10 - அதான்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தொழுகை நேரம் வந்துவிட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என முஸ்-ம்கள் கருதியபோது) மக்கள் (அக்னி ஆராதனையாளர்களைப் போன்று) நெருப்பு மூட்டலாம் என்றும், (கிறித்தவர்களைப் போன்று) மணியடித்துக் கூப்பிடலாம் என்றும் (ஆலோசனை) கூறினர். (இவையெல்லாம்) யூதர்கள், கிறித்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) எனச் சிலர் (மறுப்புக்) கூறினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு ‘பாங்கு’ (அதான்) எனும் தொழுகை அறிவிப்பிற்குரிய வாசகங்களை (கற்றுத்தந்து அவற்றை) இரு முறை கூறும்படியும் ‘இகாமத்’ (எனும் தொழுகைக்காக நிற்கும்போது சொல்லும்) வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும்படியும் உத்தரவிடப்பட்டது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்-ம்கள் (மக்காவி-ருந்து) மதீனாவுக்கு வந்தபோது ஓரிடத்தில் ஒன்றுகூடி, தொழுகைக்காக ஒரு நேரத்தை முடிவு செய்வதே வழக்கமாக இருந்தது; அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்(படும் முறை அறிமுகப்படுத்தப்)படவில்லை. எனவே, இது குறித்து ஒரு நாள் அவர்கள் (கலந்து) பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறித்த வர்களின் (ஆலயங்களில் அடிக்கப்படும்) மணியைப் போன்று ஒரு மணியை நிறுவுங்கள்” என்று கூறினர். வேறுசிலர், யூதர்களிடமுள்ள கொம்பைப் போன்று ஒரு கொம்பை ஏற்படுத்(தி அதில் ஊதி மக்களைத் தொழுகைக்காக அழைத்)திடுங் கள்” என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “தொழுகைக்காக அழைக்கின்ற ஒரு மனிதரை நீங்கள் அனுப்பக் கூடாதா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பிலால்! நீங்கள் எழுந்து தொழுகைக்காக அழையுங்கள்” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும் ‘இகாமத்’தின் வாசகங்களை -‘கத் காமத்திஸ் ஸலாத்’ (தொழுகை தொடங்கிவிட்டது) எனும் வாசகத்தைத் தவிர- ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.3 அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனாவில்) மக்களின் எண்ணிக்கை அதிகமானபோது அவர்கள் அறிந்திருக் கின்ற ஏதேனும் ஓர் (அறிவிப்பு) முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்துகொள்ள (அல்லது அறிவிப்புச் செய்திட) ஆலோசித்தனர். அப்போது, “நெருப்பு மூட்டலாம்; அல்லது மணி அடிக்கலாம்” என்று (பல்வேறு யோசனைகளைத்) தெரிவித்தனர். ஆனால், பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும், (‘கத் காமத்திஸ் ஸலாத்’ எனும் வாசகத்தை தவிர) இகாமத்தின் (இதர) வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லும்படி பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும், ‘இகாமத்’தின் வாசகங் களை ஒற்றையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், இஸ்மாயீல் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (கா-த் அல்ஹிதாஉ (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்த) இந்த ஹதீஸை நான் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அவர்கள், “கத் காமத்திஸ் ஸலாத்’ எனும் வாசகத்தை தவிர” என்று (கூடுதலாக) அறிவித்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக அறிவிப்புச் செய்யப் பட்டால், தொழுகை அறிவிப்பைக் கேட்காமலிருப்பதற்காக நாற்றவாயு வெளியேறிய வண்ணம் ஷைத்தான் (வெகு தூரத்திற்குப்) பின்வாங்கி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (!பள்ளிவாசலுக்கு) வருகிறான். பின்னர் ‘இகாமத்’ சொல்லப்பட்டால், பின்வாங்கி ஓடுகிறான். இகாமத் சொல்- முடித்ததும் (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து, (தொழுது கொண்டிருக்கும்) மனிதரின் உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். “இதை நினைத்துப்பார்; அதை நினைத்துப்பார்” என்று அவர் (அதற்குமுன்) நினைத்திராத விஷயங்களை (தொழுகையில் நினைத்துப்பார்க்கும்படி) கூறுகிறான். இறுதியில், அந்த மனிதருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதுகூடத் தெரியாமல் போய்விடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அபீஸஅஸஆ அல் அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “ஆட்டையும் பாலைவனத்தை யும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் ‘ஆட்டை மேய்த்துக்கொண்டோ’ அல்லது ‘பாலை வனத்திலோ’ இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகை அறிவிப்புச் செய்தால், உங்கள் குரலை உயர்த்தி அறிவியுங்கள். ஏனெனில், தொழுகை அறிவிப்புச் செய்பவரின் குரல் ஒ-க்கும் தொலைவுவரை ஜின்களும் மனிதர்களும் பிற பொருள்களும் அதைக் கேட்டு (தொழுகை) அ(றிவிப்புச் செய்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன” என்று கூறிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் சேர்ந்து ஒரு கூட்டத்தாரை நோக்கி போரிடப் புறப்பட்டால் வைகறை (சுப்ஹு) நேரம் வரும்வரை எங்களைப் போரில் ஈடுபடுத்தமாட்டார்கள். (சுப்ஹு நேரம் வரை) காத்திருப்பார்கள். (அப்பகுதியில்) தொழுகை அறிவிப்பைச் செவியுற்றால், அவர்களை விட்டுவிடுவார்கள். தொழுகை அறிவிப்பைச் செவியுறாவிட்டால் அவர்கள்மீது தாக்குதல் தொடுப்பார்கள். இந்நிலையில், நாங்கள் கைபரை நோக்கி (போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அதிகாலையின்போது தொழுகை அறிவிப்பைச் செவியுறாததால் (அவர்களை நோக்கி தமது வாகனத்தில்) பயணமானார்கள். நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில் அமர்ந்து) பயணம் செய்தேன். அப்போது எனது கால், (அருகில் சென்ற) நபி (ஸல்) அவர்களது கா-ல் உராயும். அப்போது கைபர்வாசி(களான யூதர்)கள் தம் மண் வெட்டிகளையும் தம் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக்கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், “முஹம்மதும், அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும் (அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (இதோ வருகின்றனர்)” என்று கூறினர். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்ததும், “அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்” என்று கூறினார்கள் அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழுகை அறிவிப்பைச் செவியுற்றால், அறிவிப்பாளர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஈசா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நாள் (தொழுகை அறிவிப்பைச் செவியுற்ற போது) ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’ என்பதுவரை அறிவிப்பாளர் கூறியதைப் போன்றே சொன்னதை நான் கேட்டேன். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் வந்துள்ளது. அத்தியாயம் :
யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்கள் சகோதரர்களில் ஒருவர் கூறினார்: தொழுகை அறிவிப்பாளர் ‘ஹய்ய அலஸ் ஸலா’ என்று கூறியபோது, முஆவியா (ரலி) அவர்கள் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது) என்று கூறினார்கள். மேலும், “இவ்வாறுதான் உங்கள் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்” என்றும் முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தொழுகை அறிவிப்பைக் கேட்(டு முடிக்)கும்போது, “அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸ லாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா (இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும் நிலையான தொழுகைக்கும் உரியவனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) உயர் பதவியையும் தனிச் சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உன்னத இடத்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)” என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.6 இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்புச் செய்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசை யி(ல் நிற்பதி)லும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின், (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால், நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷா தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின், அதற்கு (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து)விடுவார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மழை பெய்து) சேறும் சகதியும் நிறைந்திருந்த ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு உரையாற்றினார்கள். தொழுகை அறிவிப்பாளர், ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ (தொழுகைக்கு வாருங்கள்) என்று சொல்ல முனைந்தபோது, “உங்கள் இருப் பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (அஸ்ஸலாத் ஃபிர்ரிஹால்) என்று அறிவிக்குமாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை (வியப்புடன்) பார்த்தனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இவரைவிடச் சிறந்தவர் இவ்வாறு செய்துள்ளார்; ஜுமுஆ (தொழுகை) கட்டாயமானதாகும்” என்று கூறினார்கள்.7 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ரமளானில்) பிலால், (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும்வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று கூறினார்கள். இப்னு உம்மி மக்(த்)தூம் (ரலி) அவர்கள் கண் பார்வையற்றவராக இருந்தார்கள். அவரிடம் “சுப்ஹு நேரமாகிவிட்டது; சுப்ஹு நேரமாகிவிட்டது” என்று சொல்லப் படும்வரை அவர் (ஃபஜ்ருக்காக) பாங்கு சொல்லமாட்டார். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகை அறிவிப்பாளர் சுப்ஹு(த் தொழுகை)க்கான அறிவிப்புச் செய்து முடித்து, வைகறை நேரம் வந்துவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இகாமத்’ சொல்லப்படுவதற்கு முன்பாகச் சுருக்கமான முறையில் இரண்டு ரக்அத் கள் (சுன்னத்) தொழுவார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழு கையின் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடை யில் சுருக்கமான முறையில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(ரமளானில்) பிலால் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ் ருக்கு) பாங்கு சொல்லும்வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ரமளானில்) உங்களில் ஒருவர் சஹர் உணவு உண்பதி-ருந்து பிலா-ன் பாங்கு அவரைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், உங்களில் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பவர் திரும்புவதற் காகவும் உங்களில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்புவதற்காகவுமே பிலால் (பின்) இரவில் ‘அறிவிப்புச் செய்கிறார்’ அல்லது ‘அழைக்கிறார்’. (இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள், தம் விரல்களை மேல்நோக்கி உயர்த்திக்காட்டி, பிறகு கீழ் நோக்கித் தாழ்த்திவிட்டு, “இவ்வாறு (மேல் கீழாகச் செங்குத்தாய் தெரியும் வெளிச்சம்) ‘ஃபஜ்ர்’ அல்லது ‘சுப்ஹ்’ அல்ல” என்று கூறி னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஸுஹைர் (ரஹ்) அவர்கள், ‘இவ்வாறு’ என்பதற்கு விளக்கமளிக்கை யில், தம் சுட்டு விரல்களில் ஒன்றை மற்றொன்றின்மீது வைத்துப் பிறகு அவற்றை(ப் பிரித்து) வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் நீட்டி (‘பரவலாகத் தோன்றும் அதிகாலை வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்; செங்குத்தாய் தோன்றுவதன்று’ என்பது போன்று) சைகை செய்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ரமளானில்) பிலால் (பின்)இரவிலேயே பாங்கு சொல்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ்ருக்காக) தொழுகை அறிவிப்பு செய்யும்வரை நீங்கள் (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இது இரு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக வும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடை யில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என மூன்று முறை கூறிவிட்டு, “விரும்பிய வருக்கு (அதைத் தொழுதுகொள்ள உரிமை உண்டு)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்புச் செய்யத் தொடங்கி, நபி (ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வருவதற்கு முன்னர் நபித்தோழர்களில் (முக்கியமான) சிலர் பள்ளிவாச-ன் தூண்களை நோக்கி (அதைத் தடுப்பாக ஆக்கி ‘சுன்னத்’ தொழ) போட்டியிட்டுக் கொண்டு செல்வார்கள். அவர்கள் இவ்வாறே மஃக்ரிப் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக இடைவெளி) ஏதும் இல்லாத நிலையில் (இவ்வாறு தொழுதனர்). இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அவற்றில் சில அறிவிப்புகளில் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) அவ்விரண்டுக்கும் இடையில் சிறிதே (இடைவெளி) இருக்கும் நிலையில்” என்று கூறியுள்ளதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாவது தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்- முடித்ததும் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பாக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ரு டைய சுன்னத்) தொழுவார்கள். பின்னர் (இரண்டாவது தொழுகை அறிவிப்பான) ‘இகாமத்’ சொல்(- தொழுகை நடத்து)வதற்காகத் தம்மிடம் முஅத்தின் வரும்வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்திருப்பார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என (இரண்டு முறை) கூறிவிட்டு, மூன்றாவது முறை ‘விரும்பியவருக்கு’ என்றார்கள். அத்தியாயம் :
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் எங்கள் (பனூ லைஸ்) கூட்டத்தார் சிலருடன் (தபூக் போர் ஆயத்தம் நடந்துகொண்டிருக்கையில்) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நாங்கள் அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். -நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவ ராகவும் மென்மையானவராகவும் இருந் தார்கள்.- (பிறகு) எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் (திரும்பிச்) செல்ல ஆசைப்படு வதைக் கண்டபோது நபியவர்கள், “நீங்கள் (உங்கள் குடும்பத்தாரிடம்) திரும்பிச் சென்று அவர்களிடையே (தங்கி) இருங் கள்; அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்; (என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே) நீங்கள் தொழுங்கள்; தொழுகை நேரம் வந்ததும் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு) ‘பாங்கு’ சொல்ல முற்பட்டார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவர் பாங்கு சொல்ல முற்பட்டார். அப்போதும் அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். பிறகு (மூன்றாவது முறையாக) அவர் பாங்கு சொல்ல முற்பட்டபோதும் அவரிடம் “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். (எனவே, நாங்கள் வெப்பம் தணியும்வரை அந்த நாளின் லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தினோம்.) எந்த அளவுக்கென்றால் மணல்மேடு களு(டைய உயரத்து)க்குச் சமமாக அவற்றின் நிழல் படிந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகி றது” என்று சொன்னார்கள் அத்தியாயம் :
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பயணம் புறப்படவிருந்த இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பயணம் புறப்பட்டுச் செல்லும்போது (தொழுகை நேரம் வந்துவிட்டால்), தொழுகைக்காக ‘பாங்கு’ சொல்-ப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்!” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பனூ லைஸ் கூட்டத்தைச் சேர்ந்த) ஒத்த வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். - (பிறகு) நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுகிறோம் என எண்ணிய நபி (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டுவந்த (எங்கள் குடும்பத்)தவர் களைப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரி வித்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, அவர்களிடையே தங்கியிருங்கள். அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். (நான் கட்டளையிட்டதைச் செய்யுமாறு) அவர் களை ஏவுங்கள்- என்று கூறி, சில விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். ‘அவற்றை நான் மனனமிட்டுள்ளேன்’ அல்லது ‘அவற்றை நான் மனனமிட வில்லை’- என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால், உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்காவை அடுத்துள்ள) ‘ளஜ்னான்’ எனும் இடத்தில் குளிரான ஓர் இரவில் பாங்கு சொன்னார்கள். பிறகு “உங்கள் இருப் பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (‘ஸல்லூ ஃபீ ரிஹா-க்கும்’) என்று அறிவித்தார்கள். மேலும், பயணத்தின்போது குளிரான அல்லது மழை பொழியும் இரவில் தொழுகை அறிவிப்பாளர் பாங்கு சொல்லும்போது பாங்கின் இறுதியில், “உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (அலா! ஸல்லூ ஃபீ ரிஹா-க்கும்) என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்” எனவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் (மக்காவின் புறநகரில்) ‘அப்தஹ்’ எனுமிடத்தில் கண்டேன். (அங்கு இருந்தபோது தொழுகை நேரம் வந்தது). அப்போது பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தொழுகை (நேரம் வந்து விட்டது) பற்றித் தெரிவித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடியுடன் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ‘அப்தஹ்’ எனும் அந்த இடத்தில் (தடுப்பாக) நட்டு வைத்துவிட்டு, தொழுகைக்காக ‘இகாமத்’ சொன்னார்கள். அத்தியாயம் :
அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள், பாங்கு சொல்லும்போது (இரு திசைகளிலும் உள்ள மக்களுக்குக் கேட்பதற்காக) தமது வாயை இங்குமங்கும் (வலம் இடமாகத்) திருப்பிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.10 அத்தியாயம் :
அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது (வேகமாக வரும்) சிலரது காலடி ஓசையை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். தொழுது முடித்ததும், “உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சலசலப்பு எழுந்தது)?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு ஏற்பட்டது)” என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங் கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) நிறைவு செய்யுங்கள்” என்று கூறினார்கள்.11 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகைக்காக) ‘இகாமத்’ சொல்வதை நீங்கள் செவியுற்றால் தொழுகைக்கு(ச் சாதாரணமாக) நடந்தே செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். (அவசரப்பட்டு) ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப்போனதை (பின்னர்) நிறைவு செய்யுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டால், என்னை நீங்கள் பார்க்காத வரை எழுந்திருக்க வேண்டாம்.12 “இதை அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்” என ஹிஷாம் அத்துஸ்துவாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப் பட்டால், என்னை நீங்கள் பார்க்காத வரை எழ(வோ செல்லவோ) வேண்டாம்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டு, தொழுகை வரிசைகள் சீர் செய்யப் பட்டுவிட்டபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்தி-ருந்து) புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் தாம் தொழும் இடத்தில் (போய்) நின்றதும் (முதல்) ‘தக்பீர்’ சொல்வார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், (தாம் பெருந்துடக்கிற்காகக் கடமையான குளியலை நிறைவேற்றாதது நினைவுக்கு வரவே) “அப்படியே இருங்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பி (தமது இல்லத்திற்கு)ச் சென்றார்கள். ஆகவே, அவர்கள் நீராடிவிட்டுத் தலையில் நீர் சொட்ட எங்களிடம் வரும்வரை நாங்கள் (அவர்களை) எதிர்பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தோம்.13 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டது. மக்கள் தம் தொழுகை வரிசைகளை சீர் செய்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்து (தொழுவிப்பதற்காக) முன்னே நின்றார்கள். அப்போது அவர்கள் பெருந்துடக்குடன் இருந்தார்கள். (நினைவு வந்தவுடன்) “அப்படியே இருங்கள்” என்று (மக்களிடம்) கூறிவிட்டு, (தமது இல்லத்திற்குத்) திரும்பிச் சென்று நீராடினார்கள். பிறகு தலையி-ருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்க(த் திரும்பி) வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! சூரியன் மறையும் நேரம் நெருங்கும்வரை என்னால் (அஸ்ர் தொழுகையைத்) தொழ முடியா மற் போய்விட்டது” என்று கூறினார்கள். அ(வ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறிய)து, நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்திற்குப் பிறகேயாகும். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதைத் தொழ (முடிய)வில்லை” என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கி னார்கள். அப்போது நானும் அவர்களுடன் இருந்தேன். (அங்கு) அங்கத் தூய்மை (உளூ) செய்து சூரியன் மறைந்தபின் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதார்கள்.14 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள் இஷா) தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டது. (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் ஒரு பகுதியில் ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். (எவ்வளவு நேரம் அவர்கள் தொழுகையைத் தாமதப்படுத்தினார்களெனில்) மக்கள் உறங்கிவிடும்வரை அவர்கள் தொழுகைக்கு (வந்து) நிற்கவில்லை. அத்தியாயம் :
