அனைத்து இஸ்லாம் நூலகம்

24 - ஸகாத்

1

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளு நராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழி அளிக்குமாறு அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2

அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்)செயலை எனக்குத் தெரிவியுங் கள்” எனக் கேட்டார். அப்போது (நபித்தோழர்கள் வியப்புற்று), “இவருக் கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?” என்றார்(கள்). நபி (ஸல்) அவர்கள் “இவருக்கு ஏதோ தேவை யிருக்கிறது (போலும்)!‘“ (என்று கூறிவிட்டு அவரிடம்), “நீர் அல்லாஹ்வை வழிபட வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவைப் பேணி நடக்க வேண்டும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முதலாவது தொடரில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளரின் பெயர் முஹம்மத் பின் உஸ்மான் என்பது சரியல்ல; அவரது பெயர் அம்ர் பின் உஸ்மான்தான். அத்தியாயம் :

3

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செய்தால் சொர்க்கம் செல்ல வேண்டும்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் அல்லாஹ்வையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமளானில் நோன்பு நோற்க வேண்டும்” என்றார்கள். அதற்கு அவர், “என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக வேறெதையும் செய்யமாட்டேன்” என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ) இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்!” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

4

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அப்துல் கைஸ்’ தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ் வின் தூதரே! நாங்கள் ரபீஆ கோத்திரத் தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே இஸ்லாத்தை ஏற்காத ‘முளர்’ கூட்டத்தார் வசிக்கிறார்கள். எனவே, போர் தடை செய்யப்பட்ட மாதங் களிலன்றி (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியாது. எனவே, எங்களுக்குச் சில கட்டளைகளைக் கூறுங்கள். நாங்களும் அதைப் பின்பற்றி, எங்களுக்குப் பின்னால் தங்கிவிட்டவர் களுக்கும் அறிவிப்போம்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான் நான்கு விஷயங்களைக் கட்டளையிடுகிறேன்; நான்கு விஷயங்களைத் தடை செய்கிறேன். அவை: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதியாக நம்புதல், -(இதைச் சொல்லும்போது ‘ஒன்று’ என) இவ்வாறு தமது கைவிரலை மடித்தார்கள்- தொழுகையைக் கடைப்பிடித்தல், ஸகாத் வழங்குதல், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை வழங்குதல் என்று சொன்னார்கள். மேலும், “மது வைத்திருந்த மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கை உங்களுக்கு (தாற்காலிகமாக) நான் தடை செய்கிறேன்” என்றும் கூறி னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

5

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும், அரபியரில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாயினர். (அவர்கள்மீது போர் தொடுக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள், “லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக்கொண்டார் -தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர- அவரது விசாரணை அல்லாஹ் விடமே உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகை யையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப் போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத், பொருளாதாரக் கடமையாகும்; அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களிடம் (ஸகாத்தாக) வழங்கி வந்த ஓர் ஆட்டுக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால்கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ரின் இதயத்தை (உறுதியான முடிவெடுக்கும் வகையில்) அல்லாஹ் விசாலமாக்கி இருந்ததாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானதாகும் என நான் விளங்கிக்கொண்டேன்” என்றார்கள். அத்தியாயம் :

6

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், தொழு கையைக் கடைப்பிடிப்பதாகவும் ஸகாத் வழங்குவதாகவும் ஒவ்வொரு முஸ்லிமுக் கும் நன்மையையே நாடுவதாகவும் உறுதிமொழி (பைஅத்) எடுத்துக் கொண்டேன். அத்தியாயம் :

7

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற் கான (ஸகாத்) கடமையை நிறைவேற்ற வில்லையாயின். அது மறுமை நாளில் முன்பிருந்ததைவிட நல்ல நிலையில் வந்து தன் கால்களால் அவனை மிதிக்கும். உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான (ஸகாத்) கடமையை நிறைவேற்றவில்லை யாயின், அது மறுமை நாளில் முன்பிருந் ததைவிட நல்ல நிலையில் வந்து தன் குளம்புகளால் அவனை மிதித்துத் தன் கொம்புகளால் அவனை முட்டும். உங்களில் யாரும் மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்துகொண்டு வந்து (அபயம் தேடிய வண்ணம்), ‘முஹம்மதே’ எனக் கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகார மில்லை. (இறைச் சட்டம் என்ன என்பதை முன்பே உனக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன்” என்று கூறும்படியான நிலை ஏற்பட வேண்டாம். யாரும் (மறுமை நாளில்) கத்திக்கொண் டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்துகொண்டு வந்து ‘முஹம்மதே’ எனக் கூற, அதற்கு நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை. (முன்பே உனக்கு) நான் எடுத்துரைத்துவிட்டேன்” என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட வேண்டாம். “நீர் நிலைகளில் பால் கற(ந்து அங்கு வரும் ஏழைகளுக்குக் கொடு)க்கப்படுவதும் அவற்றுக்கான (தார்மீகக்) கடமைகளில் ஒன்றாகும்” எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

8

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தை அளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின், (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்குக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடை களைப் பிடித்துக்கொண்டு, “நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்” என்று சொல்லும். இவ்வாறு கூறிவிட்டு, பின்வரும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்: தமக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருளில் கஞ்சத்தனம் செய்வோர், அது தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்(து சேமித்)தார்களோ அது மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் சுற்றப்படும். (3:180) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

9

காலித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் (வெளியில்) புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, “யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவழி யில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு” (9:34) எனும் இறைவசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “யார் அவற்றைச் சேமித்து வைத்துக் கொண்டு, அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கிறாரோ அவருக்குக் கேடுதான். இவ்வசனம் ‘ஸகாத்’ கடமை யாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங் களுக்கான தூய்மையாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என்றார்கள். அத்தியாயம் :

10

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: (வெள்ளியில்) ஐந்து ‘ஊக்கியா’வுக்குக் குறைந்ததில் ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து ‘வஸ்க்’ குக் குறைவான (தானியத்)தில் ஸகாத் இல்லை.2 இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

11

ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (மதீனாவுக்கு அருகில் உள்ள) ‘ரபதா’ எனுமிடத்திற்குச் சென்றபோது அங்கு அபூதர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நான் அவர்களிடம், “நீங்கள் இங்கு வந்து தங்கக் காரணமென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் ஷாம் (சிரியா) நாட்டில் இருந்தபோது, ‘யார் பொன்னையும் வெள்ளியையும் திரட்டி வைத்துக்கொண்டு, அவற்றை இறைவழியில் செலவு செய்யா மல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு” (9:34) எனும் இறைவசனம் (அருளப்பெற்ற காரணம்) தொடர்பாக, நானும் முஆவியா (ரலி) அவர்களும் கருத்து வேறுபாடு கொண்டோம். முஆவியா (ரலி) அவர்கள், “இது வேதக்காரர்கள் தொடர்பாக அருளப் பெற்றது” என்றார்கள். நானோ “நம்மையும் அவர்களையும் குறித்தே அருளப்பெற்றது” என்றேன். எனவே, எனக்கும் முஆவியா வுக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. உடனே அவர் என்னைப் பற்றி உஸ்மான் (ரலி) அவர்களிடம் கடிதம் மூலம் முறையிட்டதும், உஸ்மான் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வருமாறு எனக்குக் கடிதம் எழுதினார்கள். எனவே, நான் அங்கு போனதும் மக்கள் இதற்குமுன் என்னைப் பார்க்காதவர்கள் போல என்னருகில் அதிகமாகவே கூடி (மதீனாவுக்கு அழைக்கப் பட்ட காரணத்தை விசாரிக்க ஆரம்பித்து)விட்டார்கள். நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கூறியதும் உஸ்மான் (ரலி) அவர்கள், “நீர் விரும்பினால் தனியாக (மதீனாவுக்கு) அருகில் எங்கேனும் இருந்துகொள்ளும்!” என்று கூறினார்கள். இதுதான் இந்த இடத்தில் என்னைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. எனக்கு ஒரு அபிசீனியர் (கறுப்பர்) தலைவராக இருந்தாலும் அவருக்கு நான் செவிதாழ்த்திக் கட்டுப்படுவேன்” என்று கூறினார்கள்.3 அத்தியாயம் :

