அவசரப் படுத்திவிட்டோம் போலும்?” என்றார்கள். அதற்கு அவர் ‘ஆம்’ என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் (தாம்பத்திய உறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எழ நேர்ந்தால், அல்லது விந்து வெளியாக்காம லிருந்தால் அங்கத் தூய்மை செய்வது (மட்டுமே) உங்கள்மீது கடமையாகும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து ஃகுன்தர் (ரஹ்), யஹ்யா (ரஹ்) ஆகியோர் வழியாக வரும் அறிவிப்பில் “அங்கத் தூய்மை கடமையாகும்” எனும் வாசகம் இடம்பெறவில்லை. (“உங்கள்மீது குளியல் கடமையாகாது” என்ற வாசகமே காணப்படுகிறது.) அத்தியாயம் :
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) ‘அரஃபா’ பெருவெளி யிலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு கணவாயை நோக்கிச் சென்று அங்கு இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள். அப்போது நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்ற, அவர்கள் அங்கத் தூய்மை செய்யலானார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு, “தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா எனும் இடத்தில்) வருகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.22 அத்தியாயம் :
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் தமது (இயற்கைத்) தேவைக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். (அவர்கள் திரும்பி வந்தபோது) அவர்களின் (கை கால்கள்)மீது நான் தண்ணீர் ஊற்றலானேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். ஈரக்கையால் தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். ஈரக்கையால் காலுறைகள்மீது தடவினார்கள் (காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவவில்லை). அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் (ஒரு நாள்) இரவு தங்கினேன். நான் தலையணையின் அகலவாக்கில் (தலை வைத்துப்) படுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் வீட்டாரும் அதன் நீளவாக்கில் (தலைவைத்துப்) படுத்திருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை, அல்லது அதற்கு சற்று முன்புவரை, அல்லது சற்றுப் பின்புவரை உறங்கினார்கள். (பின்னர்) அவர்கள் விழித்தெழுந்து அமர்ந்து, தமது கரத்தால் தமது முகத்தில் தடவித் தூக்க(க் கலக்கத்)தைத் துடைக்கலானார்கள். பிறகு ‘ஆலு இம்ரான்’ அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர் பையருகே சென்று (அதைச் சரித்து) அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தார்கள். தமது அங்கத் தூய்மையைச் செம்மையாகச் செய்து கொண்ட பின்னர் தொழுவதற்காக நின்றார்கள். நானும் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று (அங்கத் தூய்மை) செய்துவிட்டு அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் போய் நின்றேன். உடனே அவர்கள் தமது வலக் கரத்தை என் தலைமீது வைத்து, என் வலது காதைப் பிடித்துத் திருகி (தம் வலப் பக்கத்தில் இழுத்து) நிறுத்தினார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக் அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள், மறுபடியும் இரண்டு ரக்அத்து கள், மேலும் இரண்டு ரக்அத்கள் தொழு தார்கள். பின்பு ‘வித்ர்’ தொழுதார்கள். பின்னர் தொழுகை அறிவிப்பாளர் (தொழுகை அறிவிப்புச் செய்துவிட்டுத் தம்மிடம்) வரும்வரை சாய்ந்து படுத்திருந் தார்கள். பிறகு (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுவிட்டு, (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று சுப்ஹு தொழு(வித்)தார்கள். அத்தியாயம் :
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) சூரிய கிரகணம் எற்பட்டபோது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று தொழுதுகொண்டிருந்தனர். ஆயிஷா (ரலி) அவர்களும் நின்று தொழுதுகொண் டிருந்தார்கள். (தொழுகையிலிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம்) நான், “மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (ஏதும் கூறாமல்) வானை நோக்கித் தமது கரத்தால் சைகை செய் தார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக) ‘சுப்ஹானல் லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். “இது (ஏதாவது) அடையாளமா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (அவர் களோடு நீண்ட நெடிய அத்தொழுகையில்) நின்றுகொண்டேன். எந்த அளவுக் கென்றால் (நீண்ட நேரம் நின்றதால்) எனக்குக் கிறக்கமே ஏற்பட்டுவிட்டது. (கிறக்கம் நீங்க) என் தலைமீது தண்ணீரை ஊற்றலானேன். தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்: எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும், எனக்கு (வஹீ) அறிவிக்கப்பட்டது: நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் (கப்றில்) ‘தஜ்ஜால்’ என்பவனுடைய சோதனைக்கு ‘நிகரான’ அல்லது ‘நெருக்கமான’ அளவுக்குச் சோதிக்கப்படுவீர்கள். -இதன் அறிவிப்பாளரான பாத்திமா பின்த் அல்முன்திர் (ரஹ்) கூறுகிறார்: (நிகரான/நெருக்கமான) இவற்றில் எந்த வாசகத்தை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.