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களிடம், தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டபின் பேசிக்கொண்டிருப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) தெரிவித்தார்கள்: தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டபின் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களை (தொழுவிக்க விடாமல்) இடைமறித்(துப் பேசிக்கொண்டிருந்)தார். தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டுவிட்ட பின்னர் (இது நடந்தது). அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் விறகுக் கட்டைகளைக் கொண்டுவருமாறு ஆணை பிறப்பித்துவிட்டு, பின்னர் தொழுகை அறிவிப்புச் செய்யுமாறு பணித்துவிட்டு, பின்னர் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுவிக்குமாறு சொல்லிவிட்டு, பின்னர் (கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத) சில மனிதர்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்து விட வேண்டும் என்று எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரு கால் குளம்புகளோ கிடைக்கும் என்று தெரிந்தால்கூட அவர் இஷா தொழுகையில் கட்டாயம் கலந்துகொள்வார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாக (ஜமாஅத்தாக)த் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாக (ஜமாஅத்தாக)த் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் அல்லது கடைத் தெருவில் தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅத்தாக)த் தொழுவது இருபத்து ஐந்து மடங்கு (சிறப்பு) கூடுதலாக்கப்படுகிறது. அதற்குக் காரணம், ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அந்த அங்கத் தூய்மையைச் செம்மையாகச் செய்து, பின்னர் தொழுவதற்காகவே புறப்பட்டு பள்ளிவாசலை நோக்கிச் செல்வாரானால், அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்காகவும் அவருக்கு ஒரு பதவி உயர்த்தப்படுகிறது; பாவம் ஒன்று அவரை விட்டு அழிக்கப்படுகிறது. அவர் தொழுதால், வானவர்கள் அவருக்காக, அவர் தாம் தொழுத இடத் தில் இருக்கும்வரை (அருள் வேண்டி) பிரார்த்தித்துக்கொண்டேயிருக்கின்றனர்: “இறைவா! இவருக்கு அருள் புரிவாயாக! இறைவா! இவர்மீது கருணை காட்டுவாயாக” என்று கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் வரை தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுகிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தனியாகத் தொழு வதைவிட (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஃபஜ்ர் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் ஒன்றுசேர்கிறார்கள். இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் ‘அதிகாலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக்கூடியதாகும்’ (17:78) எனும் இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அ(வ்வாறு தனியாகத் தொழுவ)தை விட (கூட்டாகத் தொழுவது,) இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும் (என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்). அத்தியாயம் :
உம்முத் தர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபுத்தர்தா (ரலி) அவர்கள் என்னிடம் கோபமாக வந்தார்கள். அப்போது நான், “உங்களது கோபத்திற்குக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தார் (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுகிறார்கள் என்பதைத் தவிர, வேறு எதையுமே அவர்களிடம் (முன்புபோல்) என்னால் காண முடியவில்லை” என்று கூறினார்கள் அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), வெகு தொலைவி-ருந்து (பள்ளிவாசலை நோக்கி) நடந்து வருபவர் ஆவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்தி-ருந்து வருபவர் ஆவார். யார் இமாமுடன் (ஜமாஅத்தாகத்) தொழுவதற்காகக் காத்திருக்கிறாரோ அவர், (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கிவிடுபவரைவிட அதிக நற்பலன் அடைபவர் ஆவார். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகைக்கு அதன்) ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள (நன்மை) தனை மக்கள் அறிந்தால், அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷா தொழுகையிலும் சுப்ஹு தொழுகையிலும் உள்ள (நன்மை)தனை அவர்கள் அறிந்தால், அவற்றுக்காக (தரையில்) தவழ்ந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகை களைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலும் உள்ள (நன்மை)தனை அவர்கள் அறிவார் களானால், (தரையில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லுமாறு நான் கட்டளையிட்டுவிட்டுப் பின்னர் ஒருவரி டம் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்குமாறு பணித்துவிட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, தொழு கைக்கு இதுவரை புறப்பட்டுவராம-ருப்ப வரை (நோக்கிச் சென்று, அவரை) எரித்துவிட நான் எண்ணியதுண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பயணம் புறப்படவிருந்த இருவரிடம்) நபி (ஸல்) அவர்கள், “தொழுகை நேரம் வந்துவிட்டால் தொழுகை அறிவிப்புச் செய்யுங்கள்; இகாமத் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தாம் தொழும் இடத்தில் (கூட்டுத் தொழுகையை எதிர் பார்த்து) சிறுதுடக்கு ஏற்படாமல் காத்திருக் கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள். “இறைவா! இவருக்கு மன்னிப்பு வழங்கு வாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று (அவர்கள் கூறு கின்றனர்). தொழுகையானது, ஒருவரைத் தம் குடும்பத்தாரிடம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால், அவ்வாறு அவரைத் தொழுகை நிறுத்தியிருக்கும் வரை அவர் தொழுகையில் இருப்ப தாகவே கருதப்படுவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞர். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதய முடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக் காகவே பிரிந்த இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை (தவறு செய்ய) அழைத்த போதும், “நான் அல்லாஹ்வை அஞ்சுகி றேன்” என்று கூறியவர். 6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மோதிரம் எதையும் அணிந்திருந்தார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம்; நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷா தொழுகையைப் பாதி இரவுவரைத் தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்து (எங்களுடன்) தொழுதுவிட்டுப் பின்னர் எங்களை நோக்கி, “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள். இப்போதும் நான் நபியவர்கள் அணிந்திருந்த மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் பள்ளிவாசலுக்கு (வழிபாட்டுக் காக)ச் சென்றுவந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவரது மாளிகையை (அல்லது விருந்தை)த் தயார் செய்கிறான். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (சுப்ஹு) தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுது கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மக்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துவிட்டனர். அப்போது அந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹு (என்ன) நான்கு ரக் அத்களா? சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத் களா?” என்று (கடிந்தவாறு) கேட்டார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அஸ்வத் பின் யஸீத (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தபோது, தொழுகையை விடாமல் தொழுவது பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்து, தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்டது. அப்போது அவர்கள், “அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு, “அபூபக்ர் (ரலி) அவர்கள் வேகமாகத் துக்கப்படுகின்ற மனிதர்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுதுவிடுவார்கள்.) அவர்களால் மக்களுக்குத் தொழுவிக்க முடியாது” என்று சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் முன்பு சொன்னதைப் போன்றே மீண்டும் சொன்னார்கள். மக்களும் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னார்கள். மூன்றாவது முறை “(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் புறப்பட்டு வந்து (மக்களுக்குத்) தொழுவிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது உடல் நலம் சற்றுத் தேறியிருப்பதை (அப்போது) கண்டார்கள். உடனே இரண்டு மனிதர் களுக்கிடையே தொங்கியபடி புறப்பட்டு வந்தார்கள். நோயினால் (கால்களை ஊன்ற முடியாமல்) தம் கால்கள் (பூமியில்) இழுபட அவர்கள் புறப்பட்டு வந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. (நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வருவதை அறிந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்க முனைந்தார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் இடத்திலேயே இருங்கள்’ என்று (கையால்) சைகை செய்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு உள்ளே) கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அஃமஷ் (ரஹ்) அவர்கள் இதை அறிவித்துக்கொண்டிருந்தபோது அவர்களிடம், “(அப்போது) நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்த, அவர்களைப் பின்பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுதார்களா? அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றி மக்கள் தொழுதனரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அஃமஷ் (ரஹ்) அவர்கள் தமது தலையால் ‘ஆம்’ என (சைகையால்) பதிலளித்தார்கள். அஃமஷ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ஒரு பகுதியை அபூதாவூத் அத்தயா-சீ (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூமுஆவியா (முஹம்மத் பின் காஸிம் -ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இடப் பக்கத்தில் அமர்ந்(து தொழு)தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றவாறு தொழுதுகொண்டிருந்தார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகி வேதனை அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற் காகத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள்; அவர்களும் நபியவர்களுக்கு அனுமதியளித்தனர். நபி (ஸல்) அவர்கள் (என் வீட்டில் தங்கியிருக்கையில் ஒரு நாள்) தம் இரு கால்களும் பூமியில் இழுபட இரு மனிதர் களுக்கிடையே தொங்கியபடி (தொழுகைக் குப்) புறப்பட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறொரு மனிதருக்கும் இடையில்தான் (தொங்கியபடி) சென்றார்கள். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: இ(வ்வாறு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய)தை நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம், “ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட மனிதர் யாரென்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை (தெரியாது)” என்று பதிலளித்தேன். அவர்கள், “அந்த மனிதர் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்கள்தான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள்.. பிறகு “ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங் களிலேயே நீங்கள் தொழுதுகொள் ளுங்கள்” (அலா! ஸல்லூ ஃபிர்ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், “(கடுங்) குளிரும் மழையு முள்ள இரவுகளில், “ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளருக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடு வார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.18 அத்தியாயம் :
மஹ்மூத் பின் அர்ரபீஉ அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: கண் பார்வையிழந்த இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் தம் சமூகத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்து பவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! (சில நாட்களில்) இருட்டும் வெள்ளமுமாக இருக்கிறது. நானோ பார்வை மங்கியவன். எனவே, அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் வந்து) என் வீட்டில் ஓர் இடத்தில் தொழ வேண்டும். அதை நான் தொழுமிடமாக ஆக்கிக்கொள்வேன்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று, “(உங்கள் வீட்டில்) எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்கள். அப்போது இத்பான் (ரலி) அவர்கள் வீட்டில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார்கள். அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள் அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மழை பெய்து) சேறும் சகதியும் நிறைந்திருந்த ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்க ளிடையே உரையாற்றினார்கள். பாங்கு சொல்பவர், ‘ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்)’ என்று சொல்ல முனைந்தபோது, “(உங்கள்) இருப் பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (அஸ்ஸலாத்து ஃபிர்ரிஹால்) என்று மக்களுக்கு அறிவிக்குமாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கட்டளை யிட்டார்கள். அப்போது மக்கள் அதை ஆட்சேபிப்பதைப் போன்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இவ்வாறு நான் செய்தது உங்களுக்குப் பிடிக்கவில்லை போன்று தெரிகிறது. ஜுமுஆ கட்டாயக் கடமையாக இருந்தும் என்னைவிடச் சிறந்தவர் -நபி (ஸல்) அவர்கள்- இவ்வாறுதான் செய்தார்கள். உங்களுக்குச் சிரமம் கொடுப்பதை நான் விரும்பவில்லை. (எனவேதான், இருப்பிடங்களிலேயே தொழச் சொன்னேன்)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “நீங்கள் முழங்கால்வரை சகதியை மிதித்துக்கொண்டு வருமளவுக்கு உங்களுக்குச் சிரமம் கொடுப்பதை நான் விரும்பவில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் (லைலத்துல் கத்ர் எனும் மகத்துவமிக்க இரவு பற்றிக்) கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: (திடீரென) ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அதனால் பள்ளிவாச-ன் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அப்போது அந்தக் கூரை பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்(டு தொழுகை நடத்தப்பட்)டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரமான களி மண்ணில் சிரவணக்கம் (சஜ்தா) செய்ததால் அவர்களது நெற்றியில் களி மண்ணின் அடையாளத்தை நான் கண்டேன். அத்தியாயம் :
அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒருவர் (நபி (ஸல்) அவர்களிடம்), “என்னால் (பள்ளிவாசலுக்கு வந்து) உங்களுடன் தொழ முடிவதில்லை” என்று கூறினார்- அவர் உடல் பருமனான மனிதராக இருந்தார். -எனவே, அவர் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயார் செய்து தமது இல்லத்திற்கு வருமாறு அவர்களை அழைத்தார். (அவரது இல்லத்திற்கு நபி (ஸல்) அவர்கள் வந்தபோது) நபி (ஸல்) அவர்களுக்காகப் பாயொன்றை விரித்து, (பதப்படுத்துவதற்காக) அந்தப் பாயின் ஓரத்தில் தண்ணீர் தெளித்தார். அந்தப் பாயில் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஜாரூத் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுகை தொழுபவர்களாக இருந்தார்களா?” என்று கேட்டார். அதற்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “அன்றைய தினம் தவிர வேறு எப்போதும் அவர்கள் ‘ளுஹா’ தொழுகை தொழுவதை நான் கண்டதில்லை” என்று கூறினார்கள்.19 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவு உணவு உங்களுக்குமுன் வைக்கப்பட்டிருக்க, தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டுவிட்டால், முத-ல் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் செல்லுங்கள்.) இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவ தற்குமுன் உங்களுக்கு முன்னால் உணவு வைக்கப்படுமானால் முத-ல் உணவை உண்ணுங்கள். உங்களது உணவை விடுத்து (தொழுகைக்காக) நீங்கள் அவசரப்பட வேண்டாம். இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்குமுன் இரவு உணவு வைக்கப்பட்டிருக்க, தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டுவிட்டால், முத-ல் உணவை உண்ணுங்கள். அதை (உண்டு) முடிக்கும்வரை (தொழுகைக்காக) அவர் அவசரப்பட வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு முன்னால் உணவு வைக்கப்பட்டிருக்கை யில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும். அவர்கள் (சாப்பிட்டு) முடிக்காத வரை தொழுகைக்குச் செல்லமாட்டார்கள். அப்போது இமாம் ஓதுவதைக் கேட்டபடியே (சாப்பிட்டுக்கொண்டு) இருப்பார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவர் தமது தேவையை முடிப்ப தற்கு முன்பாக அவசரப்ப(ட்டு எழுந்துவி)ட வேண்டாம். தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டாலும் சரியே! இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கரத்தி-ருந்த கத்தியால் ஆட்டுச்) சப்பையைத் துண்டுபோட்டுச் சாப்பிடு வதை நான் பார்த்தேன் அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே அவர்கள் கத்தியைக் கீழே போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள். (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்யவில்லை.20 அத்தியாயம் :
அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்துவந்தார்கள்?” என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை -அதாவது தம் குடும்பத்தாருக்கான பணிகளை- செய்துவந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டு விட்டு) தொழுகைக்குப் புறப்பட்டு விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களது இந்த (பஸ்ரா) பள்ளி வாசலுக்கு மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, “உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமை யான) தொழுகையை (இப்போது) தொழுவது என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை, எவ்வாறு நான் தொழக் கண்டேனோ அவ்வாறு நான் தொழுது காட்டப்போகிறேன்” என்று கூறி(விட்டு தொழுதுகாட்டி)னார்கள். இதன் அறிவிப்பாளர் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அபூகிலாபா (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) எவ்வாறு தொழுவார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இதோ (அம்ர் பின் சலமா எனும்) இந்தப் பெரியவரைப் போன்றே தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள். அம்ர் பின் சலமா (ரஹ்) அவர்கள் முதியவராக இருந்தார். அவர்கள் முதல் ரக்அத்தி-ருந்து இரண்டாவது ரக்அத் திற்காக எழுவதற்குமுன் (சிறிது நேரம்) அமர்ந்துவிட்டு எழுவார்கள். அத்தியாயம் :
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தமது இறுதி காலத்தில்) நோய்வாய்ப்பட்டார்கள். அவர் களது நோய் கடுமையானபோது, “அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள்” என்று (தம் அருகில் இருந்தவர்களிடம்) கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர். (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால், (மனம் நெகிழ்ந்து அழுதுவிடுவார்கள். எனவே) அவர்களால் மக்களுக்குத் தொழுவிக்க முடியாது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள்” என்று (மீண்டும்) கூறினார்கள். ஆயிஷா முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு, “(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்” என்று கூறினார்கள்.22 (நபி (ஸல்) அவர்களின்) தூதுவராக ஒருவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, (தொழுவிக்கும்படி) சொன்னார். எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும்போது (அவர்கள் இறக்கும்வரை) மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தி னார்கள். அத்தியாயம் :
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது, “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால், அவர்கள் (மனம் நெகிழ்ந்து) அழுவதால் மக்களுக்கு அவர்களால் (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே, உமர் (ரலி) அவர்களை, மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினேன். மேலும், (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரான) ஹஃப்ஸாவிடம், “அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால், (மனம் நெகிழ்ந்து) அழுவதால் மக்களுக்கு அவர்கள் (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே, உமர் (ரலி) அவர்களை, மக்களுக்கு தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும்படி சொன்னேன். அவ்வாறே ஹஃப்ஸா அவர்கள் செய்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(போதும்) நிறுத்துங்கள். நிச்சயமாக நீங்கள்தான் (இறைத்தூதர்) யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது ஹஃப்ஸா என்னிடம், “உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை” என்று கூறினார். அத்தியாயம் :