12

அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் குரைஷிப் பிரமுகர்கள் இருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தேன். அப்போது பரட்டை முடியுள்ள சொர சொரப்பான ஆடையணிந்த முரட்டுத் தோற்றமுள்ள ஒரு மனிதர் அவர்களிடம் வந்து முகமன் (சலாம்) கூறிவிட்டு, “(ஸகாத் கொடுக்காமல்) பொருளைச் சேமிப்பவர் களுக்காக, நரக நெருப்பில் சூடேற்றப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் தோளின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியேறும். பிறகு அது தோளின் மேற்பகுதி எலும்பில் வைக்கப் படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியேறி உருண்டோடும்” என்று கூறினார். பிறகு திரும்பிச் சென்ற அவர் ஒரு தூணுக்கருகில் போய் உட்கார்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவருக்கருகில் அமர்ந்தேன். அவர் யார் என்று எனக்கு (அப்போது) தெரியவில்லை. பிறகு நான் அவரிடம் “தாங்கள் கூறியதை மக்கள் வெறுப்பதாகவே நான் கண்டேன்” என்று சொன்னேன். அதற்கு அவர் “அவர்கள் விவரமற்றவர்கள்” எனக் கூறினார். “என் தோழர் என்னிடம் சொன்னார்...” என அந்தப் பெரியவர் மேலும் தொடர்ந்து, கூறும்போதே நான் (குறுக்கிட்டு) “உங்கள் தோழர் யார்?” எனக் கேட்டேன். “நபி (ஸல்) அவர்கள்தான்” எனக் கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்ரே! உஹுத் மலையை நீர் பார்த்திருக்கிறீரா?’ எனக் கேட்டார்கள். தமது வேலை ஏதோ ஒன்றுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி, பகல் முடிய இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்துகொள்வதற்காக சூரியனைப் பார்த்துவிட்டு, ‘ஆம்’ என்றேன். ‘உஹுத் மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார் களைத் தவிர மற்ற அனைத்தையும் செலவிடாமலிருப்பதை நான் விரும்ப வில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவர்களோ இதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் உலக ஆதாயங் களையே சேகரிக்கிறார்கள். அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை இவ்வுலகப் பொருட்களை இவர்களிடம் நான் கேட்கமாட்டேன்; மார்க்க விஷயங்களைப் பற்றியும் இவர்களிடம் தீர்ப்பு கேட்கமாட்டேன்” என்று அந்தப் பெரியவர் (அபூதர் (ரலி) அவர்கள்) கூறினார்கள். அத்தியாயம் :

13

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி, அதை அறவழியில் செலவழிக்க அவரைத் தூண்டினான். இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் (செயல்பட்டு) தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக்கொடுப்பவராகவும் இருக்கிறார். இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

14

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தூய்மையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் தூய்மையானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வ தில்லை- அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொள்கிறான். பிறகு உங்களில் ஒருவர் தமது குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று, அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு அவருக்காக வளர்ச்சி அடை யச்செய்கிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

15

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இப்போதே) தர்மம் செய்துகொள்ளுங் கள்! ஏனெனில், உங்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு அலைவார்; அதைப் பெறுபவர் யாரையும் அவர் காண மாட்டார். அப்போது ஒருவன், “நேற்றே இதை நீர் கொண்டுவந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக் குத் தேவையில்லை” என்று கூறுவான். இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

16

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. எந்த அளவுக்கெனில், அந்நாளில் பொருளுடையவர் தமது தர்மத்தை யார்தான் வாங்கப்போகிறார் என்று கவலை கொள்வார். யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால், அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறுவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

17

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தமது வறுமையைப் பற்றி முறையிட்டார். மற்றொருவர் வழிப்பறி பற்றி முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வழிப்பறியை நீர் குறைவாகவே காண்பீர். இறுதியில், காவலரின்றி வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை செல்லும் நிலை உருவாகும். வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக்கொண்டு அலைவார். அதை அவரிடமிருந்து பெறுவதற்கு யாரையும் அவர் காணமாட்டார். அந்நிலை ஏற்படாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. பிறகு உங்களில் ஒருவர் அல்லாஹ் வின் முன்னிலையில் நிற்பார். அவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக் காது; மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார். அப்போது (அல்லாஹ்), “நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?” எனக் கேட்பான். அவர் ‘ஆம்’ என்பார். பிறகு “உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா?” எனக் கேட்பான். அவர் ‘ஆம்’ என்பார். பிறகு தமது வலப் பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தையே காண்பார். பின்னர் இடப் பக்கத்திலும் பார்ப்பார்; அங்கும் நரகத்தையே காண்பார். எனவே, பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது, அதுவும் கிடைக்கவில்லை யெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :

18

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தர்மப் பொருளான தங்கத்தை எடுத்துக்கொண்டு அலைவார். அதை அவரிடமிருந்து பெறுவதற்கு யாரையும் அவர் காணமாட்டார். மேலும், (அப்போது) ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்துவந்து, அவனைச் சார்ந்திருக்கும் நிலை காணப்படும்.4 இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

19

அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: தர்மம் தொடர்பான இறைவசனம் (9:103) இறங்கியதும் (தர்மம் செய்வதற்காகப் பொருள் தேடி) நாங்கள் (சுமை தூக்கி) கூலி வேலை செய்யலானோம். அப்போது ஒருவர் வந்து, அதிகமான பொருளைத் தர்மம் செய்தார். அப்போது (நயவஞ்சகர்கள்), “அவர், பிறர் பாராட்ட வேண்டுமென்று செய்கிறார்” எனக் கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்து, ஒரு ‘ஸாஉ’ தானியத்தைத் தர்மம் செய்தார். அப்போது (நயவஞ்சகர்கள்), “இவரது ஸாஉ (குறைந்த அளவு தானியம்) அல்லாஹ்வுக்குத் தேவையில்லை” எனக் கூறினர். அப்போதுதான், “(நயவஞ்சகர்களாகிய) அவர்கள், இறைநம்பிக்கையாளர்களில் கூடுதல் தர்மம் செய்வோரையும் தமது உழைப்பு தவிர வேறெதுவும் கிடைக்கப் பெறாதவர்களையும் குறைகூறுகின்றனர்” (9:79) எனும் இறைவசனம் அருளப் பெற்றது. அத்தியாயம் :

20

அபூமஸ்வூத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டபோது, எங்களில் ஒருவர் கடைத்தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து, இரு கையளவு தானியம் சம்பாதித்து (அதைத் தர்மம் செய்து)விடுவார். ஆனால், இன்றோ எங்களில் சிலரிடம் ஓர் இலட்சம் (திர்ஹம்/தீனார்)வரை உள்ளது. அத்தியாயம் :

21

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு சிறுதுண்டின் மூலமாவது நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக்கொள்ளுங்கள். இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

22

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி தன்னுடைய இரு பெண் குழந்தைகளுடன் யாசகம் கேட்டு வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தை களுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றுவிட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றால் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்” எனக் கூறி னார்கள். அத்தியாயம் :

23

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மை தரும் தர்மம் எது?” எனக் கேட்டார். “நீர் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருள் தேவை உடையவராகவும், வறுமையை அஞ்சி, செல்வத்தை எதிர் பார்ப்பவராகவும் இருக்கும்போது செய்யும் தர்மமே (அதிக நன்மையுள்ளதாகும்.) எனவே (தர்மம் செய்வதை), உயிர் தொண்டைக் குழியை நெருங்கும்வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ் வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று சொல்வீர். (ஆனால்), அப்போது உமது செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிதருக்கு உரியதாகிவிட்டிருக்கும்‘“ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

24

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம், “உங்களது இறப்புக்குப்பின் எங்களில் யார் முதலில் உங்களை வந்து சேர்வார்?” எனக் கேட்டார். அதற்கு, “உங்களில் கை நீளமானவரே!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே துணைவியர் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்துபார்க்க ஆரம்பித்தார்கள். அப்போது சவ்தா (ரலி) அவர்களின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்ததால்தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும், அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக்கூடியவராகவும் இருந்தார். அத்தியாயம் :

25

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒருவர், “நான் தர்மம் செய்யப்போகிறேன்” எனக் கூறிக்கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப் பட்டுள்ளது” எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், ‘இறைவா! உனக்கே எல்லாப் புகழும். (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) புறப்பட்டுவந்து அதை ஒரு விபசாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், “இன்றிரவு விபசாரிக்குத் தர்மம் கொடுக்கப் பட்டுள்ளது” எனப் பேசிக்கொண்டார்கள். (இதைக் கேட்ட) அவர், “இறைவா! விபசாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்!” எனக் கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டு ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “பணக்காரருக்குத் தர்மம் கொடுக்கப்பட் டுள்ளது” எனப் பேசிக்கொண்டனர். அப்போது அவர், “இறைவா! திருடன், விபசாரி, பணக்காரர் ஆகியோருக்குத் தர்மம் கொடுத்தற்காக உனக்கே எல்லாப் புகழும்” எனக் கூறினார். பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது: நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைக் கைவிடக் காரணமாகலாம். விபசாரிக்கு நீ கொடுத்த தர்மம். அவள் விபசாரத்தைக் கைவிடக் காரணமாகக்கூடும். பணக்காரருக்குக் கொடுத்த தர்மம், அவர் படிப்பினை பெற்று, தமக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் காரணமாகக்கூடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

26

மஅன் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் என் பாட்ட னாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று) உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திருமணம் செய்தும்வைத்தார்கள். அவர்களிடம் (ஒரு தடவை) ஒரு பிரச்சினையைக் கொண்டுசென்றேன். அதாவது என் தந்தை யஸீத் பின் அல்அக்னஸ் (ரலி) அவர்கள் தர்மம் செய்வதற்காகச் சில தீனார்களை எடுத்துக் கொண்டு சென்று அதைப் பள்ளிவாசலில் இருந்த ஒருவருக்கு அருகில் வைத்து விட்டார். நான் சென்று அதை எடுத்து வந்துவிட்டேன். அப்போது என் தந்தை, “அல்லாஹ் வின் மீதாணையாக! நான் உன்னை எண்ணி (அதை வைத்தி)டவில்லையே!” என்றார்கள். உடனே நான் அவரை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தீர்வு கேட்டேன். அதற்கு அவர்கள் “யஸீதே! நீர் எண்ணிய (தர்மத்திற்கான நன்மையான)து உமக்குக் கிடைக்கும். மஅனே! நீர் எடுத்த (பொருளான)து உமக்கு உரியதே” எனக் கூறினார்கள். அத்தியாயம் :

