30 - நோன்பு
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி தலைவிரி கோலத்துடன் (பயணம் முடித்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்; ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள தொழுகை எது என்று சொல்லுங்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஐந்து நேரத் தொழுகைகள்; (அவற்றைத் தவிர, கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; கூடுதலாக) எதையும் நீயாக விரும்பித் தொழுவதைத் தவிர!” என்று பதிலளித் தார்கள். அவர், ‘‘அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள நோன்பைப் பற்றி எனக்குக் கூறுங்கள்!” என்றார். ‘‘ரமளான் மாத நோன்பு; (அதைத் தவிர கடமையான நோன்பு வேறெதுவுமில்லை; கூடுதலாக) ஏதேனும் நீயாக விரும்பி நோற்பதைத் தவிர!” என்று பதிலளித்தார்கள். அவர், ‘‘அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டவிதிகளை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், ‘‘சத்தியத்தைக் கொண்டு உங்களைக் கண்ணியப்படுத்திய இறைவன் மீதாணையாக! நான் கூடுதலாக எதையும் செய்யமாட்டேன்; அல்லாஹ் என்மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும்மாட்டேன்” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் (தாம் கூறுவதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்” என்றோ, ‘‘இவர் (தாம் கூறுவதில்) உண்மையாளராக இருந்தால் சொர்க்கத்தில் நுழைவார்” என்றோ கூறினார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்றார்கள். அதில் நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளை யிட்டார்கள். ரமளான் நோன்பு கடமை யாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பு (கட்டாயம் என்பது) கைவிடப்பட்டது. ‘‘தம்முடைய வேறு நோன்பு (ஏதாவது) அந்நாளில் தற்செயலாக அமைந்தால் தவிர, இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்க மாட்டார்கள்” என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்; (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் ‘‘(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம்! அறிவீனமாக நடந்துகொள்ள வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி' என்று இரு முறை கூறட்டும்! என் உயிர் எவன் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். (மேலும்) ‘‘எனக்காகவே நோன்பாளி தமது உணவையும் பானத்தையும் ஆசையையும் கைவிடுகிறார்; நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்” (என்று அல்லாஹ் கூறுகின்றான்). ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்கு களாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 அத்தியாயம் :
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், ‘‘குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் நினைவில் வைத்திருக்கிறார்?” என்று கேட்டார்கள். ‘‘நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்: ஒருவர் தம் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைப்பதன் மூலமும்), தமது செல்வம் விஷயத்தில் (அதைத் திரட்டு வதில் ஈடுபடுவதன் மூலமும்), அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னாவில்) ஆழ்த்தப் படும்போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘நான் (சோதனை எனும் பொருளில் அமைந்த) இந்த ஃபித்னாவைப் பற்றிக் கேட்கவில்லை; கடலலை போன்று அடுக்கடுக்காக வரக் கூடிய (குழப்பம் எனும் பொருளிலமைந்த) ஃபித்னாவைப் பற்றியே கேட்கிறேன்” என்றார்கள். அதற்கு நான், ‘‘உங்களுக்கும் அவற்றுக்கும் இடையே மூடப்பட்ட கதவு இருக்கிறது” என்று கூறினேன். ‘‘அது திறக்கப்படுமா, உடைக்கப்படுமா?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் ‘‘உடைக்கப்படும்” என்று பதிலளித்தேன். ‘‘அப்படியானால் மறுமை நாள்வரை அது மூடப்படாது” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘அந்தக் கதவு எது என்று உமர் (ரலி) அவர்கள் அறிந்திருந்தார்களா என்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேளுங்கள்” என்று மஸ்ரூக் (ரஹ்) அவர்களிடம் நாங்கள் கூறினோம். அவ்வாறே அவர் கேட்டார். அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் ‘‘ஆம்! பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று அதை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று பதிலளித்தார்” என அறிவிப்பாளர் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.3 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் ‘ரய்யான்' எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில், அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார் கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும்; உடனே அவர்கள் எழுவார் கள்; அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்; அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறு யாரும் நுழையமாட்டார்கள்.4 இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய் தாரோ அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாக நுழையுங்கள்!)› என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாய் இருந்தவர் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவார்; அறப்போர் புரிந்தவர் அறப்போருக்கான வாசல் வழியாக அழைக்கப்படுவார்; நோன்பாளியாய் இருந்தவர் ‘ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவார்; தர்மம் செய்தவர் தர்மத்திற்குரிய வாசல் வழியாக அழைக்கப்படுவார்” என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு (வேறு வாசல் வழியாகச் செல்ல வேண்டிய) அவசியம் இராது. (ஏனெனில், எந்த வழியிலாவது அவர் சொர்க்கம் சென்றுவிடுவார். இருந்தாலும்,) அந்த வாசல்கள் ஒவ்வொன்றிலிருந்தும் யாராவது அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘ஆம்! அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படு கின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படு கின்றனர்.6 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ரமளான் பிறை கண்டதும் நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் அதை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ‘லைலத்துல் கத்ர்' எனும் மகத்துவ மிக்க இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.7 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே செல்வங்களை அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளானில் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி (ஸல்) அவர்கள் மேன்மேலும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் ஒவ்வோர் இரவும் லிஅம்மாதம் முடியும்வரைலி நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். அவ்வாறு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மைச் சந்திக்கும்போது (மழைக்)காற்றைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் செல்வங்களை வாரி வழங்கு வார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (நோன்பு நோற்றுக்கொண்டு) பொய்யான பேச்சையும் அதன்படி செயல்படுவதையும் கைவிடவில்லையோ அவர் (வெறுமனே) தமது உணவையும் பானத்தையும் கைவிடுவதில் அல்லாஹ் வுக்கு எந்தத் தேவையுமில்லை.8 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஆதமுடைய மகனின் (மனிதனின்) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும். ஆனால், நோன்பைத் தவிர! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே நற்பலன் அளிப்பேன்” என்று அல்லாஹ் கூறுகின் றான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால், அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘‘நான் நோன்பாளி” என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ் விடத்தில் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவர் மகிழ்ச்சியடைகிறார்; தம் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவர் மகிழ்ச்சி யடைகிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் நடந்துகொண்டிருந் தேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நாங்கள் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், ‘‘யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் (நோன்பு) பற்றிக் குறிப்பிடுகையில், ‘‘ரமளான் பிறையை நீங்கள் காணாத வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணாத வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாக(வும் இகும். எனவே, பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில், இரு கை விரல்களையும் மூன்று முறை விரித்து) ‘‘மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்” என்று கூறினார்கள். மூன்றாம் தடவை பெருவிரலை மடக்கிக்கொண்டார்கள்.10 அத்தியாயம் :
அபுல்காசிம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு நோறுங் கள்; பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘ஒரு மாதம் தம் துணைவியருடன் சேர்வதில்லை' என்று சத்தியம் செய்திருந்தார்கள்; இருபத் தொன்பது நாட்கள் முடிந்ததும் அன்று ‘காலையில்' அல்லது ‘மாலையில்' (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் ‘‘நீங்கள் ஒரு மாதம் (வீட்டிற்கு) வரமாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தீர்களே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘ ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம்” என்றார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருடன் (ஒரு மாதம்) சேர்வதில்லை என்று சத்தியம் செய்திருந் தார்கள்; அப்போது அவர்களின் கால் (நரம்பு) பிசகியிருந்தது. அவர்கள் ஒரு மாடி அறையில் இருபத்தொன்பது நாட்கள் தங்கினார்கள்; பின்னர் இறங்கி வந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஒரு மாதம் என்று சத்தியம் செய்திருந்தீர்களே” என்று தோழர்கள் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்” என்றார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹிஜ்ஜாவும் சேர்ந்தாற்போல் குறையாது.11 இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: நாம் எழுதப் படிக்கத் தெரியாத சமு தாயம் (உம்மத்துன் உம்மிய்யா) ஆவோம்; எழுதுவதை அறியமாட்டோம்; (நட்சத்திரக்) கணிதத்தையும் அறியமாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சிலை வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும்.12 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் உங்களில் யாரும் நோன்பு நோற்க வேண்டாம்; (அந் நாட்களில் வழக்கமாக) நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்!13 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்கள் (ஆரம்ப நாட்களில்) நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, நோன்பு துறப்பதற்கு முன்பே உறங்கிவிட்டிருந்தால், அன்றைய இரவிலும் (தொடர்ந்து அடுத்த நாள்) பகலிலும் மாலைவரை எதையும் உண்ணமாட்டார்கள். (ஒரு முறை) கைஸ் பின் ஸிர்மா அல்அன்சாரி (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்; நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, ‘‘உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?” என்று கேட்டார்கள்; அவருடைய மனைவி, ‘‘இல்லை; எனினும் நான் சென்று உங்களுக்காக (உணவைத்) தேடி வருகிறேன்” என்றார். கைஸ் பின் ஸிர்மா (ரலி) அவர்கள் அன்றைய தினம் (கூலி) வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக் கம் மேலிட்டுவிட்டது. அவருடைய மனைவி வந்து அவரைக் கண்டபோது, ‘‘உங்களுக்கு நஷ்டம்தான்” என்றார். (மறுநாள்) நண்பகலானதும் கைஸ் (ரலி) அவர்கள் மூர்ச்சையுற்றார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது தான், ‘‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரோடு (நீங்கள்) தாம்பத்திய உறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது” (2:187) என்ற வசனத்தொடர் அருளப்பெற்றது. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன், ‘‘கறுப்புக் கயிற்றிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” (2:187) எனும் தொடரும் அருளப்பெற்றது. அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘கறுப்புக் கயிற்றிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளி வாகத் தெரியும்வரை” (2:187) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, நான் ஒரு கறுப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து என் தலையணையின் கீழ் வைத்துக்கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை. விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, இதைப் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(கறுப்புக் கயிறு என்பதன் கருத்து:) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதன் கருத்து:) விடியலின் வெண்மையும்தான்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” (2:187) என்ற இறைவசனம் அருளப்பட்டது. அதில் ‘விடியலின்' (மினல் ஃபஜ்ர்) எனும் சொற்றொடர் அருளப்பெறவில்லை. அப்போதெல்லாம் மக்கள் சிலர் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் மறு காலில் கறுப்புக் கயிற்றையும் கட்டிக்கொள்வார்கள்; அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டுகொண்டே இருப்பார்கள். பிறகுதான் ‘விடியலின்' (மினல் ஃபஜ்ர்) எனும் சொற்றொடர் (அவ்வசனத்துடன்) அருளப்பெற்றது. ‘இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்' என்பதை அப்போதுதான் மக்கள் விளங்கிக் கொண்டார்கள்.15 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள், (ஃபஜ்ர் நேரத்திற்குமுன்) இரவிலேயே தொழுகை அறிவிப்புச் செய்வார்கள்; அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இப்னு உம்மி மக்(த்)தூம் தொழுகை அறிவிப்புச் செய்யும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர்தான் ஃபஜ்ர் (வைகறை) நேரம் வந்ததும் தொழுகை அறிவிப்புச் செய்கிறார்” என்று குறிப்பிட்டார்கள். ‘‘அவர் தொழுகை அறிவிப்புச் செய்து விட்டு இறங்குவார்; இவர் தொழுகை அறிவிப்புச் செய்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இருவரின் அறிவிப்பு களுக்கிடையே (பெரிய) இடைவெளி இருக்காது” என்று காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.16 அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் குடும்பத்தாருடன் சஹர் செய்துவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (சுப்ஹு) தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்.17 