- அப்போது (மண்ணறையிலிருக்கும்) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி), “இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?” என்று (வானவர்களால்) கேட்கப்படும். அதற்கு ‘இறைநம்பிக்கையாளரோ’ அல்லது ‘உறுதி கொண்டவரோ’ -இவற்றில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.- “அவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நல்வழியை யும் கொண்டுவந்தார்கள். நாங்கள் (அவர் களது அழைப்பை) ஏற்றுப் பின்பற்றி னோம்” என்று பதிலளிப்பார். அப்போது கேள்வி கேட்ட (வான)வர் களின் தரப்பிலிருந்து “நல்லபடியாக நீர் உறங்குவீராக! நீர் (இந்த இறைத்தூதரை ஏற்ற நல்ல) நம்பிக்கையாளராய் இருந்தீர் என்று நாங்கள் அறிந்திருந்தோம்” என்று கூறப்படும். ‘நயவஞ்சகரோ’ அல்லது ‘சந்தேகப் பேர்வழியோ’ -இவற்றில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை- “எனக்கு எதுவும் தெரியாது. மக்கள் எதையோ சொல்லக் கேட்டேன். அதையே நானும் சொன்னேன்” என்று கூறுவார்.23 அத்தியாயம் :
யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அங்கத் தூய்மை செய்தார்கள் என்பதை எனக்கு நீங்கள் செய்து காட்ட முடியுமா?” எனக் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ‘ஆம்’ (செய்துகாட்டுகிறேன்) என்று கூறித் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். அதைத் தம் இரு (முன்) கைகளிலும் ஊற்றி இரு முறை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய் கொப்புளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் முழங்கைவரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பின்னர் (ஈரக்) கைகளால் தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். (அதாவது) தம் இரு கைகளையும் (முன்)தலையில் வைத்து பின்னே கொண்டுசென்றார்கள். பிறகு பின் தலையில் வைத்து முன்னே கொண்டு வந்தார்கள். ஆரம்பமாக முன் தலையில் வைத்து அப்படியே அதைத் தமது பிடரிவரைக் கொண்டுசென்றபின் அப்படியே ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் கொண்டுசென்றார்கள். பிறகு இரு கால்களையும் கழுவினார்கள். அத்தியாயம் :
யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர் களுடன் (ஒரு நாள்) நான் இருந்தேன். அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று அங்கத் தூய்மை செய்துகாட்டினார்கள்: (ஆரம்பமாக) பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தமது கையில் ஊற்றி மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி வாய்கொப்புளித்து மூக்கிற்குள் நீர் செலுத்திச் சிந்தினார்கள். மீண்டும் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் முழங்கைவரை இரு முறை கழுவினார்கள். பின்னர் கையை (பாத்திரத்தில்) நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவினார்கள். (அதாவது) இரு கைகளையும் முன் தலையில் வைத்து பின்னால் கொண்டுசென்றார்கள். அப்படியே பின்னாலிருந்து முன் பகுதிக்கு (ஆரம்பித்த இடத்திற்கே) கொண்டுவந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை மட்டுமே செய்தார்கள் (மூன்று தடவை செய்யவில்லை). பின்னர் தம் கால்களை கணுக்கால்கள்வரை கழுவினார்கள். அத்தியாயம் :
அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது ‘அப்தஹ்’ எனுமிடத் திலிருந்த கூடாரத்திலிருந்து) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் எங்களிடம் வந்தார்கள். அங்கத் தூய்மை செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதில் அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்த தண்ணீரின் மீதியைப் பெற்று மக்கள் தங்கள்மீது தடவிக் கொள்ளலாயினர். பின்னர் நபி (ஸல்) அவர்கள், தமக்குமுன் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்றை (தடுப்பாக) வைத்து, லுஹ்ரையும் அஸ்ரையும் இரண்டு இரண்டு ரக்அத் களாகத் தொழுதார்கள். அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஜிஉரானா எனுமிடத்தில் நானும் பிலாலும் இருந்துகொண்டிருந்தபோது) நபி (ஸல்) அவர்கள், தண்ணீர் (குறைவாக இருந்த) குவளையைக் கொண்டுவரச் சொன்னார்கள். அதில் தம் இரு கைகளையும் தமது முகத்தையும் கழுவிவிட்டு, அதனுள் (தமது வாயிலிருந்த) தண்ணீரை உமிழ்ந்தார்கள். பிறகு எங்கள் இருவரிடமும், “இதிலிருந்து சிறிது பருகிவிட்டு, உங்கள் முகத்திலும் கழுத்திலும் ஊற்றிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது : தாம் (ஐந்து வயதுச்) சிறுவனாக இருந்தபோது, தமது வீட்டிலுள்ள கிணற்றி லிருந்து தண்ணீர் எடுத்து நபி (ஸல்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்துவிட்டு) அதைத் தமது முகத்தில் உமிழ்ந்ததாக என்னிடம் குறிப்பிட்ட மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் (பின்வருமாறும்) கூறி னார்கள்: நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யும்போது, அவர்கள் அங்கத் தூய்மை செய்துவிட்டு மீதி வைக்கின்ற தண்ணீரை எடுத்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக மக்கள் ஒருவரோ டொருவர் போட்டியிட்டுக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிடுவார்கள். இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மற்றும் (மர்வான் பின் ஹகம் எனும்) மற்றொருவரிடமிருந்து அறிவிக்கிறார்கள். இவ்விருவரில் ஒவ்வொருவரும் மற்றவர் சொன்னதை உறுதிப்படுத்தியும் உள்ளார்கள். அத்தியாயம் :