27

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது (அரியணை) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில், தனது நிழலில் உயர்ந்தோன் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்; நீதி வழுவா ஆட்சியாளர். இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளை ஞன். பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்திருக்கும் இதயம் உடைய வர். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக் காகவே பிரிந்த இருவர். தகுதியும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை (தவறு செய்ய) அழைத்தபோதும், “நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” எனக் கூறியவர். “தமது இடக் கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாகத் தர்மம் செய்தவர். தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்தியவர் ஆகியோர் ஆவர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

28

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இப்போதே) தர்மம் செய்துகொள் ளுங்கள்! ஏனெனில், உங்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒருவர் தமது தர்மப் பொருளை (வலக் கரத்தில்) எடுத்துக்கொண்டு அலைவார். அப்போது ஒரு மனிதன், நேற்றே இதை நீர் கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே என்று கூறுவான். இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

29

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் (முறையோடு) தர்மம் செய்தால், அவள் செலவழித்தற்காக அவளுக்கும் (தர்மத்தின்) பலன் கிடைக்கும். அதைச் சம்பாதித்தவன் என்ற முறையில் அவளுடைய கணவனுக்கும் அதன் நன்மை கிடைக்கும்; அதைப் போன்றே, காசாளருக்கும் (நன்மை) கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் சிறிதும் குறைத்துவிடமாட் டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

30

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்தே (தர்மத்தைத்) தொடங்குவீராக! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

31

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மேல் கையே கீழ் கையைவிடச் சிறந்ததாகும். உம்முடைய குடும்பத்தாரிட மிருந்தே (தர்மத்தைத்) தொடங்குவீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறாரோ அவரை அல்லாஹ்வும் சுயமரியாதை உள்ளவராக ஆக்குவான். யார் தன்னிறைவோடு வாழவைக்குமாறு (அல்லாஹ்விடம்) கோருவாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட் டுள்ளது. அத்தியாயம் :

32

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை(மிம்பர்) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகிய வற்றைப் பற்றி உபதேசம் செய்தார்கள். அப்போது மேல் கையே கீழ் கையைவிடச் சிறந்ததாகும்; மேல் கை என்பது, தர்மம் செய்யக்கூடியது; கீழ் கை என்பது யாசிக்கக்கூடியது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

33

உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்துவிட்டு, உடனே விரைந்து வீட்டினுள் சென்று, தாமதிக்காமல் வெளியே வந்தார்கள். அப்போது நான் காரணம் கேட்டேன் -அல்லது கேட்கப்பட்டது - அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் எனது வீட்டில் தர்மப் பொருளான தங்கக் கட்டியை வைத்திருந்தேன்; இரவுவரை அது என்னிடம் இருப்பதை நான் விரும்ப வில்லை. எனவே, அதைப் பகிர்ந்து அளித்துவிட்டேன்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :

34

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் கை வளையல்களையும் காதணிகளையும் (தர்மமாக) வழங்க லானார்கள். அத்தியாயம் :

35

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால், அல்லது அவர்களிடம் ஏதேனும் தேவை(யை நிறைவேற்றுமாறு) கோரப் பட்டால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள்; அதனால் உங்க ளுக்கும் நற்பலன் வழங்கப்படும்” என்று கூறுவார்கள். பிறகு “அல்லாஹ், தன் தூதரின் நாவால் தான் நாடியதை நிறைவேற்று கிறான்” என்பார்கள். அத்தியாயம் :

36

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ (தர்மம் செய்யாமல்) பையை முடிந்து வைத்துக்கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக்கொள்ளப்படும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “(நல்லறங்களுக்காகச் செலவழிப்பதில்) கணக்குப் பார்த்துக்கொண்டிருக்காதே! (அப்படிப் பார்த்தால்) அல்லாஹ்வும் உன் விஷயத்தில் கணக்குப் பார்ப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

37

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன்மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான். (எனவே) உன்னால் இயன்றவரை சிறிதளவேனும் தர்மம் செய்!” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

38

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், “உங்களில் யார் குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வைத்தி ருக்கிறார்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அப்படியே நினைவில் வைத்திருக்கிறேன்” என்றேன். உமர் (ரலி) அவர்கள், “நீர் அதற்குத் துணிந்தவர்தான். அவர்கள் எப்படிச் சொன்னார்கள்?” என்று கேட்டார்கள்.5 “ஒரு மனிதன் தன் குடும்பத்தார் மற்றும் குழந்தைகள் விஷயத்தில் (அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைப்பதன் மூலமும்) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னாவில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, தர்மம், நல்லறம் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என) நான் பதில் கூறினேன். உமர் (ரலி) அவர்கள், “நான் இதைப் பற்றிக் கேட்கவில்லை; கடல் அலையைப் போல அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (அல்லாஹ்வின் தூதரால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட) குழப்பத்தை (ஃபித்னா) பற்றியே கேட்கிறேன்” என்றார்கள். நான் “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்க ளுக்கும் அவற்றிற்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது” எனக் கூறியதும், “அக்கதவு உடைக்கப்படுமா? திறக்கப்படுமா?”என உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் “உடைக்கப்படும்” என்றேன். “அது உடைக்கப்பட்டால் ஒருபோதும் மூடப்படவேமாட்டாதுதானே?”என உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன்.6 அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள், “நல்லறம் என்பதற்குப் பதிலாக அபூவாயில் (ரஹ்) அவர்கள் நல்லதை ஏவி, தீயதைத் தடுத்தல் என்று கூறுவார்கள்” என்றார்கள். அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அந்தக் கதவு எது?” என ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே, மஸ்ரூக் (ரஹ்) அவர்களிடம் கேட்கச் சொன்னோம். அவர்கள் கேட்டதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், “(அந்தக் கதவு) உமர் (ரலி) அவர்கள்)தான்”என்றார்கள். மேலும், (அவரிடமே) “நீங்கள் குறிப்பிடுவதை உமர் (ரலி) அவர்கள் அறிவார்களா?” எனக் கேட்டோம். அதற்கு அவர்கள் “ஆம், பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று அதை உமர் (ரலி) அவர்கள் அறிவார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் உமருக்கு அறிவித்தேன்” என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

39

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில், தர்மம் செய்தல், அடிமைகளை விடுதலை செய்தல், உறவைப் பேணல் போன்ற நல்லறங்களைச் செய்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்) களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்” என்று பதிலளித்தார்கள்.7 அத்தியாயம் :

40

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால், அதற்கான பலன் அவளுக்கு உண்டு. அதைச் சம்பாதித்தவன் என்ற முறையில் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும். அது போன்றே, காசாளருக்கும் (நன்மை) கிடைக்கும். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

41

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தைச் செயல்படுத்தக்கூடிய -அல்லது அதற்காக வழங்கக்கூடிய- நேர்மையான முஸ்லிம் காசாளர், அதை முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் வழங்கும்போது, தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவர் ஆவார்.8 இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

42

43

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன் கணவனின் வீட்டி லுள்ள ஒன்றை தர்மம் செய்தால்... மற்றோர் அறிவிப்பில் இடம்பெற் றுள்ளதாவது: ஒரு பெண் தன் கணவனின் வீட்டி லுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அதற்கான நற்பலன் அவளுக் குக் கிடைக்கும். அதைப் போன்ற நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அது போன்றே காசாளருக்கும் கிடைக்கும். அவள் செலவழித்ததற்காகவும் அவன் சம்பாதித்ததற்காகவும் அந்தத் தர்மத்தின் நன்மையைப் பெறுகின்றனர். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் (மொத்தம்) மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

44

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண் தன் (கணவனின்) வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால், அதன் நன்மை அவளுக்குக் கிடைக்கும். (அதைச்) சம்பாதித்த காரணத் தால் (தர்மத்தின் நன்மை) அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோலவே காசாளருக்கும் கிடைக்கும். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

45

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலைப்பொழுதை அடையும்போது, இரு வானவர்கள் (வானிலிருந்து) இறங்குகின்ற னர். அவ்விருவரில் ஒருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலன் வழங்குவாயாக!” என்று கூறுவார். மற்றொருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைத் தருவாயாக!” என்று கூறுவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

46

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கஞ்சனுக்கும் தர்மம் செய்பவருக்கும் உதாரணமாவது, இரும்பாலான இரு நீளங்கிகளை மார்பிலிருந்து கழுத்தெழும்பு வரை அணிந்துள்ள இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரது நீளங்கி விரிந்து, விரல்நுனிகளை மறைத்து பாதச் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழிக்கும் அளவுக்கு நீளும். கஞ்சனோ, ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போதெல்லாம் அவனது நீளங்கி (அவனை அழுத்தி) அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுக்கி)ப் பிடிக்காமல் இருப்பதில்லை. அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (இரு நீளங்கிகள் என்பதற்குப் பதிலாக) ‘இரு கவசங்கள்’ என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

