38 - ஹவாலா
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தர் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தர்மீது மாற்றிவிடப்பட்டால், அதை அவர் ஏற்கட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: செல்வந்தர் (தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தர்மீது மாற்றிவிடப்பட்டால் அவர் ஒப்புக் கொள்ளட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள், ‘‘நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் கடனாளியா?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், யிஇல்லை’ என்றனர். ‘‘ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச்சென்றிருக்கிறாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, யிஇல்லை’ என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று நபித்தோழர்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘இவர் கடனாளியா?” என்று கேட்டபோது யிஆம்’ எனக் கூறப்பட்டது. ‘‘இவர் ஏதேனும் விட்டுச்சென்றிருக்கிறாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது யிமூன்று பொற்காசுகளை விட்டுச் சென்றிருக்கிறார்’ என்றனர். அவருக்கும் தொழுகை நடத்தினார்கள். பிறகு மூன்றாவது ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ‘‘நீங்கள் தொழுகை நடத்துங் கள்” என்று நபித்தோழர்கள் கூறினர். ‘‘இவர் எதையேனும் விட்டுச்சென்றிருக்கி றாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது யிஇல்லை’ என்றனர். ‘‘இவர் கடனாளியா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு, ‘‘மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்” என்று நபித்தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்” என்று கூறிவிட்டார்கள். அப்போது அபூக(த்)தாதா (ரலி) அவர்கள் ‘‘இவரது கடனுக்கு நான் பொறுப்பு; அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று கூறியதும், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அத்தியாயம் :