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சஹர் செய்தோம்; பின்னர் தொழுகைக்கு அவர்கள் எழுந்துவிட்டார்கள்” என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்; நான் ‘‘(ஃபஜ்ரின்) பாங்குக்கும் சஹருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘ஐம்பது வசனங்கள் (ஓதும்) அளவுக்கு (நேரம் இருந்தது)” என்று பதிலளித்தார்கள்.18 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நோன்பு துறக் காமல்) தொடர்நோன்பு நோற்றார்கள்; மக்களும் அவ்வாறு தொடர்நோன்பு நோற்றார்கள். இது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் தொடர்நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். நபித்தோழர்கள், ‘‘நீங்கள் (மட்டும்) தொடர்நோன்பு நோற்கிறீர்களே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (இந்த விஷயத்தில்) உங்களைப் போன்ற வன் அல்லன்; (இறைவனிடமிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப் படும் நிலையில் நான் உள்ளேன்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நீங்கள் சஹர் செய்யுங்கள்; நிச்சயமாக சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) இருக்கிறது. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளன்று ஒருவரை அனுப்பி, ‘‘(இன்று) சாப்பிட்டுவிட்டவர் (இரவுவரை தமது நோன்பை) ‘முழுமை யாக்கட்டும்!› அல்லது ‘நோற்கட்டும்!› சாப்பிடாமல் இருப்பவர் (நோன்பைத் தொடரட்டும்) சாப்பிட வேண்டாம்!” என்று மக்களுக்கு அறிவிக்கச் செய்தார்கள்.19 அத்தியாயம் :
அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளியல் கடமையானவர்களாக ஃபஜ்ர் (வைகறை) நேரத்தை அடைவார்கள்; பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்” என்று ஆயிஷா (ரலி), உம்மு சலமா (ரலி) ஆகியோர் அறிவித்ததாக அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பின் அல்ஹகமிடம் என் தந்தை அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது மர்வான் என் தந்தையிடம், ‘‘(பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைபவருக்கு நோன்பு கிடையாது என்று சொல்லிவரும்) அபூஹுரைராவுக்கு உறைக்கும் வண்ணம் இதை அவரிடம் நிச்சயமாக நீர் கூற வேண்டும் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்று கூறினார். இதை அப்துர் ரஹ்மான் அவர்கள் விரும்ப வில்லை. பின்னர் நாங்கள் ‘துல்ஹுலைஃபா' எனும் இடத்தில் (தற்செயலாக) சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அங்கு அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு ஒரு நிலம் இருந்தது; (நாங்கள் அங்கு சென்றபோது அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கே இருந்தார்கள்;) அப்துர் ரஹ்மான் அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ‘‘நான் உங்களிடம் ஒரு செய்தியைக் கூறவிருக் கிறேன்; மர்வான் இது தொடர்பாக சத்தியம் செய்து வற்புறுத்தியிருக்காவிட்டால், இதை நான் உங்களிடம் கூறப் போவதில்லை” என்று கூறிவிட்டு, ஆயிஷா (ரலி), உம்மு சலமா (ரலி) ஆகியோர் கூறியதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘இவ்வாறு (பெருந்துடக்கு உள்ளவருக்கு நோன்பு இல்லை என்று) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்தான் எனக்கு அறிவித்தார்; அவர்தான் (இதன் உண்மையை) நன்கறிந்தவர்” என்று பதிலளித்தார்கள். ‘‘(ஃபஜ்ர் நேரத்தில் குளியல் கடமையாக இருப்பவர்) நோன்பை விட்டுவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், முந்திய (இந்த நபிமொழியின் தொடக் கத்தில் உள்ள) செய்தியே பலமான அறிவிப்பாளர்தொடருடன் உள்ளதாகும். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு (தம் துணைவியரைக்) கட்டி யணைப்பார்கள்; முத்தமிடுவார்கள். (ஆனால்,) உங்களையெல்லாம்விட அவர்கள் தம் உணர்ச்சிகளை அதிகமாகக் கட்டுப்படுத்திக்கொள்பவர்களாக இருந் தார்கள்.21 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (இங்கு ‘உணர்ச்சி' என்பதைக் குறிப்பிட ஹதீஸின் மூலத்தில் ‘இர்ப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதிலிருந்து பிறந்த) ‘மஆரிப்' (20:18) எனும் சொல்லுக்கு ‘தேவைகள்' என்பது பொருளாகும். தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘ஃகைரு உலில் இர்பத்' (24:31) என்பதற்கு ‘பெண்ணாசை இல்லாத பேடி' என்பது பொருள். ‘‘ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்” என்று ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டு தம் துணைவி யரில் ஒருவரை முத்தமிடுவார்கள்” என்று சொல்லிவிட்டு (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் போர்வைக்குள் இருக்கும் போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது; நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை எடுத்து (அணிந்து)கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள்; நான் ‘ஆம்' என்று கூறிவிட்டு, அவர் களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன். நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக்) குளிப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத் தில் குளியல் கடமையானவர்களாக லிஉறக்க ஸ்கலிதத்தினால் அல்லலி வைகறைப் பொழுதை அடைவார்கள்; குளித்துவிட்டு நோன்பைத் தொடர் வார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம்; ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறக்க ஸ்கலிதம் ஏற்படாமல், தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளியல் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள்; பின்னர் நோன்பைத் தொடர்வார்கள்” என்று கூறினார்கள். பிறகு, உம்மு சலமா (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்களும் அவ்வாறே கூறினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால், அவர் தமது நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில், அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். (முதலில்) அவர்கள் தம் கைகளில் தண்ணீர் ஊற்றி (மணிக்கட்டுவரை கழுவி)னார்கள். பின்னர் வாய்க் கொப்புளித்து, மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தித் தமது முகத்தை மூன்று முறை கழுவி னார்கள். பிறகு தம் வலது கையை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் இடக் கையை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தலையை ஈரக்கையால் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு வலக் காலை மூன்று முறையும் இடக் காலை மூன்று முறையும் கழுவினார்கள். பிறகு ‘‘நான் அங்கத் தூய்மை செய்ததைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்திருக்கிறேன்” என்றும் குறிப்பிட்டார்கள். ‘‘யார் எனது இந்த உளூவைப் போன்று உளூ செய்து வேறு எந்த (கெட்ட) எண்ணத்திற்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் உஸ்மான் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் கரிந்து போய்விட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்றார்கள். அவர், ‘‘ரமளானில் (நோன்பு நோற்றுக் கொண்டு பகலில்) நான் என் மனைவி யுடன் தாம்பத்திய உறவு கொண்டு விட்டேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ‘அரக்' எனப்படும் பெரிய கூடை (நிறைய பேரீச்சம் பழம்) கொண்டுவரப்பட்டது. ‘‘கரிந்துபோனவர் எங்கே?