47

48

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற் கான பொருள்) ஏதும் கிடைக்கா விட்டால்...?” எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்” என்றார்கள். மக்கள், “அதுவும் முடியவில்லை யாயின்” எனக் கேட்டதற்கு, “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். மக்கள் “அதுவும் இயலவில்லையாயின்” என்றதும், “நல்லறம் ஏதேனும் செய்யட்டும்! (குறைந்த பட்சம்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும்! இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :

49

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (உம்மு அத்திய்யா) நுசைபா அல் அன்சாரியா (ரலி) அவர்களுக்கு ஓர் ஆடு (தர்மமாக) அனுப்பிவைக்கப்பட்டது. அவர் அதில் சிறிதளவு (இறைச்சியை) ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அனுப்பிவைத்தார். நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷாவிடம்), “உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் உள்ளதா?” எனக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “நுசைபா அனுப்பிவைத்த இந்த ஆட்டைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதைக் கொண்டுவா! அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது‘“ என்று கூறினார்கள்.9 அத்தியாயம் :

50

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவான வற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளியில்) ஐந்து ‘ஊக்கியா’வுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (தானியங்களில்) ஐந்து ‘வஸ்க்’கைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

51

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்ட (கால்நடைகளுக்கான ஸகாத்) விதிமுறைகள் குறித்து அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார்கள். அதில், “ஒரு வயது பூர்த்தியான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாக வழங்க வேண்டிய ஒருவரிடம் அது இல்லாமல் இரண்டு வயது பூர்த்தியான ஒட்டகம் இருக்கலாம். அப்போது அவரிடமிருந்து அதைப் பெற்றுக்கொண்டு, இருபது திர்ஹங்கள் அல்லது இரு ஆடுகளை அவருக்கு ஸகாத் வசூலகர் கொடுத்துவிட வேண்டும். அவ்வாறே அவரிடம் ஒரு வயது பூர்த்தியான பெண் ஒட்டகம் முறைப்படி இல்லாமல் இரண்டு வயது பூர்த்தியான ஆண் ஒட்டகம் இருந்தால், அது (ஸகாத் தாக) ஏற்கப்படும். ஸகாத் வசூலிப்பவர் அவருக்கு எதையும் கொடுக்க வேண்டிய தில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்கள். அத்தியாயம் :

52

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உறுதிகூறுகிறேன்: அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெரு நாளன்று) ‘குத்பா’ உரைக்கு முன்னால் தொழுதார்கள். பிறகு தமது உரை பெண்களின் செவிகளைச் சென்றடையவில்லை என அவர்கள் கருதியதால் பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்து விட்டு, தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள், தமது ஆடையை ஏந்தியவராக நின்றிருந் தார்கள். அப்போது பெண்கள் அதில் (தம்முடைய அணிகலன்களைப்) போடலானார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் பின் அபீதமீமா (ரஹ்) அவர்கள் இதை அறிவித்தபோது, தமது காதையும் கழுத்தையும் சுட்டிக் காட்டினார்கள்.11 அத்தியாயம் :

53

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் (ஆணையின் பேரில் அவனுடைய) தூதர் (ஸல்) அவர்கள் கடமையாக்கிய ஸகாத் குறித்து எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுதியபோது, “ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, பிரிந்த வற்றை ஒன்றுசேர்ப்பதும் ஒன்றுசேர்ந்த வற்றைப் பிரிப்பதும் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்கள். அத்தியாயம் :

54

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையாக்கிய கட்டாயக் கொடை தொடர்பாக எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுதியபோது, “இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் (கூட்டாளி கள் இருவரில்) ஒருவர் (தம் பொருட்களின் ஸகாத்துடன்) மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தாமே செலுத்திவிடுவாராயின், அவர் தம் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்கள். அத்தியாயம் :

55

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) தொடர்பாகக் கேட்டார். அதற்கு அவர்கள், “உமக்குக் கேடுதான்” (எனச் செல்லமாகக் கூறிவிட்டு) “நிச்சயமாக அதன் நிலை மிகவும் கடினமானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? அவற்றுக்கு ஸகாத் கொடுத்துவருகிறீரா?” எனக் கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றதும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் கடல் கடந்து (பல ஊர்களுக்கப்பால்) சென்றுகூட நன்மை செய்வீராக! நிச்சயமாக அல்லாஹ் உம்முடைய (நற்)செயல்(களின் நன்மை) களிலிருந்து எதையும் குறைத்துவிட மாட்டான் “ எனக் கூறினார்கள்.14 அத்தியாயம் :

56

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ் தன் தூதருக்குக் கடமை யாக்கிய ஸகாத் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந் தார்கள்: நான்கு வயது பூர்த்தியான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டிய ஒருவரிடம் அது இல்லாமல் மூன்று வயது பூர்த்தியான பெண் ஒட்டகம் இருந்தால், அது அவரிடமிருந்து ஏற்கப் படும். அத்துடன் அவருக்கு முடிந்தால் அவரிடமிருந்து இரு ஆடுகளை வசூலிக்க வேண்டும். அல்லது இருபது திர்ஹங்களை வசூலிக்க வேண்டும். மூன்று வயது பூர்த்தியான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் நான்கு வயது பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு இருபது திர்ஹங்களை, அல்லது இரண்டு ஆடுகளை வசூலிப்பவர் கொடுக்க வேண்டும். மூன்று வயதுடைய பெண் ஒட்ட கத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டிய வரிடம் அது இல்லாமல் இரண்டு வயது பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்: அத்துடன் இரண்டு ஆடுகளையோ இருபது திர்ஹங் களையோ (ஸகாத் அளிப்பவர்) கொடுக்க வேண்டும். இரண்டு வயதான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் மூன்று வயது பூர்த்தியான பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு, வசூலிப்பவர் இருபது திர்ஹங்களையோ இரண்டு ஆடுகளையோ கொடுக்க வேண்டும். இரண்டு வயது பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் ஒரு வயது நிறைந்த பெண் ஒட்டகம் இருந்தால், அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் இருபது திர்ஹங்களையோ இரண்டு ஆடு களையோ (ஸகாத் கொடுப்பவர்) வழங்க வேண்டும். அத்தியாயம் :

57

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பஹ்ரைனுக்கு (ஆளுநராக) அனுப்பப்பட்டதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந் தார்கள்: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளை யிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள்மீது கடமையாக்கிய கட்டாயக் கொடை (ஸகாத்) தொடர்பான தாகும். இந்த ஸகாத் முஸ்லிம்களில் யாரிடம் முறைப்படி கோரப்படுகிறதோ அவர் அதை வழங்கட்டும்! கணக்குக்கு மேல் கோரப்பட்டால் கொடுக்க வேண்டாம். இருபத்து நான்கு ஒட்டகங்கள் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், ஒவ்வோர் ஐந்து ஒட்டகத்திற்கும் ஓர் ஆடு ஸகாத் கொடுக்க வேண்டும். இருபத்தைந்து ஒட்டகம் முதல் முப்பத்தைந்துவரை ஒரு வயது பெண் ஒட்டகம் ஸகாத்தாக வழங்க வேண்டும். முப்பத்தாறு முதல் நாற்பத்தைந்துவரை, இரண்டு வயது பெண் ஒட்டகம், நாற்பத்தாறு முதல் அறுபதுவரை மூன்று வயதுள்ள, பருவமடைந்த பெண் ஒட்டகம், அறுபத்து ஒன்றிலிருந்து எழுபத்தைந்து வரை நான்கு வயது பெண் ஒட்டகம், எழுபத்தாறிலிருந்து தொண்ணூறுவரை இரண்டு வயதுள்ள இரண்டு பெண் ஒட்டகங்கள், தொண்ணூற்று ஒன்றிலிருந்து நூற்றிருபதுவரை மூன்று வயதுள்ள, பருவமடைந்த இரு பெண் ஒட்டகங்கள் ஸகாத் ஆகும். நூற்றிருபதுக்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு நாற்பது ஒட்டகங்களுக்கும் இரண்டு வயது பெண் ஒட்டகம் ஒன்றும், ஒவ்வொரு ஐம்பதுக்கு மூன்று வயது பெண் ஒட்டகம் ஒன்றும் ஸகாத் ஆகும். யாரிடம் நான்கு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளனவோ அவற்றுக்கு ஸகாத் இல்லை - உரிமையாளர் நாடினால் தவிர! அவை ஐந்து ஒட்டகங்களாகிவிட்டால் அதற்குரிய ஸகாத் ஓர் ஆடு ஆகும். (காடுகளில்) மேயும் ஆடுகள் நாற்பதி லிருந்து நூற்றிருபதுவரை இருந்தால், அதற்கு ஸகாத் ஓர் ஆடு ஆகும். நூற்றி ருபதுக்குமேல் இரு நூறுவரை இருந்தால் இரு ஆடுகளும், இரு நூறுக்குமேல் முன்னூறுவரை மூன்று ஆடுகளும் முன்னூறுக்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடும் ஸகாத் ஆகும். (காடுகளில்) மேயக்கூடிய ஆடுகளில் நாற்பதில் ஒன்று குறைந்துவிட்டாலும், உரிமையாளர் நாடினால்தவிர அதில் ஸகாத் இல்லை. வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு (இரண்டரை சதவீதம்) ஸகாத் கொடுக்க வேண்டும். அதில் நூற்றுத் தொண்ணூறு திர்ஹம் மட்டும் இருந்தால் உரிமையாளர் நாடினால் தவிர ஸகாத் இல்லை. (இரு நூறு திர்ஹங்களில்தான் ஸகாத் கடமையாகும்.) அத்தியாயம் :