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச்சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (இரு பாதங்களில்) நோய் கண்டுள்ளான்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பரிவுடன்) எனது தலையை வருடிக்கொடுத்து, எனது நலனுக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்துவிட்டு மீதி வைத்த தண்ணீரில் சிறிதளவை நான் அருந்தி னேன். பிறகு நபி (ஸல்) அவர்களின் முதுகுக் குப் பின்னால் நின்று, அவர்களுடைய இரு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு மணவறைத் திரையில் பொருத் தப்படும் பித்தானைப் போன்றிருந்தது. அத்தியாயம் :
யஹ்யா பின் உமாரா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தம்மிரு (முன்)கைகளிலும் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு ஒரே கைத் தண்ணீரை எடுத்து வாய் ‘கழுவி’ அல்லது ‘கொப்புளித்து’ மூக்கிற்கும் நீர் செலுத்தி (சுத்தம் செய்யலா)னார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். (பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.) பிறகு இரு கைகளையும் முழங்கைவரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். (ஈரக் கையால் முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாக) முன்தலையையும் பின்தலையையும் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். மேலும், தம் இரு கால்களையும் கணுக்கால்கள்வரை கழுவினார்கள். பின்னர், “இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அங்கத் தூய்மை இருந்தது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
யஹ்யா பின் உமாரா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை பற்றிக் கேட்டார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அவர்களுக்கு அங்கத் தூய்மை செய்துகாட்டினார்கள். (ஆரம்பமாகப் பாத்திரத்திலிருந்த தண்ணீரைத்) தம்மிரு கைகளில் ஊற்றி இரு (முன்)கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்திற்குள் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி மூன்று முறை வாய் கொப்புளித்து (மூக்கிற்குள் நீர் செலுத்தி சுத்தப்படுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவி னார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் அள்ளி) இரு கைகளையும் முழங்கைவரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பிறகு பாத்திரத்திற்குள் தமது கையை நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். அதாவது தமது இரு கைகளையும் முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டுவந்தார்கள். பிறகு பாத்திரத்திற்குள் தமது கையை நுழைத்து (தண்ணீர் அள்ளி) தம்முடைய இரு கால்களையும் கழுவினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது தலையை (ஒரே) ஒரு தடவை மட்டுமே (ஈரக் கையால்) தடவினார்கள்” என்று அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் (பர்தாவின் சட்டம் அருளப்படுவதற்குமுன்) ஆண்களும் பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) அங்கத் தூய்மை செய்வார்கள். அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் பனூசலிமா குலத்தாரிடையே) நோயுற்று சுய நினைவில்லாமல் இருந்தபோது, என்னை நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்கள் (தண்ணீர் கொண்டுவரச் சொல்லி) அங்கத் தூய்மை செய்து விட்டு, தாம் அங்கத் தூய்மை செய்த தண்ணீரில் சிறிதளவை என்மீது ஊற்றினார்கள். நான் உணர்வு பெற்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சொத்துக்கு யார் வாரிசு? என் சொத்துக்கு என் (மூல வாரிசுகளோ கிளை வாரிசுகளோ இல்லாமல்) சகோதரர்கள் மட்டுமே வாரிசாக ஆகும் (‘கலாலா’) நிலையில் நான் உள்ளேனே?” என்று கேட்டேன். அப்போதுதான் பாகப் பிரிவினை தொடர்பான (4:176ஆவது) வசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள் அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்தபோது, தமது வீடு சமீபத்தில் இருந்தவர்கள் எழுந்து (அங்கத் தூய்மை செய்வதற்காக) தம் வீடுகளுக்குச் சென்ற னர். மற்றவர்கள் அங்கேயே (அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில்) இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தண்ணீருள்ள ஒரு (சிறிய) கல்பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அந்தப் பாத்திரத்திற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை விரித்துக் கழுவ முடியாதபடி (அதன் வாய்) சிறியதாக இருந்தது. ஆனால், அங்கிருந்த மக்கள் அனைவரும் அதில் அங்கத் தூய்மை செய்தனர். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் எத்தனை பேர் (அப்போது) இருந்தீர் கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “எண்பதுக்கும் அதிகமானவர்கள் இருந்தோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அதில் தம்முடைய இரு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு, அதில் (நீர் பெருக) உமிழ்ந்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்தபோது, அவர்களுக்காக ஒரு செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் கொணர்ந்தோம். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். தமது முகத்தை மூன்று முறையும் கைகளை இரண்டிரண்டு முறையும் கழுவினார்கள். மேலும், (ஈரக் கையால்) தமது தலையை முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டுசென்று தடவினார்கள். மேலும் தம்முடைய இரு கால்களையும் கழுவி னார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்குத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கி விட்டனர். அப்போது தம் கால்கள் தரையில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள். -(அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், “(ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத) அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்று பதிலளித்தேன். “அவர்தான் அலீ (பின் அபீதாலிப் - ரலி)” என்று அவர்கள் கூறினார்கள்.- மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சிகிச்சைக்காக) என் இல்லத்திற்கு வந்து, அவர்களின் நோய் கடுமையாகிவிட்ட பின்னர் அவர்கள், “வாய்ப் பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என்மீது ஊற்றுங்கள். (அதன் குளிர்ச்சியால்) மக்களுக்கு நான் உபதேசம் செய்ய முடியும்” என்றார்கள். எனவே, அவர் களின் துணைவியரில் ஒருவரான ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும் பாத்திரத்தின் மீது நபியவர்கள் அமர்த்தப்பட்டார்கள். பிறகு அவர்கள்மீது தோல் பைகளிலி ருந்த நீரை ஊற்றத் தொடங்கினோம். அவர்கள் “(சொன்னபடி) செய்துவிட்டீர்கள் (போதும்)” என்று (கையால்) சைகை செய்யலானார்கள். பிறகு மக்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள். அத்தியாயம் :
யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தையின் சகோதரரர் (அம்ர் பின் அபீஹசன்) அடிக்கடி அங்கத் தூய்மை செய்பவராக இருந்தார். அவர் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அங்கத் தூய்மை செய்யக் கண்டீர்கள் என்று கூறுங்கள்” என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு குவளையில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, தம்முடைய இரு கைகள்மீது சரித்து இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு அந்தக் குவளைக்குள் தமது கையை நுழைத்து ஒரே ஒரு கை தண்ணீர் எடுத்து மூன்று முறை ஒரே கைத் தண்ணீரால் வாய் கொப்புளித்து (மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது கையை(க் குவளைக்குள்) நுழைத்துத் தண்ணீர் அள்ளி மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தம் இரு கைகளையும் முழங்கைவரை இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு தமது கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலம் தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். அதாவது தமது (ஈரக்)கையை முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டு சென்றார்கள். பிறகு தமது இரு கால்களை யும் கழுவிவிட்டு, “இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யக் கண்டேன்” என்றார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள். அப்போது சிறிது தண்ணீ ருடன் வாய் அகன்ற பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதனுள் நபி (ஸல்) அவர்கள் தம் விரல்களை வைத்தார்கள். அப்போது அவர்களின் விரல்களினூடே நீர் சுரப்பதை நான் பார்த்தேன். அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தவர்களை நான் கணக்கிட்டுப் பார்த்தபோது (கிட்டத்தட்ட) எழுபது பேரிலிருந்து எண்பது பேர்கள்வரை இருந்தனர். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு ‘ஸாஉ’ முதல் ஐந்து ‘முத்’து வரையிலான தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு ‘முத்’து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய் வார்கள்.25 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்யும்போது) காலுறை கள்மீது (ஈரக் கையால்) தடவினார்கள்” என்று கூறினார்கள். நான் இது பற்றி (என் தந்தை) உமர் (ரலி) அவர்களிடம் கேட்டபோது, “ஆம், நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஒரு செய்தியை சஅத் உன்னிடம் சொன்னால் அது பற்றி வேறு யாரிடமும் நீ கேட்க வேண்டியதில்லை” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தில் இயற்கைத்) தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றார் கள். அப்போது தண்ணீர் நிரம்பிய ஒரு தோல் பையுடன் அவர்களைத் தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டு வந்தபோது அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது தம் காலுறைகள்மீது (ஈரக்கை யால்) தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். அத்தியாயம் :
அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (உளூ செய்யும் போது) தம் காலுறைகள்மீது (ஈரக் கையால்) தடவிக்கொண்டதை நான் பார்த்தேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்யும்போது) தம்முடைய தலைப்பாகை யின் மீதும் தமது இரு காலுறைகள்மீதும் (ஈரக் கையால்) தடவிக்கொண்டதை நான் பார்த்தேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (அங்கத் தூய்மை செய்ய முற்பட்டபோது) அவர்களின் இரு காலுறைகளையும் கழற்றுவதற்காக நான் என் கையை நீட்டினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவற்றை விட்டுவிடுங்கள். கால்கள் சுத்தமாக இருக்கும்போதுதான் காலுறைகளை அணிந்தேன்” என்று கூறிவிட்டு, (ஈரக் கையால்) அவ்விரு காலுறைகளைத் தடவி (மஸ்ஹு செய்ய லா)னார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஓர் ஆட்டின் சப்பையைச் சாப்பிட்டபின் தொழுதார்கள்; ஆனால், (புதிதாக) அங்கத் தூய்மை செய்யவில்லை. அத்தியாயம் :
அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஆட்டின் சப்பை ஒன்றிலிருந்து (இறைச்சியை) வெட்டி(ச் சாப்பிட்டு)க்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அவர்கள் அழைக்கப்பட்டார்கள். உடனே கத்தியைக் கீழே போட்டுவிட்டுத் தொழுதார்கள்; (புதிதாக) அங்கத் தூய்மை செய்யவில்லை. அத்தியாயம் :
சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் கைபர் போர் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் (கைபருக்குச்) சென்றேன். கைபருக்கு அருகிலுள்ள ‘ஸஹ்பா’ எனும் இடத்தை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். பிறகு பயண உணவைக் கொண்டுவரச் சொன்னார்கள். அப்போது மாவைத் தவிர வேறெதுவும் கொண்டுவரப்படவில்லை. அதைத் தண்ணீரில் நனைக்கும்படி பணித்தார்கள். (அது நனைக்கப்பட்டதும் அதை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நாங்களும் உண்டோம். பிறகு மஃக்ரிப் தொழுகைக்காக எழுந்து சென்றார்கள். அப்போது அவர்கள் வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள்; நாங்களும் வாய் மட்டும் கொப்புளித்தோம். பிறகு (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே (மஃக்ரிப்) தொழு(வித்)தார்கள். அத்தியாயம் :
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுச் சப்பையைச் சாப்பிட்டார்கள். பின்னர் (அதற்காகப் புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள்.27 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்புளித் தார்கள். பிறகு “இதில் கொழுப்பு இருக்கி றது (ஆகவேதான், வாய்கொப்புளித்தேன்)” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுதுகொண்டி ருக்கும்போது கண் அயர்ந்துவிட்டால், அவரைவிட்டு உறக்(கக் கலக்)கம் விலகும் வரை (தொழுகையிலிருந்து விலகி) அவர் உறங்கட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால், அவர் பாவமன்னிப்புக் கோரப் போய், தம்மையும் அறியாமல் தம்மைத் தாமே ஏசிக் கொள்ளக்கூடும். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகையில் கண்ணயர்ந்து விடுவாரானால், தாம் என்ன ஓதுகிறோம் என்பதை(ச் சரியாக) அறியும்வரை அவர் (தொழுகையிலிருந்து விலகி) தூங்கிக்கொள்ளட்டும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அம்ர் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் (கடமையான) ஒவ்வொரு தொழுகைக்காகவும் அங்கத் தூய்மை செய்வார்கள்‘’ என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். “(நபித்தோழர் களான) நீங்கள் எப்படிச் செய்வீர்கள்?” என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள். “சிறு துடக்கு (ஹதஸ்) நிகழாத வரை ஒரு (முறை செய்த) அங்கத் தூய்மை எங்களுக்குப் போதுமானதாக இருந்தது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
சுவைத் பின் அந்நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கைபர் போர் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்கு) புறப்பட்டுச் சென்றோம். (கைபருக்கு அருகிலுள்ள) ‘ஸஹ்பா’ எனும் இடத்தை நாங்கள் அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் உணவு கொண்டுவரும்படி கூறினார்கள். (வேறெதுவும் இல்லாததால்) அவர்களிடம் மாவு மட்டும் கொண்டுவரப்பட்டது. நாங்கள் அனைவரும் சாப்பிட்டோம்; அருந்தினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்காக எழுந்தார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள். (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமல் எங்களுக்கு மஃக்ரிப் தொழுகை நடத்தினார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள -அல்லது மக்காவிலுள்ள- தோட்டங்களில் ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது மண்ணறைக்குள் (கப்று) வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இரு மனிதர்களின் (கூக்)குரலைச் செவி யுற்றார்கள். அப்போது, “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை” என்று சொல்லிவிட்டு, “ஆம்! (ஒரு வகையில் இறைவனிடம் அது பெரிய பாவச்செயல்தான்) இவ்விருவரில் ஒருவரோ, தமது சிறுநீரிலிருந்து (தமது உடலையும் உடையையும்) மறை(த்துக் கா)க்காமலிருந்தார். மற்றொருவரோ, கோள் சொல்லித் திரிந்துகொண்டிருந்தார்” என்று கூறினார்கள். பிறகு ஒரு (பச்சை) பேரீச்ச மட்டையைக் கொண்டுவரச்சொல்லி. அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு மண்ணறையின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொள்ள (புறநகரி லிருக்கும்) திறந்தவெளிகளுக்குச் செல்வார் களானால், அவர்களுக்கு நான் தண்ணீர் கொண்டுசெல்வேன். அதன் மூலம் அவர்கள் கழுவுவார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரு மண்ணறை களைக் கடந்து சென்றார்கள். அப்போது “இவர்கள் இருவரும் வேதனை செய்யப் படுகிறார்கள். ஒரு பெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை; இவ்விரு வரில் ஒருவரோ, சிறுநீரிலிருந்து (தம் உடலையும் உடையையும்) மறை(த்துக் கா)க்காமலிருந்தார்; மற்றவரோ, கோள் சொல்லித் திரிந்துகொண்டிருந்தார்” என்று கூறினார்கள். பிறகு ஒரு பச்சை பேரீச்ச மட்டையை எடுத்து, அதை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு மண்ணறையின் மீதும் ஒன்றை ஊன்றினார்கள். (அது பற்றி) மக்கள், “ஏன் இவ்வாறு செய்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அஃமஷ் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிட மிருந்து நேரடியாகச் செவியுற்றதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். (அவரை மக்கள் கண்டித்தபோது) நபி (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு, அவர் (சிறுநீர் கழித்து) முடித்தபின் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதன் மீது ஊற்றினார்கள்.30 அத்தியாயம் :
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி. அதை சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள். அத்தியாயம் :
உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (பாலைத் தவிர வேறு) உணவு உண்ணாத என் சிறிய ஆண் குழந் தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் உட்கார வைத்தார்கள். அப்போது அக்குழந்தை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச்சொல்லி (சிறுநீர் பட்ட இடத்தில்) அதைத் தெளித்தார்கள். (அதிகமாகத் தண்ணீர் ஊற்றி) அதைக் கழுவவில்லை. அத்தியாயம் :
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து (அங்கு) நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள். பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அத்தியாயம் :
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களும் நடந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னா லிருந்த ஒரு கூட்டத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து. (சாதாரணமாக) உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று நின்று சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களை விட்டு சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை(த் தம்மிடம் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் வந்து அவர்கள் தமது தேவையை நிறைவேற்றும் வரை அவர்களுக்குப் பின்பக்கம் (ஒரு மறைப்பாக) நின்றுகொண்டிருந்தேன். அத்தியாயம் :
அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிக்கும்) விஷயத்தில் மிகவும் கண்டிப்பவர்களாய் இருந்தார்கள். “பனூ இஸ்ராயீல் மக்களில் ஒருவரது ஆடையில் சிறுநீர் பட்டுவிட்டால், அவர் அந்தப் பாகத்தைக் கத்தரித்துவிடுவார்” எனக் கூறுவார்கள். இதைக் கேள்விப்பட்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அவர் இந்தப் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களில் ஒரு பெண்ணின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால், அவள் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(இரத்தம் பட்டுக் காய்ந்துவிட்ட) அந்த இடத்தை அவள் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீர் விட்டுக் கசக்கிக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் அவள் தொழுதுகொள்ளலாம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் ஒரு பெண் ஆவேன்; (தொடர்ந்து உதிரம் கசிவதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை; (தொழுகையை விட்டுவிடாதே!) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; (கர்ப்பப் பையிலிருந்து வரும்) மாதவிடாய் இரத்தமன்று. எனவே, உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு; அது நின்றுவிட்டால் இரத்தத்தைக் கழுவி (குளித்து)விட்டுத் தொழுதுகொள்” என்று கூறினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (அப் பெண்மணியிடம்), “பின்னர் அடுத்த மாதவிடாய் காலம் வரும்வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்” என்றும் சொன்னார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் ஆடை யில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவு வேன். (அந்த ஆடையோடு) நபி (ஸல்) அவர்கள் தொழச் செல்வார்கள். அவர் களின் ஆடையில் ஈரம் அப்படியே இருக்கும். அத்தியாயம் :
சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தை நான் கழுவுவேன். (அந்த ஆடையோடு) அவர்கள் தொழுகைக்காகச் செல்வார்கள். கழுவிய அடையாளம் -ஈரம்- அவர்களின் ஆடையில் காணப்படும் என்று கூறினார்கள் இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்களிடம் இந்திரியம் பட்டுவிட்ட ஆடையைப் பற்றி (அதைச் சுத்தம் செய்வது குறித்து)க் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள், ‘நான் நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். பின்னர் (அந்த ஆடையோடு) அவர்கள் தொழுகைக்காகச் செல்வார்கள். கழுவிய அடையாளம் -ஈரம்- அவர்களது ஆடையில் அப்படியே இருக்கும்’ என்று கூறினார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், தாம் நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவியதாகவும் பிறகு