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘‘நான்தான்” என்று அவர் கூறினார். (அந்தப் பேரீச்சம் பழத்தை அந்த மனிதரிடம் கொடுத்து,) ‘‘இதைத் தர்மம் செய்வீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்துவிட்டேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ‘‘நான் நோன்பு நோற்றுக்கொண்டு என் மனைவியுடன் (பகலில்) தாம்பத்திய உறவு கொண்டு விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டார்கள். அவர் ‘‘இல்லை” என்றார். ‘‘தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘‘இல்லை” என்றார். ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘‘இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அங்கு இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும்போது, நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்' எனும் பெரிய கூடை கொண்டுவரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். ‘‘நான்தான்” என்று அவர் கூறினார். ‘‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் இரண்டு மலைகளுக்கு லிகருங்கற்கள் நிறைந்த இரு பகுதிகளுக்குலி இடையே என் குடும்பத்தாரைவிடப் பரம ஏழைகள் வேறு வீட்டார் யாருமில்லை” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்; பிறகு ‘‘இதை உம் குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்துவிடுவீராக!” என்றார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘(என்னைப் போன்ற) அடித்தட்டு மனிதர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டார் (அதற்குரிய பரிகாரம் என்ன?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இல்லை (இயலாது)” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக உம்மால் நோன்பு நோற்க இயலுமா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இல்லை (இயலாது)” என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘இல்லை’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் பெரிய கூடை கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), ‘‘இதை உமது சார்பாக வழங்குவீராக!” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘எங்களைவிட ஏழைக்கா? மதீனாவின் இரு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுடைய குடும்பத்தார் வேறு யாரும் இல்லை” என்று கூறினார். ‘‘அப்படியானால் உம் குடும்பத்தாருக்கே இதை உண்ணக் கொடுத்துவிடுவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள்; நோன்பு நோற்றிருந்தபோதும் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றி ருந்தபோது குருதி உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள்.25 அத்தியாயம் :
ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘நோன்பாளி குருதி உறிஞ்சி எடுத்துக் கொள்வதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா?” என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘இல்லை; பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே தவிர!” என்று அவர்கள் பதிலளித் தார்கள். மற்றோர் அறிவிப்பில், ‘நபி (ஸல்) அவர்கள் காலத்தில்' எனும் வாக்கியம் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ரமளானில்) ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘‘(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!” என்று கூறி னார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! சூரியன் (இன்னும் முழுமையாக மறையவில்லையே)!” என்றார். மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்றார்கள். அப்போதும் அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! சூரியன் (இன்னும் முழுமையாக மறையவில்லையே)!” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி நபியவர்களுக்காக மாவைக் கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தமது கையால் (கிழக்கே) சுட்டிக்காட்டினார்கள் பிறகு, ‘‘இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு (இருள்) முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்” என்றார்கள்.26 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து நோன்பு நோற்கிறேன்” என்று கூறி னார். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் நாடினால் நோன்பு நோற்பீராக; நீர் நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக!” என்றார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்; ‘கதீத்' எனும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டார்கள்; மக்களும் நோன்பை விட்டனர். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: ‘கதீத்' என்பது உஸ்ஃபான், குதைத் ஆகிய இடங்களுக்கிடையே உள்ள ஒரு நீர்நிலை ஆகும்.27 அத்தியாயம் :
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன், அவர்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் வெப்பம் மிகுந்த ஒரு நாளில் புறப்பட் டோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தமது கையைத் தலையில் வைத்துக் கொண்டனர். அப்பயணத்தில் நபி (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒரு மனிதர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்த தைக் கண்டார்கள். ‘‘இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று நபியவர்கள் கேட்டார் கள். ‘‘இவர் நோன்பு நோற்றிருக்கிறார்” என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது” என்று கூறினார்கள்.28 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். அப்போது நோன்பு நோற்காதவரை நோன்பு நோற்ற வரோ, நோன்பு நோற்றவரை நோன்பு நோற்காதவரோ குறைசொன்னதில்லை. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி ஆண்டில்) மதீனாவிலிருந்து மக்காவிற்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். ‘உஸ்ஃபான்' எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் கொண்டுவரச் செய்து, மக்கள் காண்பதற்காகக் கையின் நீளத்திற்கு அதை உயர்த்திக்காட்டி நோன்பை முறித் தார்கள். மக்காவை அடையும்வரை நோன்பு நோற்கவில்லை. இது ஒரு ரமளானில் நடந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கி றார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள்; (நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பை விட்டுவிட விரும்புபவர் விட்டுவிடவும் செய்யலாம். அத்தியாயம் :