58

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்ட (ஸகாத்) விதிமுறைகள் தொடர்பாக அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு எழுதியிருந்தார்கள்: ஸகாத்தில் வயதான கால்நடை, குறைகள் உள்ள கால்நடை -ஸகாத் கொடுப்பவர் விரும்பினால் தவிர- ஆண் கால்நடை ஆகியவற்றைப் பெறலாகாது.15 அத்தியாயம் :

59

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியவதாவது: (நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் சிலர் ஸகாத் வழங்க மறுத்தபோது) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணை யாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடத்தில் வழங்கிவந்த (ஸகாத்களில்) ஓர் ஆட்டுக் குட்டியை என்னிடம் தர மறுத்தாலும் அதற்காக அவர்களுடன் நான் போர் புரிவேன்” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “(ஸகாத் கொடுக்க மறுத்தவர்கள்மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்)படி அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்ப தைத் தவிர வேறெதுவும் நான் கருத வில்லை. அதுதான் சரியானது என்பதை நான் அறிந்துகொண்டேன்” என்று கூறி னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

60

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தபோது அவரிடம், “நீர் வேதம் கொடுக்கப்பட்ட மக்களிடம் செல்கிறீர். எனவே, நீர் அவர்களுக்கு விடுக்கும் முதல் அழைப்பு (ஏக) இறைவழிபாடாக இருக்கட்டும்! அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) அறிந்துகொண்டால், ஒவ்வொரு நாளும் இரவிலும் பகலிலுமாக ஐந்து வேளைத் தொழுகைகளை அவர்கள்மீது அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! தொழுகையை அவர்கள் நிறைவேற்றி னால், அவர்கள்மீது அல்லாஹ் ஸகாத் தைக் கடமையாக்கியுள்ளான்; அது அவர் க(ளில் செல்வர்க)ளின் செல்வங்களிலி ருந்து வாங்கப்பட்டு அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர்களுக்குத் தெரிவிப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிட மிருந்து ஸகாத் பெறுவீராக! (ஸகாத் வசூலிக்கும்போது) மக்களின் செல்வங் களில் உயர்தரமானவற்றைத் தவிர்ப் பீராக!” என்று கூறி அனுப்பினார்கள். அத்தியாயம் :

61

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து ‘வஸ்க்’குகளைவிடக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தில் ஸகாத் இல்லை; ஐந்து ‘ஊக்கியா’க்களைவிடக் குறைவாக உள்ள வெள்ளியில் ஸகாத் இல்லை; ஐந்து ஒட்டகங்களைவிடக் குறைவானவற்றிலும் ஸகாத் இல்லை.” இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

62

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்க(ள் கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது அவர்க)ளி டம் நான் போய்ச்சேர்ந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எனது உயிர் எவன் கையி லுள்ளதோ’ அல்லது ‘எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ’ அவன் மீதாணையாக -அல்லது அவர்கள் சத்தியம் செய்தபடி- ஒருவருக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றுக்கான (ஸகாத் எனும்) கடமையை அவர் நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரியவையாகவும் கொழுத்தவையாகவும் கொண்டுவரப்படாமல் இருக்காது. அவை அவரை (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவரைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவர்மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்வரை நீடிக்கும்.’ இதே ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :

63

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனா அன்சாரிகளிலேயே அபூ தல்ஹா (ரலி) அவர்கள் அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவருடைய செல்வங்களில் ‘பைருஹா’ என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ பள்ளிவாசலு)க்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரைக் குடிப்பது வழக்கம். இந்நிலையில், “நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ், ‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்’ என்று கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது, ‘பைருஹா’ எனும் தோட்டமேயாகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மம் ஆகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன். எனவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” எனக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நல்லது! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம் தானே! நீர் கூறியதை நான் செவியுற்றேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு (தானமாக) வழங்கு வதையே நான் (உசிதமாகக்) கருதுகின் றேன்” எனக் கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்” எனக் கூறிவிட்டு, அத்தோட் டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையின் சகோதரர் பிள்ளை களுக்கும் பங்கிட்டுவிட்டார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், (இலாபம் தரும் -‘ராபிஹ்’ என்பதற்குப் பதிலாக) ‘நன்மை கிடைத்துவிட்ட’ (ராயிஹ்) என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

64

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளிலோ நோன்புப் பெருநாளிலோ தொழும் திடலுக்கு (முஸல்லா) சென்று தொழுதுவிட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். “மக்களே! தர்மம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்” என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?” எனப் பெண்கள் கேட்டதும், “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; பெண் குலமே! உறுதிவாய்ந்த அறிவுடைய ஆண்மகனின் அறிவைக்கூட மழுங்கடிப்பவர்களாக, அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ள உங்களைப் போன்று வேறு யாரையும் நான் பார்த்ததில்லை” என்றார்கள். பிறகு திரும்பி தமது இல்லத்திற்கு வந்தார்கள். அங்கு இப்னு மஸ்ஊதின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினார். “அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார்” என்று கூறப்பட்டது. “எந்த ஸைனப்?” என நபி (ஸல்) அவர்கள் வினவ, “இப்னு மஸ்ஊதின் மனைவி ஸைனப்” என்று கூறப்பட்டது. “அவருக்கு அனுமதி வழங்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப் பட்டது. அவர் (வந்ததும்), “அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் (எனக்குச் சொந்தமான) ஒரு நகை இருக்கிறது. அதைத் தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்ஊத், தாமும் தம் குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்ய?)” என்று கேட்டார். “இப்னு மஸ்ஊத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும் உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

65

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் தம் குதிரை களுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

66

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம், தம் அடிமை களுக்காகவும் குதிரைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

67

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந் தோம். அப்போது அவர்கள், “எனக்குப் பின் உங்களுக்கிடையே உலக வளங் களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்துவிடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள். ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது அந்த மனிதரிடம், “உமது நிலைமை என்ன? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால், நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாம லிருக்கிறார்களே!” எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்து விட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவதைப் போன்று கேட்டார்கள். பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காதுதான்; வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை, வயிறு புடைக்கத் தின்னவைத்துக்) கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன; பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை; ஏனெனில்) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக்கொண்டு அசைபோடுகின்றது) சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக்கொண்டிருக்கும்வரை, அது அவருக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக்கொள்கி றாரோ - அவர் உண்டும் வயிறு நிரம்பாத வனைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :

68

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி (ஸல்) அவாகளைப் பார்த்தேன். அவர்கள், “பெண்களே! உங்களின் ஆபரணங்களிலி ருந்தேனும் தர்மம் செய்யுங்கள்” எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் வளர்ப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே, என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது தர்மமாகுமா என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீயே கேள்” எனக் கூறிவிட்டார். எனவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்சாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) அவர்கள் வந்தார். அவரிடம் நாங்கள், என் கணவருக்கும் எனது வளர்ப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரும் யார்?” எனக் கேட்டதற்கு அவர் ‘ஸைனப்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் “எந்த ஸைனப்?” எனக் கேட்டதும் பிலால் (ரலி) அவர்கள், ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆம்! அவருக்கு இரு நன்மை கள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

69

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (என் முதல் கணவரான) அபூசலமாவின் குழந்தைகளுக்குச் செலவழிப்பதற்காக எனக்கு நன்மையுண்டா? அவர்களும் என் குழந்தைகளே!” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ அவர்களுக்காகச் செலவு செய்! அவர்களுக்காக நீ செலவு செய்ததற்கான நன்மை உனக்கு உண்டு” எனக் கூறினார்கள். அத்தியாயம் :

70

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிக்குமாறு (உமர் (ரலி) அவர்களுக்குக்) கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் பின் அல்வலீத், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் (ஸகாத் தர) மறுத்து விட்டதாகக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து, அல்லாஹ்வும் அவன் தூதரும் அவரைச் செல்வராக்கிய பிறகே அவர் (ஸகாத் தர) மறுத்துள்ளார். காலிதைப் பொறுத்த வரை, நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநீதி இழைக்கின்றீர்கள். அவரோ தம் கவசங்களையும் போர்க் கருவிகளையும் அல்லாஹ்வின் பாதையில் (அறக்கொடையாக) வழங்க முடிவு செய்திருந்தார். அல்லாஹ்வின் தூதரு டைய பெரிய தந்தையான அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் அவர்கள் செலுத்த வேண்டிய தர்மம், அவர் (சார்பாக நாம்) செலுத்த வேண்டியதாகும்; அதைப் போன்ற இன்னொரு மடங்கும்தான்” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அது அவர்மீது உள்ளது; அதைப் போன்ற இன்னொரு மடங்கும்” என இடம்பெற்றுள்ளது. மற்றோர் அறிவிப்பில், ‘அதைப் போன்றதுடன்’ என இடம்பெற்றுள்ளது.17 அத்தியாயம் :

