அனைத்து இஸ்லாம் நூலகம்

20 - மக்கா மதீனா பள்ளிவாசல்களில் தொழுகையின் சிறப்பு

1

நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கேற்ற வரான அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியேற்றுள்ளேன்.2 அத்தியாயம் :

2

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல் களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக் கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளப்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

3

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

4

5

அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘குபா’ பள்ளிவாசலுக்கு நடந்தும் ஊர்தியிலும் வருவார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் செய்வார்கள். அத்தியாயம் :

6

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘குபா’வுக்கு நடந்தும் ஊர்தியிலும் செல்வார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களின் அறி விப்பில், “அங்கே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்” என்றும் (இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகக்) கூடுதலாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :

7

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பர்)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.5 இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

8

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இல்லத்திற்கும் எனது சொற் பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ‘ஹவ்ளுல் கவ்ஸர்’ தடாகத் தின் மீது அமைந்துள்ளது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

9

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறிதயாவது: நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னை வியப்பில் ஆழ்த்தின; எனக்கு மகிழ்ச்சி அளித்தன. (அவை:) 1. ஒரு பெண், கணவனோ (மண முடிக்கத் தகாத) நெருங்கிய உறவினரோ உடன் இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்குப் பயணம் செய்யக் கூடாது. 2. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களிலும் நோன்பு நோற்கக் கூடாது. 3. சுப்ஹு தொழுததிலிருந்து சூரியன் உதிக்கும்வரையும், அஸ்ர் தொழுததிலிருந்து சூரியன் மறையும்வரையும் தொழக் கூடாது. 4. மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் மக்திஸ்), எனது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்றப் பள்ளிவாசல்களுக்கு (அதிக நன்மையை நாடிப்) புனிதப் பயணம் மேற்கொள்ளக் கூடாது. அத்தியாயம் :