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு நோன்புக்காக ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்” (2:184) எனும் வசனத்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் ஓதிவிட்டு, ‘‘இந்த வசன(த்தின் சட்ட)ம் மாற்றப்பட்டுவிட்டது” என்று கூறினார்கள்.29 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர வேறெப்போதும் என்னால் நிறைவேற்ற முடிந்ததில்லை. நபி (ஸல்) அவர்களின் பணிவிடையில் ஆயிஷா (ரலி) அவர்கள் ஈடுபட்டதே இதற்குக் காரணம் என்று (அறிவிப்பாளர் களில் ஒருவரான) யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும். இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிறைவேற்ற வேண்டிய நோன்பு உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் (உறவினர்) நோன்பு நோற்பார். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாத நோன்பு கடமையிருந்த நிலையில் என் தாயார் இறந்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்! அல்லாஹ்வின் கடனே நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மொத்தம் பதினாறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், ‘‘ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் என் சகோதரி இறந்துவிட்டார்...” என்று கூறியதாக இந்த ஹதீஸ் துவங்குகிறது. வேறுசில அறிவிப்புகளில், ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் ‘என் தாய் இறந்துவிட்டார்...’ என்று கூறியதாக இந்த ஹதீஸ் துவங்குகிறது. வேறு சிலவற்றில், ‘நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்துவிட்டார்...’ என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாக ஹதீஸ் துவங்குகிறது. வேறுசில அறிவிப்புகளில், ‘என் தாய்மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் அவர் இறந்துவிட்டார்...’ என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாக ஹதீஸ் துவங்குகிறது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் மறைந்து, இந்த (கிழக்கு) திசையிலிருந்து இரவு (இருள்) முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் (வெளிச்சம்) பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்! இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் மக்களில் ஒருவரிடம், ‘‘இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட் டுமே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அப்போதும் அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட்டுமே!” என்று சொன்னார். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அப்போது அவர், ‘‘பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, ‘‘இரவு (இருள்) இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்” என்றார் கள்.32 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் (ஒருவரிடம்), ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட்டுமே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர், ‘‘பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார். பின்னர், ‘‘நீங்கள் இங்கிருந்து (கிழக்கி லிருந்து) இரவு (இருள்) முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்!” என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக்காட்டிக் கூறினார்கள்.33 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப் பார்கள். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், ‘‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘மாலை நேரம் (முழுமையாக) முடிவடையும்வரை காத்திருக்கலாமே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! இரவு (இருள்) இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வருவதைக் கண்டால், நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள். அத்தியாயம் :
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பு துறந்த பின்னர் சூரியன் தென்பட்டது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களிடம், ‘‘அவர்கள் (அந்நோன்பைத்) திரும்ப நிறைவேற்றுமாறு கட்டளையிடப்பட் டார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘‘திரும்ப நிறைவேற்றுவது அவசியமில்லாமல் போகுமா?” என்று கேட்டார்கள். (அதாவது ‘களா' செய்ய வேண்டும்.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘‘அவர்கள் ‘களா’ செய்தார்களா; இல்லையா என்பது எனக்குத் தெரியாது” என்று ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறியதாக மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் (மதீனா புறநகரங்களில் உள்ள) அன்சாரி களின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘‘(இன்று) யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பிருந்து) நிறைவு செய்யட் டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன் பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் (தயார்) செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள்” என்று (மக்களி டம்) கூறினார்கள். அப்போது ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக எனக்கு உணவும் பானமும் (இறைவனிடமிருந்து) வழங்கப்படுகின்றன” என்றோ, ‘‘உணவும் பானமும் எனக்கு வழங்கப்படும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்” என்றோ கூறினார்கள்.38 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக எனக்கு உணவும் பானமும் வழங்கப்படுகின்றன” என்றார்கள். அத்தியாயம் :
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்; உங்களில் யாரேனும் தொடர்நோன்பு நோற்க நாடினால் சஹர்வரை அவ்வாறு (செய்து விட்டு, சஹர்) செய்துகொள்ளட்டும்!” என்று கூறினார்கள். அப்போது மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே!” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு உணவளிக்கவும் (தண்ணீர்) புகட்டவும் ஒருவன் இருக்கின்றான். இந்நிலையில்தான் நான் இரவைக் கழிக்கிறேன்” என்றார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள்மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உணவளிக்கிறான்; (நீர்) புகட்டுகிறான்” என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் ‘மக்கள்மீது இரக்கப்பட்டு' என்ற வாசகம் இடம் பெறவில்லை. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்” என்றார்கள். தொடர்நோன்பிலிருந்து மக்கள் விலகிக்கொள்ள மறுத்தபோது ஒரு நாள் அவர்களைத் தொடர்நோன்பு நோற்கச் செய்தார்கள். அடுத்த நாளும் நோற்கச் செய்தார்கள்; பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இம்மாதம் (தலைப்பிறை) இன்னும் தள்ளிப்போயிருந்தால், (தொடர்நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்” என்று மக்கள் தொடர்நோன்பிலிருந்து விலகிக்கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போன்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘தொடர்நோன்பு நோற்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று இரண்டு முறை கூறினார்கள். ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே, நற்செயல்களில் உங்களால் இயன்ற சுமையை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று விடை யளித்தார்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள். அப்படி உங்களில் யாரேனும் தொடர் நோன்பு நோற்பதாக இருந்தால், சஹர்வரை நோற்று(விட்டுப் பின்னர் சஹர் செய்து)கொள்ளட்டும்!” என்று கூறினார்கள். மக்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே!?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு உணவளிப்பவனும் (நீர்) புகட்டுபவனும் உள்ள நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்” என்றார்கள். அத்தியாயம் :