71

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உணவும் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள்; நபி (ஸல்) அவர்கள் அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது தீர்ந்துபோயிற்று. அப்போது “என்னிடம் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் ஒருபோதும் சேமித்துவைக்கப் போவதில்லை. ஆயினும், யார் சுய மரியாதையோடு நடத்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச்செய்வான்; யார் பிறரிடம் தேவை யற்றவராக இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவுடையவராக ஆக்கு கிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறாரோ அவரை அல்லாஹ் பொறுமையாளராக ஆக்குவான்; மேலும், பொறுமையைவிடச் சிறந்த, விசாலமான தோர் அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படவில்லை” என்றார்கள். அத்தியாயம் :

72

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீதாணையாக! உங்களில் ஒருவர் தமது கயிற்றை எடுத்துக்கொண்டு (போய்) விறகு வெட்டி, அதைத் தமது முதுகில் சும(ந்து விற்றுப் பிழை)ப்பதானது, ஒருவரிடம் சென்று யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவர் யாசிப்பவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

73

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்(றுப் பிழைப்)பதானது, மக்களிடம் யாசகம் கேட்பதைவிடச் சிறந்ததாகும். இதன் மூலம், அவருக்கு இழிவு ஏற்படாமல் அல்லாஹ் தடுத்து விடுவான். மக்கள் அவருக்குக் கொடுக்க வும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம். இதை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

74

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன்; வழங்கி னார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கி விட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையான தும் ஆகும். யார் இதைப் பேராசையின்றி எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் (பரகத்) வழங்கப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படாது. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவர் ஆவார். மேல் கை, கீழ் கையைவிடச் சிறந்தது” என்று கூறி னார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப்பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்டு (அவரது செல்வத்தை)க் குறைக்கமாட்டேன்” எனக் கூறினேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) நன்கொடை பெற்றுக்கொள்ளுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஹகீமுக்குக் கொடுப்பதற்காக அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்துவிட்டார். அப்போது உமர் (ரலி) அவர்கள், “முஸ்லிம் சமுதாயமே! இந்தப் பொது நிதியிலிருந்து (ஃபைஉ) தமது உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கி றேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!” எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப்பின் வேறு யாரிடமும் தாம் இறக்கும்வரை எதையும் கேட்கவே யில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

75

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான், “இதை என்னைவிட அதிகத் தேவையுடையவருக்குக் கொடுங்களேன்” என்பேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதை வாங்கிக்கொள்ளுங்கள்; நீங்கள் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு உங்களுக்கு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏதும் கிடைக்கவில்லை என்றால், நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்” என்றார்கள். அத்தியாயம் :

76

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களிடம் யாசிப்பதையே வழக்க மாகக் கொண்டுள்ள மனிதன், தனது முகத்தில் சதைத் துண்டு ஏதும் இல்லாத வனாகவே மறுமை நாளன்று வருவான். மேலும் கூறினார்கள்: வியர்வை வழிந்து மனிதனின் பாதிக் காதை அடை யும் அளவுக்கு மறுமை நாளன்று சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும். இந்நிலையில் மக்கள் ஆதம் (அலை) அவர்களிடமும் பிறகு மூசா (அலை) அவர்களிடமும் பிறகு முஹம்மத் (ஸல்) அவர்களிடமும் வந்து உதவி தேடு வார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவ்வாறு படைப்பினங்களுக்கிடையே தீர்ப்பு கூறப்பட்டு முடிந்ததும், நடந்து சென்று (சொர்க்க)வாசலின் கதவைப் பிடிப்பார்கள். அந்நாளில் அல்லாஹ், நபி (ஸல்) அவர்களைப் புகழுக்குரிய இடத் திற்கு (மகாமு மஹ்மூத்) அனுப்புவான். அப்போது அங்கு குழுமியிருக்கும் அனைவரும் நபி (ஸல்) அவர்களைப் பாராட்டுவார்கள்” என்று கூடுதலாகக் காணப்படுகின்றது. அத்தியாயம் :

77

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக அலைப வன் ஏழையல்லன்; மாறாக, தன் வாழ்க் கைக்குப் போதிய செல்வம் இல்லாமலிருந் தும் பிறரிடம் கேட்க வெட்கப்படுகின்ற வனும் அல்லது (அப்படிக் கேட்டாலும்) வற்புறுத்திக் கேட்காதவனுமே ஏழையாவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

78

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் (வர்ராத் (ரஹ்) அவர்கள்) கூறியதாவது: “நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள்” என முஆவியா (ரலி) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல் களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப் பட்டது; அவர் சொன்னார் (என ஆதார மின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக் குவது, அதிகமாக (பிறரிடம்) யாசிப்பது ஆகியவையே அவை” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் எனப் பதில் எழுதினார்கள்.18 அத்தியாயம் :

79

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நான் அமர்ந்திருந்தபோது, (தர்மப் பொருட்களை) அவர்கள் ஒரு குழுவின ருக்குக் கொடுத்தார்கள். அவர்களில் ஒருவருக்குக் கொடுக்காமல் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட் டார்கள். அவர் எனக்கு மிகவும் பிடித்த வராவார். அப்போது நான் எழுந்து சென்று, “அல்லாஹ்வின் தூதரே! (ஏன் அவரை விட்டு விட்டீர்கள்?) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் இறை நம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருது கிறேன்” என்று இரகசியமாகக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவரை முஸ்லிம் (வெளித்தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர் என்று சொல்வீராக)” என்றார்கள். சிறிது நேரம் மௌனமாக இருந்தேன். தொடர்ந்து, நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, “அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி?) அல்லாஹ்வின் மீதாணை யாக! நிச்சயமாக நான் அவர் ஓர் இறை நம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன்” என்றேன். “அவரை முஸ்லிம் (என்று சொல்வீராக!)” என்று நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். சிறிது நேரம் நான் மௌனமாக இருந்தேன். அவரைப் பற்றி நான் அறிந் திருந்த விஷயம் என்னை மிகைத்து விடவே, அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதர் மீது உங்களுக்கு என்ன (அதி ருப்தி?) அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவர் ஓர் இறை நம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன் என்றேன். “அவரை முஸ்லிம் (என்று சொல்வீராக”) என்றார்கள். பிறகு “(சஅதே!) நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், மற்றொருவர் அவரைவிட என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்கு) காரணம், (ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையால் அவர் குற்றம் இழைத்து அதனால்) அவர் நரகத்தில் முகம் குப்புறத் தள்ளப்படுவரோ என்ற அச்சம்தான்” என்றார்கள்.19 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது: (மூன்று முறை கேட்டு பதிலுரைத்தபின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் (ரலி) அவர்களது தோளுக்கும் கழுத்திற்கும் மத்தியில் அடித்து, “சஅதே, இங்கே வா!” என அழைத்து “நிச்சயமாக நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன் எனில்...” என்று மேற்கண்ட ஹதீஸைக் கூறி னார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (‘முகம் குப்புறத் தள்ளப்படல்’ என்ப தைக் குறிக்க மூலத்தில் ‘யுகப்பு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குர்ஆனில் 26:94 ஆவது வசனத்தில்) “அவர்கள் அதில் தள்ளப்படுவார்கள்” என்பதைக் குறிக்க ‘குப்கிபூ’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. (67:22ஆவது வசனத்தில்) ‘முகம் குப்புற விழுந்து கிடப்பவன்’ என்பதைக் குறிக்க ‘முகிப்பு’ எனும் சொல் ஆளப்படு கிறது. ஒருவர் தாமாக -யாரும் தள்ளி விடாமல்- குப்புற விழுந்தால் (அதாவது தன் வினையாக இருந்தால்), ‘அகப்ப’ என்பர். பிறர் தள்ளிவிட்டால் (பிறவினை யாக இருந்தால்), ‘கப்ப’ என்பர். அவனை அல்லாஹ் முகங்குப்புற தள்ளினான் (கப்பஹுல்லாஹ்); நான் முகம் குப்புற தள்ளினேன் (கபப்(த்)துஹு) என்பதைப் போல. அத்தியாயம் :

80

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்கமாட்டான்; அவனது நிலையை அறிந்து அவனுக்குத் தர்மமும் வழங்கப்படுவதில்லை. தானும் வலியச் சென்று மக்களிடம் கேட்கமாட்டான். (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

81

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் காலையில் கயிற்றை எடுத்துக்கொண்டு மலைக்குச் சென்று (மலையேறி), விறகு வெட்டி விற்று, தாமும் உண்டு பிறருக்கும் தர்மம் செய்வதானது, மக்களிடத்தில் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இதற்கு முந்தைய 1948 ஆவது ஹதீஸின் அறிவிப்பாளர்களில் நான்காமவரான) ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள், (மூன்றாமவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களை விட வயதில் மூத்தவர் ஆவார். அவர் (ஸாலிஹ்) இப்னு உமர் (ரலி) அவர்களைச் சந்தித்துள்ளார். அத்தியாயம் :