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களை (ஒவ்வொரு விஷயங்களிலும்) பின்பற்றுபவரும், நபியவர்களின் சேவகருமான அவர்களின் தோழர் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறினார்கள்: எந்த நோயில் நபி (ஸல்) அவர்கள் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, அபூபக்ர் (ரலி) அவர்களே மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். மக்கள் திங்கட்கிழமையன்று (ஃபஜ்ர்) தொழுகையில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களது) அறையின் திரையை விலக்கி, நின்றுகொண்டு எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களது முகம் புத்தகத்தின் பக்கத்தைப் போன்று (பொ-வுடன்) இருந்தது. பிறகு அவர்கள் (எங்களைப் பார்த்து) மகிழ்ந்தவர்களாய் புன்னகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியினால் நாங்கள் (தொழுகையில் கவனம் சிதறி) குழம்பிவிடுவோமா என்று எண்ணிணோம். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்து கொள்ளத் தம் குதிகால்களால் பின்வாக்கில் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வருகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நினைத்துவிட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி, “உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்” என்று (தமது கரத்தால்) சைகை செய்தார்கள்; (பிறகு அறைக்குள் நுழைந்துகொண்டு) திரையைத் தொங்க விட்டார்கள். அன்றைய தினமே அவர்கள் இறந்தார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (இறுதியாக அமர்ந்து எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டுப் போனதி-ருந்து) மூன்று நாட்கள் வெளியில் வரவில்லை. (மூன்றாவது நாள்) தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்துவதற்கு முன்சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது அறையின்) திரையை உயர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகம் தெரிந்தபோது (நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். எந்த அளவுக்கென்றால்,) எங்களுக்குக் காட்சியளித்த அவர்களின் முகத்தைவிட மகிழ்வூட்டும் எந்தக் காட்சியையும் நாங்கள் கண்டதில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் (பின்வாங்க முற்பட்ட) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் முன்னே செல்லுமாறு (மக்களுக்குத் தொழுவிக்குமாறு) தமது கரத்தால் சைகை செய்தார்கள். (பிறகு அறையின்) திரையைத் தொங்கவிட்டுவிட்டார்கள். பின்னர் அதற்குக்கூட இயலாமல் இறந்துவிட்டார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இறுதி நாட்களில் நோயின்) வேதனை அதிகமானபோது, தொழுகை யைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “அபூபக்ர் அவர்களி டம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “(என்தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடைய மனிதர். (நீங்கள் நிற்கு மிடத்தில் நின்று) அவர்கள் குர்ஆன் ஓதி னால். அவர்களுக்கு அழுகை மே-ட்டு விடும்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவரைத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று (மீண்டும்) கூறி னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் முன்பு சொன்னதையே மீண்டும் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களும் (முன்பு போன்றே) “அவரைத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு, “(பெண்களாகிய) நீங்கள் (இறைத்தூதர்) யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக் கத்துடன் பேசுகின்)றவர்கள்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இறுதி நாட்களில்) நோயுற்றிருந்தபோது. மக்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்களை (இமாமாக நின்று) தொழுவிக்குமாறு பணித்தார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். (இதன் அறிவிப்பாளரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தமது நோய் சற்றுக் குறைந் திருக்கக் கண்டபோது (இரண்டு மனிதர் களைப் பிடித்துக்கொண்டு) புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு இமாமாக நின்று தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், பின்வாங்க முயன்றார்கள். “அப்படியே இருங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்துவிட்டு, அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்ந்தார்கள். அப்போது மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதுகொண்டிருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதுகொண்டிருந்தார்கள்.23 அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குபாவில் இருந்த பனூ அம்ர் குலத் தாரிடையே தகராறு நிகழ்ந்துவிட்டதாகச் செய்தி வந்ததையொட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடையே சமாதானம் செய்வதற்காக அவர்களை நோக்கிச் சென்றுவிட்டார்கள். அப்போது (அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்துவிட்டது. (நபி (ஸல்) அவர்கள் வரத் தாமதமாகவே) தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “நீங்கள் மக்களுக்கு (தலைமை தாங்கி)த் தொழுகை நடத்துகிறீர்களா, நான் இகாமத் சொல்கிறேன்?” என்று கேட்டார்கள் “ஆம் (அவ்வாறே செய்வோம்)” என்று கூறிவிட்டு, அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தலைமை தாங்கி) தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் (தொழுகை வரிசைகளை) விலக்கிக்கொண்டு (முதல்) வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வந்துவிட்டதைத் தெரிவிக்க) கை தட்டினார்கள். (பொதுவாக) அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப்பார்க்கமாட்டார்கள்; மக்கள் கை தட்டுவது அதிகரித்தபோது திரும்பிப் பார்த்தார்கள். (அங்கே முதல் வரிசையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி “அங்கேயே இருங்கள்” என்று சைகை செய்தார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு தம்மை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணித்ததற்காக (இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில்) தம் கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கி (திரும்பாமல் அப்படியே முதல்) வரிசையில் சேர்ந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே சென்று (நின்று) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும். “அபூபக்ரே! நான் உங்களை (அங்கேயே நின்று தொழுவிக்குமாறு) பணித்தும் நீங்கள் ஏன் அங்கேயே நிற்கவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதி இல்லை” என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து), “நீங்கள் அதிகமாகக் கைத்தட்டக் கண்டேனே, ஏன்? ஒருவருக்கு அவரது தொழுகையில் ஏதேனும் ஐயம் (ஆட்சேபம்) ஏற்பட்டால், அவர் (அதை உணர்த்தும் முகமாக) இறைவனை (‘சுப்ஹானல்லாஹ்’-அல்லாஹ் தூயவன் எனக் கூறி)த் துதிக்கட்டும். ஏனெனில், அவர் இறைவனைத் துதிக்கும்போது, அவர் பக்கம் கவனம் செலுத்தப்படும். கைத்தட்டும் முறை பெண்களுக்குரியதாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பனூ லைஸ் தூதுக் குழுவில்) இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவுக்குச்) சென்று ஏறத்தாழ இருபது நாட்கள் அவர்களிடம் தங்கியிருந்தோம். -நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாக இருந்தார் கள்.- (பிறகு நாங்கள் எங்கள் குடும்பத் தாரிடம் திரும்பிச் செல்ல ஆசைப் படுவதை அறிந்தார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றால் நீங்கள் (கற்றிருப்பதை) அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங் கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்” என்று கூறினார்கள்.24 அத்தியாயம் :
இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (‘என் வீட்டில் தொழவாருங்கள்’ என்று நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று வந்த) நபி (ஸல்) அவர்கள், “என் வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதியளித்தேன். “உங்கள் வீட்டில் நான் எந்த இடத்தில் தொழ வேண்டுமென நீங்கள் விரும்பு கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான் விரும்பிய இடத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்றார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம் (தொழுதோம்). பின்னர் அவர்கள் ‘சலாம்’ கொடுத்தார்கள்; நாங்களும் ‘சலாம்’ கொடுத்தோம்.25 அத்தியாயம் :
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறுதி நாட்களில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் என்று (கூறி விட்டுப் பின்வருமாறு) சொன்னார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானது. அந்த (இஷா) நேரத்தில், “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை, அல்லாஹ் வின் தூதரே! அவர்கள் உங்களை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினோம். அப்போது, “தண்ணீர் தொட்டி யில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குளித்துவிட்டு எழ முயன்றார்கள். அப்போது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் அவர் களின் மயக்கம் தெளிந்தபோது, “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன் னோம். அப்போது “தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். (அவ்வாறே நாங்கள் வைத்தபோது) அவர்கள் உட்கார்ந்து குளித்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்டபோது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் மயக்கம் தெளிந்தபோது, “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள் “இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக் கின்றனர் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினோம். அப்போதும் “தண்ணீர் தொட்டி யில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்” என்று கூறினார்கள். (நாங்கள் தண்ணீர் வைத் தோம்.) அவர்கள் உட்கார்ந்து குளித்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்டபோது (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது (அப்போதும்,) “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டி ருக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே!” என்றோம்.-அப்போது மக்கள் இஷா தொழுகைக்காக நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாச-ல் வீற்றிருந் தனர்.- ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (தூதர் ஒருவரை) அனுப்பி, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள்” என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் -அன்னார் இளகிய மனம் உடையவராக இருந்தார்கள்- “உமரே! நீங்கள் மக்களுக் குத் தொழுகை நடத்துங்கள்” என்று (உமர் (ரலி) அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இதற்கு நீங்கள்தான் (என்னைவிடத்) தகுதியுடையவர்” என்று அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறிவிட்டார் கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்கு இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். பின்னர் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் தமது நோய் சற்றுக் குறைந்திருப்பதைக் கண்டபோது, இரண்டு பேருக்கிடையே (கைத்தாங்கலாக) லுஹ்ர் தொழுகைக்காகப் புறப்பட்டு வந்தார்கள்.- அந்த இரண்டு பேரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒருவராவார்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கிட முயன்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், பின்வாங்க வேண்டாமென அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மை அழைத்து வந்த இருவரிடமும்) “என்னை அபூபக்ர் அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார வையுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தி னர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து தொழ, அவர்களைப் பின்பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் (நின்று) தொழு தார்கள். மக்கள் அபூபக்ரைப் பின்பற்றித் தொழலானார்கள். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தது குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் கூறியதை நான் உங்களிடம் எடுத்துரைக்கட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், “சொல்லுங்கள்” என்றார் கள். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதில் எதையும் அவர்கள் மறுக்கவில்லை. ஆயினும், “ஆயிஷா (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுடனிருந்த அந்த வேறொரு மனிதரின் பெயரை உம்மிடம் குறிப்பிட்டார்களா?” எனக் கேட்டார்கள். நான், “இல்லை (குறிப்பிடவில்லை)” என்று சொன்னேன். “அவர்தான் அலீ (ரலி)” என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் அத்தியாயம் :
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரையிலிருந்து விழுந்ததால்) உடல் நலிவுற்றார்கள். அப்போது தமது இல்லத்தில் (மாடியறையில்) உட்கார்ந்தபடியே தொழுதார்கள். (அவர்களை உடல் நலம் விசாரிக்க வந்திருந்த) மக்கள் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்றபடி தொழுதனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம், ‘உட்காருங்கள்’ என்று சைகை செய்தார்கள். தொழுகை முடிந்தபோது, “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப் பட்டுள்ளார். அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தமது தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்” என்று சொன்னார்கள்.28 அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கீழே விழுந்து விட்டார்கள். அதனால் அவர்களது வலப்புற விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. ஆகவே, (கடமையான) தொழு கைகளில் ஒன்றை அவர்கள் உட்கார்ந்த படியே தொழு(வித்)தார்கள். ஆகவே, நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தபடியே தொழுதோம். தொழுகை முடிந்தபோது, “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப் பட்டுள்ளார்; அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்; அவர் குனிந்தால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.) என்று சொன்னால், நீங்கள் ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்றே தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள்” என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: அப்துல்லாஹ் பின் அஸ்ஸபீர் அல் ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முன்பொரு முறை நோய்வாய்ப்பட்டி ருந்தபோதே நபி (ஸல்) அவர்கள், “இமாம் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட் கார்ந்தே தொழுங்கள்” என்று சொன்னார் கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) உட்கார்ந்து தொழுத போது, (அவர்களுக்குப் பின்னா-ருந்த) மக்கள் நின்றே தொழுதனர். அவர்களை உட்காருமாறு நபி (ஸல்) அவர்கள் பணிக்கவில்லை. (பொதுவாக நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்களில்) எது இறுதியிலும் இறுதியாக இருக்கிறதோ அதையே எடுத்துக்கொள்ள வேண்டும். (எனவே, இமாம் உட்கார்ந்து தொழுதால், பின்பற்று பவர்களும் உட்கார்ந்து தொழ வேண்டும் எனும் விதி மாற்றப்பட்டுவிட்டது.) அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவரான பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னை புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறி (ருகூஉவிலிருந்து எழுந்தால் நாங்களும் எழுவோம், பின்னர்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யாத வரை எங்களில் யாரும் தமது முதுகை (சிரவணக்கத்திற்காக) வளைக்கமாட்டார்; அவர்கள் (சிரவணக் கத்திற்குச் சென்ற) பின்புதான் நாங்கள் சிரவணக்கம் செய்வோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தமது தலையை உயர்த்துவதால் அவரது தலையைக் கழுதையின் தலையாக அல்லாஹ் ஆக்கி விடுவதை, அல்லது அவரது உருவத்தைக் கழுதையின் உருவமாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அஞ்ச வேண்டாமா?29 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முதல் கட்டமாக (மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து வந்த) முஹாஜிர்கள்-குபா பகுதியில் உள்ள- ‘அல்உஸ்பா’ எனும் இடத்திற்கு வந்(து சேர்ந்)தபோது, அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த சா-ம் (ரலி) அவர்களே அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். இது நபி (ஸல்) அவர்கள் புலம்பெயர்ந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சா-ம்) மற்றவர்களைவிடக் குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலர்ந்த திராட்சை போன்ற தலை யுடைய அபிசீனிய (கறுப்பு நிற அடிமை யொருவ)ர் உங்களுக்குத் தலைவராக்கப் பட்டாலும் (அவருக்குச்) செவிசாயுங்கள்; கீழ்ப்படியுங்கள். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இமாமாகத் தொழுவிக்கின்ற) அவர்கள் உங்களுக்காகத் தொழுகை நடத்து கிறார்கள். அவர்கள் சரியாகத் தொழுதால், உங்களுக்கும் நன்மை உண்டு; அவர்களுக்கும் நன்மை உண்டு. அவர்கள் தவறு செய்தால், (நீங்கள் சரியாகத் தொழுததற்காக) உங்களுக்கு நன்மை உண்டு; (தவறிழைத்ததற்காக) அவர்களுக்குத் தீமை உண்டு.31 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகை யிடப்பட்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று, “நீங்கள் மக்கள் தலைவர் ஆவீர்கள். நீங்கள் காணும் சோதனை (முற்றுகை) உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் (இன்று) எங்களுக்குக் குழப்பவாதத் தலைவர் தொழுகை நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால் நாங்கள் (பாவத்தில் வீழ்கிறோமோ என்ற அச்சத்தில்) மன வேதனை அடைகிறோம். (எனவே, அவருக்குப் பின்னால் நாங்கள் தொழலாமா?)” என்று கேட்டேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “தொழுகை, மக்கள் செய்கின்ற செயல் களிலேயே மிக நல்ல செயலாகும். மக்கள் நன்மை செய்தால் நீங்களும் நன்மை செய்யுங்கள். அவர்கள் தவறிழைத்தால் அவர்கள் இழைக்கும் தவறுகளி-ருந்து நீங்கள் ஒதுங்கிவிடுங்கள்” என்று சொன்னார்கள். முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தவிர்க்க முடியாத காரணமிருந்தால் தவிர, (ஆணும் பெண்ணும் அல்லாத) அரவானிக்குப் பின்னால் தொழக் கூடாது என்றே நாம் கருதுகிறோம். அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம், “(உங்களுக்குத் தலைவராக் கப்படுபவர்) உலர்ந்த திராட்சை போன்ற தலையுடைய அபிசீனியராயிருப்பினும், அவருக்கு நீங்கள் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ல்) இஷா தொழுகை தொழுதுவிட்டு (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்துவிட்டு) நின்றார்கள். நான் சென்று (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் என்னைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அவர்களது குறட்டைச் சப்தத்தை நான் கேட்குமளவுக்கு உறங்கினார்கள். பின்னர் (சுப்ஹு) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்33 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயாரும், நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் வீட்டில் ஓர் இரவு) உறங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நபியவர்கள் (சிறிது நேரம் உறங்கி எழுந்து) அங்கத் தூய்மை செய்துவிட்டு நின்று தொழுதார்கள். நான் சென்று அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் (தொழுகை யில் இருந்தவாறே) என்னைப் பிடித்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் குறட்டை விடும் அளவுக்கு உறங்கினார்கள். -(பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள்.- பிறகு தொழுகை அறிவிப்பாளர் அவர்களிடம் வந்(து தொழுகை நடத்த அவர்களை அழைத்)தபோது (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டுச் சென்று, (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே (சுப்ஹு தொழுகையைத்) தொழு(வித்)தார்கள். (அவர்களின் கண்கள் உறங்கினாலும் உள்ளம் உறங்குவதில்லை.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (நான்காவது அறிவிப்பாளரான) அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் புகைர் (பின் அப்துல்லாஹ் பின் அல்அஷஜ்-ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், “இவ்வாறே (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) குரைப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். அந்த இரவில் (உறங்கிக் கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து (அங்கத் தூய்மை செய்துவிட்டுத்) தொழுதார்கள். நானும் எழுந்து அவர்களு டன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் எனது தலையைப் பிடித்து என்னைத் தமக்கு வலப் பக்கம் நிறுத்தினார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்குத் தலைமை தாங்கி (அந்தத் தொழுகையையே மீண்டும்) தொழுவிப்பார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். (ஒரு முறை மக்க ளுக்கு) முஆத் (ரலி) அவர்கள் இஷா தொழுகை தொழுவித்தபோது, (நீண்ட அத்தியாயமான) ‘அல்பகரா’வை ஓதினார் கள். அப்போது (அவர்களுக்குப் பின்னால் தொழுதுகொண்டிருந்த) ஒரு மனிதர் (தொழுகையி-ருந்து) விலகிச் சென்று விட்டார். எனவே, முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரை ஏசினார்கள் போலும். (இந்தச் செய்தி) நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது (முஆத் (ரலி) அவர்களிடம்) “(நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்ப வாதியா?” என்று மூன்று முறை கேட்டார் கள். மேலும், நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களி-ருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர் களைப் பணித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நபி (ஸல்) அவர்கள் ஓதுமாறு பணித்த) அவ்விரு அத்தியாயங்கள் (எதுவென்பது) என் நினைவில் இல்லை. அத்தியாயம் :
அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னார் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்குச் செல்லாமல் நான் தாமதித்து விடுகிறேன் (ஜமாஅத்திற்குச் செல்வதில்லை.)” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய (தினத்தில் ஆற்றிய) உரையின்போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள், “(மக்களே!) உங்களில் வெறுப்பூட்டுபவர்கள் சிலர் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமா(கத் தொழுவி)க்கட்டும். ஏனெனில், (பின்பற்றித் தொழும்) மக்களில் முதியவர்களும் பலவீனர்களும் அலுவல் உடையவர் களும் உள்ளனர்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்போது சுருக்கமா(கத் தொழுவி)க்கட்டும்! ஏனெனில், மக்களில் பலவீனர்களும் நோயாளிகளும் முதியவர்களும் உள்ளனர். உங்களில் ஒருவர் தமக்காகத் தொழும்போது தாம் விரும்பும் அளவுக்கு நீட்டிக்கொள்ளட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இன்னார் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் ஃபஜ்ர் தொழுகை(யின் ஜமாஅத்து)க்குச் செல்லாமல் நான் தாமதித்துவிடுகிறேன்” என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைக்கு கோபப்பட்டதைவிடக் கடுமையாக வேறு எந்த இடத்திலும் கோபப்பட்டதை நான் கண்டதில்லை. பிறகு அவர்கள், “மக்களே! உங்களில் வெறுப்பூட்டும் சிலரும் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்து கிறாரோ அவர் சுருக்கமாகத் தொழுவிக் கட்டும். ஏனெனில், அவருக்குப் பின்னால் பலவீனர்களும் முதியவர்களும் அலுவல் உடையவர்களும் உள்ளனர்” என்று கூறினார்கள் அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நீரிறைக்கும் இரண்டு ஒட்டகங்களுடன் இரவின் இருள் படர்ந்த நேரத்தில் வந்தார். அப்போது முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு இஷா தொழுகை) தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். உடனே அம்மனிதர் தமது ஒட்டகத்தை விட்டுவிட்டு, முஆத் (ரலி) அவர்களை நோக்கி வந்(து கூட்டுத் தொழுகையில் சேர்ந்)தார். அப்போது முஆத் (ரலி) அவர்கள் (பெரிய அத்தியாயங்களான) ‘அல்பகரா’ அத்தியாயத்தை, அல்லது ‘அந்நிசா’ அத்தியாயத்தை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் (தொழுகையை விட்டுவிட்டுச்) சென்றுவிட்டார். இது பற்றி முஆத் (ரலி) அவர்கள் தம்மைக் கடிந்து பேசியதாக அந்த மனிதருக்குத் தெரியவந்தபோது, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, முஆத் (ரலி) அவர்களைப் பற்றி அவர் முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (முஆத் (ரலி) அவர்களை வரவழைத்து) “முஆதே! குழப்பம் விளைவிப்பவரா, நீர்?” என்று (மூன்று முறை) கேட்டார்கள். பின்னர் “சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (86), வஷ்ஷம்சி வ ளுஹாஹா (91), வல்லை- இஃதா யஃக்ஷா (92) ஆகிய (ஓரளவு சிறிய) அத்தியாயங்களை ஓதி நீர் தொழுவித்திருக்கக் கூடாதா? ஏனெனில், உமக்குப் பின்னால் முதியவர்களும் பலவீனர்களும் அலுவல் உடையவர் களும் தொழுகின்றனர்” என்று சொன்னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (‘ஏனெனில் உமக்குப் பின்னால்...’ எனத் தொடங்கும்) கடைசி வாக்கியமும் நபி (ஸல்) அவர்களின் சொல் என்றே நான் கருதுகிறேன். இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், “முஆத் (ரலி) அவர்கள் இஷாவில் ‘அல்பகரா’ அத்தியாயத்தை ஓதினார்கள்” என்று (ஐயப்பாடின்றி)) காணப்படுகிறது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடா மல்) நிறைவாகவும் தொழுவிப்பவர்களாக இருந்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத் துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுதுகொண்டி ருக்கும் பெண்களுடைய) குழந்தையின் அழுகையை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு நான் சிரமம் அளித்துவிடக் கூடாது என்பதற்காக எனது தொழுகையைச் சுருக்கமாக முடித்துவிடுவேன். இதை அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ) அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களைவிட மிகச் சுருக்கமாகவும் (அதே சமயம் எதுவும் விடுபடாமல்) நிறைவாகவும் தொழுவிக்கக் கூடிய வேறு எந்த இமாமுக்குப் பின் னாலும் நான் தொழுததில்லை. (பின்னால் தொழும் பெண்களுடைய) குழந்தையின் அழுகையை அவர்கள் கேட்க நேர்ந்தால், அக்குழந்தையின் தாய்க்குச் சஞ்சலம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுவார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத் துடன் நான் தொழுகையைத் துவக்கு வேன். அப்போது (பின்னால் தொழும் பெண்களுடைய) குழந்தையின் அழு கையை நான் செவியுறுவேன். குழந்தை யின் அழுகுரல் கேட்டு அதன் தாய் கடுமையாகக் கலங்குவதை நான் நன்கு அறிந்திருப்பதால், என் தொழுகையைச் சுருக்கமாக முடித்துவிடுகிறேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத் துடன் நான் தொழுகையை ஆரம் பிப்பேன். அப்போது (பின்னால் தொழும் பெண்களுடைய) குழந்தையின் அழுகை யைச் செவியுறுவேன். குழந்தையின் அழுகுரல் கேட்டு அதன் தாய் கடுமை யாகக் கலங்குவதை நான் நன்கு அறிந்திருப்பதால், (என் தொழுகையை) சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆத் (பின் ஜபல்-ர-) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். பிறகு தம் சமுதாயத்தாரிடம் சென்று (அதே தொழுகையை) அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிப்பதற் காக வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “(என் தந்தை) அபூபக்ர் அவர்கள் வேகமாகத் துக்கப்படுகின்ற மனிதர்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுதுவிடுவார்கள். அவர்களால் (தொழுகையில்) ஓத முடியாது” என்று கூறினேன். “அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று நபியவர்கள் (மீண்டும்) சொன்னார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் (மீண்டும்) சொன்னேன். மூன்றாவது அல்லது நான்காவது தடவையில் நபியவர்கள், “(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தான். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்டபோது) இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி (பள்ளிவாசலை நோக்கி) புறப்பட்டு வந்தார்கள். (நோயினால் கால்களை ஊன்ற முடியாமல்) தம் கால்கள் பூமியில் இழுபட வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிக்கும் இடத்தி-ருந்து) பின்வாங்க முயன்றார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் தொழுகை நடத்துங்கள்’ என்று (கையால்) சைகை செய்தார்கள். ஆயினும், அபூபக்ர் (ரலி) அவர்கள் சற்று பின்வாங்கிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்(து தொழுவித்) தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபிய வர்கள் கூறும்) தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குர-ல்) கூறிக்கொண்டிருந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோய் அதிகமானபோது, அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிக்க வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வேகமாகத் துக்கப்படுகின்ற மனிதராவார்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்கும் இடத்தில் அவர்கள் நின்றால், (மனம் நெகிழ்ந்து அழுவதால்) அவர் களால் மக்களுக்குக் கேட்கும் விதமாக (குர்ஆனை) ஓத முடியாது. உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள் தொழுவிக்கச் சொல்லலாமே!” என்று சொன்னேன். அப்போது (மீண்டும்) “அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று நபியவர்கள் சொன்னார்கள். நான் (அருகில் இருந்த) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம், “அபூபக்ர் வேகமாகத் துக்கப்படுகின்ற மனிதரா வார்கள். நீங்கள் நிற்கும் இடத்தில் அவர்கள் நின்றால் மக்களுக்குக் கேட்கும் விதமாக அவர்கள் ஓதமாட்டார்கள். எனவே, உமர் (ரலி) அவர்களைத் தொழுவிக்கச் சொல்லலாமே!” என்று நபியவர்களிடம் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(பெண் களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தான். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறி னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்டார்கள். எனவே, இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி, தம்மிரு கால்கள் பூமியில் இழுபட வந்து பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வருவதை உணர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கப் போனார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி (அங்கேயே நில்லுங்கள் என) சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இடப் பக்கத்தில் அமர்ந்துகொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றபடி தொழுதார்கள். அமர்ந்தபடி தொழுதுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழ, மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழு தனர். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் நான்கு ரக்அத் தொழுகை யொன்றை) இரண்டு ரக்அத்களில் முடித்து விட்டார்கள். அப்போது அவர்களிடம் ‘துல்யதைன்’ (நீண்ட கைகளை உடையவர்) என்பவர், “தொழுகை(யின் ரக்அத்) சுருக் கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “துல்யதைன் சொல்வது உண்மைதானா?” என்று (மக்களிடம்) கேட்க, மக்கள் ‘ஆம்’ என்று பதிலளித்த னர். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று இன்னும் இரண்டு ரக்அத்களைத் தொழு(வித்)துவிட்டு ‘சலாம்’ கொடுத்தார்கள். பிறகு ‘தக்பீர்’ கூறி (வழக்கமாக) ‘தாம் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று’ அல்லது ‘(அதைவிட) நீண்ட நேரம்’ (மறதிக்குரிய) சிரவணக்கம் செய்தார்கள். அத்தியாயம் :
அபூஹுûரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) லுஹ்ர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அப்போது (அவர்களிடம்), “நீங்கள் இரண்டு ரக்அத்கள்தான் தொழு(வித்)தீர்கள்” என்று சொல்லப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (இன்னும்) இரண்டு ரக்அத்கள் தொழு (வித்)துவிட்டு பிறகு ‘சலாம்’ கொடுத்தார்கள். பின்னர் (மறதிக்குரிய) இரு சிரவணக் கங்கள் (சஜ்தா) செய்தார்கள். அத்தியாயம் :
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த) நோயி-ருந்தபோது, “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுகையில்) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவதன் காரணமாக அவர்களால் (குர்ஆன் ஓதி) மக்களைக் கேட்கச் செய்ய முடியாது. எனவே, உமர் அவர்களைப் பணியுங்கள்! அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று (மக்களிடம் மீண்டும்) கூறினார்கள். நான் (உமர் (ரலி) அவர்களின் புதல்வியாரான) ஹஃப்ஸாவிடம், “அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் அவர் அழுவதன் காரணமாக மக்களுக்கு (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே, உமர் (ரலி) அவர்களைப் பணியுங்கள்; அவர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறச் சொன்னேன். அவ்வாறே ஹஃப்ஸாவும் செய்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(போதும்) நிறுத்துங்கள். (பெண் களாகிய) நீங்கள், யூசுஃபின் (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக் கத்துடன் பேசுகின்)றவர்கள்தான். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஹஃப்ஸா என்னிடம், “உன்னால் நான் எந்த நன்மையையும் அடையவில்லை” என்று கூறினார். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களின் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான்.34 இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகை) வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில். நான் எனது முதுகுக்குப் பின்புறம் உங்களைக் காண்கிறேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, “வரிசைகளை நேராக்குங்கள். (இடைவெளி யின்றி) நெருக்கமாக நில்லுங்கள். ஏனெனில், என் முதுகுக்குப் பின்புறமாக உங்களை நான் காண்கிறேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவ ருக்கு நீங்கள் முரண்படாதீர்கள். அவர் குனிந்(து ருகூஉ செய்)தால், நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள். அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (இறைவன் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ‘ரப்பனா ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே!) என்று சொல்லுங்கள். அவர் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால், நீங்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால், நீங்கள் அனைவரும் உட்கார்ந்து தொழுங்கள். தொழுகை வரிசையை ஒழுங்குபடுத்துங்கள். ஏனெனில், வரிசையை ஒழுங்குபடுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதில் அடங்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை (முழு மையாக) நிறைவேற்றுவதில் அடங்கும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள். அத்தியாயம் :
புஷைர் பின் யசார் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் (பஸ்ராவி-ருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நடைமுறைக்கு மாறாக எதை நீங்கள் எங்களிடம் காண்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “நீங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்கு படுத்துவதில்லை என்பதைத் தவிர வேறெதையும் நான் உங்களிடம் வித்தி யாசமாகக் காணவில்லை” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் உக்பா பின் உபைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு எங்களிடம் வந்தபோது’ என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண் கிறேன்” என்று கூறினார்கள். (ஆகவே,) எங்களில் ஒருவர் (தொழுகையில்) தமது தோளைத் தமக்கு அருகி-ருப்பவரின் தோளுடனும், தமது பாதத்தைத் தமக்கு அருகி-ருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக்கொண்டு (அந்த அளவுக்கு நெருக்கமாக) நிற்பார். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் இரவு (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில்) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். உடனே என் பின்தலையைப் பிடித்து என்னைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தி தொழுதார்கள்; பின்னர் உறங்கினார்கள். (ஃபஜ்ர் நேரமானபோது) அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (தொழுகைக்கு அழைக்க) வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்யாமலேயே தொழுதார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களது வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) நானும் ஓர் அநாதைச் சிறுவரும் தொழுதோம். என் தாயார் -உம்மு சுலைம் (ரலி)- (எங்கள் வரிசையில் சேராமல்) எங்களுக்குப் பின்னால் (நின்று தொழுது கொண்டு) இருந்தார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில்) ஓர் இரவில் தொழுவதற்காக நபி (ஸல்) அவர்களுக்கு இடப் புறமாக நின்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘எனது கையை’ அல்லது ‘எனது புஜத்தை’ப் பிடித்து (அப்படியே என்னை நகர்த்தி) தமக்கு வலப் பக்கத்தில் என்னை நிறுத்தினார்கள். அப்போது என்னைத் தமது கரத்தால் பிடித்து தமக்குப் பின்பக்கமாகவே கொண்டுசென்றார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தமது அறையில் தொழுபவர் களாக இருந்தார்கள். அந்த அறையின் சுவர் உயரம் குறைவானதாக இருந்தது. ஆகவே, நபி (ஸல்) அவர்களின் உருவத்தை மக்களால் பார்க்க முடிந்தது. அப்போது மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி (சுவருக்கு அப்பால் நின்று) தொழலாயினர். (மறு நாள்) காலையில் இது பற்றி அவர்கள் பேசிக்கெண்டனர். இரண்டாம் நாளில் நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழுந்தபோது அப் போதும் சிலர் அவர்களுடன் எழுந்து அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று இரவுகள் செய்தனர். அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்திற்குத் தொழ) வராமல் (வீட்டிலேயே) அமர்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றி (நபியவர்களிடம்) பேசியபோது, “இரவுத் தொழுகை உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சினேன் (அதனால்தான் நான் வரவில்லை)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது; பக-ல் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே (தடுப்பு) அறை போன்று அமைத்துக்கொள்வார்கள். (அதற்குள் நின்று அவர்கள் தொழும் போது) மக்களில் சிலர் அவர்களிடம் திரண்டு (வந்து) அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுவார்கள். அத்தியாயம் :
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் -பாயால்- ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டார்கள். சில இரவுகள் (அதைத் தடுப்பாக வைத்துக் கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழு தனர். தோழர்கள் (தம்மைப் பின்பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்தபோது, (அந்த இடத் திற்கு வராமல் தமது இல்லத்திலேயே) அமர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து, “உங்களது நடவடிக்கையை நான் கண்டறிந்தேன். மக்களே! (கூடுதலான தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுங்கள். ஒரு மனிதர் தமது வீட்டில் தொழும் தொழுகையே தொழுகைகளில் சிறந்ததாகும். ஆனால், கடமையாக்கப்பட்ட தொழுகையைத் தவிர!” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் பயணம் செய்தபோது (கீழே விழுந்து) அவர்களது வலப் பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. அன்றைய தினம் அவர்கள் (கடமையான) தொழுகைகளில் ஒரு தொழுகையை உட்கார்ந்தபடியே தொழு வித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தபடியே தொழுதோம். பிறகு அவர்கள் ‘சலாம்’ கொடுத்(து முடித்)தபோது (பின்வருமாறு) கூறினார்கள்: இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். ஆகவே, அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் (குனிந்து நிமிரும்போது) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ‘ரப்பனா வல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையி-ருந்து விழுந்ததால் அவர்களுக்கு (வலப் புற விலாவில்) சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. (அன்றைய தினம்) அவர்கள் எங்களுக்கு உட்கார்ந்தபடியே தொழுகை நடத்தினார்கள். நாங்களும் உட்கார்ந்தபடியே (அவர்களுக்குப் பின் னால்) தொழுதோம். தொழுது முடித்ததும் அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: பின்பற்றப்படுவதற்காகவே ‘இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார்’ அல்லது ‘(பின்பற் றப்படுவதற்காகவே) இமாம் இருக்கிறார்’. அவர் தக்பீர் (‘அல்லாஹ்ý அக்பர்’ என்று) சொன்னால் நீங்களும் தக்பீர் (அல்லாஹ்ý அக்பர் என்று) சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த் தினால் நீங்களும் (தலையை) உயர்த் துங்கள்; அவர் (ருகூஉவி-ருந்து நிமிரும்போது) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று கூறினால், நீங்கள் ‘ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுங்கள்; அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். ஆகவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஊ செய்)யுங்கள்; அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று சொன்னால் நீங்கள் ‘ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்று சொல்லுங்கள்; அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் உட்கார்ந்து தொழும்போது நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள்.36 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தம் தோள்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக ‘தக்பீர்’ கூறும்போதும் ருகூவி-ருந்து தலையை உயர்த்தும்போதும் அவ்வாறே (தோள்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவி-ருந்து எழும்போது) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதோ சஜ்தாவிலிருந்து எழும்போதோ) இவ்வாறு செய்ய மாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்). அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதற்காக நின்றால் தம் தோள் களுக்கு நேராக இருக்கும்படி தம் கைகளை உயர்த்துவதை நான் பார்த்திருக் கிறேன். ருகூஉவிற்காக ‘தக்பீர்’ கூறும் போதும் இவ்வாறு அவர்கள் செய்வார்கள். ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்வார்கள். ருகூவி-ருந்து (எழும்போது) ‘சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதோ சஜ்தாவி-ருந்து எழும்போதோ) இவ்வாறு செய்யமாட்டார்கள். அத்தியாயம் :
அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழும்போது, (முத-ல்) தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்துவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ருகூஉவிற்குச் செல்ல நாடியபோதும் தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவி-ருந்து தலையை உயர்த்தும்போதும் தம் கைகளை உயர்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள் என்றும் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘தக்பீர்’ கூறி தொழுகையைத் துவக்கியதை நான் கண்டேன். தக்பீர் கூறும்போதே தம் கைகளை உயர்த்தி தோள்களுக்கு நேராக ஆக்கினார்கள். ருகூஉவிற்காக அவர்கள் தக்பீர் கூறியபோதும் அதைப் போன்றே செய்தார்கள். ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று கூறியபோதும் அதைப் போன்றே செய்தார்கள். ‘ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்றும் கூறினார்கள். சஜ்தா (சிரவணக்கம்) செய்யும்போது அவ்வாறு செய்யமாட்டார்கள்; சஜ்தாவி-ருந்து தமது தலையை உயர்த்தும்போதும் (அவ்வாறு) செய்யமாட்டார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், தொழ ஆரம்பிக்கும்போது ‘தக்பீர்’ கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்து வார்கள். ருகூஉவுக்குச் செல்லும்போதும் கைகளை உயர்த்துவார்கள். ‘சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ எனக் கூறும்போதும் தம் கைகளை உயர்த்து வார்கள். இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழும்போதும் கைகளை உயர்த்துவார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்த தாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அய்யூப் பின் அபீதமீமா (ரஹ்), மூசா பின் உக்பா (ரஹ்) ஆகி யோரின் அறிவிப்பில் சுருக்கமாக இது இடம்பெற்றுள்ளது.. அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகையில் (நிற்கும்போது) ஒருவர் தமது வலக் கையை (மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையிலுள்ள) இடது முன்கையின் மீது வைக்க வேண்டுமென மக்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இது நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டது (மர்ஃபூஉ) என்றே நான் அறிகிறேன். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் முன்னோக்கும் திசை இதுதான் (என்பதால் எனக்குப் பின்னால் தொழும் உங்களை நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது குனிதலும் (ருகூவும்) உங்களது பணிவும் எனக்குத் தெரியாமல்போவதில்லை. என் முதுகுக்கு அப்பாலும் நிச்சயமாக உங்களை நான் காண்கிறேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ருகூஉவையும் சஜ்தாவையும் நிறை வாகச் செய்யுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ‘எனக்குப் பின்புறமாக’ அல்லது ‘என் முதுகுக்குப் பின்புறமாக’ நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும்போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போதும் நிச்சயமாக உங்களை நான் பார்க்கிறேன். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்...’ என ஓதியே தொழுகையை ஆரம்பிப்பார்கள்.39 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள். -(இதன் இரண்டாவது அறிவிப்பாள ரான) அபூஸர்ஆ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ‘சிறிது நேரம்’ (ஹுனய்யத்) என்று சொன்ன தாகவே நான் கருதுகிறேன்.- (தொடர்ந்து) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட் டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “நான், ‘அல்லாஹும்ம பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்; அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ்; அல்லாஹும்மஃக்சில் கத்தாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்’ என்று கூறுகிறேன்” என்றார்கள்.40 (பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை, அழுக்கி-ருந்து தூய்மைப்படுத்தப்படு வதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங் கட்டியாலும் என் தவறுகளைக் கழுவு வாயாக!) அத்தியாயம் :