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், சல்மான் அல்ஃபாரிஸீ (ரலி) அவர்களையும் அபுத் தர்தா (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் துணைவியார்) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், ‘‘உங்கள் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை” என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் அங்கு வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவிடம், ‘உண்பீராக!’ என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, ‘‘நான் நோன்பு நோற்றிருக் கிறேன்” என்றார். சல்மான், ‘‘நீர் உண்ணாமல் நான் உண்ணமாட்டேன்” என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவு வந்ததும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் (தொழுவதற்கு) எழுந்திருக்கப் போனார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள், ‘உறங்குவீராக!’ என்று கூறியதும் அபுத்தர்தா உறங்கினார்கள். பின்னர் (சிறிது நேரத்தில் மீண்டும் தொழுவதற்காக) அபுத்தர்தா எழுந்திருக்கப்போனார். அப்போதும் சல்மான், ‘உறங்குவீராக!’ என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், ‘‘இப்போது எழுவீராக!” என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், ‘‘நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைகளை வழங்குவீராக!” என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘சல்மான் உண்மையையே கூறினார்” என்றார்கள்.39 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்; (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள். ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் மாதம் முழுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில வருடங்களில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘‘நற்செயல் களில் உங்களில் இயன்றதையே செய்யுங்கள். நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ் சலிப்படையமாட்டான்” என்றும் அவர்கள் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழப்படும் தொழுகையே நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதத்திலும் முழுமை யாக நோன்பு நோற்கமாட்டார்கள். (ரமளான் அல்லாத மாதங்களில்) ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் நோன்பை விடவே மாட்டார்கள்!” என்று ஒருவர் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள். ‘‘அல்லாஹ்வின் மீதாணை யாக! இனிமேல் நோன்பு நோற்கவே மாட்டார்கள்” என்று ஒருவர் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மாதம் நோன்பு நோற்கமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்குச் சில மாதங்களில் அவர்கள் நோன்பை விட்டு விடுவார்கள்; அறவே இந்த மாதம் நோன்பை அவர்கள் அறவே விடமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சில மாதங்களில்) நோன்பு நோற்பார்கள். அவர்களை இரவில் தொழும் நிலையில் நீர் காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய்; அவர்களை (இரவில்) உறங்கக்கூடியவர்களாக நீர் காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய். நோன்பு தொடர்பாக இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களை ஒரு மாதத்தில் நோன்பாளியாக நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே அவர்களை நான் பார்ப்பேன். அவர்கள் நோன்பை விட்ட நிலையில் நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; இரவில் தொழக்கூடியவர்களாக அவர்களைப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; அவர்களைத் தூங்குபவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்.40 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையைவிட மிருதுவான எந்தப் பட்டையும் நான் தொட்டதில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நறு மணத்தைவிட நல்ல கஸ்தூரியையோ அம்பரையோ நான் முகர்ந்ததுமில்லை. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘உம்முடைய விருந்தின ருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு இருக்கின்றது; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு இருக்கின்றது” என்றார்கள். ‘‘தாவூத் (அலை) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வருடத்தில் பாதி நாட்கள்” என் றார்கள்.41 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அப்துல்லாஹ், நீர் பகலெல் லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வழிபடுவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இனி) அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள்) விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! ஏனெனில், உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய விருந்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமான தாகும். ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு. (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்.” என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது. நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்” என்றார்கள். ‘‘இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பு எது?” என்று நான் கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாட்கள்’ என்றார்கள். ‘‘அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்தபின் ‘நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய் விட்டேனே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்” என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.42 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வழிபடுவேன்” என்று நான் கூறிய செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. (இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது) ‘‘என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவாகள், ‘‘இது உம்மால் முடியாது. (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக; (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக; (சிறிது நேரம்) உறங்குவீராக! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்பலன் அளிக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்” என்றார்கள். நான், ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். ‘‘அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டுவிடுவீராக!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!, இதுதான் இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்” என்றார்கள். நான் ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை” என்றார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் தொடர்ந்து நோன்பு நோற்பதாக வும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குத் செய்தி எட்டியது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர், விடாமல் நோன்பு நோற்பதாகவும் உறங்காமல் தொழுவதாகவும் எனக்குத் தகவல் கிடைத்துள்ளதே! எனவே, (சில நாள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்) நோன்பை விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்கு (நீர்) அளிக்கவேண்டிய பங்கு உண்டு; உம(து உடலு)க்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டிய பங்கும் உண்டு” என்று கூறினார்கள். நான் ‘‘இதற்கு எனக்குச் சக்தி உள்ளது” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக!” என்றார்கள். ‘‘அது எவ்வாறு?” என்று