அதே ஆடையில் ஓரிரு இடங்களில் அதன் ஈரத்(தின் அடையாளத்)தைப் பார்த்ததாகவும் கூறினார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘உக்ல்’ அல்லது ‘உரைனா’ குலத் தாரில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்ப நிலை ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, (அவர் களின் வேண்டுகோளுக்கிணங்க) பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகிக்கொள்ளு மாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறியதும் நபி (ஸல்) அவர்களின் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டனர்; ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். முற்பகல் வேளையில் இந்தச் செய்தி (நபி (ஸல்) அவர்களிடம்) வரவே, அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பிடித்துவர ஒரு) படைப் பிரிவை அனுப்பிவைத்தார்கள். நண்பகல் நேரத்தில் அவர்கள் (பிடித்துக்) கொண்டுவரப் பட்டார்கள். அவர்களுடைய கைகளையும் கால்களையும் துண்டிக்கச் செய்தார்கள். அவர்களின் கண்களில் சூடிடப்பட்டது. பிறகு (மதீனா புறநகரான பாறைகள் மிகுந்த) ‘அல்ஹர்ரா’ பகுதியில் அவர்கள் போடப்பட்டனர். அவர்கள் (நா வறண்டு) தண்ணீர் கேட்டும் அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை. அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இவர்கள் (பொதுமக்களுக்குரிய ஒட்டகங்களைத்) திருடினார்கள்; (ஒட்டக மேய்ப்பரைக்) கொலை செய்தார்கள்; இறைநம்பிக்கை கொண்ட பின்னர் இறை மறுப்பாளர்களாய் மாறினார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள். (இத்தகைய கொடுஞ்செயல் புரிந்ததால்தான் அவர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை அளிக்க நேர்ந்தது.) அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனாவில்) பள்ளிவாசல் கட்டப்படு வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழு வார்கள்.33 அத்தியாயம் :
மைமூனா (பின்த் ஹாரிஸ்-ர-) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்துவிட்ட எ- குறித்து வினவப்பட்டது. அதற்கு “அந்த எ-யையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (உடனே) எடுத்து எறிந்து விடுங்கள்; உங்கள் நெய்யைச் சாப்பிடுங் கள்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்டது. அதற்கு அவர்கள், “அந்த எ-யையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து (உடனே) எறிந்துவிடுங்கள் (மீதி நெய்யைச் சாப்பிடுங்கள்)” என்று பதிலளித் தார்கள். மஅன் (பின் ஈசா-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை மா-க் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து எண்ணற்ற முறை எமக்கு அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஸ்-முக்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காயமும், தாக்கப்பட்டபோது இருந்த அதே கோலத்தைப் போன்றே மறுமை நாளில் இரத்தம் பீறிட்ட நிலையில் இருக்கும். அந்த நிறம் இரத்தத்தின் நிறத்தில் இருக்கும்; அதன் வாடையோ கஸ்தூரி வாடையாக இருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (மறுமையில் தகுதியால்) முந்தியவர் களாகவும் உள்ளோம். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் யாரும் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம்; பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம். மேற்கண்ட இரு ஹதீஸ்களையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் (கஅபா) அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அவனுடைய சகாக்களும் (அங்கே) அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரிடம், “இறைச்சிக்காக அறுக்கப் பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள சவ்வைக் கொண்டு வந்து முஹம்மத் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போது அவரது முதுகின் மீது வைப்பவர் யார்?” என்று கேட்டனர். அக்கூட்டத்திலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் புறப்பட்டுச் சென்று, அதைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் நேரம் பார்த்து அவர்களின் இரு தோள்களுக்கிடையில் முதுகின் மீது போட்டான். இதையெல்லாம் நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது எனக்கு (மட்டும்) உதவக் கூடியவர்கள் இருந்திருந்தால் (அதை நான் தடுத்திருப்பேன்.) இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டி ருந்த (அபூஜஹ்லும் சகாக்களும்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரிக்கத் தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தாமல் சஜ்தாவிலேயே இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்களின் புதல்வி, சிறுமி) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அவர்களின் முதுகி-ருந்து அவற்றைத் தூக்கி வீசும் வரையில் (அப்படியே இருந்தார்கள்). பிறகு தமது தலையை உயர்த்தி, “இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்” என்று மூன்று முறை பிராத்தித் தார்கள். தங்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிராத்தனை புரிந்தது குறைஷி யருக்கு மனவேதனை அளித்தது. (காரணம்,) அந்த (மக்கா) நகரில் செய்யப் படும் பிராத்தனை ஏற்கப்படும் என்று அவர்களும் நம்பிக்கை வைத்திருந்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந் தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, “இறைவா! அபூஜஹ்லை நீ கவனித்துக் கொள்வாயாக! உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரைக் கவனித்துக்கொள்வாயாக!” என்று (அறுவரின் பெயர் குறிப்பிட்டு) பிரார்த்தனை செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் குறிப்பிடுகிறார்: ஏழாவது நபரின் பெயரையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால், அதை நாங்கள் மறந்துவிட்டோம். தொடர்ந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் (பத்ர் போரில்) கொல்லப்பட்டு ‘கலீபு பத்ர்’ எனும் அந்தப் பாழும் கிணற்றில் கிடந்ததை நான் பார்த்தேன். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது ஆடையில் உமிழ்ந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சயீத் பின் அபீமர்யம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இந்த ஹதீஸ் நீளமாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போதை தரும் (தன்மை உள்ள) எல்லாப் பானங்களும் தடை செய்யப் பட்டவை ஆகும். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹாஸிம் (சலமா பின் தீனார்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடம், “(உஹுதுப் போரில்) நபி (ஸல்) அவர்களின் காயத்திற்கு எது மருந்தாக இடப்பட்டது?” என்று மக்கள் கேட்டார்கள். அப்போது எனக்கும் (அறிவிப்பாளர் அபுல்ஆலியா) சஹ்ல் (ரலி) அவர்களுக்கும் இடையில் வேறு யாரும் இருக்கவில்லை (அந்த அளவுக்கு நெருக்கமாக நாங்கள் இருவரும் இருந்தோம்.)- அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், “இதைப் பற்றி என்னைவிட அறிந்தவர்கள் தற்போது யாரும் இல்லை. அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டுவர, ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முகத்தி-ருந்து இரத்தத்தைக் கழுவிக்கெண்டிருந்தார்கள். (கட்டுக் கடங்காமல் இரத்தம் வழியவே ஒரு ஈச்சம்) பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. (பிறகு கரிக்கப்பட்ட) பாயி(ன் சாம்ப-)னை நபியவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அவர்கள் தமது கையி-ருந்த ஒரு குச்சியால் பல் துலக்கிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது அவர்கள் தமது வாயில் குச்சியை வைத்து வாந்தி எடுப்பதைப் போன்று ‘ஊவ் ஊவ்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அத்தியாயம் :
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒரு குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருப்பதைப் போன்று (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரு மனிதர்கள் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் மற்றவரைவிட (வயதில்) பெரிய வராயிருந்தார். நான் அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் அந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது “வயதில் மூத்தவரிடம் முதலில் கொடுப்பீ ராக” என்று எனக்குச் சொல்லப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரிய வரிடம் அதைக் கொடுத்து விட்டேன். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்: மற்றோர் அறிவிப்பில், நுஐம் (பின் ஹம்மாத்-ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸின் மூல உரையை இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகச் சுருக்கமாக அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீர் உமது படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வீராக. பிறகு உமது வலப்பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்வீராக. பிறகு பின்வருமாறு கூறுவீராக: அல்லாஹும்ம! அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க; வ ஃபவ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க; வ அல்ஜஃ(த்)து ழஹ்ரீ இலை(க்)க ரஃக்ப(த்)தன் வ ரஹ்ப(த்)தன் இலை(க்)க; லா மல்ஜஅ வலா மன்ஜா மின்(க்)க இல்லா இலை(க்)க. அல்லா ஹும்ம ஆமன்(த்)து பி கிதாபி(க்)கல்லதீ அன்ஸல்(த்)த; வ பி நபிய்ய(க்)கல்லதீ அர்சல்(த்)த. இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன்னிடமே ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன்மீதுள்ள ஆவ-லும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உனது வேதத்தையும் நீ அனுப்பிவைத்த உன் தூதரையும் நான் நம்பினேன்”. (இவ்வாறு பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீர் இறந்துவிட்டால் நீர் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவீர். இந்தப் பிராத்தனையை உமது (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொள்வீராக! இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்பச் சொல்லிக் காட்டினேன். “இறைவா! நீ அருளிய உனது வேதத்தையும் நீ அனுப்பிவைத்த தூதரையும் நான் நம்பினேன்” என்று கூறியபோது, (தூதர் என்பதைக் குறிக்க) ‘வ ரசூலிக்க’ என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “இல்லை ‘வ நபிய்யிக்க’ என்றே குறிப்பிடுவீராக” என்றார்கள். அத்தியாயம் :