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். அப்போது நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் (ருகூஉ வி-ருந்து நிமிர்ந்து) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் (மற்றொரு) ருகூஉ செய்தார்கள். அந்த ருகூஉவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவி-ருந்து) நிமிர்ந்துவிட்டுப் பிறகு (சஜ்தா விற்குச் சென்று) நீண்ட நேரம் சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். பின்பு (முதல் சஜ்தாவி-ருந்து தலையை) உயர்த்திவிட்டுப் பிறகு (மற்றொரு) சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (இரண்டாவது ரக்அத்திற்காக) எழுந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் (ருகூவி-ருந்து தலையை) உயர்த்தி நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு குனிந்து நீண்ட நேரம் (மறுபடியும்) ருகூஉ செய்தார்கள். பிறகு (ருகூவி-ருந்து தலையை) உயர்த்தி சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் (தலையை) உயர்த்திவிட்டு (மற்றொரு) சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அவர்கள் கூறினார்கள்: (நான் தொழுதுகொண்டிருந்தபோது) சொர்க்கம் என்னை நெருங்கி வந்தது; எனக்குச் சக்தியிருந்திருக்குமானால் அதன் பழக்குலைகளில் ஒன்றை நான் (பறித்து) உங்களிடம் தந்திருப்பேன். நரகமும் என்னை நெருங்கி வந்தது. எந்த அளவுக்கென்றால், “இறைவா! நானும் இ(ந்த நரகத்தி-ருப்ப)வர்களுடன் இருக்கப் போகிறேனா?” என்று நான் (மருண்டு போய்க்)கேட்டேன். அ(ந்த நரகத்)தில் ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக்கொண்டிருந்தது. “இவளுக்கு என்ன நேர்ந்தது (ஏன் இவள் இவ்வாறு வேதனை செய்யப்படுகிறாள்)?” என்று நான் கேட்டேன். அதற்கு அ(ங்கி ருந்த வான)வர்கள், “இந்தப் பூனையை, அது பசியால் துடித்துச் சாகும்வரை இந்தப் பெண் அடைத்துவைத்திருந்தாள். அதற்கு, தானும் உணவளிக்கவில்லை; அது பூமி யிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட்டும் என்று அதை அவள் அவிழ்த்துவிடவுமில்லை” என்று பதிலளித்தனர்.41 அத்தியாயம் :
அபூமஅமர் (அப்துல்லாஹ் பின் சக்பரா அல்அஸ்தீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகை யிலும் (கூடுதல் அத்தியாயம்) ஓதுவார் களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். “அ(வர்கள் மெதுவாக ஓதுவ)தை நீங்கள் எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு, “அவர்களது தாடி அசைவதை வைத்து (நாங்கள் அறிந்துகொண்டோம்.)” என்று அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் உரையாற்றியபோது கூறியதாவது: உண்மைக்குப் புறம்பாகப் பேசாத வரான பராஉ (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும்போது அவர்கள் ருகூஉவி-ருந்து (தலையை) உயர்த்தி சஜ்தாவுக்குச் சென்றுவிட்டதைப் பார்க்காத வரை நாங்கள் (சஜ்தாவுக்குச் செல்லாமல்) நின்றுகொண்டேயிருப்போம். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. (அதற்காக) அவர்கள் (சூரிய கிரகணத் தொழுகை) தொழு(வித்)தார்கள். (தொழுகை முடிந்ததும்) மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுதுகொண்டி ருக்கையில்) எதையோ எடுக்க முயன்ற தைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சி யி-ருந்து) பின் வாங்கியதையும் கண்டோமே (அது ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனக்குச் சொர்க்கம் எடுத்துக்காட்டப் பட்டது. அதி-ருந்து ஒரு (பழக்) குலையைப் எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளளவும் அதை நீங்கள் உண்டிருப்பீர் கள்” என்று கூறினார்கள்.43 அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஒரு தொழுகையை)த் தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது ஏறி பள்ளிவாச-ன் கிப்லா திசையில் சைகை செய்தவாறு, “உங்களுக்கு நான் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது இந்த (முன்) சுவரின் திசையில் சொர்க்கம் மற்றும் நரகத்தின் தோற்றம் காட்சியளிப்பதைக் கண்டேன். நன்மை தீமை(களின் விளைவு)களை இன்று போல் என்றும் நான் கண்டதில்லை” என மூன்று முறை கூறினார்கள்.44 அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “சில மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? தொழும்போது அவர்கள் வானத்தை நோக்கித் தமது பார்வையை உயர்த்துகின்றனர்!” என்று கூறினார்கள். இவ்வாறு செய்வது குறித்து நபி (ஸல்) அவர்கள் வன்மையாகவே கண்டித்தார் கள்; “இதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்களின் பார்வை பறிக்கப்பட்டுவிடும்” என்று குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்ப்பது தொடர்பாக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அ(வ்வாறு செய்வ)து ஓர் அடியாரின் தொழுகையை ஷைத்தான் பறித்துச் செல்வ(தற்கு வழிவகுப்ப)தாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சதுரமான கறுப்பு நிற ஆடையொன்றை அணிந்து தொழுதார் கள். அதில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. (தொழுது கொண்டிருந்தபோது அந்த வேலைப்பாடுகளின் பக்கம் தம் கவனம் சென்றுவிடவே,) இதன் வேலைப் பாடுகள் (தொழுகையி-ருந்து) என் கவனத்தை ஈர்த்துவிட்டன. இதை, (எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு, (அபூஜஹ்மிடமிருக்கும் வேலைப் பாடுகளற்ற) ‘அன்பிஜான்’ (நகர சாதாரண) ஆடையை என்னிடம் வாங்கிவாருங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குமுன் நின்று தொழுவித்துக்கொண்டிருந்தபோது, பள்ளிவாசலின் கிப்லா திசையி(லுள்ள சுவரி)ல் எச்சிலைக் கண்டார்கள். பின்னர் அதைச் சுரண்டிவிட்டார்கள். தொழுகை முடிந்ததும் (மக்களைப் பார்த்து), “உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருந்தால், அவரது முகத்துக்கெதிரே அல்லாஹ் இருக்கிறான். எனவே, தொழும்போது யாரும் தமது முகத்துக்கெதிரே (கிப்லா திசையில்) உமிழ வேண்டாம்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அபூபக்ர் (ரலி) அவர்கள் இமாமாக நிற்க) முஸ்-ம்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது (உடல் நலமில்லாமல் இருந்த) நபி (ஸல்) அவர்கள் (திடீரென எட்டிப்பார்த்து) மக்களைத் திகைப்புள்ளாக்கிவிட்டார்கள். (இதன் விவரம் வருமாறு:) நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் திரையை விலக்கித் தொழுகையில் அணிவகுத்து நின்றுகொண்டிருந்த மக்களைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (அறையி-ருந்து) வெளியே வர விரும்புகிறார்கள் என்று எண்ணிய அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர் களுக்காக (இடம் விட்டு), (முதல்) வரிசை யில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின்வாக்கில் வந்தார்கள். (நபி (ஸல்) அவர்களைத் திரும்பிப் பார்த்த மகிழ்ச்சியினால்) மக்கள் தமது (கவனம் சிதறி) தொழுகையில் குழப்பம் நேர்ந்துவிடுமோ என எண்ணலாயினர். உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து, “உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்” என்று சைகை செய்துவிட்டு (அறைக்குள் நுழைந்து) திரையைத் தொங்க விட்டார்கள். அன்றைய தினத்தின் இறுதியிலேயே அவர்கள் இறந்துவிட்டார்கள்.46 அத்தியாயம் :
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கூஃபாவின் ஆளுநர்) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி கூஃபாவாசிகள் (சிலர் கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டனர். எனவே, (அது குறித்து தீர விசாரித்த) உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை (பதவியி-ருந்து) நீக்கிவிட்டு, அம்மார் (ரலி) அவர்களை கூஃபாவாசிகளுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். சஅத் (ரலி) அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் முறையீடுகளில் ஒன்றாக இருந்தது. ஆகவே, உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து, “அபூஇஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழவைப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா?)” என்று கேட்டார்கள். அதற்கு அபூஇஸ்ஹாக் (சஅத் பின் அபீவக்காஸ்-ர-) அவர்கள், “அல்லாஹ் வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகாட்டிய முறைப் படியே நான் அவர்களுக்குத் தொழுவித்துவந்தேன்; அவர்கள் தொழுதுகாட்டி யதைவிட நான் குறைத்துவிடவில்லை. நான் இஷா தொழுகை தொழுவிக்கும்போது முதல் இரண்டு ரக்அத்களில் நீளமாக ஓதியும் பிந்திய இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.47 அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அபூஇஸ்ஹாக்! உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே” என்று கூறினார்கள். இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் ‘ஒருவரை’ அல்லது ‘சிலரை’ சஅத் (ரலி) அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பி வைத்து, சஅத் (ரலி) அவர்கள் தொடர்பாக கூஃபாவாசிகளிடம் விசாரணை நடத்தி னார்கள். விசாரிக்கச் சென்றவர் கூஃபாவாசி களிடம் விசாரணை மேற்கொண்டார். (கூஃபாவி-ருந்த) ஒரு பள்ளிவாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத் (ரலி) அவர்களை மெச்சி நல்ல வித மாகவே கூறினர். இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்தபோது, அந்தக் குலத்தைச் சேர்ந்த அபூசஅதா எனும் குறிப்புப் பெயர் கொண்ட உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்து, எங்களிடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்: “சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தாம் செல்லமாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிடமாட்டார். தீர்ப்பு அளிக்கும்போது நீதியுடன் நடக்கமாட்டார்” என்று (குறை) கூறினார். இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், “அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகளை நான் செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு, “இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய குற்றச்சாட்டில்) பொய் சொல்-யிருந்தால், பகட்டுக்காகவும் புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறை கூற முன்வந்திருந்தால், அவரது வாழ்நாளை நீட்டி (அவரைத் தள்ளாமையில் வாட்டி)விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். இதன் அறிவிப்பாளரான அப்துல் ம-க் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் (சஅத் அவர்கள்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனைகளுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக் கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன்; சஅத் அவர்களின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது” என்று கூறுவார். அப்துல் ம-க் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னா(ளி)ல் அவரை நான் பார்த்தி ருக்கிறேன். முதுமையினால் அவருடைய புருவங்கள் அவருடைய கண்கள்மீது விழுந்துவிட்டிருந்தன. அவர் சாலைகளில் செல்லும் அடிமைப் பெண்களை கிள்ளி அவர்களைத் துன்புறுத்துவார். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின் தோற்றுவாய் (எனும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை) ஓதாத வருக்குத் தொழுகையே கிடையாது.48 இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு அவர் முகமன் (சலாம்) சொன்னார். நபி (ஸல்) அவர்கள் பதில் (சலாம்) சொல்-விட்டு, “திரும்பச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு போன்றே தொழுதுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு ‘சலாம்’ சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர், “சத்திய(மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதைவிட அழகாக எனக்கு (தொழ)த்தெரியாது. எனவே, நீங்களே எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நீர் தொழுகைக்காக நின்றதும், ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் என்று) கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூஉவில் (குனிந்ததும் நிமிர்ந்துவிடாமல்) நன்கு நிலை கொள்ளும் அளவுக்கு நீர் ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்த நிலையில் நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, நிலை கொள்ளும் அளவுக்கு அமர்வில் உட்காருவீராக! இதையே (இதே வழிமுறையையே) உம்முடைய எல்லாத் தொழுகை களிலும் கடைப்பிடிப்பீராக!49 அத்தியாயம் :
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கூஃபாவாசிகள் கூறிய புகாருக்கு) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகாட்டிய முறைப்படியே நான் (கூஃபாவாசிகளான) அவர்களுக்கு மாலைத் தொழுகை(களான லுஹ்ர், அஸ்ர் ஆகிய) இரண்டையும் தொழுவித்து வந்தேன். (நபி-ஸல்) அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிட வில்லை; முதல் இரண்டு ரக்அத்களிலும் நான் நீளமாக ஓதுகிறேன். பிந்திய இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன்” என்று (விளக்கம்) கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், “உங்களைப் பற்றி நமது எண்ணமும் அதுவே!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தையும் (ஒரு ரக்அத்தில் ஓர் அத்தியாயம் வீதம்) வேறு இரண்டு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். (அவ்விரு ரக்அத்களில்) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தில் சுருக்கமாக ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள். அஸ்ர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) அல்ஃபாத்திஹா அத்தியாத்தையும் வேறு இரு அத்தி யாயங்களையும் ஓதுவார்கள். முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். அவ்வாறே, சுப்ஹு தொழுகையின் முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தில் சுருக்கமாக ஓதுவார்கள். அத்தியாயம் :
அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை யிலும் அஸ்ர் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதுவார்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். “அ(வர்கள் மெதுவாக ஓதுவ)தை நீங்கள் எவ்வாறு அறிந்துகொண்டிருந் தீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அவர்களது தாடி அசைவதை வைத்து (அறிந்துகொண்டோம்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். நான், “அவர்கள் (மெதுவாக) ஓதுவதை நீங்கள் எவ்வாறு அறிந்துகொள்ள முடிந்தது?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர்களது தாடி அசைவதை வைத்துத்தான்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஃபாத்திஹா அத்தி யாயத்தையும் (அவ்விரு ரக்அத்கள் ஒவ்வொன்றிலும்) மற்றோர் அத்தியாத் தையும் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ‘வல்முர்சலாத்தி உர்ஃபன்’ எனும் (குர்ஆனின் 77ஆவது) அத்தியாயத்தை ஓதுவதை (என் தாயார்) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். அப் போது அவர்கள், “என்னருமை மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீ இந்த அத்தியாயத்தை ஓதி எனக்கு (ஒன்றை) நினைவுபடுத்திவிட்டாய். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகை யில் இ(ந்த அத்தியாயத்)தை ஓதக் கேட்டதே நான் இறுதியாக அவர்களிட மிருந்து செவியுற்றதாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது: (மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.50 அத்தியாயம் :
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதியதை நான் செவியுற்றேன். அத்தியாயம் :
அபூராஃபிஉ (நுஃபைஉ பின் ராஃபிஉ-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் இஷா தொழுகை தொழுதேன். அதில் அவர்கள், ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி (அதில் சஜ்தா (21ஆவது) வசனம் வந்ததும்) சஜ்தா (ஓதலுக்குரிய சிரவணக்கம்) செய்தார்கள். ஆகவே, அது குறித்து நான் அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர்கள், அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் சஜ்தா செய்திருக்கிறேன். நான் அவர்களைச் சந்திக்கும்வரை (அதாவது இறக்கும்வரை) நான் அ(தை ஓதுவ)தற்காக சஜ்தா செய்துகொண்டுதானிருப்பேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷா தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (95ஆவது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதினார்கள். அத்தியாயம் :
அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் இஷா தொழுகையைத் தொழுதேன். அதில் அவர்கள், ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியா யத்தை ஓதி, (ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார் கள். ஆகவே, நான் (அவர்களிடம்), “என்ன இது? (ஏன் இந்த அத்தியாயத் திற்காக சஜ்தா செய்தீர்கள்?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின் னால் (தொழுதபோது) இ(ந்த அத்தி யாயத்தை ஓதிய)தற்காக சஜ்தா செய்திருக்கி றேன். அவர்களை நான் சந்திக்கும் (அதாவது இறக்கும்)வரை அ(தை ஓதிய)தற்காக சஜ்தா செய்துகொண்டுதானிருப்பேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களைவிட ‘அழகிய குர-ல்’ அல்லது ‘அழகிய ஓதல் முறையில்’ வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை. அத்தியாயம் :
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் சஅத் (பின் அபீவக்காஸ்-ர-) அவர்களிடம், “(கூஃபா நகர) மக்கள் தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (என்னிடம்) முறையிட்டனர். (இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “நானோ முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதுகிறேன். பிந்திய இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்துக்காட்டிய முறையைப் பின் பற்றுவதில் நான் (எந்தக்) குறையும் செய்யமாட்டேன்” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் உன்மையே கூறினீர்கள். ‘உங்களைப் பற்றி (நமது) எண்ணமும்’ அல்லது ‘உங்களைப் பற்றி எனது எண்ணமும்’ அதுதான்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் சென்று, (கடமையான) தொழுகைகளின் நேரம் குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழு கையை சூரியன் (நடுவானி-ருந்து மேற்கு நோக்கி) சாயும்போது தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். (எங்களில்) ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனா வின் கடைக் கோடி(யிலுள்ள தமது வீட்டு)க்குத் திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குன்றாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும். -மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) குறித்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறி னார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.- இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதிவரைத் தாமதப்படுத்து வதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; (அதை விரும்புவார்கள்.) இஷா தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப்பின் பேசிக்கொண்டிருப்பதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையைத் தொழுவித்து முடிப்பார்கள். அப்போது தொழுகையை முடிக்கும் ஒருவர் தமது அருகில் இருப்பவரை அறிந்துகொள்வார். (அந்த அளவுக்கு வெளிச்சம் வந்துவிட்டிருக்கும்.) நபி (ஸல்) அவர்கள் (சுப்ஹு தொழுகையின்) ‘இரு ரக்அத்களில்’ அல்லது ‘அவற்றில் ஒன்றில்’ அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்.51 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை நாங்களும் உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாங்களும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம். (தொழுகையில்) குர்ஆனின் அன்னை (யான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) விடக் கூடுதலாக வேறு எதையும் நீ ஓதாவிட்டாலும் (உமது தொழுகை) நிறைவேறிவிடும். ஆயினும், அதைவிட அதிகமாக நீ ஓதினால், அதுவே சிறந்ததாகும். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ‘உ(க்)காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்தி களுக்கும் இடையே திரையிடப்பட்டு (அவற்றை அவர்கள் கேட்க முடியாமல் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள்மீது விண்கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்தனர். அப்போது அக்கூட்டத்தார், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். ஷைத்தான்கள், “வானத்துச் செய்திகளுக் கும் எங்களுக்கும் இடையே திரையிடப் பட்டுவிட்டது; எங்கள்மீது விண்கொள்ளி கள் ஏவிவிடப்பட்டன” என்று பதிலளித் தனர். “புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும் பரவிச்) சென்று நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடையாக உள்ள இ(ந்தச் சம்பவத்)தை என்னவென்று ஆராயுங்கள்” என்றனர். அவ்வாறே திஹாமா நோக்கிச் சென்ற அந்த ஷைத்தான்கள் (எல்லாத் திசைகளை யும் ஆராய்ந்தபடி) நபி (ஸல்) அவர்களி டம் திரும்பிச் சென்றனர். அப்போது ‘உகாழ்’ சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் ‘நக்லா’ எனும் இடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத் தான்கள் கவனமாகச் செவி கொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்), “அல்லாஹ்வின் மீதாணையாக! வான் செய்திகளை (கேட்க முடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்” என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று, “எங்கள் கூட்டத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே, அதை நாங்கள் நம்புகிறோம் (இனி) ஒருபோதும் நம் இறைவனுக்கு நாங்கள் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்” என்று கூறினர். (இதையொட்டி) அல்லாஹ் தன் தூதருக்கு, “நபியே! நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது...” என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான். ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி ‘வஹீ’ மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தமக்கு (அல்லாஹ்வால்) பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) சப்தமிட்டு ஓதினார்கள்; தமக்குப் பிறப்பிக் கப்பட்ட உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) மெதுவாக ஓதினார்கள். (ஏனெனில்,) “உம் இறைவன் மறப்பவன் அல்லன்” (19:64) என்று அல்லாஹ் கூறு கின்றான். “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உண்டு” (33:21) என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.52 அத்தியாயம் :