நான் கேட்டேன். ‘‘தாவூத் (அலை) அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்பார்கள்; ஒருநாள் விட்டுவிடுவார்கள்; மேலும், (போர் முனையில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கமாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்?” என்றேன். ‘‘காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன்; என்றாலும் ‘காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்’ என்று நபி (ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள் (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது)” என்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். ‘‘இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது” என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். முடிவில், ‘‘ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!” என்று கூறினார்கள். மேலும், ‘‘ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்றார்கள். ‘‘இதைவிட அதிகமாக (ஓத) எனக்குச் சக்தி உள்ளது” என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். (நான் கேட்கக் கேட்க குறைத்துக்கொண்டே வந்து) முடிவில், ‘‘மூன்று நாட்களில் ஒரு தடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வழிபடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே சொருகிவிடும்; உடல் நலிந்துவிடும். காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராகமாட்டார். (மாதம் தோறும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்” என்றார்கள். அதற்கு ‘‘நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள்; (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவுமாட்டார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அபுல்மலீஹ் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் உம்முடைய தந்தை (ஸைத் பின் அம்ர்லிரஹ்) அவர்களு டன் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) அறி வித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு பற்றித் தெரிவிக்கப் பட்டது. எனவே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக நான் ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல் தலையணையை எடுத்து வைத்தேன். அவர்கள் (அதில் அமராமல்) தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. அப்போது, ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக என்னால் நோன்பு நோற்க இயலும்)” என்றேன்; அவர்கள் ‘‘(மாதத்தில்) ஐந்து நாட்கள்” என்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே...!” என்றேன்; ‘‘ஒன்பது நாட்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே...! என்றேன்; ‘‘பதினொன்று நாட்கள்” என்றார்கள். பிறகு, ‘‘தாவூத் (அலை) அவர்களின் நோன்புக்குமேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை; அது வருடத்தின் பாதி நாட்களாகும். எனவே, ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பீராக!” என்றார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், ‘ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், உறங்குவதற்குமுன் வித்ர் தொழுகையைத் தொழுதுவிடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.44 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது உம்மு சுலைம் அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழத்தை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்” என்றார்கள்.45 பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத (கூடுதல்) தொழுகையைத் தொழுதார்கள், உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்காகவும் அவருடைய குடும்பத் தாருக்காகவும் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உரியதொன்று உள்ளது” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது என்ன?” என்று கேட்டார்கள். ‘‘உங்கள் ஊழியர் அனஸ்தான்” என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள். இம்மை, மறுமையின் எந்த நன்மையையும் விட்டுவிடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு, எனக்காக அப்போது நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித் தார்கள். ‘‘இறைவா! இவருக்குப் பொருட் செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்குவாயாக! இவருக்கு வளம் வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்சாரிகளிலேயே அதிக செல்வம் உள்ளவனாக இருக்கிறேன். என் (மூத்த) மகள் உமைனா என்னிடம் தெரிவித்தார்: எனக்குப் பிறந்த நூற்று இருபதுக்கும் அதிகமான பிள்ளைகள் (இறந்து) அடக்கம் செய்யப்பட்டுவிட்டனர். அது ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (இராக்கிலுள்ள) பஸ்ராவுக்கு வந்த காலமாகும்.46 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம், அல்லது இம்ரான் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்க மற்றொரு மனிதரிடம், ‘‘இன்னாரே! இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், ‘‘இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் (ரமளான்) நோன்பை முடித்தவுடன் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நுஅமான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத் தைக் கருத்தில் கொண்டே, ‘இம்மாதம்' என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ பின் மைமூன்) கூறியதாக நான் நினைக்கிறேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஸல்த் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ரமளானைப் பற்றிய இக்குறிப்பு இடம்பெறவில்லை. ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘ஷஅபான் மாதத்தின் இறுதியில்' என்று காணப்படுகிறது.47 அத்தியாயம் :
முஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்பதைத் தடை செய்தார்களா என்று கேட்டேன். ஜாபிர் (ரலி) அவர்கள், ‘ஆம்' என்றார்கள். அதாவது வெள்ளிக்கிழமை மட்டும் தனியாக நோன்பு நோற்பதைத் தடை செய்தார்கள்லிஎன்று அறிவிப்பாளர் அபூஆஸிம் (ரஹ்) அல்லாத மற்றவர்கள் கூடுதலாக அறிவித்துள்ளனர். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்குமுன் ஒரு நாளைச் சேர்க்காமல், அல்லது அதற்குப்பின் ஒரு நாளைச் சேர்க்காமல் (அன்று மட்டும்) நோன்பு நோற்க வேண்டாம்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், வெள்ளிக்கிழமை அன்று என்னிடம் வந்தார்கள். அப்போது நான் நோன்பு நோற்றிருந்தேன். அப்போது அவர்கள், ‘‘நேற்று நோன்பு நோற்றாயா?” என்று கேட்டார்கள். நான் ‘‘இல்லை” என்றேன். ‘‘நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கும் ‘‘இல்லை” என்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் ‘‘அப்படியானால் நோன்பை முறித்துவிடு!” என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹம்மாத் பின் அல்ஜஅத் என்பாரின் அறிவிப்பில், ‘‘நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை விட்டு விட்டேன்” என்று ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களை (வணக்க வழிபாட்டிற்காக)த் தேர்ந்தெடுத்துக் கொள் வார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘இல்லை; அவர்களின் வழிபாடு (அமல்) நிரந்தரமானதாக இருக்கும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் செய்ய முடிந்த (வணக்கத்)தை உங்களில் யாரால்தான் செய்ய முடியும்?” என்று கூறினார்கள். அத்தியாயம் :