82

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குச் சென்றோம். அப்பயணத் தில் நபியவர்கள் ‘வாதில் குரா’ எனும் இடத்தை அடைந்தபோது, ஒரு பெண் தன் தோட்டத்தில் இருந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “(இத்தோட்டத்தில்) எவ்வளவு பழங்கள் தேறும், கணித்துக் கூறுங்கள்” என்றார்கள். (தோழர்கள் மதிப்பிட்டார்கள்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்து ‘வஸ்க்’ அளவு (தேறும்) எனக் கணித்தார்கள். பின்பு அப்பெண்ணிடம் “இதில் கிடைப்பதைக் கணக்கிட்டுவை” எனக் கூறினார்கள். நாங்கள் தபூக்கை அடைந்தபோது “இன்றிரவு கடும் காற்று வீசும்; எனவே, யாரும் எழுந்திருக்க வேண்டாம். ஒட்டகம் வைத்திருப்பவர் அதை நன்கு கட்டிவைக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டார்கள். நாங்களும் ஒட்டகங்களைக் கட்டிப்போட்டோம். கடும் காற்று வீசத் தொடங்கிற்று. (நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறியவராக) ஒரு மனிதர் எழுந்து வந்தார். உடனே காற்று அவரை ‘தய்யி’ என்ற மலையில் கொண்டுபோய் போட்டது. (வழியில்,) ‘அய்லா’ என்ற ஊரின் மன்னர் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை அன்பளிப்பாகக் கொடுத்த(னுப்பின)ôர். நபியவர்கள் அவருக்கு சால்வையொன் றைக் கொடுத்த(னுப்பின)ôர்கள். மேலும், (காப்புவரி கட்டுவதாக அரசர் எழுதி யிருந்த கடிதத்திற்கு) அக்கடற்கரைவாசி களைக் கொண்டே (பதில்) எழுதினார்கள். (போரிலிருந்து) திரும்பி, ‘வாதில் குராவை’ அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணிடம், “உனது தோட்டத்தில் எவ்வளவு தேறியது?” எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணித்த பத்து ‘வஸ்க்’தான் எனக் கூறினார். பின்பு நபி (ஸல்) அவர்கள், “நான் விரைவாக மதீனா செல்ல வேண்டும். எனவே, உங்களில் யாரேனும் என்னோடு விரைவாக மதீனா வர நாடினால் உடனே புறப்படுங்கள்” என்றார்கள். மதீனா நெருங்கியபோது, “இது ‘தாபா’ (தூய நகரம்)” என்றார்கள். பின்பு உஹுத் மலையைப் பார்த்தபோது, “இது (அழகிய) குட்டி மலை; இது நம்மை நேசிக்கிறது; நாம் அதை நேசிக்கிறோம்” என்று கூறிவிட்டு, “அன்சாரிகளின் சிறந்த கிளைக் குடும்பங்களை நான் அறிவிக்கட்டுமா?” எனக் கேட்க, தோழர்களும் ‘ஆம்’ என்றனர். நபி (ஸல்) அவர்கள், “பனுந் நஜ்ஜார் குடும்பம்; பின்பு பனூ அப்தில் அஷ்ஹல், பிறகு பனூ சாஇதா அல்லது பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பம்; இன்னும் அன்சாரிகளின் ஒவ்வொரு கிளைக் குடும்பங்களிலும் நன்மை உண்டு” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், பனுல் ஹாரிஸ் குடும்பத்தார், அடுத்து பனு சாஇதா குடும்பத்தார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் காணப்படுகிறது. இதே ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள் ளது. அதில், “உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; அதை நாம் நேசிக்கிறோம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இங்கு மூலத்தில் ‘தோட்டம்’ என்பதைக் குறிக்க ‘ஹதீகா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) சுற்றுச் சுவர் உள்ள தோட்டத்திற்கே ‘ஹதீகா’ என்பர். சுற்றுச் சுவர் இல்லாத தோட்டத் திற்கு ‘ஹதீகா’ எனப்படுவதில்லை. அத்தியாயம் :

83

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மழையாலும் ஊற்றுகளாலும் விளைந்தவை, அல்லது நிலத்தடி நீரை உறிஞ்சி முளைத்தவை ஆகியவற்றில் பத்து சதவீதம் ஸகாத் உண்டு. ஒட்டகம் (போன்ற வற்றின்) இறவை மூலம் விளைவிக்கப்பட்டவற்றில் ஐந்து சதவீதம் ஸகாத் உண்டு. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸ், விளைபொருட்களில் வழங்கப்பட வேண்டிய ஸகாத்தின் அளவை மட்டும் கூறிவிட்டு, எந்த அளவுள்ள விளைபொருட்களுக்கு ஸகாத் வழங்கப்பட வேண்டும் என்பதை விவரிக்கவில்லை. எந்த அளவுள்ள விளை பொருட்களில் ஸகாத் கடமை யாகும் என்பதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் அடுத்த ஹதீஸ் விவரிக்கின்றது. (அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக் கும்) கூடுதல் தகவல் ஏற்கப்படும். நம்பக மானவர்கள் அறிவிக்கும் விளக்கம் பூடக மான அறிவிப்புக்கு ஒரு தீர்வாக அமையும். எடுத்துக்காட்டாக, “நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை” என்று ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால், (சம்பவ இடத்தில் இருந்த) பிலால் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்கள்” என்று அறிவிக்கிறார்கள். எனவே, பிலால் (ரலி) அவர்களின் சொல்லே எடுத்துக்கொள்ளப்படும். ஃபள்ல் (ரலி) அவர்களின் சொல் கைவிடப்படும். அத்தியாயம் :

84

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (விளைபொருட்களில்) ஐந்து ‘வஸ்க்’குகளைவிடக் குறைவானதில் ஸகாத் கிடையாது. ஐந்து ஒட்டகங்களைவிடக் குறைவாக உள்ளதில் ஸகாத் கிடையாது. ஐந்து ‘ஊக்கியா’க்களைவிடக் குறைவாக உள்ள வெள்ளிக்கும் ஸகாத் கிடையாது.20 இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: ஐந்து ‘வஸ்க்’குகளைவிடக் குறைந்ததற்கு ஸகாத் இல்லை எனும் இந்த ஹதீஸ், முந்தைய ஹதீஸிற்கு விளக்கமாக அமைந்துள்ளது. முந்தைய ஹதீஸில் இந்த விளக்கம் இல்லை. பொதுவாக, நம்பக மானவர்கள் கூறும் கூடுதல் தகவல், அல்லது விளக்கம் நபிமொழிக் கலையில் ஏற்கப்படும். அத்தியாயம் :

85

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பேரீச்ச மரத்திலிருந்து கனிகளைப் பறிக்கும்போதே, அதன் (ஸகாத்) பழங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்படும். ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டுவருவார்கள். இறுதியில் அவை பேரீச்சம் பழங்களின் குவியலாக நபியவர்களிடம் மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகிய இருவரும் அக்குவியலுக்கருகே விளையாடுவார்கள். (ஒரு நாள்) அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தமது வாயில் போட்டார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே அதை அவரது வாயிலிருந்து வெளியே எடுத்துவிட்டு, “முஹம்மதின் குடும்பத்தார் தர்மப் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” எனக் கேட்டார்கள். அத்தியாயம் :

86

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) பழங்களை விற்பதைத் தடுத்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘பலன் உறுதிப்படுவது’ என்றால் என்ன என்று கேட்கப்பட்டால், (அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதாகும் என்று பதிலளிப்பார்கள். அத்தியாயம் :

87

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் (மரத்திலுள்ள) கனிகளை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம் :

88

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மரத்திலுள்ள) பழங்கள் பக்குவம் அடையாத வரை -அதாவது சிவக்காத வரை- அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அத்தியாயம் :

89

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஒரு குதிரை யைத் தர்மம் செய்தார்கள். பின்பு அது விற்கப்படுவதைக் கண்டு, அதைத் தாமே விலைக்கு வாங்கிட நினைத்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டார்கள். அப்போது “நீர் தர்மம் செய்ததைத் திரும்பப் பெற வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால்தான், இப்னு உமர் (ரலி) அவர்கள் தாம் தர்மம் செய்த பொருளை விலைக்கு வாங்கிவிட்டிருந்தால் அதை மீண்டும் தர்மம் செய்யாமல் இருக்க மாட்டார்கள் என்று சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

90

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்காக நான் ஒருவருக்குக் குதிரை யொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால், அவர் அதை (சரியாகப் பராமரிக் காமல்) வீணாக்கிவிட்டார். எனவே, நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். அதை அவர் மலிவான விலைக்கே விற்று விடுவார் என்றும் நான் எண்ணினேன். எனவே, (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அதை விலைக்கு வாங்காதீர்! உமது தர்மத்தை நீர் திரும்பப் பெற்றுக்கொள்ளாதீர்! அதை அவர் உமக்கு ஒரு வெள்ளிக் காசுக்குக் கொடுத்தாலும் சரியே. ஏனெனில், தர்மத்தைத் திரும்பப் பெறுபவன், தான் எடுத்த வாந்தியைத் தானே உண்பவனைப் போன்றவன் ஆவான்” என்றார்கள். அத்தியாயம் :

91

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் (சிறுவராக இருந்தபோது), தர்மமாக வந்த பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “சீ; சீ” எனக் கூறித் துப்பச் செய்துவிட்டு, “நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?” என்றார்கள். அத்தியாயம் :

92

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களுடைய ஓர் அடிமைப் பெண்ணுக்குத் தர்மமாக வழங் கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது “இதன் தோலை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். “இது செத்ததாயிற்றே!” எனத் தோழர்கள் கூறியதும், “இதை உண்பது தான் தடுக்கப்பட்டுள்ளது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