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் நேற்றிரவு ‘அல்முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதி முடித்தேன்” என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரா? நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக ஓதிவந்த சரிநிகர் (பொருள் கொண்ட) அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன்” என்று கூறிவிட்டு, அல்முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள்.55 அத்தியாயம் :
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை யின் முத-ரண்டு ரக்அத்களிலும் ‘உம்முல் கிதாப்’ (குர்ஆனின் அன்னை எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும், இன்னும் இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் ‘உம்முல் கிதாப்’ (அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தை (மட்டும்) ஓதுவார்கள். (ஒரு சில) வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸ்ர் தொழுகையில் செய்வார் கள்; இவ்வாறே சுப்ஹு தொழுகையிலும் (முதல் ரக்அத்தில்) நீளமாக ஓதுவார்கள். அத்தியாயம் :
அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் கப்பாப் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகை யிலும் (குர்ஆன் வசனங்களை) ஓதுவார் களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். நாங்கள், “(அதை) நீங்கள் எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அவர்களது தாடி அசைவதை வைத்துத்தான்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகையின் முத-ரண்டு ரக்அத்களிலும் ‘உம்முல் கிதாப்’ (‘குர்ஆனின் அன்னை’ எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும் அதனுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தைவிட) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். அத்தியாயம் :
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை யின் முதலாவது ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள்; இரண்டாவது ரக்அத்தில் சுருக்கமாக ஓதுவார்கள். சுப்ஹு தொழுகையிலும் இவ்வாறே செய்வார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுவிப்பவர் (இமாம்), ‘ஆமீன்’ கூறும்போது நீங்களும் ‘ஆமீன்’ (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள். ஏனெனில், யார் ஆமீன் கூறு(ம் நேரமா) வது வானவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ‘ஆமீன்’ என்று கூற, விண்ணுலகில் வானவர்களும் ‘ஆமீன்’ கூற, இரு சாராரின் ஆமீன் கூறலும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டால், அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில்) இமாம், “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்” என்று ஓதியவுடன் நீங்கள், “ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)” என்று சொல்லுங்கள். ஏனெனில், யார் ‘ஆமீன்’ கூறு(ம் நேரமா) வது வானவர்கள் ‘ஆமீன்’ கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்-ர-) அவர்கள் கூறியதாவது: (தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்துகொண்டிருந்தபோது, நான் சென்று வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்துவிட்டேன். (பின்னர்) இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்து வானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.58 அத்தியாயம் :
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பஸ்ரா நகரில் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். (தொழுது முடித்தபின் அலீ (ரலி) அவர் களைச் சுட்டிக்காட்டி) “இந்த மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழுத தொழுகையை நினைவூட்டு(ம் வகையில் தொழுவிக்)கிறார்” என்று இம்ரான் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் நிமிரும்போதும் தாழும்போதும் தக்பீர் கூறுவார்கள்” என்றும் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துவந்தார்கள். அவர்கள் (ஒவ்வொரு முறை) குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகையை முடித்தபின், “நிச்சயமாக நான் உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகாட்டியதைப் போன்றே (மிகச் சரியாக) தொழுவிப்பவன் ஆவேன்” என்று குறிப்பிடுவார்கள். அத்தியாயம் :
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தா செய்யும்போது தக்பீர் கூறினார்கள்; (சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழும்போதும் தக்பீர் கூறினார்கள். தொழுகை முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு, ‘இவர் எனக்கு முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழு கையை நினைவூட்டிவிட்டார்’ அல்லது ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுத முறைப்படி நமக்குத் தொழுவித்தார்’ என்று கூறினார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இறையில்லம் கஅபாவை ஒட்டியுள்ள) ‘மகாமு இப்ராஹீம்’ அருகில் (தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதரை நான் கண்டேன். அவர் ஒவ்வொரு முறை குனியும் போதும் நிமிரும்போதும் எழும்போதும் தாழும் போதும் தக்பீர் கூறினார். (விளக்கம் கேட்கும் விதமாக இது குறித்து) நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், “தாயற்றுப்போவாய்! அது நபி (ஸல்) அவர்கள் தொழுத தொழுகை (போன்று) இல்லையா?” என்று கேட்டார்கள்.60 அத்தியாயம் :
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மக்காவில் ஒரு பெரியவருக்குப் பின்னால் (லுஹ்ர் தொழுகை) தொழுதேன். (அத்தொழுகையில்) அவர், இருபத்து இரண்டு தக்பீர்கள் கூறினார். இது குறித்து நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறுகையில், “அவர் ஓர் அறிவி-” என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உன் தாய் உன்னை இழக்கட் டும்; (அது) அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களின் வழிமுறைதான்” என்று கூறினார்கள்.61 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால், நின்ற நிலையில் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉ செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூஉவி-ருந்து தமது முதுகை உயர்த் தும்போது சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கி றான்) என்று கூறுவார்கள். பிறகு நின்ற நிலையில் ‘ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியன) என்பார்கள். -(இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘ரப்பனா வல(க்)கல் ஹம்த்’ என்று இடம்பெற்றுள்ளது.- பின்னர் (சஜ்தாவுக்காகக்) தாழும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) சஜ்தா செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (அந்த சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு தொழுகையை முடிக்கும்வரை தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் இவ்வாறே செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத் முதல்) அமர்வை முடித்து எழும்போதும் தக்பீர் கூறுவார்கள். அத்தியாயம் :
முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ்-ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூஉவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் நடுவில் வைத்துக் கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, “நாங்கள் இவ்வாறு (முதலில்) செய்துகொண்டிருந் தோம். பின்னர் அவ்வாறு செய்யக் கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள்மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (தொழுகையில்) தமது ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாக நிறைவேற்றாத ஒரு மனிதரை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள் (அந்த மனிதரிடம்), “நீர் தொழவே இல்லை. (இதே நிலையில்) நீர் இறந்துவிட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் எந்த நெறியில் அமைத்தானோ அந்த நெறிக்கு மாற்றமான ஒன்றிலேயே இறக்கிறீர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தொழுகையில் நபி (ஸல்) அவர்களது) நிற்றல், (அத்தஹிய்யாத்) அமர்வு ஆகி யவை நீங்கலாக அவர்களின் ருகூஉ, அவர்களது சஜ்தா, இரு சஜ்தாக்களுக் கிடையிலான இடைவெளி, ருகூஉவி-ருந்து அவர்கள் நிமிர்தல் ஆகிய அனைத்தும் ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் வந்து, (ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை முழுமையாக்காமல்) தொழுதார். பிறகு அவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு முகமன் (சலாம்) சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் (சலாம்) சொல்-விட்டு, “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர் (திரும்பிச் சென்று முன்பு போலவே அவசர அவசரமாகத்) தொழுது விட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு ‘சலாம்’ சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அந்த மனிதர், “சத்திய (மார்க்க)த் துடன் உங்களை அனுப்பியவன் மீதாணை யாக! இதைவிட அழகாக எனக்கு (தொழ)த் தெரியாது. எனவே, நீங்களே எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: நீர் தொழுகைக்காக நின்றதும் (அல்லாஹு அக்பர் என) தக்பீர் கூறு வீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூஉ வில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு (ஆற அமர நிதானத்துடன்) ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு அமர்வில் உட்காருவீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் (மீண்டும்) சிரவணக்கம் செய்வீராக! பிறகு இதையே (இதே வழிமுறையையே) உமது தொழுகை முழுவதிலும் கடைப்பிடிப்பீராக! அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது (தொழுகை யின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் “சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ” (இறைவா! எம் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம்; இறைவா! என்னை மன்னிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.63 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ எனக் கூறியபின் ‘அல்லாஹும்ம ரப்பனா வ ல(க்)கல் ஹம்த்’ என்று கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்யும்போதும் (ருகூஉவி-ருந்து) தமது தலையை உயர்த்தும்போதும் (அல்லாஹு அக்பர் என) ‘தக்பீர்’ கூறுவார்கள். இரண்டு சஜ்தாக்களை முடித்து (மேலே) எழும் போதும் அல்லாஹு அக்பர் என்று (தக்பீர்) கூறுவார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் (தொழுகையில்) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினால், நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ (இறைவா! எம் அதிபதியே! உனக்கே புகழ் அனைத்தும் உரியன) என்று கூறுங்கள். ஏனெனில் (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவரது (துதிச்)சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகின்றதோ அவர், அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள், “கிட்டத்தட்ட நபி (ஸல்) அவர்கள் தொழு வித்ததைப் போன்றே உங்களுக்கு நான் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் இறுதி ரக்அத்தில் (ருகூஉவி-ருந்து எழுந்து) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறியபிறகு, ‘குனூத்’ (சோதனை காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆதரவாகவும் (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஆரம்பக் காலத்தில்) குனூத் (எனும் சிறப்புப் பிரார்த்தனை) மஃக்ரிப் தொழுகை யிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் (நடைமுறையில்) இருந்தது. அத்தியாயம் :
ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுதுகொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியபோது, ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னா-ருந்த ஒரு மனிதர் “ரப்பனா வ ல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ” (எங்கள் இறைவா! புகழ் அனைத் தும் உனக்கே உரியன. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்) என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(தொழுகையில் இந்த வார்த்தை களைச்) சொன்னவர் யார்?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான்தான்” என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள், இதைத் தம்மில் முத-ல் பதிவு செய்வது யார் என(த் தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஸாபித் (அல்புனானீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறையை விவரிக்கும் முகமாக தொழுது காட்டுவார்கள். அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியதும் ‘(தாம் தொழுகை யில் இருக்கிறோம் என்பதையே) அவர்கள் மறந்துவிட்டார்கள்’ என்று நாங்கள் சொல்லும் அளவுக்கு (நீண்ட நேரம் அசையாமல்) நிற்பார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது ருகூஉவும், சஜ்தாவும், ருகூஉவி-ருந்து அவர்கள் எழுந்தா(ல் நிலை கொள்ளுத)லும், இரு சஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன. அத்தியாயம் :
அபூகிலாபா (அப்துல்லாஹ் பின் ஸைத் -ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எப்படித் தொழு வார்கள் என எங்களுக்கு மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் (தொழுது)காட்டினார்கள். இ(வ்வாறு அவர்கள் செய்து காட்டிய)து எந்தத் தொழுகையின் நேரத்திலும அல்ல. அப்போது அவர்கள் (நன்கு) நிலை கொண்டு நின்றார்கள். பின்னர் ருகூஉ செய்தார்கள். ருகூஉவையும் நிறுத்தி நிதானமாகச் செய்தார்கள். பின்னர் தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் அசையாமல் நின்றார்கள். அவர்கள் இதோ நம்முடைய இந்தப் பெரியவர் அபூபுரைத் (ரஹ்) அவர்கள் தொழுவதைப் போன்று எங்களுக்குத் தொழுதுகாட்டினார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபுரைத் (அம்ர் பின் சலிமா-ரஹ்) அவர்கள் (தொழுகையின் இரண்டாவது) சஜ்தாவி-ருந்து தலையை உயர்த்தியதும் (சற்று நேரம்) நேராக அமர்ந்திருப்பார். பிறகுதான் எழுவார். அத்தியாயம் :
அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் (ரஹ்), அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (மதீனாவின் ஆளுநராயிருந்தபோது) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கடமை யான தொழுகைகளிலும் அஃதல்லாத (கூடுதல்) தொழுகைகளிலும் ரமளான் மாதத்திலும் ரமளான் அல்லாத மாதத்திலும் ஒவ்வொரு தொழுகையிலும் ‘தக்பீர்’ கூறுவார்கள். அதாவது (தொழுகைக்காக) நின்றதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉ செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (ருகூஉவி-ருந்து நிமிரும்போது) ‘சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறுவார்கள். பிறகு சஜ்தா செய்வதற்குமுன் (நின்று கொண்டு) ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்த்’ (எங்கள் இறைவா! உனக்கே புகழனைத்தும் உரியன) என்று கூறுவார்கள். பின்னர் சஜ்தாவுக்காகத் தாழும்போது ‘அல்லாஹு அக்பர்’ என்று (தக்பீர்) கூறுவார்கள். பிறகு சஜ்தாவி-ருந்து (சிறு அமர்வுக்காக) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் (இரண்டாவது) சஜ்தா செய்யும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சஜ்தாவி-ருந்து தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்து விட்டு (மூன்றாவது ரக்அத்திற்காக) எழும்போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகை முடியும்வரை ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறே செய்வார்கள். தொழுகை முடிந்ததும், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழு வதில் உங்களிலேயே நான்தான் மிகவும் சரியாகத் தொழுபவன் ஆவேன். இவ்வுலகைப் பிரியும்வரை இதுவே நபி (ஸல்) அவர்களின் தொழுகையாக இருந்தது” என்று குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தும் போது ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்; ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்த் (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று கூறியபின் சில மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களு(டைய நலனு)க்காகப் பிரார்த்திப்பார்கள். அப்போது “இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபிஆ ஆகியோரையும் இறைநம்பிக்கையாளர்களில் பலவீனர்களையும் காப்பாற்றுவாயாக! இறைவா! ‘முளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத் தூதர்) யூசுஃப் அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று (இவர்களுக்கும்) அளிப்பாயாக!” என்று பிரார்த்திப்பார்கள். (மதீனாவுக்கு) கிழக்கில் வாழ்ந்த ‘முளர்’ குலத்தார் அன்று நபி (ஸல்) அவர்களுக்கு எதிரிகளாய் இருந்தனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தாம் பயணம் செய்த) குதிரையி-ருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது வலப் பக்கத்தில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. இதையொட்டி நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது தொழுகையின் நேரம் வந்துவிடவே, அவர்கள் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழுவித்தார்கள். நாங்களும் அமர்ந்து கொண்டோம் -சுஃப்யான் (ரஹ்) அவர் களின் மற்றோர் அறிவிப்பில் ‘நாங்கள் அமர்ந்தவாறே தொழுதோம்’ என்று இடம்பெற்றுள்ளது.- அவர்கள் தொழுகையை முடித்ததும், “பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்த்’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் உரியன) என்று கூறுங்கள்; அவர் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால், நீங்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்களிடம், “இவ்வாறுதான் மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம் (இவ்வாறே அறிவித்தார்கள்)” என்று பதிலளித்தார்கள். உறுதியாக மஅமர் (ரஹ்) அவர்கள், (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து இதை (நன்கு) மனனமிட்டார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களும் (ருகூஉவிலிருந்து எழும்போது கூற வேண்டிய துதிச் சொல்லை) ‘வ ல(க்)கல் ஹம்த்’ என்றே அறிவித்தார்கள். மேலும், (நபி (ஸல்) அவர்களுக்குச் சிராய்ப்பு ஏற்பட்டது தொடர்பாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து), “நபி (ஸல்) அவர்களின் வலப் பக்கத்தில் (சிராய்ப்பு ஏற்பட்டது)” என்றே நான் மனனமிட்டேன். நாங்கள் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றபோது இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள், “நான் ஸுஹ்ரீ அவர்களுக்கு அருகில் இருந்தேன்; ‘நபி (ஸல்) அவர்களது வலப் பக்க கணைக்கா-ல் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது’ என்றே அறிவித்தார்கள்” எனக் குறிப்பிட்டார்கள் அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத சந்திரனைக் காண முடியும் என்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை (ஐயம் கொள்ளமாட்டோம்), அல்லாஹ்வின் தூதரே!” என்றார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காணலாம் என்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கும் மக்கள், “இல்லை” என்று பதிலளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறுதான் உறுதியாக நீங்கள் இறைவனைக் காண்பீர்கள்” என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்: மறுமை நாளில் மக்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படுவார்கள். அப்போது “(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக்கொண்டிருந்தார்களோ அதைப் பின்பற்றிச் செல்லட்டும்!” என்பான் (இறைவன்). ஆகவே, சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறுசிலர் (சாத்தான்கள், சிலைகள் போன்ற) தீய சக்திகளைப் பின்பற்றிச் செல்வர். இறுதியில் (என்னுடைய) இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்கியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் (கலந்து) இருப்பார்கள். அப்போது வ-மையும் மாண்பும் மிக்க இறைவன் (அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, “நான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள் “எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம்; எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்” என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, “நானே உங்கள் இறைவன்” என்பான். அப்போது அவர்கள், “நீ எங்கள் இறைவன்தான்” என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேலே பாலம் அமைக்கப்படும். தம் சமுதாயத்தாருடன் அதைக் கடந்து செல்லும் இறைத்தூதர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர வேறுயாரும் பேசமாட்டார்கள். அன்றைய தினம் ‘இறைவா! காப்பாற்று! காப்பாற்று!’ என்பதே இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், “அந்நரகத்தி(ன் பாலத்தி)ல் கருவேல மரத்தின் முற்களைப் போன்ற கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும்.” என்று கூறிவிட்டு, “கருவேல மரத்தின் முள்ளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (பார்த்திருக்கிறோம்)” என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்றிருந்தாலும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை, அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் தம் (தீய) செயல்களால் பேரழிவுக்கு ஆளாகுவோரும் இருப்பார் கள். (கொக்கிகளால்) கிழிக்கப்பட்டு, பின்னர் தப்பிப்போரும் இருப்பார்கள். இறுதியாக இறைவன் நரகத்திற்குரிய வர்களில் தான் நாடிய சிலர்மீது கருணை காட்ட நினைக்கும்போது வானவர்களிடம், அல்லாஹ்வை வழிபட்டு வந்தவர்களை நரகத்தி-ருந்து வெளியேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே அவர் களை வானவர்கள் வெளியேற்றுவார்கள். சஜ்தா செய்த அடையாளங்களை வைத்து அவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். சஜ்தா அடையாளங்களைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆகவே, (அல்லாஹ்வை வழிபட்டவர் கள்) நரகத்தி-ருந்து வெளியேற்றப்படு வார்கள். சஜ்தா அடையாளத்தைத் தவிர மற்ற உறுப்புகளை எல்லாம் நரகம் தீண்டிவிட்ட நிலையில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அங்கமெல்லாம் கருகியவாறு நரகத்தி-ருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள்மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப்பொலிவு டன்) நிறம் மாறிவிடுவார்கள். பின்னர் அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிப்பான். இறுதியாக ஒரே ஒரு மனிதர் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சியிருப்பார். அவர்தான் நரகவாசிகளில் கடைசியாகச் சொர்க்கத்திற்கு செல்பவர். அவர் நரகத்தை முன்னோக்கியபடி, “இறைவா! நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பு வாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் சுவாலை என்னைக் கரித்துவிட்டது.” என்று கூறுவார். அப்போது அல்லாஹ், “இ(ப்போது நீ கோரிய)து உனக்குச் செய்து கொடுக்கப் பட்டால் வேறொன்றையும் நீ கோரலாம் அல்லவா?” என்று கேட்பான். அதற்கு அம்மனிதர், “இல்லை, உன் கண்ணியத் தின் மீதாணையாக! (வேறு எதையும் கேட்கமாட்டேன்)” என்பார். அந்த மனிதர் அல்லாஹ்விடம், அவன் நாடிய உறுதிமொழியையும் வாக் குறுதிகளையும் வழங்குவார். நரகத்தை விட்டு அம்மனிதரின் முகத்தை (வேறு பக்கம்) அல்லாஹ் திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவரது முகத்தைத் திருப்பியதும் அம்மனிதர் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்தவாறு அல்லாஹ் நாடிய நேரம்வரை அமைதியாக இருப்பார். பிறகு “இறைவா! என்னைச் சொர்க்கத் தின் வாசல்வரை கொண்டுசெல்வாயாக!” என்று கேட்பார். அதற்கு இறைவன், “முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டாய் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித் தாயே?” என்று கேட்பான். அதற்கு அம்மனிதர், “இறைவா! நான் உன் படைப்புக்களிலேயே நற்கதியற்ற வனாய் ஆகிவிடக் கூடாது” என்று கூறுவார். அதற்கு இறைவன், “(நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்கலாம் அல்லவா?” என்பான். அம்மனிதர், “இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! இஃதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டேன்” என்பார். இது குறித்து இறைவனிடம், அவன் நாடிய உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதர் அளிப்பார். உடனே இறைவன் அந்த மனிதரை சொர்க்கத்தின் வாசல்வரை கொண்டுசெல்வான். அதன் வாசலை அவர் அடைந்ததும் அதன் வசந்தத்தையும் அதிலுள்ள செழுமை, சந்தோஷம் ஆகியவற்றையும் காண்பார். பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவர் அமைதியாக இருப்பார். அதன்பின் அந்த மனிதர், “இறைவா! என்னைச் சொர்க்கத்திற்குள் அனுமதிப்பாயாக!” என்று கூறுவார். அதற்கு உயர்ந்தோன் அல்லாஹ், “ஆதமின் மகனே! உனக்குக் கேடுதான்! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய்? முன்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட் டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் நீ அளிக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அம்மனிதர், “இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நற்கதியற்ற வனாய் ஆக்கிவிடாதே” என்பார். இம்மனிதனின் நிலை கண்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சிரிப்பான். பிறகு அவருக்குச் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதரிடம், “நீ ஆசைப்படுவதைக் கேள்!” என்று கூறுவான். அம்மனிதரும் தாம் ஆசைப் படுவதைக் கூறுவார். இறுதியில் அவர் தம் ஆசைகள் யாவும் முற்றுப்பெறும்போது (அவரிடம்) இறைவன், “இதைவிட அதிகமானதை நீ ஆசைப்படு!” என்று சொல்-க்கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப்பெற்றுவிடும்போது உயர்ந்தோன் அல்லாஹ், “உனக்கு இதுவும் உண்டு. இதைப் போன்று இன்னொரு மடங்கும் உண்டு” என்பான். இதன் அறிவிப்பாளரான அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தமக்கு இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “உனக்கு இதுவும் உண்டு. இதைப் போன்று பத்து மடங்கும் உண்டு’ என்று அல்லாஹ் கூறியதாகத்தானே நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ‘உனக்கு இதுவும் உண்டு. இதுபோன்று இன்னொரு மடங்கும் உண்டு’ என்று அல்லாஹ் கூறியதாகவே மனனமிட்டேன்” என்றார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், “இதுவும் உண்டு. இதுபோன்று பத்து மடங்கும் உண்டு” என்றே நான் நபி (ஸல்) அவர்களிட மிருந்து செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மா-க் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழும்போது (சஜ்தாவில்) தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கை (புஜங்)களையும் விரி(த்துவை)ப்பார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் (நிதானத்தோடு) முழுமை யாக நிறைவேற்றாத ஒரு மனிதரை ஹுதைஃபா (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர் தொழுது முடித்ததும் அவரிடம் ஹுதைஃபா (ரலி) அவர்கள், “நீர் தொழவே இல்லை” என்று கூறினார்கள். மேலும், “(இதே நிலையில்) நீர் இறந்து விட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமான வழியிலேயே இறந்தவராவீர்” என்று அவர்கள் கூறிய தாகவே நான் கருதுகிறேன். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரண்டு கால் (நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் (இறைவனால்) கட்டளையிடப்பட்டார்கள். (சஜ்தாவில்) தலைமுடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாது என்றும் அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.66 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழு உறுப்புக்கள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நாம் கட்டளையிடப் பட்டுள்ளோம்; ஆடையையோ முடி யையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் நாம் கட்டளையிடப் பட்டுள்ளோம். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவ ரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எமக்கு (பின்வருமாறு) அறிவித்தார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுதுகொண்டிருந்தோம். அவர்கள் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறியதும், அவர்கள் (சஜ்தாவிற்குச் சென்று) நெற்றியைத் தரையில் வைக்காத வரை எங்களில் யாரும் (சஜ்தாவிற்காக) தமது முதுகை வளைக்கமாட்டார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- (நெற்றியைக் குறிப்பிடும்போது) தமது மூக்கை நோக்கி தமது கையால் (மூக்கு உட்பட என்பது போல்) சைகை செய்தார்கள்- தொடர்ந்து “நாம் ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்றும் கூறினார்கள். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, “எங்களுடன் தாங்கள் பேரீச்சந்தோட்டத்திற்கு வரக் கூடாதா? நாம் (அங்கு சென்று) பேசிக்கொண்டி ருக்கலாமே!” என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அவர்களிடம்) நான், “லைலத்துல் கத்ர் (எனும் மகத்தான இரவு) குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்” என்றேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் இஃதிகாஃப் இருந்தோம். அப்போது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “நீங்கள் தேடக்கூடிய (லைலத்துல் கத்ர் ஆன)து உங்களுக்கு எதிர்வரும் நாட்களில் உள்ளது” என்றார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்து நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “நீங்கள் தேடக்கூடியது உங்களுக்கு எதிர்வரும் நாட்களில் உள்ளது” என்று கூறினார்கள். ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்: யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார் களோ அவர்கள் (பள்ளிவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில், லைலத் துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கும்படி செய்யப்பட்டேன். நிச்சயமாக அது இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாளில் உள்ளது. நான் ஈரமான களி மண்ணில் சஜ்தா செய்வதைப் போன்று (கனவு) கண்டேன். (அன்று மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாச-ன் கூரை, பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது. வானத்தில் (மழைக் கான அறிகுறி) எதையும் நாங்கள் காணவில்லை. (இவ்வாறிருக்க) திடீரென ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அன்று எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நெற்றியின் மீதும் மூக்கு ஓரத்திலும் ஈரமான களிமண் படிந்திருந்ததைக் கண்டேன். இது அவர்களது கனவை மெய்ப்படுத்துவதாக அமைந்தது. அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் காலத்து) மக்கள் தமது கீழாடை சிறியதாக இருந்ததால் அதைத் தம் பிடரிகள்மீது முடிந்துகொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். எனவேதான், “ஆண்கள் அமர்வில் நேராக உட்காராத வரை நீங்கள் உங்கள் தலையை (சஜ்தாவி-ருந்து) உயர்த்த வேண்டாம்” எனப் பெண்களுக்குக் கூறப் பட்டிருந்தது.67 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்; தமது ஆடையோ முடியோ (தரையில் படாத வாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளை யிடப்பட்டார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதென வும் கட்டளையிடப்பட்டுள்ளேன். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110:3ஆவது வசனத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் வகையில், தமது (தொழு கையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் அதிகமாக ‘சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க, அல்லாஹும் மஃக்ஃபிர்லீ’ (இறைவா! எங்கள் அதி பதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம். இறைவா! என்னை மன்னிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.68 அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது ருகூஉ, சஜ்தா, இரு சஜ்தாக்களுக்கு இடையில் அவர்கள் அமர்வது ஆகியன ஏறக்குறைய ஒரே (கால) அளவில் அமைந்திருந்தன. அத்தியாயம் :
ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் பார்த்ததைப் போன்று நான் உங்களுக்குத் தொழுவிப்பதில் எந்தக் குறையும் வைக்கமாட்டேன்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் (தொழுவித்தபோது) ஒன்னறச் செய்தார்கள். ஆனால், அதை நீங்கள் செய்வதை நான் பார்த்ததில்லை. அனஸ் (ரலி) அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தி (நீண்ட நேரம்) நிற்பார்கள். எந்த அளவுக்கென்றால் ‘அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார் கள்’ என்று ஒருவர் கூறிவிடலாம். இரு சஜ்தாக்களுக்கு இடையிலும் அவர்கள் (நீண்ட நேரம் அமர்ந்திருப்பார்கள்). எந்த அளவுக்கென்றால் ‘அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள்’ என்று ஒருவர் கூறிவிடலாம். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினாôர்கள்: சஜ்தாவில் நடுநிலையைக் கையாளுங்கள். உங்களில் யாரும், நாய் பரப்பிவைப்பதைப் போன்று தம் கைகளைப் பரப்பி வைக்க வேண்டாம். இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
மா-க் பின் அல்ஹுவைரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தமது தொழு கையின் ஒற்றைப்படையான ரக்அத்களின் போது நிமிர்ந்து உட்காராமல் (அடுத்த ரக்அத்திற்காக) எழமாட்டார்கள். அத்தியாயம் :
அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவி-ருந்த) எங்களிடம் மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, “உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமையான) தொழுகையை (இப்போது தொழுவது) என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுது காட்டுவதே என் நோக்கம்” என்று கூறிவிட்டு, எங்களது இப்பள்ளிவாச-ல் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். இதன் அறிவிப்பாளரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்போது நான் அபூகிலாபா (ரஹ்) அவர்களிடம், “மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அபூகிலாபா (ரஹ்) அவர்கள், “இதோ இந்தப் பெரியவர்-அம்ர் பின் சலிமா அவர்கள் -தொழுவதைப் போன்றிருந்தது” என்று பதிலளித்தார்கள். அய்யூப் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: அந்தப் பெரியவர் தக்பீரை முழுமை யாகக் கூறுவார். இரண்டாவது சஜ்தாவிலி ருந்து எழும்போது அமர்ந்துவிட்டு, பூமியில் (கைகளை) ஊன்றி பின்பு எழுவார். அத்தியாயம் :
சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) எங்களுக்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் சஜ்தாவி-ருந்து தமது தலையை உயர்த்தியபோதும் சஜ்தா செய்யும்போதும் (சஜ்தாவி-ருந்து தமது தலையை) உயர்த்தியபோதும் இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழுந்தபோதும் சப்தமாக ‘தக்பீர்’ கூறினார்கள். (அது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது) “இவ்வாறே நபி (ஸல்) அவர்களை நான் (தொழக்)கண்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவில்) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) ஒரு தொழுகை யைத் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தா செய்தபோது ‘தக்பீர்’ கூறினார்கள்; (சஜ்தாவி-ருந்து தலையை) உயர்த்திய போதும் ‘தக்பீர்’ கூறினார்கள்; இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழுந்தபோதும் ‘தக்பீர்’ கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் சலாம் கொடுத்து முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘இவர் நமக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்று தொழுவித்தார்’ அல்லது ‘இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத் அமர்வில்) உட்காரும்போது சம்மணமிட்டு உட்கார்வதை நான் பார்த்துவந்தேன். ஆகவே, நானும் அவ்வாறே செய்வேன். அப்போது நான் வயதில் சிறியவனாக இருந்தேன். இதைக் கண்ட (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அவ்வாறு செய்யக் கூடாதென என்னைத் தடுத்துவிட்டு, “தொழுகையில் உட்காரும் (சுன்னத்தான) முறை என்னவென்றால், உன் வலக் காலை நட்டு வைத்து, இடக் காலை மடித்து (படுக்க) வைப்பதாகும்” என்று கூறினார்கள். “அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(முதுமை யின் காரணத்தால்) என் கால்கள் என்னைத் தாங்காது” என்று பதிலளித் தார்கள். அத்தியாயம் :
முஹம்மத் பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக்கொண்டோம். அங்கிருந்த அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தொழுகை (முறை) பற்றி உங்களில் நானே நன்கு மனனமிட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; அவர்கள் (முதல்) தக்பீர் கூறும்போது தம் கைகளைத் தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூஉ (குனிவு) செய்யும்போது தம் கைகளை முழங்கால்கள்மீது நன்கு ஊன்றிக்கொள்வார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக)ச் சாய்ப்பார்கள். அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தும்போது, முதுகெலும்புகளில் ஒவ்வொன்றும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமிர்ந்து நிற்பார்கள். சஜ்தா செய்யும்போது அவர்கள் தம் கைகளைப் பரப்பி வைக்கவுமாட்டார்கள்; அவற்றை விலா வுடன் ஒடுக்கி வைக்கவுமாட்டார்கள்; கால்விரல் முனைகளைக் கிப்லாவை நோக்கி வைப்பார்கள். இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய் யாத் அமர்வில்) அமரும்போது தமது இடக் கால்மீது அமர்ந்து வலக் காலை நட்டு வைப்பார்கள். இறுதி ரக்அத்தில் (அத்தஹிய்யாத் அமர்வில்) உட்காரும் போது இடக் காலை (குறுக்கு வாட்டில் வலப்புறம்) கொண்டுவந்து, வலக் காலை நட்டு வைத்து, தமது புட்டம் தரையில் படியுமாறு உட்காருவார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை எங்களுக்கு லுஹ்ர் தொழுகை தொழுவித் தார்கள். அப்போது முந்திய இரு ரக் அத்கள் முடிந்ததும் (அத்தஹிய்யாத் அமர்வில்) உட்காராமலேயே எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்துவிட்டனர். நபியவர்கள் தொழுகையை முடித்து, சலாம் கொடுப்பதை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, அமர்ந்தபடியே நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள்; சலாம் கொடுப்பதற்குமுன் (மறதிக்காக) இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் சலாம் கொடுத்தார்கள்.72 இதன் அறிவிப்பாளரான இப்னு புஹைனா (ரலி) அவர்கள், பனூ அப்தி மனாஃப் குலத்தாரின் நட்புக் கூட்டமான அஸ்த் ஷநூஆ குலத்தைச் சேர்ந்த நபித்தோழர் ஆவார். அத்தியாயம் :
அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். (முதலாவது அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார வேண்டிய திருக்க, அவர்கள் அதில் உட்காராமலேயே எழுந்துவிட்டார்கள். தொழுகையின் இறுதியை அடைந்ததும் (சலாமுக்குமுன்) உட்கார்ந்தபடியே (மறதிக்கான) இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.73 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது, ‘அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, வ மீக்காயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலான் வ ஃபுலான்’ (ஜிப்ரீல்மீதும் மீக்காயீல்மீதும் சாந்தி உண்டாகட்டும். இன்னார் மீதும் இன்னார்மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறுபவர்களாக இருந்தோம். (தொழுகை முடிந்ததும்) எங்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி, “நிச்சயமாக அல்லாஹ் தான் ‘சலாம்’ (எனும் சாந்தி அளிப்பவன்) ஆவான். உங்களில் ஒருவர் தொழு(கை யின் அமர்வில் இருக்கு)ம்போது, “அத்தஹிய்யாத்து -ல்லாஹி வஸ்ஸல வாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மத் துல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா, வ அலா இபாதில்லாஹிஸ் ஸா-ஹீன்” என்று கூறட்டும்! (பொருள்: சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்கைகளும் வழிபாடுகளும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் அனைவர்மீதும் சாந்தி உண்டாகட்டும்.) இதை நீங்கள் கூறினால், வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடி யார்கள்மீதும் சலாம் கூறியதாக அமையும். “அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிகூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதிகூறுகிறேன்) என்றும் கூறட்டும்!” என்றார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “எனது தொழுகையில் நான் பிரார்த்திப் பதற்கு (ஏற்ற) ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன், வ லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இன்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்” என்று கூறுங்கள் என்றார்கள். (பொருள்: இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங் களை மன்னிக்க முடியாது. எனவே, உன் தரப்பி-ருந்து எனக்கு மன்னிப்பு அளிப் பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கருணை யாளனும் ஆவாய்.) அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருக்கும்போது, ‘அஸ்ஸலாமு அலல்லாஹி மின் இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலான்’ (அடியார் கள் சார்பாக அல்லாஹ்வுக்கு சலாம் உண்டாகட்டும்; இன்னார் இன்னாருக்கும் சலாம்) என்று கூறிக்கொண்டிருந்தோம். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “அல்லாஹ் வின் மீது சலாம் உண்டாகட்டும்” என்று கூறாதீர்கள் ஏனெனில், அல்லாஹ்தான் ‘சலாம்’ (சாந்தி அளிப்பவன்) ஆக இருக்கின்றான். மாறாக, ‘(சொல், செயல், பொருள் வடிவிலான) எல்லாக் காணிக்கை களும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் கள் அனைவர்மீதும் சலாம் உண்டா கட்டும்” எனக் கூறுங்கள். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்கள் மீதும் சலாம் கூறியதாக அமையும். “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை என்று நான் உறுதிகூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதிகூறுகிறேன்” என்றும் கூறுங்கள். இதன் பிறகு உங்களுக்கு விருப்பமான பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்து (வேண்டி)க்கொள்ளுங்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதை நான் கண்டேன். அவர் களது நெற்றியில் களிமண் படிந்திருந்த தையும் நான் கண்டேன். அத்தியாயம் :