உம்முல் ஃபள்ல் பின்த் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘நபி (ஸல்) அவர்கள் அரஃபா (துல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களா?' என்பது குறித்து என்னருகே சிலர் விவாதித்தனர். சிலர் ‘அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்கள்' என்று கூறினர். வேறுசிலர் ‘நோன்பு நோற்றிருக்கவில்லை' என்றார்கள். அப்போது ஒட்டகத்தில் அமர்ந்திருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் பால் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பினேன்; அதை அவர்கள் அருந்தினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பது தொடர்பாக மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத் தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல் லாரும் பார்த்துக்கொண்டிருக்க அதை நபி (ஸல்) அவர்கள் அருந்தினார்கள். அத்தியாயம் :
அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பெருநாளில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஒன்று, உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) ஆகும்; மற்றொன்று, உங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண் ணும் (ஹஜ்ஜு) பெருநாள் ஆகும். அபூஅப்தில்லாஹ் புகாரீ (ஆகிய நான்) கூறுகிறேன்: இதன் அறிவிப்பாளரான அபூஉபைத் (ரஹ்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை என்றும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை என்றும் (இரு விதமாகச்) சொல்வர். இரண்டும் சரிதான்லிஎன்று இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அபூஉபைத் அவர்களின் வாரிசுரிமை இவ்விருவருக்கும் இருந்ததே இதற்குக் காரணம்.) அத்தியாயம் :
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்புப் பெருநாள், ஹஜ்ஜு பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்பதையும், இரு தோள்களில் ஒன்றை மட்டும் மறைத்து, மற்றொன்று வெளியே தெரியும் வண்ணம் ஒரு துணியைப் போர்த்திக்கொள்வதையும், ஓர் ஆடையை சுற்றிக்கொண்டு முழங்கால்களைக் கட்டி அமர்வதையும், சுப்ஹுக்குப் பிறகும் அஸ்ர் தொழுகைக்குப் பிறகும் தொழு வதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத் தார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்புப் பெருநாள் அன்றும், ஹஜ்ஜு பெருநாள் அன்றும் நோன்பு நோற்பதும் பொருளைத் தொடல் (முலாமசா), பொருளை விட்டெறிதல் (முனாபதா) ஆகிய இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள் ளன.52 அத்தியாயம் :
ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருந்தார்லி அந்த மனிதர் ‘‘(அவர்) திங்கட்கிழமை யன்று (நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருந்தார்)” என்று கூறியதாக நான் நினைக்கிறேன்லி அவர் குறிப்பிட்ட அந்த நாள் பெருநாளாக அமைந்துவிட்டது” என்று சொன்னார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்; நபி (ஸல்) அவர்கள் இந்த(ப் பெருநாள்) தினத் தில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.53 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் (மஹ்ரம்) ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது; நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது; சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது. (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா), பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்), எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெங்கும் (புனிதப்) பயணம் மேற்கொள்ளக் கூடாது. அத்தியாயம் :
யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஆயிஷா (ரலி) அவர்கள் மினாவில் தங்கக்கூடிய (தஷ்ரீக் உடைய) நாட்களில் நோன்பு நோற்பார்கள்” என்று தம் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஹிஷாமின் தந்தை உர்வா (ரஹ்) அவர்களும் அந்த நாட்களில் நோன்பு நோற்பார்கள்.55 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் கூறியதாவது: குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் ‘தஷ்ரீக்' உடைய நாட் களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்பட வில்லை. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘தமத்துஉ' முறையில் இஹ்ராம் கட்டியவரே அரஃபா நாள்வரை நோன்பு நோற்கலாம். குர்பானிப் பிராணியும் கிடைக்கவில்லை; நோன்பும் நோற்க வில்லை என்றால் மினாவில் தங்கும் நாட்களில் நோன்பு நோற்கலாம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஆயிஷா (ரலி) அவர்களும் இவ்வாறு கூறியதாக உர்வா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஆஷூரா நாளில் விரும்பினால் நோன்பு நோற்கலாம்! இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டிருந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் விரும்பிய வர் (ஆஷூரா தினத்தில்) நோன்பு நோற்றார்; விரும்பாதவர் விட்டுவிட்டார். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று (மக்களையும்) நோன்பு நோற்குமாறு பணித்தார்கள்; ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விட்டுவிட்டார்கள். விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்றார்; விரும்பாதவர் அதை விட்டு விட்டார். அத்தியாயம் :
ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற வருடம் ஆஷூரா நாளில் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது நின்றுகொண்டு, ‘‘மதீனா வாசிகளே! உங்கள் அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இது ஆஷூரா நாளாகும். இதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை. நான் நோன்பு நோற்றிருக்கிறேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும்; விரும்பாதவர் விட்டுவிடட்டும்' என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று சொன்னார்கள்.57 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘‘இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். யூதர் கள், ‘‘இது நல்ல நாள். இஸ்ரவேலர்களை, அவர்களின் எதிரியிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்கள் நோன்பு நோற் றார்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களைவிட மூசாவுக்கு மிகவும் உரியவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக் குக்) கட்டளையும் இட்டார்கள். அத்தியாயம் :
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆஷூரா நாளை யூதர்கள் பெரு நாளாகக் கருதிவந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்” என்று (முஸ்லிம்களிடம்) கூறினார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அஷூரா எனும் இந்த (முஹர்ரம் பத்தாம்) நாளையும் லிரமளான் எனும்லி இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பாகத் தேர்ந் தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. அத்தியாயம் :
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, ‘‘இன்று ஆஷூரா நாளாகும்; ஆகவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பு இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். அத்தியாயம் :