93

நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பரீரா எனும் (அடிமைப்) பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினேன். ஆனால், அப்பெண்ணின் உரிமையாளர்கள், (பரீராவை நாங்கள் உங்களுக்கு விற்றுவிட்டாலும்) அவரின் ‘வாரிசுரிமை’ எங்களுக்கு வேண்டும் என்று நிபந்தனையிட விரும்பினார்கள். நான் இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ பரீராவை விலைக்கு வாங்கி (விடுதலை செய்து)விடு; வாரிசுரிமை விடுதலை செய்பவருக்குத்தான்” என்றார்கள்.21 பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது நான், “இது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப் பட்ட பொருள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது பரீராவுக்குத் தர்ம மாகும்; நமக்கு அன்பளிப்பாகும்” என் றார்கள். அத்தியாயம் :

94

உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று “(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?” எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீங்கள் நுசைபாவுக்கு (உம்மு அத்தியாவுக்கு) தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பி வைத் துள்ளார். அதைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியெனில், அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது” என்றார்கள். அத்தியாயம் :

95

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள், “இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால், நமக்கு அன்பளிப்பாகும்“ என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

96

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது, அவரிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: நீர் வேதக்கார மக்களிடம் செல்கிறீர். அவர்களிடம் நீர் போய்ச்சேர்ந்ததும், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்றும், “முஹம்மத் அல்லாஹ் வின் தூதர் ஆவார்கள்” என்றும் உறுதி மொழியும்படி அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால், ‘அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுகைகளை அவர்கள்மீது கடமையாக்கியுள்ளான்’ என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற் கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டு விட்டால் ‘நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான்; அது அவர்களில் செல்வர்களிடமிருந்து பெறப்பட்டு, அவர்களிலுள்ள ஏழை களுக்கு விநியோகிக்கப்படவேண்டும். என அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால், அவர்களின் செல்வங்களில் உயர்தரமானவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்த னைக்குப் பயந்துகொள்ளும்! ஏனெனில், அவருக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை. அத்தியாயம் :

97

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் யாரேனும் ஒரு கூட்டத்தார் தமது ஸகாத் பொருட் களைக் கொண்டுவந்தால், “இறைவா! இன்னாரின் குடும்பத்தாருக்கு நீ அருள் புரிவாயாக!” என்று பிரார்த்திப்பவராக நபியவர்கள் இருந்தார்கள். என் தந்தை (அபூஅவ்ஃபா) தமது ஸகாத்தைக் கொண்டுவந்தார். அப்போது “இறைவா! அபூஅவ்ஃபாவின் குடும்பத்தார்க்கு அருள் புரிவாயாக” என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :

98

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் ஒருவர் தம் சமூகத் தைச் சேர்ந்த சிலரிடம் ஆயிரம் பொற் காசுகள் (தீனார்) கடன் கேட்டார். (அதற்கு ஒருவர் இசைந்து) அவருக்குப் பணத்தைக் கொடுத்தார். கடன் வாங்கியவர் (பின்னர் கடனைச் செலுத்துவதற்காக) கடல் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், கடலில் செல்ல எந்த வாகனமும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, ஒரு மரக்கட்டையை எடுத்து அதில் துளையிட்டு ஆயிரம் பொற்காசுகளையும் அதில் வைத்து அடைத்து கடலில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டார். ஒரு நாள் அவருக்குக் கடன் கொடுத்த மனிதர் புறப்பட்டு (அவ்வழியே) வந்த போது மரக்கட்டை ஒன்று கிடப்பதைக் கண்டு, அதைத் தம் வீட்டாருக்கு விறகுக்காக எடுத்துச்சென்றார். அதை(க் கோடரியால்) பிளந்தபோது தமது பொருளைப் பெற்றுக்கொண்டார்.23 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

99

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாயில்லாப் பிராணி(களால் ஏற்படும் இழப்பு)களுக்கு இழப்பீடு கிடையாது. கிணற்று (விபத்து)க்கும் இழப்பீடு கிடையாது. சுரங்க (விப)த்துக்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்) உண்டு.25 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

100

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு லுத்பிய்யா என்றழைக்கப்படும் ‘அஸ்த்’ கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை, பனூ சுலைம் எனும் கோத்திரத்தாரிடம் ஸகாத் வசூலிப்பதற்காக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்து) வந்ததும் அவரிடத்தில் கணக்குக் கேட்டார்கள். அத்தியாயம் :

101

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘உரைனா’ குலத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது, மதீனாவின் பருவநிலை ஒத்துக்கொள்ளாமல் நோயுற்றனர். எனவே, ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகங்கள் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் சிறுநீரையும் குடிப்பதற்கு அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால், அவர்கள் (அங்கு சென்று அவ்வாறே குடித்து குணமடைந்தபிறகு) ஒட்டகம் மேய்ப்பவரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்று விட்டனர். செய்தியறிந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்து வர ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும், (பல கொடுஞ்செயல்கள் புரிந்த) அவர்களின் கைகளையும் கால் களையும் வெட்டினார்கள்; கண்(இமை) களின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர் களைக் கருங்கற்கள் நிறைந்த ‘ஹர்ரா’ எனுமிடத்தில் (பற்களால்) கற்களை (பற்றி)ப் பிடித்துக்கொண்டிருக்கும்படி விட்டு விட்டார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

102

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று ஊட்டுவதற்காக ஒரு நாள் காலை அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா எனும் குழந்தையை அவர்களிடம் கொண்டுசென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூடிடும் கருவியைக் கொண்டு ஸகாத் ஒட்டகங்களுக்கு, தம் கையால் அடையாளமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன். அத்தியாயம் :

103

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்களில் அடிமை, சுதந்திர மானவர், ஆண், பெண், சிறியவர், பெரிய வர் ஆகிய அனைவருக்காகவும் ஒரு ‘ஸாஉ’ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்பே கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.27 அத்தியாயம் :

104

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்களில் சுதந்திரமானவர், அடிமை, ஆண், பெண் ஆகிய அனை வருக்காகவும் ஒரு ‘ஸாஉ’ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ அளவு தீட்டாத (வாற்)கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அத்தியாயம் :

105

அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (நோன்புப் பெருநாள்) தர்ம மாக ஒரு ‘ஸாஉ’ அளவு தீட்டாத (வாற்) கோதுமையை உணவுக்காகக் கொடுத்து வந்தோம். அத்தியாயம் :

106

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாஉ அளவு ஏதேனும் உண வையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு பாலாடைக் கட்டியையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு உலர்ந்த திராட்சையையோ வழங்கி வந்தோம். அத்தியாயம் :

107

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளை யிட்டார்கள். பிறகு மக்கள் ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பகரமாக அரை ஸாஉ அளவு தீட்டிய (மணிக்) கோதுமையை ஆக்கினார்கள்.28 அத்தியாயம் :

108

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையையோ, அல்லது ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுத்து வந்தோம். முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சி யில் ஷாம் (சிரியா) நாட்டு உயர் ரகக் கோதுமை (தாராளமாகக்) கிடைத்தபோது, இதில் (தீட்டிய உயர் ரகக் கோதுமையில்) ஒரு ‘முத்’து (தீட்டாத கோதுமையில்) இரண்டு ‘முத்’துகளுக்கு ஈடாகும் என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.29 அத்தியாயம் :

109

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன் னால் கொடுத்துவிடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :

110

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாஉ உணவுப் பொருளை (ஸதக்கத்துல் ஃபித்ர்) தர்மமாகக் கொடுத்துவந்தோம். அக்காலத்தில் தொலி நீக்கப்படாத கோதுமையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன. அத்தியாயம் :

111

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆண், பெண், அடிமை, சுதந்திரமான வர் ஆகிய அனைவர்மீதும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாஉ தீட்டாத (வாற்)கோதுமை யையோ பெருநாள் -அல்லது ரமளான்- தர்மமாக நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித் தார்கள். அரை ஸாஉ தீட்டிய (மணிக்)கோதுமை, ஒரு ஸாஉ தீட்டாத (வாற்)கோதுமைக்குச் சமம் என மக்கள் கருதினார்கள். நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழத்தையே கொடுத்துவந்தார்கள். மதீனா நகர மக்களுக்குப் பேரீச்சம் பழத் தட்டுப்பாடு வந்தபோது, தீட்டாத (வாற்)கோதுமையைக் கொடுத்தார்கள். (தம் குடும்பத்திலுள்ள) சிறியவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும், (அவருடைய பணியாளராக நானிருந்ததால்) என் குழந்தைகளுக்காகவும் கொடுத்துவந்தார்கள். இந்தத் தர்மத்தைப் பெற்றுக்கொள்பவருக்கெல்லாம் கொடுத்துவந்தார்கள். மேலும், பெரு நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் (இந்தத் தர்மத்தைக்) கொடுத்துவந்தார்கள். அத்தியாயம் :

112

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவர்மீதும் ஒரு ஸாஉ பேரீச்சம் பழமோ அல்லது ஒரு ஸாஉ தீட்டாத (வாற்)கோதுமையோ (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாக (கொடுப்பதை)க் கடமையாக்கினார்கள். அத்தியாயம் :