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ‘சலாம்’ கொடுத்து முடித்த தும் பெண்கள் எழுந்து (சென்று)விடுவார் கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்குமுன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றி ருப்பார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகையில், “அல்லாஹ் நன்க றிந்தவன்! தொழுகை முடிந்து திரும்பும் ஆண்கள் பெண்களிடம் வருவதற்குமுன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிட வேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு வீற்றிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள். அத்தியாயம் :
இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுவோம். நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுக்கும்போதே நாங்களும் சலாம் கொடுப்போம். அத்தியாயம் :
முஹம்மத் பின் முஸ்-ம் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களை எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் எங்கள் வீட்டி-ருந்த வாளியொன்றி -ருந்து நீர் அள்ளி ஒரு முறை உமிழ்ந்த தும் எனக்கு நினைவிருக்கிறது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் கடமையான (ஃபர்ள்) தொழுகையை முடிக்கும்போது சப்தமாக (இறைவனைப் போற்றி) ‘திக்ர்’ செய்யும் நடைமுறை நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது. அவ்வாறு மக்கள் கூறக் கேட்டால், அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை (மக்கள் உரக்கக் கூறும்) தக்பீரை வைத்து நான் அறிந்துகொள்வேன். (இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம் பெற்றுள்ள இரண்டாவது அறிவிப்பாள ரான) அபூமஅபத் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமைகளில் வாய்மையாளர் ஆவார். அவரது இயற்பெயர் நாஃபித் என்பதாகும். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களி டம் வந்து, “செல்வச் சீமான்கள் உயர்ந்த பதவிகளையும் நிலையான இன்பங்களை யும் (தட்டிக்)கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும், தங்களின் அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவழிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே!)” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட (செல்வர்)வர்களை நீங்கள் தொட்டு விடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களைத் தொட இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர் களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர் கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர (அவர்களால் அச்சிறப்பை அடைய முடியாது). (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; தஹ்மீத் (அல்ஹம்து-ல் லாஹ்) கூறுங்கள்; தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர், நாம் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்து-ல்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்” என்றனர். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி(ச் சென்று இதுபற்றி வினவி)னேன். நபியவர்கள், “சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து-ல்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றையும் 33 தடவைக் கூறியதாக ஆகும்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு எழுதுமாறு என்னிடம் சொன்ன கடிதத்தில் பின்வரும் தகவலையும் குறிப்பிட்டிருந்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும், “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்- ஷையின் கதீர். அல்லாஹும்ம! லா மானிஅ -மா அஉதைத்த, வலா முஉத்திய -மா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத்” என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் யாருமில்லை (எது மில்லை). ஆட்சியதிகாரம் அவனுக்குரியது. புகழனைத்தும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ள வன். இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்ப வன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. செல்வம் உடைய எவருக்கும் அவரது செல்வம் உன்னிடம் எந்தப் பயனும் அளிக்க முடியாது.) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்ஜத்’ எனும் சொல்லுக்கு ‘செல்வம்’ என்பது பொருள். அத்தியாயம் :
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுவித்து முடித்ததும் எங்களை நோக்கித் தமது முகத்தை நேராகத் திருப்பி (அமர்ந்து)விடுவார்கள். அத்தியாயம் :
ஸைத் பின் கா-த் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹுதைபியா’ எனும் இடத்தில் எங்களுக்கு சுப்ஹு தொழுகை தொழுவித்தார்கள். -அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர் களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர். அப்போது “என்னை நம்பக்கூடியவர் களும் (என்னை) மறுக்கக்கூடியவர் களுமாக என் அடியார்கள் (இரு பிரிவின ராக) உள்ளனர். ‘அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்கள் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்கள் ஆவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்கள் ஆவர்’ என இறைவன் கூறினான்” என்று நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தாôர்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷா தொழுகையைப் பாதி இரவுவரை தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார் கள். பிறகு (எங்களுக்கு) தொழுவித்துவிட்டு தமது முகத்தை எங்களை நோக்கி நேராகத் திருப்பி (அமர்ந்து), “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்வரை அத்தொழுகை யிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள்.75 அத்தியாயம் :
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் கடமை யான தொழுகையைத் தொழுத இடத்திலேயே (கூடுதலான தொழுகை களைத்) தொழுவார்கள். (அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் பேரர்) காசிம் (ரஹ்) அவர்களும் இவ்வாறே செய்வார்கள். “இமாம் (கடமையான தொழுகையைத் தொழுவித்த) தமது இடத்திலேயே கூடுதலான தொழுகைகளைத் தொழக் கூடாது” என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. அது ஆதாரபூர்வமானதன்று.76 அத்தியாயம் :
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ கொடுத்ததும் அதே இடத்திலேயே சிறிது நேரம் (அமர்ந்து) இருப்பார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “தொழுகையை முடித்த பெண்கள் (முத-ல்) சென்றுவிடட்டும் என்பதற்காகவே (நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்துகொண்டிருந்தார்கள்) என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கறிந்தவன். அத்தியாயம் :
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) அஸ்ர் தொழுகை தொழுதேன். அவர்கள் ‘சலாம்’ கொடுத்ததும் மக்களைத் தாண்டிக்கொண்டு தம் துணைவியரில் ஒருவரது இல்லம் நோக்கி விரைந்து சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வந்தபோது, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்புற்றிருப்ப தைக் கண்டார்கள். எனவே, “எங்களிடம் இருந்த (ஸகாத் நிதியான) தங்கக்கட்டி ஒன்று (தொழுது கொண்டிருக்கும்போது) என் நினைவுக்கு வந்தது. அது (பற்றிய சிந்தனை தொழுகை யில் கவனம் செலுத்த விடாமல்) என்னைத் தடுத்துவிடுவதை நான் வெறுத்தேன். ஆகவே, நான் (சென்று) அதைப் பங்கிட்டு விடுமாறு பணித்(துவிட்டு வந்)தேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: வலப் பக்கம் திரும்புவதே கடமையாகும் என்று எண்ணுவதன் மூலம் உங்களில் யாரும் தமது தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்துவிட வேண்டாம். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன். பல சமயங்களில் அவர்கள் தமது இடப் பக்கமும் திரும்புவார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தச் செடியி-ருந்து -அதாவது வெள்ளைப் பூண்டைச்- சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலை நெருங்க வேண்டாம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு “இந்தச் செடியிலிருந்து சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலுக்குள் வர வேண்டாம்” என்று கூறினார்கள் என்றார்கள். அவர்களிடம் நான்,“எந்த வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு நபியவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பச்சை வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “நெடிவீசும் பூண்டைக் கருத்தில் கொண்டே கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் ‘நம்மிடமிருந்து’ அல்லது ‘நமது பள்ளி வாசலிலிருந்து விலகியிருக்கட்டும்’; அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்) தமது இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும்” என்று கூறினார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. (நன்கு வேகாத காரணத்தால்) அவற்றில் (துர்)வாடை வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, அவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரம் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதைத் தம்முடனிருந்த ஒரு தோழருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அத்தோழரும் அதை உண்ண விரும்பாததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் உரையாடாத (வான)வர்களுடன் நான் உரையாடுகிறேன் (அதனால்தான் நான் அதைச் சாப்பிடவில்லை)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அஹ்மத் பின் ஸா-ஹ் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடரில் “வட்ட வடிவப் பாத்திரம் (பத்ர்) ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது” என்று அப்துல்லாஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் அறிவித்ததாகவும் ‘பத்ர்’ என்பது ‘காய்கறிகள் உள்ள தட்டையே’ குறிக்கும் என்று அதற்கு அவர் விளக்கம் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது. லைஸ், அபூஸஃப்வான் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், பாத்திரம் சம்பந்தமான குறிப்பு இடம்பெறவில்லை. ஆகவே, அது அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் உரையா, அல்லது நபிமொழியின் மூலத்திலேயே உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை. அத்தியாயம் :
அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அனஸ் (ரலி) அவர்களிடம், “வெள்ளைப் பூண்டு குறித்து நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “இந்தச் செடியி-ருந்து (விளையும் பூண்டைச்) சாப்பிட்டவர் ‘நம்மை நெருங்க வேண்டாம்’ அல்லது ‘நம்முடன் தொழ வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.77 அத்தியாயம் :
சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் (மையவாடியில்) தனியாக இருந்த ஒரு மண்ணறை (கப்று) அருகே சென்று மக்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். மக்கள் அந்த மண்ணறை அருகில் அணிவகுத்து நின்றார்கள்” என்று நபி (ஸல்) அவர்களுடன் அப்போது சென்றிருந்த ஒருவர் என்னிடம் கூறினார் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் “அபூஅம்ரே! உங்களுக்கு இதைக் கூறிய அவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்’ என்று பதிலளித்தார்கள்.78 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) தினத் தில் குளிப்பது, பருவமடைந்த ஒவ்வொரு வர் மீதும் கடமையாகும்.79 இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டு, இரவின் ஒரு பகுதி ஆனதும் எழுந்து (சென்று), தொங்கவிடப்பட்டிருந்த தோல் பையி-ருந்து (தண்ணீர் எடுத்து) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். -இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், “(உறுப்புகளை அதிகம் தேய்க்காமல் தலா ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறை மட்டுமே கழுவிய) நபி (ஸல்) அவர்களின் அந்த உளூ எளிமையாகவும் அதே சமயத் தில் மிகக் குறைந்த பட்ச அளவிலும் அமைந்திருந்தது” என்று சுட்டிக்காட்டினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் நின்று தொழுதார்கள். அப்போது நானும் எழுந்து அவர்களைப் போன்றே (சுருக்கமாக) உளூ செய்துவிட்டு வந்து, அவர்களின் இடப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே (தொழுதுகொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தமக்கு வலப் பக்த்தில் நிறுத்திக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ் நாடியதைத் தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து (ஃபஜ்ர்) தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது அவர்கள் எழுந்து அவருடன் தொழுகைக்குப் போய் தொழுவித்தார்கள். ஆனால், அவர்கள் (உறங்கியதற்காகப் புதிதாக) உளூ செய்யவில்லை. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் கண்கள் (மட்டுமே) உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது’ என்று மக்கள் கூறுகின்ற னரே! (அது உண்மையா?)” என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள், “இறைத்தூதர்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (வஹீ) ஆகும் என்று உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்” என்றார்கள். பிறகு, “(மகனே!) உன்னை நான் அறுத்து (குர்பானி செய்து)விடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்” (37:102) எனும் இறை வசனத்தை (தமது கருத்துக்குச் சான்றாக) ஓதிக் காட்டினார்கள்80 அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் (தாய் வழிப்)பாட்டி முளைக்கா (ரலி) அவர்கள் உணவு சமைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (விருந்துண்ண) அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதளவை உண்டுவிட்டுப் பின்னர், “எழுங்கள்! உங்களுக்காக நான் (கூடுதல் தொழுகை யைத்) தொழுவிக்கிறேன்” என்று கூறி னார்கள். (தொழுவதற்காக) நான் எங்களுக் குரிய பாயொன்றை (எடுக்க அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்டதால் கறுப்பாகி யிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயில் தொழுகைக்காக) நின்றார்கள். நானும் என்னுடன் ஓர் அநாதைச் சிறுவரும் (முதல் வரிசையில்) நிற்க அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்றுகொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (இமாமாக நின்று கூடுதலான) இரண்டு ரக்அத்கள் தெழுவித்தார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) ‘மினா’வில் சுவர் அல்லாத (கைத்தடி போன்ற) ஒன்றை நோக்கி (திறந்த வெளியில்) மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன் -அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தேன்- (தொழுதுகொண்டிருந்தவர்களின்) ஓர் அணியில் ஒரு பகுதியை நான் கடந்து சென்று (கழுதையி-ருந்து) இறங்கி, அதை மேய விட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே புகுந்து (நின்று) கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்து சென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவுவரை) இஷா தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அவர்களை உமர் (ரலி) அவர்கள் அழைத்து, “(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கி விட்டனர்” என்று கூறியதும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையி-ருந்து) வெளியே வந்து, “பூமியில் இருப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை” என்று கூறினார்கள். அன்றைய நாளில் மதீனாவாசிகளைத் தவிர வேறு யாரும் தொழுபவர்களாக இருக்கவில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாட்களில் பெண்கள் பகுதிக்குப்) புறப்பட்டுச் சென்றபோது அவர்களுடன் நீங்களும் இருந்தீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஆம் (இருந்தேன்). (உறவின் காரணத்தால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் அவர்களுடன் இருந்திருக்க முடியாது. (பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு) நபி (ஸல்) அவர்கள் கஸீர் பின் அஸ்ஸல்த் (ரலி) அவர்களின் வீட்டருகே உள்ள அடையாள(க் கம்ப)ம் அருகில் வந்து (மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள். மேலும், (ஏழை எளியோருக்காக) தர்மம் செய்யுமாறும் அவர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். உடனே அப்பெண்கள் தங்களின் ஆபரணங்களை நோக்கி தங்களின் கைகளைக் கொண்டுசென்று (அவற்றைக் கழற்றி) பிலால் (ரலி) அவர்கள் (ஏந்தியிருந்த) ஆடையில் போடலானார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் இல்லம் சென்றனர். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பாதி இரவுவரை) இஷா தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் நபியவர்களை அழைத்து, “பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் (தமது அறையி-ருந்து) வெளியே வந்து, “பூமியில் இருப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை” என்று கூறினார்கள். அன்றைய நாளில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்பட வில்லை. இஷா தொழுகையை செம்மேகம் மறைந்ததி-ருந்து இரவின் முதலாவது மூன்றில் ஒரு பகுதி கழிவதுவரை மக்கள் தொழுதுவந்தனர். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் துணைவியர் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால், அவர்களுக்கு அனுமதி வழங் குங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் பெண்கள், கடமையான தொழுகையில் ‘சலாம்’ கொடுத்ததும் எழுந்து (சென்று)விடுவார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவர் களுடன்) தொழுகையில் கலந்துகொண்ட ஆண்களும் அல்லாஹ் நாடிய அளவுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள். (பெண்கள் சென்றபின்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்ததும் ஆண்களும் எழுவார்கள் அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையைத் தொழுவிப்பார்கள். (தொழுகை முடிந்ததும்) பெண்கள் தங்கள் ஆடைகளால் (உடல் முழுவதையும்) போர்த்திக்கொண்டு திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் (யார் யாரென) அறியப்படமாட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்பேன். (பின்னால் தொழுதுகொண்டி ருக்கும்) அந்தக் குழந்தையின் தாய்க்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையைச் சுருக்கமாக முடித்துவிடுகிறேன். இதை அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், “பெண்கள் (இன்று) உருவாக்கியுள்ள (அலங்கார உத்திகள் போன்ற)வற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிருந்தால் பனூ இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டதைப் போன்று இந்தப் பெண்களையும் (பள்ளிவாசலுக்கு வரக்கூடாது எனத்) தடுத்திருப்பார்கள்” என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அம்ரா (ரஹ்) அவர்களிடம், “பனூ இஸ்ராயீல் பெண்கள் (பள்ளிவாசலுக்கு வரக் கூடாதென) தடுக்கப்பட்டிருந்தனரா?” என்று கேட்டேன். அதற்கு அம்ரா அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.81 அத்தியாயம் :
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சலாம் கொடுத்து முடித்த தும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார் கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்குமுன் சற்று நேரம் (தாம் தொழுத) அதே இடத்தி லேயே வீற்றிருப்பார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்குமுன், பெண்கள் திரும்பிச் செல்லட்டும் என்பதற்காகத்தான்” என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கு அறிந்தவன். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் (கூடுதல் தொழுகை) தொழு(வித்)தார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருட்டு இருக்கும்போதே சுப்ஹு தொழு கையைத் தொழுவிப்பார்கள். இறைநம்பிக் கையுள்ள பெண்கள் (தொழுகையை முடித்து இல்லம்) திரும்புவார்கள். இருட் டின் காரணமாக ‘அவர்கள் (யார் யாரென) அறியப்படமாட்டார்கள்’ அல்லது ‘அவர் களில் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ள மாட்டார்கள்’. இதை, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக் குச் செல்ல) அனுமதி கேட்டால், அவர் களைத் தடுக்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் (கூடுதல் தொழுகை) தொழுதார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டோம். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள். அத்தியாயம் :
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள், எழுவதற்குமுன் சற்று நேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றி ருப்பார்கள். “அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந் த)து, ஆண்கள் பெண்களை நெருங்கு வதற்குமுன் பெண்கள் திரும்பிச் சென்றுவிடட்டும் என்பதற்காகத்தான்” என்றே கருதப்படுகிறது. அல்லாஹ் நன்கு அறிந்தவன். அத்தியாயம் :